காங்கிரசும் கந்தனின் கல்வி வேலைவாய்ப்புக் கனவுகளும் - 1
ஆசிரியர் குழு
12 Mar 2010 |
அச்சிட
மூலம்: ஓ.பி. குப்தா, ஐ.எஃப்.எஸ் (ஓய்வு)
தமிழில்: விடவி விரும்பி
2008 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 24ஆம் தேதி வெளியான ’ஹிஸ்துஸ்தான் டைம்ஸ்’ நாளிதழில், நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்ட ஒரு செய்தி வெளியாகியிருந்தது. மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு மேற்கொண்ட சிறப்பு முயற்சிகளின் பயனாக மத்திய அரசு பணிகளில் சிறுபான்மையினரின் விகிதம் அதிகரித்துள்ளது என்பதே அந்தச் செய்தியாகும். 2006-07 காலகட்டத்தில் மத்திய அரசு பணிகளில் சிறுபான்மையினரின் விகிதாச்சாரம் 6.9 சதவீதமாக இருந்தது. 2007-08 ல் 8.7 சதவீதமாக உயர்ந்துள்ளது. நிதித்துறையில் அதாவது வர்த்தக வங்கிகள் நிதி நிறுவனங்கள் மற்றும் ரிசர்வ் வங்கி போன்றவற்றில் சிறுபான்மையினரின் விகிதாச்சாரம் 2006-07ல் 7.6 சதவீதமாக இருந்தது. 2007-08ல் 8.9 சதவீதமாக அதிகரித்தது. ரயில்வே துறையில் 2006-07ல் 2.7சதவீதமாக இருந்த சிறுபான்மையினரின் விகிதாச்சாரம் 2007-08 ல் 6.3 சதவீதமாக அதிகரித்தது. இந்தக் காலகட்டத்தில் மத்திய அரசு பணிகளில் உள்ள ஹிந்துக்களின் விகிதாச்சாரம் குறைந்தது.
உங்கள் பார்வைக்கு 7 முக்கிய புள்ளிவிவரங்களைச் சமர்ப்பிக்கிறேன். ஹிந்து வாக்காளர்கள் தங்களது குழந்தைகள் மற்றும் பேரக் குழந்தைகளை இரண்டாம்தரக் குடிமக்களாக மாற்ற அவர்கள் அக்கறையின்றி வாக்களித்து வரும் முறைதான் காரணம் என்பதை இந்தப் புள்ளிவிவரங்களே மெய்ப்பிக்கின்றன. குறிப்பாக நன்கு படித்த ஹிந்துக்களின் பார்வைக்கு இந்தப் புள்ளிவிவரங்களைச் சமர்ப்பிக்கிறேன். ஏனெனில் இவை அதிர்ச்சி அளிப்பவையாக உள்ளன. ஆனால் இதைப்பற்றி நன்கு படித்த ஹிந்துக்களுக்குச் சரியாக தெரியாமல் இருக்கிறது. இதற்கு ஊடகமும் ஹிந்துக்களின் நலனில் உண்மையான அக்கறையற்ற அரசியல்வாதிகளும் காரணம் என்று சொல்வதைவிட ஹிந்து வாக்காளர்களின் அசிரத்தை தான் முக்கிய காரணம் என்பது எனது தாழ்மையான கருத்தாகும். ஹிந்து வாக்காளர்கள் வாக்களிக்காமல் இருந்துவிடுகிறார்கள் அல்லது காங்கிரஸ் அல்லது தேசியவாத காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள், ஜனதா பரிவார் கட்சிகள் போன்றவற்றுக்கு வாக்களித்து விடுகிறார்கள்.
1. ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் அறிக்கை ஹிந்து மதத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். போன்ற உயர் அதிகாரிகள், மாணவர்கள், வேலை தேடுபவர்கள் ஆகியவர்களுக்கு இழைக்கும் அநீதியைப் பற்றி பார்ப்போம்.
2009ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 18ஆம் தேதி ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் அறிக்கையை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தது. ஹிந்து அதிகாரிகள் மற்றும் ஹிந்து இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை 15 சதவீதம் குறைக்க வேண்டும். என்பதுதான் அதன் பரிந்துரையில் இடம் பெற்றுள்ள சாராம்சமாகும். கல்லூரிகளில் கூட ஹிந்து மாணவர்களுக்கு 15 சதவீதத்தைக் குறைக்க வேண்டும் என்பதாக அது பரிந்துரைத்துள்ளது. இது ஹிந்து மதத்தைச் சார்ந்த தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு பாதகமான அம்சமாகும். முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் கல்வி வாய்ப்பில் உயர வழிவகுப்பது என்ற பெயரில் ஹிந்து மதத்தைச் சார்ந்த தாழ்த்தப்பட்டோருக்கும் பழங்குடியினருக்கும் அநீதி இழைக்கப்பட்டுள்ளது. மிஸ்ரா கமிஷன் அறிக்கையின் பத்தி 16.2.16ன் படி எல்லா சிறுபான்மையினரும், குறிப்பாக முஸ்லிம்கள் குறைவான அளவிலேயே பிரதிநிதித்துவம் பெற்றுள்ளார்கள். அவர்களது ஜனத்தொகை எண்ணிக்கைக்கு ஏற்ப அவர்களுக்கு பிரதிநிதித்துவம் இல்லை. வேலை வாய்ப்பில் அவர்கள் பின்தங்கியுள்ளனர். எனவே அவர்களைப் பிற்பட்ட வகுப்பினராகக் கருதவேண்டும். அரசியல் சாசனப் பிரிவு 16(4) ன் படி சமூகரீதியாகவும் கல்விரீதியாகவும்தான் பிற்பட்டவர்கள் என்பதற்கு விளக்கம் அளிக்கப்படுகிறது. ஆனால் மதரீதியான கண்ணோட்டத்துடன் மத்திய, மாநில அரசு வேலைவாய்ப்பில் சிறுபான்மையினருக்கு இடம் அளிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்திரா சஹானி வழக்கில் 16(4)ன் படி பொருளாதார அளவுகோலை பிற்பட்ட தன்மைக்கு அளவுகோலாகக் கருதக்கூடாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்தப் பிற்போக்கு நிலை அவர்களது சமூக மற்றும் கல்வி சார்ந்த பிற்போக்கு நிலையாகும். எனவே பொருளாதார அடிப்படையில் மட்டும் இடஒதுக்கீடு செய்வது ஏற்கத்தக்கது அல்ல. 16(1)ன் படி கல்வி மற்றும் சமூக நிலையில் பின்தங்கியிருந்தால் தான் பின்தங்கியிருத்தல் என்பதை முடிவு செய்யமுடியும்.
இதன்படி பார்த்தால் மிஸ்ரா கமிஷன் பரிந்துரை முற்றிலும் சட்ட விரோதமானது. இந்திரா சஹானி வழக்கில் உச்ச நீதிமன்றம் இதை உறுதிப்படுத்தியுள்ளது. இதை உதாசீனப்படுத்திவிட்டு சிறுபான்மையினருக்கு பொருளாதார அளவுகோலை மையமாகக் கொண்டு இட ஒதுக்கீடு அளிக்கலாம் என்று மிஸ்ரா கமிஷன் பரிந்துரைத்துள்ளது அரசியல் சாசனத்திற்கு புறம்பானதாகும். மத்திய அரசு அல்லது மாநில அரசில் பணிபுரியும் ஹிந்து அதிகாரிகள் மதசிறுபான்மையினருக்கு 15 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கவேண்டும் என்று மிஸ்ரா கமிஷன் பரிந்துரைத்துள்ளதை கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த 15 சதவீதத்தில் 10 சதவீதம் முஸ்லிம்களுக்கானது. 5 சதவீதம் இதர சிறுபான்மையினருக்கானது.
இந்தக் கமிஷன் பரிந்துரைப்படி பார்த்தால் அது என்றைய தினம் அமலுக்கு வருகிறதோ அன்றிலிருந்து இந்திய அரசின் செயலாளர், கூடுதல் செயலாளர், இணைச் செயலாளர் போன்ற பணியிடங்களில் சிறுபான்மையினருக்கு 15 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்ற நிலை ஏற்படுவதால் இதனால் பாதிக்கப்படுபவர்கள் ஹிந்து அதிகாரிகள்தான். அவர்கள் பணி உயர்வு பெற இது முட்டுக்கட்டை போட்டுவிட்டது. அவர்களைவிட இளநிலையில் இருக்கும் சிறுபான்மை அதிகாரிகள் பதவி உயர்வு பெற்றுவிடுவார்கள். இது இந்தியா முழுவதும் நடைபெறும். மத்தியிலும் நடைபெறும். மாநிலங்களிலும் நடைபெறும். எல்லா துறைகளிலும் நடைபெறும்.
பள்ளிக்கூட ஆசிரியர்கள், கல்லூரி பேராசிரியர்கள், டி.எஸ்.பி. கள் பொறியாளர்கள், உதவி கலெக்டர்கள், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சுங்கத்துறை அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள், பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் பல்வேறு நிலைகளில் உள்ள அதிகாரிகள் இதனால் பாதிப்புக்கு இலக்காவார்கள். எனவே ஹிந்து அதிகாரிகள் இது குறித்து விழிப்புடன் செயல்படவேண்டும். அரசுப் பணிகளில் சேர ஆர்வமுடைய ஹிந்துக்களும் விழிப்புணர்வுடன் செயல்படவேண்டும். போலி மதச்சார்பின்மை என்ற உறக்கக் கலக்கத்திலிருந்து அவர்கள் விழித்துக்கொள்ள வேண்டும். என்ன நடக்கிறது என்பதை கண்களை அகல விரித்துப் பார்க்கவேண்டும். கம்யூனிஸ்டுகள் மற்றும் முலாயம்சிங் யாதவ், மாயாவதி, கருணாநிதி, சரத்பவார், சந்திரபாபு நாயுடு போன்றோர் நடத்தும் கட்சிகளின் ஆதரவுடன் காங்கிரஸ் அரங்கேற்றவிருக்கும் அநீதியை ஹிந்துக்கள் புரிந்து கொள்ளவேண்டும். இது ஹிந்துக்களின் வேலை வாய்ப்பை நிரந்தரமாக பாதிப்புக்கு உள்ளாக்கும். இவ்வாறு பாதிப்பு ஏற்பட்டால் அதிலிருந்து மீள்வது முடியாமல் போய்விடும்.
அரசுப் பணிகளில் முஸ்லிம்களின் விகிதாச்சாரம் குறைவாக உள்ளது என்று மிஸ்ரா கமிஷன் கூறியுள்ளது உண்மைக்குப் புறம்பானதாகும். முஸ்லிம்கள் 13 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளார்கள். ஆனால் ஐ.ஏ.எஸ். உயர் பதவிகளில் உள்ள முஸ்லிம்களின் எண்ணிக்கை 4 சதவீதம்தான் என்று முஸ்லிம்கள் கூறுகிறார்கள். எனவேதான் தங்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்று வற்புறுத்துவதாகவும் அவர்கள் கூறுகிறார்கள். 13 சதவீத முஸ்லிம்களுக்கு 4 சதவீத அதிகாரிகள் என்ற கணக்கு முழுமையானதல்ல. முதல் நிலை அதிகாரிகளாக வரவேண்டுமானால் அவர்கள் குறைந்தபட்சம் பட்டதாரிகளாக இருக்க வேண்டும். முஸ்லிம்களில் பட்டதாரிகள் எத்தனை சதவீதம் உள்ளனர் என்பதை வேறு எங்கும் தேடி பார்க்கத் தேவையில்லை. அது மிஸ்ரா கமிஷன் அறிக்கையிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது. முஸ்லிம்களில் 3.6 சதவீதத்தினர் மட்டுமே பட்டதாரிகள் என்பதுதான் அந்தப் புள்ளிவிவரம் ஆகும்.
