தமிழை வளர்ப்பதாய் மாநாடு கூட்டிடுவாரோ?

[கோவை செம்மொழி மாநாட்டு என்ற பெயரில் தற்போதைய தமிழக அரசு நடத்திக் கொண்டிருக்கும் நிகழ்வுகளுக்கு நடுவில், இது பற்றிய தனது விமர்சனத்தை கழகக் கவியரங்க நடையிலேயே எழுதி ஒருவர் நமக்கு அனுப்பியிருக்கிறார்.

செயற்கையும், போலித்தனமும் கலந்த பகட்டு மொழிநடையைப் படிப்பதற்கும், பயன்படுத்துவதற்கும் நமது நுண்ணுணர்வும், தமிழன்பும் இடம் கொடுக்கவில்லை தான். ஆயினும், திராவிட இயக்கக் குச்சியை வைத்தே உண்மையான பண்பாட்டு உணர்வுள்ள ஒரு சராசரித் தமிழன் அதனைத் திருப்பி அடிப்பது சுவாரஸ்யமளிக்கிறது என்பதால் இதனை வெளியிடுகிறோம் – ஆசிரியர் குழு]

தொல்காப்பியம் தந்த தொல்காப்பியனுக்கு முன்பே
அப்பன் அவன் தொல்காப்பியன்
சங்கம் வைத்து தமிழ் பயின்றான் – அதில்
தமிழ் கடைந்து வேதம் தர முயன்றான்

வேதம் தரமுயன்றான் என்றால்
வேதம் வாங்கித்தரமுயன்றான்
வேதம் எங்கு வாங்கி?
அதை அவன் அப்பனிடத்தின்று வாங்கி.

தான் தின்ற சோற்றைத் தாய்ப் பாலாக்கி
தன் மக்கட்குத் தாய் கொடுப்பது போல்
எல்லாம் இருந்தது எல்லாமும் இருந்தது
புரிவது போல் தருவது தான் புலவன் தொழில்

kamban1

ராமன் வாழ்ந்தான் – அவன்
எம்மொழி பேசி இப்பாரினை ஆண்டான்
முன்பு வால்மிகி அதை
தன் நூலில் தந்தான்
பின்பு கம்பன் வந்தான் – அதைத்
தமிழில் ஆக்கித் தன் மக்கட்குத் தந்தான்

தர்மமாய் வாழும் மாந்தர்களால்
என்றும் தர்மம் வாழும்
அந்த தர்மம் தமிழும் பேசும்
சமஸ்கிருதமும் பேசும்

திருவள்ளுவனும், பெரும் கம்பனும்
இன்னும் பல்லாயிரம் நல் கவிகளும்
சேர்ந்து தமிழ் பயின்று வேதம் தர முயன்றார்
வாழ்ந்த வேதத்தை தமிழில் தர முயன்றார்

இதைத் தமிழ் சங்கம் என்று
அழைத்தால் தகுமோ
இதனை வள்ளுவன் அறிந்தால் அவன் மனம்
பதைக்காமல் படுமோ

காப்பியம், புராணம், இதிகாசம்
எல்லாம் உரைப்பது வாழ்ந்தவர் கூற்றை
ஈசனின், கிருஷ்ணனின், கந்தனின் ஞான ஊற்றை
இவர்களை பாடி மகிழ்ந்த
புலவர், முனிவர், ஞானசித்தர்கள்
தோன்றி கூடி ஆடிப் பாடி தோன்றியது
சங்கம்.
இனி இல்லை இது வெறும் தமிழ் சங்கம்
இது வேதத் தமிழ் சங்கம்

இதை யாரும் கூறாமல் நான் கூறுவதேனோ?

தமிழை சிறிதேனும் அறிந்ததாலோ? அது
வேதம் உரைத்ததென்று உணர்ந்ததாலோ?
கிருஸ்துவன் அரசியல் சூழ்ச்சியை நான் உணர்ந்தாலோ?
அவன் ஆரியம், திராவிடம் என்று வரலாற்றை திரித்ததாலோ?
அதை வாழிய கோஷம் இட்டு நம்மில் சிலர் ஏற்றதாலோ?

இதை யாரும் கூறாமல் நான் கூறுவதேனோ?

தமிழுக்கும் சமஸ்கிருதத்திற்கும் சிண்டு
முடிந்ததாரோ? அதை வழி மொழிந்ததாரோ?
அதை யார் வழி மொழிந்தார் என்று நான் உணர்ந்ததலோ?
இந்த அரசியல் அடியொற்றி
இன்றும் இங்கு ஆட்சி நடப்பதாலோ?

ஆரியன் என்றான் திராவிடன் என்றான்
எவனோ சொன்னான் நீவேறு நான் வேறு
சிவன் ஆரியன் முருகன் திராவிடன்
ராமன் ஆரியன் அவன் நண்பன் குகன் திராவிடன்

ஆரியன் வந்தானாம் திராவிடன் தோற்றானாம்
வென்றவன் தந்தையாம் தோற்றவன் பிள்ளையாம்
வென்றவன் நண்பனாம் தோற்றவன் நண்பனாம்
பொய்யின் இலக்கணம் கொன்ற பொய்யது

இப்பொய்யை ராவணன் உரைத்திருந்தால்
அந்த ராமனே தோற்றிருப்பான்

பொய்கள் சொன்னவன் சூழ்ச்சியை நான் உணர்ந்ததாலே
என் பீடிகை இறுதியில் அவன் தோல் உரிக்கும்
அவன் அடிபற்றும் நம் மக்களின் மன மாசகற்றும்

அன்று தர்மம் வளர்த்தவர்
தமிழின் வழி வளர்ந்தார்
இன்றோ தர்மம் அழிப்பவர்
தமிழின் வழி அதை அழிப்பதேனோ?

தமிழை வளர்ப்பதாய் மாநாடு கூட்டிடுவாரோ
கம்பனின் இராமனை வெறுப்பவர் தமிழ் வளர்ப்பவரோ
ஔவையின் முருகனை மறுப்பவர் தமிழர் தானோ
காட்சிகள் மாறின சாட்சிகள் மாறின
யார் யாரோ தமிழர் யார் யாரோ அறிஞர்
தமிழின் கொள்கைக்கு பகைவர்
தமிழ் வளர்ப்பதேனோ – இவர்
தமிழ் விற்றே தன் குலம் செழிப்பர்
இதை உணர்வார் யாரோ

தமிழன் தமிழ் வளர்த்தான் – உடன்
உயர் கோயில் அமைத்தான்
அதில் தர்மம் சமைத்தான்
சிலை வைத்து வேதம் உரைத்தான்

மதுரை மீனாட்சி கோயில்

இன்றோ இவர் கோவில் பொய் என்றார்
வேதம் பகைமை என்றார்; சிலைகள்
வெறும் கல் என்றார்;
இவர் தமிழ் இலக்கணம்
குழி தோண்டிப் புதைதார் – இதை
மாநாடு கூட்டியே மார்தட்டிக்கொள்வார்

இந்த மாநாட்டு நாயகர்கள் கயமையை
சொல்வது என் உரிமை
ஒரு தமிழனின் முதல் கடமை
ஒரு தமிழனின் முதல் கடமை

கயமை ஒன்று

அந்நிய சூழ்ச்சியை உணர்ந்தும் ஏற்றார்
ஆரியம் திராவிடம் பொய்யென்று
அறிந்தும் ஏற்றார்
அதை பட்டி தொட்டி சென்று கூறி கூறி
அது மெய்போல் மாற்றி மாற்றி
அது மெய்போல் மாறி மாறி
இப்பொய்க்குக் கூலியாய் இவன் குலம் செழித்தான்
இதற்கு தேசத்தின் ஒற்றுமையை ஒழித்தான்

கயமை இரண்டு

மேகங்கள் தழுவும் கோபுரம் முழுதும்
என் தாத்தனும் அவன் பாட்டனும்
மானிட வாழ்க்கையில் மானிடராகவே வாழ்ந்திட
தர்மங்கள் கூறிய என் முப்பாட்டனும்

ஞானிகள், முனிவர், தேவர்கள், ரிஷிகள்
பசுக்கள், பறவை, காவியம் படைத்தோர்
காப்பிய நாயகர் கொண்டு கட்டிய கோவில்கள்
தர்மமாய் வாழ்வது எளிது என்றிடும்

ராச்சியம் என்றால் ராமனின் ராச்சியம்
பக்தி என்றால் அனுமனின் பக்தி
முக்தி என்றால் மார்கண்டேயனின் முக்தி
பிள்ளை என்றால் முருகன் போல் பிள்ளை
புத்தி என்றால் விநாயகன் புத்தி
சக்தி என்றாள் காளி போல் சக்தி என்று
கோவிலில் வைத்து கொண்டாடுகின்றோம்

இது என் முன்னோர்கள் வாழும் சிறிய வீடு
அவர் சிந்தனை ஒளிர்ந்திடும் ஓர் சிறிய கூடம்
கல்லில் தான் அவர் உரு செய்தோம்
நீடித்து நிலைக்கும் என்பதால்
வெறும் கல்லிற்கும் உரு தந்தோம்
அது அக்கல் செய்த தவம் தான்

பகுத்தறிவை முழுதும் குத்தகைக்கு எடுத்திட்டோர்
பகுத்தறிவின் போர்வையில் வஞ்சகம் செய்கின்றார்
சிலைக்கு மறுபெயர் மூடநம்பிக்கை என்கின்றார்
ரத்தங்கள் சிந்தி கட்டினன் தமிழன்
சில சொற்களை சிந்தியே தகர்த்திட பார்க்கின்றார்

சில மதங்கள் சாய்த்திட முயன்றும்
இது சாயாத கோபுரம்
குண்டிட்டே சிலர் தகர்த்தார்
மதம் மாற்றியே தகர்க்க முயன்றார் சிலர்
எனினும் இது சாயாத கோபுரம்
இது சாதனை கோபுரம்

கயமை மூன்று

இது கலியுகம் என்பது என் முன்னோர் வாக்கு
பஞ்சாங்கம் சொல்வது காலத்தின் போக்கை
சித்திரை தொடக்கம் ஆண்டின் தொடக்கம்
இது கல்வியில் சிறந்தோர் கண்ட உண்மை

ஆரியப் பொய்க்கு வலு ஊட்டிடவே
தையைப் புகுத்தி தமிழ்ப் புத்தாண்டு என்கின்றார்
திருவள்ளுவன் பிறப்பை
தமிழ் ஆண்டுப் பிறப்பு என்கின்றார்
உச்சியில் சூரியன் பல்லை இளிக்கையில்
நிலவின் பொய் பிம்பம் தோன்றிடச் செய்கின்றார்

இதை வள்ளுவன் அறிந்தால்
வாள் கொண்டு போர் செய்வான் – அவன்
அப்பனின் வரலாற்றை மறைத்திட்ட இம்மதியற்றோர்
வீழும் வரை விழித்திருப்பான்

தமிழுக்கு தலை மகன் தொல்காப்பியன் என்றாலே
ஆயிரம் ஐந்திற்கு முந்தையது நம் தமிழ்
ஆயிரம் இரண்டில் வள்ளுவன் பிறந்தான்
இது கற்றறிந்த அறிஞர்கள் கூற்று

பெரும் தமிழின் வரலாற்றை குறைத்திட்ட
அஞ்ஞானிகள் கூட்டிடும் இம்மாநாட்டில்
ஆரியப் பொய் வலுப்படுமே – என்
அகத்தியன் நெற்றியின் பட்டைக்கு
மூடப்பழக்கம் என்ற பெயர் வருமே

தமிழன் முருகனின் பிறப்பை வாதிப்பர்
கம்பனின் ராமனின் பிறப்பை
கற்பனை என்றுரைப்பர்
பல மதங்களை மகிழ்விக்க
தமிழனின் தெய்வங்கள் பொய் என்று
நா கூசாமல் சொல்வர்

இவர் இதைத்தான் சொன்னார்
இவர் இதைத்தான் சொல்வார்
இவர்கள் கயமையை சொல்வது
என் உரிமை
இதை உணர்ந்து கொள்வது
இத்தேசத்தவர்களின் முதல் கடமை.

27 Replies to “தமிழை வளர்ப்பதாய் மாநாடு கூட்டிடுவாரோ?”

  1. இங்க பாருபா தமிள் இந்து! ஏப்ரல் 14 அன்னெக்கு, நா நம்ம மெட்ராஸ் பாஸைல கார்த்திகேயன வுட ஸூப்பரா எயுதி அனுப்புற ஒரு கவிஜய போட்று. ஆமா ஸொல்டேன். நீ மட்டும் போடல….அப்பாலிகா பேஜாரா பூடுவ ஸொல்டேன்..அஆங்!

    இன்னா வர்டா…

    மன்னாரு

  2. திரு. க.வ.கார்த்திகேயன் அவர்களுக்கு,
    அற்புதம்.

    நம் முன்னோர்களில் பலர் திராவிட இயக்கத்தை எதிர்த்தார்கள். ஆனால் தோல்விதான் கிடைத்தது. சில நேரங்களில் எதார்த்தத்தை ஒப்புக்கொள்வது
    கடினமாயினும் ஏற்றுக்கொண்டுதான் தீர வேண்டி இருக்கிறது.
    இன்றுள்ள நிலையில் நாம் செய்ய கூடியது, பொறுமையுடன் இருப்பது
    மட்டும்தான். “Let them grow out to non-existence”.

    திராவிட இயக்கத்தின் வேர் ஆடிக்கொண்டிருக்கிறது. கிளைகளுக்குள்
    நீ பெரிசா, நான் பெரிசா என்ற போட்டி மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. வேர் விழுந்தவுடன், திராவிட இயக்கம் குறைந்த
    பட்சம் நான்காக உடைய வாய்ப்பிருக்கிறது. (1)திராவிட கொள்கைகளை
    கொள்வதாக சில பெரிய தலைகள், (2) வட தமிழ்நாட்டின் வாரிசு
    (3)தென் தமிழ்நாட்டின் வாரிசு (4) ஆங்கிலம் பேசத்தெரிந்த ஒரு வாரிசுடன்
    தொலைக்காட்சி வாரிசும் சேர்ந்து டில்லியை அடிப்படையாக கொண்ட
    பிரிவு.
    இவற்றைத்தவிர அரசியலுக்கு வராத, அறக்கட்டளையை பாதுகாக்க ஒரு
    கொள்கை வாரிசு.

    இவர்களின் திராவிட பின்புலத்தை அடிப்படையாக கொண்டாலும்
    நாத்திகத்தை பேசாமல் இருக்கும் குழப்பமான எதிர்கட்சி.

    இந்துத்துவா இயக்கங்கள் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும். இரண்டு
    தலைமுறைகளுக்கு பிறகு கிடைக்க போகும் ஒரே ஒரு வாய்ப்பு. சினிமா
    மோகத்தில் உள்ள தமிழனை, நாத்திகத்தை ஒப்புக் கொள்ளாத ரிஷிகேஷுக்கு அடிக்கடி செல்லும் சினிமா மனிதனைக் கொண்டே கவர
    வேண்டும். அரசியலில் “Master Stroke”ஆகவும் இருக்க வேண்டும். திராவிட
    இயக்கங்களுக்கு மரண அடியையும் ஒரே நேரத்தில் கொடுக்க வேண்டும்.

    ஓட்டிற்கு பணம் வாங்கும் தமிழனை அவன் போக்கில்தான் கவர வேண்டும்.

    இது நடக்க வேண்டும் என்று “அந்த கம்பனின் இராமனையும்” “ஔவையின்
    முருகனையும்” அழுது அரற்றி வேண்டுகிறேன். கண் திறப்பார்களா!.

  3. நன்று! நல்லவர்கள் ஒன்று கூடினால் நல்லது நடக்கும்! தமிழ் ஹிந்துவின் கட்டுரைகள் சமாநியரிடமும் போய்ச்சேரும் வகை செய்தால் நலமாக இருக்குமே! ஏனெனில் மீடியா சரியான வழியில் இயங்கவில்லை! இதை மாற்ற முயற்சிகள் செய்ய வேண்டும்! நன்றி!

  4. Very nice. தமிழ் கவிதைக்கு ஆங்கில பாராட்டா? மிக அருமை.

  5. நல்ல வேலை நக்கீரர் யாரும் இல்லையே. சொற் பிழை, பொருள் பிழை, சந்தி பிழை அப்டின்னு கண்டுபிடிக்க. மெய்யாலுமே நல்லா இருக்கு. சூப்பர் அப்பு

  6. கவிதை வரிகள் உண்மையை உரைக்கின்றன.
    இறை மறுப்பு என்பதும் திராவிடம் என்பதும் வேறு வேறு என்பது என் கருத்து. இறை மறுப்பு கொள்கையை திராவிடம் என பலர் நினைகின்றனர். திராவிடம் என்பது ஒரு சமூகம் சார்ந்தது.

    சோமசுந்தரம்

  7. In the past decades most of Tamils started thinking that “odinal! odinal!! merina beach kadaisivarikkum Odinal!!” is the end of the Tamil, The Tamil language ends with this Parasakthi dialogue!!!

    Some of the words like “pulagangidham, kurukkusal, kuvalayam, enberayam” – they juggle these words in their writing and automatically become “Tamizhana Thalaivar”

    The Tamil was systematically driven out from Tamil society.
    (a) earlier we had “odhuvar” system in all the temples – it was purposely abandoned by dravidian parties instead they brought Tamil Archanai, it will have ” anjugame potri, ayya muthuvelare potri” no one is prefer these archanas in the temple, people regularly use the sanskrit archana – So Thirumurai and Divya prabandham were removed from the temple
    (b) Tamils Pride meidicine – SIddha – suddenly dravidian party brought the law banned the traditional practisioners. They should have regularised with some systems and methods instead they banned them. Now, they have Siddha medical college – but even they do not know the Nadi system – they practice only “allopathynadi” that is counting the pulses. Our system of Vata, Pitha and Kapha nadi even the professiors do not know..
    (c) In school books – we had Thirumurai, Divya prabandham, Ramayanam etc.. it was totally removed instead articles of useless writers are given as lesson for the students. If one get a chance to study the literature depth of Tamil then the interest will be developed automatically to study more and more. Hencce, the school books were also spoiled.
    (d) We have Tamil New year on April 14th, based on Surya manam, there was a compulsory holiday hence people were celeberating and visiting temples. These dravidian parties announced Pongal is new year. new year is different and festival is different, many time festival falls on inauspicious days. But Most of the time New year falls on the calculation based on Sun movement. Now, the factories, office and schools are opened on 14th april and people do not celeberate Pongal as new year as it falls on “kari naal” hence, the Tamil new year also out.

    The significan Tamizh symbols and identies were systematically removed by the dravidian parties and now they want to fool the people by conducting “Semmozhi manadu”

    Who will save the Tamils from these parties???

  8. திராவிடன், திராவிட நாகரிகம் என்று சொல்லிக்கொண்டு போலியாக திரியும்வரை தமிழன் ஒருபடிகூட முன்னேறமுடியாது. தமிழன், தமிழர் நாகாரீகம், தமிழர் கலைகள், தமிழ் மொழிவளம், தமிழரின் இந்துமத பங்களிப்பு, தமிழரின் பக்திமார்கம் என்று இந்தியர்களின் முன்னேற்றத்திற்கும் நாகரீகசெழுமைக்கும், ஆண்மிகஎழுச்சிக்கும் பெரும்பங்கு அளித்த நாடு தமிழ்நாடு என்பதை மறந்து மறைத்து தம் முன்னோர்களின் பங்களிப்பையும் பெருமையையும் உருதெரியாமல் குழிவெட்டிக்கொள்ளும் திராவிட மாயை கண்டிப்பாக பூண்டோடு ஒழிக்கப்படவேண்டும். பாமரனாய் விலங்குகளாய் பான்மைகெட்ட திராவிடபேய் ஒடுக்கப்படவேண்டும்.
    தமிழர்தம் பெருமையை உணர்ந்து தலைநிமிர்ந்து நிற்வேண்டும். பெரியார் புராணம் மிகைபடுத்தி பாடுவதை உடனேநிறுத்தவேண்டும். அவர் 10 பேரூடன் சேர்ந்த 11வது சழூக சீர்திருத்தவாதி என்பதுடன் நிறுத்தப்படவேண்டும்.
    பிராமிணனை பிடிக்கவில்லை பிராமிண புலவர்கள் இயற்றிய இலக்கியங்கள் பிடிக்கவில்லை சரி !! ஆண்மிகம் பிடிக்கவில்லை சமஸ்கிரதம் பிடிக்கவில்லை இந்துமதம் பிடிக்கவில்லை இவற்றின் தாக்கம் இல்லாத இலக்கியங்களே எதுவுமே இல்லை என்பதுதான் யதார்த உண்மை. பின்எதற்க்கு இந்த செம்மொழிமாநாடு ?
    உயிரோடும் உணர்வோடும் கலந்துவிட்ட ஒன்றை எத்தனைகாலம்தான் மாயை என்று அவதூறு சொல்லி ஏமாற்றிக்கொண்டிருப்பது. தாயையும் சேயையும் படைத்த கடவுளாலும் பிரிக்கமுடியாது. சத்தியம் நிச்சயம் ஓர்நாள் வெல்லும்.
    பெரியார் துதி பாடவா செயின்ட்தாமஸ் துதி பாடவா ஜி.யூ.போப் துதிபாடவா சோனியா துதி பாடவா ஆதிகிருஸ்துவம் துதி பாடவா லுமுரியா கண்டம் துதி பாடவா முகஸ்துதி பாடி கேட்கவா ஆண்டவா !!!!

  9. தமிழ் நாடு என்று கூறப்படும் பூகோளப் பரப்பில் வாழ்பவர்களில் பெரும்பான்மையினர் தமிழர்களாக இருந்திருக்கின்ற , இருக்கின்ற மற்றும் இருக்கும் சாத்தியக்கூறு அறவே கிடையாது என்பதற்கு, அப்பெரும்பாலான மக்களின் “ல” மற்றும் “ழ” எழுத்துக்களை சரியாக உச்சரிக்கமுடியாத இயலாமை ஒன்றே சான்று; மாநாடு கொண்டாடும் தமிழ்த் தலை எழுத்திற்கு, தமிழுடன் பிரிக்க முடியா வண்ணம் இணைந்து கிடக்கும் தெய்வ சாந்நித்யம் ஒரு மாட்டடி, மரண அடி; தன் ஒப்பாரிக்கு வராத கூட்டம், காஞ்சிபுரத்தில், கோயில் உற்சவங்களுக்கு அழைக்காமலேயே வருவதைக்கண்டு பொறாமைப்பட்ட இவர்களின் “அண்ணாத்தை” அண்ணாதுரை, இந்துக்களை கேவலப்படுத்தியது ஒரு சமூகத் தலைவருக்கு இல்லாமல் இருக்க வேண்டிய ஒழுக்கத்தை காண்பிக்கிறது. தமிழ்-இந்து, ஈ வே ராமசாமி நாயக்கரின் தமிழ் அலங்கோலத்தை “லை” “ளை” போன்றவற்றில் இருந்து அகற்றி முன்னரே இருந்தார் போல் கொண்டு வர வேண்டும்.

  10. ஆங்கிலேயன் புகுத்திய, கொடிய விஷத்தையும் விடக் கொடியதான சதிவலையில் சிக்கி, நம்மவரையே பிளவுபடுத்தும் மாபாதகத்தை செய்து வரும் அரசியல்வாதிகளுக்கு நல்லதொரு சவுக்கடி கொடுப்பது போல் அமைந்துள்ள அற்புதமான கவிதை! அதிகார துஷ்ப்ரயோகம் செய்து போலி அறிஞர்களைக்கொண்டு நடத்தப்பட உள்ள இந்த கூத்து நிச்சயம் தமிழ்ச் சமுதாயத்திற்கு தேவையில்லை.

  11. //தமிழ் நாடு என்று கூறப்படும் பூகோளப் பரப்பில் வாழ்பவர்களில் பெரும்பான்மையினர் தமிழர்களாக இருந்திருக்கின்ற , இருக்கின்ற மற்றும் இருக்கும் சாத்தியக்கூறு அறவே கிடையாது என்பதற்கு, அப்பெரும்பாலான மக்களின் “ல” மற்றும் “ழ” எழுத்துக்களை சரியாக உச்சரிக்கமுடியாத இயலாமை ஒன்றே சான்று;//
    தமிழ் நாட்டிலேயே ‘ல’ ‘ழ’ தகராறு இருக்கிறது. நம் கழகக்கண்மணிகளின் பேச்சைக் கேளுங்கள். ‘தமில் வால்க’ ‘அவர்கலே’ ‘சொன்னார்கல்’ ‘பல்களைகளகம்’ ‘தமிழரிணம்’ என்றெல்லாம் தமிலில் பொளந்து கட்டுவதைக் கேட்கலாம். சுட்டிக்காட்டினால் ‘வட்டார வளக்கு’ என்றும் ‘ழ’ ‘ள’ ‘ல’ ‘ந’ ‘ண’ இதெல்லாம் ஐயருங்க பாசை என்றும் சப்பைகட்டு கட்டுவார்கள்!

  12. வணக்கம்,
    அனைத்து விமர்சனங்களுக்கும் நன்றிகள் மற்றும் எனது இந்த கவிதையை வெளியிட்ட தமிழ் ஹிந்து .காம் ஆசிரியர் குழுவிற்கு மிக்க நன்றிகள். தமிழை வளர்ப்பதாய் மாநாடு கூட்டிடுவாரோ? இந்த கவிதையில்
    சொற்பிழை இலக்கணப் பிழையும் உள்ளதால் மனம் வருந்திய அனைவரிடமும் என்னை மன்னிக்க வேண்டி கேட்டுக்கொள்கிறேன்
    மற்றும் இந்த கவிதை நடை என்னை அறியாமலேயே பதிந்து விட்ட நடை நானும் என்னை சுற்றயுள்ளவர்களும் அறிந்த நடை இது கழக நடை என்பதை உணர்ந்து வருந்துகிறேன். எனினும் இந்த கவிதையின் பொருளில் உண்மை இருக்கிறது என்பதில் எனக்கு மகிழ்ச்சியே, தமிழ் ஹிந்து .காம் ஆசிரியர் குழுவிற்கு மேலும் ஒரு வேண்டுகோள் இந்த கவிதையை இந்த மாநாடு நடந்து முடியும் வரை இந்த இணைய தளத்திலேயே வைத்திருக்க வேண்டி கேட்டுக்கொள்கிறேன்
    நன்றிகளுடன்,
    க.வ. கார்த்திகேயன்.

    (edited and published)

  13. தமிழினத்திற்கே தலைவன் என்கிறாய்
    மறத்தமிழன் என்கிறாய்
    அதைஒருக்கூட்டம் ஆமாம்
    என்கிறது….
    தொல்காப்பியன்,வான்புகழ் வள்ளுவன்,
    கம்ம்பன்,இளங்கோ,உ.வே.சா.,பாரதி
    எனதமிழுக்கு தொண்டு செய்த
    இவர்களஎல்லம்யாராம்…
    கண்ணாடியில் அழகுகண்டு
    தன்மேல் காமுறும் பித்தை
    தலைமேல்கொண்டவரை
    தலைவனஎன்கிறாய்……..

  14. மா(க்கள்)நாட்டில் தமிழக அரசு சின்னத்தில் இருக்கும் கோபுரம், வள்ளுவரால் சாய்க்கப்படலாம்; வள்ளுவர் எப்படி தமிழ் பெயரில் உயிரை வாங்கும் கும்பலுக்கு அடியாளாகப் போகிறார்? வள்ளுவருக்கு
    விளம்பரம் அவர் தம் குறள்; குறட்பாக்கள் மட்டும் தான் வீம்புககேன்றே ‘விஷ்ணு சப்தமோ, ருத்ர சப்தமோ, சிவ சப்தமோ அல்லது இந்து மத வார்த்தைகளோ, அதிக அளவில் இல்லாத, ஆனால் வள்ளுவர் காலத்திலும் பெரும்பாலானவர்களின் மதமாக இருந்த, இந்து மதத்தை எவ்வளவு இருட்டடிப்பு செய்ய முடியுமோ அவ்வளவு இருட்டடிப்பு செய்த தமிழ் இலக்கியம்; எனவே, அப்படிப்பட்டதைத்தானே, தமிழ் பெயரால், உயிரை வாங்கும் கருவியாகக் கொள்ளமுடியும்.

  15. கவிதை நன்றாக உள்ளது. இது அவருக்கும் தெரியும். கண்ணாடி மாட்டி தூங்குவது போல் பாசாங்கு செய்பவர்களை எழுப்புவது கடினம். இன துவேஷத்தையும் மத துவேஷத்தையும் வளர்த்தே தன்னை வளர்துக்கொண்டவர்களுக்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும். பதில் சொல்லும்.

  16. செம்மொழி மாநாட்டில் செம்மொழித்தெய்வமான முருகன் புறக்கணிக்கப்படுவதைச் சிறப்பாக எடுத்துக்காட்டியுள்ளீர்கள். தற்போதைய சூழலில் நீங்கள் “திருமுருகாற்றுப்படை” பற்றி நல்லதொரு கட்டுரை எழுதினால் வரவேற்கப்படும் என நம்புகிறேன்.
    சங்கநூல்களில் முதன்மையாகக் காட்டப்படுவது திருமுருகாற்றுப்படை. இந்நூல் ‘முருகன் இல்லையேல் தமிழில்லை’ என்று நிருபிக்க நல்ல நூலாகும்.

  17. தமிழகத்தில் செம்மொழி மாநாடு நடைபெறவிருக்கும் சூழலில் யாழ்ப்பாணத்திலுள்ள நீர்வேலியூரில் கோயில் கொண்டிருக்கும் முருகன் மீது யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவனான தி.மயூரகிரிசர்மாவால் எழுதப்பெற்ற “நீர்வைக்கந்தன் பிள்ளைத்தமிழ்” என்ற ஒரு நூல் நீர்வேலி இந்து சமய அபிவிருத்திச்சங்கத்தால் வெளியிடப்படுகின்றது.

    மேற்படி நூலின் முகவுரையில் நூலாசிரியர் பின்வருமாறு கூறுகிறார்.

    “முருகன் அழகுத்தெய்வம். அவன் தமிழ்த்தெய்வம். ஆவன் செந்தமிழால் வைதாரையும் வாழவைக்கும் பிள்ளைப்பெருமான். செம்மொழிகள் என்று உலகம் போற்றும் சமஸ்கிருதமும் தமிழும் குமரனைப் போற்றித் துதிக்கின்றன. அதிலும் தமிழ் என்றால் முருகன். முருகன் என்றால் தமிழ்.

    முருகனுக்கு பன்னிரு தோள்கள். தமிழில் உயிர் எழுத்துக்கள் பன்னிரண்டு. அவனுக்குப் பதினெட்டுக் கண்கள். தமிழில் மெய்யெழுத்துக்கள் பதினெட்டு. அவனுக்கு ஆறுதிருமுகங்கள் உண்டு. தமிழில் இன எழுத்துக்கள் ஆறு. முருகனுடைய ஒரே பேராயுதம் வேல். தமிழிலும் ஒரு ஆயுதவெழுத்து உண்டு.

    ஆகவே தான் அருணகிரிநாதர் “செந்தில் வாழ் செந்தமிழ்ப் பெருமாளே” என்று பாடி மகிழ்கிறார். இன்று நாம் அவனை “செம்மொழிப்பெருமான்” என்று மட்டுமல்லாமல் “செம்மொழிகளின் இறைவன்” என்றும் அழைக்கலாம்.

    ஆகவே முருகனில்லையேல் தமிழில்லை. சங்கத்தமிழ் நூல்களில் முதலாவதாக போற்றப்படுவதும் இன்றும் மக்கள் மத்தியில் பெரிதும் புழக்கத்தில் இருப்பதுமான சிறப்புப் பெற்றது நக்கீரர் பெருமான் அருளிச் செய்த “திருமுருகாற்றுப்படை” என்பதும் இவ்விடத்தில் மனங்கொள்ள வேண்டியது.

    இவற்றால் முருகனை நமது இனத்துவேஷங்களுக்குள் உட்படுத்தி தமிழர்களுக்கு மட்டுமே சொந்தம் என்று கருதி விடக்கூடாது. நமக்குள் ஆரிய-திராவிட கட்டுக்கதையை புகுத்தி இந்துக்களை இரண்டாகப் பிரித்த சூழ்ச்சியாளர்களுக்கு இது துணையாகி விடும். உலகத்தின் பேரழகுத் தெய்வமான முருகன் ‘கதிரகம தெய்யோ’ ஆகவும் கார்த்திகேயனாகவும் ஸ்கந்தனாகவும் இருக்கிறான்.

    எனினும் ‘வள்ளிக்கு வாய்த்தவனே மயிலேறிய மாணிக்கமே’ என்று கந்தரலங்காரம் போற்றுமாப் போல தமிழ் வேடுவப்பெண்ணான வள்ளியை திருமணம் செய்து கொண்டதால் முருகன் தமிழரின் கடம்பமாலை தரித்த வேலனாக தமிழரின் உயிரிலும் உள்ளத்திலும் கலந்து “மாப்பிளைக்கடவுளாக” குறிஞ்சிநில குமரனாக விளங்குகிறான் எனலாம்……”

    இது தவிர மேலும் பல்வேறு இடங்களில் நூலாசிரியர் முருகன் செம்மொழியாகிய தமிழ்த் தெய்வம் என உறுதியாகக் கூறுகிறார். வயதில் இளையவரான இந்நூலாசிரியரின் கவிதைகள் ஆழமாகச் சிந்திக்கத்தக்கனவாயுள்ளன. உதாரணமாக கீழ் வரும் மேற்படி பிள்ளைத்தமிழில் ‘வருகைப்பருவம்’ சார்ந்த ஒரு பாடலை உதாரணமாகக் காட்டலாம்.

    “ எள்ளும் திறத்து அரக்கர் அழிய வருக தேறுதலில்
    எங்கள் உணர்வில் இருந்தினிக்கும் தேனே வருக
    தௌ;ளு தமிழர் பெறு காமதேவ வருக செம்மொழித்
    தமிழ்த் தேவே வருக அருணகிரி இறைவா வருக
    உள்ளும் காதலுடை அன்பர் ஆராவமுதே வருக
    ஒழியாக் கருணை முருகா வருக செம்வடமொழியும்
    வள்ளல் குமர எனப்போற்ற கோவே வருக வருகவே
    வயல் நிறை நீர்வை வேந்தே வருக வருகவே”

    தவிர சமஸ்கிருத மொழியறிவும் தமிழ்ப்பற்றுமுடையவரான ஆசிரியர் சிறுதேர்ப்பருவத்தில்
    “ தங்கத்தமிழ்த் தலைவா சிறுதேருருட்டியருளே- தமிழார் நீர்வை செய் தவமே சிறுதேருருட்டியருளே” என்று குழந்தை முருகனைப் பாடுகிறார்.

    இலங்கையிலிருந்து வெளிவந்திருக்கும் இந்நூலினூடாக செம்மொழிகளின் தெய்வமான முருகன் சிறப்பிக்கப்படுவதையும் முருகனில்லையேல் தமிழில்லை என்ற பேருண்மை வெளிப்படுத்தப்பட்டிருப்பதையும் நாமெல்லோரும் கவனிக்க வேண்டியிருக்கிறது.

    எம். முருகதாஸன்
    யாழ்ப்பாணம்

  18. திவ்ய பிரபந்தம் பற்றியும் திருமுறைகள் பற்றியும் சங்ககாலத்திலிருந்து இன்று வரை வந்துள்ள அதியற்புதமான பக்திப்பாசுரங்கள் பற்றியும் அவற்றிலெல்லாம் இறைவனுக்கும் தமிழுக்கும் இடையில் சொல்லப்பட்டுள்ள உறவு பற்றியும் இத்தருணத்தில் பதிவுகளை போன்றவற்றைப் படிக்கும் போது எண்ணத் தோன்றுகிறது. தி.மு.க செய்யும் இந்துவிரோத மாநாட்டுக்கு எதிராக நாம் “தெய்வத்தமிழ் மாநாடு” கூட்ட வேண்டும்.
    ர.பகீரதன் , சென்னை

  19. தெய்வத்தமிழ் மாநாடு நடத்துவது நல்ல திட்டம். ஆனால் யாருக்கும் எதிராகவல்ல. எல்லாம் வல்ல இறைவனுக்கும் தமிழுக்குமுள்ள தொடர்பை வெளிக்காட்ட.
    “தமிழ் பக்தியின் மொழி” என்பது இதனால் உறுதிப்படும். மொழிகளில் இலத்தீன் பிரெஞ்சு கிரேக்கம் போன்றவற்றை முறையே சட்டத்தின் மொழி பொருளாதார மொழி காதலின் மொழி என்றால் தமிழ் “பக்தியின் மொழி” என்பது அறிஞா; கருத்து. என் தகவலின் சில தவறுகளிருக்கலாம். ஆனால் தமிழ் பக்தியின் மொழி என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

    இலங்கைத்தமிழ் எழுத்தாளர்கள் இதையுணர்ந்தளவிற்கு நம்மவர்கள் உணர மறுக்கிறார்களோ?

  20. அற்புதம் நண்பா
    உனது கவிதை !!!!!!!

    ஒரு ஏழை விவசாயி விதை விதைத்தான் ஓகோ வென்று வளர்ந்தது
    அவன் வாங்கிய கடன் !!!!!!!!!

    இதை போல் 400 கோடி செலவை விவசாயத்துக்கு கொடுத்திருந்தால் அவர்களாவது நாட்டை( தமிழ் நாட்டை) முன்னேற செய்திருப்பார்கள்!!!!!!!!

  21. அன்பு நண்பர்களே
    வணக்கம்

    தமிழ் வளர்க்க மாநாடு
    தமிழ் தழைக்க மாநாடு
    தமிழ் செழிக்க மாநாடு
    சரிதான் எனினும்
    தங்கத்தமிழன் தான் செழிக்க
    இங்கே எது நாடு?

    செம்மொழியாம் எங்கள்
    தமிழ் மொழிதான்
    செம்மரியினமும் எம்
    தமிழினம்தான்!

    வீதிய்ல்லாம் தமிழ் ஓசை
    கேட்க ஒரு மாநாடு,
    தேதி மட்டும் சூன் மாதம்
    தேடி வைத்து சொன்னாரே?

    ஜூ என்றால் வட மொழியாம்
    சூன் என்றெழுதி வைத்து
    ஆனியை காற்றில் விட்டு
    அன்னையே தமிழே என்றார்..

  22. வணக்கம்

    நண்பரே உமது கவிதை நடைகண்டு நானும் கவிதை மறுமொழி எழுதி விட்டேன், மன்னிக்கவும்.

    பாரதியின் வரிகள் சொல்வது அனைவரும் அறிந்ததே!
    அவன் வரிசையில் முதலில் வருவது கம்பனே.( கம்பன் போல் வள்ளுவன் போல் இளங்கோவைப் போல்)

    ஆனால் இன்று இங்கே தூக்கி பிடித்து இருப்பது வள்ளுவரை!

    ஏன்?

    கம்பன் ராமாயணம் எழுதி பக்தியை , இந்துக்களை தூக்கி வைத்தார் பிறகு எப்படி அவரை தமிழனாக மதிக்க முடியும்?

    பேய் அரசாண்டால்…..பிணம் தின்னும் சாத்திரமே.

  23. வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி
    வாழிய வாழியவே!
    வான மளந்த தனைத்து மளந்திடும்
    வண்மொழி வாழியவே!
    ஏழ்கடல் வைப்பினுந் தன்மணம் வீசி
    இசைகொண்டு வாழியவே!
    எங்கள் தமிழ்மொழி எங்கள் தமிழ்மொழி
    என்றென்றும் வாழியவே!
    சூழ்கலி நீங்கத் தமிழ்மொழி ஓங்கத்
    துலங்குக வையகமே!
    தொல்லை வினைதரு தொல்லை அகன்று
    சுடர்க தமிழ்நாடே!
    வாழ்க தமிழ்மொழி வாழ்க தமிழ்மொழி
    வாழ்க தமிழ்மொழியே!
    வானம் அறிந்த தனைத்தும் அறிந்து
    வளர்மொழி வாழியவே!

    இது பாரதி எழுதிய தமிழ் மொழி வாழ்த்து. ஆனால் தமிழக அரசு தேடி ஒரு பாடலை மனோன்மணியம் சுந்தரனார் எழுதிய பாடலை தமிழ் மொழி வாழ்த்தாக அறிவித்தது. பாரதியின் பாடலை ஏற்காமைக்கு என்ன காரணம்? முக்கியத்துவம் தமிழுக்கா, எழுதியவருக்கா? அல்லது அதை அமல் படுத்தியவருக்கா? சிந்தியுங்கள்.

  24. பாரதி ஏன் தகுதி அற்றவர் என்று ஒதுக்கப் பட்டார் என்றால் முதலில் அவர் ஒரு தேசியவாதி
    மூச்சுக்கு மூச்சு ஒரு பக்கம் தமிழ், தமிழ் என்று சொன்னாலும் இன்னொரு பக்கம் தான் ஒரு பாரதீயன் என்பதை மறக்கவில்லை
    ‘பாரத நாடு பழம் பெரும் நாடு நீரதன் புதல்வர் இந்நினைவகற்றாதீ்ர்’
    ‘ பாரத தேசமென்று பெயர்ச் சொல்லுவார் மிடிப் பயம் கொள்ளுவார்’
    என்று நம் தேசத்தை பாடியிருக்கிறார்
    அதுதானே கருணாநிதிக்குப் பிடிக்காது
    இரண்டாவது அவர் அந்தணர் என்பது.
    அது கூட இப்போது பாரதி இருந்து வாலி,கமல் போன்ற காக்கை கூட்டத்தில் இருந்திருந்தால் ஒரு வேளை….

    இரா.ஸ்ரீதரன்

  25. வணக்கம்,

    பாரதி என்றவுடன் அவன் நெற்றித்திலகமும், அவன் எழுத்தில் மிளிர்ந்த உண்மை தேசபக்தியும் தான் நினைவிற்கு வரும். அதை புரிந்து கொள்வதற்கும் ஏற்றுக்கொள்வதற்கும் தமிழ் ஞானமும் வேண்டும் உண்மை தேசபக்தியும் வேண்டும் தமிழ் ஞானம் அவனின் நெற்றிதிலகதிற்கு பதில் சொல்லும் அவனின் ஒவ்வொரு எழுதும் உண்மை தேசபக்தியை அறிவுறுத்தும். பாரதியால் வலியுறுத்தப்பட தீண்டாமை ஒழிப்பை ஏற்றுகொள்ள ஜாதி வோட்டு வங்கியும் அந்நிய மத வோட்டு வங்கியும் வைத்து வளர்த்து ஆட்சிசெய்யும் திரு. கருணாநிதி போன்றவர்களால் இயலாத காரியம். அவன் நெற்றியில் திலகம் இல்லாது இருந்திருந்தால் அவன் உண்மை தேச பக்தியை உரைக்காதிருந்திருந்தால் பாரதியை இருட்டடிப்பு செய்யாமலாவது விட்டிருப்பார்கள்.

    மேலும் ஒரு செய்தி பாரதி ஒரு அந்தணன் அதனால்தான் சாதிகள் இல்லையடி பாப்பா என்றான் நமது வேதங்களை கற்றுதேர்ந்ததால் தான் அவன் அந்தணன் ஆனான் சாதிகள் இல்லை என்றும் கூறினான். அவன் காலத்தில் அந்தணனுக்கு பிறந்தும் அந்தணனாய் வாழாதவர்களை கடுமையாக விமர்சித்தான். பெரியார், கருணாநிதி போன்ற பிரிவினையில் தன் குலம் செழிக்கும் அரசியல் கட்சி தலைவர்களால் ஒரு அந்தணனை ஏற்றுகொள்ள முடிவதில்லை.

    அன்புடன்,
    க. வ. கார்த்திகேயன்.

  26. தமிழ் வளர்க!!

    https://www.dinamalar.com/News_Detail.asp?Id=72473
    “தமிழ் குடிமகன்’ ஆக்குங்க : முதல்வருக்கு கோரிக்கை
    ஆகஸ்ட் 28,2010,23:20 IST
    கோவையில் செம்மொழி மாநாடு நடந்து முடிந்த, “உற்சாகம்’ இன்னும் அங்கு குறையவில்லை. இதை நிரூபிப்பது போல், கோவையில் இருந்து ஒரு வாசகர், முதல்வருக்கு முகவரியிட்டு, நமக்கு அனுப்பியுள்ள, “இ-மெயில்’ கடிதம்: ஐயா, எல்லாரும் வியக்கும்படி, எங்க ஊரில செம்மொழி மாநாடு நடத்துனீங்க… எங்கும் தமிழ்… எதிலும் தமிழ்னு மாநாட்டில நீங்க முழக்கமிட்டீங்க… ஆனா, தமிழகத்தில ஒரு இடத்தில மட்டும், சுத்தமா தமிழ் இல்லாம, முழுக்க, முழுக்க இங்கிலீஸ்தான் ஆக்கிரமிச்சு இருக்கு. நீங்கதான் இந்த விஷயத்தில தலையிட்டு, ஒரு நல்ல முடிவா எடுத்து, தமிழ்பெயர் சூட்ட நடவடிக்கை எடுக்கணும்.
    தமிழுக்கு மரியாதை இல்லாத அந்த இடம், “டாஸ்மாக்…’ அங்க இருக்கிற சரக்குக்கு எல்லாம், தமிழ்லே பேர் வைச்சு சாதாரண, “குடி’மக்களை, “தமிழ் குடிமக்களாக’ மாற்ற வேண்டுகிறேன். அதுக்காக, நானே சில பெயர்களை யோசிச்சு வைச்சிருக்கேன். இதை அப்படியே ஏத்துக்கணும்னு அவசியமில்லை. நீங்க வேணும்னா, இதுக்குன்னு தமிழ் புலவர்களைக் கொண்ட ஒரு குழு அமைச்சு, நல்ல, நல்ல பெயரா வையுங்க…
    அவர் அனுப்பியுள்ள பட்டியல்:
    சரக்கு பெயர் தமிழ் பெயர்
    1. மிடாஸ் கோல்டு – தங்கமகன்
    2. நெப்போலியன் – ராஜராஜசோழன்
    3. கோல்கொண்டா – கங்கை கொண்டான்
    4. வின்டேஜ் – அறுவடைத் தீர்த்தம்
    5. ஆபிசர்ஸ் சாய்ஸ் – அதிகாரிகள் விருப்பம்
    6. சிக்னேச்சர் – கையொப்பம்
    7. ஓல்டு மங் – மகா முனி
    8. ஓல்டு காஸ்க் – பீப்பாய் சரக்கு
    9. கேப்டன் – தனிச் சரக்கு
    10. ஜானிவாக்கர் – வெளியே வா
    11. ஓட்கா – சீமைத்தண்ணி
    12. கார்டினல் – பொதுக்குழு
    13. மானிட்டர் – உளவுத்துறை
    14. பேக் பைப்பர் – “ஊத்து’க்காரன்
    15. சீசர் – கரிகாலன்
    16. மெக்டவல் – “மட்டை’ வீரன்
    17. டிரிபிள் கிரவுன் – மூணு தலை
    18. மேன்சன் ஹவுஸ் – உறுப்பினர் விடுதி
    19. ராயல் சேலன்ஞ் – நாற்பதும் நமதே
    20. ஹேவார்ட்ஸ் 5000 – ஓட்டுக்கு 5000
    21. ஜிங்காரோ – சிங்காரி சரக்கு
    22. கோல்டன் ஈகிள் – தங்க கழுகு
    23. கிங் பிஷர் – மீன்கொத்தி
    24. மார்பியூஸ் – மயக்கி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *