முகப்பு » உடல்நலம், உணவு, கேள்வி-பதில், பொது

ஹலால் கறியா ஜட்கா கறியா?

அச்சிட அச்சிட

ஹலால் கறியை தமிழ்நாட்டு மக்கள் வாங்குகிறார்கள். ஹலால் உடலுக்கு கெடுதி. ஜட்காவே உடலுக்கு நல்லது.

muniyandi-vilas-hotelஹலால் என்பது இஸ்லாமிய முறைப்படி வெட்டப்படும் ஆட்டுக்கறி, கோழிக்கறி ஆகியவற்றை குறிக்கிறது. ஜட்கா என்பது இந்து முறைப்படி வெட்டப்படும் ஆட்டுக்கறி கோழிக்கறி ஆகியவற்றை குறிக்கிறது.

ஆடுகளும் கோழிகளும் ஒரே வீச்சில் கழுத்து துண்டாக்கப்பட்டு கொல்லப்படுவதை ஜட்கா எனலாம். ஆனால், இஸ்லாமிய ஹலால் முறையில் ஆடுகளின் கழுத்து ஒரு கீறல் கீறப்பட்டு அதன் ரத்தம் வடிக்கப்படுகிறது. இந்த முறையில் ஆடு மெல்ல மெல்ல துடிதுடித்து சாகிறது.

வெகுகாலமாக இந்தியாவில் ஜட்கா முறையிலேயே ஆடுகள் கோழிகள் வெட்டபப்ட்டு வந்தன. முனியாண்டி விலாஸ் போன்ற இந்து மிலிட்டரி உணவு கடைகளில் ஜட்கா முறையில் வெட்டப்பட்ட கோழிகள், ஆடுகளே சமைக்கப்பட்டு பரிமாறப்பட்டன. தற்போது பல இந்துக்களும் இஸ்லாமியர்களது கசாப்புக் கடைகளில் ஹலால் முறையில் வெட்டப்படும் கறிகளை வாங்கி வருகிறார்கள்.

அது மட்டுமல்ல தற்போது மெக்டொனால்ட் போன்ற அசைவ உணவு கடைகளும் ஹலால் முறையில் வெட்டப்பட்ட மிருகங்களையே பரிமாறி வருகின்றன. இது இந்து முறைப்படி தவறானதாகும்.

2007இல் சீக்கிய அமைப்புகள் மெக்டொனால்ட் போன்ற கடைகளில் சீக்கியர்கள் உணவு வாங்கக்கூடாது என்று அறிவுறுத்தியது. ஏனெனில் அந்த கடைகளில் ஹலால் முறையில் வெட்டப்பட்ட கறிகளையே வினியோகம் செய்கிறார்கள் என்று குற்றம் சாட்டியது.

இந்த செய்தியை ஹிந்துஸ்தான் டைம்ஸ், Jalandhar, October 7, 2003 இதழில் Jhatka vs halal: Sikh body raises meaty issue  என்ற தலைப்பிட்ட பகுதியில் காணலாம்.

ஐரொப்பாவிலும் பல நாடுகளிலும் ஜட்கா என்றும் ஹலால் என்றும் பிரிக்கப்பட்ட உணவு வகைகள் விற்கப்படுகின்றன. அமெரிக்காவில் பல இந்துக்கள் ஜட்கா மாமிசத்தை வாங்குகிறார்கள்.

ஹலால் மூலம் கொல்லப்படும் மிருகங்கள் மிகுந்த கஷ்டத்தை அனுபவிப்பது ஹலால் முறையில் வெட்டப்படும் மிருகத்தை பார்த்தாலே தெரியும். மன தைரியமுள்ளவர்கள் இங்கே வீடியோவை பார்க்கலாம்.

(இதே போல இஸ்லாமிய பயங்கரவாதிகள் மனிதர்களையும் கழுத்தை அறுத்து கொல்லுவதையும் அந்த மனிதர்கள் துடிக்க துடிக்க சாவதையும் இஸ்லாமிய பயங்கரவாதிகள் வெளியிடும் வீடியோக்களில் நீங்கள் பார்த்திருக்கலாம்)

இந்தியாவின் பாரம்பரியத்தில் கொன்றால் பாவம் தின்றால் போச்சு என்று பொதுமக்கள் சொலவடையாக இருக்கிறது. ஆனால், எக்காரணத்தினாலும் ஒரு உயிரை துடிக்க துடிக்க கொல்வதும் அதன் கஷ்டத்தை அதிகரிப்பதும் தவறானது.

ஒரு மிருகம் மெல்ல மெல்ல துடிக்க துடிக்க கொல்லப்படும்போதும் அதிலிருந்து ரத்தம் வெளியேறும் போதும் அதன் உடலின் செல்களில் விஷங்கள் (toxins) உருவாக்கப் படுகின்றன. அது உடலில் உள்ள ரத்தத்தில் கலந்து ஓரளவு வெளியேறினாலும், பல விஷங்கள் அதன் கறிப்பகுதிகளில் தங்குகின்றன. இவை நியூரோ டாக்ஸின் எனப்படும் மூளையையும் நரம்பையும் பாதிக்கும் விஷங்கள்.

indian_butcherஇப்படிப்பட்ட பாதுகாப்பு செயல்பாடு பல மிருகங்களிடம் உள்ளது (Pharmacology of endogenous neurotoxins: a handbook By Andreas Moser).  பல மிருகங்கள் தங்களை எதிரி மிருகங்கள் கொன்றுவிடக்கூடாது என்பதற்காக காயம்பட்ட பகுதியில் விஷத்தை சுரக்கின்றன. இதற்கு மூல காரணமாக இருப்பது உடலில் தோன்றும் வலி. ஆகையால், ஐரோப்பாவில் ஒரு மிருகத்தை Stun செய்து அதாவது அதன் மூளையை செயல்படாமல் ஆக்கிய பின்னால் அந்த மிருகங்கள் கொல்லப்படுகின்றன. இந்த மிருகங்கள் வலி உணர்வதில்லை.  ஆனால், இவை ஹலால் உணவு அல்ல என்று முஸ்லீம்கள் உண்பதில்லை.

ஆனால், ஐரோப்பிய முறைப்படி Stun செய்யப்பட்ட மிருகங்களை கொன்று உண்பது ஜட்கா என்று கூறலாம்.

ஹலால் முறைப்படி வெட்டப்பட்ட மிருகத்தில் ரத்தம் இருப்பதில்லை. ரத்தம் வடிய விடப்பட்டு விடுகிறது. இந்த கறி சுவையற்றதாக ஆனாலும், மென்மையாக ஆகிவிடுவதால், இந்த கறியை பல இந்துக்கள் வாங்கி உண்கின்றனர். அதனால், அந்த துடிக்க துடிக்க கொல்லப்பட்ட மிருகத்தின் துயரத்துக்கு பொறுப்பாளியாகவும் ஆகி விடுகின்றனர்.

In 2003, an independent advisory group – the Farm Animal Welfare Council (FAWC) – concluded that the way halal and kosher meat is produced causes severe suffering to animals and should be banned immediately. FAWC argued that cattle required up to two minutes to bleed to death when such means are employed. The Chairperson of FAWC at the time, Judy MacArthur Clark, added, “this is a major incision into the animal and to say that it doesn’t suffer is quite ridiculous.”

இதே போல விலங்குகள் உரிமைகள் ஸ்தாபனம் போன்றவை மிருகங்களை கொல்வதற்கு பொதுவாக எதிர்ப்பு தெரிவித்தாலும், மிருகங்களை ஹலால் முறையில் கொல்வதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றன.

http://www.guardian.co.uk/uk/2003/may/15/religion.world

பல விலங்கு உரிமை அமைப்புகள் ஹலால் முறையின் கொடூரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஹலால் முறையில் மிருகங்களை கொல்வதை தடை செய்யவேண்டும் என்று கூறி வருகின்றன. இந்தியாவில் இருக்கும் தற்போதைய நிலையில் ஹலால் முறையில் கொடூரமாக மிருகங்களை கொல்வதை தடை செய்ய முடியாது என்றாலும், இந்துக்கள் ஹலால் முறையில் வெட்டப்பட்ட மிருகங்களை வாங்காமல், அந்த பாவத்தில் பங்கு பெறாமல் இருப்பது சிறந்ததாகும். 

தொடர்புடைய பதிவுகள்

குறிச்சொற்கள்: , , , , , , , ,

 

105 மறுமொழிகள் ஹலால் கறியா ஜட்கா கறியா?

  1. R Balaji on March 30, 2010 at 10:40 am

    திரு.ஆர்.கோபால் அவர்களே!

    நான் சைவ முறைப்படி உணவு எடுத்து கொள்வதால் “இந்த விஷயத்தில்”
    பாதி பாவம், முழு பாவம் என்பது எனக்கு இல்லை. (ஹையா!!!).

    (1)இஸ்லாமிய தீவிரவாதிகள் சிக்கும் அப்பாவிகளை வெட்டுவதை,
    விலங்கை வெட்டும் முறையுடன் ஒப்பிட்டது அருமை. இது சில விஷங்களை சொல்லாமல் சொல்லியது.

    (2)எங்கள் தஞ்சாவூர் மாவட்டத்தில் முக்காலே மூணு வீசம் கறிக்கடைகளை
    இஸ்லாமியர்கள்தான் பாகிஸ்தான் கொடியுடன் வைத்திருக்கிறார்கள்.
    கறி சாப்பிடும் பாவப்பட்ட இந்துக்களுக்கு வேறு வழி இருப்பதாக தெரிய
    வில்லை.

    (3)”ஐரோப்பாவில் ஒரு மிருகத்தை Stun செய்து அதாவது அதன் மூளையை செயல்படாமல் ஆக்கிய பின்னால் அந்த மிருகங்கள் கொல்லப்படுகின்றன” என்று கூறியுள்ளீர்கள்.
    இது கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது. பிரிட்டனில் முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் KFC
    கடைகளில் ஹலால் கறி மட்டுமே சில மாதங்களுக்கு வழங்க போவதாக ஒரு செய்தியை படித்தேன்.
    மேலும் பன்றி கறியை இஸ்லாமியர்கள் வெறுப்பதால் அது மெனுவிலிருந்தே நீக்க பட்டிருக்கிறது.
    http://www.dailymail.co.uk/news/article-1260286/KFC-diner-told-bacon-burger–halal.html#ixzz0j84HxsA4

    (4)விலங்குகள் உரிமை ஸ்தாபனங்கள் எதிர்ப்பதை கூறியுள்ளீர்கள்.
    இவர்கள் ஆபத்தானவர்கள். இத்தோடு இவர்கள் நிற்க மாட்டார்கள்.
    வலியே இல்லாமல் கொல்லுவது பெரிய கடைகளுக்கு சாத்தியமாக
    இருக்கலாம். ஆனால் சிறிய் கிராமங்களில் ஜட்கா முறையின் படி கூட
    கொல்லக்கூடாது என்று ஆரம்பித்து விடுவார்கள்.

    (5)சாதாரணமாகவே அஹிம்ஸை கொஞ்சம் பைத்திய காரத்தனமான
    அளவில் இந்துக்களிடம் இருக்கிறது. ஹிம்ஸையினால்தான் அஹிம்ஸையை
    ஸ்தாபிக்க முடியும் என்பதை நாம் இன்று மறந்து விட்டிருக்கிறோம்.
    சுவாமி விவேகானந்தர் கூட இந்துக்களில் பெரும்பாலானோர் விலங்குகளை
    சாப்பிடாதனாலேயே 1000 வருடங்களாக இந்தியா அடிமை பட்டிருந்தது
    என்று கூறியுள்ளார். யாருக்கு விலங்கின் மாமிசம் வேண்டுமோ அவர்களால்
    வாங்க முடிவதில்லை. ஆனால் யாரெல்லாம் கடின வேலை செய்யாதவர்களோ அவர்கள்தான் கறியை தின்று பிற்காலத்தில் கஷ்ட
    படுகிறார்கள்.

  2. chillsam on March 30, 2010 at 2:24 pm

    புனித பைபிளின் கூற்றின்படி ஆதியில் மனிதனைப் படைத்த இறைவன் அவனுக்கு சைவ உணவையே கட்டளையிட்டார்;
    அதாவது பயிரிட்டு சமைத்து உண்ணும் காலம் வரைக்கும்;

    ஆனால் அவன் இறைவனின் கட்டளையை மீறிய நாளின் தன் நிர்வாணத்தை உணர்ந்து மறைவிடம் நோக்கி ஓட இறைவன் அவன் வெட்கத்தை மூட மிருகத்தின் தோலினால் ஆடையை அமைத்துக் கொடுத்தார்;அதுதான் மனுக்குல வரலாற்றில் முதல் இரத்தம் சிந்துதலாக அமைந்திருக்கவேண்டும்;

    அவன் தன் பாவத்தின் நிமித்தம் மனவருத்தம் கொள்ளவேண்டி மிருகபலியை இறைவன் நியமித்தார்; அதுவே பிற்காலத்தில் மாமிசம் உண்பதாக மாறியது; அதையும் இரத்தத்துடன் புசிக்கக்கூடாது என்ற கட்டளை இறைவனால் மனிதனுக்குக் கொடுக்கப்பட்டது;

    ஏனெனில் மாமிசத்தின் உயிர் இரத்தத்தில் இருக்கிறது என்ற மாபெரும் மருத்துவ உண்மையை இறைவனே மனிதனுக்கு அன்றே சொல்லிக்கொடுத்தார்; இரத்தத்தின் அவசியம் முதன்முதலில் பைபிளில்தான் விளக்கப்பட்டுள்ளது என்பது மறுக்கமுடியாத உலகறிந்த உண்மையாகும்;

    அதன்படி பார்த்தால் “ஹலால்” எனப்படும் முறையினையே அரபியர்கள் யூதர்களிடமிருந்துதான் கற்றிருக்கவேண்டும்; ஏனெனில் யூதர்களுக்குத் தான் இறைவனால் எழுதப்பட்ட‌ வேதம் கொடுக்கப்பட்டது;

    இரத்தம் உடலிலிருந்து முழுவதும் வெளியேற வேண்டுமானால் “ஹலால்” முறையே சிறந்தது;

    மிருக வதையைக் குறித்து கரிசனை கொள்பவர் இறைச்சி புசிக்காதிருக்கலாம்..!