எனவே 3.6 சதவீதம் என்ற அளவில்தான் முஸ்லிம் பட்டதாரிகள் இருக்கிறார்கள் என்ற அடிப்படையில் பார்த்தால் முஸ்லிம் உயர் அதிகாரிகளின் எண்ணிக்கை 4 சதவீதம் என்பதில் எந்தக் குறைபாடும் தென்படவில்லை. அது நியாமானதாகத்தான் தோன்றுகிறது. இன்னும் சொல்லப்போனால் அது சற்று அதிகம்தான். மேலும், முஸ்லிம்கள் 4 சதவீதம் உயர் பணிகளில் இருக்கிறார்கள் என்பதுடன் முஸ்லிம்களுக்குக்கென பிரத்தியேகமாக 10 சதவீத பணியிடங்களையும் வேலைவாய்ப்புகளையும் ஒதுக்க வேண்டும் என்பதில் காங்கிரஸ் முனைப்புடன் உள்ளது. இதன்படி பார்த்தால் ஹிந்து அதிகாரிகளைவிட முஸ்லிம் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வெகு வேகமாகக் கிடைக்கும். குறுகியகாலத்திலேயே முஸ்லிம் அதிகாரிகள் உயர் பதவிகளுக்கு வந்துவிடுவார்கள். ஆனால் ஹிந்து அதிகாரிகளால் அவ்வாறு வர முடியாது.
ராஜீவ் மந்திரி சபையில் அமைச்சராக இருந்த ஆரிப் முகமதுகான் ஒரு முக்கிய புள்ளிவிவரத்தைக் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே 10 முஸ்லிம் சமூகங்கள் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. மேலும் 83 முஸ்லிம் சமூகங்கள் இதர பிற்பட்ட வகுப்பினர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த இரண்டு பட்டியலில் இடம்பெற்றுள்ள முஸ்லிம்களின் எண்ணிக்கையை கூட்டிப்பார்த்தால் மொத்த முஸ்லிம்களில் 70 சதவீதத்திற்கும் அதிகமானோர் இதில் இடம் பெற்றுள்ளனர். உச்ச நிலையில் உள்ள குறைந்த எண்ணிக்கையிலான முஸ்லிம்கள் மட்டும்தான் இதில் இடம்பெறவில்லை. இதேபோல கிறிஸ்தவ சமூகங்களிலும் பழங்குடியினர் பட்டியல் மற்றும் இதர பிற்பட்ட வகுப்பினர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
இந்திய அரசியல் சாசனமும் உச்ச நீதிமன்றமும் சமூக மற்றும் கல்வி ரீதியான பிற்பட்ட தன்மை இருந்தால்தான் அரசியல் சாசனப் பிரிவு 16(4)ன் படி இட ஒதுக்கீட்டின் கீழ் சலுகை பெறமுடியும் என்பதை உறுதிபட தெரிவித்துள்ளன. உண்மையில் முஸ்லிம் சமூகத்தினர் 11 மாநிலங்களில் ஹிந்துக்களைவிட கல்வி நிலையில் மேலானவர்களாக உள்ளனர். தேசிய அளவில் எடுத்துக்கொண்டால்கூட ஹிந்து சமூகத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பழங்குடியினரைவிட முஸ்லிம்கள் கல்வி நிலையில் மேலான நிலையில்தான் உள்ளனர். மிஸ்ரா கமிஷன் அறிக்கை, பத்தி 12.3ன் படி கல்வி அறிவு பற்றிய புள்ளிவிவரத்தை அலசி ஆராய்ந்த போது தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் பட்டியலில் இடம்பெற்றுள்ளோரைவிட முஸ்லிம்கள் மேலான நிலையில்தான் உள்ளனர் என்பது உறுதியாகிறது.
2001ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி சச்சார் கமிட்டி மற்றும் மிஸ்ரா கமிஷன் (அட்டவணை 3.5, பத்திகள் 12.3, 18.5 மற்றும் பல) அறிக்கையில் குறிப்பிட்டபடி மற்ற மத சிறுபான்மையினரைவிட இன்னும் சொல்லப்போனால் தேசிய சராசரி அளவான 65 சதவீதம் என்பதைவிட கிறிஸ்தவர்கள் கல்வி அறிவில் மேம்பட்ட நிலையில்தான் உள்ளனர். எனவே எந்த அடிப்படையில் பார்த்தாலும் பின்தங்கிய நிலையை காரணமாகக் காட்டும் தகுதி உடையவர்களாக கிறிஸ்தவர்கள் இல்லை.
11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஹிந்து ஆண்களைவிட முஸ்லிம் ஆண்கள் கல்வி அறிவில் முதன்மை பெற்றுள்ளனர். ஆந்திரா அந்தமான் நிக்கோபார், சத்திஸ்கர், குஜராத், கேரளா, கர்னாடகா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ஒரிசா, புதுச்சேரி, தமிழ்நாடு ஆகியவையே அவை.
13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஹிந்துப் பெண்களைவிட முஸ்லிம் பெண்கள் கல்வி அறிவில் முதன்மை பெற்றுள்ளனர். ஆந்திரா, அந்தமான் நிக்கோபார், சத்தீஸ்கர், டாமண்டையு, தத்ரா, நகர்கவேலி, குஜராத், ஜார்க்கண்ட், கர்னாடகா, மத்திய பிரதேசம், மகாரஷ்டிரா, ஒரிசா, புதுச்சேரி தமிழ்நாடு ஆகியவையே அவை. (2001 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட ஜனத்தொகை அடிப்படையிலான புள்ளிவிவரங்கள் ஆகும்.)
சச்சார் கமிட்டி (பக்கம் 53), 10 மாநிலங்களில் உயர் வகுப்பைச் சேர்ந்த ஹிந்துக்களை விடவும் முஸ்லிம்களின் கல்வி அறிவு அதிகமாக உள்ளது என்று கூறியுள்ளது. தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடி வகுப்புகளைவிட முஸ்லிம்களின் நிலைமேலானது என்பதைச் சொல்லத் தேவையே இல்லை.
மிஸ்ரா கமிஷன் அறிக்கையின் பரிந்துரையினால் ஹிந்துக்கள் எவ்வாறெல்லாம் வேலை இழப்புகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதை சற்று கவனிப்போம். 2009 வரை உள்ள நிலவரத்தைப் பார்ப்போம், அரசுப் பணியில் 10 ஆயிரம் இடம் இருந்தால் அதில் தாழ்த்தப்பட்ட ஹிந்துக்களுக்கு 1500 இடங்கள் கிடைக்கும். இதர பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஹிந்துக்களுக்கு 2,700 இடங்கள் கிடைக்கும். பழங்குடியினத்தைச் சேர்ந்த ஹிந்துக்களுக்கு 750 இடங்கள் கிடைக்கும்.
இப்போது ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் பரிந்துரை அடிப்படையில் சிறுபான்மையினருக்கு 15 சதவீத இடங்களை ஒதுக்கீடு செய்ய மன்மோகன்சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு திட்டமிட்டுள்ளது. பிரதமர் மன்மோகன்சிங் 2006ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்த நாட்டில் உள்ள வளங்களில் சிறுபான்மையினருக்குத்தான் முதல் உரிமை என்பதாக பகிரங்கமாக அறிவித்தார். எனவே சிறுபான்மையினருக்கு முன்னுரிமை கொடுக்க இந்த அரசுக்குத் தயக்கமே இல்லை. மற்றவர்களுக்கெல்லாம் ஒதுக்கப்பட்டதற்கு பிறகு எஞ்சியுள்ள இடங்கள்தான் ஹிந்துக்களுக்கு கிடைக்கும். எஞ்சிய 8,500 இடங்களில் தாழ்த்தப்பட்ட ஹிந்துக்கள் 15 சதவீத இடங்களைப் பெறுவார்கள். இதில் தாழ்த்தப்பட்ட ஹிந்துக்களுக்கான ஒதுக்கீடு 15 சதவீதம் என்ற அடிப்படையில் 1,275 இடங்களை அவர்கள் பெறுவார்கள். இதர பிற்படுத்தப்பட்ட ஹிந்துக்கள் (இதில் முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் ஓரளவுக்கு உள்ளனர்) 27 சதவீத இடங்களைப் பெறுவார்கள். அதாவது 8,500 இடங்களில் 27 சதவீதம் என்று கணக்கிட்டால் 2,295 இடங்களை அவர்கள் பெறுவார்கள்.
பழங்குடி ஹிந்துக்கள் (இதிலும் ஓரளவு கிறிஸ்தவர்கள் உள்ளனர்) 8,500 ல் 7.5% இடங்களை பெறுவார்கள். 637 இடங்கள் அவர்களுக்கு கிடைக்கும்.
2009 வரை உயர் வகுப்பு ஹிந்துக்களுக்கு 5,000 திற்கும் சற்று அதிகமாக கிடைக்கும். ஆனால் மன்மோகன் சிங் அரசு சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு அளிக்க முன்வந்துள்ளதை அடுத்து பொதுப்போட்டிக்கான இடங்களில் எண்ணிக்கை 5000 த்தைவிட சுருக்கிவிடுகிறது. 4,310 இடங்களுக்காக மட்டுமே போட்டி நடைபெறும். ஹிந்துக்கள் எல்லா நிலைகளிலும் பாதிப்புக்கு இலக்காகிறார்கள் என்பதை வேதனையிலும் வேதனை என்று சொல்வதா அல்லது இதை அதிசயத்திலும் அதிசயம் என்று கூறுவதா என்றே தெரியவில்லை.
கல்வி ரீதியாக, வேலைவாய்ப்பு ரீதியாக, பொருளாதார ரீதியாக அவர்கள் கடும் பாதிப்புக்கு இலக்காகின்றனர். ஹிந்துக்களின் வாக்குகளைப் பெற்றவர்கள்தான் ஆட்சிக்கு வருகிறார்கள். ஆனால் காங்கிரஸ் போன்ற கட்சிகளிலும் இதர கட்சிகளிலும் உள்ள அரசியல்வாதிகள் ஹிந்துக்களை நசுக்குவதையே கொள்கையாகக் கொண்டுள்ளனர்.
மிஸ்ரா கமிஷன் அறிக்கை பத்தி 16.27ல் கூறப்பட்டுள்ளதாவது: நீதிமன்ற முடிவின்படி சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிறுவனங்களில் சிறுபான்மையினர் கணிசமாக சேர்த்துக் கொள்ளப்படுவது தேசிய ஒற்றுமைக்கு உகந்ததாகும். சிறுபான்மையினர் 50 சதவித அளவுக்கு சேர்த்துக் கொள்ளப்படலாம். எஞ்சிய 50 சதவீதம் பெரும்பான்மையினருக்கு ஒதுக்கப்படலாம். இதன் அடிப்படையில் கீழ்க்கண்ட பரிந்துரைகளை நாங்கள் உறுதியாகக் குறிப்பிட விரும்புகிறோம். சிறுபான்மையினர் அல்லாதோர் கல்வி நிறுவனங்களில் குறைந்தபட்சம் 15 சதவீத இடங்களை சிறுபான்மையினருக்கு அளிக்கவேண்டும்.
அ) சிறுபான்மையினர் இடையிலான உள்பகுப்பு வருமாறு: 10 சதவீத இடங்கள் முஸ்லிம்களுக்கானவை. ஏனெனில் மொத்த சிறுபான்மையினரில் 73 சதவீதத்தினர் முஸ்லிம்கள். எஞ்சிய 5 சதவீத இடங்களை முஸ்லிம் அல்லத மற்ற சிறுபான்மையினருக்கு வழங்கவேண்டும்.
ஆ) 15 சதவீத இட ஒதுக்கீட்டில் சில குறிப்பிட்ட மாற்றங்களை சூழ்நிலைக்கு ஏற்ப செய்துகொள்ளலாம். முஸ்லிம்களுக்காக ஒதுக்கப்பட்ட 10 சதவீத இடங்களை முஸ்லிம்களைக் கொண்டு நிரப்பமுடியவில்லை எனில் அந்த இடங்களை இதர மதச் சிறுபான்மையினருக்கு அளிக்க வேண்டும். ஆனால் இந்த 15 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் வரும் இடங்களில் எதையும் பெரும்பான்மைப் பிரிவினருக்கு அளிக்கவே கூடாது.
இ) இந்த 15 சதவீத ஒதுக்கீட்டில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினரை சேர்க்கக் கூடாது.
இந்தப் பரிந்துரைகளை அமலாக்க முற்பட்டால் மத சிறுபான்மையினரைவிட அதிக மதிப்பெண்கள் பெற்ற ஹிந்து மாணவர்களால் கூட சிறுபான்மையினர் அல்லாதோரால் நடத்தப்படும் கல்வி நிறுவனங்களில், வெளிப்படையாகச் சொல்லப் போனால் வித்யா பாரதி போன்ற ஹிந்து அமைப்புகளால் நடத்தப்படும் கல்வி நிறுவனங்கள், டி.ஏ.வி கல்லூரிகள் போன்றவற்றில் இடம்பெற இயலாமல் போய்விடும். இப்போது 10 ஆயிரம் பொறியியல் கல்லூரி இடங்களில் அதாவது, பெரும்பான்மை சமூகத்தினரால் நடத்தப்படும் கல்வி நிறுவனங்களில் உள்ள இடங்களை எடுத்துக்கொண்டு பார்த்தால் இதர பிற்படுத்தப்பட்ட ஹிந்து மாணவர்கள் 2,700 இடங்களைப் பெறுகிறார்கள். தாழ்த்தப்பட்டோர் 1,500 இடங்களைப் பெறுகிறார்கள். பழங்குடியினர் 750 இடங்களைப் பெறுகிறார்கள்.
ஆனால் மிஸ்ரா கமிஷன் அறிக்கை அமலாக்கப்பட்டால் முதலிலேயெ 1,500 இடங்கள் மத சிறுபான்மையினருக்கு ஒதுக்கப்பட்டு விடும். எஞ்சியுள்ள 8,500 இடங்கள்தான் மற்றவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும். 8,500ல் 27 சதவீத இடங்கள் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்யப்படும். இதே போல வரிசைக் கிரமமாக தாழ்த்தப்பட்டோருக்கும் பழங்குடியினருக்கும் ஒதுக்கப்படும். முந்தி இருந்த நிலையைவிட எல்லா பிரிவுகளைச் சேர்ந்த ஹிந்துக்களுக்கும் குறைவான ஒதுக்கீடே கிடைக்கும்.
மார்க்சிஸ்ட் ஹிந்துக்கள் என்.எஸ்.யூ.ஐ. எனப்படும் இந்திய தேசிய மாணவர் பேரவை எனப்படும் காங்கிரஸ் சார்பு மாணவர் அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் கூட இதனால் பாதிக்கப்படுவார்கள்.
2. அதிக மதிப்பெண்கள் பெற்றாலும் கூட ஹிந்து மாணவர்களுக்கு மழலைப் பள்ளிகள், பள்ளிகள்,கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் போன்றவற்றில் இடம் கிடைப்பது அரிதாகிவிடும். சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிறுவனங்களில் அவர்களுக்கு இடம் கிடைப்பது அரிதிலும் அரிது. ஹிந்துக்களிடம் பெறப்பட்ட வரிப்பணத்தைக் கொண்டுதான் சிறுபான்மையினரால் நடத்தப்படும் கல்வி நிறுவனங்களுக்கு உதவித் தொகை அளிக்கப்படுகிறது. ஒரு சில நிறுவனங்கள் இத்தகைய உதவி பெறாமலும் இயங்குகின்றன.
புனித ஸ்டீபன் கல்லூரி, டெல்லி பல்கலைக்கழகத்திற்கு உட்பட்டது. அது கிறிஸ்தவர்களால் நடத்தப்படுகிறது. அங்கு கிறிஸ்தவர்களுக்கு கட் ஆப் மார்க் மற்றொரு வகையாகவும் உள்ளது. கிறிஸ்தவர்களின் நலனுக்கு உகந்ததாக இவ்வாறு செய்யப்படுகிறது. இதேபோல சீக்கிய அமைப்பால் நடத்தப்படும். கல்சா கல்லூரியில் சீக்கிய மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இதேபோல ஜாமியா ஹிம்டார்டு பல்கலைக்கழகத்தில் முஸ்லிம் மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் இந்த எல்லா கல்லூரிகளிலும் ஹிந்து மாணவர்கள்தான் பாதிப்புக்கு இலக்காகிறார்கள். எல்லா மாநிலங்களிலும் எல்லா மாவட்டங்களிலும் இதே நிலைதான் ஏற்படும்.
சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிறுவனங்களில் ஹிந்து ஆசிரியர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிறுவனங்களில் எவ்வளவுதான் தகுதி இருந்தாலும் ஹிந்துக்கள் முதல்வர்களாக வருவது அதிசயம்தான். புனித ஸ்டீபன் கல்லூரியில் முதல்வராகவோ ஹிந்து வரமுடியாது என்று விதிமுறையே உள்ளது. இவ்வளவுக்கும் இந்தக் கல்லூரிக்கு ஹிந்துக்களின் வரிப்பணத்திலிருந்து மத்திய அரசு கோடிக்கணக்கான பணத்தை ஆண்டுதோறும் கொட்டிக்கொடுக்கிறது. ஹிந்துக்கள் எவ்வளவு தகுதி படைத்திருந்தாலும் அவர்களுக்கு உரிய வேலைவாய்ப்பு இப்படிப் பட்ட நிறுவனங்களில் கொடுக்கப்படுவதில்லை. அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகத்தில் 90 சதவீத ஆசிரியர்கள் ஹிந்துக்கள் அல்லாதோரே.
(தொடரும்….)
காங்கிரசும் கந்தனின் கல்வி வேலைவாய்ப்புக் கனவுகளும் - 2 [இறுதிப் பகுதி]
நன்றி: விஜயபாரதம் 26-02-2010 இதழ்
தொடர்புடைய பதிவுகள்
குறிச்சொற்கள்: அரசுப் பணியிடங்கள், இந்திய அரசியல் சாசனம், இந்து உரிமைகள், இந்துப் பெண்கள், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி, ஓ.பி. குப்தா, கல்வி, காங்கிரஸ், சச்சார் கமிட்டி, சிறுபான்மையினர் இட ஒதுக்கீடு, சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்கள், பதவி உயர்வு, பல்கலைக்கழகம், பள்ளிகள், பொருளாதார வளர்ச்சி, மன்மோகன் சிங், மாணவர்கள், ரங்கநாத் மிஸ்ரா கமிஷன், வறுமை, விஜயபாரதம், வேலைவாய்ப்பு

தமிழ்ஹிந்து வெளியிடும் முதல் நூல் "பண்பாட்டைப் பேசுதல் - இந்து அறிவியக்கக் கட்டுரைகள்" . மேலும் விவரங்கள்
12 March 2010 at 11:48 am
மக்கள் இனிமேலும் விழிக்கவில்லை என்றால் ஓட்டுப்பொறுக்கிகள் இந்துக்களுக்கு மண்ணின் மைந்தர்களுக்கு நாமம் போடப்போவது உறுதி. மக்கள் விழித்து தங்களது ஓட்டுரிமையை தவறாது பயன் படுத்த வேண்டும். ஏனென்றால் பிற மதத்தினருக்கு எல்லா சலுகையையும் அளித்து மண்ணின் மைந்தர்களை உரிமைக்காக போராட வைத்து விடுவார்கள். இப்போதே பிற மதத்தினருக்கு வழங்கப்படும் சலுகைகளை பாருங்கள் - வீட்டிற்கு வீடு நிறைய பிள்ளைகளை பெற்று விடுகிறார்கள். அவர்களுக்கும் சேர்த்து இந்த ஓட்டுப்பொறுக்கிகள் நமது வரிப்பணத்தில் படிப்பு முதல் வேலை வாய்ப்பு வரை பெற்றுதருகிறார்கள். நாம் இப்படியே இருந்தால் நாமம் உறுதி.