முகப்பு » அனுபவம், சமூகம், நிகழ்வுகள்

குள்ளம்பாளையம்: மதமாற்றிகளை சிறைபிடித்த மக்கள் சக்தி!

அச்சிட அச்சிட

சில நாட்களுக்கு முன்பு வந்த ஒரு தினமலர் செய்தி:

மதமாற்ற முயற்சி: 5 பேர் சிறைபிடிப்பு
மார்ச் 21,2010,00:00 IST

பல்லடம்: பல்லடம் அருகே வீடு, வீடாகச் சென்று பிரசாரம் செய்து, கட்டாய மதமாற்றம் செய்ய முயன்ற ஐந்து பாதிரியார்களை பொதுமக்கள் சிறை பிடித்தனர். திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே உள்ளது குள்ளம்பாளையம் கிராமம். இங்கு, நேற்று காலை நாகர்கோவிலைச் சேர்ந்த கிறிஸ்தவ பாதிரியார்கள் கண்ணையன், பிரைட், மத்தியாஸ், பால்ராஜ், வின்சென்ட் ஆகிய ஐந்து பேர் கொண்ட குழு, வீடு வீடாகச் சென்று அங்குள்ள பொதுமக்களை, ‘கிறிஸ்தவ மதத்திற்கு மாறுங் கள். உங்களுக்கு இலவச வீடு, குழந்தைகளுக்கு இலவச கல்வி, பணம் கிடைக்கும்’ எனக் கூறி துண்டு பிரசுரம் வழங்கி வற்புறுத்தியுள்ளனர்.

கட்டாய மதமாற்றத்தை வலியுறுத்திய பாதிரியார்களை குள்ளம்பாளையத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சிறை பிடித்தனர். காமநாயக்கன்பாளையம் இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி மற்றும் போலீசார், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பாதிரியார்களை மீட்டு, போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர். ஸ்டேஷனில், ”இனி இது போல் கட்டாய மதமாற்றத்தில் ஈடுபடக் கூடாது,” என, எச்சரித்து பாதிரியார்களை அனுப்பி வைத்தனர். பல்லடம் பகுதியில் உள்ள பல பள்ளிகளில் மாணவர்களுக்கு கிறிஸ்தவர்கள் பைபிள் வழங்கியுள்ளனர். இதற்கு இந்து அமைப்புகளிடம் இருந்து கடும் கண்டனம் எழுந்துள்ளது.

நாம் விசாரித்ததில் உண்மையில் குள்ளம்பாளையம் என்ற இந்த ஊரில் எந்த இந்து அமைப்புகளுக்கும் கிளைகளும், தொண்டர்களும் இல்லை எனத் தெரியவந்தது.   கிறிஸ்தவ மதமாற்றிகளின் செயல்பாடுகளைக் கண்டு  எரிச்சலைடந்த  மக்கள் தாமாகவே  இயல்பாக ஒன்று சேர்ந்து  இந்த நல்லகாரியத்தைச் செய்துள்ளனர்.

இந்த நிகழ்வு நடந்து பத்து நாட்கள் கழித்து அப்பகுதிக்கு இந்து அமைப்பினரும்,  சமய குருமார்களும் சென்று  வீடு வீடாக மக்களைச் சந்தித்துள்ளனர்.  அந்தக் குழுவுடன் சென்ற  அன்பர் மறவன்புலவு சச்சிதானந்தன் அவர்கள் அந்த சந்திப்பு பற்றி நமக்கு செய்தியும் சில படங்களும் அனுப்பியுள்ளார்.  சச்சிதானந்தன் சிறந்த தமிழன்பர்;  சைவ நெறியாளர்.  சென்னையில் காந்தளகம் என்ற பதிப்பகத்தை நடத்தி வருகிறார்.  பன்னிரு திருமுறைகளையும்  இணையத்தில் சீரிய வடிவில் கிடைக்கச் செய்யும் தேவாரம்  வலைத்தளத்தை உருவாக்கி, நடத்துவதிலும் முக்கியப் பங்கு வகித்தவர்.

அவர் அனுப்பிய செய்தியை அவரது சொற்களிலேயே வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

********************

பங்‌குனி 17, 2041 புதன்கிழமை, பிற்பகம் 2.30 மணி.

கோயம்புத்துரில் இருந்து தெற்கே ஒரு மணி நேரம். பேருந்தில் பயணம். பல்லடம் சென்றேன். இந்து மக்கள் கட்சியின் பல்லடத் தலைவர் அண்ணாதுரை. இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ச்சுன் சம்பத்து. இராம சேனையின் தமிழ் மாநிலத் தலைவர். துறவிகள் வையாபுரி அடிகள், நாகசத்திபீடத்து அடிகள், கிருட்டினமூர்த்தி அடிகள் ஆகியோர் மூவர். உடுமலை, பழநிப் பகுதிகளின் இந்து மக்கள் கட்சி அமைப்பாளர்கள்.இவர்களுடன் பல்லடத்திலிருந்து உடுமலை செல்லும் சாலையில் 10 கிமீ. சென்றோம். மூன்று வண்டிகளில் பயணம்.

kullampalayam_swami_walking_to_huts

மாலை 4 மணி. வண்டிகள் நின்ற இடம் குள்ளம்பாளையம். முதலில் தெரிந்தது பிள்ளையார் கோயில். முன்னே திறந்தவெளி. தொலைவில் அரச மரம். மரத்தைச் சுற்றிச் சீமெந்துத் திண்ணை. அங்‌கே நீர்வழங்‌கு உயர் தொட்டி. அருகில் பால் சேகரிப்பு நிலையம். இரண்டொரு பெட்டிக் கடைகள்.

300 வீடுகள். அனைத்தும் மிகவும் சுத்தமான சூழலில். கழிப்பறைகள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனி. சுவர்களில் பளிச்சிடும் வெண்மை. குழாயில் நீர்.

அண்ணாதுரை ஏற்பாட்டில் ஒலிபெருக்கியில் பத்திப் பாடல்கள். பிள்ளையார் கோயிலுக்கு வழிபடச் சென்றோம். மிகவும் சுத்தமான பராமரிப்பு. வில்வ மரம். கால் கழுவக் குழாய் நீர். வலம் வரும் வீதி முழுவதும் சீமந்துத் தரை.துறவிகள் தமிழில் பாடினர், வில்வம் சொரிந்தனர். வண்டியில் போனவர்கள் மட்டும் இருந்தோம். ஒலிவாங்‌கியைக் கொடுக்க பாடல்கள் உரத்துக் கேட்டன.

ஊரவர் ஒருவர் வந்தார், தண்ணி மறித்துக் கட்டிக் கொண்டிருந்தேன். குளித்துவிட்டு வருகிறேன், என்றார். சென்றார். நீறணிந்த முதிய பெண்கள் இருவர் வந்தனர். வழிபட்டனர்.மாணவர் வந்தனர். பெரியவர்கள் வந்தனர். சிறிய கூட்டம் கூடியது. வழிபாடு முடிந்தது.

வந்தவர் அனைவரின் நெற்றியில் திருநீறு. வந்திருந்த பெரியவர் ஒருவரிடம் திருமுறைத் திரட்டு நூலும் திருவாசகமும் முறையாகத் தட்டில் வைத்துக் கொடுத்தோம். கோவிலுக்கு வெளியே வந்தோம். வீடுகளை நோக்கி நடந்தோம். தேவார திருவாசகங்‌களை ஓதினோம். ஒவ்வொரு வீடாகச் சென்றோம். வாயிலில் நின்றோம். வந்தவருக்கு அடிகளின் திருக்கரங்‌கள் நீறிட்டன. திருவாசகம் நூலின் படி கொடுத்தோம். சிறார்களுக்கு இனிப்புகள் வழங்‌கினோம். அடிகளின் திருவடிகளில் வீட்டார் வீழ்ந்து வழிபட்டனர்.

தெருவில் போவோர் வருவோர் யாவருக்கும் அடிகளார் நெற்றியில் நீறிட்டனர். பள்ளி மாணவர், பால் கொணர்வோர், கட்டடப் பணியாளர், வேளாண் நிலத்திலிருந்து திரும்புவோர், கடைக்குச் செல்வோர், வேடிக்கை பார்த்தோர் யாவரின் நெற்றியிலும் நீறு.

பத்து நாள்களுக்கு முன்பு அங்‌கு ஒரு கோயிலில் குடமுழுக்கு. ஊரே திரண்டிருந்தது. அந்த நேரம் அரச மரத்தடியில் சிறு கூட்டம். நாகர்கோவிலைச் சேர்ந்த 5 கிறித்தவப் பாதிரிகள். குள்ளம்பாளையம் வந்தனர். வீடுகளுக்குச் சென்று விவலிய நூல் கொடுத்தவரை வழிமறித்து அழைத்துவந்து அமர வைத்திருந்தனர் ஊரவர் சிலர். இச் செய்தி குடமுழுக்கு விழா அடியவர்களுக்கு எட்டியது. அரசமரத்தடியில் பெரும் கூட்டம் கூடியது. காவல்துறைக்கும் ஊடகங்‌களுக்கும் தெரிவித்தனர் சிலர்.

புறப்படத் தயாரான பாதிரிகளை மக்கள் விடவில்லை. பாதிரிகளோ கெஞ்சுகின்றனர், மன்றாடுகின்றனர். மக்களோ ஒப்பவில்லை. மக்களின் தடுப்புக் காவலில் பாதிரிகல். காவலரும் ஊடகத்தாரும் வந்தனர். ஊரவருள் ஒருவரான விசுவநாதன் பாதிரிகள் மீது முறைப்பாடு எழுதிக் காவல்துறையிடம் கொடுத்தார். யாவரும் காவல்நிலையம் சென்றனர். முதல் தகவல் அறிக்கை எழுதக் காவல்துறையினர் மறுத்தனர். பாதிரிகள் மீண்டும் குள்ளம்பளையம் வரமாட்டோம், மதமாற்றப் பணிகளில் ஈடுபடோம் எனக் கடிதம் எழுதிக் காவல்துறையில் கொடுத்தனர். பாதிரிகளை மக்களும் காவல்துறையினரும் விடுவித்தனர். இச்செய்திகளை விசுவநாதனும் மக்களும் எம்மிடம் கூறினர்.

kullampalayam-children-wearing-vibhuti

பிள்ளையார் கோயிலுக்கு முன்னுள்ள வெளியில் கூட்டம். இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ச்சுன் சம்பத்து, குள்ளம்பாளைய மக்களைப் பாராட்டினார். நானும் பேசினேன் பாராட்டினேன். “யாவர்க்குமாம் இறைவர்க்கு ஒரு பச்சிலை” என்ற திருமந்திரப் பாடலை இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ச்சுன் சம்பத்துச் சொல்லக் கூட்டத்தினர் முழுவதும் சேர்ந்து பாடினர்.

kullampa2

கூட்டம் நிறைவுற்றது. மூன்று வண்டிகளில் துறவிகளும் மற்றவர்களும் ஏறினோம், பல்லடம் வந்தோம்.
இரவு 0730 மணி. அவரவர் தத்தம் இடம் திரும்பினோம்.

********************

குள்ளம்பாளையம் இந்துக்களின் முனைப்பையும்,  விழிப்புணர்வையும், ஒற்றுமை உணர்வையும் பாராட்டுகிறோம்.  ஒவ்வொரு கிராமத்திலும்  இதே போன்ற இந்து விழிப்புணர்வு தோன்றிட வேண்டும். இந்தச் செய்தியைக் கேள்வியுற்று உடனடியாக அங்கு சென்று மக்களைச் சந்தித்த  சமய ஆசாரியார்கள் மற்றும் இந்து அமைப்பினரின் செயலும் பாராட்டுக்குரியது. இந்த இரண்டு நிகழ்வுகளுமே சிறந்த முன்னுதாரணங்கள்.  இது மேன்மேலும் பெருகவேண்டும்.

மேலும், இந்து அமைப்புகள் நிகழ்த்திய  கூட்டம் ஒரு symbolic அளவில் நின்று விடாமல் தொடர்ந்து அவர்கள்  அப்பகுதியில் உள்ள பல கிராமங்களுக்கும் செல்ல வேண்டும்.  அங்கு இறையுணர்வைப் பரப்புவதோடு மட்டுமின்றி  மக்களின் கல்வி, மருத்துவ, சமூகத் தேவைகள் என்னென்ன என்பதைக் கண்டறிந்து, அரசு நிர்வாகம் மூலமும் சேவை அமைப்புகள் மூலமும் சீரிய முறையில் அத்தேவைகள் பூர்த்தி செய்யப் பட அவர்கள் உதவ வேண்டும்.

தமிழகத்தின் சில கிராமங்களில்  தாழ்த்தப் பட்ட மக்கள், தலித்துகள்  கோயிலுக்குள் நுழைய  முடியாத நிலைமை இன்றும் நீடிக்கிறது. தாங்கள் செல்லும் கிராமங்களில் இத்தகைய நிலை இருப்பது தெரியவந்தால்  உடனடியாக ஊர்மக்களுடன் கலந்து பேசி தலித் மக்களக்கு ஆலய நுழைவு உரிமையைப் பெற்றுத் தரவும்  இந்து அமைப்புகள் பாடுபட வேண்டும்.

கிறிஸ்தவ மதமாற்றத்தைக் காந்திஜி ப்லமுறை கடுமையாக சாடியுள்ளார் -

“எனது அச்சம் இது தான் – இந்து மதம் பொய் என்று இப்போதைக்கு கிறித்தவ நண்பர்கள் வெளிப்படையாகச் சொல்வதில்லை. ஆனால் அவர்களது மனதில் இந்துமதம் தவறானது, தாங்கள் நம்பும் கிறித்தவ மதமே உண்மை என்ற எண்ணங்களை வளர்த்து வருகிறார்கள். இப்போது நடக்கும் கிறித்தவ (மதமாற்ற) முயற்சிகளையெல்லாம் பார்க்கும்போது, இந்துமதத்தின் அடிப்படையை வேரறுத்துவிட்டு அங்கு வேறு ஒரு மதத்தை நிறுவப் பார்ப்பது தான் அவர்களது நோக்கம் என்பது புரியும்” – ஹரிஜன், மார்ச் 13, 1937.

“என்னிடம் மட்டும் சட்டம் இயற்றும் அதிகாரம் இருந்தால், எல்லா மதமாற்றங்களையும் நிறுத்தி விடுவேன். இந்து குடும்பங்களில் ஒரு மிஷநரியின் வருகை என்பது குடும்பத்தைக் குலைக்கும் செயல்; உடை, ஒழுக்கம், மொழி, உணவு உள்பட கலாசாரத்தையே மாற்றும் செயல் என்றே ஆகிவிட்டிருகிறது”- ஹரிஜன், நவம்பர் 5, 1935.

மேலும், ”கிறிஸ்தவ மதமாற்றம் என்பது ஒரு அபாயகரமான கொடு விஷம்” (the idea of Conversion, which I assure you is the deadliest poison that ever sapped the fountain of truth) என்று ஒரு கிறிஸ்தவ பேராசிரியருடனான தனது உரையாடலில் காந்திஜி தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.

உண்மையில்  குள்ளம் பாளையம்  மக்களின் செயல்  ஜனநாயக ரீதியிலான, காந்திய வழிமுறை. ஆனால், அவர்கள் சிறைப்பிடித்த  சமூகவிரோதிகள் மீது எந்த வழக்கும் பதிவு செய்யாமல் வெறும் எச்சரிக்கையுடன்  காவல் துறையினர் அனுப்பியது பெரும் தவறு.

வீட்டைக் களவாட வரும் திருடர்கள் மீதே கடுமையான நடவடிக்கை எடுக்கப் படுகிறது. நாட்டின் பண்பாட்டை அழிக்கத் திட்டமிட்டு வேலை செய்யும் புல்லுருவிகளுக்கு வெறும் எச்சரிக்கை மட்டும் தானா?? 

தொடர்புடைய பதிவுகள்

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , ,

 

49 மறுமொழிகள் குள்ளம்பாளையம்: மதமாற்றிகளை சிறைபிடித்த மக்கள் சக்தி!

  1. kargil jay on April 8, 2010 at 7:38 am

    appa.. great happy news..

  2. armchaircritic on April 8, 2010 at 8:05 am

    //னால், அவர்கள் சிறைப்பிடித்த சமூகவிரோதிகள் மீது எந்த வழக்கும் பதிவு செய்யாமல் வெறும் எச்சரிக்கையுடன் காவல் துறையினர் அனுப்பியது பெரும் தவறு.//
    ஆட்சியாளர்களின் விரோதத்தை சம்பாதிக்காமல் இருக்க வேண்டும் என்ற எச்சரிக்கை உணர்வும், ஆளும் கட்சியினர் தயவில் வேலை கிடைத்ததற்க்கு செய்யும் கைமாறும் தெரிகிறது.

  3. edwin on April 8, 2010 at 9:03 am

    ‘கிறிஸ்தவ மதத்திற்கு மாறுங் கள். உங்களுக்கு இலவச வீடு, குழந்தைகளுக்கு இலவச கல்வி, பணம் கிடைக்கும்’ எனக் கூறி துண்டு பிரசுரம் வழங்கி வற்புறுத்தியுள்ளனர்.
    is there any bit notice to prove this… without evidence dont publish such a words.they cud have said to believe in Jesus not to believe in money r house still lot of christians live without their own house so we prior to provide good for them.. we dont want christians who come for money we need christian who shows Jesus by his way life

  4. Ram on April 8, 2010 at 9:10 am

    Thanks “Tamilhindu” for bringing this news to the web. The Hindus need definitely one popular TV channel.

  5. அசிங்கமான அருவருப்பான செயலைக் கூச்சம் இல்லாமல் செய்கிறார்கள்.

    இவர்கள் நாட்டுக்கு, சமுதாயத்துக்கு கேடு விளைவிப்பவர்கள்.

    தங்களுடைய மதத்தை தவிர பிற மதங்களை வெறுக்க வேண்டும், அழிக்க வேண்டும் என்கிற வெறியில் வெறுப்புக் கருத்துக்களை, காட்டு மிராண்டிக் கருத்துக்களை மக்களிடத்தில் திணிக்கிறார்கள். கையூட்டு கொடுப்பதாக கூறி ஆசை காட்டிவது அசிங்கமான அவமானம்.

    நாகரீகமும் இல்லை, மனிதப் பண்பும் இல்லை, நேர்மையும் இல்லை.
    அருவருப்பு, அசிங்கம், காட்டுமிராண்டித்தனம், வெறுப்புக் கருத்துக்கள் இவையே இவர்களிடம் உள்ளன.

    கிறிஸ்தவத்தை தழுவிய மேலை நாடுகள், அப்பட்டமான விபச்சாரக் கலாச்சாரத்தில் திளைக்கின்றன.

    ஐரோப்பையும் , அமெரிக்காவையும், ஆப்பிரிக்காவையும் கெடுத்து விட்டு இப்போது இந்திய சமுதாயத்தைக் கெடுக்க முழு மூச்சில் ஈடுபடுகின்றனர்.

    நான் உங்களுக்கு சவால் விடுகிறேன், உங்களால் முடியுமானால் நீங்கள் எங்கிருந்து இந்த மதத்தை இறக்குமதி செய்தீர்களோ, அந்த ஐரோப்பாவிற்கு சென்று அங்கே இருக்கும் கிறிஸ்தவர்கள் ஒவ்வொரு மனிதனும் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு சாகும் வரை அந்தப் பெண்ணை விட்டு பிரியாமல் வாழச் செய்ய முடியுமா, என்று நான் உங்களுக்கு சவால் விடுகிறேன்.

    அப்படி முடியாவிட்டால் இங்கே இந்து மதத்தால் உருவாக்கப் பட்ட நேர்மையான குடும்ப வாழ்க்கை காலச்சாரத்தை சீரழிக்க முயலும் விஷச் செயலை செய்வது ஏன்?

    பதில் சொல்!

    நல்ல நேர்மையான குடும்ப வாழ்க்கையைக் கற்றுக் கொடுப்பது இந்திய இனம். எங்களுக்கு கற்றுக் கொடுக்க நினைப்பது அறிவீனம். கையூட்டு கொடுக்க முயல்வது மாமா தனமே.

  6. aravindan neelakandan on April 8, 2010 at 9:54 am

    தமிழ்ஹிந்துவின் பணி சிறக்க வாழ்த்துக்கள். இத்தகைய எளிய ஆனால் ஞானம் உள்ளார்ந்து நிற்கும் மக்களாலேயே ஹிந்து தர்மமும் இந்த தேசமும் வாழ்கிறது. விலைக்குப் போன ஊடக கீழ்த்தரங்களால் அல்ல.

  7. விஸ்வாமித்ரா on April 8, 2010 at 10:20 am

    எட்வின்

    நீங்கள் நியூயார்க் நகரில் இருக்கும் தமிழ் கிறிஸ்துவ மதப் பிரச்சாரகர்களில் ஒருவரா? ஆதாரம் இருக்கிறது நண்பரே. ஒவ்வொரு ஊரிலும் இவர்கள் மூளைச் சலவை செய்வதையும், பணம் வேலை கொடுப்பதாக ஆசை காட்டியும் இவர்கள் செய்யும் அட்டூழியங்களை வீடியோ ஆதாரமாகவே எடுத்துத் தரத் தயார். அப்படி ஆதாரம் கொடுத்தால் என்ன செய்ய உத்தேசம்? உடனே கிறிஸ்துவ மதத்தைத் தலை முழுகி விட்டு இந்துவாகி விடுவீர்களா? சொல்லுங்கள் ஒன்றல்ல நூறாயிரம் ஆதாரங்களைத் தரத் தயாராக இருக்கிறேன். அந்த கிராமத்து இந்து மக்கள் அப்பாவிகள் ஏழைகள் அவர்களுக்கு பொய் சொல்ல வேண்டிய அவசியம் கிடையாது. என்னிடம் நேரடியாகவே வந்து என்னை விலைபேசியிருக்கிறார்கள் சில பாதிரிகள். சும்மா எதுவும் நடவாதது போல நடிக்காதீர்கள்.

    விஸ்வா

  8. RV on April 8, 2010 at 10:44 am

    குள்ளம்பாளையம் மக்கள் விலை போகாதது நல்ல விஷயம். இது போன்ற விஷயங்களை பதிப்பது வரவேற்புக்குரியது.

    ஆனால் கட்டாய மத மாற்றம் என்கிறீர்களே, என்ன கட்டாயம்? ஆசை காட்டுவது எப்படி கட்டாயம்? தவறான வார்த்தைப் பிரயோகம்.

  9. ச‌கோத‌ர‌ர் எட்வின் அவ‌ர்க‌ளே,

    நீங்க‌ள் எந்த‌ உல‌க‌த்தில் இருக்கிறீர்க‌ள்? I mean which part of world?

    //கிறிஸ்தவ மதத்திற்கு மாறுங்கள். உங்களுக்கு இலவச வீடு, குழந்தைகளுக்கு இலவச கல்வி, பணம் கிடைக்கும்’ எனக் கூறி துண்டு பிரசுரம் வழங்கி வற்புறுத்தியுள்ளனர்…is there any bit notice to prove this… without evidence dont publish such a words.//

    கிறிஸ்தவ மதத்திற்கு மாறுங்கள். உங்களுக்கு இலவச வீடு, குழந்தைகளுக்கு இலவச கல்வி, பணம் கிடைக்கும்’ எனக் கூறி & துண்டு பிரசுரம் வழங்கி வற்புறுத்தியுள்ளனர்.

    இலவச வீடு, குழந்தைகளுக்கு இலவச கல்வி, பணம் கிடைக்கும்’ – Verbal Commitment தான் கொடுபபார்க‌ள்.

    ப‌ல‌ இட‌ங்க‌லில் இருந்தும் ப‌ண‌ம் பெற்று, அதில் சிறு தொகையை ம‌ட்டும் ம‌க்க‌ளிட‌ம் கொடுத்து, மீதித் தொகைக்கு ப‌ங்களா க‌ட்டி – இதைப் ப‌ல‌ர் தொழிலாக‌வே செய்கின்ற‌ன‌ர். இது நீங்க‌ள் அறியாத‌தா?

    //we need christian who shows Jesus by his way life//

    கிறிஸ்து எந்த‌க் க‌ருத்துக்களை போத‌னை செய்தாரோ, அதே க‌ருத்துக்க‌ளின் ப‌டி தானே இந்திய‌ர்க‌ள் ப‌ல்லாயிர‌க் க‌ண‌க்கான‌ வ‌ருட‌ங்க‌ளாக‌ வாழ்ந்து வ‌ருகிறோம்?

    “ம‌னைவியை விவாக‌ர‌த்து செய்யாதெ, விபச்சார‌ம் செய்யாதே, அடுத்த‌வ‌ருக்கு உத‌வி செய்வ‌து க‌ட‌வுளுக்கு உத‌வி செய்வ‌து போல‌‍” – இதே க‌ருத்துக்க‌ள் இந்தியாவில் ப‌ல்லாயிர‌க் க‌ண‌க்கான‌ வ‌ருட‌ங்க‌ளாக‌ ம‌க்க‌ள் பின்ப‌ற்றி வ‌ருகிர‌, வாழ்ந்து வ‌ருகிற‌ க‌ருத்துக்க‌ள் தானே?

    இப்போது புதிய‌தாக‌ சொல்ல‌ என்ன‌ இருக்கிர‌து என்று சொல்லுங்க‌ள்!

    இயேசு கிறிஸ்துவை இந்திய‌ர்க‌ள் இக‌ழ்வ‌தில்லையே. இப்போது இங்கெ வ‌ந்து ம‌க்களைக் கெடுக்க‌ வேண்டிய‌ அவ‌சிய‌ம் என்ன?

    ”நீங்க‌ள் புற‌ ஜாதியின‌ரிட‌த்தே போகாம‌ல் இஸ்ர‌வேல் புத்திர‌ரிட‌ம் போங்க‌ள்” என்று இயேசு கிறிஸ்துவே சொல்லி இருக்கிறாரே. இஸ்ரேலுக்கு போய் பிர‌ச்சார‌ம் ப‌ண்ணாம‌ல் இங்கே வ‌ந்து ஏற்கென‌வே ஒழுங்காக‌ இருப்ப‌வ‌ர்களைக் கெடுப்ப‌து ஏன்?

  10. ச‌கோத‌ர‌ர் எட்வின் அவ‌ர்க‌ளே,

    //still lot of christians live without their own house so we prior to provide good for them….//

    கிறிஸ்துவ‌ர்க‌ளுக்கு இன்னும் வீடு இல்லை. அவ‌ர்க‌ளுக்கு வீடு வ‌ழ‌ங்க‌வே முனைப்பு காட்டுகிறோம்.

    இதுதான் நீங‌கள் கிறிஸ்துவை பின்ப‌ற்றும் முறையா?

    த‌ன்னைப் போல‌ பிற‌னையும் நேசிக்க‌ வேண்டும் என்றார் இயெசு கிறிச்து. பிற‌ன் யார் என்ற‌த‌ற்க்கு ஒரு யூத‌ன் அடி ப‌ட்டுக் கிட‌ந்த‌ போது அவ்வ‌ழியே போன‌ யூத‌ குருமார் உத‌வ‌வில்லை. ஒரு ச‌மாரிய‌ன் உத‌வி செய்தான். அந்த‌ ச‌மாரிய‌னுக்கு யூத‌ன் யார் என‌க் கேட்டார். அதாவ‌து த‌ன‌க்கு ச‌ம‌ப‌ந்த‌மே இல்லாத‌, த‌ன் உற‌வின‌ர், ந‌ட்பு, மொழி, ம‌த‌, வ‌ர்க்க பேத‌ங்க‌ளைத் தாண்டி உத‌வி செய்வ‌துதான் பிற‌ருக்கு உத‌வுவ‌து.

    என‌வே நீங்க‌ள் உண்மையான‌ கிறிஸ்துவ‌ராக‌ இருந்தால் , கிறிஸ்து சொன்ன‌ ப‌டி, பிற‌னுக்கு, ஒரு இந்துவுக்கோ, முஸ்லீமுக்கோ வீடு வ‌ழ‌ங்க‌வே, உத‌வ‌ முனைப்பு காட்ட‌ வேண்டும்.

    இத‌னால் தான் நீங்க‌ள் த‌வறான‌ வழியை கிறிஸ்த‌வ‌ம் என்ற‌ பெய‌ரிலே ப‌ர‌ப்பி, உல‌கிலே இர‌த்த‌ ஆறு ஓட‌ விட்டு விட்டீர்க‌ள் என்று அறிங்க‌ர்க‌ள் சொல்கின்ர‌ன‌ர்.

    உண்மையான‌ கிறிஸ்த‌வ‌ம் என்ன‌ என்று நீங்க‌ள் தெரிந்து கொள்ள‌ விரும்பினால் என்னைத் தொட‌ர்பு கொள்ள‌வும். என் த‌ளத்திற்க்கு வ‌ந்து பார்வை இடுங்க‌ள்.

  11. C.N.Muthukumaraswamy on April 8, 2010 at 12:47 pm

    குள்ளம்பாளையம் மக்களை நினைக்க எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது. இந்தப் பதிவில் கூறப்பட்டுள்ள துறவிகள் போன்ற தொண்டர்கள் நம்முள் பலர் உருவாக வேண்டும். உண்மையில் இத்தகையோரே நம் இந்து தர்மத்தின் . காவலர்கள். அர்ஜுன் சம்பத் அரும் பணி செய்கிறார். அவர் எடுத்த காரியம் யாவிலும் வெற்றி பெற இறைவன் அருள்வாராக!

  12. Sarang on April 8, 2010 at 1:32 pm

    ed win

    you will lose if you ask for proof – i will bring humans not just notices as proof. there are several families where brother is a christian (converted through enticement) and sister is hindu(who did not budge to the enticement) or the otherwise – i will bring these sisters and brothers as proof – (s)he will say how much money one gets, i can take you to villages where a bible speaker is given money on a per hour basis to speak at different gateherings on weekends (this is just like how a BPO business is run)
    In villages these guys are paid Rs 200 per hour and given pertrol allowance, a bike is ofcourse given for free – are you ready to come with me to see this for yourself….

    typical plot is to occupy lands of hindus and let the Speaker scream to the core. do some mesmirising stuff

    and what they distribute freebees to children and people – these guys o everything to attract people -this is no different that what the DMks do to attract crowd for their gatherings. Don’t you think these guys have targets – they work very muck like Airtlel consumer subscription – we have read 1 million mark, 1.3 million mark etc….

  13. S Baskar on April 8, 2010 at 2:00 pm

    RV,

    By your same argument giving Cash for Votes, Cash for talking in Parliment, CASH for SEX are all not wrong. May be I am missing something. I have seen some of your writings in Jeyamohan.in. It is very good , points well made. But whenever I see your arguments in tamilhindu your arguments are bit vague.

    Regards
    S Baskar

  14. sakthi on April 8, 2010 at 6:41 pm

    for edwin if u r correct means then why r u compelling and keeping person to convert them so leave that work and see ur work if they belive they come join ur christians. why u r wasting the funds for that pastors and sister better u give the money to the government brother.

  15. SATHEESH on April 8, 2010 at 9:06 pm

    இது போல் நம் ஹிந்து மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் இருந்தால் நம்மை யாரும் அசைக்க முடியாது .அதே போல் அந்தந்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்களால் இயன்ற உதவிகளை மக்களுக்கு செய்யவேண்டும் குறிப்பாக கல்லூரிக்கு பணம் செலுத்துவது …

  16. Karan on April 8, 2010 at 9:52 pm

    RV

    கட்டாய மதமாற்றமென்றால். காசு கொடுத்தால் எப்படி கட்டாயம் காசு கொடுத்த கட்சிக்கு ஓட்டு போட வேண்டுமோ அது போல காசு கொடுத்தால் கட்டாயம் மதம் மாற வேண்டும்.

  17. ram on April 8, 2010 at 10:04 pm

    ///is there any bit notice to prove this… without evidence dont publish such a words///

    யப்பா எட்வின்.. இல்லாட்டி உங்க ஆளுங்க எல்லாம் மதம் பரப்பரதே இல்லை பாருங்க. சின்ன வயசில இருந்து நான் பாத்திருக்கேன். கை நிறைய பிட்டு நோட்டிஸ் வச்சிக்கிட்டு போறவர்ரவங்களுக்கு குடுக்கறதை வேலையாவே வெச்சிருக்காங்க இந்த மத வியாபாரிங்க. இப்போ வீடு வீடா போய் மார்கெட் பண்றாங்க. இதில ப்ரூப் வேணுமாக்கும். ஏன் நீங்க என்ன ப்ரூஃப் ரீடரா. படிச்சுப் பாத்து ஸ்பெல்லிங் மிஸ்டேக் திருத்தப் போறீங்களா என்ன?

  18. ram on April 8, 2010 at 10:13 pm

    //ஆனால் கட்டாய மத மாற்றம் என்கிறீர்களே, என்ன கட்டாயம்? ஆசை காட்டுவது எப்படி கட்டாயம்? தவறான வார்த்தைப் பிரயோகம்.//

    திரு ஆர் வி அவர்களே!

    உங்கள் வீட்டுப் பெண்ணிடம் ஒருவர் பணத்தாசை காட்டி என்னோடு வா! என்று அழைக்கிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள். அதை உங்கள் வீட்டுப் பெண் மறுக்கிறார். அதனால் அழைத்தவர் உனக்கு சொந்தமாக வீடும் காரும் வாங்கித்தரேன். வா! என்று மீண்டும் ஆசைகாட்டி வற்புறுத்துகிறார். இப்படி வர மறுப்பவரை மேலும் மேலும் ஆசை காட்டி அழைக்கும் போது அது கட்டாயம் தானே! அப்படி உங்கள் வீட்டு வாசலில் ஒருவர் அழைக்கும் போது நீங்கள் கண்டிப்பீர்களா அல்லது “ஆசைகாட்டுவது எப்படி கட்டாயம்” என்று அறிவு ஜீவியாக வசனம் பேசுவீர்களா?

  19. Murali on April 9, 2010 at 12:27 am

    First Edwin neenkal padikum BIBLEle thappanatu.. thirutha padatha unmiyana bible kandu pidithi padiyunkal..appolothu therium its just copy of hindu sacred scriptures enru..

  20. ganapathy on April 9, 2010 at 12:45 am

    gurubhyo namah
    BEWARE -the three samaya gurumarkal who visited this village will have to be cautious.it is likely that they will be caught in some scandal or other by the media (both electronic&print)Beware

  21. Amirtharaj on April 9, 2010 at 1:23 am

    மாற்றம் என்பது மாறாத ஒன்று. உலகத்தில் யாரேனும் ஒருவர் ஒரு மதத்தில் இருந்து மற்றொன்றுக்கு மாறி கொண்டு தான் இருக்கின்றார்கள். பல அமெரிக்கர்கள் இந்துவாக மாறியது உண்டு. ஆனால் எல்லா மாற்றத்திற்கும் பின் தனி மனித ஆதாயம் உண்டு. பணம் இல்லாதவன், பணத்திற்காகவும், ஆன்மீக செறிவு இல்லாதவன், ஆன்மீக திற்காகவும் மாறுகின்றார்கள். தேவை நிறைவேறுவது, மனித மனதிற்கு மிக முக்கியம். இதில் பணத்திற்காக மாறுபவனால், அந்த மதத்திற்கு எந்தவிதமான லாபமும் இல்லை, வீண் செலவுதான். அவனால் தாய் மதத்திற்கும் பிரையோஜினம் இல்லை. கட்டாய திருமணம் எத்தனை நாள் நிலைக்கும், அதே போல்தான் கட்டாய மதமாற்றமும்! இறுதியில் தனி மனித விருப்புதான் வெல்லும்!!

  22. Balaji on April 9, 2010 at 1:38 am

    இவர்கள் குள்ளம்பாளையத்தினர் அல்ல என் நெஞ்சில் நின்ற ‘நெடிய’பாளையத்தினர்! வாழ்க! வாழ்கவே!

  23. RV on April 9, 2010 at 5:56 am

    என்னங்க இது? ஆசை காட்டுவது = கட்டாயம் என்றால் நீங்கள் எல்லாம் கொஞ்சம் தமிழ் படிக்க வேண்டும்!

    கரன் காசு வாங்கினால் “கட்டாயம்” வோட்டு போட வேண்டுமே என்கிறார். காசு வாங்க வேண்டும் என்பது என்ன கட்டாயம் என்று அவருக்கு புரிந்தால் சரி. ஆசை காட்டி மதம் மாற்றுவதை கட்டாய மத மாற்றம் என்று அழைப்பது தவறான வார்த்தை பிரயோகம் என்றால் பாஸ்கர் ஆசை காட்டி மதமாற்றம் செய்வது தவறில்லை என்று வேறு பொருள் கொள்கிறார். ராமும் ஆசை காட்டினால் கண்டிப்பேனா இல்லை ஆசை காட்டுவது எப்படி கட்டாயம் என்று கேட்பேனா என்று கேட்கிறார். அது இரண்டும் எப்படி mutually exclusive என்று தெரியவில்லை. இதற்கு மேல் இதற்கு பதில் வேறு எழுத வேண்டுமா? அட போங்கப்பா!

  24. armchaircritic on April 9, 2010 at 8:43 am

    They should be stopped from distributing these bit notices at least to save trees! These notices affect nature and culture at the same time.

  25. களிமிகு கணபதி on April 9, 2010 at 1:48 pm

    RV,

    உங்களுடைய கேள்வி சரியானது.

    சரியான வார்த்தை இல்லாததால்தான் அந்த “கட்டாயம்” எனும் வார்த்தையை உபயோகப்படுத்தி உள்ளார்கள்.

    எனினும், தற்போதைய நிலையை விளக்க இந்த வார்த்தைதான் உபயோகத்தில் இருக்கிறது.

    இந்த மதமாற்ற விஷயத்தில், நாங்கள் சொல்லுவதைக் கேட்காவிட்டால், நாங்கள் சொன்ன உதவி கிடைக்காது என்ற பயமுறுத்தல், ஒரு வியாபார ”நிர்ப்பந்தம்” இருக்கிறது.

    நிர்ப்பந்தம் எனும் வார்த்தை நடைமுறையில் சரியான புரிதலைத் தருகிறது. ”கட்டாயம்” என்பதை விடச் சரியான வார்த்தைதான்.

    ஆனால், தார் பெயிண்ட் தடியர்களுக்கு வேலை கொடுக்கத்தான் வேண்டுமா ?

    ____________________________________________________________

    RV,

    நீங்கள் கேட்க நினைத்த கேள்வியாக நான் புரிந்துகொள்வது இது:

    “இல்லாதவனுக்கு சாப்பாடும், மானமும் மதம் மாறுவதால் கிடைத்தால் அதில் என்ன தப்பு?”

    என்பதுதான் நீங்கள் கேட்க நினைத்த கேள்வியாக எனக்குப் படுகிறது.

    என் பதில்: உடனடிப் பலனைப் பார்த்து வருங்காலத்தில் வாழ்க்கையை கெடுத்துக்கொள்ளுவதுதான் மத மாற்றம். தன்னுடைய வாழ்க்கையை மட்டுமல்ல தன் சமுதாயத்தின், நாட்டின் நன்மையை வேரோடு அழிப்பதுதான் மதம் மாறும் ஒருவனால் விளைகிறது. மதம் மாறிய நாடுகளைக் கவனியுங்கள். ஒன்று அவை ஆக்கிரமிப்பு நாடுகளாகவோ, அல்லது அடிமை நாடுகளாகவோ மட்டுமே இருக்கின்றன. அனைத்தும் போர்களை நடத்தித்தான் பிழைக்கின்றன.

    இந்தியாவில் நடக்கும் மத மாற்றம்கூட வருங்கால எதேச்சதிகாரத்திற்குப் போடப்படும் சிவப்புக் கம்பளம்தான்.

    எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் இதுகுறித்துச் சொல்லி இருப்பதைப் படியுங்கள்: மனிதாபிமான வணிகம்

  26. Karan on April 9, 2010 at 5:47 pm

    RV
    உங்களுக்கு எளியவர்களின் கஷ்ட்டம் புரியவில்லை. சுனாமியில் வீடு இழந்தவர்களிடம் கட்டாயம் வீடு கட்டி கொடுக்கிறேன் மதம் மாறு என்று மத்ம் மாற்றினார்கள் . இப்படி ஆசை காட்டி மதம் மாற்றினால் அது கட்டாய மதமாற்றமில்லாமல் வேறென்ன.

    கரண்

  27. ந. உமாசங்கர் on April 9, 2010 at 9:39 pm

    ஆட்களை விலைக்கு வாங்கி, கிறித்துவக் கல்லறைகளை அதிகரித்து, ஆன்மாக்களை அறுவடை செய்துவிட்டதாக எண்ணிக்கொள்ளும் வழக்கம் கிட்டத் தட்ட இரண்டாயிரம் ஆண்டுகளாக உலகம் முழுக்க நடந்து கொண்டுதான் இருக்கிறது. கிறித்துவ மதத்தின் வழி வழி வந்த வழக்கத்தைக் கடந்து நமது மதம் மட்டும்தான் இன்றளவும் தாக்குப் பிடித்திருக்கிறது. ஏனென்றால் நமது மதம் மட்டும்தான் ஒவ்வொரு ஆன்மாவும் இறைவனே என்று உணர்த்தும் உன்னதமான‌ ஆன்மபலம் பொருந்தியது. ஆபிரஹாமிய மதங்க‌ள் எல்லாம் உதட்டளவில் நீயும் நானும் சகோதரன் என்பன. உள்ளத்தில் வியாபார, அதிகார, ஆக்கிரமிப்பு, எண்ணிக்கை நோக்குடையன.

    தமிழன்பர் மறவன்புலவு திரு சச்சிதானந்தன் அவர்கள் அருந்தமிழ் வார்த்தைகள் ஊரவர், முறைப்பாடு, வேளாண் முதலியனவற்றைப் பிரயோகம் செய்திருக்கும் பாங்கைப் பாராட்டவேண்டும். தமிழின் இனிமை சொரியும் அவரது நடை சிறப்பானது. அவர் எங்கும் கட்டாய மதமாற்றம் என்ற சொற்பிரயோகம் செய்யவில்லை என்பதையும் கவனிக்கவேண்டும்.

    திரு ஆர்.வி. அவர்கள் சொல்வது சரியே. ஆசை காட்டுவது, கையூட்டுக்கு வேண்டுமானால் ஒப்பிடலாமே அல்லாது கட்டாயத்துக்கு அல்ல. சிலநேரங்களில் நமது பக்க நியாயத்தை வலியுறுத்த சிலவிதமான மிகைச் சொற்களைப் பயன் படுத்துவது தவிர்க்கவியலாதது ஆகிவிடுகிறது. கட்டுரையில் கட்டாய மதமாற்றம் என்ற சொற்கள் பயன்படுத்தப்பட்டதும் இவ்வகையிலேயே அமையும். இவையெல்லாம் இந்தக் கலிகாலத்தில் தேவையாகிவிட்டன. அஸ்வத்தாமா இறந்து விட்டதாக கூறப்படவில்லையா? இதுவும் இவ்வகையதே.

    கட்டாய மதமாற்றச் சட்டம் திரும்பப் பெறப்பட்டுவிட்டது. காவல் துறை இந்தக் குற்றச் சாட்டில் பதியாதது சட்டத்தின் பாற்பட்டதே. ஆனால் துண்டுப்பிரசுரங்களில் உள்ள செய்திகள் வாக்கியங்கள் நமது மதத்தை மறைமுகமாகக் கூட சாடுவதாக இருந்தால், மத உணர்வுகளைப் புண்படுத்தியதாக முறைப்பாடு செய்தால், வழக்குப் பதியத்தான் வேண்டும். இதுபோலவே மத அடிப்படையில் பொது அமைதியைக் குலைத்ததாக முறைப்பாடு கொடுத்தால், அதற்கான வழக்கும் பதியவேண்டும். நம் மக்களுக்கு இது குறித்த சட்ட ரீதியான வழிமுறைகளைத் தக்க முறையில் எடுத்துச் செல்ல வேண்டும்.

  28. Srinivasan TR on April 9, 2010 at 10:08 pm

    எட்வின் அவர்களே
    திருடன் ஆதாரத்துடன் திருட வருவானா?
    கிருத்துவத்தை பரப்ப நடந்த கொடுமைகள் வரலாற்றில் ஆதாரத்துடன் நிறையவே வுள்ளது….

  29. jagan on April 9, 2010 at 10:35 pm

    vanakkam… na kulampalayam sarnthavan. ipothu tirupuril irukken. yanga ur makkalai ninaikkum pothu perumaiyaga irukku.

  30. edwin on April 10, 2010 at 1:30 am

    “சிலநேரங்களில் நமது பக்க நியாயத்தை வலியுறுத்த சிலவிதமான மிகைச் சொற்களைப் பயன் படுத்துவது தவிர்க்கவியலாதது ஆகிவிடுகிறது. கட்டுரையில் கட்டாய மதமாற்றம் என்ற சொற்கள் பயன்படுத்தப்பட்டதும் இவ்வகையிலேயே அமையும்” i mean this type of title shd be avoided D

மறுமொழி இடுக:

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.

*

உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:

தமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.

மறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.