காதலர் தினம் என்னும் வருடாந்திர வெள்ளம்

india-valentines-day-2009-2-14-7-3-37ந்த வருடமும்  அந்த தினம்  வழக்கம் போலவே வந்து போனது.  ஒரு பெருமிதமிக்க ஜனநாயக சக்தியாக இந்தியக் குடியரசு உருவான  தினத்தை நாம் கொண்டாடி முடித்து சரியாக  3 வாரம் கழித்து வரும் தினம். இந்தியாவின் பையன்களும், பெண்களும் யுவர்களாக,யுவதிகளாக தங்கள் போதாமைகளைக் ”கொண்டாடும்”  தினம். வேலன்டைன்ஸ் டே, அதாவது காதலர் தினம்.

இந்த தேசத்தின் துடிப்பான வாலிபர்களை  நாணிக் கோணி மலர்க்கொத்து நீட்டும் அசடுகளாகவும்,  இயந்திரத்தனமாக வாழ்த்து அட்டை வினியோகிக்கும் வாத்துகளாகவும், தங்கள் திராணியற்ற தன்மையை எண்ணி அசைபோடும்  முட்டாள் “காளைகளாகவும்”  ஆக்கி வேடிக்கை பார்க்க மேற்கத்திய நுகர்வுக் கலாசாரம் போட்ட திட்டம் வெற்றிகரமாக நிறைவேறியிருப்பதைக் கொண்டாடும் தினம் என்று சொல்லலாமா? அல்லது, தங்கள் சுயமதிப்பையும் (self worth), வசீகரத்தையும், தங்கள் வாழ்க்கையின் சாராம்சத்தையுமே ஒருசில மலர்க் கொத்துக்களும்,  வாழ்த்து அட்டைகளும்,  பாசாங்குப் பேச்சுகளும்  தீர்மானிப்பதாக  யுவதிகளை மறுக வைக்க அதே நுகர்வு மந்திரவாதிகள் விரித்த மாயவலையில் கிளிகள் சிக்கிக் கொண்டதைச் சொல்லும் தினம் என்று சொல்லலாமா?

எண்பதுகளில் என் பள்ளிப் பருவத்தில்  சென்னையில் வசித்தபோது. ஒவ்வொரு வருடமும் செப்டம்பர்-அக்டோபரில் வங்கக் கடலில் காற்றழுத்தம் உருவாகும், புயல் வீசும், வழக்கமாக மசூலிப் பட்டினம் அருகில் கரையைக் கடக்கும். ஆந்திராவில் பிரகாசம், நெல்லூர் மாவட்டங்களில் வெள்ளம் பெருக்கெடுக்கும். சில கிராமங்கள் கடலில் மூழ்கும்.  பீகார். பங்களாதேஷ், அஸ்ஸாமிலும் கங்கை, பிரம்மபுத்ரா வெள்ளம் கரைபுரண்டு இதே கதைதான்.. வருடம் தவறாமல் வரும் சீனாவின் மஞ்சள் ஆற்று (Yangtze River) வெள்ளம் உலகப் பிரசித்தி பெற்றது. சீனாவின் துயரம் என்றே அந்த ஆற்றுக்கு ஒரு பட்டப் பெயர் உண்டு!

இருபாலருக்கும் இடையில் இயல்பான, ஆரோக்கியமான,  பாலியல் சாராத அதே சமயம் ஆர்வமூட்டுகிற (non-sexual, yet exploratory) நட்புகளைப் புரிந்துகொள்ளவோ,  ஊக்குவிக்கவோ இன்னும் முழுமையாகத் தயாராகாத ஒரு சமூகத்தில்,  காதலர் தினத்தின் வருகையை  இத்தகைய வருடாந்திர வெள்ளத்திற்குத் தான்  ஒப்பிடத் தோன்றுகிறது.  அடங்கி இருந்த ஆறு கரையை உடைக்கிறது; அதன் பக்கவிளைவுகள் எப்போதுமே துயரம் தரக் கூடியவை. மேலும், அவற்றை எப்போதுமே நாம்  தவறில்லாமல் கணித்துவிடவும் முடியும்!

நகரங்களில் வசிக்கும் உயர்பள்ளி மாணவர்களுக்கு இந்தத் திகில் ஜனவரி மாசக் கடைசியிலேயே ஆரம்பித்து விடுகிறது என்று தோன்றுகிறது .. பருவம் துளிர்விடும் அந்த வயதில், இயல்பாக வரும் உணர்ச்சிகளை, அவற்றின் இயல்பான போக்கில் கையாள விடுவது நல்லது. ஆனால் இந்தத் தினம் வந்துவிட்டால், அன்று தனது ”வேலன்டைனை” தேர்வு செய்து அனைவர் முன்னிலையிலும் முரசறைய வேண்டிய கட்டாயத்துக்கு ஒவ்வொரு பையனும் ஆளாகிறான்.. அப்படிச் செய்யவில்லையென்றால் அவனது  சுயமதிப்பே கேள்விக் குறியாகி விடும் அபாயம்!  முயற்சியில் தோல்வி என்றால், என்ன ஆகும் என்று சொல்வதற்கில்லை. ’தான் யாருக்குமே வேலன்டைன் ஆகவில்லையென்றால்..’ என்று சில பெண்களுக்கும்,  மூன்று நான்கு  பேர் தன்னை வேலன்டைன் என்று சொல்லிவிட்டால் என்ன செய்வது என்ற தர்மசங்கட குழப்பத்தில் வேறு சில பெண்களுக்கும்,  வரும் வேலன்டைன்-ஷிப்பை ஏற்றுக் கொள்வதா வேண்டாமா என்று எல்லா பெண்களுக்கும்  – ஒரே தவிப்பு..  பையன்களுக்கும் சரி, பெண்களுக்கும் சரி, எவ்வளவு பெரிய கொடுமை, சித்ரவதை இது!

அதுவும் இந்தப் பையன்கள் எல்லாரும் மேற்கத்திய சூழலில் வளர்பவர்களல்ல, தான் “காதலிக்கும்” பெண்ணை கைவிடாமல் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஒருவிதமான சராசரி இந்திய மத்தியதரக் குடும்ப மனநிலையுடன் வளர்க்கப் பட்டவர்கள். எதிர்ப்படும் பெண் சிந்தும் ஒரு நொடிப் புன்னகைக்கான ஒரே எதிர்கால சாத்தியம் (logical conclusion) டூயட்-தாலி- மேளம் என்பது போன்ற ஒருவித மனச்சித்திரத்தை திரைப்படம், ஊடகங்கள் மற்றும் அவர்கள் வாழ்க்கையில் பார்க்கும் நிகழ்வுகளின் மூலம் உருவாக்கிக் கொண்டவர்கள்.  ஆயிரத்தில் ஒருவன் போன்ற படங்கள் தமிழ் இளைஞர்களின் பாலியல் கற்பனைகளை ஒரு புதிய பரிமாணத்திற்கு இட்டுச் சென்று கொண்டிருக்கும் இந்தக் காலத்திலும்  சராசரி இளைஞனின் மனநிலை அப்படித் தான்..

சொல்லப் போனால்,  வேலண்டைன்ஸ் டே என்பது ஒரு ”நட்புப் பரிமாற்றம்”  என்று பிரசாரம் செய்யும் ஊடகங்களே ஒரு குழம்பிய மனநிலையில் தான் இருக்கின்றன. சென்ற வருடம் பல சேனல்களிலும் (பெங்களூரில் திரையரங்குகளிலும் கூட) வாலண்டைன்ஸ் டே ஸ்பெஷல் ட்யூனாக  காதல் ஜோடிகளை என்றென்றும் புன்னகைத்துக் கொண்டே இருக்கச் சொல்லும் ஒரு சிலிர்ப்பூட்டும் பாட்டு ஓடிக் கொண்டிருந்தது.. அதில் பின்னணியில் மீண்டும் மீண்டும் “மாங்கல்யம் தந்துநானேன…மம ஜீவன ஹேதுனா.. “ என்ற வரிகள் ! இதற்கு என்ன அர்த்தம்?

burning-heartதங்கள் எதிர்ப்பாலின  நட்பை எப்படிக் கையாள்வது என்ற குழப்பம் எல்லா இந்திய இளைஞர்கள், யுவதிகள் மனங்களிலுமே இருக்கிறது.. அது காலப் போக்கில் தன்னியல்பில்  தீரும், அது தான் நல்லதும் கூட.  ஆனால் வேலண்டைன்ஸ் டே  இந்த விஷயத்திற்கு ஒரு வருடாந்திர தீர்ப்பு வழங்க வேண்டும் என்ற தேவையில்லாத அழுத்தத்தை உருவாக்குகிறது..  இத்தகைய இயல்பான உறவுகளின் நெகிழ்வுத் தன்மையைக் குலைக்கிறது என்று நான் நினைக்கிறேன். ஒரு உறவை  girlfriend  அல்லது friend who is a girl  என்று சட்டென்று முடிவெடுக்க வேண்டும்.. கஷ்டகாலம்! girlfriend என்று சொல்லிவிட்டால் அது சாதாரண விஷயம் அல்ல,  மேலே சொன்னமாதிரி பெரிய நீண்டகாலக் கொக்கி பற்றிய கற்பிதங்களுக்கே அது இட்டுச் செல்லும்.. அதனால் தான்  “வேலண்டைன்ஸ் டே”  அன்று  நிராகரிப்பு விகிதங்களும் (rejection ratios) மிக அதிகமாக இருக்கின்றன..  எந்தப் பெண் இப்படி வேண்டாத கற்பனைக் கொக்கிகளில் மாட்டிக் கொள்ள நினைப்பாள்?  பிப்ரவரி வந்துவிட்டாலே  உயர்பள்ளி, கல்லூரி இளைஞர்கள் ஒருவித பதைபதைப்புடனேயே காணப் படுகிறார்கள். பார்த்தாலே பரிதாபமாக இருக்கிறது. மந்தையில் ஒட்டாமல் இஷ்டப் பட்டதை செய்வேன் என்று இருப்பவர்களே இந்த “மைய நீரோட்டத்திலிருந்து” தப்பிக்கிறாரக்ள், அவர்களுக்கும் ஏகப் பட்ட அழுத்தங்கள், மன உளைச்சல்கள்.

பள்ளிப் பருவத்தின் “காயங்கள்” அப்படியே கல்லூரியிலும் தொடர்கின்றன. சில பையன்கள் பெண்களுடன் ஒரு உரையாடலை நிகழ்த்துவதற்கே (”having a conversation”) சங்கடப் படுகிறார்கள். அசடு வழிகிறார்கள். சில கற்கால சென்னை இஞ்சினீயரிங் கல்லூரிகளில் இது எதுவும் வேண்டாமென்று பிப்ரவரி முதல் இரண்டு வாரம் விடுமுறையே விட்டு விடுகிறார்களாம் – கேள்விப் படுகிறேன். இன்னும் சில கல்லூரிகளில் பிப்ரவரி முதல் இரண்டு வாரம்  கறாரான கண்காணிப்புகள் இருக்கின்றனவாம். ஆண்-பெண் ”தொடர்பு”கள்  (this could be just புன்னகைகள் or சின்ன உரையாடல்கள் or even சேர்ந்து சிரிப்பது) கண்டுபிடிக்கப் பட்டால் உடன் அழைத்துச் சென்று கடுமையாக எச்சரித்து அனுப்புவார்களாம்!   ”காதலர் தினம்” எங்கிருந்து எங்கு நம்மைக் கொண்டுவந்து விட்டுவிட்டது பாருங்கள்!

செயிண்ட் வேலன்டைன்ஸ் டே என்பது வேலண்டைன் என்ற பேருடைய பல பழைய ரோமானிய கிறிஸ்தவ புனித-தியாகிகளின் (martyrs) நினைவாக ஆரம்பத்தில் கொண்டாடப் பட்டது.  நான்காம் நூற்றாண்டில் ஒரு போப் தான் காதலையும், பாசத்தையும் தெரிவித்துக் கொள்ளும் ஒரு பண்டிகையாக அதிகாரபூர்வமாக இந்த நாளை அறிவித்தார். ஐரோப்பாவில் குறிப்பாக இங்கிலாந்தில் காதலைத் தெரிவிக்கும் நாளாக இந்நாள் அனுசரிக்கப் பட்டது. பின்னர் இருபதாம் நூற்றாண்டில் அமெரிக்காவின் பண்டிகைகள் எல்லாமே முற்றாக நுகர்வுக் கலாசாரத்தின் ஆளுகைக்கு வந்தபோது,   வியாபார நிறுவனங்கள் பெரிய அளவில் இந்த தினத்தை விளம்பரப் படுத்தின. மதர்ஸ் டே, ஃபாதர்ஸ் டே, செக்ரடரீஸ் டே போன்ற இத்தகைய  “டே” நாட்களுக்கு Hallmark Holidays என்றே அமெரிக்காவில் ஒரு பேர் உண்டு.. ஏனென்றால் அமெரிக்காவின் மிகப் பெரிய வாழ்த்து அட்டை தயாரிக்கும் கம்பெனி Hallmark! வாழ்த்து அட்டைகள் அனுப்பவும், பரிசுகளை விற்பனை செய்யவும் என்றே திட்டமிட்டு செயற்கையாக உருவாக்கப் பட்டவை இந்தப் ”பண்டிகைகள்”. இந்தக் கம்பெனிகளின் சந்தை இந்தியாவிலும் விரியும் போது, இந்த “டே”க்களும் நம் கலாசாரத்துக்குள் இறக்குமதியாகின்றன.

ஆனால் குறிப்பிட்ட ”டே” விஷயத்தில் சமாசாரம் வாழ்த்து அட்டையோடு நின்றுவிடுவதில்லை என்பதைத் தான் மேலே பார்த்தோம்..

நமது மரபிலும் இயல்பாக  இருபாலரும் காதல் உணர்வுகளைப் பரிமாறிக் கொள்ள பல சாத்தியங்கள் இருந்தன. ஒவ்வொரு பருவத்திற்குமான பண்டிகைகளுமே அதற்குக் களம் அமைத்தன. குறிப்பாக  வசந்த காலத் தொடக்கத்தில் வரும் ’வசந்தோத்சவம்’ என்ற காமன் பண்டிகை பாரத நாடெங்கும் சிறப்பாகக் கொண்டாடப் பட்டது (பார்க்க: சங்ககாலத்தின் காதலர் தினம் பற்றி ஆய்வாளர் எஸ்.ராமச்சந்திரன் கட்டுரை)  வட இந்தியாவில் இன்றும் “ஹோலி” என்ற பெயரில் அனைத்துத் தரப்பினரும், குறிப்பாக இளைஞர்களும், யுவதிகளும் பங்குபெரும் விழாவாக இருக்கிறது.  ஆனால்,  இந்தப் பண்டிகைகள் வழக்கமான உற்சாகம் ததும்பும் பண்டிகைகளே; அவற்றில் V-Dayல் இருப்பது போன்ற D-Day அழுத்தங்கள் எதுவும் கிடையாது என்பதைக் கவனிக்க வேண்டும்.

ஒவ்வொரு வேலன்டைன்ஸ் தினத்தின் போதும் சிவசேனா, ராமசேனா போன்ற அடாவடி அமைப்புகள் செய்யும் எதிர்ப்புப் போராட்டங்களையாவது ஒரு சாக்காக வைத்து,  இந்தக் காதலர் தினத்தால் நாம் கண்ட பயன் என்ன என்று கொஞ்சமாவது யோசித்துப் பார்க்க வேண்டும். மேற்கண்ட சித்திரவதைகளைப் பார்க்கும்போது இந்த “மேற்கத்திய சீரழிவை”த் தடை செய்தால் கூட பாதகமில்லையோ என்றே எண்ணத் தோன்றுகிறது..  அட் லீஸ்ட் அப்படிச் செய்வது பையன்கள் (யுவதிகள் கூடத் தான்) தங்கள் சுயமதிப்பை சரியாக உணர்ந்து கொள்ள நிறையவே உதவலாம்.

ஒரு பழைய ரோமானிய புனிதக் கிழவன் உற்றுப் பார்த்துக் கொண்டிருக்காமல், தோளைப் பிடித்து அழுத்திக் கொண்டிருக்காமல், நிம்மதியாக பசங்கள் இயல்பாகத் தங்கள் தோழிகளிடம் பேசலாம்.

What a relief!

பி.கு:  கல்யாணம் ஆனவர்களுக்கும் காதலர் தினத்தால் ஒரு பயனும் கிடையாது.  அந்தக் கூட்டம் இந்த தினத்தைப் பற்றிப் பெரிதாக அலட்டிக் கொள்வதே இல்லை என்று சந்தைப் புள்ளி விவரங்களே  தெரிவிக்கின்றன. ஆயினும் அவர்களையும் சிக்கவைக்க ஏதேதோ ஊடக வலைகளை சந்தை வீசிக் கொண்டிருக்கிறது.  யாராயினும், காதல்/காமம் (பழந்தமிழில் காமுறுதல் என்றால் காதலித்தல்) ஒரு நாள் சமாசாரம் அல்ல என்ற அடிப்படை விஷயத்தை உணர்ந்து கொண்டவர்கள் காதல் வலையில் சந்தோஷமாக விழுவார்கள், வியாபார வலையில் அல்ல.

காமம் காமம் என்ப; காமம்
அணங்கும் பிணியும் அன்றே, நினைப்பின்
முதைச்சுவர் கலித்த முற்றா இளம்புல்
மூதாதை வந்தாங்கு
விருந்தே காமம் பெருந்தோளாயே.

– கொல்லன் அழிசி பாடிய அபாரமான கவிதை (குறுந்தொகை – 204)

பெரிய தோள் கொண்டவனே,
காமம் காமம் என்று சொல்கிறார்களே
அது தெய்வ ஆவேசமும் அல்ல நோயும் அல்ல.
நினைத்துப் பார்த்தால்
மேட்டு நிலத்தில் தானாக முளைத்த இளம் புல்லை
பல்போன பசு சப்பிப்  பார்ப்பதைப்போல
ஒரு தீரா விருந்து!

29 Replies to “காதலர் தினம் என்னும் வருடாந்திர வெள்ளம்”

  1. ///இந்தத் தினம் வந்துவிட்டால், அன்று தனது ”வேலன்டைனை” தேர்வு செய்து அனைவர் முன்னிலையிலும் முரசறைய வேண்டிய கட்டாயத்துக்கு ஒவ்வொரு பையனும் ஆளாகிறான்.. அப்படிச் செய்யவில்லையென்றால் அவனது சுயமதிப்பே கேள்விக் குறியாகி விடும் அபாயம்!///

    இது தான் டேஞ்சரே! காதலித்தே ஆகவேண்டிய நிர்பந்தத்தை நம் இளைஞர்களிடம் தினிக்கப் பார்க்கிறார்கள். கலாச்சார சீரழிவை இந்தியாவில் நிகழ்த்த துடிப்பவர்களுக்கு இதுவும் ஒரு நல்ல திட்டமே!

  2. ஜடாயு,

    படிக்க மிகவும் சுவையாக உள்ள கட்டுரை – சிலரிடம் காட்டி சிந்திக்க சொல்கிறேன்

    கல்லூரிகள் உள்ள இடங்கள் வழியாக செல்லும் பேருந்துகளில், அப்பன் காசில் அல்லது கடன் வாங்கி ” பெரிய shoe,belt, perfume” போட்டுக்கொண்டு “national highway ” போடும் roller போல நொடிக்கு ஒருதடவை தலையில்கையை விட்டு ஏதோ தேடும் மாணவர்கள் என்று கருதப்படுபவர்கள் பேச்சு இது தான் – எனக்கு உனக்கு செட்டயிரிச்சி, எனக்கும் இன்னும் செட்டாகள – இது எதோ ஜல்லி, சிமெண்ட் போட்டு கட்டும் “concrete” போல

    கல்யாணமானவர்களும் இதற்க்கு விதி விலக்கல்ல – என்ன இன்னிக்கு “valentine’s day” ஒன்னும் “special” இல்லையா என்பதும், எங்கயாவது வெளில போலாமா (ஊர் மேய) என்பதும் – “ஆமாம்!!!” என்று நீட்டி அழுத்தமாக சொல்லாமலே சொல்லும் அந்தபக்கத்து பார்வைகளும் சகஜம் – இதானாலேயே இவர்களால் வரும் விற்பனை குறைவு, புள்ளி விவரங்களை கணக்கிட முடியவில்லை – “door delivery” அல்லது “valentine’s week vacation in mahabaleshwar, Munaar” என்பது போல ஆரம்பித்தால் இந்த விற்பனையும் சூடு பிடிக்கும்

    இந்த ” valentine’s day” போது இன்னொரு வெள்ளமும் அதிகமாகவே உள்ளது – தலைப்பை பார்த்து அதை பற்றிதான் கட்டுரையோ என்று ஒரு கணம் நினைத்தேன் 🙂

  3. Good article Mr Jatayu.
    If Valentine’s day is for love, according to these marketing forces are all other days is for hate?
    Do we be nice to our spouses on one particular day only?[ Iam not saying we buy gifts on all 365 days of a year:-) Yaarale mudiyum?!]
    Yesterday I successflly escaped buying an expensive gift for wife.She too feels gifts shold be bought when we can and not because of pressure.
    I cant imagine the plight of people whose spouses expect expensive gifts on the day.
    Bad enough its the income tax season.
    But its shocking to read about the pressure on school children.No wonder boys get less marks in the folowing March exams, compared to girls.
    Todays children are less fortunate than us.
    Saravanan

  4. மேலே பதிலில் ஜடாயு அவர்களே என்பதிற்கு பதில் ஜடாயு என்று எழுதிவிட்டேன் அதற்காக வருந்துகிறேன்

    இப்போழ்து எனது அலுவலகத்திலேயே இந்த கேலி கூத்து நடந்து கொண்டிரிக்கிறது – “Talentines Day” என்று இதை கொண்டாடுகிறார்கள் 🙁 கொஞ்சம் நாளாகவே உற்று கவனித்ததில் ஒன்று புரிந்தது – அதாவது இப்பொழுதேல்லாம் சுவிசேஷ கூட்டக்காரர்கள் ஒரு புது உக்தியை கையாளுகிறார்கள் – பெரும்பாலான HR வேலையில் இவர்களே உள்ளார்கள் – மெல்ல மெல்ல ஒரு நிறுவனத்தின் கலாசாரத்தை க்ரிச்துவமயமாக்குகிரார்கள் – வருடா வருடம் தீபாவளிக்கு பணியாளர்களுக்கு இனிப்பு வழங்கும் எனது நிறுவனம் இந்த வருடம் அதை நிறுத்தியது – சரி பண பிரச்சனையை காரணம் என்று பார்த்தல் ஒரு வார காலம் கிறிஸ்தமஸ் கொண்டாட்டம் நடத்தியது – Santa வந்து எல்லோர் கையையும் குலுக்கி இனிப்பு வழங்கிவிட்டு போனார்

    சிவராத்திரிக்கு, வைகுண்ட ஏகாதேசிக்கு விடுமுறை கிடையாதாம் good friday க்கு உண்டாம் முஹரத்துக்கு உண்டாம்

  5. அருமையான கட்டுரைக்கு நன்றி ஜடாயு. பிப்ரவரி 14 – தமிழ் ஹிந்துக்கள் மறக்கக் கூடாத நாள். அன்றுதான் கோவையில் எழுபதுக்கும் மேற்பட்ட நம் சகோதரர்கள் உடல் சிதறி ஜிகாதி பன்றிகளுக்கு பலியானார்கள். அவர்களுக்கு இன்னும் நியாயம் கிடைக்கவில்லை. ஹிந்துக்களுக்கு இந்த தேசத்தில் மிக முக்கிய தேவை வாலண்டைன் தினங்களல்ல. வாஞ்சி நாதன்கள்.

  6. talentine day போட்டியில் முதல் பரிசு பெறுபவர் ஒரு பிணம் புதைக்கப் பட்ட இந்தியாவின் புண்ணிய ஸ்தலமாக செகுலர் வாதிகளால் கருதப்படும் தாஜ் மகாலை வரைந்தவர் – ஒருவன் கையை வெட்டி, பலரை கொன்று இரக்கமே இல்லாமல் எழுப்பப்பட்ட காதலின் புனித சின்னம்..

  7. நண்பர் சரவணன்

    வீட்டுக்கு வீடு வாசற்படி இருக்கும் அதற்காக இப்படி பொதுவில் போட்டு விஷயத்தை நேரடியாக உடைத்து விடீர்களே 🙂 🙂

    //
    Yesterday I successflly escaped buying an expensive gift for wife.She too feels gifts shold be bought when we can and not because of pressure.
    I cant imagine the plight of people whose spouses expect expensive gifts on the day.
    //

  8. ஜடாயுவின் கட்டுரைக்கு பாராட்டுகள். கோவை குண்டு வெடிப்பில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்திடச் சென்ற பாரதீய ஜனதா கட்சியின் மாநில துணைத் தலைவர் ஹெச்.ராஜா தலைமையில் 600௦௦க்கும் மேற்பட்ட பாஜக வினர் கைது. அதே நேரத்தில் மதுரையில் நடைபெற இருக்கின்ற பாபுலர் பிரான்ட் ஆப் இந்தியா சார்பில் முஸ்லிம் சமூக எழுச்சி மாநாட்டிற்காக மேட்டுப்பாளையத்தில் நகரெங்கிலும் காவல்துறை அனுமதியுடன் பிரசாரம் நடைபெற்றது. அதே காவல் துறையின் பாதுகாப்புடன் தமிழகமெங்கும் காதலர் தினம் என்கிற போர்வையில் அநாகரீக செயல்கள் வெட்ட வெளியில் அரங்கேறின. இந்த மனித மிருகங்களுக்கு கோவை குண்டு வெடிப்பில் பலியாகியவர்களைப் பற்றி சிந்திக்க நேரமேது. இது காதலர் தினமல்ல காமாந்தகர்களின் தினம்.

    வித்யா நிதி

  9. நல்ல கட்டுரைதான் ஆனால் இன்னும் எதிர்பார்த்து வந்தேன் நீங்கள்.
    இங்கு மேற்கத்திய பழக்கம் என்கிறரீதியா விளக்கியுள்ளீர் ஆனால் இந்த காதலர் தினத்தை ஆதரிப்பவர்கள் கூறும் காரணத்திற்கு பதில் கிடைத்தால் இன்னும் மகிழ்வேன்.
    எனது சில கேள்விகள் (இவை எதிர்வாதமில்லை புரிதலுக்கான கேள்விகள்)
    ஹிந்து மதம் காதலுக்கு எதிரியா?
    எதிரியில்லாதபச்சத்தில் ஹோலியோ அல்லது வசந்தோத்சவமோ கொண்டாடாத தமிழ் ஹிந்துக்குக்கள் எப்படி நடக்கவேண்டும்?
    மேலே கூறிய D-Day அழுத்தங்கள் இல்லாமல் காதலர்கள் இந்த தினத்தைக் கொண்டாடலாமா?

  10. கருத்துச் சொல்லும், பாராட்டும் நண்பர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி.

    // மேலே பதிலில் ஜடாயு அவர்களே என்பதிற்கு பதில் ஜடாயு என்று எழுதிவிட்டேன் அதற்காக வருந்துகிறேன் //

    சாரங், என்ன இதெல்லாம்? என்னை நீங்கள் தாராளமாகப் பெயர் சொல்லி அழைக்கலாம்.. இப்படி ”அவர்களே” எல்லாம் போட்டு distant ஆக்கிடாதீங்க ப்ளீஸ்.

    // பெரும்பாலான HR வேலையில் இவர்களே உள்ளார்கள் – மெல்ல மெல்ல ஒரு நிறுவனத்தின் கலாசாரத்தை க்ரிச்துவமயமாக்குகிரார்கள் //

    உண்மை. மேற்கத்திய நாடுகளில் டிசம்பர் இறுதியில் வரும் கிறிஸ்துமஸ் எனப்து பொதுக் கொண்டாட்டம் (அமெரிக்காவில் அதிகாரபூர்வமாக winter holidays என்றே இந்த விடுமுறையை அழைக்கிறார்கள், கிறிஸ்துமஸ் என்று அல்ல), ஆனால் இந்தியாவைப் பொறுத்தவரை இது முழுக்க முழுக்க ஒரு அன்னிய மதத்தின் பண்டிகை தான்..

    ஆனால் பன்னாட்டு நிறுவனங்களில் மேற்கத்திய வழக்கத்தை வைத்து, இங்குள்ள கிறிஸ்தவர்கள் தஙக்ள் மதரீதியான விழாவை முனைந்து முன் நிறுத்துகிறார்கள்.. தீபாவளி, பொங்கல், தசரா போன்ற பண்டிகைக் கெல்லாம் அலுவலகம் வழக்கம் போல இருக்கும், ஆனால் கிறிஸ்துமசுக்கு மட்டும் மரத்தைக் கொண்டு வந்து நட்டு, சாண்டா கிழவன் பொம்மையை மாட்டி ஏகத்துக்கு அலங்காரம் செய்வார்கள்.. இதில் அப்பிராணியாகப் போய் உதவுவதெல்லாம் இந்துப் பணியாளர்களே.. இதில் உள்ள சதித் திட்டத்தைப் பற்றிய எந்த பிரக்ஞையும் இல்லாமல் தோரணம் கட்டுவார்கள்.. என்னத்தைச் சொல்ல.. அலுவலகங்களில் வேலை பார்க்கும் இந்துப் பணியாளர்களிடம் இது பற்றீய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

    குட் ஃப்ரைடே இப்போது எல்லா தனியார் நிறுவனங்களிலும் விடுமுறையாகி விட்டது.. கேட்டால், அது வெள்ளிக்கிழமை தான் வரும், எனவே சனி ஞாயிறு சேர்த்து சூப்பராக ஒரு லாங் வீக்கெண்ட் கிடைக்கிறது என்று லாஜிக்காக காரணம் சொல்கிறார்கள்,.. பணியாளர்களுக்கு லீவு கிடைத்தால் போதும், கலாசார ஆக்கிரமிப்பு, புண்ணாக்கு பற்றியெல்லாம் யோசிக்க அவர்களுக்கு நேரமும் இல்லை, சிந்தனையும் இல்லை. கொடுமை!

    வெள்ளிக் கிழமை முக்கியமல்ல. எங்கள் பண்டிகைகளை அடையாளப் படுத்தி, அவற்றை நாஙக்ள் கொண்டாடம் வகையில் விடுமுறை தரவேண்டும் என்று ஒவ்வொரு அலுவலகத்தில் கோரிக்கை வைக்க வேண்டும். கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக இருக்கும் நாடுகளில் கூட குட் ஃப்ரைடேக்கு அரசு விடுமுறை கிடையாது என்பதையும் நினைவு படுத்த வேண்டும்..

  11. அருமையான கட்டுரை.

    ஸாரங் அவர்களின் அவதானிப்பு மிகச்சரி. பன்னாட்டு நிறுவனங்களில் உள்ள HRகள் பலர் கிறுத்துவர்களாக இருப்பது உண்மை. அவர்கள் தீபாவளி போன்ற பண்டிகைகளைப் பின் தள்ளி கிறுத்துவப் பண்டிகைகளுக்கும், யூரொப்பிய கலாச்சாரங்களுக்கும் முக்கியத்துவமும், ஆதரவும் அளிக்கிறார்கள் என்பதும் உண்மை.

    ”வேலன்டைன்ஸ் டே” வெறும் நுகர்வுக் கலாச்சாரம். இதனுடைய குணங்கள்:

    – ஆணும், பெண்ணும் ஒருவருக்கு மற்றொருவர் வெறும் நுகர்வுப் பொருட்கள்

    – பிஸ்கட் போட்டால் வரும் நாய்களைப் போல, பரிசுப் பொருட்களைக் கொடுத்து ஒருவர் மற்றொருவரை நுகரும் நாள்

    – நுகர்வுக் கலாச்சாரத்தில் இருந்து விடுபட்டு காதலர்கள் தங்களை தனித்துவமாக உணர முடியாத ஒரு கேவலமான நிலை (அதாவது காதலர்கள் நுகர்வுக் கலாச்சாரத்தின் ஒரு அங்கம் மட்டுமே)

    – பள்ளி செல்லும் குழந்தைகள்கூட தங்களுக்கு ஒரு காதலர் அல்லது காதலி இல்லாமல் இருப்பது கேவலம் என்ற பிம்பத்தை மனத்தில் திணித்துத் தேவையில்லாத மன அழுத்தத்தை ஏற்படுத்தும் நாள்

    – மனிதரோடு நின்று விடுவது

    – மனிதரில் உள்ள கீழான உணர்ச்சிகளுக்கு வடிகால் தேடும், அந்த உணர்ச்சிகளில் மட்டுமே தங்கித் தேங்கி விடும் நாள்

    – மனித உணர்ச்சிகளில் ஒரே ஒரு உணர்வெழுச்சிக்கு மட்டுமே இடம் கொடுக்கும் நாள்

    ஆனால், இந்த ஆழமற்ற அர்த்தமற்ற நுகர்வோர் கலாச்சாரத்தை சிவசேனா, பஜ்ரங்க் தள் போன்ற அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் எதிர்க்கும் முறையும் கேனத்தனமாக இருக்கிறது.

    அதற்கு மாறாக, நமது மரபில் உள்ள ஹோலி மற்றும் காமவேள் விழவு போன்ற நாட்களில் காமன் பண்டிகை கொண்டாடுவதை ஊக்குவிக்க வேண்டும். நமது துணைகளுக்கு அந்நாளில் அன்பு, பாதுகாப்பு, மரியாதை, சமூக அந்தஸ்து போன்ற அனைத்தையும் தருவோம் என்ற வகையில் நடவடிக்கைகளைப், பரிசுப் பொருட்களை வழங்கலாம்.

    நமது காமன் பண்டிகைகளின் குணங்கள்:

    – மனித உறவில் உள்ள அனைத்து உணர்ச்சிகளையும் அங்கீகரித்து, சமநிலையில் உறவின் உன்னதத்தை அனுபவிக்கும் நாள்

    – வாழ்வியல் கலாச்சாரம் கொண்டாடப்படும் நாள்

    – ஒருவர் மற்றொருவர் மீது கொண்டிருக்கும் அன்பை வெளிப்படுத்தும் நாள்

    – தனது துணைக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்ற உணர்வு எழும் நாள்

    – தனது துணை மரியாதைக்கு உரிய ஒருவர் என்ற வகையில் நடந்து கொள்ளும் நாள்

    – தனது துணைக்குச் “சமூக அந்தஸ்து” தரும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நாள்

    – காதல் மற்றும் காமம் என்பவை மனிதர் மட்டுமல்ல இயற்கை முழுவதும் இயல்பாக இருக்கும் ஒரு உன்னதமான உணர்வு என்பதை நினைவூட்டிக்கொள்ளூம் ஒரு நாள்

    – காதலின் மூலம் மனத்தின், மனிதத்தின் உன்னத நிலைகளை அடையும் முயற்சிகளில் ஈடுபடும் நாள்

    (நமது காமன் பண்டிகை பற்றி அறிந்துகொள்ள இந்த உரலை க்ளிக் செய்து இக்கட்டுரையைப் படியுங்கள்: காமவேள் விழவு: சங்க காலத்தில் காதலர் தினம் )

    நுகர்வுக் கலாச்சாரத்திற்கு மாற்றாக வாழ்வியல் கலாச்சாரமாக நமது காமன் பண்டிகைகள் முன்வைக்கப்பட வேண்டும்.

    ஒவ்வொரு வருடமும், தமிழர்தம் காமன் பண்டிகையன்று தமிழ் ஹிந்து தளம் காதலின் உன்னதம் குறித்த கட்டுரையை வெளியிட்டு, நம் மரபில் உள்ள இயல்பான காதலை வரவேற்க வேண்டும் என்ற வேண்டுகோளையும் பணிவாக முன்வைக்கிறேன்.

  12. திரு சாரங் அவர்களே
    எல்லாம் சமூக நீதி க்காவலர்கள் பிறந்த மண்ணில் பிறந்ததனால் வந்த சமூக அக்கறை தான்.:-)
    வாசல் படி இடிக்க க்கூடாது அல்லவா?
    நேற்று சொந்த காசில் சூனியம் வைத்தததுக்கொண்ட 2 நண்பர்களை பார்க்க நேர்ந்தது.
    ஒருவர் நகை வாங்கப்போய் நொந்து போனவர் .வெள்ளி வாங்கலாம் என்று மனைவியை கந்விந்ஸ் செய்து வாங்க ப்போனால் அது வெள்ளைத்ததங்கமாம். இது நம் பாரம்பரியத்த்ில் இல்லாதது.
    பிலாடினமும் அப்படியே.
    மற்றொருவர் வீட்டுயர கரடி பொம்மை வாங்கி விட்டு வைக்க இடம் இல்லாததால் வேறு வீடு பார்க்கிறார்.:-)
    காதலர் தின கரடி பொம்மையை கண் கலங்காமல் பார்த்திதது கொள்ளவேண்டுமாம்.:-) நண்பர்கள் அறிவுரை வேறு.
    தாலி , குங்குமம் போன்றவை மூட நம்பிக்கைகள் . கரடி , குரங்கு பொம்மை நம்பிக்கைகள் அறிவுசார்ந்தவைய?
    நம்மை கடங்காரர்களாக ஒரு கூட்டமே அலைகிறது போலும். குருமூர்ததி சொல்வது சரிதான்!

    இதை விட பெரிய கொடுமை சமூகம் கெடுவது. கட்டுரையாளர் பள்ளி ச்சிறுவர்களை ப்பற்றி சொல்வது கவலை அளிக்கும் விடயமே.
    என் கேள்வி: பெற்றோர் இந்நிலையை எப்படி எதிர்கொள்கிறார்கள்?
    கண்டும் காணாதது போலவா இருக்கிறார்கள்?
    நீங்கள் HR பற்றி சொல்வது கவலை தரும் விஶயம்.இத்தநை நாட்களாக இது பற்றி கவனிக்கவில்லை.
    Saravanan

  13. நேற்று எகனாமிக் டைம்ஸில்,

    https://economictimes.indiatimes.com/Features/Oneness-of-love-India-apt-place-for-Krishna-St-Valentine/articleshow/5570694.cms?curpg=1

    இப்படி ஒரு கண்றாவியைப் படித்தேன் –

    What better place than India, then, for a temple dedicated to Lord Krishna and St Valentine, a sangam and symbiosis of ancient and modern love?

    This temple coming up in Tamil Nadu symbolises an epiphany, a revelation of India’s quintessential existance on twin planes. The people who frequent the discourses of modern day seers and saints to explore the spiritual aspect of love are the same ones who also scoop up a dozen red roses or a diamond studded bauble for their beloveds.

    இது உண்மையா??

    எங்கே, யார் இப்படி கோயில் கட்ட திட்டமிட்டுள்ளார்கள் என்பது பற்றி விசாரித்து இது பற்றி யாராவது மேலும் தகவல் தர முடியுமா?

    கிருஷ்ணனைப் பற்றியோ, வேலண்டைன் பற்றியோ, காதலைப் பற்றியோ எதுவுமே புரியாமல் கிளம்பியிருக்கும் இந்த crack ஆசாமிகளைப் பற்றி இந்தப் பத்திரிகையாளர் புல்லரிப்புடன் வேறு எழுதுகிறார். கொடுமை!

  14. சரவணன் அவர்களே

    //
    மற்றொருவர் வீட்டுயர கரடி பொம்மை வாங்கி விட்டு வைக்க இடம் இல்லாததால் வேறு வீடு பார்க்கிறார்.:-)
    காதலர் தின கரடி பொம்மையை கண் கலங்காமல் பார்த்திதது கொள்ளவேண்டுமாம்.:-) நண்பர்கள் அறிவுரை வேறு.
    //
    உங்கள் பதிலை படித்து விழுந்து விழுந்து சிரித்தேன் – அலுவலகத்தில் எல்லோரும் ஒரு மாதிரியாக என்னை பார்கிறார்கள்

    //
    என் கேள்வி: பெற்றோர் இந்நிலையை எப்படி எதிர்கொள்கிறார்கள்?
    கண்டும் காணாதது போலவா இருக்கிறார்கள்?
    //

    நான் நேரில் கண்டது – நொந்து நூலாய் போய் உள்ளனர் – தலை பின்னிக்கோ என்றால் – அது என் தலை என்கிறார்கள். ஜீன்ஸ் தேவையா என்றால் – ஏன் கூடாது என்று கேள்வி – அதென்னமோ ஆண்கள் போட்டுக்கொள்ளும் அனைத்தையும் தாமும் அணிய வேண்டிய நிர்பந்தம் – நான் எந்த ஆணும் skirt போடணும் என்று துடியாய் துடித்ததை பார்த்ததில்லை
    எல்லா பெண்களும் இப்படி இல்லை – பாரம் பரியத்தை அறிந்து அதை காப்பதில் கண்ணும் கருத்துமாய் உள்ளவர்கள் பலர் உள்ளனர்

  15. கொடுமை ஜடாயு அவர்களே

    பெரிய கொடுமை என்ன வென்றால் இந்த கோவில் நரசிம்ம ஸ்தலமான சோளிங்கரில் வர உள்ளதாம் – google செய்து பார்த்ததில் தெரிந்தது

    https://www.hindu-blog.com/2010/02/valentines-day-hindu-god-sri-krishna.ஹ்த்ம்ல்

    A unique Hindu temple of Sri Krishna dedicated to the concept of Valentine’s Day will be consecrated in April 2010 at Sholingur in Vellore District in Tamil Nadu (140 km from Chennai). The unique temple which tries to amalgamate the ideas of Saint Valentine and Hindu God Krishna – both synonymous with love – is being built by R. Jaganaath, a former food and beverages manager and the author of a book on cocktails

  16. update:
    —————-
    நன்றி: ஹிந்துஸ்தான் சமாசார்

    வேலூர் மாவட்டம் சோளிங்கர் அருகே உள்ள கொண்டாபுரம் கிராமத்தில் ஜெகந்நாதன் என்பவர் 12 அடி உயரத்தில் 1.5 லக்ஷம் செலவில் சின்னஞ்சிறு கிருஷ்ணன் கோவில் ஒன்று கட்டுகிறார். கோவிலுக்கு அவர் சூட்டிய பெயர் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கோபிகைகள், ராதை, ஆண்டாள் என்று பெண்களுக்கு பிடித்த கடவுள் கிருஷ்ணர் என்பதால் வாலண்டைன் கிருஷ்ணர் கோவில் என்று தான் பெயர் சூட்டியதை ஹிந்து முன்னணியினர் கடுமையாக எதிர்த்தார்கள். இந்தப் பெயரை கைவிடாவிட்டால் போராட்டம் நடத்தப் போவதாக அந்த அமைப்பின் மாநிலச் செயலாளர் திரு. வெள்ளையன் அறிவித்தார். இதை அடுத்து அந்தக் கோவிலின் பெயரை “பிருந்தாவன துளசி ஸ்ரீ கிருஷ்ணன் கோவில்” என்று பெயர் மாற்றுவதாக திரு ஜெகன்னாதன் அறிவித்துள்ளார்.
    —————

  17. கோவிலைக் கட்ட முன்வந்தது நல்ல விஷயம் தான். ஆனால் வேலண்டைன் கிருஷ்ணர் என்று பெயர் வைத்தது தவறு. இந்து முன்னணிக் காரர்கள் ரொம்பவே alert ஆக இருக்கிறார்கள் என்று தெரிகிறது.

    பிருந்தாவன துளசி ஸ்ரீகிருஷ்ணன் நன்றாகத் தான் இருக்கு.. ஆனால் அதற்கு பதிலாக “காதல் கண்ணன் ஆலயம்” (Premika Krishna temple) என்கிற மாதிரி பெயர் வைக்கலாமே ! காதல் என்ற themeஐயும் அப்படியே வைத்திருந்து இளைஞர்களைக் கவர்வது மாதிரியும் இருக்கும்.

    காமன் பண்டிகையை சிறப்பான விழாவாகவும் இந்தக் கோவிலில் கொண்டாட ஏற்பாடு செய்யலாம்!

  18. திரு ஜடாயு அவர்களே
    செய்தி க்கு நன்றி. ஆனால் ஆகமசாத்த்ிரம் மற்றும் ஸில்பஸாத்திரம் தான் இதற்கெல்லாம் அதாரிடீ.
    நாமாக ஒரு வடிவத்தை உருவாக்கஇயலாது -கூடவும் கூடாது எனக்கு தெரிந்தவரை.
    ஆனால் பிரேமிகா சம்பிரதாயம் என்று ஒன்று உள்ளதாக கேள்விப்பட்டேன்.விவரம் முழுக்க தெரியவில்லை. அதுவும் வெறும் காதல்பிரேமையில்லை. இறைவன் மேல் கொண்ட உயர்ந்த அன்பு நிலை.தவறான நபர்கள் கையில் அந்த கருதத்ு படாத பாடு படும்.
    நல்ல வேளை வேலண்டைன் கிருஷ்ணர் பெயர் மாற்ற ஒப்புக்கொண்டார்களே..க்ரிகெட் விநாயகர் என்று எப்போதோ கேள்விப்பட்டது.
    இளைஞர்களை கவர இப்படியான முயற்சிகள்தேவையில்லை என்பது என் தாழ்மையான கருத்து .
    இருக்கும் செல்வங்களை அவர்களிடம் கொண்டு சென்றாலே போதும்.
    ஆழ்வார்கள், நாயன்மார்கள் , ராமகிரிஷ்னர், விவேகானந்தர் , வள்ளலார், திருமூலர் இப்படி ப்பல பெரியோர்கள்.
    திரு சாரங் அவர்களே
    எனக்கும் அவர் சொன்ன போது சிரிப்புத்தான் வந்தது. வீட்டில்கடவுள் உருவங்களுக்கு கொடுக்காத மரியாதை கரடி பொம்மைகளுக்கு. ஆனால் அவர்களை போன்றவர்கள் பாவம். எப்பேர்ப்பட்ட கலாசாரத்த்ின் மைந்தர்கள் நாம் என்பதை உணராமல் என்ன வாழ்க்கையோ.
    “நான் நேரில் கண்டது – நொந்து நூலாய் போய் உள்ளனர் ”
    பெற்றோர் தங்கள் முகத்தை இழந்து விட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.
    குமுதம் ஜோதிடம் படித்தால் பலர் இப்படித்தான் புலம்புகிறார்கள். பையன், பெண், நடந்து கொள்வது பிடிக்கவிலை என்று.
    திரு AMR சொல்வத் போல் அவர்களை சின்ன வயதிலேயே நல்ல விஷயங்கள் சொல்லி வளர்க்க வேண்டும். ஆயினும் பெற்றோர்கள் நிலை பாவம் தான். சுற்றியுள்ள உலகம் நாம் பண்பாட்டிற்கு எதிராக இருக்கும் போது நாம் அலர்ட் ஆக இருக்க வேண்டிிுள்ளது.

  19. அன்புள்ள ஜடாயு ஐயா அவர்களுக்கு ,

    அருமையான கட்டுரை..எத்தனை சொன்னாலும் இந்த மரமண்டைகளுக்கு ஏறாது ..எனக்கு தெரியும் நல்ல குடும்பத்து சில பெண்கள்/சில ஆண்களை பார்த்து இருக்கிறேன். இத்தனை நாள் பெற்று வளர்த்த அப்பா அம்மாவை விட்டு விட்டு எவனையோ/எவளையோ இழுத்துக்கொண்டு காதல் கீதல் ,வாழ்கையை தானே தீர்மானிக்கும் உரிமை என்று பெயரில் ஆயிரக்கணக்கில் சம்பாதிக்கும் திமிரில் விட்டு விட்டு ஓடிவிட்டார்கள்….

    என் கண் முன்னே ரொம்ப நாளாக பார்த்து வந்த பள்ளியில் படிக்கும் பெண் பிப்ரவரி-14 அன்று ஒரு பொறுக்கியோடு எங்கள் தெருவில் சேர்ந்து போய் கொண்டு இருந்தாள் ,..அந்த பெண்ணை விரல்விட்டு எண்ணக்கூடிய தடவை தெருவில் பார்த்து இருக்கிறேன் அவ்வளவு தான்,நல்ல குடும்பத்து பெண் என்பதை விட வேறு எதுவும் தெரியாது ..எனக்கு தனிஆளாக என்ன செய்வது என்றே தெரியவில்லை ,. இப்பிடி எல்லாம் மனதாலும் உடலாலும் எமாற்றுபவனோடு இந்த முட்டாள் பெண் சுற்றி கொண்டு இருந்ததை பெற்றோர்கள் கவனிக்கமாட்டர்களா ? என்ன தான் செய்வார்கள் ?அப்பறம் சில காலம் கழித்து யாரோ ஒரு கேணையனுக்கு கட்டி வைத்து விடுவார்கள் ….

    கூட்டம் கூட்டமாக விலங்குகள் போல் வாழும் வெள்ளைக்காரனை பார்த்து இப்படி ஏமாந்து போகிறார்கள்..சில அடிப்படை விசயங்களை கூட கற்றுத்தராத பெற்றோர்கள் கடமை தவறியவர்களே. வெளிப்புற அழக்கும்,சதைக்கும் அலையும் ஆண் மிருகங்களிடம் ,முட்டாள்தனமான பேச்சுகளுக்கும்.பொருட்களுக்கும் ஏமாந்து போகிறார்கள் சில பெண்கள்..

    இந்த கருமாந்தரம் எப்பிடி அடிப்படை மனித உறவுகளை ,குடும்ப அமைப்பை சிதறடிக்கிறது,கல்யாணம் என்ற புனித கோட்பாடை கேலிகூத்தாகுகிறது என்று பாருங்கள்…
    பாரதத்தில் மட்டும் ஏன் இப்படி இருக்க வேண்டும் ,அப்பிடி இருக்க வேண்டும் ,குடும்பம் ,கல்யாணம்,சமுகம் என்று ஏன் வைத்தார்கள் ? ஒன்னும் புரியவில்லை ..பதில் கிடைத்தால் நன்றாக இருக்கும் ….தயவு செய்து தமிழ் ஹிந்து தளம் இந்த கருத்துகளையும் ,கேள்விகளையும் மறைத்து விட வேண்டாம் …ராமரை ,சீதையை போல இருப்பவர்கள் என்னை மன்னிக்கட்டும் ..நன்றி ..ஜெய் ஹனுமான்..

    (edited and published)

  20. //மற்றொருவர் வீட்டுயர கரடி பொம்மை வாங்கி விட்டு வைக்க இடம் இல்லாததால் வேறு வீடு பார்க்கிறார்.:-)
    காதலர் தின கரடி பொம்மையை கண் கலங்காமல் பார்த்திதது கொள்ளவேண்டுமாம்.:-) நண்பர்கள் அறிவுரை வேறு.
    //
    கலக்கல் தமாசு !! திரு சரவணன் வாழ்க ! வாழ்க !
    இதைவிட அருமையாக நம்முடைய முட்டாள்தனங்களை பரிகாசத்தோடு எடுத்து சொல்லமுடியாது …நன்றி
    திரு ஜடாயு ,தமிழ் ஹிந்துவும் நன்றி …தொடரட்டும் உங்கள் பணி ..பாரத் மாதா கி ஜெய் !!!

  21. sarang is completely right. The HR function is now fully christianised. Many owners have not realised this. They are not even aware of this. These HR people use thier position to give job for people who are recommended by the evangelist fathers.

    Names will be arunachalam, venkatesan, sankar etc but full name will be different. The HR function, Social welfare function is all christianised fully.

    many company owners are not recognising this. They have stopped the friday pooja also.

    regards

  22. Wealth is lost nothing is lost
    Health is lost something is lost
    Character is lost everything is lost.

    நல்ல பள்ளிக்கூடத்தைத் தேடி அலைந்து அதிக நன்கொடை கொடுத்து தனது மகனையும் மகளையும் சேர்த்துவிட்டால் போதும் அவர்கள் நல்லவர்களாக வளர்ந்திடுவார்கள் என நினைக்கின்றனர் பெற்றோர்கள். நமது கலாச்சாரங்களை பண்பாடுகளை கற்றுத்தராத பள்ளியில் சேர்த்து என்ன பயன்? குடும்பத்தில் நல்ல பண்புகளை கடைபிடிக்கவில்லை என்றால் எந்தக் கழுதையின் பின்னும் பெற்ற மகள் ஓடியபின்பு புலம்புவதில் பயனில்லை. நல்லொழுக்கத்தை வளர்த்திடுவது ஒன்றே இதற்கு எல்லாம் தீர்வாகும்.

    வித்யா நிதி

  23. //
    நல்லொழுக்கத்தை வளர்த்திடுவது ஒன்றே இதற்கு எல்லாம் தீர்வாகும்.
    //
    இதையும் தாண்டி அவர்களை குலைத்திடவே இன்றைய கல்வி முறையும், பொழுது போக்கு அம்சங்களும் அரசாங்கத்தின் பார்வையும் இருக்கே

    இப்போட்து பிள்ளைகள் முதலில் கற்பது Black Sheep (நாளை எட்டப்பன் போன்றோர் தான் இவர்களுக்கு முன்னோடி ஆவார்கள் ) தான் அறம் செய்ய விரும்பு அல்ல

  24. மிக அருமையான கட்டுரை, நன்றி Jadayu சார். இந்த விஷயத்தை நான் லேசா ஒரு ப்ளாக் பின்னுட்டத்தில் சொல்லிட்டு எனக்கு அறிவு கம்மி, அன்பு இல்லாதவன் அப்படின்னு பேரு கிடைச்சது 🙂

  25. ஜடாயு அவர்களே

    நாம் ஹிந்துக்கள் என்னென்ன செய்யாமல் ஒதுக்கலாம் (valentine’s day, contributing to world vision, casteism, வரம்பு மீறிய உறவுகள்), இப்படிபட்டவையின் உண்மை நிலை என்ன,
    ஹிந்துக்கள் என்னென்ன செய்தால் நன்றாக இருக்கும்(கோவிலுக்கு செல்வது, சுவிசெஷர்களிடம் விழிப்புடன் இருப்பது … ) என்று தொகுத்து ஒரு கட்டுரை தொடரில் வழங்கினால் பயன் உள்ளதாக இருக்கும் என நினைக்கிறேன்

    இங்கே இந்த விஷயங்கள் எல்லாம் விவாதிக்க படுகின்றன – ரத்தின சுருக்கமாக ஒரே கட்டுரை வடிவில் இருந்தால் refer பண்ணுவதற்கும், infer பண்ணுவதற்கும் எளிதாக இருக்கும்

  26. அன்புள்ள தமிழ் ஹிந்துவிற்கு
    ராஜேஷ் எழுதுவது என் கருத்துக்களை வெளி இட்டதற்கு நன்றி .. i don’t know know why you edited my comments,,are my words that much un -parlimentary? ,i wanted to express my anger in a strong way and with strong words ..this is a forum i respect a lot ….could you please reconsider my views and shall i get reply why was my comments got edited.
    please don’t dodge or bluff my questions ..if you could give me a true answer i will be little satisfied….ஜெய் ஹனுமான் ….

  27. // இங்கே இந்த விஷயங்கள் எல்லாம் விவாதிக்க படுகின்றன – ரத்தின சுருக்கமாக ஒரே கட்டுரை வடிவில் இருந்தால் refer பண்ணுவதற்கும், infer பண்ணுவதற்கும் எளிதாக இருக்கும் //

    அன்புள்ள சாரங்,

    உங்கள் உற்சாகம் மகிழ்ச்சியளிக்கிறது.. ஆனால், அது அவ்வளவு எளிமையான விஷயம் அல்ல, மேலும் அவசியமும் இல்லை என்று நினைக்கிறேன்.

    இந்துக்களுக்கு சமூக, அரசியல் ரீதியான விழிப்புணர்வை உருவாக்க வேண்டியது நம் தலையாய பணி. இதைப் பல வழிகளில் செய்யலாம் – களப்பணிகள், மன்றங்கள், சமூக சேவை, சமூக ஒருங்கிணைப்பு, அறிவியக்கம் இப்படியாக.. இந்தத் தளம் தமிழில் ஒரு இந்து அறிவியக்கத்தைத் தொடர்ந்து வளர்த்தெடுக்க வேண்டும், அந்தத் திசையில் தான் அது சென்று கொண்டிருக்கிறது. நல்ல விஷயம்..

    ஒரு சில விஷயங்களில் வேண்டுமானால் Dos and donts போட்டு விளக்கி விடலாம்.. ஆனால் நம்மைச் சூழ்ந்திருக்கும் பன்முகப் பட்ட பிரசினைகளை (சாதியம், மதமாற்றம், பயங்கரவாதம், பிரிவினைவாதம், உரிமை பறிப்புக்கள்… ) அவற்றின் சிக்கல்களை நாம் முழுமையாகப் புரிந்து கொள்ள அந்த அணுகுமுறை மட்டுமே போதாது.. அதோடு, சித்தாந்த ரீதியான விஷயங்களை கட்டளைகளாக அல்ல, ஒரு திசையை நோக்கி நகரும் விவாதங்களாகவே முன்வைப்பது தான் ஒரு அறிவியக்கத்தின் பாணி. அவை உருத்திரண்டு பின்னர் கருத்துக்களாக வலுப்பெறும்.

    இந்தக் கருத்துக்களைத் தொடர்ந்து தொகுத்து அவற்றுக்கு வடிவம் தந்து மக்களிடையே எடுத்துச் செல்ல வேண்டும்.. தமிழ்ஹிந்துவின் புத்தக வெளியீடு அந்த வகையில் ஒரு சிறந்த முயற்சி. அது இன்னும் அதிகரிக்க வேண்டும்.

  28. மர் ஜடாயு அவர்களே நான் சின்கப்பூர் வேலை பார்க்கிறேன் முக்தி என்றல் என்ன சிவா லிங்க அடையாளத்தின் மீனிங் என்ன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *