ஆரிய சமாஜமும் தயானந்த சரஸ்வதியும்

hinduismkதமிழையும், தமிழனையும்  பற்றிய உண்மையையும் — பெரும்பாலும் ஊதிப் பெருக்கிய கற்பிதமுமான — பெருமைகளையும் பட்டியலிட்டுக் கூச்சலிடுவது நமது அரசியலும், மதமும், வாழ்வுமாகி ஒரு நூற்றாண்டு காலம் கடந்து விட்டது. இன்னமும் நமக்கு அந்த மயக்கம் தீரவில்லை. ஆனால், இதில் ஒரே ஒரு விதிவிலக்கு மாத்திரம் உண்டு.

தமிழனின், தமிழின் பெருமையில் அதன் சாரம் உண்மையென்ற போதிலும், அதன் பூதாகரித்த கோஷத்தில் வீண் டம்பம் அதிகம். ஆனால், உண்மையில் நாம் பெருமை கொள்ளத்தக்க இன்னொன்று, மற்றவற்றைக் காட்டிலும் அதிக நியாயத்தோடு பெருமை கொள்ளத் தக்க இன்னொன்று, நாம் எல்லோரும் பிறந்துள்ள இந்து மதம்.

அதை இழிவு படுத்துவது லாபம் தரும் அரசியலும் வாழ்வுமாகி அதுவே பகுத்தறிவுமாகிவிட்ட கட்டத்தில், ஹிந்து தர்மத்தின் இன்னொரு வெளிப்பாடாகத் தோன்றிய ஆரிய சமாஜம் பற்றியும், அதை உருவாக்கிய துறவியும் ஞானியுமான தயானந்த சரஸ்வதி பற்றியும் ஒரு புத்தகம் தமிழில் வெளிவருகிறதென்றால், அது எதிர்நீச்சலிடும் காரியம் தான். பலத்த தொடர்ந்த இரைச்சலுக்கு எதிராகக் குரல் எழுப்பும் காரியம் தான்.

பிடிக்கிறதோ இல்லையோ சில உண்மைகளைச் சொல்லித் தான் ஆக வேண்டும். ஹிந்து மதம் மற்ற எந்த மதமும் போல எந்த ஒரு தனி மனிதராலும் பிரகடனப் படுத்தப்பட்டதும் அல்ல. நிறுவனமாக்கப்பட்டு, மனித சிந்தனையையும் வாழ்க்கையையும் ஒரு கட்டமைப்புக்குள் சிறைப்படுத்துவதும் இல்லை. உண்மையில் அது மதமாகவே உருவானதல்ல. மக்கள் தாமாகவே தம் வாழ்க்கை முறையை உருவாக்கிக்கொண்டதைத் தான்  நாம் பார்க்கிறோம். அவ்வப்போது பல கால கட்டங்களில் இவ்வாழ்க்கை முறையும் சிந்தனைப் பிரவாஹமும் ஒரு கட்டமைப்பில் சிறைப்படுவதாகத் தோன்றும் போது, அதைத் திரும்பச் சிறைமீட்டு சுதந்திரமாகப் பிரவாஹிக்கச் செய்து வருவதும் நிகழ்ந்துள்ளது. அத்தோடு இன்னொன்றும் சொல்ல வேண்டும்.

6இந்த ஹிந்து என்ற ஒரு பொதுப் பெயருக்குள் அடையாளப் படுத்தப்படும் வாழ்க்கை முறை எந்த கால கட்டத்திலும் ஏதும் ஒரு கட்டமைப்புக்குள் இருந்ததில்லை. பல சிந்தனையாளர்களும் ஞானிகளும் காலம் காலமாக அவ்வப்போது தோன்றி, எந்தக் கட்டமைப்புக்குள்ளும் சாரம் அழிந்து போகாதவாறு, உருவாகி வரும் கட்டமைப்பை உடைத்துச் சாரத்தைத் திரும்ப உயிர்ப்பித்தே வந்திருக்கிறார்கள். அந்த சுதந்திரத்தை ஹிந்து மதம் யாருக்கும் மறுத்ததில்லை. அந்த சுதந்திரம் ஹிந்துமதம் வழங்கியதில்லை. வழங்கப்பட்டது எதுவும் சுதந்திர மாகாது.

இம்மாதிரியான ஞானிகள் வரலாற்றின் தொடக்க காலத்திலிருந்தே இருந்து வந்துள்ளார்கள். இம்மாதிரியான வேறுபட்ட பார்வைகளும், வாழ்க்கை தரிசனங்களும் உள்ளடங்கியதாகவே, எதையும் தனக்கு ஏலாத ஒன்றாக ஹிந்து எனச் சொல்லப்பட்ட வாழ்க்கை முறை ஒதுக்கியதில்லை.

அக்காலத்தில் இது ஆறு தரிசனங்களாக அறியப்பட்டது. ஒன்றிலிருந்து மாறுபட்ட என அனேக உபநிஷத்துக்கள். இயற்கை சக்திகளே தெய்வங்களாக துதிக்கப்பட்ட வேதங்கள் காலத்திலிருந்து எண்ணற்ற தேவதைகளை உருவாக்கிய புராணங்களும், எண்ணற்ற வேறுபட்ட வேத உபநிஷத வியாக்கியானங்களைத் தந்த ஆசாரியர்களும், எல்லோருமே ஹிந்து மதத்தில் அடக்கம் தான்.

halal_treatmentநிரீஸ்வர வாதிகளான சார்வாகனோ புத்தரோ மஹாவீரரோ ஹிந்து மத ஞானிகளாலோ, சாதாரண மக்களாலோ காஃபிர்களாக, ஹெதன்களாக குற்றம் சாட்டப்பட்டு அவர்கள் தலைகள்  அறுக்கப்படவில்லை. அவர்களும் தெய்வ அவதாரங்களானார்கள்.

அவர்கள் என்ன, ஹிந்து மதத்தைக் கேலி செய்பவர்கள், நிராகரிப்பவர்கள் கூட ஹிந்து மதத்தை விட்டு வெளியேறிவிடவில்லை. வெளியேறிய மறு நிமிடம் அவர்கள் நாஸ்திக பிரசாரத்தைக் கைவிடவேண்டும். இல்லையெனில் அவர்கள் கைகளோ தலையோ ஹலால் முறையில் தீர்வு காணும். ஹிந்து மதம் அதை அவமதிப்பவர்களுக்கும் அளிக்கும் சுதந்திரம் பற்றி அவர்களுக்குத் தெரியும்.

மக்கள் அனைவரும் ஞானிகள் அல்லவே. அவரவர் புரிதலுக்கும் ஆசைகளுக்கும் ஏற்ப சாரம் சடங்குகளாகி, சாரம் மறக்கப்படுவதும் இயல்பு தானே. சாரத்தோடு சேர்ந்த சாரத்தை உணர்த்தும் சடங்குகள் சுகம் தருபவை. வண்ண மயமானவை. அழகு சேர்ப்பவை. மனித வாழ்வை கவர்ச்சிகர மாக்குபவை. ஆனால் சாரம் மறைந்து சடங்குகளே மிஞ்சும் போது, சாரத்தைத் திரும்ப உயிர்ப்பித்து மக்களுக்கு உணர்த்த வேண்டிய தேவை ஏற்படுகிறது

vallalaarநமக்கு, தமிழருக்கு வள்ளலாரைத் தெரியும். அவருக்கு அணையா ஜோதியே தேவ ஸ்வரூபமாயிற்று. ரமண மகரிஷிக்கோ அதுவும் தேவையில்லை யாயிற்று. ரமணருக்கு வேண்டாமாயிருக்கலாம். திருவண்ணாமலையை விட்டு நகர்ந்தவரில்லை அவர். ஆனால், ஊரூராகச் சென்று மக்களுடன் உறவு கொண்ட வள்ளலார் பத்மாசனத்தில் அமர்ந்து கண்களை மூடி தம்மை மறந்து தியானம் செய்யுங்கள் என்று சொல்லமுடியாது. ஜோதி தேவையாயிற்று. அதில் தான் ஆதி ஹிந்து தெய்வத்தைக் கணடான். அதைச் சுற்றித் தான் அவனது அர்ப்பணிப்பும், பிரார்த்தனைகளும், வேண்டுதல்களும், நடந்தன.  மற்றவை எல்லாம் பின்னர் வந்து சேர்ந்து சடங்காயின.

நமக்கு ரமணரையும் வள்ளலாரையும் தெரிந்த அளவு தயானந்தரைப் பற்றித் தெரியாது. அவர் ஸ்தாபித்த ஆரிய சமாஜம் பற்றியும் தெரியாது. பெயரளவில் ஏதோ கேள்விப் பட்டிருக்கலாம். குஜராத், ஹரியானா, பஞ்சாப் பிரதேசங்களில் ஆரிய சமாஜம், தயானந்த சரஸ்வதி, அவருடைய சத்யார்த்த் பிரகாஷ் எல்லாம் பொதுமக்களிடையே மிகப் பிரபலமடைந்தவை. அவர் தோன்றிய (1824- 1883) 19-ம் நூற்றாண்டின் இறுதி வருடங்களில் வங்காளத்தில் தோன்றிய பிரம்ம சமாஜம் வெகு சீக்கிரம் மறைந்துவிட்டது. இப்போது அது சரித்திரத்தில் நினைவு கொள்ளப்படும் ஒரு பெயர். கிறித்துவத்தின் செல்வாக்கு பாதிப்பில் அது தன் சுயத்தை இழந்தது. ஆனால், சாரத்தை விட்டுக்கொடாது அதைத் திரும்ப உணர்த்திய விவேகானந்தர் தம் வழிச் சென்ற தனியராக இன்றும் நாம் உறவு கொண்டு நம்மை அர்த்தப்படுத்திக் கொள்ளும் சக்தி.

தயானந்த சரஸ்வதி தன் காலத்தில் சடங்குகளாகி, இறுகி, சாரம் மறக்கப்பட்ட அனைத்தையும் கைவிட்டு வேதகால ஹிந்து மத வழிபாட்டு முறைகளுக்குத் திரும்ப வலியுறுத்தினார். இவற்றுக்கெல்லாம் தொடக்கம் அவரது பதிமூன்றாவது வயதில் தன் ஊர் ஜடேஸ்வர ஆலயத்தில் சிவராத்திரி உபவாசம் இருந்த போது கண்ட காட்சி.

maharshi-dayanand-saraswatiசிவலிங்கத்தின் மீது ஏறிக் கொட்டமடிக்கும் எலிகளின் அட்டஹாஸம். இந்த சிவலிங்கம்தான் என்னைக் காப்பாற்றும் கடவுளா, எலிகளின் உபாதையிலிருந்து தன்னைக் காத்துக்கொள்ளத் தெரியாத இந்தக் கல்தானா இந்த ஜகத்தைக் காப்பாற்றப் போகிறது? என்ற கேள்வி எழுந்த மூலசங்கர் மனம் தான் பின்னர் ஹிந்து மதத்தின் சாரத்தைப் புனர்ஜீவிக்க எழுந்த தயானந்த சரஸ்வதி. அவர் நிராகரித்தது விக்கிரஹ ஆராதனையை, தெய்வத்தை அல்ல. நிராஹரித்த அந்தச் சிறுவன் மூலசங்கர் தன் பதின்மூன்று வயதுக்குள் எல்லா வேதங்களையும் சமஸ்கிருத வியாகரணங்களையும் கற்றுத் தெளிந்த சிறுவன்.

வீட்டை விட்டு வெளியேறிய சிறுவன் துறவறம் பூண்டு, ஞான மார்க்கத்தில் பயணம் தொடங்குகிறான். பெரிய பண்டிதர்களுடன் வாதிக்கிறான். சாதிகளுக்கும் தீண்டாமைக்கும் ஆதாரம் எங்கே எந்த சாஸ்திரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது என்று கேட்கிறான். வேதங்களில் சொல்லப்படும் வர்ணம் தொழில் சார்ந்தது, குணம் சார்ந்தது. பிறப்பில் பெற்றதல்ல என்கிறான்.

க்ஷத்திரியன் ரிஷியாக முடிகிறது. காயத்ரி மந்திரம் உபதேசிக்கமுடிகிறது. எனவே வேத நெறிதான் உண்மையான, ஆதி காலம் தொட்டு வரும் நெறி. வேதங்களும் உப்நிஷதங்களும் காட்டும் இறையுணர்வு தான் உண்மையானது.

ஹிந்து சமய நூல்களில் வேதங்களும், உபநிஷதங்களும், அர்ஷ நூல்கள். அவைதான் நமக்கு வழிகாட்டியாக முடியும். பின் வந்த புராணங்கள் அல்ல. அவை அனார்ஷ வகைப்பட்டவை என்கிறார். ஆர்ய சமாஜம் வழிபடுவது அர்ஷ நூல்களைத் தான்.

தயானந்தருக்கும் முன்னரே ஹிந்து சமய நூல்கள் ஸ்ருதி என்றும் ஸ்மிருதி என்றும் பிரிக்கப்பட்டுள்ளன. ஸ்ருதி என்றுமுள்ள நிரந்தர உண்மைகளைப் பற்றிப் பேசுவனவாகவும், ஸ்மிருதி மாறுவன பற்றிப் பேசுவன என்றும் வகைப்படுதப் பட்டுள்ளன.

தயானந்த சரஸ்வதி கூறும் அர்ஷ நூல்கள் எல்லாம் ஸ்ருதிகள். ஸ்ருதிகள் ஒலிரூபத்தில் தரப்பட்டவை. ஸ்மிருதிகள் பின்னர் எழுதப்பட்டவை.

தயானந்த சரஸ்வதி விரஜானந்தர் என்னும் வயோதிக குருவை அடைந்தார். விரஜானந்தரும் தன்னை மரணம் நெருங்கிய நிலையில், தனக்குப் பின்  ஹிந்து மத அனுஷ்டானங்களை வேத கால நெறிக்குத் திரும்ப இட்டுச் செல்ல, சீடனின் வருகைக்காகக் காத்திருந்தார். அவர் தன் சீடனிடம் வேண்டியது ஒன்றே.

ஹிந்து மத புணருத்தாரணத்திற்கு தன் வாழ்க்கையை அர்ப்பணிக்க வேண்டுமென்று.

தயானந்தரும் நாடு முழுதும் பயணம் மேற்கொண்டார். வழியெல்லாம் தன் கருத்துக்களை மக்களுக்கு எடுத்துச் சொல்ல பண்டிதர் கூடும் இடங்கள், மக்கள் கூடும் கும்பமேளா போன்ற விழாக்கள், எனத் தேடிச் சென்று பண்டிதர்களோடு வாதம் புரிந்தும் மக்களிடையே பிரசாரம் செய்தும் நாடு முழுதும் பயணம் செய்தார். இப்பயணங்கள் அவரை வங்காளத்துக்கும் இட்டுச் சென்றது.

தேவேந்திர நாத் தாகூர், கேஷப் சந்திர சென், போன்றோரின் பிரம்ம சமாஜத்தினரையும் கவர்ந்தது. பிரம்ம சமாஜத்தோடு ஐக்கியமாக அவர்கள் அழைத்தும் அவர் மறுத்து விட்டார். அவர்களுடன் ஒன்றுபடவும் மாறுபடவும் பல இருப்பதால் அவரவர் வழிச் செல்வதே நல்லது என்று கருதினார்.

jesus_idolஇவரது தீவிர விக்கிரக எதிர்ப்பு, மற்றும் பல ஹிந்து மத சடங்கு மறுப்பைக் கண்டு உற்சாகம் கொண்ட கிறிஸ்தவ மிஷனரிகளும், முஸ்லீம் குருமார்களும் இவரை ஹிந்து விரோதி என்று கணித்து தயானந்தரை நெருங்கினர். அவர்களுக்குக் கிடைத்தது ஏமாற்றம் மட்டுமல்ல.

முஸ்லீம்கள் காபாவைச் சுற்றிவருவது எவ்விதத்தில் விக்கிரஹ ஆராதனையிலிருந்து மாறுபட்டது என்று கிண்டல் செய்ததும், குரானில் அல்லா அசரீரியாக தன்னையே பெருமைப் படுத்திப் பேசிக்கொள்வதாக இருப்பதையும், கிறிஸ்தவர்கள் அப்படி ஒன்றும் விக்கிரஹ ஆராதனையிலிருந்து விலகியவர்கள் இல்லை என்பதையும் சுட்டிக் காட்டி அவர்கள் விரோதத்தையும் தயானந்தர் சம்பாதித்துக்கொள்ள வேண்டி வந்தது.

ஹிந்து மத சடங்குகளை, விக்கிரஹ ஆராதனையை மறுத்தும், தீண்டாமைக்கும் சாதிவேறுபாட்டுக்கு எதிராக பேசியும், ஹிந்து மத பண்டிதர்களையும் அவர் விரோதித்துக்கொண்டார். ஆனால் எவரும் அவர் வாதங்களை அறிவு பூர்வமாகவோ, சாஸ்திர ஆதாரங்கள் காட்டியோ மறுக்க முடியவில்லை. அவர் வேதங்களையும் இதிகாசங்களையும் தவிர பின் வந்த வேறு எதையும் மறுப்பவரானார்.

சங்கரரின் பாஷ்யம் அத்வைதத்தைப் பேசுவதால் அது அவருக்கு ஏற்புடையதாக இருந்தது. ராமன், கண்ணன் எல்லாம் இருந்தது உண்மை. ஆனால் அவர்களைத் தெய்வமாக்கவேண்டாம். பாகவதம் கண்ணன் புகழ் பாடுகிறது. அதில் காவியச் சுவை காணவேண்டுமே அல்லாது பக்தி ரசமல்ல.

33எந்த இடைத் தரகரது குறிக்கீடுமில்லாது, நேராக இறைவனை வண்ங்கும் வேத கால நெறியே உகந்தது என்றார். ஒவ்வொருவர் வீட்டிலும் சிறிய அளவில் அக்னி வளர்த்து வேள்வி செய்யவேண்டும் என்றார்.

கோவில்கள் எழுப்புவதை விட பாடசாலைகள் கட்ட அப்பணம் செலவு செய்யவேண்டும். எல்லோரும் கல்வி கற்கவேண்டும். எல்லோரும் வேதங்களைக் கற்கவேண்டும். பிரார்த்தனை செய்ய காயத்ரீ மந்திரம் ஜபித்தாலே போதுமானது. பெண்களும் பூணூல் அணிந்து காயத்ரீ ஜெபம் செய்யவேண்டும். எல்லோரும் மூன்று வேளையும் சந்தியா வந்தனம் செய்யவேண்டும், என்றெல்லாம் அவர் போகுமிடமெல்லாம் பிரசாரம் செய்தார்.

யாரும் — கிறித்துவரோ, முகமதியரோ — யாரும் ஹிந்துவாகலாம் என்றார். வேதங்களில் சாதிப் பிரிவினை இல்லை. வர்ணம் என்றது குணத்தைக் குறிப்பது, பிறந்த சாதியைக் குறிப்பதல்ல. கல்வியில் நாட்டமுடையவன் பிராமணன், அஸ்திர வித்தையில் தேர்ந்தவன் க்ஷத்திரியன், உடல் உழைப்பில் நாட்டமுடையவன் சூத்திரன். தொழில் செய்பவன் வைசியன். க்ஷத்திரியனாகக் கருதப்பட்ட விஸ்வாமித்திரன் காயத்ரீ மந்திரம் உபதேசித்தவன் என்று நீள்கிறது தயானந்தரின் பிரசாரம்.

கல்வி, எளிமையான மத அனுஷ்டானம், சாதி மறுப்பு, எல்லாம் உள்ளடக்கி உருவானது தான் ஆர்ய சமாஜம். இன்றும் ஆரிய சமாஜம் இருக்குமிடமெல்லாம், கல்விக் கூடங்களும், மருத்துவ மனைகளும், வேற்றுமதம் தழுவியவர்கள் ஹிந்துக்களாகத் திரும்பச் சேர்த்துக்கொள்ளும் இடங்களாக இருப்பதைக் காணலாம். தென்னிந்தியாவில் ஆரிய சமாஜம் ஏதும் செல்வாக்கற்றுக் காணப்பட்டாலும், வட இந்தியாவில் அதன் செல்வாக்கைப் பரவலாக எங்கும் காணலாம். வள்ளலாரையே தமிழ்ச் சமூகம் வடலூரிலேயே வேலி எழுப்பி வைத்துவிட்டது. வங்கத்தில் பிரம்ம சமாஜம் போன இடம் தெரியவில்லை.

beheadvi-viஉடல்பலமும் மனமும் கொண்ட தயானந்தரை மன பலத்தாலோ அறிவாற்றலாலோ, உடல் பலத்தாலோ வெற்றி கொள்ள முடியாத நிலையில் அவர் கடைசியில் விஷமிட்டே கொல்லப்பட்டார். அவரைத் தீர்த்துக்கட்ட பலருக்கு பல காரணங்கள். அவரவர்ககு அவரவர் காரணங்கள்.

ஜோத் பூர் சமஸ்தான மன்னரின் ஆசை நாயகி நன்னி ஜானுக்கு ஒரு காரணம். முகம்மதியரைத் தாய் மதம் திரும்ப எளிய வழி காட்டியவரைத் தீர்த்துக் கட்டாமல் விட முடியுமா? அல்லது தம் பிழைப்புக்குத் தடையாக மதச் சடங்குகளை எளிமைப் படுத்தியவரை, சாதி இல்லையென்பவரை, தீண்டாமைக்கு எதிராக பிரசாரம் செய்பவரை ஒழித்துக்கட்ட இன்னொரு சாரார். கடைசியில் விஷம் கொடுக்க சதி செய்தவருக்கு இவ்வளவு கூட்டாளிகள் இருந்தால் தப்புவது எளிது தானே.

அமைதியாக அவரவர் தம் அமைதி மார்க்கத்தில் செல்வதற்குத் தடைகள் ஏற்படுமானால், அமைதி விரும்பு கிறவர்கள் தயானந்தரையும் அமைதிப்படுத்த விரும்பியிருக்கிறார்கள்.

அவரவர்க்கு ஏற்படும் விழிப்புக்கு  அவரவர் குணநலனுக்கு ஏற்பத் தான் அர்த்தப் படுத்திக்கொள்வார்கள். தன் 13-ம் வயதில் சிவலிங்கத்தைத் தெய்வ சொரூபமாகக் காண மறுத்தார் தயானந்தர். நட்ட கல்லும் பேசுமோ என்றார் நம்மூர் சித்தர். ஜோதி ஸ்வரூபத்தைக் கண்டார் வள்ளலார். ரமணர் எந்தக் கோவிலுக்கும் சென்று அர்ச்சனை செய்தவரில்லை. எல்லோரும் நாஸ்திகர்கள் தான்.

இந்த நாஸ்திகர்களால்தான் சமூகம் தனனை சுத்திகரித்துக் கொள்கிறது. படிந்துள்ள கசடுகளை நீக்கிக் கொள்கிறது. ஆனால்,  நம்மைச் சுற்றியுள்ள நாஸ்திகர்கள் வேறு ரகம். தம்மையும், தம் சிலைகளையும், தம் பெயரையும் மக்கள் ஆராதிக்க விரும்பும் நாஸ்திகர்கள்.

மலர் மன்னன் தயானந்த சரஸ்வதியின் வரலாற்றையும் அனுபவங்களையும் அவர் காலத்திய சூழலையும், அவர் கருத்துக்களையும் பற்றி விரிவாக எழுதியுள்ளார். புராணங்களையும் விக்கிரஹங்களையும், சடங்குகளையும், கோவில்களையும் நிராஹரித்த இந்த நாஸ்திகரையும் தமிழ்ச் சமூகம் அறிந்து கொள்ளட்டுமே என்று.

தற்காலத் தமிழர்கள் அறிந்த நாஸ்திகர்கள் ரகமே வேறு. தேர்தலில் வெற்றி பெறப்  பிரார்த்தனை செய்ய, வெற்றி பெற்றபின் வேண்டுதலை நிறைவேற்ற, அம்மன் கோயிலுக்குச் செல்லும் தனி ரக நாஸ்திகர்கள். வேட்பு மனு தாக்கல் செய்ய நாள் நட்சத்திரம் பார்ப்பவர்கள். ராகு காலம் தவிர்ப்பவர்கள்.

tamil_confrence1_630இவர்கள் நமக்கு அடிக்கடி சொல்லிக்காட்ட ஆசைப்படும் மனுசாஸ்திர வரிகள் ஒன்றிரண்டு தான். இவர்கள் படித்த, ஆனால் மறக்காமல் மறைக்கும் பெரும்பகுதி முற்றிலும் வேறாக இருக்கும். மலர் மன்னன் அவற்றைப் பற்றியும் விரிவாகச் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

ஆரிய சமாஜமும், தயானந்த சரஸ்வதியும் நமக்குச் சொல்லும் ஹிந்து மதத்தின் சித்திரம் வேறு. இறை வணக்கம் வேறு. அது போன்றே நமக்குப் பிரசாரப்படுத்தப்படும் மனு சாஸ்திர வரிகள் வேறு. மனு சாஸ்திரமும் வேறு தான். மனு சாஸ்திரத்தை ஆதரித்தே இந்திய கிரிமினல் தண்டனைச் சட்டம் இயறப்பட்டுள்ளதாகச் சொல்வார்கள். சட்டத்தின் முன் எல்லோரும் சமம் என்பார்கள். ஆனால், மனு நீதி, கல்வியில் தேர்ந்தவனாகக் கருதப்படும் பிராமணன் புரிந்த குற்றத்துக்குத் தண்டனை கடுமையாகவும், பாமரனும் ஏழையுமானவன் செய்த அதே குற்றத்துக்கு, அவன் அறியாமை காரணமாகத் தண்டனை குறைவாகவும் விதிக்கிறது.

manusmriti-kullukabhatta_virchit95_mediumஎல்லோரும் மனு நீதியின் முன் சமமல்ல. எளியவன் செய்த களவுக்குச் சாதாரண தண்டனையும், நாட்டுக்கே நீதி வழங்க வேண்டிய மன்னன் செய்யும் களவுக்கு தண்டனை கடுமையாகவும் விதிக்கும் மனு ஆளுக்குத் தகுந்த நீதி வழங்குமானால், அததகைய மனு நீதியை நாம் அறிந்த நாஸ்திகரும் அரசும் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? மனு நீதி பற்றிய அவர்கள் பொய்ப்பிரசாரத்தை எப்படி நிறுத்திக் கொள்ள முடியும்?

இவர்கள் மேற்கோள் காட்ட ஆசைப்படும் வரிகள் இடைச்செறுகல் என்று ஆங்கில ஆய்வாளர்கள் வூலர், ஜெனரல் கீத் மாக்டொனால்ட் போன்றவர்களும், அமெரிக்க கலைக்களஞ்சியமும் சொல்வதை மலர் மன்னன் சுட்டிக்காட்டியுள்ளார். இடைச்செறுகல்கள் பாரதத்திலும் உண்டு, கம்ப ராமாயணத்திலும் உண்டு. எந்த பழம் நூலிலும் வாய்மொழி மரபில் வருவனவற்றில் இது சகஜமாகக் காணப்படுவது தான்.

ஒரு நூலின் ஆதார சுருதிக்கும், பெரும்பகுதியின் தரிசனத்துக்கும் முற்றிலும் விரோதமாக சில பகுதிகள் காணப்பட்டால் அத்தகைய முரண்பாடு சாத்தியமில்லை என்பதால் அவை இடைச்செறுகலாகும். அத்தோடு மொழியின் கையாளலில் சொற்களின் பயன்பாட்டில் வேறுபாடுகள் காணப்படுவதிலிருந்தும் இடைச்செறுகலை அடையாளப்படுத்தமுடியும். இது மொழி வல்லுனர்களின், சரித்திர ஆயவாளர்களின் அக்கறையாக இருக்கும். ஆனால், எந்த வரிகள் மாத்திரமே தம் அரசியல் பிரசாரத்துக்கு வகை செய்து தருகின்றதோ அவற்றை இடைச் செருகலாக ஒத்துக்கொள்வதில் பிரசாரகர்கள் மிகவும் சிரமப் படுவார்கள். அவர்களுக்கு அந்த சில வரிகளே போதும், முழு நூலையும் கொச்சைப் படுத்துவதற்கு. கழகப் பொது மேடைகளில், துண்டு பிரசுரங்களில் நமக்குச் சொல்லப்பட்ட மனு நீதி சாஸ்திரத்தில்,

சூத்ரோ ப்ராஹ்மணதாம் ஏதி, ப்ராஹ்மண மஷ்சை தி சூத்ரதாம்
க்ஷத்ரியாத் ஜாதமேவம் து வித்யாத் வைஷ்யாந்த்தைவ ச:
(மனு ஸ்ம்ரிதி – அத் 1 வாக்கு 65)

(குண இயல்பு, ஈடுபாடு, தொழில் நாட்டம் அல்லது தகுதி ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு பிராமணர் சூத்திரர் ஆகிவிடுகிறார், அவர் பிராமணராகப் பிறந்திருந்தாலும். அதே போல, பிறப்பில் சூத்திரராக இருந்தாலும், குணஇயல்பு, ஈடுபாடு, தகுதி ஆகியவற்றால் ஒரு சூத்திரர் பிராமணர் ஆகிவிடுகிறார் என்பது இதன் பொருள்)

புத்ரேண் துஹிதா சமா (மனுஷ்மிருதி அத்-9 வாக்கு-130)

மகன் மகள் இருவரும் சமம் என்பது இதன் பொருள்.

arya-samajam-wrapperஇப்படிப் பல மேற்கோள்களை மலர் மன்னன் தன் புத்தகத்தில் எடுத்துக் காட்டியுள்ளார்.

இதையெல்லாம் நம் கழகப் பிரசாரகர்களுக்கு நம்மூர் ப்ராண்ட் நாஸ்திகர்களுக்கு சங்கடம்  தருபவை. தயானந்தரின் நாஸ்திகம் அவரை எங்கு இட்டுச் சென்றுள்ளது? சரஸ்வதி தேவி பிரமனின் நாக்கில் வாசம் செய்கிறாளாம். அப்படீன்னா அவ மல ஜலம் எங்கே கழிப்பா? என்ற நம்மூர் நாஸ்திகமும் பகுத்தறிவும் எங்கு இட்டுச் சென்றுள்ளது?

மறுபடியும் அவரவர் குணநலம், ஈடுபாடு இவற்றைப் பொருத்தே எதுவும் அமையும். எல்லாமே.

ஆரிய சமாஜம்: மலர் மன்னன் வெளியீடு: கிழக்கு பதிப்பகம் 33/15 எல்டாம்ஸ் சாலை,ஆழ்வார் பேட்டை, சென்னை-18 பக்கங்கள். 112 ரூ 60.

வெங்கட் சாமிநாதன்/19.8.2010

Tags: , , , , , , , , , , , , , , ,

 

41 மறுமொழிகள் ஆரிய சமாஜமும் தயானந்த சரஸ்வதியும்

 1. அமாவாசை ஆதிரை on August 27, 2010 at 6:01 am

  நல்ல விமர்சனம். அழகான வரலாற்றுப்பார்வை. அத்துடன் இன்றைய சூழலையும் சரியாக பார்த்திருக்கிறார். இந்த புத்தகம் ஆன்லைனில் கிடைக்குமா?

 2. Kumaresh on August 27, 2010 at 11:39 am

  ஆர்யா சமாஜம் குறித்து மேலும் அறிய http://www.agniveer.com

 3. கந்தர்வன் on August 27, 2010 at 7:16 pm

  கட்டுரை ஆசிரியருக்கு நன்றி. ஆரிய சமாஜ் நல்ல சமூகத் தொண்டு புரியும் இயக்கமாக இருக்கலாம். கண்டிப்பாக அந்த அம்சத்தை முழுதும் ஆதரிக்கிறேன். ஆனால், தயானந்தர் கூறியதில் பாரம்பர்ய வேதாந்திகளுக்குச் சில ஆட்சேபங்கள் உண்டு.

  // இந்த சிவலிங்கம்தான் என்னைக் காப்பாற்றும் கடவுளா, எலிகளின் உபாதையிலிருந்து தன்னைக் காத்துக்கொள்ளத் தெரியாத இந்தக் கல்தானா இந்த ஜகத்தைக் காப்பாற்றப் போகிறது? என்ற கேள்வி எழுந்த மூலசங்கர் மனம் தான் பின்னர் ஹிந்து மதத்தின் சாரத்தைப் புனர்ஜீவிக்க எழுந்த தயானந்த சரஸ்வதி. //

  இது கண்டிக்கப்படவேண்டிய ஒரு வாதம். “கோயில் கர்பக்ரஹத்துக்குள் உள்ள தெய்வத்தின் மேல் எலி ஊறுவதனால் இது தெய்வம் இல்லை; வெறும் கல்” — இது மிஷனரிக்களும் (விஷநரிக்களும் 🙂 :-)) ‘பகுத்தறிவுப் பகலவர்களும்’ கூறுவது.

  வேதத்தின் மேல் அக்கறை வைத்திருந்த தயானந்தருக்கு வேதத்தில் கூறப்பட்ட உருவ வழிபாடு கண்ணுக்குப் படவில்லை போலும்–

  (1) சாந்தோக்ய உபநிஷத் 1-6-6,7 பார்க்கவும்: “நகங்களின் நுனி வரை பொன்மயமான திருமேனியுடன், பொன்மயமான கேசத்துடன் அப்போதலர்ந்த தாமரை போன்ற இரு கண்களுடனும் ஆதித்த மண்டலத்தின் நடுவில் இருப்பவனாகப் புருடன் ஒருவன் இருக்கிறான். அவன் பாப-புண்யங்களுக்கு அப்பாற்பட்டவன்” என்று பரமனைப் பற்றிப் படிக்கப்பட்டிருக்கிறது. இங்கு படிக்கப்பட்டுள்ளவர் பரம்பொருளே என்று ஆதி சங்கரர் உட்பட எல்லா அத்வைத-விசிஷ்டாத்வைத-த்வைத வேதாந்திகளும் ஏற்றுக்கொண்டுள்ளனர். இதில் வருவது உருவ வழிபாடன்றி வேறு என்னவாம்?

  (2) ஈசாவாஸ்ய உபநிஷத் இறுதியில் (மந்திரம் 16) “கல்யாண தமம் ரூபம்” என்று வருவதும் உருவ வழிபாடு தான்.

  (3) இது தவிர வேதத்தில் பல இடங்களில் உருவ வழிபாடு வருகிறது (தைத்திரீய உபநிஷத் நாராயண வல்லி, விஷ்ணு ஸூக்தம், ஸ்ரீ்ருத்ரம், முதலிய இடங்களில்).

  ஆக, “வேதத்தில் உருவ வழிபாடே கிடையாது” என்பது எனக்குத் தெரிந்த அளவிற்கு உண்மை அன்று.

 4. venkat swaminathan on August 27, 2010 at 9:33 pm

  தங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

  தங்களுடனோ, த்யானந்த சரஸ்வதியுடனோ வாதிட என்க்கு வேதங்கள், உப்நிடதங்களைப்பற்றிய அறிவோ ஞானமோகிடையாது.

  ஆனால் என் விருப்பங்களைப் பற்றிப் பேசுவதாக இருந்தால், விக்கிரஹ ஆராதனை, மன்ம் ஒன்றுவதற்கும், வாழ்க்கையையும் செய்யும், காரியங்களையும் மனம் கவரச் செய்வது த்யானந்தர் கண்டனம் செய்யும் சடங்குகளும், திருவிழாக்களும், கோயில்களும், விக்கிரகங்களும் தான். சந்தனாபிஷேகமோ, பாலாபிஷேகமோ செய்யும் போது மூலவர் எத்தனை அழகு கொழிக்கக் காண்கிறார். இதையெல்லாம் விட்டு விட்டு வெற்றிடத்தை எப்படி மனம் ஒன்ற நாடுவது? ஞானிகளுக்கும் துறவிகளுக்கும் சித்த புருஷர்களுக்கும் அது சாத்தியமாக இருக்கலாம். என்னைப் போன்ற சாதாரணர்களுக்கு எல்லாம் தேவையாக இருக்கிறது.

  இந்த பார்வை ஒரு பக்கம். தயானந்தரின் பார்வை ஒரு பக்கம். இரண்டுமே அதன் அதன் நிலையில் புரிந்து கொள்ளப்படவேண்டியது தான். அதனால் தான் இந்த இரண்டென்ன, எத்தனையோ பார்வைகளை இந்து மதம் அங்கீகரிக்கிறது.

  தன் மனதில் பட்டதைச் சொன்னதற்காக, கழுத்தை கொஞ்சம் கொஞ்சமாக அறுக்க ஆணையிடும் முல்லாக்கள் யாரும் இந்த மதத்தில் இல்லை என சந்தோஷப்படுங்கள்.

 5. babu on August 28, 2010 at 3:18 pm

  ஆரம்ப நிலையில் ஆன்மீக வாதிகளுக்கு உருவ வழிபடு அவசியம் என்றே சுவாமி விவேகனந்தர் கூட ஒப்புகொண்டிருக்கிறரே.அவர் கூட உருவ வழிபாட்டை எதிர்த்ததாக தெரியவில்லையே. அவர் குரு ராமகிருஷ்ணர் கூட காளிதேவியின் பக்தர் தானே.வள்ளலார் கூட ஆரம்பத்தில் கந்தகோட்டம் முருகனை நாள்தோறும் வழிபட்டவர்தானே.
  அவர் கூட ஒருமையுடன் உனது திருவடி நினைக்கின்ற உத்தமர் தம் உறவு வேடும் என்றுதானே உருவமுள்ளவனாக பாவித்தே இறைவன் திருவடியை நாடி பாடுகிறார்.
  நட்டகல்ல்லும் பேசுமோ என்று கூறியதால் அது சிலை வழிபாட்டை எதிர்த்ததாக ஆகாதே.அதை தாண்டி வருவதற்கான அவசியத்தை வலியுறுத்தும் விசயமாக அல்லவா அர்த்தம்.
  பக்தி மார்கத்தின் சுவையை,அருமையை,அதனை சுவைத்து உணர்ந்தவர்களுக்கு மட்டுமே உணர முடியும். காதலாகி கசிந்து உருக பக்தி மார்க்கம் பாமரர்க்கும் ஏற்ற வழியன்றோ. பக்தியில் திளைத்தவனே இந்திரா லோகம் ஆளும் அச்சுவையை கூட வேண்டாம் என்று கூற முடியும் அன்றோ,மனித்த பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே என்று பாட முடியும் அன்றோ.

  பக்தி மார்க்கமும்,ஞான மார்க்கமும் இன்ன பிற மார்க்கம் எதுவாயினும் ஒன்றிற ஒன்று குறைந்தது ஆகுமோ.அடுத்தவரை தூற்றத வரை,துன்புறுத்தாத வரை எந்த வழியும் சிறந்த வழியாகவே தோன்றுகிறது. ஆனால் பாமரர்க்கு ஏற்றது எளிதானதாக பக்தி மார்க்கமே போற்றப்பட்டு பரப்பப்பட்டு வந்துள்ளது.
  புத்தர் போல் இவர் செயல்பாடு இருக்கிறது. இவரின் சாதிக்கு எதிரான நிலைப்பாடு மட்டுமே சிறந்த விசயமாக படுகிறது.
  நல்லவேளை இவருக்கு நிறைய சீடர்கள் இல்லை போலும்,இருந்திருந்தால் இவரும் கூட கடவுள் இல்லை என்று கண்டித்தும்,பின்னால் கடவுளான புத்தரைபோல் புதிய ஒரு மதத்தின் கடவுள் ஆகியிருப்பார்.

 6. கந்தர்வன் on August 28, 2010 at 4:37 pm

  திரு வெங்கட் ஸ்வாமிநதன் அவர்களே,

  விவாதத்திற்காக இதை நான் முன்வைக்கவில்லை. பாரம்பரியர்களின் பார்வையை இட்டேன்; அவ்வளவே.

  // சந்தனாபிஷேகமோ, பாலாபிஷேகமோ செய்யும் போது மூலவர் எத்தனை அழகு கொழிக்கக் காண்கிறார். இதையெல்லாம் விட்டு விட்டு வெற்றிடத்தை எப்படி மனம் ஒன்ற நாடுவது? ஞானிகளுக்கும் துறவிகளுக்கும் சித்த புருஷர்களுக்கும் அது சாத்தியமாக இருக்கலாம். என்னைப் போன்ற சாதாரணர்களுக்கு எல்லாம் தேவையாக இருக்கிறது. //

  என்னைப் பொறுத்த வரையிலும் இது தான் சரியான பார்வை. கடவுளுக்கு மனிதன் தான் ஏதேதோ உருவங்களைத் தருகிறான் என்று பலர் தவறாகப் புரிந்துக்கொள்கின்ரனர்; உண்மை அப்படி அல்ல. இறைவன் அவன் பக்தர்களுக்குத் தன்னைக் காட்டிக் கொள்வதற்காக அவதாரமாகவும், அர்ச்சா விக்கிரகமாகவும், பக்தர்கள் விரும்பியவண்ணம் வருகிறான் என்பதே பெரியோர்கள் இசைந்த ஒன்று. இதுவே நான் பெற்ற உபதேசமும்.

  // அதனால் தான் இந்த இரண்டென்ன, எத்தனையோ பார்வைகளை இந்து மதம் அங்கீகரிக்கிறது.//

  தாழ்மையுடன் இதைக் கூறுகிறேன் —

  “ஒன்றுக்கொன்று முரண்பட்ட கருத்துக்களை இந்துமதம் அங்கீகரிக்கிறது”

  என்று கூற முடியாது. அப்படிக் கூறினால் “இந்து மதம் ஒரு பைத்தியக்காரனின் பிதற்றல்” என்று கூற வேண்டி வரும். என்னைப் பொறுத்த வரையில் பின்வருமாறு சொல்வதே சரி:

  “மாறுபட்ட, சில சமயம் ஒன்றுக்கொன்று முரண்பட்ட சித்தாந்தங்களை எல்லாம் அடக்குமுறையிலும், படையெடுப்பிலும், பொய்ப் பிரச்சாரத்தாலும் அழியச் செய்து விடாமல், கருத்துச் சுதந்தரத்தை முழுமையாகத் தருகிறது”

  // தன் மனதில் பட்டதைச் சொன்னதற்காக, கழுத்தை கொஞ்சம் கொஞ்சமாக அறுக்க ஆணையிடும் முல்லாக்கள் யாரும் இந்த மதத்தில் இல்லை என சந்தோஷப்படுங்கள். //

  கண்டிப்பாக. Tolerance, non-persecution, non-violence இதெல்லாம் உலகிற்குத் தந்தது நம் இந்துக் கலாச்சாரமே.

 7. ந. உமாசங்கர் on August 28, 2010 at 10:20 pm

  சிவலிங்கத்தை அருவுருவாகவே சித்தாந்த ரீதியாகக் கருதுகின்றனர். எந்த அளவுக்கு வேதங்களில் இறைமூர்த்தத்துக்கு உருவம் கொடுக்கப்பட்டிருக்கிறதோ, அதே அளவுக்கு வேதாந்தம் அரூப ஸ்வரூபனாக இறைவனை வழிபட வழி செய்கிறது. இவை அனைத்தும் இறைவனை அடையும் வழியாகவே நமது மதம் கொள்கிறது.

  சிவலிங்கத்தின் மீது எலிகள் ஊர்வதை ஒரு பக்தன் எலிகள் சிவத்தை வழிபடுவதாகவும் பார்த்திருக்க முடியும். ஆனால் சுவாமி தயானந்தர் அதில் வேதனை கொண்டிருக்கிறார், அந்த ஆதங்கத்தின் வெளிப்பாடே அவர் உருவ ரீதியாக இறைவனைக் காண விரும்பாததில் முடிந்திருக்கிறது என்றே தோன்றுகிறது.

  அவர் அத்தோடு நில்லாமல், மிருக பலி, முன்னோர் வழிபாடு, சாதிப் பிரிவினை, தீண்டாமை, பால்ய விவாஹம் முதலியவற்றையும் ஏற்கவில்லை. இத்தகைய அவரது மதக் கொள்கைகளில் இன்று நாம் முன்னோர் வழிபாட்டைத்தவிர எல்லாவற்றையும் ஏற்று விட்டோம் என்பதிலிருந்து அவரது நடவடிக்கைகள் எந்த அளவுக்கு தீர்க்கதரிசனம் கொண்டவை என்பது தெரிகிறது. வேதங்களையும் வேதாந்தத்தையும் ஏற்ற அவர், இதிஹாசங்களை ஏற்கவில்லை. ஆரம்பத்தில் சமஸ்கிருதத்தில் மட்டுமே வேதங்களைக் கற்பித்த அவர், பின்னாளில் பொது மக்களுக்குப் போய்ச் சேரவேண்டும் என்பதற்காக ஹிந்தியில் கற்பிக்க ஆரம்பித்தார். பாணினியின் சமஸ்கிருத இலக்கணத்துக்கு அவர் எழுதிவந்த விளக்கவுரை முடிவுறாதது நமது துரதிருஷ்டமே.

  எது எப்படியிருந்தாலும் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்னர் அவதரித்து வாழ்ந்த ஒரு மகானின் நிலைப்பாட்டை, சித்தாந்தத்தை நாம் இன்றைய காலகட்டத்தின் அடிப்படியில் உள்ள நமது அறிவைக் கொண்டு விமரிசிப்பது முறையாகாது. பாரதம் அடிமைப்பட்டுக் கிடந்த காலத்தில் அதிகாரத்தில் இருந்த மதத்தினரின் மத மாற்று முயற்சிகளுக்கிடையில் அவர் எடுத்த முடிவுகளை, கொண்டிருந்த சித்தாந்தத்தை, நிறுவிய மரபை, இன்றைய நமது சிற்றறிவை வைத்து விமரிசிப்பது அழகல்ல.

 8. R.Sridharan on August 29, 2010 at 9:25 am

  அந்த எலியையும் படைத்து அதற்கும் உணவைப் படைத்துக் காக்கும் இறைவன் தானே அவன்?
  அதனால் எலியிடமிருந்து காத்துக் கொள்ளும் அவசியம் அவனுக்கு இல்லை
  அனால் இதை எல்லாம் புறம் தள்ளிப் பார்த்தால் தயானந்த சரஸ்வதி அவர்கள் இந்து சமயத்துக்கு ஆற்றிய தொண்டு மாபெரும் தொண்டே என்பதில் ஐயமில்லை.

 9. Indli.com on August 29, 2010 at 1:00 pm

  தமிழ்ஹிந்து » ஆரிய சமாஜமும் தயானந்த சரஸ்வதியும்…

  இழிவு படுத்துவது லாபம் தரும் அரசியலும் வாழ்வுமாகி அதுவே பகுத்தறிவுமாகிவிட்ட கட்டத்தில், ஹி…

 10. நெடியோன் குமரன் on August 31, 2010 at 9:37 pm

  கந்தர்வன் அவர்களே
  ஒரு முக்கிய விஷயம்- தயானந்தர் எப்போதும் உபநிடதங்களை அசல் வேதமாக ஒப்புக் கொண்டதில்லை. தாங்கள் காட்டிய மேற்கோள்கள் அனைத்தும் உபநிடதங்கள் அல்லவா ?

  தயானந்தரிடம் எனக்கு எவ்வளவோ முரண்பாடு இருப்பினும், வேதத்தை முதன்மைப் படுத்தி நேர்மையாய் அவர் பேசியது அவர் மீது பெரும் மரியாதையை ஏற்படுத்தியது. காலம் வேதச் சொற்களுக்கு திரிபை ஏற்படுத்தியதை எதிர்த்து , அதன் வேகளுக்கே சென்று வேதத்தின் தொன்மையையும் புனிதத்தன்மையையும் நிலை நாட்டிய புனிதர் அவர்.

  வேத சம்ஹிதைகளில் உருவ வழிபாடு கிடையாது என்பது நம்பும் படியாகவே உள்ளது. நீங்கள் காட்டிய ருத்ரம், நாராயண சுக்தம் போன்றவை பிராம்மணங்கள் மற்றும் ஆரண்யகங்களில் இருந்தே எடுக்கப் பட்டவை. உதாரணத்திற்கு ருத்ரம் யஜுர் வேதத்தின் தைத்திரீய சம்ஹிதை (அசல் சம்ஹிதை அல்ல) எடுக்கப்பட்டது. ஆனால் சமகம் அப்படி அல்ல . அது அசல் யஜுர் வேத சம்ஹிதையில் உள்ளது. அதில் உருவ வழிபாட்டைத் தேடுங்கள். கிடைக்காது.

  மகாகவி பாரதியாரும் இந்த சம்ஹிதை மட்டும் தான் வேதம் என்ற விஷயத்தை ஒப்புக் கொண்டுள்ளார்.

  மேலும் இக்கால ஞானிகளான அரவிந்தர், கபாலி சாஸ்திரி போன்றோரும் தங்களது சம்ஹிதை உரைகளில் வேதங்களின் தேவதைகள் உண்மையில் நம்முடைய அந்தக் காரணங்களின் பல பிரிவுகளே என்று நிலை நாட்டிவிட்டு சென்றிருக்கின்றனர். (அத்யாத்ம நோக்கில்). இது போன்றே ஆதி தெய்வீக வாதத்திலும் அவர்கள் வெறும் நலம் தரும் தேவதைகள். அவ்வளவே. அவர்களுக்கு உருவம் சமைக்கப் படவில்லை.

  மீமாம்சக நோக்கிலும் வேதத்தில் கடவுள் உருவம் உள்ளவர் என்ற வாதம் இல்லவே இல்லை என்று கருதுகிறேன். அவர்கள் தான் வேதமே தெய்வம் என்று வாதாடுபவர்கள் ஆயிற்றே ?

  நெடியோன் குமரன்

 11. Pradeep on September 1, 2010 at 9:36 am

  சைடு கேப்புல வள்ளலாரையும் உங்க பார்பன இந்து மதத்தில் சேர்த்துகொண்டீர்களா..! வேதம்,ஆகமம், குலம்,ஆச்சாரம் முதலியவைகள் கற்பனையே அன்றி வேறு இல்லை என்றும், சாதி மதம் முதலானவைகள் பிள்ளை விளையாட்டுக்களே என்றும் கண்டித்தவர்.

 12. venkat swaminathan on September 1, 2010 at 11:01 am

  அன்புள்ள பிரதீப்,

  உஙகளுக்கு இன்னொருவர் என்ன சொல்கிறார் என்பதை மனதில் வாங்கிக்கொண்டு, அதனுடன் உங்களுக்கு மாற்றுக் கருத்து இருப்பின், அந்த மாற்றக் கருத்தை வெளியிடுவது என்பதெல்லாம் உங்கள் பண்பாட்டுக்கு ஒத்து வராது என்பது தெளிவாகிறது. இது காறும் மேலே பலரும் தங்கள் கருத்தை, எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். அது வரவேற்கத்தக்கது. ஆனால் இதில் நீங்கள் மாத்திரம் தான் உங்களுக்குச் சொல்லிக்கொடுக்கப்பட்டுள்ள உளறல் என்று தான் சொல்லவேண்டும், அந்த உளற்லில் இருப்பது அளவுகடந்த துவேஷம். அந்த துவேஷம் இங்கள் பெயரை பிரதீப் என்று வைத்துக்கொண்டுள்ளது, ஆங்கிலத்தில் எழுதுவது, எதற்கெடுத்தாலும் பார்ப்பனீயம் என்று வசைபாடுவது எல்லாம் நீங்கள் வளர்ந்த, உங்களை வளர்த்தெடுத்துள்ள, நீங்கள் வழிபடும் மனிதர்களின் குணத்தைச் சொல்கிறது. மனித பிறவிகளுக்கு சில குணங்கள் உண்டு. சிந்தித்தல் என்பது அதில் ஒன்று. அது உங்களிடமும், உங்களை வளர்த்தவரகளிடமும், நீங்கள் வழிபடுபவர்களிடமும் இல்லை. மனிதராக, சிந்திப்பவராக, மற்றவர்களோடு உரையாடும் வல்லமை பெற்றவராக என்று ஆகப்போகிறீர்களோ தெரியாது. உங்கள் பேச்சும், எழுத்தும் மனிதன் என்ற பிறவியை அவமதிக்கும். வள்ளலாரை உங்களுடன் சேர்த்துக்கொண்டது, அவர் ‘பாப்பான்’ இல்லை என்ற ஜாதி பத்திரத்தைப் பார்த்துத் தானே ஒழிய, உங்களுக்கு அவரை படித்துப் புரிந்து கொள்ளும் ஆற்றல் உண்டு என்று தெரியவில்லை. உங்களிடம் இருப்பது மந்தைக் குணம்.

 13. babu on September 1, 2010 at 11:02 am

  ஐயா பார்பனர்களுக்கு மட்டும் சொந்தமானது ஒன்றும் இல்லை இந்து மதம். பார்பனர் அல்லாத எங்களுக்கும் சொந்தம் இன்னும் சொல்லப்பானால் எங்களுக்கே முழு சொந்தம் அவர்கள் எங்கள் பொருட்டு எங்களுக்காக இறை பணி செய்ய நியமிக்க பட்டவர்களே. உருக்கு ஒரு தலையாரி,ஒரு நாட்டமை போல ஒரு அர்ச்சகர் அவ்வளவே. நீங்கள் ஒன்னும் தயவு செய்து இந்து மதத்தை பார்ப்பனர்களுக்கனது என்று அவர்களுக்கு மட்டும் தாரை வார்த்து விட வேண்டாம்.
  வள்ளலார் என்ன கிறித்தவ மதத்தில் பிறந்தவரா அல்லது முஸ்லிம் மதத்தில் பிறந்தவரா?.அல்லது அந்த மதங்களுக்கு மதம் மேரி சென்றவரா?
  அவர் பிறந்து வளர்ந்தது வழிபட்டது எல்லாம் இந்து மதத்தில் இந்து முறைப்படி இந்து கடவுள்களைத்தான். பின்னர் ஞான நிலை அடிந்த பின்பே அவர் ஜோதி வழிபாட்டுக்கு சென்றரர்.அவர் இந்து மதத்தில் சீர்திருத்தங்களை செய்தார்.தவறை ஒப்புக்கொண்டு திருந்த சொன்னார்.அதனால் அவர் இந்து அல்ல என்று சொல்வது என்ன ஒரு ………………………………………..
  உயிர் பலி வேண்டாம் என்று சொன்னார்,சாதி பாகுபாடு வேண்டாம் என்று சொன்னார்.இந்து கடவுள்கள் பொய் என்றும் அவற்றை வணங்காதீர்கள் என்றும் சொன்னாரா.அன்பரே அவரே ஒரு முருக பக்தர். சிறுவனாய் இருந்த போதே உபன்யாசம் செய்தவர்.அவர் ஒரு இந்து மத சித்தர். அவர் பாடல்களை படியுங்கள் அவர் வரலாற்றை படியுங்கள் பின்னர் அவர் இந்துவா இல்லையா என்று முடிவுக்கு வாருங்கள் ஐயா.
  ஏன் அவரை கிறித்தவத்தில் சேர்த்து ஞான ஸ்நானம் செய்வித்து அவர் வழியும் கிறித்துவின் வழி என்று கூறி அதன் மூலம் மகசூல் பார்க்க சித்தமோ? அது முடியாது,வேண்டாம் உங்களுக்கு வீண் முயற்சி அன்பரே.
  அடுத்தவர் உரிமைகளுக்கு பட்டேர்ன் ரைட்ஸ் வாங்கி அதிலே பணம் சம்பாரிக்கும் மேற்கத்தியர்களின் மன நிலை நன்கு தெரிகிறது.

 14. நெடியோன் குமரன் on September 1, 2010 at 8:38 pm

  பிரதீப் அவர்களே
  ///வேதம்,ஆகமம், குலம்,ஆச்சாரம் முதலியவைகள் கற்பனையே அன்றி வேறு இல்லை என்றும், சாதி மதம் முதலானவைகள் பிள்ளை விளையாட்டுக்களே என்றும் கண்டித்தவர்./////

  இதோ வள்ளலாரின் சிறப்பு மிக்க அவர் அடியார் அன்றாடம் படிக்கும் அகவல்.
  ++++++++++++++++++++++++++++
  அருட்பெருஞ் ஜோதி அகவல்

  ஆகம முடிமேல் ஆரண முடிமேல்
  ஆகநின் றோங்கிய வருட்பெருஞ்ஜோதி

  வேதா கமங்களின் விளைவுகட்கெல்லாம்
  ஆதாரமாஞ்சபை யருட்பெருஞ்ஜோதி
  ++++++++++++++++++++++++++++++++++
  ….கல்லார் அவைஅஞ்சா ஆகுலச் சொல்லும் … பூத்தலில் பூவாமை நன்று.

 15. நெடியோன் குமரன் on September 1, 2010 at 8:41 pm

  ////இந்து மதம். பார்பனர் அல்லாத எங்களுக்கும் சொந்தம் இன்னும் சொல்லப்பானால் எங்களுக்கே முழு சொந்தம் ////

  பிரதீப்
  தாங்கள் அறிந்த “இந்து” மதத்தைப் பற்றி கொஞ்சம் விளக்குங்கள்.

 16. Pradeep on September 2, 2010 at 8:18 am

  வள்ளலாரை பற்றி முழுமையாக அறிந்தவன் இவ்வாறு பேசமாட்டான். முருக வழிபாடு, சிவ வழிபாடு எல்லாவற்றையும் செய்தவர்தான் வள்ளலார். ஆனால் முடிவாக அவர் சொன்னது..நீங்களும் என்னை போல் இந்த தெய்வங்களின் மீது பற்றுதல் வைத்து வீண் போக வேண்டாம் ..எல்லாம் வல்ல கருணையான அருட் பெரும் ஜோதியை வழிபடுங்கள் என்றும், அருட்பெரும்ஜோதி ஆண்டவர், நீங்கள் நினைக்கும் சிவன், பிரும ,விஷ்ணு அல்ல என்றும், சித்தர்களின் மார்கமான சமாதி நிலை தவறெனவும் விளக்கமாக கூறியுள்ளார். அவரையும் ஒரு சித்தராக சொல்லும் அறிவீளிகளிடம் என்ன சொல்வது. வள்ளலாருக்கே வெளிச்சம்.

 17. C.N.Muthukumaraswamy on September 2, 2010 at 1:19 pm

  என்னுடைய நண்பர் ஒருவர் , பிராமணர், அவருடைய முன்னோர் வள்ளலாரின் நேரடி மாணக்கர்கள். என்னுடைய நண்பர் மூன்றாவது தலைமுறையினர். இவருக்கும் திருவருட்பா பெரும்பாலும் மனப்பாடம். வீட்டில் சோதி வழிபாடே செய்கிறார். ஆனால் இவருடைய சந்ததியினர் இதிலிருந்து விலகிவிட்டனர். இராமலிங்க அடிகளாரைப் பிராமண எதிர்ப்பாளராகவும், பிராமணரை.வள்ளலாரின் பகையாளராகவும் பேசுதல் அறியாமை. வள்ளலாரின் சமயம் சைவமே. சாதி மததீவிரவாதம் சடங்குகள் போன்றவற்றை வள்ளலாருக்கு முன்னமேயே அப்பர் , அருணகிரிநாதர், தாயுமான அடிகள் போன்றவர்கள் கண்டித்துள்லனர். அவர் வழியினரே இராமலிங்க வள்ளலார். தொழுவூர் வேலாயுத முதலியார் அவர்கள் எழுதிய இராமலிங்கசுவாமிகளின் சரித்திரக் குறிப்புக்களில் அக்காலத்தில் பட்டத்திலிருந்த சங்கராச்சாரியசுவாமிகள், சிதம்பரம் வெங்கடசுப்புதீடசிதர், அம்பாபுரத்துவேம்பய்யர், வடலூர்வைத்தியநாதய்யர், விருத்தாசலம் வக்கீல்வெங்கடேசய்யர், புதுச்சேரி ரெட்டிச்சாவடியில் அமினா உத்தியோகத்திலிருந்த சிவராமய்யர், கோடகநல்லூர் சுந்தரசுவாமிகள் (இவர் பூர்வாசிரமத்தில் பார்ப்பனர்), சங்கீர வித்துவான் சிதம்பரம் கிருஷ்ண ஐயர், ஆடூர் சபாபதிசிவாச்சாரியார் முதலிய பிராமணர்கள் வள்ளலாருடன் கொண்டிருந்த பக்திபூர்வமான தொடர்பினைக் காணலாம். பார்வதி புரத்தில் இருந்த இரு பிராமணர்களின் மீது வள்லலார் கொண்டகருணை, அவர் சிதம்பரம்துக்குடி ஆடூர் சபாபதி சிவாசாரிய சுவாமியவர்களுக்கு எழுதிய கடிதத்தில் வெளிப்படுகின்றது. இக்காலத்திய திராவிடக் கண்ணாடியை மாட்டிக்கொண்டு இராமலிங்கசுவாமிகளின் வரலாற்றை நோக்குவது அவருக்குஎதிராகச் செய்யும் பாவமேயாகும். வேதம் ஆகமம் பற்றி வள்ளலாரின் கருத்தாக கூறிய பிரதீப்புக்கு, சிவபுண்ணியத் தெளிவு எனும்பகுதியில் , “இனிய நீறிடா ஈனநாய்ப் புலையர்க் கெள்ளிற் பாதியும் ஈதலொழிக, இனிய நீறிடுஞ் சிவனடி ய்வர்க ளெம்மைக் கேட்கினும் எடுத்தவர்க் கீக” எனப் பத்துத் திருபாடல்களில் எடுத்தோதிய கருத்துக்களைச் சுட்டிக் காட்டவிரும்புகின்றேன்

 18. babu on September 2, 2010 at 3:11 pm

  சித்தர் என்றல் என்ன அர்த்தம் என்று தெரியுமா உங்களுக்கு என் அறிவாளி நண்பரே? தெரிந்தவர்களிடம் கேட்டு நன்றாக தெரிந்து கொள்ளுங்கள்.சமாதி நிலை என்றால் என்ன என்றும் தெரிந்து கொள்ளுங்கள்.`
  திரு முத்துகுமாரசாமி அவர்களின் பின்னுட்டத்தை பாருங்கள்.

  ஐயா நீங்கள் அறிவாளி,புதிதாக கண்டுபிடித்து அவர் இயேசுவை ஒப்புக்கொண்டு எங்களையும் வழிபட சொன்னார் என்று கூட சொல்லுவீர்கள்.

  அவர் எங்கே எந்த இடத்தில் சிவனையும் முருகனையும் வழிபடாதீர்கள் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த அறிவீளிக்காக சற்று அந்த பாக்களை குறிபிடுங்கள்.
  இப்படிக்கு உங்கள் அன்புள்ள
  அறிவீலி

 19. babu on September 2, 2010 at 4:51 pm

  பேருல கெல்லாம் மதிக்க -தன்
  பிள்ளைஎன் றென்னைப் பெயரிட் தழைத்தே
  சீருறச் செய்தது பாரீர் -திருச்
  சிற்றம் பலத்தே திருநட ஜோதி

  ஜோதியுள் ஜோதியுள் ஜோதி-சுத்த
  ஜோதி சிவஜோதி ஜோதியுள் ஜோதி
  ஜோதியுள் ஜோதியுள் ஜோதி

  நண்பர்களே,திருச்சிற்றம்பலம் என்றால் என்ன என்று உங்களுக்கு நன்கு தெரியும்.சிவ ஜோதி என்றால் என்ன என்றும் தெரியும்.மேலுள்ள வரிகள் திரு அருட்பாவின் ஆறாம் திருமுறையில் உள்ள பாக்கள்.சத்தியமாக இவை வள்ளலாரின் வரிகள். மேலும் திருமுறைகள் ஆரம்பிக்கும் போதும் முடியும் போதும் திருச்சிற்றம்பலம் என்று இருக்கும். இங்கே சிவனுக்கு உருவம் ஜோதியே அன்றி.ஜோதியின் பின்னே இருப்பது வேறு ஒரு நாட்டை சேர்ந்த கடவுள் அல்ல.
  அவரோ வாடிய பயிரை கண்டவிடத்தும் வாடிய வள்ளல்,கடை விரித்தேன் கொள்வாரில்லை, கடையை மூடிக்கொண்டேன் என்று வாழ்ந்தவர்.
  மற்றவர் மீது தம் கருத்துக்களை திணித்தே தீருவோம் என்று மற்றவர் கருத்துக்களை இழித்து அவர்கள் வீட்டு வாசலிலேயே சென்று தொந்தரவு செய்து அது பொருட்டு சண்டை இட்டு அடி தடி ரகளை செய்யும் மார்கத்தை ஒன்றும் அவர் போதிக்கவில்லை.
  அன்பே உருவான வழி அசைவ உணவையும் சண்டை சச்சரவையும் சாதி மத பாகுபாட்டையும் அறவே வெறுத்து அன்புடன் வாழ சொன்ன வழி.
  இந்து மதத்தில் தேவையில்லாமல் சிலரது சுயநல நோக்கத்துக்காக உண்டாக்கப்பட்டு நடைமுறையில் இருந்த சில தவறுகளை சீர்திருத்திய செம்மை வழி.இந்து வழி.
  வீட்டிற்குள் உள்ளவர்கள் செய்த தவறை திருத்தி தாய், தந்தையை மாற்றாமல் தவறுகளை மட்டும் இனம்கண்டு மாற்றசெய்த வழி.

 20. babu on September 2, 2010 at 5:12 pm

  சுத்த சமரச சன்மார்க்கம் என்றே அவர் தன் மார்க்கத்திற்கு பெயரிட்டார்.அதாவது சன்மார்க்கம் என்பது சைவம் ,வைணவம்,சாக்தம், காணபத்யம் , கௌமாரம் , சௌரம் என்ற ஆறு பிரிவுகளை உள்ளடக்கிய இந்து மதமே.
  வேறு எந்த புதிய ஒரு துன்மார்க்கத்தையும் அவர் போதிக்கவில்லையே.

 21. babu on September 2, 2010 at 5:51 pm

  http://dajoseph.com/PDFs/Vaalivikum-Vainavam-5.pdf
  அடியேன் ஜோசெப் தாசன்.

 22. babu on September 2, 2010 at 7:32 pm

  சோதியனே துன் இருளே தோன்ற பெருமையனே,என்று மாணிக்க வாசகர் சிவபெருமானை குறிப்பிடுகிறார்.
  நம் ஊர்களில் சொக்கபானை கொளுத்துவதை பார்த்திருப்போம்,மேலும் திருவண்ணமலையில் கார்த்திகை தீபம் ஏற்றுவதும் சிவனை ஜோதி வடிவாக வழிபடும் வழக்கத்தை குறித்தே.

 23. R.Sridharan on September 2, 2010 at 7:59 pm

  எப்படியாவது ஹிந்துக்களிடையே பிளவை ஏற்படுத்துவதுதானே இந்த மிஷ ‘நரி’ களின் வேலை.

 24. C.N.Muthukumaraswamy on September 2, 2010 at 9:45 pm

  //வள்ளலாரை பற்றி முழுமையாக அறிந்தவன் இவ்வாறு பேசமாட்டான். முருக வழிபாடு, சிவ வழிபாடு எல்லாவற்றையும் செய்தவர்தான் வள்ளலார். ஆனால் முடிவாக அவர் சொன்னது..நீங்களும் என்னை போல் இந்த தெய்வங்களின் மீது
  பற்றுதல் வைத்து வீண் போக வேண்டாம் // திரு பிரதீப் அவர்களுக்கு, நான் உங்களைப் போல முழுமையாக வள்ளலாரைப் படித்ததில்லை; என்றாலும் ஆறு திருமுறைகளையும் ஓரளவு படித்துள்ளேன். வ்ள்ளற்பெருமான் நீங்கள் கூறியுள்ள கருத்தை எந்தப் பகுதியில் கூறியுள்ளார் என்று எடுத்துக் காட்டினால் உங்களைப் போலவே நாங்களும் பயன்பெறுவோம்.

 25. venkat swaminathan on September 3, 2010 at 10:08 am

  Sorry, someone has played a havoc with my system and I am not able to respond in Tamil.

  Friends, why are you engaged in a futile exercise arguing with characters like Pradeep. There are morons who are programmed to react either physically or verbally only in certain fashion. Whatever you put forth, and however long you continue your efforts, morons react only in a manner programmed. Have your arguments made any dent on him?

  I am puzzled how he got into this cirlcle. He belongs either to Nakkiran, Murosoli herds or those that are herded to hear the harangues of pentacosts. How can you expect a sheep to do otherwise, it can only bleat.

 26. Pradeep on September 3, 2010 at 1:00 pm

  மீண்டும் சொல்கிறேன்..ஆறாம் திருமுறை படித்தால் மட்டும் தெரிந்து விடாது. நேரிடையாக ஒரு சன்மார்கியிடம் சன்மார்க்க பாடம் கேட்டுகொள்ளுங்கள். வள்ளலார் கூறும் சிவம் என்பது சோதி என்பது நீங்கள் நினைத்து கொண்டிருக்கும் சிவனல்ல,சிவமல்ல.உரைநடையையும் கற்று கொள்ளவும். முன் முடிவோடு சன்மார்கத்தை அணுகுவோர் இந்து மத சாக்கடையில் உழல வேண்டியது தான் ( கிருத்துவமும், இஸ்லாமும் கூட சாக்கடைதான் ..)

  தெய்வங்கள் பலபல சிந்தைசெய் வாரும் சேர்கதி பலபல செப்புகின் றாரும்
  பொய்வந்த கலைபல புகன்றிடு வாரும் பொய்ச்சம யாதியை மெச்சுகின் றாரும்
  மெய்வந்த திருவருள் விளக்கம்ஒன் றில்லார் மேல்விளை வறிகிலர் வீண்கழிக் கின்றார்
  எய்வந்த துன்பொழித் தவர்க்கறி வருள்வீர்

  சாதியிலே மதங்களிலே சமயநெறி களிலே
  சாத்திரச்சந் தடிகளிலே கோத்திரச்சண் டையிலே
  ஆதியிலே அபிமானித் தலைகின்ற உலகீர்
  அலைந்தலைந்து வீணேநீர் அழிதல்அழ கலவே
  நீதியிலே சன்மார்க்க நிலைதனிலே நிறுத்த
  நிருத்தமிடும் தனித்தலைவர் ஒருத்தர்அவர் தாமே
  வீதியிலே அருட்சோதி விளையாடல் புரிய
  மேவுகின்ற தருணம்இது கூவுகின்றேன் உமையே

 27. நெடியோன் குமரன் on September 3, 2010 at 4:47 pm

  யோக நெறியின் நிர்விகல்ப நிலையைத் தான் வள்ளலார் இவ்வாறு கூறுகிறார். அதிலும் முற்றிலும் விகல்பம் அற்ற நிலை அல்ல. கவனியுங்கள்.

  //நிருத்தமிடும் தனித்தலைவர் ஒருத்தர்அவர் தாமே
  வீதியிலே அருட்சோதி விளையாடல் புரிய
  மேவுகின்ற தருணம்//

  இந்துமதம் என்ற ஒன்று என்ன என்று நீங்கள் இன்னும் விளக்கவில்லை.

  டினாமிநேஷன் இல்லாமல் சொல்கிறேன். உருவ வழிபாட்டின் முற்றிய நிலை விகல்பம் உடையது. அருவ உபாசனை (ஞான மார்க்கம்) விகல்பம் அற்றது. முன்னது எளிது. அதனாலேயே இதை பெரும் ஞானிகளும் சிபாரிசு செய்கின்றனர்.

  வள்ளலார் கூட உருவ வழியில் தான் அருவத்தைப் பற்றியுள்ளார். உருவ வழிபாட்டு வழியில் பாமர நிலையில் விளங்கிய பேதங்களைப் பார்த்தே அருவ முறையை உபதேசிக்க ஆரம்பித்தார். இது ஒன்றாம் வகுப்பு மாணவனை முனைவர் பட்ட தீசிஸ் எழுதச் சொன்ன மாதிரி. இந்தக் காரணத்தினால் தான் வள்ளலார் இன்னும் பாமரர்களின் குருவாக முடியவில்லை. அவரது நெறியும் இன்னும் பண்டிதர்களின் அறிவுக்குத் தான் தீனி போட்டுக் கொண்டிருக்கிறது.

  வள்ளலார் தாக்கம் உடையவர்கள் என்று கூறிக்கொண்டு பல பேர் உலா வந்தனர். எனக்குத் தெரிந்து அவர்களால் தம்மையே வள்ளலார் கண்ட அத்துவித நிலைக்கு உயர்த்த முடியவில்லை. ஏன், வள்ளலாருக்குப் பிறகு, ஒருவராலும் அது முடியவில்லை.

  வள்ளுவரும் இதனாலேயே

  பற்றுக பற்றற்றான் பற்று அப்பற்றைப்
  பற்றுக பற்று விடற்கு

  என்று கூறுகிறார். பெரிய பேறு அடைய உருவம் போன்ற சிறு பற்றுக்கள் இருக்கலாம். இது இந்த நாடே கண்ட பேருண்மை. வெறுமனே வாய்ப் பந்தல் போடத்தான் அருவ உபாசனைப் பேச்சு உதவும்.

  அத்துவித உச்சியில் நின்ற சங்கரரே ‘பஜ கோவிந்தம் ” தான் பாடினார். நினைவிருக்கட்டும்.

 28. R.Sridharan on September 3, 2010 at 7:11 pm

  எங்கோ படித்தது: நமக்கு இருக்கும் சிறிய அறிவு ஆழமற்ற குட்டையில் உள்ள நீர் போன்றது. அதை அதிகம் கலக்கினால் மேலே வருவது சேறுதான்.
  அதனால்தான் சில சமயம் படிக்காதவர்கள் சீக்கிரம் ஞானம் அடைகின்றனர்.
  ஆனால் ‘ஏதோ’ படித்த சிலர்….
  மான்கள் தண்ணீர் அருந்திக் கொண்டிருக்கும் குட்டையில் ஒரு காட்டு எருமை நுழைந்தாலே போதும்.
  இந்த வள்ளலார் பற்றி முதன் முதலாக வெளியுலகுக்குத் தெரிந்ததே அவரது அண்ணனுக்குப் பதிலாக அவர் செய்த ( சிவ லீலைகளை விளக்கும்)பெரிய புராணச் சொற்பொழி வினால்தான் .

 29. ந.உமாசங்கர் on September 3, 2010 at 10:09 pm

  திரு பிரதீப் அவர்களே

  இந்து மத சாக்கடை!? (நீங்கள் இஸ்லாத்தையோ கிறிஸ்தவத்தையோ அப்படிக் கூறுவதனால், இந்துமதத்தைப் பற்றி அப்படி கூறுவதற்கு உரிமம் கிடைத்துவிடாது.) தைஞாக்ச் சொன்னாலும், சேர்த்துச் சொன்னாலும் கண்டனம் கண்டனம் தான். வன்மையாகக் கண்டிக்கத்தக்கதே இது.

  நீங்கள் சுத்த சன்மார்க்கியா? அப்படியானால் சன்மார்க்கப் பாடம் எடுக்கத்தயாரா? தயாரென்றால் சொல்லுங்கள், நான் சென்னையின் மையப்பகுதியில் ஏற்பாடு செய்கிறேன். என்னுடன் பல மாணவர்களும் தயார். உங்கள் வசதி எப்படி?பாடத்துக்கேற்றபடி தக்க சன்மானமும் ஏற்பாடு செய்கிறேன்.

  நீங்கள் சென்ற மறுமொழியில் இட்ட அந்த இரு திருஅருட்பாக்களும் எந்த வலைப் பக்கத்திலிருந்து cut, copy, paste என்றால் அது இதோ:

  http://www.vallalar.org/Tamil

  இதே பக்கத்தில் நீங்கள் cut, copy, paste செய்யாத திரு அருட்பா இதோ:

  “நான்உரைக்கும் வார்த்தைஎலாம் நாயகன்றன் வார்த்தை
  நம்புமினோ நமரங்காள் நற்றருணம் இதுவே
  வான்உரைத்த மணிமன்றில் நடம்புரிஎம் பெருமான்
  வரவெதிர்கொண் டவன்அருளால் வரங்களெலாம் பெறவே
  தேன்உரைக்கும் உளம்இனிக்க எழுகின்றேன் நீவீர்
  தெரிந்தடைந்தென் உடன்எழுமின் சித்திபெறல் ஆகும்
  ஏனுரைத்தேன் இரக்கத்தால் எடுத்துரைத்தேன் கண்டீர்
  யானடையும் சுகத்தினைநீர் தான்அடைதல் குறித்தே”

  நீங்கள் இதை விட்டதன் காரணம்:

  “தில்லை அம்பலத்தில் ஆனந்த நடம் புரியும் சிவபிரானைத் தரிசித்து வணங்கி அவன் அருளால் வரங்களெல்லாம் நீங்கள் பெற தேன்போல என் உள்ளம் இனிக்க நான் வருகின்றேன். ” என்ற பொருள் உள்ள வரிகள் இந்தப் பாடலில் வருவதால் நீங்கள் விட்டு விட்டீர்கள்.

  நீங்கள் ஆசிரியரானால், மாணவன் கதி?

 30. ந.உமாசங்கர் on September 3, 2010 at 10:56 pm

  அன்பர் திரு பிரதீப் அவர்களே

  1. வள்ளாலாரின் நித்ய கரும விதி:
  http://www.vallalar.org/ArticlesTamil/46
  சூரியோதயத்திற்கு முன் நித்திரை நீங்கி எழுந்து,1 விபூதி தரித்து சிறிது நேரம் உட்கார்ந்து, கடவுளைத் தியானஞ் செய்தல் வேண்டும்…………….. விபூதி தரித்துச் சிவசிந்தனையோடு சிறிது நேரம் இருத்தல் வேண்டும்.
  சீர்பெறும் அநாதி சிவாகமப் படியே
  நேர்பெறு நித்திய நியமம் புரிவோர்
  கதிரவன் எழுமுன் கடிகை ஐந்தென
  மதிபெற எழுந்து மகேசனை நினைந்தே – நியம அகவல்

  2. பின்வரும் பக்கத்தில் வள்ளலார் எவ்வண்ணம் சிவபிரானை இறைவன் என்று பெயர் சொல்லாமல் வர்ணிக்கின்றார் என்பதைக் காண்க.
  http://www.vallalar.org/ArticlesTamil/44

  3. பின் வரும் பக்கத்தை “அறிவிலி” என்ற ‘அருமையான’ வார்த்தையை உபயோகித்த தங்கள் பார்வைக்கு வைக்கிறேன். அறிவு என்ற சொல் எவ்வண்ணம் பல முறை வள்ளலாரால் பயன் படுத்தப் பட்டிருக்கிறது என்பதைக் காண்க.
  http://www.vallalar.org/ArticlesTamil/43
  “அறிவேவடிவாய் அறிவேபொறியாய் அறிவேமனமாய் அறிவேயழகாய் அறிவேயுருவாய் அறிவேயுணர்வாய் அறிவேயனுபவமாய் அறிவேயறிவாய் விளங்கும்”

  4. பின்வரும் பக்கத்தில் வள்ளலார் தமது இறுதி உபதேசத்தில் பல சித்தாந்தங்களைத் தள்ளினாலும், இறுதியாக, உறுதியாக எப்படிச் சொல்கிறார் என்பதைக் கவனியுங்கள்:
  http://www.vallalar.org/ArticlesTamil/45
  “நாம் அடைய வேண்டுவது முடிவான ஆன்மலாபமாகிய சிவானுபவமேயன்றி வேறில்லை.”

  சிவபக்தியை வள்ளலார் இறுதிவரை விடவுமில்லை. சிவானுபவத்தை அடையும் முயற்சியை எந்தத் தருணத்திலும் சிறுமைப் படுத்தவுமில்லை.

  திருச்சிற்றம்பலம்

 31. ந.உமாசங்கர் on September 3, 2010 at 11:04 pm

  அன்பர் திரு பிரதீப் அவர்களே

  1. வள்ளாலாரின் நித்ய கரும விதி:
  http://www.vallalar.org/ArticlesTamil/46
  சூரியோதயத்திற்கு முன் நித்திரை நீங்கி எழுந்து,1 விபூதி தரித்து சிறிது நேரம் உட்கார்ந்து, கடவுளைத் தியானஞ் செய்தல் வேண்டும்…………….. விபூதி தரித்துச் சிவசிந்தனையோடு சிறிது நேரம் இருத்தல் வேண்டும்.
  சீர்பெறும் அநாதி சிவாகமப் படியே
  நேர்பெறு நித்திய நியமம் புரிவோர்
  கதிரவன் எழுமுன் கடிகை ஐந்தென
  மதிபெற எழுந்து மகேசனை நினைந்தே – நியம அகவல்
  பின்வரும் பக்கத்தில் வள்ளலார் எவ்வண்ணம் சிவபிரானை இறைவன் என்று பெயர் சொல்லாமல் வர்ணிக்கின்றார் என்பதைக் காண்க.
  http://www.vallalar.org/ArticlesTamil/44

  2. பின் வரும் பக்கத்தை “அறிவிலி” என்ற ‘அருமையான’ வார்த்தையை உபயோகித்த தங்கள் பார்வைக்கு வைக்கிறேன். அறிவு என்ற சொல் எவ்வண்ணம் பல முறை வள்ளலாரால் பயன் படுத்தப் பட்டிருக்கிறது என்பதைக் காண்க.
  http://www.vallalar.org/ArticlesTamil/43
  “அறிவேவடிவாய் அறிவேபொறியாய் அறிவேமனமாய் அறிவேயழகாய் அறிவேயுருவாய் அறிவேயுணர்வாய் அறிவேயனுபவமாய் அறிவேயறிவாய் விளங்கும்”

  3. பின்வரும் பக்கத்தில் வள்ளலார் தமது இறுதி உபதேசத்தில் பல சித்தாந்தங்களைத் தள்ளினாலும், இறுதியாக, உறுதியாக எப்படிச் சொல்கிறார் என்பதைக் கவனியுங்கள்:
  http://www.vallalar.org/ArticlesTamil/45
  “நாம் அடைய வேண்டுவது முடிவான ஆன்மலாபமாகிய சிவானுபவமேயன்றி வேறில்லை.”

  4. சிவபக்தியை வள்ளலார் இறுதிவரை விடவுமில்லை. சிவானுபவத்தை அடையும் முயற்சியை எந்தத் தருணத்திலும் சிறுமைப் படுத்தவுமில்லை.

  திருச்சிற்றம்பலம்

 32. venkat swaminathan on September 4, 2010 at 7:08 am

  In which gutter do you wallow, Pradeep?

 33. களிமிகு கணபதி on September 4, 2010 at 10:42 am

  திராவிடர் கழகம் மூலமாகக் கிறுத்துவம் பரப்பி வரும் சாதி வெறி இந்து சமூகத்தை எந்த அளவு பாதித்து உள்ளது என்பதற்கும், கிறுத்துவம் எவ்வளவு கீழான-புத்திசாலித்தனத்துடன் செயல்படுகிறது என்பதற்கும் ப்ரதீப் அவர்களின் கமெண்டுகள் ஆதாரம்.

  இவரைப் போன்றவர்கள்தான் தமிழ்நாட்டில் மிக மிக அதிகம்.

 34. babu on September 4, 2010 at 11:35 am

  சிவத்திலே பல சிவன்களா? என்ன ஒரு கண்டுபிடிப்பு.
  நண்பர்கள் ந.உமாசங்கர் ,R.Sridharan ,நெடியோன் குமரன், C.N.Muthukumaraswamy ,venkat swaminathan (author) ஆகியோர் தேவையான விளக்கம் கொடுத்துள்ளர்கள். நன்றி நண்பர்களே.
  மேலும் பிரதீப் அவர்களிடம் ஒரு கேள்வி நீங்கள் கொடுத்த பாக்களில் சிவனையோ,விஷ்ணுவையோ,முருகனையோ பொய் என்றோ அவ்வழிபாடு தவறு என்றோ குறிப்பிடவில்லையே. இங்கிருந்த சில தவறுகளை சாடினாரே ஒழிய இவற்றை விட்டு புதிய ஒன்றை கூறியிருக்கவில்லையே.சத்திரங்களில்,சமயநெறிகளில் தவறு இருந்ததால் அது கண்டிக்கப்பட வேண்டியதே. அனால் சமயத்தையோ,சமய வழிபாட்டையோ அவர் எங்கே கண்டித்திருக்கிறார்? சாதியையும் மதசண்டையையும் கண்டித்தவர் என்று தான் நாங்களே கூறுகிறோமே.
  ஜோதி வழிபாடனது ஒன்றும் புதிதாக வள்ளலார் கண்டுபிடித்ததல்ல. திருமூலர் திருமந்திரத்திலேயே
  தானேர் எழுகின்ற சோதியை காணலாம்
  வானேர் எழுகின்ற ஐம்பது அமர்ந்திடம்
  பூரேர் எழுகின்ற போர்க்கொடி தன்னுடன்
  தானேர் எழுகின்ற அகாரமது ஆமே
  என்று ஆத்மா லிங்கம் (உயிர்சிவம் ) பற்றி எழுதி இருக்கிறார். ஆத்மாவை ஜோதியாக,சிவ ஜோதியாக கண்டு வழிபடுவது அந்த காலத்திலிருந்தே சித்தர்கள் மரபு.
  சிவனை ஜோதி ஸ்வருபனாக வழிபடுவது மிக பழைய மரபு. இது வேறு ஜோதி,அது வேறு ஜோதி என்றால் என்ன சொல்வது.
  அக்கினியில் மூப்பென்றும் குஞ்சென்றும் உண்டோ?
  இந்து மதத்தில் இதற்குமுன் சொல்லபடாத எதுவும் புதிதாக இதுவரை சொல்லப்படவில்லை. முன்னமே இருந்த கருத்துக்களை புதுபித்து அந்த அந்த காலத்திற்கேற்றபடி தருவதே இந்து மத ஞானிகளின் வழக்கம்.
  வேறு ஒரு சிற்றம்பலமும்,வேறு ஒரு சிவனையும் கண்டுபிடித்த உங்களுக்கு என்ன சொல்வது.எப்படியோ நான் நினைக்கும் சிவம் அல்லாத வேறு ஒரு சிவத்தை சிவத்தை ஒப்புக்கொண்டுள்ளீர்கள்.நீங்கள் எந்த சன்மார்க்கியிடம் சன்மார்க்கம் பயின்றீர்கள்? அவர் விவரங்களை தாருங்கள் அவரிடம் நானும் அந்த புது சிவத்தை கேட்டு தெரிந்து கொள்கிறேன்,புது சிற்றம்பலத்தையும் தெரிந்து கொள்கிறேன் . சன்மார்க்கம் பயின்றவர் நிச்சயம் இப்படி உங்களைபோல் பேசமாட்டார். இதுதான் உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசுதல்.இப்போதும் வள்ளலாரின் வரிகள் உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்.
  இந்து மதத்தை சாக்கடை என்று சொல்ல நீங்கள் யார்? உங்களுக்கு புரியாத அல்லது பிடிக்காத விஷயம் எல்லாம் சாக்கடையா?
  எதையும் ஆராய்ந்து உணர்ந்து அதிலே என்ன இருக்கிறது என்று கண்டுபிடித்து மற்றவர்க்கு சொல்லுவதே பகுத்தறிவு.அல்லாமல் வெறுமனே எதிர்ப்பது குதர்க்கவாதம்.
  நான் ஒன்றும் படிக்காதவன் என்பது உங்கள் தீர்மானம் போல் உங்கள் எழுத்துக்களில் தெரிகிறது.நீங்கள் நினைப்பதால்,நீங்கள் பரப்புவதால் உண்மை மாறிவிட போவதில்லை.என் கல்வியும் சரி அந்த சிவமும் சரி.அவனுறையும் சிற்றம்பலமும் சரி.

 35. babu on September 4, 2010 at 12:11 pm

  பொய்கையாழ்வார் உருவம், பேர் கூட முக்கியமில்லை என்கிறார்.

  ”தமருகந்தது எவ்வுருவம் அவ்வுருவம் தானே
  தமருகந்தது எப்பேர் அப்பேர் – தமருகந்து
  எவ்வண்ணம் சிந்தித்து இமையாதிருப்பரே
  அவ்வண்ணம் ஆழியானாம்” (44)

  எந்த உருவத்தை விரும்புகிறோமோ அது அவன் உருவம். எந்தப் பெயரைக் கொடுக்கிறோமோ அது அவன் பெயர். எந்தவிதமாக சிந்தித்து இடைவிடாமல் தியானம் செய்வீர்களோ அந்த விதமாகவே இருப்பான் சக்கரத்தான்.

  அவரை எந்த விதத்திலும் தொழலாம் ( இது காபி பேஸ்ட் தான் )

  அவனுக்கு அன்பே முக்கியம் உருவமோ பெயரோ அல்ல. இவனும் சிவன்தான்,அந்த சிற்றம்பலத்துரை ஜோதி சிவனும் இந்த விஷ்ணு பெருமாள் தான்.உள்ளமே முக்கியம் உருவமும் பெயரும் அல்லவே அல்ல.ஒவொருவரும் வழிபடும் முறை வேறானதால் கொடுக்கும் உருவம் வேறானதால் அதனுள் உறை எம்பெருமான்,பரப்பிரமம் வேறு ஆகிவிடாது. யார் என்னை எப்படி வழிபடுகிராரோ அப்படியே நான் அவர்களுக்கு காட்சி தந்து ஏற்றுக்கொள்கிறேன் என்பது கிருஷ்ணா பரமாத்மா அருளிய வாக்கு.
  பொங்குபல சமயமேனும் நதிகள் எல்லாம் புகுந்து கலந்திட நிறைவாய் பொங்கி ஓங்கும் கங்கு கரை காணாத கடல் ,
  தங்க நிழல் பரப்பி மயர் சோலை எல்லாம் தணிக்கின்ற தரு, பூந்தடம், ஞான செங்குமுதம் மலர்வதற்காக வரும் மதி எல்லாம் செய்ய வல்ல கடவுள்.
  ஒன்றாய்,பல உருவாய் எல்லாமாய் இருப்பவன் அவன்.
  அவனை பிரித்து வைத்து மக்களை பிரித்து இவர்கள் பிரித்த ஒருவன் பொருட்டு இன்னொருவனை தூற்றி அதன் மூலம் லாபம் தேடுவது எல்லாம் சுயநலக்கரர்களின் சிறுமதி.

 36. babu on September 4, 2010 at 4:40 pm

  http://download942.mediafire.com/malhckafy1dg/qjjydmjnndt/The+Role+of+Yoga-Naturophay+%26+Pryaer+in+Cancer+Treatment.pdf
  The Role of Yoga-Naturophay & Pryaer in Cancer Treatment.pdf
  மேலே உள்ள சுட்டியில் ஆய்வு முடிவுகள்

 37. babu on September 4, 2010 at 7:15 pm

  http://www.vallalar.org/Tamil
  மேலுள்ள சுட்டி திரு ந.உமாசங்கர் ஐயா கொடுத்தது,நன்றி ஐயா அவர்களுக்கு .
  அங்கே சென்று பார்த்தால் பல உண்மைகள் தெரிகிறது.கட் அண்ட் பேஸ்ட் எப்படி நமக்கு சாதகமாக உண்மைக்கு புறம்பாக திரித்து செய்வது என்பது தெளிவாக தெரிகிறது.சில இங்கே

  திருவருட்பா அனைத்தும் அடங்கிய ஒர் அருள் ஞானக்களஞ்சியம். திருவருட்பா என்பது உண்மை உரைக்க வந்த இறை நூலாகும். இதில் பற்பல சாதன ரகசியங்களும், //சிவ ரகசியங்களையும்//, சித்துகளையும் உள்ளடக்கி பாடப்பெற்றுள்ளது. எந்த ஒரு சித்த புருஷரும் வெளிப்டையாக பகிரங்கமாக எடுத்துரைக்காத விசயங்களை எல்லாம் தெள்ளம் தெளிவாக எடுத்துரைக்கப் பெற்ற ஒரே ஒரு நூல் என்று சொன்னால் அதுவே திருவருட்பாவாகும்.
  சிவரகசியங்களை சுட்டு (விட்டு )விட்டார்கள் அங்கிருந்து சுட்டவர்கள்.

  சாதியிலே மதங்களிலே சமயநெறி களிலே
  சாத்திரச்சந் தடிகளிலே கோத்திரச்சண் டையிலே
  ஆதியிலே அபிமானித் தலைகின்ற உலகீர்
  அலைந்தலைந்து வீணேநீர் அழிதல்அழ கலவே
  நீதியிலே சன்மார்க்க நிலைதனிலே நிறுத்த
  நிருத்தமிடும் தனித்தலைவர் ஒருத்தர்அவர் தாமே
  வீதியிலே அருட்சோதி விளையாடல் புரிய
  மேவுகின்ற தருணம்இது கூவுகின்றேன் உமையே
  இந்த பாக்களை சுட்டு இதன் கீழ் உள்ள இந்த விளக்கத்தை விட்டு விட்டார்கள் அங்கே உள்ள விளக்கம்.

  ஆக பேதமற்று, கலவரங்கள் இல்லாத அமைதியான இயற்கை ஒட்டிய வாழ்வு பெறவும், என்றென்றும் தடைபடாது அழியாத மெய்வாழ்வு பெறவும் நமக்கு வள்ளல் பெருமான் வழிவகுத்துக் கொடுத்துள்ளார்கள். ஆதாவது, நமது ஆன்மாவின் கண் பல திரைகளால் முடப்பட்டுருப்பதாகவும் அவற்றை நீக்கி கொண்டு, ஏமசித்தி, சாகக்கல்வி, தத்துவநிக்கிரஹம் செய்தல், கடவுள் நிலையறிந்து அம்மயமாதல் ஆகிய நான்கு புருஷார்த்தங்களை நாம் பெறுமாறு நமக்கு எடுத்து அருளியுள்ளார்கள். இவ்வாறு முடிந்த முடவாகிய //சிவானந்த அனுபவமே// தவிர மற்றுவேரில்லை என்றும் அவ்வனுபத்தை எல்லோரும் தன்னைப் போல் பெற ஒரு மார்க்கத்தை கண்டார்கள், அது தான் சமரச சுத்த சன்மார்க்கம் என்னும் ஓளி நெறி மார்க்கமாகும்.
  இப்போது புரிகிறதா இது வள்ளலாரை இந்து மதத்தில் இருந்து பிரிக்கும் முயற்சி என்று.இதற்கு இது வேறு சிவத்தின் ரகசியம், வேறு சிவானந்த அனுபவம் என்று கூட விளக்கம் தருவார்கள்.

 38. R.Sridharan on September 8, 2010 at 5:16 pm

  இவரும் சுவிசேஷ கும்பலில் ஒருவராக இருப்பாரோ?
  இராமலிங்க வள்ளலாரைப் பிடித்து ஹிந்து சமயத்தைப் பிடிக்காமல் போவானேன்?
  வள்ளலார் என்ன அரேபியாவில் அல்லது பாலஸ்தீனத்தில் பிறந்தாரா?
  ஒரு ஹிந்துவைத் தவிர யாராவது அவர் போல் பேச முடியுமா? சிந்திக்க முடியுமா? எழுத முடியுமா? அனுபவிக்க முடியுமா?
  .

 39. babu on September 18, 2010 at 4:49 pm

  சமீபத்தில் நான் கேட்ட உயர்திரு சுகி சிவம் அவர்களின் பேச்சில் கேட்டவை.
  ஒரு அத்வைதி ராமகிரிஷ்னரை பார்த்து ஏன் இன்னும் கல்லை (காளி தேவியை) கட்டிக்கொண்டு அழுகிறாய்? வா உனக்கு அத்வைத ஞானத்தை தருகிறேன் என்றார்.
  அதற்கு ராமகிருஷ்ணர் இருங்கள் காளி மாதாவை கேட்டு விட்டு வருகிறேன் என்று ஓடிசென்று கேட்டுவிட்டு வந்தார்.அனுமதி கிடைத்து விட்டது என்று அவர் சொல்ல பின்னர் அத்வைதி அவருக்கு சக்தியை மேலெழுப்பும் போது புருவமத்திக்கு மேல் செல்ல முடியவில்லை, ராமகிருஷ்ணர் சொல்கிறார் காளி மாதா நின்று கொண்டு தடுக்கிறாள் என்று. அத்வைதி சொல்கிறார் அவள் கையில் உள்ள வாளை வங்கி அவளை வெட்டு என்று, இவர் தயங்கவே அத்வைதி ஒரு சிறிய கண்ணாடி துண்டினால் நெற்றியில் கீறி சக்தியை மேலளுப்பி அத்வைத அனுபவத்தை அடைய வைக்கிறார்.

  அத்வைதிக்கு மிகுந்த மகிழ்ச்சி நாம் வருட கணக்கில் பயின்ற ஞானத்தை சில நிமிடங்களில் இவருக்கு கொடுத்து விட்டோமே என்று.

  பின் சுயநிலைக்கு வந்த ராமகிருஷ்ணர் பூக்கூடையை தூக்கிகொண்டு காளியை பூஜிக்க ஓடுகிறார்.அப்போது அத்வைதி நீதான் உயர் ஞானம் பெற்று விட்டாயே இன்னும் எதற்கு உனக்கு அந்த கல் என்று கேட்க, அதற்கு ராமகிருஷ்ணர் நான் உயர்நிலையில் இருக்கும் போது எந்த தவறும் செய்ய மாட்டேன். ஆனால் கீழே இறங்கி சராசரி வாழ்வில் இருக்கும் போது எந்த தவறும் செய்து விடாமல் காப்பாற்ற எனக்கு அவள் பக்தி அவசியம் என்றாராம்.

  அதன் பிறகு தான் அத்வைதியும் உருவ வழிபாட்டின் அவசியத்தை உணர்ந்தாராம்.

 40. babu on September 30, 2010 at 3:14 pm

  வள்ளலார் இந்து மதத்திற்கு எதிரானவரா?

  ///////////வள்ளலார் வலியுறுத்திய ஒரு விரதம்தான் செவ்வாய்க்கிழமை விரதம். ஆனால் இது முழுக்க முழுக்க முருகப்பெருமானுக்குரிய விரதம் என்று கூறி விட இயலாது. வள்ளலார் ஆரம்பத்தில் திருத்தணிகை முருகப் பெருமானைத் தொழுது அவரது காட்சி பெற்றவர் என்பது இங்கே நினைக்கத் தகுந்தது.
  வள்ளலார் ஆரம்ப காலகட்டத்தில் முருகனைத் தொழுது வணங்கியவர். சுப்ரமணியம் என்பது பற்றி அவர், “ சுப்பிரமணியம் என்பது என்னை? நமது புருவ மத்தியில் உருட்சியாய் ஆறு பட்டையாய் உருட்சியுள்ள ஒரு மணிப் பிரகாசம் பொருந்தியிருக்கின்றது. இந்த ஜோதி மணியை ஷண்முகமென்று பெரியோர்கள் சொல்லுவார்கள். இதன்றி, நமது மூலாதாரத்திற்கு மேல் மூன்றிடந்தாண்டி விசுத்தியாகிய இருதய ஸ்தானத்தில் இடது புறத்தில் ஆறு தலையுடைய ஒரு நாடி இருக்கின்றது. இதைச் சுப்பிரமணியம் என்று சொல்லுவார்கள். இந்தத் தேகத்திலுள்ள ஆறறிவும் ஒருங்கே சேர்ந்த சுத்த விவேகமென்பதையும் ஷண்முகம் என்பார்கள். ஆறு ஆதாரங்களில் உள்ள ஆறு பிரகாசத்தையும் ஷண்முகம் என்பார்கள். ஆயினும் சர்வ தத்துவங்களினது அந்தத்தில் உள்மணிக்கப்பால் சாந்த நிறைவாயுள்ள ஆறுதலாகிய சுத்த ஆன்ம அறிவான உள்ளமே சுப்பிரமணியம்………”

  – என்று சுப்பிரமணிய தத்துவத்தைப் பற்றி விளக்கி இருக்கிறார் வள்ளலார்.

  திருத்தணிகை முருகன்

  செவ்வாய்க் கிழமை விரதம் பற்றி அடிகளார் கூறி இருக்கும் குறிப்பு.

  “திங்கட்கிழமை இரவில் பலகாரஞ் (பழ ஆகாரம்) செய்து, செவ்வாய்க்கிழமை அருணோதயத்தி லெழுந்து, திருநீறு நெற்றியில் மாத்திரம் அணிந்து, நல்ல நினைப்புடன் அங்கசுத்தி, தந்தசுத்தி முதலானவையுஞ் செய்து கொண்டு, சூரியோதயத்திற்கு முன் ஆசாரமான சுத்த சலத்தில் ஸ்நானஞ் செய்து, விபூதியை சலத்தினால் குழைத்து அனுஷ்டானப்படி தரித்துக் கொண்டு, கண்பதியை நினைத்து , பின்பு ஸ்ரீ பஞ்சாஷரத்தை நூற்றெட்டு முறை சபித்து, பின்பு சிவத்தியானம் செய்து, எழுந்து வாயிலில் வந்து சூரியனைப் பார்த்து ஒம் சிவ சூரியாய நம என்று மெதுவாகச் சொல்லி நமஸ்கரித்து அதன் பின்பு அவ்விடத்தில் தானே நின்று கொண்டு, தங்கள் தங்கள் மனத்திலிருக்கிற கோரிக்கைகளை முடித்துக் கொடுக்க வேண்டுமென்று ஸ்ரீ வயித்தியலிங்கரையும் தையனாயகியையும் முத்துக்குமாரசாமியையும் தியானித்துக் கொண்டு, பின்பு ஔம் வயித்தியநாதாய நம வென்று நூற்றெட்டு, ஆயிரத்தெட்டு இரண்டில் எந்த அளவாவது செபித்து, ஒரு பலம் மிளகு சீலையில் முடிந்து வயித்தியலிங்கார்ப்பணம் என்று ஔரிடத்தில் வைத்து, சிவனடியார் ஒருவர்க்கு உபசாரத்தொடு அமுது படைத்து, பின்பு சுசியொடு பச்சரிசிப் பொங்கல் முதலான புசிப்பை அரையாகாரம் முக்கால் ஆகாரங் கொண்டு, அன்று மாலையில் சிவ தரிசனஞ் செய்து, பாய் சயனம், கொட்டை (தலையணை) முதலாகியவையும் விட்டு, மெழுகிய தரையில் கம்பளம் விரித்துப் படுக்க வேண்டும். சிவ சரித்தரங் கேட்க வேண்டும். செபஞ் செய்துகொண்டிருக்க வேண்டும். சந்தனம், புட்பம், தாம்பூலம், இராகம்,. சுகம், பெருந்தூக்கம் முதலானவையும் விட்டிருக்க வேண்டும். ”

  -என்று வள்ளலார் குறிப்பிட்டிருக்கிறார்./////////////

  இது வள்ளலார் பற்றி வேறு ஒரு தளத்தில் உள்ள தகவல்.

  http://ramanans.wordpress.com/2010/09/30/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2/

 41. சிவஸ்ரீ. விபூதிபூஷன் on May 16, 2011 at 1:27 pm

  சுவாமி தயானந்தர் போற்றுதலுக்கு உரியவர் நமது சனாதன தர்மத்திற்கும் பாரத நாட்டிற்கும் அவர்செய்ய்த பணி மிக உயர்வானதே. மூர்த்தி வழிபாட்டில் சடங்குகளையும் அவர் ஏற்றுக்கொள்ளாமல் இருப்பதால் அவர் நாஸ்திகர் ஆக மாட்டார். அறிவுசால் வெங்கட் சுவாமிநாதன் நாஸ்திகர் என்ற பதத்தினை சுவாமி தயனந்தற்கும் அருட்பிரகாச வள்ளலாருக்கும் பிரயோ கித்திருப்பது தவறானது. ஆஸ்திகர் என்பது இறை நம்பிக்கை உள்ளவர்களை குறிக்கும் நாஸ்திகம் இறைமறுப்பாளர்களுடைய நம்பிக்கை. சில சமயம் வேத மறுப்பும் நாஸ்திகம் என கருதப்படும். அவ்வகையிலும் சுவாமிகளும் அடிகளும் நாஸ்திகர்கள் அல்ல. வள்ளலார் வேதத்தில் தான் சாகாக்கலை எனும் கோட்பாடு காணப்படுவதாக கூறுகிறார்.
  சுவாமி தயானந்தர் சாதி பாலின வேறு பாடின்றி வேதம் அனைவரும் ஓதுதற்கு உரியது என்று பறைசாற்றினார். அவரது உயர்வான மற்றொரு கருத்து விதி நியதி என்பனவற்றில் நியதியை (மனித வாழ்வில் அனைத்தும் இறைவன் எழுதியபடியே நிகழ்கிறது predetermined destination) மறுத்து விதியை(கர்மவினை) மட்டும் ஏற்றுக்கொண்டதாகும்.

மறுமொழி இடுக:

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.

உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:

தமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.

மறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

*