இந்துத்துவ முத்திரை

indhu_enage_govinda”இந்து யெனகே கோவிந்தா” என்ற வாசகத்துடன் இந்த அழகான படத்தை மின் அஞ்சல் குழுமத்தில் அனுப்பினார் நண்பர் ஒருவர். (தமிழ்ஹிந்துவில் சமீபத்தில் ராகவேந்திரர் கட்டுரை படித்த தாக்கமோ என்னவோ!) உடனடியாக,  இதற்கு என்ன அர்த்தம்? இந்து என்றால் கோவிந்தாவா ?:) என்று ஸ்மைலியுடன் வந்த இன்னொரு நண்பரின் பதிலைப் பார்த்து குபீரென்று சிரித்து விட்டேன். யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற பாலிசி படி உடனே அதை அப்படியே ஒரு ஐந்து பேருக்கு ஃபார்வர்ட் செய்தேன். (அந்த கன்னட வாசகத்துக்கு ‘இன்று எனக்கு கோவிந்தன்’ என்று பொருள். ஸ்ரீராகவேந்திரர் எழுதிய ஒரு பாடலின் முதல் வரி).

கோவிந்தா என்ற பகவான் பெயரை வைத்து இப்படியெல்லாம் கிண்டல் செய்கிறாயே, நீயெல்லாம் ஒரு இந்துமத அபிமானி, இந்துத்துவ வாதி, ஹும்… என்று வேறு ஒருவரிடமிருந்து எரிமலைக் குழம்பு மின் அஞ்சலில் வழிந்தோடியது 🙁

இப்படித் தான், ஒரு நண்பருடன் போனவாரம் உரையாடிக் கொண்டிருந்தேன். நண்பர் ’தோழரும்’ கூட. புரட்சிவாதி. தீவிர நக்சல், மாவோயிஸ்டு ஆதரவாளர். பெங்களூரில் அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட ஒரு பன்னாட்டு மென்பொருள் கம்பெனியில் வேலை செய்கிறார். ஆனால் இது குறித்து தார்மீக சங்கடங்கள், முரண்கள் எதுவும் அவருக்கு இருப்பதாகத் தெரியவில்லை. முன்பொரு முறை இது பற்றி கேள்வி கேட்டபோது,அரசு வேலை செய்தால் தான் தவறு, தான் தனியார் MNC கம்பெனியில் வேலை செய்து அதில் பொருளீட்டி புரட்சிக்கு வலு சேர்ப்பதில் என்ன முரண் இருக்கிறது என்று வாதம் செய்தவர். நல்ல அறிவுஜீவி, சிந்தனையாளர்.

தஞ்சைப் பெரிய கோவில் கட்டி ஆயிரம் ஆண்டுகள் ஆவது பற்றி பேச்சு வந்தது. அது தமிழகத்தின் மாபெரும் வரலாற்று நிகழ்வு என்று நான் கூறினேன்.

‘அந்தக் கோவிலைப் பார்க்கும்போது என் நெஞ்சம் குமுறுகிறது … ஆயிரமாயிரம் பாட்டாளி மக்களின் உழைப்பை உறிஞ்சி இந்துத்துவம் என்ற கொடிய நிலப்பிரபுத்துவ அமைப்பு உருவாக்கிய ஒரு கட்டுமானம் அது. ராஜராஜ சோழன் ஒரு சர்வாதிகாரி, உழைக்கும் மக்களை அடிமைப் படுத்தி, அவர்கள் முதுகெலும்பை உடைத்து, அதன்மீது அவன் கட்டியவை இந்தக் கோயில் கோபுரங்கள்..’ – தோழரது முகம் இருண்டது.

‘ஓஹோ… உங்கள் ஆதர்ச பூமியான சீனாவில் பழங்காலத்தில் கட்டடங்களை எப்படிக் கட்டினார்கள், இப்போது எப்படிக் கட்டுகிறார்கள்? மனித உழைப்பு இல்லாமல் ஏதாவது மாவோ மந்திரவாதத்தை வைத்துக் கட்டுகிறார்களா? சீனாவின் உழைப்பு வதை முகாம்கள் பற்றி தணிக்கைகளை மீறி அரசல்புரசலாக வரும் செய்திகளே அச்சுறுத்துவதாக உள்ளதே?’ – இது நான்.

‘என்னவானாலும், அவர்கள் உழைப்பாளிகளை மதித்தார்கள், மதிக்கிறார்கள்’ என்றார் தோழர்.

thanjai_periya_kovil2பெரிய கோயில் கட்டிய சிற்பிக்கு ராஜராஜன் தன் கையாலேயே வெற்றிலை மடித்துக் கொடுத்தது பற்றி உள்ள நாட்டார் ஐதிகம் (அரசவைப் பாடல் அல்ல, மக்கள் இலக்கியம்) பற்றிச் சொன்னேன்.

யாரோ ஒரு இந்துத்துவவாதி கிராமத்தான் தான் அதைப் பதிவு செய்திருக்க வேண்டும், அப்பவே அவங்க ஊடுருவியிருப்பாங்க என்பது போன்ற சந்தேகக் கண்களுடன் என்னைப் பார்த்தார் தோழர்.

மன்னர்கள் பெரும் கோயில்கள்  கட்டியது உழைப்புச் சுரண்டல் அல்ல. மாறாக கலை, கலாசார வளர்ச்சியோடு இயைந்த ஒரு வேலைவாய்ப்புத் திட்டம் என்று அவருக்கு விளக்க முயற்சித்தேன். மன்னாராட்சிக் காலத்தில் கருவூலத்தில் சேர்ந்த செல்வத்தை (தானியங்கள், பொன்) மக்களின் உழைப்பைப் பெற்று அவர்களுக்குப் பகிர்ந்தளிக்கும் ஏற்பாடு அது. சொல்லப் போனால் பஞ்சகாலத்தில் மிக அதிகமாக கோயில், குளம், ஏரி வெட்டுவது, சாலைகள் போடுவது ஆகிய பணிகளை மன்னர்கள் மேற்கொண்டார்கள். விவசாயம் நசித்ததானால் வேலையின்றித் தவிக்கும் ஆட்களைப் பணியமர்த்தி, அதன் பின்விளைவாக உருவாகும் வறுமையையும், இடப்பெயர்தலையும் தடுத்தார்கள்.சமூக, பொருளாதார ரீதியாகப் பார்த்தால் Keynesian economics என்ற பழைய பொருளாராதக் கொள்கை இதையே தான் கூறியது. அப்போ Keynes கூட இந்துத்துவ வாதியா என்று திருப்பிக் கேட்டேன். இந்து-விரோத கருணாநிதி அரசே பெரும் விழாவாக இந்த நிகழ்வைக் கொண்டாட ஏற்பாடு செய்து வருகிறது. அதுக்கு என்ன சொல்றீங்க? என்றேன்.

தோழர் கொஞ்சம் அமைதியானார்.

தோழர் என்றால் அவர் கண்டிப்பாக இலக்கியம் பேசியே ஆகவேண்டும் என்று இந்நேரம் நீங்கள் ஊகித்திருக்கலாம். (இந்துத்துவர்களின் இலக்கிய வாசனை பற்றி பொதுஜன அபிப்பிராயம் என்ன என்று சொல்லித் தெரியவேண்டியதில்லை). ஜெயமோகன் எழுத்துக்கள் பக்கம் பேச்சு திரும்பியது. ஜெமோ ஒரு இந்துத்துவ ஏஜெண்ட் என்று வாதாடினார் நண்பர். அப்படியெல்லாமில்லை என்று பல எதிர்-உதாரணங்களை (counter examples) நான் எடுத்துக் கூறினேன்.

கீதை, இந்து ஞான மரபு, காலனியம் நம் வரலாற்றைத் திரித்து விட்டது என்று ஒரு தியரி இதெல்லாம் பத்தி தொடர்ச்சியாக எழுதிக் கொண்டே இருக்கிறார் என்று தனது கடுப்பின் காரணத்தைப் போட்டுடைத்தார் தோழர். காந்தி முதல் கண்ணதாசன் வரை எல்லாரும் கீதையைப் பற்றி எழுதியிருக்காங்களே? என்று வினவினேன் நான். அவர்கள் எல்லாருமே கூட ஒருவகையில் இந்துத்துவம் என்ற பூதாகாரமான சதிவலையில் ஒரு அங்கம் தான். அவங்க எல்லாம் பார்ப்பனீயத்தின் பாதுகை தாங்கிகள் என்றார்.

kaval-kottam-bookஇது கேட்ட கதைதானே என்பதால், அவரைக் குளிர்விப்பதற்காக, ‘காவல் கோட்டம்’ படிச்சீங்களா? எப்படி? என்று பேச்சை வேறு பக்கம் திருப்பினேன். அந்த பிரம்மாண்டமான வரலாற்று நாவலை இன்னும் நான் படிக்கவில்லை (தலையணை புத்தகம், ஆயிரம் பக்கங்களாம்). விமர்சனங்கள் படித்திருந்தேன். அந்த நாவலை எழுதிய சு.வெங்கடேசன் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினர். பொதுவுடைமை சித்தாந்தத்தில் திளைத்தவர்.

தோழரின் முகம் இன்னும் கடுமையாகியது. ப்ச்.. நல்ல நாவல் தான், ஆனால் பிற்போக்குத் தனமான, பாசிச நோக்குள்ள சித்தரிப்புக்கள் நிறைய உண்டு.. இது ஒரு மறைமுக இந்துத்துவப் பிரதியோ என்று சந்தேகப் படும்படி கூட சில விஷயங்கள் இருக்கின்றன. எனக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை என்றார். தோழர்கள் வட்டத்தில் இப்படித் தான் கருதுகிறார்கள் என்றும் சொன்னார்.

இப்போது பேயறைந்தது போல் ஆனது நான். சு.வெங்கடேசனை நினைத்துப் பாவமாக இருந்தது. விஷ்ணுபுரம் வெளிவந்த காலத்தில், அது ஒரு அப்பட்டமான இந்துத்துவ நாவல் என்று ஜெயமோகனை குற்றம் சாட்டி திண்ணையில் அவர் கடுமையாக எழுதியிருந்தார். அப்போதைய முற்போக்கு முகாம் பிரசாரங்களுடன் கலந்து சேர்ந்திசைக் கூச்சலாக அது ஒலித்தது.

முடிந்தால் அந்த நாவலைப் படிக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டு தோழரிடமிருந்து விடைபெற்றேன். தாதனூர் என்ற மதுரைப் பக்கத்துக்கு சிற்றூர்க் குடிகளை மையமாக வைத்து அந்த வட்டாரத்தின் ஆயிரமாண்டு கால வரலாற்றைப் பேசும் நாவல்.  சாதிய அடுக்குமுறை அதிகாரங்கள், வன்முறையில் தோய்ந்த சமுதாயங்கள் ஆகியவற்றை மையமாக சித்தரிக்கும் நாவலில் மாலிக் காபூரின் இஸ்லாமிய படையெடுப்பு, விஜயநகர மன்னர் மதுரையை மீட்டது,  நாட்டார் தெய்வங்கள், பஞ்ச காலங்களின் மிஷனரிகளின் மதமாற்ற நடவடிக்கைகள் பற்றியெல்லாம் கூட போகிற போக்கில் வருகிறது என்றும் விமர்சனத்தில் படித்திருந்தேன்.

சாரு நிவேதிதா தனது ஒரு நாவலில் (ஜீரோ டிகிரி?) கீதையிலிருந்து ஒன்றிரண்டு மேற்கோள்கள் கொடுத்திருந்தார், அவ்வளவு தான். அந்த ஒரு விஷயத்துக்காக அப்போது முற்போக்கு முகாம்களால் இந்துத்துவ வாதி என்று வசைபாடப் பட்டார் என்பதும் நினைவுக்கு வந்தது. கூடவே, அவர் விஜய் டிவி நீயா நானா விவகாரம் தொடர்பாக சமீபத்தில் எழுதியிருப்பதும்.

இந்துத்துவ முத்திரை என்பது ஒரு சர்வப்ரஹரண ஆயுதம் – எல்லா காலகட்டங்களிலும் வேண்டிய நேரத்தில் பிரயோகிக்க ஏதுவான அஸ்திரம் போலிருக்கிறது. இந்த அஸ்திரத்தால் குத்துப் படாத ஆளே இல்லை, அதை அவ்வப்போது எடுத்துப் பிரயோகிப்பவர்கள் உட்பட!

இந்துத்துவத்தின் இந்த சக்தியை எண்ணி ஒரே நேரத்தில் சந்தோஷமாகவும், பயமாகவும் இருந்தது. ஏதேதோ எண்ணங்கள் அலைக்கழித்தன. சாலையைக் கடக்கையில், கண்ணிழந்தவருக்கு உதவி செய்யும் கார்ப்பரேஷன் பள்ளி மாணவன் ஒருவனைப் பார்த்தேன். பைக்கிலிருந்து கீழே விழுந்துவிட்ட ஒருவரை, உடனடியாக ஓடிப்போய்த் தூக்கி உதவி செய்யும் சகபயணிகளையும் பார்த்துக் கொண்டே வீடுவந்து சேர்ந்தேன்.

மனிதர்களில் யாருமே மோசமானவர்களல்ல. எப்போதும் இல்லையென்றாலும் சில சமயங்களிலாவது போலித்தனமில்லாமல் இயல்பாகவும், உண்மையாகவும், மனிதாபிமானத்துடனும் நடந்து கொள்கிறார்கள். அதனால் தான் இந்த உலகம் அழியாமலிருக்கிறது. உண்டாலம்ம இவ்வுலகம்… தனக்கென முயலா நோன்றாள் பிறர்க்கென முயலுநர் உண்மையானே.

சரி, ஏதாவது படிக்கலாம் என்று பழைய தமிழ்ஹிந்து பக்கங்களில் மேயத் தொடங்கினேன். இந்த கேள்வி பதில் கண்ணில் பட்டது.

06. ஹிந்துத்துவம் என்பது என்ன?
பதில் : “யாரும் ஊரே யாவரும் கேளிர்” என்பதே ஹிந்துத்துவம். “நீ வேறு, உன்னை அழிப்பதே எனது கடவுள் எனக்கு சொல்லிக் கொடுத்தது” என்று சொன்னால் அந்த கூட்டம் ஹிந்துத்துவத்திற்கு எதிரானது. மனிதநேயத்தின் இன்னொரு பெயர் ஹிந்துத்துவம்.

07. ஹிந்து மதம் எப்போது தோன்றியது?
பதில் : எப்போது மனிதன் சிந்திக்கத் துவங்கினானோ அப்போதே.

17. தர்மம் என்பது எது?
பதில் : இயல்பாக இருப்பது தர்மம். இயல்பை மாற்றி ஆசையின், கோபத்தின், மனமாச்சர்யங்களின் உந்துதலால் செய்பவை எல்லாமே அதர்மமாகும்.

28 Replies to “இந்துத்துவ முத்திரை”

  1. திரு ஜடாயு
    நகைச்சுவையோடு ரொம்ப சீரியஸ் விஷயத்தை நன்றாக ச்சொல்லியிருக்கிறீர்கள்.
    “ஒரு பன்னாட்டு மென்பொருள் கம்பெனியில் வேலை செய்கிறார். ஆனால் இது குறித்து தார்மீக சங்கடங்கள், முரண்கள் எதுவும் அவருக்கு இருப்பதாகத் தெரியவில்லை. முன்பொரு முறை இது பற்றி கேள்வி கேட்டபோது,அரசு வேலை செய்தால் தான் தவறு, தான் தனியார் MNC கம்பெனியில் வேலை செய்து அதில் பொருளீட்டி புரட்சிக்கு வலு சேர்ப்பதில் என்ன முரண் இருக்கிறது என்று வாதம் செய்தவர். நல்ல அறிவுஜீவி, சிந்தனையாளர்”
    இந்தப் பத்தியில் கடைசி .வரியில் தோழரை நன்றாகவே காமடி -கீமடி செய்திருக்கிறீர்கள். இம்மாதிரி “புரச்சி” புரட்டுகாரர்களை எழுப்புவது சிரமம் தான்-இவர்கள் தூங்குவது போல நடிக்கும் அறிவுஜீவிகள்.
    ஆனாலும் சிலசமயம் இவர்கள் “தூக்க” உளறலை நிறுத்தவேனும் நாம் பேசித்தீர வேண்டியுள்ளது.
    இவர்கள் எழுத்தை படித்தாலே போதும் -இரண்டு கப் காபி உடனே வேண்டியிருக்கும். கூடவே கொஞ்சம் நல்ல இசை -மண்டை வெடிக்க வைக்கும் சித்தாந்தங்களை கூசாமல் முன் வைப்பார்கள்.
    “எப்படிரா …இப்படி ?” என்று கேட்கவைப்பார்கள்.
    கேட்டால் ” அதெல்லாம் தானா வருதுப்பா”என்பார்கள் போல.
    நம் நாட்டின் சிறு குழந்தைகளின் நிலைமை பரிதாபம். இந்த [காரிய] கிறுக்கர்களின் உளறலை பாடப்புத்தகம் என்ற பெயரில் படித்து வளர வேண்டும்.
    மாவோயிஸ்டுகளை ஆதரிக்கும் வங்காள நடிகை அம்மணி ஒருவரை டிவி யில் பார்த்தேன். அவர்கள் சொல்லும் பூர்ஷ்வா வாழ்க்கையின் இலக்கணமாகத்தோன்றியவர் , புரட்சி பிலாக்கணம் பாடினார்.
    இது காமடியாக அந்த டிவி பேட்டிகாரருக்கும் தோன்றவில்லை-
    [ அவரும் அதே தோழர் பள்ளி ] பார்க்கும் பலருக்கும் தெரியவில்லை.
    அன்புடன்
    சரவணன்

  2. Jayayu has once again established his vast knowledge on history and modern Tamil literature. People like this are the real assets of Hindutva campaign. Thanks for this excellent piece !

  3. ஆறு மாதம் விவசாயம் ஆறு மாதம் கோயில் கட்டும் வேலை இப்படித்தான் தஞ்சாவூர் மண்டலமெங்கும் அந்தக் காலங்களில் நடந்துள்ளதாக விவரமறிந்தவர்கள் கூறுகிறார்கள்.

    அந்தக் கோயிலில் வேலை செய்த தச்சர்கள், அர்ச்சகர், நிர்வாக அதிகாரி, ஏன், கல்வெட்டுக்கள் பொறித்த தொழிலாளிகளின் பெயர் உட்பட எல்லத் தொழிலாளிகளின் பெயரையும் எழுதி வைத்த ராஜராஜன் அங்கே தனக்கொரு பெரும் சிலை வைத்துக்கொள்ளவில்லை;

    மாறாக, பிற்காலத்தில் இக்கோயிலைத் திருப்பணி செய்து புதுப்பிப்வர்களின் பாதம் பணிகிறேன் என்று பொறித்து வைத்துள்ளான்.

    அந்தக் கோயிலின் பணியாளர்களுக்கு(சுமார் 1500) முடி திருத்துவதற்க்காக நாவிதரையும் நியமித்து மானியங்கள் அளித்து, தன் பெயரையே அவருக்கு பட்டமாக்கி “ராஜராஜப் பெரும் நாவிதர்” என்று அழைக்கும்படி செய்துள்ளான்.

    “ராஜராஜீச்வரம்” பேசப் பேச விரியும் அற்புதம்.

    சமீபத்தில் வெளியான, குடவாயில் பாலசுப்ரமணியம் அவர்களின் “ராஜ்ராஜீச்வரம்” நூல் நம் எல்லோர் வீட்டிலும் இருக்கவேண்டிய ஒன்று.
    – கண்ணன்.

  4. Dr.குடவாயில் பாலசுப்ரமணியன்,
    6, நிர்மலா நகர், தஞ்சவூர்-613 007.

  5. ஜடாயு அவர்களின் கட்டுரைகள் சிந்திக்கத்தூண்டுவனவாயிருக்கின்றன. இந்த வகையிலேயே இக்கட்டுரையையும் நோக்க முடிகின்றது. எல்லோரும் சிந்திக்கின்ற நிலையிலிருந்து வேறுபட்டு தனித்துவமாக தன் எழுத்துக்களைப் பேணுவதில் ஜடாயு அவர்கள் வல்லவராயிருக்கிறார். நகைச்சுவை கலந்த தங்கள் பாணி தங்கள் கருத்தை ஏற்றுக் கொள்ளாதவர்களையும் ஒரு கணம் இப்படியும் இருக்கலாமோ? என்று கருதச் செய்யும்.

    போர்த்துக்கேய ஒல்லாந்த ஆங்கிலேய கிறிஸ்தவ மதவாதிகளின் பூரண கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசங்களில் சென்று பாருங்கள்…. பழைய தலங்களையும் புராதன சின்னங்களையும் பண்பாட்டையும் கலைகளையும் துடைத்தழித்திருக்கும் கொடுமையைக் காணலாம்…. இந்துத்துவம் அப்படியல்ல… இது மேன்மேலும் விளக்கப்பட வேண்டிய விஷயம்…. அற்புதமான கட்டுரை நன்றி….

  6. // ஹிந்து மதம் எப்போது தோன்றியது?
    பதில் : எப்போது மனிதன் சிந்திக்கத் துவங்கினானோ அப்போதே.//

    எல்லோரயும் சிந்திக்க வைப்போம்.
    பிரத்யூஷ் ராமகிருஷ்ணன்.

  7. அன்புள்ள சரவணன், நன்றி.

    // நல்ல அறிவுஜீவி, சிந்தனையாளர்” –
    இந்தப் பத்தியில் கடைசி .வரியில் தோழரை நன்றாகவே காமடி -கீமடி செய்திருக்கிறீர்கள். //

    ஆமாம், ஆனால் இவர்கள் “புரட்சி” இந்த தேசத்திற்கே பெரிய டிராஜிடி. கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் மாவோயிஸ்டு வன்முறை பத்தாயிரம் ஏதுமறியாத இந்தியக் குடிமக்களைக் கொன்று குவித்துள்ளது என்று ஒரு கட்டுரையில் படித்தேன்.

    சத்தீஸ்கர் காடுகளில் மட்டும் இந்த வெறித்தனமான மனித-விரோத வன்முறையின் வேர்கள் வளரவில்லை.. பெங்களூர் போன்ற இந்தியாவின் வளரும் நகரங்களிலும் இந்த ரத்தக்களறிகளை தங்கள் வாதங்களால் ஜோடனை செய்யும் அறிவுலக கிரிமினல்கள் இருக்கீறார்கள். அவர்களையும் சட்டம் கொடூரமாக ஒடுக்க வேண்டும்.

  8. ராஜா, மயூரகிரி ஐயா – தங்கள் பாராட்டுதல்களுக்கு நன்றி.

    கண்ணன், புத்தகம் பற்றிய விவரத்திற்கு நன்றி. இதை எந்தப் பதிப்பகம் வெளியிட்டுள்ளது? ஆசிரியரிடமிருந்து நேரடியாகத் தான் வாங்க வேண்டுமா? ஆன்லைனில் கிடைக்குமா?

  9. //
    இந்து யெனகே கோவிந்தா
    இந்து என்றால் கோவிந்தாவா ?:) என்று ஸ்மைலியுடன் வந்த இன்னொரு நண்பரின் பதிலைப் பார்த்து குபீரென்று சிரித்து விட்டேன்
    //

    இது எந்த கோணத்தில் பார்த்தாலும் இன்று உண்மை தான்

    ஹிந்து மதம் எப்போது தோன்றியது?
    பதில் : எப்போது மனிதன் சிந்திக்கத் துவங்கினானோ அப்போதே.

    அப்போ ஜீவனுள்ள கிறிஸ்தவம்?
    பதில் : மனிதன் சற்றே தூங்கினப்போ தோன்றியது

    அப்போ இனிய மார்கமான இஸ்லாம்?
    பதில்: ஹ்ம்ம் கடவுள் லைட்டா கண் அயர்ந்தப்போ தோன்றியது

    நாம முழிச்சிக்கிட்டு கடவுளை துயில் எழுப்பினால் தான் ஏதாவது நல்லது நடக்க வாய்பிருக்கு

  10. I have more than one occasion responded saying that “Tamil Hindu” should branch out in other languages suitably adapting/adopting to spread the essence of Hinduism according to the different culture of various linguistic interests as such a vast treasure of knowledge should benefit the whole country.

    Undoubtedly “Tamil Hindu” is a great boon to the Hindus particularly Tamils who constantly need to be reminded of their great past.

    A great service, indeed.

    Pranams to all.

    S.R.Kupuuswamy(82+)

  11. I saw the website voiceofdharma.com (https://www.voiceofdharma.com/books.html). They have a good list of Hindutva books readable for free.

    I wish TamilHindu also dedicates a section with list of books with hindu renaissance literature even if its not freely readable; which would direct interested book readers to the relevant books easily.

  12. அவர் வேலை செய்யும் கட்டடத்தை அவங்களே கட்டிகிட்டாங்களாமா? அங்கே கடை நிலை பணியாளர்கள் யாரும் இல்லையாமா? அலுவலக கழிப்பறைகளை மேல் நிலை பணியாளர்களே கழுவிக் கொள்ளுகிறார்களாமா ?

  13. // இயல்பாக இருப்பது தர்மம். இயல்பை மாற்றி ஆசையின், கோபத்தின், மனமாச்சர்யங்களின் உந்துதலால் செய்பவை எல்லாமே அதர்மமாகும்//
    கீதையில் மனத்தைக் கட்டுப்படுத்த பல உபதேசங்களை கூறியுள்ள நிலையில், இயல்பாக எனக்குவரும் கோபம் மற்றும் பல உணர்ச்சிகளை கட்டுப் படுத்தாமல் இயல்பாக விட முடியாதே!
    இவை முரணாக இருப்பதாக எனக்குப் படுகிறது. இந்த வரிகளில் முடிந்தால் யாரேனும் விளக்கம் கொடுங்களேன்.

    நன்றி

  14. // raja raman
    14 July 2010 at 2:01 am
    கீதையில் மனத்தைக் கட்டுப்படுத்த பல உபதேசங்களை கூறியுள்ள நிலையில், இயல்பாக எனக்குவரும் கோபம் மற்றும் பல உணர்ச்சிகளை கட்டுப் படுத்தாமல் இயல்பாக விட முடியாதே!
    இவை முரணாக இருப்பதாக எனக்குப் படுகிறது. இந்த வரிகளில் முடிந்தால் யாரேனும் விளக்கம் கொடுங்களேன்.//

    அன்புள்ள ராஜாராமன்,

    இந்தக் கேள்வி பதில் ரத்தினச் சுருக்கமாக உள்ளது (வார இதழ் ஸ்டைல்!). ஆனால் இதற்கு வேதாந்த தத்துவ அடிப்படையில் விரிவான, ஆழமான விளக்கம் அளிக்க முடியும்.

    வேதாந்தத்தின் படி. ஒவ்வொரு உயிரின் உண்மையான இயல்புகள் ஆத்மாவின் இயல்புகளே – உடல்,மனம், புத்தி ஆகியவையுடையவை அல்ல. ஆத்ம ஸ்வரூபம் தன் இயல்பில் எந்தக் களங்கமும், விகாரங்களும் அற்றது. நன்மை-தீமை, பாப-புண்ணியம் போன்ற இருமைகள் இல்லாதது. அவித்யை (ஆன்மிக அறியாமை) இந்த சுய உருவை (ஸ்வ-ரூபம்) மறைப்பதால் காமம், குரோதம் போன்ற திரிபுகள் (விகாரங்கள்) வருகின்றன – இவை விகாரங்களே, இயல்புகள் அல்ல என்று வேதாந்தம் கருதுகிறது.. அவித்யை அகன்று தன் சுய உருவை உணர்வதே ஆத்ம ஞானம்.

    கீதையில் காமகுரோதம் பற்றிப் பேசும்போது மூன்று உவமைகள் வரும். அவற்றின் ஆழமான பொருளை சிந்தித்து உணர வேண்டும்..

    தீயை புகை சூழ்வது போன்றும், கண்ணாடியில் அழுக்குப் படிவது போன்றும், கருவை (embryo) கருப்பை (womb) மூடியுள்ளது போன்றும் காமமும், குரோதமும் மனித அகத்தை மூடியுள்ளன என்று கீதை சொல்கிறது.

    புகை, தீயுடனேயே இயற்கையாகக் கூடிப் பிறப்பது.. அழுக்கு வெளியிலிருந்து கண்ணாடியில் வந்து ஒட்டுவது. கருப்பை கர்ப்பம் தானாகவே தன்னைச் சுற்றி உருவாக்கிக் கொள்வது… மனித அகத்தில் காம, குரோதங்களும் இந்த மூன்று அடுக்குகளாகப் படிகின்றன.

    தீயை ஊதி சுடர்விட்டு எரியச் செய்தாலே, புகை மறையும். துடைத்தால் கண்ணாடியில் அழுக்குப் போகும். கருப்பையில் கரு நகரமுடியாது மூடப் பட்டிருக்கும் – அது வளர்ந்தபின்பு தான் வெளியேவர முடியும்.

    கீதையின் ஒவ்வொரு சொல்லும், சொல்லடுக்கும் கூட நுண்ணிய தத்துவங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. ஆழ்ந்து கற்போர்க்கு அது புலப்படும்.

    என்னால் இயன்றவரை விளக்கியிருக்கிறேன் என்று நினைக்கிறேன்.

  15. // நாம முழிச்சிக்கிட்டு கடவுளை துயில் எழுப்பினால் தான் ஏதாவது நல்லது நடக்க வாய்பிருக்கு //

    அதுக்காகத் தான் தினமும் சுப்ரபாதம் பாடுகிறார்களோ?? 🙂

    அட்டகாசமான கட்டுரை ஜடாயு, மிக்க நன்றி.

  16. அவர் அவர் ஸ்வ தர்மத்தின் படி இயல்பாக இருக்க வேண்டும் அது தான் தர்மம்

    சரி கொஞ்சம் வேதாந்தத்தை விடுவோம் 🙂

    கோவம் வருது இயல்பு இல்ல தான் ஆனால் நம்மள மாதிரி ஒரு சாதாரண நிலையில் இருப்பவருக்கு கோவம் வந்தா – அமாம் வந்தது இனி வராமல் பார்த்துக்கணும் என்று இயல்பா இருப்பது நல்லது – கோபத்தை அடக்கிக்கொண்டு நான் கோவாமே படலையே என்று உதார் விடுவது தான் அதர்ம நிலை

    even the smallest thing that leads to some form of hypocrisy (either blatant or at a conscience level) is deemed adharmic

  17. //என்னால் இயன்றவரை விளக்கியிருக்கிறேன் என்று நினைக்கிறேன்//
    உங்கள் விளக்கம் கிடைக்கப் பட்டதற்கு நன்றிகள்

    ஆனால் இன்னும் எனக்கு தெளிவு பெற கேள்வியை இப்படிக் கேட்கிறேன்.
    “survival of the fittest” படி ஒரு ஒருவர் என்னைக் கொள்ள வந்தால் நான் திரும்ப வன்முறையை[குரோதம்] எடுப்பது இயற்கை. சந்ததியினரை விருத்தி செய்ய காமத்தை எடுப்பதும் இயற்கை. ஒரு விஷயத்தில் கவனம் வேண்டுமென்றால் அதில் முழு ஈடுபாடு வைத்து ஆசைப் பட்டால் தான் அந்த செயல் முழுமையடையும். இவையனைத்தும் இயற்கைதான் இவற்றை கட்டுக்குள் வைக்க வேண்டாமா? அல்லது இவை அனைத்தும் இயல்புதான் என வளர்த்துக் கொள்ளலாமா? காரணம் ஆசை என்பது இயல்பு இல்லை என்றால் வாழ்க்கை சாதாரண மனிதனுக்கு புளித்துவிடுமே! அதனால் தானே வள்ளுவரும் ஐம் பொறியை அடக்கச் சொல்கிறார் இயல்பாக இரு என்று சொல்லவில்லை என நினைக்கிறேன். அது போல காமம் என்பது இயல்பு இல்லை என்றால் மனிதக் குலம் தலைத்திருக்காதே!

    என்னால் எது இயல்பு? எது இயல்பு இல்லை என இந்த முன்று விஷயத்தில் குழம்புகிறேன். விடை கிடைக்கப் பட்டால் இன்னும் மகிழ்வேன்.
    நன்றி

  18. // அது போல காமம் என்பது இயல்பு இல்லை என்றால் மனிதக் குலம் தலைத்திருக்காதே! என்னால் எது இயல்பு? எது இயல்பு இல்லை என இந்த முன்று விஷயத்தில் குழம்புகிறேன். விடை கிடைக்கப் பட்டால் இன்னும் மகிழ்வேன். //

    மனதின் முதல் விதையாக காமம் தோன்றியது (காமஸ் தத் அக்ரே ஸமவர்த்ததாதி, மனஸோ ரேத: ப்ரதமாம் யதாஸீத்) என்று ரிக்வேத சிருஷ்டி கீதம் கூறுகிறது. வாழ்வின் மீதுள்ள ஆசையே உயிரை பரிணாமம் அடையத் தூண்டியது என்ற அறிவியல் கருத்துடன் இது ஒத்துப் போகிறது.

    தர்மாவிருத்தோ பூதேஷு காமோஸ்மி பரதர்ஷப (உயிர்களில் தர்மத்திற்கு விரோதமில்லாத காமமாக நான் இருக்கிறேன்) என்று பகவான் கூறுகிறார்.

    இங்கு காமம் என்பது வாழ்வாசை / உயிர்த்துடிப்பு என்ற அர்த்தத்தில் பயன்படுத்தப் படுகிறது. இது உயிரின் இயல்பான நிலையே.

    முன்பு சொன்ன கீதை உதாரணங்களை முழு contextல் புரிந்து கொள்ள அதற்கு முன்பு உள்ள சுலோகங்களையும் பார்க்க வேண்டும் (கீதையை உதிரியாக மேற்கோள் காட்டுவதில் உள்ள பிரசினை இது)

    காம ஏஷ க்ரோத ஏஷ ரஜோகுண ஸமுத்பவ:
    மஹாசனோ மஹாபாப்மா வித்யேனம் இஹ வைரிணம்

    இந்த காமம் இந்த குரோதம் ரஜோகுணத்தில் உதிப்பது. பெரும்தீனியாக எல்லாவற்றையும் உட்கொள்வது, பெரும் பாவத்தில் தூண்டுவது. இதனை எதிரியாக அறிவாய்.

    இங்கு சொல்லப் பட்ட காமம் என்பது வாழ்வாசையை அல்ல, lust என்று சொல்லப் பட்ட விஷயத்தைக் குறித்தது.

  19. மதிப்பிற்குரிய ஜடாயு அவர்களுக்கு,

    அருமையான கட்டுரை. நமது தர்மத்தைப்பற்றி முதலில் போதிக்க வேண்டியது அறியாமையில் உழன்று கொண்டிருக்கும் நமது மக்களுக்கே. உங்கள் எழுத்தின் வீச்சு புரிகிறது. நிறைய எழுதுங்கள்.

  20. நண்பர் ராஜாராமன்,

    இது நாம் அனைவரும் குழும்பு ஒரு விஷயம் தான் – பதில் சொல்வது எளிதாக இருந்தாலும் நடைமுறை படுத்துவது ரொம்ப கஸ்டமா இருக்குதே 🙂

    //ஆனால் இன்னும் எனக்கு தெளிவு பெற கேள்வியை இப்படிக் கேட்கிறேன்.
    “survival of the fittest” படி ஒரு ஒருவர் என்னைக் கொள்ள வந்தால் நான் திரும்ப வன்முறையை[குரோதம்] எடுப்பது இயற்கை.
    //

    இதை தான் கிருஷ்ணரும் அர்ஜுனனை செய்ய சொல்கிறார் – திருப்பாவையில் ஒரு பாசுர வரி – சினத்தினால் தென் இலங்கை கோமானை செற்ற மனத்துகிநியானை பாடவும் நீ வாய் திறவாய்
    – கோவத்தால் ராவணனை கொன்ற ராமனை மனதிற்கு இனியவன் என்று தான் சொல்கிறார் ஆண்டாள் – உங்க கேள்வியிலேயே தெளிவு இருக்கிறது, பதில் இருக்கிறது – உங்களை ஒருவன் கொள்ள வந்தால், உங்களுக்கு கெட செய்ய ஒரொருவன் நினைத்தால் உங்களை தற்காத்துக் கொள்வது தான் இயல்பாய் இருப்பது

    //சந்ததியினரை விருத்தி செய்ய காமத்தை எடுப்பதும் இயற்கை.//

    இல்லறம் ஓங்கி அனைத்து தர்மத்தினரும் பயன் பெற சந்ததியை வ்ருத்தி செய்ய வேண்டும் – இதற்க்கு பெயர் காமமா? – ராமருக்க் இரண்டு பிள்ளைகள் – வசிஷ்டருக்கு, பராசரருக்கு, யாஞவல்கருக்கு எல்லோருக்கும் பிள்ளைகள் இருந்தனர்

    பாண்டு, திருதிராஷ்ட்ரர், விதுரர் இவர்களுக்கு உண்மையான தந்தை வியாசரே

    நீங்கள் எந்த காரணத்திற்காக காரியம் செய்கிறீர்களோ அதனை பொறுத்தே அது காமமா இல்லையா என்று நிர்ணயம் ஆகிறது – இதற்கும் பதில் நீங்களே வைத்துள்ளீர்களே

    சுத்தமாக காம வயப்படாமல் இருப்பது யோகிகளுக்கே அழகு

    //
    ஒரு விஷயத்தில் கவனம் வேண்டுமென்றால் அதில் முழு ஈடுபாடு வைத்து ஆசைப் பட்டால் தான் அந்த செயல் முழுமையடையும். இவையனைத்தும் இயற்கைதான் இவற்றை கட்டுக்குள் வைக்க வேண்டாமா
    //

    கவனத்திற்கும் ஆசைக்கும் நிச்சயாமாக வித்யாசம் உண்டு – ஒரு காரியம் நல்ல முறையில் முடிய வேண்டும்,காரியம் வெற்றி அடைய வேண்டும் என்று காரியத்தை கருத்தில் கொண்டு செய்வது சரி – அதில் வரும் சொந்த லாபத்தில் ஆசை விபத்து தான் சரி இல்லை (செய்தால் கர்ம பலனை கொடுக்கும்)

    அப்படி பார்த்தல் கிருஷ்ணரும் நான் எப்போதும் காரியம் செய்து கொண்டே இருக்கிறேன் என்கிறார் – அவருக்கு என்ன ஆசையா இருக்கிறது.

    இதை விளக்க – யாக்யவல்கர் ஜனகரின் சபைக்கு சென்று ஒரு வாதில் வேல்கிரிறார் – அதன் பின்னர் ஜனகருக்கு பிரம்மத்தை பற்றி சூக்ஷமமான அறிவு தர எண்ணி அவரிடம் சென்று பல ரஹச்யங்களை சொல்கிறார் – இதற்க்கு பரிசாக ஜனகர் பெரும் பொருள் தருகிறார் – அதை யாக்யவல்கர் மறுக்காமல் ஏற்று கொள்கிறார் – இங்கு விஷயம் என்ன என்றால், யாக்யவல்கர் குறிக்கோள் ஜனகருக்கு சில நுட்பமான ரகசியங்களை சொல்வதே பணம் பெறுவது alla, அறிவை கொடுத்தார் அதற்காக ஜனகர் கொடுத்த பரிசையும் வெறுப்பு இன்றி ஏற்று கொண்டார் – இதுவே இயல்பாக இருப்பது – inge கவினிக்க வேண்டியது யாக்யவல்கர் அவர் மேற்கொண்ட காரியத்தை சரியாக செய்து முடித்தார் அவரது இலக்கை அடைந்தார், அதை ஆசை இன்றி அடைந்தார் – இதுவே கீதை சொல்லும் நிஷ்கர்ம யோகம்

    பலனை அனுபவிப்பதில் குறி வைக்காமல் இருப்பதே இயல்பாய் இருப்பது – பலன் என்னவோ அந்த இலக்கை அடைய முழு ஈடுபாட்டுடன் செயல் படுவது இயல்பாய் இருப்பது

  21. மதிப்பிற்குரிய அய்யா ஜடாயு அவர்களுக்கு
    தங்களின் ஞானத்தை நினைத்து பார்த்தால் பிரமிப்பாக இருக்கிறது . தங்களுக்கு ௩௫ வயது தான் என்று தங்களுடைய ஒரு கட்டுரையில் படித்திருக்கிறேன் . இந்த சிறு வயதில் அபூர்வ ஞானம் தங்களுக்கு . தங்களை துதி பாடுவதாக எண்ண வேண்டாம். தங்களை ஊக்குவிப்பதின் மூலம் மேலும் பல அரிய தகவல்களை தங்களிடமிருந்து பெற வேண்டும் என்பதே என் நோக்கம் . தங்கள் கட்டுரை படித்தேன் . மிக தெளிவாகவும் அதே நேரம் நகைசுவயகவும் இருந்தது . சிலர் ஹிந்துக்களை எதிர்ப்பதன் மூலம் தங்களை ஞானிகளாக காட்டிகொள்கின்றனர். அவர்களை பற்றி பேசி தங்களுடைய பொன்னான நேரத்தை வீணாக வேண்டாம் என்பது என் தாழ்மையான கருத்து. மேலும் சிறு விண்ணப்பம் . பல ஹிந்து புனித ஸ்தலங்களின் கட்டுரைகள் இந்த
    தளத்தில் வந்தால் என் போன்ற வயதினருக்கு மிகவும் பேருதவியாக இருக்கும் ஆவன செய்ய வேண்டுகிறேன். மறுமொழி தந்த அனைவருக்கும் நன்றி . தொடரட்டும் தங்கள் நற்பணி . நாதன் தாழ் வாழ்க .
    பணிவன்புடன் சிவா

  22. Dear Sir
    Iam so much Impressed on this site
    slowly I will also share my views with all
    Thanks
    Kannan

  23. அன்புள்ள ஜெயக்குமார், சிவா – உங்கள் உற்சாக வார்த்தைகளுக்கு மிக்க நன்றி.

  24. நண்பருக்கு வணக்கம் ,
    கீதையில் வரும் காமம் என்ற வார்த்தைக்கு ஆசை(desire) என்று பொருள் .
    ஆசையை விடுதல் என்பது அதன் மீதான பற்றினை விடுதல் . இங்கு ஆசையை அடைந்த பின்பு வரும் துன்ப மற்றும் இன்பங்களை சமமாக பாவிக்கணும்.
    இந்த சம நிலையை தான் கீதையில் கிருஷ்ணர் கூறுகிறார் .

    இதை பற்றி மேலும் அறிய நல்ல சாஸ்திர அறிவுள்ள குருவை தேர்ந்தெடுத்து குருவின் மூலம் அறிந்து கொள்ள முயலுங்கள்

    ஹரி ஓம் .

  25. நல்லதொரு கட்டுரை. முன்பே ஒருமுறை இதை வாசித்திருக்கிறேன்; மறுமொழியிடவில்லை. இன்று மீண்டும் வாசித்தேன். மனம் மகிழ்கிறது. இன்னும் நிறைய எழுதுங்கள்.

    ‘காமாலைக் கண்ணனுக்குக் காண்பதெல்லாம் மஞ்சள்’ என்பதுபோல், ‘ஹிந்து’ என்கிற சொல்லின்மேல் இனம்புரியாத, பொருள் தெரியாத கோபம் கொண்டிருக்கும் ஒருவரைச் சந்தித்திருப்பதுபோல் கட்டுரையில் காட்டி, அதன் மூலம், இன்றைய பல ஹிந்துக்களின் உண்மை உள்ளத்தைப் படம் பிடித்திருக்கிறீர்கள்.

    ‘ஹிந்து’ என்னும் சொல்லாட்சிக்கு ஸ்வாமி விவேகானந்தர் தந்திருக்கும் நூற்றுக் கணக்கான விளக்கங்களை இவர்களைப் படித்துத் தெரிந்து கொள்ளச் சொல்லுங்கள். இவர்களின் குழப்பங்கள் குறையும்.

  26. ஹிந்துத்துவம் என்பது என்ன?
    பதில் : “யாரும் ஊரே யாவரும் கேளிர்” என்பதே ஹிந்துத்துவம்.

    இங்கு யாரும் என்பது சரியன்று யாதும் என்பதே சரி.
    ஹிந்துத்துவம் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பரந்த சிந்தனை என்பதில் மாற்றுக்கருத்தில்லை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *