இந்துக் கோயிலை சொந்தம் கொண்டாடும் அன்னியமத சக்திகள்: இரு நிகழ்வுகள்
ஜடாயு
4 Feb 2010 |
அச்சிட
நேற்று அடுத்தடுத்து இரண்டு செய்திகள் வந்தன. நம்மைச் சூழ்ந்திருக்கும் ஆபிரகாமிய ஆக்கிரமிப்பின் கண்ணிகளை வெளிப்படையாகச் சொல்லி அபாயமணி அடிக்கும் செய்திகள் அவை.
முதலில் நம்ம ஊர் சமாசாரம். நேற்றைய தினமலரில் வந்த இந்தச் செய்தியை அப்படியே தருகிறேன்.
செஞ்சி : செஞ்சியில் 500 ஆண்டுகள் பழமையான கோதண்டராமர் கோவில் உள்ள இடம், கிறிஸ்தவர்களுக்கு சொந்தமானது என கோரிக்கை விடுத்திருப்பதால் பெரும் பதட்டம் உருவாகி உள்ளது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் உள்ள கோட்டையை ஆட்சி செய்த நாயக்க மன்னர்களும், விஜயநகர மன்னர்களும் கோட்டையை வலிமையானதாக மாற்றியதுடன், செஞ்சியைச் சுற்றி கலை நயமிக்க கோவில்களையும் கட்டினர்.இதனால், இந்திய மன்னர்கள் மட்டுமின்றி முஸ்லிம் பேரரசர்கள், ஆங்கிலேயர்கள், பிரஞ்சுக்காரர்களுக்கு செஞ்சியின் மீது தீராத மோகம் இருந்தது. ஆங்கிலேயருக்கும், பிரஞ்சுக்காரர்களுக்கும் ஐரோப்பாவில் போர் மூண்டால், தென்னிந்தியாவில் செஞ்சிக்கோட்டையை தாக்குவது வழக்கமாக இருந்துள்ளது.கி.பி., 1714ல் ராஜா தேசிங்கு ஆட்சி செய்த போது ஆற்காட்டு நவாப்பின் படை செஞ்சியை சின்னாபின்னப்படுத்தியது.
இந்த போரின் போது செஞ்சி நகருக்கு பெருமை சேர்த்து வந்த வெங்கட்ரமணர், பட்டாபிராமர், கோதண்டராமர், சீத்தாராமர் கோவில்கள் பேரழிவை சந்தித்தன.இதன் பிறகு கி.பி.,1750 வரை நவாப்புக்களும், அடுத்து பத்து ஆண்டுகள் பிரஞ்சுக்காரர்கள் ஆட்சி செய்தனர். கி.பி., 1761ல் ஆங்கிலேயர் கைப்பற்றினர். பின்னர் ஏற்பட்ட மாற்றங்களால் செஞ்சிக்கோட்டை தனது அரசியல் முக்கியத்துவத்தை இழந்தது.ராஜா தேசிங்கிற்கு பின்னர் இந்து மன்னர்கள் யாரும் செஞ்சியை ஆட்சி செய்யவில்லை. இதனால் போரில் நாசப்படுத்தப்பட்ட கோவில்கள் மீண்டும் புதுப்பிக்கும் வாய்ப்பு இல்லாமல் போனது. ராஜா தேசிங்கிற்கு பின்னர் செஞ்சியை ஆட்சி செய்தவர்கள் கோவில் சொத்துக்களை தங்களுக்கு வேண்டியவர்களுக்கு மானியமாக வழங்கியதால் இந்த கோவில்கள் பராமரிப்பின்றி விடப்பட்டன.ஆங்கிலேயர் ஆட்சியில் உருவாக்கப்பட்ட இந்திய தொல்லியல் துறையினர், கலை நயம்மிக்க வெங்கட்ரமணர் கோவில், பட்டாபிராமர் கோவில்களை தனது கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்தனர்.
