முந்தைய பகுதிகள்:
காஞ்சிப் புராணம் – வேதக் கருவூலம் (தொடர்ச்சி…)
நான்மறைப் பொருளாய்க் கதைக்கெலாம் இடனாய் நாற்பயன் உதவும்ஏ கம்பன்
மேன்மையுங் காம நோக்குடை இறைவி மேன்மையும் விளக்குவ திதுவே
நூன்முறை வருண நிலைகளின் ஒழுக்கம் நுண்ணிதின் தெரிப்பதும் இதுவாம்
பான்மையாற் காஞ்சிப் புராணமே நாளும் பயில்வுறக் கேட்பது மரபால்
(ஒழுக்கப்படலம் 30)
மாதவச் சிவஞான முனிவர் இந்தப் புராணத்தில் வைதிக சைவ ஒழுக்கங்களைப் பழங்காலத்தில் அவை கடைப்பிடித்தவாறே கூறுகின்றார். இந்த புராணத்தைக் கற்றவருக்கு எந்த வைதிக நூல்களிலும் கூறப்பட்ட ஒழுக்கங்கள் தெரிந்துவிட வேண்டும் என்பது இந்நூலாசிரியர் கருத்து.
வைதிக சைவ நித்திய கன்மானுஷ்டானங்களை, சனற்குமாரர் என்னும் முனிவர்மேல் வைத்து சனற்குமாரப் படலம் என்னும் பகுதியில் விளக்குகிறார்.
நித்திய கன்மானுஷ்டானங்களைச் சந்தி என்றும் கூறுவர். வைதிகர்கள் செய்வது ‘வைதிக சந்தி’ என்றும் சைவர்கள் செய்வது ‘சைவ சந்தி’ என்றும் கூறுவர். சிவவழிபாடு உடைய அந்தணர்கள் இந்த இரண்டு வகைச் சந்திகளையும் கலந்து செய்வதுண்டு.
சந்தியின்போது செய்கின்ற கன்மங்களில் பஞ்சப்பிரம மந்திரம், ஷடங்கமந்திரம் ஆகியன தற்காலத்தில் வைதிக சைவர்களால் உச்சரிக்கப்படுகின்றன. அவற்றோடு, ஆசிரியர், ‘அக்னிமீளே‘ எனத்தொடங்கும் மந்திரம், ஜாபாலமந்திரம் ஏழாலும் அதர்வமந்திரம் ஆறினாலும் திருநீற்றை மந்திரிப்பதையும், திருவைந்தெழுத்தோடு திரியம்பக மந்திரத்தையும் கூறி ஆசமனம் செய்வதையும் திரியாயுஷ மந்திரமும் திரியம்பக மந்திரமும் கூறித் திருநீறை அணிவதையும் கூறுகின்றார். இங்கு இவர் கூறும் அனுட்டானம் இப்பொழுது சைவத்தில் இல்லை; வைதிகத்திலும் இல்லை என்று கூறப்படுகின்றது.
இக்காலத்தில் வைதிகர்கள் சந்தியின்போது வேதமந்திரங்களுக்குப் பதிலாக, அங்கநியாசம், கரநியாசம் முதலியன செய்யும்போது திருமாலின் பெயர்களாகிய ‘அச்சுதா அனந்தா கோவிந்தா’ முதலிய திருநாமங்களையே உச்சரிக்கின்றனர் என அறிகிறேன். (அறிந்தவர் திருத்துக).
காலச்சூழ்நிலைகளின் காரணமாகச் சமயப் புறவொழுக்கங்களில் மாறுதல்கள் அவ்வப்பொழுது நிகழ்கின்றன. சிவஞானமுனிவர் அத்தகைய மாற்றங்களைக் கண்டு அவற்றை இப்புராணத்தில் பதிவு செய்து வைத்துள்ளார். வைதிகசைவத்தின் கன்மானுசார வரலாற்றை எழுதுவோருக்கு இப்பதிவு பெரிதும் துணை செய்வதாகலாம்.
சிவபூசையில் அந்தரியாகம் அல்லது அகப்பூசை என்பது ஒரு முக்கிய அங்கம். இப்பூசையில் சாதகன் தன்னுடைய ஆன்மாவையே இலிங்கமூர்த்தியாகவும் அதனில் சிவனை மூர்த்திமானாகவும் பாவித்து, புறத்தே செய்கின்ற வழிபாடுகள் அனைத்தையும் அகத்தே செய்வதாகும்.
இதனைச் சனற்குமாரர் செய்ததைக் காஞ்சிப் புராணம் கூறுகின்றது.
சனற்குமாரர் காயத்ரி மந்திரத்தை ஆயிரத்தெட்டு உரு கணித்தபின் யோக சித்தியின் பொருட்டு கணபதியை முன்பு பூசித்து, பின் ‘அங்குட்ட ரூபியாஞ் சிவனை’ வரன்முறை அருச்சனை செய்தார் என்று கூறுகின்றது. இப்படிக் கூறுவதால் இரண்டு செய்திகளை புராண ஆசிரியர் உணர்த்துகின்றார்.
இறைவனை ‘அங்குட்ட’ ரூபியாக பாவித்தல் வேதத்தில் உள்ள செய்தி. தமிழ்நூல்களுக்கு இது புதியவரவு. இது ஒன்று.
”ச’ரீர-ப்ராதே³ஸா²ங்கு³ஷ்ட மாத்ர மணோரப்யண்யம் த்⁴யாத்வாத: பரமதாங்க³ச்ச²தி”
என்பது மைத்ராயண்யுபநிஷத் வசனம்.
இதன் பொருள், “சரீரத்தின் இருதயத்திற் பெருவிரல் வடிவாயுள்ள (ஒளி) வடிவில் அணுவுக்கணுவா யிருக்கின்றதைத் தியானித்துப் பரம்பொருளை அடைகின்றனன்,” என்பதாகும். இதுவே ஆத்மலிங்கம் எனப்படும்.
இதயக் கமலத்தில் அங்குட்ட வடிவில் கண்டு சாதகன் அகத்தே தியானிக்கும் பொருள்தான் புறத்தே திருக்கோவில்களின் கருவறையில் உள்ள சிவலிங்கமாகும். ஆவுடையாரே அகத்தாமரை. இது இரண்டாவது செய்தி.
இவ்வாறு அகப்பூசை செய்த சனற்குமாரன் சிவபரம்பொருளின் திருநாமங்களை உச்சரித்துத் துதிக்கின்றான். அவற்றுள் பல வேத மந்திரங்களுல் பயிலப்பெறுவன.
முக்கணன் புட்டி வருத்தனன் நீலப் பொன்மயன் முதிர்கறை மிடற்றன்
தக்க ஈசானன் வன்னிரே தாநற் சத்தியன் அருவினன் உருவன்
புக்கசீர்ப் புருடன் விச்சுவ ரூபன் புருட்டுதன் சிவன்புரு கூதன்
வைக்குமெய்ச் சத்துப் பராபரம் பரமான் மாமகத்துயர்பரப் பிரமம்
இப்பாடலில் வேத மந்திரங்களான,
த்ர்யம்ப³கம் யஜாமஹே ஸுக³ந்தி⁴ம் புஷ்டிவர்த⁴னம் |
உர்வாருகமிவ ப³ந்த⁴னான் ம்ருத்யோர் முக்ஷீய மாம்ருதாத் ||
ரு«தம் ஸத்யம் பரம் ப்³ரஹ்ம புருஷம் க்ருஷ்ணபிங்க³லம் |
ஊர்த்⁴வரேதம் விரூபாக்ஷம் விச்’வரூபாய வை நமோ நம: ||
என்பதிலுள்ள பல திருநாமங்கள் தமிழ்ப்படுத்தி வந்துள்ளமை காண்க.
[முக்கணன்- திரியம்பகன்
புட்டி வருத்தனன்- புஷ்டிவர்த்தனம் (அடியாருக்கு ஆற்றலை மிகச் செய்பவன்)
நீலப் பொன்மயன்- கிருஷ்ண பிங்களம் (சக்திபாகமாகிய இடப்பக்கத்தில் கருநிறமும் சிவமாகிய தன் வலப்பாகத்தில் பொன்னிறமும் உடையவன்)
ஊர்த்வரேதம்- இது வன்னிரேதா எனவும் கூறப்படும். வன்னி என்றால் நெருப்பு. நெருப்பு மேல்நோக்கி எழுவதைப்போல மேல்நோக்கி எழும் விந்துவை உடையவன் என்பது பொருள். யோகிகள் தம் யோகத்தால் இவ்வாறு ஆக்கிக் கொள்வர். சிவன் மகாயோகி. ஆதலால் இவனுக்கு இது இயல்பாக அமைந்தது.
புருட்டுதன்- புருஷன் (ஆன்மாவால் துதிக்கப்படுப்பவன்).
புருகூதன்- முன் அழைக்கப்படுபவன்.]
சிவஞான முனிவர் இப்புராணத்தில், கதாபாத்திரங்களின் உரையாடல்களாக உபநிடத வாக்கியங்களை மொழிபெயர்த்து அமைத்துள்ளார்.
நந்தி தேவரை அணுகி சனற்குமார முனிவர் தம்மை மாணாக்கராக ஏற்றுக் கொள்ளும்படி வேண்டுகின்றார். தமக்கு இறைவனைக் காணும் உபாயத்தை அறிவிக்க வேண்டுகிறார். அப்பொழுது சிவனின் அனுக்கிரகத்தின் இன்றியமையாமையை,
மானிடன் விசும்பைத் தோல்போற் சுருட்டுதல் வல்லோனாயின்
ஈனமில் சிவனைக் காணா திடும்பைதீர் வீடும் எய்தும்
மானமார் சுருதி கூறும் வழக்கிவை
என்று சனற்குமார முனிவர் கூறுகின்றார்.
இதேபோன்று, வயிரவேசப் படலம் என்னும் பகுதியில், ‘யானே முதல்வன்‘ எனத் தருக்கிய பிரமனை நோக்கி வேதங்கள் சிவபரத்துவத்தின் உண்மையைக் கூறுவதாக அமைந்த பகுதியில், அதர்வ வேதம்,
வளிதாழ் விசும்பைப் பசுந்தோலிற் சுருட்ட வல்லோர்
உளரேல் புடைவீங்கி எழுந்து திரண்டுருண்ட
இளவெம்முலை பங்கனை யன்றியும் இன்ப முத்தி
அளவிற் பெறலாம் என விண்டது அதர்வ வேதம்
[பசுந்தோலின்- பசியதோலைச் சுருட்டுவதைப் போல. ஆகாயத்தை ஒருவன் சுருட்ட வல்லனாயின், சிவனருளையின்றி ஒருவன் இன்ப முத்தி பெறலாம் என்பது இப்பாடல்களின் கருத்து. விசும்பைச் சுருட்டவும் முடியாது. சிவனருளையின்றி முத்தி பெறவும் இயலாது என்பது இவற்றின் கருத்து.]
என்று கூறியதாக ஆசிரியர் கூறுகின்றார்.
இப்பாடல்கள்,
யதா² சர்மவதா³காஸ²ம் வேஷ்டயிஷ்யந்தி மானவா: |
ததா² சி’வ மவிஜ்ஞாய துக்க²ஸ்யாந்தோ ப⁴விஷ்யதி ||
எனும் அதர்வசிரோபநிஷத் வாக்கியத்தின் மொழிபெயர்ப்பு.
இந்த வேத வசனத்தைக் கந்தபுராணத்திலும், பிரமன் கூற்றாக,
பரமசிவன் உணர்ச்சியின்றிப் பல்லுயிர்த்தொகையும் என்றும்
விரவிய துயர்க்கீ றெய்தி வீடுபே றடைதும் என்றல்
உருவமில் விசும்பின் தோலை உரித்துடுப் பதற்கொப் பென்றே
பெருமறை இயம்பிற் றென்னில் பின்னுமோர் சான்றும் உண்டோ
என்று கச்சியப்ப சிவாச்சாரியார் மொழிபெயர்த்துள்ளார்.
அறிவுபோல் அடர்ந்து எழும் அறியாமையினது வலியால் ஒருமுறை வியாசர் பொய் கூறி சிவாபராதத்துக்கு ஆளானார். வியாசருக்குப் புத்தி புகன்ற விஷ்ணு,
“ஏனை யாரையும் அறத்துறந்து யாவரும் என்றும்
பான்மையில் தியானஞ்செயப் படுமொரு முதல்வன்
மேன்மை கூர்சிவன் ஒருவனே” எனவிரித் தன்றே
நான்மறைத்தலை யாமதர் வச்சிகை நவிலும்
என்று உரைத்ததாக சார்ந்தாசயம் என்னும் படலத்தில் ஆசிரியர் கூறுகின்றார். அதர்வசிகை என்றது, அதர்வசிகோபநிஷத்தை..
வியாசரிடம் மாதவர்கள் சென்று எமக்குச் சுருதி நூல் முடிபு இதுவெனத் தொகுத்துரை என்றனர். வியாசர் “அறிவு நூலெலாம் பன்முறை ஆயினும் தெளியப் பெறுவது ஒன்று, அது நாரணனே பரப்பிரமம்,” என்றனர். மாதவர் இதனைக் காசியில் விசுவநாதர் சந்நிதியில் நின்று சொல்லுக என்றனர். விசுவநாதர் சந்நிதியில் நின்று வியாசர், “நாரணனே பரப்பிரமம்,” என்றபோது, எல்லாப் பெயரும் ‘தன்பெயர் எனும் மறை வழக்கால்’ விசுவநாதன் வெகுளாமல் வெறிமலர்க்குழல் உமையொடும் மகிழ்ந்து வீற்றிருந்தனன் என்று பாடுகின்றார்.
இங்கு குறிக்கப்பட்ட மறை சுவேதாசுவதார உபநிஷத். நாராயணன் முதலிய எல்லாப் பெயர்களும் காரணப் பெயராகவும் ஆகுபெயராகவும் சிவபெருமானையே உணர்த்தி நிற்கும் எனவும் எல்லாப் பெயரும் பரமசிவன் பெயரென்பதே வேதத்தின் துணிபு என்பது சுவேதசுவதார உபநிடதத்திற் கூறப்பட்டதென்றும் சிவஞான முனிவர் தம்முடைய சிவஞானமாபாடியத்துள்ளும் கூறினார்.
“புருஷோவை ருத்³ரஸ் ஸன் மஹோ நம:”
என்னும் வேத வாக்கியத்தை,
‘சீர்ப் புருடனாம் கண்ணுதல் தலைவன்’
எனத் தமிழ்ப்படுத்தியுள்ளார்.
மகா நாராயணோபநிடத வாக்கியமான,
ஈசா’ன: ஸர்வ வித்³யாநாம் ஈச்’வர: ஸர்வ பூ⁴தாநாம் ப்³ரஹ்மாதி⁴பதிர் ப்³ரஹ்மணோதி⁴பதிர் ப்ரஹ்மா சி’வோ மே அஸ்து ஸதா³சி’வோம்”
என்பதை,
“எக்கலைக்கும் பூதங்கள் எவற்றினுக்கும் பிரமனுக்கும் ஈசன் என்னத்,
தக்கமுதல் பரப்பிரமம் சதாசிவன் ஓம்”
என மொழிபெயர்த்து ஆண்டுள்ளார்.
காஞ்சிப் புராணத்தில் திருவேகம்பப் படலம், தழுவக் குழைந்தபடலம் என்னும் இரு படலங்கள் மிகச் சிறப்பானவை. இவற்றைச் சார்ந்தே பிற படலங்கள் அமைக்கப்பட்டுள்ளன எனலாம்.
அவற்றுள் திருவேகம்பப் படலம் உலகத்தை ஒடுக்கிய இறைவனே அவற்றை மீளத்தோற்றுவித்தலைக் கூறுகின்றது. ஒடுங்கிய சங்காரத்தினின்றும் மீளத் தோன்றும் எனும் சைவ சித்தாந்தக் கோட்பாட்டை விளக்குவது இப்படலம். இப்படலத்தில் வேதங்களின் பெருமைகளையும் இறைவன் வாக்கில் கூறுகின்றார்.
உலகத்தைப் படைக்கத் திருவுளங்கொண்ட இறைவன், பகுப்பின்றிச் சூக்கும வாக்காகிய பரநாதமாக நின்ற வேதங்களை ஒற்றைமாமரமாக நிற்கும்படிப் பணித்தான். வேத சாகைககள் முதலியன பூ, அரும்பு, மென்தளிர், கனி, புதுமலர்களாகச் செறிந்து வேதம் நிழல்தரும் பெருமரமாக ஓங்கி நின்றது. அதன்கீழ் வீற்றிருந்து இறைவன் தன் இடப்பாகத்தில் இலளிதை என்னும் தேவியைத் தோற்றுவித்தான். தன் பணி யாது எனக் கேட்ட இலளிதயை நோக்கி இறைவன், “நீள் உலகுக்கு உபாதானம் (முதற்காரணம்) நீ; நிமித்த காரணம் யாம். கரந்த வையகத்தைப் நின் பேரெழில் வடிவில் மீண்டும் தோன்றச் செய்!” எனக் கூறினான்.
இலளிதை தன் வலக்கண்ணில் அயனையும் இடக்கண்ணில் அரியையும் , நடுக்கண்ணில் நெற்றியிற் கண்ணுடைய உருத்திரனையும் முத்தொழில் நடக்க ஈன்றாள். மற்றும் முகம் முதலிய உறுப்புக்களில் சொற்பிரபஞ்சம் பொருட்பிரபஞ்சங்களைத் தோற்றுவித்தாள்.
யாகத்துக்கு உரிய அக்கினிதேவன், காயத்திரி வேதம், அத்தியயனப் பயிற்சியின் போது அறிவதான காயத்திரி சந்தங்கள், சாமம், இரதந்திரம், தோமம், திருஷ்டுப் முதலியனவற்றையும் இலளிதை படைத்தாள்.
மும்மூர்த்திகளும் இறைவனைப் பணிந்து க, அ, ம, என்னும் அயன், அரி, உருத்திரன் ஆகிய எங்களைக் கண்களிற் படைத்த இலளிதையாகிய இவ்வம்மையார் காமாட்சி எனப் பெயர் பெறவும் இம்மாவடியில் நீங்கள் என்றும் இருக்கவும் வேண்டும் என்று வரம் வேண்டினர். இறைவன் அவ்வரத்தை அளித்ததோடு வேதம், வேதமந்திரங்கள் ஆகியவற்றின் பெருமைகளையும் கூறியருளினான்.
தழுவக் குழைந்த படலத்தில், ருத்திர காயத்திரியின் இரு வடிவங்களின் சிறப்பை ஒரு கதை நிகழ்ச்சியின் வாயிலாகக் கூறுகின்றார்.
தத்புருஷாய வித்³மஹே மஹாதே³வாய தீ⁴மஹி
தந்நோ ருத்³ர: ப்ரசோத³யாத்
என்பது ஒரு ருத்ர காயத்ரி.
மற்றொரு ருத்ர காயத்ரி மந்திரம்,
ஸஹஸ்ராக்ஷஸ்ய புருஷஸ்ய வித்³மஹே மஹாதே³வஸ்ய தீ⁴மஹி
தந்நோ ருத்³ர: ப்ரசோத³யாத்
என்பது.
“புருஷோவை ருத்ரஸ் ஸன்மஹோ நம:” என்றதால் புருஷநாமம் சிவனைக் குறிக்கும் என்பது பெறப்பட்டது.
‘தத்புருஷாய‘ என்ற முதல் மந்திரத்தில், புருஷனுக்கு என நான்காம் வேற்றுமையில், “தற்புருடனாகிய சிவனுக்கு (எம் நினைவு) பொருந்த நினைகுதும். எமக்கு அவர் அருளுக” என்பது பொருளாம்.
இரண்டாவது மந்திரத்தில், ‘புருஷஸ்ய’ என்பது ஆறாம் வேற்றுமை உடைமைப்பொருளில், “புருஷனுடைய (சிவனுடைய) சத்தியையும் எம் நினைவு பொருந்த” எனப் பொருள்படும். சிவனும் சிவனுடைய சத்தியும் எமக்கு அருள்க என்பது கருத்து.
ஒரு கர்ப்பகாலத்தில், உறங்கி எழுந்த பிரமன், அகிலமெல்லாம் படைக்கும் வண்ணம் யாது என மயங்கியபோது இறைவன் உருத்திர காயத்ரியுடன் அழகிய குமரவடிவில் தோன்றி அளித்த பெருவரம் நினைவுக்கு வந்தது. அந்தக் குமார வடிவினை மனத்தில் நினைந்து, “தத்புருஷாய வித்மஹே மஹாதேவாய தீமஹி தந்நோ ருத்ரப் ப்ரசோதயாத்” எனத் துதித்து, பின் படைக்கத் தொடங்கினான். படைத்தவையெல்லாம் ஆணாகவே இருந்தன. பெண்மையும் படைக்க முயன்றும் இயலவில்லை.
நான்காம் வேற்றுமைப்பொருள் தரும் பொருளை காயத்திரியை விலக்கி, ‘சகத்திர நயனப் புருடன் தன்னுடைப் பேரருள் நினைகேம் உருத்திரப் பிரான் எமக்கு அருள்புரிக’ என்னும் பொருளுடைய “ஸஹஸ்ராக்ஷஸ்ய புருஷஸ்ய வித்மஹே மஹாதேவஸ்ய தீமஹீ தந்நோ ருத்ரப்ரசோதயாத்” எனத் துதித்துப் படைத்தபோது, அவனால் ஆண்மை, பெண்மை இரண்டையும் படைக்க முடிந்தது. இறைவனுடைய பேரருளே அம்பிகை எனப்படுகின்றது. சிவனையும் சத்தியையும் சேர்த்துத் துதித்தபோது இறைவன் அம்மையப்பராய்த் தோன்றிப் பிரமன் விரும்பியவாறு ஆண்மை பெண்மைகளைப் படைக்கும் ஆற்றல் பெற்றான் என இக்கதை கூறுகின்றது.
சிவ வழிபாட்டில் அட்டபுஷ்பம் சார்த்தித் தொழும்போது, “ப⁴வாய தே³வாய நம:” என இறைவனோடு, “ப⁴வஸ்ய தே³வஸ்ய பத்ன்யை நம:” என அம்பிகையையும் சேர்த்துப் போற்றுதல் மரபு.
(தொடரும்)
பின்குறிப்பு:
சம்ஸ்கிருத பதங்களை சரியான உச்சரிப்பின் படி தமிழில் எழுத Superscripted முறை பயன்படுத்தப் பட்டுள்ளது. உதாரணமாக क (ka) , ख (kha) , ग (ga) , घ (gha) என்ற எழுத்துக்கள் முறையே க, க², க³, க⁴ என்று வரும். இதே போன்று ச, ட, த, ப வர்க்கத்தில் உள்ள எல்லா எழுத்துக்களும் எழுதப் படும். சிவன் என்பதில் உள்ள ‘श’ என்ற எழுத்து சி’ என்று குறிக்கப் பட்டுள்ளது. முழுப் பட்டியல் இங்கே பார்க்கலாம்.

தலபுராணம் என்னும் கருவூலம் – 6
பெரியபுராணம்: இளைஞர் வாழ்வியலுக்கான ஒரு சமுதாயக் காவியம் – 1
தலபுராணம் என்னும் கருவூலம் – 1![பாரதியின் சாக்தம் – 5 [நிறைவுப் பகுதி]](http://www.tamilhindu.com/wp-content/uploads/shakthi.jpg)
பாரதியின் சாக்தம் – 5 [நிறைவுப் பகுதி]
ஆறுமுக நாவலர் / ஈழத்துச் சிதம்பர புராணம்
தலபுராணம் என்னும் கருவூலம் – 2![பெரியபுராணம்: இளைஞர் வாழ்வியலுக்கான ஒரு சமுதாயக் காவியம் – 2 [நிறைவுப் பகுதி]](http://www.tamilhindu.com/wp-content/uploads/thirugnana-sambandar1.jpg)
பெரியபுராணம்: இளைஞர் வாழ்வியலுக்கான ஒரு சமுதாயக் காவியம் – 2
பாரதியின் சாக்தம் – 4
பாரதியின் சாக்தம் – 3
பாரதியின் சாக்தம் – 2
பாரதியின் சாக்தம் – 1![தலித்துகளும் தமிழ் இலக்கியமும் – 7 [நிறைவுப் பகுதி]](http://www.tamilhindu.com/wp-content/uploads/koveru-kazhuthaigal-by-imayam.jpg)
தலித்துகளும் தமிழ் இலக்கியமும் – 7 [நிறைவுப் பகுதி]
மகத்துவம் மிக்க மஹாகும்பாபிஷேகம்
போரின் பிடியிலிருந்து மீளப்புதுப்பிக்கப்பெறும் வட இலங்கையின் இருபெரும் ஆலயங்கள்
சாதி எனப்படுவது யாதெனின்…
அருணாசலத்தில் ‘ம’கரத்தின் மகத்துவம்
வேப்பிலைக் கொடியும் வேளாங்கண்ணி மாதாவும்
திருவாசகத் தேன் தந்த பெருவள்ளல்
ஆலயம் என்னும் அற்புதம்
யாதுமாகி….![அமுதம் [சிறுகதை]](http://www.tamilhindu.com/wp-content/uploads/nectar3.jpg)
அமுதம் [சிறுகதை]
இந்து எதிரிகளான எமகிங்கரர்கள்
தலித்துகளும் தமிழ் இலக்கியமும் – 2
இன்னும் சில ஆன்மிக நினைவுகள் – 5
கதை சொல்லும் ஈழத்து அம்பிகை ஆலயங்கள்





முறையான பொருள் தெரியாமல் பல வடமொழி மந்திரங்களை நான் அறிந்து உள்ளேன். ஆனால் அவற்றுக்கு உரிய தமிழ் பொருளை இப்போது உணர்ந்தேன். அதை விட அதற்கு ஈடான ஏன் சொல்நயம் உயர்ந்த காஞ்சி புராணம் செய்யுளைப் பற்றி அறிய அருமையான வாய்ப்பு கிடைததது. பொருளுடன் இந்த நூல் எங்கே கிடைத்தாலும் நான் உறுதியாகப் படிப்பேன். கட்டுரையைத் தொடருங்கள். ஞான ரசத்தைப் பருகக் காத்திருக்கிறேன். நன்றி.
தமிழ்ஹிந்து » தலபுராணம் என்னும் கருவூலம் – 3…
விசுவநாதர் சந்நிதியில் நின்று வியாசர், “நாரணனே பரப்பிரமம்,” என்றபோது, எல்லாப் பெயரும் ‘தன்பெ…
// இக்காலத்தில் வைதிகர்கள் சந்தியின்போது வேதமந்திரங்களுக்குப் பதிலாக, அங்கநியாசம், கரநியாசம் முதலியன செய்யும்போது திருமாலின் பெயர்களாகிய ‘அச்சுதா அனந்தா கோவிந்தா’ முதலிய திருநாமங்களையே உச்சரிக்கின்றனர் என அறிகிறேன். (அறிந்தவர் திருத்துக). //
ஸ்மார்த்த-ஸ்ரீவைஷ்ணவ-மத்வ பாகுபாடின்றி அனைவரும் “அச்சுதா, அனந்தா, கோவிந்தா” என்ற நாமங்களையும், கேசவ, நாராயண, முதலிய பன்னிரு திருநாமங்களையும் சொல்லி ஆசமனத்தை (மூன்று முறை நீரை அருந்துதல்) அனைவரும் செய்து வருகின்றனர். மத்வர்கள் இப்பன்னிரு நாமங்களுடன் சேர்த்து சங்கர்ஷண-வாசுதேவ-ப்ரத்யும்ன-அனிருத்த வியூஹ மூர்த்திகளின் நாமத்துடன், புருஷோத்தமன், ஜனார்த்தனன், நாரசிம்மன் முதலிய நாமங்களையும் சேர்த்து இருபத்தி நான்கு நாமங்களையும் சொல்லி இந்த சடங்கைச் செய்து வருகின்றனர்.
//
நாராயணன் முதலிய எல்லாப் பெயர்களும் காரணப் பெயராகவும் ஆகுபெயராகவும் சிவபெருமானையே உணர்த்தி நிற்கும் எனவும் எல்லாப் பெயரும் பரமசிவன் பெயரென்பதே வேதத்தின் துணிபு என்பது சுவேதசுவதார உபநிடதத்திற் கூறப்பட்டதென்றும்…
//
நாராயண நாமத்தை ஆகுபெயராகக் (யௌகிகம் என்று சமஸ்கிருதத்தில் இதற்குப் பெயர்) கொள்வதற்கு சமஸ்கிருத இலக்கணம் சிறிதும் இடம் தரவில்லை. “பூர்வபதாத் சம்ஜ்ஞாயாம் அகஹ” (அஷ்டாத்யாயி, 8.4.3) என்னும் பாணிணி சூத்ரத்தை நோக்க வேண்டும். இந்த விதியைத் தமிழில் விளக்க முயல்கிறேன்:
(1) இரண்டு பதங்கள் புணர்ந்து ஒரே பதமாக இருந்தால்,
(2) அந்தப் பதம் (ஆகுபெயரல்லாத) பெயரைக் குறிப்பதாக இருந்தால்,
(3) சேரும் பதங்களில் முதற்பதத்தில் “र”-காரமோ, “ष”-காரமோ இருந்தால்,
(4) முதற்பதம் “ग”-காரத்தில் முடியாமல் இருந்தால்,
(5) சேரும் பதங்களில் இரண்டாவது பதத்தில் உள்ள “न” காரமானது, பதங்கள் சேர்ந்தவுடன் “ण” காரமாக மாறும்.
ஆகையால், நாராயண பதத்தை அப்பதத்தால் பிரசித்தமாகச் சொல்லக்கூடிய (இதற்கு சம்ஸ்கிருதத்தில் “ரூடி” என்று பெயர்) விஷ்ணுவைத் தான் குறிப்பதாகக் கொள்ள இடம் உண்டு. ஆகுபெயராக, “ஜீவ கோடிகளுக்கு (நார) புகலிடமாக (அயந) இருப்பவன்” என்ற பொருளில் நாராயண நாமத்தை எடுக்க இடமே இல்லை. “நாராயந” என்று இருந்தால் அப்படிப் பொருள் கொண்டு எடுக்கலாம்; ஆனால் வேத மந்திரங்களிலோ, உபநிஷத்துக்களிலோ எங்குமே அப்படி இல்லை. இதனால் தான் லிங்கபுராணத்தில் வரும் சிவ ஸஹஸ்ரநாமத்தில் நாராயண நாமம் இல்லை. இங்கே பார்க்கவும் – http://www.shaivam.org/ssshivasahasralinga.htm. நாராயணப்பிரிய (நாராயணனுக்குப் பிரியமானவர் / நாராயணனிடம் பிரியம் கொண்டவர்) என்ற பெயர் தான் உள்ளது.
ஆகையால், “நாராயண” பதத்தை ஆகுபெயராகக் கொள்ள இடம் இல்லை.
இன்னொரு உதாரணம்– “சூர்ப்பணகா (சூர்ப்பணகை – இராவணன் தங்கை)” என்ற பெயர். இந்தப் பெயரானது, “சூர்ப்ப+நகா” என்ற பதங்களின் சேர்க்கையால் விளைந்த ஒன்று. இதன் அர்த்தம் – “முரம் போன்ற பெரிய நகங்களை உடையவள்” என்று. ஆயின், பதங்கள் சேர்ந்த பொழுது பின் பதத்தில் உள்ள “ந” காரம் “ண” காரமாக மாறியுள்ளதால், இதை ஆகுபெயராக எடுக்க முடியாது. அதாவது, முரம் போன்ற பெரிய நகங்களை உடைய வேறொரு பெண்ணை “சூர்ப்பணகா” என்று சொல்ல முடியாது. அது அப்பெண்ணுக்கு வைத்த பெயராக இருந்தால் தான் அப்படி அழைக்க இடமுண்டு. அப்பெண்ணை “சூர்ப்பநகா” என்றே சொல்ல முடியும்.
சிவன் பெரியவரா, நாராயணன் பெரியவரா என்ற சர்ச்சைக்குரிய வாதத்தில் ஈடுபட எனக்கு விருப்பமில்லை, எனக்கு அவ்வளவாக தெரியவும் தெரியாது.
ஆனால், ஆசிரியர் கூறிய சில எனக்கு சரியாகப் படவில்லை. “சிவனே பரதெய்வம்” எனும் நம்பிக்கைகூட அதற்வவேதத்தின் சிலபாகங்களில் உள்ளன, ஆனால் “சிவபெருமான் வேறு, ருத்திரர் வேறு” எனும் கொள்கை முற்றிலும் வேதத்திற்குப் புறம்பானது.
ஏன் என்று எனக்குத் தெரிந்த சிலவற்றை கூறுகிறேன்:-
1. சைவர்களின் மிகமுக்கியமான வேதமந்திரமான யசூர் வேதத்தின் ‘ஸ்ரீ ருத்திரம், சமகம்’ இல் ‘சிவா’ மற்றும் ‘ருத்ரா’ இரண்டு பெயர்களும் கலவையாக (interchangeable) ஆக உள்ளது பலருக்குத் தெரியும்.
2. சிவபெருமான் திரிபுராசுரர்களை கொன்று உலகங்களைக் காப்பாற்றியதை சைவர்கள், வைணவர்கள், வைதீகர்கள், சாக்தர்கள், ஸ்மார்த்தர்கள் அனைவரும் ஒருசேர ஒப்புக்கொள்ளும் ஒரு கதைதான். ஏனெனில் அது புராணங்களில் மட்டும்வராது யசூர் வேதத்திலுமுள்ளது. சிவபெருமான் மிகுந்த சீற்றத்துடன் இருந்ததால், அவரின் கண்களிலிருந்து விழுந்த கண்ணீர் துளிகள் பூமியில் எங்கெல்லாம் விழுந்தனவோ அங்கெல்லாம் மரங்கள் முளைத்தது, அம்மரங்களின் கனிகளே ருத்ராட்சங்கள் என்பதும் யாவரும் அறிந்ததே! ருத்திரரின் கண்கள் (அக்ஷம்). எனவே ருத்ராக்ஷம். இந்த ருத்ராட்ச மாலைகள் நாயன்மார்கள் முதல் இன்று வரை பல இந்துக்கள், குறிப்பாக சைவர்கள் அணிவதும் எவராலும் மறுக்கமுடியாது! வைணவர்களுக்கு எப்படி துளசிமாலையோ, அவ்வாறே சைவர்களுக்கு ருத்ராட்சம். நீங்கள் சொல்வதுபோல சிவபெருமான் வேறு, ருத்திரர் வேறென்றால், ஏன் ருத்ராட்சத்தை அணிகிறீர்கள்? ஏன் சிவாட்சம் (சிவாக்ஷம்) என்று எதுவுமில்லையா???
இறுதியாக, யசூர் வேதத்தில் வரும் நாராயண உபநிஷதத்தில் “நாராயணா பிரம்மோ ஜாயதே, நாராயணா ருத்ரோ ஜாயதே, பிரம்மச்ச நாராயணஹா, சிவச்ச நாராயணஹா…” என்கிறது. இதன் பொருள் என்னவாக இருந்தாலும்,முதல் பதத்தில் பிரம்மதேவரின் பெயருக்குப்பிறகு ருத்திரரின் பெயர் வருகிறது, இரண்டாம் பதத்தில் பிரம்மதேவரின் பெயருக்குப் பிறகு சிவனாரின் பெயர் வருகிறது. இரண்டும் வெவ்வேறேன்றால் இரண்டு பதங்களிலும் இரண்டு பெயர்களும் வரவேண்டுமல்லவா??
முனைவர் ஐயா,
// இக்காலத்தில் வைதிகர்கள் சந்தியின்போது வேதமந்திரங்களுக்குப் பதிலாக…
காலச்சூழ்நிலைகளின் காரணமாகச் சமயப் புறவொழுக்கங்களில் மாறுதல்கள் அவ்வப்பொழுது நிகழ்கின்றன. //
தற்போது வைதிகர்கள் ‘வேத மந்திரங்கள் இருந்த இடத்தில்’ திருமாலுடைய நாமங்களை இட்டு வருகின்றனர் என்று கூறுகிறீர்களே, இதற்கு ஒரு சான்றும் இல்லை. மாறாக, பல ஸ்மிருதிகளில் வைதிகர்களின் ஆசமனமும், சந்தியாவந்தனத்தில் உள்ள ஏனைய சடங்குகளும் பல ஸ்மிருதிகளில் நன்றாக விளக்கியுள்ளதைப் படித்துள்ளேன். (இப்பொழுது நினைவிற்கு வரவில்லை).
நன்றி
பாலாஜி அவர்கள் சொன்னது போல, பார்வதி தேவியின் கணவராகிய சிவபெருமானையே “ருத்ர” என்று வேதம் அழைக்கிறது. வேதங்களில் சிவனைத் தவிர வேறு ஒரு ஸம்ஹார தேவதை உண்டு என்று எங்குமே கூறப்படவில்லை. சங்கரரும் ப்ருஹதாரண்யக உபநிஷத் பாஷ்யத்தில் (1-4-11) “பசுபதியான ருத்திரர்” என்றே “ருத்ர” சப்தத்திற்கு வியாக்கியானம் பண்ணியுள்ளார். “முருகன் ருத்ரருக்கு மகனாகப் பிறந்தார்” என்று பிரம்ம சூத்திரத்தில் செய்துள்ளார் (3.3.32). கேநோபநிஷத்தில் உமையைப் பற்றிய குறிப்பு வந்த இடத்தில் சங்கரர் “ருத்ர பத்னி உமா” என்று தான் (வாக்யபாஷ்யத்தில், பதபாஷ்யத்தில் அல்ல) விளக்கம் செய்துள்ளார்.
மேலும், “நமச்சிவாய” (நம: சிவாய ச சிவதராய ச) என்னும் மந்திரமும் நமக-சமகங்கள் அடங்கிய ருத்ர பிரச்னத்தில் தானே வருகிறது?
இது தவிர, கட்டுரையிலேயே இன்னும் சில பிழைகள் (factual errors) உள்ளன.
//
மற்றொரு ருத்ர காயத்ரி மந்திரம்,
ஸஹஸ்ராக்ஷஸ்ய புருஷஸ்ய வித்³மஹே மஹாதே³வஸ்ய தீ⁴மஹி
தந்நோ ருத்³ர: ப்ரசோத³யாத்
//
இம்மந்திரத்தின் சரியான பாடம் “புருஷஸ்ய வித்³ம ஸஹஸ்ராக்ஷஸ்ய மஹாதே³வஸ்ய தீ4மஹி தந்நொ ருத்³ர: ப்ரசோத³யாத்”
மேலும், இம்மந்திரத்தை “காயத்ரி” என்று அழைக்கலாகாது. ஒரு மந்திரத்தை “காயத்ரி” என்று அழைக்க, அதில் 24 அசைவுகளே (அதாவது syllables, மாத்திரைகள் என்பது வேறு) இருக்க வேண்டும். “தத் புருஷாய…” என்று தொடங்கும் மந்திரத்தில் 24 அசைவுகளே உள்ளன. வைதிகர்கள் அனைவருக்கும் பொதுவான காயத்ரியாகிய “தத் ஸவிதுர்…” என்று தொடங்கும் மந்திரத்திலும் 24 அசைவுகளே உள்ளன. மேலே சுட்டிக் காட்டியதில் 24-க்கும் மேற்பட்ட அசைவுகள் உள்ளன. இதே போல, கணேச காயத்ரியிலும், கருட காயத்ரியிலும். எண்ணிப்பார்த்தால் தெரியும்.
(இன்று “மஹா நாராயண உபநிஷத்” என்று பெயர் பெற்று வரும் தைத்திரீயவுபநிஷத்பாகமாகிய நாராயண அநுவாகித்தில் இம்மந்திரம் வருகிறது. இதில் இரண்டு பாடங்கள் உண்டு. இரண்டு பாடங்களிலும் இம்மந்திரம் உண்டு. வைணவரல்லாத ஸாயணரும், வைணவராகிய ரங்கராமானுஜரும் ஆதரித்துள்ள பாடம் முதற்பாடம். இவர்கள் ஆதரிக்காத வேறு ஒரு பாடம் ராமகிருஷ்ணா மிஷனின் “மந்த்ரபுஷ்பம்” என்ற புத்தகத்தில் உள்ளது. ஸாயண-ரங்கராமாநுஜ பாடத்தில் இல்லாத சில பிழைகளும், இல்லாத பல வாக்கியங்களும் ஏனோ இந்த புத்தகத்தில் அச்சிடப்பட்டுள்ளது).
// “புருஷோவை ருத்ரஸ் ஸன்மஹோ நம:” என்றதால் புருஷநாமம் சிவனைக் குறிக்கும் என்பது பெறப்பட்டது. //
இதுவும் சரியன்று. புருஷ சப்தம் யௌகிகமாக (ஆகுபெயராக) உடலுள்ள ஜீவான்மா யாரையும் குறிக்கலாம் (புருஷ = உடலிலே வசிக்கிறவன்). பரமான்மாவையும் குறிக்கலாம் (இதையத்தில் உள்ளதால்). ரூடியாக (இயற்கையாக உள்ள பெயராகக்) கொண்டால் “புருஷ” சப்தம் நாராயணனாகிய திருமாலையே குறிக்கும் என்பது சாஸ்திர பிரஸித்தம். இதை ஸாயணர் முதலிய வேத பாஷ்யகாரர்கள் புருஷஸூக்தத்தின் அவதாரிகையில் கூறியுள்ளனர். நாராயண சப்தம் ஆகுபெயராக சிவனைக் குறிக்காது என்பதையும் முன்பு வேறு மறுமொழியில் குறிப்பிட்டிருந்தேன்.
ஹிந்து மதத்தில் அத்வைதம், த்வைதம், விசிஷ்டாத்வைதம், சுத்த அத்வைதம், சிவாத்வைதம், சைவ சித்தாந்தம், வீர சைவம் என்று தத்தவார்த்த ரீதியாகச் சில பிரிவுகள் உள்ளன. ஒன்றுடன் ஒன்று சம்பிரதாய ரீதியாகவும் சிறு சிறு வேறுபாடுகளோடு இவை இயங்குகின்றன. முனைவர் ஐயா அவர்கள் சைவ சித்தாந்தம் சார்ந்த கருத்துக்களை உள்ளடக்கிய கட்டுரைகளைப்படைத்து வருகிறார். இவற்றில் கூறப்படும அனைத்துக் கருத்துக்களோடு எல்லாச் சித்தாந்திகளுக்கும உடன்பாடு வருவது துர்லபமே. எனவே தத்தமக்கு இருக்கும் கருத்தின் அடிப்படையில் வியாக்கியானங்களை வைத்து பிற சித்தாந்தக் கருத்துக்களைக் குறை கூறுதல் முறையற்றது மட்டுமல்ல, நமக்கிடையேயான ஒற்றுமைக்கும் ஊறு விளைக்கும். ஒரு சொல்லை எப்படி வேண்டுமானாலும் பிரித்துப் பொருள் கொள்ளும் வகையில் சமஸ்கிருதமும் தமிழும் அமைந்துள்ளமையை நாம் நமது ஒற்றுமையை வளர்க்கப் பயன்படுத்தவேண்டுமே அல்லாது, குலைப்பதற்குப் பயன்படுத்தக் கூடாது.
பெருமதிப்பிற்குரிய முனைவர் ஐயா அவர்களுக்கு
மீண்டும் ஒரு சிறந்த கட்டுரையை அளித்தமைக்கு நன்றி.
இப்போதும் சுக்ல யஜுர் வேதத்தைப் பிரயோகிக்கும் ஸ்மார்த்தர்கள் தமது நித்ய அனுஷ்டானங்களிலும் கூட சிவத்தையே பிரதானமாக உள்ள மந்திரங்களை மட்டுமே உச்சரிக்கிறார்கள் என்பது ஒரு தகவல்.
ஆதி சங்கர பகவத் பாதர் எல்லா பக்தர்களையும் உள்ளடக்கிய சனாதன தருமத்தை நிலை செய்தார். இதனைப் பின்னாளில் வந்தவர்களில் சிலர் தத்தமக்குச் சரியென்று பட்ட வழியில் அங்கங்கே மாற்றி அமைத்தாலும், பொதுவாக ஸ்மார்த்தர்கள் விநாயக, முருக, சிவ, சக்தி, விஷ்ணு, சூரிய வழிபாட்டைப் பரவலாகக் கடைப்பிடிப்பதால், எல்லா இறை மூர்ததங்களையும் குறிக்கும் மந்திரங்கள் ஆங்காங்கே உச்சரிக்கப் படுகின்றன என்பதே உண்மை.
அன்பர்திரு பாலாஜி அவர்களுக்கு, பஸ்மஜாபாலோபநிஷதம், ” அத்வைதம் சதுர்த்தம் ப்ரஹ்மவிஷ்ணுருத்ராதீத, மேகமாசஸ்யம் பகவந்தக் சிவம்” ர்ன்று கூறுகின்றது.இதன் கருத்து பிரம்ம விஷ்ணு ருத்ரர்களுக்கு அதீதமாக நான்காவது தெய்வம் சிவம் என்பதாகும். “சதுர்த்தம்’ என்ற பதமும் அதற்குச் சிவம் என்ற பொருளும் கூடியஉபநிடத வாக்கியங்கள்:” ப்ரபஞ்சோபசமம் சாந்தம் சிவம் அத்வைதம் சதுர்த்தம் மந்யந்தே” மாண்டூக்யோபநிஷதம்., நிருஸிஹ்ம பூர்வதாபிந்யுபநிஷத், நாரத பரிவ்ராஜகோபநிஷத், ராமோத்தரதாபிநியோபநிஷத் ஆகியவற்ரிலுள்ளதாகக் கூறப்படுகின்றது. மூவரிலொருவனாகிய ருத்திரன் குணருத்திரன் எனப்படுவான். ம்காருத்திரன் எனப்படும் சிவம் வேறு. திருமுறைகளிலும் பிரம்ம விஷ்ணு ருத்திரர்களுக்கு மேலானவன் சிவபிரான் எனப் பல இடங்களில் கூறப்பட்டுள்லது. “தேவர்கோ வறியாத தேவதேவன், செழும்பொழில்கள் பயந்துகாத் தழிக்கு மற்றை,மூவர்கோ னாய்நின்ற முதல்வன் மூர்த்தி”, மூவரு முப்பத்து மூவரு மற்றொழிந்த, தேவருங் காணாச் சிவபெருமான்”, ” மூவராலுமறியொணா முதலாய -னந்த மூர்த்தியான்”, என்பன முதலான திருமுறைகளில் அறியப்பட்ட சிவன் மூவரில் ஒருவனாய ருத்திரன் அல்லன். திரிகுண ரஹிதன் என்னும் நிர்குண சிவனுக்கும் உருத்திரன் என்னும் பெயர் வேதம் முதலிய பிரமாணங்களில் காணப்படுகின்றது. அந்தப் பிரமாணங்களின் பொருள் இன்னதெனக் கந்தபுராணம்தெளிவாகக் கூறுகின்றது. ” இன்னலங் கடலுட் பட்டோர் யாரையும் எடுக்கும் ஆற்றால், உன்னரும் பரம மூர்த்தி உருத்திரன் எனும்பேர் பெற்றான்” என்னும் கூற்றின்படி, சமுசாரத் துன்பத்தில் கிடந்து உழன்று துன்பப்படும் உயிர்களைத் திருவருள் என்னும் தெப்பத்தில் ஏற்றி முத்திக்கரை சேர்ப்பவன் உருத்திரன் என்ற பொருள் பெறப்படுகின்றது. இந்த ருத்திரன் சத்துவகுணமுள்ளவன். அதனல் உருத்திராட்சம் அவனுடைய கண்ணோட்டத்தைக் குறிக்கும்.
உமாசங்கர் அவர்களே,
// எனவே தத்தமக்கு இருக்கும் கருத்தின் அடிப்படையில் வியாக்கியானங்களை வைத்து பிற சித்தாந்தக் கருத்துக்களைக் குறை கூறுதல் முறையற்றது மட்டுமல்ல, நமக்கிடையேயான ஒற்றுமைக்கும் ஊறு விளைக்கும். //
சரியாகத்தான் சொன்னீர்கள். கண்டிப்பாக அனைவரும் ஒத்துக்கொள்ள வேண்டியதே. ஆனால், கட்டுரையாசிரியர் வைதிகர்களுடைய தற்கால “அச்யுதாய நமஹா; ஆனந்தாய நமஹா; கோவிந்தாய நமஹா” என்னும் ஆசமனவிதியை அவைதிகம் என்னும் பொருள்பட எழுதியுள்ளாரே? நீங்களே கூறுங்கள். “திருவைந்தெழுத்தோடு திரியம்பக மந்திரத்தையும் கூறி ஆசமனம் செய்வதையும் கூறுகின்றார்” என்றும் , “இங்கு இவர் கூறும் அனுட்டானம் இப்பொழுது சைவத்தில் இல்லை; வைதிகத்திலும் இல்லை என்று கூறப்படுகின்றது” என்றும் எழுதி விட்டிருந்தால் சரி. இத்துடன் சேர்த்து எதற்கு “இக்காலத்தில் வைதிகர்கள் சந்தியின்போது வேதமந்திரங்களுக்குப் பதிலாக திருமாலின் நாமங்களைச் சொல்லி…” என்று எழுத வேண்டும்?
“நாராயண” நாமத்தை ஆகுபெயராக எடுப்பது வெறும் கருத்துச் சுதந்திர விஷயம் அல்ல; அது இலக்கணப்பிழை. இத்துடன் விட்டுவிடுகிறேன்.
த்வைத-விசிஷ்டாத்வைத பாஷ்யங்கள் மட்டுமின்றி, அத்வைத சங்கர பாஷ்யங்க்களில் கூட எங்குமே சிவ-ருத்ர வேறுபாடு இல்லை என்பதைச் சுட்டிக்காட்டினேன். வேத பாஷ்யம் செய்த சாயணர் கூட அப்படி வித்தியாசம் இருப்பதாக எங்குமே கூறவில்லை. இதை மட்டும் தான் கூற வந்தேன். ருத்ர-சிவ வேறுபாடு மற்ற சம்பிரதாயங்களில் (சைவ சித்தாந்தத்தைத் தவிர) சர்ச்சைக்குரிய சிக்கலான விஷயம். அதை விட்டுவிடுவோம்.
கந்தர்வன் அவர்களே
//“நாராயண” நாமத்தை ஆகுபெயராக எடுப்பது வெறும் கருத்துச் சுதந்திர விஷயம் அல்ல; அது இலக்கணப்பிழை.//
இது உங்கள் கருத்து. அவ்வளவே. பிறிதொருவர் இதே சொல்லுக்கு வேறு விதமாகப் பகுத்து வேறு பொருள் கூறக்கூடும். இது இலக்கணம் சம்பந்தப்பட்ட விஷயம் மட்டுமல்ல. தத்துவம், நம்பிக்கை இரண்டும் கலந்த விஷயம். ஒருவரது சித்தாந்தம் மற்றவருக்கு ஏற்புடையதாகத்தான் இருக்கவேண்டும் என்றில்லை. நீங்களே கூட இதை எடுப்பதன் காரணம் இலக்கணத்தின் மீதுள்ள நாட்டத்தை விட சித்தாந்த ரீதியான உங்கள் நம்பிக்கைதான் என்பது உங்களுக்கே தெரியும். நமது மதம் சார்ந்த தத்துவ விசாரணைகளிலும், ஆத்மா விசாரணைகளிலும், பிரம்மா விசாரணைகளிலும் அவரவர் சித்தாந்தத்தை அவரவர் விளக்கும்போது மற்றவர் அதைத் தம் சித்தாந்தப் பார்வையில் அலசுவதும் விவாதம் செய்வதும் நிச்சயமாக முறையற்றதுதான். இதை நான் கூறக் காரணம் என்னைப்பொருத்தமட்டில் நான் நம்மிடையே இருக்கவேண்டிய ஒற்றுமைக்கு பிரம்மனுக்கு சமமான முக்கியத்தைகூடத் தரவேண்டும் என்று கருதுவதுதான்.
திரு உமாசங்கர் அவர்களே,
//
இது உங்கள் கருத்து. நீங்களே கூட இதை எடுப்பதன் காரணம் இலக்கணத்தின் மீதுள்ள நாட்டத்தை விட சித்தாந்த ரீதியான உங்கள் நம்பிக்கைதான் என்பது உங்களுக்கே தெரியும்.
//
அப்படிப் பிரித்து அர்த்தம் கூறுவதற்குத் தான் இடமில்லை என்றேன். சமஸ்கிருத பாஷை அறிந்த நடுநிலையாளர் இருந்தால் அவரவர்கள் கேட்டுத் தெரிந்துக்கொள்ளட்டும்.
//
நீங்களே கூட இதை எடுப்பதன் காரணம் இலக்கணத்தின் மீதுள்ள நாட்டத்தை விட சித்தாந்த ரீதியான உங்கள் நம்பிக்கைதான் என்பது உங்களுக்கே தெரியும்.
//
இப்படிக் கூறுவது சரி அல்ல. ஒரு கருத்தை ஒருவர் சொன்னால் அந்த கருத்தில் உண்மை இருக்கிறதா என்று ஆராய்ந்துப் பார்க்கவேண்டுமே ஒழிய, அவர் இன்ன தரப்பைச் சேர்ந்தவர் என்பதற்காகவே அவர்கள் கூறுவதை நிராகரித்து விடுவது நியாயமான வழி அல்ல.
//
இக்காலத்தில் வைதிகர்கள் சந்தியின்போது வேதமந்திரங்களுக்குப் பதிலாக, அங்கநியாசம், கரநியாசம் முதலியன செய்யும்போது திருமாலின் பெயர்களாகிய ‘அச்சுதா அனந்தா கோவிந்தா’ முதலிய திருநாமங்களையே உச்சரிக்கின்றனர் என அறிகிறேன். (அறிந்தவர் திருத்துக).
காலச்சூழ்நிலைகளின் காரணமாகச் சமயப் புறவொழுக்கங்களில் மாறுதல்கள் அவ்வப்பொழுது நிகழ்கின்றன.
//
முதலில் அச்யுத அனந்த கோவிந்த நாமங்கள் ஆசமநத்தின் போதே சொல்லப்படுவன அங்க ந்யாசம் கேசவாய, மாதவாய என்று ஆரம்பிக்கும்
இது இக்காலமா எக்காலமா என்று அறிய சில பிரமாணங்கள்
வியாசர் – போதாயன தர்மம்
அப்ரயதோ பிஹிஸிக்தஹ ….. ஆசம்யா (எல்லா வைதீக காரியத்தின் முன்னும் ஆசமநம் சேய்ய வேண்டும்)
வ்யாசர் இந்த நாமங்களை பற்றி கூறுவதாவது – அச்யுத aஅணந்த கோவிந்த நாமா உச்சாரண பேஷஜத் நாச்யந்தி சகல ரோக: சத்யம் சத்யம் வதாம்யஹம்.
இது தமிழ் வாக்கை போலவே உள்ளதால் மொழி பேயர்ப்பு தேவை இல்லை என்றே நிணைக்கிறேன். இந்த ஆசமநத்திற்க்கு வேத ப்ராமானம் இங்கே
த்ரி: ஆசமேத், த்வி: பரிம்ரிஜ்ய, சாக்ரித் உபாஸ்ப்ரிஸ்யா, ஷிர
சக்ஷுஷீ நசிகே ஷ்ரோத்ரே ஹ்ரிதயம் ஆலப்ய (ஆசமநம் செய்யும் முறை இங்கு விளக்கப்படுகிறது)
ச்ம்ரிதி சந்த்ரிகை சொல்லுவதாவது
ய: க்ரிய குருதே மோஹத் அநாசம்ய ஏவ …. (ஆசமநம் செய்யாமல் எந்த கர்மாவயும் தொடங்கலாகாது)
- இந்த அச்யுத அணந்த கோவிந்த நாமங்களை சொல்லி ஆசமநம் செய்வது குறைந்த பட்சம் வ்யாசரின் காலத்திலிருந்து எண்று தெரிகிறது. என்வே இது காலச்சூழ்நிலைகளின் நிற்பந்த்தங்ளையும் தாண்டி வழி வ்ழியாக நல்ல முறையில் கடைபிடிக்கப்பட்டு வறுகிறது
ஏன் இந்த நாமாக்களை சொல்ல வேண்டும், இதற்க்கும் “3 levels of conciousness” என்பதற்க்கும் என்ன தொடர்பு, அது காயத்ரியுடன் எவ்வாறு தொடர்புடையது என்பதெல்லாம் வேரு கதை.
நமது நாட்டம், சரியான ஒன்றை சுட்டிக்காட்டிய போதும் அது இல்லை என்று நமது கண்களையும் மறைக்கும் – தவறு ஒரு பக்கம் இருக்க அதை ஒத்துக்கொள்ளாமலும் அதை களையாமலும் நாம் குறை கூறுவதோ வேறொன்றை – வேறோருவரின் என்னத்தை
இங்கு முனைவர் அய்யா சைவ சித்தாந்தப்படி சிவ பெருமானையே பரமாத்வாவாக உரைப்பதில் யாருக்கும் வேறு எண்ணம் ஏற்படவில்லை – அப்படி செய்கையில் சில விஷயங்கள் சமஸ்க்ரித இலக்கனத்திற்க்கோ, அல்லது வராலாற்று நிகழ்வுகளுக்கோ முரணாக இருக்குமாயின் அதை எடுத்துச்சொல்வதில் தவறில்லை என்று நினைக்கிறேன்- இதை முனைவர் அய்யாவும் ஏற்றுக் கொள்வார் என்றே நம்புகிறேன்
மேலும் பற்பல விஷயங்களை அறிந்த முனைவர் அய்யாவும் என அறிகிறேன். (அறிந்தவர் திருத்துக).என்றே தான் சொல்லியுள்ளார்.
Very good article sir!!!
//
வ்யாசர் இந்த நாமங்களை பற்றி கூறுவதாவது – அச்யுத aஅணந்த கோவிந்த நாமா உச்சாரண பேஷஜத் நாச்யந்தி சகல ரோக: சத்யம் சத்யம் வதாம்யஹம்.
இது தமிழ் வாக்கை போலவே உள்ளதால் மொழி பேயர்ப்பு தேவை இல்லை என்றே நிணைக்கிறேன். இந்த ஆசமநத்திற்க்கு வேத ப்ராமானம் இங்கே
//
இதந் அர்த்தம் –
இந்த சுலோகம் விஷ்ணுதர்மம் என்னும் புராணத்தில் பதினெட்டாம் அத்தியாயத்தில் உள்ளது. இப்புராணத்தில் இது சௌநக மஹரிஷியின் வாக்கியமாக அமைந்துள்ளது. ஆதி சங்கரர் விஷ்ணு ஸஹஸ்ரநாம பாஷ்யத்திலும், வைணவ ஆச்சாரியாரான பெரியவாச்சான்பிள்ளை தொண்டரடிப்பொடியாழ்வாரின் “திருமாலை” பிரபந்த வியாக்கியானத்திலும் இந்நூலிலிருந்து குறிக்கோள்களைக் காட்டியுள்ளனர்.
//“நாராயண” நாமத்தை ஆகுபெயராக எடுப்பது வெறும் கருத்துச் சுதந்திர விஷயம் அல்ல; அது இலக்கணப்பிழை//
தமிழும்வடமொழியும்நன்கு கற்ற ஒருவரிடம் கேட்டபொழுது அவர் தந்த விளக்கம்.1.நாராயணன் என்பது அவயவப்பொருள் பற்றிக் காரணப் பெயராய் நின்றே பரமசிவனை உணர்த்தும்(அவயவப்பொருளாவது பகுதி,விகுதி முதலியனவாக வரும் பகுபத உறுப்புக்கள். 2. நாராயணன் என்பது ஒருமொழியாய் உயிர்த் தொகுதியை ஒத்து நிற்பவன் என்னும் பொருளுடையதாய்க் காரணப் பெயராய்ப் பரமசிவனையே குறிக்கும். 3. நரர் என்பது உயிர்களின் தொகுதிப் பெயராய் நிற்கும். 4. நரர் + அண் எனத் தொகுதிப்பொருள் பற்றி அண் விகுதி வரும். 5. இதன்மேல் யகர விகுதி வரும். இது விகுதிமேல் விகுதி. 6. இவையனைத்தும் சேர நர என்பது முதல் நீண்டு நாராய் என ஒருபகுதியாய் நிற்கும். இதன்மேல் வினைமுதற்பொருள் உணர்த்தும் யு என்பது வரும்.7. இந்த யு அநஎனத்திரியும். இப்பொழுது நாராய் அந எனச்சொல்வடிவம் கிடைக்கும். 8. வினைப்பெயர் விகுதியில் நின்ற நகரம் ணகரமாய்த் திரியும் என்பது விதி இதனால் நாராயண எனச் சொல்வடிவம் கிடைக்கும். 9. இது யுகர விகுதியை உடைய சொல்லாய் இருப்பதனால் நாராயண என்னும் ஆண்பால் சொல்லுக்கு நாராயணீ என்னும் பெண்பாற்சொல் அமைகின்றது. யு விகுதியாய் இல்லையாயின் இங்ங்அனம் பெண்பாற்சொல் அமையாது. 10. இங்ங்அனம் நர என்னும் பகுதியுடன் விகுதிமேல் விகுதி சேர்த்துப் புணர்வதனால் நாராயண என்னும் சொல்வடிவம் கிடைக்குமென்பது வடமொழி இலக்கண விதி. இதற்கு உரியைலக்கணவிதிகள்: 1. நர என்னும் தொகுதிப்பெயர் அண் விகுதி பெறுதற்கு “தஸ்ய சமூஹ பி க்ஷாட்ய்ஹிப்ய அண்” என்பது விதி. 2. நர என்பது நார எனமுதல் நீளுவதற்கு “அத உபாதாய” என்பது விதி. 3. இதன் மேல் யகர விகுதி வந்து புணர்ந்து நாரய் எனவருவதற்கு ” உபமாநாத் ஆசாரோ” , ” கர்து க்யங் ஸ லோபஸ்ய ” என்பன விதி. இது நாராயு எனநிற்கும். 4. நாராய் என்பதில் உள்ள ர – ரா என நீளுதற்கு ” அக்ருத் சார்வ தாதுகயோ” என்பது விதி. 5. நாராயு என்பதில் உள்ள யு அந எனத் திரியும். இதற்கு விதி “யுவோ நா கெள” என்பது. இது கருத்தாப் பொருளை உணர்த்தும் இங்ஙனம் நாராயந என்பது வரும். 6. இந்த நாராயண என்பது நாராயணஎனவருவதற்கு “ரஷாப் நோணச மான பதே” என்பது விதி. இவ்வாறு நாராயண என்பது காரணப் பெயராகவரும்.இதனால் உயிர்களோடு ஒத்து நிற்பவன் என்னும்காரணம் பற்றி நாராயணன் என்னும் நாமம் பரமசிவனொருவனுக்கே உரியது என வியாகரணவிதியால் பெறப்பட்டது. இங்குக் காட்டப்பட்ட சூத்திரங்கள் பாணிணியுடையவை.பாணிணியின் “அஷ்டத்யாயி”என்பது தமிழ்ப்பல்கலைக் கழகத்தினரால்மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்லது. நாராயணன் என்னும் பெயரைத் திருமாலுக்கு மட்டுமுரியதாகக் கூறஎந்த இலக்கணமிடம்தருகின்றதோ அதேஇலக்கணம் சிவனுக்கெஉரியதாகக் கூற உரிமைதருகின்றது. திருநெல்வேலிச் சைவர்கள் நாராயணன் என்றபெயரைச் சூட்டிக்கொள்வதற்கு இதுவேகாரணம்..
//
தமிழும்வடமொழியும்நன்கு கற்ற ஒருவரிடம் கேட்டபொழுது அவர் தந்த விளக்கம்
//
அவர் கட்டாயமாக வியாகரணம் கற்கவில்லை என்பது தெளிவு நாராயந என்பதை தான் நீங்கள் கூறுவது போல பிரிக்க முடியும் – இப்படி திரியுமாயின் நாராயந என்ற வார்த்தைக்கே அவசியம் இல்லாமல் போகிடும்.
மேலும் இந்த வாக்கு வேடிக்கையாகிடும் – நாராயணத் பிரம்ம ஜாயதே நாராயணத் ருத்ரோ ஜாயதே – அதெப்படி நாராயண என்ற சொல்லால் அறியப்படும் பரம சிவன் பிரம்மனை படைத்தார், ருத்ரனை படைத்தார் ஆனால் விஷ்ணுவை படைத்ததாக சொல்லவில்லை ?
வேதத்தில் இது போல பல விஷயங்கள் அனர்த்தமாகும் அபாயம் வரும்
/. புருஷ சப்தம் யௌகிகமாக (ஆகுபெயராக) உடலுள்ள ஜீவான்மா யாரையும் குறிக்கலாம் (புருஷ = உடலிலே வசிக்கிறவன்). பரமான்மாவையும் குறிக்கலாம் (இதையத்தில் உள்ளதால்). ரூடியாக (இயற்கையாக உள்ள பெயராகக்) கொண்டால் “புருஷ” சப்தம் நாராயணனாகிய திருமாலையே குறிக்கும் என்பது சாஸ்திர பிரஸித்தம். இதை ஸாயணர் முதலிய வேத பாஷ்யகாரர்கள் புருஷஸூக்தத்தின் அவதாரிகை “யில் கூறியுள்ளனர்./ “புருஷோவை ருத்ரஸ் ஸன்மஹோ நம:” எனும் இந்த வேத வசனத்தில் ருத்திரநாமம்வந்துள்ளது. இதற்குப்பொருள்யாது.? “தத்புருஷாய வித்மஹே மஹாதேவாயதீமஹீ| தந்நோ ருத்ர: ப்ரசோதயாத்|| என்னும் வேதமந்திரத்தில் தெளிவாகப் புருஷன் நாமம் சிவனுக்கு உரியதாகத் தெரிகின்றது.. புருஷசப்தம் விஷ்ணு காயத்ரியில் இல்லை என்று சொல்லப்படுகின்றது. புருஷன் சிவன் என்னும் கருத்தால் தான் ஸ்ரீருத்ரத்துடன் புருஷசூக்தமும் சிவன் திருமுன் சைவ அந்தணர்களால் ஓதப்படுகின்றது. ஸ்ரீசூக்தம், புருஷசூக்தம் இரண்டிலும் சுமார்த்தர்கள்பாடம் ,வைணவர்கள் பாடம் என்று இருவகை இருப்பதாகத் தெரிகின்றது. மாத்துவர்கள் பாடமும் இருக்கின்றதா அல்லது இந்த இருபாடங்களில் ஒன்றையேஅவர்கள் ஏற்றுக் கொண்டுள்ளார்களா, தெரியவில்லை.
//
தத்புருஷாய வித்மஹே மஹாதேவாயதீமஹீ| தந்நோ ருத்ர: ப்ரசோதயாத்
//
தத்புருஷாய வித்மஹே மஹாதேவாயதீமஹீ| தந்நோ ருத்ர: ப்ரசோதயாத்|| என்னும் வேதமந்திரத்தில் தெளிவாகப் புருஷன் நாமம் சிவனுக்கு உரியதாகத் தெரிகின்றது..
அந்த ருத்ரன் தான் மௌன வ்யாகத்தினாலேயே ஞானத்தை பெருக்கும் பரமசிவ பெருமான் இல்லை என்று நீங்கள் சொல்கிறீர்கள்
//
.. புருஷசப்தம் விஷ்ணு காயத்ரியில் இல்லை என்று சொல்லப்படுகின்றது.
//
ஆம் இல்லை தான்- ஆனால் விஷ்ணு காயத்ரியில் நாராயணாய வித்மஹே வாசுதேவாய தீமஹி தன்னோ விஷ்ணுப் ப்ரசோதயாத் என்று நாராயண மற்றும் வாசுதேவன் என்னும் பெயர் விஷ்ணுவுக்கு உரியதாக சொல்கிறது
முனைவர் அவர்களே,
// “ரஷாப் நோணச மான பதே” //
இதன் சரியான version: “ரக்ஷாப்யாம் நோண ஸமாநபதே”. இது அஷ்டாத்யாயி 8.4.1 சூத்ரமாகும். இந்தவிதிப்படியும், “நாராயந” என்னும் ஆகுபெயர் “நாராயண” என்று திரிய வாய்ப்பில்லை. ஏன் என்று பார்ப்போம். முதலில் இதன் ஆங்கில மொழிபெயர்ப்பும் தமிழ் மொழிபெயர்ப்பும்:
இந்த விதிப்படி, “க்ருஷ்ணன்”, “கர்ணன்” முதலிய சொற்கள் வரும். இதில் ‘ஷ்ண’, ‘ர்ண’ என்னும் எழுத்துக்குழு ஸம்ஸ்கிருதத்தில் ஒரே எழுத்தாகக் கருதப்படுகிறது (conjunct consonant with vowel modifier ‘a’). “நாராயந” என்று வருவதில், ‘ர’-வுக்கும் ‘ந’-வுக்கும் இடையே ஒரு ஆ-காரமும் யகாரமும் உள்ளது.
இதற்கு அடுத்த (8.4.2) விதியின்படியும் ‘ந’ காரம் ‘ண’ காரமாக மாற இடமில்லை. இந்த விதியும், முன்விதியும் பகாபதத்திற்கே உரியது. ஆகையால்,
என்னும் சொற்களில் நகாரம் ணகாரமாகத் திரியாமல் நகாரமாகவே நின்றது.
கடைசியாக, மூன்றாவது விதியின்படி தான் நகாரம் ணகாரமாக மாறும். இந்த விதியே நான் காட்டியது: “பூர்வபதாத் ஸம்ஜ்ஞாயாம் அகஹ” (8.4.3). இந்த விதிப்படி, ஆகுபெயரல்லாத சிறப்புப்பெயராக இருந்தால் தான் நகாரம் ணகாரமாக மாறும்.
ஆகையால், நாராயணன் என்னும் பெயரை காரணப்பெயராகவும் ஆகுபெயராகவும் எடுக்க வாய்ப்பில்லை.
புருஷ என்னும் பெயர்–
ருத்ர காயத்ரியின் படி “தத் புருஷாய” என்று மட்டும் வைத்துக்கொண்டு பார்த்தால், அதற்கு அடுத்து வரும் கருட காயத்ரியிலும் “தத் புருஷாய” என்று வருகிறது:
அப்படியானால் திருமாலுடைய வாகனமாகிய கருடனுக்கும் “புருஷ” என்னும் பெயர் பொருந்துமெ? ஆகையால், இங்கு “தத் புருஷாய” என்பதை வைத்து “புருஷ” சப்தம் ஒருவருக்கு மட்டுமே அஸாதாரணமாகிய பெயர் என்பதை ஏற்க இடமில்லை. புருஷ ஸப்தம் திருமாலைக் குறிக்கும் என்பது பாத்ம புராணத்தில் உள்ளது.
// ஸ்ரீசூக்தம், புருஷசூக்தம் இரண்டிலும் சுமார்த்தர்கள்பாடம் ,வைணவர்கள் பாடம் என்று இருவகை இருப்பதாகத் தெரிகின்றது. மாத்துவர்கள் பாடமும் இருக்கின்றதா அல்லது இந்த இருபாடங்களில் ஒன்றையேஅவர்கள் ஏற்றுக் கொண்டுள்ளார்களா, தெரியவில்லை. //
ஒரு மாறுபாடும் இல்லை. மேலும், ஸ்மார்த்த, வைணவ, மாத்வர்கள் எல்லோரும் விஷ்ணுவுக்குத்தான் புருஷ ஸூக்தம் இட்டுள்ளனர். வைணவரல்லாத ஸாயணரும், அவர் காலத்திற்கும் முன் வைணவரல்லாத பட்ட பாஸ்கரரும் புருஷ ஸூக்தத்திற்கு “நாராயணனை உபாஸிக்கும் சூக்தம்” என்றே பாஷ்யமிட்டுள்ளனர். இப்படியே முத்கலசாகையைச் சேர்ந்த புருஷ ஸம்ஹிதையும், வேதத்தை ஏற்போர் அனைவரும் ஏற்கும் சௌநகரின் மிகப்பிராசீனமான ரிக்-விதானமும், சௌநக ஸ்மிருதியும், பாகவத புராணமும், விஷ்ணு புராணமும், மேலும் பல ஸ்மிருதிகளும் புருஷ ஸூக்தத்தில் படிக்கப்படுபவன் “நாராயணன், விஷ்ணு, வாஸுதேவன் என்னும் பெயர்களால் படிக்கப்படும் திருமாலே” என்று அருதியிடுகின்றன.
எந்த இதிஹாஸ-புராண-ஸ்மிருதி நூலிலும் புருஷ ஸூக்தத்தில் படிக்கப்படுவது சிவன் என்று சொல்லப்படவில்லை. புருஷ ஸூக்தத்தின் இரண்டாம் அநுவாகத்திலேயே “ஹ்ரீச்ச லக்ஷ்ச்ச தே பத்ன்யௌ” என்று திருமகளுக்கு கணவனாகிய விஷ்ணுவைத்தான் சொல்லுகிறது.
காலங்காலமாக இப்படி வைதிக மரபில் அனைவரும் புருஷ ஸூக்தம் திருமாலுக்கே என்று மொழிந்திருக்க, அதை சிவனுடையது என்று சொல்வது நவீனமான ஒரு கண்ணோட்டம்.
என்னுடைய கட்டுரைகளையும் மறுமொழிகளையும் அக்கறையுடன் படித்துத் தம் கருத்துக்களை வழங்கி வரும் கந்தருவனுக்கும் மற்றையோருக்கும் என் நன்றி.
// இதன் சரியான version: “ரக்ஷாப்யாம் நோண ஸமாநபதே”. இது அஷ்டாத்யாயி 8.4.1 சூத்ரமாகும். //
மன்னிக்கவும்; “ரஷாப்யாம் நோ ண: ஸமானபதே” என்று மாற்றிக் கொள்ளவும்.
திரு கந்தர்வன் அவர்கள் புருஷசுக்தத்திற்கும் ஸ்ரீசுக்தத்திற்கும் கொடுத்துள்ள விளக்கத்தின்படி அவை முறையே விஷ்ணுவுக்கும் இலட்சுமிக்கும் உரியனஎன அறிகின்றேன். எங்கள் ஊரில் உள்ள சிவன்கோவிலில் பர்சாரகர்கள் முதல் வேதம் ஓதுபவர்கள் வரை சிவன்கோவில் நிவந்தங்கள் பெற்றுக் கொண்டு ஊழியம் செய்பவர்கள் ஸ்மார்த்த பிராமணர்கள். இங்கு புருஷசூக்தத்தையும் ஸ்ரீசுக்தத்தையும் சிவனுக்கு முன்னும் அம்பிகைக்கு முன்னும் ஓதுவது தவறல்லவா? இவர்கள் பெருமாளுக்கு முன் ஸ்ரீருத்திரம் பாராயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்களா? இந்தக் கேள்வியை அவர்களிடமல்லவா கேட்கவேண்டும் எனக் கூறலாம். இது எங்கள் ஊரில் உள்ள சிவன்கோவிலில் மட்டுமல்ல , தமிழகம் முழுவதும் உள்ள நிலை. தென்னாடுடைய சிவனுக்கு உரிய திருமுறைகளை புறத்தே நிறுத்திவைத்து, சிவனுக்கு உரியதல்ல என்றும் , விஷ்ணுவுக்குவே உரியன எனக் கூறப்படும் மொழிகளைச் சிவனுக்கு முன் ஓதுவது அபத்தம் அல்லவா? இந்தப் பிழைக்கு யார் பொறுப்பு? தமிழ் இந்து வாயிலாக விளக்கம் பெற விரும்புகின்றேன்.
// இங்கு புருஷசூக்தத்தையும் ஸ்ரீசுக்தத்தையும் சிவனுக்கு முன்னும் அம்பிகைக்கு முன்னும் ஓதுவது தவறல்லவா? இவர்கள் பெருமாளுக்கு முன் ஸ்ரீருத்திரம் பாராயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்களா? இந்தக் கேள்வியை அவர்களிடமல்லவா கேட்கவேண்டும் எனக் கூறலாம். இது எங்கள் ஊரில் உள்ள சிவன்கோவிலில் மட்டுமல்ல , தமிழகம் முழுவதும் உள்ள நிலை. தென்னாடுடைய சிவனுக்கு உரிய திருமுறைகளை புறத்தே நிறுத்திவைத்து, சிவனுக்கு உரியதல்ல என்றும் , விஷ்ணுவுக்குவே உரியன எனக் கூறப்படும் மொழிகளைச் சிவனுக்கு முன் ஓதுவது அபத்தம் அல்லவா? இந்தப் பிழைக்கு யார் பொறுப்பு? //
கேட்பது தவறானால் மன்னிக்கவும் — சைவ ஆதீனங்களில் உள்ள சமயத் தலைவர்கள் இவ்விஷயத்தைப் பற்றி என்ன கூறுகிறார்கள்?
முனைவர் அய்யா,
அப்படி கந்தர்வன் அவர்கள் விளக்கம் சொல்லவில்லை என்றே நினைக்கிறேன் – அவரே சொன்னபடி புருஷ சூக்ததிற்கு பாஷ்யம் எழுதிய பல நடு நிலையாளர்கள் கூறியதாக சொல்கிறார்.
எனக்கு தெரிந்த விளக்கம் ஒன்று ஒரு த்ருஷ்டாந்ததின் மூலம் சொல்ல விரும்புகிறேன் –
“சேவிக்க வேண்டும் அய்யா சிதம்பரம்” என்று ஒரு பாடல் உள்ளது அதை முதல் சரணம் முடியும் வரை அப்படியே நடராஜருக்கும் பொருத்தி பாடலாம், தில்லை கோவிந்தராஜருக்கும் பொருத்தி பாடலாம் – இரண்டாம் சரனத்தில் தான் சிங்காரமான சிவ கங்கையில் மூழ்கி, சிவகாமி சந்நிதி முன்பாகவே வந்து என்று சிவ-பார்வதி நாமங்கள் எடுக்கப்படுகின்றன
முதல் சரணம்
“சேவிக்க வேண்டும் சிதம்பர மூர்த்தியாம் தேவாதி தேவன் திரு சந்நிதி வந்து”
இரண்டாவது சரணம்
“சிங்காரமான சிவ கங்கையில் மூழ்கி, சிவகாமி சந்நிதி முன்பாகவே வந்து பாங்ககவே பிரதக்ஷினமும் செய்து பக்தர்கள் சித்தர்கள் பணிவுடனே தொழ”
சரியான விளக்கம் தான என்று தெரியவில்லை அனால் பொருத்தமான த்ருஷ்டாந்தம் என நம்புகிறேன்.
முனைவர் சார், நீங்கள் செய்வது ஆரோக்கியமான வாதமாகத் தெரியவில்லையே? நீங்கள் சமயவாதியாகப் பேசலாம் தவறில்லை, ஆனால் அதுவே வேறு யாராவது, அதிலும் ஒரு வைணவர், அதிலும் குறிப்பாக வெகுவாக வெறுக்கப்படும் கந்தர்வன் அவர்கள் கூறினால் உடனே அவரை ‘சமயவாதி’, ‘சாதிவெறியன்’, ‘வடமொழி வெறியன்’ என்றெல்லாம் முத்திரை குத்துவது நியாயம்தானா??
சமயரீதியாக வாதாட முடியவில்லை என்றால் உடனே சமஸ்க்ருத-தமிழ் சர்ச்சை, மொழிப்ரச்ச்சனை என்று எதையாவது தொடங்கிவிடுகிரீர்களே. கந்தர்வன் ஒன்றும் சமஸ்க்ுத வெறியரல்லவே, தேவையான அளவு ஆழ்வார்களின் பாசுரங்கள், சங்க இலக்கியங்கள் எல்லாவற்றிலிருந்தும் மேற்கோள் காட்டுகிறாரே!
நான் ஒரு வெக்கம் கெட்டவன், இந்த தளத்தில் மறுமொழி எழுதக்கூடாது என்று நினைத்தாலும், மீண்டும் மீண்டும் எழுதுகிறேன்…
//அவதாரிகை “யில் கூறியுள்ளனர்./ “புருஷோவை ருத்ரஸ் ஸன்மஹோ நம:” எனும் இந்த வேத வசனத்தில் ருத்திரநாமம்வந்துள்ளது. இதற்குப்பொருள்யாது.? “தத்புருஷாய வித்மஹே மஹாதேவாயதீமஹீ| தந்நோ ருத்ர: ப்ரசோதயாத்|| என்னும் வேதமந்திரத்தில் தெளிவாகப் புருஷன் நாமம் சிவனுக்கு உரியதாகத் தெரிகின்றது.//
முனைவர் சார், நீங்கள் எனக்கு எழுதிய மறுமொழியை சற்று படியுங்கள், அதில் “ருத்திரர் வேறு, சிவனார் வேறு” என்று ஜாபாலோபநிஷதம், திருமுறைகள் என்று எண்ணற்ற சான்றுகளை அளித்தீர்கள்.
இப்பொழுது இங்கு நீங்கள் எழுதியதையும் சற்று படியுங்கள், இங்கு ருத்திர காயத்ரி சிவனுக்குப் பொருந்தும் என்கிறீர்கள். நீங்கள் முன்னால் சொன்னபடி “ருத்திரர் வேறு, சிவபெருமான் வேறு” என்றால் “தன்னோ சிவ ப்ரஜோதயாது” என்று (ஏதாவது காயத்ரி மந்திரம் இருந்தால்) அதைத்தானே ‘சிவ காயத்ரி’ ஆக ஏற்கவேண்டும்.. இது ‘ருத்திர காயத்ரி’ ஆயிற்றே!
தேவைப்படும்பொழுது, சிவனும் ருத்திரரும் ஒன்று, மற்ற நேரம் இருவரும் வெவ்வேறு! எப்படிசார் இது சாத்தியம்??
இறுதியாக, கந்தர்வன் அவர்கள் வெகுவாக வேதங்கள் மற்றும் இதர சமஸ்க்ருத இலக்கியங்களிலிருந்து சான்று அளிப்பதால் அவரை “சாதி வெறியர்”, “வடமொழி வெறியர்” “தமிழை வெறுப்பவர்” என்றீர்கள்.
வேதங்கள் “சிவபெருமான் ஒருவரே பரம்பொருள்” என்று சொல்லியிருந்தால், நீங்கள் திருமுறைகளை (ஏன் தமிழையே) சீண்ட மாட்டீர்கள் போலிருக்கிறதே!