முகப்பு » அரசியல், சமூகம், நிகழ்வுகள்

ஈரோடு: கலவரத்தைத் தூண்டக் களமிறக்கப் படும் பாதிரியார்கள்!

அச்சிட அச்சிட

ஈரோட்டில்  ஜூலை-24ம் தேதி நடந்த உள்ளூர் மோதல் சம்பவம் பற்றி பத்திரிகைகளில் வந்திருந்தது.

மொத்தமாக இந்துக்கள் வாழும் பகுதிகளில் சென்று பொதுமக்களின் கடுமையான ஆட்சேபத்தையும், எச்சரிக்கையையும் புறக்கணித்து கிறிஸ்தவப் பாதிரிகள் மதமாற்றப் பிரசாரத்தைத்  தொடர்ந்தனர்.  இதைத் தொடர்ந்து நடந்த நிகழ்வுகளில்  இந்து வர்த்தக நிறுவனம் ஒன்றும்,  இந்து இயக்கத் தலைவர்களும் கடுமையாகத் தாக்கப் பட்டனர்.   பயங்கர ஆயுதங்களுடன்  விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பினர் இந்தத் தாக்குதலை முன்னின்று நடத்த,  கிறிஸ்தவ அமைப்புகளும், த.மு.மு.கவும்  அவர்களுக்கு ஆதரவாக வேலை செய்தனர்.   காவல்துறையினர்  மிகவும் அருவருக்கத் தக்க வகையில் செயல்பட்டனர். பாதிக்கப் பட்ட பொதுமக்களுக்கு உதவாமல்,  வன்முறையாளர்களின் கையாட்களாகச் செயல்பட்டு, பாதிக்கப் பட்டவர்களையே கைது செய்து துன்புறுத்தும் அவலமும் நடந்தேறியது..

இது பற்றிய  நேரடி செய்தியினை ஈரோடு கனிவை சீனு அவர்கள் நமக்கு அனுப்பியுள்ளார்.  கீழே உள்ள இரு படங்களில் செய்தியும் அதைத் தொடர்ந்து சம்பவம் பற்றிய புகைப்படங்களும் உள்ளன.

erode-rss-vc-modhal-and-pastor-entry-incident-1

செய்தி: பக்கம் 1

erode-rss-vc-modhal-and-pastor-entry-incident-2

செய்தி: பக்கம் 2

erode-studio-incident-july-2010-1

படம் 1 – தாக்குதலுக்கு உள்ளான போட்டோ ஸ்டுடியோ

erode-studio-incident-july-2010-2

படம் 2 – பொதுமக்களை மிரட்டும் காவல்துறையினர்

erode-studio-incident-july-2010-3

படம் 3 – ஆயுதங்களைக் கொண்டுவந்த காரும் ஓட்டுநரும்

erode-studio-incident-july-2010-4

படம் 4 – தாக்குதலுக்கு கொண்டுவந்த உருட்டுக்  கட்டைகள்

erode-studio-incident-july-2010-5

படம் 5 – ஆயுதங்களைக் கொண்டுவந்த கார் பொதுமக்களால் சேதப்படுத்தப் பட்டது

erode-rss-vc-modhal-and-pastor-entry-incident-6

படம் 6 – தாக்குதலுக்கு பயன்படுத்தப் பட்ட வாகனம்

erode-studio-incident-july-2010-7

படம் 7 – ஆயுதங்களைக் கொண்டுவந்த காரை சேதப்படுத்தும் பொதுமக்கள்

erode-studio-incident-july-2010-8

படம் 8 – உடைக்கப் பட்ட கம்ப்யூட்டர் மற்றும் பொருட்கள்

erode-studio-incident-july-2010-9

படம் 9 -  திரண்டிருந்த பொதுமக்களில் ஒரு பகுதியினர்

கிறிஸ்தவ மதமாற்ற பிரச்சினை என்பது ஈரோட்டில் தொடர் கதையாக இருப்பதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இது போன்ற மத பிரச்சினைக்கு ஒரு நிரந்தர தீர்வு காண எந்த ஒரு முயற்சியும் செய்யாத அரசின்  போக்கு பொது மக்களுக்கு ஒட்டுமொத்தத நம்பிக்கையின்மையையும், ஆவேசத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

தொடர்புடைய பதிவுகள்

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , , , ,

 

119 மறுமொழிகள் ஈரோடு: கலவரத்தைத் தூண்டக் களமிறக்கப் படும் பாதிரியார்கள்!

  1. karthikeyan on August 6, 2010 at 3:00 pm

    நாடார்,கௌண்டர்,தேவர்……எப்பொழுது இந்துவாக இருப்போம்…..

  2. சீனு on August 6, 2010 at 5:06 pm

    விசி-யினர் இதில் ஈடுபட்டிருப்பது ஒன்றும் ஆச்சரியமான விஷயம் இல்லை.

    இலங்கையில் போர் முடிவுக்கு வந்தபோது, பாதிக்கப்பட்ட தமிழர்களை ‘பார்ப்பதற்காக’ சென்ற திருமா, அங்கு சென்றதும் பேசியது, “நீங்கள் உங்களை இந்துவாக நம்பியது தான் உங்களை இந்த அளவுக்கு விட்டிருக்கிறது” என்று பொருள் படும்படி கூறினார் (பழைய ஜு.வி. இருந்தால் சரி பார்த்துக் கொள்ளலாம்). சொல்லி வைத்தார் போல், அடுத்த சில வாரங்களில் கிருத்துவ ஆள் பிடிக்கும் பாதிரிகள் மதம் மாற்ற ஆரம்பித்துவிட்டார்கள்.

    யாராவது ஸ்டிங் ஆப்பராஷன் பன்னி திருமாவை பிடித்துக் கொடுத்தால் தேவலை.

  3. மணிவண்ணன் on August 6, 2010 at 6:05 pm

    மற்றவர்களை எதாவது செய்வார்கள் என்று எதிர்பார்க்காமல் நம்மையும் நமது மதத்தையும் காக்க நாமே களம் இருங்கினால் மட்டுமே முடியும். ஈரோடு பொது மக்களை இந்த செயலில் நான் பாராட்டுகிறேன்.

    ம. மணிவண்ணன்
    புதுவை

  4. kumaran on August 6, 2010 at 6:25 pm

    ஈரோட்டில் இதுபோல் நடப்பது ஆச்சரியமாக உள்ளது கோவை குண்டு வெடிப்பின்போது கூட அமைதியாக இருந்த நிலை மாறி தற்போது மிகவும் மோசமடைந்துள்ளதையே இது காட்டுகிறது. இந்துக்கள் ஒன்றிணையாவிட்டால் எதிர்வரும் காலங்களில் மிகவும் மோசமான நிலைமையை எதிர்கொள்ள வேண்டிவரும்.

  5. kmr on August 6, 2010 at 8:43 pm

    மத மாற்றத்தில் ஈடுபடும் கிறிஸ்தவ பரதேசிகளை ஊருக்குள்ள நுழையவே நாம் அனுமதிக்க கூடாது…மேலும் இந்து மத துரோகியான விடுதலை சிறுத்தைகள் கட்சியை இந்துக்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக புறகணிக்க வேண்டும்.. …….. இந்துக்கள் அனைவரும் ஒன்று திரண்டு இந்த இரண்டு பேர்களுக்கும் பாடம் புகட்ட வேண்டும்

    [Edited and published]

  6. Indli.com on August 6, 2010 at 9:28 pm

    தமிழ்ஹிந்து » ஈரோடு: கலவரத்தைத் தூண்டக் களமிறக்கப் படும் பாதிரியார்கள்!…

    இந்துக்கள் வாழும் பகுதிகளில் சென்று பொதுமக்களின் கடுமையான ஆட்சேபத்தையும், எச்சரிக்கையையும…

  7. Anony on August 7, 2010 at 2:09 am

    Erode, the place notorious for the origin of a very very bad disease of TN, should lead from the front to reverse the damages done by that same person.
    Hindus have become refugees in their own land, protesting for their basic rights and very survival from the hands of both Abrahamic faiths.

  8. snkm on August 7, 2010 at 9:22 pm

    ஒன்று படுவோம் ! இல்லையேல் வீழ்ந்து படுவோம்! பெயரை மட்டும் தமிழில் மாற்றிக் கொண்டு தமிழர்களுக்கு மட்டுமல்லாது எல்லோருக்குமே துரோகம் செய்பவர்களை வெறுத்து ஒதுக்குவோம்! வாழ்க பாரதம்! வெல்க ஒற்றுமை! ஒற்றுமையின் பலத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும்!

  9. anonymous on August 8, 2010 at 12:00 am

    Sir,

    We have to be strategic in dealing with these issues. In many christian preachings like this, i have seen those missionary people abusing our god.. like the way we worship is NOT true worship and that our gods are satan and sinned..

    We have to complain that these people are abusing our religion and insulting our god.. this should be a genuine case… if we complain that they are converting, then we wont have legal standing as this is allowed in law..

    Its high time that hindus should learn to be strategic..

  10. v.ganessan on August 8, 2010 at 9:09 am

    i disagree with ur comments on the comments made by thiruma. he is 10000% right . as we are hindus everywhere in the world we are treated bad. example india, srilanka,nepal, pakistan, bangladesh,figi,maldives,malaysia,australia,afghanistan and so on. all the hindu organisations of india are equally responsible for the plight of poor hindus in srilanka.

  11. v.s.mugunthavel on August 8, 2010 at 12:20 pm

    அப்பாவி ஹிந்துக்களை குறிவைத்து தாக்கும் தீய சக்திகளை வன்மையாக கண்டிக்கிறோம் .ஈரோடு ஹிந்து மக்களுக்கு நன்றி .ஒன்று பட்டால் உண்டு வாழ்வு

    ஜெய் ஹிந்த்

    முகுந்தவேல்

  12. anand on August 8, 2010 at 5:02 pm

    அன்பு நண்பர்களே,மகிழ்ச்சி.
    மகத்தான பணி செய்து கொண்டிருக்கும் தமிழ் இந்து இணையதள நிர்வாகிகளுக்கு வணக்கங்கள் கோடி.
    கிருத்துவத்தின் கோர முகத்தைக்காட்டும் வகையிலும்,அதன் போலித்தனத்தை கிழிக்கும் வகையிலும் நண்பர் ஒருவர் இணையப்பக்கம் நடத்தி வருகிறார்,
    அவரது தளம்
    http://bibleunmaikal.blogspot.com/
    முடிந்த வரை இதைப்பரப்புங்கள்,அவரையும் நம்மோடு இணைத்து
    விழிப்புணர்வு பணி செய்வோம்

  13. R.Sridharan on August 8, 2010 at 5:07 pm

    missionaries are cunning
    they never act directly
    they have paid agents like viduthalai chiruthaikal,maoists, naga rebels etc
    they carry out their acts of sabotage through them.

  14. Muthukumar on August 8, 2010 at 6:53 pm

    bibleunmaigal.com getting aborted when opening.Not able to open;
    editor : Please help.

  15. RV on August 9, 2010 at 2:56 pm

    சீனு அனுப்பி இருக்கும் செய்தியை பார்த்ததும் ஒரு curiosity கேள்வி எழுகிறது. // இதற்கு மேல் இவர்களிடம் பேசிப் பயனில்லை, இவர்களை காவல் நிலையத்தில் ஒப்படைத்துவிடுவோம் என எண்ணி அழைத்து செல்லும்போது ஒருவன் தப்பி ஓடிவிட்டான் // என்று எழுதி இருக்கிறார். மத மாற்ற பிரச்சாரம் சட்டப்படி குற்றம் இல்லையே? காவல் நிலையத்துக்கு அழைத்துப் போவது எந்த முகாந்தரத்தை வைத்து? தப்பி ஓடியவர்கள் அடி விழப் போகிறது என்று ஓடி இருக்க வேண்டும்!

    சாலமனை ஸ்டுடியோவில் வைத்து பேசிக் கொண்டிருந்தோம் என்கிறார். இது சாலமனின் சம்மதத்தோடு செய்யப்பட்டதில்லை என்பது தெளிவாக செய்தியிலேயே தெரிகிறது. சாலமனுக்கு தான் கடத்தப்பட்டதாக கேஸ் கொடுக்க முகாந்தரம் இருப்பது இந்த செய்தியிலேயே தெரிகிறது. ஆனால் சாலமன் மேல் பொது சொத்தை நாசப்படுத்தியதாகவும் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கேஸ் பதிவு செய்யப்பட்டிருக்கிறது!

    சட்டத்தை மீறித்தான் செயல்பட வேண்டும் என்ற முடிவில் சீனுவும் மற்றவர்களும் இருந்தால் அதில் ஆச்சரியம் இல்லை. இன்றைய சமூக அரசியல் சூழ்நிலை அப்படித்தான் இருக்கிறது. உருட்டுக்கட்டைகளுக்கு முன் பேச்சுவார்த்தை பயனளிக்கப் போவதில்லை. ஆனால் அதே போல கிருத்துவ அமைப்புகளும், விடுதலை சிறுத்தைகளும் கூட நினைக்கலாம் இல்லையா? சட்டப்படி எந்த குற்றமும் செய்யாதபோது மிரட்டப்படுகிறோம், நமக்கு உருட்டுக்கட்டைதான் வழி என்று அவர்கள் நினைத்தால் அதை எப்படி தவறு என்று சட்டத்தை மீறுவதை தவிர வேறு வழி இல்லை என்று நினைக்கும் இந்த இந்து அமைப்புகள் சொல்ல முடியும்? அதுவும் காலம் காலமாக நம் அரசியல் சமூக சிஸ்டத்தால் அமுக்கப்பட்டு வந்திருக்கும் தலித் அமைப்புகள் அப்படி நினைத்தால் அதை தவறு என்று சொல்வது – அதுவும் சட்டத்தை மீற நினைக்கும் வேறு “உயர் ஜாதி” அமைப்புகள் சொல்வது – hippocrisy ஆக தெரியவில்லையா?

  16. R.Sridharan on August 9, 2010 at 6:18 pm

    தலித்து சகோதரர்கள் ஏன் கோயிலை எதிர்க்க வேண்டும்?
    அவர்கள் எதிர்க்கவில்லை.
    திருமாவளவன் கட்சியினர்தான் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர் என்று தெளிவாகிறது
    அவரது கட்சியை அவர் கிறிஸ்தவ சர்ச்சின் கைப்பாவையாக ஆக்கி உள்ளார் என்பது தெளிவு
    முன்பு அவர் ‘ஹிந்துப் பண்பாடு எதிர்ப்பு மாநாடு’ என்று நடத்திக் கொண்டிருந்தார்.
    முன்பு சர்ச் அவரையோ அல்லது அவரது கட்சி ஆளையோ அமெரிக்காவுக்கு அனுப்பி இந்தியாவில் தலித்துகளுக்கு எதிராக கொடுமைகள் நடப்பதாக புகார் கொடுக்கச் செய்ததாக நினைவு.

    சர்ச் இந்த மாதிரி விஷயங்களில் ‘தில்லாலங்கடி’
    நேரடியாக எதுவும் செய்யாமல் பூனை மாதிரி நடக்கும்
    ஒரிசாவில் சுவாமி லக்ஷ்மனானந்தா கொலையில் மாவோயிஸ்டுகள் செய்தது போல் நாடகம் நடத்தினர்.
    சபரிமலை பேரைக் கெடுக்கும் விவகாரத்தில் ஜெயமாலா என்ற கிறிஸ்தவ நடிகையை வைத்து நடத்திய நாடகம் முன்பு அம்பலம் ஆகியது .

  17. களிமிகு கணபதி on August 10, 2010 at 11:26 am

    @ RV

    நீங்கள் கேட்டது:

    “சட்டப்படி எந்த குற்றமும் செய்யாதபோது மிரட்டப்படுகிறோம், நமக்கு உருட்டுக்கட்டைதான் வழி என்று அவர்கள் நினைத்தால் அதை எப்படி தவறு என்று சட்டத்தை மீறுவதை தவிர வேறு வழி இல்லை என்று நினைக்கும் இந்த இந்து அமைப்புகள் சொல்ல முடியும்? ”

    என் பதில்:

    இல்லை சார்.

    எடுத்தவுடன் மக்கள் மதமாற்றிகளை மிரட்டிப் பிடித்து வைக்கவில்லை. முதலில் இங்கே பிரச்சாரம் செய்யாதீர்கள், எங்கள் மேல் மதத்தைத் திணிக்காதீர்கள் என்று சொல்லி இருக்கிறார்கள். அதைக் கேட்காமல் அப்படித்தான் பிரச்சாரம் செய்வோம் என்று அவர்கள் சொல்லி இருக்கிறார்கள்.

    எனவே, இது வன்முறையாக மதமாற்றம் செய்யும் முயற்சி. சட்டப்படி தப்பு.

    சட்டப்படி தப்பு செய்பவர்களைத்தான் பொதுமக்கள் பிடித்துவைத்து விசாரித்து இருக்கிறார்கள். தப்பில்லை.

  18. seenu on August 10, 2010 at 4:04 pm

    ஆர்.வி. சார்,

    மத மாற்ற பிரசாரம், கிறிஸ்தவர்களிடமோ, கிறிஸ்தவர்கள் வாழும் பகுதியிலோ செய்தல் தவறில்லை. ஆனால் முழுக்க முழுக்க ஹிந்துக்கள் மட்டுமே வாழும் பகுதியில் வந்து, அப்பகுதி பொதுமக்கள் வேண்டாம் என்று எடுத்து கூறிய பிறகும், என்னை தடுக்க நீங்கள் யார் என கேட்பது எந்த வகை சுதந்திரம் அய்யா?.

    யார் சொல்லியும் கேட்காமல், மத துவேசத்தை தூண்டுபவர்களை காவல் நிலையத்திற்கு கூட்டி போகாமல், கரண்ட் கம்பத்தில் கட்டி வைத்து உதைத்திருந்தால் சரி என்று கூறுவீர்களா?

    உலகம் முழுவதும் பரவி கிடக்கும் இந்து துறவிகளால் எந்த நாட்டிற்கும், எந்த மதத்திற்கும் கேடு உருவாகவில்லை.

    கிறிஸ்தவ பாதிரிகலின் மத துவேச பிரசாரத்தால், இன்று உலகம் முழுவதும் சமுதாய நல்லிணக்கம் சீர்குலைந்துள்ளது. ஆகவே பாதிரியார்களை கண்டால் பொதுமக்கள் உதைக்கிறார்கள்.

    இந்தியர்களே! இளைஞர்களே ! நாடு பிடிக்கும் வெள்ளை படைக்கு பலியாகாதீர்!.

    ஆயிரம் ஆண்டுகள், நுற்றுக்கணக்கான நாட்டவர்களின் தாக்குதலை சந்தித்த இந்து சமுதாயம், இந்த வெள்ளை படைஎயும் வேரருக்கும்.

  19. RV on August 10, 2010 at 11:24 pm

    களிமிகு கணபதி, (என்ன அருமையான பெயர்!)
    // எடுத்தவுடன் மக்கள் மதமாற்றிகளை மிரட்டிப் பிடித்து வைக்கவில்லை. முதலில் இங்கே பிரச்சாரம் செய்யாதீர்கள், எங்கள் மேல் மதத்தைத் திணிக்காதீர்கள் என்று சொல்லி இருக்கிறார்கள். அதைக் கேட்காமல் அப்படித்தான் பிரச்சாரம் செய்வோம் என்று அவர்கள் சொல்லி இருக்கிறார்கள். எனவே, இது வன்முறையாக மதமாற்றம் செய்யும் முயற்சி. சட்டப்படி தப்பு. //
    என் மேல் திணிக்காதே என்று சொல்லலாம், என் குடும்பத்தினர் பக்கம் வராதே என்று சொல்லலாம், என் வீட்டிற்குள் நுழையாதே என்று சொல்லலாம். இது எங்க ஏரியா உள்ள வராதே என்று சொல்ல முடியுமா? என் பக்கத்து வீட்டுக்காரன் வீட்டுக்குள் நுழையாதே என்று சொல்ல முடியுமா? ஈரோட்டின் அந்த வீதிகள் என்ன ப்ரைவேட் ப்ராப்பர்டியா? அப்புறம் நீங்கள் சொன்னதை நான் ஒத்துக்கொள்ள வேண்டும், இல்லாவிட்டால் அது வன்முறை என்கிறீர்கள். நான் போன மறுமொழியில் எழுதியதை கூட நீங்கள் ஒத்துக்கொள்ளவில்லை, ஆனால் நீங்கள் என் மீது எந்த வன்முறையையும் அவிழ்த்துவிடவில்லை. :-)

    சீனு,

    இந்த செய்தியை அனுப்பிய சீனு நீங்கள்தானா என்று தெரியவில்லை. உங்கள் பிரச்சினை புரிகிறது. ஆனால் சட்டத்தை மீறுவதாக முடிவெடுத்தால், அதிலும் சில பிரச்சினைகள் இருக்கின்றன.

    அப்புறம் // மத மாற்ற பிரசாரம், கிறிஸ்தவர்களிடமோ, கிறிஸ்தவர்கள் வாழும் பகுதியிலோ செய்தல் தவறில்லை. // என்று எழுதுகிறீர்கள். என்ன திருப்பதிக்கே லட்டா?ஏற்கனவே கிருஸ்துவர்கள் வாழும் பகுதியில் என்னங்க மத மாற்றம்? கிருஸ்துவர்கள் வாழாத பகுதியில்தானே இதை செய்ய முடியும்?
    // ஆனால் முழுக்க முழுக்க ஹிந்துக்கள் மட்டுமே வாழும் பகுதியில் வந்து, அப்பகுதி பொதுமக்கள் வேண்டாம் என்று எடுத்து கூறிய பிறகும், என்னை தடுக்க நீங்கள் யார் என கேட்பது எந்த வகை சுதந்திரம் அய்யா? //

    அதுதானே கருத்து சுதந்திரம்? உங்கள் வீட்டுக்குள் வரக்கூடாது என்று சொல்லலாம், வீதியிலே பேசக் கூடாது என்று சொல்ல யாருக்கும் உரிமை இல்லையே? இங்கே தமிழ் ஹிந்து தளத்தினர் மாற்று கருத்துகளை அனுமதிப்பில்லையா? “ஹிந்துத்துவ” கருத்துகளை மட்டுமே அனுமதிப்போம் என்றா கச்சம் கட்டிக்கொண்டு நிற்கிறார்கள்? மத துவேஷத்தை தூண்டினார்கள் என்றால் அது சட்டப்படி குற்றம் (என்று நினைக்கிறேன்) அப்போது மட்டுமே காவல் நிலையத்துக்கு கூட்டிப் போனது எல்லா விதத்திலும் சரி என்று சொல்ல முடியும். அப்போதும் ஸ்டுடியோவுக்கு கூட்டிப் போய் விசாரித்தது சட்டப்படி தவறாக இருக்கலாம்.

  20. Ramesh on August 11, 2010 at 10:48 am

    கொங்கு மண்டலம்போல், தமிழகம் முழுவதும் மத மாற்றத்தை தடுப்போம். ஹிந்துக்களே ஒற்றுமையாய் இருப்போம்.

  21. babu on August 11, 2010 at 11:14 am

    ஐநுறு பேர் உள்ள தெருவில் அந்த ஐநுறு பேருக்கும் பிடிக்காத ஒரு விசயத்தை செய்வது பொது இடையூறாகவே கருதப்படும்.அத்துனை பேரும் வேண்டுகோள் விடுத்த பிறகும் ஒரு நாகரிகம் கருதியாவது பிரசங்கத்தை நிறுத்திவிட்டு மரியாதையாக போய் இருக்க வேண்டும்.
    உங்கள் கருத்து சுதந்திரத்தை முஸ்லிம்கள் வாழும் தெருவிலே காட்ட வேண்டியதுதானே.
    உங்கள் வீட்டுக்குள் வரவில்லை, வீட்டுக்கு வெளியே தெருவிலே நின்று கொண்டு சிலர் உங்கள் வீட்டில் உள்ளவர்களை பற்றி தரக்குறைவாக பேசினால் அது அவர்களுடைய கருத்து சுதந்திரம் என்று கேட்டுக்கொள்வீர்களா? அவர்களை எதிர்த்து கேட்பீர்களா ?

    இளிச்சவாயர்கள் இந்துக்கள் கேட்க ஆளில்லாதவர்கள் இந்துக்கள் எனவே நீங்கள் கிள்ளு கீரையாக நினைப்பது ஒன்றும் வியப்பல்ல.

    500 ஆண்டுகள்ளுக்கு முன் மதம் மாற்ற இங்கே வந்த கயவர்களை ஆரம்பத்திலேயே எம் கொள்ளுத்தாத்தாக்கள் கொன்று விட்டிருந்தால் இப்போது இந்த பிரச்சனை இல்லை. எம் முன்னோர்களே குற்றவாளிகள்,அவர்கள் சரியாக இருந்திருந்தால் உங்களின் வக்கிரம் பிடித்த கருத்தே இன்று இருந்திருக்காது.போகட்டும் இப்பவும் உங்கள் கருத்து சுதந்திரம் அடுத்தவரை பாதிக்காத வரை மட்டுமே நியாயமானது.
    மனசாட்சி இல்லாதவர்களே நாங்கள் எங்கள் வேலையை பார்க்கிறோம் உங்கள் வம்பு வேண்டாம் நாங்கள் ஒதுங்கியே எங்கள் சுயகௌரவத்துடன் வாழ்கிறோம்.எங்களிடம் வந்து வாலாட்டினால் சாது மிரண்டால் காடு கொள்ளாது என்ற பழமொழிக்கேற்ப நீங்கள் அனுபவிக்க வேண்டிவரும்.

  22. ச.திருமலை on August 11, 2010 at 11:54 am

    ஆர் வி

    ஆம் ஒரு சில தெருக்களில் ஒரு சில காரியம் செய்யக் கூடாது. இது ஒன்றும் அறிவிக்கப் பட்ட சட்டம் கிடையாதுதான் இருந்தாலும் பொது அமைதி நாகரீகம் கருதி யாரும் செய்வதில்லை. தமிழ் நாட்டில் இன்று பல ஊர்களில் முஸ்லீம்கள் வாழும் பகுதிகளுக்குள் நம் இந்திய ராணுவம் கூட நுழைய அனுமதி கிடையாது. சர்ச் முன்பாகவும் மசூதி இருக்கும் வழியாகவும் பல்லாயிரக்கணக்கான வருடங்கள் சென்று கொண்டிருந்த நம் உற்சவ வீதியுலாக்கள் இன்று அனுமதிக்கப் படுவதில்லை. மீறிப் போனால் கொலை விழுகிறது. அப்படியிருக்க இந்துக்கள் வாழும் ஒரு தெருவுக்குள் போய் ஒருவன் “பாவிகளே” என்று அழைத்தால் அவனை போலீஸிடம் ஒப்படைப்பதுதானே முறை? முதலில் இந்துக்களைப் பார்த்து எவனும் பாவிகளே என்று அழைப்பதே குற்றம். மதமாற்றிகள் அதைத்தான் செய்கிறார்கள். இங்கு போல தமிழ் நாட்டில் 911ஐ அழைத்தவுடன் போலீஸ் வந்து விடாது. என் வீட்டில் சமீபத்தில் கொள்ளை போன பொழுது நாங்கள் சென்னையில் உள்ள ஒரு உயர் அதிகாரியை அழைத்துச் சொன்ன பின்னால்தான் வெகு நேரம் கழித்தே போலீஸ் வந்தது. ஒரு வேளை அதற்குள் வீட்டில் இருந்து தப்பிச் செல்ல முயன்ற திருடனை நாங்கள் ஒரு வேளை பிடித்திருந்தால் அவனை என்ன செய்வது? பக்கத்தில் உள்ள ஒரு பொது இடத்தில் அது டீ கடையோ, ஸ்டுடியோவோ எதுவோ ஒரு இடத்தில் உட்கார வைத்திருக்க வேண்டும். அவனை வெளியே நிறுத்தினால் தெருவில் போவோர் வருவோர் எல்லாம் தர்ம அடி கொடுத்து அவன் உயிரே போய் விடும் ஆகவே ஏதாவது ஒரு இடத்தில் அவனை பிடித்து நிறுத்தி வைக்க வேண்டும். அது இந்த இடத்தில் ஒரு ஸ்டூடியோவாக இருக்கிறது. மதுரையில் ஒரு முறை நாங்கள் எங்கள் தெருவுக்குள் வந்த ஒரு திருடனை பிடித்து போலீஸ் வரும் வரை அவனை ஒரு பெட்டிக்கடையில் கட்டிப் போட்டு காவல் காத்திருக்கிறோம். இது தமிழ் நாட்டில் சாதாரணமாக நடைமுறையில் உள்ள ஒரு வழக்கம் தான், அவன் பொருள் கொள்ளை அடிப்பவனாக இருந்தால் என்ன ஆன்ம அறுவடைக் கொள்ளை அடிக்க வந்தவனாக இருந்தால் என்ன திருடன் திருடன் தானே? இதில் என்ன பெரிய பிரச்சினையை நீங்கள் கண்டீர்கள் என்பது என் சிற்றறிவுக்குப் புரியவில்லை.

    போகட்டும். அடுத்த முறை நீங்கள் என் வீட்டிற்கு வரும் பொழுது எங்கள் காம்ப்ளக்ஸின் நுழைவாயிலில் ஒரு போர்ட் வைத்திருக்கிறோம் அதைப் படியுங்கள். அது சொல்லும் “சொலிசிடேஷன் ப்ராஹிபிட்டெட்” என்று. அதாவது நான் அழைக்காமல் அவர்களாக வந்து எந்தப் பொருளையும் என்னிடம் யாரும் விற்க முயன்றாலோ அல்லது வீணாக வந்து எதையாவது சொல்லி எதற்காகவாவது மாற வற்புறுத்தினாலோ நாங்கள் தாராளமாக அவர்களை போலீஸிடம் ஒப்ப்டைக்கலாம். என் வீட்டிற்கு யாரேனும் மிஷ நரிகள் வந்தால் நான் போலீசை அழைத்து அவர்கள் எனக்குத் தொந்தரவு அளிக்கிறார்கள் என்று புகார் செய்ய முடியும். இது அமெரிக்காவிலேயே இருக்கும் பொழுது தமிழ் நாட்டில் ஒரு தெருவில் வாழும் இந்துக்களுக்கு அந்த உரிமை கிடையாதா என்ன? அவனை அடித்தார்கள் என்றால் அது தவறு. அவனை போலீஸ் வரும் வரை ஒரு இடத்தில் பிடித்து வைத்திருப்பதில் தவறு ஏதும் இல்லை. திருடர்களை நம்ம ஊரில் அப்படித்தான் கையாள்வது வழக்கம்.

    அன்புடன்
    ச.திருமலைராஜன்

  23. babu on August 11, 2010 at 12:57 pm

    நாமும் இனி தேவாலயங்களின் வாசலிலும்,கிறித்தவ சகோதரர்களின் வீடுகளுக்கும் போய்,
    கிருஷ்ணர் ஒருவரே ஜீவனுள்ள கடவுள், அவரே உண்மை ,சத்யம். கீதை மட்டுமே புனிதமான நூல். மற்ற புனித நூல்கள் எல்லாம் கீதையிலிருந்து வந்தவையே. கிறித்தவ கடவுள் எல்லாம் சாத்தான்,நீங்கள் கிருஷ்ணரை வழிபட ஆரம்பியுங்கள். உங்கள் மேல் கங்கை நீரை தெளித்து நாங்கள் உங்களை எல்லாம் புனித ஆத்மா ஆக்குகிறோம்.
    நீங்கள் எல்லாம் இப்போது பாவிகளாக இருக்கிறிர்கள்,எங்கள் கண்ணனிடம் வாருங்கள் உங்கள் பாவங்களை போக்கி ரட்சித்து உங்களை வைகுண்டத்தில் ஏற்றுகொள்கிறோம். முருகனிடம் வாருங்கள் உங்களை ரட்சித்து கைலாயத்தில் ஏற்று கொள்கிறோம் .

    உங்கள் ஆத்மா பரமத்வாவினை சென்றடைய உங்களுக்காக நாங்கள் கிருஷ்ணனையும்,முருகனையும் பிரார்த்தித்து உங்கள் பாவங்களை எல்லாம் போக்கி புண்ணிய ஆத்மாக்களாக மாற்றி நற்பேறு அடைய வைக்கிறோம். அனால் நாங்கள் உங்களுக்கு லஞ்சமாக பணம் எல்லாம் கொடுக்க மாட்டோம்.சத்தியமாக சத்யமான ஜீவனுள்ள உண்மையான கடவுளையும் நற்பெற்றினையும் உங்களுக்கு தருகிறோம். மகா பாவிகளே (சகோதரர்களை இப்படி அழைக்க மனம் வேதனையாக இருப்பதால் சகோதரர்களே ) வாருங்கள்.
    என்று நோட்டீஸ் மற்றும் பிரசங்கம் செய்தால் அது நம்முடைய கருத்து சுதந்திரமாக ஏற்றுக்கொள்ளப்படும். நமக்கு கருத்து சுதந்திரம் இருப்பதால் நாமும் இனி கிறித்தவ சஹோதரர்களை நம் மதத்திற்க்கு
    மாற்றுவோம். (மன்னிக்கவும் அவர்களுடைய உண்மையான தாய்மதத்திற்கு வரவேற்ப்போம் ) உண்மையை சத்தியத்தை மறந்து பாவிகளான நம் சொந்தங்களை உண்மைக்கு திரும்பி வருமாறு அழைப்போம்.

  24. seenu on August 11, 2010 at 3:18 pm

    மிஸ்டர் ஆர்.வி.

    கிறிஸ்தவர்களுக்காக இவ்வளவு வக்காலத்து வாங்குரீங்களே.

    இதே தமிழ் நாட்டில் பெயரை மட்டும் மாற்றி கொண்டு, இந்து தாழ்த்தப்பட்ட மக்கலுக்கு கிடைக்க வேண்டிய அரசு வேலை மற்றும் சலுகைகளை அனுபவிக்கும் கிறிஸ்தவர்கள் அதை உதர தயாரா…?

    உரிமையும், சலுகையும் இந்துக்களுடையது, உணர்வு இத்தாலிக்கா…?

    இந்த நாட்டில் எல்லா மதத்திற்கும் மரியாதை உண்டு. ஆநால் அதை பயன்படுத்தி மக்களை பிரித்து, நாட்டை துண்டாட நினைத்தால்…

    (edited and published)

  25. களிமிகு கணபதி on August 11, 2010 at 5:21 pm

    @ RV

    நீங்கள் சொன்னது

    என் மேல் திணிக்காதே என்று சொல்லலாம், என் குடும்பத்தினர் பக்கம் வராதே என்று சொல்லலாம், என் வீட்டிற்குள் நுழையாதே என்று சொல்லலாம். இது எங்க ஏரியா உள்ள வராதே என்று சொல்ல முடியுமா? என் பக்கத்து வீட்டுக்காரன் வீட்டுக்குள் நுழையாதே என்று சொல்ல முடியுமா? ஈரோட்டின் அந்த வீதிகள் என்ன ப்ரைவேட் ப்ராப்பர்டியா? அப்புறம் நீங்கள் சொன்னதை நான் ஒத்துக்கொள்ள வேண்டும், இல்லாவிட்டால் அது வன்முறை என்கிறீர்கள். நான் போன மறுமொழியில் எழுதியதை கூட நீங்கள் ஒத்துக்கொள்ளவில்லை, ஆனால் நீங்கள் என் மீது எந்த வன்முறையையும் அவிழ்த்துவிடவில்லை.

    என் பதில்

    வீடு எனக்கு உரிமையானது. நான் எனது வீட்டில் சில சுதந்திரங்களை எதிர்பார்க்கிறேன். அதற்குள் வராதே என்று சொல்லலாம். ஆனால், ஒரு தனிமனிதனின் சுதந்திரம் வீட்டிற்குள் மட்டும்தானா?

    வீட்டையும் தாண்டி எங்கும் எனக்குச் சில சுதந்திரங்கள் இருக்கின்றன. நான் வேறு ஒரு ஊருக்கு, ஏன் வேறு ஒரு நாட்டிற்கே போனாலும் சரி. அந்த சுதந்திரங்கள் எனது உரிமை. என்னிடம் யார் எப்படிப் பழகவேண்டும் என்று நிர்ணயிக்கிற சுதந்திரம் எனது அடிப்படைத் தேவை.

    எனக்குப் பிடிக்காத ஒன்றை ஒருவர் பேசினால், என்னிடம் இனி நீ இந்த விஷயம் குறித்துப் பேசாதே என்று சொல்லும் சுதந்திரம் எனக்கு இருக்கிறது. முடியாது அப்படித்தான் பேசுவேன் என்று ஒருவர் உங்கள் பின்னாலேயே வந்து அந்த விஷயத்தைப் பற்றி மீண்டும் மீண்டும் பேசினால், அது எனக்கு வன்முறையாகத்தான் தெரிகிறது.

    நன்றாகக் கவனியுங்கள். நான் சொன்னதை ஒருமுறை மீண்டும் படித்துப் பாருங்கள். வீதிக்குள் நுழையாதே என்று சொல்லவில்லை. வீதிக்குள் நுழைந்து மதமாற்றப் பிரச்சாரம் செய்யாதே என்றுதான் சொல்லப்பட்டது.

    வீதியில் போவோர், வருவோரிடமெல்லாம் போய் சாத்தானைக் கும்பிடுகிறாய், பேயைப் பூஜிக்கிறாய், நரகம்தான் உனக்கு என்று ஒரு சிலர் விடாமல் சொன்னால், எங்கள் ஏரியாவுக்குள் வந்து இப்படி எங்களைத் தொந்தரவு செய்யாதே என்றுதானே சொல்லுவார்கள்.

    இன்னொன்றையும் கவனியுங்கள். இங்கே நாமிருவரும் உரையாடுகிறோம். மாறுபட்ட கருத்துக்களைப் பரிமாறுகிறோம். இதை நடத்த முதலில் நாம் இருவரும் மற்றவரையும், அவரது கருத்துக்களையும் மதிக்கிறோம். ஒருவர் சொல்லுவது எனக்குப் பிடிக்கவில்லை என்றால், அதைப் படிக்காமல் தவிர்க்கும் சுதந்திரம் எனக்கு இருக்கிறது. படித்துத்தான் ஆகவேண்டும் என்று கட்டாயம் ஏதும் இல்லை. ஆனால், மதமாற்றிகள் இந்த சுதந்திரத்தை மதிக்கிறார்களா?

    ஒரு உரையாடல், ஒரு பகிர்வு எப்போது வன்முறையாகிறது? அடுத்தவர் பக்கத்துக் கருத்தைக் கொஞ்சம்கூட கேட்கத் தயாராக இல்லாமல், நான் உங்களைப் பார்த்தோ அல்லது நீங்கள் என்னைப் பார்த்தோ, “நீ ஒரு பாவி, சண்டாளன், கேவலமான மதப் பழக்கங்கள் உள்ள கீழான மனிதன், கட்டுவிரியன், உனது பெற்றோர்களும் மூதாதையர்களும் கேவலமான சாக்கடைப் பிறவிகள், நான் நம்புகிற ஏசுவை நம்பாவிட்டால் நரகத்திற்குத்தான் போவாய்” என்று மீண்டும் மீண்டும் சொன்னால், அது வன்முறைதானே? (இப்படித்தான் கிறுத்துவமும், சர்ச்சும் போதிக்கின்றன.)

    இந்த வன்முறையை என்மேல் ஏவாதே என்றுதானே இந்துக்கள் கேட்கிறார்கள். இத்தனைக்கும், இப்படி எல்லாம் எங்களைக் கேவலமாகப் பேச உங்களுக்குச் சர்ச்சுகள் கட்டிக் கொடுத்திருக்கிறோமே, அங்கே போய் பேசுங்கள், இங்கே வந்து எங்களைத் தொந்தரவு செய்யாதீர்கள் என்று சொல்லுவது தவறா, நண்பரே ?

    எங்களது தெருவிலேயே நாங்கள் காதுகளை அறுத்துக் கொண்டுதான் நடமாடவேண்டும் என்றால், நண்பரே, நாங்கள் அந்த நிலை வேண்டாம் என்று ஏன் சொல்லக் கூடாது?

    இந்த உரிமை நமக்கு இப்போது இருக்கிறது. நமது குழந்தைகளுக்கு இருக்காது.

    செத்துக் கொண்டிருக்கும் சுதந்திரத்திற்குக் கடைசிப் பால் குடிக்கும் பாக்கியமாவது எஞ்சட்டும் என்று மன்றாடுகிறோம். இது தவறா?

  26. R.Sridharan on August 11, 2010 at 5:29 pm

    ஆகா ஹிந்துப் பகுதிகளுக்கு கிறிஸ்தவ சுவிஷேஷகர்களும், மத மாற்றிகளும் செல்வது மதம் மாற்றத்தான் என்பதை ஒப்புக் கொள்கிறீர்கள்!

    ஆனால் நீங்கள் கிறிஸ்தவ மக்களிடம் தான் முதலில் செல்ல வேண்டும்.
    ஏனென்றால் அவர்கள் என்ன கிறிஸ்தவர்களாக மாறியவுடன் ( தினகரன் குடும்பம் போல)கோடீஸ்வரர்களாக மாறி விட்டார்களா?
    அல்லது அவர்களது துன்பங்கள் தீர்ந்து விட்டனவா?
    அங்கு சென்று முதலில் அவர்களின் துன்பத்தை களையுங்கள்

    தெரேசா பிறந்த அல்பேனியா நாடு ஐரோப்பாவிலேயே மிக ஏழ்மையான நாடு
    அனால் அவர் அங்கு சமுதாயத்துக்கு சேவை செய்யாமல் இங்கு வந்தது மக்களை மதம் மாற்றவே
    அனால் அதை எதோ உலக மகா அதிசயம் போல் ஊடகங்களை வைத்து ஜாலம் காட்டுகிறார்கள்

    ஆப்பிரிக்காவுக்கு கிறிஸ்தவம் சென்று கிட்டத்தட்ட இருநூறு ஆண்டுகள் ஆகிறது
    அனால் அங்கு ஏழ்மை,பசி ,பஞ்சத்தால் லட்சகணக்கான மக்கள் இறந்து கொண்டிருக்கின்றனர்.
    காங்கோ, சூடான் முதலிய நாடுகளில் உள் நாடு நாட்டு போரால் லட்சகணக்கானவர்கள் மாண்டனர். இன்னும் அது தொடர்கின்றது.
    கென்யா, உகாண்டா போன்ற நாடுகளில் கிறிஸ்தவ- முஸ்லிம் ஓயாத சண்டை. அதனால் மக்கள் கொல்லப் படுகின்றனர்

    மிகப் பெரும் அளவில் கனிம வளங்கள் உள்ள ஆப்பிரிக்க நாடுகளை கிறிஸ்தவ மேலை நாடுகள் சுரண்டிக் கொண்டு தாங்கள் செல்வ போகத்தில் உள்ளனர். அவர்களுக்கு ஒத்து ஊதுவதும் மிஷனரிகளே.

    அந்த நாடுகளை எல்லாம் கெடுத்து விட்டு இப்போது இந்தியாவா?
    எதோ முறை வைத்துக் கொண்டு ஒவ்வொரு கண்டத்தையும் நாசம் செய்ய வேண்டும் என்பது தான் சர்ச்சின் கொள்கையா?
    போப்பு இந்தியா வந்த போது ‘மற்ற இடங்களில் எல்லாம் ‘வேலை’முடிந்து விட்டது . இனிமேல் ஆசியா, குறிப்பாக இந்தியா’ என்று சொன்னதன் பொருள் இதுதான்!

  27. R.Sridharan on August 11, 2010 at 5:39 pm

    எனது நண்பர் ஒருவர் கூறியது
    அவர் ஒரு இடத்தில் காரை விட்டு இறங்கிய போது திடீரென்று ஒருவன் அருகில் வந்து அவரது நெற்றியில் இருந்த குங்குமப் பொட்டைக் காண்பித்து ‘இனிமேல் இதையெல்லாம் விட்டு விடுங்கள்.உங்களைப் போன்றவர்களால்தான் பரலோக சாம்ராஜ்யம் வருவது தாமதம் ஆகிறது’ என்றானாம்
    அதற்கு அவர்’ இன்னும் இரண்டு நிமிடம் தருகிறேன்.அதற்குள் இங்கிருந்து ஓடிப் போய் விடு’ என்றாராம்

    ஆனால் அவன் கொஞ்சம் கூட பதறாமல் மெள்ளமாக நடந்து சென்றானாம்.
    அவனைப் பார்த்தால் படித்த ஆசாமி போல இல்லையாம்.
    ‘அவன் பேசுவதைப் பார்த்தால் உண்மையாகவே என்னால் தான் ஏசு வருவது தாமதமாகிறது என்று சின்சியர் ஆக அவன் நினைப்பது போல் இருந்தது ‘என்றார் என் நண்பர்.
    அந்த அளவுக்கு பாமரார்களிடம் இல்லாததும் பொல்லாததும் சொல்லி மூளை சலவை செய்கின்றனர்

  28. R.Sridharan on August 11, 2010 at 5:55 pm

    முதலில் நாட்டுக்குள் நுழைவார்கள்
    பின்பு வீதிக்கு வருவார்கள்
    அதன் பின் வீட்டுக்குள் வருவார்கள்
    கடைசியாக அவர்கள் நம் வீட்டுக்கு வந்து போய்க் கொண்டிருப்பார்கள்
    ஆனால் நம் வீட்டில் ஒருவரோ பலரோ வீட்டை விட்டுப் போக நேரிடும் ( ஏனென்றால் வீட்டில் ஒருவரை மதம் மாற்றி விடுவார்கள்.மற்றவர்கள் மாறா விட்டால் குடும்பம் ரெண்டு படும்.)

    முதலில் நம் துன்பங்களில் பங்கேற்பது போல் நடித்து விட்டு பின்பு மெதுவாக ‘உனக்காக ஜெபம் செய்கிறேன் என்று ‘ஊத’ ஆரம்பிப்பார்கள்.
    நீங்கள் கேட்க ஆரம்பித்தால் அப்புறம் சர்ச்சுக்கு ‘அழைப்பார்கள்’ .என்ன நடந்தது என்று உங்களுக்குப் புரியு முன் தண்ணீரில் உங்களை அமுக்கி ஞான ஸ்நானம் செய்தே விடுவார்கள் .
    அதனால்தான் சில பெரியவர்கள் சொல்வார்கள் -கிறிஸ்தவர்களை உன் வீட்டிலேயே அனுமதிக்காதே என்று

    இவர்களால் உடைந்த குடும்பங்களுக்கு கணக்கில்லை.

  29. thiruchchikkaaran on August 11, 2010 at 9:16 pm

    பிரச்சாரம் செய்ய உரிமை உண்டுதான், மைக் செட்டு போட்டு தெருவை அலற வைக்க உரிமை இருக்கிறதா?

    தெருவில் நடந்து போகிறேன். என்னிடம் வந்து கேட்பதானால் ஏதாவது அட்ரஸ் கேட்பது என்றால் கேட்கலாம். அதை விட்டு என்னை அழைத்து பிரச்சாரத்தை ஆரம்பிக்க இன்னொருவருக்கு என்ன உரிமை இருக்கிறது?

    என்னுடைய நேரம் எனக்கு முக்கியமானது. போகிற போதே மூடைக் கெடுக்கிறார்கள.

    அமேரிக்கா போக எம்பசிக்கு என் நண்பன் சென்று கொண்டு இருந்தார். ஒரு பிரச்சாரகர அவனை நெருங்கி எங்கே போகிறாய் என்று கேட்டார். அமெரிக்கன் எம்பசி போகிறேன் என்றான். அமேரிக்கா போய் என்ன செய்யப் போகிறாய், தேவனுடைய சாம்ராச்சியத்துக்கு உன்னை அழைத்து செல்கிறேன் என்றார். அவன் கடுப்பு ஆகி ஆகி விட்டான். அவரவர் ஆயிரம் ஜோலிக்காக வெளியில் செல்லும் போது, குறுக்கிடுகிறார் களே இவர்கள வியாபாரத்தை நடத்த அதுவா நேரம்?

    தெரு எல்லோருக்கும் பொதுவானதுதான் அப்படிப் பார்த்தால் விநாயகர் வூர்வலம் நடத்த ஏன் அனுமதி கொடுப்பதில்லை? மதம் என்பது சென்சிடிவான விடயம். அவரவர் அவரவர் மதக் கொள்கைகளைப் பரப்பினால் சரி. அனால் பிற மதங்களுக்கு எதிரான வெறுப்புக் கொள்கைகளைப் பரப்பி சமூக நல்லிணக்கத்தைக் கெடுக்கிறார்கள்.
    பெரும்பாலான இந்துக்கள் பிறமதங்களை வெறுப்பதில்லை. அவர்கள் மனதிலே இஸ்லாம், இந்து , புத்த மதங்கள் எல்லாம் பொய்யானவை என்று சொல்லி வெறுப்புக் கருத்துக்களை விதைத்து அவனை அமைதிப் பாதையில் இருந்து பிடிவாதப் பாதைக்கு அழைத்து செல்கிறார்கள்.

    இயேசு எந்தக் கருத்துக்களை வேண்டாம் என்று சொன்னாரோ அதே கருத்துக்களை அவர் பெயரால் பரப்புகிறார்கள். யூதர்க்ளைடத்திலே போங்கள். புற ஜாதியிடத்தே போக வேண்டாம் என்று இயேசு சொல்லி இருக்கிறார். தப்பும் தவறுமாக கொள்கைகளை உருவாக்கி, பாவம் செய்யாமல் இருக்க முடியாது, மன்னிப்பு கேட்டுக்கலாம் என்ற வகையிலே கோட்பாட்டை உருவாக்கி மேற்கத்திய சமுதாயத்தை டேட்டிங் கலாச்சார சமுதாயமாக்கி அங்கே குடும்ப வாழ்க்கை இல்லாமல் போய் விட்டது. பள்ளியிலே ஆரம்பித்து பாடை வரை ஒரு மனிதன் எத்தனை பெண்களுடன் உறவு வைக்கிறான். இதுதான் இயேசு சொல்லிக் கொடுத்தாதா? அங்கே சென்று இயேசு கிறிஸ்துவின் கொள்கையைப் பிரச்சாரம் செய்வதுதானே முக்கியம்.

    அன்பிற்கும் மதிப்ப்பிர்க்கும் உரிய திரு R. V அவர்கள கூட்டான் சோறு தளம் நடத்துபவர் என நினைக்கிறேன். மிகுந்த அறிவுலவரும் திறமை சாலியுமான அவர் இலக்கியத்திலே சிறப்பானவர். தேவன், சாம்பு, சுஜாதா என்று புகுந்து விளையாடுவதோடு, டாங்கர் பச்சிடி , கத்திர்க்காய் பிட்லை
    டி போனரவர்ரிலும் ஒரு கை பார்ப்பார். . ஆனாலும் மத வெறியர்களின் “மனித” உரிமைகளை பாதுகாப்பதுதான் அவருடைய தலையாய செயல்.

மறுமொழி இடுக:

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.

*

உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:

தமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.

மறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.