சீத்தாராமர் கோவிலும், சங்கராபரணி ஆற்றங்கரையில் இருந்த கோதண்டராமர் கோவிலும் தொடர்ந்து கேட்பாரற்று விடப்பட்டன. 500 ஆண்டுகள் பழமையான கோதண்டராமர் கோவிலில் வழிபாடு நடக்காமல் இருந்த காலத்திலும், இங்குள்ள மண்டபத்தில் செஞ்சி ஏகாம்பரேஸ்வரரும், சிங்கவரம் அரங்கநாதரும் எழுந்தருளி மாசிமக தீர்த்தவாரி நடந்து வந்தது.இந்த கோவிலில் ராமர் சிலை வைத்து வழிபாடு நடந்து வந்த நிலையில் கடந்த டிசம்பர் 7ம் தேதி இந்த கோவில் இடம் கிறிஸ்தவர்களுக்கு சொந்தமானது என செஞ்சி போலீசில் புகார் செய்தனர்.இப்பிரச்னை தொடர்பாக செஞ்சி தாலுகா அலுவலகத்தில் இரண்டு முறை சமாதானக் கூட்டம் நடத்தப்பட்டது.
இதில் கிறிஸ்தவர்கள் தரப்பில் 1878ல் திண்டிவனம் சப் ரிஜிஸ்தார் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட பத்திரத்தை ஆதாரமாக காட்டி உள்ளனர்.இந்த பத்திரத்தில் கோதண்டராமர் கோவில் உள்ள 1.70 ஏக்கர் நிலத்தை மயிலம் தேவஸ்தான ஆதினம் பரம்பரை தர்ம கர்த்தா சிவக்கியா பாலய சுவாமிகளிடம் இருந்து செம்மேடு மதுரா வேலந்தாங்கல் ரெவரெண்டு யெப்டாருஸ் என்பவர் 500 ரூபாய்க்கு கிரயம் வாங்கியுள்ளார்.இதே பத்திரத்தில் மண்டபம், மயில் கோபுரம், கிளி கோபுரம் நீங்கலாக என குறிப்பிட்டிருப்பதாக இந்துக்கள் தரப்பில் கூறுகின்றனர். பத்திரப் பதிவின் போது மடத்தினர் இந்த சொத்தை கிரயம் பெற்றதற்கான மூலப்பத்திரமும், கோவில் நிலத்தை பாதுகாக்க ஏற்படுத்தப்பட்ட டிரஸ்டி பத்திரமும் இணைத்து வழங்கியதாக கிரைய பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
ஆனால் இந்த இரண்டு பத்திரத்தையும் கிறிஸ்தவர்கள் தரப்பில் சமாதானக் கூட்டத்தில் சமர்ப்பிக்கவில்லை. பிரச்னைக்குரிய இடத்திற்கு சமீபத்தில் எடுத்த வில்லங்க சான்றிதழில், 1878ல் நடந்த கிரயத்தை தவிர வேறு சொத்து பாரிமாற்றம் நடக்கவில்லை. இதற்கிடையே கோவில் இடத்திற்கான பட்டா காண்டியார் என்பவர் மீது மாற்றப்பட்டுள்ளது. நூறு ஆண்டுகளுக்கும் மேலாக பாழடைந்த நிலையில் இருந்த கோதண்டராமர் கோவிலை மீண்டும் கட்ட 2008ம் ஆண்டு ஜனவரி மாதம், கோதண்டராமர் ஆலய அறக்கட்டளையை உருவாக்கி கோவில் கட்டுவதற்கான வேலைகளை இந்து அமைப்பினர் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் திடீரென ஏற்பட்டுள்ள பிரச்னையில் நேற்று முன்தினம் கோவிலின் வழிபாட்டை கிறிஸ்தவர்கள் தடுத்தி நிறுத்தி கோவிலை பூட்டியது செஞ்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இது குறித்து செஞ்சி தாலுகா அலுவலகத்தில் இன்று மாலை நடக்க உள்ள சமாதானக் கூட்டத்தில் எடுக்க உள்ள முடிவிற்காக இரண்டு தரப்பினரும் பதட்டத்துடன் காத்திருக்கின்றனர்.
கோவில் இடத்தை காட்டும் எழுத்துக்களை அழித்துள்ளதாக புகார் : அரசு வரைபடத்தில் கோதண்டராமர் கோவில் இடத்தை சுட்டிக்காட்டும் எழுத்துக்கள் சமீபத்தில் அழிக்கப்பட்டுள்ளதாக ஆலய அறக்கட்டளை தரப்பில் புகார் தெரிவித்துள்ளனர். இப்பிரச்னை குறித்து கோதண்டராமர் ஆலய அறக்கட்டளையை நிறுவி கோவில் கட்டுவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் ரங்கராமானுஜதாசர் கூறியதாவது:தாலுகா அலுவலகத்தில் கிறிஸ்தவர்கள் சமர்ப்பித்துள்ள கிரைய பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளபடி, சொத்தின் மூலப்பத்திரமும், டிரஸ்டி பத்திரமும் கேட்டு தாசில்தாரிடம் மனு செய்தும் இதுவரை சமர்ப்பிக்க வில்லை. இந்த பத்திரங்கள் கிடைத்தால் தான் கோவிலை விற்பனை செய்யும் உரிமை விற்பனை செய்தவருக்கு உள்ளதா என்பது தெளிவாகும். இதில் டிரஸ்டிகளாக இருந்தவர்கள் விவரமும் தெரியவரும்.
கிரயத்திற்கு பிறகு இன்றைய நாள் வரை எந்த சொத்து பரிமாற்றமும் நடக்காத நிலையில் எந்த அடிப்படையில் காண்டியார் என்பவர் பெயருக்கு பட்டா மாற்றம் செய்யப்பட்டது என கேட்டு கடந்த மாதம் 4ம் தேதி தகவல் அறியும் உரிமை சட்டத்தின் படி தாசில்தாருக்கு மனு கொடுத்தோம். ஆனால், இதுவரையில் இந்த மனுவிற்கு பதில் அளிக்க வில்லை.அரசிடம் உள்ள நிலத்தின் வரைபடத்தில், கோவில் இடத்தை சுட்டிக்காட்டும் வகையில் இருந்த எழுத்துக்களை சமீபத்தில் வெள்ளை மை கொண்டு அழித்துள்ளனர். இது குறித்து, விசாரணை நடத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
இந்த விவகாரம் குறித்து இந்து முன்னணித் தலைவர் இராம. கோபாலன் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு கோரியுள்ளார் - ”… பாதிரி ஜேம்ஸ் ஆல்பிரட் என்பவர் பிப்ரவரி-1 அன்று ஆலயத்துக்குள் அத்துமீறி நுழைந்து அங்கிருந்த பக்தர்களை வெளியேற்றி கோயிலுக்குப் பூட்டுப் போட்டுள்ளார். இது சம்பந்தமாக விசாரிக்க வந்த தாசில்தாரும் கோயிலைப் பூட்ட உத்தரவிட்டுள்ளார்… கோயிலை யாருக்காவது விற்பது சட்டப் படி செல்லாது . தாசில்தார், பாதிரி ஜேம்ஸ் ஆல்பிரட் ஆகியோர் மீது காவல்துறை கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்”. முழு அறிக்கையையும் இங்கே பார்க்கலாம்.
அரசு இந்த ஆக்கிரமிப்பு முயற்சியைத் தடுத்து நிறுத்தும், குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்கும் என்று எதிர்பார்ப்போம். சமாதானப் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினை தீர்க்கப் படலாம், தீர்க்கப் படவேண்டும்.
ஆனால், இந்த சம்பவம் சில மையமான கேள்விகளை எழுப்புகிறது.
தமிழக வரலாறு பற்றி ஓரளவு பரிச்சயம் உள்ளவர்கள் 17,18,19ஆம் நூற்றாண்டுகளில் தமிழகம் எத்தகைய அரசியல் கொந்தளிப்புகளிலும், கொடுங்கோன்மையிலும் சிக்கிச் சீரழிந்து கொண்டிருந்தது என்பதை அறிந்திருக்கலாம். நிலையான அரசாட்சி இல்லாமையினாலும், ஆங்கிலேயேர்கள், பிரெஞ்சுக் காரர்கள், போர்த்துக்கீசியர்கள், டச்சுக் காரர்கள் இவர்களிடையே நடந்து கொண்டிருந்த வாணிப, அதிகாரப் போட்டியினாலும், காலனியர்களின் பொருளாதாரச் சுரண்டலினாலும், அவர்கள் திட்டமிட்டு உருவாக்கிய அடுத்தடுத்த பெரும் பஞ்சங்களாலும் தமிழ்ச் சமுதாயமும், அதன் கலாசாரமும் முழுவதுமே உருக்குலைந்தன. இந்தச் சூழலிலும் நம் பண்பாட்டையும் மக்கள் நலனையும் பாதுகாக்கப் போராடிய ஒளிக்கீற்றுகளாக செஞ்சி மன்னர் தேசிங்கு, தஞ்சை மராட்டியர்கள், மருதுபாண்டியர், கட்டபொம்மன், ராணி மங்கம்மாள் ஆகியவர்களைக் குறிப்பிடலாம்.
இந்தக் காலகட்டத்தில் தமிழகத்தின் அனைத்து இந்துக் கோவில்களும் பெரும் சீரழிவுக்கு ஆட்பட்டன. சிதம்பரம், காஞ்சிபுரம், தஞ்சை, திருவரங்கம், மதுரை என்று தமிழகத்தின் மிகப் பெரும் கோயில்கள் கூட அன்னியர்களின் கொத்தளங்களாக இந்தப் போர்களின்போது உருமாறின. பல கோயில்களில் வருடக் கணக்கில் வழிபாடுகள் நின்று போயின. பாண்டிச்சேரி வேதபுரீஸ்வரன் கோயில் முழுதாக இடிக்கப் பட்டது, திருச்செந்தூர் கோயிலைத் தகர்க்க முயன்றது ஆகியவை பற்றி வரலாற்று ஆசிரியர்கள் விரிவாகவே எழுதியிருக்கிறார்கள். சொல்லப் போனால், இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தான் இந்த இழுபறிகள் ஓரளவுக்கு நின்று ஆலயங்களில் சீரான வழிபாடுகள் நடந்து வரலாயின. பல்லாண்டுகளாகக் கைவிடப் பட்டுக் கிடந்த கோயில்களும் புதுப்பிக்கப் பட்டு நின்று போயிருந்த வழிபாடுகள் தொடங்கப் பட்டன. அண்மைக் காலங்களில் கூட, இத்தகைய புனருத்தாரண நிகழ்ச்சிகள் அவ்வப்போது நடைபெறுகின்றன. 1980களில் வேலூர் ஜலகண்டேஸ்வரர் ஆலயம் இவ்வாறு புதுப்பிக்கப் பட்டது. இந்திய தேசிய எழுச்சியின், பண்பாட்டு மறுமலர்ச்சியின் ஒரு அங்கமாக இயல்பாகவே நிகழ்ந்துவரும் செயல்பாடுகள் இவை.
இதன் ஒரு தொடர்ச்சியாகவே செஞ்சி கோதண்டராமர் கோயிலைச் சீரமைக்கும் பணியை அங்கு வாழும் இந்துக்கள் ஏற்றிருக்கின்றனர். அதனை முடக்க வேண்டும் என்று திட்டமிட்டிருக்கும் ஆக்கிரமிப்பாளர்கள் அதற்கு ஆதாரமாகக் காட்டுவது என்ன?? 1878-ஆம் ஆண்டு கிரயம்! கோவிலைச் சுற்றியுள்ள நிலம் மட்டுமல்ல, கோயிலையும் சேர்த்து “ரெவரெண்டு யெப்டாருஸ்” வாங்கி விட்டாராம் - அதனால் அது கிறிஸ்தவ சொத்து! யார் இந்த ரெவரெண்டு? நம் தேசத்தை ஆக்கிரமித்திருந்த காலனிய அரசாட்சியாளர்களுடன், அவர்களது ஐந்தாம் படையாக வந்த ஒரு ஐரோப்பிய மிஷநரி. அதோடு, அந்தக் காலகட்டத்தில் சூழ்ச்சி, நயவஞ்சகம், மோசடி, வரிக் கொடுமைகள் இவற்றின் மூலம் இந்தியர்களின் நிலபுலன்களும், சொத்துக்களும் காலனியர்களாலும், அவர்களது கூட்டாளிகளான மிஷநரிகளாலும் கையகப் படுத்தப் பட்டதென்பது ஆவணப் படுத்தப் பட்ட வரலாறு.
1878ல் ஐரோப்பியப் பாதிரி வாங்கியதாகச் சொல்லப் படும் நிலத்தை தங்களுடையது என்று சொந்தம் கொண்டாடும் இந்த மதவெறியர்கள் அந்தப் பாதிரியின் சந்ததிகளா? அல்லது ரத்த உறவினர்களா? காலனிய அடிமைத்தனத்தை நெஞ்சில் சுமந்து கொண்டு, தங்களுடன் காலம் காலமாக வாழ்ந்து வரும் தங்கள் சொந்த சகோதரர்களின் பழமையான வழிபாட்டுத் தலத்தை அபகரிக்க வேண்டும் என்று நினைக்கும் எண்ணம் எப்பேர்ப்பட்ட ஈனத்தனம்! தங்களது முன்னோர்களே கட்டிய பாரம்பரியமான கோயிலில் வழிபாட்டைத் தடுத்து நிறுத்தும் செயல்பாடு எப்ப்பேர்ப்பட்ட துரோகம்!
இந்தக் கயமைத் தனத்தைச் செய்பவர்களே! இதே ஆதாரத்தை வைத்து, இந்தியாவில் இருந்த இந்த ஐரோப்பிய மிஷநரிகளும், அவர்கள் அமைப்புகளும் இங்கிலாந்திலும், பிரான்சிலும், ஜெர்மனியிலும், போர்ச்சுகலிலும் வைத்திருந்த நிலங்கள் மீதும், சொத்துக்கள் மீதும் உங்களால் உரிமை கொண்டாட முடியுமா? அதற்குத் தைரியம் இருக்கிறதா? அங்குள்ள அரசுகள் அதை அனுமதிக்குமா? அல்லது உங்கள் எஜமானர்களான அங்குள்ள சர்ச்சுகள் தான் அனுமதிக்குமா? பரந்த பெருந்தன்மையுடன், உங்களது ஆக்கிரமிப்பு அராஜக மதத்திற்கும் மரியாதையும், உரிமையும் கொடுத்து வாழவைத்துக் கொண்டிருக்கும் இந்த ஜனநாயக இந்திய தேசத்தில், வைதாரையும் வாழவைக்கும் இந்தத் தமிழ்மண்ணில் தான் இதை உங்களால் செய்ய முடிகிறது. மறைமுகக் காலனியத்தின் ஏவலாளிகளே ! இப்படிச் செய்ய உங்களுக்கு வெட்கமாகயில்லை? அந்த அளவுக்கு மானமிழந்தவர்களாகவா ஆபிரகாமியம் உங்களை ஆக்கி விட்டது?
தமிழகத்தின் பல நூற்றாண்டு கால சரித்திரத்தில் இப்படி பொதுச் சொத்தான கோவில்களையும், குளங்களையும், ஏரிகளையும் யாராவது விற்றதாக, வாங்கியதாக சரித்திரம் உண்டா? தங்கள் குடிசை வீடுகளிலும் ஒரு ஓரத்தில் குலதெய்வத்தை நிறுத்தி வழிபடுவது தமிழனின் மரபு. பிணைத் தொழிலாளர்களாக மலேசியாவிலும், இலங்கை மலையகத்திலும், தென்னாப்பிரிக்காவிலும் வாழ்ந்த சூழலிலும் தங்கள் நிலங்களில் கோயில்கள் கட்டி வழிபட்டு வந்த தன்மானப் பாரம்பரியம் கொண்டது தமிழ்ச் சமூகம். இதைப் பற்றிய பிரக்ஞையாவது உங்களிடம் இருக்கிறதா? தமிழ் முன்னோர்கள் கோவிலையும் சேர்த்து விற்றதாக மோசடி செய்யும் அளவுக்கு ஆபிரகாமியம் உங்களை மரத்துப் போகச் செய்திருக்கிறது.
கள்ளத்தனமாக கோவில் சுவர்கள் மீதும், மலைகள் மீதும், மரங்கள் மீதும், போக்குவரத்து சிக்னல்களைக் கூட விட்டுவைக்காமல் அவற்றின் மீதும் அதிகாரவெறியின் அடையாளமான சிலுவையை வரைந்து வரைந்து ஆக்கிரமிப்பு அரிப்பைத் தீர்த்துக் கொள்ளும் இந்த மதப் பிரசார வெறி இப்போது இந்துக்களின் பழைய கோயிலையே சொந்தம் கொண்டாடும் அளவுக்கு வளர்ந்து விட்டிருக்கிறது. அந்தக் கோயில் உங்கள் கைக்கு வந்ததும் என்ன செய்வதாக உத்தேசம்? அதை இடித்து விட்டு அங்கும் ஆக்கிரமிப்புப் பிரகடனம் செய்வதா? புத்தர் சிலைகளை இடித்தழித்த தாலிபானிய மனநிலைக்கும் இதற்கும் என்ன வித்தியாசம்? ஒன்றுமில்லை.
இன்னொரு செய்தி நம் அண்டை வீடான ஆந்திரா பற்றியது.
விசாகப் பட்டினம் அருகில் உள்ள சிம்ஹாசலம் பழமைவாய்ந்த விஷ்ணு ஸ்தலம். இயற்கை எழில் கொஞ்சும் பகுதியில் அமைந்த அழகிய கோவில். ஸ்ரீராமானுஜரின் பாதச் சுவடுகளால் பெருமைப் படுத்தப் பட்ட தலம்.
இந்தக் கோவிலுக்குச் சொந்தமான 3000 ஏக்கர் நிலம் சட்டத்திற்குப் புறம்பாக பலரால் ஆக்கிரமிக்கப் பட்டிருக்கிறது என்பது நெடுநாளைய புகார். மேலும் இந்த நிலத்தில் 47 சர்ச்சுகளும் கட்டப் பட்டிருக்கின்றன என்ற அதிர்ச்சியூட்டும் தகவலும் சமீபத்தில் வெளிவந்துள்ளது. கோவிலின் கோசாலையிலுள்ள மாடுகள் வேண்டுமென்றே கவனிக்காமல் விடப் படுவதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. சமீபத்தில் பல மாடுகள் மர்மமான முறையில் இறந்து போனது பல பக்தர்களை துயரத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
தேவஸ்தானத்தை நிர்வகிக்கும் பொறுப்பிலிருக்கும் அரசு அதிகாரிகள் முழுமையாக ஊழலில் திளைத்திருக்கிறார்கள் என்பதோடு, மிஷநரிகளின் கைக்கூலிகளாகவே இருக்கிறார்கள் என்று சொல்லப் படுகிறது. இப்படி இருந்தால் அதில் ஆச்சரியமும் இல்லை. ம்றைந்த முதல்வர் ராஜசேகர ரெட்டியின் செயல்பாடுகளால், ஆந்திரா தென்னிந்தியாவின் ‘பைபிள் பெல்ட்’ (Bible Belt) என்ற புகழுரைக்குப் பொருந்தும் வகையில் வந்து கொண்டிருக்கிறது. உலகெங்கிலும் உள்ள அடிப்படைவாத, பழமைவாத கிறிஸ்தவ மிஷநரிகளின் சொர்க்கபூமியாக ஆந்திரா கருதப் படுகிறது. உலகின் பல நாடுகளில் அங்குள்ள கிறிஸ்தவ அரசுகளாலேயே தடைசெய்யப் பட்ட விஷயங்களைக் கூட அவர்கள் ஆந்திராவில் கனஜோராக செய்ய முடியும்.
இந்நிலையில், இந்த ஆலய நிர்வாக சீர்கேடுகளைக் கண்டித்து பக்தர்கள் குழு ஒன்று கமல் குமார் சுவாமி என்ற துறவியின் தலைமையில் அமைதியான முறையில் பஜனைப் பாடல்களைப் பாடிக் கொண்டும், நிர்வாக சீர்கேடுகளை விளக்கும் செய்திகளைச் கூறிக் கொண்டும் சென்றது. தங்கள் கூட்டம் முடிந்ததும் கோயிலுக்கு உள்சென்று தரிசனம் செய்வதாகவும் எண்ணியிருந்தது. கோவில் வாசலருகில் வந்தவுடனேயே ஆலய நிர்வாகி, பக்கத்தில் கடைவைத்திருந்தவர்கள், சில ஆலயப் பணியாளர்கள், மற்றும் அங்கு வரவழைக்கப் பட்ட கூலிப் படையினரால் சரமாரியாக சுவாமிகளும் பக்தர்களும் தாக்கப் பட்டனர்.
ஈ-டிவி வீடியோ:
இந்த மாபெரும் சதித்திட்டத்தை அம்பலப் படுத்திய கமல் குமார் சுவாமிகளையும், பக்தர்களையும் கோவில் நிர்வாகி மோசமான வார்த்தைகளால் வசைபாடியிருக்கிறார். கோவில் சொத்துக்களை சர்ச்சுக்குக் கடத்தும் இந்த மானங்கெட்ட கைக்கூலி, சுவாமிகளை self styled swami என்று திட்டி, காவிக் கொடிகளை கோவிலுக்குள் கொண்டு செல்வது சட்டவிரோதம், அதனால் தான் அடித்தோம் என்று விளக்கம் வேறு அளிக்கிறார். அவரது அதிகாரம் அங்கே முழுமையாக இருப்பதால் கடைக்காரகள் உட்பட அனைவரும் அவரது கைக்குள்!
சுயநலத்தாலும், அரசியல் அதிகார ஆசைகளாலும் இந்துக்களிலேயே ஒரு சாரார் தங்கள் மதத்தை அழிக்கும் செயல்பாடுகளிலும், தங்கள் சகோதரர்களையே எதிரிகளாகக் கருதும் இழி நிலைக்குத் திருப்பப் பட்டிருக்கிறார்கள். பலியாகியிருக்கிறார்கள்.
”யாதொருவன் என்னிடத்தில் வந்து, தன் தகப்பனையும் தாயையும் மனைவியையும் பிள்ளைகளையும் சகோதரனையும் சகோதரிகளையும், தன் ஜீவனையும் வெறுக்காவிட்டால் எனக்குச் சீடனாயிருக்கமாட்டான்.” - லூக்கா 14:26, விவிலியம்
“இந்தியாவை இஸ்லாமியர்கள் கைப்பற்றியது தான் உலக சரித்திரத்திலேயே அதிக அளவு ரத்தக்கறை படிந்த கதையாக இருக்கும். அது எவரையும் நிலைகுலையச் செய்யும் கதை. அதிலிருந்து தெளிவாகப் புரியும் பாடம் என்னவென்றால், கலாசாரம் என்பது ஒரு பெருமதிப்புள்ள பொருள். அதன் சிக்கலான, நுட்பமான ஒழுங்கும், சுதந்திரமும் வெளியிலிருந்து ஆக்கிரமிப்பவர்கள் மற்றும் அவர்கள் மூலம் உள்ளிருந்தே பல்கிப்பெருகுபவர்கள் என்ற இருவகைக் காட்டுமிராண்டிகளாலும் எந்நேரமும் தகர்த்தெறியப் படும் அபாயம் இருக்கிறது” - வில் டுராண்ட் (நாகரீகங்களின் வரலாறு)
மேற்கண்ட வாசகங்களின் நிஜம் நம்மைச் சுட்டுக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், கீழ்க்கண்ட வாசகத்தையும் சிந்தித்துப் பார்ப்பது நல்லது.
“கடந்த காலத்தின் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளாதவர்கள் அவற்றையே மறுமுறை செய்யும் நிலைக்குத் தள்ளப் படுகிறார்கள்” - ஜார்ஜ் சாண்டாயனா.
தொடர்புடைய பதிவுகள்
குறிச்சொற்கள்: ஆக்கிரமிப்பு, ஆந்திரா, ஆலயங்கள், இந்து உரிமைகள், காலனியம், கிறிஸ்தவ மிஷனரிகள், கிறிஸ்தவம், கோயில், கோவில் சொத்துக்கள், செஞ்சி, தமிழக வரலாறு, தமிழகம், போராடும் இந்துத்துவம், மதமாற்றச் சூழ்ச்சிகள், வரலாறு, வேலூர்


தமிழ்ஹிந்து வெளியிடும் முதல் நூல் "பண்பாட்டைப் பேசுதல் - இந்து அறிவியக்கக் கட்டுரைகள்" . மேலும் விவரங்கள்
4 February 2010 at 1:05 pm
http://www.hindu.com/2010/02/04/stories/2010020451400300.htm
Hindu religious heads seek State grant for pilgrims
Special Correspondent
CUDDALORE: Religious heads have asserted that a separate board, on the lines of the Wakf Board, should be constituted for administering temples and their property in Tamil Nadu, said Marudhachala Adigalar of Perur Adheenam.
Addressing a press conference at Chidambaram near here on Wednesday, the Adigalar said there were 35,000 temples in the State but most of these were brought under the purview of the Hindu Religious and Endowment Act 1959. Hence, the religious heads had no say in the administration of the temples. The Tamilaga Thuravigal Peravai, modelled on the ancient Theiveega Peravai, had already made an appeal to the State government, he said.
A demand had also been made to the government to give monetary assistance to those who were making pilgrimage to the Kailash every year. Each of them had to spend about Rs.75,000 to Rs.1 lakh on the journey.
The Adigalar noted that the Karanataka and Gujarat governments were giving Rs.25,000 to each of those who visit the Kailash and the Tamil Nadu government should also emulate them.
Kumaragurubara Adigalar of Gowmara Math said the Muruga Bhaktha Peravai had demanded that medical facilities be provided to pilgrims who undertake trekking and also compensation to the families of those who die in mishaps during the journey.
Sundaramurthy Thambiran said that his Thirupanandal Adheenam had built temples in the seven villages by spending lakhs of rupees to keep the flocks together.