சி.பி.ஐயை துஷ்பிரயோகம் செய்யும் காங்கிரஸ் அரசு

எழுதியவர்: வி. சண்முகநாதன், பாராளுமன்ற இணைச் செயலாளர், பாரதிய ஜனதா கட்சி, நியூ டெல்லி.

manmohan-singh_0மத்திய புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ யை அரசியல் ஆயுதமாக ஆக்கியுள்ளது காங்கிரஸ் கட்சி. எதிர்க்கட்சித் தலைவர்களைப் பயமுறுத்திப் பணியவைக்க சி.பி.ஐ பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது உண்மையிலேயே எதிர்க்கட்சிகளைக் காயப்படுத்தும் நடவடிக்கையே. சி,பி.ஐ யின் சுதந்திரத்தையும் நடுநிலையையும் அழித்து விட்டார்கள். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளால் கொண்டுவரப்பட்ட வெட்டுத் தீர்மானத்தைத் தோற்கடிப்பதில் சி.பி.ஐ பயன்படுத்தப்பட்டது. தற்போது தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மூத்த தலைவர்கள் மற்றும் ஏனைய எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு தொல்லைதரும் வகையில் சி.பி.ஐ. பயன்படுத்தப்பட்டு வருகிறது.

நம் நாட்டின் சாதாரண குடிமக்கள், ஐக்கிய முன்னணிக் கூட்டணியின் பிரதமர் மன்மோகன்சிங்கின் அமைதியான, சீரியசான, சிந்தனையில் ஆழ்ந்த முகத்தைப் பார்த்து ஏமாந்து போகிறார்கள். இப்படிப்பட்ட அப்பாவித்தனமான தோற்றத்துக்குப் பின்னே சி.பி,ஐ யினை துஷ்பிரயோகம் செய்யும் கையும் ஒளிந்திருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு சாதமாக சி.பி.ஐ எவ்வாறு செயல்பட்டுள்ளது என்பதை அவசியம் புரிந்துகொள்ளவேண்டும்.

quattrocchi_3399e1. சி.பி.ஐ யினைத் தவறாகப் பயன்படுத்தியே போபர்ஸ் வழக்கு முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.  சி.பி.ஐ யின் தேடப்படும் பட்டியலில் நீண்டகாலமாக இருந்தவ இத்தாலிய வர்த்தகரான ஓட்டாவோ குத்ரோச்சியை திடீரென நீக்கினார் மன்மோகன் சிங். போபர்ஸ் ஆயுத பேர ஊழல் வழக்கில் 12 வருடங்களாக சர்வதேச இண்டர்போல் அமைப்பால் சந்தேகப் பேர்வழியாக அறிவிக்கப்பட்ட அவருக்கு எதிரான ரெட்கார்னர் நோட்டிஸ் விலக்கிக்கொள்ளப்பட்டது.

2. காங்கிரஸ் தலைவர் ஜெகதீஷ் டைட்லர் 1984ம் ஆண்டு சீக்கியர்கள்மீது நடந்த பயங்கர தாக்குதல்களில் முக்கிய குற்றவாளியாக இருந்தார். சிபிஐ ஜெகதீஷ் டைட்லரை அந்த வழக்கிலிருந்து விடுவித்துவிட்டது.

3. மாநில சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்க முயன்ற அஜித் ஜோகியின் மீதான வழக்குகள் அனைத்தும் மிகவும் சாதுர்யமாக முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

4. லாலு பிரசாத் யாதவ் வருமானத்துகு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கை பலவீனப்படுத்த அரசுத் தரப்பு வழக்கறிஞர்களை மாற்றியபடி இருந்தது.

வருமான வரித்துறை மேல்முறையீடு செய்ய ஏற்றவகையில் நீதிமன்றத்தின் சிறப்பு பெஞ்ச் ஏற்படுத்திக் கொடுத்து குற்றச்சாட்டிலிருந்து விடுபடும் வகையில் வரிக் கட்டுப்பாட்டிலிருந்தும் விலக்கி, அவருடைய சொத்துக்களைக் காப்பாற்றி, குற்றவியல் வழக்கில் இருந்து அவர் விடுபட வழியையும் ஏற்படுத்திக் கொடுத்தது. இப்படி நடந்தபோது உயர் நீதிமன்றத்தில் அவருக்கு எதிராக மேல்முறையீடு செய்ய வேண்டாம் என்று சி.பி.ஐ யிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது. மாநில அரசு மேல்முறையீடு செய்தபோது, அவ்வாறு அப்பீல் செய்ய வேறு யாருக்கும் அதிகாரம் இல்லை என்று சி.பி.ஐ பரிந்துரை செய்தது.

mayavathi5. 2007 ஆம் ஆண்டில் பி.எஸ். பி. யின் ஆதரவு அரசுக்குத் தேவைப்பட்டபோது, பி.எஸ்.பி. தலைவி செல்வி மாயாவதி மீதான தாஜ் காரிடார் வழக்கு ஒன்றுமில்லாமல் நீர்த்துப்போகச் செய்யப்பட்டது. எனினும் 2008ஆம் ஆண்டில் மத்திய ஐ.மு.கூட்டணி அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லாத் தீர்மானம் வந்தபோது அதனை ஆதரித்த மாயாவதியை அடக்குவதற்காகவே அவருக்கு எதிரான அளவுக்கு மீறிய சொத்துக்குவிப்பு வழக்குக்கு உயிர் கொடுக்கப்பட்டது. ஆனால் 2010 ஏப்ரலில், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளால் கொண்டுவரப்பட்ட வெட்டுத் தீர்மானத்தின் போது, மாயாவதியின் ஆதரவு தேவைப்பட்ட நிலையில், வருமானத்துக்கு மீறிய சொத்துக்குவிப்பு வழக்கினை நீர்த்துப்போகச்செய்தது.

6. முலாயம் சிங் யாதவ், மத்தியில் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான நிலை எடுத்தப்போதும் பிறகு ஆதரவு தெரிவித்தபோதும் வழக்குகளைக் கூட்டியும் குறைத்தும் நிலைமைக்குத் தக்கவாறு சி.பி.ஐ செயல்பட்டது.

7. பாதுகாப்பு தளவாடங்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் முறைகேடுகள் நடந்ததாக திரு. ஜார்ஜ் பெர்னாண்டஸ் மீது பொய்யான வழக்கினைப் பதிவு செய்தது. அதுவும் நீதிபதி புக்கான் தலைமையிலான விசாரணைக் கமிஷன் விசாரித்து, அவருக்கு எதிராக வழக்கு எதுவும் தேவையில்லை என்று அறிவித்தும் கூட வழக்கு பதிவு செய்யப்பட்டது.

8. சி.பி.ஐ யின் கொடுங்கோன்மைக்கு ஒரு சான்றாகத் திகழ்கிறது, இன்றைய குஜராத் மாநில விவகாரம், குஜராத் அரசின் சீரிய நடவடிக்கைகளை முடக்கும் வகையில், மாநில காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக, கட்டாயப்படுத்தியும் அச்சுறுத்தியும் பழிவாங்கும் நடவடிக்கைகளில் சி.பி.ஐ ஈடுபட்டு வருகிறது. அதுவும் உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழு பல்வேறு கட்சிகளில் இந்த வழக்குகளின் மீது விசாரணை நடத்தி முடித்த நிலையில்.

கடந்த ஆறுவருட ஐ.மு. கூட்டணி ஆட்சியில், அத்தியாவசியப் பொருட்களின் தாறுமாறான விலையேற்றத்தை கட்டுக்குள் வைப்பதில், அரசு தோல்வி கண்டுள்ளது. பயங்கரவாதிகள் மற்றும் மாவோயிஸ்டுகளை அடக்குவதிலும் தாக்குதல்களைக் கண்டறிந்து தடுப்பதிலும் இந்த அரசு தன் இயலாமையையே வெளிப்படுத்தியுள்ளது.

மிகவும் அதிர்ச்சி அளிக்கும் வகையிலான ஊழல்களில் இந்த அரசின் அமைச்சர்கள் பலருடைய கை வெளிப்படையாகத் தெரிகிறது. 2ஜி அலைவரிசையை மிகக் குறைவாகக் காட்டி, ஒதுக்கபட்டதில் நடந்த ஊழலால், அரசின் கஜானாவுக்கு 60,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இவற்றில் எல்லாம் சி.பி.ஐ யினை தங்களுக்கு சாதகமாகக் கையாண்டு, ஆளும் காங்கிரஸ் தன் ஐ.மு. கூட்டணி தலைவர்கள் தொடர்புடைய வழக்குகளை ஒன்றுமில்லாமல் ஆக்கிவிட்டது. ஆனால் எதிர்க்கட்சி தலைவர்களின் தலைக்கு மேலே தொங்கும் கூடிய கத்தியாக, சி,பி.ஐ யினை முறைகேடாகப் பயன்படுத்துகிறது. எதிர்க்கட்சியினை பயமுறுத்தி, பலவீனப்படுத்தி, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தைக் கூட்ட பேரம் பேசுகிறது. எல்லா வகையிலும் அரசு இயந்திரத்தை தவறாகப் பயன்படுத்தும் இவர்களுக்கு எதிராக மக்கள் போராடி நீதியை நிலைநாட்ட வேண்டும்.

