முகப்பு » இந்து மத மேன்மை, இந்து மத விளக்கங்கள், வரலாறு

இது ஒரு ஓப்பன் ஸோர்ஸ் மதம்

அச்சிட அச்சிட

மூலம்: Josh Schrei

தமிழாக்கம்: பனித்துளி

இந்து மதத்தின் மையமான நம்பிக்கைகளைப் பற்றி, அந்த மதம் பற்றி அறிய ஆவலாக உள்ள ஒரு பார்வையாளருக்கு விளக்க முயல்வது சவால்கள் நிறைந்த ஒரு பணி என்றே சொல்ல வேண்டும்.

hindu-composite[ஒரு தனிப்பட்ட மதம் எனும் பொருள் தரும் வகையில்] அந்த மரபிற்கு இந்து “மதம்” என்று பெயரிட்டிருப்பதே பொருத்தமற்றது என்று அடிக்கடி பலர் சுட்டிக் காட்டுகிறார்கள். ஏனெனில், சுமார் 5000 ஆண்டுகளுக்கும் மேலாக, இந்தியத் துணைக்கண்டத்தில் புழக்கத்தில் இருந்து வரும் பல்வேறு ஆன்மீக மற்றும் மதச் சிந்தனைகளின் தொகுப்பையே அந்தப் பெயர் குறிக்கிறது. இந்த 5000 வருடங்களும் செயலூக்கம் மிக்க சுறுசுறுப்பான பல நிகழ்வுகளைக் கொண்ட வருடங்கள் என்பதை மட்டுமே நம்மால் சொல்ல முடியும்.

பிரம்மாண்டமாய் விரியும் இந்து சமய ஆன்மீக இலக்கியங்கள் மற்றும் சித்தாந்தங்களின் அளவு, முற்றிலும் தனித்தன்மை வாய்ந்த தெய்வங்களின் அளவிட முடியா எண்ணிக்கை (சில மூலங்களின்படி இவற்றின் எண்ணிக்கை 30 மில்லியன்கள் !),   தனித்தன்மையுடன் உருவான தத்துவங்கள் மற்றும் சடங்குகளின் விரியும் பரப்பு,  காலவோட்டத்தில் இந்திய சிந்தனைகள் மற்றும் நம்பிக்கைகள் அடைந்த முற்றிலும் வேறுபட்ட மாறுதல்கள்……..

இப்படி எல்லாம் ஒரு மதம் இருக்க முடியும் என்று ஆபிரகாமிய மதப் பின்னணி கொண்டவர்களிடம் போய் சொன்னால் அவர்களால் அதைத் தாங்கிக் கொள்ளவே முடியாது. ஏனெனில், மிகத் தெளிவான எல்லைகள் வரையறுக்கப்பட்ட மாறக்கூடாத ஆதார நம்பிக்கைகளுடன்தான் ஒரு மதம் இருக்கிறது என்றே ஓரிறை இறையியல் சூழலில் உள்ள நமக்கு மதமானது பழக்கப் பட்டுள்ளது. (நமது மதத்திற்குள்ளேயே மேலோட்டமான நம்பிக்கைகள் குறித்துச் சில நூற்றாண்டுகளாகச் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் ஒரு சில பிரிவுகளை விட்டுவிடுவோம்.)

ஆனால்,  வேறுபடும் பன்மைத்தன்மைக்கும், மாற்றத்தை அனுமதிக்காத ஒற்றைத் தன்மைக்கும் இடையே உள்ள வித்தியாசமே இந்து மதத்தை மற்ற மதங்களிடம் இருந்து பிரிக்கும் முக்கிய வேறுபாடு என்று சொல்ல முடியாது;   ஆன்மீக மூலங்களைத் திறந்து வைத்திருப்பதன் மூலம் இந்துத்துவமானது ஒரு திறந்த மூல (open source) மதமாக திகழ்வதும், மாற்றக் கூடாத இறையியலைப் போதிக்கும் மற்ற மதங்கள் மூடிய மூல (closed source) மதங்களாக இருப்பதும்தான் மிக முக்கியமான வேறுபாடு.

“உற்பத்தி செய்யப்படும் ஒரு மென்பொருளை (softwareஐ) வடிவமைத்தல், அபிவிருத்தி செய்தல், மற்றும் வினியோகம் செய்தல் ஆகியவற்றோடு அந்த மென்பொருளை உருவாக்குவதற்காக எழுதப்பட்ட மூல நிரல்களையும் (source codeகளையும்) பயன்பாட்டிற்குத் தரும் அணுகுமுறையே திறந்த மூலம் (open source) என்பதாகும்.”

மனித சிந்தனையை ஒரு மென்பொருள் என்று எடுத்துக் கொண்டு,  தெய்வத்தைப் பற்றிப் பேசினால் — தெய்வம் எனும் கருத்து, அந்தத் தெய்வத்தை அடையச் செய்யும் வழிமுறைகள், அது குறித்த புதுமையான எண்ணங்கள், சிந்தனைகள் மற்றும் தத்துவங்கள் ஆகியவற்றின் மூல நிரல்களை அனைவரும் பயன்படுத்த இந்தியா என்ற நிலப்பகுதி தனது கதவுகளை அகலத் திறந்து வைத்துள்ளது.

அத்தோடு, அந்த மூல நிரல்களை வடிவமைக்கவும், புதிய நிரல்களைக் கண்டறியவும், எப்போதோ கண்டறிந்தவற்றை மீண்டும் அறியவும், கட்டுடைக்கவும், மேம்படுத்தவும், கற்பனை செய்யவும், கற்பனை செய்ததையே மீள்-கற்பனை செய்யவும் அது அனுமதிக்கிறது. அதனால், புலன்களும் ஆன்மாவும் கண்டு துய்த்த அனைத்து வித ஆன்மீக அனுபவங்களையும் ஆராய்ந்தும், அனுபவித்தும், கொண்டாடியும், பதிவு செய்தும் வைத்துள்ளது அந்நிலப்பகுதி.

chhinnamasta

இறை மறுப்பாளர்கள், பெண் தெய்வங்களை வழிபடுபவர்கள், போதை, புணர்ச்சி, புலால் மூலமாக இறையைத் தேடும் பதிதர்கள், சாம்பலைப் பூசிய துறவிகள், த்வைதிகள், அத்வைதிகள், சூனியவாதிகள், புலன் இன்பவாதிகள், கவிகள், பாடகர்கள், சீடர்கள், புனிதர்கள், குழந்தைகள், விலக்கப் பட்டவர்கள்…….

இவர்கள் அனைவருமே இந்து எனும் மூல நிரலில் பல வரிகளைச் சேர்த்திருக்கிறார்கள்.

இந்தியாவின் கடவுள் பணி திட்டம் (the God Project) என்று நான் அழைக்க விரும்புகிற இந்த இந்துத்துவம் உண்டாக்கிய விளைவுகள் வியப்பில் தள்ளாட வைக்கின்றன. மனத்தின் இயல்பு, நனவுணர்வு (conciousness),  மானுட நடத்தை, மற்றும் ஒருவரது மனத்தில் செயல்படக் கூடியவை என அடையாளம் காணப்பட்ட எண்ணிலடங்கா வழிமுறைகள் ஆகியவற்றால் இந்த ஞானக் களஞ்சியம் உருவாகியுள்ளது.

இதில் உள்ள விஞ்ஞானங்கள், நம்பிக்கைகள், மற்றும் அனுபவங்கள் ஒப்பிட முடியாதவை. மனத்தால் அறிதல் (mental cognition), புரிந்து கொள்ளுதல் (perception), தன்னுணர்வு (awareness), மற்றும் நடத்தை உளவியல் (behavioral psychology) ஆகியவை குறித்து பல சொல்லாடல்களை வார்த்தைகளை, வேறு எந்தப் பழைய மற்றும் நவீன மொழிகளிலும் இல்லாத அளவு, ஸம்ஸ்க்ருத மொழியானது தனது சொற்களஞ்சியத்தில் கொண்டுள்ளது.

dialogue

இந்த இந்திய மூல நிரலின் இதயமாக இருப்பவை வேதங்கள். அவை “ஆராய்தலே” (inquiryயே) முதல் தேவை என உடனடியாக நிர்ணயித்துவிடுகின்றன.

இந்துத்துவ இலக்கியங்களில் ஆகப் பழமையான (பூலோகத்தில் உள்ள அனைத்து ஆன்மீக இலக்கியங்களிலும் பழமையானதாகக் கூட கருதத் தக்க) ருக் வேதத்தில் இறை அல்லது ப்ரஜாபதி ஒரு மிகப் பெரிய மர்மமான கேள்வியாகவே வரையறுக்கப் பட்டு, அந்தக் கேள்விக்குப் பதில் தர மக்கள் வரவேற்கப்படுகின்றனர்.

யார்தான் அதனை அறிவார்?

யாரால் அதை எடுத்துரைக்க முடியும்?

அதன் மூலக்காரணம் என்ன?

தேவர்களோ சிருஷ்டிக்குப் பின்னர் வந்தவர்கள் !

அப்படியானால் அது எப்படிப் பிறந்தது? ***

பழைய ஏற்பாட்டின் (Old Testamentன்) இறைவன் கட்டளைகளைக் கத்திக் கொண்டிருக்கும்போது, ப்ரஜாபதி கேட்கிறார்:

“நான் யார் ?”

இந்தத் தெய்வீகக் கேள்வி ஞானப் பெருக்கைத் திறந்துவிட்டது. அந்தக் காலத்தில் இருந்து, குறி சொல்லுவது, இயற்கை வழிபாடு,  மற்றும் அறிதல் குறித்த உன்னதமானதும் சிக்கலானதுமான கோட்பாடுகளினால் நடத்தப்படும் பலிகள், நனவுணர்வின் இயல்பு, மற்றும் க்வாண்டம் இயற்பியல் உள்ளீடாக இந்த இந்திய சித்தாந்தம் பரிணாமத்தின் வெளியைப் பின்பற்றிப் பரிமாணம் அடைந்தது.

வேதங்களில் பேசப்படும் தெய்வங்களோடு இந்தியத் துணைக்கண்டம் வைத்திருந்த உறவின் வரலாற்றுத் தடங்களைத் தொடர்ந்து பின்பற்றினால்,  இந்திய சிந்தனை மரபின் பல நூற்றாண்டுச் சுவடுகளைக் காணலாம். மக்கள் அவர்களது தெய்வங்களோடு வைத்திருந்த உறவுகள் மட்டுமல்ல, அந்தத் தெய்வங்களும்கூட மாறி உள்ளார்கள் என்பது நமது கவனத்திற்கு வருகிற விஷயங்களில் முதலானது.

mahashivaratri_121உதாரணமாக, வேதங்களில் ருத்ரனாகத் தோன்றுகிற சிவன் புயல்களின் தெய்வமாகக் காட்டப்பட்டாலும்,  கூச்சலிட்டுக் கொண்டு திரிபவராக, முக்கியத்துவம் இல்லாத ஒரு சிறுகடவுளாகத்தான் இருக்கிறார்.

பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர் பயத்தைத் தூண்டும் பைரவராக, பசுக்களின் தலைவனான பசுபதியாக, யோகிகளின் தெய்வமாக, அழித்தல் தொழிலுக்கு அதிபதியாக உருவங்கள் எடுக்கிற சிவன் கடைசியாக, அதாவது 9ம் நூற்றாண்டில்,  இந்தப் பிரபஞ்சத்தின் ஆதார மூலசக்தியாக காஷ்மீரில் வடிவெடுக்கிறார். கலக்கலான மாயஜால வேலை.

ஆனால், தெய்வம் எந்த அளவு உரு மாறினாலும், இந்தியச் சித்தாந்தமானது எந்த அளவு நவீனமானதும், பின்நவீனத்துவம் நிறைந்ததுமான ஒரு பார்வையில் நம்மை மெய்மையின் இயல்பை அறியத் தந்தாலும், பழமையான வேதங்கள் எனும் மூல நிரலே முன்னணியிலும், மையத்திலும் உள்ளது.

தெய்வம் குறித்த வரலாற்றுப் பார்வையில், இயற்கை வழிபாடு, குறி சொல்லுதல் போன்றவை விலகிப் போகவே இல்லை என்பதும், தற்போதைய வடிவத்தில் வழிபடப்படும் தெய்வம், வழிபடப்படும் அதே காலத்தில் ஒரு குறியீடாகவும் (symbol) மூலப் படிமமாகவும் (archetype) திகழ்வதோடு, அந்தப் படிமமும் குறியீடும் சுட்டும் தத்துவ விளக்கமாகவும் இருக்கிறது என்பது இந்துத்துவத்தை அடையாளம் காட்டுகிற காரணிகளில் முக்கியமானது.

எடுத்துக் காட்டாக, இறுதியான மெய்யொளியாகக் காட்டப்படும் அதே சிவனே உடலெங்கும் சாம்பலைப் பூசிக்கொண்டு, சுடுகாடுகளில் ஒரு பைத்தியம் போலத் திரிவது, நம்மைப் போன்ற ஆன்மீக அராஜகவாதிகளுக்குப் பேருவகை அளிக்கிறது; அதுவே, மேற்கத்திய இறையியலாளர்களை அதிர்ச்சியில் உறையச் செய்து விடுகிறது.

இதைப் போன்ற தாராளமான விளக்கங்களை தங்களது கடவுளுக்குத் தர மேற்கத்திய மற்றும் மத்திய-ஆசியாவில் பயிலப்படும் ஓரிறை நம்பிக்கைகள் அனுமதிப்பதில்லை. அவை மூடிய மூல (closed source) நிறுவனங்களாகவே தங்களது இருப்பைத் தொடருகின்றன.

“பொதுவாக, உற்பத்தி செய்யப்பட்ட தங்களது மென்கலன்களை மட்டுமே மூடிய மூல நிறுவனங்கள் வினியோகம் செய்கின்றன. அவை வழங்கும் உரிமமானது விற்கப்படும் மென்பொருளின் மூல நிரலிகளை உபயோகிக்க அனுமதிப்பதில்லை. இந்நிறுவனங்களின் வர்த்தக ரகசியங்களாகவே இந்த மூல நிரலிகள் கருதப்பட்டு மற்றவர் அணுகிவிடாமல் பாதுகாக்கப் படுகிறது.”

இந்த மூடிய மூல நிறுவனங்களைப் போலவே, ஒரு வியாபார ரகசியமாக, நாம் அறிய முடியாதபடி தெய்வத்தை அணுகுவதற்கான வழிமுறைகளும் தெய்வ அனுபவங்களும் பாதுகாக்கப்படுவது கிறுத்துவ வரலாற்றை உறுதி செய்யும் விஷயங்களில் மிக முக்கியமானது.  பைபிள், கிறுத்துவின் போதனைகள், அல்லது பழைய ஏற்பாடு போன்றவற்றை கட்டுடைப்பு செய்வதோ, அல்லது கிறுத்துவ சபையின் அடிப்படை அதிகாரத்தை எதிர்த்து அறைகூவல் செய்வதோ கிறுத்துவசபையின் வரலாற்றில் பெரும்பாலும் இல்லாதது. இதைத் தைரியமாகச் செய்ய முன்வந்தவர்கள் பெரும்பாலும் கொலை செய்யப்பட்டனர்.

ஆனால், இந்திய சித்தாந்தத்தில் வியாபார ரகசியம் என்பதே கிடையாது.  தெய்வத்தை, அண்டப் பேருணர்வை, அல்லது பரிபூரண ஞானத்தை அறியத் திறவுகோலாகத் திகழும் யோக மார்க்கத்தின் அடிப்படை ஒவ்வொரு தனிமனிதனிடமும் இருக்கிறது.  அதை பல செயல்முறைப் பயிற்சிகளின் மூலம் அணுகிப் பயன்படுத்தலாம். எளிமையின் அழகோடும், ஆனால் ஆழத்தோடும் திகழும் இந்துத்துவம் பல மில்லியன் வருடங்களாக செழிப்பாகத் தொடர இந்தியாவில் அனுமதிக்கப் பட்டுள்ளது. அதன்படி தெய்வீகத்தைக் கண்டு துய்ப்பதும்,  மீள்-கற்பனையால் அறிவதற்குமான செயல் திட்டம் உனது கைகளில்தான் உள்ளது.

அதுதான் இந்தியாவின் கடவுள் பணி திட்டம் (the God Project).

பின் குறிப்பு:

*** இவை ரிக்வேதத்தின் பிரசித்தமான நாஸதீய சூக்தத்தின் கடைசி பாடலில் உள்ள வரிகள் (There was neither existence,  nor non-existence then என்று தொடங்கும் சூக்தம்).  பிரபஞ்சத்தைப் பற்றிய பெருவியப்பை ஒரு முடிவற்ற கேள்வியாக எழுப்பி அங்கேயே முடிந்து விடுகிறது இந்த சூக்தம்.

headshotமார்க்கெட்டிங் டைரக்டராக முழுநேர வேலை செய்யும் ஜோஷ் ஷ்ரிய், பகுதி நேர எழுத்தாளராக சமூக ஆர்வலராக பகுத்தறிவாளராக இருப்பதோடு இந்திய-திபெத்திய வரலாறு மற்றும் தத்துவங்களிலும் ஆர்வம் உள்ளவர். எதேச்சதிகார சீன-திபெத்திய பிரச்சார பிம்பங்களையும், அமெரிக்காவின் அரசியல் மத சிந்தனைகளையும் பகுத்து ஆராய்வதில் கவனம் செலுத்துகிறார்.

ஹஃபிங்டன் போஸ்ட் எனும் தளத்தில் எழுதுகிறார். அவரைப் பற்றி மேலும் அறிய, ஜோஷ் ஷ்ரிய்ன் அறிமுகம்.

இக்கட்டுரை அவருடைய God Project: Hinduism as Open-Source Faithன் மொழிபெயர்ப்பு.

 

தொடர்புடைய பதிவுகள்

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

 

59 மறுமொழிகள் இது ஒரு ஓப்பன் ஸோர்ஸ் மதம்

  1. sarang on June 14, 2010 at 1:52 pm

    //
    பொதுவாக, உற்பத்தி செய்யப்பட்ட தங்களது மென்கலன்களை மட்டுமே மூடிய மூல நிறுவனங்கள் வினியோகம் செய்கின்றன. அவை வழங்கும் உரிமமானது விற்கப்படும் மென்பொருளின் மூல நிரலிகளை உபயோகிக்க அனுமதிப்பதில்லை. இந்நிறுவனங்களின் வர்த்தக ரகசியங்களாகவே இந்த மூல நிரலிகள் கருதப்பட்டு மற்றவர் அணுகிவிடாமல் பாதுகாக்கப் படுகிறது.”
    //

    இவர்கள் மென் பொருள் விற்பனை மட்டும் செய்தால் தான் பரவா இல்லையே, வாங்க ஆள் இல்லாமல் கடையை மூடி இருப்பார்கள் – அவர்களின் யுக்தியே சுவிசேஷ கூட்டம் அல்லது பயங்கரவாதம் என்ற ஒரு தோற்றம் ஏறுபடுத்தி உலகம் முழுவதும் வைரஸ், ட்ரோஜன் ஹார்ஸ், வார்ம்ஸ் போன்றவற்றை பரவ விடுகின்றனர் (இது அவர்கள் சொல்லும் ஆதி பாவத்திற்கு ஒப்பாகும்) – பின்னர் இதில் இருந்து விடு பட எண்களின் அண்டி வைரஸ் பயன் படுத்தினால் தான் பாவம் தீரும் என்று பிலிம் காட்டி இன்று வரை காலம் தள்ளி விட்டனர்

  2. சோமசுந்தரம் on June 14, 2010 at 9:33 pm

    சிறந்த கட்டுரை. இந்து மதத்தை தொலைநோக்கு பார்வையுடன் கொண்டு செல்லும் கட்டுரை.
    அதில் சில கருத்து மாறுதல்கள்.
    ௧. //மனத்தால் அறிதல் (mental cognition), புரிந்து கொள்ளுதல் (perception), தன்னுணர்வு (awareness), மற்றும் நடத்தை உளவியல் (behavioral psychology) ஆகியவை குறித்து பல சொல்லாடல்களை வார்த்தைகளை, வேறு எந்தப் பழைய மற்றும் நவீன மொழிகளிலும் இல்லாத அளவு, ஸம்ஸ்க்ருத மொழியானது தனது சொற்களஞ்சியத்தில் கொண்டுள்ளது.//
    இது தமிழ் மொழியில் உள்ள சித்தாந்த கருத்துக்கள் மீது புலமை இல்லாததை காட்டுகின்றது. மனத்தால் அறிதல் பற்றி சைவ சித்தாந்தத்தில் பல அறிய புதிய கருத்துக்கள் உள்ளன.

    ௨. // பசுக்களின் தலைவனான பசுபதியாக//
    இங்கே பசு என்பது உயிர்களை குறிக்கும், பசுபதி என்பவன் உயிர்களுக்கு எல்லாம் பதியாக உள்ளவன். தவறாக இங்கே கூறப்பட்டுள்ளது.

    ௩. //உதாரணமாக, வேதங்களில் ருத்ரனாகத் தோன்றுகிற சிவன் புயல்களின் தெய்வமாகக் காட்டப்பட்டாலும், ஒரு கோமாளி போல ஊளையிட்டுக் கொண்டு திரிபவராக, முக்கியத்துவம் இல்லாத ஒரு சிறுகடவுளாகத்தான் இருக்கிறார்//
    இது முற்றிலும் தவறானது. சிவனை எங்கும் சிறுகடவுளாக காட்டப்படவில்லை. அப்படி எங்காவது காட்டப்படுமேயானால் அது நமது தருமத்திற்கு மாறானது.

  3. reality on June 15, 2010 at 7:52 am

    இந்த ஆன்மீகத் தேடலினால் தான் , இந்துக்கள் ‘கிறித்தவ’ மிக மிகச் சாதாரண, கல்வி முறையை வெகுநாட்களாகப பின்பற்றாமல் இருந்து, அன்னியர்களிடையே ‘கல்வி அறிவில் பின்தங்கிய நாடு’ என ஏளனப்பட்டு, தற்போது, அவவேளணத்தைக் களையும் பொருட்டு, ஆன்மிகப் பாதையிலிருந்து விலகி, தங்களால் அதுவும் முடியுமெனவும் அதை எப்போதோ செய்து விட்டோம் எனவும், மேற்க்கத்தியாளர்களுக்கு, அறிவுறுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

  4. Rama on June 15, 2010 at 8:40 am

    What makes the author Josh Schrei think that Hinduisim existed only for about 5000 years? What happened before 5000 years ago in India? Don’t tell me that 5000 years back,Bharath was a primitive land one day and it’s people found Vedas the next day.This is another Christian lie, being peddled around as an honest historical fact. I find even pious Hindus accept it without any question. This lie was imposed on Hindus ( and to the rest of the world) to credit Bible/ Christian version of creation that the world was created by the Christian God 5000 years ago.They were/are still not able to come to terms with the fact a superior, totally spritiual,peaceful culture/lifestyle existed in our land long before their God’s creation of the world. Our Sanatana Dharma is ageless, our Vedas are timeless and our culture is eternal. Nothing will shake my belief on these fundamentals of Hinduisim.

  5. Raja on June 15, 2010 at 11:37 am

    Please remove the word “Idho” from the title.
    It sounds like marketing our religion (or) as though Hinduism is open-source from now onwards.
    We are neither marketing nor Hinduism has become open-source suddenly now.
    It has been always so.
    So title would be better as “Oru open-source madham”.

  6. R. NATARAJAN on June 15, 2010 at 5:01 pm

    Sir,

    PLS REMOVE THE BUDDHA’S THAT ART.

    I DON’T EXPECT THAT ART IN TAMILHINDU.COM

    PLEEEES…………………………………………………………..

    R. NATARAJAN

  7. pragadheeswaran on June 15, 2010 at 7:14 pm

    கட்ருரை நன்று . அனால் ரொப்பவும் open source ஆ இருந்து தொளசிடோம் போல . நம்ப கிட்டயே உருவி நமக்கே பாடம் நடத்தற அளவுக்கு . There is a proverb ” Pearls and golds are not found on the surfaces ” . என்னதான் நம் முன்னாள் கொட்டிக்கிடந்தாலும் அதை நாம் பின்பற்றுவது இல்லை . ஓஷோ ஒரு புக் ல சொல்லி இருப்பார் நம்முடைய பொகிழத்தை திறக்கும் சாவியை தொலைத்து விட்டோம் என்று .

    இதோ ஒரு ரஷியன் வெப் சைட் .. ஹிந்துஇசம் பற்றிய அற்புத களஞ்சியம்

    http://sivasakti.net/articles/intro-yantra.html

    இதோ இன்னொரு களஞ்சியம்

    http://www.hinduwisdom.info/Hindu_Scriptures.htm

    - பிரகதீஸ்வரன்

  8. R. NATARAJAN
    15 June 2010 at 5:01 pm
    Sir,

    PLS REMOVE THE BUDDHA’S THAT ART.

    I DON’T EXPECT THAT ART IN TAMILHINDU.COM

    PLEEEES…………………………………………………………..

    R. NATARAJAN

    I agree with Mr. R. Natarajan.

    That may not be Buddhas art but that porno picture has no room in Hinduism.

    The Bagavath Geetha shows almost all possible ways of Sprituality, Karma yoga, Dhyana Yoka (Medidation), Ghana Yoka, Bakthi yoka, Worshipping the shapeless form (Avyaktham) …. all has been detailed, but never aremark about Sexulaity as a pth.

    The Vedhas in general and Upanishadhs in particular never told of using Sex for spiritual upliftment.

    Thevaram, Piarabandahangkal … none has any mention about sexual type of spiritulaity

    99. 9% of Hindus does not consider sex as a path of spiritual upliftment or enlightment.

    The introduction of these sexual are due to the barabaric pepole entered into the india, during the fall of Buddhism. In the confused stage of fall of Buddhism, sex cults were intorduced in Indian soceity, which was detailed by Vivekaanadha.

    This sex picture is a denigration to Hinduism.

    We dont condems sex as a whole, its a part of life for house holders, Sex between husband and wife is part of life, Hinduism did not forbid that, Hinduism does not prescribe austerity for House holders.

    But using sex for raising one Spiritully is not part of Hinduism, may be very few hindus resort to that method, they have to be reformed with care.

    //இறை மறுப்பாளர்கள், பெண் தெய்வங்களை வழிபடுபவர்கள், போதை, புணர்ச்சி, புலால் மூலமாக இறையைத் தேடும் பதிதர்கள், சாம்பலைப் பூசிய துறவிகள், த்வைதிகள், அத்வைதிகள், சூனியவாதிகள், புலன் இன்பவாதிகள், கவிகள், பாடகர்கள், சீடர்கள், புனிதர்கள், குழந்தைகள், விலக்கப் பட்டவர்கள்…….

    இவர்கள் அனைவருமே இந்து எனும் மூல நிரலில் பல வரிகளைச் சேர்த்திருக்கிறார்கள்.//

    Hindusim does not reject any one. All the people in the world are considered as children by Hinduism.

    சுவாமி விவேகானந்தரே சொன்னது போல, “மிருகத்தை விட சற்று மேலான நிலையில் இருப்பவரில் இருந்து, இவரும் மனிதரா என்று வியந்து போற்றும் அளவுக்கு அமைதியான மனிதர் வரை இந்து மதம் எல்லோருக்கும் தேவையான ஆன்மீக வழிகாட்டுதலை வழங்கும் மதமாக மதமாக , சூரியனின் கிரகணங்கள் எல்லோரையும் தழுவுவது போல இந்து மதம் இருக்கிறது”.

    அதற்காக மிருகத்தை விட சற்று மேலான நிலையில் இருக்கும் மனிதரின் காம நடவடிக்கைகள் இந்து மதத்தின் ஆன்மீகம் ஆகி விட முடியாது.

    Open source does not mean that those introduced virus elements in the system shall be considered as part of the developers of the system.

    That porn picture depicted under the name of Hinduism is an insult to Hinduism, Hindus, Indians and India.

  9. ந. உமாசங்கர் on June 16, 2010 at 8:17 am

    ///பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர் பயத்தைத் தூண்டும் பைரவராக, பசுக்களின் தலைவனான பசுபதியாக, யோகிகளின் தெய்வமாக, அழித்தல் தொழிலுக்கு அதிபதியாக உருவங்கள் எடுக்கிற சிவன் கடைசியாக, அதாவது 9ம் நூற்றாண்டில், இந்தப் பிரபஞ்சத்தின் ஆதார மூலசக்தியாக காஷ்மீரில் வடிவெடுக்கிறார். கலக்கலான மாயஜால வேலை.///

    This is blasphemy in its absolute form.

    மேலை நாடுகளின் “so called” ஆராய்ச்சியாளர்கள் வேண்டுமென்று உள்நோக்கத்துடன் இப்படியான கருத்துக்களை தங்கள் “ஆராய்ச்சிக் கட்டுரைகளில் இடைச்செருகல் செய்துவிடுகிறார்கள். இது புரியாமல் நம்மவர்களும் இவற்றுக்கு முறையான மறுப்புச் செய்யாமல் விடுவதுடன் இப்படி ஒரு ஆராய்ச்சிக கட்டுரைக்கு ஆதரவான செயல்களிலும் ஈடுபடுகிறார்கள். நம்மவர்களுக்கே உரித்தான இந்த அப்பாவித் தனம்தான் (naivity) கிறித்துவத்துக்குப பாலூட்டி வளர்க்கிறது.

    பரமேஸ்வரன் ஆதியும் அந்தமும் இல்லாதவன் என்பதும் ரிக்வேதத்தின் மையமானவன் என்பதும் எந்த ஆராய்ச்சியாளனும் ஆரம்பத்திலேயே அறிந்துகொள்ளக் கூடிய எளிய பரவலான உண்மை. சரித்திர பூர்வமான சான்ருகளாக 2500 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான சிவலிங்கங்கள் அமைந்த இந்த பாரதத்தில் இப்படிப்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகள் ஏற்கப்படக் கூடாது. வெறுமே மேம்போக்காக எழுதப்பட்ட வரிகளாக இவற்றைக் கருத முடியாது. பார்வைக்கு அதிகம் அறியாததால் எழுதப்பட்டதாக தோற்றம் அளிக்கும் வகையில் எழுதி மறைமுகமாக நமது சரித்திர பண்பாட்டு பாரம்பரிய உண்மைகளை மறைக்கச் செய்யும் கொச்சைப்படுத்தும் முயற்சியாகவே இதைக் கருதவேண்டும். பிரிதொருநாளில் இக்கட்டுரையே சிவபெருமானின் ஆதியைக் கேலி செய்யும் வகையில் நாத்திகர்களாலும் அரசியலாராலும் மாற்று மதத்தாராலும் பயன் படுத்தப் படும் என்பதை மறந்துவிடக்கூடாது. தமிழ் ஹிந்து தளமும் கூட இப்படி அப்பாவியாக (naive) இருப்பது வியப்பளிக்கிறது.

  10. Murali on June 16, 2010 at 9:06 am

    //……இறை மறுப்பாளர்கள், பெண் தெய்வங்களை வழிபடுபவர்கள், போதை, புணர்ச்சி, புலால் மூலமாக இறையைத் தேடும் பதிதர்கள், சாம்பலைப் பூசிய துறவிகள், த்வைதிகள், அத்வைதிகள், சூனியவாதிகள், புலன் இன்பவாதிகள், கவிகள், பாடகர்கள், சீடர்கள், புனிதர்கள், குழந்தைகள், விலக்கப் பட்டவர்கள்…….

    இவர்கள் அனைவருமே இந்து எனும் மூல நிரலில் பல வரிகளைச் சேர்த்திருக்கிறார்கள்…..//

    //……R. NATARAJAN
    15 June 2010 at 5:01 pm
    Sir,

    PLS REMOVE THE BUDDHA’S THAT ART.

    I DON’T EXPECT THAT ART IN TAMILHINDU.COM

    PLEEEES…………………………………………………………..

    R. NATARAJAN………………//

    //………திருச்சிக் கார‌ன்
    …………..

    I agree with Mr. R. Natarajan.

    That may not be Buddhas art but that porno picture has no room in Hinduism…..//

    :) ))) !!

  11. ந. உமாசங்கர் on June 16, 2010 at 10:41 am

    opensource போன்ற நவீன வணிக ரீதியான வார்த்தை ஜாலங்களால் sourceless அதாவது எந்த மூலத்திலிருந்தும் வராத ஆதியும் அந்தமும் இல்லாத சுயம்பிரகாச சக்தியான பரம்பொருளைக் கொச்சைப்படுத்தும் முயற்சியே இது.

    பாரதத்தின் பழம்பெரும் சித்தாந்தங்கள் அனைத்தையும் அல்லாத எதையும் ஓரளவு கூட அறிந்துகொள்ளாமல் வெறுமே மேலோட்டமாக ஒரு கட்டுரையை எழுதியிருக்கிறார் என்று சொன்னால் இக்கட்டுரை ஆராய்ச்சிக்கட்டுரை என்ற தகுதியை உடையதல்ல. சித்தாந்த மரபுகளின்படி பரம்பொருள் அனைத்து ஆன்மாக்களில் உறையும் மெய்ப்பொருள் என்ற பேருண்மையைத் திரித்து ஏதோ பசுக்களை ஆள்பவன் அல்லது மேய்ப்பவன் என்பது போல shepherd நிலைக்குத் தள்ளியிருப்பது கண்டனத்துக்குரியது. கிறித்துவத்தின் தாக்கமாக நாளை ஒரு தேவசகாயம் இக்கட்டுரையை ஆதாரமாக அல்லது மூலமாக அல்லது மையமாக வைத்து சிவபெருமான் என்று ஒன்பதாம் நூற்றாண்டுக்குப் பிற்பட்ட காலத்தில் வழிபடப்படுபவர் பைபிளில் நன்மேய்ப்பன் ( good shepherd ) என்று கூறப்பட்ட ஏசுவே, ஏசு 2000 வருடங்களாக வழிபடப்பட்டவர் இவரே பிற்காலத்தில் ஹிந்துக்களால் பரமசிவனாக வழிபடப்பட்டார் என்று ஒரு குப்பையை உருவாக்கி அதையும் மயிலை பேராயம் திரைப்படமாக எடுக்கும் நிலையில்தான் விழித்துக் கொள்வோமா?

    இது போலவே தமிழ் உள்ளிட்ட ஏனைய பாரதீய மொழிகளின் சிறப்பை அறியாதது போலக் கட்டுரையாளர் எழுதியிருப்பதும் ஆங்கிலேயரின் பிரித்தாளும் சூழ்ச்சியின் தொடர்ச்சியே ஆகும். தமிழின் தொன்மையும் தமிழில் உள்ள தொன்மையான பலதரப்பட்ட ஆளுமையுடைய சொற்சுரங்கமும் மேலை நாடுகளின் உள்நோக்கம் கொண்ட ஆராய்ச்சியாளர்களுக்குத் தெரியாது போவதில் வியப்பில்லை.

  12. C.N.Muthukumaraswamy on June 16, 2010 at 3:03 pm

    டுத்துக் காட்டாக, இறுதியான மெய்யொளியாகக் காட்டப்படும் அதே சிவனே உடலெங்கும் சாம்பலைப் பூசிக்கொண்டு, சுடுகாடுகளில் திரியும் ஒரு பைத்தியம்போலத் திரிவது, நம்மைப் போன்ற ஆன்மீக அராஜகவாதிகளுக்குப் பேருவகை அளிக்கிறது; அதுவே, மேற்கத்திய இறையியலாளர்களை அதிர்ச்சியில் உறையச் செய்து விடுகிறது./

    ரு உமாசங்கர் அவர்களின் கருத்தை முழுமையாக ஆதரிக்கின்றேன். திருமுறைகளில் பேசப்படும் சுடலை, திருநீறு , பேய்க்கணம் என்பன எவை, ஏன் அவ்வாறு கூறப்படுகின்றன என்பனவற்றை இந்துப் பண்பாட்டின் வழி அறியாமல் கட்டுரை எழுதப்பட்டுள்ளது.”இன்பஞ் செய்தலின் சங்கரன் எம்பிரான், இன்ப மாக்கலின் சம்பு இடும்பைநோய், என்பதோட்டும் இயல்பின் உருத்திரன், என்பராலவை” எனக் காஞ்சிப்புராணம் போன்ற தமிழ் நூல்கள் கூறியிருக்க, உருத்திரசிவனை ஊளையிட்டுத் திரிபவராகக் கூறியிருப்பது தவறான செய்தியாகும். open source, outsource என்னும் சொல்லாட்சியே அருவருப்பைத் தருகின்றது.

  13. Pradeep on June 16, 2010 at 3:07 pm

    //வேறு எந்தப் பழைய மற்றும் நவீன மொழிகளிலும் இல்லாத அளவு, ஸம்ஸ்க்ருத மொழியானது தனது சொற்களஞ்சியத்தில் கொண்டுள்ளது//
    அப்படின்னா சமஸ்கிருதத்திலேயே எழுதலாமே ஏன் தமிழில் எழுத வேண்டும். நாமும் சொற்களஞ்சியத்தில் இருந்து நிறைய தெரிந்து கொண்ட மாதிரி இருக்கும்.

  14. கந்தர்வன் on June 16, 2010 at 5:00 pm

    மேலை நாடுகளில் எந்த மதத்தையும் சாராத, பிறந்த கிறித்தவ மதத்தையும் உதறித் தள்ளி விட்டு, எந்த principle-ஐயும் ஆதரிக்காத கிறுக்குப் பிடித்த வர்க்கங்கள் சில உண்டு. அவர்களுக்கு ஏனோ ‘ஹிந்து மதம்’ என்பதில் ஒரு மோஹம் உள்ளது. இப்படித் தான்தோன்றித்தனமாக சிலதை அவர்கள் சொல்வதை மேலோட்டமாகக் கேட்டுப் பார்த்தால் அவர்கள் இந்தியாவையும் சனாதன தருமத்தையும் புகழ்வதாகத் தோன்றும். உற்றுப் பார்த்தால், இவர்களுடைய நோக்கம் என்ன என்பது புரியும்: இவர்களுக்கு ஆண்-பெண் ஈர்ப்பு, சோம்பேறித்தனம், taboo breaking, முதலியவற்றின் மேல் ஒரு பைத்தியக்காரத்தனமான fascination.

    வேதாங்கங்களாகிய சிக்ஷா, வியாகரணம், நிருக்தம், சந்தஸ், நியாய சூத்திரம், (ஜைமினியின்) பூர்வ மீமாம்ச சூத்ரம், (வியாசர் அருளிய) உத்தர மீமாம்ச பிரம்ம சூத்திரம், முதலியவற்றை வைத்தே பிரம்மத்தைப் பற்றிய விசாரமும், தேவதா விஷய விசாரமும் பண்ண முடியும். இதைச் செய்யாமல், “மகாதேவன்”, “பெரியவன் (ஜேஷ்டாய), சிறந்தவன் (ஸ்ரேஷ்டாய)” என்று வேதத்தில் பிரசித்தமாக கூறப்படும் முக்கட்பிரானை “சிறு தேவதை, பைத்தியக்காரன்” என்று எழுதுவதெல்லாம் ஆராய்ச்சியின்மையும் அறியாமையுமே.

    “மூடர்களைக் கண்டு, ‘இதிகாசங்களையும் புராணங்களையும் சரியே பயிலாமல் இந்த அற்ப அறிவினன் எனக்குத் தப்பு அர்த்தம் சொல்லி விடுவானோ?’ என்று வேதம் பயப்படுகிறது” என்பது, ஆதி சங்கரர் முதலியவர்களால் ஐந்தாம் வேதமாகப் போற்றப்பட்ட மகாபாரதத்தில் உள்ள ஒரு சுலோகத்தின் தமிழாக்கம்.

    யாராலும் ஆதரிக்கத்தக்காத, ஆதரிக்கப்படக்கூடாத வாமாச்சாரங்கள் இந்தியாவில் உண்டு. ஆனால் அதையெல்லாம் ‘வேதத்தை ஒட்டியது’ என்று நினைப்பது அசட்டுத்தனம்.

  15. ஜடாயு on June 16, 2010 at 7:12 pm

    // உருத்திரசிவனை ஊளையிட்டுத் திரிபவராகக் கூறியிருப்பது தவறான செய்தியாகும் //

    முனைவர் ஐயா கூறியிருப்பது மிகவும் சரி. வேத இலக்கியத்தில் ருத்திரனாகிய சிவன் பரம்பொருளாகவே பேசப் படுகிறார். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை சிவ வழிபாட்டில் ஓதப் படுவது ஸ்ரீருத்ரம் என்ற வேத மந்திரம்.. ”நம: சிவாய ச சிவதராய ச” என்று பஞ்சாட்சரத்தையும் “த்ரயம்பகம் யஜாமஹே” என்ற மிருத்யுஞ்சய மகா மந்திரத்தையும் உள்ளடக்கிய உத்தமமான வேத துதி இது. எனவே ருத்திரன் ”முக்கியத்துவம் இல்லாத ஒரு சிறுகடவுளாகத்தான் இருக்கிறார்” என்பது தவறான கருத்து.

    ரிக்வேத தெய்வப் படிமங்கள் பரிணாமம் அடைந்து பின்னாளைய புராண தெய்வங்களின் படிமங்கள் உருவானது குறித்து ஸ்ரீஅரவிந்தர் போன்ற இந்து ஞானிகள் அருமையான விளக்கங்களை அளித்திருக்கிறார்கள். மிகப் பரந்த சமய, கலாசார, தத்துவ வெளியைக் கருத்தில் கொள்ளாமல் அதனை விளக்க முடியாது.. சுதந்திர நோக்கு என்ற ஒரு விஷயத்தில் open source software உடன் இதனை ஒப்பிடுவது சரிதான். ஆனால் அது முழுமையான உதாரணம் அல்ல.

  16. ஆனந்த கணேஷ் on June 17, 2010 at 6:52 am

    பொதுவாக அங்கீகரிக்கப்பட்ட ஒழுக்கவியலே உண்மையான ஒழுக்கவியல், பிறிதெல்லாம் ஒழிக்கப்படவேண்டியவை என்று நம்பும் மனநிலை ·பாசிசம். மார்க்ஸியம் மேலைநாட்டில் இதேபோன்ற கூட்டுவாழ்க்கை குழுமியங்களாகவே ஆரம்பித்தது. ஆகவேதான் அதற்கு கம்யூன்கள் என்று பெயர். இஸ்லாமும் கத்தோலிக்க மதமும் ஒரு சராசரி ஒழுக்கவியலை வைத்து பிற அனைத்தையும் ஒடுக்க முயல்கின்றன. அது போல கம்யூனிஸ்டுகளும் நடந்துகொள்கிறார்கள் என்பது நம் சமூகத்தின் சிந்தனைச் சீரழிவையே காட்டுகின்றது என்றார் நித்யா.

    சராசரியை கொண்டு மீறல்களை ஒடுக்கும் சமூகம் ·பாஸிஸ சமூகம். மீறல்களுக்கு எந்நிலையிலும் வாய்ப்பளிக்கும் சமூகமே உண்மையான ஜனநாயக சமூகம். இந்தியா பல நூற்றாண்டுகளாக , விதிவிலக்கான தருணங்களைத் தவிர்த்தால், அப்படித்தான் இருந்துள்ளது. பல்வேறு நம்பிக்கைகளும் மதங்களும் சமூகக்குழுக்களும் இணைந்து வாழ்ந்த பூமி இது. ஆகவே பல்வேறு பரிசோதனைகள் நடந்த இடம்.

    ஆனால் சமீப காலமாக இந்தியாவில் சராசரியினரின் குரல் ஜனநாயகத்தின் பேரால் சிறப்புவிழுமியங்களுக்கு எதிராக எழுப்பப் படுகிறது. எண்பதுகளில் வங்கத்தின் ஆனந்தமார்க்கிகள் வங்க அரசாலும் கட்சியாலும் வன்முறை மூலம் ஒடுக்கப்பட்டனர். ஓஷோவின் ஆசிரமங்கள் அவதூறுக்கு உள்ளாகி கிட்டத்தட்ட செயலிழக்கச் செய்யப்பட்டன. தமிழகத்தில் மெய்வழிச்சாலை தமிழக அரசால் ஒடுக்கப்பட்டது. இவை எதிலுமே எந்தவகையான குற்றங்களும் கண்டுபிடிக்கப்படவில்லை.

    ஆனாலும் இவற்றை குற்றகரமான குழுமியங்கள் என்று அரசும் , அரசியல்கட்சிகளும், ஊடகங்களும் சித்தரித்தன. இவற்றின் ஒதுங்கிய தன்மை, அசாதாரணத்தன்மை காரணமாகவே சாதாரண மக்கள் இவற்றை எளிதில் வெறுக்க ஆரம்பித்துவிடுவார்கள். இவற்றை பற்றி எந்த வகையான கதைகளையும் கட்டிவிட்டால் மக்கள் நம்புவார்கள். நாம் ஜனநாயகத்தின் பெயரால், மக்களின் பெயரால், மத்தியகால மதவெறி அரசுகளின் மனநிலையை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறோம்.

    பொதுச்சமூகத்தின் மீது மோதாத கிறுக்குத்தனங்களுக்கு இடம் கொடுக்கும் சமூகமே ஆரோக்கியமான சமூகம். அங்கேதான் தனிமனித அறிவுத்தேடலுக்கும் ஆன்மீகத்தேடலுக்கும் கலை வெளிப்பாட்டுக்கும் இடம் இருக்க முடியும். அதுதான் தன்னைத்தானே மறுபரிசீலனை செய்துகொள்ளவும் தன்னை புதிய வழிகளில் செலுத்திக்கொள்ளவும் முயன்றுகொண்டிருக்கும் சமூகம்.

    இந்தியா எத்தனையோ நூற்றாண்டுகளாக அப்படித்தான் இருந்துகொண்டிருக்கிறது. ஏனென்றால் இங்கே உள்ள மையமதங்களான இந்து,சமண,பௌத்த மதங்கள் கூட்டான சராசரியான ஆன்மீகத்தை முன்வைப்பவை அல்ல. அனைவருக்கும் ஒரே வழியைக் காட்டக்கூடியவை அல்ல. ஒவ்வொருவரும் தன் ஆன்மீக ஈடேற்றத்தை தன் சொந்த வழியில் தானே தேடிச்செல்ல வலியுறுத்துபவை அவை. ஆகவேதான் மாபெரும் ஆலயங்களின் மூலச்சிலையாக சிவலிங்கத்தை வைத்து வழிபடும் சைவமதம் லிங்கம் மீது ஏறி அமர்ந்து தியானம்செய்யும் அகோரியையும் தனக்குள் அனுமதிக்கிறது. பிணத்தை சிவனுக்கு படைப்பவனும் சைவன்தான் என்கிறது.

    இந்த மாபெரும் பன்மைத்தன்மையை எதன் பொருட்டேனும் இந்தியாவும், இந்து-பௌத்த-சமண மதங்களும் இழக்குமென்றால் இந்தியா அழிந்துவிட்டதென்றே பொருள். இந்தியா கத்தோலிக்க அல்லது இஸ்லாமிய அல்லது கம்யூனிச அரசுமையச் சமூகங்களைப்போல சீராக வெட்டி ஒதுக்கப்பட்ட ஒரு சமூகமாக ஆகும் என்றால் அதன்பின் இது இந்தியாவே அல்ல.

    ……

    நவீனக் கல்வி கற்ற இந்திய மனம் இன்று அதன் பண்பாட்டு வேர்களில் இருந்து வெகுவாக துண்டிக்கப்பட்டு விட்டிருக்கிறது. அது பள்ளியில் கற்ற ஒழுக்கவியலையே அது ஒரே வாழ்க்கைமுறையாக எண்ணுகிறது. ஞானத்தேடலின் பல்வேறு வழிகளை அதனால் புரிந்துகொள்ள முடிவதில்லை. ஆகவேதான் திகம்பரச் சமணர்மேல் கல்லெறிதல் போன்ற காட்டுமிராண்டித்தனங்கள் இங்கே நிகழ்கின்றன. ஒரு சுதந்திரச் செயல்பாட்டை அமெரிக்கவகை தாராளவாதத்தால் விளக்கினால் மட்டுமே நம்மால் ஏற்க முடிகிறது. ஒரு தாந்த்ரீகக்குழுவை வெறுத்து ஒதுக்கும் நம் நவீன அறிவுஜீவிகள் ஒரு நிர்வாணசிகிழ்ச்சை நிலையத்தை சாதாரணமாக ஏற்றுக்கொள்வார்கள்.

    நாம் நம்முடைய மரபின் பின்னணியில் வைத்து தாந்த்ரீகம் போன்றவற்றை புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. அவை நம்முடைய பாரம்பரியத்தின் தவிர்க்க இயலாத பகுதிகள். அவை உண்மையில் என்ன என்று நமக்கு தெரியாது. அவற்றைப்புரிந்துகொள்ள அவற்றுக்குள் செல்வதொன்றே வழியாகும். ஆனால் அது எல்லாருக்கும் சாத்தியப்படாது. அவை உண்மையில் பயனுள்ளவையா, அவை ஏன் நீடிக்கின்றன எதுவுமே நம் பொதுப்புத்திக்கு எட்டுவதில்லை. ஆகவே அவை நம் பொதுச்சமூகத்திற்கு நேரடியான தீங்கு விளைவிக்காதவரை நம் சமூகத்தில் அவை இருந்தாகவேண்டும்.

    இல்லையேல் நமக்கு ஏற்படும் இழப்புகள் சாதாரணமானவை அல்ல.

    http://www.jeyamohan.in/?p=5193

    The name Rudra is still used as a name for Shiva. In RV 2.33, he is described as the “Father of the Maruts”, a group of storm gods.[38] Furthermore, the Rudram, one of the most sacred hymns of Hinduism found both in the Rig and the Yajur Vedas and addressed to Rudra, invokes him as Shiva in several instances, but the term Shiva is used as a epithet for Indra, Mitra and Agni many times.

    The identification of Shiva with the older god Rudra is not universally accepted, as Axel Michaels explains:

    To what extent Śiva’s origins are in fact to be sought in Rudra is extremely unclear. The tendency to consider Śiva an ancient god is based on this identification, even though the facts that justify such a far-reaching assumption are meager.[39]

    http://en.wikipedia.org/wiki/Shiva#Rudra

  17. C.N.Muthukumaraswamy on June 17, 2010 at 1:10 pm

    இந்த ஆங்கிலக் கட்டுரை நண்பர் சேஷத்ரி இராஜகோபாலன் அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டு திண்ணையில் (13 -6-2010)ல் வெளிவந்துள்ளது. தமிழ்மொழி நடையில் இரண்டுகட்டுரைகளும் சற்று வேறுபடுகின்றன.

  18. ஆனந்த கணேஷ் on June 17, 2010 at 1:36 pm
  19. ந. உமாசங்கர் on June 17, 2010 at 3:13 pm

    Regarding Panchakshara Mantram – Aum Namaschivaya -
    The same Wikpedia Article says thus as footnote 162
    ^ It is first encountered in an almost identical form in the Rudram. For the five syllable mantra see: Kramrisch, p. 182.

    What is unfortunate is that one Michels has written some book with half baked knowledge and that is quoted and accepted as a source by Wikipedia.

    It is very difficult to correct web sites like Wikipedia, because if we correct it by editing today, we may keep a watch on it for say one or two years. After sometime or so, someone else edits it changing it from the correct position in our heritage. I am frustrated with this effort.

  20. அரவிந்தன் நீலகண்டன் on June 18, 2010 at 6:06 am

    ருத்திரன் உண்மையிலேயே வேதத்தில் minor deity தானா என்பது குறித்து இந்தியவியலாளர்களுக்குள்ளேயே கடுமையான விவாதம் நடக்கிறது. ஸ்டெல்லா க்ராம்ரிஸ்க் (Stella Kramrisch), சிவனது சிலை வடிவ பரிணாம வளர்ச்சி குறித்து சிவராமமூர்த்தி ஆகியோர் எழுதியிருக்கும் விஷயங்களைப் படித்தால் ருத்திரனை minor deity என 19 ஆம் நூற்றாண்டு மேற்கத்திய இந்தியவியலாளர்கள் சொன்ன அடிப்படையில் நம்மவர்கள் அப்படியே அதை மீண்டும் மீண்டும் கூறுவது எவ்வளவு தவறென்பது தெரியும். ஒன்பதாம் நூற்றாண்டில்தான் சிவன் முக்கிய தெய்வமாக மாறுவதாக கட்டுரையாளர் சொல்லுகிறார். ஆனால் சங்க இலக்கியங்களிலேயே சிவன் முக்கிய முதுபெரும் மூத்த தெய்வமாக உருவாகிவிட்டார். கிமுவில் கனிஷ்கர் காலத்து நாணயுங்களிலேயே திரிசூலம் கொண்டு விடையேறும் சிவன் இடம் பெறுகிறார். முகலிங்கங்கள் கிமு இரண்டாம் நூற்றாண்டிலிருந்தே கிடைக்கின்றன. கிமுவைச் சார்ந்த குடிமல்லம் லிங்கத்தில் வேதவிவரணப்படியே ருத்ரனாக சிவன் லிங்கத்துடன் இணைந்து காணப்படுகிறார். எனவே சைவர்கள் கோபப்படுவதில் பொருள் இல்லாமல் இல்லை.

  21. பனித்துளி on June 18, 2010 at 6:58 am

    கட்டுரையாளர் பாராட்டுக்கு உரியவர். ஆவணப்படுத்தப் பட்ட, அனைவருக்கும் கிடைக்கும்படி செய்யப்பட்ட தகவல்களைக் கற்றறிந்து இந்து மதம் பற்றிய புரிதலை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார். அது பாராட்டுக்கு உரியது.

    ஓப்பன் ஸோர்ஸாக இந்து மதம் இருக்கிறது என்பது மிகச் சரி என்றும், அதற்கு விதிவிலக்குகள் இல்லை என்றும் எனக்குத் தோன்றுகிறது. இந்தப் புரிதல் தவறு என்று சொல்பவர்கள் அது ஏன் தவறு என்பதைச் சொல்லவில்லை.

    இந்தக் கட்டுரை ஆசிரியரின் ஆய்வையும் ஆய்வுத் தகவலகளையும் பற்றிக் குறை சொல்லும் முன் வெளிநாடுகளிலும், இந்தியாவிலும் எத்தகையோர் ஆராய்ச்சிகளில் ஈடுபடுகின்றனர் என்பதைக் கவனிக்க வேண்டும்.

    நான்கு வித ஆராய்ச்சியாளர்கள் உள்ளனர்.

    1. இந்தியாவை, இந்து தர்மத்தைக் குறை சொல்லும் கிறுத்துவ-யூரோப்பிய மையவாதப் பார்வை உடையவர்கள்.

    2. இந்தியாவோடு நெருங்கிய தொடர்பு கொண்டு, இந்து தர்மம் பற்றி நேர்மையான ஆராய்ச்சிகளை மேற்கொள்பவர்கள்.

    3. தங்களது சுயதேடுதல்களுக்காக இந்து மதம் பற்றிக் “கிடைக்கும் தகவல்களின்” அடிப்படையில் அறிந்து வியந்து பாராட்டுபவர்கள்.

    4. வியாபார மற்றும் சுயலாப நோக்கங்களுக்காகத் தகவல்களில் இருப்பவற்றைத் திரித்தும், இல்லாதவற்றை உருவாக்கியும் பிழைப்பவர்கள்.

    இந்த நான்கு பிரிவுகளில், மூன்றாவது வகை ஆட்களே தொடர்புப் புள்ளிகள். எனவே, மிக முக்கியமானவர்கள்.

    இந்தக் கட்டுரை ஆசிரியர் மூன்றாவது வகை. இந்து மதம் ஒரு ஓப்பன் ஸோர்ஸ் என்ற உண்மையை வெளிப்படுத்தியதன் மூலமாகவும், அவர் மூன்றாவது வகை ஆராய்ச்சியாளர் என்பதாலும் அவர் மிக முக்கியத்துவம் உள்ளவர். இவர் முன்வைக்கும் கருத்துக்கள் மற்ற ஆய்வாளர்களைவிட வீச்சு அதிகம் கொண்டவை.

    இந்தக் கட்டுரையாளர் அவருக்குக் கிடைத்தத் தகவல்களின்படி கட்டுரையை எழுதி உள்ளார். அதில் எந்தவிதமான தவறான உள்நோக்கத்தையும் நான் காணவில்லை.

    ஆனால், நமது புரிதலில் இருந்து மாறுபடுகிறார் என்பதற்காக மூன்றாவது வகை எழுத்தாளர்களை, முதல்வகை எழுத்தாளர்களாகக் கருதி ஒதுக்கினால், நஷ்டம் அவர்களுக்கு இல்லை. அவர்கள் தொடர்ந்து தங்களது சரியான, தவறான புரிதல்களை முன்வைத்துக் கொண்டுதான் இருக்கப் போகிறார்கள்.

    இத்தகைய எழுத்தாளர்கள் முன்வைக்கும் சரியான புரிதல்களைப் பாராட்டுவதோடு, தவறான புரிதல்களைச் சுட்டிக் காட்டவும் செய்ய வேண்டும். செய்தால், அவர்கள் திருத்திக் கொள்வார்கள்தான்.

    இவர்களை வேண்டாம் என்று ஒதுக்கினால் கண்ணை மூடிக்கொண்டு உலகம் இருட்டு என்று பிரமையில் காலம் கடத்துவதை மட்டுமே நாம் செய்யக் கூடியது.

    கட்டுரையைக் குறை சொல்பவர்கள் ஆதார பூர்வமாக அதில் உள்ள தவறுகளைப் பற்றி விளக்க முன்வர வேண்டும். அத்தோடு, அதில் உள்ள சரியான விஷயங்கள் எவை என்பதையும் சொல்ல வேண்டும்.

    சமஸ்கிருத இலக்கியங்களில் உள்ள உளவியல் வார்த்தைகள் யூரோப்பியர்களாலும், மற்றவர்களாலும் ஆவணப்படுத்தப் பட்டுள்ளன. அந்த ஆவணங்கள் அனைவருக்கும் கிடைக்கும்படி செய்யப் பட்டுள்ளன. தமிழுக்கு அப்படி எதுவும் நடக்க வில்லை. உண்மை இங்கனம் இருக்க ஸம்ஸ்கிருதத்தை எப்படிப் பாராட்டலாம், ஏன் தமிழைப் பாராட்டவில்லை என்று குதிப்பது வெறும் உணர்ச்சியின் வெளிப்பாடு மட்டுமே.

    அதே போல, இந்தியாவைப் பற்றிய இந்து மதம் பற்றிய வரலாற்றுப் புரிதல் கிறுத்துவ-யூரோப்பிய மையவாத ஆய்வாளர்களால் தவறாகச் சித்தரிக்கப்பட்டு, அந்தத் தவறான சித்திரங்கள் மக்கள் அனைவருக்கும் கிடைக்கும்படி செய்யப்பட்டுள்ளது. ஆனால், உண்மையான கருத்தாக்கம் நமது வேத இலக்கியங்களில் எவ்வாறு உள்ளது என்பது பற்றி மூடிய கருத்தரங்குகளுக்குள் மட்டுமே பேசப்படுகிறது. அந்தத் தகவல்கள் அனைவருக்கும் கிடைக்கும்படி செய்யப்பட வேண்டும்.

    என்னைக் கேட்டால், விக்கிப்பீடியாவில் உள்ளதுதான் உண்மை என்பேன்.

    ஓப்பன் ஸோர்ஸான விக்கிப்பீடியாவில் நமது கருத்துக்களை ஆதாரங்களோடு தெரிவிக்கும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால், அதைச் செய்யாமல் விக்கிப் பீடியாவைக் குறை சொல்லுகிறோம். ஆடத் தெரிந்தும், தெருக்கோணல் என்று போனால் யாருக்கு நட்டம்?

    சாதி, இன வெறியர்கள் விக்கிப்பீடியாவில் தரும் உழைப்பின் கால்பங்கு தந்தாலே போதுமானது.

    வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. ஆனால், சோம்பி இருக்கிறோம். விவேகானந்தர் கண்டு சலித்த அதே சோம்பல். இதை உதறிவிட்டு உண்மையை உரக்கச் சொல்லவேண்டும்.

    மிக முக்கியமாக, உலக அளவில் நடைபெறும் வரலாற்று மாநாடுகளில் ஆரியர்-திராவிடர் கருத்துக்கள் உள்ளிட்ட தவறான கருத்துக்களை, “இந்திய வரலாற்றாசிரியர்கள்” மறுத்து ஆதாரங்களை வைக்க வேண்டும். அப்படி எதுவும் இதுவரை நடைபெறவில்லை என்றுதான் கேள்விப் படுகிறேன்.

    இவற்றைச் செய்ய வேண்டியது அவசியம். இல்லை என்றால், நாம் நமது கண்களையும் காதுகளையும் மூடிக்கொண்டு அபச்சாரம், அபச்சாரம் (blasphemy) என்று கத்திக் கொண்டுதான் இருப்போம். தொண்டை வறண்டபின், காதுகள் வலி தாங்காமால் துடிக்கும்போது நாம் எதை அபச்சாரம் என்று கத்துகிறோமோ அதையே ஏற்றுக் கொள்ள வேண்டி வரும்.

    ஆனால், பக்தி என்ற பெயரில் கண்களையும், காதுகளையும் மூடிக்கொண்டு கத்துவதை மட்டுமே நாம் செய்து வருகிறோம்.

    தமிழ் மொழியில் உள்ள உளவியல் வார்த்தைகள், மற்றும் சிவனின் வரலாற்றுப் பெருமை போன்றவை ஆவணப்படுத்தப்பட்டு, இதைப் போன்ற கட்டுரையாளர்களுக்கும், மற்ற பொதுமக்களுக்கும் தெரிவிக்க வேண்டியதும் சிவபக்தர்களின் பணியே.

    இவை எதுவும் இந்து மதம் ஒரு ஓப்பன் ஸோர்ஸ் என்ற உண்மையை மறைக்க முடியாது. மறுக்கவும் முடியாது.

  22. C.N.Muthukumaraswamy on June 18, 2010 at 10:27 am

    ஆங்கிலக் கட்டுரையசிரியர் ஜோஷ் உண்மையிலேயே இந்திய சமயமரபின் பன்முகத்தன்மையை ஏற்றுப் போற்றுகின்றார் எனில் மகிழ்ச்சியே. அவருடைய உள்ளம் தூயதாயின் அவருடைய மொழியிலோ அல்லது மொழிபெயர்ப்பிலோ உள்ள நெருடல்களைப் பொருட்படுத்த வேண்டுவதில்லை. ஆனால் தவறான புரிதல்களைச் சுட்டிக் காட்ட வேண்டிய கடமையும் உள்ளது

  23. களிமிகு கணபதி on June 18, 2010 at 12:27 pm

    முத்துக் குமாரசாமி ஐயா,

    புலமையுடையவருக்கான பக்குவ மொழி சொன்னீர்கள். சரியான கருத்துக்களைப் போற்றுவதோடு தவறைச் சுட்டிக் காட்டுவதும் அவசியமே.

    வேதங்களில் ருத்ரன் சிவனாகத் திகழ்ந்த வரலாற்றுப் பார்வை குறித்து இந்தப் புத்தகம் சொல்லுகிறது: http://www.exoticindiaart.com/book/details/IDD253/

    ஒரு கேள்வி. கோமாளி போல ஊளையிட்டுக்கொண்டு ஒரு funny manஆக, ஒரு howlerஆக இருப்பது கீழானதா? நமது கடவுள் அப்படியும் இருக்கிறான் என்று சொல்லுவதில் என்ன தவறு?

    கூத்தாடுவதும், கூச்சலிடுவதும் இந்து மரபிலுள்ளோர் செய்வதுதானே? சபரி மலையில் ஐயப்ப மார்கள் ஆடும் ஆட்ட பாட்டங்கள்கூட இந்த கட்டுப்பாடற்ற, அபிப்பிராயங்கள் பற்றிக் கவலைப்படாத கட்டற்ற களியாட்டத்தின் வெளிப்பாடுதானே?

    அத்தகைய வெளிப்பாடு தவறா?

  24. thiruchchikaaran on June 18, 2010 at 2:16 pm

    அசத்தோமா சத்கமய – உண்மைக்கு செல்வதைக் குறிக் கோளாக வைத்து சத்யம் எவ ஜெயதே , உணமையே வெல்லும் என்று சொல்லும் ஒரே மதமாக இந்து மதம் இருக்கிறது.

    உண்மையை தேடி அடைவதை குறிக்கோளாக வைக்கும் ஒரே மதமாக, கண்ட உண்மையை ஏற்றுக் கொள்ள சொல்லும் ஒரே மதமாக் இந்து மதமே உள்ளது. இதை விட என்ன இன்னும் open source தேவை?

    உலகிலேயே ஆன்மீக உயர்வுக்கு உதவும் எல்லா முறைகளையும் ஆதரித்து அரவணைக்கும் ஒரே மதமாக இந்து மதம் மாத்திரமே, உள்ளது. வெறுப்பே இல்லாமல் வாழ்வது (அத்வேஷ்டா) , தாவர , ஜங்கம உள்ளிட்ட எல்லா உயிர்க்ளைடமும் சிநேகமாக இருக்க வேண்டும் ஆகிய மிகச்சிறந்த கொள்கைகளை கூறும் ஒரே மதமாக இந்து மதமே உள்ளது.

    இந்த மதத்தை உலக மக்கள அனைவருக்கும் சரியான வகையில் உணர்த்துவது இந்த உலகுக்கு நாம் செய்யும் நன்மை ஆகும்.

    அதே நேரம் இந்துக்களுக்கு இந்து மதத்தைப் பற்றிய திரிபு வாதங்கள் செல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இந்து மதம் புணர்ச்சி வழியான ஆன்மீகத்தை சொல்லவேயில்லை. நல்ல ஒரு மதத்தை சரியாகப் புரிந்து கொள்ளாமல் அவசரத்திலே கெடுதியான விடயங்களை புகுத்த வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன். இந்து மதம் பற்றி யாருக்காவது சந்தேகம் இருந்தா ல் , முதலில் உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்களிடம் இந்தக் கட்டுரையில் உள்ள படங்களுடன் இந்தக் கட்டுரையைப் பிரின்ட் எடுத்து கொடுத்து , படிக்க சொல்லுங்கள். அவர்கள் சொல்வார்கள், இந்து மதத்தில் ஆன்மீக உயர்வுக்கான வழிகளில் புணர்ச்சி , போதை இதற்க்கு இடம் இருக்கிறதா என்று.

    மற்றபடி கட்டுரையாளர் இந்து மத்தைப் பற்றி முழுதுமாக அறிந்திருக்க வாய்ப்பு இல்லாமல் இருந்திருக்கலாம். அவரைக் குறை சொல்லவில்லை. அவர் எழுதியதை வெளிடும் போது விளக்கம் கொடுக்கக் வேண்டியது அவசியம். இப்போது பல இந்து இளைங்கர்களுக்கே இந்து மதம் பற்றி சரியாக தெரியவில்லை. இதிலே புணர்ச்சி, போதை என்று இழுப்பது மயக்கத்தின் பாதையே. மயக்கத்தில் இருந்து வெளியே வாருங்கள்.

  25. களிமிகு கணபதி on June 18, 2010 at 4:22 pm

    @ திருச்சிக்காரர்

    ஐயா,

    புணர்ச்சி, போதை, புலால் வழியாக இறையைத் தேடும் பல பிரிவுகள் இந்து மதத்தில் உண்டு.

    ஆனால், அவை சமூகத்தைப் பாதிக்காத வகையில் இந்து சமூகம் அனுமதித்தும் வருகிறது.

    இவற்றை இந்து மரபு வெறுத்ததில்லை. வெறுக்கச் செய்வது நாம் கற்ற ஆங்கிலக் கல்வி முறை.

    @ கந்தர்வன்

    “வாமாச்சாரம்” வெறுக்கப் படவில்லை. தாந்த்ரீக சாதகர்களில் பலரால் விலக்கப்பட்டது. சிலரால் பயிலப்பட்டது.

    உண்மையில், வலது-இடது என்ற பிரிவுகள் தெளிவானவை அல்ல. நடைமுறையில் இருக்கும் பல இந்துச் சடங்குகள் வாமாச்சாரர்கள் என்று கீழாக இப்போது அழைக்கப்படுபவர்களால் உருவானவை.

    வைதீக பூஜைகளின்போது செய்யப்படும் பல முத்திரைகள் வாமாச்சார முத்திரைகள் என்று கூடச் சொல்லலாம்.

    இந்து மதத்தையும், அதன் சடங்குகளையும் இணைக்கின்ற ஊடுபாவாக இருப்பது தாந்த்ரீக மார்க்கமே.

    தாந்த்ரீகம் என்றாலே “ஊடுபாயும் தத்துவம்” எனப் பொருள் என்று கேள்விப் பட்டுள்ளேன்.

  26. snkm on June 18, 2010 at 5:56 pm

    நன்றி! அருமையான கட்டுரை!

  27. R. Natarajan on June 18, 2010 at 6:10 pm

    Dear Sir,

    I am sorry this comment is not releated in this post.

    But releated in this time. (tamil manadu at Kovi.)

    All advadismants of manadu in June 23 – 27. BUT NOT IN AANI 9 TO 13th ['AANI' IS ONE OF THE TAMIL CALANDER MONTH]. SO TAMIL IS IDENTIFY IN ENGLISH DATE AND MONTH WHY ?

    WHY…??? EXPOSED IN THIS MATTER IN TAMILHINDU AND TAMIL BLOGPOST’S ?????

    by

    R. Natarajan

  28. @களிமிகு கணபதி

    ஐயா,

    //Ref: @ திருச்சிக்காரர்

    ஐயா,

    புணர்ச்சி, போதை, புலால் வழியாக இறையைத் தேடும் பல பிரிவுகள் இந்து மதத்தில் உண்டு.

    ஆனால், அவை சமூகத்தைப் பாதிக்காத வகையில் இந்து சமூகம் அனுமதித்தும் வருகிறது.

    இவற்றை இந்து மரபு வெறுத்ததில்லை. வெறுக்கச் செய்வது நாம் கற்ற ஆங்கிலக் கல்வி முறை.//

    மன்னிக்க வேண்டும்.

    பகவத் கீதை, உப நிடதங்கள், தேவாரம், திருவாசகம், பிரபந்தங்கள் உள்ளிட்ட எந்த இந்து மதத்தின் முக்கிய நூல்களிலும் பற்றிய குறிப்புகள் எதுவும் எனக்குத் தெரிந்த அளவிலே இல்லை. நீங்கள் தெரிவித்தால் தெரிந்து கொள்வேன்.

    மாறாக புலனடக்கம் பற்றி உள்ளது. எனக்குத் தெரிந்து நான் வசிக்கும் இடத்திலும், நான் இது வரை சென்று பழகிய இந்துக்கள் யாரும், இந்த வகையிலே (புணர்ச்சி, போதை, புலால் வழியாக இறையைத் தேடுவது) இல்லை.

    சிறுவனாக இருந்த போது வைணவர்களோடு வைகுண்ட ஏகாதசி அன்று சொர்க்கவாசல் எனப் படும் நிகழ்ச்சியை பார்த்து இருக்கிறேன். சைவர்களின் ஆருத்ரா தரிசனம் நிகழ்ச்சியைப் பார்த்து இருக்கிறேன்.

    திருச்சியை அடுத்த கலிய பெருமாள் கோவிலில் ராம நவமி விழா லட்சக் கணக்கில் மக்கள் கூடுவார்கள். பெரிய தேர் இழுப்பார்கள். பத்து நாள் உற்ச்சவம்.

    திரவுபதி அம்மன் கோவிலிலே தீ மிதி பார்த்து இருக்கிறேன். தைப் பூசத்திலே அலகு குத்திக் கொள்வதை வியப்புடன் பார்த்து இருக்கிறேன்.

    நான் பல துறவிகளுடன் பழகி இருக்கிறேன், அவர்களின் ஆன்மீக சாதனை முயர்ச்சிக்ளைக் கண்டு இருக்கிறேன். ஹடயோகிகளின் சாதனைகளை பார்த்து இருக்கிறேன்.

    யாரிடமும் புணர்ச்சி, போதை வழி ஆன்மீக முயற்ச்சியை கண்டதோ , கேட்டதோ இல்லை.

    வட இந்தியாவிலே அகோரிகள் எனப் படுபவர்கள் அவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு, புணர்ச்சியை ஒரு வழியாக உபயோக்கிப்பதாக படித்து இருக்கிறேன். என்னுடைய கேள்வி அவர்கள ஆன்மீகத்திலே முன்னேறி வெற்றி பெற்று இருக்கிறார்களா?

    அவர்களுடைய முறையானது ஒரு இராமகிருஷ்ண பரம ஹம்சரையோ , வீர சிவாஜியையோ, மாறக்கண்டேயனையோ, அப்பரையோ, பட்டினதாரையோ, பாம்பாட்டி சித்தரையோ, நந்தனாரையோ , போகரையோ, நசிகேதசையோ ….. உருவாக்கி இருக்கிறதா?

    இந்த புணர்ச்சி, போதை ஆகியவை எல்லாம் நாகரீகம் இல்லாத் வெளி நாட்டவர் இந்திய சமுதாயத்தில் வந்து கலந்த போது, அவர்க்ளளால் புகுத்தப் பட்டவை என சுவாமி விவேகானந்தர் “இந்திய ரிஷிகள்”என்னும் தலைப்பிலே சென்னையில் ஆற்றிய உரையிலே சொல்லி இருக்கிறார்.

    புத்த மதம் சீர்கெட்டு இருந்த காலத்தி இந்து மதம் மீண்டும் ஆதி சங்கராரல் புனர் நிர்மாணம் செய்யப் படுவார்க்கு இடைப் பட்ட நேரத்திலே புகுத்தப் பட்ட பழக்கங்கள் இவை. என சொல்லி இருக்கிறார்.

    அதை சுத்தம் செய்து மீண்டும் தூய்மையான இந்து மதத்தை கொண்டு வர ஆதி சங்கரர் முயன்றார் எனவும், அந்தப் பணி முடியவில்லை, இன்றளவும் தொடர்கிறது என்றும் சுவாமி விவேகானந்தர் சொல்லி உள்ளார். அது சரிதான் என்பது இப்போது வூர்ஜிதம் ஆகிறது.

    உங்களுக்கு நேரம் கிடைக்குமானால் அந்தக் கட்டுரையைப் படித்துப் பாருங்கள். உங்கள் வீட்டில் பெற்றோரிடம் கேட்டுப் பாருங்கள். நீங்களே சிந்தித்துப் பாருங்கள்.

    இந்து மதம் தூய்மையானது. அதிலே தவறான பழக்கங்கள் இருந்தால் அதை சுத்தம் செய்வோம். நம் மேல் சட்டையில் காக்கை எச்சம் இருந்தால் சுத்தம் செய்ய வேண்டுமேயல்லாது அந்த எச்சத்தையே ஒரு டிசைனாக வைத்து அழகு பார்க்க முடியாது.

    உங்கள் மனதைப் புண் படுத்தும் வகையிலே எழுதி இருந்தால் அதற்காக உண்மையிலே வருத்தப் படுகிறேன். ஆனால் புணர்ச்சி, போதை, சிடிக்கள் இவ எல்லாம் இந்து மதத்தை, புறம்போக்கு நிலம் போல பட்டா போடா அனுமதிக்க முடியாது. நல்ல கருத்துக்களாக இருந்தால் கொண்டு வாருங்கள். இந்து மதம் அதைக் கண்டிப்பாக ஏற்றுக் கொள்ளும்.

    எல்லா ஆன்மீக முறைகளும் (அதாவது உண்மையான ஆன்மீக முறைகள்) வழிபாடுகள் இவை எல்லாம் இந்து மதத்திலே உள்ளன. அருவ வழிபாடு, உருவ வழிபாடு, தியானம், ராக (இசை வழி) ஆராதனை, யோகம் , ஹடயோகம், ராஜ யோகம், கர்ம யோகம், பக்தி, விழாக்கள் …. எல்லாம் ஏற்க்கனவே இருக்கின்றன.

    புணர்ச்சி, போதை, சிடிக்கள் இவ எல்லாம் இந்து மதத்துக்கோ , மக்களுக்கோ தேவை இல்லை, அவை பலவீனத்தையே உருவாக்கும் என்பதை மீண்டும் சொல்லிக் கொள்கிறேன்.

  29. களிமிகு கணபதி on June 19, 2010 at 3:48 pm

    @ திருச்சிக்காரன் அவர்களே,

    இதில் மனம் வருந்த என்ன இருக்கிறது?

    நீங்களும் நானும் புரிதலில் வேறுபடுகிறோம். அவ்வளவுதான். இதில் தவறே இல்லை.

    தாந்த்ரீகம் எல்லாருக்கும் உரியது இல்லை. தாந்த்ரீகத்தின் எல்லா முறைகளையும் எல்லா தாந்த்ரீகர்களும் பயிலுவதும் இல்லை. அவை அபாயமானவை. சாதாரண பொதுமக்களுக்கானவை இல்லை. எனவே, அவை பற்றி நமக்கு அதிகம் சொல்லப் படுவதில்லை. வாமாச்சாரத்தில் இருந்து விலகி இருக்க எச்சரிக்கப் படுகிறோம். விவேகானந்தர் போன்றவர்களால்.

    அது ஏற்றுக் கொள்ளக் கூடியதே. தாந்த்ரீகம் “நமக்குத்” தப்பு. சிலருக்கு அதுதான் சரி.

    எனவே அதை வெறுக்க வேண்டியதில்லை. ஆனால், அதில் இருந்து நாம் விலகுவோம், தள்ளி நின்று வணங்குவோம் என்பதே என் தரப்பு.

  30. சோமசுந்தரம் on June 19, 2010 at 8:47 pm

    திரு பனித்துளி அவர்களுக்கு,

    //சமஸ்கிருத இலக்கியங்களில் உள்ள உளவியல் வார்த்தைகள் யூரோப்பியர்களாலும், மற்றவர்களாலும் ஆவணப்படுத்தப் பட்டுள்ளன. அந்த ஆவணங்கள் அனைவருக்கும் கிடைக்கும்படி செய்யப் பட்டுள்ளன. தமிழுக்கு அப்படி எதுவும் நடக்க வில்லை. உண்மை இங்கனம் இருக்க ஸம்ஸ்கிருதத்தை எப்படிப் பாராட்டலாம், ஏன் தமிழைப் பாராட்டவில்லை என்று குதிப்பது வெறும் உணர்ச்சியின் வெளிப்பாடு மட்டுமே.//
    இது முற்றிலும் தவறானது. தமிழ் மொழி ஆவணப்படுத்தவில்லை என்பதிற்காக அதில் ஏதும் கூறவில்லை என்பது தவறு. எழுதியவருக்கு தெரியவில்லை என்றால் அதை மொழி பெயர்ப்பு செய்பவருக்கு தெரிந்து இருக்க வேண்டும்.
    தமிழை பாராட்ட சொல்லவில்லை, தனக்கு தெரியாமல் //வேறு எந்தப் பழைய மற்றும் நவீன மொழிகளிலும் இல்லாத அளவு// என எழுத வேண்டாம். மகா கவி பாரதியார்கூட “யாம் அறித்த மொழிகளிலே” என்று தான் கூறினார்.

    //என்னைக் கேட்டால், விக்கிப்பீடியாவில் உள்ளதுதான் உண்மை
    என்பேன்.//
    இந்து மத கருத்துக்களை விக்கிப்பீடியாவில் எதிர் பார்ப்பது தவறு. உண்மையாக விருப்பபட்டால் ‘மூல நூல்களை’ படித்து அறிந்துகொள்வதே சிறந்தது.

    // தமிழ் மொழியில் உள்ள உளவியல் வார்த்தைகள், மற்றும் சிவனின் வரலாற்றுப் பெருமை போன்றவை ஆவணப்படுத்தப்பட்டு, இதைப் போன்ற கட்டுரையாளர்களுக்கும், மற்ற பொதுமக்களுக்கும் தெரிவிக்க வேண்டியதும் சிவபக்தர்களின் பணியே. //
    ஆவணப்படுத்தப்பட்டால் நல்லது.

    இந்த கட்டுரை இந்து மதத்தை பற்றி தொலை நோக்கு பார்வையுடன் எழுதப்படவில்லை. கட்டுரையாளருக்கும் மொழி மாற்றம் செய்தவருக்கும் இந்து மதத்தை பற்றி அழ்ந்த புலமை இல்லை என நினைக்கின்றேன்.

    சோமசுந்தரம்

மறுமொழி இடுக:

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.

*

உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:

தமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.

மறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.