முந்தைய கட்டுரை: அடி முடி காணா அதிசயம்: பிரபஞ்சத்தின் ஒரு பரிமாணம்
(தொடர்ச்சி…)
வேதம் கூறும் பிரபஞ்சவியலில் ஒன்றுக்கு மேல் ஒன்றாகவும், ஒன்றையடுத்து ஒன்றாகவும் முடிவில்லாமல் (infinity) பலப்பல உலகங்கள் (Universes) வட்டப்பாதையில் சுற்றிக் கொண்டே இருக்கின்றன என்று பார்த்தோம். இவற்றில் எப்பொழுதுமே கால் பங்கு, தோற்றம் கொண்டவையாகவும் (manifest) மீதி முக்கால் பங்கு, தோற்றம் இல்லா நிலையிலும் (unmanifest) இருப்பதை நடராஜரின் தாண்டவம் எப்படிக் காட்டுகிறது என்றும் பார்த்தோம்.
இந்த அமைப்பில் மும்மூர்த்திகளும் ஓய்வு ஒழிவில்லாது இயங்கிக் கொண்டிருக்கின்றனர். இவை அனைத்தையும் தாங்கியும், ஊடுருவியும் இருக்கும் முழு முதல் பரப் பிரம்மம் நாராயணன் எனப்படுகிறான் என்று பிரமாண நூல்கள் கூறுகின்றன என்றும் பார்த்தோம். இந்த நூல்கள் உபநிஷதங்கள், பிரம்ம சூத்திரம், பகவத் கீதை என்பவை என்று அனைத்து ஆசார்ய புருஷர்களும் கூறியுள்ளனர். இவை constitution of India போன்றவை. இவற்றை ஆதாரமாகக் கொண்டுதான் இந்து மதத்தின் எல்லா வழிகளும், வழக்கங்களும் எழுந்துள்ளன.
கர்ம வினையால் பிறந்து, இறந்து, மீண்டும் மீண்டும் உழன்று கொண்டிருக்கும் உயிர்கள், இந்தப் பிரபஞ்சச் சக்கரத்தினின்று விடுதலை பெறுதலை ‘முக்தி’ என்கிறோம். விடுதலை என்பதால் அந்த நிலைக்கு வீடு என்னும் பெயர் ஏற்பட்டது. வீடு பேறு, முக்தி, மோக்ஷம் இவை எல்லாமே விடுதலை என்னும் பொருள் கொண்டவை.
முக்தி பெற சிவனை வணங்கினால் என்ன, விஷ்ணுவை வணங்கினால் என்ன, இதில் என்ன பேதம் இருக்கிறது என்று எண்ணலாம். அப்படி அல்ல, இந்தக் கடவுளை வணங்கினால்தான் முக்தி, அந்தக் கடவுளை வணங்கினால் முக்தி கிடைக்காது என்றும் எண்ணலாம். இதன் விளைவாக எந்தக் கடவுள் பெரியவர் என்ற சர்ச்சையும் பல காலம் நடந்து வந்திருக்கிறது. பல காலம் என்றேன், அப்படி என்றால் பல காலத்துக்கு முன், அந்த நாளில் இந்தச் சர்ச்சை இல்லையா என்றால், இல்லை என்று சொல்லலாம். காரணம், இவை குறித்த கருத்துகளை அந்த நாளில் தெளிவாக அறிந்திருந்தனர். அதற்கும் காரணம், பிரமாண நூல்கள் சொல்லும் கருத்துகளைத் தெளிவாகப் புரிந்து கொண்டிருந்தனர்.
எனவே பிரமாண நூல்கள் என்ன சொல்கின்றன என்று பார்ப்போம்.
இந்த மூன்று நூல்களுள், பிரம்ம சூத்திரம் முழுவதுமே, பிறக்கும் உயிர்களின் நிலை, பரம் பொருள் என்னும் பரப் பிரம்மத்தின் நிலை, அந்தப் பரம் பொருளை அடையும் விதம் ஆகியவை பற்றி ரிஷிகள் கூறியுள்ள விஷயங்களை சூத்திரங்களாகக் கொண்டுள்ளது. அந்த நாளிலும் எழுந்துள்ள பல எதிர் விவாதங்களுக்கு பதில் அளிக்கும் விதமாகவும் அவை உள்ளன.
அவை கூறுவது என்னவென்றால், பரப் பிரம்மனையே தியானித்து வந்தால், அந்த பிரம்ம நிலையை ஒருவன் அடைவான். பிரம்மம் என்பதற்கு எளிமையான விளக்கம் ‘சத்யம், ஞானம் அனந்தம் (எல்லை இல்லாதவன்)’ என்பதே. இந்த மூன்று குணங்களைக் கொண்டவனாக இறைவனை எந்நேரமும் நினைத்து வந்தால், முக்தி கிடைக்கும்.
இவை எல்லாம் சொல்வதற்கு நன்றாக இருக்கும். பரப் பிரம்மனது ரூபம் என்ன? நான் சிவனை வாங்குகிறேன். அவனை பிரம்மமாக தியானித்தால், எனக்கு முக்தி கிடைக்காதா? அல்லது ராமனை வணங்கும் நான் அவனைப் பிரம்மமாக நினைத்து தியானம் செய்தால் முக்தி கிடைக்காதா? நாராயணனை மட்டுமே தியானம் செய்தால்தான் முக்தி கிடைக்குமா? அப்படி என்றால், சிவனடியார்கள் பலரும் முக்தி அடைந்ததாக நூல்கள் கூறியுள்ளனவே, அவை பொய் என்று ஆகாதா? மேலும் எந்த ஒரு தெய்வ உருவையும் அல்லாது ஞான வடிவாகப் பல சித்தர்கள் தியானித்து பரம நிலை அடைந்துள்ளனரே, அது எப்படி? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் நேரிடையான பதில் ஜோதிடத்தில் உள்ளது.
ஜோதிடம் காட்டும் முக்தி
ஜோதிடமா, அது புரட்டு, என்று சொல்லும் முன், இதைத் தெரிந்து கொள்ளவேண்டும். ஜோதிடம் என்றால் ‘ஒளியியல்’ (Science of Light) – ஜ்யோதி-இஷா என்று அர்த்தம். அந்தப் பரம் பொருள் கோடி சூர்ய ஒளி உடையவன். விராட புருஷனாக பிரபஞ்சத்தில் வியாபித்துள்ள அவன் உருவம் நட்சத்திரங்களின் உருவம் – “நட்சத்த்ராணி ரூபம்’ என்று புருஷ சூக்தம் சொல்கிறது. அதாவது அந்தப் பரம புருஷன் நக்ஷத்திர ரூபத்தில் உள்ளான்.
‘நக்ஷ்’ என்னும் வடமொழி வேர்ச் சொல்லிலிருந்து நக்ஷத்ரம் என்னும் சொல் உண்டானது. நக்ஷ் என்றால் அடைதல் என்று பொருள். (to attain) எதை அடைய வேண்டுமோ அது நக்ஷத்ரம். மேலும் இது ‘ந- க்ஷீயதே’ – குறையாதது என்றும் பொருள்படும். குறையாததும், குறைவில்லாததும் அடையப்பட வேண்டியதும் பிரம்மம், எனவே நக்ஷத்ரம் அவன் ரூபமாகிறது.
அவனிலிருந்துதான் நாம் வந்தோம், அவனில்தான் முடிவில் ஐக்கியமாவோம் என்னும்படி, கண்ணுக்குத் தெரியும் நக்ஷத்திரமான சூரியனிலிருந்துதான் நம் பூமி வந்தது. முடிவில் சூரியனைத்தான் அது அடையப் போகிறது. ஒவ்வொரு நக்ஷத்திரமும் அது வந்த ஜ்யோதியில்தான் கடைசியில் ஐக்கியமாகப் போகின்றன.
நக்ஷத்ரங்களின் ஒளி இயல்தான் ஜ்யோதிஷம் – எவ்வாறு என்றால், சூரியன் காலை இதமாகக் காய்கிறான். மதியம் உஷ்ணமாகக் காய்கிறான். பின்மதியம், அவன் உக்ரம் தாங்க முடிவதில்லை. ஆனால் மாலை மிதமாகி, இரவில் நம் இயக்கத்தையே குறைத்து விடுகிறான். மேல்சொன்ன ஒவ்வொரு பொழுதிலும், கோடிக்கணக்கான விஷயங்கள் நடக்கின்றன. தாவரங்கள் உணவு உண்டாக்குவதிலிருந்து, கிருமிகள் அழிவதும், நீர் மேகம் உண்டாவதும், என்று பல செயல்களுக்கு அந்தச் சூரியன் காரணமாகிறான். ஆனால் உண்மையில் நடப்பது என்ன?
அவனா செய்கிறான்? அவன் எங்கோ நிலையாக இருக்கிறான். நாம்தான் – இந்த பூமிதான் சுழன்று சுழன்று, அவனிடமிருந்து வேறு வேறான பலனை, வேறு வேறான நிலையில், வேறு வேறான நேரத்தில் பெற்றுக் கொள்கிறோம். சூரியன் இருந்த இடத்தை விட்டு அசைவதில்லை. தனியாக ஒன்றும் செய்வதில்லை. அதே போல்தான் இந்த zodiac எனப்படும் வான் வெளி மண்டலத்தை நாம்தான் வெவ்வேறு நேர- கால- நிலையிலிருந்து பார்த்து, சூரியனிடமிருந்து வெவ்வேறான கிரணங்களை அனுபவித்தது போல, நம் நிலைக்கு ஏற்ப, வெவ்வேறான பலன்களை அனுபவிக்கிறோம். அவை என்னென்ன என்று சொல்வதுதான் ஒளியியல் எனப்படும் ஜ்யோதி- இஷம்.
இதைப் பற்றி முதன் முதலில் கூறியவர் நான்முகப் பிரமன். அவர் உபதேசித்த கருத்துகள் ‘பிரம்ம ரிஷி சம்வாதம்’ என்று சமஸ்க்ருதத்தில் இருக்கின்றது. சமீபத்தில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு. ‘பிரம்ம ரிஷி வாக்கியம்’ என்னும் பெயரில் தற்சமயம் கிடைக்கிறது. அவரையும் சேர்த்து, 18 மகரிஷிகள் ‘ஜோதிட ப்ரவர்தகர்கள்’, (ஜோதிட சாத்திரத்தைத் தோற்றுவித்தவர்கள்) என்று சொல்லப்படுகிறார்கள். இவர்கள் தத்தமது பெயரால் உருவாக்கிய சமிஹிதைகளில் சொன்ன கருத்துகளைப் பல புராணங்களிலும் காணலாம்.
முந்தைய கட்டுரையில் சொன்னதுபோல பல கடவுளர்களும் தத்தமக்கென்று கொண்டுள்ள பணிகளை (jurisdiction or portfolio) தெள்ளத் தெளிவாகப் புரிந்து கொள்ள ஜோதிடம் உதவுகிறது. பிரபஞ்சத்தின் இயக்கத்தையும், அதை இயக்கிக் கொண்டிருக்கும் கடவுளர்களைப் பற்றியும் சொல்வதாலும், ஜோதிடம் என்பது ‘வேத புருஷனின் கண்’ என்று சொல்லப்பட்டிருக்கிறது.
ஜோதிடத்தின் பயனைப் பற்றிய இந்த முன்னுரையுடன், நான்முகப் பிரமன் கூறும் முக்தி பற்றிய கருத்து என்ன என்று பார்ப்போம். அவர் தந்துள்ள ‘பிரம்ம ரிஷி வாக்கியம்’ என்னும் உபதேசத்தில் ஒரு விசேஷம் என்னவென்றால், 73 யோகங்களைச் சொல்லி அவற்றுக்கான முன் பிறவிக் காரணத்தையும் கூறுகிறார். என்ன செயல் செய்தால் மறு பிறவியில் என்ன பயன் கிட்டும் என்று இவை தெளிவாக்குகின்றன. மும்மூர்த்திகள், அவர்தம் தேவியர் ஆகியோரை வணங்குவதால் என்ன பயன் என்றும் பிரம்மா சொல்கிறார்.
அவற்றுள் மும்மூர்த்தி பற்றிய குறிப்புகள், முக்தி பற்றி விவரிக்கின்றன. அவரது கூற்றுப்படி மும்மூர்த்திகளுமே முக்தியைத் தரக் கூடியவர்கள்.
மும்மூர்த்திகளும் முக்திக்கு சாதனம்
சீகண்ட யோகம்
ஒருவன் சிவனடியார்களைத் துதித்து, அவர்களுக்கு வேண்டிய அனைத்து உபசாரங்களையும் செய்து வந்தால், மறு பிறவியில், சீகண்ட யோகத்தில் பிறந்து, ருத்ராக்ஷம் தரித்து, திருநீறு பூசி, அனவரதமும் சிவத் தியானத்தைச் செய்து, சைவ சித்தாந்தப்படி விரதங்களை அனுஷ்டித்து, சாதுக்களை உபசரித்து, சிவனையே முழுமுதல் கடவுளாகக் கொண்டு, மக்களால் மகாத்மா என்று துதிக்கப்பட்டு, மறு ஜன்மம் இல்லாத சிவபதம் அடைவான்.
லக்னாதிபதி, சூரியன், சந்திரன் ஆகியோர் கேந்திர, திரி கோணங்களில் ஆட்சி, உச்சம், நடப்பாக இருந்தால் அது சீகண்ட யோகம் ஆகும்.
ஸ்ரீநாத யோகம்
ஒருவன் நாராயணனையே முழு முதல் கடவுளாகக் கொண்டு, வைணவ அடியார்களை நன்கு உபசரித்து, அவர்களுக்குத் தேவையான சேவைகளைச் செய்து வந்தால் மறு பிறவியில் ஸ்ரீ நாத யோகத்தில் பிறந்து, நாராயணின் திருச் சின்னங்களைத் தரித்து, நாராயணன் ஒருவனையே தியானித்து, நல்ல குடும்பம், மனைவி, மக்கள், செல்வம் பெற்று அனைவராலும் கொண்டாடப் பட்டு, மறு ஜன்மம் இல்லாத பரமபதம் அடைவான்.
களத்ரகாரகனான சுக்கிரனும், பாகியாதிபதியான 9 -ஆம் வீட்டு அதிபதியும், புத்திர காரனான புதனும் லக்கினத்திற்கு கேந்திர, திரி கோணங்களில் ஆட்சி, உச்சம், நடப்பாக இருந்தால் அது ஸ்ரீ நாத யோகம் ஆகும்.
விருஞ்சி யோகம்
ஒருவன் வேதம் கற்ற பிராமணர்களைப் போஷித்து, வைதீக காரியங்களுக்கு உறுதுணையாக இருந்தால், மறு பிறவியில் விருஞ்சி யோகத்தில் பிறந்து, பிரம்ம ஞானமும், அறிவும் பெற்று, நல்ல குடும்பம், மனைவி, குழந்தைகளைப் பெற்று, சிறந்த சீடர்களைப் பெற்று, ச்ரேஷ்டன் என்று பெயர் பெற்று, பிரம்ம தேஜசுடன் ஜொலித்து, மறு ஜன்மம் இல்லாத பிரம்ம லோகம் அடைவான்.
குரு, சனி, லக்னாதிபதி ஆகியோர் லக்கினத்திற்கு கேந்திர, திரி கோணங்களில் ஆட்சி, உச்சம், நடப்பாக இருந்தால் அது விருஞ்சி யோகம் ஆகும்.
இந்த மூன்று யோகங்களும், மூன்று மூர்த்திகளைப் பரப் பிரம்மமாக வழிபடுவதால், அவ்வாறு வழிபட்டவர் பிறவாமை என்னும் முக்தி நிலையை அடைவர் என்று காட்டுகின்றன. இதைச் சொன்னவர் நான்முகப் பிரமனே.மேலும் முக்திக்கு சாதனமாக ஒருவன் செய்ய வேண்டியதையும் இந்த யோகங்கள் காட்டுகின்றன.
சிவன் – விஷ்ணுவில் யார் பெரியவர்?
இந்த யோகங்கள் காட்டும் மற்றொரு விளக்கம் யார் பெரியவர் என்ற பேதம் சிவன், விஷ்ணுவுக்கு இருக்கிறதா என்பது. அது எப்படி என்று பார்ப்போம்.
எந்தக் கடவுளைப் பரப் பிரம்மம் என்று வணங்குகிறோமோ, அந்தக் கடவுள் மீதே உடல், பொருள், ஆவி என்று அனைத்து செயல், எண்ணங்களைச் செலுத்த வேண்டும். அப்படி, இப்படி என்று கவனச் சிதறல் இல்லாமல், முழு முனைப்புடன், இரவு பகலாக தியானம் இருக்க வேண்டும். எனவே ஒரு கடவுளை மனப் பூர்வமாக ஏற்றுக் கொண்ட ஒருவன், வேறு கடவுள் என்று கவனம் சிதறாமல் இருக்க அந்தந்தக் கடவுளே முக்கியம், அவனே உயர்ந்தவன் என்றெல்லாம் சொல்லி கவனம் கொள்ள வைத்துக் கொள்ளும் பொருட்டு பெரியோர் கூறியிருக்கின்றனர்.
சிவனை வணங்குபவர்கள், அவனையே ஒரே கடவுள் என்று கவனம் செலுத்தி பரம்பொருளாக வணங்குங்கள் என்று ஊக்குவித்திருக்கிரார்கள். அதேபோல் விஷ்ணுவே ஒரே கடவுள் என்று அவனை வணங்குபவர்கள், வேறு கடவுளர் என்று கவனம் சிதறாமல் இருக்க வேண்டும். நடுவில் இந்தக் கடவுளை வேண்டிக்கொண்டேன், அந்தக் கடவுளை வேண்டிக் கொண்டேன் என்றால், அந்தந்தக் கடவுளர் தரும் நன்மைகளில் நாட்டம் வருகிறது என்றும் அல்லது, பரப் பிரம்மனையே அடைய வேண்டும் என்ற சிந்தையிலிருந்து விலகி, தோன்றும் உலகிலுள்ள பிற பயன்களை மனம் நாடுகிறது என்றும் ஆகி, தீவீர வழிபாட்டை நீர்க்கச் செய்து விடும். இந்தக் கோட்பாடுகள், முக்தி மார்க்கத்தில் செல்பவர்களுக்குத் தேவை.
முக்தியில் நாட்டம் இல்லாதவர்கள் வாழ்க்கைத் தேவைகளுக்கு ஏற்றபடி, எந்தெந்த தெய்வங்கள் எந்தெந்த பலன்களுக்கு தேவதையோ, அந்தந்த தெய்வங்களை வணங்கிக் கொள்ளலாம். அல்லது மனம் விரும்பும் தெய்வங்களை வணங்கிக் கொள்ளலாம்.
இந்த விஷயத்தில் ஸ்ரீ வைஷ்ணவர்கள் ‘மறந்தும் புறம் தொழா மாந்தர்கள்’. அவர்கள் தீவீர முக்தி சிந்தனையைக் கொள்கையாகக் கொள்கிறவர்கள். இன்றைக்கு அவர்கள் எல்லோருமே அப்படி என்று சொல்ல முடியாது, ஆயினும், முக்தி மார்க்கத்தை நாடுபவர்கள், இன்னும் இருக்கிறார்கள். ‘நாராயணனே நமக்கு’ என்று தீவீர நாட்டம் கொள்வதால், அவர்கள் கொள்கை தவறல்ல. அவர்கள் பிற கோயில்களுக்குப் போகாததால், அவர்களுக்கு துவேஷம் என்று சொல்வது சரியல்ல. அதேபோல், ‘சர்வம் சிவ மயம்’ என்று எவன் ஒருவன் சிவ பக்தியில் முக்தி பெற விரும்புகிறானோ, அவன் பிற தெய்வங்களை நாடக் கூடாது.
அதேசமயம், பிற தெய்வங்களை துவேஷிக்கவும் கூடாது. பிற தெய்வங்கள், தான் வணங்கும் தெய்வத்திற்குக் குறைந்தவை என்றும் எண்ணக்கூடாது. அது ஏன் என்று உணர சாதாரண லாஜிக் போதும். அவனே எங்கும் பரவிய பரம் பொருள் என்றால், பிற தெய்வங்களிலும் இருப்பவன் அவன்தானே? அப்படி என்றால், பிற தெய்வங்கள் எப்படிக் குறைந்தவை ஆகும்? அப்படி அவை குறைந்தவை என்று சொன்னால், இவன் முழு முதல் என்று வணங்கும் அந்தத் தெய்வமும் குறைந்தது என்றாகுமே?
இதைச் சுட்டிக் காட்டும் வண்ணம் கீதையில் கண்ணன் கூறுகிறான். (7-16).
நான்கு விதமானவர்கள் இறைவனை வழிபடுகின்றனர்.
- செல்வத்தை வேண்டி வழிபடுகின்றனர்.
- துன்பத்திலிருந்து விடுபடவேண்டி வழிபடுகின்றனர்.
- வேறு சிலர் இந்த இறைவன் எப்படிப்பட்டவன் என்று ஆச்சர்யப்பட்டு அவனைப் பற்றி அறிய ஆவல் கொண்டு வழிபடுகின்றனர். (அப்படிப்பட்டவரை ஜின்ஞாசு என்பர்.)
- மெய்ஞானம் பெற்ற ஞானியும் வழிபடுகிறான்.
இப்படிச் சொல்லிவிட்டு, கண்ணன் சொல்கிறான், இவர்கள் எல்லாருமே சிறந்தவர்கள் என்றாலும், இவர்களுள் ஞானிதான் எனக்குப் பிரியமானவன். ஏனென்றால், என்னுடைய உண்மையான சொரூபம் இவனுக்குத்தான் தெரியும். “வாசுதேவம் சர்வம் இதி’ – எல்லாவற்றுக்குள்ளும் வசிப்பவன் வாசுதேவன் என்னும் நானே என்று என் சுய ரூபத்தை இவன் அறிவான், அதனால் இவனும் என் ரூபத்தில் இருக்கிறான் என்று கண்ணன் சொல்லும் கீதை நமக்குப் பிரமாண நூல்.
எந்த ரூபத்தை ஒருவன் முக்தி மார்க்கத்தில் வணங்கினாலும், அந்த ரூபத்தில் உள்ள பரம் பொருள்தான் அனைத்து தெய்வங்களிலும், அண்ட சராசரங்களிலும் உள்ளான் என்று ஆத்ம பூர்வமாக உணர்வதே சரியான மார்க்கம். இந்த மார்க்கத்தில் ஒருவன் நிலைத்திருக்கும்போது, கவனச் சிதறல் கூடாது என்ற நோக்கத்தில் பெரியோர் சொன்னவை, சமயச் சண்டைகளுக்கு வழிகோலி விட்டன.
முக்தியில் நாட்டமுள்ளவர்களானாலும் சரி, அப்படிப்பட்ட நாட்டமில்லாதர்களும் சரி, பிற தெய்வங்களைக் குறைத்துச் சொல்லுதல் என்பது – ஜோதிட பாஷையில் சொல்வதானால் – பாவ கர்மாவை உண்டு பண்ணும். அப்படிப்பட்ட கதைகளைப் பற்றிப் பேச ஒருவர் விரும்பினால், கவனமாகக் கையாள வேண்டும். அதனால் வரக்கூடிய பிற தெய்வ நிந்தனையும், அதனால் புண்படும் பக்தனின் அவதியும், கர்மாவை உண்டு பண்ணக்கூடியவை. அன்றைக்கு அவர்கள் சொல்லவில்லையா என்றால், முக்தி மார்க்கத்திற்குச் சொன்னார்கள். முக்தியில் நிலை பெற்றவன் அப்படிப் பேசலாமே என்றால், உண்மையிலேயே முக்தியில் நிலைபெற்றவன், பரம் பொருளின் சொரூபத்தை உணர்ந்திருப்பான். அவன் அப்படிப் பேச மாட்டான்.
நான்முகப் பிரமன் தரும் முக்தி
முக்தி மார்க்கத்திற்கு சிவன், விஷ்ணு ஆகிய இரண்டு கடவுளர்களையும் எவ்வாறு வழிபட வேண்டும் என்று மேற்சொன்ன யோகங்கள் காட்டுகின்றன. ஆனால் நான்முகப் பிரமன் விஷயம் அப்படிச் சொல்லப்படவில்லை. இருப்பதிலேயே, நான்முகன் பக்திதான் எளிதானது. வேதத்தைப் போற்றுதலும், வேதம் ஓதுதலை வளர்த்தலும், வேதம் ஒதுவோரை நன்முறையில் காத்தலும், அவர்களுக்குச் சேவை புரிதலும் பிரமனுக்குச் செய்யும் பக்தி என்று சொல்லப்பட்டுள்ளது.
ஒவ்வொரு கல்பத்திலும் வேதத்தை நினைவுக்குக் கொண்டு வந்து உலகைப் படைத்து, வேதத்தை நிலை நிறுத்துபவன், நான்முகப் பிரமனாக இருக்கவே, வேதத்தைப் போஷித்தலே முக்திக்கு வழி என்றாகிறது. நான்முகப் பிரமனே வேத உருக் கொண்டவன் என்றும் ஆகிறது. அதனாலும் அவனுக்கென்று தனிக் கோயில் இல்லாமல் இருக்கலாம். அதனாலும், ஒவ்வொரு உற்சவத்திலும், முதலில் வேத கோஷம் செய்துகொண்டு கற்றோர் செல்லவேண்டும். அவர்களைப் பின்தொடர்ந்து தான் மற்றோர் செல்வர்.
வேதத்திற்குத் தரும் முதல் மரியாதை, படைத்த பிரமனுக்குச் செய்யும் மரியாதை. அதுவே அவனை வணங்குதலுக்கு ஒப்பாகும். இடை விடாது அதைச் செய்துக் கொண்டு, வேதம் தழைக்க உதவுபவன், நான்முகப் பிரமனது அருளால் முக்தி அடைவான். இதில் தமிழன், வேறு நாட்டவன் என்றெல்லாம் இல்லை. எவனொருவன் வேதம் தழைக்க உதவுகிறானோ அவன் முக்தி அடைவான். வேதத்தையும், அது பரப்ப உதவும் சமஸ்க்ருதத்தையும் வெறுக்கும் திராவிடத் தலைவர்கள் எப்பேர்பட்ட அறிவிலிகள் என்று இதிலிருந்து தெரிகிறது. இவ்வளவு எளிய வழியை அழித்துவிட்டார்களே!
தோன்றும் பிரபஞ்சத்தில் முக்தன் நிலை
மும்மூர்த்திகள் மூலமும் முக்தி கிடைக்கும் என்ற கருத்தை மெய்ப்பிக்கும் வகையில் பல முக்தர்கள், சித்தர்கள் வரலாறுகள் இருக்கின்றன.
முக்தி பெற்ற இவர்கள் எங்கே இருக்கிறார்கள்?
இதைப் பற்றி ஜைமினி, பாதராயணர் போன்றோர் விவாதித்த கருத்துகள் பிரம்ம சூத்திரங்களாக உள்ளன. மறு பிறவி என்னும் கர்மப் பிணைப்பிலிருந்து இந்த முக்தர்கள் விடுபட்டு விடுகிறார்கள். ஆனால் நான்முகப் பிரமனின் 100 வருட ஆயுளாக இருக்கும் இந்தத் தோன்றும் பிரபஞ்சத்தின் கால் பகுதியைவிட்டு இவர்களால் வெளியேற முடியாது என்று பிரம்ம சூத்திரம் கூறுகிறது. நான்முகப் பிரமன் இருக்கும் பிரம்ம லோகத்தில் இவர்கள் நிலை பெற்று, அந்த நான்முகனின் ஆயுள் முடியும்போது அவனுடன், இந்தச் சக்கரத்தை விட்டு வெளியேறி, பிரபஞ்சத்தையே தன் கருவில் தாங்கும் பரம் பொருள் என்னும் அந்தப் பிரம்மனிடம் (Supreme Brahman) லயிப்பர்.
இந்தக் கால் பகுதி பிரபஞ்சத்தில் முக்தி அடைந்த உயிர்கள், எங்கு வேண்டுமானாலும் சஞ்சரிக்கலாம், எதை நினைத்தாலும் சாதிக்கலாம். படைத்தல் தொழில் தவிர, பரம் பொருள் செய்யும் எந்தச் செயலையும் செய்யக்கூடிய நிலையையும் ஆற்றலையும் அவர்கள் பெறுகிறார்கள்.
இதோ வேதம் காட்டும் பிரபஞ்சத்தைப்பாருங்கள்…

நாம் பயணிக்கும் பிரபஞ்சம் இது
முக்தர்கள் இந்தப் பிரபஞ்சத்தில் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம் என்றால் என்ன அர்த்தம்? பல்வேறு காலக் கட்டங்களில் தோன்றிய அகத்தியரால் எப்படி அப்படித் தோன்ற முடிந்தது என்று இது காட்டுகிறது அல்லவா? அவர் என்றோ முக்தி அல்லது சித்தி அடைந்திருப்பார். வெவ்வேறு யுகங்களில் தேவை ஏற்படும்போது, அப்பொழுதே அப்படியே அவரால் தோன்ற முடியும். கருவில் பிறந்து, வளர்ந்து வர வேண்டிய அவசியமில்லை. எங்கெங்கு தேவையோ, அங்கங்கு தோன்றி, செய்ய வந்த செயலைச் செய்திருப்பார். ஆனால் கர்மப் பிணைப்பு அவருக்கு ஏற்படாது. அதுதான் இந்த முக்தி தரும் விசேஷச் சலுகை.
இறைவன் திடீரென்று தோன்றி ஆட்கொண்டான் என்றெல்லாம் புராணங்கள் சொல்கின்றனவே, அவை கட்டுக்கதை அல்ல என்றும் இது காட்டுகிறது. முக்தர்களாலேயே, இஷ்டப்படி வந்து போக முடியும் என்றால், இறைவன் வருவதில் என்ன அதிசயம்? அது எப்படி கட்டுக் கதையாக இருக்கும்?
அவ்வாறே, நாரதரும் வந்து போய்க் கொண்டு இருக்கிறார். பல ரிஷிகளும், பெரியோரும் நம் கண்ணில் பட முடியும் – நாம் அந்த அளவு ஆத்ம சாதனை கொண்டிருந்தால். இதன்படி ஆதி சங்கரரோ, அல்லது இராமானுஜரோ மீண்டும் தோன்றுவதற்கு வாய்ப்புண்டு. கர்ம வினையால் அவர்கள் பிறக்க மாட்டார்கள். உலக நன்மைக்காக, ஆண்டவன் ஆஞ்ஞையால் அவர்கள் அவதரிப்பார்கள்.
வெவ்வேறு காலக் கட்டத்தில் பிரபந்தங்களைப் பாடிவிட்டுப் போய் விட்டார்கள் ஆழ்வார்கள். நம்மாழ்வார் அருள, நாத முனிகள் அவற்றைப் பெற்றாரே, அது எப்படி – என்பதும் இந்த அமைப்பில் தெரிகிறது. இன்றும் நாத முனிகள் அளவுக்கு ஒருவன் தியானம் செய்தால், அவனுக்கு முன் நம்மாழ்வார் தோன்ற முடியும். திவ்யப் பிரபந்தத்தை எடுத்துக் கொடுக்க முடியும்.
இதையெல்லாம் சொன்னோம் சரி, இந்த மும்மூர்த்திகள் தவிர வேறு தெய்வங்களைப் பூஜிப்பவர்களுக்கு முக்தி கிடைக்காதா? பிரம்ம சூத்திரம் அதையும் சொல்கிறது.
பிற மதம், பிற தெய்வம் மூலம் முக்தி உண்டா?
ஒருவன் எதை உபாசிக்கிறானோ அதை அடைவான். இதை ‘தத்க்ரது’ என்று பிரம்ம சூத்திரம் கூறுகிறது. பரம் பொருள் என்னும் அந்த முழு முதற் கடவுளைத் தியானித்து மும்மூர்த்திகளில் ஒருவரை உபாசித்தால் முக்தி கிடைக்கும். வேத மதத்தில் பிற மூர்த்திகளை உபாசித்தாலும், முடிவில் இந்த மும்மூர்த்திகளுக்குத்தான் ஒருவன் செலுத்தப்படுவான். அவையெல்லாம் பரிவார தேவதைகள். சிவன் அல்லது விஷ்ணுவுடன் சேர்பவர்கள். அவர்கள் மூலம் முக்திக்கு வழி பிறக்கும்.
ஆனால் படைக்கப்பட்ட உலகில் தோன்றின உயிர்களை முழு முதற் கடவுளாக எண்ணுபவர்கள் அந்த உயிர்களையே அடைவார்கள். இங்கே வைணவ சம்பிரதாயத்தில் அனுசரிக்கப்படும் ஒரு நம்பிக்கையைச் சொல்ல வேண்டும். ஆசார்யர் இராமானுஜர் சம்பந்தம் இருப்பவர்கள் அனைவருக்குமே முக்தி உண்டு என்று கடவுளே கொடுத்த உறுதிமொழி இந்தச் சம்பிரதாயத்தில் உண்டு. அதனால் ஆசாரியனுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. முக்திக்குத் தேவையான தியானம் இல்லாவிட்டாலும்கூட, முக்தரான இராமானுஜரைத் தியானிப்பதால், முன் கூறிய ‘தத்க்ரது’ கோட்பாட்டின்படி, வைணவர்கள் இராமானுஜரை அடைந்து, தாமும் முக்தி அடைவர். தெய்வம் கொடுத்த உறுதிமொழி இப்படி நடைமுறைப்படுத்தப்படும்.
ஆனால் பிற மதங்களில் இவ்வாறு அல்ல. அம்மதங்களில் தெய்வம் என்று போற்றப்படுபவர்கள், ஆன்மிக விழிப்படைந்த உயிர்களாக இருந்தாலும், முழு முதற் கடவுளான பிரம்மத்தை உபாசிக்காமையால், முக்தி அடைந்தவர் இலர். எனவே அவர்களுக்கு மறு பிறவி உண்டு. அதுவரை அவர்களை உபாசித்த உயிர்களும் அவர்களிடமே நிலைத்து, மீண்டும் அவர்கள் பிறக்கும்போது பிறக்க வேண்டும். அல்லது ஒரு கல்பம் முடிந்து பிரளயம் வந்து படைக்கப்பட்ட எல்லாம் அழியும்பொழுது அவையும் அழிந்து மீண்டும் பிறக்க வேண்டும். இதை பிரம்ம சூத்திரம் வாயிலாக அறிகிறோம்.
இன்றைக்குப் பிற மதங்கள் இருக்கின்றனவே அவர்களுக்கு வேறு கதியில்லையா என்று கேட்டால், என்னிடம் இரண்டு பதில்கள் இருக்கின்றன.
ஒன்று ஜோதிடம் வாயிலாக அறிவது. நன்னடத்தை, ஒழுக்கம், தர்மத்தில் நிலைத்தல், முக்கியமாக ஆபத்தில் இருப்பவனுக்கு உதவுதல் அல்லது கருணையோடு இருத்தல் இவை ஒருவனிடம் இருந்தால், அவன் வேறு மதத்தினனாக இப்பிறவியில் இருந்தாலும், அவனை வேத மத நம்பிக்கை கொண்டவனாகவும் அல்லது இந்து மதத்தைச் சேர்ந்தவர் வீட்டில் பிறக்கும்படியும் அல்லது தானே ஆத்ம ஞானம் தேடி, கங்கையில் நீராடி, பிரம்மனைத் தேடும்படியாகவும் மறு பிறவி அமையும். இந்து மத வழியில்தான் முக்தி அடைய முடியும்.
மற்றொன்று, இந்து மதத்தைக் காப்பியடித்து இப்பொழுதெல்லாம் ‘முத்தொழிலோனே நமஸ்காரம்’ என்று கிறிஸ்துவுக்கு நமஸ்காரப் பாட்டு பாடுகிறார்களே, கிறிஸ்துவை வேத முதல்வன் என்றாக்கிக் கும்பிடுகிறார்களே, இது எங்கே கொண்டுபோய் விடும் என்று குழப்பமாக இருக்கிறது. இவர்கள் நம்மைக் காப்பியடித்து நம்மைப் போல ஆக முயல்கிறார்கள். இவர்கள் கலைஞர்-புத்தாண்டு கொண்டாடினார்கள். பொங்கல் கொண்டாடினார்கள். இன்னும் விரதங்கள்தான் பாக்கி.
ஆனால் இங்கே இருப்பவர்கள், நம் விரத நாள்களில் வயிறு முட்ட உண்டுவிட்டு, அவர்கள் விரதத்தை முடித்துவைக்க, கஞ்சி குடிக்கிறார்கள்.
என்ன அபத்தம் இது?
இதற்கெல்லாம் எப்படி கர்ம பலன் சொல்வது?
ஒன்றுமே புரியவில்லையே?
எங்கே போனார்கள் இந்த ஜைமினியும், பாதராயணரும்? அவர்களைக் கேட்போமே ….
என்ன…… அவர்களைக் காணோமா…? எஸ்கேப் ஆயிட்டாங்களா ஆ ஆ ஆ ஆ ஆ …..
(தொடரும்…)

அடி முடி காணா அதிசயம்: பிரபஞ்சத்தின் ஒரு பரிமாணம்
பெரியபுராணம்: இளைஞர் வாழ்வியலுக்கான ஒரு சமுதாயக் காவியம் – 1
ஆறுமுக நாவலர் / ஈழத்துச் சிதம்பர புராணம்
தலபுராணம் என்னும் கருவூலம் – 1
பூமி செல்லும் திசையும், வைகுண்ட ஏகாதசியும், மகா சிவராத்திரியும்
இஸ்லாமியருக்கு: இந்து மதத்தை எப்படிப் புரிந்துகொள்வது?![அமுதம் [சிறுகதை]](http://www.tamilhindu.com/wp-content/uploads/nectar3.jpg)
அமுதம் [சிறுகதை]
இந்து எதிரிகளான எமகிங்கரர்கள்![பெரியபுராணம்: இளைஞர் வாழ்வியலுக்கான ஒரு சமுதாயக் காவியம் – 2 [நிறைவுப் பகுதி]](http://www.tamilhindu.com/wp-content/uploads/thirugnana-sambandar1.jpg)
பெரியபுராணம்: இளைஞர் வாழ்வியலுக்கான ஒரு சமுதாயக் காவியம் – 2
தலித்துகளும் தமிழ் இலக்கியமும் – 2
ஐயன்- ஐயனார்- ஐயப்பன் அருளாட்சி பற்றிய நோக்கு
பாரதியின் சாக்தம் – 4
பாரதியின் சாக்தம் – 3
போரின் பிடியிலிருந்து மீளப்புதுப்பிக்கப்பெறும் வட இலங்கையின் இருபெரும் ஆலயங்கள்
பாரதியின் சாக்தம் – 2
பாரதியின் சாக்தம் – 1
சாதி எனப்படுவது யாதெனின்…
அருணாசலத்தில் ‘ம’கரத்தின் மகத்துவம்
வேப்பிலைக் கொடியும் வேளாங்கண்ணி மாதாவும்
தலபுராணம் என்னும் கருவூலம் – 6![மனமாற்றம் [சிறுகதை]](http://www.tamilhindu.com/wp-content/uploads/manamaatram1.jpg)
மனமாற்றம் [சிறுகதை]
தலபுராணம் என்னும் கருவூலம் – 3
ஒரு பயணம் சில கோயில்கள்
கொடியேற்ற விழா என்னும் தெய்வீக நிகழ்வு
பிரபஞ்சவியலில் உலகங்களின் தோற்றமும் உயிர்களின் பிறப்பும்













//Sarang
9 February 2010 at 4:42 pm
//
அடிப்படையில் ஒரு நூலே இல்லாமல், மார்கமே இல்லாமல் எங்கு செல்கிறோம் என்றே தெரியாமல் எங்கும் செல்ல முடியாது – வேத நூலில் சொன்ன மார்க்கம் வேண்டுமானால் அதை அறிதலும் அதன் படி நடத்தலும் முக்கியமாகிறது அதற்க்கு வேதத்தையே பிரமாணமாக கொள்ள வேண்டியது உள்ளது
//
இல்லையே… அப்படி ஒரு கட்டுப்பாடும் கிடையாது. அப்படி ஒரு நூல் வழி காட்டவேண்டுமே யானாலும் எனக்குப் பிரியமான மொழியில், இதமாகச் சொல்லுபவற்றைத்தான் ஏற்க வேண்டியிருக்கிறது. வேத நூல்(கள்) “மட்டுமே” வீடுபேறுக்கு சாஸ்வதமான வழி என்பதை நான் ஏற்க மறுக்கிறேன்.
சித்தர்கள் காட்டும் கோட்பாட்டில் என்ன தவறு ? பக்தி மார்கத்தில் தன்னை சேர்த்து அற்புதமான பாடல்களைக் கொண்டு கோவிந்தன் என்பான் ஓர் காளையிடம் அடைக்கலமான கோதையின் பாடல்களில் கிட்டாத இறையின்பம் உண்டா ? பாரதியின் பாடல்களில் கண்ணனையும் கண்ணம்மாவையும் படிக்கும் போது தனை மறந்த நிலையில் கண்களில் நீர்வழிய அந்தக் காட்சிகளைக் காண்கிறோமே.. அது கங்கைக்குப் போனாலோ அல்லது சமஸ்கிருத வேதங்களைப் படித்தாலோ தான் வரும் என்கிறீர்களா ?
தத்துவ மார்கம் மட்டும் தான் வீடு பேறுக்கு வழி வகுக்குமா ? ஏன் பக்தி மார்கம் வகுக்காதா ? ஊனுருகி உடலுருகி பாடி வீடு பேறு அடைந்த பல மகாத்மாக்களை நம் தமிழகம் கண்டிருக்கிறதே.
நான் சொல்ல வருவது எல்லாம் இது தான்.
நால்வகை வேதங்கள் பலவும் சொல்லி இருக்கிறது. நல்வழி காட்டுகிறது. எல்லாம் சரி. ஆனால் “அவை மட்டுமே” பிரமாண நூல்கள், ” அவை மட்டுமே” முக்திக்கு வழிக் காட்டும் என்பதெல்லாம் ஏற்க இயலாதவை.
திரு சாரங் அவர்களது பதில்
//
மேலும், பக்தி/சரணாகதி என்பது ஒரு *மார்க்கம்* மட்டுமே. அது ஒரு *நிலை* அல்ல. ஆத்ம-ஸ்வரூப-தர்சனம் எனப்படும் தன்னிலை உணர்தலே முக்தி என்று வேதாந்தம் கூறுகிறது.
//
நீங்கள் நான் எழுதியதை முழுவதும் மறுபடியும் படித்து பாருங்கள் – இதை நான் மறுக்கவில்லை ஆனால் இப்படி செய்தால் முக்தி நிச்சயம் என்ற எண்ணம் சரி அல்ல அது பகவாநிடதிளிருந்து அவனது உரிமையை பறிப்பது போலே என்பது தான் எனது அபிப்பிராயம் – [எனதாவி யார் நான் யார் தந்த நீ கொண்டாக்கினையே] – மேலும் ஆத்மா ஸ்வரூபத்தை உணர்தலே முக்தி என்றால் ஆத்மா ஸ்வரூபத்தை உணர்ந்தவர்கள் உணர்ந்த மாத்திரமே இவ்வுலகை விட்டு போய் விடுவர் (ஆன்ம போய் விடும்) – அப்படி நடப்பதில்லையே – சிவா பதமோ, பரம பதமோ அல்லது பர பிரம்ம பதமோ அடைவது தான் முக்தி என்றால் அதற்க்கு பர பிரம்மத்தின் ஒப்புதல் தேவை படுகிறது – கண்ணன் ஆன்ம நிலையை உணர்ந்தவர்களை தத்வதர்சி, முமுக்ஷு, ச்திதப்ரஞன் (மோக்ஷம் அடைய நினைப்பவர்கள், தகுதி உடையவர்கள்) என்று தான் சொல்கிறானே ஒழிய மோக்ஷம் அடைந்தவர்கள் என்று கூறவில்லையே
இதை கொண்டே இஷ்வர இச்சை மோக்ஷத்திற்கு அவசியம் என்று சொன்னேன் – இஷ்வரன் பர பிரம்ம வடிவில் இருப்பினும் அந்த பிரம்மத்தின் இச்சை அவசியமாகிறது
******
திரு சாரங் அவர்களுக்கு,
மிக அருமையாகச் சொன்னீர்கள்.
என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.
முதலில் எழுதின மறு மொழியில், ‘புரிந்து கொள்பவர்கள் புரிந்து கொள்ளட்டும்’ என்று என்று இரண்டு விஷயங்களை விரிவு படுத்தாமல் விட்டதில் ஒன்றைப் பிடித்து விட்டீர்கள்:) .
அவன்றி ஓரணுவும் அசையாது – என்பதை ஒப்புகொள்ளும் பட்சத்தில், அவன் மனம் வைக்காமல் முக்தி கிடையாது என்ற லாஜிக் வருகிறது. .
எளிதாகச் சொல்ல வேண்டுமானால், ஜெயலலிதா, சோனியாவைப் பார்க்க என்ன முயற்சித்தாலும், சோனியா மனம் வைத்த பிறகுதான், பார்க்க முடிந்தது. அது போல எனலாம்:)
பரம புருஷனும் மனம் வைத்தால்தான் அவனை நாம் அடைய முடியும்.
“This Aathman is attained by one, whom he chooses” is the sruti.
The clause ‘whom He chooses’ conveys the idea of the seeker becoming an object of choice of Bhagawan. (வேதார்த்த சங்ரஹா).
அன்புள்ள கந்தர்வன், சாரங், உங்கள் விளக்கங்களுக்கு நன்றி.
வேதாந்தம் என்றால் அத்வைதம் மட்டுமே அல்ல என்பதை அறிவேன் (ஆயினும் நடைமுறை வழக்கில் அப்படி ஆகி விட்டது – அல்லவா? .. மற்ற தரப்புக்கள் ஞானம்/தத்துவத்திலிருந்து விலகி பக்தி மார்க்க இறையியலை அதிகம் வலியுறுத்தியது காரணமாக இருக்கலாம்). வழிபாட்டு முறைகளை மாற்றிக் கொள்ளவேண்டும் என்றெல்லாம் கூறப் படவேயில்லை!
// இப்படி இருக்கையால் – சரம ஸ்லோகமே முக்கியமான கீதா வாக்கியம், முன் உள்ளவை எல்லாம் வெறும் அவதாரிகை என்பது அவர்களின் நிலை பாடு //
இதுவும் ஒரு குறுக்கல்வாதம் என்பது என் தாழ்மையான எண்ணம். மிகையான எளிமைப் படுத்தலும் கூட. இன்றைக்கு கீதையை திறந்த மனதுடன் படிக்கும் எவரும் இத்தகைய ஒற்றைப் பார்வையை விமர்சிக்கவே செய்வார்கள்.
குறிப்பிட்ட சித்தாந்தத்தின் கருத்தாக்கத்தை நீங்கள் எடுத்தோதுவதில் எனக்கு பிரசினை எதுவும் இல்லை. சமயத்தில், சமயவாதம் என்றாலும் கூட அது தனக்கே உரிய அழகுடனும், கம்பீரத்துடனும் வெளிப்படுகிறது.
ஆனால், இது ஒன்று தான் இந்து தர்மத்தின் ஆதாரபூர்வமான கொள்கை, வேறெதுவும் இல்லை என்பது போன்ற நிலைப்பாடுகள் சரியல்ல (உதாரணமாக, பரம்பொருள் என்பதை நாராயணன் என்ற சொல்லால் மட்டுமே குறிக்க வேண்டும், வேதத்தில் “நம்பிக்கை” இல்லாவிட்டால் முக்தி கிடைக்காது, சரணாகதி மார்க்கம் மூலம் மட்டுமே மோட்சம் சாத்தியம்). அவற்றையே நான் விமர்சிக்கிறேன்.
குறிப்பாக, கடந்த நூறாண்டுகளுக்கும் மேலாக இந்து மறுமலர்ச்சியின் நாயகர்கள் இதை எடுத்தோதி வந்திருக்கிறார்கள். உதாரணமாக. கீதை. மகாகவி பாரதி அதைத் தமிழில் ஆக்கியிருக்கிறார்; வங்கத்தின் புரட்சிவீரர்கள் அதில் தேசிய உத்வேகம் பெற்றிருக்கிறார்கள்; மகாத்மா காந்தி சத்தியாக்கிரகத்தின், சமூக சேவையின் பொறியைக் கண்டிருக்கிறார்; ஸ்ரீஅரவிந்தர் ஒருங்கிணைந்த யோகத்தின் சாஸ்திரமாக அதை விளக்கியிருக்கிறார். திலகர் அரசியல் செயலூக்கத்தின் உத்வேகத்தை அதில் கண்டிருக்கிறார். இவ்வளவு இருக்க, கீதையின் செய்தி வைஷ்ணவ இறையியல் மட்டுமே, சரணாகதி மார்க்கம் மட்டுமே என்று கச்சை கட்டி வாதம் செய்யும் போக்கு கண்டிப்பாக விமர்சிக்கப் பட்டே ஆகும் அல்லவா? நம் எதிரே எவ்வளவு பிரத்யட்ச உண்மைகள் உள்ளன!
உபநிஷதங்களும் சரி, கீதையும் சரி, வேதாந்த தரிசனமும் சரி – ஒற்றைக் குரல்கள் அல்ல. அவை பன்முகப்பட்ட சிந்தனை வீச்சுகளின், ஆன்மிக பரிமாணங்களின் வெளிப்பாடுகள். அவற்றை அப்படிப் பட்ட அடிப்படைப் புரிதலுடன் கற்பது தான் சரியான வழி என்று எனக்குத் தோன்றுகிறது.
பெரியாரிஸ்ட்டு அவர்களே,
உடல் இறந்த பின் உயிரும் அதோடு இறந்து விடுகிரது என்று யாராவது கருதினால், அது ஒரு அனுமானமே, உண்மை என்று சொல்ல முடியாது.
உடல் இறக்கும் போது , உயிர் அழிந்து விடுகிரதா என்பதை நாம் இறந்ததற்க்குப் பிறகுதான் அறிந்து கொள்ள முடியும், அல்லது இறப்புக்கு முன்பே ஆழ்ந்த மனக் குவிப்பின் மூலம் இதற்கான விடையை அறிய முடியுமா என்பதையும் சிந்திக்க வேண்டும். உயிரும் அழிந்து விடுகிறது என்பதை இப்பொதே அறுதியிட்டு உறுதியாகக் கூற முடியாது.
இது ஆராயப் பட வேண்டிய ஒன்று.
கொச்சி கடற்கரையில் நின்று, “எங்கய்யா இருக்கு ஆப்பிரிக்க கண்டம், நல்லா பாரு… ஆப்பிரிக்க கண்டம் எங்க இருக்கு, காட்டு ?” என்று கேட்பது போல இருக்கு. ஒரு போட்டில் ஏறி ஒரு மணி நேரம் பயணம் செய்தாலும் ஆப்பிரிக்கா கண்டத்தை காண முடியாது. நீண்ட முயற்சி தேவை.
ஆனால் முயற்சியே எடுக்காமல் வெறுமனே உண்டு இரவு தூங்கி காலையில் எழுந்து அடப் போய்யா, உடல் சாகும் போது உயிரும் அழிந்து விடுகிறது என்று முடிவுக்கு வர முடியுமா?
இந்த விடயத்தில் சித்தர்கள்,புத்தர், விவேகானந்தர் ஆகியோர் மனக் குவிப்பு செய்து ஆராய்ச்சி செய்து உள்ளனர். அதை அப்படியே ஒத்துக் கொள்ள வேண்டும் என்று நான் கூறவில்லை. நாத்தீகர்களும் இந்த விடயத்தில் ஆராய்ச்சி இல்லாமல் ஒரு கருத்தை எடுத்து முடிவாக அறிவிப்பது நுனிப் புல் மேயும் செயலே.
உடல் இறந்த பின் உயிர் கண்டிப்பாக தொடர்ந்து வாழ்கிறது என்று நான் உறுதியாக சொல்லவில்லை. நாம் ஆராய்ச்சி செய்வோம். உயிர் ஆராய்ச்சி ஆதிகால முனிவனுடனொ, சித்தனுடனோ புத்தனுடனோ, இயேசு கிறிஸ்துவிடனோ, முஹமது நபியுடனோ ஆதி சங்கரருடனோ, விவேகானந்தருடனோ முற்றுப் பெற வேண்டியதில்லை.
நீங்களும், நானும், இந்த உலகில் யார் வேண்டுமானாலும் தொடர்ந்து ஆராய்ச்சி செய்யலாம். ஆராய்ச்சி செய்து விட்டு கருத்தை சொல்லுங்கள்.
அவசரப் பட்டு அறிக்கை விட்டால், லூசுத் தனம் என, சிந்திப்பவர்கள் கருத வாய்ப்பு உண்டு.
ஜெயஸ்ரீ அவர்களே
//என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.
இது உங்களது பெருந்தன்மையை காட்டினாலும், இதற்க்கு எனக்கு நிச்சயமாக அதிகாரம் கிடையாது – அனைத்திலும் மிக சிறியவன் நான்.
//
ஆயினும் நடைமுறை வழக்கில் அப்படி ஆகி விட்டது – அல்லவா? .. மற்ற தரப்புக்கள் ஞானம்/தத்துவத்திலிருந்து விலகி பக்தி மார்க்க இறையியலை அதிகம் வலியுறுத்தியது காரணமாக இருக்கலாம்
//
சிறிதளவும் உண்மை அல்ல. இன்றளவும் ஸ்ரீவைஷ்ணவர்களும் மத்வர்களும் அவரவர் ஆசாரிய சூக்திகளை (நூல்களை) படித்துத் தான் வருகிறார்கள். பிள்ளை லோகசாரியார் பண்ணியுள்ள “தத்துவ த்ரயம்” நூலையும், ஆளவந்தாரின் “சித்தித் த்ரயத்தையும்” வாசித்து பாருங்கள். ஏன், ஆழ்வார்களின் பாடல்களிலேயே தெளிவாக பல உபநிஷத்து வாக்கியங்கள் தமிழாக்கப் பட்டுள்ளன. சரி, அத்வைதிகளில் எத்தனை பேர் இன்று ஆதி சங்கர பிரும்ம சூத்திர பாஷ்யத்தையும், கீதா பாஷ்யத்தையும், சுரேசுவரரின் நைஷ்கர்மியசித்தியையும் வாசிக்கிறார்கள்? ஆகையால், “தத்துவ ரீதியி விட்டு விலகி விட்டன” என்று வைனவத்தைச் சொல்வது சரி அன்று.
நீங்கள் சொல்வதைப் பார்த்தால் ஞான மார்க்கமே பக்தி மார்கத்திற்குப் பல படி உயர்ந்தது என்ற அபிப்பிராயம் எழுகிறது. ஆதி சங்கரர் பண்ணியுள்ளதாகப் படிக்கப்படும் “பஜ கோவிந்தத்தில்”, “மூட மதியே, சமஸ்கிருத இலக்கணத்தை வாசிப்பதால் ஒரு பயனும் இல்லை. கோவிந்தனை கும்பிடு! அப்பொழுது யமன் கூட உன் முக்திக்கு தடங்கல் ஆக மாட்டான்” என்று உள்ளதே? அப்படியானால், இதை ஆசிரயிப்பவர்கள், “ஞான மார்க்கம் முற்றித் தான் பக்தி மார்க்கம்” என்று கொள்ள வேண்டுமே!
திரு சாரங்,
மூத்தவன் இருப்பினும், அறிவுடயோனான இளையவன் பின்னே அரசும் செல்லும். நீங்கள் அள்ளிக் கொடுத்த பிரம்ம ஞானத்திற்கு என் வணக்கங்கள். இதில் வயது, பிற தகுதிகள் பார்ப்பது கிடையாது.
ஜடாயு அவர்களே
//
மற்ற தரப்புக்கள் ஞானம்/தத்துவத்திலிருந்து விலகி பக்தி மார்க்க இறையியலை அதிகம் வலியுறுத்தியது காரணமாக இருக்கலாம்//
இது புதிதாக உள்ளது – மயர்வற மதின்னலம் அருளினான் யவன் அவன் என்று ஆழ்வார் நீங்கள் சொன்னதை முதல் பாசுரத்திலே போட்டு உடைத்துவிட்டாரே – ராஜாஜியின் பஜ கோவிந்தம் முன்னுரையில் “those who think gyana is different from bhakti are ignorant” என்று கூறி விட்டார் – இதிலிருந்து இரண்டு விஷயங்கள் திண்ணம் ஒன்று ஆதி சங்கரரும் அவருடைய இறுதி காலங்களில் பக்தியை முன் வைத்தார் என்பது, இரண்டு மற்ற தரிசனங்கள் மதின்னலமான ஞானாம் கூடிய பக்தியையே முன் வைத்தனர் என்று – ராமானுஜர் வேதாந்தமும் செய்தார் [ஸ்ரீ பாஷ்யம், வேதண்ட சங்கரம் ...] பக்தியும் செய்தார் [கத்ய த்ரயம்]. அவரது கீதா பாஷ்யத்தில் ஞானம் கலந்த பக்தியே வலியுறுத்தபடுகிறது
//
// இப்படி இருக்கையால் – சரம ஸ்லோகமே முக்கியமான கீதா வாக்கியம், முன் உள்ளவை எல்லாம் வெறும் அவதாரிகை என்பது அவர்களின் நிலை பாடு //
இதுவும் ஒரு குறுக்கல்வாதம் என்பது என் தாழ்மையான எண்ணம். மிகையான எளிமைப் படுத்தலும் கூட. இன்றைக்கு கீதையை திறந்த மனதுடன் படிக்கும் எவரும் இத்தகைய ஒற்றைப் பார்வையை விமர்சிக்கவே செய்வார்கள்.
//
நமக்கு ஒவ்வாவதையும் புலப்படாதையும் குறுக்கல்வாதம் எனக்கொள்வது சரியல்ல என்பது எனது அபிப்ராயம்
இது தத்துவ ஞானிகள் ஆராய்ந்து கூறியவை – சும்மா சொன்னது இல்லை
சரம ஸ்லோக நிர்ணயமானது பிரசித்தம் – வேண்டுமானால் சரம ஸ்லோகத்தையும் கீதையில் உள்ள மற்ற ஸ்லோகங்களையும் நீங்களே நன்கு ஆராயுங்கள் – எல்லா இடத்திலும் சொன்னது சரம ஸ்லோகத்தில் அப்படியே பிரதிபலிக்கும் – சரம ச்லோக்மானது ஒரு “summary – முடிவுரை” போல. கீதையில் இரண்டாம் அத்யாயத்தில் உள்ளதை தான் நெடுக விரித்து கூறுகிறார் அதற்காக இரண்டாம் அத்யாயம் மட்டுமே போதுமே என்றால் எப்படி. இரண்டாம் அத்தியாயம் என்பது ஒரு “abstract – முகவுரை” மாதிரி. நாம் உதாரணத்திற்கு ஒன்று பாப்போம்
சரம ஸ்லோகம் – சர்வ தர்மான்
இதையே தான் இரண்டாம் அத்தியாயத்தில் 2-54 ஆவது ஸ்லோகம் தொடங்கி முடிவு வரை வலியுறுத்தப்படுகிறது
2-57 – ய : சர்வத்ர அநமிஸ்நேஹ் : தத் தத் ப்ராப்ய ஷுபாஷுபம் ந அபிநந்ததி நத்வேஷ்டி தஸ்ய ப்ராஜ்ஞய ப்ரதிஷ்டிதா – யாரிடம் எதனிலும் ஈடுபாடு இல்லாமல் [தர்மமத்தில் ஈடுபாடு இல்லையோ] பற்றுதல் இல்லையோ ….
சரம ஸ்லோகம் மாம் ஏகம் சரணம்
— தானி சர்வாணி சம்யம்ய யுக்த ஆசித மத்பர:
எல்லாவற்றையும் அடக்கி (எல்லாவற்றையும் விட்டு)மனதில் அசைவுகள் இல்லாமல் என்னையே பரமாத்வாக கருதி ….
இப்படி நீங்கள் சரம ஸ்லோகத்தில் பார்ப்பது கீதை எங்கிலும் உள்ளது – கீதை எங்கிலும் உள்ளது சரம ஸ்லோகத்தில் உள்ளது [இதை இப்படியும் அர்த்தம் கொள்வதில் தவறில்லை சமயவாதும் இல்லை]
பூர்வாச்சார்யர்கள் சும்மா அபிமானத்துடன் இதை கூறவில்லை – உங்களுக்கு இந்த ஆச்சர்யர்களை பற்றி தெரியுமோ தெரியாதோ எனக்கு தெரியாது – பிரமாணம் இல்லாததயும் அவர்களது பூர்வாச்சார்யர்கள் சொல்லாததையும் ஒருக்காலும் இவர்கள் சொல்ல மாட்டார்கள் [ராமானுஜ கீதா பாஷ்யம் அப்படியே ஆளவந்தார் செய்த கீதார்த்த சங்கரத்தை தழுவி இருக்கிறது]
— முகுந்த மாலை என்பது குலசேகரர் செய்தது என்று உள்ளது – இதை விசேஷமாக குலேசேகர ஆழ்வாரே தான் பண்ணினார், வைஷ்ணவர்களுக்கு கிரு கண்களான உபய வேடாந்தைளும் திளைத்த ஆழ்வாரே நமக்கு முன்னோடி என்றெல்லாம் கொள்ளாமல் தீர ஆராய்ந்து இரு குலசெகரகளும் வேறு வேறு என்றே அறுதி இட்டுள்ளனர்
– பேதை குழவி பிடித்து சுவைத்துன்னும் பாதக்கமலங்கள் காணீரே – இதற்க்கு இப்படியும் அர்த்தம் கொள்ளலாம் – கண்ணானது பாதங்கள் இனிமையானவை அதானால் தான் குழவிகள் உண்கின்றன என்று, இதை யாரும் ஏற்க மாட்டார்கள் ஏன் என்றால் பூர்வாச்சார்யர்கள் இப்படி அர்த்தம் கொள்ளவில்லை – இதற்க்கு சரியான அர்த்தமே கொண்டுள்ளனர்
– சிற்றம் சிறு காலேவந்துன்னை சேவித்து – இதை கண்ணனின் சின்னன் சிறிய காலே நாங்கள் உன்னை செவிக்கிறோம் என்றும் அர்த்தம் கூறலாம் – ஆனால் பூர்வாசார்யர்கள் கருத்து இதற்க்கு ஒவ்வாததால் இப்படி ஒருவரும் கொள்ளுவதில்லை
கூரத்தாழ்வான் ராமனுஜரின் மடத்து வாசலில் ஒரு மாத காலம் வெறும் நீர் மட்டும் உண்டு கற்றுக்கொண்டது சரம ஸ்லோக விவரணம் – இதை லேசாக கொள்பவர்கள் ஸ்ரீ வைஷ்ணவர்கள் – இவ்வளவு முக்கியம் வாய்ந்த ஒன்றை குறுக்கல்வாதம் என்று கொள்வது தாழ்மையான கருத்தே என்பதில் ஐயம் இல்லை
//
குறிப்பிட்ட சித்தாந்தத்தின் கருத்தாக்கத்தை நீங்கள் எடுத்தோதுவதில் எனக்கு பிரசினை எதுவும் இல்லை. சமயத்தில், சமயவாதம் என்றாலும் கூட அது தனக்கே உரிய அழகுடனும், கம்பீரத்துடனும் வெளிப்படுகிறது.
ஆனால், இது ஒன்று தான் இந்து தர்மத்தின் ஆதாரபூர்வமான கொள்கை, வேறெதுவும் இல்லை என்பது போன்ற நிலைப்பாடுகள் சரியல்ல (உதாரணமாக, பரம்பொருள் என்பதை நாராயணன் என்ற சொல்லால் மட்டுமே குறிக்க வேண்டும், வேதத்தில் “நம்பிக்கை” இல்லாவிட்டால் முக்தி கிடைக்காது, சரணாகதி மார்க்கம் மூலம் மட்டுமே மோட்சம் சாத்தியம்). அவற்றையே நான் விமர்சிக்கிறேன்.
//
பிரபத்தி என்ற ஒரு உயர்ந்த வழியானது உங்களுக்கு சமயவாதமாக படுகிறது – சரணாகதி மார்க்கம் மட்டுமே முக்தி அளிக்கும் என்பது வைஷ்ணவர்கள் தங்களுக்கு வேறு அதிகாரம் இல்லை (அடியேன் சிறிய ஞானத்தன் என்று ஆழ்வாரே கூறிய பின்) என்பதால் மட்டுமே. போவோர் வருவோரிடம் எல்லாம் இதை திணித்ததாக எனக்கு தெரிய வில்லை – எனக்கு இத்தை தவிர வேறு கதி இல்லை என்று இருந்தால் அது மற்றவரை ஏன் பாதிக்க வேண்டும். சரணாகதி மார்க்கமும் சும்மா பஞ்ச சம்ஸ்காரம் செய்துவிட்டு சும்மா இருப்பது இல்லை – அதுவும் சிரமமானதே. பலர் நாம்சன்கீதனம் தான் கலி யுகத்தில் முக்தி என்கிறார்கள் – இதையும் குறுக்கல்வாதம் என்பீர்களா
//
இவ்வளவு இருக்க, கீதையின் செய்தி வைஷ்ணவ இறையியல் மட்டுமே, சரணாகதி மார்க்கம் மட்டுமே என்று கச்சை கட்டி வாதம் செய்யும் போக்கு கண்டிப்பாக விமர்சிக்கப் பட்டே ஆகும் அல்லவா? நம் எதிரே எவ்வளவு பிரத்யட்ச உண்மைகள் உள்ளன!
உபநிஷதங்களும் சரி, கீதையும் சரி, வேதாந்த தரிசனமும் சரி – ஒற்றைக் குரல்கள் அல்ல. அவை பன்முகப்பட்ட சிந்தனை வீச்சுகளின், ஆன்மிக பரிமாணங்களின் வெளிப்பாடுகள். அவற்றை அப்படிப் பட்ட அடிப்படைப் புரிதலுடன் கற்பது தான் சரியான வழி என்று எனக்குத் தோன்றுகிறது.
//
எங்கேயாவது இப்படி கூறினோமா நான் தான் தெளிவாக எனக்கு தெரிந்த இரண்டு பதில்கள் உண்டு ஒன்று பொதுவானது(முதலாவது – இவ்வளவு சொன்னேன், இது எதுவுமே முடியலன்னா இத பண்ணு. எனக்கு துளசி தீர்த்மாவது கொடு என்று கடைசியாக சொல்லவில்லையா அது போல் தான்) ஒன்று வைஷ்ணவர்கள் கொள்வது என்று சொன்னேனே (வைஷ்ணவர்கள் மற்றவரை ஏற்க வேண்டும் என்ற வற்புறுத்துவது அல்லது அறுதியானது என்று சொல்லவில்லையே)
எவ்வளவோ கீதா பாஷ்யம் உள்ளது – சங்கருருக்கு முன்னும் இருந்தது – அவரே எக்கச்சக்கமாக உள்ளது பல அர்த்தங்கள் உள்ளது – மக்கள் குழம்பி உள்ளனர் அதற்காகவே நான் இந்த பாஷ்யம் செய்கிறேன் என்கிறார் – இன்றைக்கு பல்லாயிர பாஷ்யங்கள் உள்ளன – எல்லாமே நன்றாகவே உள்ளன [திலகர் கர்ம யோகமே முக்தி அதுவே கீதையின் சாரம் என்கிறார் - இதுவும் சிலருக்கு ஏற்புடையதே]
நீங்கள் ஏனோ வைஷ்ணவர்கள் மட்டும் இப்படித்தான் என்று முடிவு கட்டிவிட்டு அதை சார்ந்தே பேசுவது போல் உள்ளது – நீங்கள் பார்த்து பழகிய சிலர் காழ்புணர்ச்சி கொண்டிருந்தால் எல்லாரையும் அந்த கட்டத்தினுள் கட்டுவது சரியல்ல என்று படுகிறது
ஜெயஸ்ரீ அவர்களே
//
மூத்தவன் இருப்பினும், அறிவுடயோனான இளையவன் பின்னே அரசும் செல்லும். நீங்கள் அள்ளிக் கொடுத்த பிரம்ம ஞானத்திற்கு என் வணக்கங்கள். இதில் வயது, பிற தகுதிகள் பார்ப்பது கிடையாது.
//
அடியேன் சித்திரையில் சித்திரை – அந்த வாசனையோ என்னமோ, என்றும் சிறியவனாக இருப்பதே எனக்கு பொருந்தும்
திருச்சிகாரரே
இந்த உவமானம் மிக அருமை
//
கொச்சி கடற்கரையில் நின்று, “எங்கய்யா இருக்கு ஆப்பிரிக்க கண்டம், நல்லா பாரு… ஆப்பிரிக்க கண்டம் எங்க இருக்கு, காட்டு ?” என்று கேட்பது போல இருக்கு. ஒரு போட்டில் ஏறி ஒரு மணி நேரம் பயணம் செய்தாலும் ஆப்பிரிக்கா கண்டத்தை காண முடியாது. நீண்ட முயற்சி தேவை.
ஆனால் முயற்சியே எடுக்காமல் வெறுமனே உண்டு இரவு தூங்கி காலையில் எழுந்து அடப் போய்யா, உடல் சாகும் போது உயிரும் அழிந்து விடுகிறது என்று முடிவுக்கு வர முடியுமா
//
ஞானம், பக்தி இவை எல்லாம் பற்றி நண்பர்கள் விவாதிக்கின்றனர். ஞான மார்க்கம் என்று ஒரு வழி இருப்பதாக சொல்லப் படுகிறது. உண்மையை தேடுதல், உண்மையை பற்றிய ஆராய்ச்சி இவை ஞான மார்க்கம் என கருதப் படலாம் என நினைக்கிறேன்.
ஆனால் ஞானம் என்பது உயிரானது விடுதலை அடைந்த நிலையே. ஞானம் என்பது ஒரு நிலை. ஞானம் is a state of soul ( உயிர்). துன்பங்களில் இருந்து விடுதலை பெற்ற நிலையே ஞானம் எனக் கூறப் படுகிறது.
ஒரு மனிதன் தன்னை மனிதனாக, உடல் உள்ளவனாக , அந்த உடல் சார்ந்தவனாக இருக்கும் வரை துன்பங்கள் தன்னை வந்து சேர்வதை, அதாவது அவன் துன்பங்களை அனுபவிப்பதை தடுக்க இயலாது, அவன் எவ்வளவு பெரிய மனிதனாக இருந்தாலும், அரசனாக இருந்தாலும், பேரரசானாக இருந்தாலும், இதே நிலைதான். இந்த அடிமை நிலை தனக்கு இல்லை என்பதை அவன் எப்போது உணர்கிறானோ அப்போது அவன் உயிர், அவன் அறிவு ஞானம் பெற்ற நிலையை அடைகிறது என சொல்லப் படுகிறது.
இந்த ஞான நிலையை அடைய கர்ம யோகம், தியானம், கர்ம பலத் தியாகம், பக்தி, ….. என பல வழிகள் சொல்லப் பட்டுள்ளன. ஒவ்வொருவருக்கும் ஒரு வழி பொருத்தமாக இருக்கலாம். பக்தி என்பது பெரும்பாலான மக்களால் எளிதில் பின்பற்றக் கூடிய வழியாக கருதப் படுகிறது.
ஆனால் எந்த வழியில் வந்தாலும் கடைசியில் ஞானத்தை அடைந்து விடுதலை பெறுவதாக கூறப் படுகிறது.
இதுவே இந்து மதம் பற்றி நாம் கற்ற வகையில் என்னுடைய புரிதல். இது தவறானது என யாராவது கருதினால் விளக்கம் அளிக்கலாம்.
கந்தர்வன், சாரங்,
நம்மாழ்வாரின் முக்தி பற்றிய அந்தப் பாடல் தன்னளவில் முழுமையானது. அதில் “நம்பிக்கை” பற்றி எதுவும் இல்லவும் இல்லை. வேதாந்தத்தின் மையமான தத்துவம் கவித்துவ உச்சம் கொள்ளும் தருணத்தில் விளைந்த ஒரு கவிதை அது, அதைச் சுட்டுவதற்காகவே குறிப்பிட்டேன்.. உடனே சுழன்றடித்து மேலும் மேலும் திருவாய்மொழி மேற்கோள்களை அள்ளி வீசுகிறீர்கள்! இத்தகைய விவாதங்களில் எனக்கு ஆர்வமில்லை என்றும் முன்பே கூறிவிட்டேன்.
இரண்டு விளக்கங்கள் மட்டும் கொடுத்து விட்டு விடைபெறுகிறேன்… எனக்கு முக்கியமான வேலைகள் நிறைய உள்ளன..
// ஆயினும் நடைமுறை வழக்கில் அப்படி ஆகி விட்டது – அல்லவா? .. மற்ற தரப்புக்கள் ஞானம்/தத்துவத்திலிருந்து விலகி பக்தி மார்க்க இறையியலை அதிகம் வலியுறுத்தியது காரணமாக இருக்கலாம் //
சரியாகக் கவனியுங்கள் – “நடைமுறை வழக்கு” என்று தான் சொன்னேனே அன்றி எனது கருத்து என்று சொல்லவே இல்லை. உடனே refutation களை ஆரம்பித்து விட்டீர்களே! இன்றைக்கு வேதாந்தம் (Vedanta),வேதாந்தி (Vedanti) என்ற சொல்லாட்சியை அதிகம் புழங்குபவர்கள் அத்வைதிகள் மட்டுமே (அத்வைதி என்றால் சம்பிரதாய சங்கரமடங்கள் மட்டுமே என்று நினைத்துக் கொள்ளவேண்டாம் – அது தவறு. ஸ்ரீராமகிருஷ்ணரின், ஸ்ரீநாராயண குருவின், சட்டம்பி சுவாமிகளின், ரமண மகரிஷிகளின், சின்மயானந்தரின் மற்றும் பல யோகிகளின் பாரம்பரியத்தினர் எல்லாரும் கூட அத்வைதிகளே, தத்துவரீதியாக, அவர்களும் ஆதிசங்கரரைப் போன்றே மற்ற துவைதவாத வேதாந்தப் பிரிவுகளை நிராகரிக்கவில்லை, மாறாக படிநிலைகளாகக் கண்டார்கள்; சமயரீதியாக சமரசத்தை உபதேசித்தார்கள்).
பக்தியை மையமாகக் கொண்ட வேதாந்தப் பிரிவினர் ஸ்ரீவைஷ்ணவம், மத்வ சித்தாந்தம் ஆகிய தனிப் பெயர்களால் தங்கள் தரப்பைத் *தாங்களே* அழைத்துக் கொண்டனர். கருத்தளவிலும் கூட தத்துவத்தையும், ஞானத் தேடலையும் பின்னால் நிறுத்தி பக்தி சார்ந்த, சமயம் சார்ந்த வழிபாட்டு முறைகளையே முன்வைத்தனர். எனவே காலப் போக்கில் வேதாந்தம் என்றால் அத்வைதம் மட்டுமே என்பதான ஒரு வெகுஜன புரிதல் ஏற்பட்டது, அது இன்றும் தொடர்கிறது.
இதை சுவாமி விவேகானந்தரும் சுட்டிக் காட்டியுள்ளார். வேதாந்தம் என்பது அத்வைதம், விசிஷ்டாத்வைதம், த்வைதம், த்வைதாத்வைதம் ஆகிய அனைத்து தரப்புகளையும் உள்ளடக்கியதே என்றும் ஆணித்தரமாக அவர் வலியுறுத்தியுள்ளார். அதுவே என் கருத்தும் ஆகும்.
// நீங்கள் ஏனோ வைஷ்ணவர்கள் மட்டும் இப்படித்தான் என்று முடிவு கட்டிவிட்டு அதை சார்ந்தே பேசுவது போல் உள்ளது – நீங்கள் பார்த்து பழகிய சிலர் காழ்புணர்ச்சி கொண்டிருந்தால் எல்லாரையும் அந்த கட்டத்தினுள் கட்டுவது சரியல்ல என்று படுகிறது //
இல்லை. தனிப்பட்ட சில அனுபவங்களை வைத்து ஒரு நிலைப்பாட்டைக் கொள்ளும் அளவுக்கு நான் முதிர்ச்சியற்றவன் அல்ல. சொல்லப் போனால், நான் கண்ட ஸ்ரீவைஷ்ணவ நண்பர்களில் பெரும்பாலர் முற்றாகவே சமய சமரசம் கொண்டவர்கள். 25 வருடங்களாக எல்லா சாதிக்காரர்களையும் சபரிமலைக்கு அழைத்துச் செல்லும் ஐயங்கார் குருசுவாமி நான் மிகவும் மதிக்கும் பெரியவர்களில் ஒருவர், இப்படிப் பலரைச் சொல்லலாம். எங்கள் வீட்டிலும் சங்கரர், ராமானுஜர், ராமகிருஷ்ணர், விவேகானந்தர் என்று எல்லா மகானகளின் திருவுருவத்தையும் இணைத்து வைத்துப் போற்றுகிறோம்.
இங்கு கூறியதெல்லாம் கருத்து ரீதியாக நீங்கள் இங்கு எழுதியவற்றின் மீதான விமர்சனம் மட்டுமே.
ஜடாயு அவர்களே
//
நம்மாழ்வாரின் முக்தி பற்றிய அந்தப் பாடல் தன்னளவில் முழுமையானது. அதில் “நம்பிக்கை” பற்றி எதுவும் இல்லவும் இல்லை. வேதாந்தத்தின் மையமான தத்துவம் கவித்துவ உச்சம் கொள்ளும் தருணத்தில் விளைந்த ஒரு கவிதை அது, அதைச் சுட்டுவதற்காகவே குறிப்பிட்டேன்.. உடனே சுழன்றடித்து மேலும் மேலும் திருவாய்மொழி மேற்கோள்களை அள்ளி வீசுகிறீர்கள்! இத்தகைய விவாதங்களில் எனக்கு ஆர்வமில்லை என்றும் முன்பே கூறிவிட்டேன்.
//
திருவைமொழியை இங்கு ஒப்பித்து காட்ட வேண்டும் என்ற எண்ணம் இல்லை – நீங்கள் பாலா கூறியதை நம்மாழ்வாரே கூறியுள்ளாரே பாருங்கள் என்பது போல் தான் உங்கள் பதிலில் எழுதி இருந்தீர்கள் – தன்னளவில் முழுமையானது என்பது மற்ற பாசுரங்களுக்கு விரோதம் இல்லாமல் அர்த்தம் கொள்ள வேண்டும் [நான் பாசுரத்தை பற்றி எதுவும் கூறவில்லை, நீங்கள் ஒரு தனி பொருள் கொண்டு அந்த பொருள் தான் பாலா சொன்னது என்று செர்துக்குரியத்தை தான் சுட்டிக்காட்டினேன்] – சும்மா ஆழ்வார் இஷ்டம் போல எல்லாத்தையும் சொன்னார் என்பது ஏற்புடையதல்ல – நீங்கள் குறிப்பிட்ட பாசுரத்தை மற்ற பாசுரங்களோடு சேர்த்து எவ்வண்ணம் பொருள் கொள்ள வேண்டும் என்பதற்காகவே எழுத முயற்சித்தேன்
//
சரியாகக் கவனியுங்கள் – “நடைமுறை வழக்கு” என்று தான் சொன்னேனே அன்றி எனது கருத்து என்று சொல்லவே இல்லை. உடனே refutation களை ஆரம்பித்து விட்டீர்களே
//
இப்படி யார் நினைத்து கொண்டிருந்தாலும் அது உண்மையில் தவறான கருத்தே என்பதை சொல்லவே எழுதியது – “refutation” இல்லை. வேதாந்தத்தை ஒதுக்கி வைத்துவிட்டு பக்திக்கு மட்டுமே முக்கியத்துவம் என்றால் வேதாந்தத்தில் பக்தியே இல்லை என்றல்லவா ஆகிவிடும் – வேதாந்தம் ஞானம் மட்டும் அல்ல பக்தியும் சேர்ந்ததே – அதையே ராஜாஜி சுட்டிக்காட்டி உள்ளார்
//
இங்கு கூறியதெல்லாம் கருத்து ரீதியாக நீங்கள் இங்கு எழுதியவற்றின் மீதான விமர்சனம் மட்டுமே.
//
விமர்சிக்கும் முன் அது சரியானதா என்று எப்படி ஊர்ஜிதம் செய்வீர்கள் – பல முறை இது சமயவாத போக்கு இல்லை அது உங்களின் புரிதல் மட்டுமே என்று சொன்ன பின்பும் நீங்கள் அதையே மறுபடியும் அழுத்தி கூறியதால் உங்களுக்கு வைணவர்கள் மீது அப்படி ஒரு எண்ணம் உண்டோ என்று என்ன வேண்டியதாயிற்று – தவறான எண்ணம் எனில் மன்னியுங்கள் – சமரச கொள்கை உடையவர்கள் தான் சரி என்ற எண்ணமே சமரசமான எண்ணம் இல்லை [தர்க்க ரீதியில் அடிபட்டு போகிறது]
நாம் விவாதத்தை வளர்க்க வேண்டாம் – உங்களின் கருத்துக்களின் மீது எனது அபிப்பிராயம் என்னது என்பதை மட்டுமே இங்கு எழுதியது
ஜடாயு அவர்களே,
ஒன்றே ஒன்றை மட்டும் கவனிக்குமாறு தாழ்வுடன் கேட்டுக்கொள்கிறேன்:
//
மற்ற துவைதவாத வேதாந்தப் பிரிவுகளை நிராகரிக்கவில்லை, மாறாக படிநிலைகளாகக் கண்டார்கள்; சமயரீதியாக சமரசத்தை உபதேசித்தார்கள்
//
நீங்கள் கூறும் சமரசமாவது “எல்லா சம்பிரதாயங்களும் சமம்” என்ற கருத்து தானே? “சமரசத்தை உபதேசித்தார்கள்” என்று கூறிவிட்டு, துவைதவாதத்தை “படிநிலைகள்” என்று சொன்னீர்கள். இது முன்னுக்குப் பின் முரணானது.
அது போகட்டும். நீங்களோ, “த்வைதம் முற்றி, விஷிஷ்டாத்வைதத்திற்கு வந்து, அதற்கும் பின்பு மேலான அத்வைத நிலையை அடைகிறான் மனிதன்” என்று கூறுகிறீர்கள். அப்படி சொல்ல உங்களுக்கு உரிமை உண்டு. உங்கள் அபிப்பிராயத்தைச் சொன்னதற்காக நாங்கள் (கந்தர்வன், சாரங் அவர்கள், போன்றோர்) உங்களை “சமயவாதி” என்று அழைக்கவில்லை.
ஆனால் நாங்கள் மட்டும் “சௌர-காணாபத்திய-சைவ-சாக்த மதங்கள் படிநிளைகளே, வைணவம் கடைசி படி” என்று சொன்னதற்கு எங்களை “சமயவாதி” என்று அழைப்பது நியாயமா என்று ஆலோசிக்குமாறு உங்களையும் விவாதத்தில் கலந்துக் கொண்ட மற்றவர்களையும் கேட்டுக்கொண்டு தாழ்வுடன் இவ்விவாதத்தை முடித்துக் கொள்கிறேன்.
நன்றி,
கந்தர்வன்.
PS: ஸ்ரீவைஷ்ணவ சித்தாந்தமும் அத்வைத தர்சனம் தான். [விசிஷ்ட + அத்வைதம் என்பதே, விசிஷ்ட+த்வைதம் என்பது அல்ல.]
ஜீவ்ஸ் அவர்களே
//
இறைவனைப் பற்றிய அறிவை/ தெளிவை எந்த ஒரு நூலும் ஏற்படுத்த முடியாது. 100% தூரத்தில் ஒரு அடி எடுத்து வைக்கத் தூண்டும் தூண்டுகோல் என்ற அளவில் இருக்கலாமே தவிர அவையே பிரமாண நூல்கள் அவற்றைக் கொண்டே வீடுபேறு என்பது – என்னளவில் பேத்தலான விஷயம்.
//
இறைவனை அறிய என்று கூறவில்லையே – வேதாந்தத்தை அறியவே என்று கூறியுள்ளேன் – ஆதி சங்கரரும் அந்த வந்த இமே என்ற கீதையின் வ்யாக்யானத்தில் இதை தெளிவாகவே சொல்லி உள்ளார் – வேதாந்தம் ஆத்மா ஸ்வரூபத்தை அறிய ஒரு வழி காட்டி, ஆசார்யாரியம் சென்று வேதம் கற்றால் ஆத்மா சுத்தி உண்டாகி, வேதம் சொல்வது புரிந்து, அதனால் ஞானம் பிறந்து, பக்தி வளர்ந்து, முக்தி பெற்று இறை உள்ளில் ஆன்மா ஒடுங்குகிறது
நாம் இங்கே ஆராய்வது வேந்தாந்தை பற்றி பேச வேதாந்தமே பிரமாணம் என்பதுவே. முக்திக்கு பிராமாணம் [முதல், இறுதி அதிகாரி ] பகவானே
எந்த நூலும் இல்லை
//
கிருஷ்ணன், சிவன், பிரமன், விஷ்ணு இந்தப் பெயர்கள் தெரியாத ஒருவன் வீடுபேறு அடைய முடியாதா ? முடியும். தன்னையறிந்து தன்னுள் தானறிந்து தன்னை விடுத்தல் நடக்கும் போது. சைக்கிள் பழக முதலில் துணை வேண்டும். அப்போது நம் கவணம் முழுதும் ஹாண்டில் பார், ரோடு என்று இருக்காது. சொல்லிக் கொடுப்பவர் பின்னாடி பிடித்திருக்கிறாரா என்ற கவனத்தில் தான் இருப்போம். அது தான் நீங்கள் சொல்லும் பிரமாணங்கள். அந்தப் பிரமாணங்கள் மட்டுமே போதுமானவையா ? நீங்கள் சைக்கிள் நன்றாகப் பழகியப் பின் உங்கள் கவனம் எங்கு சிதறி இருப்பினும், வண்டி சரியான பாதையில் ஓடும். அப்போது பிரமாணங்களைக் கொண்டுதான் வழித்தடத்தில் செல்லுவேன் என்பது அபத்தம்.
//
பரமாத்மா விருப்பமில்லையேல் யாருக்கும் எதுவும் கிடையாது (வீடு பேரு உட்பட)
முதலில் சைக்கிள் ஓட்ட உதவுபவர் [வேதான்தாமோ, பக்தி நூலோ, யோகமோ, நாம சந்கீர்தனமோ சொல்லித்தரும்] ஆசார்யர் – கண்ணும் கருத்துமாக சைக்கிள் ஓட்டுபவர் முமுக்ஷு (மோக்ஷம் விரும்புபவர்) – ஆனால் ஒன்றை விட்டுவிட்டீர்கள் சைக்கிள் ஓட ரோடு வேண்டும், காந்த சக்தி வேண்டும், எதிரில் வருபவர் முட்டாமல் இருக்க வேண்டும், கடைசியாக நீங்கள் எவ்வளவு தூரம் சைக்கிள் ஓட்டினாலும் வீட்டுக்கதவு திறந்திருந்தால் தான் வீட்டிற்குள் செல்ல முடியும் இல்லை என்றால் குறுக்கு மறுக்கும் ஓட்டிக்கொண்டே தான் இருக்க வேண்டும் – அப்படி இல்லாமல் இருக்க அவனது கிருபை வேண்டும்
//
எத்தனையோ மகா புருஷர்கள் உதித்த திருநாடு. மேலே நீங்கள் குறிப்பிட்டவர்கள் வணங்கத் தக்கவர்கள் அவர்கள் சொன்னது எல்லாம் அற்புதமானவை என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் அவர்கள் சொன்னது மட்டுமே சரி என்று சொல்ல வருவதைத் தான் சரியில்லை என்று சொல்ல வருகிறேன். எதையும் சோதித்து அறிந்துக் கொள் என்கிறதல்லவா நீங்கள் சொல்ல வரும் பிரமாணமும் ?
//
இவர்கள் மட்டும் அல்ல, பல்லாயிரக்கனக்கான ஆஹா புருஷர்கள் வேதாந்தம் பற்றி பேச இம்மொன்றையும் பிரமாணமாக கொண்டனர் (நோக கடவுளை பற்றி பேச அல்ல]. ராமானுஜர் எங்காவது கடய த்ரயத்தில் ரங்கநாத உன்னை இந்த கேன உபநிஷட்டில் பிரமாணம் இப்படி கூறுகிறதே, ப்ரசன உபநிஷத்தில் இப்படி கூறுகிறதே அதையே பிரமாணமாக கொண்டு உன்னை துதிக்கிறேன், அதை பிரமாணமாக கொள்வதாலேயே எனக்கு முக்தி தா என்று சொல்லவில்லை, சங்கரரும் பஜ கோவிந்தத்தில் இப்படி சொல்லவில்லை
விஷயத்தை சரியாக புரிந்து கொள்ளுங்கள் – மூன்று பிரமாணங்கள் வேந்தாந்தை அறிய இறுதி பிரமாணங்கள். பகவனை அறிய அவனே இறுதியானவன்
ஜீவ்ஸ் அவர்களே
மேலே சொன்னதன் தொடர்ச்சியாக
இந்த பிரமாணங்கள் தான் முக்தி என்றில்லாமல், பராமாத்மவே முக்தி தர வல்லவன் என்பது தெளிவு – அவன் அதை யாருக்கும் விட்டுக்கொடுக்க வில்லை – அவனுக்கு சொந்தமான ஆன்மாவை [தந்த நீ கொண்டாக்கினையே ] அவனே உருக்கி பருக நினைக்கிறான், ஒரு நாள் நினைத்ததை சாதிதஊம் விடுவான் [வைகுந்தம் புகுவது மன்னவர்க்கு இயல்பே] – அவனது இந்த செயளிருந்து தப்ப ஒரே மற்று வழி ஆச்சர்யனை சரண் அடைந்து அவர் மூலமாக முக்தி பெறுவதே. ஆசிரியர் கூறியுள்ளதை போல, நாம் என்ன வேண்டும் [நல்ல விஷயங்கள்] என்று நினைக்கிறோமோ அதுவே ஆகிறோம் [சிவா சிந்தையில் இருப்போர் சிவா பதமும், நாராயணனை சரண் புகுந்தால் பரம பதமும் ....] ஆச்சார்யா சின்காயில் இருப்போர் ஆச்சர்யரின் நிலையை தானே அடைவார்கள். நாயன்மார்கள் சிவ பதத்தை அடைந்தனர், நாய்ன்மார்கலையே சரண் புகுந்தவரும் நாயன்மார்கள் அடைந்த அதே சிவ பதத்தை அடைவர்
இந்த “மறந்தும் புறம் தொழா” என்னும் கோட்பாடு இந்திய சமுதாயத்துக்குள் எப்படி வந்தது ? இதன் மூலம் என்ன என என்று, நாம் இந்த கோட்பாட்டின் அடி முடி தேடும் செயலில் இறங்கினோம்.
நான் பாமரனேயன்றி பண்டிதனல்லன். எனினும் எனக்கு எட்டிய அளவுக்கு முண்டக, கட, தைத்திரிய, பிரஹதாரண்ய உப நிடதங்களிலும், பகவத் கீதையிலும் தேடிப் பார்த்தேன், தென் படவில்லை. அறிஞர்கள் யாராவது இது பற்றி தெரிந்து இருந்தால் விளக்கம் தரலாம். ஆனால் நான் தொடர்ந்து இந்த கோட்பாட்டின் மூலம் எங்கே என்று தேடினேன், தேடினேன்…. வாழக்கையின் ஓரத்துக்கே ஓட வேண்டிய அவசியம் இல்லாத படிக்கு, என்னுடைய நூலகத்திலேயே இதற்க்கு ஒரு சான்று கிடைத்தது.
//உன்னை உன் அடிமை வீடாகிய எகிப்து நாட்டில் இருந்து மீட்டவனாகியே நானே உன் தேவன் (கடவுள்).
என்னைத் தவிர உனக்கு வேறு தேவர்கள் ((கடவுள்) வேண்டாம்.
சொர்க்கத்திலும் பூமிக்கு மேலும், சமுத்திரத்துக்கு அடியிலும் உள்ள யாதொரு சொரூபத்தையும் நீ தாழப் பணியவோ, வணங்கவோ கூடாது.//
யூதர்களின் கடவுள் ஜேஹோவா எனப்படும் கர்த்தர், அவருடைய தூதராகிய மோசஸின் மூலம் யூதர்களுக்கு இட்ட முதல் கட்டளை, இந்த மறந்தும் புறம் தொழாமை கட்டளை. “பரிசுத்த வேதாகம”மாகிய பைபிளில் இது தெளிவாக உள்ளது.
இந்த கோட்பாடுதான் உலகிலே மத வெறியை, மத துவேஷத்தை தூண்டி விட்டு, தொடர்ச்சியான போர்களை நடத்தி, இரண்டு உலகப் போர்களில் இறந்தவர்களை விட அதிகமான பேரைக் கொன்று, இரத்த ஆறை ஓட விட்டது.
இந்துக்கள் கடவுளாக வழி பட்ட யாருமே – நாராயணனோ, சிவனோ, வினாயகரோ…. இப்படி “என்னைத் தவிர வேறு யாரையும் தொழக் கூடாது” எனக் கட்டளைகள் எதுவும் போடாத நிலையில்,
இந்த பாலவன ஆபிரகாமியக் கட்டளையை இந்தியாவில் அதிக செல்வாக்கு உள்ளதாக்கி, சகிப்புத் தன்மைக்கு ஆப்பு வைக்கும் காட்டு மிராண்டி நிலைக்கு மக்களை அழைத்து செல்லும் அபாயம் உள்ள இந்த கோட்பாட்டுக்கு, இங்கே இந்தியாவில் பட்டுக் குஞ்சலம் கட்ட வேண்டிய அவசியம் என்ன?
அதுவும் எப்படி – முக்தி அடைவதற்க்காக இதை பயன் படுத்துவதாக -முலாம் பூசிப் பார்க்கிறார்கள்!
ஒரு வகுப்பில் முப்பது பேர் படிக்கிறார்கள். அந்த வகுப்பிற்க்கு ஒரு கிளாஸ் டீச்சர் இருக்கிறார். அவர் மட்டும் அல்லாமல், அந்த வகுப்பிற்க்கு இன்னும் சில டீச்சர்கள்- கணக்கு டீச்சர், வரலாறு டீச்சர்- இவர்களும் அந்த வகுப்பிற்க்கு வந்து பாடம் எடுக்கிறார்கள்.
அந்த வகுப்பில் ஒரு மாணவன், கிளாஸ் டீச்சர் அல்லாமல் வேறு எந்த டீச்சர் பாடம் எடுக்க வகுப்பில் நுழைந்தாலும், எழுந்து நிற்பதோ, அவர்களுக்கு வணக்கம் செலுத்துவதோ கிடையாது. கேட்டால், எனக்கு கிளாஸ் டீச்சரை மட்டுமே பிடிக்கும், அவங்க தானே கிளாஸ் டீச்சர், மற்ற டீச்சர்களுக்கு வணக்கம் செலுத்த மாட்டேன் என்கிறான்.
இதை கணக்கு டீச்சர், கிளாஸ் டீச்சரிடம் தெரிவிக்கும் போது, அந்த நிலையில் கிளாஸ் டீச்சர் அந்த மாணவனைக் கூப்பிட்டு பாராட்டுவாரா? அவனைக் கூப்பிட்டு ஏன் இப்படி அகராதி செய்கிராய்? உன்னால் எனக்கு மற்ற டீச்சர்களுடன் பொல்லாப்பு என்று அவனைக் கடிந்து கொள்வார்.
இந்த மாணவன் போன்றவர்கள் தான் இந்த மறந்தும் புறம் தொழா மாந்தர்கள்.
இவர்களால் இவர்களின் தலைவர்களுக்கு தொல்லைதான். விஷ்ணுவும், சிவனும் இவர்களின் கையில் சிக்கி படாத பாடு பட வேண்டியுள்ளது. எல்லோரையும் மனப் பூர்வமாக வணங்கி , தன்னிடம் விசேஷ பக்தி செலுத்தும் “அத்வேஷ்டா” பக்தனே விஷ்ணுவிற்க்கு மிகவும் பிரியமான பக்தனாக இருப்பான் என நான் தைரியமாக சொல்வேன்.
உங்களை மட்டுமே வணங்குவேன் என்று சண்டித் தனம் செய்யும் “பக்தனு”க்கு சிவனும் சரி, விஷ்ணுவும் சரி முக்தி வழங்க மாட்டார்கள் எனவும் நான் வெளிப்படையாக சொல்வேன்.
//
இந்த கோட்பாடுதான் உலகிலே மத வெறியை, மத துவேஷத்தை தூண்டி விட்டு, தொடர்ச்சியான போர்களை நடத்தி, இரண்டு உலகப் போர்களில் இறந்தவர்களை விட அதிகமான பேரைக் கொன்று, இரத்த ஆறை ஓட விட்டது.
//
பைபிள் மூலம் கூறும் கோட்பாடுகள் தான் ஜாஸ்தியாக உள்ளது – கொஞ்சம் நமது விஷயத்தையும் புரட்டிப் பார்த்தால் நல்லது
பல ஆயிரம் ஆயிரம் வருடங்களாக[ நாம் இங்கு கூறும் ஆபிரகாமிய காலதிருக்கு முன்பிருந்தே] மறந்து புறம் தொழாமை இங்கு உள்ளது ஆனால் அதானால் ஒருவர் கூட ரத்தம் சிந்தியடாக தெரியவில்லை
வித்தியாசம் என்னவென்றால் – நான் கும்பிடுவதே கடவுள் நீ கும்பிடுவது அல்ல அதனால ஒன்னு நான் கும்பிடுறத கும்பிடு இல்லாங்காட்டி நான் கொன்னுருவேன், நான் கும்பிடுறத கும்பிட்டா தான் நீ மனுஷன் இல்லாட்டி நீ காட்டு மிராண்டி என்பது அங்கே (இங்கேயும் இது போல் ஒரு புது வடிவில் தலை தூக்குகிறது)
ஆனால் இங்கோ – இறைவா உன்னை என்னால் அறிவதே இயலாது – உன்னை ஒரு உருவில்லாவது உன்னுடன் இணக்கம் கொள்ள முயல்பிறேன் – பரமாத்மா ஸ்வரூபமாக இந்த உருவையே கொள்கிறேன் – உன்னையே தியானிக்கிறேன் – த்யானமானது ஒன்றில் ஆழ்வதே ஆகும் – நான் த்யானம் செய்யும் பொது round robin முறையில் புள்ளையார், முருகன், சிவன், பார்வதி, சூரியன், இயேசு, அல்லா, விஷ்ணு, அய்யனார், எனது அம்மா, பாட்டனார் இப்படி வந்து போனால் த்யானம் எப்படி நிலைக்கும் – சரி எனக்கு ஒரு ஆபத்து நேர்கிறது நான் புள்ளயாரே, முருகா, ஏசுவே, விஷ்ணுவே, சிவனே என்று தான் கூப்பிடனுமா – அப்படி கூப்பிட்டா அவர் வருவார் என்று ஒவ்வொருவரும் சும்மா இருந்துவிட்டால் – ஆபத்துக்கே இப்படின்னா, இந்த பிறவி என்ற பேராபத்தில் இருந்து மீள உன் ஒருவனை மட்டும் தியானித்தால் போதாத எல்லோரையும் கட்டாயம் சேத்துக்க் கொள்ளணுமா – இது என்னது புது விவகாரமா இருக்கு நான் பாட்டுக்கு நீயே எனக்கு கதி, வேறொன்றிலும் என் மனம் போகவில்லை என்று இருந்தால் புது வம்பு வந்து சேர்கிறதே -cbse யில் படிப்பவர் cbse முறையிலேயே படித்து 12th பாஸ் பண்ணக் கூடாத – state board, metic இப்படி எல்லாவற்றிலும் படித்தே தீர வேண்டுமா, சிலர் இப்படி கொஞ்ச காலம் மாறி மாறி படிக்கிறார்கள் அது சரியல்ல என்று நான் கூறவில்லை அது அவர் விருப்பம் ஒவ்வொரு திட்டத்திலும் உள்ள வேறுபாடுகளையும் அவர்கள் தெரிந்து கொண்டு ஒவ்வன்றின் பண்பையும் அறிந்து கொண்டும் அவர்களும் 12th பாஸ் செய்கிறார்கள் நானும் தானே பாஸ் செய்கிறேன் – நான் என்ன state board காரனை கிள்ளினேனா, அல்லது metric காரனை தள்ளினேனா
பரமாத்மா மதத்தின் பால் சிலர் கொள்ளும் வெரியயும் உன்மெல் ச்லருக்கு இருக்கும் மீலாத மேலான அசயாத இடைவிடாத பற்றையும் வேருபடுத்தி காட்டும் வல்லமை தாராயோ
//
ஒரு வகுப்பில் முப்பது பேர் படிக்கிறார்கள். அந்த வகுப்பிற்க்கு ஒரு கிளாஸ் டீச்சர் இருக்கிறார். அவர் மட்டும் அல்லாமல், அந்த வகுப்பிற்க்கு இன்னும் சில டீச்சர்கள்- கணக்கு டீச்சர், வரலாறு டீச்சர்- இவர்களும் அந்த வகுப்பிற்க்கு வந்து பாடம் எடுக்கிறார்கள்.
அந்த வகுப்பில் ஒரு மாணவன், கிளாஸ் டீச்சர் அல்லாமல் வேறு எந்த டீச்சர் பாடம் எடுக்க வகுப்பில் நுழைந்தாலும், எழுந்து நிற்பதோ, அவர்களுக்கு வணக்கம் செலுத்துவதோ கிடையாது. கேட்டால், எனக்கு கிளாஸ் டீச்சரை மட்டுமே பிடிக்கும், அவங்க தானே கிளாஸ் டீச்சர், மற்ற டீச்சர்களுக்கு வணக்கம் செலுத்த மாட்டேன் என்கிறான்.
//
பரமாத்மா நான் யார் வன்து படம் சொன்னாலும் பாடத்தின் மேது மட்டுமெ கவனம் கொல்ல நினைக்கிறேண், சிலர் கனக்கு வாத்தியார் என்ன செஞார் , ஆங்கில வாதியார் செஞார் என்ட்ரெல்லம் பார்க்க சொல்கிரார்கலே
மேலும் அனைத்து வித்தைகலயும் தானே அறின்து அனைவர்க்கும் அன்பால் புகட்டும் இந்த மெட்ரிக் முரைக்கு முன் நமது பன்பாட்டில் இருந்த குருகுல வாசத்தயே என் மனம் விரும்புகிரது – ஒரு முழுமை பேற்ற ஆசான் எனது ஆருயிருக்கு காவல் இருப்பார் என்னை கடை தெர்துவது தான் அவரது பொருப்பு எண்று இருப்பார், அவரை விட்டால் எனக்கு வேரு கதி ஏது – இது கன்னு, இது பினக்கு என வித்யாசம் தெவை தான ஒவ்வொன்னுக்கும் ஒரு specialist tai நாடிதான் ஆகனுமா
கணக்கு வாத்தியாருக்கோ, வரலாறு வாத்தியாருக்கோ கால் பிடிக்க வேண்டும் என்று நாம் சொல்லவில்லை.
ஆசிரியர் என்றால் அவர் வரும் போது எழுந்து நிற்க வேண்டும் என்பது டீச்சருக்கு செலுத்த வேண்டிய மரியாதை. பள்ளி மாணவன் வகுப்பிற்கு செல்லும் முன் அசெம்பிளிக்கு செல்ல வேண்டும் என்பது பள்ளியின் நியமம்.
நான் நேராக வகுப்புக்கு தான் செல்வேன், என் வேலை படிப்பது மட்டும் தான். கொடி வணக்கமும் செலுத்த முடியாது, எல்லா டீச்சருக்கும் வணக்கமும் சொல்ல முடியாது என்று அகராதி செய்யும் மாணவனை என்ன சொல்ல முடியும்? அவனால் டீச்சர்களுக்கு தான் தொல்லை. குறிப்பாக கிளாஸ் டீச்சருக்கு அவனால் அதிக தொல்லை.
ஆபிரகாமிய மதத்தவர் எல்லோரும் (கிறிஸ்தவ, இசுலாமிய, யூத பிரிவினர்) மறந்தும் புறம் தொழாமை என்கிற அடிப்படை வாத, சமரச மறுப்பு, பிடிவாதக் கோட்பாட்டில் மிக உறுதியாக இருந்தவர்கள்.
அதனால் அவர்கள் வாழ்ந்து வந்த மத்தியக் கிழக்கு & ஐரோப்பியப் பகுதியில் கிறிஸ்தவ, இசுலாமிய, யூத பிரிவினர் மூவரும் வாளை உருவி இரத்த ஆறு ஓட விட்டனர்.
ஆனால் இந்தியாவில் அவர்களுக்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வாழ்ந்த சனாதன தர்மத்தைப் பின்பற்றியவர்களில் பெரும்பான்மையானவர்கள் அத்வேஷ்டா, சமரச, நல்லிணக்க, எல்லாக் கடவுள்களையும் மரியாதை செய்யும் நாகரீகப் போக்கை பின்பற்றியவர்கள்.
எனவே ஒரு சிறு பிரிவினர் சானதன தர்மத்திலும் தங்களை அறியாமலேயே ஆபிரகாமிய கோட்பாட்டை புகுத்தி பின்பற்றியபோது – பெரும்பான்மையான மக்கள் அவர்களையும் சகித்துக் கொண்டு, இன்னா செய்தாரை ஒறுத்தல், அவர் நாண நன்னயம் செய்தல், என்ற வகையிலே அவர் நாணும் வகையிலே எல்லாக் கடவுள்களையும் மனப் பூர்வமாக வணங்கி நன்னயம் செய்து விட்டனர்.
இதனால் தான் இந்து மதம் அமைதிப் பூங்காவாகவே இருந்து விட்டது.
அப்படி அமைதிப் பூங்காவாகவே இருக்க வேண்டும்,
இன்னும் “மறந்தும் புறம் தொழா” ஆபிரகாமிய, அடிப்படை வாத, சமரச மறுப்பு, பிடிவாதக் கருத்தை பரப்பி அமைதியை நல்லிணக்கம் கெடுக்கப் பட வேண்டாம் என்பதற்கு தான், இத்தனையும் எழுதுகிறோம்.
சாரங் அவர்களே,
//
நான் கும்பிடுவதே கடவுள் நீ கும்பிடுவது அல்ல அதனால ஒன்னு நான் கும்பிடுறத கும்பிடு இல்லாங்காட்டி நான் கொன்னுருவேன், நான் கும்பிடுறத கும்பிட்டா தான் நீ மனுஷன் இல்லாட்டி நீ காட்டு மிராண்டி என்பது அங்கே (இங்கேயும் இது போல் ஒரு புது வடிவில் தலை தூக்குகிறது)
//
“இங்கேயும் இது போல் ஒரு புது வடிவில் தலை தூக்குகிறது” – இப்படி நீங்கள் சொன்னதன் அர்த்தம் எத்தனை பேருக்கு விளங்கியதோ?!! அனைவரும் மனம் திறந்து இதை எப்பொழுது புரிந்து கொள்வார்களோ?!!
திருச்சிக் காரன் அவர்களே,
அருமையான உவமை கூறியதற்கு நன்றி. இதை வைத்தே விளக்குகிறோம்:
எந்த டீச்சர்-க்கும் வணக்கம் செலுத்துவதில் எமக்கு ஆட்சேபனம் இல்லை. கண்டிப்பாக விஷ் பண்ணுவோம். ஆனால், “எல்லா டீச்சரும் பிரின்சிபால் தான்” என்பதைத் தான் நாங்கள் ஏற்கவில்லை. அதற்காக, பக்கத்து பெஞ்ச் பையன் “கணக்கு டீச்சர் தான் பிரின்சிபால்” என்று சொன்னதற்கு அவனை கேலி பண்ண மாட்டோம், சாத்து சாத்த மாட்டோம்.
//
நான் நேராக வகுப்புக்கு தான் செல்வேன், என் வேலை படிப்பது மட்டும் தான். கொடி வணக்கமும் செலுத்த முடியாது, எல்லா டீச்சருக்கும் வணக்கமும் சொல்ல முடியாது என்று அகராதி செய்யும் மாணவனை என்ன சொல்ல முடியும்?
//
இதற்கு நேரான situation, “சந்த்யாவந்தன-விஷ்வேதேவா-அக்னிஹோத்ர-தர்பண-ச்ராத்த கர்மாக்களில் மற்ற தெய்வங்களின் வணக்கம் உள்ளது, ரிஷி-பித்ரு வணக்கம் உள்ளது, ஆகையால் வைணவனாகிய நான் அவற்றைச் செய்ய மாட்டேன்” என்று சொல்வதற்குச் சமம். இதைப் பற்றி பகவான் என்ன கூறுகிறான் என்றால், “சுருதி, ச்மிருதிகளில் சொல்லப்பட்ட அன்றாடம் செய்ய வேண்டிய கர்மாக்களை எவன் ஒருவன் விட்டு விடுகிறானோ, அவனை ஒருபொழுதும் நான் என் பக்தனாக ஏற்றுக் கொள்வதில்லை” (விஷ்ணு தர்மோத்தர புராணம்). மறந்தும் புறந்தொழாதவர்கள் இந்த கர்மாக்களை விடாமல் செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். ஆகையால் நீங்கள் சொல்லும் உவமையால் வரும் குற்றச்சாட்டு செல்லாது.
நீங்கள் சொன்ன உவமையே எடுத்துக் கொள்வோம். மறந்தும் புறந்தொழாமையை விட்டு விலகச் சொல்வது, ஸ்கூல் படிக்கப் போகும் பையனிடம், “ஒருவர் மட்டும் பிரின்சிபால் அல்ல, ஸ்கூல் ஆயாவும் பிரின்சிபால், நாட்டுக் கொடியும் பிரின்சிபால், டங்கு டங்கு-ன்னு சத்தம் போடும் ஸ்கூல் மணியும் பிரின்சிபால், பீ.டீ. டீசெரும் பிரின்சிபால், பக்கத்துப் பையனும் பிரின்சிபால்” என்று சொல்வதற்குச் சமம்.
கட்டுரை ஆசிரியர் அவர்களுக்கு
தங்கள் ஆராய்ச்சிப்பணி சீரியது. நன்றி. அடிமுடி காணாத வரலாற்றைப் புனையப்பட்டது என்று காட்டுவதற்காக நமது அன்பர்கள் சிலர் சில வேத மேற்கோள்களையும் திரு கிருஷ்ணசாமி அய்யங்காரின் புத்தக மேற்கோள்களையும் காட்டி வாதிட்டபோது உங்கள் கட்டுரை ஆராய்ச்சிபூர்வமாக வந்து சிறிது மாற்றைத்தந்தது. தங்களும் சமரச பாவத்தில் சிவன், விஷ்ணு, பிரம்மா மூவரையும் சிலாகித்து எழுதினீர்கள். அதோடுகூட வேதப்பிரமாணம் என்றும் எழுதியபோது அது எந்தக் கட்டுரையாளருக்கும் இருக்கவேண்டிய உரிமை/ சலுகை (discretion) என்றே இருந்தேன். ஆனால், மீண்டும் மீண்டும் வேதப்பிரமாணம் என்று விஷயத்தை அதற்கே திசைதிருப்பி நமது அன்பர்கள் சாரங் அவர்களும் கந்தர்வன் அவர்களும் அதேசுழலில் தங்களையும் இழுத்துவிட்டார்களே!
ஜோதிட சாஸ்திரத்தில் உள்ள யோகங்களைக் கூறியிருக்கிறீர்கள்.
அவற்றிலே,
///லக்னாதிபதி, சூரியன், சந்திரன் ஆகியோர் கேந்திர, திரி கோணங்களில் ஆட்சி, உச்சம், நடப்பாக இருந்தால் அது சீகண்ட யோகம் ஆகும்.///
///களத்ரகாரகனான சுக்கிரனும், பாகியாதிபதியான 9 -ஆம் வீட்டு அதிபதியும், புத்திர காரனான புதனும் லக்கினத்திற்கு கேந்திர, திரி கோணங்களில் ஆட்சி, உச்சம், நடப்பாக இருந்தால் அது ஸ்ரீ நாத யோகம் ஆகும்.///
///குரு, சனி, லக்னாதிபதி ஆகியோர் லக்கினத்திற்கு கேந்திர, திரி கோணங்களில் ஆட்சி, உச்சம், நடப்பாக இருந்தால் அது விருஞ்சி யோகம் ஆகும்.///
இங்கே எழுத்துப்பிழை உள்ளது. ‘நட்பு’ என்றே வரவேண்டும். நடப்பு என்பது தவறு. “நடப்பு” என்பது சில சமூகத்தினரின் இறுதிச்சடங்குகளில் ஒன்று.
அத்தியாயம் 6 ஸ்லோகம் 28 பலதீபிகை இந்த யோகங்களை விவரிக்கிறது. இந்த யோகங்களால் அவர்களுக்கு முறையே பரமசிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோரின் அருள் பரிபுரணமாக இருப்பது தெரிகிறது அவர்கள் அந்தந்த மூர்த்திகளின் பக்தனாக இருப்பார்கள் என்றுதானிருக்கிறது. மேலும் இந்த யோகம் இதனால் என்றுதான் ஜோதிட நூல்கள் கூறுமே அல்லாது, தங்கள் கூறியுள்ளபடி இந்த யோகம் இருந்்தால் அவர்கள் முறையே சிவன் விஷ்ணு பிரம்மாவைத்தான் வணங்கவேண்டும் பிறதெய்வங்களை வணங்கக்கூடாது என்று எந்த ஜோதிட நூலும் கூறவில்லை என்பதே எனது சிற்றறிவுக்கு எட்டிய விஷயம். இவரை மட்டுமே வணங்கவேண்டும் பிறிதொருவரை வணங்கக் கூடாது என்பதற்கு எந்தவிதமான வேதப்பிரமாணமும் இல்லை என்பதும் தெளிவு.
இன்னும் சொல்லப்போனால் ஒவ்வொரு யாகத்திலும் அனைத்து தேவர்களுக்கும் உரிய அவிஸைக் கொடுக்கவேண்டும் என்றுதான் இருக்கிறது.
ஸ்றீ ராமரது ஜாதகத்தில் இந்த மூன்று யோகங்களும் இருந்ததாக அறிகிறேன். (வால்மீகி ராமாயணம் பாலகாண்டம் ஜாதகத்தைப்பற்றிக்கூறுகிறது.) ஸ்றீகண்்ட யோகத்தால்தானோ அவர் ராமேஸ்வரத்தில் பரமசிவனைப் பூஜித்ததாக ஐதீகம் இருக்கிறது.
இவையெல்லாம் இருக்க, அடிமுடி காணாத வரலாற்றுக்குப் பிரபஞ்ச அறிவியல் தொடர்பைச் சிந்தித்த தாங்கள், ஜோதிட சாஸ்திரத்தில் கிரக நிலைகள் வானவியலை ஒத்ததே என்றாலும், ஒருவரது பிறப்பின்போது இந்த இடத்தில் இந்த கிரகம் இருந்தால் இதுதான் பலன் என்று கூறுவதற்கு அதுபோல எதேனும் விஞ்ஞான அடிப்படை உள்ளதா என்று சிந்தித்ததுண்டா? எனது சிற்றறிவுக்கு எட்டியவரை அப்படி எதுவும் இல்லை.
என்னிடமும் பஞசபூதங்கள், பரமசிவன், சிதம்பர ரகசியம் பற்றி ஓர் விஞ்ஞானம் சார்ந்த கருத்து உள்ளது. அது குறித்து விவரமாக பின்னர் ஒருசமயம் எழுதுகிறேன்.
உமாசங்கர் அய்யா
//
அத்தியாயம் 6 ஸ்லோகம் 28 பலதீபிகை இந்த யோகங்களை விவரிக்கிறது. இந்த யோகங்களால் அவர்களுக்கு முறையே பரமசிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோரின் அருள் பரிபுரணமாக இருப்பது தெரிகிறது அவர்கள் அந்தந்த மூர்த்திகளின் பக்தனாக இருப்பார்கள் என்றுதானிருக்கிறது. மேலும் இந்த யோகம் இதனால் என்றுதான் ஜோதிட நூல்கள் கூறுமே அல்லாது, தங்கள் கூறியுள்ளபடி இந்த யோகம் இருந்்தால் அவர்கள் முறையே சிவன் விஷ்ணு பிரம்மாவைத்தான் வணங்கவேண்டும் பிறதெய்வங்களை வணங்கக்கூடாது என்று எந்த ஜோதிட நூலும் கூறவில்லை என்பதே எனது சிற்றறிவுக்கு எட்டிய விஷயம். இவரை மட்டுமே வணங்கவேண்டும் பிறிதொருவரை வணங்கக் கூடாது என்பதற்கு எந்தவிதமான வேதப்பிரமாணமும் இல்லை என்பதும் தெளிவு.
இன்னும் சொல்லப்போனால் ஒவ்வொரு யாகத்திலும் அனைத்து தேவர்களுக்கும் உரிய அவிஸைக் கொடுக்கவேண்டும் என்றுதான் இருக்கிறது.
//
ஒரு உதாரணம் கூறுகிறேன் – இருவர் பேசிக்கொள்கிறார்கள் – முதலாமவர் கூறுகிறார் – அதோ போகிறாரே அவருக்கு கணக்கு நன்றாக வரும் அவர் கணிதத்தில் முதுநிலை பட்டம் வாங்கி உள்ளார் – இன்னொருவர் சொல்கிறார் ஓஹோ அப்போ அவருக்கு அறிவியல் சுத்தமா வராதா என்று.
- நீங்கள் சொல்வது எனக்கு இப்படிதான் படுகிறது
//
கட்டுரையாளருக்கும் இருக்கவேண்டிய உரிமை/ சலுகை (discretion) என்றே இருந்தேன். ஆனால், மீண்டும் மீண்டும் வேதப்பிரமாணம் என்று விஷயத்தை அதற்கே திசைதிருப்பி நமது அன்பர்கள் சாரங் அவர்களும் கந்தர்வன் அவர்களும் அதேசுழலில் தங்களையும் இழுத்துவிட்டார்களே!
//
வேதாந்த சாயலாக வரும் விஷயத்திற்கு வேத பிராமாணம் பார்ப்பது இயல்பே – நான் ஒன்னும் அடுத்த அஜித் படம் என்ன என்பதற்கு பிராமாணம் கோரவில்லை
ஒருவர் ராமாயணத்தில் நடந்திராத விஷயத்தை சொன்னார் அது இல்லை என்று வால்மீகி / கம்ப ராமயனததை சுட்டிக்காட்டி சொன்னேன்
ஒருவர் ராமன் வேறொரு பெண் மீது ஆசை பட்டான் அது மனித இயல்பு தானே என்றார் – அதற்க்கு சரியான விளக்கம் தர வேண்டியாதாயிற்று
மேலும் அவதாரம் எடுப்பவர் பரமாத்மா ஆகவே முடியாது என்று எந்த ஆதரமுமே இல்லாமல் தவறாக வேத பிரமாணம் காட்டி சொன்ன பொது அதற்கு சரியான பிரமாணங்கள் காட்டினேன் – தேவையே இல்லாமல் வேத பிராமணம் எங்குமே முவைக்க படவில்லை – இதெல்லாம் சரி வேதாந்த விஷயத்தை பேச வேத பிராமணம் இதோ என்று கூறினால் அதிலென்ன தவறு இருக்கிறது – வேதம் பிரமாணத்தை விட்டால் வேதாந்த மதம் இருக்காது.
ஒன்றே ஒன்றை மட்டும் சொல்லிவிடுகிறேன் – வேதம் சார்ந்த, வேதாந்த விஷயங்களை பேச வேந்தாம் தான் பிரமாணம். ராமயனதிருக்கு வால்மீகி ராமாயணம் தான் பிரமாணம். பெரிய புராணத்தில் வருவதற்கு பெரிய புராணம் தான் பிரமாணம், நான் பெரிய புராணம் இன் இங்கிலீஷ் என்று எழுதினால் அது பிரமாணம் ஆகாது, ஆழ்வார் பாசுரங்களுக்கு ஆசார்யர்கள் எழுதின வ்யாக்யானமே பிரமாணம் அவ்வளவே விஷயம் – இதை சொல்லவந்தால் இல்லை இல்லை பிரமாணம் என்று ஒன்றே இருக்ககூடாது என்றால் இலக்கணம் இல்ல மொழி எப்படி இஷ்டம்போல அழகில்லாமல் இருக்குமோ அது போல ஒரு வராரையே இல்லாமல் போகி விடும்.
பெரிய புராணத்தில் இருப்பது வேதத்தில் இல்லை, ஆழ்வாரின் இந்த பாசுரத்தில் இருப்பது வேதத்தில் இல்லை என்றெல்லாம் அதற்க்கு வேத பிரமாணம் தேடவில்லை
//
தங்களும் சமரச பாவத்தில் சிவன், விஷ்ணு, பிரம்மா மூவரையும் சிலாகித்து எழுதினீர்கள்
//
இந்த சமரச பாவம் துளி கூட இல்லாமல் வந்தது தான் முதலில் வந்த தான் அடி முடி கானா கட்டுரை – அதில் வீணே சிலருக்கு அகம்பாவம் என்று கூறியதை சரியல்ல என்று மறுத்து மட்டுமே நான் எழுதினேன் – நீங்கள் ஏன் ஒரு முறை கூட அந்த கட்டுரை ஆசிரியரிடம் அந்த கட்டுரை சமரச பாவமாக இல்லை என்று கேட்கவில்லை – இப்படி நாம் சார்ந்து இருப்பது தவறென கூறவில்லை – ஆனால் மற்றவரை கூரை கூறுவது சரி என்று எனக்கு படவில்லை – எனக்கு தெரிந்து ஜடாயு அவர்கள் மட்டுமே சில சார்ந்த கருத்துக்களை பொதுவில் மறுத்தார்
பரமாத்மாவே
எனக்கொரு அம்மா இருக்கிறார், பெரியம்மாவும் இருக்கிறார் – நான் தாயின் மீது அதிக பக்தி கொண்டவன் – எனது தாய்க்கு தினமும் சிஸ்ருஷை செய்வதில் கண்ணும் கருத்துமாய் இருக்கிறேன் – எனது பெரிம்மா பைய்யன் ஒருவர் இருக்கிறார் – அவர் என்னிடம் வந்து என் அம்மாவும் எனக்கு அம்மா தானே – நீ ஏன் பெரிய அம்மா என்று சொல்கிறாய் உன் அம்மாவுக்கு செய்வது போல என் அம்மாவான அம்மாவுக்கு ஏன் சிஸ்ருஷை செய்யவில்லை என்கிறார் – நான் சொன்னேன் உன் அம்மாவும் அம்மாதான், எனக்கு பெரிய அம்மா. என்னை பெற்று எனக்கு ஆருயிராய் இருந்து, என்னை பேணுவதிலேயே தன்னை அர்பணித்த எனது தாயே எனக்கு தாய், அதற்காக உனது அம்மாவை நான் தாய் இல்லை என்று கூறவில்லை – உனது தாயை பெனுவதர்காகதான் உன்னை படித்தான் இறைவன் – நான் எனது தாய்க்கு பணிவிடை செய்வதிலேயே காலத்தை செலவழிக்க வேண்டும் என நினைக்கிறேன், இரண்டு பேரையும் சேர்த்து பணிவிடை செய்ய வேண்டும் என்றால் எனது கவனம் சற்று சிதறக் கூடும் இருவருக்கும் செய்யும் பணிவிடையில் குறை ஏற்படக்கூடும் என நினைக்கிறேன். அதனால் உனக்கு எல்லா தாயையும் குறைவின்றி கவினிக்க முடியும் என்றால் நீ அப்படி இரு, எனக்கு அது சாத்தியமில்லை என்று படுவதனால் நான் இந்த வழியை தேர்ந்தெடுத்தேன்
எனது பெரியம்மா பைய்யன் இப்படி நீ சொல்வது காட்டு மிராண்டி தனம் என்கிறார் எனக்கு என்ன சொல்வதென்றே தெரிய வில்லை
நண்பரே
உங்களுக்கு புறம் தொஜாமை என்றால் என்ன என்று புரியவில்லை என்பது திண்ணமாகிறது – காங்கிரசார் போல ஹிந்து என்று ஒருவர் ஒரு வார்த்தை சொன்னால் அவன் மத வெறியன் என்று அர்த்தம் கொள்ளாமல் ஹிந்து என்ற வார்த்தைக்கும் மத வெறிக்கும் முடிச்சு போடாமல் இருக்க வேணும் என்றார் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன் – நீங்கள் என்ன தான் முயன்று ஆபிரஹாமிய மதத்தையும் புறம் தோழமை என்ற நல்ல கொள்கையையும் முடிச்சு போடா நினைத்தாலும் அது நிரவர்ற ஒரு பினக்காகவே இருக்கும் – ஏன் என்றால் உங்களின் கருத்து சரியாக புரிந்து கொண்டு வந்ததல்ல
//
ஆனால் இந்தியாவில் அவர்களுக்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வாழ்ந்த சனாதன தர்மத்தைப் பின்பற்றியவர்களில் பெரும்பான்மையானவர்கள் அத்வேஷ்டா, சமரச, நல்லிணக்க, எல்லாக் கடவுள்களையும் மரியாதை செய்யும் நாகரீகப் போக்கை பின்பற்றியவர்கள்.
//
இந்த பல்லாயிரம் ஆண்டு முன்பே புறன் தொழாமை இருந்தது – நீங்கள் இதிஹாச புராணங்களையும், ரிஷிகளை பற்றியும், உபநிஷட்கலாயு நாராக ஒரு ஆச்சரரிடம் கற்குமாறு வேன்டுகிரேன்.
இதற்க்கு நான் முன்னமெபல சான்றுகல் கொடுத்தாயிற்று
//
எனவே ஒரு சிறு பிரிவினர் சானதன தர்மத்திலும் தங்களை அறியாமலேயே ஆபிரகாமிய கோட்பாட்டை புகுத்தி பின்பற்றியபோது – பெரும்பான்மையான மக்கள் அவர்களையும் சகித்துக் கொண்டு, இன்னா செய்தாரை ஒறுத்தல், அவர் நாண நன்னயம் செய்தல், என்ற வகையிலே அவர் நாணும் வகையிலே எல்லாக் கடவுள்களையும் மனப் பூர்வமாக வணங்கி நன்னயம் செய்து விட்டனர்.
//
இதெல்லாம் உங்களின் திரிப்பு என்றே கொள்ள வேண்டும் – நாயன்மார்களையும், ஆழ்வார்களையும், வ்யாசருய்ம், பீஷ்மரையும் , பரசரரையும், ப்ரஹல்லாதனயும்,துருவனயும், ரிஷிகளையும் இதில் நீங்கள் சேர்த்தே சொல்கிறீர்கள் என்பதே உங்களுக்கு தெரியாமல் உள்ளது
//
இதனால் தான் இந்து மதம் அமைதிப் பூங்காவாகவே இருந்து விட்டது.
அப்படி அமைதிப் பூங்காவாகவே இருக்க வேண்டும்,
இன்னும் “மறந்தும் புறம் தொழா” ஆபிரகாமிய, அடிப்படை வாத, சமரச மறுப்பு, பிடிவாதக் கருத்தை பரப்பி அமைதியை நல்லிணக்கம் கெடுக்கப் பட வேண்டாம் என்பதற்கு தான், இத்தனையும் எழுதுகிறோம்.
//
எழுதுவதோடு நில்லாமல் – சற்றெ அழமாக நான் மெர்கோரிய்வற்கலின் வாழ்கையும், அவர்கள் சொன்னதயும் படியுங்கள்
இஙு அடுத்தவரை காட்டு மிரான்டி எண்று நீங்கள் மட்டுமே கோரி வருவதால் பொருமை இன்மை எஙு உல்லது எண்று சற்றேக் ஆராயுங்கள்
தொழுதல் என்பது இங்கு முழுமையாக சரனாகதி பன்னுவது எண்று அற்தம். பாற்த எல்லவற்றயும் சரன் புகுவது நம்பிக்கை இன்மயெ ஆகும். ஓன்றில் பூரன நம்பிக்கை வைப்பது தவரே இல்லை. புரம் தொழாதவர் யாரும் மர்ர தெவதாக்கலை மரியாதை இல்லாமல் கொள்வதில்லை, அவர்கலை குறைவாக நினைப்பதில்லை மாறக தங்களின் ஒரு நம்பிக்கயில் ச்திரமாக உல்லனர் எண்ற கருத்தின் படி வாழ்கின்றனர்
புரம் தொழமை குரை கோரும் நீங்கள், முருகன், விஷ்னு, ப்ரம்ம, சிவன், ஹனுமன் … என்றோடு நில்லாமல் யெசு, ஜெஹொவா, அல்லா,குரு நானக், மஹவிரார், தலாய் லாம, டர்கவில் உல்ல பலர், சைன்ட் ஆன் பலர், இன்னும் கன்டுபிடிக்கபடாத பலர், செங்கிச் கான் (அவனை மொங்கொலியர் கடுவுலாக் கருதுவதாக கேள்வி)இப்படி எல்லவர்ரயும் செற்துக்கொன்டு தொழ அனைவரும் தாயாராக உல்லனரா எண்று சொல்லமுடியுமா இல்லை நம்மால் தான் அனைவரைபற்றியும் படிக்கவாவது முடியுமா – நமக்கு வேதம் கோரும் பிராயம் நூரே, இதில் நேரத்தை வேன் செய்யாமல் ஒன்றில் கவனம் கொள்ள நினைபது தவறென பட்டால் ஒன்னும் சொல்வதர்க்கில்லை.
நெருப்பு எண்றால் சுடாது
தலை கட்டுகிறேன்
நாம் யாரையும் எதையும் வணங்க சொல்லிக் கட்டயப் படுத்தவில்லை. கட்டாயப் படுத்துவது என்பது நாகரீகத்துக்கு எதிரானது.
எந்த தெய்வத்தையும் நாம் நிந்திக்கவில்லை. தெய்வங்களாக கருதப் படும் எல்லாவற்றையும் நல்லிணக்க அடைப்படையில் மனப் பூர்வமாக வணங்க நாம் தயாராக இருக்கிரொம். எல்லா மனிதரையும் நேசிக்கவே செய்கிரொம்.
அல்லாஹ் தான் ஒரெ கடவுள், கர்த்தர் மட்டுமே ஜீவனுல்ல கடவுள் என்கிற ரேஞ்சிலெ தான் இருக்கிரது, உங்களுடைய “எங்கள் கடவுள் தான் முழுமுதல் கடவுள்” கோட்பாடும்.
உலகிலெ அடிப்படை வாத மதங்களுக்கிடையே சமரசம் உருவாக்கக் கூடிய, சமரசக் கருத்துக்கள் உள்ள ஒரே மதம் இந்து மதம். அதிலும் வந்து ஆபிரகாமிய பிடிவாதக் கருத்துக்களை புகுத்துவது சரியா?
இதை சொன்னால், நாங்கள் கட்டயப் படுத்துவது போல போல்டு லெட்டரில் போட்டால் உண்மையாகி விடுமா?
உலக மதங்களுக்கிடையே சமரசத்தை உண்டாக்க உலகத்தின் ஒரே, கடைசி நம்பிக்கை இந்து மதம் மட்டுமே.
உலகின் எல்லா மதக் கடவுள்களையும் வணங்க தயாராக, எல்லா மத வழி பாட்டு தளங்களுக்கும் போகத் தயாராக இருக்கும் படியான மனிதன் யாராவது இருந்தால் அவன் இந்து தான்.
இங்கும் வந்து பிடிவாதக் கருத்துக்களை புகுத்த வேண்டுமா?
நாங்கள் யாரையும் கட்டாயப் படுத்தவில்லை. இந்த “மறந்தும் புறம் தொழாமை” கருத்தானது, இந்து மதத்திலேயே பலர் முழுமுதற் கடவுளாக வணங்கும் இன்னொரு தெய்வத்தின் கோவிலின் கோபுரம் கூட கண்ணில் படக் கூடாது என்று நினைக்கும் அளவுக்கு வெறுப்புக் கருத்துக்களை மனதில் உருவாக்கவில்லை? இது உங்களுக்கு தெரியாதா? மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள். இது உங்களுக்கு தெரியாதா?
இதற்க்கும் இசுலாத்திற்க்கும் என்ன விதியாசம் - ஆயுதம் எடுக்கவில்லை எனபதை தவிர.
ஆயுதம் எடுக்காமலே கருத்தினாலே வெறுப்பை பரப்பி – இன்னொரு தெய்வத்தின் கோவிலின் கோபுரம் கூட கண்ணில் படக் கூடாது – என்ற அளவுக்கு நிலையை உருவாக்கியது இந்த “மறந்தும் புறம் தொழாமை” கருத்து தானெ?
கிருட்டிணரின் “அத்வேஷ்டா” கருத்து உங்களுக்கு முக்கியமாகத் தெரியவில்லையா?
உங்களைக் குறை சொல்லவோ, உங்களிடம் குற்றம் கண்டு பிடிக்கவோ இவ்வளவும் எழுதவில்லை. இந்த விடயம் அவ்வளவு முக்கியமானது என்பதால் தான் எழுதுகிரோம்.
ஆபிரகாமிய மதக் காரருக்கு கூட மத நல்லிணக்கம், மத சகிப்புத் தன்மை, சகஜத் தன்மை ஆகியவற்றின் அவசியத்தை புரிய வைத்து விடலாம் போல இருக்கிரது.