ஈரோடு: மாரியம்மன் கோயிலுக்காகப் போராடும் மாபெரும் மக்கள் சக்தி!

ந்த வருடம் மே மாதக் கடைசியில் நீங்கள் ஈரோடு நகரையே ஸ்தம்பிக்கச் செய்த மாபெரும் பந்த் பற்றிப் படித்திருக்கலாம்.

மேம்பாலம் கட்டுவதற்காக ஸ்ரீபெரிய மாரியம்மன் கோயில் முன்மண்டபம் இடிக்கப் படலாம் என்று அரசு அறிவிப்பு வந்ததை எதிர்த்து, இந்தப் போராட்டம் வெடித்தது என்று கூறும் செய்திகள், இதன் பின்னணியில் உள்ள அனைத்து  விஷயங்களையும் கூறவில்லை.

ஈரோடு நகரைச் சார்ந்த கனிவை சீனு அவர்கள்  நமக்கு அளித்த முழுமையான செய்திகளை, அவரது வார்த்தைகளிலேயே இங்கே தருகிறோம். தொடர்புறுத்திய விஜயபாரதம் இதழுக்கு நன்றி.

erode-hindu-bandh-pictureஅன்று மே 28ம் தேதி. பெரிய மாரியம்மன் கோயில் நிலமீட்பு இயக்கத்தின் சார்பில் கடையடைப்பு மற்றும் பொது வேலைநிறுத்தம் என்ற செய்தி கண்ணில் பட்டது.

’ஆளும் கட்சியே பந்த் நடத்தி எதையும் அசைக்க முடியவில்லை. இதுல இந்து இயக்கம் எல்லாம் பந்த் நடத்த வந்துட்டாங்கப்பா’ என்று எண்ணிக் கொண்டே செய்தித் தாளைப் புரட்டி முடித்து விட்டு டீக்கடையை நோக்கி நடந்தேன். டீக்கடையைப் பார்த்த எனக்கு அதிர்ச்சி காத்திருந்தது கடையின் கதவில்… இன்று பந்த் – கடை விடுமுறை என்ற ஸ்டிக்கர் ஒட்டப் பட்டிருந்தது. ஒருவேளை இந்தக் கடைக்காரர் இயக்கத்துக் காரராக அல்லது அம்மன் பக்தராக இருக்கலாம், அதனால் லீவு விட்டிருக்கலாம் என்று நினைத்துக் கொண்டு பைக்கில் ஏறி நகரத்துக்குள் சென்றேன். போகிறேன், போகிறேன், போய்க் கொண்டே இருக்கிறேன். சந்து, பொந்து, மூலை, முடுக்கு என எந்தப் பகுதியிலும் ஒரு சிறிய பெட்டிக் கடை கூட திறக்கப் படவில்லை. ஈரோட்டைச் சுற்றி 15 கிமீ. சுற்றளவுக்கு இதே நிலைதான் எனக் கேள்விப் பட்டேன். உள்ளுக்குள் சந்தோஷமாக இருந்தது.

என்னால் இதை நம்ப முடியவில்லை. பெரிய பெரிய அரசியல் கட்சிகளும், ஆட்சியாளர்களும் சாதிக்க முடியாததை ஒரு இந்து ஆன்மிக அமைப்பு சாதித்திருக்கிறது என்பதைக் கண்டு வியந்து போனேன். 120க்கும் மேற்பட்ட வர்த்தக சங்கங்களின் ஆதரவோடு, பஸ் ஸ்டாண்டு கடைகள், காய்கறி மார்க்கெட், மாநில அளவில் கிளை பரப்பியுள்ள பெரிய பெரிய நிறுவனங்கள் என அனைத்துத் தரப்பினரும் இந்த பந்திற்கு ஆதரவு என்றால், அந்த பந்த் நடத்தும் இயக்கம் பற்றித் தெரிந்து கொள்ள யாருக்குத் தான் ஆர்வம் உண்டாகாது?

ஒரு நண்பர் மூலமாக அந்த அமைப்பின் செயலாளர்களில் ஒருவரைச் சந்தித்தேன். கடந்த 1999ஆம் வருடம் மூன்று பேருடன் தொடங்கிய பயணம் இன்று மாபெரும் மக்கள் இயக்கமாக மாறியுள்ளது என்று இயக்கம் தொடங்கப் பட்டதன் பின்னணியை அவர் விவரித்தார்.

கொங்கு நாட்டின் குலதெய்வமாக விளங்கி, அனைத்து மக்களாலும் போற்றப் படும் தெய்வம் ஸ்ரீ பெரிய மாரியம்மன். தமிழகத்தின் பிரசித்தி பெற்ற அம்மன் ஆலயங்களில் இதுவும் ஒன்று. கோயிலின் ஆண்டு வருமானம் சுமார் 45 லட்சம் ரூபாய் ஆகும். ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாவின் கடைசி ஒரு வாரத்தில் மட்டும் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் இங்கு குவிகிறார்கள். இவ்வளவு சிறப்புப் பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன் கோயிலுக்குச் சொந்தமான 40 ஏக்கர் நிலத்தை தென் இந்திய கிறிஸ்தவ சபை (CSI) நிர்வாகம் ஆக்கிரமித்து அனுபவித்து வருகிறது. 1999ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும், ஆக்கிரமிப்பில் உள்ள கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் இந்து முன்னணி அமைப்பினர் பொங்கல் வைக்க முயற்சி செய்வார்கள். அவர்கள் போலீசாரல் கைது செய்யப் பட்டு பிறகு விடுவிக்கப் படுவார்கள். இந்தப் பொங்கல் வைக்கும் போராட்டம் முதலில் 3 பேருடன் துவங்கி, வருடத்திற்கு வருடம் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போனது. 2008ஆம் ஆண்டு இதற்கென ஊர்ப் பிரமுகர்கள் ஒன்றுகூடி ஒரு இயக்கத்தைத் துவக்க முடிவு செய்து “ஸ்ரீ பெரிய மாரியம்மன் கோயில் நிலமீட்பு இயக்கம்” என்ற பெயரில் உள்ளூர்ப் பெரியவர்களையும், இந்து இயக்க பொறுப்பாளர்களையும் உள்ளடக்கிய ஒரு குழு உருவாக்கப் பட்டது.

erode-mariyamman-kovilஇயக்கத்தினர் அறவழியில் ஆட்சியாளர்களுக்கு மனுகொடுத்தல், ஆர்ப்பாட்டம், ஊர்வலம், பேரணி, பொங்கல் வைக்க முயற்சி, உண்ணாவிரதம் போன்ற போராட்டங்களைத் தொடர்ந்து நடத்தி வந்தனர். இந்நிலையில் மேம்பாலம் கட்டும் பணிக்காக ஸ்ரீ பெரிய மாரியம்மன் கோயில் முன்மண்டபம் இடிக்கப்படும் என்ற செய்தியைக் கேள்விப் பட்டு பொது மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.

சிறுபான்மையினர் என்ற போர்வையில் அரசு எந்த அளவிற்கு கிறிஸ்தவர்களுக்கு சலுகை காட்டுகிறது என்பதை இந்தச் சம்பவத்தின் மூலம் ஈரோடு இந்து மக்கள் நன்றாகப் புரிந்து கொண்டனர். ”பெரும்பான்மை சமுதாயத்தினர் ஓட்டுப் போட்டு, அதனால் அதிகாரத்தில் அமர்ந்திருக்கும் மாநகரத்தில் உள்ள 45 கவுன்சிலர்கள் (முருகன் என்ற 40வது வார்டு கவுன்சிலரைத் தவிர), மாநகர மேயர், மாவட்ட ஆட்சியர், தொகுதி எம்.எல்.ஏ, எம்.பி உட்பட எவரும் எங்களுக்கு ஆதரவோ, கோரிக்கைகளுக்குப் பரிந்து பேசவோ, காதுகொடுத்துக் கேட்கவோ கூட மறுத்து விட்டனர்” என்று வேதனையுடனும், கோபத்துடனும் நிலமீட்பு இயக்கத்தைச் சேர்ந்த அந்த சகோதரர் தெரிவித்தார்.

இனி யாரை நம்பியும் பயனில்லை. கோயிலை அகற்ற நினைக்கும் இந்த அரசுக்கும், அதிகாரிகளுக்கும் பெரிய அளவில் எதிர்ப்பைக் காட்ட வேண்டும் என முடிவு செய்தது நிலமீட்பு இயக்கம். அதனால் வர்த்தக சங்கங்களின் ஆதரவை நாடி பந்த் நடத்த முடிவு செய்தது. நேர்மையான, உண்மையான, நியாயமான இந்தக் கோரிக்கைகளை அனைத்துத் தரப்பு பொதுமக்களும் ஏற்றுக் கொண்டு, இந்த பந்த் 100 சதவீதம் வெற்றியடைய ஒத்துழைப்பு நல்கியுள்ளனர்.

இந்த நிலமீட்பு இயக்கம் துவங்கப்பட்ட போது 15.11.2008 அன்று தென்னிந்திய திருச்சபை (சி.எஸ்.ஐ. கோவை) மேலாளர் சார்பாக சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் மூலம் பத்திரிகைகளுக்கு ஒரு விளம்பரம் கொடுக்கப் பட்டது. அந்த விளம்பர நகலில் 12.66 ஏக்கர் சி.எஸ்.ஐ வசம் கிரையமாக உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. 12.66 ஏக்கர் மட்டுமே கிரையம் பெற்றதாகக் கூறும் சி.எஸ்.ஐ. இன்று 27.84 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து ஏகபோகமாக அனுபவித்து வருகிறது.

ஆக்கிரமிப்பு வரலாறு:

1804ஆம் ஆண்டுக்கு முன் பவானி நகரம் தான் ஈரோடு தாலுகாவின் தலைநகரமாக இருந்தது. 1864ஆம் ஆண்டில் தான் ஈரோடு நகரில் மந்தைவெளி பகுதியில் தற்சமயம் ஆர்.டி.ஓ அலுவலகம் அமைந்துள்ள இடத்தை ஒட்டி அரசு அலுவலகங்கள் தோற்றுவிக்கப் பட்டன. அவ்வாறு ஏற்படுத்தப் பட்ட அலுவலகங்களைச் சுற்றியுள்ள 40 ஏக்கர் நிலம் முழுவதும் அன்றைய அன்னிய ஆங்கிலேய கிறிஸ்தவ அதிகாரிகளின் துணை கொண்டு கிறிஸ்தவ மிஷநரிகளால் ஆக்கிரமிப்பு செய்யப் பட்டது.

இதில் 3.5 விஸ்தீர்ணம் எஸ்.எஃப் 412பி, 584 (தற்சமயம் பிளாக் எண் 3, டி.எஸ்.எண் 3,4) மற்றும் மாரியம்மன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்குவதற்கான யாத்ரீகர்கள் விடுதி, கிறிஸ்தவர்களால் ஆக்கிரமிப்பு செய்யப் பட்டு சி.எஸ்.ஐ. மருத்துவமனையாகவும், சி.எஸ்.ஐ. வணிக வளாகமாகவும் உள்ளது.

1905ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 12ஆம் தேதி ஆங்கிலேய அரசிடமிருந்து 12.66 ஏக்கர் நிலம், ஈரோடு லண்டன் மிஷன் சொஸைட்டிக்கு ரூ.12-11-0 அணாவுக்கு வருடாந்திர வாடகைக்கு பத்திரம் தயார் செய்யப் பட்டுள்ளது. சுதந்திரத்திற்கு முன் பேனா மூலம் கையில் எழுதும் முறையே வழக்கத்தில் இருந்தது, இதை வைத்து, அதில் இரண்டாம் பக்கத்தில் நடுப்பகுதியில் 12.910 ரூபாய்க்கு விற்கப்பட்டது போல் எழுதப் பட்டுள்ளதாக கிறிஸ்தவர்கள் திரித்து இந்த விஷயத்தை பிரசாரம் செய்கின்றனர்.

சி.எஸ்.ஐ. நிர்வாகத்தினர் எவ்வித ஆவணங்களும் இன்றி கோயில் மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமித்து சுதந்திரமாக அனுபவித்து வர, மண்ணின் மக்கள் நீதிக்காக, உரிமையை மீட்க எத்தனை ஆண்டுகள் தான் போராடுவது? எதற்கும் ஒரு எல்லை உண்டு அல்லவா? அந்த எல்லையை நெருங்கிவிட்டது நிலமீட்பு இயக்கம். விரைவில் அரசாங்கம் நிலத்தை மீட்டுக் கொடுக்காவிட்டால், மக்களே எடுத்துக் கொள்வார்கள், அதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

மாரியம்மனுக்காக மக்கள் நடத்தும் இந்தப் போராட்டம் சற்று வித்தியாசமானாலும், வீரியம் மிக்கது என்பது புரிந்தது. தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், தர்மம் மீண்டும் வெல்லும் என்ற பழமொழி நினைவிற்கு வந்தது. ஊர்கூடி தேர் இழுத்தால் நகராதா என்ன? ஊர் கூடிவிட்டது, தேரைப் பிடித்தாகிவிட்டது. தேர் இனி நிலைசேராமல் நடுவழியில் நிற்காது.

அம்மன் கோவில் நிலத்தை மீட்கவும் தங்கள் உரிமைகளைப் பாதுகாக்கவும் அனைத்து வேறுபாடுகளையும் மறந்து திரண்டெழுந்து போராடும் ஈரோடு இந்து சகோதர, சகோதரிகளை எண்ணி நமக்குப் பெருமிதம் ஏற்படுகிறது.

அன்னை மகாசக்தி அவர்கள் தோள்களுக்கு வலிமையளிக்கட்டும். அவர்களது போராட்டம் வெல்லட்டும். தமிழகத்தின் பல பகுதிகளில் ஆக்கிரமிக்கப் பட்டுள்ள கோயில் நிலங்களை மீட்க, இப்போராட்டம்  ஒரு ஆதர்சமாக அமையட்டும்.

40 Replies to “ஈரோடு: மாரியம்மன் கோயிலுக்காகப் போராடும் மாபெரும் மக்கள் சக்தி!”

  1. Really Great, Brothers & Sisters of Erode, we are with you, we pray for your success.

  2. great job. With amman arul everyone of Erode Bros & Sisters will succeeed in this.

    தர்மம் என்றும் தோற்றதில்லை நாம் போராடி தான் வெற்றி பெற வேண்டும்.

  3. ஆன்மீகத்தை அழிக்க நினைத்தவரின் ஊரில் ஆன்மீக எழுச்சி. இது தமிழகம் முழுவதும் பரவ வேண்டும். ஒவ்வோர் வீட்டு இந்துக்களும் ஒருமித்த ஒரு இந்து இயக்கத்தில் சேர்ந்திருக்க வேண்டும். இனி அப்படித்தான் நம்மைக் காத்துக்கொள்ள முடியும்! இந்துக்களே தி மு க விற்கும் காங்கிரஸிற்கும் சாகும் வரை ஓட்டு போடமாட்டேன் என்று சபதம் ஏற்றுக்கொள்ளுங்கள். வரப்போகும் தேர்தலில் நமது சக்தியைக் காட்டுவோம். ஒவ்வொரு இந்துவும் இதை மற்ற இந்துவிற்கு பிரசாரம் செய்யும் கடமை கொண்டவர்களாக மாறுங்கள். இல்லையேல் நமது கதியை இனி இத்தாலி நாட்டு போப் தான் தீர்மானிப்பார் என்பதை மறக்காதீர்கள்! (தமிழ் ஹிந்து ஆசிரியர் குழு கவனத்திற்கு – வாரியார் வீடியோ வேலை செய்ய வில்லை. )

  4. My salutes to all those fought against to the naries (fox).we will win the lands back.
    This unity is required for all hindus.be strong,we are behind you,if requires ready to come erode and join with you for prove our strength and unity.
    Request to Tamil hindu, please update this issue continuously.few of us can directly go and support our brothers if required.
    Mariamman will lead us.
    om sakthi

  5. Herewith I am taking oath,that I will not vote to DMK and Congress and educate the maximum number of people as much as possible.
    Thanks to Mr RAM for his advise.
    Thanks to TAMIL HINDU for publishing this articles and awakening all hindus.
    sivaya nama

  6. Iam supporting for all persons, who all fighting to get the land back. we have to fight in all routes to get the land back. we should stop the church activities by not allowing them to enter church. We can approcah legal department, proving that church dominated the land illegally.

  7. இது போன்ற நிகழ்வுகள் நம்மை ஒன்று படுத்துகின்றன, மேலும் இதனை வலு சேர்க்க அனைவரும் முயற்சிக்க வேண்டும். மற்ற மதத்தினருக்கு ஒரு பிரச்சனை என்றால் அவர்கள் உடனடியாக ஒன்று கூடுகிறார்களோ அதுபோல் நமது மதத்தவரும் ஒன்று கூட வேண்டும். மற்ற மதத்தினரின் வழிபாட்டு இடத்திலிருந்து ஒரு செங்கல்லைகூட எடுக்க முடியாது. ஆனால் பல கோவில் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு இருக்கின்றன. இதனை மாற்ற வேண்டும்.

  8. I feel so proud about our Hindu brothers and sisters of Erode. May Godess Maraitha shower Her grace on you all.I am eagelry awaitng for the final show down,now that the battle lines are drawn.Ordinary Hindus can show this immoral,Christian biased Government what we Hindus can do when we are all united.I hope this is the trigger, the spark Hindus need to establish our Sanatana Dharma once again. I will be praying for you all for success.
    JAI HIND!!!

  9. ஈரோடு “ஸ்ரீ பெரிய மாரியம்மன் கோயில் நிலமீட்பு இயக்கம்” அவர்களின் முகவரி, தொடர்புக்கு யாரிடம், தொலைபேசி என் முதலியன வெளியிட்டால் என் போன்றோர் தொடர்பு கொள்ளவும் இயன்ற உதவி செய்யவும் ஏதுவாகும். அடுத்த முறை போராட்டம் நடத்தினால் இறையருளால் வாய்ப்பு கிடைத்தால் நேரில் சென்று அன்று அவர்களுடன் இருக்கவும் உதவும்.

  10. Thanks TamilHindu for bringing this issue to the web. Divine mother Mariyamma will bless us all.

  11. ஈரோட்டு மக்களின் முயற்சி வெற்றி பெற நானும் பிரார்தனை செய்து கொள்கிறேன் , இதற்கு அம்மன் கண்டிப்பாக நமக்கு உதவி செய்வாள் , ஈரோட்டு மக்களை நினைத்து நன் பெருமை படுகிறேன், இந்த விஷயத்தில் அரசு தலையிட்டு ஒரு முடிவுக்கு கொண்டுவரவேண்டும் என கேட்டு கொள்கிறேன்

  12. ஈரோட்டில் மாரியம்மன் கோவில் நிலத்தை மீட்டு எடுத்திட வேண்டும் என்கிற சபதம் எடுத்து அதையே ஒரு மக்கள் இயக்கமாக மாற்றி போராட்டத்தினை முன்னெடுத்துச் சென்று கொண்டிருக்கும் முக்கிய நபர்களில் ஒருவர் ஈ.ஆர்.எம். சந்திரசேகர். அவர் ஈரோடு மாவட்ட
    ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் தலைவர் (ஜில்லா சங்கசாலக்) பொறுப்பிலும் இருந்து வருகின்றார். அவருடன் தொடர்பு கொண்டு நமது வாழ்த்துக்களையும் ஆதரவினையும் தெரிவித்துவிட்டு போராட்டத்தின் தற்போதைய நிலைமையையும் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.

    இவரைத் தொடர்பு கொள்ளவேண்டிய முகவரி
    11/3 காந்தி நகர் காலனி, கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை அருகில் ஈரோடு 636 009. அவரது அலைபேசி எண்: 93600 04330.

    நா.சடகோபன்
    சென்னை – 31

  13. ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு !!!!

    இந்தியாவிற்கே ஒரு முன் மாதிரியாக ஈரோட் நிகழ்வு அமைந்திட ,சாதி மத வேற்றுமை கழியவும், ஒற்றுமை இன்று போல் என்றும் நீடிக்க, பெரிய மாரியம்மன்
    அருள் புரியட்டும் .

    பிரத்யூஷ் ராமகிருஷ்ணன்.

  14. ஏற்கனவே பல முறை சொல்லி உள்ள படி இந்துக்களின் ஒற்றுமை உடனடித் தேவை என்பதை இந்த நிகழ்வும் நிரூபிக்கிறது! ஒன்று படுவோம்!

  15. இப் போர்ரடதினை திரு ஈ.ஆர்.எம். சந்திரசேகர் அவர்களோடு சேர்ந்து களத்தில் நின்று போராடிய அத்துனை பேர்களுக்கும் ,
    இத்தகவலை அளித்த திரு .நா,சடகோபன் அவர்களுக்கும் , நல்வாழ்த்துகள் மற்றும்
    நன்றிகள்.

    பிரத்யூஷ் ராமகிருஷ்ணன்

  16. https://www.dinamalar.com/News_Detail.asp?Id=34628
    please publish this.
    christian atrocity and comments from public.
    one important comment
    Thanks for Dinamalar that u publish about CHRISTIANITY ILLEGALS matter. For this Incident what the TAMILNADU Govt w’ll do & what abt the SUN T.V & Kalainjar T.V What abt the Vijay T.V. If the vijay tv is a correct person he w’ll publizh this the matter as a program. If people or media or B.J.P wants to know where are the places that incident are going,( converting from Hindu to Christian) please contact me by this mail id, I know the places. myhinducountry@gmail.com My hindu people plz wakeup. we can only save our HINDU COUNTRY…

  17. அன்னை அருளால் வெற்றி நிச்சயம் நமதே வளர்க உமது பனி

  18. There have been attempts to usurp hindu temple lands in Sabarimala and other places by Christian churches which could not take place because of stiff resistance from the hindu groups. It is our strength and pressure which will protect our temples. Govt. will not do anything to protect our temples. It is for us to protect our worship places. In Kerala there is an attempt to take over Sanyasi madams and monasteries by the govt. which was resisted by hindus and the govt had to abandon the plan. All hindus irrespective caste or creed have to join together in this fight.
    Please give publicity through other hindu websites and hindu groups so the all hindus will come to know of this and give you moral support in your fight. I will do in my humble way. But keep the fight on so that in future nobody will dare to touch hindu places of worship.

  19. ஈரோட்டில்தான் புருஷோத்தமா ராமனின் திருவுருவம் காலணியால் அடிக்கப்பட்டு ஹிந்து சமயத்தின் தலை குனிவுக்கு துவித்திடப்பட்டது
    இன்று அந்தக் களங்கத்தைத் துடைக்கும் பணி அங்கேயே ஆரம்பித்திருப்பது அந்த ராமனின் திருவுள்ளம்.
    அனுமன் நமக்கு பெரும் பலத்தையும், புத்தி சாதுர்யத்தையும் அருளட்டும்.
    வெற்றி நமதே
    ஆயிரம் ஆண்டுகள் முன்பிருந்த ஹிந்து சாம்ராஜ்யம் மறுபடி அமைப்போம்
    திரு சந்திரசேகருக்கும் அவரது குழுவினருக்கும் சங்கத்துக்கும் பாராட்டுக்கள் .

    இரா.ஸ்ரீதரன்

  20. கிறித்தவ ஆதரவு அம்மையார் டில்லியில் அமர்ந்து நம் நாட்டின் ஆட்சியின் சூத்திரதாரியாக இருப்பதால் கிறித்தவ ஏகாதிபத்திய வாதிகளுக்கு அளவுக்கு மீறிய தைர்யம் வந்து விட்டது
    எந்த அக்கிரமத்தையும் துணிந்து செய்யலாம், ஹிந்துக்களை புழுக்கள் போல் நடத்தலாம் என்று அவர்கள் துணிந்து விட்டனர்
    மேலை நாடுகளின் அரசியல் ரீதியான மற்றும் பொருளாதார பலமும் அவர்களுக்கு பின்னால் இருக்கிறது
    ஆனால் ஹிந்து எழுந்தால் எல்லாம் தவிடு பொடியாகும்
    அதர்மம் வீழும்.

    இரா.ஸ்ரீதரன்

  21. சன் நியூஸ் இல் தலைப்பு செய்திகளில் மறுபடி மறுபடி இந்த செய்தியும், உண்ணாவிரதம் இருக்கும் நம் மக்கள் சக்தியையும் போட்டு கட்டி கொண்டே இருந்தார்கள். தமிழ் ஹிந்து ஒரு முழு வேக செய்தி தளம் போல் செயல்படவும், நிறைய கிராம மக்களுக்கும் தெரியும் வண்ணம் சென்றடையவும் நம் ஹிந்து சகோதர சகோதரிகள் செயல்படவேண்டும். இந்த அறவழி போராட்டத்துக்கு வலு சேர்க்கும் வகையில் நம் கோரிக்கைகளை பிரதமருக்கும், உள்துறை செயலர்கள் போன்ற மைய அரசின் பணியாளர்கள் காதில் சங்கூதும் ஒலிபோல் கேட்க செய்யவேண்டும். எந்த நடவடிக்கையும் எடுக்கபடாது என்று தெரிந்ததுதான். ஆயினும், ஊதார சங்க ஊதுவோமே !!. உங்கள் கருத்துக்களை அமைதியான முறையில் மடலாக எழுதி அனுப்பலாமே !!
    போற போக்க பார்த்தா நம்ம சொந்த தாய் மண்ணான பாரதத்துலையே அகதிகள் ஆக்கிடுவாங்க போல இருக்கு !!!

  22. தெய்வ காரியத்திற்காக, ஒன்றிணைந்த ஈரோட்டு மக்கள் பாராட்டுக்கு உரியவர்கள். ஒன்றிணைந்து முயன்றால்,எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு இது ஒரு உதாரணம். ஆக்கிரமிப்பாளர்களை அடியோடு பெயர்த்தெடுக்கும் துணிவை தெய்வம் அனைவருக்கும் தரும்.

    அன்புடன்,
    ஆரோக்யசாமி

  23. இதற்கெல்லாம் காரணம் நமக்கென்று தலைமை இல்லை. நம்மிடமும் அந்த ஒற்றுமை வேண்டும்.

    நாம் நம் பிள்ளைகளை அவர்கள் கல்வி கூடங்களில் சேர்க்க கூடாது. என்னதான் அரசியல் ஆதரவு இருந்தாலும் நம் ஆதரவு இல்லாமல் அவர்களால் எதுவும் செய்ய முடியாது. குஜராத்தில் இவர்களால் வாழட்ட முடியாது. ஒன்றுபடுவோம், வெற்றி பெறுவோம்.

    ஜெய் ஹிந்த்.
    காசி

  24. சமீபத்திய update – 1

    பெரிய மாரியம்மன் கோயில் விவகாரம்:
    ஈரோடு மாவட்டத்தில் 6 இடங்களில் ஆர்ப்பாட்டம்

    ஈரோடு, ஜூலை 9: ஈரோடு பெரிய மாரியம்மன் கோயில் விவகாரம் தொடர்பாக மாவட்டத்தில் 6 இடங்களில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும் சனிக்கிழமை சாலைமறியல் போராட்டம் நடைபெற உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    ஈரோடு நகரின் மையப்பகுதியில் புகழ்பெற்ற பெரிய மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. தனியார் நிறுவனம் ஆக்கிரமித்துள்ள மாரியம்மன் கோயில் நிலத்தை மீட்க வேண்டும், பன்னீர்செல்வம் பூங்கா பகுதியில் கட்டப்படும் மேம்பாலத்தால் மாரியம்மன் கோயிலுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால், மேம்பாலப் பணிகளை நிறுத்த வேண்டும், பிரப் சாலையில் உள்ள 80 அடி சாலையை பொதுமக்கள் பயன்பாட்டுக்குத் திறந்து விட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடையடைப்பு, ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் உள்பட பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன.
    இக்கோரிக்கைகளுக்காக காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்க முயன்ற 30 பேரை போலீஸôர் வியாழக்கிழமை கைது செய்தனர். ஈரோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அனைவரும், கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் உண்ணாவிரதம் இருந்ததைத் தொடர்ந்து, கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கும் அவர்கள் சாப்பிட மறுத்து, உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    இதற்கிடையில் கோரிக்கைகளை வலியுறுத்தி பெருந்துறை, கோபி, புளியம்பட்டி, சத்தியமங்கலம், அந்தியூர், பவானி ஆகிய இடங்களில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இவற்றில் நிலமீட்பு இயக்க நிர்வாகி ஈஆர்எம்.சந்திரசேகரன், பாஜக மாநில ஒழுங்கு நடவடிக்கைக்குழுத் தலைவர் ஆ.சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
    உண்ணாவிரதப் போராட்டத்திற்கு அனுமதி அளிக்காததைக் கண்டித்தும், பெரிய மாரியம்மன் கோயில் விவகாரம் தொடர்பாக தமிழக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்க மறுப்பதாகவும் தெரிவித்து, ஈரோடு அரசு மருத்துவமனை அருகே சனிக்கிழமை மாலை சாலைமறியல் போராட்டம் நடத்தப்படும் என்று பெரிய மாரியம்மன் கோயில் நிலமீட்பு இயக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

    நன்றி: தினமணி
    https://www.dinamani.com/edition/story.aspx?SectionName=Edition-Coimbatore&artid=269821&SectionID=136&MainSectionID=136&SEO=&Title=பெரிய%20மாரியம்மன்%20கோயில்%20விவகாரம்:%20மாவட்டத்தில்%206%20இடங்களில்%20ஆர்ப்பாட்டம்

  25. சமீபத்திய upadate – 2

    ஈரோட்டில் கோயிலை காக்க உண்ணாவிரதம்:
    கோவை அரசு மருத்துவமனையில் 30 பேர் அனுமதி

    கோவை, ஜூலை 9: ஈரோட்டில் உள்ள ஸ்ரீ பெரிய மாரியம்மன் கோயிலை மேம்பால கட்டுமானப் பணிக்காக இடிக்கக் கூடாது என வலியுறுத்தி சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து கைதான 30 பேர் கோவை சிறையில் உணவு உட்கொள்ள மறுத்ததால், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
    ÷ஈரோட்டில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன் கோயில் உள்ளது. அந்தக் கோயிலுக்கு அருகே மேம்பால கட்டுமானப் பணி துவங்கியுள்ளது. அந்தப் பணிக்காக கோயிலை இடிக்கக் கூடாது எனவும், மேம்பாலத்துக்கு பதில் சாலையை விரிவாக்க வேண்டும் என வலியுறுத்தியும் கோயில் நிலமீட்பு இயக்கம் சார்பில் ஈரோட்டில் சாகும்வரை உண்ணாவிரத போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இப் போராட்டத்தில் ஈடுபட்ட 30 பேரை போலீஸôர் கைது செய்தனர். கோவை மத்திய சிறைக்கு அவர்களை போலீஸôர் வியாழக்கிழமை நள்ளிரவு கொண்டு வந்தனர். ஆனால், அவர்கள் சிறைக்குள் உண்ணாவிரதத்தைத் தொடர்ந்தனர். இதனால் கோவை அரசு மருத்துவனையில் அவர்கள் அனுமதிக்கப்பட்டனர். அங்கும் அவர்கள் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.
    ÷இதுகுறித்து போராட்டக்காரர்கள் கூறியது:÷மேம்பாலம் கட்டும் பணிக்காக ஸ்ரீ பெரிய மாரியம்மன் கோயிலை இடிக்கக் கூடாது என வலியுறுத்தி, கடந்த மே மாதம் 28-ம் தேதி ஈரோட்டில் முழு அடைப்பு போராட்டம் நடத்தினோம். அதற்கு மக்களிடம் பெரும் ஆதரவு கிடைத்தது. நெடுஞ்சாலைத் துறை அமைச்சர், ஈரோடு மாவட்ட எம்எல்ஏ-க்கள், முன்னாள் அமைச்சர்கள் ஆகியோரை சந்தித்து, கோயிலை இடிக்கக் கூடாது எனக் கூறியும் பயனில்லை. அம்மனின் ஆலயத்தை காக்கத் தொடர்ந்து உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளோம் என்றனர்.

    நன்றி:

    தினமணி
    https://www.dinamani.com/edition/story.aspx?SectionName=Edition-Coimbatore&artid=269818&SectionID=136&MainSectionID=136&SEO=&Title=ஈரோட்டில்%20கோயிலை%20காக்க%20உண்ணாவிரதம்:%20கோவை%20அரசு%20மருத்துவமனையில்%2030%20பேர்%20அனுமதி

  26. மகிழ்ச்சியான செய்தி.

    ஈரோடு பெரிய மாரியம்மன் கோயில் நில மீட்பு இயக்கத்தினரின் போராட்டம் இறுதியில் வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக நடந்த நிகழ்வுகள் வாசகர்களுக்காக…

    1 . இந்த இயக்கத்தைச் சார்ந்த 30 வீரர்கள் காலவரையற்ற உண்ணாவிரதத்தை ஜூலை 8-ல் துவக்கினர். அவர்கள் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறைக்கு அனுப்பப்பட்டனர். அங்கும் உண்ணாவிரதத்தை அவர்கள் தொடர்ந்ததால், கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு இடம் மாற்றப்பட்டனர். அங்கும் தொடர்ந்து மூன்று நாட்கள் அவர்களது உண்ணாவிரதம் தொடர்ந்தது.

    2 . உண்ணாவிரதம் இருந்தவர்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, ஈரோடு, அரசு மருத்துவமனை அருகில் மாபெரும் மறியல் போராட்டம் ஜூலை 10௦-ல் நடத்தப்பட்டது. இதில், பெருந்திரளான பெண்கள் உள்பட 2000 பேர் பங்கேற்றனர். 700 பேர் கைது செய்யப்பட்டனர். இத்தனை பேரையும் சிறையில் அடைக்க முடியாததால் இரவே விடுவிக்கப்பட்டனர்.

    3 . உண்ணாவிரதம், சாலை மறியலால் ஈரோட்டில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை உன்னிப்பாகக் கவனித்த அரசு, வழிக்கு வந்தது. மாவட்ட நிர்வாகத்திலிருந்து கோயில் நில மீட்பு இயக்கத்தினர் தொடர்பு கொள்ளப்பட்டனர். கோயில் நில மீட்பு இயக்கத்தினர், அதன் தலைவர் திரு ஈ.எம்.ஆர்.சந்திரசேகர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் திரு. சுடலைக்கண்ணனை நேரில் சந்தித்தனர் (ஜூலை 10௦ இரவு). ஆட்சியரால் சில உறுதிமொழிகள் அளிக்கப்பட்டன.

    4 . பெரிய மாரியம்மன் கோயிலுக்கு ஆபத்து ஏற்படுத்தும் மேம்பாலப் பணிகளை உடனே நிறுத்துவதாகவும், 80 அடி சாலை, ஆக்கிரமிப்பில் உள்ள நிலம் மீட்பு தொடர்பாக 15 நாட்களுக்குள் நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் உறுதி அளித்தார்.

    5 . இதை அடுத்து சிறையில் இருந்தவர்கள், உண்ணாவிரதத்தைக் கைவிட்டனர். அவர்கள் காவல் நிலையப் பினையிலேயே, ஜூலை 13 -ல் விடுதலையாகி, ஈரோடு திரும்பினர். அவர்களுக்கு அன்றிரவு கோயில் அருகே உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    6 . இதுவரை அரசு பக்தர்களை கிள்ளுக்கீரையாக நினைத்திருந்தது. பக்தர்களின் தொடர் போராட்டத்தால், ஈரோட்டில் சூழல் மாறியுள்ளது. ஆட்சியர் அளித்த உறுதிமொழி நிறைவேற்றப்படும் நாளை எதிர்நோக்கி பக்தர்கள் காத்திருக்கின்றனர். இனிமேலும் பக்தர்களைக் காக்க வைக்க முடியாது என்பது அரசுக்கு உணர்த்தப்பட்டுள்ளது.

    அம்மன் சக்தி வென்றது!

    -சேக்கிழான்.

  27. போராட்டங்கள் தொடரட்டும். வெற்றி நமதே

  28. பாராட்டுக்கள்
    வாழ்த்துக்கள்

    இரா.ஸ்ரீதரன்

  29. It is a wonderful job. Why our people allow our land occupied for other community church. We need some meeting in every month or Please publish whenever some thing your doing for our community. I am also interest to join.

  30. வாழ்த்துக்கள் .இதோடு கோவில் நிலங்களில் இந்துக்களே ஆக்ராமிப்பு செய்து கடை வைத்து குட கூலி ஒழுங்காக கொடுக்க வகை செயுங்கள் .நிலங்களை ஆக்ராமிப்பு தஞ்சை திருச்சி யின் கோவில்கள் களில் மிக மிக அதிகம் .
    கோவில்களை சுத்தமாக வைத்து கொள்ள போராடுங்கள் .மக்களின் ஒற்றுமையான போராட்டம் வலியது.வாழ்க இந்து மக்கள் .ஜெய ஹிந்த் .

  31. ஒன்றுபட்டால் நாம் வெற்றி பெறலாம். ஹிந்துக்களே ஹிந்து மதத்திற்கு எதிரிகளாக செயல்படுகிறார்கள். இங்கே உள்ள மேயர் மற்றும் அவர்களது கூட்டாளிகளுக்கும் இந்த பாலம் கட்டுவதன் மூலம் கிடைக்கப் போகும் கமிசன் தொகையின் மீதும் கிறித்துவ பாதிரிகளின் தனிப்பட்ட கவனிப்பின் மீதுமே உள்ளது. மேலும் அவர்களின் கவனம் எல்லாம் கிருத்துவர்களின் ஓட்டுகளின் மேலேதான் உள்ளது. மற்றவர்கள் நம் மீது எவ்வளவு சேற்றை வாரி வீசினாலும் நாம் அதை துடைத்துவிட்டு அவர்களுக்கே நமது வாக்குகளை வாரி வழங்குகிறோம். ஆகவே நாம் முதலில் மாறுவோம். பிறகு அவர்கள் தானாகவே மாறி வருவார்கள். இறுதி வெற்றி நமதே.

    மாதவன், ஈரோடு

  32. பஸ்மாசுரன் போல் நம்ம ஹிந்து அரசியல் வாதிகள் நம் ஓட்டை வாங்கிக் கொண்டு ,நம் தலையிலேயே கை வைக்கின்றனர்
    நம் தேசம் கொஞ்சம் கொஞ்சம்மாகத் தேய்ந்து கொண்டு வருகிறது
    ஆப்கானிஸ்தானத்தை இழந்தோம், பாகிஸ்தானையும் பங்களாதேஷையும் இழந்தோம்.
    காஷ்மீரிலிருந்து ஹிந்துக்கள் விரட்டி அடிக்கப் பட்டனர்

    வெளிநாடுகள் எங்கும் ஹிந்துவுக்கு மரியாதை, மதிப்பு இல்லை
    பாகிஸ்தானில் ஹிந்துக்கள் தொடர்ந்து முஸ்லிம்களாக மாற்ற பட்டுக் கொண்டிருகிரார்கள்
    இன்னும் கொஞ்ச நாளில் இருக்கும் சில லட்சம் ஹிந்துக்கள் மொத்தமாக முஸ்லிம்கள ஆகி விடுவார்கள்
    பங்களாதேஷில் ஹிந்துக்கள் படும் அவஸ்தை கொஞ்ச நஞ்சமல்ல. – அவர்கள் தாக்கப் படுகிறார்கள்.அவர்களது சொத்துக்கள் ஆக்கிரமிக்கப் படுகின்றன.அவர்களது பெண்கள் கடத்தப் பட்டு முஸ்லிம்களுக்கு மணம செய்து வை்க்கப் படுகிறார்கள்
    மலேசியாவில் கொஞ்சம் கொஞ்சமாக் ஷரியத் சட்டம் அமுலுக்கு வந்து விட்டது. ஹிந்துக்களின் கோயில்கள் இடிக்கப் பட்டன.அவர்கள் போராட்டம் நசுக்கப் பட்டது.அவர்கள் சிறையில் தள்ளப் பட்டனர்.
    சட்டம் முஸ்லிம்களுக்கு சாதகமாக உள்ளது
    சிறிலங்காவில் ஹிந்துக்கள் அகதிகள் போல் உள்ளனர். பல கோயில்கள் இடிக்கப் பட்டன. வீடு வாசல் இழந்து பல லட்சம் ஹிந்துக்கள் தவிக்கின்றனர்
    இவர்களுக்கு ஓட்டுப் போடும் ஹிந்துக்கள் தங்களது எதிர்கால சந்ததிகள் கதி என்ன என்று யோசிக்க வேண்டாமா?

  33. ராஜா அவர்களே
    நீங்கள் ஹிந்து சமுதாயத்துக்கும் இந்த நாட்டுக்கும் ஏதாவது செய்ய வேண்டும் என்று விரும்பினால் ஆர்ர் எஸ் எஸ், சேவா பாரதி, விஸ்வ ஹிந்து பரிஷத் இவை எதிலாவது சேருங்கள்

  34. Hindus have become refugees in their own land, protesting for their basic rights and very survival from the hands of both Abrahamic faiths.

  35. ஈரோடு பெரியமாரியம்மன் கோயில் நிலமீட்பு போராட்டங்களில் நாள் கலந்து கொண்டிருக்கிறேன் .உண்மையில் அந்த பந்த் எங்களுக்கே பெரிய ஆச்சர்யம் .சீனு சொன்னதுபோல் ஈரோட்டில் ஒரு டீக்கடை ,பெட்டிக்கடை கூட அன்றைக்கு திறக்கப்படவில்லை .இது மாரியம்மன் மேல் மக்கள் கொன்டிருந்த பக்தியை கட்டியது .தற்சமயம் அரசு மக்கள் போராட்டத்தை கண்டு பயந்து மேம்பால பணிகளை நிறுத்தி விட்டது .ஆனால்,எங்களின்இந்த போராட்டம் தமில்ஹிந்து மூலமாய் இணையதளம் ஏறி இருப்பதை காணும் போதுசந்தோசமாய் இருக்கிறது .

  36. வெற்றி நமதே. ஈரோடில் பிறந்து வளர்ந்து, புலம் பெயர்ந்தாலும், அந்த மாரியம்மன் சன்னிதானம் அமைவதற்கு என்னுடைய அவாவும், வாழ்த்துக்களும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *