நரசிங்கம் – மதுரை யானைமலைக்கு வந்த ஆபத்து

பூமிப் பந்தின்மீது இயற்கை எழுதும் அழகான வரிகள்தான் ஆறுகளாகவும், மலைகளாகவும், மலைத்தொடர்களாகவும், கானகங்களாகவும் காணக் கிடைப்பவை.

ஒருவழியாக, ஆறுகளில் கழிவுநீரைச்  கொண்டுசேர்த்து  மாசுபடுத்தி  சாக்கடை ஆக்கிவிட்டோம். ஆற்று மணலை அளவில்லாமல் வாரி வாரி படுகைகளே  இல்லாமல் செய்துவிட்டோம்.

“நான் மலைடாஆ..” என்று திரைப்படங்களில் இன்னமும் நமது ஹீரோக்கள் டைட் க்ளோசப்பில் சவுண்ட் விட்டுக்கொண்டிருக்க, உண்மையில் மலைகள் எல்லாம் சர்வசாதாரணமாக, சாலைகள் அமைக்கவும், வீடுகளுக்காகவும் தகர்த்து உடைக்கப் பட்டு, வலுவான மலைகள் அனைத்தும் ஜல்லிகளாகவும், கற்களாகவும் உருமாற்றம் அடைந்து தாருடன் இணைந்து காணாமல் போய்க்கொண்டிருக்கின்றன.

பாளம் பாளமாய் கற்கள் உடைக்கப்பட்டு நம்முடைய நிலங்களின் எல்லைக் கற்களாகவும், அரையடிக் கற்களாக ரியல் எஸ்டேட்காரர்கள் கையிலும் போய்க் கொண்டிருக்கின்றன.

பொதுவாக குன்றிருக்கும் இடமெல்லாம் தமிழ்க் கடவுள் குமரன் இருப்பான் என்பது இந்துக்களின் நம்பிக்கை. அதுபோலவே நம் முன்னோர் குமரனின் கோயிலோ, அல்லது சமய நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாய் சைவ மன்னனின் ஆட்சியில் வைணவக் கோயில்களோ அல்லது வைணவ மன்னனின் ஆட்சியில் சைவக் கோயில்களோ ஏற்படுத்தி வைத்தனர்.

அவர்களுக்கு இந்தக் கருங்கல்லை வைத்துக்கொண்டு எப்படியெல்லாம் லாபம் ஈட்டமுடியும் என்று தெரிந்திருக்கவில்லை. எனவே கல்லிலே கலைவண்ணம் கண்டார்கள். சுயலாபத்திற்காக, கோயில்களைத் தாங்கி நிற்கும் மலைகளைக் கூட அவர்களின் சந்ததியினர் உடைக்கத் தயங்க மாட்டார்கள் என்பதை பாவம், அவர்கள் அப்பொழுது அறிந்திருக்கவில்லை. எனவே அழகான குடைவரைக் கோயில்களில் தொடங்கி, சிற்பங்களையும், ஓவியங்களையும் மலைகளில் செதுக்கிவிட்டுப் போய்விட்டார்கள்.

கிட்டத்தட்ட எந்தவிதப் பாரம்பரியமும் அற்ற அமெரிக்கர்களே அவர்களது ”சரித்திர”ப் புகழ் வாய்ந்த இடங்களை, பேணிப் பாதுகாக்கும்போது, கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே தோன்றிய மூத்த குடிகள் எனக் கூறிக்கொள்ளும் தமிழினமான நாம் நமது பாரம்பரிய வரலாற்றுச் சின்னங்கள் அமைந்திருக்கும் கோயில்களையும், மலைகளையும் சுயலாபத்திற்காக அழித்துக் கொண்டிருக்கிறோம்.

yanaimalai-4

சமீபத்தில் யானைமலையைப் பற்றி வந்த செய்தியின் ஒரு பகுதி இது…

ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பே, இயற்கையாக ஒற்றைக் கல்லால் யானைமலை உருவானது. பெரிய யானை படுத்திருப்பதைப் போன்ற தோற்றத்தை கொண்டது. யானையின் தலை போன்ற முகப்புப் பகுதியை, மின்ஒளி பாய்ச்சி, குடைந்து, அதன் கூரையினுள்ளே சிற்பங்களை அமைத்தால், நல்லதொரு சுற்றுலாத் தலமாகும். மலையைக் குடையும் போது, ஒரு கோடி கனமீட்டர் அளவு சதுர வடிவக் கருங்கற்கள் கிடைக்கும். மேலும், பாறையிலிருந்து வெளிவரும் தூசியும் அதிகளவில் இருக்காது. இந்த கருங்கல்லைக் கொண்டு நூறு கட்டடங்கள் கட்டலாம். “எல் அண்ட் டி’ நிறுவனம், மலையை குடையும் வேலையைச் செய்யும்.

இதன் உட்பொருள், ஏற்கனவே இதைப் பற்றி ‘வல்லுநர்கள்'(!)ஆராய்ந்து நல்ல வளம் கொழிக்கும் வியாபாரம் என்பதை அறிந்த பின்னரே இதனை தமிழக அரசு கொண்டுவந்துள்ளது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். 

வரலாறு என்பது ஒரு வாழும் முழுமை. அதன் ஏதேனும் ஓர் அங்கம் நீக்கப்பட்டால் அது ஓர் உயிரற்ற பொருளே என்பது பிரிட்டிஷ் வரலாற்றாளன் பிரடெரிக் ஹாரிசனின் கருத்து.

இந்தச் சொல்லாடல் மேற்சொன்ன யானைமலைக்கும் மிகக் கச்சிதமாகப் பொருந்தும். யானை ஒன்று அமர்ந்த நிலையில் இருப்பதுபோல இயற்கையிலேயே அமைந்த இந்த மலை, பல அடுக்குப் பாறைகளையும், இரு குடைவரைக் கோயில்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. இதுதவிர இதிலுள்ள குகைகளில் இலங்கைக் குகைகளில் காணப்படும் ப்ரஹ்மி எழுத்துகளையும் காணலாம். பழங்கால மதுரையில் ஜைன மதம் இந்து மதத்துடன் இணைந்து வாழ்ந்திருந்ததற்கான எச்சங்கள் இவை.

yanaimalai-2மஹாவீரர், பர்சவந்தர், இயக்கி, மற்றும் அறுவரின் சிற்பங்கள் இந்த யானைமலையில் இருப்பது ஜைன மதம் மதுரையில் வளர்ச்சி அடைந்து இருந்ததற்கான வரலாற்றுச் சான்றாக விளங்குகிறது.

இதைச் சிதைக்கத் திட்டமிட்டிருப்பவர்களுக்கு, கிட்டத்தட்ட ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஒரு வரலாற்றுச் சின்னத்தைச் சிதைக்கிறோம் என்கிற உணர்வோ, ஆயிரம் ஆண்டுகளாக அதன் வடிவத்திற்காக மட்டுமே ஒரே பெயரில் வழங்கப்பட்டு வரும் ஒரு மலைக்கு, அதன் வடிவத்தைச் சிதைப்பதால் ஏற்படப்போகும் சரித்திரக் குழப்பம் குறித்தோ எந்தவிதக் கவலையுமின்றி, கிடைக்கப் போகும் லாபங்களை மட்டுமே மனதில்கொண்டு திட்டங்கள் தீட்டியுள்ளனர் என்பது புலனாகிறது.

சுரண்டலும், ஊழலுமே நமது மாநிலத்தின் திட்டங்களைத் திட்டமிடுகின்றன என்பது எவ்வளவு மோசமான விஷயம்.

இதனை அறிந்த பொதுமக்களும், அரசுசாரா தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் தொடர்ந்த வழக்கினாலும், சாலை மறியல் போராட்டங்களினாலும் யானைமலையின் வடிவத்தை மாற்றக் கூடாதென்றும், அது இப்போதிருக்கும் வடிவிலேயே தொடர வேண்டும் எனவும், அதிலிருந்து சோதனைக்குக் கூட கற்கள் எடுக்கப்படக் கூடாது எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்பது கொஞ்சம் தற்காலிக ஆறுதல் அளிக்கிறது. இது எவ்வளவு நாள்களுக்குத் தாங்கும், அல்லது இதைவிடச் சிறந்த வேறு எந்த இடம் அடுத்ததாக அல்லது அதற்குப் பதிலாகக் குறிவைக்கப் படும் என்பது அனுமானிக்க இயலாதது.

திராவிடக் கட்சிகளின் ஆட்சியில்தான் தமிழகக் கோயில்கள் கொஞ்சம் கொஞ்சமாக திட்டமிட்டு அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

மிக நல்ல உதாரணம்– தமிழகக் கோயில்களில் உள்ள கற்சிலைகளின்மீது, சிலைகளைப் பற்றிய எந்த அறிவும் அற்றவர்களால் நுண்மணல் பீய்ச்சி அடிக்கப்பட்டு (Sand Blasting) சிலைகள் மூளியாக்கப்படுகின்றன.

sandblasted-vyagrapureesvara-temple-of-cholas-near-chennai

 

நல்ல கலைநயம் கொண்ட சிற்பங்கள் ”காண்ட்ராக்ட்” மூலம் கிடைக்கப்போகும் சில கோடிகளுக்காக சிதைக்கப் படுகின்றன.

மேலும் கற்சிலைகளுக்கு ”ஆயில் பெயிண்டிங்” அடிப்பதாகக் கூறி நமது சிலைகளின் இயற்கையான அழகைப் பறித்து அவர்களின் மனம் போனபடிக்கு சிலைகளுக்கு வர்ண உடையணிவித்து அவர்களது தரங்கெட்ட ரசனையை காட்டிக் கொண்டனர். இதன் மூலம் சிலையின் உண்மையான உருவம் மறைக்கப்பட்டு பெயிண்ட் அடிப்பவரின் ரசனையை வெளிநாட்டவரும், நம்நாட்டவரும் பார்க்க நேரிடுகிறது. மீண்டும் சிலையினை இயற்கையான நிலைக்குக் கொண்டுவரவேண்டுமெனில் மீண்டும் நுண்மணல் பீய்ச்சி சுத்தம் செய்யப்பட வேண்டும். மீண்டும் சில மூளியாக்கப்படும். எவ்வளவு மோசமான சந்ததியினர் நாம்?

இஸ்லாமியப் படையெடுப்புகளில் நடந்த இந்துமதக் கோயில்களின் அழிப்பும், ஒழிப்பும் இன்று நவீன பகுத்தறிவுவாதிகளால் அதைவிடத் திறமையாகச் செய்யப்படுகிறது. அன்று எதிரி வெளியிலிருந்தான்; நாம் அனைவரும் ஒற்றுமையாய் இருந்தோம்; எதிர்த்தோம். இன்று இந்துமத நாத்திகம் பேசுபவர்களின் அரசு நடைபெறும்போது, அவர்களாலேயே கோயில்கள் நிர்வகிக்கப்படும்போது ‘சாத்திரம் ஏதுக்கடி’ நிலைதான். 

யானைமலை, மதுரையிலிருந்து 10 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

மேலூர் போகும்வழியில் இருக்கும் ஒத்தக்கடையில் இறங்கி நடந்தும் செல்லலாம், அல்லது மினிபஸ் அல்லது நகரப் பேருந்துகளிலும் செல்லலாம்.

narasinga-perumal-temple

 

நரசிங்கம் என்றழைக்கப்படும் ஊரின் உள்ளே யோக நரசிம்மர் கோயிலின் முகப்பில் அழகான குளம் அமைந்துள்ளது.

மதுரை ஒத்தக்கடை – நரசிங்கம் – யோகநரசிங்கப் பெருமாள் கோயிலின் முக்கியத்துவம், அது ஒரு குடைவரைக் கோயில் என்பதே.. மலையைக் குடைந்து அமைக்கப்பட்ட பழமையான கோயிலாகும்.

பேயரசு செய்தால் பிணம்தின்னும் சாத்திரங்கள் என்பதுதான் எவ்வளவு உண்மை?

யானைமலை பிராமி எழுத்துக்கள் குறித்த ஒரு சிறிய ஆவணப்படம்

https://www.youtube.com/watch?v=YcjBgJfD1TQ

நன்றி: த ஹிந்து மற்றும் தினமலர்.

11 Replies to “நரசிங்கம் – மதுரை யானைமலைக்கு வந்த ஆபத்து”

  1. இரண்டாண்டுக்கு முன் மதுரையில் இருந்த பொது யானைமலைக்குச் சென்றதுண்டு, நத்தம் செல்லும் சாலையிலிருந்து சில கி.மீ தூரத்திலும் யானைமலையை அடையலாம். பசுமையான நிலங்கள், ரம்யமான தெப்பம், ஒரு லட்சமி கோவிலும் உள்ளது. ஆனால் இன்று விளைநிலங்களை எல்லாம் வீட்டுமனைகளாக பிளாட் போடப்பட்டு அரசியல் அதிகார மையங்கள் லாபம் பார்க்கிறது. “பேயரசு செய்தால் பிணம்தின்னும் சாத்திரங்கள் என்பதுதான் எவ்வளவு உண்மை?” சரிதான்

  2. விழிப்புணர்வூட்டும் ஒரு தேவையான கட்டுரை. யானை மலை மட்டும் அல்ல தமிழ் நாடு முழுவதுமே நம் பாரம்பரியமிக்கச் செல்வங்களான கோவில்கள், ஓவியங்கள், குகைகள், கல்வெட்டுக்கள், அரிய விலங்குகள், காடுகள், நதிகள் என்று தொடர்ந்து அழிக்கப் பட்டே வருகின்றன. இது குறித்து நான் ஜெயமோகன் அவர்களுக்கு எழுதிய ஒரு கடிதத்தையும் அதற்கான அவரது பதிலையும் எதிர்வினைகளையும் இந்த இணைப்பில் சிற்பக் கலைக்கு ஒரு சமாதி என்ற பதிவில் https://www.jeyamohan.in/?p=6582 காணலாம்

    ஆம் வளர்ச்சி என்ற பெயரில் ஊழலுக்கு வாய்ப்பாக இருக்கும் வளங்களை அழித்து நம் பாரம்பரியச் செல்வங்களுக்கு நம் அரசியல்வாதிகள் சமாதி கட்டுகிறார்கள். நம் நதிகள் முழுவதும் மண் களவாடப் பெற்று இன்று சாக்கடைகளாக இருக்கின்றன. புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்த அனைத்து குன்றுகளும் இன்று காணாமல் போய் விட்டன. இப்பொழுது மிச்சம் மீதம் இருக்கும் குன்றுகளின் மீது கண் வைத்து அவற்றை எப்படி திருடி சொத்து சேர்க்கலாம் என்று திட்டமிடுகிறார்கள் இந்த மலை முழுங்கி மகாதேவர்கள்.

    இந்த அழகர்கோவில் படங்களைப் பாருங்கள்.
    https://picasaweb.google.com/strajan123/AzhagarKovil#5202993458744648082
    https://picasaweb.google.com/strajan123/AzhagarKovil#5202993471629549986
    https://picasaweb.google.com/strajan123/AzhagarKovil#5202993475924517298
    https://picasaweb.google.com/strajan123/AzhagarKovil#5202993716442686322
    https://picasaweb.google.com/strajan123/AzhagarKovil#5202993776572228578
    https://picasaweb.google.com/strajan123/AzhagarKovil#5202993780867195890
    https://picasaweb.google.com/strajan123/AzhagarKovil#5202993798047065106
    https://picasaweb.google.com/strajan123/AzhagarKovil#5202993853881640082

    மூளியாகிப் போன சிற்பங்களைப் பாருங்கள். எந்த நொடியிலும் இடிந்து விழுந்து விடப் போகும் மண்டபங்களைப் பாருங்கள். குப்பைகளும், அசிங்கங்களும் நிரப்பட்ட அந்த அழகிய கோபுர வாசலைப் பாருங்கள், அசிங்கள் குவிந்த அந்தக் தோரண வாயிலைப் பாருங்கள். இவை அனைத்தும் அதே ஆனை மலையின் அருகில் இருக்கும் அழகர் கோவிலில் காணப் படும் கண்றாவி நிலவரமே. இந்தச் சிற்பங்களையும் மண்டபங்களையும் இதே தமிழ் நாடு அரசின் தொல் பொருள் துறைதான் பராமரிக்கின்றது. இவற்றை மீட்டெடுத்துப் பாதுகாக்க இவர்களுக்கு அக்கறையில்லை. ஆனால் யானை மலையைக் குடைந்து புதிதாகச் சிற்பக் கலை வளர்க்கப் போகிறார்களாம், இவர்கள் நோக்கம் சிற்பக் கலை வளர்ப்பது அல்லது அதுதான் உண்மையான நோக்கமாக இருந்திருந்தால் இன்று தமிழ் நாடு முழுவதும் அழிந்து கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான பழங்காலச் சிற்பங்களைச் செலவு செய்து பாதுகாத்திருக்கலாம். இங்கு மலையைக் குடைந்தால் கிரானைட் கிடைக்கும் அதை உலக மார்க்கெட்ட்டில் பல பில்லியன் டாலர்களுக்கு விற்று காசு பார்க்கலாம் என்பது மட்டுமே இந்தத் திருடர்களின் ஒரே நோக்கம்.

    திருமலை நாயக்கரும் அவர் மனைவியும் எந்த நேரத்திலும் இடிந்து தரைமட்டமாகி விடப் போகும் மண்டபத்தின் உள்ளே நின்று கொண்டிருக்கிறார்கள். அவர்களாவது கற்சிலைகள் அருகே போகும் மனிதர்கள் ஆடுமாடுகளின் கதி என்ன? அதில் இன்னொரு படத்தையும் பாருங்கள், மிக அழகான ஒரு கோட்டையின் அழகான ஒரு தோரண வாயில் இன்று இருக்கும் நிலையைப் பாருங்கள். அங்கு ஆணுறை உட்பட அத்தனை அசிங்களும் கொட்டப் பட்டுக் கிடக்கின்றன.

    இப்படி நான் தமிழ் நாட்டுக்குள் கண்ட ஒவ்வொரு இடங்களிலும் இதே மாதிரியான காட்சிகள் ரத்தக் கண்ணீர் வரவைக்கின்றன. குப்பைகள், சாக்கடைகள், அசிங்கமான அரசியல்வாதிகளின் சிலைகள் இதுதான் இன்றைய தமிழ் நாடாக இருக்கிறது. இப்படி ஒவ்வொரு ஆக்கிரமப்பிற்கும் கோர்ட்டுக்குப் போக முடியுமா? யார் போவது? பல குன்றுகள் மொ த்தமாக அழிக்கப் பட்டு இன்று எருமை குளிக்கும் பாசி படர்ந்த அசிங்கக் குப்பை குளங்களாக மாறிக் கிடக்கின்றன. மலைகளைத் திருடி விட்டார்கள். இங்கு ஒரு மலை இருந்ததே எங்கே காணும் என்று கேட்டால் சிரிக்கிறார்கள்.

    ஆஸ்தேரிலியாவின் உலகப் புகழ் பெற்ற அயர்ஸ் குன்றிற்கு சற்றும் குறையாத கம்பீரமும் அழகும் தொன்மமும் கொண்ட மலைகள் இவை. நாகர்கோவில் பகுதிகளில் பல மலைகள் ஆக்ரமிக்கப் பட்டு சர்ச்சுகள் கட்டப் பட்டிருக்கின்றன. மலைகள் அரசாங்கத்துக்குச் சொந்தமானவை ஆனால் அவற்றை எப்படி தனியார் சர்ச்சுக்கள் ஒட்டுமொத்த மலைகளையும் சொந்தம் கொண்டாட முடிகிறது என்று தெரியவில்லை. ஒரு முழுக் குன்றை முழுக்கக் கரைத்து அந்த கற்களைக் கொண்டே கட்டப் பட்ட ஒரு பெரிய கிறிஸ்துவ டிரெயினிங் செண்ட்டரை மதுரைக்கருகே உள்ளது. அருகில் இருந்த குன்று காணாமல் போய் விட்டிருந்தது. பேராசிரியர் வாமிநாதன் புதுக்கோட்டைப் பகுதிகளில் இந்த மார்பிள் மாஃபியாக்களின் அட்டூழியம் பற்றி நிறையச் சொல்லியிருக்கிறார். குடுமியான்மலையின் புகழ் பெற்றக் இசைக் கல்வெட்டுக்களைப் பாதுகாப்பதற்கே பெரும் போராட்டம் நடத்த வேண்டி வந்தது.

    ஒரு புறம் செம்மொழி என்கிறோம், கடாரம் கொண்டான் என்கிறோம், இமயவரம்பன் என்கிறோம், கங்கை கொண்டான் என்கிறோம் மறுபுறம் அவர்கள் உருவாக்கிய அனைத்தையுமே அழித்துக் கொண்டிருக்கிறோம். தி ஜா ரா வின் நடந்தாய் வாழி காவேரி படிக்கும் பொழுது மனம் கசிந்து கண்ணீர் வருகிறது. எங்கோ பெரும் தவறு நடந்து போய் விட்டது அழிவின் விழிம்பிற்குச் சென்று விட்டோம் திரும்பும் வழியையும் தொலைத்து விட்டோம்.

    ஒவ்வொரு ஊரிலும் அல்லது மாவட்டத்திலும் புராதானச் செல்வங்களைப் பாதுகாக்கும் ஒரு தன்னார்வக் குழுவை அவசரமாக அமைக்க வேண்டுவது அவசியம். செம்மொழித் திருடர்களிடமிருந்து தமிழை மட்டும் அல்ல இந்தப் பாரம்பரியச் செல்வங்களையும் பாதுகாக்க வேண்டியிருக்கிறது.

    வேதனையுடன்
    ச.திருமலை

  3. திருமலை, ஜெயக்குமார் – இந்த விஷயம் பற்றி எழுதியிருப்பதற்கு மிக்க நன்றி.

    தமிழகத்தின் இயற்கை வளங்களும், கலைச் செல்வங்களும் ஒவ்வொரு நாளும் சூறையாடப் படுவது குறித்து இங்கு சரியாகப் பதிவு செய்யப் படுவது கூட இல்லை. இப்பேர்ப்பட்ட திட்டமிட்ட கலாசார ஒழிப்பைப் பற்றி மக்களுக்கு அறிவிக்க ஊடகங்களுக்கும் தோன்றுவதில்லை போலிருக்கிறது – அவையும் இதே சேற்றில் அமிழ்ந்திருக்கின்றன.

    மக்கள் போராட்டம் யானைமலையைக் காக்கும் என்று நம்புவோம். ஒவ்வொரு பாரம்பரிய ஊர்களிலும் கலைப் பாதுகாப்பு அமைப்புகள் உருவாக வேண்டும். தங்கள் ஊர்க் கோயில்களில் நடக்கும் கலைச் சிதைவுகளை எதிர்த்துக் குரல் கொடுக்க வேண்டும்.

    தமிழ்நாட்டில் தான் விதவிதமாக பழைய கலைச் சின்னங்களை திரித்து, அழித்து ஒழிக்கிறார்கள் – பழைய கோபுரங்களில் அவற்றின் ஒரிஜினல் உருவமே மறையுமாறு அடிக்க வரும் கலரில் பெயிண்டுகள் அடிப்பது, கல் தூண்களில் வார்னிஷ்/பெயிண்ட் அடிப்பது, சிற்பங்களை சுத்தப் படுத்துகிறோம் என்று sand blasting செய்வது, பழைய சுதை ஓவியங்களின் மீது வெள்ளை/பெயிண்ட் அடித்து அவற்றை முற்றாக ஒழிப்பது, சிற்பங்களே கண்ணுக்குத் தெரியாதபடி கிராதிகளும், கட்டைகளும் போட்டு மண்டபங்களை இருட்டடிப்பது….

    கோயில் என்றால் அது ஒரு ஆன்மிக நிலையம், கலைச் சின்னம் என்ற பிரக்ஞையே மக்களுக்குப் போய்விட்டது. அவர்களது சுயநல, பேராசைகளை grant செய்யும் கடவுள்கள் இருக்கும் இடம் தான் கோயில் என்ற எண்ணத்தை பத்திரிகைகளும், ‘ஆன்மிக” இதழ்களும் உண்டாக்கி வருகின்றன. ஜோதிடர்கள் சொல்லும் கோயிலுக்கு மட்டும் தான் கூட்டம் போகிறது.. அங்கும் குதிரைக்கு லாடம் அடித்தால் போல, நேரே சன்னிதிக்குப் போய் தேங்காய், பழம் வைத்து அர்ச்சனை செய்துவிட்டு அப்படியே அடுத்த ஜோதிடக் கோயில் – கண்ணெதிரே நிற்கும் கலையை ஒரு நிமிடமாவது நின்று ரசிக்க வேண்டும் என்ற உணர்வு கூட இல்லாதவர்களாக இன்றைய பாமரர்களை தமிழகத்தின் ஜோதிட ”ஆன்மிகம்” ஆக்கி வைத்திருக்கிறது. கொடுமை!

  4. sir intha yoga narasingha perumal koviloda innoru mukyathuvam. Nomination thaakalukku munnadiyum jeychathukku apuramum manja thundu thalivaroda perumagan, arasiyalil rasaayana maatrathai erpaduthiya azhagu magan saami kumbuttu mala mariyathaioda vanthu pona idamga. ivangalukku jeykavum,voteu vaangavum namma makkalum seri theivamum seri evvalavu thevaia irukku. aana ivangala porutha varaikkum saamium kidaiathu, kovilum kediathu. ellam pammathu velai….. apdithane???

  5. intha maadhiri ivanga seiara ella atoozhiathaium kelvi kekka koodathunnuthan italy ammai-gopalapuram ayaavum kootu project thaan yesu azhaikkiraar thitta seialaakamum, manitha neya makkal katchiyin deenai nilai naatungal projectum. ellarum maariachunna ottu mothama saaptutu sotthu sethuvechukkittu dubai mannar kanakka thani thamizhagam enru mannar aatchi murai amalukku varum.aana appo sharia sattam thaan amalukku irukkum. jeevanulla devanum irukkamudiathu, paavamulla aathuma kadalama uluthama ithallamum irukkamudiathu. enna perumal,sivan,chakkarathalwar,narasimhar intha saamingalukku pathila, gopura vaasal nuzhainthavudan 2 samaathi, bali peetam mudintha vudan 2 pura koondukkul pachhai paint adikkapattu oru jigina kodi parakkum. enna sotthu,evvalavu sotthu serthu enna pannuvaanga. anniyan padathulavara maari, panatha thinbaingala?

    inga innum onnu solren ketukunga. nammala innume rail palam,bus paalathula kooda safe a poga mudiaathu. By knowing the quality and thickness of the iron&steel rods used by the British which were acquired from us in India by them under their rule are now moving to the China, US, Bangaladesh, Tokyo for the construction and other weapon production in the name of Auction by Railways and Roadways Ministries. ippadi sorandi sorandi avanungalukku kuduthu namma thalela namae manna vaari potukuromnu teriadha arasiyalvaadhigal. avangala kuruttuthanama nambura makkal??? semmozhi maanaatukku adikkapadum kollai ithallam vida miga brammaandam. erkanave intha maadhiri solli kankaatchingara perula Kovil original nagai ellam suttutu, giltu nagaia vechavanunga than rendu kazhagangalum.

    innum onnu dindukkal mavattam perumal kovil patti maranthu irukka mattom. anga jananga mansoru saaptaachu, porattam nadathiaachu kootu muyarchiaaga. onnum nadakkala. bcoz 350 votes are very lesser than 1853 christian votes. dinasarigalum ithai thirithe kooruginrana.

  6. kamal sollura maari marathi oru desiya vyaadhi (kamal rasigannu nenikka vendam.. jus for quotation). innikki inthamaari news padikkaromnalo,illa paakaromnaalo atha minimum oru 2 weeks,1 month kulla maranthuduvaanga namma makkal. sattam jananayagathin thoon. aana sattakaloori,neethimanra valaagam engaiume atha paaka mudialaiye? chinna vayasu adutthavaram varaikkum iruntha londonla software engineera vela pakka vendiavana journalism innoru thoon angaie uyiroda erichittu innikku sirichikitte medai eri koodi koodi pesikiranga? raamar kediathu, ramaayanam verum anantha vikatan kathai, ramar BE padichaara? ippadilam kelvi kettalum thanga bhaaluvum seri, then thiruppathi vanthu saami kumbuttu pogum settiarvaalum seri athai amothipaanga. avanga ammaiyar thiruvadi thozhuvaanga. aiyiyo ammayarnu sonnathu Antonio Maino Italy ammaiyaar. neenga paatukku kanchi saamiyaara ullavecha ammaiyaara nenichikaatheenga.

  7. //. எங்கோ பெரும் தவறு நடந்து போய் விட்டது அழிவின் விழிம்பிற்குச் சென்று விட்டோம் திரும்பும் வழியையும் தொலைத்து விட்டோம்.

    எங்கோ இல்லை – நூற்றி நாற்பது விஷக்கிரிமிகளுக்கு ஒட்டு போட்டதனால் வந்தது – பக்தவத்சலம் அன்றே சொன்னார் – அந்த நூற்றி நாற்பது இன்று பல லட்சங்களாக மாறி உள்ளது. இனி தமிழகத்தை ஆண்டவன் தான் சிரமப்பட்டு காப்பாத்தணும்

    கோவில் அறங்காவலர் பதவி எல்லாம் மூஞ்சில துளி கூட வெளிச்சம் இல்லாத தீக காரன் கிட்ட இருக்கு – அப்புறம் எங்கே – சீர்காழி கோவில்கள் எவ்வளவோ மாக்கியே போயிருந்தன, திருநெல்வேலிக்கும் இதே கதி தான் – எதோ நமது மக்கள் அமேரிக்கா போய் டாலர் சம்பாதிசான்களோ பொழச்சோம் – அவங்க அனுப்பும் கொஞ்ச நஞ்ச பணத்த நம்பி தான் பல கோவில் புனர் நிர்மானகள் நடக்கிறது

    கோவில் நிலத்தில் விளைந்த நெல்லை கோவில் உள்ளேயே அடிச்சு, கோவிலுக்குலேயே பதுக்கி வெச்சு கொள்ளை அடிக்குது இந்த தீக கூட்டம்

    இந்த காட்டு மிராண்டி கோட்டத்துக்கு ஒட்டு போடறத நிறுத்தவே முடியாதா

    நேத்து தான் பெரும் தலைவர் கநோமொழி ஒரு துறவி என்று அரை கூவல் விட்டிர்கார் – மானத்தை துறந்தாலும் துறவி தான்போல இருக்கு

  8. mudhal HR&CE nnu porvai pothikkitu ullavaruvaanga. paramparaiai usirai kuduthu kovilaium kovil pazhakka vazhakkam matrum nerimuraigal,kovil nilangalai paathugaathu kondirukkum trust board allathu temple governance board ai adi pania vaippargal. konjam konjamaaga avargalai bommai pol aatuvitthu yaraiume kalanthu alosiyaamal HR&CE Act enru onrai pottu izhuthadippargal. ithil naduve G.O, Special G.O enrellam veru varum. intha HR&CE act or GO vai ethirthu case pottavar courtukku alanche sethuduvaar allathu arasiyal ravudigalai vaithu miratti kolaium seiapaduvaar. 2 naal antha grama kovilil poojai nadakkathu. vazhakkampol makkal maranthuviduvar. kelvi ketkavum al irukkathu. enna venalum koothadikkalam,kovilai vaithu kondu. itharku nam melum perum thavarugal ullathu. from 1975-80’s onwards the then generation started feeling that following religious practice or teaching it to their next generation was old or not so good. they mainly concentrated on british style of culture and life. they wondered if a man dressed in a neat pant and with a hard boots(shoes) with a cigar pipe was highly cultured and first rated citizen. Slowly this created a fancy like mind towards modern culture. aduthathu namakkul otrumai illathathu. namakkul sandai sacharavugal vantha samaiyathil moonramavargalaana Vellaikaarargalidam poi nyayam kettu kondum, avargalai thaaja seia ellavithamaana soththukalaium,mariyadhaigalaium konjam konjamaaga izhanthom. iruthiyil avargal potta vethu vettu sattathukku namma kovilaium,nam kovil panbaadugalaium vitrom. inru athu arasiyal ravudigalukku miga saathagamaaga ullathu. nam sothai paadugaaka evvalavu porada vendi irukkirathu. namakkul irukkum prachanaigalai nammakkul ego paarkaamal antha kaalathil nam periavargal samarasamaagavum,pechuvaarthai nadathi theerthukondirunthale nam mariyaadhaium kovil soththukalum peruvaariaaga kaapaatri irukkalam

  9. இப்படி எந்த விஷயமென்றாலும் எதிர்க்க வேண்டும் என்ற மனப்பாண்மை ஒழிய வேண்டும். கண்ணை மூடிக் கொண்டு எதிர்க்கக் கூடாது. இந்த மாதிரி எதிர்ப்புகளை மதித்திருந்தால் தஞ்சை பெரிய கோவில், தாஜ்மஹால், மீனாட்சியம்மன் கோவில் ஆகியவை உருவாகி இருக்காது.
    2000த்தில் சிற்பக்கலை எப்படி இருந்தது என்பதற்கும் இன்றைய சிற்பக் கலை வல்லுனர்களுக்கு ஒரு வாய்ப்பளித்த மாதிரியும், இன்றை கலை கலாச்சாரா பதிவிற்கு வரலாற்று முக்கியத்துவம் கொடுத்த பதிவாக, காலகாலம் நிலைத்து இருக்கும். மலையின் தோற்றமும் பொலிவும் மாறாமல் இதைச் செய்யலாம். சில கான்றாக்ட் லாபத்தைப் பற்றி கவலைப் படுபவர்களும், சுயநலக்காரர்களும் எதிர்க்கத்தான் செய்வார்கள். மலையை கோவிலாக்கினால்தான் நாளை வரும் குவாரி கொள்ளையர்களைத் தடுக்க முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *