மூலம்: டாக்டர் எஸ்.கல்யாணராமன்
தமிழில்: அரவிந்தன் நீலகண்டன்
ஆய்வாளர் அஸ்கோ பர்போலாவுக்கு செம்மொழி மாநாட்டில் விருது வழங்கப்பட்டுள்ளது. ஆய்வாளர் ஐராவதம் மகாதேவன் அவரது வாழ்நாள் பங்களிப்புக்காக கௌரவிக்கப்படுகிறார். வாழ்த்துக்கள்.
இருவருமே சிந்து-சரஸ்வதி பண்பாட்டின் இலச்சினைகளின் சித்திர உருக்களின் பொருளை வெளிக்கொணர்வதில் கடுமையாக உழைத்தவர்கள். முக்கியமான முன்னகர்வுகளை கொண்டு வந்தவர்கள். அடிக்கடி ஊடகங்களில் அறிவியல் பூர்வமான அணுகுமுறையை முன்னிறுத்துபவர்கள். இவர்கள் இத்தகைய ஒரு முக்கிய பொதுவிழாவில் பாராட்டப்படுவது நிச்சயமாக மகிழ்ச்சி அளிக்கும் விஷயம்தான்.
ஆனால் சில கேள்விகள் எழுவதை தவிர்க்க முடியவில்லை.
இந்த செம்மொழி மாநாட்டை நடத்துவோர் ஆரிய படையெடுப்புக் கோட்பாட்டை நம்புகிறவர்கள். சிந்து சமவெளிச்சின்னங்களுக்கும் இன்றைய தமிழ் மக்களுக்கும் மட்டுமேயான ஒரு பண்பாட்டுத் தொடர்ச்சியை ஆதரிப்பவர்கள். பாரதத்தின் தமிழரல்லாத பிற மக்களுக்கும் சிந்து சமவெளி பண்பாட்டுக்குமான தொடர்பை மறுப்பவர்கள். அது மட்டுமல்ல; அவர்கள் செம்மொழி, தனி மொழி என முன்னிறுத்தும் தமிழர் பண்பாடு சங்ககால கட்டத்தைச் சேர்ந்ததெனக் கூறும் இவர்கள் இது ஆரிய (அதாவது வேத பண்பாட்டு) தொடர்பற்ற ஒரு தனித்தமிழ் பண்பாடு என்று பிரச்சாரம் செய்து வருபவர்கள். இந்த நிலைப்பாட்டையெல்லாம் பிரச்சார தளத்துக்கு கொண்டு செல்லும் விதமாக செம்மொழி மாநாட்டு முத்திரையை இவர்கள் அமைத்திருக்கின்றனர். சிந்து-சரஸ்வதி பண்பாட்டு இலச்சினைகளை தமிழ் செம்மொழி மாநாட்டுக்கு இந்த நிலைப்பாடுகளின் அடிப்படையில் பயன்படுத்தியுள்ளனர்.இந்த இலச்சினையை வடிவமைத்த குழுவில் ஐராவதம் மகாதேவனும் உள்ளார் என்பது மிகவும் வேதனையாக விஷயம்.
இனவாத,அரசியல் பிரச்சார அடிப்படையில் சிந்து-சரஸ்வதி முத்திரைகள் பயன்படுத்தப் படுவதற்கு, தன் வாழ்நாள் முழுவதையும் இந்த ஆராய்ச்சிக்கே அர்ப்பணித்த அறிஞரான மகாதேவன் மௌனமாக துணை போகிறார் ஏன்? இதுதான் அடிப்படையாக எழக்கூடிய கேள்வியாகும்.
அஸ்கோ பர்போலாவின் ஆய்வு முடிவுகளை ஐராவதம் மகாதேவனும், ஐராவதம் மகாதேவனின்
ஆய்வு முடிவுகளை அஸ்கோ பர்போலாவும் ஒத்துக் கொள்வதில்லை – இருவருமே சிந்து-சரஸ்வதி பண்பாட்டு இலச்சினைகள் திராவிட மொழியைக் கொண்டிருப்பதாக சொன்னாலும், இருவருமே இன்னும் அதிசயிக்கத் தக்க விதத்தில் ஆரிய படையெடுப்பு/புலப்பெயர்வு கோட்பாடுகளை அந்த பதங்களைக் கூட விடாமல் பயன்படுத்திக் கொண்டிருந்தாலும்- என்பதையும் இங்கு சிந்திக்க வேண்டும்.
அஸ்கோ பர்போலா சிந்து-சரஸ்வதி சமவெளி இலச்சினைகளில் இருக்கும் மீன் போன்ற சித்திர எழுத்துருவை “மீன்” என்று சொல்லி அதனை விண்மீன்களைக் குறிப்பதாகக் கூறுகிறார். அறுமீன் -கார்த்திகை என்றெல்லாம் அவர் சிந்து-சரஸ்வதி இலச்சினைகளை கருதுகிறார். எனவே பசுபதி என அறியப்படும் புகழ்பெற்ற யோகநிலைக் கடவுள் வருணனைக் குறிப்பிடுவதாக இருக்கலாம் என்றும் சொல்லுகிறார் (1).
உண்மைதான். உதாரணமாக அகநானூற்றில் “அறுமீன்” குறித்து தலைவி பேசுகிறாள் (2). புறநானூற்றுப் பாடலில் “மீன்திகழ் விசும்பில்” எனக் கூறுவதைப் பார்க்கிறோம் (3). “மாஇரு விசும்பில் பல்மீன் ஒளி கெட ஞாயிறு” தோன்றியதைக் குறித்து பதிற்றுப்பத்தில் பார்க்கிறோம் (4). பின்னர் சிலப்பதிகாரத்தில் அருந்ததி “வடமீன்” எனக் குறிப்பிடப்படுவதையும் பார்க்கிறோம்.(5)
விண்மீன்களை மீன் எனச் சொல்லும் தமிழர் பண்பாட்டை சிந்து-சரஸ்வதி பண்பாட்டுடன் இணைக்கும் அஸ்கோ பர்போலாவின் பார்வை சரியானதாக இருக்க வாய்ப்பிருக்கிறது. அத்துடன் மற்றொரு விஷயத்தையும் நாம் கணக்கில் எடுக்க வேண்டியுள்ளது. விண்மீன்களை மீன்களாகப் பார்ப்பதுடன் தொடர்புடைய விஷயம் வானைப் பெருங்கடலாகக் காண்பது. இந்த மையமான உருவகம் வேத இலக்கியத்திலிருந்து தான் வருகிறது என்று கல்வெட்டு ஆய்வாளர் எஸ்.ராமச்சந்திரன் அறுதியிட்டுக் கூறுகிறார். வருணனின் இரு தொடைகளும் பூவுலகக் கடலாகவும் ஆகாயக் கடலாகவும் கூறப்படுவதை அவர் சுட்டிக் காட்டுகிறார் (6). ஆக, அஸ்கோ பர்போலா எதைத் தமிழரின் தனித்துவமாகச் சுட்டிக் காட்டுகிறாரோ அது உண்மையில் வேதப் பண்பாட்டுக்கும் பொருந்துவதாக அமைகிறது.
இப்பண்பாட்டுத் தொடர்ச்சி பேணப்படுவது வெறும் மொழியினால் மட்டுமல்ல, வேத நெறியினாலும்தான். எனவே அந்த வேத நெறியை கீழ்மையாகப் பேசி மறுக்கக் கூடிய ஒரு அரசியலின் அடிப்படையில் அந்த இலச்சினைகள் பயன்படுத்தப் படுவது சரியானது தானா?
அத்துடன் அஸ்கோ பர்போலா சில விசித்திர நம்பிக்கைகளை கொண்டவராக இருக்கிறார். ஆரிய படையெடுப்பு இரண்டு அலைகளாக நடந்தது; அதில் முதல் அலை ஆரியர்களுடன் இரண்டாவது அலை ஆரியர்கள் மோதியது ஆரிய-தஸ்யு போராட்டங்களாகக் காட்டப்படுகிறது என்றெல்லாம் சொல்லியிருக்கிறார். ஆனால் அறிவியல் பூர்வமான மரபணுவியல் ஆராய்ச்சிகள் பர்போலாவின் ஆரியப் படையெடுப்புக் கோட்பாடுகளை ஆதரிக்கவில்லை என்பதை ஆராய்ச்சியாளர்கள் தெளிவு படுத்தியிருக்கிறார்கள் (7).
அடுத்ததாக ஐராவதம் மகாதேவனுக்கு வரலாம்.
இவருடைய நிலைப்பாடோ இன்னும் விசித்திரமாக இருக்கிறது. இவர் மிகத் தெளிவாகவே சிந்து-சரஸ்வதி பண்பாட்டின் அடையாளமென கருதத்தக்க ஒற்றைக் கொம்பு விலங்கு இலச்சினையை ரிக்வேத சோம பானச்சடங்கு மூலமாக விளக்குகிறார். வேதப் பண்பாட்டின் மையமாக அமைந்த இந்த அம்சம் படையெடுத்து வந்த ஆரியர்களால் இங்கு இருந்த திராவிடர்களிடமிருந்து பெறப்பட்டதாம். அவர் மேலும் சொல்லுகிறார்: “இந்த விஷயத்தில் நான் தனி ஆள். ஹரப்பா பண்பாட்டின் திறவுகோல் வேதத்தன்மை. அதன் மொழியோ திராவிட மொழி ” (8).
தனது வாழ்க்கையையே சிந்து சமவெளி இலச்சினைகளை விளக்கிட செலவழித்த மகாதேவன், ஹரப்பா பண்பாடு வேதப் பண்பாடு என்று சொல்வதை கொஞ்சமும் இலட்சியம் செய்யாமல் ஒரு இனவாதச் சட்டகத்தில் அந்த பண்பாட்டின் வரலாற்றை விளக்கி அதனை இன்றைய அரசியலுடன் முடிச்சு போடக்கூடியவர்களிடம் எவ்விதம் ஒரு முணுமுணுப்பும் இல்லாமல் விழா மதிப்பு பெறுகிறார்?
ஒருவேளை இவரது முடிவுகளை அவர்கள் ஏற்றுக்கொண்டார்களா அல்லது அவர்களின் அரசியலுக்கு முன் இவரது ஆராய்ச்சியும் அறிவியல் பார்வையும் சமரசம் செய்து கொண்டனவா? மிகவும் மனவேதனை அளிக்கும் இந்த கேள்விகள் எழும்பாமல் இல்லை.
சங்கத் தமிழ்ப் பண்பாடு வேதப் பண்பாடே
’தமிழர் பண்பாடு என்பது எஞ்சிய பாரதப் பண்பாட்டிலிருந்து தனிப்பட்டது’ என்றும், ’வேதப் பண்பாடு ஆரியப் பண்பாடு’ என்றும் சொல்லப்படுகிறதே, அதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது? சங்க இலக்கியம் முழுக்க வேதத்தையும் வேள்வியையும் போற்றக்கூடியதாக அல்லவா உள்ளது?
நன்று ஆயந்த நீள் நிமிர்சடை
முதுமுதல்வன் வாய் போகாது
ஒன்று புரிந்த ஈர்-இரண்டின்
ஆறு உணர்ந்த ஒரு முதுநூல்
என புறநானூறு வேதத்தைப் போற்றுகிறது (9).
நற்பனுவல் நால் வேதத்து
அருஞ்சீர்த்திப் பெருங்கண்ணுறை
நெய்ம் மலி ஆவுதி பொங்கப் பல்மாண்
வீயாச் சிறப்பின் வேள்வி முற்றி:
யூபம் நட்ட வியன்களம் பலகொல்
என புறநானூறு வேத வேள்வியைப் போற்றுகிறது (10).
கடவுள் நிலைய கல்ஓங்கு நெடுவரை
வடதிசை எல்லை இமயம் ஆக
தென்அம் குமரியொடு ஆயிடை அரசர்
என பதிற்றுப்பத்து பாரத தேசத்தின் பண்பாட்டு ஒற்றுமை குறித்து பேசுகிறது (11).
ஆனால் பழந்தமிழரின் ஆன்மிகப் பண்பாட்டின் இந்த மைய அச்சுக்கள், பழந்தமிழரை பாரதப் பண்பாட்டுச் செழுமையுடன் இணைக்கும் இப்பாவுகள் – காட்டப்பட்டனவா இம்மாநாட்டில்? வலியுறுத்தப்பட்டனவா? அட, சொல்லவாவது பட்டனவா எவராலேனும்? இல்லையே!
இந்நிலையில் இந்த அறிவிற் சிறந்த இரண்டு சான்றோர்களிடமும் ஒரு கேள்வி மட்டுமே கேட்கப் பட வேண்டியதாக உள்ளது. சான்றோரின் பெருங்குணங்களை கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி சொல்லும் போது “பழி எனின் உலகுடன் பெறினும் கொள்ளலர்” என்று கூறுகிறான். ஆனால் இன்று தமிழர் பண்பாட்டை திரித்துக் காட்டும், பொதுச்சொத்தை வீணடிப்பதாகவே காட்சியளிக்கிற மாநாடு எனும் பெயரில் நடத்தப் படுகிற ஒரு கேளிக்கை கூத்தடிப்பில் பாராட்டப்படுவது உண்மையிலேயே பாராட்டப்படுவதுதானா? இக்கேள்விக்கான பதிலை உங்கள் மனசாட்சிக்கே விட்டுவிடுகிறேன்.
நெடிய மொழிதலும் கடிய ஊர்தலும்
செல்வம் அன்று; தன் செய்வினைப் பயனே;
சான்றோர் செல்வம் என்பது, சேர்ந்தோர்
புன்கண் அஞ்சும் பண்பின்
மென்கட் செல்வம் செல்வம் என்பதுவே.
(நற்றிணை)
சான்றுகள்:
(1) Asko Parpola, Meeting the challenge of Indus Script : http://www.harappa.com/script/parpola16.html
(2) அகநானூறு: 141:6-8
(3) புறநானூறு: 25:1
(4) பதிற்றுப்பத்து. 64:12-13
(5) சிலப்பதிகாரம்: புகார் காண்டம்
(6) அதர்வ வேதம் 4:16
(7) Hemphill & Christensen: The Oxus Civilization as a Link between East and West: A Non-Metric Analysis of Bronze Age Bactrain Biological Affinitie, paper read at the South Asia Conference, 3-5 November 1994, Madison, Wisconsin; p. 13. (Quoted in Elst)
(8) http://www.harappa.com/script/mahadevantext.html
(9) புறநானூறு: 166:1-4
(10) புறநானூறு 15:17-21
(11) பதிற்றுப்பத்து 43:6-9
கட்டுரை ஆசிரியர் டாக்டர் எஸ்.கல்யாணராமன் பொருளாதார, நிர்வாக நிபுணராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். பணி ஓய்வுக்குப் பின்னர் தனது விரிவான எழுத்துக்கள் மூலம் சிந்துவெளி மற்றும் வேதகால நாகரீகம் குறித்து, குறிப்பாக மண்ணுக்குள் மறைந்துவிட்ட சரஸ்வதி நதி குறித்து பரந்துபட்ட விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். ரிக்வேத இலக்கியம், அகழ்வாராய்ச்சிகள், செயற்கைக் கோள் புகைப்படங்கள் ஆகிய பல்வேறு ஆதாரங்களின் துணைகொண்டு சரஸ்வதி நதி பற்றி Sarasvati என்ற பெருநூலை (ஏழு தொகுதிகள்) எழுதியிருக்கிறார். சரஸ்வதி நதி ஆய்வு மையம் (Sarasvati Nadi Shodh Prakalp) என்ற அமைப்பினையும் நடத்தி வருகிறார்.

தமிழ்நாட்டுப் பாடநூல்களில் “வரலாறு காணாத” தப்புக்கள்
ஆயுத பூசை – ஆய்வுகளும் வக்கிரங்களும்
சோமபானம் என்னும் மர்மம்
மைக்கேல் விட்சல் சென்னை விஜயம்: ஒரு பார்வை
சான்றோர் சமுதாய வரலாறு: ஒரு நூல் அறிமுகம்
மையொற்றி மகானுபாவர்களின் மயக்கப் புலம்பல்
தமிழை வளர்ப்பதாய் மாநாடு கூட்டிடுவாரோ?
சமபாதத்தில் உறைந்து விட்ட இந்திய நடனங்கள் – 2
தேவி சூக்தம்
சில சரித்திர நூல்களைப் படிக்கையில்..
நமது பண்பாட்டின் ஊற்றுமுகம் ராமாயணம்
போகப் போகத் தெரியும் – 41
சம்ஸ்கிருத அறிஞர் மைக்கேல் விட்செலுக்கு சில கேள்விகள்
வேதநெறியும் தமிழ்சைவத்துறையும் – 1
ஆரியம் திராவிடம் இலக்கிய ஆதாரங்கள்
திராவிட இனம் – வரலாற்று உண்மையா?
ஸ்ரீரங்கம்: காலவெளியில் ஒரு பயணம் -2
இக்காலத்தில் சமஸ்க்ருத மொழி வளர்ச்சி
ஆதி சங்கரர் கால ஆராய்ச்சி – ஒரு பார்வை
மதமெனும் பேய்
முருகனை நாடிச் செல்ல ஒரு முந்துதமிழ்ப் பயணவழிகாட்டி
அயோத்தி அகழ்வாராய்ச்சி முடிவுகள்: டாக்டர் ஆர்.நாகசாமி
வேதாளம் சொன்ன பேரறிஞர் கதை
சுய அறிதலும் வரலாற்று அறிதலும்
மறவர் மண்ணில் மதமாற்றம் செய்த பாதிரியார்






நன்றி! மாநாட்டின் குளறுபடிகள் கொஞ்சம் நஞ்சம் அல்ல! தமிழர்கள் விழிப்பது தான் எப்போதோ!
திரு அரவிந்நீலகண்டன் அவர்களுக்கு
தமிழ் மண்ணில் விவேகானந்தரின் வீரமுழக்கம் என்ற புத்தகத்தின் பின் அட்டையில் உள்ள ஒரு செய்தி. இதை சற்றுவிளக்கிகூற வேண்டுகிறேன்.
“சென்னை மாநிலத்தில் தமிழர்கள் வாழ்ந்துவருகிறார்கள். அவர்களின் நாகரீகம் மிகமிகபழமையானது. யூபிரட்டஸ் நதிக்கரையில் மிகப் பழங்காலத்தில் பரவியிருந்த பெருநாகரீகம் இந்ததமிழர்களில் ஒரு பிரிவினராகிய சுமேரியர்கள் பரப்பியதே. இவர்களது ஜோதிடமும் அறநெறியும் நீதிநெறியும் ஆசாரங்களும் தான் அசிரிய பாபிலோனிய நாகரீகங்களுக்கு அடிப்படை. இவர்களின் புராணங்களே கிறிஸ்தவர்களின் பைபிளுக்கு மூலம். இவர்களின் மற்றொரு பிரிவினர் மலபார் கரை ஓரத்தில் வாழ்ந்து அற்புதமான எகிப்திய நாகரீகத்தை உருவாக்கினர்
சுமேரியர்கள் என்று யாரை குறிப்பிடுகிறார் ?
மலபார் கரை ஓரத்தில் வாழ்ந்தவர்கள் யார் ?
எகிப்திய நாகரீகத்தை உருவாக்கினர் – அதற்கான அடையாளங்கள் என்ன ?
எனக்கு வந்த ஒரு கடிதம்
அன்பர்களுக்கு.,
டாக்டர் ஊ.வே. சுவாமிநாத ஐயர் இல்லை என்றால் இன்று தமிழ் இலக்கியங்கள் இல்லை. ஒரு காலத்தில் தமிழ் இலக்கியங்கள் அழியும் நிலையில் இருந்தபோது, மிகவும் சிரமப்பட்டு கிராமம் கிரமமாக அலைந்து பட்டி தொட்டிகளில் எல்லாம் தேடி ஓலை சுவடிகளை சேகரித்து இவர் நமக்கு அளிதிராவிட்டால் இன்று கொண்டாடும் செம் மொழி இல்லாமல் போயிருக்கும். இவரை புறக்கணித்து மகாநாடு நடத்துவது தமிழ் அன்னையை அவமதிப்பதற்கு ஒப்பாகும். ஒவ்வொரு தமிழனும் அவருக்கு கடன்பட்டிருக்கிறான்…. அவர் செய்த பாவம் ஐயராக பிறந்துவிட்டார். இதுபற்றி எடுத்துரைக்க எந்த தமிழ் அறிஞருக்கும் தைர்யமில்லை. ….எல்லாம் ஜால்ரா கூட்டங்கள். என்ன செய்ய……. சினிமா கூட்டம் தான் தமிழ் என்றாகிவிட்டது … எல்லாம் நமது தலை விதி …… மெல்ல தமிழ் இனி சாகும் ? என்ற பாரதியின் சந்தேகம் எனக்கும் எழாமல் இல்லை …. !!!
இந்தத் தமிழ்ச் செம்மொழி மாநாடே கருணாநிதி குடும்பமும் தீமுக காரர்களும் ரொம்ப நாளாக போர் அடித்ததனால் ஒரு பொழுது போக்கு வேண்டும் என்று கேட்டதால் பல நூறு கோடிகள் செலவு செய்து அவர்களுக்கு காண்பிக்கும் ஒரு சின்ன ஷோ.
இவ்வளவு பேர்களையும் அழைத்து விருதுகள் கூட கொடுத்திருக்க வேண்டாம்.
கருணாநிதி குடும்பத்தில் உள்ளவர்கள் எல்லோருக்குமே ஒவ்வொரு விருது கொடுத்து அவர்கள் முன்னோர்கள் தான் அகநானுறு, புறநானுறு எல்லாம் எழுதினார்கள் ,அவர்கள் முன்னோர்கள் மட்டும்தான் முதல் முதலில் லெமூரியாக் கண்டத்தில் தோன்றினார்கள் என்று ஆய்வுக் கட்டுரைகள் வெளியிட்டிருக்கலாம்.
இரா.ஸ்ரீதரன்
தமிழக முதல்வர் கருணாநிதியின் ஆரம்ப காலத்தில் புறநானூற்றுப் பாடலை மையமாக வைத்து எழுதிய வசனங்களால்தான் முன்னிலைக்கு வந்தார். மஹா மகோபாத்தியாய உ.வே சுவாமிநாத ஐயர் அவர்கள் தஐறுத் தெருவாகச் சென்று பிச்சை எடுக்காத குறையாக ஒவ்வொருவரிடமும் ஓலைச்சுவடிகளைக் கெஞ்சிக் கேட்டு புறநானூற்றை இன்றைய தமிழில் வடித்து வைக்காவிட்டால், நமது “முத்தமிழ் அறிஞர்” எப்படி அறிஞர் ஆகியிருப்பார்?
கண்ணகிக்குச் சிலை வடித்தவர் சிலப்பதிகாரம் கிடைத்தவிதத்தை யாரால் கிடைத்தது என்பதை மறந்து விட்டாரே?
நேற்று அவரது மாநாட்டு உரையில் பிஷப் கால்டுவெல்லைப் புகழ்ந்து பேசினார். ஆனால் வெறுமனே “அகநானூறு, புறநானூறு போன்ற கடைச்சங்க இலக்கியங்கள் கிடைத்ததன் பயனாக, ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் நமக்கு கிடைத்தது. தொல்காப்பியம் கிடைத்ததால், மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் நமக்கு கிடைத்தது” என்று கூறி உ.வே.சா. என்ற “மூன்றெழுத்துக்கள்” தம் வாயில் வராது பார்த்துக்கொண்டார்.
தமிழுக்குச் செம்மொழி என்ற அந்தஸ்து எப்படிக் கிடைத்தது என்பது பற்றி விரிவாகப் பேசியவர், தமக்குத் தமிழ் அறிஞர் என்ற அந்தஸ்து எதனால் எப்படிக் கிடைத்தது என்பது பற்றிச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
செந்தமிழ் மாநாட்டில் முதல்வரின் “தமிழுக்குச் செம்மொழி என்ற அந்தஸ்து எப்படிக் கிடைத்தது” என்பது பற்றிய உரை (தினமலரில்) இங்கே காண்க.
http://tamil.dinamalar.com/wctc_detail.asp?id=24996
உ வே சா ஐயராகப் பிறந்ததாலும் இப்போது இருந்து மு கா வுக்கு ஜால்ரா போட்டிருந்தால் கட்டாயம் ‘கவனிக்கப்’ பட்டிருப்பார்.
இல்லையென்றால் அவர் பனை ஓலைச் சுவடிகளையெல்லாம் தேடித் தேடி நெருப்பில் போட்டு விட்டார், எனவே அவர் தமிழ் விரோதி என்று முத்திரை குத்தப்பட்டிருப்பார்.
ஐயர் வாலி நன்றாக கவனிக்கப் படுகிறார் .
ஏனென்றால் அவர் ‘சிங் சக் ‘ கும்பலில் உள்ளார் .
இரா.ஸ்ரீதரன்
http://thiruchchikkaaran.wordpress.com/2010/04/01/indians-and-india/
நைல் ஆற்று நாகரீகம், மஞ்சள் ஆற்று நாகரீகம், இதை எல்லாம் விட பழைமையான நாகரீகம் சிந்து சமவெளி நாகரீகம் என்றால், அவர்களை 5000 வருடங்களுக்கு முன்பு விரட்டி அடித்ததாகக் கூறப் படும் ஆரிய சமுதாயம், கைபர் போலன் கனவாய் வழியாக வருமுன் சுவிட்சர்லாந்திலே இருந்தார்கள் என்றால், கைபர் போலன் கனவாய் வழியே அந்த சமுதாயம் இந்தியாவுக்குள் நுழையும் வரையிலே, அந்த சமூகத்தின் சுவிட்சர்லாந்து வரலாறு அல்லது ருஷியா வரலாறு அல்லது மத்திய ஆசிய வரலாறு ( 5000 வருடங்களுக்கு முந்தைய வரலாறு), ஏன் பதிவு செய்யப் படவில்லை
ஆரியர்கள் ருஷியாவிலே இருந்து வந்தார்கள், மத்திய ஆசியாவிலே இருந்து வந்தார்கள், சுவிட்சர்லாந்திலே இருந்து வந்தார்கள் என்கிறார்களே, நல்லா கவனிங்க,
அலெக்சாந்தரைப் போல, பாபரைப் போல ஒரு அரசன் தன் படையுடன் மட்டும் வரவில்லை. முழு சமூகமாக குயவர்கள், தச்சர்கள், நெசவாளர்கள், சலவைத் தொழிளாளிகள், மருத்துவர்கள், சமையல் காரர்கள், பாடகர்கள், புலவர்கள், சேனாதிபதிகள், அமைச்சர்கள் உள்ளிட்ட மிகப் பெரிய சமூகம் இடம் பெயர்ந்து உள்ளது என்று கூறப் படுகிரதே,
அப்படியானால் அந்த சமுதாயம் உருவாக பல ஆயிரம் ஆண்டுகள் ஆகியிருக்குமே, அப்படி அவர்கள் சமூகமாக உருவெடுத்த நிலப் பிரதெசம் எது? ருஷியாவா? மத்திய ஆசியாவா? ருஷியாவிலோ, மத்திய ஆசியாவிலோ ஆரியர்கள் பல்லாயிரம் வருட காலம் வாழ்ந்து ஒரு சமூகமாக உருவான வரலாறு, உலக வரலாற்றின் பக்கங்களில் இல்லையே!
நல்ல கட்டுரை. இந்த பித்தலாட்டக்காரர்கள் இதையே கூறி மக்களை குழப்புகிறார்கள். பல காலமாகவே ஆரியன் திராவிடன் என்று பல பொய்கள். நாமும் மௌனமகவே இருக்கிறோம்! இதை எதிர்த்து நல்ல விவாத அரங்கத்தை அமைத்து உண்மையை பலரறிய ஆராய வேண்டும். எந்த பொய் சொன்னாலும் உடனே பலத்த எதிர்ப்பும் விவாதமும் செய்ய வேண்டும். நிபுணர்களை அழைக்க வேண்டும். பித்தலாட்டக்காரர்கள் அவர்களுக்கு சாதனையான நிபுணர்களை மட்டும் அழைப்பார்கள். இது அரசியல். எதிர்காலத்தில் பிரிவினைக்கு இப்போதே அடி போடுகிறார்கள் எத்தர்கள். மக்கள் மூளையை வெகு காலமாகவே சலவை செய்கிறார்கள்.
உடனே பத்திரிகையாகட்டும் தொலைக்காட்சியாகட்டும் எல்லா வகையிலும் எதிர்க்கவேண்டும்
ஆபத்தான பொய் பிரச்சாரம். இன வெறி வளர்க்க மேலும் மேலும் பாடு படுகிறார்கள்
தமிழ் என்ற முக மூடி அணிந்து இன வெறி பரப்புகிறார்கள்
நாம் மௌனமாக இருப்பது பேராபத்து!
மாநாட்டை ஆதரிப்பவர்கள் எல்லாம் தனக்கு ஒரு ஆதாயம் இருக்கும் பட்சத்தில் யார் எக்கேடுகெட்டுப் போனாலும் பரவாயில்லை என துதிப் பாடிக் கொண்டிருக்கிறார்கள்.
[[கருத்துரையாளர்களுக்கு: சாதிப் பெயர்களைச் சொல்லி இந்த தளத்தை கலங்கப் படுத்தாதீர்கள். பின் நமக்கும் அவர்களுக்கு வித்யாசமில்லாமல் போகும் ]]
உ வே சா என்ற மாபெரும் மனிதரைப் பற்றி மு க குறிப்பிடாதது ஆச்சரியம் இல்லை
அவர் குணம் அப்படி .த்வேஷம் என்ற வார்த்தைக்கு உருவம் அவர்.
ஆனால் ஒரு மனிதன், அவன் என்னதான் அரசியல் செய்யட்டும்
எவ்வாறு இப்படி மனம் அறிந்து உண்மைக்கு மாறாக இருக்க முடிகிறது?
மனசாட்சி துளியும் அற்று, நெஞ்சில் உண்மையின் சுவடு கடுகளவு கூட இல்லாமல்,இவ்வளவு கிராதகத் தனமாக ஒரு மனிதன் இருக்க முடியுமா?
ஆச்சர்யம்தான்!
இரா.ஸ்ரீதரன்
ஆதாயத்திற்காக அக்கிரமத்துக்கும் ,பொய்களுக்கும் துணை போகும் அறிஞர்கள் என்று கூறப் படுபவர்கள் ‘இடிப்பாரை இல்லா ஏமரா மன்னன் கெடுப்பாரும் இன்றிக் கெடும்’ என்ற குறளை நினைவில் வைக்க வேண்டும்.
‘மன்னனும் நீயோ ,வள நாடும் உன்னதோ’ என்று ஒரு அகந்தை பிடித்த மன்னனையே சாடிய அவ்வையை மறந்து விட்டார்கள்
இரா.ஸ்ரீதரன்
கோவைக்கூத்து…!
http://nanavuhal.wordpress.com/2010/06/23/koovaikkuuththu/
அட விடுங்கள் செம்மொழி எனும் தகுதியை அதிகாரபூர்வமாக அளித்து கையெழுத்திட்ட அப்துல்கலாமையே மறந்துவிட்டார்கள். மறக்கவில்லை வேண்டுமென்றே புறக்கணித்துவிட்டார்கள். இவர்கள் தமிழ் தாத்தாவை நினைத்து அவர் பெயரில் ஏதாவது அரங்கம் பெயரை போட்டு அதில் கமிசன் கொள்ளை அடித்தால் அந்த தமிழ் தாத்தாவுக்குத்தான் அவமானம். அம்மட்டில் அவமானப்படுத்தாமல் விட்டார்களே அந்த அளவுக்கு இவர்களுக்கு தமிழ் மீது அக்கறை இருக்கிறது.
If the original habitat of the ‘aryan’s were to be Switzerland or Russia or whatever, why is their literary compositions like the rig veda etc,.only extant in India and not elsewhere?
இன்றைய தினமலரிலிருந்து சில கருத்துக்கள்
தமிழகத்திற்க்கும், தமிழுக்கும் பெருமை சேர்த்தது தேவாரம், திருவாசகம், நாலாயிரதிவ்வியபிரபந்தம், பெரிய புராணம் போன்ற பக்தி சமய இலக்கியங்கள் ஆகும். தஞ்சையில் நடந்த உலக தமிழ் மாநாட்டில் 108 ஓதுவார்கள் அரையர்களைக்கொண்டு பாசுரமும், தேவாரமும் பாடி மாநாடு நடத்தப்பட்டடுது. தற்பொழுது நடந்த மாநாட்டில் இவர்களுக்கு அழைப்பு இல்லை. சமய பக்தி இலக்கியங்கள் குறிப்பாக விலக்கப்பட்டது ஏன் ?
தமிழில் அர்சனை என்று ஆர்பாட்டங்கள் நடத்தியவர்கள், ஓதுவாருக்கு அளிக்கும் மாத சம்பளம் ரூபாய் 70/- , ஒருபட்டை சோறு தினமும். ஆனால் சிதம்பரத்தில் ஆர்ப்பாட்டம் செய்த ஆறுமுகசாமிக்கு மாதசம்பளம் ரூ 3000/- . ஏன் இந்த பாரபஷ்சம். அரசு இதில் கவனம் செலுத்தாதது ஏன் ? ஆண்மிகம் இல்லாத அரசியல் ஒர் உயிர் இல்லா உடலுக்கு சமம். இது பண்பாட்டை நிச்சயம் வளர்க்காது பாயைபிராண்டும் வேலையைதான் செய்யும் அதுதான் இன்று நடக்கிறது
இறைவனை துதிப்பவர்களுக்கு அவமரியாதை செத்துமடியும் அற்பபதர்களை துதிப்பவரகளுக்கு ஆராதனை. வாழ்க தமிழரின் தன்மானம் ஸெல்புரெஸ்பெக்ட்
நான் அரவிந்தன் நீலகண்டன் அய்யா அவர்களின் பரம ரசிகன். எனக்கு இங்கு மறுமொழிகள் எழுதியிருக்கும் நண்பர்களைப்போல அவ்வளவாகத் தெரியாது. இருப்பினும் ஆரிய/திராவிட வாதத்தைப்பற்றி, அதிலும் குறிப்பாக ‘தமிழ் விரோதி’ போல இன்று தி.க., தி.மு.க., ம.தி.மு.க., நாம் தமிழர் பொய்யர்களால் சித்தரிக்கப்படும் சக்கரவர்த்தித் திருமகன் இராமனைப் பற்றி ஒரு சில கேள்விகளைக் கேட்க விரும்புகிறேன்:-
இராமன் இராவணனைக் கொன்றதை ஆரியர்கள் திராவிடர்கள் மீது படையெடுத்ததாக உளரும் மடையர்கள் இராமனை ஆரியன் என்றும் இராவணனை திராவிடன் என்றும் கூறுகிறார்கள். ஆனால், இராமன் “எப்பொழுது வாழ்ந்தான், எந்த பொறியியல் கல்லூரியிலிருந்து பட்டம் வாங்கினான்” என்று கேட்கிறார்கள். இராமன் ஆரியன், இராவணன் திராவிடன், ஆரிய-திராவிட போர் உண்மை, ஆனால் இராமன் வெறும் கட்டுக்கதை. இதற்குப் பெயர் பீ-அறிவு!!
அப்படியே இலங்கையில் வாழ்ந்ததால் இராவணன் திராவிடன், வடக்கிலிருந்து வந்த ‘ஆரியன்’ இராமன் கொன்றுவிட்டான் என்கிறார்கள். அப்படிஎன்றால் எனக்கு ஒரு ஐயம்- சூரபதுமனும் இலங்கையை ஆண்ட அசுர மன்னன்தானே. அவனைக் கொள்ள ‘தமிழ் கடவுளான’ முருகன் கயிலையிலிருந்து (வடக்கு) படையெடுத்து வந்தானே. அப்படியென்றால் முருகனும் ஆரியனா????
ராமன் யாராக இருந்தால் என்ன?
நமக்கு அவன் முப்பத்து முக்கோடி தேவர்களின் தலைவன்
சாட்சாத் ஸ்ரீமன் நாராயணன்
ஹிந்து மக்கள் யுக யுகமாக ஆராதிக்கும் புருஷோத்தமன்.
அவன் பாதம் பட்ட இடங்களில் இ்ன்றும் அவன் விட்டுச் சென்ற சுவடுகள் உள்ளன.
இன்றும் சித்ரகூடம் உள்ளது, பஞ்சவடி உள்ளது,அயோத்தி உள்ளது,மிதிலை உள்ளது, திருப்புல்லணை உள்ளது,ராம சேது உள்ளது,வாலி நோக்கம் உள்ளது,ராமநாதபுரம் உள்ளது, ராம ஈஸ்வரம் உள்ளது.
இன்னும் ஆயிரக் கணக்கான இடங்கள் உள்ளன
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை லட்சக் கணக்கான மக்கள் அவன் பெயரையும், அன்னை சீதையின் பெயரையும் காலம் காலமாகத் தாங்கி வாழ்ந்தனர் , வாழ்கின்றனர்.
திக காரனும், திமுக காரணம் யார் ராமனுக்கு பிறப்பு சான்றிதழ் கேட்பது?
ஜீசசுக்கு கேட்பார்களா, முஹம்மதுக்கு கேட்பார்களா?
நாம் இதற்கெல்லாம் பதில் சொல்லிக் கொண்டிருக்க வேண்டியதில்லை .
எல்லாவற்றையும் விடுங்கள். கோடிக்கணக்கான மக்கள் புனிதம் என்று நினைக்கும் ஒன்றை இவர்கள் யார் கேள்வி கேட்பது?
ஊரார் சொத்தை உலையில் போடும் இந்த கேடு கேட்ட மனிதர்களுக்கு, தந்தை சொல்லே மந்திரம் என்று அரியணை வேண்டாம், முடி வேண்டாம் ,சொத்து வேண்டாம், நாடு வேண்டாம் .அரசாட்சி வேண்டாம் என்று மரவுரி தரித்து வெங்கானகம் ஏகிய அந்த மாபெரும் மனிதக் கடவுளை பற்றிப் பேச இந்த என்ன அருகதை இருக்கிறது?
இரா.ஸ்ரீதரன்
செம்மொழி மாநாட்டின் நிறைவு நாளான இன்று ஒலிபரப்பான பட்டிமன்றம் ரசிக்கும்படி இருந்தது. மறைக்கபடவேண்டியவை என்று ஒதிக்கியவை பற்றியெல்லாம் பேச்சாளர்களால் பேசாமல் கட்டுபடுத்த முடியவில்லை. இதை அனுமதி்த்தற்க்கு கலைஞருக்கு நிச்சியம் நன்றி சொல்லவேண்டும்.. கனியம்பூங்குன்றனாரின் ”யாதும் ஊரே யாவரும் கேளீர்” என்ற பாடலின் சில தலைப்புக்களை எடுத்துக்கொண்டு சொற்பொழிவு ஆற்றினார்கள். எல்லா பேச்சாளர்களின் பேச்சும் ரசிக்கும்படி இருந்தது. அதில் காஸ்பர் அவர்கள் நன்கு உரையாற்றினார். பர்வீண்சுல்தானவி்ன் உரை மிகவும் ரசிக்கும்படி இருந்தது எப்படி இப்படி என்று பொறாமையாகவும் இருந்தது. வாழ்க தமிழ் !! வளர்க தமிழ் !!!
இந்தச் செம்மொழி மாநாடே கிறித்தவ சர்ச் தமிழ் நாட்டின் ஹிந்து வேர்களை கொத்தி பாய்ச்சும் முதல் வாளி வெந்நீர் என்று தோன்றுகிறது. கொஞ்சம் கொஞ்சமாக தமிழர்களை மூளைச் சலவை செய்து ஹிந்து தர்மத்திலிருந்து அவர்களைப் பிரித்து ஒரு பக்கம் கிறித்தவத்துக்கு மதம் மாற்றி மறுபக்கம் அக்கிரமக்கார, தேச துரோக அரசியல்வாதிகளின் துணையுடன் ,ஸ்ரீ லங்கா மற்றும் பல இடங்களில் செய்தது போல் உள்நாட்டுக் கலகம், சண்டை இதற்கெல்லாம் ஆயத்தம் செய்து பாரதத்தை சிதைக்கும் அவர்களின் நீண்ட கால திட்டத்துக்கு ஆரம்ப ஒத்திகையோ எனத் தோன்றுகின்றது.
நம் மக்கள் மற்றும் தேசியவாதிகள் மிக மிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய நேரம் வந்து விட்டது.
நம் தாய் நாட்டை எப்பாடு பட்டாவது இந்த அபாயத்திலிருந்து மீட்க வேண்டும்.
இல்லை என்றால் விலை மதிப்பில்லாத, கொட்டிக் கொட்டிக் கொடுத்தாலும் கிடைக்காத சமயமும் ,கலைகளும், கலாச்சாரமும் மொழியும் அது சார்ந்த இலக்கியங்களும் மொத்தமாக அழிந்து விடும்.
இர்ர்.ஸ்ரீதரன்
.
படித்த ஹிந்துக்களில் பலர் புகழுக்கும், பட்டங்களுக்கும், மற்றவர்களின் புகழுரைக்கும் அடிமையாவது வேதனை.
ஒரு அயோக்யன், ஒரு படித்த, ஹிந்துவுக்கு ஒரு பட்டமோ, விருதோ கொடுத்தால் புளகாங்கிதம் அடைத்து அவன் அதை வாங்க ஓடுகிறான்
கொடுப்பவன் எப்படிப்பட்டவன்,அவன் தர்மத்தை அனுசரித்து நடப்பவனா, நல்ல நடத்தை உடையவனா ,நமது தாய் நாட்டின் மீது பற்று வைத்திருப்பவனா , அதற்கு த்ரோஹம் நினைக்காதவனா , ஊழலும் அக்கிரமும் செய்யாதவனா , அஹம்காரமும், மமதையும் பிடித்து தன்னை எல்லோரும் தலையில் தூக்கி வைத்து ஆட வேண்டும், இல்லை என்றால் அவர்களை வாயில் வந்த படி தூற்றுபவனா என்று பார்ப்பதில்லை.
இது படித்தவர்களுக்கு அழகா?
இரா.ஸ்ரீதரன்
//சங்க இலக்கியம் முழுக்க வேதத்தையும் வேள்வியையும் போற்றக்கூடியதாக அல்லவா உள்ளது?//
இங்கே வேதம் என்பது வடமொழி வேதமா? அல்லது தமிழ் வேதமா?
தமிழ் முதல் சங்கம் சிவபெருமனாலும் முருகனாலும் நடத்தப்பட்டது, இதை பற்றி நம் சங்கப்பாடல்களில் செய்திகள் உள்ளன. தொல்க்கபியர் காலத்திற்கு முன்பே அகத்தியரால் ‘அகத்தியம்’ செய்யப்பட்டுள்ளது. ‘அகத்தியம் பற்றி குறிப்புகள் தான் உள்ளன, அது கிடைக்கவில்லை.
என் கருத்து என்னவென்றல், தமிழ் வேதம் என்று ஒன்று இருந்திருக்க வேண்டும், அது காலப்போக்கில் மறைந்து இருக்க வேண்டும். நமது சங்க இலக்கியங்கள் கூறுவதும் தமிழ் வேதமாக இருக்கலாம்.
பலரும் தமிழ் மொழியையும் அதன் தொன்மையையும் பாராட்டும் பொது ‘வடமொழியை’ பற்றியும் கூறவேண்டும் என எதிர் பார்க்கின்றனர்.
வடமொழியை இந்து தர்மத்தின் வேத மொழியாக ஏற்றுக்கொண்டால் அது இந்து தர்மத்திற்கு செய்யும் இழுக்கு.
Somasundaram
இந்த செம்மொழி மாநாட்டில் ‘பக்தி இலக்கியங்கள்’ பற்றி அதிகம் பேசப்படாதது மிகவும் வேதனைக்குரிய செய்தி.
அதும், நான் அறிந்த வரை ‘திருஞானசம்பந்தர்’ தன்னை தமிழ் ஞானசம்பந்தன் என நூறுக்கும் மேற்ப்பட்ட இடத்தில் படுகின்றார். அதையே சுந்தரரும் ‘நாலும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தன்’ என பாடுகின்றார். தமிழ் வளர்த்த சான்றோர்களில் ‘திருஞானசம்பந்தர்’ முன்னிலை படுத்தி இருந்து இருக்க வேண்டும், அதை பற்றி ஒரு செய்தியும் பேசப்படாதது மிகவும் வேதனைக்குரியது.
ஆனால் சமயத்தை தவிர்த்து பார்த்தல் இந்த செம்மொழி மாநாடு தமிழ் மொழிக்கு தேவையானது தான். இது தமிழ் மொழியை சற்று வளர்க்க செய்யும்.
மறைவாக நமக்குள்ளே பழம் கதைகள் பேசியே வாழ்ந்து வருகிறோம். புற நானூறுக் கதைகளை இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் சொல்லிக் கொண்டிருப்பார்கள். மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் என்னுடைய பால்ய நண்பரொருவரைப் பார்த்தேன். தரையில் ஒரு துண்டை விரித்து அழுக்கு சட்டை வேட்டி அணிந்திருந்தவர் என்னைப் பார்த்தவுடன் ஓடிவந்து கட்டிக் கொண்டார். என்ன செய்தி என்றேன். எனக்கு வரவேண்டிய சொத்துக்களுக்காக நீதிமன்றத்தில் வழக்கு நடக்கிறது. அது வந்துவிடும். பிறகு என்னைப் பிடிக்கவே முடியாது என்றார். எனக்குத் தெரிந்து கடந்த நாற்பது ஆண்டுகளாக இவர் அப்படியேதான் சொல்லிக் கொண்டிருக்கிறார். இன்றைய புதிய செம்மொழியாளர்கள் இன்னும் புறநானூறு கனவிலேயே வாழ்கிறார்கள். இடைக்கால இலக்கிய வகையில் கம்பன், வில்லி, ஆழ்வார்கள், நாயன்மார்கள் இவர்கள் இல்லாவிட்டால் தமிழின் இன்றைய கதி என்ன? தமிழுக்கு எதிரிகளான சமணம் பவுத்தம் இவைகளின் கை ஓங்கி இருந்தபோது ஆழ்வார்களும், நாயன்மார்களும் தமிழைத் தூக்கிப் பிடித்துக் காப்பாற்றினார்கள். திருஞானசம்பந்தர் உயிரைப் பணயம் வைத்து சமணர்களுடன் போராடினார். அவர்கள் இல்லாவிட்டால் தமிழ் அழிந்திருக்கும். சமய இலக்கியங்களை இவர்கள் இலக்கியங்களாகவே கருதவில்லை போலிருக்கிறது. ஒரே தமிழன், ஒரே இலக்கியம், அந்த இலக்கியமும் தமிழனும் ஒரே ஆசாமி. இந்த முகஸ்துதிதான் இன்று சோறு போடும். இது காலிக்கு மன்னிக்கவும் வாலிக்குத் தெரிந்திருக்கிறது. நமக்கெல்லாம் தெரியவில்லையே.
இந்தியாவில் நீதி, நியாயம், தர்மம் எல்லாம் அழிந்துவிட்டன. இன்றைய செய்தி:- இராமச்சந்திரபுற மடத்தின் (சிருங்கேரி மடத்தின் ஒரு கிளை) சுவாமிஜியை இழிவுபடுத்த அவரைப்போலவே ஒரு ஆள் ஒரு பெண்ணிடம் தனிமையில் இருப்பதை சுவாமிஜிதான் அப்படி செய்தார் என்று மக்களை ஏமாற்ற ஒரு செக்ஸ் சீ.டி யை உருவாக்கிய நான்கு பேர் கைது. அதில் ஒருவர் ராஜீவ் ஆதி என்ற காங்கிரஸ் இளைஞர் அணி தலைவர். முழுவதும் படியுங்கள்:-
http://www.ndtv.com/news/cities/fake-sex-cd-racket-to-defame-bangalore-godman-busted-28818.php
விருது வாங்கிய யாருமோ அல்லது சாமி-மாமி கதை பேசிய ஜால்ரா பக்கெட் கவின்ஞரோ இதை சொன்னதா தெரியவில்லை – நானும் விருது வாங்க தயார் ஆகிறேன்
தமிழ் எங்களை வாழ வைத்து கொண்டிருக்கிறது
தமிழை நமது முதல்வர் (மட்டுமே) வாழ வைத்து கொண்டிருக்கிறார்
எனக்கு தான் அடுத்த பரிசு அய்யா
நடந்து முடிந்த செம்மொழி மாநாட்டில் நான் விரும்பிக்கேட்ட உரை திரைக்கலைஞர் திரு. சிவக்குமார் அவர்களுடையது,100% நன்றாக இருந்தது என்று சொல்ல ஆசை. புறநானூற்றில் ஆரம்பித்து கம்பராமாயணம் வரை அருமையாகக் கையாண்டார். தீண்டாமை மற்றும் சாதிக்கொடுமைகள் பற்றி பேசியவிதம் நன்று.
பின்னர் ஒரு திரைப்படவசனத்தை ஒப்பித்து தாராளமாகவே “முக” துதி செய்தார் என்பதாலேயே 100 மதிப்பெண்கள் போடமுடியவில்லை. பகுத்தறிவாளரான கலைஞர்(!) கருணாநிதியின் முன் தன்னை இறைநம்பிக்கையுடையவன் என்று ப்ரகடனம் செய்தார். பாராட்டுகிறோம். ஆனால் கோயிலுக்குப் போவதில்லை என்று சொல்லி அதற்கு ஒருகாரணமும் சொன்னார். திருப்பதியில் ஒரு சாதாரண மனிதன் தரிசனம் செய்ய தரும தரிசனத்தில் மூன்று மணி நேரம் முதல் மூன்று நாட்கள் ஆகிறபோது விஐபி தரிசனம் என்கிற பெயரில் காட்டேஜில் தங்கி குளிக்காமல் கூட வருகிறவனுக்கு சிலநிமிடங்களிலேயே கோவிலின் உள்ளே செல்லமுடிகிறது என்பது எவ்வளவு வேதனைக்குரிய விஷயம் என்றார். அது சரியே. ஆயினும் தமிழக அறநிலையத்துறை நிர்வகிக்கும் திருவரங்கம், மதுரைமீனாட்சி, பழனி, திருத்தணி, திருப்பரங்குன்றம்,திருச்செந்தூர், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி, திருவண்ணாமலை கோவில்களின் கட்டணவரிசை,சிறப்புக்கட்டணவரிசை, இலவச தரிசனம் என வகைப்படுத்தி இருப்பதை நீக்கவேண்டும் என அவர் முதல்வருக்கு(பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளான அனைவரும் அர்ச்சகர் ஆக முடியாத நிலையை சட்டம் கொண்டுவந்து ”முடியும்” என்று முள்ளை அகற்றிய) வேண்டுகோள் விடுத்திருக்கலாம் ஆனால் அவர் கோவிலுக்குச் செல்வதில்லை எனவே இது பற்றி தெரிய நியாயமில்லை. இராமவிரோதியான முக முன் ராமாயாணம் சொன்ன அவருக்கு வாழ்த்துக்கள்.
சிவகுமாரின் பேச்சில் நியாயம் இருப்பதாக நான் நினைக்க வில்லை. அதை பதிவும் செய்து இருக்கிறேன்
http://www.virutcham.com/2010/06/
ஒத்துகொள்ள மாட்டிங்களே தமிழர் பண்பாடு என்று சொன்னால். ஆரியத்தை கலக்கணும் அதில். கட்டுரையாளரின் எழுத்தே காட்டி கொடுத்துவிட்டது இவர் யார் என்று இதில் போட்டோ வேறு போடனுமா..ஒரு மொழி வாழ்வது அதனை பயன்படுத்தும் சாதாரண மக்களால். இலக்கியங்களால் அல்ல. நிறைய இலக்கியங்கள் இருந்தும் வடமொழி செத்துப்போனதற்கு பேச ஆள் இல்லாததே காரணம். ஆதலால் பாரதியின் “தமிழ் இனி மெல்ல சாகும்” ஆசை நிறைவேறாது. இன்னும் ராமன் கத பேசிகிட்டு ராமன் பாலம்னு சொல்லிக்கிட்டு சேது திட்டத்தை தடுப்பதை விட்டு விட்டு தமிழ்நாட்டுக்கு விசுவாசமாய் இருங்கள்.
Sun, Jun 27 08:30 PM
Coimbatore, June 27 (IANS) People who have studied Tamil will be given preference in government jobs, Tamil Nadu Chief Minister M. Karunanidhi said Sunday at the World Classical Tamil Conference.
‘Preference will be given in government jobs to those who have studied Tamil. The government will soon come out with a law,’ Karunanidhi said in his valedictory address at the conference held in this textile city.
He also called upon the central government to declare all the state languages as official languages and start with the Tamil language.
Urging the central government to take action to permit use of Tamil in the Madras High Court, Karunanidhi requested the centre’s assistance in setting up Rs.100 crore fund for carrying out research activities in Tamil.
He also said the central government should provide research assistance for Tamil researchers as it does for Sanskrit.
Demanding the central government to carry out deep sea research on the coasts of Poompuhar and Kanyakumari in Tamil Nadu, he asked the centre to set up the National Institute of Epigraphy in the state as nearly 60,000 of the 100,000 stone inscriptions found in India are in Tamil.
Announcing that a lesson on classical Tamil will be included in the syllabus of schools and colleges in the state, he said Tamil literary works will be translated in other Indian languages and similarly the literary works of other languages will also be translated in Tamil.
He said World Classical Tamil Conference will henceforth be held at regular intervals.
The government will come out with a handbook on Tamils across the world, he added.
Thanking residents of Coimbatore for their hospitality extended during the five-day conference, Karunanidhi said a flyover at an outlay of Rs.100 crore will be built near the conference venue.
Referring to the division of the landscape into five types in the Sangam literature – Kuruji (mountainous), Mullai (forest), Marudham (farm land), Neithal (coastal, seashore) and Pallai (desert, wasteland), Karunanidhi added: ‘A bio-diversity park with plants that would grow in the five types lands will be set up in the state with the advice of M.S.Swaminathan.’
He said Tamil is the only language that was present in spoken and written form more than 1,500 years before Christ.
‘English got its first written letter in 7 AD while for German it was 8 AD. The French language to its first written scrip in 9 AD and the Italian language in 10 AD,’ he said.
Delivering the presidential address, union Finance Minister Pranab Mukherjee said: ‘Tamil people have contributed for enrichment of Indian culture. The Tamil Internet conference will help in development of unicode further.’
Reiterating that there is all the justification for Tamil to be given the classical status, Mukherjee said the United Progressive Alliance (UPA) government is proud to have done that.
Union Home Minister P.Chidambaram said: ‘A language would survive only when people use it while conversing and new books are written.’
Releasing the commemorative stamp on the World Classical Tamil Conference union Minister for Communications and Information Technology A. Raja said: ‘This is the first time in the history of India a special stamp is released for a language.’
Source:- http://in.news.yahoo.com/43/20100627/836/tbs-study-tamil-to-get-jobs-karunanidhi.html
He says Tamil is the only language that was spoken and written more than 1500 years before Christ. It is very well known that Sanskrit is also as old as Tamil and that too was spoken and had numerous works during the time mentioned by him. He also gives the time period of origin of scripts of European languages like English, French, Italian and German. But it is very well known that Sanskrit is much older than all these languages. The one question remains to be asked is:- “How long will he continue this habit of fooling people and holding them in the limits of his ‘Dravidian Maya’?”. Why no scholar dares to challenge his ‘authoritative and knowledgeable’ words?