மூலம்: ராஜீவ் மல்ஹோத்ரா
தமிழில்: ஜடாயு
மார்ச்-2ம் நாள் சுவாமி நித்யானந்தா செக்ஸ் விவகாரம் வெடித்தபோது, கும்பமேளாவில் கலந்து கொள்வதற்காக வந்த ஒரு குழுவுடன் ஏற்கனவே நான் டில்லியில் வந்து தங்கியிருந்தேன். தமிழ்நாட்டு மத அரசியல் பற்றி, அதிலும் குறிப்பாக அதில் பல்வேறு வெளிநாட்டுத் தொடர்புகளின் பங்கு பற்றி நான் வெளிக்கொணரப் போகும் புதிய புத்தகத்தின் இறுதிக் கட்டப் பணிகளிலும் ஈடுப்பட்டிருந்தேன். எனவே, வீசிக் கொண்டிக்கும் இந்த விவகாரப் புயலின் மையத்தில் புகுந்து இந்த விஷயத்திலும் அத்தகைய தொடர்புகளின் வேலை ஏதாவது இருக்கிறதா என்று விசாரணை செய்ய முடிவெடுத்தேன்.
இயல்பாகவே, ஒரு தளத்தில், கிறிஸ்தவ மதப்பரப்பு சக்திகளின் ஆதரவுடன் இயங்கும் திராவிட இயக்கத்தின் பிளவுபடுத்தும் அரசியலுக்கும், வேதநெறியான இந்து கலாசாரத்திற்கும் இடையே நிகழ்ந்து கொண்டிருக்கும் பண்பாட்டு மோதல் என்ற சட்டகத்தின் வழியாகவே இந்த விவகாரத்தை நான் அணுகினேன். இன்னொரு தளத்தில், ஊடகங்களின் பரபரப்பூட்டும் செய்திகள் அனைத்தும் முற்றாகவே ஒருதலைப் பட்சமாக இருப்பதையும் நான் கண்டேன். ஆரம்பத்தில் இது பற்றி சுவாமியின் தரப்பிலிருந்து என்ன சொல்கிறார்கள் என்பதைப் பற்றி ஒரு செய்தி கூட இல்லை.
மேலும், சுவாமி நித்யானந்தாவின் அமைப்பின் உள்வட்டங்களில் பெரிய குழப்பம்; அவர்களால் இந்த நெருக்கடி முழுக்கவே தவறாகக் கையாளப் பட்டது. இப்போது எண்ணிப் பார்த்தால், அவர்கள் நிலைமையை அறிவுபூர்வமாகவும், விரைவாகவும் கையாண்டிருந்தால் விளைவே வேறு மாதிரியாக இருந்திருக்கும் என்று தோன்றுகிறது. இது பற்றி இந்தக் கட்டுரையில் பின்னர் கூறுகிறேன்.அதோடு, இந்த நிகழ்விலிருந்து மற்ற இந்து அமைப்புகள் கற்க வேண்டிய முக்கியமான பாடங்கள் என்ன என்பதைப் பற்றி சிந்திப்பதும் எனது இன்னொரு முக்கிய நோக்கமாக இருந்த்து. ஏனென்றால், இந்து அமைப்புகளின் பலவீனங்கள் என்னென்ன என்று எதிராளிகளுக்குத் தெரிய வரும்போது, இதே போன்ற விவகாரங்களை மற்ற இந்து அமைப்புகளும் கண்டிப்பாக சந்திக்க வேண்டி வரும். இதனை ஒரு முன்னறிவிப்பாகவே கூறுகிறேன்.
பல தளங்களில் இவ்விஷயமாக நான் கண்டறிந்தவற்றையும், நம் முன் உள்ள பிரசினைகளையும் இந்தக் கட்டுரை விளக்கிச் செல்லும்.
இந்த இரண்டு வார விசாரணைக் காலத்தில், எந்த வித ஐயத்திற்கும் இடம் கொடாமல் சுவாமி நித்யானந்தாவின் அமைப்பு கூறும் அவர்களது தரப்பை பொதுத் தளத்தில் அப்படியே பதிவு செய்வேன் என்ற எனது உறுதிமொழிக்கும் நம்பகமாகவே இருந்திருக்கிறேன். மேலும், ஊடகங்களின் ஒருதலைப் பட்சமான சித்தரிப்புக்களை சமன் செய்யும் விதமாக, இது பற்றிய விசாரணைக்காகவும், மேலும் பண்பாட்டு மோதல்கள் பற்றிய எனது சொந்த ஆய்வுக்காகவும், இவ்விஷயமாக ஆசிரமத்தின் முக்கிய அதிகாரிகளின் குழுவையும் தொடர்பு கொண்டேன். அந்த அமைப்பில் இருக்கும் ஈடுபாடும், நல்லொழுக்கமும் உடைய பல பக்தர்களின் உணர்வுகளை நான் மதிக்கிறேன். இந்த ஆன்மிக அமைப்பிற்காகவே பெரும் தியாகங்கள் செய்தவர்கள் அதில் உண்டு. இந்த விவகாரத்தினால் அவர்களுக்கு ஏற்படப் போகும் இழப்புகளும் பெரியவையே.
மொத்தத்தில் சுவாமி நித்யானந்தவைப் பொறுத்த மட்டில், விஷயம் சரிசெய்ய முடியாதபடி எல்லை மீறிப் போய்விட்டிருக்கிறது என்றே நான் முடிவு செய்யவேண்டியுள்ளது. அவர் இன்னும் தன் பதவியில் தொடர்வது, ஒட்டுமொத்த இந்து தர்ம நலனுக்கு உகந்ததல்ல என்பதோடு ஆசிரமத்தினரையும் பல சங்கடங்களுக்கு உள்ளாக்கும். நானும், இன்னும் இரண்டு அபிமானிகளும் (இதில் யாருமே ஆசிரமத்தினர் அல்ல) தனிப்பட்ட முறையில் சுவாமி நித்யானந்தா அவரது அமைப்பில் இருந்து முழுமையாக பதவி விலக வேண்டும் என்று அவருக்குப் பரிந்துரைத்துள்ளோம். அவர் இந்த அமைப்பை முதிர்ந்த இந்து சான்றோர்களைக் கொண்ட ஒரு சிறிய குழுவிடம் ஒப்படைக்க வேண்டும்; அதன் மூலம், அமைப்பின் சொத்துக்கள் இந்து தர்ம நலனுக்கு உகந்த வகையில் பயன்படுத்தப் படும். மேலும், இந்த சான்றோர்களின் வழிகாட்டலில், எந்த அமைப்புரீதியான பொறுப்புகளும் இல்லாமல், ஒரு எளிய சாதுவாக, துறவியாக அவர் வசிக்கவேண்டும்.
ஏன்? ஏனென்றால், எந்த ஒரு அமைப்பானாலும், அதன் முழுமையான, அறுதியான பொறுப்பாளர் அதன் தலைவர், தலைவர் மட்டுமே என்பதால். இந்நிலையில் மேற்சொன்ன பதவி விலகல் மட்டுமே, அமைப்பை மீட்டெடுக்கும். பரந்த அளவில் இந்து தர்மத்தின் மீதுள்ள மதிப்பு உயர உதவும். இத்தகைய விலகல், பல ஆண்டுகளாக அவர் தனிப்பட்ட அளவில் சுமந்திருக்கும் பெரும் பொறுப்புகளால் விளையும் அழுத்தங்களைக் குறைக்கும். ஒரு சாதுவாக, சாந்தமான வாழ்க்கை வாழ உதவும். இந்த யோசனையை (அல்லது அறிவுரையை) ஏற்றுக் கொள்வதும், நிராகரிப்பதும் அவர் கையில் தான் உள்ளது. இந்த முடிவுக்கு நான் வந்ததன் காரணிகள் மற்றும் பின்னணி என்ன என்பதை இந்தக் கட்டுரையை முழுதாகப் படித்த பின்பு நீங்கள் புரிந்து கொள்ள முடியும்.
முதலில் சித்திகள் (அசாதாரண யோக சக்திகள்), ஒழுக்கம், தாந்திரீகம் (Tantra), பாலியல் (செக்ஸ்) இவைகளுக்கு இடையேயான உறவைப் பற்றிய சில கோட்பாடுகளைப் பரிசீலிக்க விரும்புகிறேன். இந்தக் குறிப்பிட்ட விவகாரத்தில் என்ன நடந்தது என்று விளக்க இது ஒரு நல்ல புரிதல் சட்டகத்தை அளிக்கும். பிறகு, எனது முக்கிய பேசுபொருளான “தென்னிந்தியாவில் இந்துமதம் எதிர்கொள்ளும் பல்வேறு சவால்கள்” பற்றிய விஷயத்திற்குத் திரும்பலாம்.
சித்திகளும் (அசாதாரண யோக சக்திகள்), ஒழுக்கமும்:
சில நாட்கள் முன்பு, ஸ்ரீஸ்ரீரவிசங்கருடன் அவரது ரிஷிகேஷ் ஆசிரமத்தில் இரண்டு மணிநேரம் தனிப்பட்ட உரையாடல் ஒன்று நிகழ்த்தும் நல்வாய்ப்பு கிடைத்தது. எந்த சார்பும் அற்ற ஒரு ஆய்வாளன் என்று என்னை அறிமுகப் படுத்திக் கொண்டேன். இந்தியப் பண்பாடு, உலக அளவில் அதன் சாத்தியங்கள், அது சந்திக்கவேண்டிய சவால்கள் ஆகியவை பற்றி தொடர்ச்சியாக நான் புத்தகங்கள் எழுதி வருவதையும் குறிப்பிட்டேன். இதில் ஒரு தொகுப்பு 1960 முதல் உருவாகி வந்து கொண்டிருக்கும் உலகளாவிய ஆன்மிக குருமார்கள் பற்றியதாக இருக்கும் – ஜே. கிருஷ்ணமூர்த்தி, சுவாமி முக்தானந்தா, மகரிஷி மகேஷ் யோகி, பிரபுபாதா உள்ளிட்ட பலர் – அதோடு வாழும் குருமார்களான ஸ்ரீஸ்ரீ போன்ற பலர் இவர்கள் எல்லாரையும் பற்றி எழுதுவதாகத் திட்டம். கால ஓட்டத்தில் இந்தக் குருமார்களுக்கு என்ன ஆயிற்று, அவர்களைப் பற்றி அவர்களது மேற்கத்திய சீடர்களின் பார்வையில் ஏற்பட்ட மாற்றங்கள் என்னென்ன, அவர்கள் தொடர்பான ஊழல்கள் விவகாரங்கள், அவர்களது இந்திய சீடர்கள் மற்றும் எதிர்-விமர்சகர்கள், மேலும், இந்த ஒவ்வொரு ஆன்மிக குருவும் இந்திய சம்பிரதாயங்கள் ஒருபுறமும், மேற்கத்திய நவீனத்துவம் இன்னொருபுறமுமாக இடையில் எப்படி தங்களுக்கான இடத்தை உருவாக்கிக் கொண்டார்கள் – அந்தத் தொகுப்புக்காக இப்படிப் பல விஷயங்களையும் பற்றி நான் ஆய்வு செய்து வருகிறேன். சுவாமி நித்யானந்தா விவகாரத்திற்கும் இதற்கும் என்ன தொடர்பு என்பது அடுத்து வரும் பாகங்களில் உங்களுக்குப் புரிந்து விடும்.
நான் முதலில் ஸ்ரீஸ்ரீயிடம் கேட்டது யோக சக்திகளின் இயல்பு பற்றி கொஞ்சம் உசுப்பிவிடும் கேள்வி. சித்திகளுக்கும் ஒழுக்கத்திற்கும் என்ன தொடர்பு? சித்திகள் என்பவை எல்லா மனிதர்களாலும் அடையக் கூடிய, கையாளக் கூடிய சக்திகள் என்பது அறிவியல்பூர்வமான உண்மையானால், நாம் முக்கியமான ஒரு விஷயத்தை மனதில் கொள்ள வேண்டும் – அறிவியல் உண்மைகளுக்கும், ஒழுக்க விதிகளுக்கும் ஒரு தொடர்பும் கிடையாது (science deals with truths that are morally neutral). ஐன்ஸ்டைன் ஒழுக்கமில்லாத வாழ்க்கை வாழ்ந்தார் என்று தீர்ப்பளிக்கப் பட்டு விட்டாலும், அவரது அறிவியல் கோட்பாடுகள் பொய்யாகி விடாது. ஒரு விமானத்தையோ, அதி நுட்பமான தொழில்நுட்ப அமைப்புகளையோ உருவாக்குபவர், அவரது தொழில்நுட்பப் பணியில் மிக்க திறனுடன் இருக்க ஒழுக்கம் உள்ளவராக (அல்லது இல்லாதவராக) இருக்கவேண்டும் என்பதெல்லாம் அவசியமில்லை.
இதையே வேறுவிதமாகச் சொன்னால், நாம் கண்டறிந்து “அறிவியல்” என்று அழைக்கும் ‘ரிதம்’ (பிரபஞ்ச அமைப்பு) மனித ஒழுக்கவிதிகளுடன் எந்தத் தொடர்புமில்லாமல் தான் இயங்குகிறது. ஒரே அறிவியல் கோட்பாட்டை ஒழுக்கரீதியாகவும் (நல்லதாகவும்), ஒழுக்கமில்லாத வகையிலும் (தீயதாகவும்) நம்மால் பயன்படுத்த முடிகிறது, ஏனென்றால் அடிப்படையில் அது ஒழுக்கம் சாராதது. எந்த சித்திகளும் இல்லாத, ஏன் சாதாரண அறிவியல் திறன் அல்லது தொழில்திறமை கூட இல்லாத, ஆனால் ஒழுக்கமுடைய மக்களும் இருக்கிறார்கள். மாறாக, பெரும் சித்திகள் படைத்த, ஆனால் ஒழுக்கமில்லாத (ராவணன் போன்ற) மக்களும் இருக்கிறார்கள். ஸ்ரீஸ்ரீயின் பிராணாயாம செயல்முறைகள் ஒழுக்கமில்லாதவர்களிடமும் கூட வேலை செய்யும் தானே?
ஸ்ரீஸ்ரீக்கு இந்தக் கேள்வி ஆர்வமூட்டியது. சித்திகளும், ஒழுக்கவிதிகளும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதவை என்ற எனது அடிப்படை நிலைப்பாட்டை அவரும் ஏற்றுக் கொண்டார். வெறும் சித்திகளை மட்டும் அடைவதற்கு ஒழுக்கம் தேவையில்லை தான்; ஆனால் தெய்வீக அருளைப் பெறுவதற்கு ஒழுக்கம் கட்டாயம் தேவை என்ற முக்கியமான விஷயத்தை அவர் சுட்டிக் காட்டினார்.
எனவே, இதில் இரண்டு முக்கிய விஷயங்கள் அடங்கியிருக்கின்றன.
(1) ஆன்மிக தொழில்நுட்பங்கள் அபோதபூர்வமானவை (objective). யார் வேண்டுமானாலும் அவற்றின் மூலம் ஆன்மிக சக்திகளைக் கையாளலாம்.
(2) ஒழுக்கம் தன்னளவிலேயே அதிமுக்கியமானது. சித்திகளை அடைவதற்காக அல்ல, ஆனால் தெய்வத்துடன் நேர்மறையான உறவை நிலைத்திருக்கச் செய்வதற்காக.
கொள்கையளவில் பார்த்தால், ஒன்று இல்லாமலும் இன்னொன்று இருக்கலாம். ஆனால், இந்து தர்ம மரபானது, இவை இரண்டையுமே கடைப் பிடிக்கவேண்டும் என்று நமக்குக் காட்டுகிறது. தியான முறைகளைக் கற்கும் போது, சைவ உணவு, அகிம்சை ஆகியவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று சொல்வது இதற்காகத் தான். ஏனென்றால், தகாத வாழ்க்கை முறைகள், தியானத்தில் முன்னேற முக்கியத் தேவையான மன அமைதி மற்றும் மன ஒருமையுடன் குறுக்கிட்டு அவற்றைக் குலைத்து விடும்.
இறை நம்பிக்கை சாராமலேயே கூட, ஒழுக்கமான வாழ்க்கை முறை பற்றி ஒருவர் புரிந்து கொள்ளலாம். உதாரணமாக, பௌத்த தியான முறைகளில் இஷ்டதெய்வமோ, இறை நம்பிக்கையோ கிடையாது. ஆயினும் ஒழுக்க விதிகள் உண்டு. இந்து யோக முறைகளில் பல்வேறு விதம் உண்டு – ஒவ்வொன்றிலும் வேறுபட்ட அளவில் இறை நம்பிக்கை பற்றிப் பேசப் படும். அதனால் தான், முழுமையாக மதச்சார்பற்றவர்களும், அறிவியல் மனப்பான்மை உடையவர்களும் கூட தியான முறைகளால் கவரப் படுகிறார்கள். வேறு விதமாகச் சொன்னால், ஒரு விஷயம் ஒழுக்க விதிகளுக்கு உட்பட்டு இருந்தால் அது அறிவியலே அல்ல, ஏனென்றால் அறிவியல் அபோதபூர்வமானது, ஒழுக்கவிதிகள் சாராதது.
ஏன் இந்த விஷயம் பற்றி வலியுறுத்திப் பேசுகிறோம் என்றால், சுவாமி நித்யானந்தா மூலம் உயர்நிலை தியானம் கற்றுக் கொண்டவர்கள், அவரிடம் ஒழுக்கக் குறைபாடுகள் இருந்தால், அவர் கற்றுத் தந்த இந்து தியான முறைகள் மூலம் உயர் உணர்வு நிலைகளை அடைவது தடைப் படுமா அல்லது பாதிக்கப் படுமா என்று தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள்.
இதை விட மோசமான செக்ஸ் ஊழல் குற்றச் சாட்டு புகழ்பெற்ற சுவாமி முக்தானந்தா மீது 1990களில் சுமத்தப் பட்டது. பெருமளவில் மேற்கத்திய பெண் சீடர்கள் அந்தக் குற்றச்சாட்டை சுமத்தினர். அப்போது மேற்கத்திய அறிவுகலம், ஒரு தனிமனிதனின் ஒழுக்க மீறலைக் கண்டித்ததோடு மட்டுமல்லாமல், இந்திய யோக மரபு முழுவதையுமே கண்டனம் செய்தது. அதன் நம்பகத் தன்மை மீது ஐயங்களை வெளிப்படுத்தியது. அப்போதும் நான் இதே போன்ற ஒரு நிலைப்பாட்டைத் தான் எடுத்தேன் – முக்தானந்தாவின் யோக செயல்முறைகளுக்கும், அவர் ஒழுக்கவிதிகளைக் கடைப்பிடித்தாரா இல்லையா என்பதற்கும் சம்பந்தமில்லை.
ஒருவர் தொடர்ந்து உயர்நிலை தியான வழியில் செல்லும்போது இடையில் வரும் சித்திகளால் கவரப் படலாம் என்று பதஞ்சலி எச்சரிக்கிறார். உடலை ஆன்மசாதனமாக்க் கொள்ளும் யோக முறைகளில், ஒருவர் அந்த சித்திகளில் ஈடுபடவே கூடாது என்பது பற்றிய எச்சரிக்கை பல இந்துமத நூல்களிலும் காணக் கிடைக்கிறது. ஏனென்றால், இந்த சக்திகள் மிகவும் ஆற்றல் வாய்ந்தவை, அவை எந்நேரமும் கட்டுக்கடங்காமல் போகும் சாத்தியம் உள்ளது.
இன்னொரு கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், சுவாமி நித்யானந்தா கற்பிக்கும் நுட்பங்கள் அவரால் உருவாக்கப் பட்டவை அல்ல. அவரே பலமுறை மீண்டும் மூண்டும் இதைக் கூறியிருக்கிறார். அவை, இந்துப் பண்பாட்டில் நெடுங்காலமாக இருந்து வரும் சிவ சூத்திரங்களில் உள்ளவை. இந்த நுட்பங்களை மிக திடமாக மற்றவர்களுக்குள் செலுத்தும் சக்தி படைத்த சித்தி அவரிடம் இருக்கிறது என்று நான் நினைக்கிறேன். ஒரு உதாரணம். எனது வாழ்வில், ஒரு இரவு முழுவதும் நிலையாகவும், விழிப்புணர்வுடனும் தியானத்தில் அமர்வது என்பது எப்போதும் சாத்தியமானதே இல்லை. ஆனால், ஒரு பெரிய கூடத்தில் நான் உட்பட சில நூறு பேர்களை இந்தப் பெரும் சாதனையைச் செய்ய வைக்க அவரால் முடிந்தது. நான் கற்றுக் கொண்ட கணிதமும், கோல்ஃப் விளையாட்டும், அவற்றைக் கற்றுக் கொடுத்தவர்கள் ஒழுக்கம் தவறிவிட்டார்கள் என்று கண்டறியப் பட்டால் எப்படி பொய்யாகி விடாதோ, அதேபோல் தான் இதுவும். எனவே, அவரது சித்திகள் உண்மையானவையா என்ற கேள்வியும், ஒழுக்கம் பற்றிய பிரசினையும் தனித் தனியாகவே அணுகப் படவேண்டியவை.
தாந்திரீகம் (Tantra) இந்துமதத்தின் ஓர் அங்கமா?
நான் ஸ்ரீஸ்ரீயிடம் கேட்ட இரண்டாவது கேள்வி பற்றி கிடைத்த நேரத்தில் முழுதாக அலச முடியவில்லை. எனது சொந்தப் புரிதலுக்காக, மீண்டும் என்றாவது ஒருமுறை அவரிடமும், மற்ற ஆன்மிக குருமார்களிடமும் இதே கேள்வியைக் கேட்கலாமென்றிருக்கிறேன். இந்தக் குறிப்பிட்ட விவகாரத்திற்கும் இதற்கும் உள்ள தொடர்பு உங்களுக்கு விரைவிலேயே புரியும்.
சிவ சூத்திரங்களில் உள்ள 112 ஆன்மிக சாதனை முறைகளில், 6 முறைகள் ஆணும் (யோகி) பெண்ணும் (யோகினி) இணைந்து புரியும் யோகம் பற்றிக் கூறுகின்றன. காஷ்மீர சைவ மரபிலும், தாந்திரீக மரபுகளிலும் இந்த முறைகளையும் கடைப்பிடித்த உயர்ந்த யோகிகளும் உண்டு, சமீபகாலமாக, ஓஷோ இவற்றை மீட்டு புத்துருவாக்கம் செய்திருக்கிறார். அமெரிக்காவில் வாழும் சுந்தர் விசுவலிங்கம் தாந்திரீகம், காஷ்மீர சைவம் இவற்றில் தேர்ந்த அறிஞர். சமூகத்தால் பெருமளவு புறக்கணிக்கப் பட்டிருக்கும் இத்தகைய ஆன்மிக அணுகுமுறைகள் மரபுவழி ஆதாரபூர்வமானவையே என்பதனை வெளிக்கொணர்பவர்களில் முக்கியமான ஒருவரும் கூட. இத்தகைய முறைகள் வெகுஜன சமூகத்திற்குத் தகாதவையாகவும், மக்களில் ஒரு சிறிய பிரிவினருக்கானவையாகவுமே மரபிலும் கருதப் பட்டன என்பதும் குறிப்பிடத் தக்கது.
பல பிரபல இந்து சடங்குகளும், சின்னங்களும் தாந்திரீக மரபுவழி வந்தவையே ஆகும், உதாரணமாக சிவலிங்கம். தாந்திரீக மரபும், வேத மரபும் சமீபகாலம் வரைகூட முற்றாக தனித்தனியானவையாக இல்லை. வேத-தாந்திரீக இணைப்பினை நாம் ஆதிசங்கரர் முதல் ஜீவ கோஸ்வாமி (ராமானுஜரின் வைஷ்ணவ சித்தாந்தத்தை வங்கத்தில் முன்னெடுத்துச் சென்றவர்) வரை, அண்மைக் காலங்களில் ஸ்ரீராமகிருஷ்ணர் வரை காணலாம். பிரபலமான பீகார் யோகப் பள்ளியில் (Bihar School of Yoga) கூட தாந்திரீக சாதனையாளர்கள் இருக்கின்றனர். ஆனால் அவர்கள் தங்கள் முறைகளை தனிப்பட்ட அளவில் கடைப்பிடிக்கின்றனர். பொதுவில் அல்ல.
வரலாற்று ரீதியாக, தாந்திரீகம் பற்றிய இந்திய மன்நிலையில் எப்படி மாற்றங்கள் ஏற்பட்டன என்பது பற்றி நான் முன்பு ஒரு கட்டுரை எழுதியிருந்தேன் (எங்கும் பதிப்பிக்கப் படவில்லை). பிரிட்டிஷ் ஆட்சிக் காலங்களில் தான் சில இந்தியத் தலைவர்கள் (ராஜா ராம் மோகன் ராய் போன்று), தூய கிறிஸ்தவ மதிப்பீடுகளுக்கு மாறாக இருந்த இந்து மதத்தின் அம்சங்களைத் தாங்களே கண்டனம் செய்யத் தொடங்கினர் (இந்து மத சீர்திருத்தமாக).
விவிலியத்தின் ‘ஆதி பாவம்’ என்ற கருத்தாக்கத்தில் தொடங்கி, மனித உடலைப் பற்றிய மிக எதிர்மறையான கண்ணோட்ட்த்தையே கிறிஸ்தவ மதம் கொண்டிருந்தது என்பதை இங்கு குறிப்பிட்டாக வேண்டும். அதனால் தான் பெண் பூசாரிகள் சூனியக்காரிகள் என்று சர்ச்சால் முத்திரை குத்தப் பட்டு சாத்தானாக்கப் பட்டு, லட்சக் கணக்கில் அதிகாரபூர்வமாக கொன்றொழிக்கப் பட்டார்கள். இன்குசிஷன் என்று பெயர் கொண்ட இந்த செயல்பாடு பல நூற்றாண்டுகளுக்கு சர்ச்சால் அமல் படுத்தப் பட்டு வந்தது. உடலை ஆன்மிக ரீதியாகப் பயன்படுத்தும் எல்லா முறைகளும், “சக்தி’ என்ற கருத்தாக்கமும் ஒழுக்கக் கேடாக மட்டுமல்ல, அரக்கத் தனமானவையாகவும் கருதப் பட்டன. சட்டவிரோதமாக அறிவிக்கப் பட்டன. மந்திரவாதம் (occult) என்ற சொல் சரமாரியாக பல்வேறு விதமான தாந்திரீக செயல்பாடுகளுக்கும் அளிக்கப் பட்டு, சர்ச்சின் கடும் கண்டனத்திற்கு உள்ளாயிற்று. சாத்தானின் வேலை என்று இச்செயல்களை சர்ச் வர்ணித்தது.
இந்த மனநிலை பிரிட்டிஷாரின் கீழ்தான் இந்தியாவில் தோன்றியது என்று சொல்லவேண்டும். 1800களில் குற்றப் பரம்பரைச் சட்டம் (The Criminal Tribes Act of India) பிரிட்டிஷாரால் கொண்டுவரப் பட்ட்து. பல பழங்குடி இனங்களைப் பட்டியலிட்டு, சாத்தானிய (evil) செயல்களை இந்த இனங்கள் செய்துவருவதாகக் கூறப் பட்டு, அந்த இனங்கள் அதிகாரபூர்வமாகவே கொன்றொழிக்கப் பட்டன. பிரிட்டிஷ் நோக்கில் “நாகரீகப் படுத்தப் பட்ட”, மத்திய வர்க்கத்தினருக்கு ஏற்ற “வெள்ளையடிக்கப் பட்ட” இந்துமதம் உருவாயிற்று. முன்னோர்களின் ”கற்கால” செயல்பாடுகளை விட்டொழித்து “சுத்திகரிக்கப் பட்ட” இந்துமத அடையாளம் எல்லாரும் பெருமைப் படுவதற்கும் உகந்ததாக இருந்தது!
இவ்வாறாக, இந்துமதத்திலிருந்து தாந்திரீகம் விலகிச் சென்ற வரலாற்றில் தாந்திரீகத்தை ஓரம்கட்டியவராக சுவாமி விவேகானந்தரையும் சிலர் சேர்க்கின்றனர். இந்தக் குற்றச் சாட்டை நான் ஏற்கவில்லை. அவர் இந்தியர்களிடம் பேசுவது போல அல்லாமல், மேற்கத்தியர்களுக்கு வேறுவிதமான விஷயங்களை உபதேசித்தார். அவரது மேற்கத்திய உரைகளில், மேற்கத்தியர்கள் இணக்கமாக உணர்ந்து, மதிப்பளிக்கக் கூடிய ஒரு இந்துமதத்தை அவர் முன்வைத்தார். ஆனால், இந்தியர்கள் தங்கள் வழிபாட்டு முறைகளையும், செயல்பாடுகளையும் மாற்றிக் கொள்ளவேண்டும் என்று அவர் ஒருபோதும் கோரவில்லை. அவரது மறைவிற்குப் பின்னர், ஸ்ரீராமகிருஷ்ண மடம் சில விஷயங்களை நீர்த்துப் போகச் செய்து விட்டது துரதிர்ஷ்டவசமானது. காளி வழிபாடு, மற்ற தாந்திரீக தெய்வ பூஜைகள் ஆகிய ஸ்ரீராமகிருஷ்ணருக்கே மிகவும் பிரியமான அம்சங்கள் மறைபொருளாகவும், துறவிகள் தனிப்பட்ட முறையில் மட்டும் ஈடுபடும் விஷயங்களாகவும் ஆகிவிட்டன, பொதுத்தளத்தில் அவற்றைப் பேசுவது சங்கடமாக எண்ணப் பட்டது. இந்த நிலைப்பாடு பரவலாக நவீன இந்துமதம் முழுவதிலும் பரவி, வேத இந்துமதம் தாந்திரீகத்திலிருந்து தனியாகப் பிரிந்து விட்டது. இன்றைக்கு தாந்திரீகத்தை இந்து குருமார்கள் பெரும்பாலர் கண்டனம் செய்கின்றனர்.
சுவாமி நித்யானந்தா தாந்திரீக நுட்பங்களைப் பயன்படுத்தி உடலில் உறைந்திருக்கும் சக்திகளை (குண்டலினி) எழுப்புகிறார். பல சம்பிரதாய இந்துத் தலைவர்கள் சுவாமி நித்யானந்தருக்கு எதிரிடையாகக் கருத்துக் கொண்டிருப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.
தாந்திரீகம் மிகப் பெரிய அளவில் மீண்டும் திரும்பிவருகிறது என்பது எனது சொந்த அபிப்பிராயம். முதலில் தாந்திரீகத்தின் திரிக்கப் பட்ட வடிவங்கள் மேற்குலகில் பிரபலமாகின. ஆனால் இப்போது உளவியலாளர்களும், மருத்துவர்களும் ஆதாரபூர்வமான தாந்திரீக முறைகளைப் பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். உடலில், மனதில் உறைந்து கிடக்கும் மனித சக்திகள் மற்றும் சாத்தியங்கள் (ஆக்கபூர்வமானவை, அபாயகரமானவை இரண்டுமே) பற்றி இப்போது அறிவியல் துறையில் சூடான ஆய்வுகள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இவ்விஷயத்தில் இந்துக்கள் தங்கள் பாரம்பரிய அறிவியலின் திரிக்கப் பட்ட வடிவங்கள் ”Made in USA ஆன்மிக அறிவியல்” லேபிளுடன் தங்களுக்கே யூ-டர்ன் ஆகி மீள்-ஏற்றுமதி செய்யப் படும் வரை காத்திருக்காமல், அதற்கு முன்பே தங்களது சொந்த மரபின் சொத்துக்களை மீட்டெடுத்துத் தமதாக்கிக் கொள்ள வேண்டும். இதற்கு பரிசோதனை செய்து பார்க்கும் மனநிலையை ஊக்குவிப்பது, அதே நேரம் துஷ்பிரயோகம், போலிகள் ஆகியவற்றை இனம் கண்டு களைவதற்கான தகுந்த கட்டுப் பாடுகளை செயலாக்குவது இரண்டுமே அவசியம்.
கும்பமேளாவில் இருந்து இப்போது தான் திரும்பி வந்திருக்கிறேன். பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட, முழு நிர்வாணமான “நகா சாதுக்கள்” இடையில் நடந்து சென்று வந்தேன். அவர்கள் வக்கிரமானவர்கள் என்றோ நாகரீகமற்றவர்கள் என்றோ நான் நினைக்கவில்லை. பழைய சம்பிரதாய இந்து அமைப்புகள் தாந்திரீகத்தை பொதுவில் நிராகரிக்கின்றன. ஆனால் ஒரு முரண்பாடாக, நகா சாதுக்களுக்கு பெருமதிப்பும், மரியாதையும் அளிக்கின்றன. அதோடு தாந்திரீகத்தில் உதித்த சடங்குகளையும், சின்னங்களையும் கைக் கொள்கின்றன. தாந்திரீகம் என்ற விஷயத்தைப் பேசாமல் தவிர்த்து வந்ததனால் ஏற்பட்ட வெற்றிடம் வெண்டி டோனிஜர் (Wendy Doniger) போன்றவர்கள் வந்து வக்கிரமாகத் திரிக்கப் பட்ட விளக்கங்களை அளிப்பதற்கு வாய்ப்பை உருவாக்கி விட்டது. இந்து ஆன்மிக சாதகர்களும், அறிஞர்களும் தாந்திரீகம் நமது மரபின் இயல்பான அங்கம் என்று அறிவித்து தாந்திரீகம் என்ற இந்தத் துறையைத் தங்கள் கைக்குள் கொண்டு வரவேண்டும்.
(தொடரும்)
ஆசிரியர் குறிப்பு:
ராஜீவ் மல்ஹோத்ரா அமெரிக்காவில் தகவல் தொழில்நுட்பத் துறையில் தொழில்முனைவோராகத் தொடங்கி, புதிய நிறுவனங்களை உருவாக்கி, வெற்றிகரமாக நடத்தியவர். பின்னர் தாமே விருப்ப ஓய்வு எடுத்துக் கொண்டு Infinity Foundation என்ற ஆய்வு மையத்தை நிறுவினார். இந்தியப் பண்பாடு, இந்துக் கலாசாரம், இந்து மரபுகள், இந்திய பாரம்பரிய அறிவியல், உளவியல் – ஆன்மிகம் – யோகம் இடையே உள்ள உறவு ஆகியவை குறித்த விரிவான ஆய்வுகளைப் பல்கலைக் கழகங்களிலும், தனிப்பட்ட அமைப்புகள் மூலமாகவும் இந்த மையம் ஊக்குவித்து வருகிறது. அதோடு, இந்து கலாசாரம் குறித்து மேற்கத்திய உயர்கல்வி நிறுவனங்களிலும், ஊடகங்களிலும் தொடரும் திரிபுகளையும், தவறான சித்தரிப்புகளையும் ஆதாரபூர்வமாக மறுத்துரைக்கும் ஆய்வுகளையும் இந்த ஆய்வுமையம் வெளியிட்டுள்ளது. உலக அளவிலான அரசியல் அதிகார போக்குகளினால் இந்து தர்மம் சந்திக்கும் சவால்கள் குறித்தும் தற்போது ராஜீவ் மல்ஹோத்ரா ஆய்வு செய்து வருகிறார். இவரது உந்துதல் மூலம் வெளிவந்த Invading the Secert என்ற ஆய்வு நூல் பற்றி ஏற்கனவே தமிழ்ஹிந்து தளத்தில் விரிவான கட்டுரை வந்துள்ளது.

நித்யானந்தா இப்போது என்ன செய்யவேண்டும் – 2 (ராஜீவ் மல்ஹோத்ரா)
நித்யானந்தா இப்போது என்ன செய்யவேண்டும் – 3 (ராஜீவ் மல்ஹோத்ரா)
Invading the Sacred: அமெரிக்காவில் நிகழும் இந்துமத ”ஆய்வுகள்” –
சுய அறிதலும் வரலாற்று அறிதலும்
மனிதப் பேராசையும் ஆன்மீக சந்தையும்: ஒரு பார்வை
யோக விளக்கம்: “ஸ்வாத்யாயம்” – 2
Breaking India புத்தக வெளியீட்டு விழா
போகியை யோகி எனல்
எங்கே பெண்ணுரிமைகள்?: சர்வதேச மகளிர் தினத்தை முன்வைத்து
குண்டலினி
இந்தியாவிலிருந்து வந்த ஆப்பிள்
விநாயகர் அகவல்: ஒரு தத்துவ அறிமுகம்
கருப்புதான் எனக்குப் பிடிச்ச கலரு!
சூடானைக் கடித்த டிராகுலாக்கள் – 3
சதாசிவ பிரம்மேந்திரர் குறித்த வரலாற்றுப் புதிர்கள்
கலாசார பன்முகத்தன்மையின் தோல்வி?: ஒரு பார்வை – 2
கலாசார பன்முகத்தன்மையின் தோல்வி?: ஒரு பார்வை – 1
நம்பக்கூடாத கடவுள்: புத்தக அறிமுகம்
இந்து என்று சொல்லடா !! தலை நிமிர்ந்து செல்லடா !!!
பொய்கள் அறிவியலாக்கப்படும் கலிகாலம் – 1
ஆட்சியில் இல்லாது மாட்சிமை கொள்ளும் மகாராணி
இந்தியர்களின் “அமேரிக்க எதிர்ப்பு” நியாயமானதா? – 2
இந்தியர்களின் “அமேரிக்க எதிர்ப்பு” நியாயமானதா? – 1
பாரதியின் சாக்தம் – 1
சாதி எனப்படுவது யாதெனின்…




மிக நுட்பமான விளக்கங்களை தெளிவான நடையில் சொல்லிஇருக்கும் ஆசிரியருக்கு நன்றிகள். இதன் அடுத்த பகுதிக்காக ஆவலோடு காத்துக்கொண்டிருக்கிறேன்.
பல்வேறு பட்ட அரசியல் மற்றும் பிற மதங்கள் சார்ந்த காரணிகள் இது போன்ற விஷயங்களை பூதாகரப் படுத்தி தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ள முயற்சி செய்து கொண்டிருப்பது வருத்தத்திற்கு உரிய விஷயம். ஆனால் நம்மவர்களிலேயே பலர், அதுவும் நித்யானந்தர் போன்ற உயர்ந்த நிலையில் இருப்போர் அதை உணராமல், இது போன்ற விஷயங்களுக்கு இடம் கொடுத்து நம் சமுதாயத்தை கேலிக்குரியதாக்குவது என்பது அதை விட வேதனைக்குரிய விஷயம்.
இதை நமது மதத்திலுள்ள சான்றோர்கள் உணர வேண்டும் என்பதே என் தனிப்பட்ட கருத்தாகும்,
நல்ல ஆய்வு. எதிர்பார்த்துக்காத்திருந்தேன்
//
Invading the Secert என்ற ஆய்வு நூல் பற்றி ஏற்கனவே தமிழ்ஹிந்து தளத்தில் விரிவான கட்டுரை வந்துள்ளது
//
Is it invading the Sacred?
அட்டகாச ஆரம்பம்…
ராஜாராம் மோகன் ராய் பற்றி வரலாறு பாடங்களில் சதி
நிகழ்வை தடுத்ததாகத் தான் வரும்.
ஆனால் உண்மையில் அவர் தாந்தீரிக இந்து பண்பாட்டை
தகர்த்தெரிய ஆங்கிலேயர்களுடன் கூட்டணி வைத்துக்
கொண்டார்.
நித்யானந்தரையும் பிரேமானந்தாவையும் வெளியுலகுக்குக்
காட்டிக் கொடுத்தவர்கள் கிறிஸ்தவர்களே….
பிரேமானந்தா இப்போது சிறையில் இருக்கிறார். திருச்சி
இப்போது சிலுவை மயமாகிக் கொண்டிருக்கிறது.
அதே போல் பெங்களூரும் ஆகி விடுமோ….
பிரேமானந்தா தவறு இழைத்தால் தான் சிறை சென்றார்.
நித்யனந்தாவும் தான் சன்யாசி என்று கூரிக்ன்டதால் தான் இவளவு பிரச்னையும்.
இதற்கு தீர்வு, புதிதாக கிளம்பும் எந்த அமைப்பும் தன்னை சன்யாசி என்று கூரிகொல்லாமல் இருப்பது தான். சன்யாச தர்மத்தை கடைபிடிக்கட்டும் அனால் சன்யாசி என்று கூரிகொள்ளதீர்கள்.
சட்ட ரீதியாக தமிழக அரசாங்கத்தையும், ஊடகங்களையும் அணுகுவது தான் சிறந்த தீர்வு. இதை விரைவில் சைய வேண்டும்.
இந்த அணுகுமுறையில் வெற்றி கண்டவர் சுப்ரமண்யம் சுவாமி. அவரை சரியாக இந்து அமைப்புக்கள் உபயோகபடுதிகொள்ளவேண்டும்.
தாந்திரீகத்தை ஆராய்ந்து பார்க்க விரும்பிய நித்யானந்தா அதுகுறித்து முழுமையை உணரும் வரை சமூகத்தின் பொதுதளத்திலிருந்து விலகியிருக்கவேண்டும் என்பதை உணராதது ஏன்?
மற்ற மதத்தினர் இந்து துறவிகளை திட்டம் போட்டு மாட்டி விடுகிறார்கள் என்று சொன்னாலும் அது போல மட்டிவிடுவதற்கு வழி செய்யும் இந்த துறவிகளைத்தான் முதலில் குற்றம் சொல்ல வேண்டும்.
நித்யானந்தா ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு எத்தனை ஆசிரமங்கள் வைத்து கொண்டாலும் யார் அவரை குறை கூற போகிறார்கள். ஏனெனில் பிரமச்சரியம் என்பது அவரவர் விருப்பத்தை பொருத்தது என்று எல்லா இந்துக்களுக்கும் தெரியும்.
இன்று நாம் எடுக்கும் முடிவானது இனி எந்த ஒரு இந்துவும் துறவி என்ற பெயரில் இந்துத்துவத்தை கெடுக்க நினைக்க கூடாது. சில தவறுகள் பொது மக்கள் கையிலும் இருக்கிறது. இது போன்ற ஆசிரமத்தில் ஏமாறுபவர்களை பார்த்தீர்களானால் பெரும்பாலும் பெரிய பணக்காரன் மற்றும் நிறைய பிரச்னை உடையவர்கள்தான் போகின்றனர்.
முதலில் தெய்வத்தை கோவிலில் வணங்கினாலே பெரும்பாலான பிரச்சினைகள் தீர்ந்து போகும்.
Siva
Nithyanda should give up his Sanyasi’s garb and become a Grahasthan.He should stop spining tales about experimenting in Tantra yoga,. The author , I believe from what I have read, is wrong in his opinions about Tantric practices in Hinduisim. What this man Nithyanada Rajasekar had done as a Sanyasi, wearing “Kavi” is disgusting and no amount of spin is going to change this.
The Christians ar the ones behind this exposure and they must be rubbing their hands in glee now.Having said that, we have to thank them for exposing another fraud guru. I hope the media will take similar interest in exposing nun raping, child molesting christian priests.
நித்யானந்தா இப்போது என்ன செய்யவேண்டும்
HE SHOULD GET ANTICIPATORY BAIL.. AND SPEND CRORES TO RELEASE HIM FROM ALL THE TROUBLES.. AND CONTINUE WHAT HE HAS DONE IN THE PAST…
THIS IS WHAT TAMILHINDU SUGGESTS… RIGHT?????
ஜடாயு
அற்புதமான மொழி பெயர்ப்பு. அபாரமான உழைப்பு. உங்களுக்கு சரஸ்வதி அருள் பரிபூரணமாக கிட்டியுள்ளது. வாழ்த்துக்கள். ராஜீவ் அவர்களின் செறிவான அறிவும், தர்க்கரீதியான வாதங்களும் வியக்க வைக்கின்றன. மொழிபெயர்ப்புக்கு நன்றிகள்.
”ஆனால் தெய்வத்துடன் நேர்மறையான உறவை நிலைத்திருக்கச் செய்வதற்காக.”
“தெய்வத்துடன் நேர்மறையான” என்பதற்குப் பதிலாக தெய்வத்துடன் நேரிடையான என்று இருந்திருக்க வேண்டுமோ?
அன்புடன்
ச.திருமலை
Tamil Hindu suggests nothing of that kind.
The article is not yet over.
It makes a holistic analysis of the situation.
do not jump to conclusions.
திருமலை, தங்கள் அன்பான சொற்களுக்கு மிக்க நன்றி.
// “தெய்வத்துடன் நேர்மறையான” என்பதற்குப் பதிலாக தெய்வத்துடன் நேரிடையான என்று இருந்திருக்க வேண்டுமோ? //
ஆமாம். நேரிடையான என்பது தான் சரி.
Aghehananda Bharati a westerner who joined an indian monastic order in the fifties in one of his books likened the condition–bliss or the peace that passes understanding tothe condition experienced by a couple after coitus.In indian philosophy tantra has also been mentioned and the basic tenets are called the three Ms,-Mamsa,Madhu and Maithuna,- and this worship has been indicated to have been followed by Sakthas or sakthi worshippers in some of the border areas of the country.To somne extent Malhotra was right in sayinf that this will be a storm in the tea cup and will go away but temporarily providing grist to the anti-hinduism brigades.Nithyananda should have prepared his following to face his indulgence in the type of worship called vamacxhara by the Hindus and that is why this revelation has stunned his followers who feel let down by their guru.
Thiruvengadam
Well written article and good translation.
நித்யானந்தா : ஏன்டா இந்த ஊரு இன்னுமா நம்மள நம்புது ?
சீடன் : !!?
-சிவம் சிரேவதர
இப்போது நிலைமை என்னவென்றால் யார் வேண்டுமானாலும் ஒரு போலி சீ டி தயார் செய்து யார் பெயரை வேண்டுமானாலும் கெடுக்கலாம்.
அப்புறம் அய்யா அம்மா என்று அழுது தான் நல்லவன் என்று நூறு கோர்ட்டுக்கு அலைந்து அவன் நிரூபிக்க வேண்டும்!
முக்கியமாக அது ஹிந்துத் துறவியாக இருந்தால் கேள்வி கேட்பார் இல்லை
அரசியலில் பண பலம், பதவி பலம் பெற்றவர்கள் உடனே கும்பல் கும்பலாக ரவுடிகளையும், சமுக விரோதிகளையும் அனுப்பி அத்துறவியின் ஆஷ்ரமம் மற்ற சொத்துக்கள் மீது கல்லால் அடிப்பது ,உடைப்பது என்று அமர்க்களம் செய்து இல்லாத பொல்லாத குற்றச் சாட்டுகள் எல்லாம் சொல்லி ஐம்பது கேஸ் நூறு கேஸ் என்று அவர் மீது போட்டு தாங்கள் வாங்கிய பெட்டிக்கு நீதி செய்வார்கள் .
ஒன்று பாக்கி இல்லாமல் ஈ பீ கோ வில் உள்ள எல்லா செச்ஷன்களிலும் அவர் மீது வழக்கு போடப்படும் .
பார்க்கும் அப்பாவி ஹிந்துக்கள் ‘சாமியார் வேஷம் போட்டுக்கிட்டு இந்த மேரி செஞ்சுட்டானே பாவி’ என்பார்கள்
படித்த ஹிந்துக்கள் ‘இவனை எல்லாம் சும்மா விடக் கூடாது சார் , ஆள பாத்தாலே தெரியறது’ என்று காபியை உறிஞ்சிக்கொண்டே சொல்வார்கள் .
மிஷனரிகள் மற்றும் அரசியல்வாதிகள் மௌனமாக சிரித்துக் கொள்வார்கள்.
சமீபத்தில் கர்நாடகாவில் சுவாமி ராகவேஷாநந்தா என்ற துறவியைப் பற்றி ஒரு செக்ஸ் சி டி வெளியிடப்பட்டது
பிறகு காவல் துறை அது போலி சீ டி என்று கண்டு பிடித்தனர்
அந்த துறவி மாதிரியே ஒருவரை அதில் நடிக்க வைத்துள்ளனர்
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவன் காங்கிரஸ்காரன் .
இப்போது வாசகர்களே ஒரு முடிவுக்கு வரலாம்.
இர.ஸ்ரீதரன்
ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும்
நித்தியானந்தா பெரும் அளவில் சாதாரண ஹிந்துக்களை கவர ஆரம்பித்தார்
இது சர்ச்சுக்கும் அவர்களது ஏஜெண்டுகளான கழகத்துக்கும் மிகப் பெரிய தடைகள்
அதனால் இது நடந்திருக்குமோ?
ஏனென்றால் பாமர ஹிந்துக்கள் ஹிந்து சமயத்தில் நாட்டம் கொண்டு விட்டால் மத மாற்றம் தடைப்படும்.
இரா.ஸ்ரீதரன்
Nityananda is fraud. His teachings are fraud. His books are fraud which are written by others. When I heard his talk he is totally different in his expression than found in the book Open the Door Let the breeze come in. He is egoistic which is totally against for a swami. He like to dress up like Maharaja. One can find out the ahankar in his mind when he sign the book. A great swami will not behave like the way he behaved in a sign up meeting. AaNavam, ahankaram, ego are full in his body when I saw him. He is shame for the Hinduism.
திரு/திருமதி பாலா ஸ்ரீ நித்யானந்த சுவாமிகளைப் பற்றி குறை கூறுகிறார். முதலில் அவர் தமிழில் எழுதவேண்டும். ஸ்ரீ சுவாமிகளைப் பற்றி முன்வைக்கப்பட்ட எந்த ஒருக் குற்றச்சாட்டும் யாராலும் நிரூபிக்கப் படவில்லை என்பதே உண்மை. அவர் யாரை ஏமாற்றினார். யாராவது புகார் கொடுத்தார்களா. சாட்சிகள் எங்கே. ஸ்ரீ ஸ்ரீதரன் ஜி அவர்களின் கருத்துக்கள் இங்கே ஏற்புடையவை.
ஸ்ரீ நித்யானந்தருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் எதையும் நிரூபிக்கமுடியாதவர்கள் இன்று அவரை ஆணவம் கொண்டவர் என்று கூறுகிறார்கள். அவர் துரோகிகளுக்கும் விரோதிகளுக்கும் மறுப்பாக சீறுகிறார். அது தவறா. அது அவரது தர்மம்.
ஸ்ரீ நித்யானந்தருக்கு எதிராக குறைகூறுபவர்கள் மூன்று வகை. ஒன்று ஹிந்து அல்லாத ஹிந்து சமயத்தின் விரோதிகள். மிசனரிகள் இவர்கள் இதன் பின்புலமாக இயங்குகிறார்கள்.
இரண்டாவது ஹிந்துக்களாயிருந்தும் ஹிந்துமதத்தினை ஏற்காது வெறுப்பவர்கள். ஹிந்து துவேசிகள்.திராவிட இயக்கப் பாரம்பத்தினர். இவர்களே இந்த சதியை அரங்கேற்றினார்கள். இவர்கள் விதையிலும் வேரிலும் நுணியிலும் ஊழல், கொடுமை கயமை நிறைந்தவர்கள். அரசியல் அதிகாரத்தின் உதவியோடு ஊடகத்தில் ஆதிக்கம் செலுத்தும் இப்பாவிகள் கேடிகள் இன்று ஐயோ என்று அதள பாதாளத்தில் போய்க்கொண்டிருக்கிறார்கள் என்பதை நாடறியும். இல்லாததை செய்தியாக உற்பத்தி செய்யும் வல்லமை இவர்களுக்கு உண்டு. அரசியலில் ஊடகத்தில் நம்பகத்தன்மை இல்லாத இந்த நயவஞ்சகரை நம்பவும் வேண்டுமோ.
மூன்றாவது முதலாமவர்களின் ஆதரவில் இரண்டாமவர்கள் ஆடும் அயோக்கிய க்கூத்திற்கு பின்பாட்டு வாசிக்கும் ஹிந்து போலிகள். ஹிந்துக்களாக இருந்தும் சமயத்தை காக்கின்றோம் என்ற போர்வையில் வன்முறையாளர்களுக்கு, ஹிந்து விரோதிகளுக்கும் ஹிந்து துவேசிகளுக்கும் வால்பிடிக்கும் கூட்டம் இது. முதல் இரண்டடையும் தெளிவாய் எளிதாய் அடையாளம் கண்டுகொள்ள இயலும். இம்மூன்றிலும் ஆபத்தானது மூன்றாவதே.