2005ம் ஆண்டிலிருந்து அமெரிக்காவின் அமைதிக்கான நிதி ( Fund for Peace) என்ற சிந்தனையாளர்கள் குழுவும், வெளிநாட்டுக்கொள்கை ( Foreign Policy) என்ற பத்திரிக்கையும் இனைந்து ஒவ்வொரு ஆண்டும் தோற்றுப்போன நாடுகளின் பட்டியலை வெளியிருகின்றன. இவை ஐக்கிய நாடுகள் சபையில் அங்கத்தினராக உள்ள நாடுகளை மட்டுமே பட்டியலிடுகின்றன. உலகின் பல பகுதிகள் ’நாடு’களாக இதர நாட்டினால் அங்கீகரிக்கப்பட்டிருப்பினும், உலக நாடுகளின் சட்டத்திட்டங்களின்படி நாடுகளாக ஐக்கிய நாடுகள் சபையினரால் அங்கீகரிக்கப்படாததினால் விடுபட்டுள்ளன. உதாரனமாக, தைவான், பாலஸ்தீனப்பகுதிகள், வடக்கு சைப்ரஸ், மேற்கு சஹாரா மற்றும் கொசாவா ஆகிய பகுதிகளைச் சொல்லலாம்.
View More தோற்றுப்போன நாடுகள்?Month: July 2010
தி கராத்தே கிட் (The Karate Kid) – திரை விமர்சனம்
1984 -ல் வெளியாகி பெருவெற்றியடைந்த ‘ தி கராத்தே கிட்’ திரைப் படத்தின்…
View More தி கராத்தே கிட் (The Karate Kid) – திரை விமர்சனம்சிவகங்கைச் சீமையின் வீரமங்கையர்
இந்தச் சூழ்நிலையில் காளையார் கோவில் கோட்டையோ போருக்கு ஆயத்தமாகத் தொடங்கியது. படைவீரர்கள் களைப்பைக் களைந்துவிட்டு அன்று அதிகாலை வேளையில் வேலுநாச்சியாரின் அவசர அழைப்புக் கேட்டு முக்கிய தளபதிகள் அனைவரும் கொலுமண்டபம் விரைந்தனர். அங்கே ராணி வேலுநாச்சியார், அவர்களுக்கு முன்னதாக வந்து காத்திருந்தார். தளபதிகளைக் கண்டதும் ராணி… இதில் நாம் தோல்வி அடைந்தால் இனி எத்தனை ஜென்மம் எடுத்தாலும் வெற்றி பெற முடியாது. நான் வெற்றிக்கு வழிகாட்ட ஒளியூட்டப் போகிறேன். என்னைத் தடுக்காதே,” என்று கூறியபடியே உடல் முழுவது நெய்யில் குளித்தபடி கோயிலில் இருந்த பந்தத்தோடு…
View More சிவகங்கைச் சீமையின் வீரமங்கையர்திருவாசகத் தேன் தந்த பெருவள்ளல்
“பிட்டு நேர்பட மண்சுமந்த பெருந்துறைப் பித்தனே” என்று உரிமையோடு தனக்காக அருளிய பெருமையை திருவாசகத்தில் பதிவு செய்கிறார்.. திருவாசக ஏடுகளை கொண்டு சென்று பிரம்மனுக்கும் மஹாவிஷ்ணுவிற்கும் தேவர்களுக்கும் ‘நம் அடியவன் எழுதிய இந்தத் தேன்தமிழைப் பாருங்கள் பருகுங்கள்’ என்று… மாணிக்கவாசகப் பெருமானுக்கு இன்றைக்கும் இலங்கையில் மிகுந்த சிறப்பிடம் செய்யப்பட்டு வருகின்றது. உபசாரங்கள் யாவற்றையும் மாணிக்க வாசகருக்கே வழங்கி நிறைவில் திருக்குளத்தில் மாணிக்கவாசகரின் திருவுருவத்தையே திருநீராட்டும் வழக்கமும்..
View More திருவாசகத் தேன் தந்த பெருவள்ளல்ஆரம்பகாலத் தமிழ் கல்வெட்டுகள் குறித்த தீவிர ஆய்வுகள்
உலகத்தமிழ் மாநாடு சென்னையில் நடந்தது, தமிழ் அறிஞர்களின் நிகழ்வாக இல்லாது, ஓர் அரசியல் மாநாட்டு ஆரவாரத்தோடும் திருவிழா கோலாகலத்தோடும் நடத்தப்பட்டது. ஐராவதம் மகாதேவன் அளித்த ஆராய்ச்சிக் கட்டுரை, தமிழர் பழம்பெருமைக்கு அணிகலனாக இல்லாது போன காரணத்தால், கடும் கண்டனங்களுக்கு உள்ளாகி,…… தமிழ்நாடு சிற்றரசுகளால் ஆளப்பட்டாலும், அவர்கள் சுதந்திர அரசுகளாக இருந்தனர். பலமான பரந்த நிர்வாகக் கட்டமைப்புகள் இருந்தன. தமிழ் அரசு மொழியாக, மக்கள் மொழியாக, இலக்கிய மொழியாக, சமூகம் சகல மட்டங்களிலும் கல்விப் பெருக்கம் கொண்டதாக இருந்த காரணங்களால், தமிழ்நாட்டுக்கு ப்ராகிருத மேலாண்மையின் தேவை இருக்கவில்லை. இவை அரசியல் மேடைப்பேச்சுக்களில் வெற்றுப் பெருமையின் முரசொலி அல்ல. கி.மு.இரண்டாம் நூற்றாண்டிலிருந்து கி.பி.ஆறாம் நூற்றாண்டு வரையான தமிழ்-ப்ராஹ்மி கல்வெட்டுகள் தரும் சாட்சியம்….
View More ஆரம்பகாலத் தமிழ் கல்வெட்டுகள் குறித்த தீவிர ஆய்வுகள்சென்னையில் தெருக்கோயில்கள் இடிப்பை எதிர்த்து 14-ஜூலை அன்று கண்டன ஆர்ப்பாட்டம்
அடித்தட்டு மக்கள், வாழ்க்கையில் முன்னேற கிராமங்களின் வாழ்வாதாரங்கள் நசித்த நிலையில் அகதிகளாகவே சென்னை போன்ற நகரங்களுக்கு புலம் பெயர்ந்திருக்கும் மக்கள் – இவர்களின் உணர்வுகளையும், நம்பிக்கைகளையும் புல்டோசரால் இடித்து காயப்படுத்தி அதில் திராவிட பாசிஸ்டுகளுக்கே உரிய விதத்தில் குரூர ருசி காண்பது போன்று அரசுத் துறையினரின் செயல்பாடுகள் இருக்கின்றன.. நாகாத்தம்மன், கங்கையம்மன், முத்தாரம்மன், மாரியம்மன், அங்காளம்மன் என்று பற்பல திருப்பெயர்களில் மக்கள் அடர்த்தியாக வாழும் பகுதிகளில்…
View More சென்னையில் தெருக்கோயில்கள் இடிப்பை எதிர்த்து 14-ஜூலை அன்று கண்டன ஆர்ப்பாட்டம்அழைத்து அருள் தரும் தேவி
சன்னதியில் தேவி மூன்று பிண்டிகளாக (சுயம்பு ரூபங்களாக) தன்னை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறாள். சிலைகளோ அல்லது மூர்த்திகளோ கிடையாது…“கவலைப்படாதே! அந்த நொடியில் அருள் பாலிக்கத்தான் தேவி உன்னை அழைத்திருக்கிறாள்” என்று ஆங்கிலத்தில் யாரோ யாருக்கோ சொல்வது நம் காதில் விழுகிறது… நுழை வாயிலில் அடுக்கிய மணல் மூட்டைகளுக்கிடையே ஒளிந்திருக்கும் தூப்பாக்கிகளும் அதன் பின்னேயிருக்கும் மிடுக்கான ராணுவவீரர்களும் அந்த ரம்மியமான சூழலுக்கு சற்றும் பொருந்தாமல் இருந்தாலும்…
View More அழைத்து அருள் தரும் தேவிஇந்துத்துவ முத்திரை
‘உழைக்கும் மக்களை அடிமைப் படுத்தி, அவர்கள் முதுகெலும்பை உடைத்து, அதன்மீது அவன் கட்டியவை இந்தக் கோயில் கோபுரங்கள்’… சாரு நிவேதிதா அப்போது முற்போக்கு முகாம்களால் இந்துத்துவ வாதி என்று வசைபாடப் பட்டார். காந்தி முதல் கண்ணதாசன் வரை எல்லாரும் கீதையைப் பற்றி எழுதியிருக்காங்களே? அவங்க எல்லாம் பார்ப்பனீயத்தின் பாதுகை தாங்கிகள்.. இந்துத்துவ முத்திரை என்பது ஒரு சர்வப்ரஹரண ஆயுதம் – இந்த அஸ்திரத்தால் குத்துப் படாத ஆளே இல்லை, அதை அவ்வப்போது எடுத்துப் பிரயோகிப்பவர்கள் உட்பட!
View More இந்துத்துவ முத்திரைதலபுராணம் என்னும் கருவூலம் – 2
இந்தப் பாடலில் ஏனையோர் கூறுமாறு பிராமணர் முதலியோர் முகம் முதலிய உறுப்புகளில் தோன்றியதாகக் கூறிய சுவாமிகள், நான்காம் வருணத்தவரை, “முகம், தோள், தொடை ஆகிய உறுப்புகளையெல்லாம் தாங்கி நிற்கும் சரணம் என்று உரைக்கும் உறுப்பினில்” தோன்றியவர்கள் எனக் கூறுகின்றார். சரணம் என்பதற்குக் கால் என்ற பொருளோடு, புகலிடம் என்பதும் பொருள். ஏனைய மூவருக்கும் புகலிடமாக இருப்பவர் நான்காமவர் என்றும், தம் உழவுத் தொழிலின் மேன்மையால் மூவரையும் நிலைபெறத் தாங்கும் வேளாளர் என்னும் பெயரைத் தமக்கே உரியவர்கள் என்றும் விளக்கினார். வேளாளர் என்பதற்கு பிறருக்கு உபகாரியாம் தன்மை உடையவர் என்று பரிமேலழகர் பொருள் உரைப்பார்….
View More தலபுராணம் என்னும் கருவூலம் – 2சுய அறிதலும் வரலாற்று அறிதலும்
புனிதமற்ற வாழ்க்கைதான் மானுடருக்கு லபித்திருக்கிறது. புனிதம் என்பதே ஒரு ஆதர்சம். இல்லாதது என்பதால்தான் அத்தனை கவர்ச்சியாக அது தெரிகிறது…நம் தனிவாழ்வின் வரலாற்றுச் சிறையில் இருந்தே நாம் ஒவ்வொருவரும் உலகை நோக்குகிறோம் என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும்… சமத்துவம் என்ற பெயரில் நிறையப் புரட்டு வேலைகள் செய்து பதவிக்கு வந்து வேறொரு அடுக்கு முறையை மக்கள் மீது திணித்த பல சர்வாதிகாரிகளை நாம் மார்க்சியம், நாசியிசம், ஃபாசிஸம், கிருஸ்தவம், இஸ்லாம் என்ற செமித்தியச் சிந்தனையின் பல வடிவங்களில் உலகில் பார்க்கிறோம்…
View More சுய அறிதலும் வரலாற்று அறிதலும்