முகப்பு » அரசியல், சமூகம், நிகழ்வுகள்

வறுமைக்கும் உண்டோ மதம்? பா.ஜ.கவின் ஜூலைப் போராட்டம்

July 21, 2010
-  
அச்சிட அச்சிட

tamilnadu_poor_govt_school”என்னா கண்ணு, என்னா ஆச்சு உனக்கு? பசிக்குதா?” வாடிய முகத்துடன் சோகமாகப் பள்ளியிலிருந்து வந்த தன் மகள் மகேஸ்வரியைப் பார்த்து கண்ணம்மா கேட்டாள். அந்தக் குடிசைப் பகுதிக்கு அருகில் உள்ள அரசுப் பள்ளியில் தான் மகேஸ்வரி 4-ஆம் வகுப்பு படிக்கிறாள்.

“அம்மா அம்மா.. இன்னிக்கு, ஸ்கூல்ல சில பிள்ளைங்கள மட்டும் பேர் சொல்லித் தனியாக் கூப்பிட்டாங்கம்மா. ரோஸ்மேரி, அப்துல்லா, ஸ்டீபன், அப்றம் சரவணன், சீனிவாசன்… ம்ம்ம்.. ஞாயித்துக் கிழமை காலைல கருப்பு புஸ்தகத்தை கையில் வெச்சுக்கிட்டு கூட்டத்தோட சர்ச் போவானுங்களே அந்தப் பசங்க.. அப்றம் அருள்ராஜ், ரஃபீக், ஸ்டெல்லா… ” என்று அடுக்கத் தொடங்கியது குழந்தை.

“சரி சொல்லு, எதுக்கு?” – இடைமறித்து கேள்விக் குறியுடன் தன் மகளின் முகத்தைப் பார்த்தாள் கண்ணம்மா.

”இவங்களை எல்லாம் தனியாக் கூட்டிக்கிட்டுப் போனாங்க.. கூட்டிட்டுப்போயி அவங்க கைல எல்லாம் ஆளுக்கு ஒரு கவர்ல நிறைய பணம் போட்டுக் குடுத்தாங்க. அப்பா அம்மா படிக்கவெக்க எவ்ளோ கஷ்டப்படறாங்க. கவனமா எடுத்துப்போய் வீட்ல குடுங்க”ன்னு சொன்னாங்க.

நம்மளையும் கூப்பிடுவாங்கன்னு நானு, செல்வி, அர்ஜுன், காமாட்சி, குமாரு எல்லாரும் காத்துக்கிட்டே இருந்தோம்.. ஆனா எங்களைக் கூப்பிடவே இல்லம்மா. ஏமாத்தமா இருந்திச்சு. “அதெல்லாம் யேசு சாமி கும்பிட்டாதான் தருவாங்க, என்ன தெர்தா” அப்டீன்னு ஸ்டீபனும், அருள்ராஜும் பழிப்பு காட்டிட்டுப் போறானுங்கம்மா.. நம்ப அவங்களை விட ரொம்ப ஏழைங்க தான? பின்ன ஏம்மா எனக்குப் பணம் தரல?”

அப்பாவியாக மகள் சொன்னதைக் கேட்டு அதிர்ச்சியடைந்தாள் கண்ணம்மா. அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை. ஏதாவது கிறித்தவ நிறுவனம் பணம் வழங்குகிறதோ என்று நினைத்தாள். எதற்கும் பக்கத்து வீட்டு பானு அக்காவிடம் சாயங்காலம் கேட்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள்.

*************

இப்படிப் பட்ட சம்பவங்கள் தமிழகத்தின் அரசுப் பள்ளிகளில் கடந்த ஒருவருடத்திற்கும் மேலாக அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. வெள்ளை உள்ளம் படைத்த சிறு குழந்தைகளின் உள்ளங்களிலும் சிறுபான்மைவாத அரசியலின் விஷம் தீண்டி அவநம்பிக்கைகளையும், பரஸ்பர சந்தேகங்களையும் உருவாக்கிக் கொண்டிருக்கிறது.

மிஸ்ரா கமிஷன், சச்சார் கமிட்டி என்று கமிஷன்களின் பரிந்துரைகளைக் காரணம் காட்டி “இந்தியாவின் வளங்கள் மீது முதல் உரிமை சிறுபான்மையினருக்குத் தான், குறிப்பாக முஸ்லீம்களுக்கு.. அதை மத்திய அரசு வலியுறுத்தும்; நடைமுறைப் படுத்த ஆவன செய்யும்” என்று மிகுந்த நடுநிலையோடும், மதச்சார்பற்ற தன்மையோடும் இரண்டு வருடம் முன்பு பிரதமர் மனமோகன சிங்கர் அறிவித்தது ஞாபகம் இருக்கலாம். அதைத் தொடர்ந்து 2007ம் ஆண்டு முதல் பொருளாதார ரீதியாக நலிவுற்ற சிறுபான்மையினருக்கு (சிறுபான்மையினருக்கு *மட்டும்*) தனிக் கவனிப்பு, சலுகைகள் உண்டு என்று காங்கிரஸ் அரசு பச்சைக் கொடி காட்டியது. மத்திய அரசு எள் என்று சொன்னவுடனேயே, மற்ற மாநில அரசுகள் யோசித்துக் கொண்டிருக்கும்போதே, எண்ணையாக மாறி வழிந்தோட ஆரம்பித்து விட்டது சிறுபான்மை சேவக தி.மு.க. அரசு. அந்த விசேஷ சலுகைகளின் ஒரு பரிணாமம் தான் மேலே சொன்னது போன்ற சம்பவங்கள்.

வருடந்தோறும் ஏழை மாணவர்களின் கல்வி உதவிக்காக சில சேவை அமைப்புகளுக்கு நன்கொடை தருவதை நான் வழக்கமாகக் கொண்டிருக்கிறேன். அத்தகைய ஒரு சேவை அமைப்பின் தொடர்பில் உள்ள கண்ணம்மா போன்ற ஏழைத் தாய்மார்கள் பலர் அரசே முன்னின்று நடத்தும் இந்த அப்பட்டமான பாரபட்ச நடவடிக்கை பற்றி அந்த அமைப்பிடம் முறையிட்டிருக்கிறார்கள். அதன் வாயிலாகவே தமிழக அரசின் இந்த அதிகாரபூர்வ அநீதி பற்றி நான் அறிய நேர்ந்தது.

எல்லா ’சமத்துவ, ஜனநாயக, செக்யுலர்’ கட்சிகளும் கைகட்டி, வாய்பொத்தி இந்த அநீதிக்கு ஒத்து ஊதுகின்றனர். தங்களுக்கு வாக்களித்த ஏழை இந்துக்களுக்கு துரோகம் செய்து கொண்டிருக்கின்றனர். ஏழை மற்றும் நடுத்தட்டு இந்துக்களின் வயிற்றில் அடித்து, அவர்கள் கல்வியையும், வாழ்வுரிமையும் கீழே போட்டு மிதித்து நசுக்கும் இந்தத் திட்டத்திற்கு எதிராக பாரதீய ஜனதா கட்சி மட்டுமே குரல் எழுப்பியுள்ளது.

உதவித் தொகை சலுகைகள் பற்றிய விவரங்கள்:

tn_govt_education_assistance_to_minorities_table

இதில் கவனிக்க வேண்டிய  சில விஷயங்கள் -  இந்த உதவித் தொகை பெறுவதற்குத் தகுதியான “பொருளாதார ரீதியாக நலிவுற்ற” என்பதற்கான வரையறை வருட வருமானம் ஒரு லட்சத்திற்குக் குறைவாக  உள்ள குடும்பங்கள் என்று  கூறப் படுகிறது. மேலும், தாழ்த்தப் பட்ட மக்களுக்கு அரசு வழங்கும் உதவித் தொகையை விட இந்தத் தொகை அதிகமாக இருக்கிறதாம்.  அதோடு,  இடஒதுக்கீடால் பயன்பெறும் முஸ்லீம், கிறிஸ்தவர்கள் போக மீதமுள்ள கிறிஸ்தவர்கள், முஸ்லீம்களும் அரசு உதவி பெறுவதற்கு  இந்தத் திட்டம் வழிசெய்து விட்டது.  ஆனால் அதே அளவில் “பொருளாதார ரீதியாக நலிவுற்ற” ஏழை இந்துக்கள் திட்டமிட்டு வஞ்சிக்கப் பட்டிருக்கிறார்கள்.

ஜூலை மாதம் முழுவதும் இந்தப் பிரசினையை வலியுறுத்தி தமிழகம் எங்கும் போராட்டம் நடத்தப் போவதாக பாஜக அறிவித்து, போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.   பாஜகவின் கோரிக்கை  சிறுபான்மையினருக்கு உதவித் தொகை தரக்கூடாது  என்பது அல்ல;  இந்த உதவித் தொகை பாரபட்சமின்றி ஏழை இந்துக்கள் உட்பட அனைவரையும் சென்றடைய வேண்டும் என்பது தான் – இதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

மாணவர் சக்தி மூலம் திமுக ஆட்சியை அகற்றுவோம்: பாஜக

திங்கள்கிழமை, ஜூலை 12, 201

கோவை: எந்த மாணவர் சமுதாயத்தை வைத்து தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்ததோ, அதே மாணவர் சமுதாய சக்தியை வைத்து திமுக ஆட்சியை அகற்றுவோம் என்று பாஜக மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

pon_radhakrishnan_tn_bjpசிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படுவது போல இந்துக்களுக்கும் உதவித்தொகை வழங்கப்பட வேண்டும் என்று கோரி கோவை கவுண்டம்பாளையத்தில் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில் ராதாகிருஷ்ணன் பேசுகையில் பின்வருமாறு கூறினார்:

மத்தியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி [^] அரசு பொறுப்பேற்றதும், மீண்டும் ஆட்சியை பிடிக்க என்ன செய்ய வேண்டும் என்று ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. அதற்கு கிறிஸ்தவ, முஸ்லிம் சமுதாயத்தினரும் ஒட்டுமொத்த ஓட்டு வங்கிகளாக உள்ளனர் என்று கண்டறியப்பட்டு, அந்த ஓட்டுகளை பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வது என முடிவு செய்தனர்.

அதனால் சிறுபான்மையினரின் முன்னேற்றம் என்று 15 அம்ச திட்டத்தைக் கொண்டு வந்தனர். அதில் ஒன்றுதான் கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம். சிறுபான்மை என்பதன் கீழ் முஸ்லிம், கிறிஸ்துவ மக்களே மிகவும் பெரும்பான்மையாக உள்ளனர். அதனால் அவர்களுடைய ஒட்டுமொத்த ஓட்டுகளை பெறுவதற்காக கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தை கடந்த 2007ம் ஆண்டு முதல் மத்திய, மாநில அரசுகள் அமல்படுத்தி வருகின்றன.

நாடு முழுவதும் கடந்த 2008-09ம் கல்வியாண்டில் 5 லட்சத்து 12 ஆயிரத்து 657 பேருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. அதுவே 2009-2010ம் கல்வியாண்டில் 17 லட்சத்து 29 ஆயிரத்து 76 பேருக்கு வழங்கப்பட்டது. அந்த ஆண்டில் தமிழகத்தில் மட்டும் 1 லட்சத்து 12 ஆயிரத்து 364 பேருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.

இதன்மூலம் ஏற்கனவே திட்டமிட்ட இலக்கைவிட அதிகமாக உதவித்தொகை வழங்கியுள்ளனர். தமிழகத்தில் 1 முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் [^] 57,000 பேருக்கு உதவித்தொகை வழங்கத் திட்டமிட்டுவிட்டு, இறுதியில் 84,000 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் எந்த விதிமுறையும் பின்பற்றப்படுவதில்லை.

திமுக, காங்கிரஸ் [^] கட்சிகள் ஓட்டு வாங்குவதற்காக சிறுபான்மை சமுதாயத்தினருக்கு சலுகைகளை வாரி வழங்குகின்றன. அதேசமயம் அக் கட்சிகள் இந்து சமுதாயத்தைப் புறக்கணிக்கின்றன.

… இந்து மாணவர் சமுதாயத்திற்கு செய்யப்படும் இதுபோன்ற துரோகத்தை பாஜக ஏற்றுக் கொள்ளாது. எந்த மாணவர் சமுதாயத்தை வைத்து தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்ததோ, அதே மாணவர் சமுதாய சக்தியை வைத்து திமுக ஆட்சியை அகற்றுவோம்.

நன்றி: தட்ஸ்தமிழ் செய்தி

“காமராஜர் ஆட்சிக் காலத்தில் அனைத்து மாணவ மாணவிகளுக்கும் சமமான கல்வி அளிக்கப்பட்டது. அவரது ஆட்சியின்போது 18 ஆயிரம் பள்ளிகள் மூடப்படும் சூழல் ஏற்பட்டபோது, அனைத்து மாணவ மாணவிகளுக்கும் இலவசக் கல்வி வழங்குவதாக அறிவித்து, பள்ளிகள் மூடப்படுவதைத் தடுத்தார்.

மதமாற்றத்தை ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காகவே பள்ளிகளில் சிறுபான்மை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. மதமாற்றத்துக்கு சோனியா காந்தி துணைபோகிறார்; இதற்கு திமுக அரசும் உடந்தையாக இருக்கிறது. மதத்தின் பெயரால் வாக்குகளை அறுவடை செய்ய திமுக தயாராக இருக்கிறது.”

-  கோவையில் ஜூலை-18 கூட்டத்தில் பொன்.ராதாகிருஷ்ணன்

மேலும் பல இடங்களிலும் பாஜகவினரின் போராட்டம் நடந்து வருகிறது.

ஜூலை 25ம் தேதி கன்னியாகுமரியில் ஒரு லட்சம் பேர் திரளும் மிகப் பெரிய போராட்டம்:

இப்போராட்டத்திற்கான தயாரிப்புகள் சுறுசுறுப்பாக நடந்து வருகின்றன.  ”இந்து மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்க சமநீதி கேட்டு போராட்டம் நடத்தப்படுகிறது. இப் போராட்டத்தில் குடும்பம் குடும்பமாக கலந்து கொள்ளவேண்டும்” என்று  பா.ஜ.க.வினர் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.  இது தொடர்பாக  குமரி மாவட்ட பா.ஜ.க வெளியிட்டுள்ள துண்டு பிரசுரம்:

bjp_hand_out

நான் முன்பு ஒரு சமயம் எழுதிய சிறுபான்மை, பெரும்பான்மை, மனப்பான்மை என்ற கட்டுரையில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தேன் -

…. சிறுபான்மை என்ற சொல் இந்தியா முழுதும் மொத்தமாக மத அளவில் குறைந்த எண்ணிக்கையில் இருப்பவர்களைக் குறிப்பதற்காகவே பொதுவாகப் பயன்படுத்தப் படுகிறது. ஆனால் மதம் தவிர, மற்ற பல வகையிலும், ஒவ்வொரு பிரதேசங்களிலும் சாதி மற்றும் வேறு பல காரணங்களால் சிறுபான்மையினராகி அதன் காரணமாகவே அல்லலுறும் எத்தனையோ சமூகக் குழுக்கள் பற்றி தேசிய அளவில் யாருக்கும் அக்கறை இல்லை.. பாரதம் போன்ற பல்வேறு வகைப்பட்ட சமூகச் சூழல்கள் வலைப் பின்னலாக நிலவும் நாட்டில், சிறுபான்மை, பெரும்பான்மை என்ற பொதுப் படுத்துதலான குழு அடையாளங்கள் பெரும் குழப்பத்தையும், மயக்கத்தையும் தான் ஏற்படுத்துகின்றன …

The smallest minority on earth is the individual. Those who deny individual rights cannot claim to be defenders of minorities – Ayn Rand

“உலகில் எல்லாரையும் விட சிறுபான்மையானவன் தனிமனிதன் தான். தனிமனிதனுக்கான உரிமைகளை மறுப்பவர்கள் தங்களை சிறுபான்மையினரின் பாதுகாவலர்கள் என்று ஒருபோதும் அழைத்துக் கொள்ள முடியாது” – அயன் ராண்ட்

இந்திய, தமிழக அரசியல் சூழலில் இந்த ஆதாரமான கருத்தை நாம் மீண்டும் மீண்டும்  உரத்துச் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டிய தேவை உள்ளது. இதன் அடிப்படையில் பார்த்தால், உண்மையில் பா.ஜ.க தமிழகத்தில் நடத்தும் போராட்டம் ஒரு குழுவின், மதத்தவர்களின் நலனுக்கான போராட்டம் அல்ல. அநீதி இழைக்கப் பட்டுள்ள ஒவ்வொரு தனி மனிதனின் கல்வி உரிமையையும் காக்க எழுந்துள்ள மக்கள் இயக்கம்.

இது சமநீதிக்காக எழும் ஜனநாயகரீதியான போர்க் குரல். சலுகைகளை வேண்டி நடத்தும் அரசியல் பேரமோ, அச்சுறுத்தலோ அல்ல.

இந்த உரிமைக் குரல் ஓங்கி ஒலித்திடுக. இந்தப் போராட்டம் வெல்க! 

தொடர்புடைய பதிவுகள்

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

 

99 மறுமொழிகள் வறுமைக்கும் உண்டோ மதம்? பா.ஜ.கவின் ஜூலைப் போராட்டம்

  1. Indli.com on July 21, 2010 at 11:09 am

    வறுமைக்கும் உண்டோ மதம்? பா.ஜ.கவின் ஜூலைப் போராட்டம்…

    ”ஸ்டீபனும், அருள்ராஜும் பழிப்பு காட்டிட்டுப் போறானுங்கம்மா.. நம்ப அவங்களை விட ரொம்ப ஏழைங்க த…

  2. சீனு on July 21, 2010 at 12:02 pm

    Good post…

  3. Murali on July 21, 2010 at 12:36 pm

    I just saw the following link which throws the truths of bible..

    http://bibleunmaikal.blogspot.com paditheerkal enral Nithy pola bibleum “innuma intha ulakam ennai nambuthu endru solla thoanum”

  4. அமாவாசை ஆதிரை on July 21, 2010 at 1:03 pm

    சொந்த நாட்டிலே ஹிந்து குழந்தைகள்
    நொந்தழும் நாட்களும் வந்ததே
    இந்த வேதனை என்று மாறிடும் இழிசெயல்
    சிந்தை அரசியல்வாதிகள் வெந்திட
    வாஞ்சி வேங்கைகள் என்றெழும்?

  5. அமாவாசை ஆதிரை on July 21, 2010 at 1:28 pm

    நேதாஜி வீரமும் பகத்சிங் தியாகமும்
    ஹிந்து உதிரத்தில் மறையுமோ
    அன்னியர் அசுர குலத்தினராண்டிட
    அன்னை பூமியில் தருமம் அழியுமோ

    பிஞ்சு குழந்தையும் ஹிந்து என்பதால்
    புறக்கணிக்கும் புல்லர்கள் அரசினை
    வளைகரங்களும் வாளேந்தி போரிடும்
    நிலை வரும் இது சத்தியம்

    இரவின் நீள்கரம் அதர்ம அரசெனும்
    அரவொத்த தீயவர் நாட்கள் போய்
    எழுந்திடும் ஒரு புதிய விடியலாய்
    காவிப்புரட்சியே தேச பூபாளமாய்

  6. தஞ்சை வெ.கோபாலன் on July 21, 2010 at 2:58 pm

    மைனாரிடிகளின் ஒட்டுக்களை வாங்கி அரசாளத் துடிக்கும் போலி மதச் சார்பின்மை வாதிகளின் முகத்திரை இதன் மூலம் கிழிந்து விட்டது. மெஜாரிட்டி இந்து மக்களில் ஏழைகள் இல்லையா? இந்த பூமி அவர்களுடைய பூர்வீக சொத்து இல்லையா? இங்கு காட்டை அழித்து, மலைகளைத் தகர்த்து பூமியை உழுது, உணவளித்த பாரம்பரியம் இவர்களுடையது அல்லவா? இங்கு வந்து குடியேறிகள், மதமாற்றம் செய்த பின் மைனாரிட்டிகள் என்ற பெயரில் நம் உழைப்பில் கிடைத்த செல்வத்தை, இந்த அராஜக அரசியல் வாதிகள் தங்கள் இஷ்டத்துக்கு வாரி இறைப்பதை வாய் மூடி கைகட்டி இந்துக்கள் பார்த்துக் கொண்டிருக்க வேண்டுமா? இதற்கு ஒரு முடிவு வேண்டாமா? இதுதான் நம் மக்களுக்கு இறுதி வாய்ப்பு, இதைத் தவறவிட்டால் இந்த நாட்டில் இந்துக்கள் பிச்சைக்காரர்களாகத்தான் வாழ வேண்டி இருக்கும். சொரணை உள்ள இந்துக்கள் சிந்தித்து உடனடியாக இதற்கு முடிவு கட்ட பொங்கி எழ வேண்டும். செய்வார்களா? அல்லது பிரிட்டிஷ் ஆண்டால் என்ன இத்தாலி ஆண்டால் என்ன என்று வாயை மூடிக்கொண்டிருக்கப் போகிறார்களா? பார்ப்போம்.

  7. பா. ரெங்கதுரை on July 21, 2010 at 3:47 pm

    இந்து மாணவர்களுக்கும் உதவித்தொகை வழங்கக்கோரி தமிழக பா.ஜ. போராட்டம் நடத்துவது பாராட்டுக்குரியது. அதே நேரத்தில், பா.ஜ. அரசாளும் மாநிலங்கள் ஹிந்து மாணவர்களுக்கு இதேபோல கல்வி உதவித்தொகை வழங்கி முன்னோடியாகவும் திகழ வேண்டும்.

    அதே போல, ஒவ்வொரு ஹிந்துவும் இந்தியாவிற்குள்ளும், வெளிநாடுகளிலும் க்ஷேத்திராடனம் செய்ய மானியம் வழங்க பா.ஜ. அரசாங்கங்கள் முன்வர வேண்டும். இது ஹஜ் யாத்திரைக்குத் தரப்படும் மானியத்தைவிடக் குறையாததாக இருக்க வேண்டும்.

    - பா. ரெங்கதுரை

  8. rajesh on July 21, 2010 at 4:24 pm

    முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும். தமிழ் ஹிந்து வாசகர்கள் நாம் ஒன்று சேர்ந்து ஒரு முயற்சி செய்து பார்க்கலாம் என்று தோன்றுகிறது எனக்கு. நம்மால் முடிந்த அளவு குழந்தைகளுக்கு படிப்புக்கென பண உதவி செய்யலாமா?

    இதன் மூலம் ஒரு விழிப்புணர்வு வருமா? மற்ற வாசகர்களின் கருத்துகளை தெரிந்து கொள்ள ஆசை.

  9. chandramoulee on July 21, 2010 at 4:28 pm

    ஹிந்து தன்னுள் பிரிந்து கிடக்கும்போது இப்படியெல்லாம் நடக்கும்.. .திராவிடன், ஆரியன் என்ற பாகுபாடு என்று ஒழிகிற்தோ அன்றே இவை சரியாகி ஒரு ஆட்சி மாற்றம் ஏற்படும்.

    அது வரை நாம் பார்ப்பான் அல்லாதவன் என்று அடித்துக்கொண்டே இருக்கவேண்டியதுதான்.

    ஈஸ்வரா ! எங்கள் தமிழ் நாட்டை காப்பாற்று !

  10. ss on July 21, 2010 at 4:40 pm

    சமீபத்தில் தமுமுக மாநாடு நடந்ததே?? பார்த்தீர்களா?? அவ்வளவு ஒழுங்கு முறை, பேசிய ஒவ்வொருவரும் குறிக்கோள் என்ன, எதற்காக போராடுகிறோம் என்று தெள்ளதெளிவாக உணர்ந்து பேசினார், வந்து இருந்தவர்களும் அப்படியே.
    நம் மக்கள் இது போல் உறுதியுடன் செயல்பட்டு ஒன்று கூடி போராடினால் கட்டாயம் நம் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்.. !!! இதை பற்றி நம் மக்கள் என் முதல்வர், பிரதமர், ஜனாதிபதி ஆகிய மூவருக்கும் தெளிவாக தகுந்த ஆதாரங்கள் மற்றும் குறிப்புகள் (ஸ்டாடிஸ்டிக்ஸ்,டேட்டா) உடன் கடிதம் மூலம் அனுப்பினால் என்ன. இத்தளம் அதற்கு உதவியாக குறிப்புகள் மற்றும் ஆதாரங்களுடன் வெளியிட்டால் உதவியாக இருக்கும் ….

  11. ss on July 21, 2010 at 4:42 pm

    /////இதை பற்றி நம் மக்கள் ஏன் முதல்வர், பிரதமர், ஜனாதிபதி ஆகிய மூவருக்கும் தெளிவாக தகுந்த ஆதாரங்கள் மற்றும் குறிப்புகள் (ஸ்டாடிஸ்டிக்ஸ்,டேட்டா) உடன் கடிதம் மூலம் அனுப்பினால் என்ன. இத்தளம் அதற்கு உதவியாக குறிப்புகள் மற்றும் ஆதாரங்களுடன் வெளியிட்டால் உதவியாக இருக்கும் ….////

  12. R.Sridharan on July 21, 2010 at 6:02 pm

    பலே பலே
    ஒரு வழியாக பாரதீய ஜனதா துருப்புச் சீட்டை பிடித்து விட்டது
    இந்த அருவருப்பான, ஊழல் மலிந்த, குடும்ப,சிநேகித கழக ஆட்சிகளை ஒழித்து தமிழகத்தைப் பிடித்த நாற்பது வருட பீடையை ஒழிக்க வேண்டும்
    வாழ்த்துக்கள்

  13. Chandra on July 21, 2010 at 6:10 pm

    why this information of table not at all published in any news paper.
    இந்து மாணவர்களுக்கும் உதவித்தொகை வழங்கக்கோரி தமிழக பா.ஜ. போராட்டம் நடத்துவது பாராட்டுக்குரியது. அதே நேரத்தில், பா.ஜ. அரசாளும் மாநிலங்கள் ஹிந்து மாணவர்களுக்கு இதேபோல கல்வி உதவித்தொகை வழங்கி முன்னோடியாகவும் திகழ வேண்டும்.

    அதே போல, ஒவ்வொரு ஹிந்துவும் இந்தியாவிற்குள்ளும், வெளிநாடுகளிலும் க்ஷேத்திராடனம் செய்ய மானியம் வழங்க பா.ஜ. அரசாங்கங்கள் முன்வர வேண்டும்

    They can implement in Karnataka, Madhyapradesh, Gujarat, HP states first and insist on other states as well.

  14. ramasesha on July 21, 2010 at 7:09 pm

    This is stunningly bad news for us Hindus. Why should governments provide money to one religion versus another if it is “secular”? These Dravida Kazahaga Corrupt pigs have now started to bite the hands that feed them. Unless Tamils in TN start throwing out these corrupt politicians and their children, we will all be doomed. Fight now or die poor!

  15. Athiravi on July 21, 2010 at 8:02 pm

    பா ஜா கா இதை சட்ட ரீதியாகவும் அணுக கூடாது ?

    சட்ட ரீதியாக அணுகினால் வெற்றி கிடைக்காதா ?

    சட்டம் தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்.

  16. பிரத்யூஷ் on July 21, 2010 at 10:05 pm

    கோவையில் பா ஜ க நடத்திய ஆர்பாட்டம் மக்கள்(ஹிந்துக்கள் ) மனதில் ஒரு விழிப்புணர்வையும் அரசியல் கட்சிகள பார்க்கும் விததில் ஒரு மறுதலையும் நிச்சியம் ஏற்படுத்தி உள்ளது . அதற்காக உழைத்த அனைத்து கட்சி நிர்வாகிகளுக்கும் ,தொண்டர்களுக்கும் , மனமார்ந்த பாராட்டுகளை, வாழ்துக்களையும் தெரிவித்துகொள்கிறேன்.

    பா ரெங்கதுரை அவர்களின் கருத்துடன் முழுவதும் ஒத்துபோகிறேன்

    ராஜேஷ் அவர்களே உங்கள் ஆதங்கம் புரிகிறது ,
    நாம் எவ்வளவு தான் உதவ முடியும் என்று நீங்கள் நினைகிறீர்கள் , மிக சொல்ல்பமகவே இருக்கும் பிரக்டிகல்டிப்பிகில்ல்டீஸ் நிறய இருக்கும் .
    உங்கள் கருத்தினை ,எண்ணங்களை மிகவும் போற்றுகிறேன்

    //தமிழ் ஹிந்து வாசகர்கள் நாம் ஒன்று சேர்ந்து ஒரு முயற்சி செய்து
    பார்க்கலாம் //
    முதலில் நமக்கு ஒரு அறிமுகம் தேவை அதற்கான முதல்கட்டமாக தமிழ் ஹிந்து வாசகர்கள் மீட்டிங் ஒன்றை ஏற்பாடு செய்வோம் (தமிழ் ஹிந்துவின் ஒப்புதலோடு ) ஒத்த கருத்துகள் இருக்குமாயின் அனைவரும் தமிழ் ஹிந்து நிர்வாகத்திடம் விண்ணப்பம் வையுங்கள் .
    தமிழ் ஹிந்துவின் பதிவர்கள் மற்றும் வாசகர்கள் அறிமுக நிகழ்வாக அது அமையட்டும் .
    (நான் கடந்த இரண்டு மாதமாகத்தான் இவ்வலைதளத்தினை பாலோ செயிகிறேன் ,முன்பு தமிழ் ஹிந்து பதிவர் வாசகர் சந்திப்பு நடந்து உள்ளதா என்பதும் தெரியாது )

    பிரத்யூஷ் ராமகிருஷ்ணன்

  17. raja raman on July 22, 2010 at 12:19 am

    பொருளாதார ரீதியில் பின் தங்கிய இந்துக்களை மத மாற்றம் செய்ய இந்த வழி தூண்டும் என்பது வருத்தத்துக் கூறிய செய்தி.

  18. kargil jay on July 22, 2010 at 5:58 am

    பாஜகாவின் போஸ்டரில் எழுத்துக்கள் மட்டுமே இருக்கின்றன. எண்கள் இல்லை. எவ்வளவு பணம் கொடுக்கப்படுகிறது என்னும் தாக்கம் எங்களைக் காண்பித்தால் மட்டுமே எடுபடும். பாஜகாவின் முயற்சியை வாழ்த்துவதோடு, மக்களைச் சென்றடையும் விதம் இன்னும் நன்றாக எழுதவேண்டும். திருவாரூர் நரி போல் ஆர்பரிக்க வைக்கும் சொற்களைப் பயன்படுத்தவேண்டும்.

  19. vedamgopal on July 22, 2010 at 7:14 am

    முதல் தவறு காந்தி இஸ்லாமியர்கள் எட்டி உதைத்தும் அவர்களை கட்டிதழுவியது நம் நாட்டின் இறையாண்மைகே வேட்டு வைக்கும் முன்உதாரணம் ஆகும். இரண்டாவது தவறு காங்கிரஸ் மொழிவாரி மாநிலங்களை பிரித்ததாகும். மூன்றாவது தவறு காந்தி சுதந்திரத்திற்க்குபின் காங்கிரஸ்சை கலைக்கச்சொல்லியும் கேட்க்காமல் பிரிடிஷ்ஷாரின் பிரித்தாளும் கொள்கைளை உடும்பு பிடியாய் பிடித்துக்கொண்டு நேருவும் அவரது குடும்ப வாரிசுகளும் இன்றுவரை நாட்டை கூறுபோட்டுக்கொண்டிருக்கிறது. இப்பொழுது நடப்பது பிரிட்டிஷ் ஆட்சியைவிட மோசமான சர்வ அதிகார (சர்வாதிகார) ஆட்சி.
    சிறுபான்மையினர்கள் பெருன்பான்மையினரை அனுசரித்து சென்றால் பெரும்பான்மையினர் அவர்களை அரவணைத்து செல்லலாம். ஆனால் உண்மை நிலவரம் எப்படிஉள்ளது நாம் காந்தி சொன்ன எல்லாவற்றையும் மறந்துவிட்டு சிறுபான்மையினரை கட்டிதழுவி அவர்கள் கேட்காமலேயே பல சலுகைகளை அளித்து அரவணைக்கிறோம் ஆனால் அவர்கள் துளியும் அனுசரணையில்லாம் நாட்டை கூறுபோடும் எல்லாவிதமான செயல்களை தூண்டி அரசியல் நடத்தும் கட்சிகளை ஆதரிக்கிறார்கள்.
    சிறுபான்மையினர் என்றால் யார் ? இந்து மதத்தை சாராதோர் வெளிநாட்டிலிருந்து இங்குவந்து குடியிருப்பு உரிமை பெற்றவர்கள் மட்டும் தானா ? ஓட்டைகள் நிரம்பிய குழப்பமான சட்டம். மேலும் இங்கேயே பிறந்து வளர்ந்து சுயமாகவோ அல்லது கட்டாயத்தின் பேரிலோ பெரும்பான் மதத்ததிலிருந்து சிறுபான்மை மதத்திற்க்கு மாறியவர்களை எப்படி சிறுபான்மையினர் என்று ஏற்கலாம் ? மேலும் மதத்தை ஒருவன் மாற்றிக்கொள்ள உரிமை உண்டு என்றால் ஒருவனுக்கு தன் ஜாதியைமாற்றிக்கொள்ளும் உரிமை ஏன் இல்லை ? ஜாதி பிறப்பினால் ஏற்ப்பட்டது என்றால் மதமும்தான் பிறப்பினால் ஏற்ப்பட்டதாகும். எனவே மதம்மாறுவது நியாயம் என்றால் ஜாதிமாறுவம் நியாயம் ஆகும். ஒன்று மதமாற்றம் செல்லாது என சட்டம் கொண்டுவரவேண்டும் இல்லையேல் ஜாதிமாறுவது செல்லும் என்பதை ஏற்க்கவேண்டும். நாளைமுதல் என்னை தலித் என்று அரகாங்கம் ஏற்க்கவேண்டும் அவர்களுக்கு அளிக்கும் எல்லா சலுகைகளையும் எங்கள் வாரிசுகளுக்கும் அளிக்க வேண்டுகோள் வைக்கிறேன்

  20. இராபர்ட் மாணிக்கம் on July 22, 2010 at 9:52 am

    கர்த்தராகிய தேவன் உண்மையானவர் என்று தெரிந்து கொள்கிற பிள்ளைகளுக்கு அவர் ஆதாயம் காணப்பண்ணுவார் என்று ஜீவனுள்ள வேதப்புஸ்தகத்திலே போட்டிருக்கிறபடிக்கு இந்தியாவிலே அரசாங்கம் பண்ணுகிறவர்களின் புத்தியை தேவன் ஏவியிருக்கிறார். செக்யூலரிசம் என்கிற பேரிலே துரைத்தனத்தார் ஆளுகிற பட்டணங்களிலே கர்த்தருக்கு எதிராகப் போகிறார்கள். ஆனால் ஸீயோனின் ஆண்டவர் சோனியாவை பழைய ஏற்பாட்டின் எஸ்தரை போல விக்கிரக ஆராதனை நிரம்பிய இந்த தேசத்துக்கு அனுப்பி இந்த தேசத்து ஜனங்களை கர்த்தரின் மார்க்கத்திலே திருப்ப விக்கிர ஆராதனைக்காரர்களிடமிருந்தே தசமபாகத்தை வசூலிக்க வைத்திருக்கிறார். சிருஷ்டி கர்த்தாவாகிய ஆண்டவரை வணங்காமல் அவரது பூமியை அனுபவித்துக்கொண்டு விக்கிரகங்களை தொழுபவர்களின் சொத்துக்களை நியாயவான்களாகிய கர்த்தரின் பிள்ளைகளான கிறிஸ்தவர்கள் எடுத்துக் கொள்ளலாமென்று விவிலிய சத்திய வாக்கிலே காட்டியிருக்கிற படியால் உண்மையான கிறிஸ்தவ விசுவாசியான சோனியா காந்தி அம்மையார் அவர்கள் இந்த கட்டளைப் போட்டிருப்பது மிகவும் சரியானதே. இதை எதிர்க்கும் விக்கிரக ஆராதனை காரர்களுக்கும் தமிழ்ஹிந்து என்கிற சைத்தானின் ஊழியக் காரர்களுக்கும் ஐயோ கேடு. இனியாவது மனம் திரும்புங்கள். இல்லையேல் ஆக்கினைக்கு ஆளாகி அக்கினி குழிக்குள்ளே போடப்படுவீர்கள்.

  21. N G Siv Kumar on July 22, 2010 at 10:29 am

    Good point Vedamji…..

    கட்டுரை மிகவும் நன்றாக வந்திருக்கிறது.
    மக்கள் தெளிய வேண்டும்

  22. babu on July 22, 2010 at 10:44 am

    சிறுபான்மையினர் என்றால் யார் ? இந்து மதத்தை சாராதோர் வெளிநாட்டிலிருந்து இங்குவந்து குடியிருப்பு உரிமை பெற்றவர்கள் மட்டும் தானா ? ஓட்டைகள் நிரம்பிய குழப்பமான சட்டம். மேலும் இங்கேயே பிறந்து வளர்ந்து சுயமாகவோ அல்லது கட்டாயத்தின் பேரிலோ பெரும்பான் மதத்ததிலிருந்து சிறுபான்மை மதத்திற்க்கு மாறியவர்களை எப்படி சிறுபான்மையினர் என்று ஏற்கலாம் ? மேலும் மதத்தை ஒருவன் மாற்றிக்கொள்ள உரிமை உண்டு என்றால் ஒருவனுக்கு தன் ஜாதியைமாற்றிக்கொள்ளும் உரிமை ஏன் இல்லை ? ஜாதி பிறப்பினால் ஏற்ப்பட்டது என்றால் மதமும்தான் பிறப்பினால் ஏற்ப்பட்டதாகும். எனவே மதம்மாறுவது நியாயம் என்றால் ஜாதிமாறுவம் நியாயம் ஆகும். ஒன்று மதமாற்றம் செல்லாது என சட்டம் கொண்டுவரவேண்டும் இல்லையேல் ஜாதிமாறுவது செல்லும் என்பதை ஏற்க்கவேண்டும். நாளைமுதல் என்னை தலித் என்று அரகாங்கம் ஏற்க்கவேண்டும் அவர்களுக்கு அளிக்கும் எல்லா சலுகைகளையும் எங்கள் வாரிசுகளுக்கும் அளிக்க வேண்டுகோள் வைக்கிறேன்
    vedam gopal sir,
    excellent,great.
    namasivaya

  23. ஜடாயு on July 22, 2010 at 11:28 am

    பிரதமரே பாராளுமன்றத்தில் நாட்டின் செல்வத்தின் மீது முதல் உரிமை மைனாரிட்டிகளுக்கு என்று அறிவிக்கிறார். கூட்டணிக் கட்சிகளும் சரி, எதிர்க்கட்சிகளில் ஒரு பிரிவினரும் சரி,மைனாரிட்டி வாக்கு வங்கியைக் கணக்குப் போட்டு இந்த அராஜக செயல்பாட்டுக்கு ஆதரவு தருகின்றனர். இந்த *வழிகாட்டுதலை* மையமாகக் கொண்டு பிறகு அரசின் எல்லா திட்டங்களூம் போடப் படுகின்றன்..

    சச்சார், மிஸ்ரா கமிட்டிகளின் முடிவுகள்/பரிந்துரைகள் பொய்யானவை, உள்நோக்கமுடையவை என்று வழக்குகள், வெகுஜன அபிப்பிராயங்கள் மூலம் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டிருக்கும்போதே இது நிகழ்கிறது.. இவ்வளவு நடந்து கொண்டிருக்கும் போது சட்டரீதியாக இந்தப் பிரசினையில் என்ன செய்ய முடியும்? சொல்லுங்கள்.

    அரசியல் ரீதியாகத் தான் இதனை உடைக்க வேண்டும். மக்கள் போராட்டம் வலிமையடைந்து ஆட்சி மாற்றம் வரவேண்டும், அது ஒன்று தான் தீர்வு.

    பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் இந்த மைனாரிட்டி உதவித் தொகை திட்டத்தை இன்னும் ஆரம்பிக்கவில்லை என்று தோன்றுகிறது.. விசாரிக்க வேண்டும்.

  24. Rama on July 22, 2010 at 1:10 pm

    Robert Manickam, your rant shows your low self esteem about yourself and your religion. You are suffering from what we doctors call Paranoia and delusions. I urge you to see a Psychiatrist asap. You need help

  25. babu on July 22, 2010 at 3:21 pm

    #
    இராபர்ட் மாணிக்கம்
    22 July 2010 at 9:52 am

    கர்த்தராகிய தேவன் உண்மையானவர் என்று தெரிந்து கொள்கிற பிள்ளைகளுக்கு அவர் ஆதாயம் காணப்பண்ணுவார் என்று ஜீவனுள்ள வேதப்புஸ்தகத்திலே போட்டிருக்கிறபடிக்கு இந்தியாவிலே அரசாங்கம் பண்ணுகிறவர்களின் புத்தியை தேவன் ஏவியிருக்கிறார். செக்யூலரிசம் என்கிற பேரிலே துரைத்தனத்தார் ஆளுகிற பட்டணங்களிலே கர்த்தருக்கு எதிராகப் போகிறார்கள். ஆனால் ஸீயோனின் ஆண்டவர் சோனியாவை பழைய ஏற்பாட்டின் எஸ்தரை போல விக்கிரக ஆராதனை நிரம்பிய இந்த தேசத்துக்கு அனுப்பி இந்த தேசத்து ஜனங்களை கர்த்தரின் மார்க்கத்திலே திருப்ப விக்கிர ஆராதனைக்காரர்களிடமிருந்தே தசமபாகத்தை வசூலிக்க வைத்திருக்கிறார். சிருஷ்டி கர்த்தாவாகிய ஆண்டவரை வணங்காமல் அவரது பூமியை அனுபவித்துக்கொண்டு விக்கிரகங்களை தொழுபவர்களின் சொத்துக்களை நியாயவான்களாகிய கர்த்தரின் பிள்ளைகளான கிறிஸ்தவர்கள் எடுத்துக் கொள்ளலாமென்று விவிலிய சத்திய வாக்கிலே காட்டியிருக்கிற படியால் உண்மையான கிறிஸ்தவ விசுவாசியான சோனியா காந்தி அம்மையார் அவர்கள் இந்த கட்டளைப் போட்டிருப்பது மிகவும் சரியானதே. இதை எதிர்க்கும் விக்கிரக ஆராதனை காரர்களுக்கும் தமிழ்ஹிந்து என்கிற சைத்தானின் ஊழியக் காரர்களுக்கும் ஐயோ கேடு. இனியாவது மனம் திரும்புங்கள். இல்லையேல் ஆக்கினைக்கு ஆளாகி அக்கினி குழிக்குள்ளே போடப்படுவீர்கள்.
    extreme level impact of missio(fox)naries.Such this persons really need medical attention as doctor rama said.I pray to OUR GOD, this should not happen to all converted brothers.
    jai sriram

  26. Subramanian on July 22, 2010 at 3:53 pm

    //சிருஷ்டி கர்த்தாவாகிய ஆண்டவரை வணங்காமல் அவரது பூமியை அனுபவித்துக்கொண்டு விக்கிரகங்களை தொழுபவர்களின் சொத்துக்களை நியாயவான்களாகிய கர்த்தரின் பிள்ளைகளான கிறிஸ்தவர்கள் எடுத்துக் கொள்ளலாமென்று விவிலிய சத்திய வாக்கிலே காட்டியிருக்கிற படியால் உண்மையான கிறிஸ்தவ விசுவாசியான சோனியா காந்தி அம்மையார் அவர்கள் இந்த கட்டளைப் போட்டிருப்பது மிகவும் சரியானதே.
    //
    என்ன ஒரு குள்ளநரித்தனம் இந்த வேதத்தில், நீனைத்தாலே மனம் வெதும்புகிறது !! அடிமை படுத்துதல் இந்த வேதத்தின் (வேதமா ??) பண்பாகவே இருக்கிறது …
    நெயர்மையான முறையில் உழைத்து பெற்ற பூமியை, பல ஆயிரம் காலம் வாழ்து வந்த பூமியை …. இவர்களுக்கு அந்த பூமியை பிடுங்க உரிமை இருக்கிறதாம் !!!

    என்ன ஒரு வேதம் ??? இதுதான் சாத்தன் வேதமோ ???

  27. smitha on July 22, 2010 at 3:54 pm

    Robert,

    Please get admitted to the mental hospital, fast.

  28. R.Sridharan on July 22, 2010 at 5:07 pm

    நன்றாக இருப்பவர்களை எப்படி கிறிஸ்தவம் மன நோயாளிகளாக ஆகுகிறது என்பதற்கு இந்த ‘கிறிஸ்தவர்களுள் மாணிக்கமே’ உதாரணம்.
    உயர்ந்த கோட்பாடுகள் அமைதியான மண்ணிலேயே உருவாகும்
    அதனால்தான் அவை பாரதத்தில் ஆயிரக்கணக்கான ரிஷிகள்,ஞானிகள்,யோகிகள்,சித்தர்கள்,முனி புங்கவர்கள் இவர்கள் மனமென்னும் வடிகட்டியில் வடித்து வடித்து தெள்ளிய அமுதங்களை எடுத்துக் கொடுத்த அக்ஷய பாத்திரமாக நமது நமது ஹிந்து சமயம் மனித இனத்துக்குக்கிடைத்தது.
    அதனால் தான் அவர்களால்
    ‘தீதும் நன்றும் பிறர் தர வாரா’ ‘யாதும் ஊரே யாவரும் கேளிர் ‘
    மற்றும்
    தத் த்வம் அசி- அது நீயாகவே இருக்கிறாய்
    அஹம் பிரம்மாஸ்மி- நானெ அந்த பிரம்மம்
    லோகாஸ் சம்ச்தாஸ் சுக்ஹினோ பவந்து – அகில உலகமும் நன்மை பெறுவதாக
    என்றெல்லாம் கூற முடிந்தது

    ஆனால் கிறிஸ்தவமும , இஸ்லாமும் பாலைவனத்தில் வாழ்க்கைப போராட்டத்துக்கு நடுவே, ரத்த ஆறுகளுக்கு நடுவே தோற்றிய கோட்பாடுகள்
    அதானால் தான் அவற்றால் கடந்த இரண்டாயிரம் வருடங்களாக கோடானு கோடி மக்கள் கொல்லப் பட்டனர்
    இவற்றிலிருந்து மனித இனம் வெளியே வரா விட்டால் இவர்கள் மனித இனம் மட்டும் அல்லாது உயிரினங்களைஎ அழித்து அவைகள் தோன்றிய பாலைவனம் போல் மொத்த பூமியையும் ஆக்கிகிவிடுவார்கள்

    இரா.ஸ்ரீதரன்
    i

  29. sarang on July 22, 2010 at 5:13 pm

    ராபர்ட்டு

    சொஸ்தமான உண்மையான தவான் ஏனுங்கோ ஆடை அராபியாவுளையும், பாகிச்டான்லையும் பண்ண முடியல – தாலிபான் காரனுங்கோ எத்தன கிறிஸ்துவன கொன்னு போடரானுங்கோ – உயிரோடு இருக்கும் உங்கள் தேவன் என்னங்காணும் பண்றார் – wtc கிறிஸ்துவ நாடான அமெரிக்காவுல தான இருக்கு – என்ன அச்சுங்கோ – எவ்வளவோ மோசமான நிலைமையில் ஆப்ரிகா நாட்டு மக்க இருக்காங்களே (சோறு இல்லாமே, எலும்பு தெரியுற மாதிரி ) அவங்கள பக்கம் உங்கள் தேவனுக்கு அன்பு பிறக்கலைய – இல்ல அந்த பக்கம் அவருக்கு கண் தெரியாதா – அவைகளும் கருப்பு போச்டகட்ட வச்சுகிட்டு தேவனே தேவன் என்று கூப்பிட்டு கொண்டு தான் இருக்காங்க – அவரு கையை இறக்கின மாதிரி தெரியளங்கோ?

    அது என்னங்காணும் இயேசு சில மாநிலமா பாத்து தான் இந்த உதவி தொகை தாராரமே. – மகாராஷ்ட்ராவில கொடுக்குறாங்களோ? காஷ்மீர்ல?
    – அது சரி அவரு ஏன் இஸ்லாமிச்டுக்களும் கொடுக்குறாரு – ஐயோ போங்க ஏமாந்துட்டாறு. சாத்தான் கெலிச்சுட்டாறு

    எது அவரது பூமிய – அப்போ அராபியால என்னங்கோ நடக்குது? அவர உசுரோடவே கழ்வேத்திடானுங்கோ அப்பவே காப்பாத்திக்க முடியாத ஒருத்தரா உங்கள காப்பாத்த போராறு – அப்புறம் நான் இஸ்ரெல்லு தான் rajaannu அவர் சொன்னாராமே – அப்புறம் சொர்கத்துக்கு தான் ராஜ ன்னு அவர் சொன்னாராமே – அப்போ அங்கேய பொண்ணுதான் கழுவுல எத்திட்டாங்கலாமே. இஸ்ரளின் ராஜாவுக்கு இந்தியால என்ன வேல – ஆக்கிரமிப்பு செஞ்ச குற்றத்துக்கு என்ன செய்யலாம் ?

  30. பிரத்யூஷ் on July 22, 2010 at 5:58 pm

    சைகோ ராபர்ட்,
    நீங்க மோடி மஸ்தான் வேலை கூட்டம்.அதற்க்கு தலைவியை கரெக்டா செலக்ட் பண்ணியிருக்கே ,
    இவனுகளுக்கு நல்ல புத்தியை, மன்னிக்கணும் முதலில் புத்தியை ,சிந்திக்கும் திறனை வழங்க நம் கடவுள்களை நாம் வேண்டுவோம்.
    ரொம்ப ஆடாதீங்க அடியோட அழிஞ்சு போயிருவீங்க

மறுமொழி இடுக:

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.

*

உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:

தமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.

மறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.