  3. ஆர். கோபால் on March 30, 2010 at 8:07 pm

    ஆர். பாலாஜி,

    இது உண்மைதான். முஸ்லீம் கடையில் கறி மென்மையாக இருக்கிறது, ஹலால் உடலுக்கு நல்லது என்றெல்லாம் பொய் பேசி கெடுதியான குரூரமான ஹலாம் உணவே கிடைக்கும் படி விட்டுவிட்டோம்.

    எங்கெல்லாம் இந்துக்கள் கடை வைத்திருக்கிறார்களோ அந்த கறி கடைகளை ஆதரிக்க ஆரம்பிக்க வேண்டும்.

    ஹலால் உடலுக்கு கெடுதி. ஹலால் கறி சாப்பிடுவதால் மூளை பாதிக்கப்ப்டுகிறது என்ற உண்மையை நம் மக்களின் நலனுக்காக நம் மக்களிடம் எடுத்துச் சொல்லவேண்டியது நம் கடமை.

    இந்த உண்மை பரவினால், முஸ்லீம் கடைகளே ஜட்கா இங்கே கிடைக்கும் என்று போர்டு வைப்பார்கள்.

    நன்றி

  4. Haranprasanna on March 30, 2010 at 8:43 pm

    நல்ல காமெடியான கட்டுரை. ஒரே வெட்டா வெட்டுங்க, துடிக்க துடிக்க வெட்டாதீங்க என்பதுதான் எத்தனை நல்ல செய்தி!

  5. ஜட்கா பிரியன் on March 30, 2010 at 8:46 pm

    ஹலால் முறைப்படி கொல்லுதல் கூட பெரிய விஷயமில்லை.
    ஆனால் அந்த ஹலால் செய்வதற்காக கறி கடைகள், ஹோட்டல்கள் வழங்கும் பணம் தான் குண்டு வைப்பதற்கும், தற்கொலைப்படைத் தாக்குதலுக்கும் செலவிடப்படுகிறது என்பது தான் வேதனையான விஷயம்.
    நாமே பணம் கொடுத்து நம்மேலேயே குண்டு போட்டுக்கொள்ளவேண்டுமா ?

  6. Riyas on March 30, 2010 at 11:09 pm

    இந்துக்களை மாமிசம் சாப்பிட வேண்டாம் என்று சொல்லுங்கள் பரவாயில்லை…. அதை விட்டுட்டு இஸ்லாமிய சட்டங்களையோ கொள்கைகளையோ மாற்ற நினைக்காதிர்கள்…

  7. SATHEESH on March 31, 2010 at 1:35 am

    சைவமே சிறந்தது சைவைதால் ஒரு பாதிப்பும் உடம்பிற்கு வருவதில்லை

  8. வீ.சக்திவேல் on March 31, 2010 at 9:06 am

    இந்த முக்கியமான விசயத்தைப் பற்றி தயக்கமோ கூச்சமோ இல்லாமல் கட்டுரை வெளியிட்ட தமிழ்ஹிந்து தளத்திற்குப் பாராட்டுக்கள். ஆர்.கோபால் அவர்களுக்கு நன்றி. இதன் மூலம் பலவிதமான இந்துக்களின் பலவிதமான பிரசினைகள் மீதும் நாம் அக்கறை கொள்ளவேண்டும் என்று உணர்த்தி உள்ளீர்கள்.

    எல்லாரும் சைவ உணவுக்கு மாறுவது என்பது நடைமுறையில் சாத்தியம் கிடையாது… , தீர்வும் கிடையாது.. இந்துக்களில் மெஜாரிடி மாமிச பட்சணிகள் என்கிறது ஞாபகம் இருக்கட்டும். (ஆயினும் விசேஷ நாட்களில் அசைவம் தவிர்ப்பது போன்ற கட்டுப் பாடுகள் கொண்டவர்கள்). நமது சத்திரிய வீரர்கர் ராமர், அர்ஜுனன், பீமன் எல்லாம் அசைவ உணவுப் பழக்கம் கொண்டிருந்தார்கள் என்று இதிகாசம் சொல்கிறது. ஆயுர்வேதத்தில் எநதெந்த மிருகங்களின் இறைச்சியை எப்படி உண்ண வேண்டும் என்பது பற்றி சொல்லும் மாமிச சாஸ்திரம் கூட இருக்கிறது. இந்துக்களின் இறைச்சி உணவு பழக்கங்கள் இதிலிருந்து வந்தவை தான்..

    ஹலால் இந்து மதத்தின் விதிகளுக்கு முற்றிலும் எதிரானது.. ஹலால் மாமிசத்தை உண்பது ஆரோக்கிய ரீதியாகவும், மத ரீதியாகவும் தவறு என்று இந்துக்களுக்கு புரிய வைக்க வேண்டும்.. இதை ஒரு இயக்கமாகவே நடத்த வேண்டும்.

    தமிழகத்தில் பொருளாதார ரீதியாக, இறைச்சி வியாபாரத்தை முஸ்லீம்கள் முழுக்க தங்கள் கையில் கொண்டுவரப் பார்க்கிறார்கள். ஏற்கனவே பல வியாபாரங்கள் இந்துக்கள் கையை விட்டுப் போய்க் கொண்டிருக்கிறது.. இதையும் இந்துக்கள் நழுவ விடக் கூடாது.. ஆந்திராவில் வெங்கடேஸ்வரா ஹாட்சரீஸ் போன்ற பெரிய அளவிலான கோழி இறைச்சி உற்பத்தி கம்பெஇனிகளை இந்துக்கள் தான் நடத்துகிறார்கள்..

    //
    Riyas
    30 March 2010 at 11:09 pm
    இந்துக்களை மாமிசம் சாப்பிட வேண்டாம் என்று சொல்லுங்கள் பரவாயில்லை…. அதை விட்டுட்டு இஸ்லாமிய சட்டங்களையோ கொள்கைகளையோ மாற்ற நினைக்காதிர்கள்… //

    இதில் அப்படி எங்கே சொல்கிறார்கள்? ஹலால் மாமிசம் சாப்பிடாதீர்கள் என்று *இந்துக்களிடம்* தானே ஐயா அறிவுரை கூறுகிறார்கள் ?????

  9. nellaisiraj on March 31, 2010 at 10:23 am

    இந்துக்கள் ஆகிய நீங்கள் தான் புலால் ( அசைவம் ) உண்ணக்கூடாது என்று சொல்லுகிறிர்கள். ஹலால், ஜட்கா என்ற கவலை உங்களுக்கு எதற்கு? ஹலால் தவறு என்றால் ஆய்வு மூலம் நிருபிக்கவும் . ஜட்கா சரி என்றாலும் ஆய்வு மூலம் நிருபிக்கவும்.

  10. உயிர்நேசன் on March 31, 2010 at 11:08 am

    Save the planet: Stop eating meat

    The UN says so, and so do a growing list of school boards. Meet the new eco enemy.
    http://www2.macleans.ca/2010/03/30/save-the-planet-stop-eating-meat/

  11. Singapore on March 31, 2010 at 2:13 pm

    Hello Mr.Kafirs,
    What you have written was bloody proof less and ridiculous. You don’t have any strong supportive document to proof that you are correct. Again don’t proove that you Kafir’s (HIndus) have no proof like praying sand and stones!!!
    The link you submit “http://www.guardian.co.uk/uk/2003/may/15/religion.world” is for inhumane topic…
    plz see the below rebut
    http://www.themodernreligion.com/misc/an/an_slaughter.htm
    I bet my head if you provide any witness that halal food is not edible..
    Plz don’t abuse internet by sending false alarm.. try to be a gentleman… If you dare plz publish this comment

  12. armchaircritic on March 31, 2010 at 5:19 pm

    //nellaisiraj
    31 March 2010 at 10:23 am

    இந்துக்கள் ஆகிய நீங்கள் தான் புலால் ( அசைவம் ) உண்ணக்கூடாது என்று சொல்லுகிறிர்கள். ஹலால், ஜட்கா என்ற கவலை உங்களுக்கு எதற்கு? ஹலால் தவறு என்றால் ஆய்வு மூலம் நிருபிக்கவும் . ஜட்கா சரி என்றாலும் ஆய்வு மூலம் நிருபிக்கவும்.//
    நெல்லைசிராஜ் அவர்களே வெறும் மறுமொழிகளை மட்டும் படித்து விட்டு எழுத வேண்டாம். கட்டுரயையும் படிக்கவும். உங்களுடைய ஒவ்வொரு வாக்கியமும் தவறு என்று புரியும்.

  13. Raja on March 31, 2010 at 6:00 pm

    ஹரன் பிரசன்னா சொன்னது போல இது ஒரு காமெடியான கட்டுரை. தமிழ் ஹிந்து இந்த மாதிரி விஷயங்களில் கவனம் செலுத்தி, அதிலும் ஹிந்துக்கள் உயர்ந்தவர்கள் என்று நிரூபிப்பது வேதனைக்கு உரியது. கொல்லுவதே பாவம்..அதில் ஹிந்து முறையாம்..முஸ்லிம் முறையாம்..

  14. ஆர். கோபால் on March 31, 2010 at 7:16 pm

    ஹரன் பிரசன்னா அவர்களே,

    உங்களின் நெருங்கிய நண்பர் ஒருவர் மரணமடைகிறார் என்று வைத்துக்கொள்வோம். அவர் அதிக வலி உணராமல் தடக்கென்று மரணமடைகிறார், அல்லது உயிரோடு தோலை உரித்து துடிக்க துடிக்க கொல்லப்படுகிறார்.
    இதில் எதற்கு நீங்கள் மிக மனவருத்தமடைவீர்கள்?

  15. kargil jay on March 31, 2010 at 7:33 pm

    //இந்துக்கள் ஆகிய நீங்கள் தான் புலால் ( அசைவம் ) உண்ணக்கூடாது என்று சொல்லுகிறிர்கள். ஹலால், ஜட்கா என்ற கவலை உங்களுக்கு எதற்கு? ஹலால் தவறு என்றால் ஆய்வு மூலம் நிருபிக்கவும் . ஜட்கா சரி என்றாலும் ஆய்வு மூலம் நிருபிக்கவும்/

    திரு நெல்லை சிராஜ்,
    கசாப்புக் கடை வைத்திருக்கும் முகமதியர் ஹலால் நல்லது, ஹலால் கறி சாப்பிட்டால் நோய்கள் ஏற்படாது என்று கூறுகிறீர்களே, அதை ஆய்வு மூலம் நீங்கள் நிரூபிக்கலாமே? மேலும் கட்டுரையில் இதை நீங்கள் படித்தால் மாதிரி தெரியவில்லையே?
    //ஒரு மிருகம் மெல்ல மெல்ல துடிக்க துடிக்க கொல்லப்படும்போதும் அதிலிருந்து ரத்தம் வெளியேறும் போதும் அதன் உடலின் செல்களில் விஷங்கள் (toxins) உருவாக்கப் படுகின்றன. அது உடலில் உள்ள ரத்தத்தில் கலந்து ஓரளவு வெளியேறினாலும், பல விஷங்கள் அதன் கறிப்பகுதிகளில் தங்குகின்றன. இவை நியூரோ டாக்ஸின் எனப்படும் மூளையையும் நரம்பையும் பாதிக்கும் விஷங்கள்.

    இப்படிப்பட்ட பாதுகாப்பு செயல்பாடு பல மிருகங்களிடம் உள்ளது (Pharmacology of endogenous neurotoxins: a handbook By Andreas Moser). பல மிருகங்கள் தங்களை எதிரி மிருகங்கள் கொன்றுவிடக்கூடாது என்பதற்காக காயம்பட்ட பகுதியில் விஷத்தை சுரக்கின்றன.
    //

  16. ஆர்.கோபால் on April 1, 2010 at 7:32 am

    இந்த கட்டுரை அசைவம் சாப்பிடும் இந்துக்களுக்கான கட்டுரை. தயவு செய்து இதனை சைவம் vs அசைவம் என்ற விவாதமாக ஆக்கிவிட வேண்டாம்.
    நன்றி

  17. Ram on April 1, 2010 at 10:44 am

    Hello Mr.Singapore –
    This is a forum for Tamil Hindus and we do not want interference of others. There is another tamil website for the non-Kaffirs like you. All that is written in that website is absolutely ridiculouos and false. You beleive what you want to do and let us do what we have to.

  18. ஜட்கா பிரியன் on April 1, 2010 at 3:50 pm

    இரும்படிக்கும் இடத்தில் ஈக்கள் வரத்தேவையில்லை.
    மரக்கறி சாப்பிடுபவர்கள் இந்த விவாதத்தில் எல்லாம் தேவையில்லாமல் வந்து தலை காட்டவேண்டாம்.
    இது அவர்களுக்கான இடம் அல்ல. விவாதமும் புலால் உண்ணுதல் பாவமா, புலால் உண்ணாமை புன்னியமா என்பது பற்றியும் அல்ல.

    90 சதவிகித இந்துக்கள் உண்ணும் கறியை இப்படி இஸ்லாமிய முறைப்படி வெட்டி சாப்பிடுவது நல்லது என்பது எவ்வளவு பெரிய மூடத்தனம்.
    மேலும் ஹலால் சான்றிதழ் வழங்க இஸ்லாமியர் அலலாத ஹோட்டல்கள், கறிக்கடைகள் கூட மசூதி முல்லாவுக்குப் பணம் கொடுக்கிறார்கள். அப்பணம் எங்கெல்லாம் பாயக்கூடியது என்பதையும் மனதில் கொள்ள வேண்டும்.

  19. nellaisiraj on April 1, 2010 at 6:47 pm

    armchaircritic
    31 March 2010 at 5:19 pm
    நெல்லைசிராஜ் அவர்களே வெறும் மறுமொழிகளை மட்டும் படித்து விட்டு எழுத வேண்டாம். கட்டுரயையும் படிக்கவும். உங்களுடைய ஒவ்வொரு வாக்கியமும் தவறு என்று புரியும்

    kargil jay
    31 March 2010 at 7:33 pm
    திரு நெல்லை சிராஜ்,
    கசாப்புக் கடை வைத்திருக்கும் முகமதியர் ஹலால் நல்லது, ஹலால் கறி சாப்பிட்டால் நோய்கள் ஏற்படாது என்று கூறுகிறீர்களே, அதை ஆய்வு மூலம் நீங்கள் நிரூபிக்கலாமே? மேலும் கட்டுரையில் இதை நீங்கள் படித்தால் மாதிரி தெரியவில்லையே?
    //ஒரு மிருகம் மெல்ல மெல்ல துடிக்க துடிக்க கொல்லப்படும்போதும் அதிலிருந்து ரத்தம் வெளியேறும் போதும் அதன் உடலின் செல்களில் விஷங்கள் (toxins) உருவாக்கப் படுகின்றன. அது உடலில் உள்ள ரத்தத்தில் கலந்து ஓரளவு வெளியேறினாலும், பல விஷங்கள் அதன் கறிப்பகுதிகளில் தங்குகின்றன. இவை நியூரோ டாக்ஸின் எனப்படும் மூளையையும் நரம்பையும் பாதிக்கும் விஷங்கள்.

    இப்படிப்பட்ட பாதுகாப்பு செயல்பாடு பல மிருகங்களிடம் உள்ளது (Pharmacology of endogenous neurotoxins: a handbook By Andreas Moser). பல மிருகங்கள் தங்களை எதிரி மிருகங்கள் கொன்றுவிடக்கூடாது என்பதற்காக காயம்பட்ட பகுதியில் விஷத்தை சுரக்கின்றன.
    //
    பிராணிகளின் குரல் வளையில் கூர்மையான கத்தி மூலம் அறுத்துத் தான் பிராணிகளைக் கொள்ள வேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது. குரல்வளை மிக விரைவாக அறுக்கப்படுவதால் மூளையுடன் உள்ள தொடர்பு அறுந்து போகின்றது.இதனால் அப்பிராணிகளால் வலியை உணர முடியாது. இரத்தத்தை வெளியேற்றுவதற்காக உடல் துடிக்கிறது; வேதனையால் அல்ல என்பதை சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
    ஜெர்மனி நாட்டில் உள்ள ஹனோவர் பல்கலைக் கழகத்தில் ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆய்வை நடத்தியவர்கள். பேராசிரியர் சூல்ட்ஜ் மற்றும் அவரது துணை ஆய்வாளர் டாக்டர் ஹாஸிம் ஆவார்கள்.
    அவர்கள் செய்த பரிசோதனையின் விவரத்தையும் அதன் முடிவுகளின் விவரத்தையும் கீழே தருகின்றேன்.
    1) முதலில் உணவுக்காக அறுக்கப்படும் விலங்குகள் தேர்வு செய்யப்பட்டன.
    2)அறுவை சிகிச்சை செய்து அவ்விலங்குகளின் தலையில் மூளையை தொடும்படி பல பகுதிகளில் மின்னணுக் கருவிகள் பொருத்தப்பட்டன.
    3) உணர்வு திரும்பியதும். முழுவதுமாக குணமடைய பல வாரங்களுக்கு அப்படியே விடப்பட்டன.
    4) அதன் பிறகு பாதி எண்ணிக்கை விலங்குகள் இஸ்லாமிய ஹலால் முறைப்படி அறுக்கப்பட்டன.
    5) மறு பாதி எண்ணிக்கை விலங்குகள் மேற்கத்தியர் கையாளும் ஜட்கா முறைப்படி கொல்லப்பட்டன.
    6) பரிசோதனையின் போது கொல்லப்பட்ட எல்லா விலங்குகளுக்கும் ஊ.ஊ.ஏ. மற்றும் ஊ.ஈ.ஏ. பதிவு செய்யப்பட்டன. அதாவது ஊ.ஊ.ஏ. மூளையின் நிலையையும், ஊ.ஈ.ஏ. இருதய நிலையையும் படம் பிடித்து காட்டின. இப்போது மேற்கண்ட பரிசோதனையின் முடிவுகளையும், அதன் விளக்கங்களையும் காண்போம்.
    இஸ்லாம் கூறும் ஹலால் முறை :
    1) இம்முறையில் விலங்குகள் அறுக்கப்பட்ட போது, முதல் மூன்று வினாடிகளுக்கு ஊ.ஊ.ஏ.-ல் எந்த மாற்றமும் தென்படவில்லை. அறுக்கப்படுவதற்கு முன்னிருந்த நிலையிலேயே அது தொடர்ந்து நீடித்தது. விலங்குகள் அறுக்கப்படும் போத அவை வலியினால் துன்பப்படவில்லை என்பதை இது காட்டியது.
    2) மூன்று வினாடிகளுக்குப் பின் அடுத்த மூன்று வினாடிகளுக்கு விலங்குகள் ஆழ்ந்த தூக்கம் அல்லது உணர்வற்ற நிலைக்கு ஆளாகின்றன என்பதை ஊ.ஊ.ஏ. பதிவு காட்டியது. அந்நிலை உடம்பிலிருந்து அதிகப்படியான இரத்தம் பீறிட்டு வெளியாவதால் ஏற்படுகின்றது.
    3) மேற்கண்ட ஆறு வினாடிகளுக்குப் பின் ஊ.ஊ.ஏ. பூஜ்ய நிலையைப் பதிவு செய்தது. அறுக்கப்பட்ட விலங்கு எந்த வலிக்கும் அல்லது வதைக்கும் ஆளாகவில்லை என்பதை இது காட்டியது.
    4) மூளையின் நிலையை பூஜ்யமாகப் பதிவு செய்த நேரத்திலும், இதயத் துடிப்பு நிற்காமல் தொடர்ந்து துடிப்பதாலும் எடலில் ஏற்படும் வலிப்பினாலும் உடலிலிருந்து முற்றிலுமாக இரத்தம் வெளியேற்றப்படுகிறது. அதனால் அந்த மாமிசம் உணவுக்கேற்ற சுகாதாரநிலையை அடைகிறது. வெளியேற்றப்பட்ட இரத்தத்தோடு கிருமிகளும் சேர்ந்து வெளியாகி விடுவதே இதற்கு காரணம்
    முஸ்லிமல்லாதவர்கள் பிராணிகளைக் கொள்ளும் ஜட்கா முறை :
    1) இந்த முறையில் கொல்லப்படும் விலங்குகள் உடனே நிலை குலைந்து போய் உணர்வற்ற நிலைக்குப் போகின்றன.
    2) அப்போது விலங்குகள் மிகக் கடுமையான வலியால் அவதியுறுவதை ஊ.ஊ.ஏ. பதிவு காட்டியது.
    3) அதே நேரத்தில் விலங்குகளின் இதயம் ஹலால் முறையில் அறுக்கப்பட்ட விலங்குகளோடு ஒப்பிடும் போது முன்னதாகவே நின்று விடுகிறது. அதனால் உடலில் மிகுதியான இரத்தம் தேங்கிவிடுகிறது. இரத்தம் உறைந்த அந்த மாமிசம் உட்கொளளத்தக்க சுகாதார நிலையை அடையவில்லை.
    உடலில் தேங்கிய உறைந்து போன இரத்தத்தில் கிருமிகள் தங்கிவிடுவதால் சுகாதாரமற்றது என்பதற்குரிய காரணங்களாகும். மேற்கண்ட ஆய்வுகள் இஸ்லாமிய ஹலால் முறையே சிறந்தது என்பதை எடுத்துக் காட்டுவதோடு அம்முறையே மனிதாபிமான முறை என்பதையே நிரூப்பித்துள்ளது.

    சைவம் மற்றும் அசைவம் ஆகிய இரு உணவுகளையும் ஜீரணிக்கும் வகையில் மனிதனின் குடலை இறைவன் அமைத்திருப்பதும் சிந்திக்கத்தக்கது

  20. kargil jay on April 1, 2010 at 8:05 pm

    //இரும்படிக்கும் இடத்தில் ஈக்கள் வரத்தேவையில்லை.//
    இது இரும்படிக்கும் இடம் அல்ல. இரும், படிக்கும் இடம். அதனால் பதில் சொல்வதே முறையானது.

    இஸ்லாமிய மற்றும் சைவ பழக்கமுள்ள நண்பர்களுக்கு :

    ஓரறிவு உயிர் முதல் ஆறறிவு உயிர்வரை ஒவ்வொன்றுக்கும் உணர்ச்சி வித்தியாசம் மிக மிக அதிகம். ஒரு மீனுக்கு வலி உணர்ச்சி என்பது குறைவு, ஒரு தாவரத்துக்கு மிக மிகக் குறைவு. ஒரு பசுவுக்கு, நாய்க்கு அல்லது மானுக்கு வலி என்பது அதிகம், மனிதனுக்கு அதைவிட அதிகம்.

    ஒரு மனிதன் தன் உற்றோரை இழந்தால் படும் துன்பம் ஒரு மிருகம் தன் உற்றோரை இழந்தால் படும் துன்பத்தை விட மிக அதிகம். ஒரு கற்பழிப்பு அல்லது பலாத்காரம் என்பது எந்த வாயில்லா ஜீவனையும் விட மனித இனத்தை அதிகம் பாதிக்கிறது. அதேபோல் பசுவின் அன்பும் உணர்ச்சியும் வலியும் ஒரு மீனைவிட மிக அதிகம்.

    ஆகவே இதுதான் என் தாழ்மையான அபிப்ராயம்:
    சைவத்தை விட அசைவம் அதிக வலி ஏற்படுத்துகிறது. அசைவத்தில் ஹலால் முறை மேலும் அதிக வலி ஏற்படுத்துவதாகும். ஹலால் என்பது, ஒரு பிராணியை கழுத்தை வெட்டி பின் துடிப்பதை பார்ப்பது சாடிசமும் (sadism) கூட. ஒரு பிராணியை கழுத்தை வெட்டி பின் துடிப்பதை பார்ப்பது, மனிதனை மேலும் கொலை பாதகத்துக்கு அஞ்சாதவராக்கக் கூடும்.

  21. Murugan on April 1, 2010 at 10:48 pm

    Dear Hindus,

    It is right to point that this is a discussion on which Halal or Jatka method of killing the animal is less harmful to human being. Sad to note that many muslim friends justify the halal method, if we compare bit by bit killing or at one cut?

    It is necessary to bring some truth on bacteria and virus infection in these two methods, that will speak.

    regards

    Murugan

  22. ஆர். கோபால் on April 2, 2010 at 2:19 am

    இந்த இணைப்பையும் சகோதரர்கள் படித்துக்கொள்ள வேண்டுகிறேன்.
    சீக்கியர்களுக்காக உலகெங்கும் ஜட்கா கறியே விற்கப்படுகிறது. சீக்கியர்களை பொறுத்த மட்டில் ஹலால் என்னும் குரூர கறி ஒதுக்க வேண்டியது.

    http://www.worldsikhnews.com/21%20January%202009/Goat%20Sacrifice%20at%20Hazur%20Sahib%20%20Myth%20&%20Truth.htm

  23. armchaircritic on April 2, 2010 at 1:23 pm

    //nellaisiraj
    1 April 2010 at 6:47 pm //
    இந்த மறுமொழியில் கொடுக்கப்பட்ட விவரங்கள் அனைத்தும் நெல்லைசிராஜ் அவர்களின் முந்தைய மறுமொழியில் கொடுக்கப்பட்ட linkல் உள்ளதுதான். ஒரே ஒரு வித்தியாசம் மூலத்தில் compare செய்யப்பட்டது இஸ்லாமிய ஹலால் முறையும் ஐரோப்பிய ‘stunning the animal before killing’ முறையும்தான். ஜட்கா முறை அந்த ஆய்வில் எடுத்துக்கொள்ளப் படவில்லை!

  24. ஆர். கோபால் on April 2, 2010 at 7:29 pm

    இந்துக்களின் வாளாக விளங்கிய சீக்கியர்கள் ஹலாலை வெறுத்து ஒதுக்கினார்கள். ஹலாலை வாங்குவது இஸ்லாமை நியாயப்படுத்துவதாக ஆகும், ஆள்கின்ற முகலாய அரசுக்கு ஆதரவளிப்பதாக ஆகும் என்று ஒதுக்கினார்கள்.
    சீக்கியர்கள் முஸ்லிம் ஹலால் கறியை குத்தா கறி என்றே அழைக்கிறார்கள். நாமும் அப்படியே அழைப்போம்.

    குத்தா கறியை சாப்பிடுவது பெரும் பாவங்களில் ஒன்று. துடிக்க துடிக்க செய்யப்பட்ட கொலையில் பங்கு பெறுவதாகும்.

    http://www.glamfaith.org/uk/faith-groups/7/dietary_laws/

    If a Sikh eats meat they must ensure that the meat is ‘jhatka’. Jhatka means that the animal has been killed quickly without suffering or religious ritual.

    இங்கே ரியாஸ் என்பவர் ஆராய்ச்சிகளை காட்டுகிறார். இது போலியான ஆராய்ச்சியாகும். ஹலால் சரி என்று காட்டுவதற்காக முஸ்லீமகளும் யூதர்களும் இப்படிப்பட்ட ஆராய்ச்சிகளை செய்து பரப்புகிறார்கள். இதெல்லாம் உள் நோக்கம் கொண்டவை. மூளைக்கு போகும் ரத்தக்குழாயை வெட்டினால் மூளைக்கு ரத்தம் போகாது என்றெல்லாம் பொய் பேசுகிறார்கள். அந்த ரத்தகுழாயைத்தான் வெட்டுகிறார்களா என்று என்ன ஆதாரம்? மெல்ல கழுத்தை வெட்டி துடிக்க துடிக்க சாவதைத்தான் நீங்கள் வீடியோக்களில் பார்க்கமுடியும்

    தடக்கென்று முழு கழுத்தையும் வெட்டினால் உடனே மூளை செயலிழக்கிறது என்று தெரிகிறது. விஷங்களை உற்பத்தி செய்ய மூளை கட்டளையிடமுடியாது என்று தெரிகிறது. ஆகவே, உடல் துடிக்க துடிக்க கொல்லப்படும் விலங்கில் உருவாகும் விஷத்தையும் சேர்த்து சாப்பிடாதீர்கள்.

    பல்லாயிரம் வருடங்களாக இந்துக்கள் ஜட்கா முறையிலேயே உண்டு வந்தார்கள். அதற்கு நிச்சயம் காரணங்கள் உண்டு. எது மனிதனுக்கு நல்லது, மனித உடலுக்கு நல்லது என்று இந்துக்கள் உருவாக்கிய பழக்கங்களை இன்று விட்டுக்கொடுத்துவிட்டு விஷத்தை உடலில் ஏற்றிகொள்ளாதீர்கள்.

  25. ரங்கசாமி on April 2, 2010 at 7:32 pm

    மிக நல்ல கட்டுரை.
    இதனை தயவு செய்து பிட் நோட்டீஸ் அடிப்பதற்கு தகுந்தற்போல பிடிஎஃப் கோப்பாக ஆக்கி டவுன் லோட் செய்ய கொடுத்தால் நன்றாக இருக்கும்.
    அப்படியே பிரிண்ட் செய்து ஊர்களில் வினியோகிக்க வசதியாக இருக்கும்.

    நன்றி

  26. kargil jay on April 2, 2010 at 10:09 pm

    nellai siraj ,
    You are contradicting with your own words :

    //1) இந்த முறையில் கொல்லப்படும் விலங்குகள் உடனே நிலை குலைந்து போய் உணர்வற்ற நிலைக்குப் போகின்றன.
    2) அப்போது விலங்குகள் மிகக் கடுமையான வலியால் அவதியுறுவதை ஊ.ஊ.ஏ. பதிவு காட்டியது.//

    உணர்வற்ற நிலைக்கு சென்றபின் எவ்வாறு வலியால் அவதியுற முடியும்? முரண்பாடில்லையா இது? சற்றே சிந்தித்து பாருங்களேன்.

    ஒரு பசு இரத்தம் வெளியேறும்போது துடிதுடிப்பதை ‘வலியெல்லாம் ஒண்ணும் இல்லை, இரத்தம் சீக்கரம் வெளியேற, கறி ருசியா இருக்கனும்னுதான் துடிக்குது’ என்று நீங்கள் சொல்வது சாடிசம் (sadistic pleasure) மட்டுமே.

  27. nellaisiraj on April 2, 2010 at 10:30 pm

    ஜட்கா பிரியன்
    30 March 2010 at 8:46 pm
    ஹலால் முறைப்படி கொல்லுதல் கூட பெரிய விஷயமில்லை.
    ஆனால் அந்த ஹலால் செய்வதற்காக கறி கடைகள், ஹோட்டல்கள் வழங்கும் பணம் தான் குண்டு வைப்பதற்கும், தற்கொலைப்படைத் தாக்குதலுக்கும் செலவிடப்படுகிறது என்பது தான் வேதனையான விஷயம்.
    நாமே பணம் கொடுத்து நம்மேலேயே குண்டு போட்டுக்கொள்ளவேண்டுமா ?

    ஜட்கா பிரியன்
    1 April 2010 at 3:50 pm
    இரும்படிக்கும் இடத்தில் ஈக்கள் வரத்தேவையில்லை.
    மரக்கறி சாப்பிடுபவர்கள் இந்த விவாதத்தில் எல்லாம் தேவையில்லாமல் வந்து தலை காட்டவேண்டாம்.
    இது அவர்களுக்கான இடம் அல்ல. விவாதமும் புலால் உண்ணுதல் பாவமா, புலால் உண்ணாமை புன்னியமா என்பது பற்றியும் அல்ல.
    90 சதவிகித இந்துக்கள் உண்ணும் கறியை இப்படி இஸ்லாமிய முறைப்படி வெட்டி சாப்பிடுவது நல்லது என்பது எவ்வளவு பெரிய மூடத்தனம்.
    மேலும் ஹலால் சான்றிதழ் வழங்க இஸ்லாமியர் அலலாத ஹோட்டல்கள், கறிக்கடைகள் கூட மசூதி முல்லாவுக்குப் பணம் கொடுக்கிறார்கள். அப்பணம் எங்கெல்லாம் பாயக்கூடியது என்பதையும் மனதில் கொள்ள வேண்டும்.

    சகோதரர் ஜட்கா பிரியன் அவர்களே! தேவையில்லாமல் ஆதாரமில்லாத கற்பனை செய்திகளைக் கூறி அண்ணன் தம்பிகளாக, மாமன் மச்சான்களாக ஒற்றுமையுடன் வாழ்ந்த வந்த சமுதாயத்தை அரசியல்வாதிகள் தங்களுடைய சுய நலனுக்காக மதவெறியை தூண்டி வன்முறைகளை ஏற்படுத்தி குளிர் காய்வதைப் போல் தாங்களும் நினைக்காதீர்! இந்திய சுதந்திரத்திற்கு பின் மலேகான் குண்டு வெடிப்பு சம்பவம் வரை அதிகமான குண்டு வெடிப்பு சம்பங்களை முன் நின்று நடத்தியது யார்? நீங்கள் விரும்பினால் அதனையும் ஆய்வு அறிக்கையாக வெளியீடத் தயார்!

  28. அட என்ன அறிவு உங்களுக்கு ஜடுக்கா ஹலால் விலக்கம் இதை சில்பேர் உன்மை என்று நம்பி அதற்க்கு விலக்கம்வேரு

    ஜடுக்கா என்றால் உதறல் (ஜடுக்கா வண்டி என்றால் குதிரை வண்டி அது குதித்து செல்வதால் அந்த பெயர் இது உருது மொழி)

    ஹலால் என்றால் அனுமதிக்க பட்டது, ஹராம் என்றால் அனுமதிக்காதது,

    பன்றி கறி ஹராம் முஸ்லீம் சாப்பிட கூடாது

    கோழி கறி ஹலால் சப்பிடலாம்.

    முஸ்லீம்கள் இங்கு எப்படி அறுக்கிறார்களோ அப்படிதான் உலகம் முழுவதும் அறுப்பார்கள்

    ஹிந்துக்களுக்கு அப்படி ஒரு விதிமுறை இருக்கா எங்கவூர் பக்கத்தில் கோழியை பூசாரி பல்லால் கடித்து கொள்லுவார் அந்தகோழியை சமைத்து சாப்பிடுவார்கள் பல்லால் கடித்தகோழி மூன்றாம் வகுப்பு படித்தவனுக்கு கூட தெறியும் அதில் விஷம் இருக்கும் என்று.
    இங்கு உல்லகோயிலில் வந்து சொல்லி பாருங்கள் உங்கள் கழுத்தை கடித்துவிடுவார் பூசாரி

  29. nellaisiraj on April 3, 2010 at 10:16 am

    kargil jay

    ஓரறிவு உயிர் முதல் ஆறறிவு உயிர்வரை ஒவ்வொன்றுக்கும் உணர்ச்சி வித்தியாசம் மிக மிக அதிகம். ஒரு மீனுக்கு வலி உணர்ச்சி என்பது குறைவு, ஒரு தாவரத்துக்கு மிக மிகக் குறைவு. ஒரு பசுவுக்கு, நாய்க்கு அல்லது மானுக்கு வலி என்பது அதிகம், மனிதனுக்கு அதைவிட அதிகம்.

    சகோதரர் kargil jay
    ஓரறிவு உயிர் முதல் ஆறறிவு உயிர்வரை ஒவ்வொன்றுக்கும் உணர்ச்சி வித்தியாசம் மிக மிக அதிகம். என்று குறிப்பிட்டு இருக்கிறீர்கள் உயிர்கள் என்று பார்த்தோம் என்றால் அனைத்துமே உயிர்கள் தான் இதில்; ஓரறிவு உயிர் ஆறறிவு உயிர் என்று பாகுபாடு காட்டுவது சரியில்லை

  30. nellaisiraj on April 3, 2010 at 11:41 am

    kargil jay

    திரு நெல்லை சிராஜ்,
    கசாப்புக் கடை வைத்திருக்கும் முகமதியர் ஹலால் நல்லது, ஹலால் கறி சாப்பிட்டால் நோய்கள் ஏற்படாது என்று கூறுகிறீர்களே, அதை ஆய்வு மூலம் நீங்கள் நிரூபிக்கலாமே?

    சகோதரர் kargil jay
    இஸ்லாமிய முறையில் கால்நடைகளை அறுக்கும் விதம்.
    அரபிமொழியில் “ஸக்காத்” என்றால் “தூய்மை” என்ற பொருள். மேற்படி சொல்லிலிருந்து “ஸக்கய்தும்” (தூய்மைப்படுத்துதல்) என்ற வினைச்சொல் பெறப்பட்டது. இஸ்லாமிய முறையில் கால்நடைகளை அறுப்பதற்கு கீழக்காணும் நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டிருக்க வேண்டும்.
    A. கால்நடைகளை அறுக்க பயன்படும் கத்தி அல்லது வாள் மிகக் கூர்மையானதாக இருக்க வேண்டும். கால்நடைகள் மிகக் கூர்மையான கத்தி அல்லது வாளால் அறுக்கப்பட வேண்டும். அறுக்கும் போது கால்நடைகள் வலியை உணராதவாறு அல்லது மிகக் குறைவாகவே வலியை உணருமாறு – மிக வேகமாக அறுக்கப்பட வேண்டும்.
    B. “ஸபிஹா” என்றால் அரபிமொழியில் அறுத்தல் என்று பொருள்படும். மேற்படி இஸ்லாமிய முறையில் கால்நடைகளை அறுக்கும்போது கழுத்தில் உள்ள மூச்சுக் குழாயும் இரத்தக்குழாயும் ஒரே சமயத்தில் அறுக்கப்பட்டு கால்நடைகளை உயிரிழக்கச் செய்ய வேண்டும். அவ்வாறு செய்யும்போது கால்நடைகளின் நரம்பு மண்டலம் துண்டிக்கப்படாமல் இருக்க வேண்டும்.
    C. அறுக்கப்பட்ட கால்நடைகளின் உடலில் உள்ள இரத்தம் முழுவதும் வழியும்படிச் செய்ய வேண்டும். இரத்தம் முழுவதும் வழிந்தோடச் செய்வதன் நோக்கம், அறுக்கப்பட்ட கால்நடைகளின் இரத்தம் இரத்தக் குழாய்களில் தங்கி கிருமிகள் உருவாகாமல் இருக்க வேண்டியாகும். கால்நடைகளை அறுக்கும் போது தண்டுவடம் துண்டிக்கப்படாமல் இருக்க வேண்டும். தண்டுவடம் துண்டிக்கப்படுவதால் இதயத்திற்கு செல்லக்கூடிய இரத்த நாளங்கள் பாதிக்கப்பட்டு இதயம் திடீரென நின்று போகக் கூடிய நிலை உண்டாகலாம். இதனால் இதயத்தில் உள்ள இரத்தம் இரத்த நாளங்களிலேயே தங்கிவிடக் கூடும்.
    D. இறைச்சியில் நோய்க்கிருமிகள் உருவாகக் காரணமாக அமைவது ஓட்டப்படாத இரத்தமே. இஸ்லாமிய முறையில் கால்நடைகளை அறுக்கும்போது, கால்நடைகளின் உடலில் உள்ள இரத்தம் முழுவதும் வழிந்தோடச் செய்யப்படுவதால் நோய்க்கிருமிகள் உருவாவதற்கான சாத்தியக்கூறு பெருமளவு குறைக்கப்படுகிறது.
    E. கால்நடைகளின் கழுத்திலிருக்கும் இரத்ததக்குழாயும், சுவாசக்குழாயும் மிக வேகமாக அறுக்கப்படுவதால், இரத்தம் அனிச்சைச் செயலாக அப்பகுதிக்கு விரைவாக அனுப்பப்படுகிறது. இதனால் வலியை மூளைக்குக் கடத்திச் செல்லக்கூடிய நரம்புமண்டலம் இச்செயலுக்கான கட்டளைப் பொதியைச் சுமப்பதால் அறுக்கப்படும் கால்நடைகள் வலியை உணர்வதில்லை.
    F. இஸ்லாமிய முறையில் கால்நடைகளை அறுக்கும்போது, கால்நடைகள் வலியை உணர்வதில்லை. இரத்தம் உடலிலிருந்து வெளியேறுவதால், உடலில் உள்ள சதைப்பாகங்கள் இரத்த இழப்பால் சுருங்கி விரிவதால் ஏற்படும் மாற்றத்தால் தான் அறுக்கப்பட்ட மிருகங்கள் துள்ளுவதாகவும், துடிப்பதாகவும் நமக்குத் தெரிகின்றதே தவிர வலியால் அல்ல.

மறுமொழி இடுக:

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.

*

உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:

தமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.

மறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.