சுதந்திரத்துக்கு முன் காங்கிரஸ் கடந்து வந்த பாதை

womesh_chandraகாங்கிரஸ் இயக்கம் தோன்றக் காரணமாக இருந்தது சென்னை மகாஜன சபை. 1885இல் டிசம்பர் 28 முதல் 30ஆம் தேதி வரை 72 பிரதிநிதிகளுடன் நடந்த முதல் காங்கிரஸ் மகாநாட்டில் தலைமை வகித்தவர் உமேஷ் சந்திர பானர்ஜி (Womesh Chandra Bonnerjee).

அப்போது காங்கிரசின் நோக்கம் பரிபூர்ண சுதந்திரம் பெறுவது அல்ல. ஆங்கிலேய அரசிடம் சில சலுகைகளை அல்லது உரிமைகளைக் கேட்டுப் பெறுவது. இதற்காக ஒரு தூதுக்குழு லண்டனுக்குச் சென்றது.dadabhai_naoroji

இரண்டாவது காங்கிரஸ் மகாநாடு 1886இல் கல்கத்தாவில் தாதாபாய் நெளரோஜி தலைமையில் நடந்தது. இதிலும் நாட்டு நிர்வாகத்தில் சில சலுகைகளைத்தான் கேட்டுத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 1887இல் சென்னையில் டிசம்பர் மாதம் 600 பிரதிநிதிகளுடன் நடைபெற்றது. இதற்கு பத்ருதீன் தயாப்ஜி தலைவர். இதிலும் குறிப்பிடத்தக்கத் தீர்மானம் எதுவும் கொண்டு வரவில்லை.

george_yule1888இல் அலகாபாத் காங்கிரசின் தலைவர் ஓர் வெள்ளையர். பெயர் ஜார்ஜ் யூல். இதில் 1248 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். லார்டு டப்ரின் என்பவர் காங்கிரசை ராஜத் துரோக இயக்கம் என்று வர்ணித்ததை இந்த காங்கிரஸ் கடுமையாக எதிர்த்தது.

இந்த ஆண்டு காங்கிரசின் செயலாளராக இருந்தவர் ஆலன் ஆக்டோவியன் ஹ்யூம். 1889இல் பம்பாயில் 900 பிரதிநிதிகளுடன் கூடிய காங்கிரசுக்கு பிரோஷ்ஷா மேத்தா தலைமை வகித்தார். இங்கிலாந்து பாராளுமன்ற உறுப்பினர் சார்லஸ் பிராட்லா இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு இந்திய சீர்திருத்தம் பற்றி நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவதாக உறுதியளித்தார்.

pherozeshah_mehta1890இல் கல்கத்தா காங்கிரசுக்கு மறுபடியும் பிரோஷ்ஷா மேத்தா தலைவர். காங்கிரஸ் தூதுக்குழு ஒன்றை இங்கிலாந்துக்கு அனுப்ப இந்த மகாநாடு தீர்மானித்தது. 1891இல் நாகபுரி காங்கிரஸ், இதற்கு ஆந்திரத்தைச் சேர்ந்த அனந்தாச்சார்லு தலைவர். 812 பிரதிநிதிகள் கூடினர். ராணுவச் செலவைக் குறைக்க திலகர் கொண்டு வந்த தீர்மானம் நிறைவேறியது. 1892இல் அலகாபாத் காங்கிரஸ். இதற்கு உமேஷ் சந்திர பானர்ஜி தலைவர். 1893இல் தாதாபாய் நெளரோஜி தலைமையில் லாகூரில் 867 பிரதிநிதிகள் கலந்துகொண்ட மாநாடு நடந்தது. நாட்டில் வறுமையை ஒழிப்பது என்று ஒரு தீர்மானம் நிறைவேறியது. இந்த கோஷம் இந்திராவின் ‘கரிபி ஹடாவ்’ (ஏழ்மையை ஒழிப்போம்) வரை வந்து இன்று வரை எழுப்பப்படுகிறது. ஆனால், வறுமைதான் ஒழியக் காணோம்.

1894இல் அயர்லாந்தின் சுதந்திர இயக்கத் தலைவர் ஆல்பிரட் வெப் தலைமையில் சென்னையில் நடைபெற்றது. போதைப் பொருட்கள் தடுப்பு, ஆலைகளுக்கு வரிவிதிப்புக்கு எதிர்ப்பு போன்ற தீர்மானங்கள் நிறைவேறின. 1895இல் சுரேந்திரநாத் பானர்ஜி தலைமையில் 1584 பிரதிநிதிகளுடன் புனேயில் மாநாடு நடந்தது. இதில் தென்னாப்பிரிக்க 800px-1st_inc1885இந்தியர்களின் துயர் துடைத்திடவும், ரயிலில் 3ஆம் வகுப்புப் பயணிகளுக்கு வசதிகள் கேட்டும் தீர்மானங்கள் நிறைவேறின. 1896இல் கல்கத்தா காங்கிரஸ். இதற்குத் தலைவர் ரஹ்மத்துல்லா சயானி. இதில் சென்னை, வங்கம் ஆகிய மாகாணப் பஞ்சத்துக்கு அரசே காரணம் என்று ஒரு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. 1897இல் மத்தியப் பிரதேசம் அம்ரோட்டியில் சங்கரன் நாயர் தலைமையில் மாநாடு நடந்தது. ராஜத்துரோகக் குற்றம் சாட்டப்பட்டு பால கங்காதர திலகருக்கு தண்டனை விதித்ததை இந்த மாநாடு கண்டித்தது.

1898இல் மீண்டும் சென்னையில் மகாநாடு. இதற்கு ஆனந்த மோகன் போஸ் தலைவர். மக்களைத் தியாகம் செய்யத் தயாராக இருக்குமாறு கேட்டுக்கொண்டு தீர்மானம் நிறைவேறியது. 1899இல் ரமேஷ் சந்திர தத்தர் லக்னோவில் மாநாடு நடந்தது. கர்சானின் நிர்வாகத்தை எதிர்த்தும், கல்வியில் சில மாற்றங்கள் வேண்டியும் தீர்மானங்கள் வந்தன. 1900இல் ‘இந்து பிரகாசம்’ பத்திரிகை ஆசிரியர் என். ஜி. சந்தாவர்க்கர் தலைமையில் லாகூரில் மாநாடு நடந்தது.

தென்னாப்பிரிக்காவில் நேட்டாலுக்கு இந்தியர்கள் வருவதையும் தொழில்செய்வதையும் தடுக்கும் சட்டத்துக்கு எதிரான தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

1901இல் தீன்ஷா வாச்சா எனும் பஞ்சாலை முதலாளியின் தலைமையில் மாநாடு நடந்தது. இந்த காங்கிரசில் காந்திஜி கலந்துகொண்டு தென்னாப்பிரிக்கா பற்றிய ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்தார். 1902இல் சுரேந்திரநாத் பானர்ஜி தலைமையில் அலகாபாத்தில் மாநாடு. இதில் இந்திய பாதுகாப்புச் செலவுகள் குறைப்பது குறித்து தீர்மானம் வந்தது. 1903இல் பாரிஸ்டர் லால் மோகன் கோஷ் தலைவர். மக்கள் சக்தியை ஒன்று திரட்ட தீர்மானம் கொண்டு வரப்பட்டது. 1904இல் ஹென்றி காட்டன் எனும் ஆங்கிலேயர் தலைமையில் காங்கிரஸ் வங்கப் பிரிவினைக்குத் திட்டமிடதை எதிர்த்துத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

250px-nehruwithgandhi19421905இல் கோபாலகிருஷ்ண கோகலே தலைமையில் காசியில் காங்கிரஸ் கூடியது. இந்த மாநாட்டில் இங்கிலாந்து இளவரசர் இந்தியா வரும்போது வரவேற்பு கொடுப்பது என்று கோகலேயும், சுரேந்திரநாத் பானர்ஜியும், எதிர்த்து லாலா லஜபதி ராயும் திலகரும் தீர்மானம் கொண்டு வந்தனர். இதில் கோகலேயின் தீர்மானம் நிறைவேறியது.

1906இல் கல்கத்தாவில் தாதாபாய் நெளரோஜி தலைமையில் காங்கிரஸ். இதில் மிதவாத, தீவிரவாத காங்கிரசின் மோதல் இருந்தது. சுதேசிக் கல்வி, கைத்தொழில் வளர்ச்சி பற்றி தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டன.

1907இல் நாகபுரியில் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த காங்கிரஸ் சூரத்தில் நடந்தது. இந்த காங்கிரஸ்தான் வரலாற்றுச் சிறப்பு மிக்க காங்கிரஸ், அடிதடி ரகளை, நாற்காலி வீச்சு இவற்றில் முடிந்த காங்கிரஸ். தலைவர் ராஷ்பிகாரி கோஷ் பலத்த எதிர்ப்புக்கிடையே தலைமை வகித்தார். கோஷின் தலைமையை நேரு ஆதரித்தார். தமிழ்நாட்டுப் பிரதிநிதிகளான வ.உ.சி., பாரதியார், சிவா ஆகியோர் திலகரின் தீவிரவாதக் குழுவில் செயல்பட்டனர். 1908இல் மீண்டும் ராஷ்பிகாரி கோஷ் தலைமையில் சென்னையில் நடந்தது. இதில் ஆங்கிலேய அரசு கொண்டு வரும் சீர்திருத்தங்களுக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டது.

1909இல் மதன்மோகன் மாளவியா தலைமையில் லாகூரில் கூடியது. அப்போது மிண்டோ மார்லி சீர்திருத்தம் அறிவிக்கப்பட்டு, இந்து முஸ்லீம் வேற்றுமைக்கு பிரிட்டிஷார் அடிகோலினர். அதை எதிர்த்து ஒரு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

1910இல் சர் வில்லியம் வெட்டர்பன் தலைமையில் அல்காபாத்தில் காங்கிரஸ் கூடியது. முகமது அலி ஜின்னா கொண்டு வந்த வகுப்பு வாரி பிரதிநிதித்துவ முறையையும், தனித்தொகுதியையும் எதிர்க்கும் தீர்மானம் நிறைவேறியது. 1911இல் கல்கத்தாவில் பண்டித பிஷன் நாராயண் தலைமையில் காங்கிரஸ். இவ்வாண்டில்தான் இந்தியாவின் தலைநகர் கல்கத்தாவிலிருந்து டெல்லிக்கு மாற்றப்பட்டது. பத்திரிகை சட்டம் பற்றிய தீர்மானம் நிறைவேறியது.

1912இல் பிகாரின் பாட்னா நகரத்தில் மூதோல்கர் தலைமையில் காங்கிரஸ். காங்கிரஸ் ஸ்தாபகர் ஆலன் ஆக்டோவியன் ஹ்யூமின் மரணத்துக்கு அஞ்சலி நடைபெற்றது. 1913இல் கராச்சியில் காங்கிரஸ் கூடியது. காந்திஜி இந்த மகாநாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டார்.

1914இல் பூபேந்திரநாத் பாசு தலைமையில் சென்னையில் மாநாடு. முதல் உலக யுத்தம் நடந்தது. சென்னை கவர்னர் கலந்துகொண்ட இந்த மாநாட்டில் பிரிட்டிஷாருக்கு யுத்த ஆதரவு தெரிவிக்கப்பட்டது. 1915இல் பம்பாயில் மாநாடு. தலைவர் சத்யேந்திர பிரசன்ன சின்ஹா. அதுவரை மிதவாதிகள் கரங்களில் இருந்த காங்கிரசில் தீவிரவாத காங்கிரசாரும் அனுமதிக்கப்பட்டனர்.

220px-annie_besant1916இல் மீண்டும் லக்னோவில் அம்பிகாசரண் மஜூம்தார் தலைமையில் கூடியது. இவ்வாண்டில் கோகலே, மேத்தா இறந்து போயினர். திலகர் காங்கிரசில் கலந்து கொண்டார். அன்னிபெசண்ட் ஹோம்ரூல் இயக்கத்தைத் தொடங்கினார். இந்த மகாநாட்டில் ஒரு வேடிக்கை நடந்தது.

இங்கு நடந்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக்கான தேர்தலில் காந்தி திலகரிடம் தோற்றார். ஆனால், வெற்றி பெற்ற திலகர் காந்திஜி தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவித்தார்.

1917இல் கல்கத்தாவில் அன்னிபெசண்ட் தலைமையில் காங்கிரஸ். சம்பரான் சத்தியாக்கிரகம் நடந்தது. தேசியக் கொடி உருவாக்கப்பட்டது. ரெளலட் சட்டம் கொண்டு வர அமைக்கப்பட்ட குழுவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

1918இல் பம்பாயில் ஹஸன் இமாம் தலைமையில் 3500 பிரதிநிதிகளுடன் காங்கிரஸ் கூடியது. அதே ஆண்டு மற்றுமொரு காங்கிரஸ் டெல்லியில் மதன்மோகன் மாளவியா தலைமையில் நடந்தது. இதில் மாண்டேகு செம்ஸ்போர்டு சிபாரிசுகள் கண்டிக்கப்பட்டன. திலகருக்கு பேச்சுரிமை பறிக்கப்பட்டதை எதிர்த்துத் தீர்மானம் நிறைவேறியது. வேல்ஸ் இளவரசருக்கு வரவேற்பு தருவதாக தீர்மானிக்கப்பட்டது. 1919இல் 7000 பிரதிநிதிகளுடன் மோதிலால் நேரு தலைமையில் அமிர்தசரசில் காங்கிரஸ் நடந்தது. ஒத்துழையாமை இயக்கம் குறித்து தீர்மானிக்கப்பட்டது. 1920இல் நாகபுரியில் சேலம் தமிழர் சி.விஜயராகவாச்சாரியார் தலைமையில் 20000 பிரதிநிதிகளுடன் காங்கிரஸ் நடந்தது. அகிம்சையை போராட்டப் பாதையாக தேர்ந்தெடுக்கப்பட்டது. ராஜகோபாலாச்சாரியார் (ராஜாஜி) காங்கிரசின் செயலாளராக ஆனார்.

1921இல் லாலா லஜபதி ராய் தலைமையில் கல்கத்தாவில் கூடியது. இதில் பட்டதாரிகள் பட்டங்களைத் துறப்பதென்றும், பள்ளிகள், நீதிமன்றங்கள் புறக்கணிக்கப்பட வேண்டுமென்றும் தீர்மானம் நிறைவேறியது. ஒத்துழையாமை இயக்கம் வலியுறுத்தப்பட்டது. 1922இல் கயாவில் சித்தரஞ்சன் தாஸ் தலைமையில் மாநாடு நடந்தது. சட்டசபைக்குப் போவதா வேண்டாமா என்பதுதான் இம்மாநாட்டின் தலையாய பிரச்சனை. அரசாங்கத்தின் அடக்குமுறைகள் கண்டிக்கப்பட்டன. 1923இல் மெளலான அபுல்கலாம் ஆசாத் தலைமையில் டெல்லியில் மாநாடு. இதைத் தொடர்ந்து காக்கிநாடாவில் ஒரு சிறப்பு மாநாடு நடந்தது. நாட்டின் ஒற்றுமை இதில் வலியுறுத்தப்பட்டது.

210px-mahadev_desai_and_gandhi_2_19391924இல் பெல்காமில் காந்திஜியின் தலைமையில் காங்கிரஸ் கூடியது. இதில் காந்தியக் கொள்கைகளான சத்தியாக்கிரகம், அகிம்சை முதலியன வலியுறுத்தப்பட்டது. தமிழகத் தலைவர் ந.சோமையாஜுலு இதில் நடந்தே சென்று பங்கு கொண்டார். 1925இல் கான்பூரில் கவிக்குயில் சரோஜினி நாயுடு தலைமையில் மாநாடு கூடியது. சித்தரஞ்சன் தாஸ் மரணமடைந்தார். நாடெங்கிலும் வகுப்புவாதம் தலைதூக்கியது.

1926இல் சென்னை எஸ்.சீனிவாச ஐயங்கார் தலைமையில் கவுகாத்தியில் மாநாடு நடந்தது. 1927இல் டாக்டர் அன்சாரி தலைமையில் சென்னையில் மாநாடு கூடியது. சைமன் கமிஷனை எதிர்ப்பது என்ற தீர்மானம் நிறைவேறியது. கர்னல் நீல் சிலை அகற்ற போராட்டம் நடந்தது. 1928இல் மோதிலால் நேரு தலைமையில் கல்கத்தாவில் காங்கிரஸ் கூடியது. இடைப்பட்ட காலத்தில் சைமன் கமிஷன் எதிர்ப்பு பலமாக நடைபெற்றிருந்தது. ஆங்கிலேய எதிர்ப்பு எங்கும் பரவியிருந்தது.

1929இல் ஜவஹர்லால் நேரு தலைமையில் லாகூரில் கூடியது. இந்தியாவுக்குப் பரிபூரண சுதந்திரம் வேண்டியும் அந்தப் போராட்டத்தில் ஆண் பெண் அனைவரும் பங்கு பெற அழைப்பு விடுக்கப்பட்டது. அன்னியத் துணி எரிப்புப் போராட்டம் நடந்தது. பகத்சிங்குக்கு எதிரான வழக்குகள் நடந்தன. சிறைக் கொடுமைகளை எதிர்த்து ஜதீந்திரநாத் தாஸ் 61 நாள் உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்தார்.

1885 முதல் 1928 வரை நடந்த காங்கிரசில் பரிபூர்ண சுதந்திரம் என்பது கோரிக்கையாக இல்லை. 1929இல் நேரு தலைமையில் நடந்த லாகூர் காங்கிரசில்தான் இந்த கோஷம் எழுப்பப்பட்டது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

1930இல் கராச்சியில் வல்லபாய் படேல் தலைமையில் காங்கிரஸ் மாநாடு நடந்தது. உப்பு சத்தியாக்கிரகம் நடந்து முடிந்திருந்தது. இதற்குப் பின் 1931, 1932 ஆண்டுகளில் காங்கிரஸ் மாநாடு எதுவும் நடக்கவில்லை.

trinity11933இல் கல்கத்தாவில் நல்லி சென்குப்தா தலைமையில் மாநாடு நடந்தது. ஜனவரி 26ஐ சுதந்திர தினமாக அறிவித்துக் கொண்டாடப்பட்டது. பத்திரிகைகள் அடக்குமுறைக்கு ஆளாயின. மாவீரன் பகத்சிங், சுக்தேவ், ராஜ்குரு தூக்கிலடப்பட்டனர்.

1934இல் பாபு ராஜேந்திர பிரசாத் தலைமையில் பம்பாயில் காங்கிரஸ் கூடியது. காந்திஜி ஆக்க நடவடிக்கைகளில் ஈடுபட கிருபளானி காங்கிரஸ் தலைவரானார். 1935ஆம் ஆண்டு லக்னோவில் ஜவஹர்லால் நேரு தலைமையிலும், அதன் பிறகு 1937இல் பெயிஸ்பூரிலும் காங்கிரஸ் நடந்தது.

1938இல் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தலைமையில் கூர்ஜரத்தைச் சேர்ந்த ஹரிபுரா எனுமிடத்தில் ஒரு கிராமத்தில் நடந்தது. 1939இல் திரிபுராவில் நடந்தது காங்கிரஸ். இதில், காந்திஜி பட்டாபி சீத்தாராமையாவை நிறுத்த, அதை எதிர்த்து போஸ் நின்று ஜெயித்தார். பட்டாபியின் தோல்வி தன் தோல்வி என்றார் காந்திஜி. நேதாஜிக்கு ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. நேரு முதலானோர் செயற்குழுவிலிருந்து ராஜிநாமா செய்தனர்.

1940ஆம் ஆண்டில் மெளலானா அபுல்கலாம் ஆசாத் தலைமையில் ராம்நகரில் காங்கிரஸ் கூடியது. அப்போது சுபாஷ் சந்திரபோஸ் ‘பார்வார்டு பிளாக்’ எனும் கட்சியைத் தொடங்கியதால் அவரை காங்கிரசிலிருந்து மூன்று ஆண்டுகள் நீக்கி தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அப்போது மாகாணங்களில் இருந்த காங்கிரஸ் மந்திரி சபைகள் ராஜிநாமா செய்து விலகின. இதன் பின்னர் நாடு சுதந்திரம் அடையும் வரை காங்கிரஸ் மகாநாடு நடைபெறவில்லை.

1946இல் சுதந்திரம் தொலை தூரத்தில் தெரிந்த நேரத்தில் மீரட் நகரில் ஆச்சார்ய கிருபளானி தலைமையில் காங்கிரஸ் கூடியது. அரசியல் நிர்ணய சபையின் முடிவுகளை இந்த காங்கிரஸ் ஏற்றுக் கொண்டது. இதன் பின் 1947 ஆகஸ்ட் 15இல் நாடு சுதந்திரம் அடைந்தது. அதன் பின் 1947 நவம்பர் 15இல் டெல்லியில் கூடிய காங்கிரஸ் கூட்டத்தில் அமைச்சர்களுடன் ஏற்பட்ட வேறுபாடு காரணமாக ஆச்சார்ய கிருபளானி ராஜிநாமா செய்தார். காங்கிரஸ் தொடங்கப்பட்ட காலம் முதல் சுதந்திரம் அடைந்த வரையிலான காங்கிரசின் வளர்ச்சி இங்கே சுருக்கமாகக் கொடுக்கப்பட்டு, நாம் கடந்து வந்த பாதையை நினைவு படுத்திக் கொள்ள நேர்ந்தது.

சுதந்திரத்துக்குப் பிறகு காங்கிரசின் நோக்கம் என்ன?

இந்த நாட்டை ஆள்வதற்கு ஒரு அரசியல் கட்சியாகப் பயன்பட்டது. அதற்கு முன்பு வரை சுதந்திரத்துக்காகப் பாடுபடும் இயக்கமாக இருந்தது இப்போது அரசியல் கட்சியாக மாற, அதன் பயனாகப் பதவி, அதிகாரம் போன்றவை நோக்கமாக அமைந்ததே தவிர மக்கள் சேவை என்பது 1947 ஆண்டோடு முடிவுக்கு வந்தது. சுதந்திரத்துக்குப் பிறகு நாட்டில் நடந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் இன்று வரலாறாகப் பதிந்து விட்டன. மதக் கலவரம், நாட்டுப் பிரிவினை, அதனால் ஏற்பட்ட துயரங்கள், தேர்தல்கள், வெற்றி தோல்விகள், சுதந்திரம் அடைந்ததும் நாட்டில் பாலும் தேனும் ஓடுமென்கிற கனவு தோல்வி, இவை அனைத்தும் நம் கண்முன்னால் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இனியும் பார்த்துக் கொண்டுதான் இருக்கப்போகிறோம்.

பாரதியின் சொற்களைச் சற்று மாற்றியமைக்காக வருந்துகிறேன். எனினும் மாற்றாமல் இருக்க முடியவில்லை:

“என்று தணியுமெங்கள் பதவியின் மோகம்?
என்று மடியுமெங்கள் செல்வத்தில் வேட்கை?
என்றவர் ஊழல்கள் தீர்ந்து பொய்யாகும்?
என்றெமது வாழ்க்கையில் நிம்மதி பிறக்கும்?”

ஜெய் ஹிந்த்!

Tags: , , , , , , , , , , , , , , , , , ,

 

20 மறுமொழிகள் சுதந்திரத்துக்கு முன் காங்கிரஸ் கடந்து வந்த பாதை

 1. R.Sridharan on August 30, 2010 at 5:33 pm

  gandhi wanted the congress to be disbanded after independence.
  But the congressmen did not heed his words due to craze for power and Nehru’s disregard of Gandhi after he helped get independence.

 2. vedamgopal on August 30, 2010 at 7:24 pm

  பிரிவினைக்குமுன் காங்கிரஸ் செய்த குற்றங்கள் (Source Daily Sanatan Prabhat)

  1. ஆலன் யூம் என்ற பிரிட்டிஷ் அதிகாரி புரட்சிகாரர்கள் இல்லாத காங்கிரஸ் கட்சியை உருவாக்க 28 தேதி டிசம்பர் 1884ல் பிரிட்டிஷ்க்கு சாதகமாக பேசும் பல தலைவர்களை சந்தித்தது இனியும் 1857 கலகம் போல் பிரிடிஷை யாரும் எதிர்க்கும் துணிவு ஏற்படக்கூடாது என்று தீவிர முயற்ச்சி மேற்கொண்டார். அதற்க்கு இந்த காங்கிரஸ் துணைபோனது.
  2. 1919ல் முதல் உலகபோருக்குபின் துருக்கியை கலியபாத் என்ற கொடுங்கோலன் பிரிட்டிஷ் ஆதரவுடன் ஆட்சி செலுத்திவந்தான். அவனுக்கு எதிராக எழுந்த கலயபாத் புரட்சியில் காங்கிரஸின் தலைவர் காந்தி நமது சதந்திரத்திற்க்கு சற்றும் சம்பந்தம் இல்லாத இயக்கத்திற்க்கு முழு ஆதரவு அளித்தார். இதனால் வீர சிவாஜியால் புட்டிக்குள் அடைக்கப்பட்ட இஸ்லாமிய தீவிரவாத பூதம் திறந்துவிடப்பட்டது.
  3. காந்தியின் பிரார்தனை கூட்டங்களாலும் நீதி போதனைகளாலும் வசீகரப்பட்ட மக்கள் கூட்டம் அவருக்கு கட்டுப்பட்டு பாரதமாதாவிற்க்கு எதிராக எழுப்படும் குரல்களை கேட்டும் உருவ வழிபாட்டை எதிர்பவரை பார்த்தும் காபிர்கள் என்ற குற்றசாட்டை செவிமடுத்தும் பசுவதையை தடுக்கமுடியாமமுலும் ஒருகையால்லாகாத கோழைதனமான நிலைமையை ஏற்ப்பதற்க்கு ஒட்டுமொத்த இந்துக்களும் நிர்பந்திக்கப்பட்டார்கள்.
  4. 1921ல் ஆகஸ்ட் மாதம் மோபலாஸ் இயக்கம் இந்துக்களை கேரளாவின் மலபார்பகுதியில் தீவிரமாக தாக்க ஆரம்பித்தார்கள். கலியபாத் இயக்கத்தின் ஆதரவால் நொந்துபோன இந்துக்கள் தங்களை காத்துக்கொள்ள ஆயத்தம் செய்யவில்லை. பல இந்து பெண்கள் பட்டபகலில் கற்பழிக்கப்பட்டார்கள். பல வீடுகள் தீக்கு இறையாயின. காந்தியின் போலியான இந்து-முஸ்லீம் ஒற்றுமை என்ற கோஷத்தால் இந்துக்கள் தொடர்ந்து நான்குமாதம் பல கொடுமைகளை அனுபவித்தார்கள். இதை பார்த்தும் காந்தி அவர்களை குறைகூறாமல் மொபலாஸ் அவர்கள் மதத்தின் கொள்கைபடிதான் நடந்துகொண்டார்கள் என வழிமொழிந்தார்.
  5. ஆரம்பத்தில் பிரிடிஷ் காலணியின் கீழ் சுய ஆட்சி என்று ஆரம்பித்து பின்பு 1929 ஆம் ஆண்டு லாகூரில் நேருவின் தலைமையில் ஒரு மாநாடு கூட்டி முழுசுதந்திரம் பெறவேண்டும் என தீர்மானம் நிறைவேற்றினார்கள். இந்த ஆமைவேக அணுகுமுறையால் நம் முழு சுதந்திரத்திற்க்கு குரல் எழுப்ப 45 வருடங்கள் எடுத்துக்கொண்டார்கள்.
  6. 1931லும் 1941லும் நடந்த ஜாதிவாரிய மக்கள்தொகை கணக்கெடுப்பில் காங்கிரஸ் பங்குகொள்ளவில்லை. இதை முஸ்லீம்கள் சாதகமாக ஆக்கிக்கொண்டு பிரிவினையின்போது அளவுக்கமீறிய எல்லை பகுதிகளை தங்களுக்கு எடுத்துக்கொண்டார்கள்.
  7. பாரிஸ்டர் ஜின்னா வந்தேமாதிரம் பாடுவதும் பல பொது இடங்களில் ழூவர்ணகொடி ஏற்றுவதும் முஸ்லீம்களின் மத நம்பிக்கைகு எதிராக உள்ளது என புகார் செய்தார். இதை காந்தி செவிமடுத்து காங்கிரஸ் காரியகமிடியில் இதை கூடியவரையில் பொது இடங்களில் தவிற்பது நல்லது என அறிவுரைத்தார்.
  8. 1940இல் லாகூரில் முஸ்லீம் லீக் மாநாடு கூட்டி தனிநாடு கோரிக்கையை முன்வைத்தார்கள். இதை காங்கிரஸ் சற்றும் எதிர்பார்கவிலலை. 1945 தேர்தலில் தனி நாடு பிரிவினை கிடையாது என உருதிமொழி அளித்தார்கள். ஆனால் அதன்படி நடக்கவில்லை.
  9. 16 ஆகஸ்ட் 1946 இல் முஸ்லீம லீக் திட்டம் தீட்டி இந்துக்களை வங்காளத்தில் நவகாளி என்னும் இடத்தில் தாக்கினார்கள். இது மிகவும் தீவிரம் அடைந்து பல கொடுமைகள் பல நாள் நீடித்தது. ஆனால் நேருவின் தலைமையில் இருந்த அரசாங்கம் மௌனம் சாதித்தது. இந்த கலவர கொடுமைகளை பார்த்து அடுத்த மாநிலமான பிஹாரில் இந்துக்கள் முஸ்லீம்களை தீவிரமாக தாக்கினார்கள். காந்தியின் அறிவுறுத்தலின் படி நேரு உடனே பிஹார் சென்று இந்துகளிடம் கலவரைத்தை உடனே நிறுத்தவில்லையெனில் நிங்கள் வாழும் இடங்களை குண்டுவைத்து தகர்பேன் என வீர உரை நிகழ்தினார். முஸ்லீம்களை காப்பதற்க்கு ராணுவத்தை ஏவி கலவரத்தை அடக்கினார்.
  10. காங்கிரஸ் ஒருபோதும் விடுதலைக்காக போர் நிகழ்தவில்லை. பிரிவினைக்குமுன் இஸ்லாமியர்களை தாஜா செய்வதும் பிரிடிஷாருக்கு அனுசரணையானவற்றிற்க்கு தலை ஆட்டுவதையுமே கடைபிடித்து வந்தார்கள். பாரதத்தை துண்டாக பிரித்து சுதந்திரத்தை கத்தயின்றி ரத்தம்மின்றி பெற்று தந்தோம் என நள்இரவில் பல பிணகுவியல்கள் நாடெங்கும் பரந்துகிடந்த நிலையில் சுதந்திர கொடியை ஏற்றினார்கள்

 3. ss on August 31, 2010 at 10:32 am

  இங்கு எடுக்கப்படும் ஒவ்வொரு முயற்சியும் (நல்ல பல கட்டுரைகள்) செவிடன் காதில் ஊதின சங்கே !!!

 4. vedamgopal on August 31, 2010 at 5:44 pm

  11. அம்பேத்கர் தான் எழுதிய ”பாகிஸ்தான் விஷயசே விகார்” என்ற புத்தகத்தில் நாடு பிரிக்கப்பட்டால் நம்நாட்டில் உள்ள அனைத்து முஸ்லீம்களும் பாகிஸ்தான் அனுப்பபடவேண்டும் அதைபோல் பாகிஸ்தானில் உள்ள இந்துக்களை இங்கேஏற்றுக்கொள்ளவேண்டும் என்று வலியுறுத்தினார். ஆனால் காந்தியும் நேருவும் அதை சற்றும் கேளாது ஒட்டுமொத்தமாக நிகாரித்தார்கள். அதன் பலனை இன்று நாம் அனுபவிக்கிறோம். மேலும் இந்துக்கள் பெரும்பான்மையான நாட்டை இந்துநாடு பாரதம் என்று அறிவிக்காமல் இந்தியா ஒரு ஸெக்யூலர் நாடு என அறிவித்தார்கள்.
  12. பிரிடிஷ் கொடுமையால் இறந்த மக்களளைவிட அதிகமான மக்கள் பிரிவினை செய்ய முடிவு எடுத்தபின் இறந்துபோனார்கள். பாகிஸ்தானிலிருந்து வீடுகளை இழந்த இங்கு குடிபெயர்ந்த இந்துக்களுக்கு காங்கிரஸ் போதிய பாதுகாப்பை அளிக்கவில்லை. ஆட்டுமந்தைபோல் ராவல்பண்டி ஸ்டேசனில் இந்துக்கள் அடைக்ப்பட்டு டெல்லிக்கு புறப்பட்டார்கள். ஆனால் ஸ்டேசனிலிருந்து புறப்பட்டு சிறிது தூரம் வண்டிசென்றதும் அதை ஒருபெரும் முஸ்லீம்வெறி கூட்டம் தடுத்துநிறுத்தி ஒவ்வொரு பெட்டியாக திறந்து திட்டமிட்டு கொலைவெறி தாக்கலை ஆரம்பித்தார்கள். தாய்மார்களிடமிருந்து பச்சிளம் குழந்தைகளை உருவிஎடுத்து கால்களை வெட்டியும் தலையை தரையில் அரைந்தும் கொன்றுபோட்டார்கள். பல பெண்களின் கால்களை இருவர் இருவராக தப்பிப்பாமல் இருக்க கடடிபோட்டார்கள். அவர்களை 15 ஆகஸ்ட் வரையில் காவலில்வைத்து பின் 900 பேருக்குமேல் பெண்கள் கட்டவிழ்கப்பட்டு ஊர்வலமாக ராவல்பண்டி தெருக்களில் இழுத்து சென்றார்கள். கையால்ஆகாத காங்கிரஸ் தகுந்த நடவடிக்கை எடுக்கதெரியாமல் முஸ்லீம் கொலைவெறியை வேடிக்கை பார்த்தது.
  13. சிந்துநதியின் கரையில்தான் நமது இந்து காலாசாரம் வேர்ஊன்றி விஸ்தரித்தது. அங்கேதான் நமது முன்னோர்களான பல ரிஷிகள் வாழ்ந்தார்கள். அப்படிபட்ட பண்ணிய நதியை நாம் பிரிவினையால் இழக்க நேர்ந்தது. புண்ணிய நதியான நம் நித்திய மந்திரங்களில் இடம் பெற்ற கங்கையின் ஐந்தில் ஒரு பங்கை பிரவினையால் இழக்க நேர்ந்தது. பிரம்மபுத்திரா நதியும் பங்களாதேசத்தின் வழியாகத்தான் விருப்பம் இல்லாமல் பாய்ந்து கங்கையுடன் இங்கே கலக்கிறது. தேவமொழியான சமஸ்கிருதத்திற்க்கு இலக்கணம் எழுதிய பாணினி பிறந்த இடம் இங்கதான். நான்கான என்ற ஊர் குருநானக் அவதரித்த இடமும் ராமரின் பிள்ளைகளான லவ குசா பிறந்த இடமும் பாகிஸ்தானுக்கு அளிக்கப்பட்டது. புகழ்பெற்ற டாக்கேஸ்வரி அம்மன் கோவில் இருந்த டாக்காவும் பாகிஸ்தானுக்கு அளிக்கப்பட்டது.
  14. பிரிக்கப்பட்ட இடங்களில் வாழ்ந்த இந்துகளைப்பற்றி காங்கிரஸ் சிறிதும் கவலைபடவில்லை. பிரிக்கப்பட்ட இடங்களில் 90 சதவிதித நிலங்கள் இந்துகளுக்கு சொந்தமானது. அதுவும் முக்கிய நகரங்களான கராச்சி ராவல்பண்டி பெஷாவர் லாகூர் போன்ற இடங்களில் இந்துகளுக்கு சொந்தமான அரண்மனைவீடுகள் கல்விகூடங்கள் மருத்துவமனைகள் சேவை மய்யங்கள் பல இருந்தன. பஞ்காப் யூனிவர்ஸிடி 5000 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டது. இது கங்காராம் என்ற இந்துவுக்கு சொந்தமானது. ஸ்ரீ கங்காராம் மருத்துவமனை மிகவும் புகழ் பெற்றது. இவர்களது பரம்பரைக்கு 500 மில்லியன் மேல் சொத்து அங்கே இருந்தது. புகழ்வாய்ந்து அங்காடிகளான பெஷாவரில் இருந்த ராஜா பசார் லாகூரில் இரந்த அனார்கலி பசார் கராச்சியில் இருந்த சதார் பசார் ஐதிராபாத்தில் இருந்த சிந் பசார் போன்றவை இந்துகளுக்கு சொந்தமானது. ஆனால் இன்று அங்கே ஒரு இந்து கடையும் கிடையாது. அதைபோல் பங்களாதேசத்தில் இருந்த சணல் அரிசி ஆலைகள் அனைத்தும் இந்துகளுக்கு சொந்தமானதாக இருந்துது. சொத்துக்கள் பறிக்கப்பட்டு இந்துக்கள் அனைவரும் அனாதைகளாக நாடு திரும்பினார்கள். இவர்களின் தலைஎழுத்தை காங்கிரஸ் எழுதியது நியாயமா? ஆனால் அதே காங்கிரஸ் இன்று பிரிவினையின்போது இங்கே சொத்துக்களை விட்டுசென்ற முஸ்லீம்களின் வாரிசுகளுக்கு தகுந்த நஷ்டஈடு தரவேண்டும் என தகுந்த சட்டம் இயற்ற தயாராக உள்ளார்கள்.
  15. ஒட்டு மொத்த இந்துகளின் எண்ணகள் என்ன என்பதை கேட்காமல் பல முன்ணனி தலைவர்களது பேச்சையும் கேளாமல் தன்னிச்சையாக காங்கிரஸ் பிரிவினைக்கு முடிவுசெய்தது நியாயமா ?

 5. R.Sridharan on August 31, 2010 at 8:27 pm

  இதையெல்லாம் விட கொடுமை ஹிந்து அகதிகள் பாகிஸ்தான் பகுதியிலிருந்து பசியோடும், களைப்போடும் இங்கு வந்த போது டில்லியில் கடும் குளிர் காலம்.
  அந்த அகதிகள் குளிரிலிருந்து தங்களைக் காத்துக் கொள்ள அங்கு காலியாக இருந்த மசூதிகளுக்குள் தஞ்சம் புகுந்தனர்.
  அனால் காந்தி மகான் …………’ நீங்கள் முஸ்லிம்களின் புனித இடத்தில் இருக்கக் கூடாது.அவர்களின் மத உணர்வுகளைப் புண் படுத்தக் கூடாது .ஆகவே வெளியேற வேண்டும் என்று கூறினார். அதன் படி அவர்கள் வெளியேற்றப் பட்டனர்.
  பட்டினியுடன்,அவர்கள் குழந்தைகள், பெண்டிருடன் கடும் குளிரில் வாடினர்.
  அதே போல் தத்தளித்துக் கொண்டிருந்த நம் நாட்டு அரசை பாகிஸ்தானுக்கு மறு சீரமைப்புக்காக ஐம்பது கோடி ரூபாய்கள் கொடுக்க வேண்டும் என்று கட்டாயப் படுத்தினார் .
  அது தாமதமாகவே உண்ணாவிரதம் இருந்து அதைக் கொடுக்க வைத்தார் அந்த மகானுபாவர்!

  இவ்வளவு போலித்தனமும்,உண்மையைக் காண மறுக்கும் நெருப்புக் கோழி சுபாவமும்,எப்போதும் தன்னைப் பற்றி மற்றவர்கள் உயர்வாக நினைத்துக் கொள்ள வேண்டும், ஹிந்து சமுதாயம் எவ்வளவு கஷ்டப் பட்டாலும் பரவாயில்லை என்ற காந்தியின் போக்கு பலருக்குத் துன்பத்தைக்கொடுத்தது.

 6. R.Sridharan on August 31, 2010 at 10:30 pm

  ஒரு நாட்டைப் பிரிக்குமுன் அதன் பெரும்பாலான மக்களிடம்தான் கருத்துக் கேட்க வேண்டும்.
  ஒன்று பட்ட பாரதம் ஹிந்துக்களின் மூதாதையர் நாடு.
  படை எடுத்து வந்தவர்கள் வாள் முனையில் அவர்களில் ஒரு பகுதியினரை இஸ்லாமுக்கு மதம் மாற்றியதால் பிரிவினை வாதம் வந்தது .
  ஆகவே அவர்களின் நாட்டை ஒரு சில காங்கிரஸ்,முஸ்லிம் லீக் மற்றும் வெள்ளை ஆட்சியாளர்கள் தான்தோன்றித்தனமாக உடைத்தது அக்கிரமம்.

  அமெரிக்காவில் ஆப்பிரிக்கர்களின் அடிமைத்தனம் தொடர்பாக அந்நாட்டின் தென் மாநிலங்களுக்கும் வட மாநிலங்களுக்கும் உள்நாட்டுப் போர் மூண்ட போது ஆபிரஹாம் லிங்கன் அடிமைத்தனத்தை ஒழிக்க வேண்டி துணிச்சலுடன் போரை நடத்தி அதில் வெற்றியும் கண்டார்.
  கறுப்பர்களின் அடிமைத்தனத்தை ஒழித்தார்.
  போரினால் தன நாட்டு மக்களே பலர் இறப்பார்கள் என்று அவருக்குத் தெரியும்
  இருந்தாலும் ஒரு அநியாயத்தை ஒழிக்க தன் மக்களே ஆனாலும் அவர்களுடன் போராடத் தயங்கக் கூடாது என்று அவர் நினைத்தார் .
  இதைத்தானே பகவான் கிருஷ்ணர் கீதையில் உரைத்தார்?
  அதைப் படிக்காத லிங்கன் அதன் படி நடந்தார்.
  ஆனால் அதைப் படித்த காந்தி அதை மறந்தார்!

 7. R.Sridharan on September 1, 2010 at 7:50 am

  இதில் மிகவும் அருவருக்கத்தக்கதும்,கண்டிக்கத் தக்கதும் என்னவென்றால் திலகர், சுபாஸ் போஸ், கோகலே,லாலா லஜபதி ராய்,பிபின் சந்திர பால், ராஜாஜி, முதலிய அப்பழுக்கில்லாத , சுயநலம் எள்ளளவும் அற்ற தலைவர்கள் இருந்த காங்கிரஸ் எதோ ஒரு குடும்பத்தின் சொத்து போலவும்,அதன் தலைமை மற்றும் பாரதத்தின் பிரதம மந்திரி பதவி அதன் ஏகபோக உரிமை என்பது போலவும் கேள்வி கேட்பார் இல்லாமல் மாற்றப் பட்டது மிகவும் கேவலமாகும்.
  ஒரு குடும்பம் அனுபவிப்பதற்கா வ வு சி செக்கிழுத்தார்? வீர சவர்க்கார் அந்தமானில் இருட்டுச் சிறையில் வாடினார்? பகத் சிங்கும்,ஆசாத்தும் தூக்கு மேடை ஏறினர்?
  முத்தாய்ப்பாக எந்த அன்னியரை விரட்ட பாடு பட்டமோ அந்த அன்னியர் இன்று நம்மை மறைமுகமாக ஆளுகின்றனர்.
  கொஞ்சம் கொஞ்சமாக காங்கிரஸ் பணக்காரர்களின் கூடாரமாக மாறியது. காந்தியின் கனவான கிராம ஸ்வராஜ்யம் குப்பைத் தொட்டியில் எறியப்பட்டது.
  கோடிக்கணக்கான மக்கள் உண்மையான முன்னேற்றம் காணாமல் அப்படியே வைக்கப் பட்டுள்ளனர்.
  அவர்கள் எதோ பிச்சைக்காரர்கள் போல் அவர்களுக்கு குறைந்த பட்ச தானியங்கள் மட்டும் ரேஷனில் கொடுத்து விட்டு மற்ற படி அவர்களின் வாழ்வு உன்னதம் அடைய எந்த ஊக்கமும் அளிக்கப் படவில்லை.
  மிகக் கடின உழைப்பும்,அறிவுக் கூர்மையும் நிரம்பிய ஒரு சமுதாயத்தை விலங்குகளுக்கு சற்றே மேல் நிலையில் வைத்திருப்பது பாவமாகும்.
  சுதந்திரம் அடைந்தவுடன் நன்கு ஆழ்ந்து சிந்தித்து, இவ்வளவு பாரம்பரியமும்,நற் சிந்தனைகளும் தோன்றிய, இவ்வளவு இயற்கை மற்றும் மனித வளம் உள்ள ஒரு நாட்டை நடத்திச் செல்ல ஒரு நல்ல பாதையை வகுக்காமல் பதவி வெறி,பண வெறி,சுய நலம் பரவிய காட்டுப் பாதையில் காங்கிரஸ் நாட்டை இழுத்துச் செல்கிறது.

 8. Indli.com on September 1, 2010 at 10:26 am

  தமிழ்ஹிந்து » சுதந்திரத்துக்கு முன் காங்கிரஸ் கடந்து வந்த பாதை…

  1916இல் மீண்டும் லக்னோவில் அம்பிகாசரண் மஜூம்தார் தலைமையில் கூடியது. […..] இந்த மகாநாட்டில் ஒரு வே…

 9. R.Sridharan on September 2, 2010 at 3:14 am

  கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகள் நாட்டை ஆண்ட காங்கிரஸ் பெரும்பாலான மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதில் சிறிதும் அக்கறை கொள்ளவில்லை.
  குடும்ப ஆட்சி,நேரு குடும்பத்துக்கு போட்டி போட்டுக் கொண்டு ஜால்ரா தட்டுவது, பணக்காரர்கள் மற்றும் பெரும் முதலாளிகளுக்கு சாதகமாக சட்டம் மற்றும் ஆட்சி,ஊழல் ,தங்கள் கட்சிக்கு மட்டுமே நாட்டை ஆளத் தகுதி உள்ளது என்று இறுமாந்து அதற்காக எதை வேண்டுமானாலும் செய்வது, தங்களுடைய அடிமைப் புத்தியால் சிறிய நாடுகள் கூட நம் நாட்டை மதிக்க வேண்டாம் என்று நினைக்க வைத்து உலக அரங்கில் நம் நாட்டை ஒரு அவமானகரமான நிலைக்குத் தள்ளியது இவையே அதன் சாதனைகள்.

  இன்று ராகுல் திடீர் திடீர் என்று ஒரு ஏழையின் குடிசைக்குள் நுழைவது,அவர்களுடன் போட்டோ எடுத்துக் கொள்வது என்று ஸ்டன்ட் அடிக்கிறார். தனது கொள்ளுத் தாத்தா, பாட்டி, மற்றும் தந்தையார் இவர்களது ஆட்சி மக்களுக்குக் கொடுத்த பரிசை பார்த்து அக மகிழ்கிறாரா?
  சில நிமிடங்கள் ஒரு ஏழை குடிசைக்குள் சென்று பார்த்து விட்டால் அவர்கள் துயர் தீருமா?
  அவரால் முன்னூற்று அறுபத்தைந்து நாட்களும் அந்தக் குடிசையில் வாழ முடியுமா? டில்லி பங்களா வாசமும்,ஜெட் விமான பயணமும்,கார்களும், பணியாட்களும்,அளவற்ற செல்வமும்,குடும்ப சொத்தாக மாற்றிய கட்சியும், ஆட்சியும், அது தரும் அதிகாரமும் இல்லாமல் அவரால் இருக்க முடியுமா?

 10. vedamgopal on September 2, 2010 at 8:19 am

  16. லாகூரில் முஸ்லீம்களின் எண்ணிக்கை 25 சதவிகிதம்தான் எனவே அதை பாக்கிஸ்தானுக்கு அளிக்ககூடாது என்று இந்துக்கள் எதிர்த்தார்கள். அதற்க்கு ”ராட் கிளிப்” என்ற பிரிவினை அதிகாரி நீங்கள் பெரிய நகரங்களான லாகூரையும் கல்கத்தாவையும் கேட்பது தவறு என்றார். 38 சதவிகித பஞ்சாப் பூமியை 45 சதவிகித இந்துகளுக்கு அளித்தார்கள் அதில் சீக்கியரும் அடங்கும். அதாவது 62 சதவிகித பஞ்சாப் நிலத்தை 55 சதவிகித இஸ்லாமியருக்கு அளித்தார்கள். இந்த விகிதாசார வித்தியாசத்தை பற்றி காங்கிரஸ் வாய்திறக்கவில்லை.

  17. சிந்துவில் இருந்த தர்பர்கார் மாவட்டத்தில் 94 சதவிகித இந்துக்கள் இருந்தனர். இவர்கள் பாகிஸ்தானுடன் இணைய மறுத்தனர். அதற்க்கு ராட் கிளிப் என்ற பிரிவினை அதிகாரி மாவட்டவாரியாக யார் இருக்கிறார்கள் என்று பார்த்து பிரிக்கமுடியாது என்றார். ஆனால் அவரே சில்ஹெத் என்ற மாவட்டத்தில் 51 சதவிகித இஸ்லாமியர்கள்தான் இருந்தார்கள். இருந்தும் அதை பாகிஸ்தானுக்கு ஒதுக்கினார். இதற்க்கும் காங்கிரஸ் மறுப்பு தெரிவிக்கவில்லை

  18. அதைபோல் சிட்டகாங் மலை பகுதியின் 13000 சதுர கிலோமீட்டர் நிலங்கள் வங்காளத்தில் இருந்தன. இங்கே 90 சதவிகிதம் இந்துகளும் புத்த பிக்குகளும் கிருஸ்துவர்களும் இருந்தார்கள். அவர்கள் இந்தியாவுடன் இணைவதையே விரும்பி போராடினார்கள். இதையும் பாகிஸ்தானுடன் இணைத்தார்கள். மக்களை பாக் ராணுவம் கொண்டு அடக்கினார்கள். இதற்க்கும் காங்கிரஸ் மௌனம் சாதித்தது.

  19. இஸ்லாமியர்கள் இந்த புண்ணிய பாரத பூமியை தன் தாய்நாடு என அழைக்க மறுத்தார்கள். தேசியகீதமான வந்தேமாத்திரம் பாடலில் துர்கா தேவியை போற்றி வரும் வரிகளை முஸ்லீம் எதிர்பதால் நீக்கி அப்பாடலை இரண்டாம் நிலைக்கு தள்ளி பிரிட்டிஷ் அரசரை புகழ்ந்துகூறும் ஆதிநாயக பாக்யவிதாதா வரிகளைக்கொண்ட ஜனகனமன பாடல் முதன்மை தேசீய கீதமாக காங்கிரஸ் அறிவித்தது.

  20. காங்கிரஸ் முஸ்லீம் பாசப்பிணைப்பை உறுதிசெய்ய பிரிவினைக்குபின் பல பெரிய பதவிகளில் அவர்களை அமர்த்தினார்கள். மகாராஷ்டிராவின் கவர்னராக அலி யாவார் சங் அமர்த்தப்பட்டார். இவர் நிஜாம் அரசகுடும்பத்தின் விஸ்வாசமான அட்வகேட். அதைபோல் மௌலான அப்துல் கலாம் ஆசாட் என்பவரை முதல் கல்வி துறை அமைச்சர் ஆக்கினார்கள். அவர் அரேபியாவில் இருந்துகொண்டு மொத்த இந்தியாவையையும் பாகிஸ்தானாக அறிவிக்கவேண்டும் என்று குரல் கொடுத்தவர். பிரிவினையை எதிர்பதுபோல் நாடகம் நடத்தியவர். பாரிஸ்டர் அசாப் அலி அமெரிக்காவின் தூதுவராக அமர்த்தப்பட்டார். இவர் ஒருசமயம் இந்தியா பலராணுவ தடவாளங்களை அமெரிக்காவில் ஆர்டர் செய்தது. வேண்டும் என்றே ஒரு கப்பல் நிறைய ஆயுதங்களை முகவரிமாற்றி கராச்சிக்கு அனுப்பினார். இவைஎல்லாம் சில உதாரணங்களே. சரித்திரத்தை புரட்டினால் பல அவலங்களுக்கு காங்கிரஸ் துணைபோனதை அறியலாம்.

  21. இந்திய விடுதலையின்போதே கோவாவில் போர்சுகீசியர்களுக்கு எதிராக விடுதலை போராட்டங்கள் நடந்தன. இதற்க்கு காங்கிரஸ் எந்த ஆதரவையும் தரவில்லை. கேட்டால் நேரு இது முகத்தில் இருக்கும் ஒரு மறுபோல்தான் முதலில் நாம் பிரிட்டிஷாரிடமிருந்து விடுதலைபெற்றபின் கோவாவை போரச்சுகீசியர் பிடியிலிருந்து விடுவிப்பது ஒருபொருட்டே அல்ல என்றார்கள். ஆனால் 1954ம் ஆண்டுதான் பல முன்ணனி விடுதலை போராட்டக்காரர்களை காங்கிரஸ் கோவாவிற்க்கு அனுப்பியது. அவர்களை போர்சுகீசிய ராணுவம் இருந்த இடம் தெரியாமல் நசுக்கினார்கள். பின்பு 1961ல் தான் அங்கு இந்திய ராணுவம் சென்று கோவா விடுதலையானது. ஆக காங்கிரஸ் ஒரு சிறு முக பரு என்று கூறியதை நீக்க 14 ஆண்டுகள் எடுத்துக்கொண்டது ஒரு வெட்கபடவேண்டிய விஷயமே

  காந்தி இறந்தபின் காங்கிரஸ் செய்த தவறுகள் தொடரும்

 11. Bala on September 2, 2010 at 12:57 pm

  வேதம் கோபால், நீங்களும் தஞ்சை. வெ.கோபாலனும் ஒரே ஆளா?

  புள்ளிவிவரங்களை இருவரும் சரமாரியாக அடுக்குவதைப் பார்த்தால் அப்படித் தான் தோன்றுகீறது :))

 12. Kumudan on September 2, 2010 at 2:25 pm

  All the abrahamic religions believe that the world is created by their Gods for his faithfuls to feast upon. As is his wont, perhaps Gandhi interpreted this to mean that Hindus and their lands belong to these faithfuls. So the animals and pagans have to be sacrificed if these cannibals have to survive.

  Our Mahatma Manmoahan singh only followed Gandhi’s Hadith when he said “Muslims must have the first claim on the resources…”

 13. vedamgopal on September 2, 2010 at 5:39 pm

  திரு பாலா ஐயா நானும் இந்தகட்டுரை ஆசிரியரும் வேறுநபர்கள்தான். நான் பணியிலிருந்து ஓய்வு பெற்று ஒரு வருடம் தான் ஆகிறது. நான் இப்பொழுது நிறைய புத்தகங்களை வாங்கி படிக்கிறேன் பல வலைதளங்களுக்கு சென்று தினமும் பார்கிறேன். பொது அறிவு அரசியல் ஆண்மிகம் தமிழ் ஆங்கிலம் இவை எல்லாவற்றிலும் நான் பிலோ அவரேஜ்தான். சில புதிதாகபடித்த விஷயங்களை தமிழாக்கம் செய்து மறுமொழி அனுப்புகிறேன்.

 14. AMARNATH MALLI CHANDRASEKARAN on September 3, 2010 at 12:56 am

  இப்படிப்பட்ட சரித்திரத் தகவல்கள் ஊடகங்களில் அதிகமாக வரவேண்டும். நம் நட்டு சரித்திரத்தைப் பற்றி நம் இளைஞர்கள் நன்றாக அறிய வேண்டும். சிறந்த தலைவர்களின் வரலாறு மறைக்கப் படுகிறது. இந்த கட்டுரை மிக அற்புதமான ஒன்று. அதே போல கருத்துக்கள் கூறிய நண்பர்களும் அதை மேம்படுத்த முயன்று இருக்கிறார்கள். அனைவருக்கும் மிக்க நன்றி. நாட்டுக்காக உழைத்த பல தலைவர்கள் வரலாறு இருட்டடிப்பு செய்யப்படுவதை தடுக்கும் வகையில் பல கருத்துகள் உள்ளன. இது போன்ற கட்டுரைகள் பல வரவேண்டும். வாஞ்சிநாதன் போன்றோர் தீவிரவாதிகளாகச் சித்தரிக்கப் படக் கூடாது. இப்படிப்பட்ட பல இளைஞர்கள் தங்கள் இன்னுயிரைக் கொடுத்திருக்கிறார்கள் இந்த நாட்டின் விடுதலைக்காக. அனைவரும் வணங்கப்பட வேண்டும். பல தலைவர்களின் பங்களிப்பும் – காந்தி அவர்கள் திலகரிடம் தோற்ற நிகழ்ச்சி எல்லாம் இந்த தலைமுறைக்குப் புதிய தகவல்களே. இதேபோல அம்பேத்கர் நாட்டுப் பிரிவினையின்போது கூறிய கருத்துகளும் துணிவாக இங்கு கூறப்பட்டுள்ளன. தொடரட்டும் உங்கள் தகவல் கட்டுரைகள்.

 15. தஞ்சை வெ.கோபாலன் on September 3, 2010 at 3:13 pm

  நாட்டுக்கு உழைத்த பல தமிழ் நாட்டுத் தலைவர்களைப் பற்றி கீழ் கண்ட வலைத் தளத்தைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். படுயுங்கள், படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்.

  http://www.privarsh.blogspot.com

 16. RV on September 4, 2010 at 1:14 pm

  நல்ல பதிவு, வாழுத்துக்கள்!

 17. vedamgopal on September 4, 2010 at 2:19 pm

  காந்தி இறந்தபின் காங்கிரஸ் செய்த தவறுகள் –

  1. காங்கிரஸ்சின் அறிவுறுத்தலால் காந்தி இறந்தபின் பல இடங்களில் அப்பாவி பிராமிணர்கள் கொல்லப்பட்டார்கள். அதைபோல் இந்திராவின் இறப்பிற்க்கு பின் பல சீக்கியர்கள் கொல்லப்பட்டார்கள்.

  2. நாட்டின் விடுதலைக்காக கடைசிமூச்சு உள்ளவரை போராடியவர் சேவார்கர். அவர் அந்தமான் சிறையில் பல கொடுமைகளை அனுபவிததார். அவரை இந்த காங்கிரஸ் காந்தி கொலைக்கு சம்பந்தபடுத்தி ஒர் ஆண்டு சிறையில் வைத்தது. ஆனால் நீதிமன்றம் அவரை விசாரித்து அவர் குற்றமற்றவர் எனகூறி விடுதலை செய்தது. இதை இன்றுவரை எந்த காங்கிரஸ்காரனும் ஏற்ப்பதில்லை

  3. அதோடு காங்கிரஸ் நிறுத்தவில்லை காந்தி கொலையை காரணம்காட்டி ஆர்.எஸ்.எஸ் தலைவர் கோல்வார்கரை 18 மாதங்கள் சிறையில் வைத்தார்கள். 17000 ஆயிரத்திற்க்கு மேற்ப்பட்ட ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களை கைது செய்தார்கள். அராஜகம் கட்டவிழ்க்கப்பட்டு போலீ அடக்கமுறையால் பல கொண்டர்கள் தடியடி பட்டு இறந்தார்கள். ஆர்.எஸ்.எஸ் தரப்பிலிருந்து பலர் பலமுறை தாங்கள் சேவை மனப்பான்மை கொண்ட இயக்கமே அல்லாது தீவிரவாத இயக்கம் அல்ல என்பதை வாதங்கள் மூலமும் ஆதாரங்கள் மூலமும் நீருபிக்கதயார் என்று நேருவுக்கு கோல்வார்கர் அரைகூவல் விடுத்தும் அதை அவர் ஏற்க்கவில்லை

 18. vedamgopal on September 4, 2010 at 2:25 pm

  காஷ்மீர் விஷயத்தில் காங்கிரஸ் செய்த தவறுகள் –

  1. பிரிவினை ஏற்ப்பட்டு மூன்றுமாதத்தில் பாகிஸ்தான் ராணுவம் காஷ்மீர் பகுதியை தாக்கினார்கள். அப்போது காஷ்மீரத்தை ஆண்டுவந்த ராஜா ஹரி சிங் நேருவிடம் உதவிகோரினார். அதற்க்கு நேரு ஷேக் அப்துல்லாவை முதல்வர் பதவியில் அமர்தினால் தான் உதவுதாக வாக்களித்தார். அதன்படி இந்திய ராணுவம் காஷ்மீர ஆக்கிரமிப்பு பகுதிகளை மீட்க முற்ப்பட்டது. ஆனால் நேரு அந்த மீட்பு போராட்டத்தை முழுவதுமாக நடத்தவிடாமல் பல ஆக்கிரமித்த பகுதிகளை பாக்கிஸ்தானுக்கு தாரைவார்த்தார். ஷேக் அப்துல்லாவை முதல்வர் ஆக்கி ஹரி சிங்கையும் செல்லா காசாக்கி பிரிவினைக்கு பின் மேலும் ஒர் பிரிவினையை ஏற்ப்படுத்தி முஸ்லீம்களின் விஸ்வாசத்தைப்பெற்றார். என்னே காங்கிரஸ் தேசப்பற்று !

  2. சுதந்திரத்தின் போது இந்தியாவில் சில மாகணங்கள் மண்னர் பரம்பரை வாரிசுகளின் ஆதிக்கத்தில இருந்தது. அந்த மாகாணங்களை இந்தியாவுடன் இணைக்கும் வேலையை பிரிட்டிஷார் நம்மிடமே கொடுத்தனர். அந்த மாகாணங்கள் குவாலியர் பரோடா மைசூர் ஜம்மு காஷ்முமீர் ஹைதிராபாத். இந்த மாகணங்களை ஒருங்கிணைக்கும் பொருப்பை காந்தி பட்டேல் இடமும் ஜம்மு காஷ்மீர் பொருப்பை நேருவிடமும் தந்தது மேலும் ஒரு தவறை காங்கிரஸ் செய்தது இன்று விஸ்வரூபம் எடுத்துள்ளது..

  3. அதோடு நிறுத்தாமல் ஷேக்அப்துல்லாவின் வற்புறுத்தலால் தனி சட்டம் 370 காஷ்மீருக்கு ஒரு குறிபிட்ட காலவரையில் இருக்கலாம் என்று அறிவித்தார்கள். மத்திய அரசுடன் இணைந்து செயல்படாமல் தேசத்தின் பாதுகாப்பிற்கே உருவிளைவிக்கும் வேறு எந்தநாட்டிலுமே இல்லாத பிதற்றல் சட்டத்தை நேரு உருவாக்கினார். ராணுவம் வெளிநாட்டு உறவு தொலைதொடர்பு இவையே மத்திய அரசின் மேறபார்வையில் இருக்கும். வேறு எந்த செயலிலும் மத்திய அரசு மாநிலஅரசின் அனுமதி இல்லாமல் செயல்பட முடியாது என்ற ஒரு ஷரத்தையும் நேரு இணைத்தார். இதை பட்டேல் தீவிரமாக எதிர்து தன் பதவியையும் ராஜிநாமா செய்தார்.

  4. இந்த சட்டம் பிரிவினை சக்திகளை ஊக்குவிக்கவும் இது மற்றமாநிலங்களுக்கு பரவவும் வழி செய்தது. ஒரு குறிப்பிட்ட மதத்தவரின் எண்ணிக்கை கூடி மற்ற மதத்தவர் விரட்டியடிக்கப்படும் சூழ் நிலைக்கு தள்ளியது. அங்கே மற்ற இந்தியர்கள் சென்று குடியிருக்கமுடியாது. சொத்து வாங்கமுடியாது. தேர்தலில் நிற்கவோ ஓட்டு போடவோ முடியாது. வேலையும் கிடையாது. அந்த மாநிலத்தின் பெண்கள் வேறு மாநிலத்தவரை மணந்தால் அவர்களுக்கு மேலேசொன்ன உரிமைகள் பறிக்கப்பட்டு வெளியேற்றபடுவார்கள்.

  5. இந்த பிரிவினை சட்ட சலுகை சில மாற்றங்களுடன் நாகாலாந்து மிசோராம் மேகாலயா பஞ்சாப் போன்ற மாநிலங்களுக்கும் அளித்தது காங்கிரஸ் மேலும் பல பிரிவினை சக்திகளை ஊக்குவித்தது.

  6. 1990 ல் காஷ்மீரில் முஸ்லீம்கள் பெரும் கலவரத்தை துண்டிவிட்டு நான்கு லஷ்ஷம் இந்துக்களின் வீடு உடமைகளை பிடுங்கிக்கொண்டு அனாதைகளாக விரட்டியடித்தார்கள். இந்த அலங்கோலங்களை கண்ழூடி வேடிக்கை பார்தது காங்கிரஸ் அரசு. வெந்தபுண்ணில் வேலை பாச்சுவதுபோல் அனாதைகளாக்கப்பட் நம் இந்திய மக்களை நம் நாட்டிலேயே அகதிகளாக ஆக்கியது இந்த காங்கிரஸ் அரசு. இப்படிப்பட்ட அவலத்தை உலகில் வேறு எங்கும் காணமுடியாது. 20 ஆண்டுகள் ஆகியும் அவர்களது வாழ்வாதாரத்தை முன்னேற்றாமலும் அவர்களை மீண்டும் அவர்களது மாநிலத்தில் குடியிருத்தாமலும் அவர்கள் அகதி முகாமில் தண்ணிர் வசதி கரண்ட் வசதி கூட இல்லாமல் சுகாதாரமற்ற சூழலில் அல்லல் படுகிறார்கள்.

  7. நாம் வருடா வருடம் 10 மில்லியன் மக்கள்தொகை கொண்ட காஷ்மீருக்கு 2400 மில்லியன் உதவிதொகை அளிக்கிறோம். அதாவது ஒவ்வொரு தனிநபருக்கும் 24000 ரூபாய் கொடுக்கிறோம். எதற்க்கு ? நம்நாட்டின் இறையாண்மைக்கு எதிராக செயல்படவா ? இது மற்ற மாநிலங்களுக்கு அளிக்கும் உதவிதொகையைவிட 10 சதவிகிதம் கூடுதலான தொகையாகும்.

 19. reality on September 4, 2010 at 10:26 pm

  மோதிலால் நேருவின் பங்கு பற்றிய இப்புத்தகத்தை அனைவரும் படிப்பது நலம்; ஏன் நேரு குடும்பம் மட்டுமே, கஜினி படையெடுப்பு மாதிரி, 4 வது முறை என்ன, 17 முறை என்ன, 40 தாவது முறை கூட , காங்கிரஸ் கட்சியின் பணத்துக்கு சொந்தமாக ஆக முடியும் எனபது விளங்கும். காங்கிரஸ் இன்னும் சுதந்திரம் பெற வில்லை எனபது விளங்கும்.
  Gandhi and the Congress
  By Shiri Ram பக்ஷி
  http://books.google.co.in/books?id=s3EH4hJ_OP4C&pg=PA138&dq=janmashtami&as_brr=1&cd=8#v=onepage&q=janmashtami&f=false

 20. Natraj on December 8, 2016 at 10:59 pm

  Vedam Gopal ji. Salute

மறுமொழி இடுக:

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.

உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:

தமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.

மறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

*