[இந்தக் கட்டுரை பற்றிய ஜடாயுவின் பின்னுரை கடைசியில் உள்ளது - ஆசிரியர் குழு]
மூலம்: ராஜீவ் மல்ஹோத்ரா
தமிழில்: ஜடாயு
தொடர்ச்சி…
சுவாமி நித்யானந்தருக்கு எதிராக சதிவலை
தமிழ்நாட்டு மத-அரசியலில் ஊடாடும் சதிவலைகளைப் பற்றிய புத்தகத்தை எழுதிக் கொண்டிருக்கும் நேரத்தில் இந்த விவகாரத்திற்குள் நான் நுழைய நேர்ந்ததால், இயல்பாகவே இந்த விசாரணையில் அந்தக் கண்ணோட்டத்தையும் நான் ஒருபக்கம் கருத்தில் கொண்டே இருந்தேன். ஆனால் இந்தச் சிறிய கட்டுரையில், நித்யானந்தா மற்றும் அவரது அமைப்பு நடந்து கொண்ட விதம் பற்றியே அதிகம் கூற விரும்புகிறேன். அது பற்றிப் பேச உடனடித் தேவையும் உள்ளது. இந்த விவகாரத்தில் சதித்திட்டங்களின் பங்கு பற்றிய விரிவான விவரங்களை எனது புத்தகத்திலேயே, நான் சதிவலைகள் பற்றி உருவாக்கி வரும் பொதுவான கோட்பாட்டுக்கு வலுசேர்க்கும் இன்னொரு நிரூபணமாக அளிக்கலாம் என்றிருக்கிறேன். இந்தச் சதித் திட்டத்தின் பின்னால் இருக்கும் இந்திய மற்றும் வெளிநாட்டு சக்திகள், நான் எனது புத்தகத்தில் விவரித்திருக்கும் அதே சக்திகளைப் போன்றவையே என்பதை இங்கு குறிப்பிட்டுச் சொல்லியாக வேண்டும். இப்போது சதிவலை பற்றிய முக்கிய விஷயங்களை சுருக்கமாகப் பார்க்கலாம்.
முதலில், ஏன் இத்தகைய சதிவேலைகளுக்கு சுவாமி நித்யானந்தா இலக்கானார் என்று புரிந்து கொள்ளவேண்டும். ஏழு வருடங்களுக்கு முன்பு கூட அவர் பெரிதும் அறியப் பட்டவரல்ல. ஆனால், பொதுத் தளத்தில் அவர் தோன்றியவுடனேயே, அவரது பிராபல்யம் அசுரத்தனமாக வளர்ச்சியடைந்தது. உதாரணமாக, கடந்த வருடம் உலகளாவிய இணைய வீடியோ தளமான யூ-ட்யூப், இந்திய ஆன்மிக குருமார்களில் மிக அதிகமாக அவரது வீடியோக்களைத் தான் மக்கள் பார்க்கிறார்கள் என்று அவருக்கு எழுதியது. அதோடு, உலக அளவில் பிரபலமான ஆன்மிகத் தலைவர்களில் வாத்திகன் போப்புக்கு அடுத்தபடியாக, இரண்டாவது இடத்தில் அவர் இருக்கிறார் என்றும் குறிப்பிட்ட அதே கடிதம், பார்வையாளர்களின் வசதிக்காக, அவரது அமைப்புடன் கூட்டாக இணைந்து ஒரு விசேஷ வீடியோ தளத்தையும் அமைக்க விரும்புவதாகத் தெரிவித்தது. அவரது தியான நிகழ்வுகள் அமெரிக்காவிலும், இந்தியாவின் பல மாநிலங்களிலும் மிகவும் பிரபலமாக உள்ளன. கலந்து கொண்டவர்களில் பலர் உயர்ந்த உணர்வு நிலைகளுக்குச் சென்ற அனுபவங்கள் பற்றியும், பல்வேறு விதமான நோய்கள் அவரால் குணப்படுத்தப் பட்டதாகவும் தெரிவித்தனர். அவரது நோய்தீர்க்கும் சக்திகளால் கவரப் பட்டே பல பக்தர்கள் அவரது அமைப்பு மிக நெருக்கமாக ஆனார்கள். இவர்களில் டாக்டர்கள், தொழிலதிபர்கள், சாஃப்ட்வேர் பணியாளர்கள், நிறுவன மேலாலளர்கள் என்று பலதரப்பட்டவர்கள் உண்டு. பலரும் தீராத கடும் நோய்களை அவர் குணப்படுத்தியது தான் தங்கள் வாழ்க்கையில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியது என்றும் குறிப்பிட்டுள்ளனர். சில நாட்கள் முதல் பல வாரங்கள் வரை தொடரும் அவரது தியான நிகழ்வுகளில் பலமுறை ஆயிரக் கணக்கான மக்கள் கலந்து கொண்டுள்ளர்.
அவரது அமைப்புக்கான நிதி பெரும்பாலும் இந்தியா மற்றும் அமெரிக்காவில் உள்ள மேல்தட்டு மக்களிடமிருந்தே வந்தது. அதில் கணிசமான அளவு பணம் அடித்தட்டு மக்களின் சமூக,ஆன்மீகத் தேவைகளைப் பூர்த்தி செய்ய, குறிப்பாக அவரது சொந்த மாநிலமான தமிழ்நாட்டில் உள்ள மக்களின் நலனுக்காகவே செலவிடப் பட்டது. இங்கு தான் அவர் ஒரு ஆபத்தாக கிறிஸ்தவ, திராவிட இயக்க சக்திகளுக்குத் தெரிகிறார். உதாரணமாக, 2009ம் ஆண்டு டிசம்பர் மாதம், தமிழ்நாட்டின் 600 கிராமங்களில் இருந்து “நித்யானந்த தியானபீடத் தலைவர்கள்” ஒரு பெரும் விழாவிலும், செயற்குழுக் கூட்டத்திலும் பங்குபெற அவரது பெங்களூர் ஆசிரமத்திற்கு வந்தனர். அந்த சமயம் நானும் அங்கே இருந்தேன். பெரும்பாலும் தமிழ்நாட்டின் அடித்தட்டைச் சேர்ந்த பொதுமக்கள் இவர்கள். ஒரு ஆன்மிகப் பயணமாக 300 கிலோ மீட்டர்களுக்கும் மேலாக பாதயாத்திரையாக நடந்து இந்த நிகழ்வுக்கு வந்திருந்தனர். அவரது அமைப்பின் செய்லபாடுகள் பல மாவட்டங்களில் மதமாற்றங்களுக்கு தொய்வு ஏற்படுத்தும் விதமாக இருந்ததும், அவரது அமைப்பில் இணைவதன் மூலம் பல கிறிஸ்தவர்கள் இந்துமதத்திற்குத் திரும்பியதும் அவர் மீது கிறிஸ்தவ, திராவிட இயக்கங்களுக்குக் கோபம் ஏற்பட இன்னொரு காரணம். சுவாமி நித்யானந்தா மதமாற்றங்களுக்கு எதிராக வெளிப்படையாகவே பேசியிருக்கிறார். திராவிட இயக்கம் தமிழ் மக்களின் வாழ்வை ஆன்மிகமற்றதாகி, சமூக வீழ்ச்சிக்கு வழிவகுத்ததாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். அவரது ஆங்கில மொழி உரைகளை விடவும் கூட, தமிழ் மொழியில் அமைந்த அவரது கட்டுரைகளும், உரைகளும் இன்னும் பிரபலமடைந்தன.
அவர் பிராமணர் அல்ல என்பதாலும் மேற்சொன்ன சக்திகளின் வழக்கமான, க்ளாசிகல் பிராமண-துவேஷப் பிரசாரத்தின் மூலம் அவரைக் குறிவைக்க முடியாது என்பதாலும் அவர் இன்னும் மிகப் பெரிய ஆபத்தாகக் கருதப் பட்டார். அவரது அமைப்பு மிகப் பெரிய அளவில் வெகுஜன ஈர்ப்பு கொண்டிருந்ததால், தற்போதைய அரசியல் அதிகார பீடங்களுக்கு கலக்கம் ஏற்படுத்தும் அளவு வளர்ந்துவிடாமலும் பார்த்துக் கொள்ளவேண்டும்.
நித்யானந்தா மீதான தாக்குதல் பிம்பத்தைத் தகர்ப்பது மற்றும் சட்டபூர்வமாக முடக்குவது என்று இருமுனைகளில் இருந்தது. முதலில் அவர்மீது உள்ள மதிப்பை ஒழிப்பதற்காக ஒரு பயங்கர பரபரப்பான செக்ஸ் குற்றச்சாட்டு ஊடகங்கள் மூலம் ஒளிபரப்பப் பட்டது. அந்த சூழலில் எந்தவிதமான கூடுதல் குற்றச் சாட்டுகளை வைத்தாலும், அவையும் மக்களால் அப்படியே நம்பப் படும் என்பது போன்ற சூழலை உருவாக்குவதே இதன் நோக்கம். ஊடகங்களும், வெகுஜன அபிப்பிராயங்களும் அவருக்கு எதிராகத் திருப்பப் பட்ட பின், அலை அலையாக அட்டகாசமாக குற்றச் சாட்டுகள் வரத் தொடங்கின! இது இயல்பாக நடந்தது அல்ல; மாறாக துல்லியமாக திட்டமிடப் பட்டு, ஒரு மையத்திலிருந்து இயக்கப் பட்டு நடந்தது. இதில், ஊடகங்கள், காவல்துறை, கீழ்நிலைக் கோர்ட்டுகள் இவைகளுக்கு நடுவில் சிலசமயம் அதிகார பூர்வமாகவும், சில சமயம் நட்பு பூர்வமாகவும் சொல்லப் படாத “ஒத்துழைப்பு” இருந்தது என்பது எனது தனிப்பட்ட விசாரணையின் போது மிகத் தெளிவாகவே எனக்குத் தெரியவந்தது.
சொல்லப் போனால், தொடர்பில்லாத பல மூன்றாவது நபர்களுக்கு, இந்த தாக்குதல் பற்றி முன்பே தெரிந்திருந்தது. திட்டம் பற்றிய விவரங்கள் உட்பட சொல்லி அவர்கள் தங்கள் ஆட்களை எச்சரித்து வைத்திருந்தார்கள். உதாரணமாக, சில வாரங்கள் முன்பு அவரது ஆசிரமத்தில் உயர்பொறுப்பில் இருக்கும் பக்தர் ஒருவருக்கு நியூயார்க்கிலிருந்து ஒருவரிடமிந்து தொலைபேசி அழைப்பு வருகிறது; ஊடகங்களின் மூலம் தாக்குதல் வரப்போகிறது, காவல்துறை நடவடிக்கை வரப்போகிறது என்று அழைத்தவர் கூறுகிறார். அவர் சொன்னது இப்போது உண்மையாகி விட்டது. ஆனால் அப்போது ஆசிரமத்தினர் அதனை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை. ஒரு குறிப்பிட்ட தொகை அளித்தால், அந்தத் தாக்குதலைத் தடுக்க உதவிசெய்வதாகவும் அழைத்தவர் கூறுகிறார். ஒரு வருடம் முன்பே தாக்குதலுக்கான திட்டம் ஆரம்பித்து விட்டது; சில வெளிநாட்டு குழுக்களால், இந்து குருமார்களை, குறிப்பாக தென்னிந்திய குருமார்களை ஒழித்துக் கட்டுவதற்காகத் திட்டமிடப் பட்டு 200 கோடி ரூபாய் பட்ஜெட் ஒதுக்கப் பட்டுள்ளது என்றும் இந்தத் திட்டத்தை ஒருங்கிணைத்து செயல்படுத்தும் ஏஜென்சிகளாக இரண்டு தென்னிந்திய சர்ச்சுகள் இருக்கின்றன என்றும் அழைத்தவர் கூறினார் (எனது புத்தகத்தில் இது பற்றி விரிவாக எழுதுவதற்காக, இந்தத் துப்புகளின் அடிப்படையில் மேலும் சில விசாரணைகளை இப்போது நான் மேற்கொண்டிருக்கிறேன்).
இந்த விவகாரம் வெடிப்பதற்கு முன்பாக, சரியாக 11-12 நாட்கள் முன்பு, நேரடியான மிரட்டல் முயற்சிகளும் மேற்கொள்ளப் பட்டன. ஆசிரமத்தினரை ஒரு வழக்கறிஞர் தொடர்பு கொண்டு அவரது கட்சிக் காரரிடம் விவகார வீடியோக்கள் இருப்பதாகவும், சரியான அளவு பணம் தரப்படாவிட்டால், அந்த வீடியோக்களை அவர் வெளியிட்டு விடுவார் என்றும் கூறினார். இதே இடைத்தரகர் பின்னர் (செக்ஸ் வீடியோ விவகாரம் பொதுவில் ஒளிபரப்பப் படுவதற்கு முன்பு) சுவாமி நித்யானந்தா மீது எந்த ஆதாரமும் இல்லாத பலதரப்பட்ட குற்றச்சாட்டுகள் அடங்கிய ஒரு நீண்ட கடிதத்தையும் எழுதி, அந்தக் கடிதத்தை பிரதமர், ஜனாதிபதி, சோனியா காந்தி, ராகுல் காந்தி, சில மாநில முதல்வர்கள், காவல்துறை ஆணையர்கள், தேசிய அளவிலான விசாரணை நிறுவனங்கள், பாதுகாப்பு அமைப்புகள் ஆகியவற்றுக்கு அனுப்பி வைத்திருக்கிறார். என்னிடம் இந்தக் கடிதத்தின் நகல் இருக்கிறது. இந்தக் கடிதம் சுவாமி நித்யானந்தாவின் அமைப்பினை ஒரு பயங்கரவாத அமைப்பு ஈடாக சித்தரித்து, பொதுமக்களின் பாதுகாப்பை முன்னிட்டு, இந்த அமைப்பை அரசு விசாரித்து அதன் நடவடிக்கைகளை முடக்க வேண்டும் என்று கோருகிறது. இந்தக் கடிதமும், செக்ஸ் வீடியோ அடங்கிய டி.வி.டியும் வீடியோ ஒளிபரப்பப் படுவதற்கு இரண்டு மணி நேரம் முன்பு கர்நாடக முதலமைச்சரிடம் கொண்டு சேர்க்கப் பட்டது.
ஆசிரமவாசிகளிடம் அவர்களது போன்கள் ஒட்டுக் கேட்கப் படுகின்றன என்றும், பயங்கரமாக ஏதோ நடக்கப் போகிறது என்றும் அவர்களது உயிரைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டுமானால் அவர்கள் ஆசிரமத்தை விட்டுப் போவதே நல்லது என்றும் திடீர் எச்சரிக்கைகள் பேர்தெரியாத நபர்களிடமிருந்து வந்திருக்கின்றன. நித்யானந்தரின் பக்தரும், பத்திரிகை நடத்திவருபவருமான ஒரு புணே நண்பர் ஒரு வாரம் முன்பாகவே ஒரு திடீர் பயங்கர ஆபத்து வர சாத்தியம் இருக்கிறது என்று ஆசிரமத்தினருக்குக் கூறியிருக்கிறார். நம்பகமான பெங்களூர் பிரஸ் கிளப் வட்டாரத்திலிருந்து தனக்கு இந்த செய்தி கிடைத்ததாக அவர் குறிப்பிட்டிருக்கிறார். சுவாமி நித்யானந்தாவின் தெலுகு மொழிப் புத்தகங்களை வெளியிடும் ஹைதராபாத் பதிப்பக நண்பர் ஒருவர், மூன்று முறை ஆசிரமத்தினரை அழைத்துப் பேசி ஆசிரமத்தின் பேரைக் கெடுக்கும் ஒரு வீடியோ ஊடங்களில் வரப்போகிறது என்று அது வரப்போகும் நேரம் உட்பட குறிப்பிட்டுச் சொல்லியிருக்கிறார். ஆசிரமத்தினருக்கு எதிராகப் போய்விட்ட ஒரு பழைய அமெரிக்க பக்தர், ஒரு இணையத்தில் ஆன்மிக குருக்களை விளாசித்தள்ளும் ஒரு வலைத்தளம் நடத்துபவரான Jody Razdik என்பவருடன் இணைந்து ஆசிரமத்தின் பெயரைக் கெடுக்கத் திட்டம் தீட்டுவதாகவும், அவருக்கு அமெரிக்காவில் சான் டியாகோ நகரைச் சேர்ந்த ஒரு இந்தியர் உதவுவதாகவும் (இந்த இந்தியர் முதலில் நித்யானந்த அமைப்பில் மிக நெருக்கமாக தீவிரமாக இருந்து, பின்னர் பிரிந்து வந்து அதன்மீது வன்மம் கொண்டவராகி விட்டார்) சொல்லப் பட்டது. ஒரே ஒருவர் தான் வெளிப்படையாகக் குற்றம் சாட்டியிருக்கிறார். அவர் ஆசிரமத்தில் அவர் நடத்தை காரணமாக கீழிறக்கப் பட்டதால் பிரிந்து சென்றுவிட்டவர். அவருக்கு முன்னரே கிரிமினல் பின்னணி இருந்தது என்றும் அதைப் பற்றி முழுதாக விசாரிக்காமல் அவர் ஆசிரமத்திற்குள் அனுமதிக்கப் பட்டுவிட்டார் என்றும் பின்னர் தெரியவந்தது.
ஆசிரமத்தினரை பீதிகொள்ளச் செய்யும் வகையில், “போதைப் பொருள்கள் புதைத்து வைக்கப் படும்; வாரண்டுடன் வந்து ஆசிரமவாசிகளைக் கைது செய்வார்கள்” என்ற ரீதியிலானமிரட்டல்கள் வந்தபடியே இருந்தன. விவகாரத்திற்குப் பின் ஆசிரமத்தில் காவல் துறையினரின் நடவடிக்கைகள் எதுவும் ஆரம்பிப்பதற்கு முன்பாகவே அது பற்றிய “செய்திகள்” ஊடகங்களுக்குக் கசிய விடப் பட்டன. முழுமையான தாக்குதல் வருவதற்கு முன் ஆசிரமத்தைக் காலி செய்து விடுங்கள் என்று நித்யானந்தா அமைப்பில் இருப்பவர்களுக்கு அறிவுரைகள் “நண்பர்கள்” மூலம் காற்றில் பரவின.
ஆனால் விவகாரம் வெடித்து சில வாரங்கள் ஆகியும் கூட, சில சில்லறை கேஸ்கள் தவிர்த்து, நித்யானந்தா மீதோ, அல்லது அமைப்பின் மீதோ தாக்கல் செய்யப் பட்டதாக எந்தக் குற்ற அறிக்கை பற்றிய விவரமும் நித்யானாந்தா அமைப்பின் வழக்கறிஞர்களுக்கு வந்து சேரவே இல்லை. அமைப்பிலிருந்து விவரங்கள் மீண்டும் மீண்டும் கேட்கப் பட்ட போதும், சட்டபூர்வமாக பெரிய வழக்கு எதுவுமே இல்லை என்பதே பதிலாகக் கிடைத்தது! மொத்தத்தில், தகவல்கள், வாதபிரதிவாதங்கள், குறுக்கு விசாரணைகள் உள்ளிட்ட சட்டபூர்வ நடவடிக்கை எதுவுமே இல்லாத நிலையில், இந்த அத்தனை மிரட்டல்களும், பீதிகளும் முழுக்க முழுக்க ஊடகங்களின் மூலமாகவே பரப்பப் பட்டிருக்கின்றன. சட்டபூர்வமாக எந்த வழக்கும் இல்லாத நிலையில் வதந்திகளையும், அச்சுறுத்தல்களையும், மிரட்டல்களையும் இஷ்டத்துக்கு உலவவிடலாம் என்ற சூழல் உருவாக்கப் பட்டு விட்டது.
முக்கியமாக, இஸ்லாமிய, கிறிஸ்தவ குழுக்கள் தொடர்பான குற்ற விவகாரங்களில் இந்திய ஊடகங்கள் எப்படி நடந்து கொள்கின்றன என்பதை இதோடு ஒப்பிட்டுப் பார்க்கவேண்டும். வெளிநாடுகளில் நடக்கும் இந்த மதங்கள் தொடர்பான மிகப் பெரிய குற்றங்களும், ஊழல்களும் ஒட்டுமொத்தமாகவே இந்திய ஊடகங்களால் இருட்டடிப்பு செய்யப் பட்டு விடும். அப்படியே செய்திகள் வெளிவந்தாலும், அவை அந்த மதத்தவரின் உணர்வுகளை சிறிது கூட புண்படுத்தக் கூடாது என்ற அதீத கவனத்துடன் சொல்லப் படும். அவைகள் “வகுப்பு வாதம் சிறிதும் இல்லாத, தூய செக்யுலர் ஊடகங்கள் அட்லல்வா? ஆனால், எந்த இந்து குழுவிற்கும் எதிரான சிறிய குற்றச் சாட்டு கூட ஒட்டுமொத்தமான “இந்து” குற்றமாக சேர்க்கப் பட்டு அந்தக் குழுக்கள் பயங்கரவாதக் குழுக்களுக்கு ஈடாக சித்தரிக்கப் படும்.
ஊடகங்களின் ரவுடித் தனமான உபாயங்களும், ஆதாரங்களைப் பற்றிக் கவலைப் படாமல் செய்திகளைத் “துரத்திச் செல்லும்” மனப்பான்மையும் கண்டனத்திற்குரியவை. சுவாமி நித்யானந்தா விஷயத்தில், அவர்கள் ஆசைகாட்டியும் அச்சுறுத்தியும், ஏதேதோ செய்தும் பரபரப்புக்குத் தீனிபோடுவதையே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டனர். பல தொலைக் காட்சி சேனல்களும், பத்திரிகையாளர்களும் ஹரித்வாரில் கூடாரம் அடித்துத் தங்கியிருந்தனர். எனக்கு மின் அஞ்சல்கள் அனுப்பி, ஒரு நேர்காணலுக்கு ஏற்பாடு செய்ய முடியுமா என்று கேட்டுக் கொண்டே இருந்தனர். என்னால் அது முடியாது என்ற போது, சிலர் என்னை வசைபாடினர். ஒரு டிவி பெண்மணி, பிரத்யேக பேட்டி மட்டும் கிடைத்து விட்டால், சுவாமிக்கு “சாதகமாக” கவரேஜ் கொடுக்கிறேன் என்று என்னிடம் மன்றாடினாள். ஆனால் நேர்காணலுக்குப் பிறகு வாக்கைக் காப்பாற்றாமல், அதனை மேலும் திரித்து, இன்னும் அதிகமாக சேறுபூசுமாறு ஆக்கி ஒளிபரப்பினாள். இந்த ஒரு நேர்காணலில் காட்டப் பட்ட அவதூறூகளுக்கு பதிலளிக்க இன்னும் சில நேர்காணல்கள் என்று சுவாமி நித்யானந்தரின் உதவியாளர்கள் பல டிவி சேனல்களுக்கு பதில் சொல்ல வேண்டியதாயிற்று. ஆனால் அவர்கள் டிவி காமிராக்களுக்கு முன் அதிகம் பேசப் பேச, அது மேலும் மேலும் மோசமான விவகாரம் என்கிற எண்ணம் அதிகமாகி வந்தது. ஒரு டிவி சேனல் சுவாமியின் உதவியாளரை அப்பட்டமாக மிரட்டியது – “உடனடியாக ஒரு நேர்காணல் தரவில்லை என்றால், உங்களை ஒழிக்க எங்களுக்கு சக்தி உண்டு என்று காட்டி விடுவோம்”. ஒரு கட்டத்தில், ஒரு பிரபல டிவி சேனல் இதே போன்ற குற்றச் சாட்டுகளை ராமகிருஷ்ண் மிஷன் மீதும் சுமத்தி, அவர்களையும் இதில் இழுக்க விரும்பி முயன்றது, நல்லவேளையாக ஒருவர் தலையிட்டு அதைத் தடுத்து விட முடிந்தது.
சுவாமி நித்யானந்தா அமைப்பு செய்யத் தவறியவை
இந்து மரபில் மூன்று வகையான செயல்திறன்கள் (இதை விளக்குவதற்காக வர்ணங்கள் என்ற சொல்லைப் பயன்படுத்துவோம்) பற்றி சொல்கிறது. இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையான சமூக மூலதனங்கள். இவை மூன்றும் ஒரே மனிதரிடத்தில் குவிந்திருக்கக் கூடாது, அப்படி இருந்தால் அவர் கட்டுக்கடங்காத அதிகார மையமாவார் என்று எண்ணப் பட்டது. இதனை விளக்க பிராமண, க்ஷத்ரிய, வைசிய என்ற பதங்களைப் பயன்படுத்துகிறேன் – சாதிகளைக் குறிக்க அல்ல, திறமைகள் மற்றும் சமூக மூலதனத்தைக் குறிக்க. ஆன்மிகம், கல்வி ஆகியவை பிராமண செயல்திறன்கள். அரசாட்சி, அரசியல், தலைப் பண்புகள் ஆகியவை க்ஷத்ரிய செயல்திறன்கள், வணிகம், பண முதலீடு ஆகியவை வைசிய செயல்திறன்கள். சுவாமி நித்யானந்தாவின் அமைப்பில் க்ஷத்ரிய, வைசிய செயல்திறன்களைக் கோரும் பணிகளை பிராமண செயல்திறன் உள்ளவர்கள் செய்து வந்தார்கள். இது சரியான விளைவுகளைத் தரவில்லை; நேர்மாறான விளைவுகளைத் தந்தது. ஆசிரம நிர்வாகிகளும் தலைவர்களும் ஒருவிதமான திறன்களுடன், ஒருவிதமான பணிக்காக பயிற்றுவிக்கப் பட்டிருந்தார்கள் . ஆனால் இந்த சூழலில் தேவைப் பட்டது வேறுவிதமான திறன்கள். வேகமாக வளர்ந்து வரும் ஒரு உலகளாவிய நிறுவனத்தை நடத்துவதற்கான தொழில்முறையிலான திறமைக்குப் பதிலாக, பக்தி மற்றும் ஆன்மிக சாதனைகள் ஆகியவற்றை அடிப்படையாக வைத்தே அவர்கள் அந்த அமைப்பை நடத்தி வந்தார்கள். அவர்களது முழு கவனமும் பிராமண செயல்திறன்களிலேயே மூழ்கியிருந்தது, க்ஷத்ரிய செயல்திறன்கள் பற்றி யாரும் கவலைப் படவில்லை.
உதாரணமாக, அவர்களிடம் தலைமை தாங்கும் திறமை, துணிவு, ஈடுபாடு ஆகிய க்ஷத்ரிய செயல்திறன்கள் கொண்ட, வெளிநாட்டைச் சேர்ந்த, வெள்ளைக் கார பக்தர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள். ஆனால் இந்த ஊடகத் தாக்குதலுக்குப் பிறகும், அவர்களை செயல்திறன்களைப் பயன்படுத்தவோ, அவர்களைக் களத்தில் இறக்கவோ அமைப்பு தவறிவிட்டது. இத்தகைய மேற்கத்தியர்களில் சிலரை நான் கும்பமேளாவில் சந்தித்தேன். அவர்கள் தங்கள் குருவின் பின்னால் உறுதியாக நிற்கத் தயாராக இருந்தார்கள். ஆனால் அவர்களை ஒருங்கிணைத்து, சுவாமி நித்யானந்தாவுக்கு உலக அளவில் ஆதரவு இருக்கிற்து என்று காட்ட யாருமே முன்வரவில்லை. நெருக்கடி நிலையை சந்திக்க, இத்தகைய முயற்சிகளை செய்வதற்குப் பதிலாக, அந்த அமைப்பு தாறுமாறான குழப்பத்தில் இருந்தது. எதிர்த்தரப்பின் ஒவ்வொரு ’அடி’யையும் வாங்கிக் கொண்டு, அதற்கு எதிர்வினையாற்றிக் கொண்டிருந்தது. வதந்திகளால் அந்த அமைப்பின் தலைவர்களே பீதியடைந்திருந்தார்கள். அழுத்தத்திலும், கலக்கத்திலும் முடிவுகள் எடுக்கப் பட்டன. அவர்கள் சீரான சிந்தனையுடன் இல்லாமல் சிதறுண்டிருந்தார்கள்; பல உறுப்பினர்கள் உளவியல்ரீதியாக உடைந்து கொண்டிருந்தார்கள்.
அந்த அமைப்பு ஒட்டுமொத்தமாக ஒரு மனிதரையே நம்பியிருந்தது. அதன் தலைவர்கள் குழந்தைகள் போன்று, எல்லா முடிவுகளுக்கும் சுவாமியையே சார்ந்திருந்தனர். ஆசிரமத்தின் உள்வட்டங்களில் சுவாமி ஒரு வழிபாட்டுக்குரிய பிரதிமையாகி இருந்தார். அவருடனான நெருக்கம் எவ்வளவு என்பதைப் பொறுத்துத் தான் ஒவ்வொருவருடைய அடையாளமும் அறியப் பட்டது; அவர்களது தனிப்பட்ட ஆற்றலும் செயல்பட்டது. இது தெளிவாகவே ஒரு தனிமனித வழிபாட்டு “கல்ட்” (cult) மனநிலை. இத்தகைய மனநிலையைக் கொண்டு தற்காலத்திய தாக்குதல்களில் இருந்து பிழைத்து வர முடியாது. ஒரு மனிதரிடம் இத்தகைய வர்ண-செயல்திறன்களின் குவிப்பு ஒட்டுமொத்தமாக அந்த நிறுவனத்தை திறமையற்றதாக ஆக்குவது மட்டுமல்ல, அது அந்த மனிதரிடம் தலைக்கேறி, அவரை அதிகார வெறியராகவும் ஆக்கிவிடக் கூடும். குறிப்பாக, சித்திகள் பெற்ற ஒரு குருவிடம் அவரது தன்னுணர்வும் (ego), அதிகாரமும் ஒன்றிணைந்து எளிதாகவே ஒரு அபாயகரமான கலவையாக ஆகிவிடக் கூடும். இதன் விளைவாக, அவரைச் சுற்றி துதிபாடிகள் மட்டுமே இருப்பார்கள், அவர் என்ன விரும்புகிறாரே அதையே பேசுவார்கள். இந்த சுய புகழ்ச்சி சுழல் ஒரு கட்டத்தில் அந்த குழு முழுவதையும் ஒட்டுமொத்த கற்பனை மயக்கத்தில் ஆழ்த்தி விடும்.
சாதாரண பொதுப் புத்தியால் எடுக்க இயலக் கூடிய தீர்மானங்களையும்,முடிவுகளையும் கூட அந்த அமைப்பின் உள்வட்டத்தினரால் எடுக்க முடியவில்லை என்பதை நான் கவனித்தேன். குரு நித்யானந்தாவிடம் ”நல்ல செய்தி” மட்டுமே செல்லவேண்டும் என்பதற்காக தகவல்களைத் திரித்து அவரிடம் கூறினார்கள். இதன் விளைவாக, நேர்மையான முறையில் சொல்லியிருக்க வேண்டிய உண்மை எந்த அளவு விரைவாக வெளிவந்திருக்க வேண்டுமோ அப்படி வெளிவரவில்லை. அது நடைமுறையான, யதார்த்தமான செயல்பாடுகளுக்கு உதவியிருக்கும். ஒரு விஷயத்தை நம்பகமான முறையில் தெரிந்து கொள்வது என்பதே எனக்குக் கடினமாக இருந்தது. ஒவ்வொரு முறையும் தகவல்கள் வேறு மாதிரி வந்தன. அந்தக் குழுவுக்குள்ளேயே இருந்த ஒவ்வொருவரும் வேறுவேறு மாதிரிக் கூறினார்கள். இவர்கள் உண்மையிலேயே எதையாவது மூடி மறைக்கிறார்களா அல்லது முந்தையை பொய்யான தகவலை சரிசெய்ய புதிய பொய்யான தகவல்களை எடுத்துவிடுகிறார்களா என்று எனக்குப் புரியவில்லை. இந்தச் சூழலில், அந்தக் குழுவில் எந்த நபர்களுக்கு தங்கள் தனிப்பட்ட சுயலாப உள்நோக்கங்கள் இருக்கின்றன என்று கண்டுபிடிப்பதே மிகக் கடினமான விஷயமாகிறது. க்ஷத்ரிய செயல்திறன் கொண்டவர்கள் இல்லாததால், இப்படி ஒரு சிக்கல் வரலாம் என்று கூட சுவாமி நினைத்துப் பார்த்திருக்கவில்லை, என்னைப் போன்ற வெளிஆட்கள் எல்லா இந்து ஆன்மிகக் குருமார்களுக்கும் இத்தகைய அச்சுறுத்தல்கள் வரலாம் என்று அவரிடம் எடுத்துக் கூறியிருந்தும் கூட (நான் முன்பு குறிப்பிட்ட 2-நாள் உரைகளின் போது).
இன்றைய சூழலில், ஒரு உலகளாவிய ஆன்மிக குருவாக இருப்பது என்பது மிகக் கடினமான உழைப்பும், ஆற்றலும் கோரும் விஷயம் என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன். இத்தகைய குரு ஒருவர் தனது பழைய மரபை ஆதாரபூர்வமாக, அதே சமயம் நவீனயுக மக்களுக்கும் ஈடுபாடுள்ள வகையில் எடுத்துச் செல்லவேண்டும். எனவே தான், இந்து தலைவர்களுக்கு தங்கள் மரபுவழிவந்த சம்பிரதாய ஆன்மிகக் கல்விக்கு அப்பாற்பட்ட இத்தகைய விஷயங்களைப் பற்றிய பரிச்சயமும் தேவை என்று நான் நினைக்கிறேன்.
இந்து குழப்பம்
இந்த அவதூறுகளுக்கும், வதந்திகளுக்கும் மத்தியில், இந்தியாவில் உள்ள சுவாமி நித்யானந்தாவின் ஆதரவு வட்டங்களே தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக அவரிடமிருந்து விலக ஆரம்பித்திருக்கிறார்கள். அவரது தரப்பில் அவர் என்ன சொல்கிறார் என்பதைப் பற்றிய விஷயம் அவருக்கு நெருக்கமான ஆதரவாளர்களைக் கூட உடனடியாக சென்று சேரவில்லை. பின்னர் அவர்களைத் தொடர்பு கொண்டபோது, ஏற்கனவே பாதிப்பு ஏற்பட்டு விட்டது; அவரது மதிப்பு சரிந்து விட்டிருந்தது. ஒரு “வழிதவறிய குரு”வுடன் இணைத்துப் பேசப் படும் அளவுக்கு ரிஸ்க் எடுக்க அவர்கள் விரும்பவில்லை. பல இந்து குருமார்கள் “வழிதவறிய ஆன்மிகவாதி”யை ஏற்கனவே விளாச ஆரம்பித்து விட்டார்கள்; மற்றவர்கள் தனிப்பட்ட முறையில் ஆறுதலைத் தெரிவித்தார்கள், ஆனால் பொதுவில் தங்கள் கழுத்தை நீட்ட முன்வராமல் அமைதி காத்தார்கள் அல்லது நடுநிலையாளர்களானார்கள்.
இன்னொரு விஷயம். சுவாமியின் அணுகுமுறை சிலருக்கு மிகவும் சம்பிரதாயமானதாகத் தோன்றியது. வேறு சிலருக்கு மிகவும் நவீனமானதாகத் தோன்றியது. அவரது வழிமுறையில் தெய்வங்கள், வழிபாடுகள், சடங்குகள் எல்லாமே உண்டு. முதிர்ச்சியற்ற பழங்குடி வழிபாடு (primitive paganism) போன்ற சடங்கு வழிபாட்டு சமாசரம் எதுவும் இல்லாத, தத்துவங்கள் மட்டுமே உள்ள, பூடகமான வெள்ளையடிக்கப் பட்ட இந்து ஆன்மிகத்தை பிரசாரம் செய்ய விரும்பும் உலகம் சுற்றும் குருமார்களின் ரசனைக்கு அவரது வழிபாட்டு விஷயங்கள் ஒத்துவராதவையாக இருந்தன. இன்னொரு முனையில், முழுக்க சம்பிரதாயமயமான இந்து குருமார்களுக்கு, இளைஞர்களுக்கு ஈடுபாடு உண்டாக்கும் நடனங்கள், கொண்டாட்டங்கள், சுதந்திரமான திறந்த சூழல் இதெல்லாம் ”உண்மையான” இந்து தர்மத்திற்கு முரணானவையாகத் தோன்றின. என்.டி.டி.வியில் வந்த சில சங்கராசாரிய துறவிகள் “”போலி” துறவிகளை விளாசித் தீர்த்தனர். குரு ஆவதற்குத் தகுதியுள்ளவர்கள் யார் என்று சான்றிதழ் வழங்கும் தகுதி சங்கராசாரிய துறவிகளுக்கு மட்டுமே உண்டு என்றனர். சுவாமி நித்யானந்தா இதில் இரண்டு முனைகளிலுமே முழுதாகப் பொருந்தாதவர்.
நான் சந்தித்த பல குருமார்கள், தனிப்பட்ட உரையாடலின் போது, இது போன்ற தாக்குதல்கள் மேலும் பல இந்து குருமார்களின் மீது தொடரப் படலாம் என்று தாங்கள் அஞ்சுவதாகக் கவலை தெரிவித்தனர். ஒரு உண்மையான இந்து அமைப்பு ஆபத்தில் சிக்கிக் கொள்ளும்போது, அதனை நேர்கொள்ள கிறிஸ்தவத்தில் சர்ச் அமைப்பு இருப்பது போன்று ஒரு இந்து அமைப்பு இல்லையே என்றும் சிலர் கூறினர். ஹிந்து தர்ம ஆசாரிய சபா (Hindu Dharma Acharya Sabha – HDAS) என்ற துறவியரைத் தலைவர்களாகக் கொண்ட ஒரு அமைப்புக்கு நான் ஒரு கோரிக்கை வைத்திருக்கிறேன் – இந்த சூழலில் அந்த அமைப்பு முன்வந்து நித்யானந்தா ஆசிரமைத்தையும், அதனுடன் தொடர்புடைய அமைப்புக்களையும் கையில் எடுத்துக் கொள்ளவேண்டும் என்று. புதிய உறுப்பினர்களைக் கொண்டு, அந்த நிறுவனத்தை மறுபடி நிலையாக இயங்க வைக்கவும் முடியும். ஆனால் நடைமுறையில் இது சாத்தியமா என்பது சந்தேகத்திற்குரியது. இவ்வளவு பெரிய பணியை HDAS போன்ற அமைப்பு செய்திட முடியுமா என்பதும் கேள்விக்குரியது.
செய்ய வேண்டியது என்ன?
இந்த விசாரணை முழுவதிலும், பரந்து பட்ட இந்து தர்மத்தின் ஒட்டுமொத்த நலன்களைக் காப்பதற்காக, இந்த விவகாரத்தினால் ஏற்பட்ட பாதிப்பை எப்படிக் கட்டுப் படுத்துவது என்பதே எனது நோக்கமாக இருந்தது. இதற்கு ஒரு நடைமுறையான தீர்வு தேவை. இப்போதிருக்கும் நிலைமையை வைத்துப் பார்த்தால், சுவாமி நித்யானந்தா அமைப்பிலிருந்து வெளியேறுவதைத் தவிர வேறு எந்த வழியிலும் இந்தக் குழப்பத்தைத் தீர்க்க முடியாது என்றே தோன்றுகிறது. அவர் தனிப்பட்ட அளவில், சுய ஞானத் தேடலுடன் கூடிய தியான வாழ்க்கையை வாழ வேண்டும். ஆசிரமத்தில் உள்ள இளைஞர்களைப் பற்றிய கவலையும் எனக்கு இருக்கிறது. வியத்தகு திறன்கள் கொண்ட மனிதர்கள் அவர்கள். அவர்களுக்கு இப்போது சரியான வழிகாட்டுதல் தேவை. அவர்களிடம் தங்கள் தனிப்பட்ட ஆன்மிக சாதனை மீதும், அமைப்பு சார்ந்த பணிகள் மீதும் தீவிர ஈடுபாடு உள்ளது, ஆனால் தற்போதைய சவாலை சமாளிக்கத் தேவையான முதிர்ச்சியும், நேர்த்தியும் இல்லை.
சுவாமி நித்யானந்தா உடனடியாக எல்லா அமைப்புகளில் இருந்தும் பதவி விலக வேண்டும். அவற்றை மூத்தஆன்மிக குருமார்களிடம் ஒப்படைக்க வேண்டும். குறிப்பாக சிவ சூத்திரங்களையும், அதனுடன் தொடர்புடைய மரபுகளையும் பின்பற்றும் சைவ குருமார்களிடமே ஒப்படைப்பது சாலச் சிறந்தது. மார்ச் 9ஆம் தேதி நான் பதிவு செய்த நேர்காணலில் இவை அனைத்தையும் விட்டுவிட்டு, மறுபடி அலைந்து திரியும் ஒரு சாதாரணத் துறவியாக ஆகத் தான் தயார் என்று நித்யானந்தா கூறினார். அந்த நேர்காணலும் பொதுவில் வந்திருக்கவேண்டும், ஆனால் வரவில்லை.
புதிய ஆன்மிக குருமார்கள் அந்த அமைப்புக்குப் புத்துயிரூட்ட முடியும், அது தன்னைப் புதுப்பித்துக் கொள்ள ஒரு நல்ல வாய்ப்பு அளிக்க முடியும். ஆன்மிகப் பயிற்சிக்கான ஒரு மையமாக அது தொடரலாம் அல்லது முழுமையாக ஒரு இந்து சமூகசேவை அமைப்பாகவும் தன்னை மாற்றிக் கொள்ளலாம். எப்படி இருந்தாலும், இதற்கு மாறாக அரசு உள்நுழைந்து இந்த ஆசிரமத்தையும், அமைப்பையும் கையகப் படுத்துவதை விட அது சிறந்த வழியே. அரசு கையகப் படுத்திவிட்டால் இந்து ஆன்மிகம் மீது எந்த ஒரு பற்றுதலும் இல்லாத அரசு அதிகாரிகள் வசம் தான் இந்த அமைப்பு ஒப்படைக்கப் படும். ஏற்கனவே பலமுறை இந்துக் கோவில்களையும், அமைப்புகளையும் அரசு தன் கையில் வைத்திருக்கும்போது நடக்கும் அதே கதை தான் நடக்கும்.
அமைப்பை தியாகம் செய்வதோடு, சுவாமி நித்யானந்தா மூத்த குருமார்களது வழிகாட்டுதலில் தனது தனிப்பட்ட ஆன்மிக சாதனைகளைத் தொடரட்டும். அவர்கள் இந்த அமைப்பையும், அவரையும் பரிசீலிக்கட்டும். பிறகு பொதுத்தளத்தில் தங்கள் தீர்ப்பினை அறிவிக்கட்டும். அப்போது சுவாமி நித்யானந்தா உறுதியுடனும், பணிவுடனும் அந்தத் தீர்ப்புக்குக் கட்டுப் படவேண்டும். என்ன நடந்தது என்பது பற்றியும், அதற்கு என்ன பரிகாரம் என்பது பற்றியும் தீர்ப்பு சொல்வதை ஏற்றுக் கொள்ளவேண்டும்.
உலகின் மற்ற பெருமதங்களுக்கு ஈடாக, சொல்லப் போனால் அவற்றுக்கும் மேலாக, இந்துமதம் பல்லாயிரம் வருடங்களாக வாழ்கிறது. பல்வேறு சிக்கல்களை சந்தித்திருக்கிறது. இத்தகைய சூழ்நிலைகளை எப்படி எதிர்கொள்வது என்பதற்கு இந்துமதத்திற்குள்ளேயே வழிமுறைகள் உள்ளன. இவற்றைப் பயன்படுத்த வேண்டும், நம் காலத்திற்கு ஏற்றாற் போல நவீனப் படுத்தவேண்டும்.
வரும் காலங்களில், இதுவே இந்து அமைப்புகள் சந்திக்கும் இத்தகைய கடைசி விவகாரமாக இருக்கப் போவதில்லை.
(முற்றும்)
ஜடாயுவின் பின்னுரை:
நித்யானந்தாவின் ஒன்றிரண்டு கட்டுரைகளைப் படித்திருப்பதும், தியானம் பற்றிய ஒன்றிரண்டு உரைகளைக் கேட்டிருப்பதும் தவிர அவரைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. அவை என்னை பெரிதாக impress செய்யவும் இல்லை. ஆனால் நித்யானந்தா விவகாரத்தின் பின்னணியில் ஆன்மிகம், இந்து அமைப்புகள், உலகளாவிய ஆன்மிக குருமார்கள், தியானம்/யோகம் பற்றி கடும் கேள்விகளும், விவாதங்களும் எழுந்துள்ளன. ஒரு சாமியார் சம்பந்தப் பட்ட விவகாரம் என்பதைத் தாண்டி பல விஷயங்களையும் அலச இது ஒரு சந்தர்ப்பம் அமைத்துக் கொடுத்திருக்கிறது.
இது தொடர்பான தமிழ் வாசகர்களின் பல சிக்கலான கேள்விகளுக்கு ஜெயமோகன் தனது ஆன்மிகம், போலி ஆன்மிகம் தொடர் கட்டுரைகளில் உறுதியான, ஆதாரபூர்வமான விடைகள் அளித்துள்ளார். பலருக்கும் பயன்படுமாறு இதனை ஒரு புத்தகமாக வெளியிட வேண்டும் என்றும் அவரிடம் நான் கோரிக்கை வைத்திருக்கிறேன். இவை பரவலாக தமிழ் வாசகர்களிடம் சென்று சேரவேண்டும்.
அதோடு, நேசகுமார் இது தொடர்பாக எழுதிய திண்ணைக் கட்டுரை ”கல்ட்” மனோபாவத்தின் அபாயங்களை விவரிக்கிறது. சின்னக் கருப்பனின் கட்டுரை இந்த விவகாரத்தில் ஊடகங்களின் அராஜக செயல்பாடுகளைத் தொட்டுச் செல்கிறது. இவை முக்கியமான கண்ணோட்டங்கள்.
இந்து மதம் இயல்பிலேயே நிறுவனப் படுத்தப் படாதது. ஆனால் இன்றைய நவீன உலகில், இந்து மத அமைப்புகள் உருவாவதும், செயல்படுவதும் தவிர்க்க முடியாது. எனவே இந்த அமைப்புகள் செயல்படும் விதம், அவை சந்திக்க நேரும் பிரசினைகள் ஆகியவற்றையும் பற்றிப் பேச வேண்டிய தேவை உள்ளது.
ராஜீவ் மல்ஹோத்ரா மதிப்புக்குரிய ஒரு ஆய்வாளர். கல்வித் துறையில் ஒரு பெரும் இந்து அறிவியக்கத்தை முன்னெடுத்துச் செல்கிறார்; மேலும் நேரடியாக இந்த விவகாரத்தில் இறங்கி ஆய்வு செய்திருக்கிறார் என்பதாலும், அவரது இந்தக் கட்டுரை நித்யானந்தா விவகாரத்தோடு கூட, வேறு பல முக்கியமான பிரசினைகளையும் பற்றிப் பேசுகிறது என்பதாலுமே இந்தக் கட்டுரை தமிழ்ஹிந்து தளத்தில் வெளியிடப் படுகிறது.
இந்தக் கட்டுரையில் உள்ள எல்லா கருத்துக்களுடனும் நான் உடன்படவில்லை என்பதை வலியுறுத்திச் சொல்லிக் கொள்ள விழைகிறேன். நான் உடன்படும் கருத்துக்களை மட்டும் சொல்லி மற்றவற்றை நீக்கிவிட்டு வெளியிட்டால் ராஜீவின் கருத்துக்கள் அரைகுறையாக இருக்கும் என்பதாலேயே கட்டுரையை முழுமையாகவே மொழியாக்கம் செய்திருக்கிறேன்.
குறிப்பாக தாந்திரீகம் பற்றி இந்தக் கட்டுரையில் சொல்லப் பட்ட கருத்துக்களுடன் நான் முழுமையாகவே முரண்படுகிறேன். முதலாவது, வாமாசார தாந்திரீகம் என்பது சமூகத்திலிருந்து முற்றாக விலகி சிறு குழுக்களாக இயங்கும் ஆன்ம பரிசோதகர்களின் வழிமுறை, அதில் பரிசோதனைகள் செய்து அவற்றைப் பரவலாகக் கற்பிக்கலாம் என்று நித்யானந்தா எண்ணியிருந்தார் என்றால், அது அடிப்படையிலேயே பெரும் பிழை. இரண்டாவது, பாலுறவு அம்சங்கள் உள்ள வாமாசார தாந்திரீக வழிமுறைகளிலும் கூட, சாதகர்கள் ஒரு சடங்காகவே அவற்றைச் செய்வார்கள் என்றும் உணர்வுபூர்வமான எந்தவிதமான பற்றையோ, உறவையோ முற்றாகவே தவிர்ப்பார்கள் (சாதனை புரியும் நேரம் தவிர மற்ற நேரங்களில் சந்திப்பதைக் கூட தவிர்ப்பார்கள்) என்றும் படித்திருக்கிறேன். ஆனால் அந்த விவகாரமான வீடியோவில் வரும் காட்சிகள், இருவருக்கிடையில் உணர்வுபூர்வமான உறவு இருப்பதைத் தெளிவாகக் காட்டுகின்றன; சம்பந்தப் பட்டவர்கள் அதை ஒப்புக் கொண்டும் உள்ளனர். பின்னர் அதை எப்படி தாந்திரீக சாதனை என்று கூற முடியும்? இந்தக் கோணம் ஏன் ராஜீவ் மல்ஹோத்ராவுக்குப் புலப்படவில்லை என்று எனக்குப் புரியவில்லை. மூன்றாவதாக, வாமாசார தாந்திரீக சாதனை முறைகள் இந்தியாவில் பெரும்பாலான இடங்களில் வழக்கொழிந்து, தொடர்பற்றுப் போய்விட்டன. வங்கம், அஸ்ஸாம், நேபாளம், கேரளம் போன்ற பிரதேசங்களில் சில இடங்களில் மட்டுமே இவற்றின் கூறுகள் எஞ்சியுள்ளன. இந்த நிலையில், இவற்றைப் பரிசோதனை செய்வது என்பது மிக மிக அபாயகரமான விஷயம். விவரம் தெரியாமல் இதில் ஈடுபடுபவர்களுக்கு நரம்புத் தளர்ச்சி, மனச்சிதைவு போன்றவை உருவாவதற்கு நிறைய சாத்தியங்கள் உள்ளன. இதையும் ராஜீவ் எண்ணிப் பார்க்கவில்லை.
நித்யானந்தா திட்டமிட்டு மோசடி செய்தவர் என்று நான் கண்டிப்பாக நினைக்கவில்லை. ஆனால் அவரது தற்போதைய நிலைமை கீதை கூறும் “யோக ப்ரஷ்டன்”, அதாவது யோகத்திலிருந்து தவறியவன் என்ற வரையறைக்குப் பொருந்தி வருகிறது என்று நினைக்கிறேன். (அவரது நெருக்கமான சில சீடர்களின் நிலைமையும் கூட). இதற்காக அவர்கள் மனம் தளர வேண்டியதில்லை. யோகப்ரஷ்டனின் கதி என்ன என்பதை பகவத்கீதை ஆறாவது அத்தியாயம் விளக்குகிறது.
அர்ஜூனன் சொல்லுகிறான்:
நம்பிக்கையுடையோன் எனினும், தன்னைக் கட்டாமையால் யோகத்தினின்றும் மனம் வழுவியவன், யோகத்தில் தோற்றுப் போய், அப்பால் என்ன கதியடைகிறான், கண்ணா?
ஒருவேளை அவன் இரண்டும் கெட்டவனாய், உடைந்த மேகம் போல் அழிகிறானோ? பெருந்தோளாய், உறுதியற்றவனாய், பிரம்மநெறியிலே குழப்பமெய்தியவன் யாதாகிறான்?
கண்ணா, எனக்குள்ள இந்த ஐயத்தை நீ அறுத்து விடுக. நின்னையன்றி இந்த ஐயத்தை அறுப்போர் வேறெவருமிலர்.
ஸ்ரீபகவான் சொல்லுகிறார்:
பார்த்தா, அவனுக்கு இவ்வுலகத்திலும், மேலுலகத்திலும் அழிவில்லை; மகனே, நன்மை செய்வோன் எவனும் கெட்ட கதியடைய மாட்டான்.
யோகத்தில் தவறியவன், புண்ணியம் செய்வோரின் உலகங்களை எய்தி, அங்கு கணக்கில்லாத வருஷங்கள் வாழ்ந்து, தூய்மையுடைய செல்வர்கள் வீட்டில் பிறக்கிறான்.
அல்லது, புத்திமான்களாகிய யோகிகளின் குலத்திலேயே பிறக்கிறான். இவ்வுலகில் இது போன்ற பிறவி எய்துதல் மிகவும் அரிது.
அங்கே அவன் பூர்வ சரீரத்துக்குரிய புத்தியைப் பெறுகிறான். குருநந்தனா, அப்பால் அவன் மறுபடியும் வெற்றிக்கு முயற்சி செய்கிறான்.
பண்டைப் பழக்கத்தால் அவன் தன் வசமின்றியும் இழுக்கப் படுகிறான். யோகத்தை அறியவேண்டும் என்ற விருப்பத்தாலேயே ஒருவன் ஒலியுலகத்தைக் கடந்து செல்லுகிறான்.
பாவம் நீங்கியவனாய், ஊன்றி முயல்வானேயாயின் யோகி பல பிறவிகளின் வெற்றிப் பயனாகிய பரகதியை அப்போது அடைகிறான்.
- பாரதியார் பகவத்கீதை, ஆறாம் அத்தியாயம் – தியான யோகம், சுலோகங்கள் 37-45.
நித்யானந்தா விலக வேண்டும், சாதாரண துறவியாக ஆகவேண்டும் என்று ராஜீவ் மல்ஹோத்ரா கடைசியாக அளிக்கும் தீர்வு கீதையின் இந்த உபதேசத்திற்கு சரியாகப் பொருந்தி வருவதாகவே தோன்றுகிறது.
மேலும், தற்போதைய சூழலில் நித்யானந்தா மீது இருக்கும் கோபத்தின் காரணமாக இந்த விவகாரத்தில் அரசியல், திட்டமிட்ட சதிவலைகள் இருக்குமா என்பது பற்றி நமது கவனம் செல்வதில்லை. ஆனால் இது முக்கியமான விஷயம். நித்யானந்தா பேரில் தவறு இருக்கிறது என்பது உண்மையே ஆனாலும், இதில் அரசியல் சக்திகளின், சதிவலைகளின் பங்கு என்ன என்பது முழுமையாக விசாரிக்கப் பட்டு வெளிக் கொணரப் பட வேண்டும். வரும் காலங்களில் இதே சதிவலைகள் அரசியல், ஊடக சக்திகளின் துணையுடன், எந்தத் தவறும் இல்லாத இந்து குருமார்கள் மீதும் பிரயோகிக்கப் பட்டு அவர்களையும், அவர்களது அமைப்புகளையும் அழிக்கும் சாத்தியம் நிறைய உள்ளது. இந்தக் கண்ணோட்டத்தை ராஜீவ் மல்ஹோத்ரா மட்டுமே முன்வைத்திருக்கிறார்.
அந்த வகையிலும், தற்போது நடந்துவரும் விவாதங்களுக்கு இந்தக் கட்டுரையின் பங்களிப்பு முக்கியமானது. அதனாலேயே இதனை மொழிபெயர்த்தேன்.

நித்யானந்தா இப்போது என்ன செய்யவேண்டும் – 2 (ராஜீவ் மல்ஹோத்ரா)
நித்யானந்தா இப்போது என்ன செய்யவேண்டும் – 1 (ராஜீவ் மல்ஹோத்ரா)
மனிதப் பேராசையும் ஆன்மீக சந்தையும்: ஒரு பார்வை
காயத்ரி மந்திரம் அனைவருக்கும் உரியதா?
தலித்துகளும் தமிழ் இலக்கியமும் – 2
சாதி எனப்படுவது யாதெனின்…
தஞ்சை சைவமரபு பாதுகாப்பு மாநாடு: ஒரு பார்வை
தலைவர்களைத் தேசத்திற்குத் தந்த குரு
பாலகிருஷ்ணனும் பசித்த துறவியும்
இந்தியாவிலிருந்து வந்த ஆப்பிள்
விநாயகர் அகவல்: ஒரு தத்துவ அறிமுகம்
சதாசிவ பிரம்மேந்திரர் குறித்த வரலாற்றுப் புதிர்கள்
அஞ்சலி: பாபா உனக்கேது மரணம்?
போகியை யோகி எனல்![பெரியபுராணம்: இளைஞர் வாழ்வியலுக்கான ஒரு சமுதாயக் காவியம் – 2 [நிறைவுப் பகுதி]](http://www.tamilhindu.com/wp-content/uploads/thirugnana-sambandar1.jpg)
பெரியபுராணம்: இளைஞர் வாழ்வியலுக்கான ஒரு சமுதாயக் காவியம் – 2
மகத்துவம் மிக்க மஹாகும்பாபிஷேகம்![புன்னகை மன்னர் [மந்த்ராலயப் பயணம்]](http://www.tamilhindu.com/wp-content/uploads/mantralayam-entrance.jpg)
புன்னகை மன்னர் [மந்த்ராலயப் பயணம்]
ஆறுமுக நாவலர் / ஈழத்துச் சிதம்பர புராணம்
அறியும் அறிவே அறிவு – 1
பாரதியின் சாக்தம் – 2
பாரதியின் சாக்தம் – 1
அயோத்தித் தீர்ப்பும் அபத்த ஊடகங்களும் – 2
சன் டிவி – எந்திரன் – தொடரும் குமட்டல்
எல்லோரும் ஏமாந்துகிட்டிருக்காங்க.. அப்ப நீங்க?
ஆஸ்திரேலியாவிலிலிருந்து வந்த அஸ்தி




ஜடாயு, ஏறக்குறைய உங்கள் நிலைதான் எனக்கும். ஆனால் அந்த நிலையை (என்னை விட) சிறப்பாக விளக்கி இருக்கிறீர்கள், வாழ்த்துக்கள்!
வாழ்த்துக்களுக்கும், தொடர்ந்து கருத்துக்கள் அளித்து வருவதற்கும் மிக்க நன்றி, ஆர்.வி.
Rajeev Malhothra’s writings should be published in a book form and distributed among his followers and people who work for safeguarding Hindu society from the onslaught of MEDIA TERRORISM. I also feel that Swmi Nithyananda should hand over his activities to other religious leader for sometime. We should help him to come out of all problems and make the people underestand that this is a PLOT AGAINST HINDU SOCIETY.
Achoo thanka mudiyal intha support. Tamil hindu namathu parampariyathai ooyarthuvatharkaka arambika patta thalam yenru nambi inkheum yemarukinren (tamil hindu valai thalai than sollaren). Yen sir sanyasiku yethuku sir 15 Golden thrown, avar kooda irukarathuku 15 days during fake birth day he was charging $6000. I was with him when he started his business in chamundeswari studio.. when Rs.30 mala was sold out for Rs.200 I was shocked. Especially when he visited Indira Nagar studio for various photo shoot like model he gave me another shock. Nan kadavul (appadi than sollikuvaru) solla vechu pala kodi allitaru.. ennamo ponga unmiyana seekarsa unmai mattum than kapatha mudium. Eppa Osho booka paduchutu next day prasankam pannitu.. ellam ennoda own anubavamnu kapsa vittarooo appave mudivu panniten he is fake gurunu..he went a loooooooooong way to gain the faith of millions of ppl.. now he himself have to work out for so many life… padachavanuku mattum than therium yen yetharku intha oru nikalvu yenru. Ivaru yani keeni ellam sollatheenka athu ivaruku munnal vanthavakalai kevalam paduthum seyal.. sila mesmarising sakthi and good memory padaitha oru outer spiritual man.. athuku mela ankha sontha saraku yethuvum illai..
பகவத் கீதையையில் குறிப்பிட்டுள்ள யோகப் பிரஷ்டனை இந்த விடயத்திற்கு மேற்கோள் காட்டுவது மிகவும் தவறானது.
யோகப் பிரஷ்டம் , யோகத்திலிருந்து நழுவுதல் என்றால் யோக நிலையை விட்டு சாதாரண வாழ்க்கையை மேற்கொள்ளுதலே, யோகப் பிரஷ்டம் என்பதாகும்.
பிரமச்சாரிய விரதத்தில் நிலை பெற்றவனாய் மனதை அடக்கியவன், புலன் இன்பங்களில் பற்று நீக்கியவன் யுக்தன், யோகாரூடன் எனப் படுகிறான். அந்த நிலையில் இருந்து வழுவியவன், சாதாரண வாழ்க்கை முறைக்கு வருகிறான், அது குடும்ப வாழ்க்கை முறையே. இங்கே சம்பந்தப் பட்ட நபராகிய நித்யா, ஏதோ ஒரு பெண்ணை தன்னுடைய வாழ்க்கை துணைவியாக தேர்ந்து எடுத்து திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் ஈடு பட்டு இருந்தால் அவரை யோகப் பிரஷ்டராக கருதலாம். நித்யா அப்படி செய்தாரா?
யோகத்தில் இருந்தவர் அந்த நிலையில் இருந்து வழுவதுதான் யோகப் பிரஷ்டம். யோகத்தில் இருப்பதாக, யோகாரூடனாக தன்னைக் காட்டிக் கொண்டு கமுக்க உறவில் ஈடுபட்டு, விடயம் வெளியில் வெளியில் தெரிந்தவுடன் ஆளாளுக்கு ஒரு வியாக்கியானம் கொடுப்பது, ஒருவர் தாந்த்ரீகம் என்கிறார், இன்னொருவர் யோகப் பிரஷ்டன் என்கிறார்.
இந்திய சமூகத்தில் நான்கு நிலைகள் உள்ளன. அவையாவன பிரம்மச்சாரி, கிரஹஸ்தன், வானப்பிரஸ்தன், துறவி என்பவை. இதில் எதிலும் இல்லாமல் மனம் போல வாழ்பவருக்கு இந்திய சமூகத்தில் வழங்கப் படும் பெயர் ஒன்று உண்டு. (நான் போலீசு இல்லைடா ….. என்ற வசனம் பலருக்கும் தெரியும்) .
இந்த நான்கு நிலைகளிலும் இருந்து கொண்டு ஆன்மீகப் பணி செய்யலாம்.
மார்க்கண்டேயன், அனுமன், சிரவணன் , இவர்கள் பிரம்மச்சாரியாக இருந்து சிறப்பான ஆன்மீகப் பணி செய்தவர்கள்.
ஜனகர், தியாகராசர் இவர்கள் கிரஹஸ்தர் நிலையில் இருந்து சிறப்பான ஆன்மீகப் பணி செய்தவர்கள். துறவிகளுக்கு பலரை எடுத்துக் காட்டு கூறலாம்.
இப்படி எந்த நிலையில் இருந்தும் ஆன்மீகப் பணி செய்யலாம் என்னும் போது,
கமுக்க உறவில் ஈடுபட்டுக் கொண்டே , யோகாரூடனாக தன்னைக் காட்டிக் கொள்வது வேஷதாரி என்கிற நிலையிலே தான் சேரும். இதற்க்கு சப்பைக் கட்டு கட்ட யோகப் பிரஷ்டனாக சித்தரிப்பது இந்துக்களுக்கு மன வருத்தத்தையும், இந்து மதத்திற்கு ஆபத்தையுமே உண்டு பண்ணும்.
உலகத்தில் இப்போதும் நேர்மையான குடும்ப வாழ்க்கையை வாழும் இந்திய சமுதாயத்தை உருவாக்கியது இந்து மதமே . இதில் அப்பட்டமான ஒழுக்க கேட்டிற்கு கேடயமாக கீதையை உபயோக்கிப்பதை எண்ணி மனம் நோகிறேன், இதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
//அவர் பிராமணர் அல்ல என்பதாலும் மேற்சொன்ன சக்திகளின் வழக்கமான, க்ளாசிகல் பிராமண-துவேஷப் பிரசாரத்தின் மூலம் அவரைக் குறிவைக்க முடியாது என்பதாலும் அவர் இன்னும் மிகப் பெரிய ஆபத்தாகக் கருதப் பட்டார்.//
இது மிக மிக முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விஷயம். திராவிட கட்சிகளுக்கு துதிபாடிகளாகவும் ஜால்ராக்களாகவும் இருக்கும் ஆதீனங்களைப் போல இல்லாவிடில் இந்து சாமியார்கள் பிராமணர்கள் இல்லாவிட்டாலும் அவமதிக்கப்படுவார்கள் என்பது தெளிவாகிறது. இந்த விஷயத்தில் அனைத்து ஜாதியினரும் ஒருமித்த கருத்துடன் ஒற்றுமையான உணர்வுடனும் செயல்பட வேண்டியது கடமை.
திரு.ராஜீவ் மல்ஹோத்ரா அவர்களே!,
அருமையான இந்நேரத்திற்கு தேவையான கட்டுரை. உங்களின் நெடுநாளைய இந்து ஆன்மீக
அலசல் அனுபவம் பளிச்சிடுகிறது.
“நிகழ்ந்தது என்ன என்பது பற்றிய எல்லா ஆதாரபூர்வமான தகவல்களும் முழுமையாகக் கிடைக்கவில்லை, முன்வைக்கப் படவில்லை.” என்று கூறியுள்ளீர்கள்.
ஒரு What-If Analysis செய்து பார்த்தால் என்ன?
(Assumption A) அவர் ஆன்மீகப்பயிற்சியே செய்யாமல் பணத்திற்காகவோ புகழுக்காகவோ சந்நியாசத்தை ஏற்றுக்கொண்டிருந்தால் வேறு
வாதங்களே தேவையில்லை. பெண் உறவு விஷயங்களிலோ, எனக்கு
அதிசய சக்திகள் இருக்கிறது என்று பறை சாற்றினாலோ அது சமூக
தளத்தில் மட்டுமே விவாதிக்க பட வேண்டிய விஷயம். ஏமாறுபவர்களின்
பிரச்சினை மட்டுமே அது. சில நாட்களுக்கு முன் ஒரு பத்திரிகைக்கு
வாசகர் ஒருவர் எழுதிய கடிதத்தில் எழுதியது இது.
“குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார்
குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வர்;
குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடிக்
குருடும் குருடும் குழிவிழு மாறே”
(திருமந்திரம் 1658)
“ஞானத்திலும், ஒழுக்கத்திலும் சிறந்த குருமார்களை சென்றடைந்து,
தம்முடைய அறியாமையைப் போக்கி கொள்ள மாட்டார்கள். ஞானமும்
ஒழுக்கமும் அற்று, வெறும் வேடத்தைக் கொண்டுள்ளவர்களையே குரு
என்று நம்பி மக்கள் செல்வர். இது எப்படிப்பட்டதென்றால் குருடான
இரண்டு குழந்தைகள் தம்மில் ஒருவரை ஒருவர் பிடித்தாடும் விளையாட்டை
ஆடி, இருவருமே பாழ் குழியில் விழுவதற்கு ஒப்பானதாகும்.போலி
குருவும் சீடர்களும் பிறவித் துன்பத்தில் வீழ்ந்து அழுந்துவர்” என்கிறார்
திருமூலர்.
(Assumption B) அவர் தாந்திரிக விஷயத்தில் ஈடுபட்டிருந்தால்!
நீங்கள் கூறியுள்ளபடி முக்காலே மூணு வீசம் பேருக்கு அதை பற்றி
தெரியாது. எனக்கும்தான். அவருடன் தாந்திரிக பயிற்சி செய்தவர்கள்
அதற்கு கொடுத்த அனுமதியை (Agreement) வெளியிட்டு விட்டால் இப்பிரச்சினை முடிவுறலாம். வேறு எந்த துறவியாவது (குறிப்பாக பெரிய ஆஸ்ரமங்கள் நடத்துபவர்கள்) தாந்திரிகத்தை பயிற்சி செய்தால் தயவு செய்து ஒரு Hintஆவது கொடுத்து விடட்டும். கெட்ட வார்த்தை கவிஞர்களையும் நாத்திக கூட்டத்தையும் எவ்வளவு முறைதான் பொறுத்து கொள்வது.
இந்த தாந்திரிக விஷயத்தை பற்றி!
(1)இந்தியாவில் அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள காமாக்யா கோயில்
பார்வதியின் யோனி விழுந்த இடம் என்றொரு புராண கதையுண்டு
என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆகவே இந்த இடத்தை சுற்றி சிலர்
இன்றும் தாந்திரிக பயிற்சியில் ஈடுபடுவதாக படித்திருக்கிறேன்.
(2)நம் மதகுருமார்கள் சிறிய அளவிலாவது தாந்திரிகத்தை கைக்கொள்ள
வேண்டும் என்கிறீர்கள். இது கரணம் தப்பினால் மரணம் என்பதை
போன்றது. கொஞ்சம் சறுக்கினாலும் Pornographyஆக உருவாகக்கூடியது.
ஆகவே அவர்கள் தயங்குவது எதிர்பார்க்க கூடியதே!
(3)இந்த தாந்திரிக பயிற்சி முறைகளை நம்மில் சிலராவது அனுசரிக்காமல்
போனால் கிறிஸ்தவர்களிடமிருந்து நமக்கு திரும்பி வரும் என்கிறீர்கள்.
இது “Conspiracy Theory”ஐ போலுள்ளது. உங்கள் அனுபவத்தில் பல
இடங்களில் இந்தியாவில் இன்னும் அனுசரிக்க படுகிறது என்றும்
கூறியுள்ளீர்கள். ஆகவே இதில் மற்ற மதத்தவர்கள் உரிமை கொண்டாட
இடமில்லை என்றே எண்ணுகிறேன்.
(Assumption C) ஒழுக்கத்தை பேணாமலேயே அவர் சக்திகளை பெற்றிருந்தால்!
நீங்களே விடை கூறி விட்டீர்கள்.
மேலும் தனி துறவியாக செயல்படாமல் ஒரு நிறுவனர் போல செயல்பட்டிருக்கிறார். சமூகத்தின் எதிர்ப்புகளை அவர் சந்தித்துதான் ஆகவேண்டும்.
“அவரா இப்படி! அவரா இப்படி” என்ற யோசிப்பிலிருந்து “அவராக
இருந்தால்தான் என்ன?” என்று யோசித்து பார்த்தால்!
(Assumption D)ஒருவேளை அவர் உண்மையாகவே ஆன்மீகப்பயிற்சி
செய்த , தாந்திரிகத்தை கைகொள்ளாத, சந்நியாசியாக இருந்தால்!!!
நாளடைவில் பெண் சபலம் ஏற்பட்டிருந்தால்!!! இப்படிப்பட்ட சந்நியாசிக்கு ஆன்மீக பயிற்சியில் ஏற்படக்கூடிய தடைகளை பற்றி நீங்கள் விடைகூற
வில்லை. எனக்கு தெரிந்ததை பகிர்ந்து கொள்கிறேன்.
ஆன்மீக பயிற்சி என்பது ஒரு பயணம். இப்பயணம் ஒரு முள்பாதையில்
நடப்பதைப்போன்றது என்று சுவாமி சிவானந்தர் கூறுவார். பல
தடைகள் அப்பயணத்தில் இருந்தாலும் இரண்டு முக்கிய தடைகள் உண்டு.
(ரிக் வேதத்தின் சில சாகைகளை கண்டு அருளியவரும் காயத்ரி மந்திரத்தையே நமக்கு அருளியவருமான விஷ்வாமித்திர பிரம்மரிஷியை
உதாரணத்திற்கு எடுத்து கொள்கிறேன். இதில் தவறு எதுவும் ஏற்படாமலிருக்க அவரின் அருளையே வேண்டுகிறேன்.)
(1)விஷ்வாமித்திரர் செய்யும் தவத்தை இந்திரன் மேனகையைக்கொண்டு
கலைக்கிறான். அவளுடன் கிட்டத்தட்ட 10 வருடங்கள் விஷ்வாமித்திரர்
வாழ்கிறார். சகுந்தலை என்னும் குழந்தையையும் மேனகை
பெற்றெடுக்கிறாள். 10 வருடங்களுக்கு பிறகு தன் தவம் கலைந்ததை
உணர்ந்து மீண்டும் தவம் செய்ய ஆரம்பிக்கிறார். இந்திரன் விடுகிற
ஆளில்லை. சில காலம் கழித்து ரம்பையை தவத்தை கலைக்க அனுப்புகிறான். இம்முறை விஷ்வாமித்திரர் ரம்பையை சபித்து விடுகிறார்.
சபித்தவுடன் அவருக்கு கோபப்படுவதும் கூடாது என்பது புரிகிறது
மீண்டும் தவம் செய்ய ஆரம்பிக்கிறார்.
இந்த கதையிலிருந்து நமக்கு வரும் Messages..
-ஆன்மீகப்பயிற்சியில் பெண் சபலத்தை கடந்தாக வேண்டும்.
-கோபத்தையும் கடந்தாக வேண்டும்.
-அன்று விஷ்வாமித்திரரும் மேனகையும் மேற்கொண்ட 10 வருட இல்லறத்தையும் யாரேனும் Video எடுத்திருந்தால் சங்கடமாகவே இருந்திருக்கும்.
-மிக முக்கியமாக விஷ்வாமித்திரர் தன் ஆன்மீக பயிற்சியை விட்டுவிட
வில்லை. தவறை திருத்திக்கொண்டு தொடர்ந்து பயணத்தை நடத்தினார்.
-மேலும் அவரின் பயண முறையை மற்றவர்கள் அனுசரிப்பது அவசியமல்ல.
ஒவ்வொருவரும் தவறு செய்து விட்டு பிறகுதான் திருந்த வேண்டும்
என்றில்லையே!
(2)ஆன்மீகப் பயிற்சியில் மேம்பட மேம்பட அதிசய சக்திகள் ஒருவருக்கு
கிடைக்கும் என்பது கிட்டத்தட்ட அனைத்து மதகுருமார்களாலும் ஒப்புக்
கொள்ளப்பட்ட விஷயம். இந்த தடையை புரிந்து கொள்ளவும் நாம் விஷ்வாமித்திரரை இழுத்து கொள்வோம்.
முதல் முடிச்சிலிருந்து விடுபட்ட விஷ்வாமித்திரருக்கு அடுத்த தடை
திரிசங்குவின் மூலம் வந்தது. அந்த கதையை நாம் அனைவரும் அறிந்ததால்
அதை கூற வேண்டிய அவசியமில்லை. ஆனால் திரிசங்குவிற்கு தனி
சொர்க்கத்தை உருவாக்கிய பிறகு தன் தவறை உணர்ந்த விஷ்வாமித்திரர்
மீண்டும் தவம் செய்ய ஆரம்பிக்கிறார். இம்முறை எக்காரணத்திற்காகவும்
தன் ஆன்மீக பயிற்சி தடைபட கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார்.
“All is well that Ends Well”. வசிஷ்டராலேயே பிரம்மரிஷியாக ஒப்புக்கொள்ளபடுகிறார்.
மேலே கூறப்பட்ட (Assumption D)ஐ நீங்கள் அலசியிருந்தால் பூர்ணமாக
இருந்திருக்கும்.
திரு ஜடாயு அவர்களே!
யோக பிரஷ்டன் என்பதற்கு உதாரணமாக அடுத்த ஜன்மத்தில் ஆன்மீக
பயிற்சியை ஆரம்பிப்பதை பற்றி கூறியிருக்கிறீர்கள். அதே ஜன்மத்திலேயே
தவறை திருத்தி கொண்டு ஆன்மீக பயிற்சியை விஷ்வாமித்திரர்
ஆரம்பிக்க முடிந்திருக்கிறது. இதையும் ஒரு வாய்ப்பாக இந்து மதம்
கொடுப்பதாக புரிந்து கொள்ளலாம் அல்லவா!
பொதுவாகவே உங்கள் கட்டுரையை பற்றி என் கருத்துகள்:
(1)மேற்கூறிய 4 Assumptionsஐ தவிர “ஆஸ்ரம சொத்துக்களை பற்றி
நீங்கள் அலசவில்லை. தனி துறவியாக இல்லாமல் ஆஸ்ரமம், அதுவும்
கோடிக்கணக்கான பணத்துடன் கூடிய ட்ரஸ்டை நடத்தும்போது ஏற்படும்
பிரச்சினைகள் வித்தியாசமானவை. மிகப்பெரும் மடங்கள், ஆதீனங்கள்
போன்றவற்றிலும் சொத்துக்களை கைப்பற்றுவதற்காக ஏற்பட்டு
கொண்டிருக்கும் மோதல்களை நாம் பார்த்து வருகிறோம். என்
தனிப்பட்ட கருத்தின்படி சொத்துக்கள் வைத்திருக்கும் ஒவ்வொரு
துறவியும் தன்னுடைய வாரிசை அறிவித்து விடுவது நல்லது. அவர் சமாதி
அடைந்த பிறகு நிலைமை சீராக இருக்க இது கண்டிப்பாக உதவும்.
(2)நித்யானந்தரின் சிஷ்யர்களின் (துறவிகள்) நிலை இப்பொழுது என்ன?
எனக்கு ஆதி சங்கரர் அருளிய விவேக சூடாமணி என்னும் புத்தகம்தான்
நினைவுக்கு வருகிறது. சிஷ்யர்களின் தகுதியை கண்டவுடன் குரு அவர்களை
வரித்து கொள்வதாக எழுதியுள்ள அதே நேரத்தில், சிஷ்யர்கள் குருவை
தேடியுள்ளார்கள் என்பதையும் நாம் இப்புத்தகத்தில் நோக்கலாம்.
துறவியாக விரும்புபவன் கண்டிப்பாக குருவை இனங்காண கஷ்டப்பட்டுத்தான் ஆக வேண்டும். சுவாமி சிவானந்தர் பல வருடங்கள்
வட இந்தியாவில் குருவிற்காக அலைந்ததை எழுதியுள்ளார். தகுதியில்லாத
சிஷ்யனால் தகுதியுள்ள குருவை அறிய முடியாது.
காஞ்சி முனி தெய்வத்தின் குரலில் எழுதியுள்ளதை கீழே தருகிறேன்.
“நிஜமாகவே பிரம்ம சாக்ஷாத்காரம் பெற்ற குரு இந்த நாளில் கிடைப்பாரா
என்று யோஜ்னை பண்ண வேண்டாம். நிஜமான முமுக்ஷுதாவோடு தவியாகத்
தவித்தால் ஈஸ்வரன் நிச்சயம் அப்படி ஒருவரை காட்டி கொடுக்காமால்
விட மாட்டான். ஸதாகால பிரம்ம நிஷ்டரோ இல்லையோ, இருக்கிறதுக்குள் சிரேஷ்டரான ஒருவரைக் காட்டி அவருக்குள்ளே இவனுக்கு மஹாவாக்கியம் தருகிற சமயத்தில் ஸாக்ஷாத் அந்த ஈஸ்வரனே ஆவிர்பாவம் ஆகி உபதேசம் பண்ணி விடுவான். அப்படித்தான். அப்படித்தான். அதிலே ஸந்தேஹமே வேண்டாம்!”
மேலே கூறிய செய்தியில் முக்கியமாக கவனிக்க வேண்டிய வார்த்தை
“முமுக்ஷுதாவோடு தேடினால்” என்பதுதான்.
(3)மேலும் நித்யானந்தரின் ஆஸ்ரம சொத்துக்கள் இந்து அமைப்பினரால் இந்து ஆன்மீகத்துக்காகவே செலவு செய்யப்பட வேண்டும் மற்றும் இந்து
அமைப்புகளின் ஒற்றுமை அவசியத்தையும் குறிப்பிட்டுள்ளீர்கள்.
உங்களின் நோக்கம் மேன்மையாக இருந்தாலும் தாற்காலிக
இடர்பாடுகளை கலைய தொலைநோக்கு இருப்பையே அசைத்து
விடக்கூடாதே!
கிறிஸ்தவ கத்தோலிக்க மதம் நிறுவனமாக ஆனதாலேயே ஏற்பட்ட,
ஏற்படும் குழப்படிகளை நீங்கள் கவனிக்க வில்லையா? இந்து மதம்
பல்லாயிர கணக்கான ஆண்டுகளாக அதன் வேரிலிருந்து வழுவாமல்
உள்ளது நம் இந்து சமயத்தின் உள்ளேயே இருக்கும்
வேற்றுமையினால்தானே தவிர ஒற்றுமையினால் இல்லையே! ஒரு பரந்துபட்ட ஒற்றுமை வேண்டும் என்று கூறலாமே தவிர நம் வேற்றுமை
மறையும் அளவில் ஒற்றுமை வேண்டும் என்று பிரயத்தன பட்டால் இந்து மதத்திற்கே ஹானி ஏற்படும்தானே! வரலாற்றில் நிறுவன மதங்கள் பண, அதிகார பலம் குன்றியவுடன் அழிந்தது இதனால்தானே! இந்த வாரத்தில் அயர்லாந்து நாட்டின் அனைத்து சர்ச்சுகளிலும் போப் ஆண்டவரின் மன்னிப்பு கடிதம் வாசிக்க பட்டதே!. இந்த அளவிற்கு நிறுவனமாக இந்துமதம் மாறிவிட்டால் நம் மதம் வாழுமா?
(4)துறவிகளுக்கு அந்நிய மதங்களால் நம் மதத்திற்கு ஏற்படும்
பிரச்சினைகளை பற்றிய ஈடுபாடு வேண்டும் என்கிறீர்கள். இதில்
நிறைய ஜாக்கிரதை அவசியம். துறவு முதிராதவர்களுக்கு சமூகத்தை
பற்றிய அக்கறை வேண்டியதில்லை. நமக்கு “Side work”ஆக இருக்கும்
ஆன்மீகம் அவர்களுக்கு “Primary and Solo Work”ஆக இருக்க
வேண்டும். ஆஸ்ரமங்களை பரிபாலிப்பவர்களுக்கு வேண்டுமானால்
உங்கள் கருத்து பொருந்தும்.
ஊர்வசிகள், ரம்பைகள், மேனகைகள், திலோதமைகள் போன்றோரை இந்திரன் தன பதவியைக்காக்க தவசிகள் மீது எவிவிடுவான் என்பது கற்பனை அல்ல என்பதை நிரூபணம் செய்வது, இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் தான்; ஆனால் இக்கால ஜனநாயகத்தில், ரஞ்சிதாக்களையும் லெனின்களையும், சாபம் கொடுத்து தண்டிப்பது கண்ணுக்குத் தெரியாது;
நிதி மன்றங்கள் அவற்றை விட மோசமான அரசாங்கங்கள் அவற்றைவிட மேலும் மோசமான மஞ்சள் பத்திரிகைகள்,ஊடகங்கள் எல்லாவற்றையும், இந்திரனுக்கு மேலே உள்ள தெய்வங்கள் தான் தண்டிக்கும். மற்றும் தவசிகளிடம் வரும் இக்கால சீடர்களில், பக்தர்களில் பெரும்பாலோர் தெரிந்தே செய்த, செய்துகொண்டிருக்கும் மற்றும் செய்யப்போகும் அணியாயங்களுக்குத்தான் தப்பும் வழி தேடி வருகிறார்கள். மற்ற பல வேடிக்கை பார்பவர்கள், இதைப்பற்றி பேச அருகதை அற்றவர்கள்.
நித்தியானந்த பரமஹம்சர் எந்தத் தவறும் செய்யாத பொது, கேவலம் ஒரு மீடியா ப்ரோப்பகாண்டாவிற்கு ஆதரவாக அவருக்குத் தண்டனை தர வேண்டும் என்பது ஏற்றுக்கொள்ள முடியாது.
எந்த சாமியார் மீதும் பழியை உண்டாக்கி, அவருடைய உழைப்பால் கிடைத்த சொத்துக்களை சாதி வெறி மிக்க, இந்து துவேஷம் உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள இது வழி செய்யும்.
சுவாமி நித்தியானந்தர் தனது பீடத்தில் இருந்து விலகக் கூடாது. அது ஒரு தவறான முன்னுதாரணம் ஆகும்.
உலகத் தொலைக் காட்சிகளில் முதல் முறையாக ப்ளூ ஃப்லிம் காட்டியவர்களை ஒன்றும் செய்ய முடியாது என்பதால், பலவீனமாகிப் போய்விட்டவர்களை ஒட்டு மொத்த சமுதாயமும் போட்டு அடி அடி என்று அடிக்கிறது.
இந்த ப்ளூ ஃப்லிமை குழந்தைகளும், பெரியவர்களும் ஒன்றாகப் பார்க்கும் தொலைக்காட்சி சேனல்களில் காட்டக் கூடாது என்று தொடர்ந்த வழக்கை தமிழ்நாட்டு நீதி (?) மன்றம் தள்ளுபடி செய்து குடும்பத்தோடு ப்ளூ ஃபில்ம் பார்க்கும் கலாச்சாரத்திற்கு ஆதரவு அளித்திருக்கிறது.
நக்கீரன் இதழோ இந்த ப்ளூ ஃப்லிமை வெளிப்படையாக வியாபாரம் செய்கிறது. சூடான காட்சிகள் உள்ள சிடிக்களுக்கு தனி ரேட்டாம்.
நாளைக்கு நமது குடும்பத்து உறுப்பினர்களும், நண்பர்களும் மனைவியுடன் தனியாக இருப்பதைப் படம் பிடித்து ப்ளாக் மெயில் செய்ய ஊடகங்களுக்கு அனுமதி அளித்ததுதான் இந்த பிரச்சினையின் முடிவு. இந்த கலாச்சார மாற்றத்தை முற்போக்கு என்று அழைக்கிறோம்.
ஆனால் நித்தியானந்தரைப் பழி சொல்வதைத்தான் உயர்வாக எண்ணுகிறோம்.
மனோவியாதிக்காரர்களின் மாநிலம் தமிழகம்.
// திரு ஜடாயு அவர்களே!
யோக பிரஷ்டன் என்பதற்கு உதாரணமாக அடுத்த ஜன்மத்தில் ஆன்மீக
பயிற்சியை ஆரம்பிப்பதை பற்றி கூறியிருக்கிறீர்கள். அதே ஜன்மத்திலேயே
தவறை திருத்தி கொண்டு ஆன்மீக பயிற்சியை விஷ்வாமித்திரர்
ஆரம்பிக்க முடிந்திருக்கிறது. இதையும் ஒரு வாய்ப்பாக இந்து மதம்
கொடுப்பதாக புரிந்து கொள்ளலாம் அல்லவா! //
கண்டிப்பாக, நீங்கள் சொல்வது முற்றிலும் சரி பாலாஜி அவர்களே. மனிதன் தன் தீமைகளை விலக்கி நல்வழியில் புகுவதே ஒரு புதிய பிறப்பு என்றாகிறது.
அதனால் தான் ராஜீவ் கூறும் தீர்வு கீதை உபதேசத்தின் படியே இருப்பதாக எனக்குத் தோன்றியதாக எழுதினேன்.
a real master never care about the organization. he only cares about the individuals. organizations are always political. the master never ever work according to the expectations of the disciple. This article is telling what Swamiji needs to do next about the organization about the money. My guess is swamiji will settle down somewhere with some 1000 inner disciples. for the master bringing one disciple to the level of enlightenment is more important than telling good things to one crore people. if you read carefully, main teaching of Swamiji is about coming out of the organization. so how you can expect he will create another such organization. destroy the organization, or give it to somebody. swamiji won’t care about that. Enlightenment is beyond everything. enlightenment is beyond enlightenment itself. All master come to the marketplace to create a shock. Swamiji created that shock.
விஸ்வாமித்திரர் தனியே தவம் செய்து வந்தார். மேனகையின் அழகிலே மயங்கி அவர் துறவை விட்டார். மேனகையுடன் ஊரறிய, உலகறிய குடும்ப வாழக்கை நடத்தி மேனகை சாகுந்தலையை ஈன்றதாக சொல்லப் படுகிறது. சில காலம் கழித்து அவர் அழியும் இன்பங்களில் கவனம் செலுத்தினால் அழியாத நிலையை அடைய முடியாது என்கிற சித்தாந்தத்தின் அடிப் படையில் மீண்டும் தவ வாழ்க்கைக்கு திரும்பி விட்டார்.
விஸ்வாமித்திரர் மேனகையுடன் கமுக்க உறவு வைக்கவில்லை.
விஸ்வாமித்திரர் நேர்மையானவர்.
கமுக்க உறவு “பண்பாளர்களை”க் காக்க, கீதை, விஸ்வாமித்திரர் … .இப்படியாக ஒவ்வொருவர் மேலும் சாக்கடை வாரி இறைக்கும் பணியை ஆரம்பித்து விட்டனர்.
தொலைக் காட்சிகள் படுக்கையறை அந்தரங்க காட்சிகளைக் காட்டி சமூகத்தைக் கெடுப்பதையோ, அதனால் பணம் சம்பாதிப்பதையோ நாம் ஆதரிக்கவில்லை. அது வேறு விடயம். நித்யா ஆன்மீக வாதியா என்பது இன்னொரு விடயம்.
“மனோவியாதிக்காரர்களின் மாநிலம் தமிழகம்” என்கிறார்கள்.
“ஆபாசத்தை, அசிங்கத்தை, விபச்சாரத்தை பவித்திரமாகக் கருதுபவர்கள இந்துக்கள்” என்னும் நிலைக்கு பெரும்பான்மையான இந்துக்கள் என்றுமே செல்ல மாட்டார்கள்.
இந்து மதத்திற்குள் அசிங்கத்தை திணித்து, ஆபாசத்தை உன்னதமாகக் காட்டி, இந்து மதத்தின் உண்மை தன்மையைக் கெடுக்க முயல்பவர்கள், இந்து விரோதிகளே!
தமிழ் ஹிந்து
மலையாள ஹிந்து
தெலுகு ஹிந்து
கன்னட ஹிந்து
ஹிந்தி ஹிந்து
ஆங்கில ஹிந்து
அரபு ஹிந்து
திரு. திருச்சிகாரன் அவர்களே!
விஷ்வாமித்திரர் மேனகையுடன் கமுக்க உறவு வைத்து கொள்ள வில்லை
என்று கூறியுள்ளீர்கள்.
மிகவும் சரி.
பெண் சபலத்திலிருந்து விஷ்வாமித்திரர் மீண்டு வந்துள்ளதை எழுத
நினைத்தேன். ஆனால் எழுத்தின் தொனி சரியாக இருந்திருக்க வேண்டும்.
சுட்டி காட்டியதற்கு நன்றி.
Every mistake is an opportunity to grow.. intha vakkiyathai veithu next marketing strategy aramchuruchu. Even swami itself know before that he is going to get popularise for wrong reason appadinu avaru sollamaliye sishya koodikal solla aramchuduvanka.. mediavai thappu sollum makkal antha kariyam ankhe nadakamal irunthu irunthal eppadi nalla irukum.. 6yrs before veliye vantha enake innum avarodha news update regulara paduchu veenah poitu iruken.. im just thinking of closely bonded ppl.. Osho went to jail, Aravindar went to jail and even Thavathiru vallalar appeared in court.. where is ur guts..parkalam yethini nal odi oliyararunu parkalam..
[...] வருகிறது என்று நினைக்கிறேன். மேலும் 0 கருத்து | மார்ச் 28th, 2010 at 3:19 pm under Blog [...]
அட போங்க சார் இந்த விஷயம் எல்லாம் வெப் மீடியால போட்டு பிரயோஜனம் இல்ல இந்த மாதிரி அர்டிகுள் வெகு ஜனங்கள் பாககர பிரிண்ட் மீடியவோ இல்ல விசுஅல் மீடியாவ இருந்த அவரோட பக்தர்களுக்கும மற்றவங்களுக்கும் புரியும் அதுக்கு என்ன பண்ணணுமோ அதா விட்டுட்டு
போங்க sir
நன்றி திரு. பாலாஜி அவர்களே,
உண்மையான ஆன்மீகவாதிக்கு பணம் ஒரு பிரச்சினையே இல்லை.
புத்தரிடம், ஆதி சங்கரரிடம், விவேகானந்தரிடம் பணம் இருந்ததா?
விவேகானந்தர், சென்னை நண்பர்கள் கொடுத்த சிறிய தொகையைக் கொண்டு அமேரிக்கா சென்றார்.
அமெரிக்காவுக்கு சென்று பணமெல்லாம் தீர்ந்த நிலையிலே கடைசியாக உதவி கேட்டு சென்னை நண்பர்களுக்கு தந்தி அடித்தார். “பிச்சை எடுப்பதென தெருவுக்கு சென்றால், சிறை வாசமே எனது முடிவாயிருக்கும்” என்றார்.
அப்போது கூட “குளிராலோ, பசியாலோ இங்கேயே (அமெரிக்காவிலே) நான் இறக்க நேரிடலாம். ஆனால் இருளில் வாடும் இந்தியாவின் 33 கோடி மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தி, அவர்களை ஒளிக்கு அழைத்து செல்லும் பொறுப்பை உங்களிடம் ஒப்படைக்கிறேன்”, என்று நண்பர்களுக்கு எழுதிய தன்னலமற்ற தியாகி அவர்.
அவரைப் பற்றி அறிந்தவர்கள் கூட, இன்றைக்கு தகரத்தை தங்கமாக காட்ட முயல்வது, இந்து மதத்தின் துரதிர்ஷ்டம் என்று நினைப்பதல்லாமல் வேறு என்ன சொல்ல இயலும்?
இன்றைக்கு இங்கே எழுதும் நம்மில் பலர் காவியைக் கட்டிக் கொண்டு,
விவேகானந்தர், ஆதி சங்கரர், புத்தர் சொன்னதை, உப நிடதங்களில், பகவத் கீதையில் எழுதியதை படித்து விட்டு, ஆத்ம ஞானி போல காட்டிக் கொள்ள முடியும், உபதேசங்களை வாரி வழங்க முடியும்!
ஆனால் நாம், நம்மில் பலர் பொய் சொல்ல விரும்பவில்லை, இந்து மதத்தை கெடுத்து, அதில் பிழைக்க விரும்பவில்லை. அதனால் நமக்கு அறிந்ததை, உணர்ந்ததை அப்படியே எழுதி விட்டுப் போகிறோம்.
உண்மையான ஆன்மீக அனுபவம் இல்லாமல், ஆனால் ஓவர் பில்டப் கொடுத்து கைப்புள்ள போல வெறும் உதார் விடுபவர்கள், கடைசியில் கைப்புள்ள நிலையைதான் அடைய முடியும். வருத்தமில்லா வாலிபர் சங்க தோழர்கள் ஒத்தடம் கொடுக்கிறார்கள். கொடுக்கட்டும்.
Wilting othukittarupa nakkeran oli paripiyathu Blue film yenru.. samiyarum othu kittaru athu avar than yenru.. so who ever acted in that movie need to face the law for adultry …
What Rajiv Malhotra says is right. He should leave all posts and say that he is going to practice under a guru. If he really wants to continue sanyasam he should do it, other wise he should leave sanyasam and become a public speaker who can speak about the Hindu religion.
i
i remember to have read in history of southAmerica that there are similarities in the way the Mayan or Incas was conqured and the indian one.Bothwere leader-centrd who was considered infalliable and invincible.As long as he was capable the societysurvived but when he failed the society also failed.The I inca Kings death in the battlefield led to the destruction of the empire and the civilization.Death of Hemu in Panipat paved the way for Muslim Empire.A couple of years back TheHindu”published an extract from a book revealing a debate that went among the christian hierorchy as to the method to be adopted to spread christianity in INdia. The Portugese method of cannons and cutlasses and corruption utilised in converting thelower classes was not successful.They relised the leadership has to be targetted by adopting the pharaphernalia of the Hindu religio and the priests tocover thm with the trappings of hindu priests,use hindu names of respct -Iyer,Muni-etc use local lingo and modify
the ritual.We know the results There is a fear among the evanglists in the West instead of westernising the East an Easternisation of the west is taking place and it has to be stoppedPerhaps unwittingly Nithyananda provided an opportunity by crossing the threshold o
f the monastic vow.
Thiruvengadam
Radhaji has given a fitting reply to Rajiv Malhotra’s article. I urge all readers to read her master piece. What RM is saying in defence of this fake Swamy Nithyanda is totally against our dharma and morals.No amount of spin by anyone including RM will change that FACT.
Here is the link
http://www.vijayvaani.com/FrmPublicDisplayArticle.aspx?id=1148
திருச்சிக் காரன் ஐயா,
// இதற்க்கு சப்பைக் கட்டு கட்ட யோகப் பிரஷ்டனாக சித்தரிப்பது இந்துக்களுக்கு மன வருத்தத்தையும், இந்து மதத்திற்கு ஆபத்தையுமே உண்டு பண்ணும். //
நான் சப்பைக் கட்டு கட்டவில்லை.. நித்யானந்தாவின் செயலை தாந்திரீகத்துடன் தொடர்பு படுத்துவதை நான் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை என் பின்னுரையில் தெளிவாக எழுதியிருக்கிறேன்.
ஒருவர் perfect யோகி ஆன பிறகு கீழே விழுந்தால் தான் ‘யோக பிரஷ்டன்’ என்று தகுதி பெற முடியும் என்று நீங்கள் கூறவருகிறீர்கள். அது எப்படி சாத்தியம்? யோகத்தில் முயன்று கொண்டிருக்கும் போதே ஒருவன் தவறினாலும் யோகபிரஷ்டன் தான். அர்ஜுனன் கேள்வியாக வரும் கீதை மூல சுலோகத்தில் “அயதி: ஸ்ரத்தயோபேதோ யோகாச் சலிதமானஸ:” என்றே இருகிறது.. நித்யானந்தாவிடம் ஸ்ரத்தை இருந்தது, முயற்சியும் இருந்தது.. அப்படி இருந்ததால் மட்டுமே, ஆயிரக் கணக்கானவர்களுக்கு தியான முறைகளை அவரால் கற்றுக் கொடுக்க முடிந்தது, பலரை inspire செய்ய முடிந்தது. (அவர்பின் சென்ற மக்கள் எல்லாரும் நீங்கள் நினைப்பது போல முழு முட்டாள்கள் அல்ல). ஆயினும் யோகத்திலிருந்து மனம் நழுவி விட்டார்.
அவர் வழிதவறியவர், தவறு செய்திருக்கிறார்.. அதை நானும் ஒப்புக் கொள்கிறேன். ஆனால், இதற்கு உங்கள் தீர்வு என்ன? அதைச் சொல்லுங்கள். சட்டபூர்வமாக அவரை தண்டிக்க வேண்டும், சிறையில் அடைக்க வேண்டும் என்று சொல்கிறீர்களா? அப்படி ஒரு precedent தொடங்கினால், இந்து குருமார்களை பொய்யாக சிக்கவைக்க அது மீண்டும் மீண்டும் பயன்படுத்தப் படும்.
மேலும், அவர் செய்த “குற்றம்” சிவில் குற்றம் அல்ல; ஆன்மிக ரீதியான குற்றம். இதற்கு ஆன்மிக ரீதியாகவே பிராயசித்தம், தீர்வு வரவேண்டும். அதற்கு கீதை இல்லாமல் வேறு எதனை ஆதாரம் காட்டுவது?
// Rama
29 March 2010 at 6:41 am
Radhaji has given a fitting reply to Rajiv Malhotra’s article. I urge all readers to read her master piece //
ooh! I just read it… and that was a piece of hate-mongering, abusive, crude writing.
Rajiv malhotra’s analysis is objective and approaches the problem from so many different angles. Even if you reject the “Tantrik experiments” bit, all other points in his article are very much valid.
Radha Rajan has insulted Puja Swami Dayananda Saraswathi and Sri Sri Ravishankar also in that article, who are totally unrelated to this controversy. It only shows her prejuidices and hot-headed way of thinking… It is unfortunate – all of her recent articles are like this.. Her main aim appears to be to insult the other fellow Hindu activists and intellectuals, rather than attacking anti-Hindu forces.. Strange!
Mr Bala
I agree with Radhaji on her condemenation of Nithyanda and his bogus tantric experiments ( and RM’s spin). I also agree with her that this is similar to Gandhi’s Brahmacharya experiments with women which everyone trys to cover up.Nothing else.
I do not, repeat, do not agree, with her assesment and opinions of Swamiji Dayanada Saraswathi. I have not seen anyone else , who in his old age and ill health, fighting for the Hindu cause and values and againt conversion than Swamiji Dayandaji.
I completely agree with Shri Jatayu. No human is perfect and Nithyanda can redeem himself. Hindus do owe him something, at least some forgivness on their part, for all the work he had done for our dharma. (stopping conversion at village level by his temples on wheels project, etc) He can become a Grahasthan and continue his GOOD work.
Shall I have Rajiv Malhothra’s english version of this Column.
// Sivakumar
29 March 2010 at 11:19 am
Shall I have Rajiv Malhothra’s english version of this Column. //
It is given as a link under மூலம் at the beginning itself.
http://www.svabhinava.org/HinduCivilization/RajivMalhotra/SwamiNithyanandaResign-frame.php
இக் கட்டுரை பற்றி மின் அஞ்சல் அனுப்பிய நண்பர் ஒருவர் நான் தாந்திரீகம் சிறு குழுக்களுக்குள் தான் இருக்கிறது என்று குறிப்பிட்டதற்கு எதிர்வினையாக இப்படி எழுதியிருக்கிறார் –
// மெயின்ஸ்ட்ரீம் இந்து மதம் என்று இப்போது இருப்பதே தாந்திரீகம் தான்..நமது கோவில்கள், சிலை வழிபாடு, மந்திரங்கள், யோகா, ஆகமங்கள், ஆகம அடிப்படையிலான பூஜைகள் என்று எல்லாமே தாந்த்ரீகம் தான். தாந்த்ரீக
அடிப்படையிலானதே பொதுவாக எங்கும் பரவலாக தென்படும் இந்து மதம், இந்து மத வழிபாட்டிடங்கள், முறைகள். //
அவர் கூறுவது சரிதான். நான் சிறுகுழுக்களுக்குள் இருப்பதாகக் குறிப்பிட்டது “வாமாசார தாந்திரீகம்” அதாவது The Left Handed path of Tantra. இந்த முறையில் தான் பாலுறவு சம்பந்தமான சாதனைகள் உண்டு. தட்சிணாசார தாந்திரீகம் என்ற Right Handed Tantra வில் அது இல்லை – தற்போது பரவலாக நமது எல்லா பூஜை முறைகளிலும், குறிப்பாக தேவி வழிபாட்டில் தட்சிணாசார தாந்திரீகம் முழுமையாகவே கடைப் பிடிக்கப் படுகிறது. லலிதா சகஸ்ரநாமம், ஸ்ரீசக்ர பூஜை அனைத்துமே தாந்திரீகம் தான்.
அந்த வரிகள் இதற்கேற்ப மாற்றப் பட்டிருக்கின்றன.