நன்றி: விஜயபாரதம் (25-6-2010) இதழ்.

4 Replies to “சி.பி.ஐயை துஷ்பிரயோகம் செய்யும் காங்கிரஸ் அரசு”

  1. ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தை எதிர்த்து போரிட்டு சுதந்திரம் வாங்கினாலும், நாம் நம்மை சட்டப்படியும், நியாய தர்மப்படியும் ஆளுகின்ற முறையைக் கடைப்பிடிக்கவில்லை. காந்திஜி கூட நமக்குச் சுதந்திரம் கிடைத்துவிடும், அப்படி கிடைத்த சுதந்திரத்தை நம்மவர்கள் கட்டிக்காக்கும் தகுதி இருக்கிறதா என்றும் பார்க்க வேண்டும் என்றார். அது இல்லை என்று தெரிந்துதான் காந்திஜி தன்னை ஆளும் வர்க்கத்தில் இணைத்துக் கொள்ளாமல் ஓர் சந்நியாசி வாழ்க்கை வாழ்ந்தார். சி.பி.ஐ. என்ன அதற்கும் மேலான எந்த அமைப்பையும் கைவசப்படுத்தும் சாமர்த்தியம் காங்கிரசுக்கு மட்டுமல்ல, அதனோடு கூட்டு சேர்ந்துள்ள அனைவருக்கும் கைவந்த கலை. இங்கு ஆள்வோருக்கு நெருக்கமான எவராவது தண்டிக்கப்பட்டிருக்கிரார்களா? மத்தியிலாகட்டும், மாநிலத்திலாகட்டும். இந்திரா காந்தி மறைவுக்குப் பிறகு டில்லியில் நடந்த சீக்கியர்களுக்கு எதிரான வன்முறை வெறியாட்டத்தில் காங்கிரசின் பங்கு ஊர் உலகம் அறிந்த உண்மை. ஆனால் அவர்களை தண்டிக்க இருபத்தாறு ஆண்டுகள் ஆகியும் அவர்கள் அதிகாரப் பதவியில்தான் இருக்கிறார்கள். வியவஸ்தை கெட்ட சில சீக்கியர்களும் அவர்களுக்கு ஜால்ரா போடுகிறார்கள். சிபு சோரன், மாயாவதி, குட்ரோச்சி, ஜெகதீஷ் டைட்லர், அமைச்சர் ராசா போன்றவர்கள் இமாலய அளவுக்குத் தவறுகள் செய்தாலும் எதுவும் ஆகப்போவதில்லை. நம் போன்ற சாதாரண குடிமக்கள் ஒரு சிறு தவறு செய்துவிட்டாலும் போதும், வந்து விடுவார்கள், சட்ட புத்தகத்தைக் கையில் எடுத்துக் கொண்டு. ஒன்று மட்டும் நிச்சயம். இந்த நாட்டில் ஒன்று அரசியல் வாதிகள் மாறவேண்டும். அல்லது அவர்களுக்கு எந்த சட்டமும் பாதிக்காது என்ற நிலை வரவேண்டும். “மாடு கன்று போனால் என்ன? மக்கள் சுற்றம் போனால் என்ன? கோடிச்செம்பொன் போனால் என்ன? கிளியே இந்த காங்கிரசார் திருந்த மாட்டார்.”

  2. .// சி.பி.ஐ யினைத் தவறாகப் பயன்படுத்தியே போபர்ஸ் வழக்கு முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. சி.பி.ஐ யின் தேடப்படும் பட்டியலில் நீண்டகாலமாக இருந்தவ இத்தாலிய வர்த்தகரான ஓட்டாவோ குத்ரோச்சியை திடீரென நீக்கினார் மன்மோகன் சிங்.//

    அதற்கு மன் மோகன் சிங் சொன்ன விளக்கம் சூப்பர்.

    ஒரு மனுஷனை எவ்வளவுதான் கஷ்டபடுதறது .

    மாற்று கட்சிகளை மிரட்டு வதற்கும் ,அவதூறு வழக்கு புனைவதற்கும்,தன்வழிக்கு கொண்டுவருவதற்கும் ,ஏவி விடப்படும் கட்டபஞ்சயாத் எஜென்ட் தான் இந்த CBI
    Cbi means Central bearu of investigation என்பது என்று, தவறாக நினைக்கவேண்டாம் .
    அது CONGRESS BACKING INVESTIGATION ஆக மாறி வெகு நாள் ஆயிற்று
    .
    சுதந்திரதிற்கு பிறகும் வெள்ளை உள்ளம் கொண்ட நம் நாட்டவரை ஆள்பது வெள்ளை சமூகம் தான் என்பதையும் நாம் நினைவில் கொள்ளல் நலம் .
    நம்மில் ஒருவர் நம்மை ஆளும் நாள் வரையில் இந்த நிலை நீடிக்கவே செய்யும்.

  3. சமீபத்தில் நாடாளு மன்றத்தில் காங்கிரசுக்கு மற்ற கட்சிகளின் ஆதரவு் தேவைப் பட்ட போது, மாயாவதி,லாலு, இவர்களின் மீது உள்ள சீ பீ ஐ கேஸ்களை வைத்து மிரட்டி பெரும்பான்மை பெறப் பட்டது.
    இவர்களின் மீதுள்ள சீ பீ ஐ வழக்குகள் காலத்துக்கும் ,தேவைக்கும் ஏற்ப வேகமாகவும், மெதுவாகவும் நடத்தப் படும்.
    இவர்களின் ஆதரவு தேவை என்றால் அவர்கள் மேல் குற்றம் இல்லாதது போலவும், மற்ற நேரங்களில் குற்றம் உள்ளது போலவும் மாற்றி மாற்றி சீ பீ ஐ நடவடிக்கைஎடுக்கும்.

    சோனியாவுக்கு வேண்டியவரான ,போபோர்ஸ் ஊழலில் தொடர்புள்ள கொத்ரோச்சியை மிக அழகாக ஐந்து மில்லியன் பவுண்டுகள் கையூட்டுப் பணத்தை எடுத்துக் கொண்டு ஓட அனுமதித்தது.
    வேண்டுமென்றே அவர் மீதான வழக்குகளை வலிவில்லாமல் கோர்ட்டில் தாக்கல் செய்தது.
    உச்ச நீதி மன்றத்தில் அவர் மீதான வழக்கில் மேல் முறையீடு செய்யாமல் தகிடு தத்தம் செய்தது.

    குஜராத் முதல்வர் மோடியை வெறுப்பேற்ற வேண்டும் என்று அம்மாநில உயர் போலீஸ் அதிகாரிகள் மீது வீண் வழக்குகளைப் போட்டு அவர்களை கைது செய்வது, மேலும் பல வருடங்களாக கோர்டில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யாமல் அவர்களை சிறையில் வைத்திருப்பது போன்ற கேவலமான அடாவடிகளை செய்ய காங்கிரஸ் சீ பீ ஐ யை தனது கைப் பாவையாக மாற்றியுள்ளது.

    மிக உயர்ந்த, அப்பழுக்கற்ற தலைவர்களான திலகர், கோகலே, தாதாபாய் நவுரோஜி, லாலா லஜ்பத் ராய், படேல்,ராஜாஜி போன்றவர்கள் இருந்த காங்கிரசை மிகக் கேவலமான ஒரு கட்சியாக மாற்றி விட்டனர்.
    அதுவும் இப்போது ஒரு வெளி நாட்டினரின் தலைமையில் நடக்கும் அக்கிரமம் சொல்லத் தகாதது .

    இரா.ஸ்ரீதரன்

  4. இன்று நம்மை ஆள்வது கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் சக்திகளே என்பதை ஹிந்துக்கள் உணர வேண்டும்
    பணம் பதவிக்கு ஜொள்ளு விடும் ஹிந்துக்கள் இந்த சக்திகளின் கைப்பாவைகளாக இருந்து கொண்டு அவர்களின் இழுப்புக்கு ஆட்டம் போட்டு ஹிந்து சமூகத்துக்கு உலை வைத்துக் கொண்டிருக்கின்றனர்
    பாகிஸ்தான் பிரிவினை கேட்ட முஸ்லிம் லீகின் இந்திய வடிவான முஸ்லிம் லீக் இன்று மத்திய அரசில் பங்கு கொண்டுள்ளது என்பது குறிப்பிடத் தக்கது
    பாரதீய ஜனதா கட்சியை மத வாதக் கட்சி என்று பிதற்றும் காங்கிரஸ்காரர்கள் ஹிந்துக்களை என்ன மடையர்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்களா?
    முஸ்லிம் லீக் என்ன காந்தி கட்சியா?
    இரா.ஸ்ரீதரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *