ஆர்.எஸ்.எஸ் அகில பாரத தலைவருடன் ஒரு மாலைநேர சந்திப்பு

rss-flood-reliefராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் (ஆர்.எஸ்.எஸ்) என்னும் ஹிந்து அமைப்பே உலகத்தின் ஆகப் பெரிய தன்னார்வு சேவை நிறுவனமாகும் (Voluntary service organization). போர்க்களமாகட்டும், இயற்கை சீற்றமாகட்டும் அங்கே எவ்வித வேறுபாடும் இல்லாமல் துன்புறுவோருக்கு ஸ்வயம்சேவகர்கள் சேவை செய்வார்கள். ’சங்க பரிவாரம்’ என அழைக்கப்படும் சங்க குடும்பம் இன்று தேசிய வாழ்க்கையின் பலதுறைகளில் தொண்டாற்றுகிறது. ஹிந்து ஒற்றுமை, சாதிய எதிர்ப்பு, சமுதாய நல்லிணக்கம், கிராம முன்னேற்றம், தேசிய ஒருமைப்பாடு என சங்கம் செயல்படாத துறையே இல்லை எனலாம். இந்த அமைப்பின் அகில பாரத தலைவர் ‘சர்சங்கசாலக்’ என்று அழைக்கப் படுகிறார்.

சமீபத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஆறாவது அகில பாரத தலைவராக அண்மையில் பொறுப்பேற்றிருக்கும் திரு. மோகன்ஜி பாகவத் சென்னை வந்திருந்தார். தமது இடைவெளியற்ற நிகழ்ச்சி நிரல்களுக்கு இடையே விஜயபாரதம் வார இதழின் ஆசிரியர் நா.சடகோபன் மற்றும் தமிழ்ஹிந்து.காம் சார்பில் அரவிந்தன் நீலகண்டன் ஆகியோர் அவருடன் ஒரு கலந்துரையாடலில் ஈடுபட நேரம் அளித்தார். ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சென்னை தலைமையகத்தில் 15-மே-2010 அன்று நடந்த கலந்துரையாடலில் இருந்து சில பகுதிகள் –

நீங்கள் சர்சங்கசாலக்காக பொறுப்பேற்றதும் முதன் முறையாக சென்ற இடம் டாக்டர் அம்பேத்கரின் தீக்ஷாபூமியாக அமைந்திருந்தது…

அது மிகவும் இயல்பான விஷயம்தான். பாபாசாகேப் அம்பேத்கர் சங்கத்தின் அதிகாரிகள் பயிற்சி முகாமுக்கு வருகை தந்திருக்கிறார். அங்கு சாதியம் சற்றும் இல்லாத நிலையைப் பாராட்டியிருக்கிறார். அதே போல, அம்பேத்கர் பௌத்த மார்க்கத்துக்கு மாறிய போது குருஜி கோல்வல்கர் (ஆர்.எஸ்.எஸ்ஸின் இரண்டாவது தலைவர்) “சங்கரரின் கூர்த்த மதியும் புத்தரின் கருணை நிறைந்த இதயமும் நமக்கு தேவை” என்று தேச மக்களுக்கு சுவாமி விவேகானந்தர் கூறியதை நினைவுறுத்தினார். மேலும் அம்பேத்கரின் தேர்தல் ஏஜெண்டாக பணிபுரிந்தவர் திரு.தத்தோபந்த் தெங்கடி (பாரதிய மஸ்தூர் சங்கத்தின் நிறுவனர்) ஆவார்.

ஆனால் சிலர் அம்பேத்கரை ஹிந்துமத விரோதியாக பார்க்கிறார்களே…

இதோ பாருங்கள்… அம்பேத்கருக்கு சங்க ஹிந்துக்களின் நல்ல நோக்கங்கள் குறித்து தெளிவான புரிதல் இருந்தது. ஆனால் அதே நேரத்தில் அக்கால கட்டத்தில் பெருமளவு ஹிந்து சமுதாயம் தலித்துகளுக்கு உரிய நீதியை கொடுக்கும் மனநிலையில் இல்லை என்பதையும் அவர் புரிந்திருந்தார். இந்த நிலையை சங்கம் நிச்சயமாக காலப் போக்கில் மாற்றிவிடும், சாதியமற்ற ஹிந்து சமுதாயத்தை அது உருவாக்கும் என்பதில் அவருக்கு ஐயமில்லை. ஆனால் அன்றைய காலகட்டத்தில் சங்கத்துக்கு அதைச் செய்யக் கூடிய அதிகாரமோ சக்தியோ இல்லை என்பதை அவர் தெரிந்து வைத்திருந்தார். சங்கம் அதைச் செய்து முடிக்கும் காலம் வரை தலித்துகள் பொறுமையாக அநீதிகளை சகித்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை என அவர் கருதினார். எனவே அவர் பௌத்த தருமத்துக்கு மாறினார்.

mohanbhagwat_jpg_1089fஆனால் அவர் ஏன் பௌத்த தருமத்துக்கு மாறினார்? ஏனென்றால் அது பாரத கலாச்சாரத்தில் வேர் கொண்டிருந்த ஒரு தருமம். அதனை ஹிந்து பண்பாட்டின் பிரிக்கமுடியாத அங்கமாக அம்பேத்கர் கருதினார். மேலும் தாழ்த்தப்பட்ட மக்கள் அன்னிய மதங்களுக்கும் மார்க்சியம் போன்ற அன்னிய சித்தாந்தங்களுக்கும் ஈர்க்கப்படாமலிருப்பதை நிச்சயப்படுத்திக் கொள்ள அவர் விரும்பினார். திரு தத்தோபந்த் தெங்கடியிடம் அம்பேத்கர் வெளிப்படையாகவே கூறினார்: “கோல்வால்கர் தாழ்த்தப்படாத மக்களை மார்க்சியம் ஈர்த்துவிடாமல் பார்த்துக் கொள்கிறார். நான் நம் சமுதாயத்தின் தாழ்த்தப்பட்ட மக்களை மார்க்சியம் ஈர்த்துவிடாமல் பெரும் தடைச்சுவராக இருக்கிறேன்”.  (ஆனால் நாம் குருஜி கோல்வால்கரை சமுதாயத்தின் ஒரு குறிப்பிட்ட பிரிவு மக்களுக்காக பாடுபட்டவராக பார்க்கவில்லை. அவர் ஹிந்து சமுதாயத்தின் அனைத்து பிரிவு மக்களுக்குமாக பாடுபட்டவர் என்றே கருதுகிறோம், அதுவே உண்மையும் கூட)

இந்தியா டுடே பத்திரிகையில் நீங்கள் உங்கள் உரைகளில் மகாத்மா காந்தியை பாராட்டியதாக செய்தி வந்தது…

ஓ… இதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது? சங்கத்தில் காந்திஜி குறித்து ‘கண்டுபிடித்தது’ நான் இல்லை. குருஜி கோல்வல்கர் மகாத்மா காந்தி குறித்து ஒரு பெரிய பேருரையே நிகழ்த்தியுள்ளார். நான் பிராந்த பிரச்சாரக்காக (முழுநேர ஊழியர்) ஆவதற்கு முன்னரே ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் காலை பிரார்த்தனையில் மகாத்மா காந்தியின் பெயர் இடம் பெற்றுவிட்டது. கிராம முன்னேற்றம், சுதேசி மற்றும் பசுப் பாதுகாப்பு ஆகிய விஷயங்களில் காந்திஜியின் பார்வையும் சங்க சிந்தனையும் செயல்பாடும் ஒத்திசைவு கொண்டதாக உள்ளது. எனவே எவருக்காவது நான் காந்திஜி குறித்து உரையாற்றியது ஆச்சரியம் தந்ததென்றால், அது அவர்களுக்கு சங்கத்தின் வரலாற்றைக் குறித்தும் தத்துவத்தைக் குறித்தும் உள்ள அறியாமையையேக் காட்டுகிறது.

அம்பேத்கரையும் காந்தியையும் விரோதியாக காட்டக்கூடியவர்கள் சிலர் இருக்கிறார்கள். இந்த இரண்டு தலைவர்களையும் நீங்கள் எவ்விதம் சமரசத்துடன் நோக்குகிறீர்கள்?

gandhi_and_ambedkarஅனைத்து மாபெரும் தேசிய தலைவர்களுக்குமே அவர்களிடையே (கருத்து/நிலைப்பாட்டு) வேறுபாடுகள் இருக்கக் கூடும். ஆனால் அவர்கள் அனைவருமே சமுதாயத்தின் நலனையையும் தேசத்தின் நலனையுமே மிகவும் மதித்தவர்கள். இந்த பார்வையில் நாம் அவர்களை அணுகும் போது ஒற்றுமைக்கான பல அம்சங்களை, அவர்களிடையே ஒத்திசைவு கொண்ட பல விஷயங்களை நாம் காணமுடியும். நம்முடைய  தேச நிர்மாணப் பணிக்கு அவர்களிடமிருந்து நல்ல பாடங்களையும் கற்றுக்கொள்ள முடியும். இதுதான் எப்போதுமே தேசத்தலைவர்களைப் பொறுத்தவரையில் சங்கத்தின் அணுகுமுறையாக அமைந்திருக்கிறது.

தலித்துகளை தேசிய நீரோட்டத்திலிருந்தும் ஹிந்து பண்பாட்டிலிருந்தும் அப்புறப்படுத்த ஒரு வலிமையான இயக்கம் செயல்படுகிறது. இதனை எதிர்கொள்ள சங்கம் என்ன செய்கிறது?

மீனாட்சிபுரம் மதமாற்றக் காலம் முதலே சங்கம் தமிழ்நாட்டின் தலித்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு தனிக் கவனம் செலுத்தி வருகிறது. சங்க ஷாகாக்கள் தோன்றிய பிறகு தீண்டாமை மறைந்து விட்ட பல கிராமங்கள் தமிழ்நாட்டில் உள்ளன. இன்னும் சொன்னால், அவ்வாறு சங்க ஷாகாக்களால் தீண்டாமையும் சாதியமும் அகன்று விட்ட இரண்டு கிராமங்களுக்கு அண்மையில்  “சமூக நல்லிணக்கம் கொண்ட கிராமங்கள்” என்ற தமிழ்நாடு அரசு விருது கூட கிடைத்தது.  தலித்துகளுக்கும் தலித் அல்லாதவர்களுக்கும் மோதல் ஏற்பட்ட இடங்களில் சமாதான முயற்சிகள் செய்ய சங்க ஸ்வயம் சேவகர்கள் அழைக்கப் பட்டுள்ளனர். தென்னகத்தில் தமிழ்நாட்டில் மட்டுமல்லாது கேரளத்திலும் சங்கம் தலித்துகளின் மேம்பாட்டுக்கு தீவிரமாக செயல்படுகிறது. அண்மையில் குருவாயூர் கோவிலில் கூட சங்கம் இதை செய்தது.

சங்கத்துக்கு தெளிவான பார்வை இருக்கிறது. ஒவ்வொரு கிராமத்திலும் இருக்கும் நீர்வளங்கள், வாழ்விடங்கள், வழிபாட்டுத் தலங்கள், சுகாதார அமைப்புகள், மயானங்கள் ஆகியவை அனைத்து ஹிந்துக்களுக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும். இப்பார்வையை செயல்படுத்த நம் சக்திக்கு தகுந்த அளவில் எல்லா இடங்களிலும் நாம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

janmashtami_15_jpg_595g
Women dressing her child as Krishna on Janmashtami, Hyderabad.

நீங்கள் எப்போதும் ஹிந்துத்துவம், ஹிந்து தன்மை குறித்து பேசுகிறீர்கள். ஹிந்து என்று நீங்கள் யாரை வரையறை செய்கிறீர்கள்? மத சிறுபான்மையினர் ஹிந்துக்களா ஹிந்துக்கள் அல்லாதவரா?

இந்த தேசத்தைத் தங்கள் மூதாதையர் தேசமாகவும் புண்ணியபூமியாகவும் கருதும் அனைவரும் ஹிந்துக்களே. இந்த தேசம் போற்றி பாதுகாத்து வந்த தார்மிக மதிப்பீடுகளையும்,  பண்பாட்டையும் பின்பற்றும் எவரும், அவர்களது வழிபாட்டு முறைகள் எவையாக இருந்தாலும் ஹிந்துக்களே. தங்களைத் தாங்களே மதச்சிறுபான்மையினர் என அன்னியப்படுத்திக் கொண்டவர்கள் தங்கள் சுய அடையாளத்தைக் குறித்த இந்த உண்மையை உணர்ந்து கொள்ள வேண்டும். அவர்கள் எல்லோரும் பாபரின் வழித்தோன்றல்களோ, டேவிட்டின் சந்ததிகளோ அல்ல. அவர்கள் ராமரின், கிருஷ்ணரின், பரதனின் சந்ததிகள்தாம். இந்த மூன்று விஷயங்களும் யாருக்கு பொருந்துகிறதோ அவர்கள் அனைவரும் தேசிய உணர்தலில் ஹிந்துக்களே ஆவர்.

தற்போது சுற்றுச்சூழல் பிரச்சினைகள் முக்கியமானவையாக உள்ளன. சங்கம் சுற்றுப்புற சூழல் பிரச்சினைகள் குறித்து, குறிப்பாக உலக வெப்பமயமாதல் போன்ற விஷயங்களில் என்ன நிலைப்பாடு கொண்டதாக உள்ளது?

நமது பண்பாடும், தார்மிக மதிப்பீடுகளும், நம் வாழ்க்கை முறையும் சுற்றுப்புறச் சூழல் உணர்வு கொண்டவையாக, சுற்றுப்புற சூழலை நன்றாக வைத்துக்கொள்ள உகந்தவையாகவே உள்ளன. நாம் இயற்கையை வணங்குபவர்கள். அனைத்து இயற்கையும் தெய்வீகத்தால் நிரம்பியது என்பது நமது தரிசனம். பசு பாதுகாப்பு இந்த இயற்கையின் இறைத்தன்மையுடன் இணைந்ததே ஆகும். சுற்றுச்சூழல் குறித்த ஒரு தெளிவான நல்ல  நிலைப்பாடு என்பது அறிவியல் பூர்வமானதாக இருக்க வேண்டும். அதற்கு நமக்கு பரிசோதனைகளின் அடிப்படையிலான மாதிரிகள் (models) தேவை. சங்கமும் சங்கம் சார்ந்த அமைப்புகளும் அத்தகைய பரிசோதனைகளை தேசம் முழுவதும் செய்து வருகிறார்கள்.

பாரதம் போன்ற பரந்து விரிந்த, பன்மையான சூழ்நிலைகள் வேறுபட்ட தட்பவெப்ப சூழல்கள் இருக்கும் தேசத்தில் ஒரே மாதிரியை எல்லா இடங்களுக்கும் பொருத்திவிட முடியாது. அந்தந்த பிராந்தியங்களில் செய்யப்பட்ட பரிசோதனைகளின் அடிப்படையில் அந்தந்த இடங்களுக்கு சூழலியல் நிலைபாடுகள் உருவாக்கப்பட வேண்டும். நான் சொன்னது போல பல இடங்களில் பரிசோதனைகள் நடைபெறுகின்றன. சித்திரகூடத்தில், கேரளாவிலும் கர்நாடகாவிலும் பல கிராமங்களில் இவை நடைபெறுகின்றன. இப்பரிசோதனைகள் மூலம் கிடைக்கும் உள்ளீடுகள் (inputs) அடிப்படையில் பிராந்திய சூழலியலுக்கு உகந்த மாதிரிகள் உருவாக்கப்பட்டு அதன் விளைவாக உருவாக்கப்படும் சூழலியல் பாதுகாப்பு நிலைபாடுகள் தெளிவான நல்ல தன்மை கொண்டவையாகவும் வளங்குன்றா வளர்ச்சிக்கு (sustainable development) துணை செய்பவையாகவும் அமையும்.

அறிவியல் ஆன்மிகம் இவற்றைப் பொறுத்தவரையில் பாரதத்துக்கு உலகப் பண்பாடுகளின் மத்தியில் ஒரு தனிச்சிறப்பான இடம் இருக்கிறது. இந்த விஷயத்தில் அறிவியல், ஆன்மிகம், பாரதப் பண்பாடு இவற்றின் ஒத்திசைவு குறித்து சங்கத்தின் பார்வை என்னவாக இருக்கிறது?

ஹிந்துக்களைப் பொறுத்தவரையில் அறிவியலும் ஆன்மிகமும் ஒன்றுக்கொன்று எதிரானவை அல்ல. அவை ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள். உபநிடதம் கூறுகிறது – “(அக-வளர்ச்சியை புறக்கணித்து) புற-அறிவியலை மட்டுமே தேடுவோர் பெரும் இருளில் விழுவார்கள். ஆனால் புற-அறிவியலை புறக்கணித்து அகஞானத்தை மட்டுமே நாடுவோரோ அதைவிடப் பெரிய காரிருளில் மூழ்குவர். ”

சமுதாய வாழ்க்கைக்கு கூறப்பட்டதாகும் இது. வீடு பேற்றை மட்டுமே நாடுவோருக்கு, மற்ற புருஷார்த்தங்களான பொருளிலும் இன்பத்திலும் நாட்டமில்லாதவர்களுக்கு (ஆத்மார்த்த வித்யா எனப்படும்) அக ஞானம் மட்டுமே போதுமானது. ஆனால் சமுதாயத்தில் வாழ்பவர்களுக்கு அப்படியல்ல. ஆனால் அவர்களுக்கும் இறுதி நோக்கம் வீடுபேறு எனும் மோட்சம் எனும் முக்திதான். எனவே காம-அர்த்த தேடலுடன் மோட்சத்தையும் அவர்கள் அடைவதற்கான ஒரு ஒழுங்குபடுத்தும் தத்துவமாக தர்மம் அமைகிறது.

bharat_mata_abanindranath
Bharatmata, the famed painting by Abanindranath Tagore

பிரித்தே பார்க்கும் தன்மை கொண்ட மேற்கத்திய பண்பாடு போன்று இல்லாமல், ஒன்றுப்படுத்திப் பார்க்கும்  இத்தகைய  நமது பார்வையே அறிவியல் தொழில்நுட்பம் குறித்த ஒரு முழுமையான அறிதலை நமக்குத் தந்துள்ளது. இதுதான் ஹிந்து தத்துவம். உலகம் உய்வடைய இதுதான் சரியான அணுகுமுறை.

ஆனால் உலகம் இதனைக் கேட்க, இந்த பார்வையை ஏற்றுக்கொள்ள, ஹிந்துக்கள் சக்தி பெற வேண்டும். ஏனென்றால், சக்தி உடையவர்களின் குரல்தான் மதிக்கப்படும். என்னதான் உயர்ந்த தத்துவம் இருந்தாலும் நடைமுறையில் அதன் விளைவுகள் தெரிந்தால்தான் உலகம் அதனை ஏற்கும். நம் தேசம் உலக நலத்தைப் பேணும் அறிவியலாளர்களை அதிக அளவில் உருவாக்கவேண்டும். இவ்வாறு ஹிந்து தத்துவத்தை நாம் நடைமுறைப்படுத்த வேண்டும். அப்படி நடைமுறைப்படுத்தினால்தான், ஹிந்து சமுதாயம் சக்தியுடன் ஆரோக்கியமான சமுதாயமாக விளங்கினால்தான் பாரத அன்னையின் குரல் உலகத்தில் ஓங்கி ஒலிக்கும். அப்போதுதான் அவள் ஜகத்குருவாக முடியும். ஆகவே அத்தகைய வலிமை மிக்க ஹிந்து சமுதாயத்தை உருவாக்க நாம் ஒவ்வொருவரும் உழைக்க வேண்டும்.

(இந்தக் கலந்துரையாடலின் ஆங்கில வடிவத்தை  இங்கே தரவிறக்கம் செய்து கொள்ளலாம்)

27 Replies to “ஆர்.எஸ்.எஸ் அகில பாரத தலைவருடன் ஒரு மாலைநேர சந்திப்பு”

  1. இந்தப் பேட்டி வெளிப்படுத்தும் ஆர்.எஸ்.எஸ் மற்ற ஊடகங்களால் எங்களுக்கு அறிமுகப்படும் ஆர்.எஸ்.எஸ்ஸிலிருந்து முற்றிலும் எதிரானதாக இருக்கிறது.

    உங்களை நம்புவதா? அவர்களை நம்புவதா?

    மோகன் பாகவத் கம்பீரமான ஆளுமை என்பதை மட்டும் உடனடியாக ஏற்றுக் கொள்ள முடிகிறது.

  2. ஊடகங்களால் திரிக்கப்பட்டே வெளிப்பட்டிருக்கிற ஆர்.எஸ்.எஸ்ஸின் தோற்றம் தமிழ் இந்துவால் சரி செய்யப்பட்டிருக்கிறது.

    இந்தியாவின் ஒரே முற்போக்கு இயக்கமாக ஆர்.எஸ்.எஸ் மோகன் பகத்தின் வார்த்தைகளில் வெளிப்படுகிறது.

    வாழ்த்துக்கள்.

    தமிழ் இந்துவின் பணி தமிழ் நாட்டில் ஈடு செய்யமுடியாதது.

  3. ஊடகங்களும் அரசியல் கட்சிகளும் (காங்கிரஸ், திமுக இன்னபிற) ஆர் எஸ் எஸ் ஐ ஒரு தீவிரவாத இயக்கமாக சித்தரிக்கிறது. இதை ஆர் எஸ் எஸ் எப்படி எதிர்கொள்கிறது? எப்படி ஊடகங்களின் மாயையை முறியடிக்கிறது?

  4. ஆர் எஸ் எஸ் இயக்கத்தைப் பற்றி மிகச் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டுமென்றால் அந்த இயக்கத்தில் சிறிது காலம் தொண்டாற்றினால் மட்டும்தான் புரிந்து கொள்ளமுடியும். ஏனெனில் ஆர்எஸ்எஸ் இயக்கத்துடன் ஒப்பிடுவதற்கு வேறு எந்த ஒரு இயக்கமும் நாட்டில் இல்லை. இன்று நாட்டைப் பற்றி மட்டுமே சிந்தித்து நாட்டிற்க்காக வாழ்ந்திட வேண்டும் என்று தொண்டர்களுக்கு வலியுறுத்தி வருகின்ற ஒரே இயக்கம் ஆர்எஸ்எஸ். எவ்வித பாகுபாடும் இல்லாத ஒரே தேசிய இயக்கம் ஆர்எஸ்எஸ் மட்டும்தான் என்பது மிகையல்ல. மோகன் பாகவத் மட்டுமல்ல ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் இருக்கின்ற எல்லா தலைவர்களும் இவரைப் போன்றுதான் இருந்துள்ளனர். அவர்கள் ஊடகங்கள் பக்கம் வந்ததில்லை. மாறாக மோகன் பாகவத் துவக்கத்தில் இருந்தே ஊடகத்துறையினரை சந்தித்து வருவதால் மாற்றம் இருப்பதை உணர முடிகிறது. ஆர்எஸ்எஸ் நாட்டு மக்களின் இயக்கம். அவ்வியக்கம் மென்மேலும் வளர வேண்டும்.

    வித்யா நிதி

  5. ஆர்.எஸ்.எஸ். இன் முழு நேர ஊழியர் முறை பற்றி மக்களிடையே தெரியவரவில்லை. ஒரு முழுநேர ஊழியர் என்பவர் மிகக் குறைந்த மாதாந்திர உதவித்தொகையுடன் எளிய வாழ்க்கை முறையில் திருமணம் செய்யாமல் வாழ்நாள் முழுவதும் தேச சேவைக்காகத தன்னைத் தன பெற்றோரின் சம்மதத்துடன் சமர்ப்பணம் செய்கிறார் என்ற உண்மை மிகப் பெரும்பான்மையான (கிட்டத்தட்ட அனைத்து) மக்களுக்குத் தெரியாது. சேவை என்றால் இதுதான் என்பது தெரியவரவேண்டும். பெயர்தான் ஸ்வயம் சேவக். இந்த ஸ்வயம் தேசியம் சார்ந்தது என்பது பொதுமக்களுக்குப் போய்ச்சேரவில்லை. பொதுச் சேவையில் இருக்கிறோம் என்று சொல்லிக்கொள்ளும் அரசியல்வாதிகள் அனைவரும் ஸ்வயத்துக்கான, சொந்த நலத்துக்கான் சேவகர்களாகவே இருக்கையில் ஸ்வயம் சேவகர்கள் உண்மையான பொதுநலத்துக்காகத தமது வாழ்க்கையையே அர்ப்பணித்தவர்கள், எந்தப் பதவியையும் நாடாதவர்கள், எந்த ஆதாயத்தையும் தேடாதவர்கள் என்பது பரவலாக வெளிவந்தால்தான் தேசம் ஆர்.எஸ்.எஸ் பற்றிய உண்மையை உணரும்.

    மதமாற்றம் செய்பவர்களெல்லாம் ஊழியம் அல்லது சேவை செய்வதாகச் சொல்லிக்கொள்ளும் நாட்டில், உண்மை ஊழியம் என்ன என்பதே தெரியவில்லை. உண்மை நிலையை எடுத்துச் சொல்லும் வகையில் உடனடியாக விளம்பர உக்திகளை மேற்கொள்ளவேண்டியது அவசியம்.

    இல்லாவிட்டால் சேகர் அவர்களைப்போல “இந்தப் பேட்டி வெளிப்படுத்தும் ஆர்.எஸ்.எஸ் மற்ற ஊடகங்களால் எங்களுக்கு அறிமுகப்படும் ஆர்.எஸ்.எஸ்ஸிலிருந்து முற்றிலும் எதிரானதாக இருக்கிறது. உங்களை நம்புவதா? அவர்களை நம்புவதா?” என்று கேள்வி எழுப்பிக்கொண்டுதான் இருப்பார்கள்.

  6. பேட்டி மிகவும் நன்றாக உள்ளது. தங்களின் நற்பணி தொடரட்டும்.

    நன்றி,

  7. ஆர் எஸ் எஸ் பற்றி அறிய வேண்டுமானால் ஒருவர் அதன் ஷாகாக்களுக்குச் சென்று பார்க்க வேண்டும்
    அங்கு எவாறு எவ்வாறு அன்புடனும்,சகோதர உணர்வுடனும்,ஒழுங்குடனும்,ஒழுக்கத்துடனும்,கட்டுப்பாட்டுடனும் எல்லோரும் நடந்து கொள்கிறார்கள் என்பதைக் காண வேண்டும்
    மதிப்பிற்குரிய மோகன்ஜி பகவத் அவர்களே சொல்லியபடி ,சர்க்கரை எப்படி இருக்கும் என்று தெரிய வேண்டுமானால் அதைச் சுவைத்துப் பார்க்க வேண்டும் .

    நம் நாட்டு ஊடகங்கள் மற்றும் அரசியல் கட்சிகள் பெரும்பாலும் பணம்,பதவி ,இவற்றை மட்டுமே குறிக்கோளாக வைத்துக் கொடிருக்கின்றனர்
    ‘நியூஸ் பார் கேஷ் ‘ , அதாவது பணம் கொடுத்தால் எந்த செய்தியையும், எந்தப் பொய்யையும் போடத் தயாராக உள்ளனர் என்பது அத் துறையில் உள்ளவர்களே ஒப்புக் கொண்ட ஒன்று.
    சர்ச் மற்றும் சவுதி பண பலம் அவர்களை இயக்கிக் கொண்டிருக்கிறது .

    ஒரே ஒரு சான்று பாருங்கள்
    ஹிந்து சமயத்தை மிகக் கேவலமாக இழித்தும், பழித்தும் பேசும் கருணாநிதி கிறித்தவ மத மாற்ற போதகர் தினகரன் இறந்த போது அவசர அவசரமாக மருத்துவ மனைக்குச் சென்று பார்க்கிறார் .

    இது வரை அவர் ஏதாவது ஒரு ஹிந்து ஆன்மீக வாதியின் இறப்பிற்குச் சென்றிருக்கிறாரா?
    குறைந்த பட்சம் இரங்கல் செய்தியாவது கொடுத்திருக்கிறாரா ?
    அவருக்கு மதத்தின் மீதோ ,ஆன்மீகத்தின் மீதோ,கிறித்தவத்தின் மீதோ கட்டாயம் பற்று இருக்க முடியாது .

    அப்படி என்றால் வேறு எது அவரை இயக்குகிறது?
    அவரது கடந்த கால சரித்திரத்தைப் பார்க்கும் போது அது பதவி மற்றும் பணமாக மட்டுமே இருக்க வேண்டும் என்று ஒரு முட்டாளுக்குக் கூடப் புரியும் .

    இந்தக் கலி காலத்தில் நநல்லவர்கள் கெட்டவர்களாகவும் ,கெட்டவர்கள் நல்லவர்களாகவும் சித்தரிக்கப் படுவர்.

    எனவே நாம் நமது மதி நுட்பத்தாலும் ,நேரடி அனுபவத்தாலும் உண்மையை உணர வேண்டும் .

    இரா.ஸ்ரீதரன்

  8. ஆர் .எஸ் .எஸ் குறித்த ஊடகங்களின் தவறான பிரச்சாரம். காலம் காலமாக
    செய்யப்பட்டு வருவது உள்ள்நோக்கம் உடையதே. தேசியத்தில் பரிபூரண நம்பிக்கை,நாட்டுப்பற்று, பண்பாடு மேன்மை, கலாசார உயர்வு ,குறித்த புரிதல் வேண்டுமானால் சிலகாலம் சங்கத்தில் பணிபுரிந்து பார்த்தால் தெரியும். தன்னலமற்ற தொண்டர்கள் தேச சேவகர்கள் அமைப்பு அது.
    அரசியல் வாதிகளின், ஊடகங்களின் பொய்யுரையை நபவேண்டாம்.
    வடிவேல் சிவம்.

  9. நான் ஆர்.எஸ்.எஸ் பயிற்சி முகாம்களில் சிறப்புப் பார்வையாளனாக் (இதற்கு அமைப்பு ரீதியில் ஒரு பெயர் உண்டு. எனக்கு நினைவு இல்லை). அந்த முகாம்களின்போது அணிந்திருந்த காக்கி அரைக்கால் டிராயரும் தொப்பியும் பெல்டும் இன்னும் என்னிடம் உள்ளன. இந்த கட்டுப்பாடான, ஒழுக்கத்தை வலியுறுத்தும் அமைப்பின் கொள்கைகளை மீண்டும் நினைவு கூரும் வகையில் திரு பகவத் அவர்களின் இந்தப் பேட்டி அமைந்துள்ளது. தலித்துக்களை இந்து அமைப்புக்களினின்றும் அந்நியப்படுத்தும் முயற்சிகளை முறியடிக்க வேண்டும். தலித்துக்களைப் பற்றி திரு பகவத் அவர்கள் கூறிய கருத்துக்கள் மிக யதார்த்தமானவை.

  10. ஆர்ர் எஸ் எஸ் ஸ்வயம் சேவகர்களின் தன்னலமற்ற தொண்டு பெரும்பாலும் வெளிச்சத்துக்கு வருவதில்லை
    அது ஏனென்றால் ஊடகங்களின் ஹிந்து விரோதப் போக்கு மற்றும் அவை சர்ச் மற்றும் சவுதி பணத்துக்கு விலை போனதாலும்
    தான் .

    சான்றாக ட்சுனாமி வந்த போது நாகப்பட்டினத்தில் அழுகி தாங்க முடியாத நாற்றம் அடிக்கும் பிணங்களை காவல் துறையினரும்,ராணுவத்தினருமே அப்புறப்படுத்த மறுத்துவிட்ட போது, ஸ்வயம் சேவகர்கள் கொஞ்சமும் விருப்பு வெறுப்பு இல்லாது அப்பிணங்களை அகற்றியதொடல்லாமல் உரிய முறையில் அவற்றுக்கு இறுதிச் சடங்கும்போன்றே செய்தது எங்கும் காண முடியாது

    அதே போன்றே சமீபத்தில் நடந்த மங்களூர் விமான விபத்தின் போது முதலில் அங்கு விரைந்தவர்கள் ஸ்வயம் சேவகர்களே

    இதைப் போல் நுற்றுக்கணக்கான நிகழ்ச்சிகளைச் சொல்லலாம்.

    இரா.ஸ்ரீதரன்

  11. ஆர். எஸ். எஸ். மேலும் சில பணிகளை இந்து தர்மத்திற்கு செய்யவேண்டும். பல இந்துக் கடவுள்களை வெளிநாட்டு சக்திகள் மிருகங்களாக சித்தரித்துள்ளன. அந்த மிருகக் கடவுள்களை மனிதத்தன்மையுடையவைகளாக மாற்ற ஏது செய்தால் ஷேமம் 🙂

  12. நான் ஆர். எஸ். எஸ். சக்கவுக்கு சில முறை தான் சென்றுல்லன் அவர்களின் கட்டுப்படும் தேசபக்தியும் அளவிட முடியாத ஒன்று. வேலை காரணமாக என்னால் தொடர்ந்து செல்ல முடியவில்லை இருந்தாலும் அவர்களை பற்றி ஓரளவு அறிந்தும்வுள்ளேன். அவர்களிடம் நான் கண்ட கட்டுப்பாட்டை நான் NCC இருந்த பொழுது தான் பார்த்தேன். ஆர். எஸ். எஸ் சேவை மென் மேலும் பெருக என் வாழ்த்துக்கள். Jaihind

  13. ஆர் எஸ் எஸ் அமைப்பில் இணைந்து தினசரி ஷாகவிற்கு வருகின்ற ஸ்வயம்சேவகர்கள் மனதில் நமது தேசத்தின் பெருமைகளை எடுத்துரைக் கின்றது. நமது ஹிந்து சமுதாயம் சந்தித்து வருகின்ற சவால்களை சரியான கண்ணோட்டத்தில் எடுத்துரைத்து சமுதாய ஒன்றுமைக்கான அவசியத்தினை வலியுறுத்துகிறது. ஸ்வயம்சேவகர்கள் தங்களுக்கு விருப்பமுள்ள துறைகளைத் தேர்ந்தெடுத்து பல தொண்டுப் பணிகளையும் மற்றும் பல வேலைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். சங்க சக்தியை நான் வளர்ப்பேன் என முன்வருவோர் வேண்டும். மாபெரும் தியாகியர் படை வேண்டும்.

    அம்பை சிவன்

  14. சூரியனை பார்த்து நாய்கள் குரைத்தால் நமக்கு என்ன தோழர்களே

  15. பிராந்த பிரச்சாரக்காக = மாநில அமைப்பாளர்(முழு நேர)

    பிரச்சாரக்=முழு நேர ஊழியர்

  16. ஒசாமா கூறுகிறார் : நான் தீவீரவாதிகளை வேறோடு அழிக்க நினைக்கிறேன். அப்பாவி மக்களை கொள்ளவதில்லை எங்கள் இயக்கம். நாங்கள் சமாதாத்தையே விரும்புகிறோம். எங்களிடம் எந்த வித ஆயுதங்களும் இல்லை. இவ்வாறு திரு ஒசாமா பின்லேடன் கூறினார் என்று சொன்னால் எவ்வாறு பொது மனிதன் மனசு கொதிக்குமோ… அது போன்று தான் உங்கள் கட்டுரையை படிக்கும் போது தோன்றியது.

    எனது இக்கருத்தை இப்பக்கதில் பதியாமல் இருந்தால் கூட உங்கள் RSS -ன் உண்மையான முழுமுகம் தெளிவாகிவிடும்.

  17. Every Hindu, Christian, Muslim and Buddhist who lives below the poverty line and at the mercy of floods, droughts and cyclones will tell you that the RSS is more sinned against than sinning.
    –above is an extract from an article by Victor Banerjee
    for full text pl read the full article in the link below.
    https://www.hinduwisdom.info/articles_hinduism/117.htm

    RGK

  18. ஆர்.எஸ்.எஸ் இயக்கம் தன்னிகரற்ற இயக்கம். நாடு முழுவதும் 1,57,000 சேவா பணிகள், வித்யா பாரதி என்ற அமைப்பின் மூலம் 25000 பள்ளிகள், மலைவாழ் மக்களிடம் உண்மையான தேசபக்தியை ஏற்படுத்தும் வனவாசி சேவா கேந்திரம், 15000 க்கும் மேற்பட்ட இடங்களில் ஏகல் வித்யாலயா (இது விஸ்வ ஹிந்து பரிஷத்தின் துணை பிரிவு) நடத்தும் ஓராசியர் பள்ளிகள் என்ற பல முகங்கள் உண்டு. ஆர்.எஸ்.எஸ் அமைப்பை வார்த்தைகளால் விளக்க முடியாது. உணர்ந்து பார்த்தால் தான் உணர முடியும்.

  19. @ Gopala Arif Raj

    ஆரிஃப் ராஜ் அவர்களே,

    உங்களுடைய வாதம் புரியவில்லை.

    ஒசாமா பின்லேடன் குண்டு போடுகிறார். ஆர்வம் இருப்பவர்களையும், இல்லாதவர்களையும் சுவனத்திற்கு ஏவுகணை வேகத்தில் அனுப்பும் புனிதப் பணியைச் செய்கிறார்.

    அத்தோடு, வருடாந்திர போர்ட் மீட்டிங்கில் ஒரு இயக்குனர் கம்பனியின் லாப நஷ்ட கணக்குகளையும் அடுத்த வருட இலக்குகளையும் நிர்ணயிப்பது போல, ஒசாமாவும் வருடந் தோறும் ஆடியோ கேசட்டும், வீடியோ கேசட்டும் அனுப்புகிறார். அண்ணன் வீரப்பன் போல.

    அதில் எதிலும் அவர் சமாதானத்தை விரும்பு, சண்டை போடாதே, ஆயுதங்கள் எல்லாம் ஹராம், அவற்றை தொடாதே என்று சொல்வதில்லை. புனித ஜிகாத் நடத்தி இந்துக்களை கொன்று தானும் செத்து சுவனம் செல்லும் கடமையைத் தொடர்ந்து செய்வோம் என்று உறுதி மொழி கூறுகிறார்.

    அவர் சொல்லுவதும் செய்வதும் தெளிவாகத் தெரிந்ததுதான். இருப்பினும் அவரது படங்களை ஹைதராபாத் ஊர்வலங்களில் உயர்த்திப் பிடித்தபடி செல்கிறார்கள்.

    ஆனால், ஆர்.எஸ்.எஸ் இயக்கத் தலைவர்கள் ஆக்கபூர்வமான வேலைகளைத்தான் செய்கிறார்கள். அவர்கள் ஒசாமா போல கேசட் போடுவதில்லை.

    எப்போதாவது, தவறிப் போய் யாராவது ஒருத்தர் நீங்கள் என்ன செய்கிறீர்கள், பிரச்சினைகள் குறித்த உங்கள் நிலைப்பாடு என்ன என்று கேள்விகள் கேட்டால் தாங்கள் சொல்வதையும், செய்வதையும் அப்படியே சொல்கிறார்கள். ஒசாமாவைப் போலவே.

    இந்த ஒன்று மட்டும்தான் ஒற்றுமை. ஆனால், உங்களுக்கு மற்றவர்களின் புலன்களுக்கும் அறிவுக்கும் தெரியாத ஒற்றுமைகள் எல்லாம் தெரிகின்றன.

    குண்டு வைப்பவன் ஒசாமாவாக இருந்தால் அவன் குண்டு வைத்ததை நம்பாதே. ஆக்கபூர்வ பணிகளைச் செய்பவர் ஆர்.எஸ்.எஸ் காரராக இருந்தால் அதையும் நம்பாதே என்ற புரிதல் சரியா ?

    ஒருவர் கண்முன்னால் செய்வதையும், காதுகளில் தம் செய்ததைப் பற்றி தாமாகவே உரத்துச் சொல்வதையும் நம்பாவிட்டால் எதை நம்புவது?

    இதெல்லாம் பிரமை என்றால் எது சரி ? முகம்மது சொன்னார் என்பதற்காக இடுப்புப் பெல்ட் கட்டிக் கொள்வதா?

  20. எங்கோ பாகிஸ்தானிலோ ,ஆப்கானிஸ்தானிலோ மலைகளுக்கு நடுவிலே ஒளிந்து கொண்டு பெரிய வீரனைப் போல் அங்கங்கே முட்டாள்களை அனுப்பி அவர்களையும் சாகடித்து அப்பாவி மக்களையும் சாகடிக்கும் ஒசாமா பின் லேடனையும் , உங்கள் பக்கத்து தெருவில் எல்லோரும் பார்க்க ஷாகா நடத்தும் ஆர் எஸ் எஸ் காரனையும் எப்படி ஒப்புமைப் படுத்த முடியும்?

    அக்கிரமம் செய்வதனால்தான் ஒசாமா மறைந்து வாழ்கிறான் .
    ஆர்் எஸ் எஸ் தலைவர்களின் விலாசம் எல்லோருக்கும் தெரியும்
    கொஞ்சம் அறிவை உபயோகித்து சிந்திக்கவும்..

    ஹிந்துக்களை அவர்கள் ஒற்றுமைப்படுத்துவது உங்களுக்கெல்லாம் எரிகிறது
    அவர்கள் இப்படியே ஏமாளிகளாக இருந்தால் ஒசாமா குண்டுகளுக்கு பாதிப் பேரையும் .ஜிஹாதிகளுக்கு மீதிப் பேரையும் இரையாக்கி ,மீதி உள்ள பாரதத்தையும் பாகிஸ்தானுடன் இணைத்து விடுவீர்கள்

    இரா ஸ்ரீதரன்

  21. திரூ.மோகன் அவர்கள் கூறியது போல ஹிந்து என்பது ஒரு வாழ்க்கை முறை, மதமல்ல. மதமென்று எடுத்துக் கொண்டால் சைவம், வைஷ்ணவம், சாக்தேயம், காணபத்யம், கௌமாரம், சௌர்யம், சாஸ்தேயம் (ஐய்யப்பன்), ஜைனம், பௌதம், சீக்கியம் ஆகியவிகளைக் கொள்ளலாம். இவைகளை தவிர மேலும் பல மதங்கள், வழிபாட்டு முறைகள் நம் நாட்டில் உள்ளன. இவ்வாறு மத வாரியாக பார்த்தல், இஸ்லாமும் கிருஸ்துவமும் தான் இந்தியாவின் majority மதங்களாகவும், இந்த நாட்டின் மதங்கள் minority மதங்களாகவும் இருக்கும். ஆகா minority மத சலுகைகள் உண்மையில் இந்நாட்டு மதங்களுக்கே கொடுக்கப் பட வேண்டும், வெளி நாட்டு இஸ்லாதுக்கோ, கிருஸ்துவதுக்கோ கொடுக்கப் படக் கூடாது. மதமாற்ற தடை சட்டம் மூலம் கிருஸ்துவதையும், தீவிர குடும்ப கட்டுப்பாடு திட்டத்தை நடை முறை படுத்துதல் மூலம் (சஞ்சய் காந்தி செய்தது போல) இஸ்லாத்தியும் கட்டுபடுத்த வேண்டும். ஹிந்துக்கள் T . V . சீரியல்களையும், சினிமாவையும் தங்கள் வழி காட்டியாக நினைக்காமல் இராமாயனத்தியும் மகாபாரதத்தையும் கீதையையும், திருவாசகத்தையும், திருக்குறளையும் தங்கள் வழி காட்டியாக ஏற்க்க வேண்டும். அல்லது எளிமையான வழி ஆர் எஸ் எஸ்ஸின் தினசரி பயிற்சிக்கு செல்ல வேண்டும், தங்கள் குழந்தைகளை அனுப்ப வேண்டும்.

  22. Gopal Arif Raj ,

    நீங்க பொது மனிதன்? ரொம்ப சிரிப்பா இருக்கு ஆரிப்! சரி நான் மசூதிக்கி போய் நீங்க பண்ற அதே தொழுகையை பண்றேன் ,நீங்க வந்து ராமர் கோயிலில் ராமனை கும்பிடுங்கள்!

    இன்னொரு விஷயம்,நான் RSS காரன் !

    இது கூட உங்களுக்கு வயுறு எரிய வைக்குமே?? பொது மனிதன் கூட இந்த நாட்டில் ஹிந்துவாக தான் இருக்கமுடியும் ஆரிப்! இதை மறந்து விடாதிர்கள்.நீங்கள் என்றும் ஒன் சைடட் ஆத்மியாக தான் இருக்க முடியும் சதிக்! ஏன் என்றால் உங்களின் முளையை அப்படி மழுங்க செய்து விட்டார் ஒரு அரபு ஒட்டக வியாபாரி!

  23. நன்றி என்ற ஒரு சொல்லை தவிர வேறு எதுவும் சொல்ல வரவில்லை. தமிழ் ஹிந்து தளத்திற்கு. உங்கள் பணி சிறக்க வாழ்த்துகிறேன்.

  24. இங்கு ஆர் எஸ் எஸ் இன் மீது வெறுப்பை உமிழ்ந்திருப்பவர்கள் அதனை குறித்தும் அதன் செயல்பாடுகளை குறித்தும் ஒன்றும் அறியாதவர்கள். நாட்டின் மீதும் நமது கலாச்சாரத்தின் மீதும் அபரிமிதமான பற்று உங்களுக்கு இருக்கிறது என்றால் நீங்களும் ஆர் எஸ் எஸ் காரன் தான். பண்பும்,கனிவும் ,நேரம் தவறாமையும் உங்கள் உடைமையாக வைத்திருந்தால் நீங்கள் ஆர் எஸ் எஸ் காரர் தான்.இங்கு குறை கூறியிருக்கும் அன்பர்கள் சற்றாவது அவர்களின் ஷாகா என்னும் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டோ அல்லது குறைந்தபட்சம் பார்த்து விட்டாவது கருத்துக்களை எழுதி இருக்கலாம். அவர்களின் தொண்டு தன்னலமற்றது. ஏனெனில் அவர்களுக்கு ஒட்டு வங்கியும் இல்லை,வெளிநாட்டு கரன்சி கட்டுகளை எதிர்பார்ப்பதும் இல்லை. ஆர் எஸ் எஸ் என்பது ஒரு இயக்கம் அல்ல.அது ஒரு வாழ்க்கைமுறை.பீஷ்மச்சர்யரின் வாழ்க்கை போல.ஜெய் ஹிந்த்.

  25. ஒரு அலுவலகம் இருக்கிறது
    அங்கு பெரும்பாலானவர்கள் ஊழல் செய்பவர்களாக இருக்கின்றனர் என்று வைத்துக் கொள்வோம்.
    அனால் அதில் ஒருவர் மட்டும் நேர்மையாக இருக்கிறார். அப்போது அங்கு என்ன நடக்கும்?
    ஊழல் செய்யும் எல்லோரும் அவரைத் தங்களுக்கு மிகப் பெரிய அபாயமாக நினைப்பர். எப்படியாவது அவரை அங்கிருந்து அகற்ற வேண்டும் என்று நினைப்பர்.
    அதற்காக என்ன செய்வர்?
    அவர் மீதே ஏதாவது குற்றச்சாட்டு வைப்பர்.பொய்யான வம்புகளை வளர்த்து குற்றச்சாட்டுகளை ஜோடிப்பர். சில்லறை விஷயங்களைப் பெரிதாக ஊதி அவர் மீது குற்றச்சாட்டுகளை வைப்பர். பிறகு மெமோ கொடுப்பர். திட்டமிட்டு அவரது ரிகார்டை கெடுத்து ஒரு நாள் அவரே தானாக பதவி விலகும்படி செய்வர். இல்லை எனில் அவரைப் பதவி நீக்கம் செய்வர்.

    இதைப்போல்தான் இப்போது நமது நாட்டில் அரசியல்வாதிகள்,ஊடகங்கள்,அறிவுஜீவிகள் என்று தாங்களே முத்திரை குத்திக் கொடிருப்பவர்கள் என்று பலரும் ஆர்ர் எஸ் எஸ் ஐ ஒரு அபாயமாகச் சித்தரிப்பது .

    இரா.ஸ்ரீதரன்

  26. ஆர்ர் எஸ் எஸ் ஏராளமான சேவைப் பணிகளை செய்து கொண்டிருக்கிறது.
    சமுதாயத்தையும், நாட்டையும் உன்னத நிலைக்கு உயர்த்துவதே அதன் லட்சியம்.
    தனி மனிதனை மேம்படுத்தினால் சமுதாயமும் நாடும் உயரும் என்ற கொள்கையின் அடிப்படையில் அது செயல்படுகிறது.
    அதனால்தான் ஆர்ர் எஸ் எஸ் இல் கொஞ்ச காலம் பணி செய்தவர்கள் கூட அவர்களது வாழ்வில், ஒழுக்கம், ஒழுங்கு,கட்டுப்பாடு, தேச பக்தி,சமுக உணர்வு, சமத்துவம், தலைமை தாங்கும் தகுதி இவை கொண்டவர்களாக விளங்க முடிகிறது.
    அவர்கள் பிறகு எந்தத் துறையில் வேண்டுமானாலும் பணி செய்யட்டும். அத்துறையில் அவர்கள் சிறந்து விளங்குவார்கள்
    ஆர்ர் எஸ் எஸ் இல் கிடைத்த அனுபவம்,கற்றுக்கொண்ட நெறிகள் இவை அவர்களது வாழ்வை மேம்படுத்தி வாழ்நாள் முழுதும் அவர்கள் நல் வாழ்வு வாழ உதவி செய்கிறது.

    இதை எல்லாம் கற்றுக் கொடுக்க இன்று ஒரு அமைப்பும் இல்லை. பள்ளிகளில் நீதி போதனை வகுப்புகள் ஒழிக்கப் பட்டுவிட்டன. வெறும் பணம் பண்ணும் தந்திரம் மட்டுமே இன்று பாடத் திட்டத்தில் உள்ளது.
    டாக்டர் ,என்ஜினீயர் என்ற பெற்றோரின் கனவுகள் நனவாகி , அதற்குப் பின் தங்கள் குழந்தைகள் வாழ்க்கையில் பல பிரச்னைகள் முளைக்கும் போதுதான் அவர்களுக்கு பண்பு மற்றும் பண்பாடு கற்றுக் கொடுக்கவில்லையே என்று பெற்றோர் நினைக்கின்றனர்.
    ஆனால் அப்போது காலம் கடந்திருக்கும்.

    ஆகவே ஆர்ர் எஸ் எஸ் போன்ற அமைப்புகளை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எந்த வயதினருக்கும் அது பயனளிக்கும்.
    இதற்கு பைசா செலவு கிடையாது .

    இரா.ஸ்ரீதரன்

  27. Pingback: tamilnirubar.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *