முகப்பு » அனுபவம், ஆன்மிகம், வழிகாட்டிகள்

ஸ்ரீ ராகவேந்திரர் என்னும் சன்னியாசி

அச்சிட அச்சிட

mantralayam-on-thungabadra-teeramஇரண்டு நாள் பயணமாக மந்த்ராலயம் சென்றிருந்தேன். ராகவேந்திரர் ஜீவ சமாதி அடைந்த இடம் மன்சாலி எனப்படும் மாஞ்சாலி எனப்படும் மந்த்ராலய கிராமம். துங்கபத்திரா நதிக்கரையில் அமைந்துள்ளது. இன்றைய நிலையில் ஆந்திரப் பிரதேசத்தின் வசத்தில் உள்ள மந்த்ராலயம் இப்போதும் ஒரு குக்கிராமமே. ராகவேந்திரரின் மடத்தையும், மடத்தைச் சுற்றி நிகழ்ந்துகொண்டிருக்கும் வேலைகளையும் நீக்கி விட்டுப் பார்த்தால், இக்குக்கிராமத்தில் ஒன்றுமே இல்லை என்று சொல்லிவிடலாம்.

மத்வாசாரியரால் மொழியப்பட்ட த்வைத நெறியில் வந்த ஆசார்யர்களுள் முக்கியமானவர் ராகவேந்திரர். இவருக்கு முன்பு வியாசராஜ யதி (வியாச யதி ராஜர்), ஸுரேந்திரர், விஜயீந்த்ர தீர்த்தர், ஸுதீந்திரர் போன்றவர்கள் மத்வத்தை முன்னெடுத்தவர்கள். மத்வருக்குப் பிறகு ராகவேந்திரரின் காலமே மத்வ, த்வைதத்தின் பொற்காலம் என்று அறியப்படுகிறது.

mantralayam-entrance1595-ல் புவனகிரியில் பிறந்த ராகவேந்திரர், வேதங்களைக் கற்று, உபநயனம் செய்துகொண்டு, திருமணம் செய்துகொண்டு, சன்னியாசம் மேற்கொண்டு, பாத யாத்திரை சென்று, வழியில் பல்வேறு வாதங்களை மேற்கொண்டு பலரை வென்று, இறுதியில் மாஞ்சாலி (மன்சாலி என்றும் சொல்லப்படுகிறது) என்னும் மந்த்ராலயத்தில் ஜீவ சமாதி அடைந்ததாக அவரது வாழ்க்கை வரலாறு விரிகிறது. ராகவேந்திரர் பற்றிய வாழ்க்கை வரலாறுகள் முழுவதுமே அவரை ஒரு சித்தராகவும் மகானாகவுமே காட்ட முனைகின்றன. அவர் தொட்டார், கண் பார்வை வந்தது; அவரை நினைத்ததும் படிப்பறிவு வந்தது என்பன போன்றவை. ராகவேந்திரரின் அக்கா மகனால், ராகவேந்திரரின் காலத்திலேயே எழுதப்பட்ட ஸ்ரீ ராகவேந்திர விஜயம் என்னும் நூலே ராகவேந்திரர் பற்றி அறிய உதவும் நூலாக உள்ளது. ராகவேந்திரரை மத்வ மடாதிபதியாக நிறுவும் பொருட்டும், அவரது மகான் தன்மையை விளக்கும் பொருட்டுமே அது எழுதப்பட்டிருக்கவேண்டும். அதுமட்டுமில்லாமல், ராகவேந்திரர் ஜீவ சமாதிக்குச் செல்லும் முன்பு ஆற்றிய உரையாகச் சொல்லப்படும் உரையில் அவரே தனது மகிமைகளைப் பற்றிப் பேசுகிறார். ஆனால் அது ராகவேந்திரர் ஆற்றிய உரை என்பதற்கு ஆதாரம் இருப்பதாகத் தெரியவில்லை. அந்த ‘மகிமை’களையெல்லாம் விட்டுவிட்டு, அந்த நூலில் இருந்து ராகவேந்திரரின் வரலாற்றைத் தேடித்தான் அறியவேண்டியுள்ளது. இத்தனைக்கும் 350 ஆண்டுகளுக்கு முன்பாகத்தான் ராகவேந்திரர் ஜீவ சமாதி அடைந்திருக்கிறார்.

மகிமைகளை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால், ராகவேந்திரர் மிக முக்கியமான சன்னியாசியாக, பெரும் ஞானியாக வாழ்ந்திருக்கிறார் என்பது புலனாகிறது. ராகவேந்திரர் 64 கலைகளில் வல்லவர் என்கிறது ராகவேந்திர விஜயம். இது எத்துணை தூரம் உண்மை என்று தெரியவில்லை. ஆனால் ராகவேந்திரர் வீணை வாசிப்பதில் தேர்ந்தவராக விளங்கியிருக்கிறார். அவரது தாத்தா விஜயநகர அரசவையில் வீணை வாசிப்பவராக இருந்திருக்கிறார். (விஜய நகரப் பேரரசின் வீழ்ச்சியின் போது, வாழ்வாதாரம் தேடி கும்பகோணத்திற்கு இடம் பெயர்கிறது ராகவேந்திரரின் குடும்பம். அங்கேதான் ராகவேந்திரர் பிறக்கிறார்.) ராகவேந்திரரின் அப்பாவுக்கும் வீணை வாசிக்கத் தெரிந்திருக்கிறது. இதனால் ராகவேந்திரருக்கும் வீணை வாசிக்கத் தெரிந்திருக்கலாம் என்று யூகிக்கலாம். சமிஸ்கிருதத்தில் ஆழ்ந்த புலமை பெற்றிருக்கிறார். அவர் சமிஸ்கிருத நூல்களுக்கு உரைகளும், வேறு சில சிறிய சிறிய உரைகளும் நிறைய எழுதியிருக்கிறார். ஆனால் அவற்றில் பல கிடைக்கவில்லை. நிறைய பாடல்களும் இயற்றியிருக்கிறார். அவர் இயற்றிய பாடல்களில் நமக்குக் கிடைக்கும் ஒரே கன்னடப் பாடல் ‘இந்து எனகே கோவிந்தா நிந்நய பாதாரவிந்தவ தோரோ முகுந்த’ என்ற பாடல் மட்டுமே என்கிறது ஒரு குறிப்பு.

wooden-chappel-used-by-raghavendra-swamiதனது திருமணத்துக்குப் பின் சன்னியாசம் மேற்கொள்ளுகிறார். சன்னியாசம் பற்றிய விவரணைகள் ஸ்ரீ ராகவேந்திர விஜயம் நூலில் உள்ளன. சன்னியாசம் மேற்கொண்டதால் அவரது மனைவி சரஸ்வதி தற்கொலை செய்து கொள்கிறார். (அவர் திருமணம் செய்துகொண்ட வருடம், அவர் சன்னியாசம் மேற்கொண்ட வருடம் பற்றிய குழப்பங்கள் நூல்களில் காணப்படுகின்றன.) அவரது சன்னியாச வாழ்க்கையில் ஒரு சன்னியாசிக்குள்ள கடமைகளை நிறைவேற்றுகிறார். க்ராம ஏக ராத்ரி வாஸ! என்பதற்கிணங்க தொடர்ந்து தென்னிந்தியாவெங்கும் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். நிறைய வியாக்யானங்கள், நிறைய பாடல்கள் இயற்றுகிறார். மீமாஸத்திலும், த்வைதத்திலும் நிறைய பேரை வாதில் வெல்கிறார். (இவ்வளவுதான் சொல்கின்றன ராகவேந்திரரைப் பற்றிய நூல்கள். எவையும் அவர் அப்படி என்ன பேசி வாதில் வென்றார் எனச் சொல்லுவதில்லை!) சேது, திருவனந்தபுரம், மதுரை, ஸ்ரீரங்கம், வேலூர், உடுப்பி, மைசூர், மீண்டும் கும்பகோணம், கதக், பண்டரீபுரம், பீஜப்பூர், அல்லூர், ராய்ச்சூர், ஆதோனி, மான்சாலி எனத் தொடர்கிறது அவரது பயணம்.

அவர் இயற்றிய பாட்ட ஸங்கரஹம் என்னும் நூலை யானையில் வைத்து பெருமைப்படுத்தி அழைத்துச் சென்றார் நீலகண்ட சாஸ்திரி – இது நடந்தது மதுரையில். ராய்ச்சூரில், தாழ்த்தப்பட்ட இனமாகக் கருதப்பட்ட ஒருவர் ராகவேந்திரரிடம் பேசுகிறார். அவரை, தான் பூஜித்து வந்த மூல ராமருக்கு பூஜை செய்வாயாக என்கிறார் ராகவேந்திரர். அந்த மனிதர் நிறைய கடுகைக் கொண்டுவந்து பூஜை செய்கிறார். கடுகை விரதகாலத்தில் சேர்க்கக்கூடாது என்ற முறை இருந்தும், அதனை மறுத்து, கடுகைப் பயன்படுத்தும் வழிமுறையைக் கொண்டு வருகிறார் ராகவேந்திரர். (இவை போக, அவர் செல்லுமிடங்களிலெல்லாம் ராகவேந்திரரின் பெருமைகளும் மகிமைகளும் தொடர்கின்றன. ஆனால் இந்த இரண்டு மட்டுமே நம்பும்படியாக உள்ளன.) இப்படி கடுகைப் பயன்படுத்தியதால் வெறுப்படையும் ஆசார்யர்களைக் கண்டிக்கிறார் ராகவேந்திரர்.

ஆதோனியில் வெங்கண்ணா என்பவர் ராகவேந்திரரின் சீடராகிறார். (ராகவேந்திரரின் மகிமையால் அவர் சுல்தான் மசூன் கானிடம் திவனாகிறார். அதனால் அவர் ராகவேந்திரரின் சீடராகிறார்.) ராகவேந்திரரைச் சோதிக்க நினைக்கும் சுல்தான், பின்னர் ராகவேந்திரரைப் புரிந்துகொண்டு, அவருக்கு தானமாக என்ன வேண்டும் எனக் கேட்க, ராகவேந்திரர் மன்சாலி கிராமத்தைக் கேட்கிறார். அது ஏற்கெனவே ஒரு ஹாஜிக்குக் கொடுக்கப்பட்டுவிட்டது என்றாலும், ராகவேந்திரர் அக்கிராமமே வேண்டும் எனக் கேட்க, சுல்தான் அந்த ஹாஜிக்கு வேறொரு கிராமத்தைக் கொடுத்துவிட்டு, மன்சாலியை ராகவேந்திரருக்குக் கொடுக்கிறார். அது பிரகலாதன் யாகம் செய்த இடம் என்று நம்பிய ராகவேந்திரர் அந்த இடத்தைக் கேட்டிருக்கிறார். 1671-ல் தான் சமாதி அடையும் இடத்தைத் தேர்ந்தெடுக்கிறார். பின்னர் வேறொரு இடத்தை, தான் முதலில் தேர்ந்தெடுத்த இடத்துக்கு அருகிலேயே தேர்ந்தெடுக்கிறார். முதலில் தேர்ந்தெடுத்த இடம், தனது அண்ணனின் கொள்ளுப் பேரப்பிள்ளையான வாதீந்தருக்கு இருக்கட்டும் என்று சொல்லிவிடுகிறார். (அப்போது வாதீந்தரருக்கு வயது 2.) தான் ஜீவ சமாதி அடையும் முன்பாக, தனது அண்ணனின் பேரப்பிள்ளையான யோகீந்திரரை மடாதிபதியாக்குகிறார்.

mantralayam-ragavendrarஉடலுடன் பிருந்தாவனம் புகும் நாள் வருகிறது. பிருந்தாவனத்துக்குள் மூச்சை அடக்கி தியானத்தில் ஆழ்ந்தார். அவரது கையில் இருந்த ஜபமாலை நழுவி விழுகிறது. இதனைப் புரிந்துகொள்ளும் வெங்கண்ணா கடைசியாக, திறந்திருந்த பகுதியை மூடிவிடுகிறார். இதன் பின்பு நெகிழ்ச்சி அடையச் செய்யும் நாடகத்தனமான காட்சிகள் அரங்கேறுகின்றன. துங்கபத்திரை நதியின் கரையில் அமைந்திருக்கிறது ராகவேந்திரர் சமாதி அடைந்த இடம். அதன் இன்னொரு கரையில் பிச்சாலய என்னும் ஊரில் (தற்போதும் உள்ளது) அப்பண்ணா என்பவர் – ராகவேந்திரரின் சீடர் இருக்கிறார். ராகவேந்திரர் ஜீவ சமாதி அடையப் போவதை அறிந்ததும் அவரைக் கடைசியாகக் கண்டுவிடும் உத்வேகத்தில் ஓடிவருகிறார். வழியில் துங்கபத்திரை பொங்கி வழிந்து ஓடுகிறது. அவர் ராகவேந்திரரை மனதில் நினைத்துக்கொண்டு, சமிஸ்கிருதத்தில் சுலோகம் பாடிக்கொண்டு, நதியில் இறங்கிக் கரையேறுகிறார். அதற்குள் ராகவேந்திரர் ஜீவ சமாதி அடைந்துவிடுகிறார். அப்பண்ணா பாடிக்கொண்டிருந்த சுலோகத்தில் கடைசி ஏழு எழுத்துகள் மட்டும் பாக்கி இருக்கின்றன. தம்மால் ராகவேந்திரரைப் பார்க்க முடியவில்லையே என்னும் சோகத்தில் அவரது நா தழுதழுத்துவிடுகிறது. ஆனால் ராகவேந்திரர் ஜீவ சமாதி அடைந்த பிருந்தாவனத்தில் இருந்து “ஸாக்ஷீ ஹயாஸ்யோத்ரஹி” என்பதாக அந்த சுலோகம் நிறைவு பெறும் உரத்த ஒலி வெளிவருகிறது. இதை எத்துனைத் தூரம் நம்பமுடியும் எனத் தெரியவில்லை. ஆனால் ராகவேந்திரர் மேலும், தெய்வீகத்தின் மேலும் நம்பிக்கை உள்ளவர்கள் நிச்சயம் நெகிழ்ந்துவிடும் இடம் இது. இது நடந்திருக்குமா இல்லையா என்பதையெல்லாம் மீறி, நானும் நெகிழ்ந்த இடம் இதுவே.

devotees-sitting-for-food-inside-annadhana-mandapamநான் என் குடும்பத்துடன் ஆதோனி வழியாக மந்த்ராலயம் சென்றேன். ராகவேந்திரர் சொன்னதை பெரும்பாலும் மறந்துவிட்டு, தமக்கென உருவாக்கிக்கொண்ட சாதி சார்ந்த வழக்குகளில் மூழ்கிக் கிடக்கிறது மந்த்ராலயம். இன்றும் பிராமணர்களுக்கும், அபிராமணர்களுக்கும் தனித்தனி சாப்பாட்டு இடம். ஆனால் ராகவேந்திரர் சொன்னதாக, மடமே வெளியிட்டிருக்கும் ராகவேந்திர வரலாறோ, அவர் தாழ்த்தப்பட்டவர்களை அரவணைத்தார் என்கிறது. கோயில் தரிசனத்தில்கூட, மிக நுணுக்கமாக இந்த வேறுபாட்டை நிறுவுகிறார்கள்.

இன்றும் ராகவேந்திரர் சமாதிக்கு அருகிலேயே, அவரது அண்ணனின் கொள்ளுப் பேரனான வாதீந்திரரின் சமாதியும் உள்ளது.

sri-manchallamma-templeமான்சாலியில் இன்னொரு முக்கியமான விஷயம், மாஞ்சாலம்மா என்னும் கிராம தேவதை பற்றியது. ராகவேந்திரரை தரிசிக்கச் செல்லும் முன்பு, மாஞ்சாலம்மாவை தரிசிப்பது அவசியம் என்கிறது நடைமுறை. ஆனால் இதைப் பற்றிய குறிப்பே இல்லை மடம் வெளியிட்டிருக்கும் நூலில். கிராம தேவதை பற்றிய வழிபாடு எவ்வளவு முக்கியம் என்பது ராகவேந்திரருக்குத் தெரிந்திருக்கிறது. ராகவேந்திரருக்கு மட்டுமே தெரிந்திருக்கிறது! அதேபோல் ஆதோனியிலும் கிராம தேவதை வழிபாடு முக்கியமாக உள்ளது. (அதன் வரலாறு தெரியவில்லை. அடுத்த முறை செல்லும்போது கேட்கவேண்டும்.)

சில முக்கியமான, சுவாரஸ்யமான குறிப்புகள்

1. ராகவேந்திரர் ஜீவ சமாதிக்கு நுழையும் முன்பு பேசியதாகச் சொல்லப்படும் உரை:

* சரியான வாழ்க்கை நடத்தையின்றி சரியான சிந்தனை வராது.

* நல்ல மற்றும் தகுதிக்குரிய மக்களுக்கு செய்யப்படும் உதவி/தர்மம் கடவுளின் பூஜைக்கு நிகராகும்.

* சாஸ்திரத்தை பின்பற்றாமல் தங்களைக் கடவுள் என்று கூறிக்கொண்டு அதிசயங்களை செய்பவர்களிடமிருந்து விலகி இருங்கள். நானும் ஸ்ரீமத் ஆசாரியாரும் நிறைய அதிசயங்களை நிகழ்த்தியிருக்கிறோம். அவையெல்லாம் யோக சித்தியினாலும் கடவுளின் அருளினாலும் எங்களால் செய்ய முடிந்தது. அவற்றில் எந்த பொய்யோ பித்தலாட்டமோ இல்லை. அவ்வதிசயங்கள் கடவுளின் மகிமையையும் அவர் அருளால் ஒருவர் எப்பேற்பட்ட சக்திகளை அடைய முடியும் என்று பறை சாற்றவுமே செய்யப்பட்டது. சரியான ஞானத்தை மிஞ்சிய எந்த அதிசயமோ அற்புதங்களோ கிடையாது. சரியான ஞானம் இல்லாமல் செய்யப்படும் அற்புதங்கள் வெறும் சூனிய வித்தையே ஆகும். அவ்வித்தைகளை செய்பவருக்கோ அதை நம்புகிறவருக்கோ எந்த ஒரு நன்மையும் நேராது.

* கடவுளின் மேல் நல்ல பக்தி இருத்தல் வேண்டும். இப்பக்தி குருட்டு நம்பிக்கையாக இருக்கக்கூடாது. கடவுளின் மேலாண்மையை முழு மனதோடு எற்றுக்கொள்ளுதல் பக்தி ஆகும். குருட்டு நம்பிக்கை உண்மையான பக்தி ஆகாது. அது வெறும் முட்டாள்த்தனமே ஆகும். நமக்கு கடவுள் மேல் மற்றும் இன்றி மற்ற இதர தேவதைகளிடமும் அவர்களின் தகுதிக்கேற்ப பக்தி இருத்தல் வேண்டும்.

இதில் “நல்ல மற்றும் தகுதிக்குரிய மக்களுக்கு செய்யப்படும் உதவி/தர்மம் கடவுளின் பூஜைக்கு நிகராகும்” என்னும் வரி முக்கியமானது. அன்றைய, அவரது காலகட்டத்தில் அவர் பிராமணர்கள் என்றே சொல்லியிருக்கலாம். ஆனாலும் சொல்லவில்லை என்பது முக்கியமானது. இதனை இன்றைய மடங்கள் புரிந்துகொள்ளவேண்டும். கடவுள் மேல் மட்டுமன்றி இதர தேவதைகளிடமும் என்னும் வரியும் முக்கியமானது. ஆனால் இவை ராகவேந்திரரால்தான் சொல்லப்பட்டதா என்பதுதான் தெரியவில்லை!

sri-rangavendra-tamil-movie2. ஸ்ரீ ராகவேந்திரர் என்னும் திரைப்படம் ரஜினிகாந்த் நடிக்க தமிழில் வெளிவந்தது. அதில் வரும் எஸ்.பி.முத்துராமத்தனங்களை விட்டுவிட்டுப் பார்த்தால், பெரும்பாலும் அவரது வாழ்க்கைக் குறிப்புகளை ஒட்டியே எடுக்கப்பட்டுள்ளது. பிரம்ம ராக்ஷசனை அழிப்பது, படிப்பறிவற்ற வெங்கண்ணா படிப்பது, மாம்பழ ரசம் நிரம்பியுள்ள குண்டாவில் விழுந்து இறக்கும் குழந்தை ராகவேந்திர மகிமையால் உயிர் பிழைப்பது போன்றவை. ஆனால், கடைசியில் வரும் பாடல் ‘அழைக்கிறான் மாதவன்’ ராகவேந்திரராலேயே பாடப்படுவதாக உள்ளது. ராகவேந்திரர் சமிஸ்கிருதத்தில் பாடியதற்கான குறிப்புகள்கூட இல்லை. அப்பண்ணா துங்கபத்திரை நதிக்கரைக்கு தமிழில் பாடிக்கொண்டே ஓடிவரும்போது, துங்கபத்திரை இரண்டாகப் பிரிந்து வழி விடுகிறது. சென்ற வாரம் உதயா டிவியில் ஸ்ரீ ராகவேந்திரர் என்னும் ஒரு கன்னடப் படத்தின் கடைசி சில காட்சிகளை மட்டும் காண முடிந்தது. அதில் ராகவேந்திரர் கன்னடத்தில் பாடவில்லை. அப்பண்ணா துங்கபத்திரையில் இறங்கி நீரில் தத்தளித்து ஓடிவருகிறார். நதி இரண்டாகப் பிரிந்து வழிவிடவில்லை. அப்பண்ணா சமிஸ்கிருதத்தில் பாடுகிறார். கடைசி வரியின் ஒலி மட்டும் ராகவேந்திரரின் சமாதியிலிருந்து வெளிவருகிறது. அன்று அந்தப் படம் பார்த்தபோது எனக்கு இது புரியவில்லை. ராகவேந்திரரின் வரலாற்றைப் படித்தபோது, கன்னடப் படம் எப்படி ராகவேந்திரரின் வரலாற்றுக்கு அருகில் இருக்கிறது என்பதை நினைத்து ஆச்சரியம் ஏற்பட்டது. கன்னடத்தில் வெளி வந்த ஸ்ரீ ராகவேந்திரர் படத்தை முழுவதும் பார்த்தால் இன்னும் சுவாரஸ்யங்கள், ஆச்சரியங்கள் கிடைக்கலாம்.

3. ராகவேந்திரர் எழுதிய சிறு குறிப்புகளின் பட்டியல்:

* வேத பிரஸ்தனம்- என்னும் பொருள் பற்றி: வேதத்ரய விங்குதி (ரிக், யஜூர், சாம வேதங்கள்), மந்த்ரார்த்த மஞ்சரி, பஞ்ச சூக்த உரைகள், பத்து உபநிடதங்களில் உள்ள ஒவ்வொரு வாக்கியத்துக்கும் உரை.

* பகவத் கீதாப்ரஸ்தானம்- கீதா விங்ருதி, கீதாப்ரமேய தீபிகையின் உரை, கீதாதாத்பர்யத்திற்கு உரை.

* ஸூத்ரப்ரஸ்தானம்- தந்த்ர தீபிகா, ந்யாய முக்தாவளி, ப்ரஹ்ம ஸூத்ரபாஷ்ய தத்வப்ரகாசிகர்பாவதீபம், அனுபாஷ்ய டீகா, தசப்ரகரண டீகாவின் உரை.

* தர்க்க தாண்ட வ்யாக்யானம்

* வாதாவளீ வியாக்யானம்

* ப்ரமாண பக்ததி வியாக்யா

* ஸ்ரீராம சாரித்ர மஞ்சரி

* ஸ்ரீ க்ருஷ்ண சாரித்ர மஞ்சரி

* ஸ்ரீ மன்மஹாபாரத தாத்பர்ய நிர்ணய பாவ ஸாங்க்ரஹம்

* அணுமத்வ விஜய வ்யாக்யானம்

* ப்ராதஸ் ஸாங்கல்ப கத்யம்

* பாட்ட சங்க்ரஹம்

* ப்ரமேய ஸங்க்ரஹம்

(இவை எல்லாம் மடம் வெளியிட்டிருக்கும் நூலில் உள்ள விவரங்கள். இவற்றின் உண்மைத்தன்மை பற்றித் தெரியவில்லை.)

4. ராகவேந்திரரின் மீது கன்னட நடிகர் ராஜ்குமார் பாடிய பாடல்கள் அற்புதமானவை. துரதிர்ஷ்டம் என்னவென்றால், அந்த குறுவட்டு மந்த்ராலயத்திலும் கிடைக்கவில்லை என்பதுதான். (குறிப்பாக, ஹாலல்லா தரு ஹாது என்னும் பாடலின் மெட்டையும், ராஜ்குமாரின் அபூர்வமான குரலையும், அப்பாடலின் மெஸ்மெரிசத்தையும் மறக்க முடியவில்லை.) பெங்களூரில் எங்கேனும் இந்தக் குறுவட்டு கிடைத்தால் நண்பர்கள் சொல்லவும்.

shri-panchamuga-hanuman-temple5. எனது மந்த்ராலயப் பயணம் எனக்கு பெரிய மனநிறைவைத் தந்ததா என்றால் யோசிக்கத்தான் வேண்டியிருக்கிறது. ஒரு திருப்பதி தரிசனம் போன்ற உணர்வு என்னை ஆட்கொள்ளவில்லை. ஆனால், ராகவேந்திரர் பற்றிய நினைவுகளும், அவர் தவம் செய்த இடத்தைப் பார்த்த போது (பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயில் உள்ள இடம், மந்த்ராலயத்திலிருந்து 22 கிமீ தொலைவில் உள்ளது) ஏற்பட்ட உணர்வும் வித்தியாசமானவை.

இக்கட்டுரைக்கு உதவியவை:

1. விக்கி பீடியா
2. நிலாச்சாரல்.காம்
3. ராகவேந்த்ர ஸ்வாமிகள் ஜீவ சரிதம் மற்றும் மஹிமைகள் என்னும் நூல்.
4. http://www.gururaghavendra1.org/ 

தொடர்புடைய பதிவுகள்

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

 

149 மறுமொழிகள் ஸ்ரீ ராகவேந்திரர் என்னும் சன்னியாசி

  1. aravindan neelakandan on June 30, 2010 at 3:39 pm

    அருமையான கட்டுரை. உங்கள் தனிப்பட்ட பதிவுகளையும் தந்திருக்கலாமே…

  2. Raja on June 30, 2010 at 4:19 pm

    Good informative article..

    But
    // இதன் பின்பு நெகிழ்ச்சி அடையச் செய்யும் நாடகத்தனமான காட்சிகள் அரங்கேறுகின்றன. //
    idhu konjam over !!

    Also,

    // கடைசியில் வரும் பாடல் ‘அழைக்கிறான் மாதவன்’ ராகவேந்திரராலேயே பாடப்படுவதாக உள்ளது. ராகவேந்திரர் சமிஸ்கிருதத்தில் பாடியதற்கான குறிப்புகள்கூட இல்லை. அப்பண்ணா துங்கபத்திரை நதிக்கரைக்கு தமிழில் பாடிக்கொண்டே ஓடிவரும்போது, //

    Songs in our movies are not to be taken so seriously even if the character moves his lips for it…they are sometimes meant to express the feelings in the heart.
    is he expecting Raghavendrar to speak Telugu in a Tamil movie ??
    Haran Prasanna seems to have shown himself a bit too smart in taking a dig at such insignificant things..

  3. C.N.Muthukumaraswamy on June 30, 2010 at 6:27 pm

    எனக்கு நீண்டகாலமாக ஒருஐயம் இருந்து வருகின்றது. அறிந்தவர் தீர்த்து வைக்க வேண்டுகின்றேன். சங்கரரின் அத்துவிதத்தைப் பின்பற்றுகின்ற வேதாந்திகள் பிராமணர் அல்லாதவர்கள் உண்டு. பிராமணர் அல்லாதவர்களைக் கொண்ட தமிழ் வேதாந்த மடங்கள் உண்டு. அவ்வாறே விசிட்டாத்துவத்தை அனுசரிக்கும் பிராமணர் அல்லத மடங்கள் உண்டு. விசிட்டாதுவத்தை அனுசரிக்கும் பிராமண திருமடத்தலைவர்கள் பிராமணர் அல்லாதவர்களுக்கு முத்திராசமஸ்காரம் அளித்து சீடர்களாக ஏற்றுக் கொள்ளுவதும் உண்டு. இந்த நிலை மாத்துவ மடங்களில் உண்டா? பிராமணர் அல்லாத மாத்துவர்கள் உண்டா? தமிழகத்தில் , சிதம்பரத்துக்கு அருகில் உள்ல புவன்கிரியில் பிறந்த இராகவேந்திரருக்குத் தமிழிடத்திலும் தமிழரிடத்திலும் ஏதேனும் தொடர்பு இருந்துவருகின்றதா?

  4. snkm on June 30, 2010 at 6:49 pm

    அருமை! நன்றி!

  5. அன்புள்ள ஹரன்,

    ஆழமான நம்பிக்கை இல்லாமல் இந்த மாதிரி புனிதமான இடங்களுக்கு நீங்கள் செல்வதை விட, செல்லாமல் இருப்பதே நல்லது என்று தோன்றுகிறது. உங்களுக்குத் திருப்பதி தான் பிடிக்குமென்றால் அங்கே மட்டும் போய் ஒரு மொட்டையைப் போட்டுக்கொள்வதுதானே!

    நேற்று நடந்துமுடிந்த செம்மொழி மாநாட்டில் என்னென்ன நடந்தது என்பதையே நாம் (நேரில் போகாமல்) சரிவரப் புரிந்துகொள்ள இயலாதபோது, 350 வருடங்களுக்கு முந்தைய நடப்புகளைக் கிண்டலடித்தும், வரிக்கு வரி அவநம்பிக்கையுடனும், மேம்போக்காக எழுதுவது இறை நம்பிக்கை உள்ளவர்களுக்கு மன வருத்தமே அளிக்கும். அப்பேர்ப்பட்ட மகானையும் அவர் சார்ந்த இயக்கத்தையும் குறை சொல்லிக் கேவலமாகத் தூற்றி எழுத உங்களுக்கு முதலில் என்ன தகுதி இருக்கிறது என்று எண்ணிப்பார்க்க வேண்டும். கம்பராமாயணம் போன்ற காவியங்களை எழுதும்போது கம்பன் போன்ற மகாகவிகள்கூட, தத்தம் அவையடக்கத்தை ஏன் அவ்வளவு தூரம் முன்வைத்து எழுதி இருக்கிறார்கள் என்பது இப்போது புரிகிறது!

    ‘மறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு’ தமிழ்ஹிண்டு.காம் கேட்டுக் கொண்டிருக்கிறது. கட்டுரை எழுதுபவர்களும் தங்கள் பொறுப்பறிந்து எழுதவேண்டும் என்பதே என் கோரிக்கை. தன்னை மட்டுமே முன்னிலைப்படுத்தி, மீதமுள்ள எல்லாவற்றையும் கேவலப்படுத்துவதால் வரும் கோளாறு இது.

    நீங்கள் குறிப்பிட்டுள்ள ரஜினிகாந்தின் பிரபலமான வாசகம் தான் நினைவுக்கு வருகிறது: “இறைவா, நண்பர்களிடமிருந்து என்னைக் காப்பாற்று, விரோதிகளை நான் பார்த்துக் கொள்கிறேன்!”.

    இந்து மதத்திற்கும் இது சாலப் பொருந்தும்.

    தயவுசெய்து இனிமேலாவது சரி செய்துகொள்ள வேண்டுகிறேன்!

  6. Ramachandra Menon on June 30, 2010 at 10:21 pm

    There were several social reformers in the country. In Kerala Sri Narayana Guru, Chattambi Swamigal, Ayyankali were most prominent. When the caste feelings were very high and people from lower castes were not given permission to visit temple or walk in the main roads, the above mentioned social reformers fought against this injustice and the caste feelings have to a great extent eliminated. But now the followers of these great men impute godliness in these great men and attempts are being made to build temples and to even worship them as gods. Raghavendra was a great saint. Even Sankara was a great saint. But Sankara is not worshiped as a god. He did much to save hinduism. He saved it from getting disintegrated. Our culture is to bow before all great men and women. Now Mata Amrithananda Mayi is doing great service to the society and so also Bhagwan Satya Sai Baba in Andhra Pradesh. They never claimed to be gods. In their bhajans they sings songs praising Lord Krishna and Shiva. It is because of them the hinduism survives.

  7. Ramachandra Menon on June 30, 2010 at 10:28 pm

    ஹிந்து மதத்தின் பெருமைகளை பொதுமக்களுக்கு எடுத்து காட்டும் உங்கள் செயல்பாடுகள் மிகவும் புகழ தகுந்தவை, பராடிர்க்குரியவை.

  8. sarang on July 1, 2010 at 12:28 am

    //
    முறையைக் கொண்டு வருகிறார் ராகவேந்திரர். (இவை போக, அவர் செல்லுமிடங்களிலெல்லாம் ராகவேந்திரரின் பெருமைகளும் மகிமைகளும் தொடர்கின்றன. ஆனால் இந்த இரண்டு மட்டுமே நம்பும்படியாக உள்ளன.)
    //

    கருணாநிதியே தேவலாம் போல இருக்கிறதே – கிட்ட தட்ட ஸ்ரீ ராக வேந்திரர் சரித்திரம் மேஜிக்காரர் போல உள்ளது என்று சொல்லி விட்டீர்கள்

    வாதம் செய்தார் வென்றார் என்று தான் ஆடி சங்கரரை பற்றியும், ராமானுஜரை பற்றியும் இருக்கும் என்ன வாதம் என்றெல்லாம் எழுத மாட்டார்கள் – வாதம் பல கோணங்களில் நடக்கும் அதை எழுத்து வடிவில் கொண்டு வருவதே மிக கடினமானது – இரண்டு பேர் இரண்டு நாள் வேகமாக தர்க்கம் பேசிக்கொண்டால் அதை எப்படி record செய்வது என்று எனக்கு தெரியாது

    உங்களுக்கு எப்படியோ தெரியாது – எனக்கு மன்றலயம் வழியாக ரயிலில் போகும் பொது கூட அதிக நிம்மதி கிடைக்கும்

    //
    இவை எல்லாம் மடம் வெளியிட்டிருக்கும் நூலில் உள்ள விவரங்கள். இவற்றின் உண்மைத்தன்மை பற்றித் தெரியவில்லை
    //

    இதை பற்றி மடம் தான் வெளியிட வேண்டும் – கருணாநிதி இதை ஒத்துகொண்டால் தான் நான் ஒத்துக்கொள்வேன் என்று அடம் பிடித்தால் என்ன செய்வது – இதை போல ஆராய்ச்சி எல்லாம் வெள்ளை காரர்கள் மட்டும் தான் ஹிந்டுத்வத்தை இழிவு படுத்து செய்வார்கள் என நம்பினேன்

    சங்கரர்/ராமானுஜர் பிரம்ம சூத்திர பாஷ்யம் எழுதினார்கள் என்று அவர்களின் சிஷ்யர்கள் சொல்கிறார்கள் – இதை வேறு வழியில் உறிதிபடுத்த முடியவில்லை என்றால் என்ன சொல்வது?

    ராமாயணம், மகாபாரதம் கிருஷ்ணர், ராமர் என்று எல்லாவற்றை பற்றியும் இப்படி ஒரு கேள்வி எழுப்பலாம்

    இன்று நாம் திருப்பதிக்கு மலை ஏறி செண்டு அமைதி பெறுகிறோம் என்றால் அதன் பின்னே பல ஆசார்யர்களின் உழைப்பும் பக்தியும் உள்ளது – அனந்தாழ்வான் பிள்ளை செய்த பணியினால் தான் திருப்பதி சீர் அமைந்தது – அவரை பற்றியும் (உங்களின் மொழியில்) நம்ப முடியாத கதைகள் உண்டு – அவர் பாலாஜியின் மேல் கல்லை விட்டு அடித்தது அதன் காரணமாக இன்றளவும் அவரது முகத்தில் வைக்கப்படும் பச்சை கற்பூரம், அவர் பாம்பு கடியின் பின்னும் பிழைத்தது இப்படி பல

    இதை எல்லாம் நீங்கள் நம்ப வேண்டாம் – ஆனால் கிண்டலும் செய்ய வேண்டாமே – இவர்களின் தொண்டை மறந்து விட்டு, கிண்டல் செய்துவிட்டு திருப்பதி செல்வது நிம்மதி எங்கே தருகிறது? அது மலை scenery நிறைய இருக்கு என்பதாலோ? மந்த்ராலயம் பாவம் ஒரு குக் கிராமம் தானே

  9. Kreshna on July 1, 2010 at 1:48 am

    To Haran Prasannah,
    I like reading your articles but this one is not good. First thing first,
    your visit to Mantralaya, was it suppose to be pilgrim or a casual visit? The point is this,
    when visiting this sort of sacred places, one has to go there with proper mindset. At least a
    a strong believe and a trust that there is a shakti there. If not its pointless to visit this kind of
    shrines. Especially with so much of doubts and questions.

    When india was under islamic rule, its is saints like Ragavendrar who went
    from places to places still upholding our religion values and giving hope to Hindus at that
    time.

    I suggest you read Sri Ragavendra Biography which “Sri Ragevendra Magimai”
    from Amman Sathyanathan. ( 7 parts )
    You will have a clearer picture of this Madhva Traditions.
    Its both availabe in Tamil And English.

    As for the rajini movie Sri Ragavendra, I accept there could be some faults in it. But you
    cannot deny that movie created Awareness for Sri Ragavendra Swamigal in Tamil Nadu.
    For that, the movie succeed.

    Thank you.

    Kreshna

  10. sathyaraj on July 1, 2010 at 7:39 am

    //நீங்கள் குறிப்பிட்டுள்ள ரஜினிகாந்தின் பிரபலமான வாசகம் தான் நினைவுக்கு வருகிறது: “இறைவா, நண்பர்களிடமிருந்து என்னைக் காப்பாற்று, விரோதிகளை நான் பார்த்துக் கொள்கிறேன்!”.//

    அட்டகாசமான வசனம்! சினிமாவைத் தவிர நமக்கு வேறெதையுமே மேற்கோள் காட்ட வரமாட்டேன் என்கிறதே! ஏன்?

  11. ந. உமாசங்கர் on July 1, 2010 at 8:49 am

    கட்டுரை ஆசிரியர் அவர்களுக்கு
    ///ராகவேந்திரர் பற்றிய வாழ்க்கை வரலாறுகள் முழுவதுமே அவரை ஒரு சித்தராகவும் மகானாகவுமே காட்ட முனைகின்றன. ///
    ///ராகவேந்திரரை மத்வ மடாதிபதியாக நிறுவும் பொருட்டும், அவரது மகான் தன்மையை விளக்கும் பொருட்டுமே அது எழுதப்பட்டிருக்கவேண்டும். ///
    ///ஆனால் அது ராகவேந்திரர் ஆற்றிய உரை என்பதற்கு ஆதாரம் இருப்பதாகத் தெரியவில்லை. ///
    ///ஆனால் ராகவேந்திரர் ஜீவ சமாதி அடைந்த பிருந்தாவனத்தில் இருந்து “ஸாக்ஷீ ஹயாஸ்யோத்ரஹி” என்பதாக அந்த சுலோகம் நிறைவு பெறும் உரத்த ஒலி வெளிவருகிறது. இதை எத்துனைத் தூரம் நம்பமுடியும் எனத் தெரியவில்லை. ///

    இப்படியாகத் தங்கள் சந்தேகங்கள் பலப்பல. இந்தச்சந்தேகங்கள் அனைத்துமே தங்கள் அனுமானத்தின் பேரிலேயே எழுந்தவை. இவை எதற்காவது ஆதாரம் என்று தரமுடியுமா உங்களால்? இப்போது எழுந்த சந்தேகத்துக்கே ஆதாரம் தரமுடியவில்லை என்றால், 350 ஆண்டுகால சரித்திரத்துக்கு அதுவும் இஸ்லாமிய, பிரிட்டிஷ் ஆதிக்கங்களுக்குப் பிறகு எப்படி ஆதாரம் கிடைக்கும்? நமது வரலாற்றை நீதிமன்றத்தில் நிலைநாட்டுவது போல சாட்சி, ஆதாரம், பத்திரம் முதலியவற்றால் செய்யமுடியாது. நமக்கு மட்டும் அல்ல, ஏசுவுக்கும் முகமதுக்கும் இதே கதிதான்.

    அத்தகு சுழலில் எதை நாம் ஆதாரமாகக் கொள்ளவேண்டும்? அவரது ஜீவ சமாதி இஸ்லாமியர் கொடுத்த இடத்தில் இருப்பதற்கு இருக்கும் ஆதாரம், இஸ்லாமியர் படையெடுப்பால் எல்லாரும் வடக்கிலிருந்து தெற்கு நோக்கிப் போய்க்கொண்டிருந்த 350 ஆண்டுக்குக் முந்தைய காலத்தில் எதிர் நீச்சளாக தெற்கிலிருந்து வடக்கு நோக்கிப்போயிருக்கிறாரே அந்த ஒன்றே போதும் அவரது மகிமையைப் பறைசாற்ற.

    இதே கட்டுரை இந்தத் தளத்தில் வராமல் திண்ணை போன்ற தளங்களில் வந்திருந்தால் சிறந்த ஆராய்ச்சிக்கட்டுரை என்று கொள்ளலாம். ஆனால் தமில்ஹிந்து தளத்தில் வரும்போது வலிக்கிறது. லாஸ் ஏஞ்செல்ஸ் ராம் சொல்லும் பொறுப்பு பற்றிய கருத்துடன் உடன்படுகிறேன்.

  12. ராம்கி on July 1, 2010 at 9:31 am

    மாஞ்சாலை அம்மன் கோயில் ரெடியாகிவிட்டதா.. போன வருஷம் திருப்பணி நடந்து கொண்டிருந்தது. தனித்தனி சாப்பாடு இடத்திற்காக பெரிய பெரிய கட்டிடங்களை கட்டிக் கொடுத்தவர்களெல்லாம் சமூகத்தில் பெரிய புனித பிம்பங்கள், உம் Mrs. இன்போசிஸ். மத்வத்தில் ஏராளமான பிரிவுகள் உண்டு என்பதை சொல்ல வேண்டியதில்லை. கழகத்தவர்களை மிஞ்சும் அரசியலும் உண்டு. மந்திராலயத்தை விடுங்கள், ராகவேந்திரரின் பிறந்த இடமான புவனகிரிக்கும் ஒருமுறை வாருங்கள், இதை விட ஷாக்கான ரிப்போர்ட் எழுதலாம். பைதபை ராகவேந்திரர் தமிழ்படம் பற்றி இன்னொரு நாள் விரிவாக.

  13. ஜயராமன் on July 1, 2010 at 9:36 am

    கருணாநிதி சில மடத்துத் தலைவர்களை “சன்னியாசி”கள் என்று கிண்டலடிப்பார். மற்ற சில மடத்து தலைவரகளை “துறவிகள்” என்று போற்றுவார். ஹப்பி ஐயா “ராகவேந்திரர் என்னும் சன்னியாசி” என்று கட்டுரை எழுதியது சாலப் பொருத்தம். இதை இப்படியே நிறுத்தாமல் ஒரு தொடராகவே அவர் இந்த தளத்தில் எழுத வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அதோடு, கிழக்குப் பதிப்பகத்தால் “இந்துமதத்தின் இட்டுக்கட்டல்கள்” என்று ஒரு புத்தகமகாய் போட்டால் அது எல்லோருக்கும் பிரயோசனமாய் போகும். இல்லை இன்னும் சுவாரசியமாக “பார்ப்பன சன்னியாசிகளின் புரட்டுகள்” என்று போட்டால் இன்னும் அதிக காப்பி பிரிண்ட் போடலாம். வாழ்த்துக்கள்.

  14. விஸ்வாமித்ரா on July 1, 2010 at 12:21 pm

    ஹரன் பிரசன்னா

    இப்படியே யோசித்தால் நாம் நம் புராணங்கள் எதையுமே நம்ப முடியாதுதான். இது போன்ற கட்டுரைகள் தமிழ் இந்துவின் மேல் தேவையில்லாத மனக் கசப்புக்களையே உருவாக்கும். நண்பர்கள் சிலர் என்னிடம் தனிப்பட்ட முறையில் இந்தக் கட்டுரை குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார்கள். இதற்கும் ராமன் என்ன எஞ்சினீயரா என்று கருணாநிதி அடித்த கிண்டலுக்கும் வித்தியாசம் இல்லாமல் போய் விடும். நதி மூலம் ரிஷி மூலம் பார்க்கத் தேவையில்லை. அங்குள்ள குறைகளை நாம் தாராளமாகச் சொல்லலாம் ஆனால் நம் துறவிகளைப் பற்றிய சந்தேகங்களை நாமே அநாவசியமாக எழுப்பத் தேவையில்லை என்றே நினைக்கிறேன்.

    விஸ்வாமித்ரா

  15. ஜடாயு on July 1, 2010 at 12:53 pm

    அங்கங்கே skeptic தொனிகள் இருந்தாலும் மொத்தத்தில் ஒரு நல்ல கட்டுரை, பிரசன்னா.

    300 வருடங்களே முன்பு வாழ்ந்த ஒரு பிரசித்தி பெற்ற மகானுடைய வாழ்க்கை சரித்திரத்தில் கூட துல்லியமான வரலாற்றுப் பதிவுகள் இல்லை என்பது சிந்தித்துப் பார்க்க வேண்டிய விஷயம். சமீபகால மகான்களின் சரிதங்களையும் புராண வடிவிலேயே பதிவு செய்து அதனை ஒரு மரபாக நிலைநிறுத்துவது எல்லா இந்து சமயப் பிரிவுகளிலும் உள்ள விஷயம் தான். மகான்களின் மீது நாம் பெரும் மதிப்பு கொண்டிருக்கும் போதும், குதர்க்கமாக இல்லாமல் நேர்மையான முறையில் வரலாற்றுத் தகவல்கள் பற்றிய கேள்விகளை எழுப்புவது தவறு அல்ல என்று நினைக்கிறேன். இவற்றை நாம் எழுப்பா விட்டால், இந்து எதிரிகள் தங்களுக்கே உரிய திரிபுகளுடன் இவற்றை சித்தரிப்பார்கள்.

    பல இடங்களில் புராணப் பதிவுகள் ஒரு வரலாற்று / கலாசார செய்தியைக் குறியீட்டு ரீதியாக சொல்லும் விதமாக இருக்கும். அந்தக் குறிப்பிட்ட காலத்திய சமூக சூழல், மற்ற இலக்கியப் பதிவுகள் ஆகியவற்றையும் கருத்தில் கொண்டு, புராணத் தன்மை கொண்ட செய்திகள் சொல்ல வந்தது என்ன என்று ஆய்வு செய்யலாம், விளக்க முயற்சி செய்யலாம். உதாரணமாக, திருஞான சம்பந்தர், சுந்தரர் ஆகியோரது அற்புதச் செயல்கள், திருவிளையாடற் புராணம் ஆகியவை பற்றி இந்த ரீதியான விளக்கங்கள் தமிழில் எழுதப் பட்டுள்ளன. எனவே, அற்புதச் செய்திகளை ஒரேயடியாக ”ஆதாரமில்லாத கற்பனை” என்றும் ஒதுக்கி விடமுடியாது. இதையும் மனதில் கொள்ள வேண்டும்.

  16. haranprasanna on July 1, 2010 at 1:45 pm

    எனக்குத் தெரிந்தவரை: மாத்வர்கள் அல்லாத யாரும் மடாதிபதி ஆகமுடியாது. மாத்வர்களில் பிராமணரல்லாதவர்கள் யாரும் இருக்கமுடியாது. மாத்வர்களில் சில உட்பிரிவுகள் (பெலஹ நாடு, ஆர்வேலு, அரவத்த ஒக்கலு, ஹவளகட்டாஜாதி, அட்ட தேசஸ்துரு போன்றவை) உள்ளன. ஆனால் அவர்களுக்குள் ’கழகத்தவர்களை மிஞ்சும் அரசியல்’ எல்லாம் கிடையாது. பேசும் முறைகளில், திருமணங்களில் வேறுபாடு உண்டு. ராகவேந்திரர் அரவத்து ஒக்கலு பிரிவைச் சேர்ந்தவர். நான் பெலஹ நாடு. அதற்காக இந்தக் கட்டுரையை இப்படி எழுதவில்லை. நான் நம்புவதை, எனக்கு சரி என்று பட்டதை எழுதினேன். இப்போதும் நான் எழுதியதை சரி என்று நம்புகிறேன். மற்றவர்கள் கருத்துகளை, மற்றவர்களின் கருத்துகள் என்கிற அளவில் மதிக்கிறேன்.

    கருத்துச் சொன்ன அனைவருக்கும், சொல்லப் போகிறவர்களுக்கும் நன்றி.

  17. aravindan neelakandan on July 1, 2010 at 2:08 pm

    இதில் ஹரன் பிரசன்னாவின் ஒரு முக்கியமான ஆதங்கத்தை நாம் பார்க்கவில்லை. 350 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த துறவி. சிறந்த தத்துவ ஞானி. ஆனால் அவரை நாம் இன்றைக்கு அவரது அருளிச்செயல்கள் மூலமாக மட்டுமே அறிந்து கொள்கிறோம். அவரது தத்துவ இலக்கியங்கள் என்ன? இந்திய தத்துவ மரபில் அவருடைய இடம் என்ன? இவற்றை அறிந்து கொள்வதற்கான ஒரு குறைந்தபட்ச வாய்ப்பு கூட அங்கே இல்லை. அருளிச்செயல்களுக்கு மாஸ் அப்பீல் இருக்கலாம். ஆனால் இன்றைய அறிவியக்கம் சார்ந்த இந்துவுக்கும் ஏதாவது வேண்டாமா? சில அருளிச்செயல்களின் வரலாற்று பரிமாணங்கள் நமக்கு சமூக ரெலவன்ஸ் கொண்டவையாகக் கூட இருக்கலாம். உதாரணமாக கும்பகோணத்து ஆலயங்களை மொகலாய படையெடுப்பிலிருந்து அவர் ஒரு அற்புத செயல் மூலம் காப்பாற்றினார் என சொல்லப்படுகிறது. அதில் ஒரு வரலாற்று உண்மை புதைந்திருக்கலாம். அதைக் குறித்து ஆராய்ச்சி செய்ய நமக்கு தோன்றவில்லை. வரலாற்றின் ஒரு முக்கிய காலகட்டத்தில் இஸ்லாமுக்கு ஹிந்துக்கள் மதமாற்றப்படுவதை அவர் தடுத்திருக்கிறார். ஆனால் அதெல்லாம் அற்புதச்செயலில் விழுந்த ஃபோகஸ் லைட்டில் நமக்கு தெரியாமலே போய்விட்டது. இந்நிலையில் வரலாற்றில் சமூகம் குறித்து நாம் அறிந்து கொள்ள வேண்டிய விஷயங்களில் நமது சமூக வழிகாட்டியாக ராகவேந்திரரை எப்படி ஒரு ஹிந்து பார்ப்பது என்பதே ஹரன் பிரசன்னாவின் பார்வையாக உள்ளது. இப்பார்வை ஒரு முக்கியமான பார்வை. இதற்கும் கருணாநிதியின் குதர்க்கத்துக்கும் முடிச்சு போடுவது அதீதப்பயம் கொண்ட மனநிலை.

  18. பாலாஜி on July 1, 2010 at 2:20 pm

    இங்கு ஸ்ரீ இராகவேந்திரர் மீது உண்மையில் பக்திகொண்டு ஆசிரியர் எழுதியதை கண்டித்த நண்பர்களுக்கு:- நீங்கள் ஏன் ஆசிரியரை கடிந்துகொள்கிரீர்கள் என்று எனக்குப் புரியவில்லை. இந்தியர்கள் இன்னும் மெக்காலேவின் பிள்ளைகள்தான். அவர் கூறியவற்றை மறந்துவிட்டீர்களா?

    “It is impossible for us, with our limited means, to attempt to educate the body of the people. We must at present do our best to form a class who may be interpreters between us and the millions whom we govern; a class of persons, Indian in blood and colour, but English in taste, in opinions, in morals, and in intellect. To that class we may leave it to refine the vernacular dialects of the country, to enrich those dialects with terms of science borrowed from the Western nomenclature, and to render them by degrees fit vehicles for conveying knowledge to the great mass of the population.”

    இன்னும் இந்தியர்கள், குறிப்பாக இந்துக்கள் மெக்காலேவின் வழியையே பின்பற்றுகிறார்கள். சில உதாரணங்கள். மற்ற மதத்திற்கென்று வரும்பொழுது:-

    -> Jesus CURED the people with diseases.
    -> Moses RECEIVED the Ten Commandments from God directly
    -> Mohammed SPLIT the moon in two.

    ஆனால் இதுவே நமது மதத்திற்கு வரும்பொழுது:-

    -> IT IS BELIEVED that Murugan appeared before Arunagirinadhar.
    -> LEGEND HAS IT that Varadaraja Perumal spoke to Vedanta Desikar.
    -> IT IS SAID that Madhvacharya met Veda Vyasa in the Himalayas.

    ஏதோ இவர்கள் செய்த அற்புதங்கள் ஆதாரமற்றதென்றும், பொய்யென்றும், என்னவோ அவர்கள் செய்த அற்புதங்களை டிஜிட்டல் கேமராவில் படமெடுத்து யூடியுபில் அப்லோட் செய்தது போலவும் எழுதுவார்கள். இதற்காக இதுபோன்ற எழுத்தாளர்கள் மீது கோவப்படுவது நியாயமன்று. அது நமது மறபில் ஊறிவிட்டன. என்று ஐரோப்பியர்கள் நமது மண்ணில் கால்வைத்தார்களோ அன்றே பிடித்தது பீடை!

    இன்றும் பலர் நமது புராணங்களை புழுக்கு என்றும் mythology என்றும், மற்ற மத நூல்களிலுள்ள கதைகளை வரலாறு போலவும் கூறுவார்கள். அவற்றை பார்க்கும் போது எனக்கு சிரிப்புதான் வரும்! mythology என்று கூறவேண்டாம், சரித்திரம் (history) என்றும் எடுத்துக்கொள்ளவேண்டாம். ஆனால் புண்ணியக்கதைகள் (sacred stories) என்றாவது சொல்லலாமல்லவா??

    சரி இந்த கட்டுரைக்கு வருவோம். ஆசிரியர் திரு.அரன் பிரசன்னா அவர்கள் என்னவோ ஸ்ரீ இராகவேந்திரர் செய்த அற்புதங்களுக்கு ஆதாரமில்லை, நம்பும்படியாக இல்லை என்று எழுதியிருந்தார். ஒரு சம்பவத்தை சொல்கிறேன், கேளுங்கள். ஒரு இரண்டு வயது குழந்தை. பிட்ஸ் நோயால் தவித்தது. பல மருத்துவர்களை அணுகியும் சரியாக குணமடையவில்லை. சிலர் முயற்சித்தனர், பலர் கைவிட்டுவிட்டனர். குழந்தை இறக்கும் நிலைக்கு சென்றது. அக்குழந்தையின் பெற்றோர்கள் ஸ்ரீ இராகவேந்திரரின் பக்தர்கள். மனமுறுக வேண்டினார்கள். அந்த தாய் தந்தையார் அம்மகானின் பிரசாதமான மிருத்திகையை (மகானின் காலடி பட்ட மண்ணை) அக்குழந்தையின் நெற்றியில் இட்டார்கள். சில நேரத்திலெல்லாம், அக்குழந்தை சிறிது சிறிதாக முழுமையாக குணமடைந்துவிட்டது! இருபது ஆண்டுகளுக்கு மேலாக ஆகிவிட்டன. இன்று அக்குழந்தை எவ்வித நோய் நொடியுமின்றி திடகாத்திரமாக உள்ளது. “அதெப்படி உனக்குத் தெரியும்?” என்று கேட்காதீர்கள். என்னைவிட அக்குழந்தையைப் பற்றி அறிந்தவர்கள் வேறு யாரும் இருக்க முடியாது. ஏனெனில் அக்குழந்தை வேறு யாருமில்லை, நான்தான்! இன்றும் என் பெற்றோர்கள் அச்சம்பவத்தை நினைவில் கூறும்போது கண்கலங்குவார்கள்!! சரி அதாவது விட்டுவிடுங்கள், என் பெற்றோர்கள் சொல்லித்தான் எனக்கு அது தெரியும். ஆனால், நானே பிரார்த்தித்து கண்கூடாக அனுபவித்த அம்மகானின் அற்புதங்கள் பல இருக்கின்றன. ஆனால் இதையெல்லாம் வைத்துக்கொண்டு ‘குருடன் பார்கிறான், நொண்டி நடக்கிறான், உண்ணாதவன் மலம் கழிக்கிறான்’ என்றெல்லாம் சொல்லி சில பிரிவுகளைப்போல மதமாற்றம் செய்ய நாங்கள் கனவிலும் நினைத்ததில்லை. இப்பொழுதும் இவ்வளவுபெரிய மறுமொழியை நான் இங்கு எழுத வேண்டியதில்லை. ஆனால் என் உயிரைக் காத்த அம்மனித தெய்வத்தைப் பற்றி அனைவரும் சரிவர அறிந்துகொள்ள வேண்டும் என்றுதான் இங்கு எழுதியுள்ளேன். மேலே, நண்பர் திரு.கிருஷ்ணா அவர்கள் எழுதியுள்ளதைப் போல திரு.அம்மன் சத்தியநாதன் என்பவர் எழுதிய “இராகவேந்திரா மகிமை” என்ற நூலை வாங்கிப் படியுங்கள். ஏழு பாகங்கள், எட்டாவதை எழுதிக் கொண்டிருக்கிறார். படியுங்கள், புரியம்.

    ஆனால், ஆசிரியர் சொன்ன சில விஷயங்கள் உண்மை. ‘இராகவேந்திரர்’ எனும் ரஜினிகாந்த் நடித்த தமிழ் திரைப்படத்தில் வருபவை அனையதும் உண்மையில்லை. ஒரு உதாரணம்:- தனது கல்வியை முடித்தபின்தான் வேங்கடநாதன் (இராகவேந்திரருக்கு அவர் பெற்றோர்கள் இட்ட பெயர்) சரஸ்வதி பாயை திருமணம் புரிந்தார் என்று திரைப்படம் கூறுகிறது. ஆனால், அவரது வாழ்கை வரலாற்றின்படி திருமணத்தின் பிறகுதான் அவரது குருவான ஸ்ரீ சுதீந்திர தீர்தரையே அவர் சந்திக்கிறார். அதுபோல பல வேறுபாடுகள் உள்ளன. மேலும் அவர் ஜீவ சமாதியாகும்போது அவர் பாடவில்லை, அப்பன்னாசாரியார்தான் பாடுகிறார். சுவாமிகளை இறுதியாக ஒரு முறை காணவேண்டும் என்று ஓடிவரும்போது துங்கபத்திரை நதி கட்டுக்கடங்காமல் ஓடிக்கொண்டிருக்கிறது. அப்பொழுது சுவாமிகளை மனமுறுக நினைத்துக்கொண்டு சிறிதும் பயமின்றி “ஸ்ரீ பூரண போத குரு தீர்த்த பயோப்தி பாரா” என்னும் சுலோகத்தைப் பாடிக்கொண்டே ஆற்றில் இறங்குகிறார். ஆறு வழிவிடவில்லை, ஆனால் தனது வேகத்தை குறைத்துக் கொள்கிறது, அவ்வளவே! ஆனால் அவர் எவ்வளவு வேகமாக ஓடிவந்தாலும் அவர் வருவதற்கு முன்னாலேயே சமாதியை எழுப்பி விடுகிறார்கள் பக்தர்கள். 31 வரிகளை பாடிய அவரால், கடைசி வரியை பாடமுடியவில்லை. அப்பொழுது “இந்த சுலோகத்திற்கு ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவரே சாட்சி” என்று ஒருகுரல் சமாதியிலிருந்து கேட்கிறது.
    அதேபோல, மந்த்ராலயத்தில் பிராமணர்கள் (என்று கூறிக்கொள்பவர்கள்) தனி, பிராமணர் அல்லாதவர்களுக்கு தனி என்று தான் அன்னதானம் அளிக்கப்படுகிறது. இவை அந்த மகான் ஏற்படுத்திய வழிமுறைக்கே எதிரானது. குருதட்சனைகூட வாங்காமல் சாதி வேறுபாடு பார்க்காமல் அனைவருக்கும் கற்பித்த அந்த மகானின் பெயரைச் சொல்லோக்கொண்டு இப்படி செய்கிறார்களே என்று எனக்கும் வெறுப்பாகத் தானுள்ளது. மேலும் சில விவரங்கள்:-

    மத்வ மதத்தை ஸ்தாபித்த ஸ்ரீமான் மத்வாச்சாரியார் தான் யாரென்று தான் எழுதிய ‘விஷ்ணு தத்துவ விநிர்ணய’ திலும் ரிக் வேத பலித்த சூக்தத்திர்க்கு தான் எழுதிய உரையிலும் கூறுகிறார்:-

    “நான் வாயுதேவன். திரேதா யுகத்தில் ஸ்ரீ இராமனுக்கு சேவை செய்ய நானே அனுமானாக அவதரித்தேன். பிறகு துவாபர யுகத்தில் ஸ்ரீ கிருஷ்ணருக்கு தொண்டு புரிய நானே பீமசேனனாக வந்தேன். இப்பொழுது கலி யுகத்தில் வேத வியாசருக்குத் தொண்டு புரிய நானே மத்வாசாரியாராக வந்துள்ளேன்”.

    இந்து மத சரித்திரத்தில், ஸ்ரீ கிருஷ்ணரைத் தவிர்த்து தான் யாரென்று மக்களுக்கு உணர்த்திய ஒரே ‘உண்மையான’ மகான் ஸ்ரீமான் மத்வாச்சரியரே! (ஏன் ‘உண்மையான’ என்று குறிப்பிட்டுள்ளேன் என்றால் நித்தியானந்தன் “நான் சிவன், நான் விஷ்ணு, பிரம்மா” என்றெல்லாம் சொல்லிப் பாசாங்கு செய்ததை சில இந்து விரோதிகள் இங்கே கூறுவார்கள், மேலே கலாய்ப்பதாக நினைத்துக் கொண்டு மொக்கை போட்டதுபோல!)

    மேலும், ஸ்ரீ இராகவேந்திரர் சங்குகர்ண தேவதை எனும் ஒரு சிறிய தேவனின் அவதாரம் என்பது மாத்வர்களின் நம்பிக்கை. ஒரு முறை பிரம்மதேவர் ஸ்ரீ ஹரியை பூஜை செய்ய மலர்கள் வேண்டும் என்று அந்த தேவதையை உலகத்திற்கு அனுப்பியபொழுது நேரத்திற்கு வராததால், சினம்கொண்ட பிரம்மதேவர் “பூவுலகில் பிரக்ககடவாய்” என்று சாபமிட்டுவிடுகிறார். அதன் படி முறையே, சங்கு கர்ண தேவதை உலகில் நான்கு அவதாரங்களை எடுத்தார்:-

    முதலில், பக்த பிரகலாதனாக பிறந்து நரசிம்ம மூர்த்தியை காண்பித்தார்.

    இரண்டாவதாக, மகாபாரதத்தில் வரும் பாலீக ராஜன் ஆக! (சந்தனுவின் அண்ணன், பிதாமகர் பீஷ்மரின் பெரியப்பா!). இவரும் குருக்ஷேத்திரப் போரில் கௌரவர்கள் படையில் போர் புரிந்து “நான் செய்த பாவம் போதும், என்னைக் கொன்றுவிடு” என்று பீமசெனனிடம் விண்ணப்பிக்க பீமன் கொன்றுவிடுகிறான். குருக்ஷேத்திரப் போரின் போது, பீஷ்மர்தான் எல்லோரிலும் மூத்தவர் என்று பலர் நினைக்கிறார்கள், ஆனால் அவரது பெரியப்பாவே இருந்தார்.

    மூன்றாவதாக, ஸ்ரீ வியாசராஜ தீர்தராக அவதரித்து, புகழ்பெற்று விளங்கிய விஜயநகர சாம்ராஜ்யத்தின் பிரபல மன்னனான கிருஷ்ணதேவராயருக்கு ராஜகுருவாக விளங்கினார்.

    இறுதியாக, ஸ்ரீ இராகவேந்திரராகப் பிறந்தார்.

    ஸ்ரீ இராகவேந்திரர் செய்த இன்னும் சில அற்புதங்கள்:-

    1. Once while he was touring Kumbakonam along with his wife, Sri Venkatanatha and his family was invited to attend a function. Unfortunately, the hosts did not treat him well and wanted him to earn his food by running a chore. So they asked him to make some sandalwood paste for all the invitees. Sri Venkatanatha per his habit, was chanting stotras and mantras while preparing sandalwood for Tilaka. When the guests applied this paste, it induced a burning sensation all over their bodies. Surprised by this, the hosts sought a clarification from Venkatanatha. He replied that the burning sensation was due to the Agni Suktam (hymn for the worship as defined in the Esoteric Vedas) that he was chanting while preparing sandalwood and thus eternal power of Vedic Mantras revealed itself. This happens only when chanted with absolute dedication and devotion. The power is enhanced since it was chanted by someone as virtuous and devoted to Bhagwaan Hari as himself. Upon realizing his devotion and power, the host apologized profusely to Sri Venkatanatha and sought his forgiveness.

    Sri Venkatanatha then prepared the paste again but chanted the Vedic Mantra to Varuna (Vedic rain gods) this time. It has been recorded that when the guests applied this paste, they were awash with a sense of being drenched in rainwater, reaffirming Sri Venkatanatha’s power of devotion.

    2. During Sri Raghavendra Swami’s time at Kumbakonam, the Tanjore district as a whole was reeling under the effects of a severe 12 year long drought. The Maharaja of Tanjore approached Swamiji for spiritual solace and was advised to perform some Yagnas. No sooner were these rites performed, was the region flush with rain and prosperity. As a mark of gratitude, the Maharaja gifted the Matha with a necklace embellished with precious stones.

    Swamiji offered the necklace as a contribution to a yagna that he was performing then. The Maharaja took affront at this action. When Swamiji realized this, he immediately put his hand into the homa kunda and retrived the necklace in a condition identical to which it was given to him by the King. Neither the necklace nor Swamiji’s hand showed any indication of having been in a raging fire. This incident only served to reaffirm the greatness of Swamiji and converted the Maharaja of Tanjore into an ardent Bhakta.

    http://en.wikipedia.org/wiki/Raghavendra_Swami

    முனைவர் கோ.ந.முத்துக்குமாரசுவாமி அய்யா அவர்களுக்கு:-

    //எனக்கு நீண்டகாலமாக ஒருஐயம் இருந்து வருகின்றது. அறிந்தவர் தீர்த்து வைக்க வேண்டுகின்றேன். சங்கரரின் அத்துவிதத்தைப் பின்பற்றுகின்ற வேதாந்திகள் பிராமணர் அல்லாதவர்கள் உண்டு. பிராமணர் அல்லாதவர்களைக் கொண்ட தமிழ் வேதாந்த மடங்கள் உண்டு. அவ்வாறே விசிட்டாத்துவத்தை அனுசரிக்கும் பிராமணர் அல்லத மடங்கள் உண்டு. விசிட்டாதுவத்தை அனுசரிக்கும் பிராமண திருமடத்தலைவர்கள் பிராமணர் அல்லாதவர்களுக்கு முத்திராசமஸ்காரம் அளித்து சீடர்களாக ஏற்றுக் கொள்ளுவதும் உண்டு. இந்த நிலை மாத்துவ மடங்களில் உண்டா? பிராமணர் அல்லாத மாத்துவர்கள் உண்டா?//

    சங்கரர், இராமானுஜர், மத்வர் மூவரும் வேதாந்த மதத்தின் ஆணிவேர் என்று உங்களுக்குத் தெரியும். இம்மூவரில், இராமானுஜர் மட்டுமே சாதிக் கொடுமைகளை எதிர்த்துப் போராடினார். சங்கரரும் மத்வரும் ‘ஓரளவுக்கு’ சாதிக்கொடுமைகளை எதிர்த்தாலும், இராமானுஜரைப் போல பெரிய புரட்சிகள் எதையும் செய்யவில்லை. அத்வைதத்தில்கூட , சங்கர மடங்களிலிருந்து வெளியே வந்த துறவிகள் சிலர் தொடங்கிய மடங்களில்தான் எல்லோரையும் ஏற்றுக்கொண்டார்கள். இவற்றில் சுவாமி தயானந்த சரஸ்வதி (ஆரிய சமாஜ்), சுவாமி சின்மயானந்தா, சுவாமி விவேகானந்தர் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்களின் தத்துவங்களாலும் புரட்சிகளாலும் இன்று அத்வைதம் சாதி வேறுபாடுகளை கடந்து எல்லோரையும் தழுவிக்கொள்ளும் நிலையில் உள்ளது. மத்வ மதத்திலும் இப்படிப்பட்ட புரட்சிகள் ஏற்படவேடும் என்று ஸ்ரீ இராகவேந்திறரை வேண்டுகிறேன்..
    ஆனால், அவரது முந்தைய அவதாரத்தில் ஸ்ரீ வியாசராஜராகப் பிறந்த பொழுது அவர் பிராமணரல்லாத குருபர் சாதியைச்சேர்ந்த கனகதாசரை தனது சீடராக ஏற்றுக் கொண்டார். அவரை ஒரு முறை உடுப்பி கிருஷ்ணர் கோவிலில் அனுமதிக்காதபோழுது, அந்த கிருஷ்ணரின் சிலைவடிவமே இவருக்காக திரும்பி நின்றது. புகழ்பெற்ற கன்னடப் பாடலான “கிருஷ்ணா நீ பேகனே பாரோ” கனகதாசரால்தான் இயற்றப்பட்டது.

    ஸ்ரீ வியாசராஜர் ஜீவ சமாதியடயும்போழுது கனகதாசரிடம் “கனகா, உனக்கும் எனக்கும் இன்னும் ஒரு பிறவி மீதமுள்ளது. அதில் நீ ஹரிஜனாக வந்து என் மூலமாக மோட்சத்தை அடைவாய்” என்று சொன்னதாகவும், கனகதாசரே ஹரிஜனாக வந்து அந்த அட்சதை நிறம் மாறிய சம்பவத்தை நீங்கள் ‘இராகவேந்திரர்’ திரைப்படத்தில் பார்த்திருக்கலாம்!

    //தமிழகத்தில் , சிதம்பரத்துக்கு அருகில் உள்ல புவன்கிரியில் பிறந்த இராகவேந்திரருக்குத் தமிழிடத்திலும் தமிழரிடத்திலும் ஏதேனும் தொடர்பு இருந்துவருகின்றதா?//

    அய்யா, இக்கேள்விக்கு நீங்களே விடையும் அறிவீர்கள். புவனகிரியில் பிறந்து, மதுரையில் கல்வி கற்று, கும்பகோணத்தில் துறவு பெற்று, ஸ்ரீரங்கம், இராமேஸ்வரம் மற்றும் பல புண்ணிய ஸ்தலங்களை வசித்த மகானுக்கு தமிழைப் பற்றித் தெரியாமலா இருக்கும்? எனினும், எனக்குத் தெரிந்த ஒரு சம்பவத்தை இங்கே கூறுகிறேன். ஒரு சமயம் (மதுரையிலோ தன்ஜாவூரிலோ) ஸ்ரீமான் அப்பையா தீட்சிதரின் பேரனான ஸ்ரீ நீலகண்ட தீட்சிதருடன் வாதிட்டார் என்று அவரது வரலாறு கூறுகிறது.

    நன்றி,
    பாலாஜி.

  19. sarang on July 1, 2010 at 3:02 pm

    ராகவேந்திரர் வெறும் சந்நியாசி அல்லர் – அவர் ஒரு ஆசார்யர் – அவரை குரு ராகவேந்திரர் என்றல்லவா அனைவரும் அழைக்கிறார்கள்

    காலையும் மாலையும் மடத்தில் விளக்கேற்றி ஓம்கார ஜபம் செய்தாலே சந்நியாசி எனப்படுவார் [ சன்யாசிகளின் வகைகள் பற்றின விவரங்கள் ப்ரிஹத் உபநிஷத்தில் உள்ளது]

    ஆசார்யர் என்பவருக்கும் வெறும் மடத்து சன்யாசிக்கும் ஏணி வெச்சா கூட எட்டாது

  20. sarang on July 1, 2010 at 3:05 pm

    //அட்டகாசமான வசனம்! சினிமாவைத் தவிர நமக்கு வேறெதையுமே மேற்கோள் காட்ட வரமாட்டேன் என்கிறதே! ஏன்?
    //

    வருவதில் பிரச்சனையை இல்ல நண்பரே – படிப்பவருக்கு அது தான் தெரிகிறது என்ன செய்வது – முண்டக உபநிஷத்திலிருந்து குடுத்தால் புரியும் என்கிறீர்கள்?

  21. s.sudha on July 1, 2010 at 4:25 pm

    மந்த்ராலயம் கிராமத்தில் இருக்கும் பிரிந்தவன இடத்தை ஆக்கிரமிக்கும் பொருட்டு ஈஸ்ட் இந்திய கம்பெனி இன் லார்ட் sir தாமஸ் மன்றோ மந்திராலயம் வந்தார்.அந்த நேரம் அங்கு பூஜை நடந்து கொண்டு இருந்தது.பூஜையில் கலந்துகொண்டு நடப்பதை கவனித்து கொண்டுஇருந்தார். அந்த நேரம் பிருந்தாவனம்தில் இருந்து ஒரு துறவி வெளிப்பட்டு தன்னிடம் ஆங்கிலத்தில் தனக்கு வேண்டிய விசயங்களை உரையாடிவிட்டு தன்னை ஆசிர்வதித்து மந்திர அக்ஷதையை தந்ததாக சொல்லி அருகில் உள்ளோரிடம் காட்ட அவர்கள் யாரும் வரவில்லையே என கூற வந்தது ராகவேந்திர சுவாமிகள் என புரிந்தது. இதன் பின்னர் தாமஸ் மன்றோ உத்தரவை ரத்து செய்தார்.இந்த விபரத்தை 200 வருட முன்னதைய சென்னை மாகாண காசெட் இல் 15 ம் பிரிவில்அதோனி தாலுகா பக்கம் 213 இல் இன்றும் காணலாம் . இதை எழுதியதன் கரணம் நம்மவர்கள் சொன்னால் குட நிறையபேருக்கு நம்பிக்கை வருவதில்லை.மகிமைகள் நடந்துகொண்டே தான் உள்ளது. உணரத்தான் முடியும்.வாதிடமுடியாது.இந்த கட்டுரை மே 2000 ஜோதிடபூமி புத்தகத்தில் பக்கம் எண் 58 இல் வெளிவந்து உள்ளது.

  22. ஜயராமன் on July 1, 2010 at 5:09 pm

    aravindan neelakandan 1 July 2010 at 2:08 pm said

    //// ஞானி. ஆனால் அவரை நாம் இன்றைக்கு அவரது அருளிச்செயல்கள் மூலமாக மட்டுமே அறிந்து கொள்கிறோம். அவரது தத்துவ இலக்கியங்கள் என்ன? இந்திய தத்துவ மரபில் அவருடைய இடம் என்ன? இவற்றை அறிந்து கொள்வதற்கான ஒரு குறைந்தபட்ச வாய்ப்பு கூட அங்கே இல்லை. அருளிச்செயல்களுக்கு மாஸ் அப்பீல் இருக்கலாம். ஆனால் இன்றைய அறிவியக்கம் சார்ந்த இந்துவுக்கும் ஏதாவது வேண்டாமா? //////

    அநீ ஐயா, இதை நீங்கள் எந்த அடிப்படையில் சொல்கிறீர்கள்? த்வைதத்தின் த்த்துவ இலக்கியங்கள் இங்கு இல்லை, அவருக்கு ஒரு தத்துவ மரபு இல்லை என்கிறீர்களா? அந்த தத்துவ ஞானத்தை அறிவதற்கும், அதை பரப்புவதற்கும், அதை விவாதிப்பதற்கும் ஆயிரமாயிரம் ஞானத்தேடலர்கள் இன்றும், நேற்றும் என்றும் இங்கே இருக்கிறார்கள். தங்களுக்கு வேணுமானால் அவை இல்லாதத்து போன்று இருக்கலாம். வேதாந்த தத்துவங்களைத் தெறிந்துகொள்வதற்கான வாய்ப்பு கோயில்களிலோ, சமாதிகளிலோ என்றுமே இருக்காது. அன்பே சிவம் என்று சிவன் கோயிலில் எழுதியிருந்தாலும் அங்கே சிவஞானபோதம் பேசப்படாது, சடங்குளுலும், சம்பிரதாயங்களும்தான் பிரதானமாய் தெரியும். மேலும், சடங்குகளும், வழிபாடுகளும் முக்கிய வடிகாலாக அமைந்த மதக்காரர்கள்தாம் இந்துமத்தின் ஆணிவேர். தத்துவ்விசாரிகள் எப்போதுமே பிரதான இடங்களை பிடிப்பதில்லை. இரண்டிற்கான தேடல்களும் வெவ்வேறு, தேடுபவர்களும் வெவ்வேறு, இரண்டின் அனுபவங்களும் வெவ்வேறு. விரல் விட்டு எண்ணுபவனுக்கு பைனாரி சிஸ்டம் படிப்பிக்கப்படவில்லை என்று நீங்கள் சொல்கிறீர்கள். ஒன்றை மட்டம் என்றோ, இல்லை ஒன்று இல்லவே இல்லை, அந்த “சன்னியாசி” ஒரு சடங்கில் அடங்கிவிட்டார் என்றே சொல்வது சரியில்லை. அவர் நிறுவிய த்வைத த்த்துவ விசாரம் இந்து மதம் உள்ளவரை நிற்கும்.

    //// சில அருளிச்செயல்களின் வரலாற்று பரிமாணங்கள் நமக்கு சமூக ரெலவன்ஸ் கொண்டவையாகக் கூட இருக்கலாம். உதாரணமாக கும்பகோணத்து ஆலயங்களை மொகலாய படையெடுப்பிலிருந்து அவர் ஒரு அற்புத செயல் மூலம் காப்பாற்றினார் என சொல்லப்படுகிறது. அதில் ஒரு வரலாற்று உண்மை புதைந்திருக்கலாம். அதைக் குறித்து ஆராய்ச்சி செய்ய நமக்கு தோன்றவில்லை. வரலாற்றின் ஒரு முக்கிய காலகட்டத்தில் இஸ்லாமுக்கு ஹிந்துக்கள் மதமாற்றப்படுவதை அவர் தடுத்திருக்கிறார். ஆனால் அதெல்லாம் அற்புதச்செயலில் விழுந்த ஃபோகஸ் லைட்டில் நமக்கு தெரியாமலே போய்விட்டது. ////

    அதாவது, அவர் வாய்வழிச்செயல்களாக இப்போது நமக்கு தெரிய வருபவை எல்லாம் பொய்கள். அவற்றை நாம் இன்னும் எப்படி “ஆராய” வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? ஒருவேளை, யாராவது பரங்கியன் வந்து ஆராய்ச்சிக்கட்டுரை வாசித்தால் ஒத்துக்கொள்வோம் என்று நினைக்கிறேன். இந்த மண்ணின் வரலாறு பதியப்பட்ட விதம் முற்றிலும் வேறானது, சமூகத்தை சார்ந்த மக்களின் மனத்தோடு ஒன்றிய வாழ்க்கையாய் அந்த வரலாறு எழுதப்பட்டிருக்கிறது உங்களுக்கு அவசியம் புரியும் என்றே நினைக்கிறேன்.

  23. ஜயராமன் on July 1, 2010 at 5:12 pm

    ///// நான் நம்புவதை, எனக்கு சரி என்று பட்டதை எழுதினேன். இப்போதும் நான் எழுதியதை சரி என்று நம்புகிறேன். ////

    ஹப்பி ஐயாவிற்கு நம்பிக்கை கிடையாது என்று சொன்னவர்களை நான் வன்மையாக கண்டிக்கிறேன். அவர் நிறையவற்றை நம்புகிறார், ஆமாம்.

  24. sarang on July 1, 2010 at 5:36 pm

    அற்புதங்களை எல்லோரும் நம்பியே ஆக வேண்டும் என்று இல்லை – அதை மறுப்பதே இந்த கட்டுரையின் மைய கருத்து போல தோற்றம் தருகிறது அற்புதங்களை நம்பாமை என்பது இன்று ஆபிராமிய மதஹ்தின் மீது நாம் கொண்டுள்ள மாற்றுக் கருத்துகளால் ஹிந்து மதம் அதற்க்கு எதிரான ஒரு நிலைபாட்டை கொண்டே ஆக வேண்டும் என்ற எண்ணத்தினால் வருகிறதோ என்று தோன்றுகிறது – ராகவேந்திரரின் அறிவுவியக்கம் சார்ந்து கூறுவதை கோடிட்டு காட்ட விரும்பி இருந்தால் இன்னும் கூட ஆராச்சி செய்திருக்கலாம், வெறும் ஆதங்கத்தை மட்டுமே கொட்டி என்ன பயன் – ராக வேந்திரர் அறிவியக்கம் சார்ந்து இன்னென்ன செய்தார் ஆனால் அவரை வெறும் அற்புதங்கள் நிகழ்த்தும் ஒருவராகவே நாம் பார்க்கிறோம் என்று ஆராய்ந்து சொல்லி இருந்தால் நன்றாக இருந்திருக்குமே – ராமானுஜரை பற்றி பரவலாக உள்ள எந்த புத்தகத்திலும் (சரிதங்கள்) அவர் அறிவியக்கம் சார்ந்து செய்த எதையும் படித்து விட முடியாது – அதுவும் hagiography போலவே தான் இருக்கும் – அதை மட்டும் படித்துவிட்டு ஆதங்க பட்டு இப்படி எழுதினால் என்ன பயன்? மகான்களின் சரிதங்கள் hagiography போல தான் இருக்கும் , இது அனைவரும் அறிந்த உண்மையே – – சங்கர விஜயத்தில் அத்வைத ரசம் இருக்கிறதா அல்ல hagiography இருக்கிறதா

    க்ரிஷனரை பற்றி ஆழ்வார்கள் ஆயிரம் ஆயிரம் பாடினார்கள் – அதில் ஒரு சில பாசுரங்களே கிருஷ்ணர் கீதா உபதேசம் செய்தார் – உபநிஷத்தின் சாரத்தை இன்னதாக சொன்னார் என்று இருக்கும் – மற்றவை எல்லாம் செயற்கரிய செய்தலை பற்றி தான் – இதற்காக ஆழ்வார்களை கிண்டலடித்து என்ன பயன் –
    எந்த ஒரு படைபிற்க்குமே 1) subject 2) Adikari (audience) 3) Relevance 4) Relation between these என்ற நான்கு விஷயங்கள் வேண்டும் என்று சாஸ்திரம் சொல்கிறது – மகான்களின் சரித்திரமும், பாசுரங்களும், திருமறைகளும் மேற்கொள்ளும் subject, audience, Relevance, Relation எல்லாமே வேறாக இருக்கும் பொழுது அதில் ஏன் அறிவியக்கத்திற்கு சான்று தேட வேண்டும், தேடி ஏமாற வேண்டும்

    குறிப்பாக இது தூஷனை போலவே தான் உள்ளது [தூஷிக்கிறார் என்று சொல்லவில்லை]
    //
    எனது மந்த்ராலயப் பயணம் எனக்கு பெரிய மனநிறைவைத் தந்ததா என்றால் யோசிக்கத்தான் வேண்டியிருக்கிறது. ஒரு திருப்பதி தரிசனம் போன்ற உணர்வு என்னை ஆட்கொள்ளவில்லை
    //
    - இப்படி ஒரு அனுபவம் கிடைக்கவில்லை என்பதற்காக அதை எழுத வேண்டிய நிர்பந்தம் என்ன? தன்னை இதை எல்லாம் நம்பாதவன் என்று காட்டி கொள்வதற்க்கா? அதை திருப்பதியுடன் ஒப்பிடும் நோக்கம் என்ன – இதை படிப்பவர் பலரும் என்ன நினைப்பார்கள்? அதை பற்றி எனக்கு கவலை இல்லை என்ற மனப்பான்மையில் தவறேதும் இல்லைதான்

    கட்டுரை ஆசிரியர் ராகவேந்திரரை எங்குமே நேரடியாக குறைத்து கூறவில்லை என்பது உண்மையே – ஆனால் இக்கட்டுரை அவரை பற்றி இல்லாமல் அற்புத செயல்களை எதிர்க்கும் ஒரு கட்டுரையோ என்று என்ன வைக்கிறது

    //
    மந்த்ராலயத்தில் பிராமணர்கள் (என்று கூறிக்கொள்பவர்கள்) தனி, பிராமணர் அல்லாதவர்களுக்கு தனி என்று தான் அன்னதானம் அளிக்கப்படுகிறது. இவை அந்த மகான் ஏற்படுத்திய வழிமுறைக்கே எதிரானது
    //

    இதற்க்கு எந்த சமய மடமும் விதி விலக்கல்ல – உள்ளே அனுமதித்து தனியாக வேணும் பரி மாறுகிறார்களே சந்தோசம் தான்

    இதற்க்கு ஒரு அனுஷ்டானம் சார்ந்த காரனுமும் உண்டு என நினைக்கிறேன் – அதை உடுப்பியில் கடைபிடிப்பது பற்றி தெரியும் [எல்லோருக்கும் இலையில் உணவு பரி மாறிய விட்டு பகவானுக்கு உணவு கண்டருல்வது, அதன் பின் அனைவரும் உண்பது] – அது மாத்வ சம்பிரதாய பொது அனுஷ்டானமா என்று எனக்கு தெரியவில்லை

  25. C.N.Muthukumaraswamy on July 1, 2010 at 5:39 pm

    இந்தக் கட்டுரையில் ஹரன் பிரசன்னா அவர்களின் ஆதங்கம் எனக்குப் புரிகின்றது. இராகவேந்திரர் வெறும் சாதாரண சித்தரோ, சந்நியாசியோ அல்லர். அவர் மாத்துவ சித்தாந்தத்தின் நிறுவனர். நீலகண்ட தீட்சிதருடனும் தத்துவ வாதம் புரிந்தவர் என்று பெருமையாகக் கூறப்படுபவர். அவருடைய வாழ்க்கையை வெறும் அற்புத நிகழ்ச்சிகளின் தொகுதியாகக் கூறி முடிப்பது, கிறித்துவர்களின் சமயப் பிரச்சார உத்தி போன்றல்லவா உள்ளது? நம் பாரத நாட்டில் அவதரித்த ஞானியர் பலரும் எண்ணற்ற அற்புதங்களைத் தங்களை நம்பினவரைக் காப்பாற்றச் செய்துள்ளனர். அற்புத நிகழ்ச்சிகள் யார் பொருட்டு நிகழ்த்தப்பட்டனவோ அவர்களுக்கே உரியன. அவை பொது விதியாக ஆகா. இராகவேந்திரரின் திருவடி மண் பட்டுப் பிழைக்க வேண்டிய புண்ணியம் திரு பாலாஜிக்கு இருந்தது. அதனால் அந்த அற்புதம் நிகழ்ந்தது. இதுவே விதி என்றால் அந்த மண் எல்லாருடைய இறப்பையும் நீக்குமா?நோய் நீக்குமா? மருத்துவர்களே வேண்டியதில்லையே. திருவாவடுதுறை ஆதீனம், தருமபுர ஆதீனம் போன்ற ஆதீன முதல்வர்களும் தஞ்சை மராட்டிய மன்னர்களாட்சியில் இத்தகைய அற்புதங்கள், சித்துக்கள் நடத்தினர் என்று அவர்களுடைய வரலாறுகள் கூறுகின்றன. சித்துக்கள் , அற்புதங்கள் பாமர மக்களின் கவனத்தை ஈர்க்கும். கற்றோர் அற்புத நிகழ்ச்சிகளுக்கு ஓரளவே மதிப்புத் தருவர். வெளியில் அதிகம் தெரியாத ‘அழுக்குச்சாமிகள்’ என்ற ஞானியின் அருள் என் தந்தையாரையும் எங்கள் குடும்பத்தையும் ஈடேற்றியது. வேட்டைகாரன் புதூர் என்னும் ஊரில் உள்ள அவரது சமாதிக்கு இன்றும் பாண்டிச்சேரி முன்னாள் முதல்வர் வந்து பயன்பெறுகின்றார் என்று அங்குள்ள மக்கள் கூறும் செய்தி.

  26. Kreshna on July 1, 2010 at 6:30 pm

    எது எப்போடியோ, தமிழ் இந்துல இந்த மாதிரி கட்டுரைகளை படிக்க வருத்தமா இருக்கு. :-(

    ராகவேந்திர ஸ்வாமிகள, அவரோட மகிமைகள அறிவியல் மூலமா, வரலாற்று
    பார்வையோட புரிஞ்சிக்க முறய்சி பண்றிங்க.

    பக்தி ஒன்ன தவற, அவர வெற எந்த வழியிலையும் புரிஞ்சிக்க முடியது.

  27. sarang on July 1, 2010 at 6:40 pm

    //
    அதாவது, அவர் வாய்வழிச்செயல்களாக இப்போது நமக்கு தெரிய வருபவை எல்லாம் பொய்கள். அவற்றை நாம் இன்னும் எப்படி “ஆராய” வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? ஒருவேளை, யாராவது பரங்கியன் வந்து ஆராய்ச்சிக்கட்டுரை வாசித்தால் ஒத்துக்கொள்வோம் என்று நினைக்கிறேன். இந்த மண்ணின் வரலாறு பதியப்பட்ட விதம் முற்றிலும் வேறானது, சமூகத்தை சார்ந்த மக்களின் மனத்தோடு ஒன்றிய வாழ்க்கையாய் அந்த வரலாறு எழுதப்பட்டிருக்கிறது உங்களுக்கு அவசியம் புரியும் என்றே நினைக்கிறேன்.
    //

    அரவிந்தன் அவர்கள் அப்படி சொன்னதாக தெரியவில்லையே – அவர் அற்புதங்களையும் தாண்டி என்னென்ன நடந்திருக்கிறது என்பதை முழுவது புரிந்து கொள்ள முயல வேண்டும் – அதிலிருந்து நமக்கு புதிய புரிதல்கள் கிடைக்கும் என்று தானே சொல்கிறார்

    //
    ஒருவேளை, யாராவது பரங்கியன் வந்து ஆராய்ச்சிக்கட்டுரை வாசித்தால் ஒத்துக்கொள்வோம் என்று நினைக்கிறேன்
    //

    இது கொஞ்சம் ஓவர் அரவிந்தன் அவர்களின் கட்டுரைகளை படித்துவிட்டு தான் இதை சொல்கிறீர்களா? அவர் பரங்கியனை திட்டும் விடமே அலாதி

  28. ஜயராமன் on July 2, 2010 at 10:34 am

    அநீ ஐயாவின் அட்வகேட் சாரங்க் ஐயா அவர்களே,

    /// அரவிந்தன் அவர்கள் அப்படி சொன்னதாக தெரியவில்லையே – அவர் அற்புதங்களையும் தாண்டி என்னென்ன நடந்திருக்கிறது என்பதை முழுவது புரிந்து கொள்ள முயல வேண்டும் – அதிலிருந்து நமக்கு புதிய புரிதல்கள் கிடைக்கும் என்று தானே சொல்கிறார் ////

    அவர் எழுதியதுதான் மேலேயே கொடுத்திருக்கிறதே. குருவின் தத்துவ இலக்கியங்களையும், மரபையும் தெரிந்துகொள்வதற்கு “குறைந்த பட்ச வாய்ப்பு கூட” இல்லை என்று தெளிவாகத்தானே சொல்லியிருக்கிறார். அப்புறம் நீங்கள் ஏன் போர்த்துகிறீர்கள்?

    /// இது கொஞ்சம் ஓவர் அரவிந்தன் அவர்களின் கட்டுரைகளை படித்துவிட்டு தான் இதை சொல்கிறீர்களா? அவர் பரங்கியனை திட்டும் விடமே அலாதி////

    எனக்கு ஐயா மீது அதிக பரிச்சயம் இல்லை. அவர் இணையத்தில் எழுதியதின் மூலமாகத்தான் அவரை படித்திருக்கிறேன். ஆனால், அவர் லெவலே தனி. அவர் 40 எர்ட்ஸ் படிச்சு நான்கு நாட்கள் தலைசுற்றியது. அதனால், என் புரிதலில் தப்பு இருந்தால் சந்தவ்யஹ!

    ஆனால், “ஆராய்ச்சி “பண்ணிதான் குருவின் அனுபவத்தை பெறவேண்டும் என்று அவர் சொல்வது என் பாமர மனசுக்கு புரியவில்லை. இதுவரை பண்ணிய ஆராய்ச்சிகளில் எல்லாம் – சரஸ்வதியாகட்டும், அயோத்தியாகட்டும், ஹரப்பாவாகட்டும் இல்லை நம்மூர் ராமர் பாலமாகட்டும் – ஆராய்ச்சியினால் இறுதியானது என்று ஏதாவது இருக்கிறதா? நம்பிக்கை இல்லாமல் சமாதிகளுக்கு பிக்னிக் போய்ட்டு வருபவர்கள் ஆராய்ச்சிக்க்ட்டுரையில் நம்பி நமஸ்காரம் பண்ணி விடுவார்கள் என்று என்க்கு நம்பிக்கையில்லை.

    இத்துடன் இந்த சீரியலை முடிச்சுக்கிறேன். நன்றி

  29. பாலாஜி on July 2, 2010 at 11:59 am

    ஜயராமன் சார், எனக்கு ஒரு சந்தேகம், தீர்த்து வைப்பீர்களா?? உங்களின் கடைசி இரண்டு மூன்று மறுமொழிகளை படித்தால் நீங்கள் இராகவேந்திர சுவாமிகளின் பக்தன் என்று புலப்படுகிறது. பின்பு ஏன் உங்கள் முதல் மறுமொழி நக்கலாக (with a sarcastic tone) எழுதியிருக்கிறீர்கள்? நீங்கள் இந்துவா இந்து-விரோதியா என்று புரியவில்லையே???

  30. Raja on July 2, 2010 at 1:01 pm

    // மகான்களின் மீது நாம் பெரும் மதிப்பு கொண்டிருக்கும் போதும், குதர்க்கமாக இல்லாமல் நேர்மையான முறையில் வரலாற்றுத் தகவல்கள் பற்றிய கேள்விகளை எழுப்புவது தவறு அல்ல என்று நினைக்கிறேன். இவற்றை நாம் எழுப்பா விட்டால், இந்து எதிரிகள் தங்களுக்கே உரிய திரிபுகளுடன் இவற்றை சித்தரிப்பார்கள். //

    இது நியாயமான வாதம் என்றாலும் ஹரனின் வார்த்தை பிரயோகம் வேறு மாதிரி எண்ணத்தை உருவாக்குகிறது.
    “நாடகத்தனமான நிகழ்வுகள்” என்கிறார். இப்படி பார்த்தால் ராகவேந்திரர் மட்டுமல்ல…கிட்டத்தட்ட எல்லா மகான்களின் வாழ்க்கையிலும் இந்த “நாடகத்தனம்” அதிகம் இருக்கும். அதனால் “நான் ‘நேர்மையான முறையில்’ கேள்வி கேட்க்கிறேன்” என்று எல்லா மகான்களின் வாழ்க்கை செய்திகளையும் கேள்விக்குரியதாக ஆக்கி விடலாமா ?

    ஞான சம்பந்தருக்கு உமை அம்மை பால் கொடுத்தது “நாடகத்தனமானது” என்று அடுத்த கட்டுரையில் எழுதினால் , அதை நம் “இந்து எதிரிகள்” தங்கள் இணைய தளத்தில் போட்டு “பாருங்கள்..ஹிந்துக்களுக்கே குழப்பம்” என்பார்கள்..இதெல்லாம் தேவையா ? அல்லது ஹரன் போன்றவர்களின் அறிவுக்கு உட்பட்டு தான் மகான்களின் வாழ்க்கை இருந்திருக்க வேண்டுமா ?

    ரஜினிகாந்த்தின் “ராகவேந்திரர்” படத்தில் ராகவேந்திரர் தமிழில் பாடுகிறாராம்..அதனால் அது உண்மை இல்லையாம்..என்ன ஒரு கண்டுபிடிப்பு !!
    “திருவிளையாடல்” படத்தை பார்த்து விட்டு “பாட்டும் நானே பாவமும் நானே” என்று சிவ பெருமான் முன் ஒரு காலத்தில் டி.எம்.எஸ் குரலில் பாடினாரா ? என்று கேட்பார் போலிருக்கிறது.

மறுமொழி இடுக:

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.

*

உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:

தமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.

மறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.