பன்றிக்கறியைச் சாப்பிடுபவர்களிடம் கேட்டால், பன்றிக்கறியின் சுவைக்கு ஈடு இணை இல்லை என்றுதான் சொல்வார்கள். இத்தனைக்கும், ஆடு, மாடு கறிகளை விட கொழுப்பில் குறைவானதாக இருக்கும் பன்றிக்கறி சுவையில் மிகுந்திருப்பது உண்மை.
தமிழ்நாட்டிலும் இந்தியாவின் மற்ற பகுதிகளிலும் இந்துக்களால் விரும்பி சாப்பிடப்படும் ஓர் உணவு பன்றிக்கறி. சுமார் 7000 வருடங்களுக்கு முன்னரே இந்தியாவிலும் உலகின் பல பகுதிகளிலும் பன்றிகள் பன்றிக்கறிக்காக வளர்க்கப்பட்டுள்ளன என்பது அகழ்வாராய்ச்சிகளில் தெரியவருகிறது [1]. மனிதர்களால் முதன் முதலில் உணவுக்காக வளர்க்கப்பட்ட மிருகம் பன்றிகளே என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. மனித வரலாற்றின் ஆரம்பத்தில், பன்றிகள் கிழங்குகளைத் தோண்டி எடுக்க காடுகளில் மனிதர்களுக்கு உதவியிருக்கின்றன. அவை பூமியை கிழங்குக்காக நோண்டிப் போட்ட பின்னால், அந்த நிலங்களில் உழுவது எளிதாக ஆகிறது. தாவரங்களையும் சிறு விலங்குகளையும் பன்றிகள் தின்பதால், பன்றிகள் இருக்கும் பழங்குடி கிராமங்கள் சுத்தமானவையாக ஆகின்றன.
இன்றும் உலகத்தில் மிக அதிகமாக உண்ணப்படும் உணவுகளில் ஒன்று பன்றிக்கறியாகும். உலகத்திலேயே மிக அதிகமாக பன்றிக்கறி உண்ணும் நாடு சீனா. அங்கு 52.5 மெட்ரிக் டன் அளவு பன்றிக்கறி உண்ணப்படுகிறது. இது அங்கு ஒரு ஆளுக்கு 40 கிலோ அளவாகும். அதற்குப் பின்னரே ஐரோப்பிய நாடுகளும், அமெரிக்க ஐக்கிய நாடுகளும் வருகின்றன. பசிபிக் தீவு, தென் கிழக்காசியா (லாவோஸ், வியட்நாம், தாய்லாந்து பிலிப்பைன்ஸ்) ஆகிய நாடுகளில் மிகவும் விரும்பி சாப்பிடப்படுவது பன்றிக்கறிதான். பன்றிக்கறியே அந்த நாடுகளின் முக்கிய உணவு.
இந்திய அரசு பன்றிப் பண்ணைகளில் கவனம் செலுத்தி அவற்றில் குறைந்த செலவில் விவசாயிகள் மிகுந்த லாபம் ஈட்டலாம் என்பதனை அறிவுறுத்தி வருகிறது. [2]
பன்றிக்கறி மூலம் செய்யப்படும் ஏராளமான உணவு வகைகள் இந்தியாவில் புழங்குகின்றன. மேலை நாட்டு உணவில் மிக முக்கியமான ஓர் உணவு பன்றிக்கறி. இத்தாலிய ‘புரோசிட்டோ’ (Prosciutto)* எனப்படும் பன்றிக்கறி அனைவராலும் மிகுந்த சுவை மிகுந்ததாகப் பாராட்டப்படுகிறது.
மேலை நாடுகளில் பன்றிக்கறி பொதுவாக வெள்ளைக் கறியாகக் கருதப்படுகிறது. மாறாக மாட்டுக்கறி சிவப்புக் கறியாகக் கருதப்படுகிறது. இதில் கோழிக்கறியை விட மையோக்லோபின் (Myoglobin) அதிகமாக இருந்தாலும் மாட்டுக்கறியைவிட மிகவும் குறைவு. மையோக்லோபின் என்ற இந்த புரோட்டீனே கறிக்கு சிவப்பு வண்ணத்தை அளிக்கிறது. கறி நன்றாக சமைக்கப்படும்போது இந்தச் சிவப்பு வண்ணம் மறைந்து பழுப்பு வண்ணத்தை அடைகிறது. இதன் காரணம் மையோக்லோபின் வேதி மாற்றம் அடைவதே. எந்த அளவுக்கு மையோக்லோபின் இருக்கிறதோ அந்த அளவுக்கு கறி உடலுக்குக் கெடுதி என உணரலாம்.
நூறு கிராம் பன்றிக்கறியில் உள்ள சத்துகள் (Nutritional Value per 100 g)
Energy 1,013 kJ (242 kcal)
Carbohydrates 0.00 g
Sugars 0.00 g
Dietary fiber 0.0 g
Fat 13.92 g
saturated 5.230 g
monounsaturated 6.190 g
polyunsaturated 1.200 g
Protein 27.32 g
Tryptophan 0.338 g
Threonine 1.234 g
Isoleucine 1.260 g
Leucine 2.177 g
Lysine 2.446 g
Methionine 0.712 g
Cystine 0.344 g
Phenylalanine 1.086 g
Tyrosine 0.936 g
Valine 1.473 g
Arginine 1.723 g
Histidine 1.067 g
Alanine 1.603 g
Aspartic acid 2.512 g
Glutamic acid 4.215 g
Glycine 1.409 g
Proline 1.158 g
Serine 1.128 g
Water 57.87 g
Vitamin A equiv. 2 μg (0%)
Vitamin B6 0.464 mg (36%)
Vitamin B12 0.70 μg (29%)
Vitamin C 0.6 mg (1%)
Vitamin K 0.0 μg (0%)
Calcium 19 mg (2%)
Iron 0.87 mg (7%)
Magnesium 28 mg (8%)
Phosphorus 246 mg (35%)
Potassium 423 mg (9%)
Sodium 62 mg (3%)
Zinc 2.39 mg (24%)
தற்போது சுகாதார முறையில் பன்றி வளர்ப்பது தமிழ்நாட்டில் பரவி வருகிறது [3]. தேனி மாவட்டத்தைச் சேர்ந்த புதுப்பட்டி கிராமத்தில் உள்ள ரங்கபிரபு பல ஏலக்காய்த் தோட்டங்களையும் தென்னந்தோப்புகளையும் பராமரித்து வந்தாலும் திடீரென்று அவரது தென்னை மரங்கள் பட்டுப்போக ஆரம்பித்தன. எவ்வளவுதான் விவசாய அறிவியலறிஞர்களிடம் ஆலோசனை கேட்டு வேதிப்பொருள்களைத் தெளித்தாலும், பட்டுப்போவது நிற்கவில்லை. அவர் 100 பன்றிகளை வளர்த்து வந்தார். அவரது பன்றிகளின் கழிவுகளை தோப்புகளுக்கு வெளியே கொட்டி வந்தார்கள். அதனை நிறுத்திவிட்டு, அந்த பன்றிக்கழிவையே தென்னைகளுக்குப் போட ஆரம்பித்தார். பட்டுப்போயிருந்த தென்னைகள் கூட துளிர்விட்டு செழுமையாக வளரத்துவங்கின. பொதுவாக 60 காய்களைத் தரும் தென்னைகளில் கூட பிறகு 100-க்கும் மேற்பட்ட தேங்காய்கள் காய்க்க ஆரம்பித்தன. ஏலக்காய் தோட்டங்களிலும் இதே முறையைப் பின்பற்ற ஆரம்பித்ததும் அங்கும் பசுமை தலைகாட்ட ஆரம்பித்தது. தோட்டங்கள், விவசாயப் பண்ணைகளின் ஓர் இன்றியமையாத அங்கமாக பசுப் பண்ணைகள், பன்றிப் பண்ணைகளை வைப்பதும் அவற்றின் கழிவுகளை இயற்கை உரமாக செடிகொடி மரங்களுக்குப் போடுவதும் இன்றியமையாதது.
எல்லா மாமிசங்களைக் கையாள்வதும், சாப்பிடுவதையும் போலவே பன்றிக்கறியிலும் செய்யவேண்டும். நாம் கோழிக்கறி, ஆட்டுக்கறி ஆகியவற்றை நன்றாக வேகவைத்து சமைத்து உண்பது போலவே பன்றிக்கறியையும் சமைத்து உண்ண வேண்டும். ஒரு சிலர் பன்றிக்கறியில் மட்டும் புழு இருக்கிறது; நாடாப்புழு இருக்கிறது என்று சொல்லி பன்றிக்கறியை சாப்பிடக்கூடாது என்பது போலச் செய்து வைத்துள்ளார்கள். அது உண்மையல்ல. எல்லாக் கறிகளும் சுகாதாரத்துடனேயே கையாளப்பட வேண்டும். எந்தக் கறியையும் சுகாதாரமின்றி கையாண்டாலோ முழுவதும் சமைக்காமல் இருந்தாலோ சுகாதாரக்கேடுதான். முன்பு மேலை நாடுகளில் பன்றி சுகாதாரமின்றி சமைக்கப்பட்டதால், Trichinosis என்ற வியாதி மிகவும் பரவலாக இருந்தது. நாடாப்புழு என்ற ஒட்டுண்ணி, சரியாக சமைக்கப்படாத பன்றிகறியிலிருந்து மனித குடலில் ஒட்டிக்கொள்வதால் வரும் வியாதியே Trichinosis என்ற இந்த வியாதி. இது தற்போது மேலை நாடுகளிலேயே மிகவும் அரிதாக ஆகிவிட்டது. மேலை நாடுகளில் முழுவதுமாக சமைக்காத பன்றிக்கறி, மாட்டுக்கறி ஆகியவற்றை சாப்பிடும் பழக்கம் தற்போதும் இருக்கிறது. ஆனால், இந்தியாவில் முழுவதுமாக வேகவைத்து சமைக்கப்பட்ட உணவையே நாம் உண்பதால், இந்த பிரச்சினை இல்லை. ஆகவே இப்படி பயமுறுத்துபவர்களின் பொய்களுக்குப் பலியாகவேண்டாம்.
சுகாதாரமான முறையில் வளர்க்கப்பட்டு சுகாதாரமான முறையில் சமைக்கப்பட்ட பன்றிக்கறி சுவை மிக்கது.
===
மேலும் படிக்க இணைப்புகள்:
[1] http://www.admin.ox.ac.uk/po/050311.shtml
[3] தேனி மாவட்டம், புதுப்பட்டியில் பன்றிப் பண்ணை மூலம் வெற்றி ஈட்டிய பண்ணையாளர் ரங்கபிரபு பற்றிய செய்திக் குறிப்பு-
http://www.indg.in/agriculture/on-and-off-farm-enterprises/Pig-Farming-Success-Story.pdf
===
சில சுவையான பன்றிக்கறி செய்முறைகள்
1. கோவா பன்றிக்கறி விண்டலூ
இது கோவாவின் பிரசித்தமான விண்டலூ. இதனை சாதாரண சாதத்துடனோ, அல்லது சீரக சாதத்துடனோ கலந்து சாப்பிடலாம். கூடவே கீரைப் பொரியல் வைத்துக்கொள்வதும் நன்றாக இருக்கும்.
பன்றிக்கறி – 1 கிலோ
விண்டலூ மசாலா** – 8 மேஜைக்கரண்டி
பெரிய வெங்காயம் – 2 (பொடியாக அரிந்தது)
இஞ்சி விழுது – 2 மேஜைக்கரண்டி
நாட்டுச் சர்க்கரை – 1 தேக்கரண்டி
பட்டை – 2
கிராம்பு – 6
நல்லெண்ணெய் – 3 மேஜைக்கரண்டி (அல்லது சமைக்க தாவர எண்ணெய்)
உப்பு – ருசிக்கேற்ப
தண்ணீர் – தேவைக்கேற்ப
** விண்டலூ மசாலா செய்ய–
தேவையான பொருள்கள்
பெரிய வெங்காயம் – 2 (வெட்டியது)
பெரிய தக்காளி – 3 (நறுக்கிக்கொண்டது)
பூண்டு விழுது – 1 மேஜைக்கரண்டி
இஞ்சி விழுது – 1 மேஜைக்கரண்டி
காய்ந்த மிளகாய் – 3
மல்லித்தூள் – 2 தேக்கரண்டி
சீரகத்தூள் – 1 தேக்கரண்டி
கருமிளகு – 7
வெள்ளை வினிகர்செய்முறை: வினிகர் தவிர மற்றவற்றை மிக்ஸியில் போட்டு, அவ்வப்போது வினிகர் சிறிதளவு விட்டு கெட்டியான விழுதாக ஆகும் வரைக்கும் அரைத்துக்கொள்ளுங்கள். விண்டலூ விழுது ரெடி.
இது பன்றிக்கறி விண்டலூ செய்வதற்கு உபயோகப்படுத்திகொண்டாலும், இதே செய்முறையில் கோழிக்கறி விண்டலூ செய்யவும் சுவையானதாக இருக்கும்.
செய்முறை
- பன்றிக்கறியை கொழுப்பு நீக்கிவிட்டு, விரலளவு சதுரங்களாக வெட்டிகொள்ளவும்.
- வெட்டிய கறியை விண்டலூ மசாலாவுடன் கலந்து 24 மணிநேரம் ஊறவைக்கவும்.
- அடுப்பில் வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி அதில் வெங்காயத்தைப் பொன்னிறமாக வதக்கவும்.
- அத்துடன் இஞ்சி விழுது, பட்டை, கிராம்பு சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.
- பின்னர் நாட்டுச் சர்க்கரை சேர்த்து வதக்கவும்.
- இதன் மீது கறியை மட்டும் சேர்க்கவும். கூடவே நீராக இருக்கும் மசாலாவை இப்போது சேர்க்கவேண்டாம்.
- கறி நன்கு பழுப்பாக ஆகும்வரைக்கும் வதக்கியபின்னர், இப்போது மசாலாத் தண்ணீரைச் சேர்க்கவும்.
- மேலும் ஒரு கோப்பை தண்ணீரும் ருசிக்கேற்ப உப்பும் சேர்க்கவும்.
- குறைந்த தீயில் கறி மிருதுவாக ஆகும்வரை வேகவிட்டு, அடுப்பிலிருந்து இறக்கிப் பரிமாறவும்.
===
சுவையான பன்றிக்கறி (கேரளா)
பன்றிக்கறி – அரைக்கிலோ
வினிகர் – 2 மேஜைக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
பெரிய வெங்காயம் – 1 (நீளமாக அரிந்தது)
இஞ்சி – ஒரு தேக்கரண்டி (நீளமாக அரிந்தது)
மிளகாய்த் தூள் – 1 தேக்கரண்டி
மல்லித்தூள் – 1 தேக்கரண்டி
மஞ்சள்தூள் – 1/2 தேக்கரண்டி
பட்டை – 2
ஏலக்காய் – 3
கிராம்பு – 3
பூண்டு – 12 பற்கள்
எண்ணெய் – 2 மேஜைக்கரண்டி
செய்முறை
- கறியை சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளுங்கள்.
- ஒரு பிரஷர் குக்கரில் கறியோடு, வினிகர், உப்பு, மிளகாய்த் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள் பட்டை, ஏலக்காய், கிராம்பு, இஞ்சி, தண்ணீர் சிறிது சேர்த்து 10 நிமிடங்கள் வேகவிடுங்கள்.
- விசில் வரும்வரை வெந்தவுடன் அதிகமாக இருக்கும் தண்ணீரை வடித்துவிடுங்கள்
- அடுப்பில் வாணலியில் எண்ணெய் வைத்து, வெங்காயம், கறிவேப்பிலை போட்டு பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
- இத்துடன் வேகவைத்த கறியை சேர்த்து, காய்ந்து பழுப்பு நிறமாகும் வரை வதக்கவும்.
இதனை ரொட்டி, சப்பாத்தி, ஆப்பம் ஆகியவற்றுடன் சாப்பிடலாம். மிகுந்த சுவையாக இருக்கும்.
===
* ஸ்பெயினில் பன்றித் தொடையை உப்புக்கண்டம் போட்டு ஊறவைத்து ஒரு வருடத்திற்கும் மேலாய் சுவற்றில் மாட்டி விடுகிறார்கள். அதன் நீரெல்லாம் வடிந்து போன தொடை மாமிசத் தொங்கல்கள் ஒவ்வொரு ஹோட்டலினுள்ளும் நுழைந்தவுடனேயே சுவற்றில் மாட்டப்பட்டுள்ளன. எக்கச்சக்க விலை. அதை ஸ்லைஸாய் அறுத்து தர ஹார்லிக்ஸ் மாதிரி அப்படியே சாப்பிடலாம். கூடவே ஸ்பானிஷ் ரெட் வைனும் இருந்தால் விசேஷம். அதன் பெயர்தான் புரோசிட்டொ (Prosciutto).

திருவள்ளுவர் கண்டுபிடித்த துப்பாக்கி!
பசுமை விவசாய தொழில்நுட்பங்கள் பற்றிய கையேடு
பசுமை அரசியலும் வளரும் நாடுகளும் – 2
சாமியாகாத சாமியும் சல்மான் ரஷ்டியும்
காவேரியைக் காக்க ஒரு யாத்திரை
இந்தியர்களின் “அமேரிக்க எதிர்ப்பு” நியாயமானதா? – 2
அகமதாபாதில் ஒரு நாள்
ஒரு நதியின் நசிவு
கோவை புத்தகக் கண்காட்சி 2010
பிரபஞ்சவியலில் உலகங்களின் தோற்றமும் உயிர்களின் பிறப்பும்
எது உழைப்பாளர் தினம்?
ரெடி உணவுகளில் இருக்கும் சில ஆபத்துகள்
புதிய பறவை இனம் – பரிணாமவியலின் இன்னொரு வெற்றி!
ஹலால் கறியா ஜட்கா கறியா?
மனிதப் பேராசையும் ஆன்மீக சந்தையும்: ஒரு பார்வை
பசுமை அரசியலும் வளரும் நாடுகளும் – 1
வாழையடி வாழையாய் வரும் நற்பண்புகள்
இயற்கையைக் காக்கும் இந்துமதம்
இந்துமதம் மாமிச உணவுக்கு எதிரானதா?
கடவுள், மனிதன், கடைசி யுத்தம்





திரு. கோபால் அ வர்களுக்கு என்னுடைய பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
நான் மாமிச உணவு உண்பது இல்லை என்றாலும், உலகிலே பன்றிக்கறி முக்கிய உணவாக இருக்கிறது என்பது எனக்கு தெரியும்.
நான் ஒரு கிறிஸ்தவப் பள்ளியில் படித்தேன். அங்கே ஜெர்மானிய நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப் பட்ட பன்றிகள், பல குட்டிகளைப் போட்டு, நாற்ப்பது சிவப்பு நிற பன்றிகள் இருந்தன. கருப்பு பன்றிகளை பார்த்துப் பழக்கப் பட்ட எங்களுக்கு சிவப்பு பன்றிகள் வியப்பை அளித்தன. விடுதியில் நாங்கள் உண்ட பிறகு மிச்சம் இருக்கும் உணவை அந்தப் பன்றிகளுக்கு போடுவார்கள்.
“வெள்ளைக் காரன் வூரு பன்னி கூட சேப்பா இருக்குல” என்று மாணவ மணிகள் பேசிக் கொள்வோம். வருடத்திலே ஓரிரு முறை ஹாஸ்டலில் பன்றிக்கறி போடுவார்கள். மாணவர்கள் முதல் ஆசிரியர், ஆயர் வரை எல்லோரும் விரும்பி சாப்பிடுவார்கள். ‘”ஏ, பன்னிக் கறி பா !” என்று மாணவர்கள் பரபரப்பாக பேசிக் கொள்வார்கள்.
என்னைப் பொறுத்தவரையிலே, பன்றிகள் நேசிக்கப் பட தக்கவையே. அவைகளை செல்லப் பிராணிகளாகவும் வளர்க்கிறார்கள்.
பன்றிகள் மீது என்ன தவறு? அவற்றுக்கு தேவையான உணவை அதனை வளர்ப்பவர் அளித்தால், அதை உண்டு விட்டு அவை கொட்டிலிலே கிடக்கும்.
எனக்குத் தெரிந்து எந்தப் பன்றியும் யாரையும் விரட்டியதோ, கடித்ததோ இல்லை.மனிதர்கள் தான் பன்றிகளை விரட்டிக் கொண்டு ஓடுவதைப் பார்த்து இருக்கிறேன்.
பன்றிகள் யாருக்கும் எந்த தொல்லையும் குடுப்பது இல்லை.
ஆறறிவுடைய மனிதன் வெறித்தனம் கொண்டு பலபேருக்கு பல வித இன்னல்களைத் தருவதோடு ஒப்பிட்டால், பன்றிகள் பாராட்டப் படத் தக்கவையே. சிந்திக்கும் யாரும் இதைப் புரிந்து கொள்ள இயலும்.
அவரவரின் மனசாட்சியைத் தொட்டுக் கேட்டால், பன்றிகளை இகழ உனக்குத் தகுதி இருக்கிறதா, என்றே கேட்கும் எனவே நான் கருதுகிறேன்!
What exactly is the point of this article? Why is pork is being promoted in TamilHindu? I presume majority of the Hindus are vegetarians and respect sanctity of life even in animals.. [Edited and Published]
//What exactly is the point of this article? Why is pork is being promoted in TamilHindu? I presume majority of the Hindus are vegetarians and respect sanctity of life even in animals.. [Edited and Published]//
Majority ? vegetarians ? sick joke…. I am a proud hindu and a proud non-veg eater.
[Edited and Published]
ஆன்மிக வாழ்க்கை சாதனை யோகம் என்று செல்லும் போது மாமிசத்தை ஒதுக்க வேண்டும். தனிவாழ்க்கையில் சொந்த மதிப்பீடுகள் அடிப்படையிலும் மாமிசத்தை ஒதுக்கலாம். ஆனால் சமுதாய பொதுவாழ்க்கையில் மாமிசம் உண்போர் வாழ்வது அவசியம். கௌசிகன் எனும் அந்தணனுக்கு தர்மத்தை உபதேசித்தவர் தர்மவ்யாதர் என்கிற கசாப்பு கடைகாரர்தாம். பன்றி கறி மீது ஒரு வெறுப்பை ஆபிரகாமிய மதம் ஒன்று பரப்பி வருகிறது. (ஒருவேளை பழைய பாகனீய சமுதாய விழாக்களில் பன்றி மாமிசம் முக்கியமான பங்கு வகித்ததால் இருக்கலாம். ஒவ்வொரு அஸ்ட்ரிக்ஸ் சாகஸமும் பொன்னிறத்தில் தகதகக்கும் பன்றி இறைச்சி விருந்துடன் தானே முடியும்?) இதனால் பல கிராமங்களில் கூட பன்றி வளர்ப்பது கஷ்டமான விஷயமாக மாறி வருகிறது. அத்துடன் பன்றியை சுகாதாரமாக வளர்க்காத சூழலும் ஏற்பட்டு வருகிறது. பன்றி வேட்டை நம் வேடுவர் சமுதாயங்களில் முக்கியமானது. பரமசிவனே பன்றி வேட்டையாடியிருக்கிறார். எங்கள் மாவட்டத்தில் சிவபெருமான் பன்றி வேட்டை ஆடியதை நினைவுவணங்கும் விதமாக பன்றியடித்தான் விளை, பன்றிபாகம் என ஊர்கள் இருக்கின்றன. கண்ணப்ப நாயனார் சிவனுக்கு பன்றி இறைச்சியைதானே படைத்தார். எங்கள் ஊரில் கடுவாமூர்த்தி விடுவாதை சாமிக்கு கொடைவிழாவில் பன்றி இறைச்சி படைப்பார்கள். காட்டுப்பன்றி இன்றைக்கும் விவசாய மக்களுக்கு குறிப்பாக மரச்சீனி கிழங்கு விவசாயிகளுக்கு பெரும் பிரச்சனை. எனவே பன்றி வேட்டை முக்கியமான விசயமாகவும் சில சமுதாயங்களிடையே உள்ளது. இந்நிலையில் பன்றி இறைச்சியை எப்படி சமைக்கலாம் என்கிற குறிப்பு மிகவும் அத்தியாவசியமான ஒன்றே. தமிழ்ஹிந்து அதனை வெளியிட்டது ஒரு நல்ல விசயம்தான்.
I think this post is fully biased. If so, I do not accept this post.
I second Rama.
சைவம் என்றால் அதில் ஆடு, மாடு, பன்றி, கோழி, மீன் என்று எல்லா உயிரினங்களும் அடங்கும். அதென்ன பன்றி கறிக்கு மட்டும் ஸ்பெஷல் முக்கியத்துவம்?
வர வர தமிழ் ஹிந்துவில் இப்படிப்பட்ட பதிவுகள் கொஞ்சம் தலை காட்டுவது போல் உள்ளது.
Out of the seven crore people living in tamilnadu, 6 crore are hindus. In that more than 5 crore people are non-veg eaters.
All these people are mainly eating un-healthy halal meat, whether hen or goat. If we promote pork, we will get some traditional meat instead of halal. (as muslims won’t enter into this pork business)
for the 5 crore hindu’s benefits, we need to promote pork business in tamilnadu.
Thanks Gopal.
also want to know where we can get some good pork meat in chennai?
என்ன கண்றாவி இது? ஏன் தமிழ்ஹிந்து தளம் இப்படி சில கட்டுரைகளை வெளியிடுகிறது? தயவு செய்து இனி இது போன்ற அனைத்து ஹிந்து சமுதாய மக்களால் விரும்பப்படாத கட்டுரைகளை வெளி இட வேண்டாம். மேலும் இது ஒன்றும் சமையல் குறிப்பு எழுதும் தளம் அல்ல. பச்சயா சொன்னா ரொம்ப கலீஜா,அசிங்கமா,கேவலமா இருக்கு. Remove this article.
“இதை வெளி இடுவதில் எதோ உள்நோக்கம் இருக்கும் எனில், அது தமிழ் ஹிந்து தளத்தின் நற்பெயரையும், நடுநிலைமையையும் கேள்வி குறி ஆக்குகிறது”
திரு.ஆர்.கோபால். ஏன் இப்படி எழுத தொடங்கி விட்டீர்கள். எவ்வளவோ நல்ல,விவாதிக்க வேண்டிய, பரிமாற நிரம்ப இருக்கும்பொழுது இதை எடுத்திருப்பது??????
கோபால் அவர்களின் முதல் பதிவான ஜட்கா கறி ஹலால் கறி…. மக்களுக்கு நல்ல விழிப்புணர்வைத் தந்திருக்கும்.
அதே போல், இப்பதிவு பன்றி பற்றிய கொடூரமான சித்தரிப்பை நீக்கும் என்பதில் ஐயமில்லை.
வடநாட்டில் ராஜஸ்தான் குஜராத் தவிர மற்ற இந்திய மாநிலங்களில் மாமிசம் உண்ணுபவர்களே அதிகம் உள்ளனர்.
தீபாவளி அன்று கறி எடுப்பது தமிழ்நாட்டில் நாடார்களின்
பழக்கமாக இருக்கிறது. அதே போன்று கர்நாடகாவில் உகாதி மறுநாள் அதிகாலையில் வரிசையில் நின்று கறி வாங்குவது பழக்கம்.
பிராமணர்களும் கள்ளத்தனமாக அசைவம் உண்பது போன்ற செயல்களில் ஈடுபடத்தான் செய்கின்றனர்.
பன்றிக் கறியின் மீதான தவறான கண்ணோட்டம் நீங்க வேண்டும் என்ற இக்கட்டுரையின் நோக்கம் நிறைவேறட்டும்.
//வர வர தமிழ் ஹிந்துவில் இப்படிப்பட்ட பதிவுகள் கொஞ்சம் தலை காட்டுவது போல் உள்ளது.
.
இது போன்று தான் பலவற்றை ஒதுக்கி, பலரை தடை செய்து கேடு செய்திருக்கிறோம் இன்னுமா தொடரவேண்டும் – தமிழ் ஹிந்து புலால் உண்பவர்க்கு கிடையாதோ – கண்ணன் அர்ஜுனனுக்கு தான் கீதை உபதேசம் செய்தான் – அர்ஜுனன் என்ன சுத்த சைவமா? – கீதா சாஸ்த்ரத்தை ஆதியில் உபதேசம் பெற்ற அனைவரும் புலால் உண்ணும் ஷத்ரியரே
// ஜட்கா பிரியன்
10 May 2010 at 2:01 pm
Majority ? vegetarians ? sick joke…. I am a proud hindu and a proud non-veg eater.//
Hello Mr. Jhatka, Rama’s point is valid to a great extent. Not just for Hindus, in fact for all Indians, the staple food is vegetarian only (with the exception of fish as staple food in coastal regions). You are forgetting that majority of the Hindus are also *poor* and simply cant afford meat on a daily basis! Even those who are well off either eat meat as a delicacy, or on occassions. This is very much in contrast to the meat-based diet of say, Muslims or westerners.
If people who turned to vegetarianism claim they are *proud* about it, that is understandable. Bcaz they have adopted a life priciple, either for good health, or to save environment or out of compassion to animals.
But what is there to be “proud” about being a non-veg eater? Its just a form of food. That way you can be proud about any damn thing, even being a TV Watcher!
I can understand why R Gopal wrote such an article – it helps to at least to remove aversion to pork from the minds of Hindu meat eaters, if not promote it outright. He seems to be a Hindutva foodie (his previous articles were also about food), a very welcome addition!
But Pl dont insult or deride the virtues of vegetarian food in the pretext of this.
Rama’s point is not valid. And your argument that Hindus do not prefer meat is flawed.
Provided with enough spending power, every hindu family will prefer a meat based diet. We are not vegetarians by choice, we are vegetarians by force.
Hindu religion does not say, its a sin to eat meat. Vegetarian hindus successfully made eunuchs out of lions. Its time they keep quite and let meat eaters do the talking in matters related to their diet.
இந்த தளம் இந்து மதத்தை வளர்க்கவும், பிற மதத்துடன் நல்லுறவு வளர்க்கவும் பாடுபட விழைகிறேன். இது போன்ற வெறுப்பு ஏத்தும் கட்டுரைகள் வேண்டாம்.
சிறப்பான கட்டுரை. இது பொதுமக்களிடையே பன்றிக்கறியை பற்றிய நல்ல அபிப்ராயத்தை உருவாக்கும்.
ஒவ்வொரு விவசாயியும் கூடவே பன்றிகளை வளர்க்கலாம். இதற்கு இந்திய அரசாங்கம் உதவுகிறது.
NABARD வங்கி சிறு விவசாயிகளுக்கு வெறும் 5% சதவீத முதலீட்டிலேயே பன்றிப்பண்ணைகள் அமைக்க உதவுகிறது.
வெறும் 28000 ரூபாய் இருந்தால் போதும். ஒரு லட்சத்து அம்பதாயிரம் ரூபாயை நபார்ட் அளிக்கிறது.
ரங்கபிரபு தனது சிறு தோட்டத்தில் நூறு பன்றிகளை வளர்க்கிறார்.
பத்துமாதம் வளர்ந்த பன்றிகள் ஒவ்வொன்றும் 12500 ரூபாய் விலைக்கு விற்கலாம்.
http://nabard.org/modelbankprojects/animal_piggery.asp
இந்த இணைப்பில் விவசாயிகளுக்கு தேவையான பல விஷயங்கள் உள்ளன. இதனை தமிழ்ப்படுத்தி தமிழ் இந்துவில் பிரசுரித்தால் ஏராளமான மக்களுக்கு உதவியாக இருக்கும்.
ந்ன்றி
நான் ஒரு அசைவ பிரியன் ஆனால் கோழி, ஆடு மட்டுமே. என் பார்வையில் கோழி, ஆடு மட்டுமே எந்த விதமான் ஒரு தெய்வ சம்பந்தமும் இல்லாதது.பன்றி நமது வராக அவதாரத்தையே குறிப்பதாக நான் நினைக்கிறேன்.அதனால் தானோ என்னவோ இதுவரை நம் முன்னோர்கள் பன்றி கறியை ஆதரிக்கவிலலை.
ஜட்க பிரியன்
// Hindu religion does not say, its a sin to eat meat.
how do you say so
“ந ஹிம்ச்யாத் சர்வ பூதானி” – this is verily a vedic diction – one needs to unedrstand what himsa means and this is decided based on what one’s swadharma is – eating meat merely for pleasure is no doubt a sin – it should be eaten only by those who absolutely need it for maitaining one’s swaharma
கிருஷ்ணா,
//
. என் பார்வையில் கோழி, ஆடு மட்டுமே எந்த விதமான் ஒரு தெய்வ சம்பந்தமும் இல்லாதது.பன்றி நமது வராக அவதாரத்தையே குறிப்பதாக நான் நினைக்கிறேன்.அதனால் தானோ என்னவோ இதுவரை நம் முன்னோர்கள் பன்றி கறியை ஆதரிக்கவிலலை
//
அதற்காக ஒட்டகச்சிவிங்கியை பிடித்து சாப்பிட முடியுமா என்ன?
பன்றி என்ன – முள்ளம்பன்றி தான் மிக உகந்தது என்று ஆதரிக்கப்படுகிறது
// நமது வராக அவதாரத்தையே குறிப்பதாக நான் நினைக்கிறேன்.//
நல்லா ஜோக் அடிக்கிறீங்க.. இதுக்கும் பன்றிக்கறி சாப்பிடுவதற்கும் என்ன சம்பந்தம்?மச்சாவதாரம் என்றால் மீன். அப்படியென்றால் மீன் சாப்பிடக்கூடாதா? சேவல் முருகனின் கொடி. கோழி சாப்பிடக்கூடாதா? ஒவ்வொரு கோவிலுக்கும் ஒரு மரம் ஸ்தல விருட்சமாக இருக்கும். அதற்காக மரத்திலிருந்து எதுவும் எடுத்து சாப்பிடக்கூடாதா?
தேவையில்லாமல் குழம்ப வேண்டாம். விஷ்ணு ஒரு வராகமாகத்தான் அவதாரம் செய்தார். இருக்கும் எல்லா வராகங்களும் விஷ்ணுவின் அவதாரங்களல்ல.
)
எது சுற்றுச்சூழலுக்கும், சமூகத்துக்கும், உடலுக்கும் நல்லதோ அதனை உண்ணவேண்டும். எது சுற்றுச்சூழலுக்கும், உடலுக்கும், சமூகத்துக்கும் கெட்டதோ அதிலிருந்து விலக வேண்டும்.
//Sarang
10 May 2010 at 5:21 pm
//வர வர தமிழ் ஹிந்துவில் இப்படிப்பட்ட பதிவுகள் கொஞ்சம் தலை காட்டுவது போல் உள்ளது.
.
இது போன்று தான் பலவற்றை ஒதுக்கி, பலரை தடை செய்து கேடு செய்திருக்கிறோம் இன்னுமா தொடரவேண்டும் – தமிழ் ஹிந்து புலால் உண்பவர்க்கு கிடையாதோ – கண்ணன் அர்ஜுனனுக்கு தான் கீதை உபதேசம் செய்தான் – அர்ஜுனன் என்ன சுத்த சைவமா? – கீதா சாஸ்த்ரத்தை ஆதியில் உபதேசம் பெற்ற அனைவரும் புலால் உண்ணும் ஷத்ரியரே//
நன்றி சாராங் ஜி!
குறிப்பாக பீமன் அசைவ உணவு உண்பதில் மிகுந்த ஈடுபாடு காட்டி இருப்பதாகவே சொல்லி இருக்கிறார்கள் என நினைக்கிறேன்.
இந்து மதம் எல்லா நிலைகளிலும் உள்ளவர்களை உயர்த்தும் மதமாகும். இதில் விவேகானந்தர் மிகத் தெளிவாக சொல்லி இருக்கிறார். பன்றி மாமிசம் சாப்பிடாதவன் இந்துவே அல்ல என்று பஞ்சாபிகள் கருதுகிறார்கள் என குறிப்பிட்டு இருக்கிறார். அடுத்த வரியிலேயே ஆனால் ஆன்மீகத்தில் தீவிரமாக முயல்பவன் புலால் உணவை தவிர்ப்பது என்பது மிக முக்கியமான ஒன்று, புலால் உணவை நினைத்துக் கூடப் பார்க்க கூடாது என்பதையும் குறிப்பீட்டு உள்ளார்.
வங்காள பார்ப்பனர்கள் மீனை சாப்பிட்டார்கள் என்றே கருதலாம்.
நம்முடைய மண்டன மிஸ்ரர் (கங்காதீஸ்வரர்) பாண்டித்தியம் பெரும் முன் வீட்டு மாப்பிள்ளையாக இருந்த போது, அவருடைய மாமனார்ர் வீட்டிலே மீனின் எலும்புகளை மட்டுமே அவருக்குப் போட்டு, அவரை உதாசீனம் செய்தனர். அதனால் அவர் வாயில் இரத்தம் இருக்கும். வெறுத்துப் போன கங்காதீஸ்வரர் காசி சென்று வேதங்க்களை நன்கு கற்று திரும்பி வந்தார். முன்பு போல அவருக்கு வெறும் எலும்புகளை போட்ட போது, “என்னிடம் ஏன் எலும்புகளைபோடுகிறீர்கள்? நான் கங்காதீஸ்வரன் , கங்கை அல்ல என்னிடம் எலும்புகளைப் போட’” என்று சம்ஸ்கிருதத்திலே பாடி எல்லோரயும் அசத்தி, மண்டன மிஸ்ரர் என்ற புகழ் பெற்ற பண்டிதராக திகழ்ந்தார்.
நான் சென்ற வருடம் என் நண்பரின் வீட்டுக்கு முதல் முறையாக விருந்துக்கு சென்றேன். நான் அசைவ உணவு உண்ணாதவன என்பதை அறியாத அவர் பல அசைவ உணவுகளை செய்து விட்டார்.
பன்றிக் கறியை வெறுப்பது தவறு என்பது மட்டும் அல்ல, பன்றிகளை வெறுப்பதே தவறு. அவை பன்றிகள் யாருக்கும் எந்தக் கெடுதலும் செய்வதில்லை.
சமரச மறுப்பு முரட்டு சிந்தாந்தங்களுக்கு தங்களை அறியாமலேயே அடிமையாகி கொலை வெறிச் செயல்களை செய்யும் மனிதர்களோடு ஒப்பிடும் போது, பன்றிகள் பல மடங்கு மேல்.
நான் இப்போது அடுக்கு மாடிக் குடியிருப்பில் குடி இருக்கிறேன். நான் தனி வீடு கட்டி சென்றால், பன்றியை என் பெட் அனிமலாக வளர்ப்பேன்.
ஹிம்சை என்றால் சித்திரவதை.
ஹலால் என்ற குத்தா முறையில் செய்வது சித்ரவதை.
ஜட்கா சித்ரவதை அல்ல.
பிற உயிர்களை துன்புறுத்தாதீர்கள் என்பது பொது அறிவுரை. உண்பதற்காகக்கூட துன்புறுத்தக்கூடாது. ஆனால் பிற உயிர்களை உண்ணக்கூடாது என்றால் தாவரத்தைக்கூட நாம் உண்ணவே முடியாது. வாடிய பயிர்களைக் கண்ட வள்ளலார் வருந்தினார். பயிர்களைக்கூட துன்புறுத்தக்கூடாது. ஆனால் வள்ளலார் உண்ணாமல் இல்லையே.
Sarang,
Show me a vedic dictat telling “killing animal for food is sin”. PERIOD.
Don’t show derivative of some vedic source, or buddhist-jain mumbo jumbo about ahimsa etc.,
//Majority ? vegetarians ? sick joke…. I am a proud hindu and a proud non-veg eater.
//
//தமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.//
– well SAID.
@JatkaPrian,
Now, Sri. Rama ( I am not sure if I know him ) who supported your views on your earlier article, became a ‘sick joke’ teller just because he believes more hindus are vegetarians than non-vegetarians and he dared to write that in this page.
you are proud non-veg eater? OK. You have something to be proud off. I have none. I am a shameless, sub-altern, cynic, fault-finding,sissy, meanly sadist Veg-eater.
@ Sri. Rama,
Are you the yoga teacher from New Jersey?
இந்த கட்டுரை என்னை பொறுத்த வரையில் தமிழ் இந்துவிற்க்கு அவசியமில்லாதது. அது சரி சமையல் குறிப்பெல்லாம் கொடுத்து அசத்திட்டீங்க, மங்கயர் மலர மிஞ்சிட்டீங்க போங்க.
@ ஜட்கப்ரியன் அண்ணோவ்,
//Provided with enough spending power, every hindu family will prefer a meat based diet//
ஏனுங்க அண்ணா,
‘every’ அப்டின்னா என்னாங்கண்ணா? வோர்ட் வெப் காமிக்குது ‘every’ = (used of count nouns) each and all of the members of a group considered singly and without exception
பாவம் யாராவது ஒரு சைவ நோஞ்சான் ‘majority of hindus are vegetarians’ அப்டின்னுட்டா அவரு பண்ணறது ‘sick joke’ ; அதாவது குரூர நகைப்பு. ஆனா அரிச்சந்திரன் நீங்க “each and all of Hinduseat meat based diet?” அப்டீன்னு சொன்னீங்கன்னா அது என்னாங்கண்ணா?
@திருச்சிக்காரன் அண்ணோவ்,
இந்த ராமாவும், ஜட்காவும் ‘எல்லா’ ஹிந்து திமுக காரங்களும் சைவம் இல்லன்னா எல்லாருமே ஒரே அடியா அசைவம்நு சொல்லி ஹிந்துக்களுக்குள்ள கலவரம் உண்டு பண்றாங்க, திராவிடர் கழகத்துல அவங்கள அறியாம பாடம் படிக்கறாங்கன்னு, உங்க மனசு பதைபதைக்குதுன்னு சொல்லி ஒரு சீன் போற்றவேண்டிதுதானேண்ணா?
@தமிழ் ஹிந்து எடிட்டர் அண்ணோவ்,
//மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத//
அப்டிங்களாண்ணோவ் ? சரிங்க.
என்னை பொறுத்தவரை, இந்த கட்டுரை வீம்புக்ககவும், சில சமுதாயத்தினரை வெறுப்பு ஏற்படுத்துவதற்காகவும் எழுத பட்டதாக தோன்றுகிறது.
வேண்டாமே
அழகான கருது செறிவு மிக்க ஆன்மிக கட்டுரைகள், நாட்டு நடப்புகள், விமர்சனங்களோடு நிருதிகொள்ளலேமே.
ஆதிரவி.
பன்றிக்கழிவை போட்டு தேங்காய்களையும் ஏலக்காய்களையும் உற்பத்தி செய்வதை படித்து அதிர்ச்சி அடைகிறேன்.
பன்றிக்கழிவின் மூலம் உருவாகும் தேங்காய் ஏலக்காய்களை சாப்பிடுவது ஆகுமானதல்ல. இவ்வாறு பன்றியை மறைமுகமாக சாப்பிட வைக்கிற நீங்கள் எங்கள் மத உணர்வுகளை புண்படுத்துகிறீர்கள்.
பன்றிக்கழிவை செடிகொடி மரங்களுக்கு போடுவதை இந்த அரசு தடை செய்யவேண்டும் என்று கோருகிறோம்.
Mr Jatkapriyan, your view that Hindus will eat meat daily if they can afford it is simply a wrong notion.Our Dharma is very compasionate to all living creatures. Arjuna, Bhima or even Lord Rama ate meat does not reduce this principle in anyway. I know many wealthy Hindus who can very well eat meat daily but refrain from doing so on the basis of COMPASSION and nothing else. The basic principle of Hinduisim is not to cause ” Himsha” to others, including animals, AS FAR AS POSSIBLE .What one want to do is upto his “Dharmic” consciousness and that is the beauty of our religion. You can eat meat or refrain from doing so and it is entirely up to you. On this basis,majority of Hindus do NOT eat meat REGULARLY because they have CHOSEN to do so. Sorry for any offence, not intentional.
(edited and published)
The article is very well written and appreciates the eco-balancing act of Pig rearing. God has made with purpose every animal or every thing in this world. Talking about Pigs is treated taboo subject in India. Even the word “Panni” is used as a scolding. I am vegetarian, but that does not mean I can look down all those who eat Non-vegetarian. Articles such as this will help integrate Hindus following different types of traditions. This also show the versatility and diversity of nature oriented Hindu traditional living.
கொல்லான், புலான் மருததானை; எல்லா உயிரும்
கைக்கூப்பி தொழும்.
-திருவள்ளுவர்.
தன் உடலை வளர்க்க மற்ற உயிரின் உடலை வதைத்தல் முறையோ…
வள்ளலார் வாழ்ந்த பூமியன்றோ. மனவேதனையுடன். வடிவேல்சிவம்.
பிற மதங்கள் ஜாக், ஜான் , ஹென்றி ஆகிய எல்லோருக்கும் ஒரே அளவான சட்டையைக் கொடுத்து போடச் சொல்லுகின்றன. ஹிந்து மதம் அவரவருக்குப் பொருத்தமான அளவுடைய சட்டையைக் கொடுக்கிறது என்று விவேகானந்தர் மிக அழகாக சொல்லி இருக்கிறார்.
சமண மதம் முழுமையாக மரக் கறி உணவை மட்டுமே அங்கீகரிக்கிறது. புத்த மதம் துறவை மட்டுமே ஒரே தீர்வாக முன் வைத்தது.
இந்து மதம் அஹிம்சையை, கொல்லாமையை போதிக்கும், வூக்குவிக்கும் அதே நேரத்திலே புலால் உணவு உண்பவரை குறை சொல்லவோ வெறுக்கவோ இல்லை. இந்து மதத்தில் துறவும் இருக்கிறது, குடும்ப வாழ்க்கையின் மூலம் ஆன்மீகத்தில் முன்னேறுவதும் உள்ளது.
ஒருவன் ஆன்மீகத்தில் எந்த அளவுக்கு முன்னேருகிறானோ , அந்த அளவுக்கு இந்த உலகத்தில் பிறருக்கு துன்பம் தராமல் வாழ்வான். புலால் உண்ணாத சமணர்கள் ஐந்து வட்டி, பத்து வட்டிக்கு விட்டு ஏழைகளின் இரத்தத்தை உறிஞ்சுவதை, அவர்கள் மனசாட்சியோ, மதமோ எப்படி அனுமதிக்கிறது என்று நான் எண்ணியதுண்டு.
மொத்திலே புலான் உண்டாலும் , உண்ணாவிட்டாலும், உலகில் உள்ள எல்லா இந்துவும் புரவுட் (proud) ஹிந்துவே!
உலகிலே, பிற மதங்களை வெறுக்கச் சொல்லாத ஒரே மதமாக இந்து மதமே உள்ளது.
இந்துக்களின் கடவுள்கள் நீ என்னை மாட்டுமே வணங்க வேண்டும், இல்லாவிட்டால் தண்டிப்பேன் எனக் கட்டளை போடவில்லை.
இவ்வாறாக உலகிலே மதங்களுக்கு இடையிலேயான பூசலை நிறுத்தி, மனிதத்தை வாழ வைக்கும் ஒரே வாய்ப்பாக, கடைசி வாய்ப்பாக இந்து மதம் மாத்திரமே உள்ளது.
எனவே உலகில் உள்ள நூறு கோடிக்கும் மேலான ஹிந்துக்கள் ஒவ்வொருவரும் புரவுட் (proud) ஹிந்துதான்.
//ஒருவன் ஆன்மீகத்தில் எந்த அளவுக்கு முன்னேருகிறானோ , அந்த அளவுக்கு இந்த உலகத்தில் பிறருக்கு துன்பம் தராமல் வாழ்வான்.//
ஒருவன் ஆன்மீகத்தில் எந்த அளவுக்கு முன்னேருகிறானோ , அந்த அளவுக்கு இந்த உலகத்தில் பிற உயிர்களுக்கு துன்பம் தராமல் வாழ்வான்.