மூலம்: பிரான்ஸ்வா கொத்தியே (François Gautier)
தமிழில்: ல. ரோகிணி
லட்சக்கணக்கானோர் அவரை பூஜிக்கின்றனர். பயங்கரவாதிகள் அவருடைய காலடியில் தங்களுடைய ஆயுதங்களைக் கீழே போட்டுள்ளனர். அவர் ஒரே ஒரு வார்த்தை கூட கோபமாகப் பேசி யாருமே, எப்போதுமே பார்த்ததில்லை. உண்மையும், அன்பும் அவருடைய வாழ்க்கையின் மாறாத லட்சியங்களாக இருந்து வருகின்றன. இருந்தும் 30-05-2010 ஞாயிற்றுக்கிழமை பெங்களூரில் நடந்த துப்பாக்கிச் சூடு நிகழ்வுக்குப் பிறகு, பெரும்பாலான ஊடகங்கள் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்களை இழிவுபடுத்தி வருகின்றன. கிட்டத்தட்ட அவர் பொய் சொல்வது போல் ஊடகங்கள் குற்றம் சாட்டுகின்றன. உண்மை என்னவென்றால் இன்றுள்ள சூழ்நிலையில் ஹிந்து குருமார்கள், ஆச்சார்யார்களுக்கு எதிராக புழுதிவாரி துற்றிக் கொண்டுள்ளனர். அவர்களுக்கு எதிராக திட்டமிட்ட சதி நடந்து கொண்டுள்ளது.
காஞ்சி சங்கராச்சாரியாருடன் அது தொடங்கியது. இன்று ஊடகங்களும் அரசும் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்களை அவருடைய சீடர்களின் கண்ணோட்டத்திலும், பொதுவாக இந்தியர்கள் மத்தியிலும் இழிவுபடுத்த முயற்சிக்கின்றனர். அடுத்தது யரோ?
இன்றைய காலகட்டத்தில் ஹிந்துக்கள் மீது இந்த அளவுக்கு தாக்குதல்கள் நடத்தப்படுவது ஏன் என்பதை ஆராய வேண்டும். முதலாவதாக ‘கர்மா’ வைத்தான் சொல்லவேண்டும். ஹிந்துக்கள் பலமுறை ஒருவரை ஒருவர் காட்டிக்கொடுத்துள்ளனர். அவர்கள் அசிரத்தை கொண்டவர்களாக, விழிப்பற்றவர்களாக, சில சமயங்களில் அகந்தை கொண்டவர்களாக ஆகிவிட்டனர். இரண்டாவதாக இன்று பல கூட்டுச் சக்திகள் தெரிந்தோ, தெரியாமலோ, அறிந்தோ, அறியாமலோ, வெளிப்படையாகவோ அல்லது மறைமுகமாகவோ ஹிந்து தர்மத்தைத் தாக்கி வருகின்றன.
முதலாவதாக இந்த நாட்டின் ‘இயக்கு சக்தியாக’ இன்றியமையாத தலைவராக உள்ள நபர் ஒரு கிறிஸ்தவர்! (சோனியா என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை) கிறிஸ்துவ ஆதிக்கம் உள்ள எந்த ஒரு நாட்டிலும், உதாரணமாக ஃபிரான்ஸ் போன்ற ஒரு நாட்டில் ‘ஒரு ஹிந்து’ இவ்வாறு திரைக்குப் பின்னால் இருந்து கொண்டு எல்லோரையும் எல்லாவற்றையும் இயக்கமுடியுமா?
இரண்டாவதாக, இந்தியாவின் இன்றைய தலைவர்களில் பலர் மார்க்சிஸ்ட் மனப்பான்மை கொண்டவர்களாக உள்ளனர். மதம் காலாவதியான ஒன்று. இறுதியில் அதைக் கைகழுவிவிடவேண்டும் என்று அவர்கள் நினைக்கின்றனர். (ஆனால் ஒன்றை நீங்கள் கவனிக்கவேண்டும். அவர்கள் கிறிஸ்தவ மதத்தையோ, இஸ்லாமையோ தொடமாட்டார்கள்). இதன் காரணமாகத்தான் ‘யோக நாடான பாரதத்தில்’ ஆன்மிக மற்றும் யோக ஸ்தாபனங்களைத் தாக்குகிறார்கள்.
மூன்றாவதாக, இப்போது கிறிஸ்தவ மதத்திற்கு மதமாற்றங்கள் செய்வது, முன் எப்போதையும் விட மிக அதிகமாக நடக்கிறது. இத்தகைய மதமாற்றங்கள் இப்போது நடைபெறும் வீச்சு போல், என்றுமே இருந்ததில்லை. பிரிட்டிஷார் காலத்தில் கூட, கிறிஸ்தவ மதத்திற்கு, இந்த அளவுக்கு மதமாற்றங்கள் நிகழவில்லை. மூன்று சதவீத இந்தியர்கள் மட்டுமே கிறிஸ்தவர்கள் என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. ஆனால், ‘புது சென்ஸஸ்’ விஷயங்களைப் பார்த்தால், நீங்கள் ஆச்சரியப்பட்டுப் போவீர்கள். சுனாமி வந்த பிறகு தமிழகக் கடற்கரைப் பகுதியில் 12% இந்தியர்கள் கிறிஸ்தவத்திற்கு மதமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதற்காக ஏமாந்த, விவரம் தெரியாத, மேற்கத்திய மக்கள் கொடுத்த லட்சக்கணக்கான டாலர்களின் துணையோடு, இந்த மதமாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. வளைகுடா நாடுகளில் இந்திய முஸ்லிம்கள் வேலை செய்கின்றனர். அவர்கள் திரும்பி வரும்போது ஒரு தீவிரவகை இஸ்லாமை இந்தியாவுக்குத் தங்களுடன் கொண்டு வந்துள்ளனர். ஹிந்து விரோத வன்முறை, பயங்கரவாதத் தாக்குதல்கள் நடைபெற இந்தச் சூழ்நிலை உதவியாக உள்ளது. இந்தியாவில் உள்ள உள்ளூர் முஸ்லிம்களின் உதவியும் ஆதரவும் இல்லாமல் பாகிஸ்தான் பயங்கரவாதிகளால் செயல்படவே இயலாது.
இறுதியாக, தொலைக்காட்சிகள் மற்றும் விளம்பரங்கள் மூலம் ‘மேற்கத்திய மயமாதல்’ இந்தியாவில் புயலடிக்கும் வேகத்தில் பரவிக் கொண்டுள்ளது. இதுவே மிகப்பெரிய அபாயமாக இருக்கக்கூடும். ஏனென்றால் பல ஆசிய நாடுகளின் ஆத்மாக்களை மேற்கத்திய தாக்கம் கொன்றுள்ளது.
கிறிஸ்தவர்களுக்கு போப் உள்ளார். முஸ்லிம்களுக்கு குரானின் கட்டளை உள்ளது. கம்யூனிஸ்டுகளுக்கு காரல் மார்க்சின் ‘தாஸ் கேபிடல்’ புத்தகம் உள்ளது. ஆனால், ஹிந்துக்கள் முற்றிலுமாக பிளவுபட்டுக்கிடக்கின்றனர். இந்தக் காலகட்டத்தில் எவ்வளவு அதிகமாக பணம் சம்பாதித்துக் குவிக்க முடியுமோ அதில் ஹிந்துக்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். அவர்கள் மேற்கத்திய வாழ்க்கை முறையைக் காப்பியடித்து வாழ்ந்து வருகின்றனர். தங்களுடைய குழந்தைகளுக்கு ஹிந்து கலாசாரம், ஹிந்து நெறிமுறைகளையும் ஹிந்துக்கள் சொல்லித் தருவதில்லை. மாறாக ஒவ்வொரு முஸ்லிம் குழந்தைக்கும் ‘குரான்’ கற்பிக்கப்படுகிறது. அமெரிக்காவிலோ, இங்கிலாந்திலோ உள்ள ஹிந்துக் குழுக்கள், இடைவிடாது, தங்களுக்குள் சண்டை இட்டுக்கொண்டு உள்ளன. இதன் விளைவாக ‘பேரம் பேசும் சக்தி’ அவர்களிடம் மிகவும் குறைவாக உள்ளது.
இந்திய முஸ்லிம்கள் அல்லது இந்திய கிறிஸ்தவர்களிடம் இதற்கு நேர்மாறான நிலை உள்ளது. நரேந்திர மோடி போன்ற ஒரு மாநில முதல்-அமைச்சருக்கே ‘விசா‘ கிடைக்காமல் செய்ய இந்திய கிறிஸ்தவர்களால் முடிகிறது. இத்தனைக்கும் நரேந்திர மோடியின் குஜராத் அரசு அதிகமான திறமையோடு, ஊழல் இன்றி செயல்பட்டு வருகிறது.
எனவே, ஹிந்து குருமார்களும் சுவாமிகளும் ஆச்சார்யர்களும் ஒரு குடையின்கீழ் அணிதிரள வேண்டியது மிகவும் முக்கியமான ஒன்றாகும். அந்த அமைப்பை, ‘தலைமை ஹிந்து கவுன்சில்’ என்று அழைக்கலாம். ஒவ்வொரு ஹிந்துக் குழுவும், குருவும், தங்களுடைய தலைமையை, சுயேச்சைத் தன்மையைத் தொடரலாம். ஆனால், இவர்கள் அனைவரும் வருடத்திற்கு மூன்று முறை கூடவேண்டும். பலவிதமான கட்டளைகளை நெறிமுறைகளை இவர்கள் வெளியிட வேண்டும். இந்தியாவில் உள்ள 80 கோடி ஹிந்துக்கள், உலக அளவில் சேர்த்து 100 கோடி ஹிந்துக்களும் இந்தக் கட்டளைகளுக்குச் செவிசாய்க்க வேண்டும்.
இந்தியா முழுவதிலும் ஏராளமான ஹிந்து குருமார்களும், சுவாமிகளும் உள்ளனர் அவர்கள் அனைவரையும், ஒரே குழுவாக ஓரிடத்தில் ஒன்று சேர்ப்பது என்பது நடக்காத காரியம். இந்தியாவில் 12 மிக முக்கியமான ஹிந்து குருமார்கள் உள்ளனர். பெரும்பாலான சீடர்களை அவர்கள் கொண்டுள்ளனர். பிற எல்லா சுவாமிகள், குருமார்களை அவர்கள் பிரதிநித்த்துவப் படுத்துகின்றனர். எனவே அவர்களைக் கொண்டு இந்தத் தலைமை ஹிந்து கவுன்சிலை அமைக்கவேண்டும் என்று ஒரு யோசனையை முன்வைக்கிறேன்.
முதல்கட்டமாக, அந்தக் குழுவில் ஸ்ரீ சத்ய சாய்பாபா, ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், அமிர்தானந்தமயி, காஞ்சி சங்கராச்சாரியார், கணேஷ்புரி குரு, ஸ்ரீ ராம்தேவ், சத்குரு ஜக்கிவாசுதேவ் முதலியோர் இடம் பெற்றிருக்க வேண்டும்.
ஒவ்வொரு வருடமும் சுழற்சி முறையில் மாற்றியமைக்கப்பட வேண்டும். உறுப்பினர்களும், அதேமாதிரி மாற்றப்பட வேண்டும். ஏனென்றால் இந்தியாவில் இன்னும் பற்பல பெரிய குருமார்களும், அவர்களது பெரிய அடியார்கள் கூட்டங்களும் உள்ளன.
‘ஹிந்து தர்மம்’ மட்டும் பேராபத்தில் சிக்கி இருக்கவில்லை. பல யுகங்களாக இந்தியாவுக்குக் கிடைத்த எல்லையற்ற ஞானமும் கூட இன்று பேராபத்திற்கு உள்ளாகியுள்ளது. ஒரு குறிப்பிட்ட வடிவத்தில் இந்தியாவில் மட்டுமே இந்த ஞானம் தப்பிப் பிழைப்பது எஞ்சியுள்ளது. இந்த ஞானம் மட்டுமே உலகைக் காக்கவல்லது. தங்களிடம் ‘தேவையான எண்ணிக்கை’ உள்ளது என்பதை ஹிந்துக்கள் புரிந்துகொள்ள வேண்டும். உலகில் ஹிந்துக்கள் மிகவும் வெற்றிகரமான, சட்டத்தை மதித்து நடக்கும் சக்திவாய்ந்த சமூகமாக விளங்குகின்றனர். அவர்களது குருமார்களை யாரும் கேவலப்படுத்தக்கூடாது.
நன்றி: விஜயபாரதம் 09-07-2010 இதழ்.
பிரபல பத்திரிகையாளர் பிரான்ஸ்வா கொத்தியே 1959-ல் பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் பிறந்தார். தனது 19-வது வயதில் இந்தியா வந்த அவர் ஸ்ரீஅரவிந்த ஆசிரமத்தில் பல ஆண்டுகள் இந்து தர்ம தத்துவங்களையும், இந்து வாழ்க்கை முறையையும், கலாசாரத்தையும் பயின்றார். பின்னர் இந்தியாவிலேயே நிரந்தரமாகத் தங்கி விட்டார். இந்தியப் பெண் நம்ரதாவை மணம் புரிந்தார். இந்துத்துவம், இந்து அரசியல், சமூக பிரசினைகள் ஆகியவை பற்றி உறுதியான பார்வையுடன் தொடர்ந்து பேசியும்,எழுதியும் வருபவர் கொத்தியே. ரிடீஃப்.காம், இந்தியன் எக்ஸ்பிரஸ், அவுட்லுக், தி சண்டே இந்தியன் ஆகிய இதழ்களில் இவரது பத்திகள் வெளியாகி வருகின்றன. இந்திய வரலாறு, இந்து குருமார்கள் ஆகிய விஷயங்களைப் பற்றி ஆறு புத்தகங்கள் எழுதியுள்ளார். மேலும் விவரங்கள் இங்கே..

ஆறுமுக நாவலர் / ஈழத்துச் சிதம்பர புராணம்
இந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம்-05
இந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் – 04
வேப்பிலைக் கொடியும் வேளாங்கண்ணி மாதாவும்
குள்ளம்பாளையம்: மதமாற்றிகளை சிறைபிடித்த மக்கள் சக்தி!
ஊர்வம்பு – மல மல மல மல்லே மல்லே (இறுதி)
சக்தி கொடு! அண்ணா ஹஸாரேக்கு நரேந்திர மோடியின் கடிதம்
இந்து எதிரிகளான எமகிங்கரர்கள்
ஈரோட்டில் ஒன்றுபட்ட இந்து மக்கள் சக்தி: ஒரு விரிவான அலசல்![மனமாற்றம் [சிறுகதை]](http://www.tamilhindu.com/wp-content/uploads/manamaatram1.jpg)
மனமாற்றம் [சிறுகதை]
ஹிந்து: பன்மையின் பாதுகாப்பு அடையாளம்
வீட்டிற்கு வந்த மதபோதகர்![அமுதம் [சிறுகதை]](http://www.tamilhindu.com/wp-content/uploads/nectar3.jpg)
அமுதம் [சிறுகதை]![சாட்சி [சிறுகதை]](http://www.tamilhindu.com/wp-content/uploads/old-begger.jpg)
சாட்சி [சிறுகதை]
இந்து வாக்கு வங்கி – ஒரு வேண்டுகோள்![தோள்சீலைக் கலகம்: தெரிந்த பொய்கள் தெரியாத உண்மைகள் [நூல் அறிமுகம்]](http://www.tamilhindu.com/wp-content/uploads/tholseelai-kalagam-cover.jpg)
தோள்சீலைக் கலகம்: தெரிந்த பொய்கள் தெரியாத உண்மைகள் [நூல் அறிமுகம்]
இந்துத் தீவிரவாதமா, சுயநலமிகளின் சந்தர்ப்பவாதமா?
மண்டைக்காட்டில் புதிய சர்ச் கட்ட அடிக்கல்?
சாதியம் குறித்து சுவாமி தயானந்த சரஸ்வதியின் அறிக்கை
இந்து என்று சொல்லடா !! தலை நிமிர்ந்து செல்லடா !!!
இந்திய மதப்பிரிவினை சட்டம் = பண்பாட்டு அழிவு ? –
சாதி எனப்படுவது யாதெனின்…
ஈரோட்டுப் பாதையில் திண்டுக்கல் இந்துக்கள்
தண்ணீர் தேசக் கண்ணீரும் ஒரு ஹிந்துத்துவ எதிர்வினையும்
”காவி” தீவிரவாதமா அல்லது ப.சிதம்பரத்தின் நிறக்குருட்டு பாதிப்பா?






(மெக்காலே – எமகிங்கரணன் நம்பர் -.5)
மெகாலேயின் கல்வி திட்டம்தான் இன்றுவரையில் நடைமுறையில் உள்ளது. அவரின் குறிக்கோள் ஆங்கிலேயர்களுக்கு ஒரு உன்னதமான ஆங்கிலம் கற்ற மத்தியஸ்தர்கள் (Mediators) தேவை. அவர்கள் நிறத்தில் இந்தியன் போல் இருந்தாலும் அவன் சொல்லிலும் செயலிலும் எண்ணங்களிலும் நடத்தைகளிலும் ஆங்கிலேயனைப்போல் இருக்கவேண்டும் என்பதே ஆகும். அதில் அவர் பெரும் வெற்றியையும் கண்டார். பல அறிவு ஜீவிகள் உற்ப்பத்தி ஆனார்கள். எப்படி ? வெறும் உடலால் இந்தியன் மற்ற எல்லா நடவடிக்கைகளிலும் ஆங்கிலேயர்களுக்கு சாதகமாக இருத்தல். இப்படிப்பட்டவர்களின் வழித்தோன்றல்களே இன்று கம்யூகிஸ்ட்களில் பலரும் காங்கிரஸில் பலரும் மணிதஉரிமை கழகங்களிலும் பலரும் சரித்திர ஆகிரியர்களில் பலரும் பத்திரிகை ஆசிரியர்களில் பலரும் நாட்டை அன்னியனுக்கு விலைபேசிக்கொண்டிருக்கிறார்கள். இவர்கள்தான் போலி மதசாற்பின்மை பேசிகொண்டு சிறுபான்மையினரை தூண்டிவிட்டுக்கொண்டும் நாட்டின் அமைதியினை குலைத்துக்கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு இந்து மதம் இந்துக்கள் என்றாலே எட்டிக்காயக கசக்கும். எல்லா தேசவிரோத சக்திகளுக்கு துணைபோக தயங்கமாட்டார்கள். மொத்தத்தில் இவர்கள் பச்சோந்தி சுயநலகூட்டம். இவர்களின் வாரிசுகளும் இதையே தொடராமல் தடுத்து நிறுத்துவது பாரத இறையாண்மைக்கு மிகவும் அவசியம்.
(மெய்னோ – எமகிங்கரணன் நம்பர்.- 6)
யார் இந்த மெய்னோ ? அன்டோனியா மெய்னோ இவர் ஒரு ரோம் கதோலிக கிருஸ்துவச்சி. இத்தாலிய நாட்டில் பிறந்த இவர் தற்போது சோனியா காந்தி என்று பெயர் பெற்றுள்ளார். இவருக்கு இந்தியாவை பற்றிய எந்த சரித்திரமும் தெரியாது. அவர்தான் இன்று கொல்லைபுற கதவு வழியாக நாட்டை ஆண்டுகொண்டிருக்கிறார். இவருக்கு கடுகளவும் இந்து தர்மத்தின் மீதோ இந்து காலாசாரத்தி்ன் மீதோ மரியாதை கிடையாது. பதவி ஆசை பிடித்த காங்கிரஸ்காரர்கள் போட்டிபோட்டுக்கொண்டு சாலாம் அடித்து முடிசூடா பாரத ராணிக்கு அடிமைப்பட்டு இருக்கிறார்கள்.
எதற்க்காக காங்கிரஸ்காரர்கள் வெளிநாட்டிலிருந்து ஒரு பெண்ணை இங்கு இறக்குமதி செய்யவேண்டும் ? இங்கே படித்த தேசப்பற்று உள்ள தலைவர்கள் ஒருவர்கூட இல்லையா ? ஒரு லண்டன் பாரில் எடுபிடியாக பணிசெய்து கொண்டிருந்த ஒரு பெண் இன்று முக்கியமான உலக தலைவர்களுள் ஒருவராகிவிட்டார் என்று 2004 லண்டனின் கார்டியன் பத்திரிகை தலைப்பு செய்தி வெளியிடுகிறது. அவர் பள்ளிபடிப்பைகூட முடிக்கவில்லை சேர்ந்தார்போல் சுயமாக சில வரிகள்கூட பேசத்தெரியாது. இருந்தும் மீடியாக்களின் பரபரப்பினால் திறைமைசாலி போல அரசியல் மேடைகளில் வலம் வருகிறார். பழய லோக் சபா சபாநாயகர் பி.எ.சக்மா காங்கிரஸ் காரியகமிடி கூட்டத்தில் வெயிப்படையாகவே உங்களைப்பற்றி எங்களுக்கு ஒன்றும் தெரியாது என்றார். இவரும் சரத்பாவாரும் சோனியாவின் வருகை பிடிக்காததால் காங்கிரஸிலிருந்து வெளிவந்து என்.சி.பி. என்ற புது கட்சியை தொடங்கினார்கள். பின்பு பதவிமோகத்தால் தன்மானம் இழந்து அவர்களுடன் கூட்டுவைத்துள்ளார்கள். இவர் ராஜிவை மணந்தபின்பும் 18 வருடங்களுக்கு மேலாக இந்திய பிரஜா உரிமையை பெறவில்லை ஆனாலும் சட்டத்தை மீறி டெல்லி ஓட்டுபட்டியலில் இடம்பெற்றார்கள்.
மெய்னோ
அவர் தேசப்பற்று இல்லாதவர் வந்தேமாத்திரம் நூறாவது ஆண்டு விழாவில் கலந்துகொள்ள வெளிப்படையாவே மறுத்தார். இது ஒரு காங்கிரஸ்காரனுக்கு அவமானமாக தெரியவில்லை. ஆனால் போப் ஜான்பால் மரணத்திற்க்கு இங்கு விடுமுறை அறிவிக்கிறார். காசு கொடுத்து கட்டாய மதமாற்றம் செய்த கிரஹாம் ஸ்டேன் அவர்களது மனைவி கிலாடி ஸ்டேனுக்கு பத்தமஸ்ரீ பட்டம் கொடுக்கிறார். எதற்க்கு ? அப்பாவி மக்களை தூண்டி காசு கொடுத்து மதமாற்றம் செய்து மத நல்லிணக்கத்தை கெடுத்தற்க்கு !!! பென்னி இன் என்ற மதபோதகர் அவர் மேல் வெளிநாட்டில் எண்ணற்ற குற்றசாட்டுகள் பதிவாகியுள்ளது. அவருக்கு பெங்களுரில் ராணுவ விமானதள மைதானத்தில் மோசடி மதபிரசாரம் செய்ய சோனியாவின் வற்புறுத்தலால் அனுமதி கொடுத்தார்கள்.
சோனியாவை சுற்றி இருப்பவர்கள் எல்லாம் கிருஸ்துவர்களும் நாட்டுபற்று இல்லாத சில இஸ்லாமியர்களும்தான். அம்பிகா சோனி ,ஆஸ்கர் பெர்நான்டஸ், அந்தோனி, மார்கெரிட் ஆல்வா என்று ஒரு பெரும் தலையாட்டி கூட்டத்தையே ஏற்படடுத்தியுள்ளார். வால்சன் தம்பு என்ற இந்து வெறுப்பாளி (NCERTs) தலைவர் ஜான் தயாள் (National Intrgration committe) கன்சன் எலியா என்ற இந்து வெறுப்பாளர் (UN & US ) காங்கிரஸ்சில் ( looking into the matters related to cast discrmination in India)
200 ஆண்டுகள் போராடி வெள்ளையர்களை வெளியேற்றிவிட்டு அல்பத்தனமாக ஒரு வெள்ளைகாரியின் காலடியில் நாட்டைகொடுத்திருப்பது கூனி குருகி அவமானபடவேண்டிய செயலே ஆகும். மகாத்மா காந்தி ”ராம ராஜ்ஜியத்தை” உருவாக்கவேண்டும் என்றார் ஆனால் அந்து ராமாயணத்து கூனீ போல் பாரதத்தில் நுழைந்த புதகி ”ரோம் ராஜ்ஜியத்தை” இங்கு நிறுவ சதிவேலை செய்துகொண்டிருக்கிறார். அவரையும் அவர் வழித்தோன்றல்களையும் நாடுகடத்தினால் நாடு உய்யும்.
குறிப்பு – சோனியாவை பற்றி மேலும் பல குற்றசாட்டுக்கள் – அரசியல் என்ற தலைப்பில் ” சோனியாவின் முகத்திரை – சில ரகஸியங்கள் ” என்ற கட்டுரையின் மறுமொழிகளையும் பார்க்கவும்
அந்தோனியா மைனோ நமது நேரு குடும்பத்தில் நுழைந்தது ஏதோ தற்செயலாக நடந்தது அல்லவென்றும் அது நமது அயல் நாடு எதிரிகள் நடத்திய சதி என்றும் நான் வலைத் தளத்தில் படித்துள்ளேன்.
இந்த ‘மவுன்ட் ரோடு மோசே துங்’ பத்திரிகை சீனாவின் ஐந்தாம்படை
எதோ உலகத்திலேயே வேறு செய்தி நிறுவனம் இல்லாதது போல் சென்சார் செய்யப்பட்ட செய்திகளைக் கொடுக்கும் சீனாவின் xinhua ‘ சினுவா’
செய்தி ஸ்தாபனத்தின் செய்திகளை வெளியிடும் ஒரே இந்தியப் பத்திரிகை
படித்தவர்கள் என்று சொல்லப் படும் அப்பாவிகள் தினமும் காலையில் பால் வார்த்து வளர்க்கும் நச்சப் பாம்பு.
தேவர்கள்-அரிஜனங்கள், பள்ளர்-பறையர் இவங்க எல்லாமே எல்லா வகையிலும் பின் தங்கிய பிரிவினர். ஆனா பாருங்க ..ஒருத்தரை ஒருத்தர் அழிக்கனும்கிறதுல ரொம்பவே குறியா இருப்பாங்க! எப்பப்பாரு வெட்டு..குத்து… தீவைப்பு ..கற்பழிப்பு..திருவிழாவில கலகம்..போலீஸ்.. கேசு !! சரி இவிங்கதான் அப்படின்னா மேல்சாதின்னு சொல்லிக்கிறவங்க இதை விட மோசம். பெருமாள் கோவில்ல நெத்தில திருநீறு இருக்கிறவங்களுக்கு கொஞ்சம் மரியாதை கம்மியாதான் கிடைக்கும். செதம்பரம் நடராசர் கோவிலை கவுருமென்டு எடுத்துகிட்ட போது நாதிகவாதிகளை விட சந்தோசப்பட்டது கோவிந்தராஜா சன்னதி ஐய்யங்கார் சாமிங்கதான்…சென்னையிலேயே நிறைய பெருமாள் கோவில்களில் புள்ளயாருக்கு சதுர்தி பூஜா கிடயாது ஏன்னா அவரு பர்மசிவனோட புள்ளேன்கிற ஒரே காரணத்துக்காக! சரி ஐய்யங்கார் மக்கள் ஒத்துமையா இருப்பங்கன்னு எதிர்பாத்தால் அங்க வட கல- தென் கல சச்சரவு!
ஒரு கோஷ்டி ராமானுஜர திட்டி தீக்கும், மத்தது தேசிக சாமிய! அவிங்க கோயில் யானைக்கு நாமம் போடற விஷயத்தை வெள்ளக்காரந்தான் பிரிவி கவுன்சில் மூலம் தீத்து வச்சான். சங்கர மடத்துக்கு போனா சிருங்கேரிக்கும் காஞ்சிக்கும் அடி தடி… வரலாறு சொல்ற பாடத்தை கேட்க மாட்டோம்ன்னு புடிவாதமா இருக்கிற நம்ம மக்களை வெச்சுக்கிட்டு ஹிந்து ஒத்துமைய பத்தி நம்ப்ளும்தான் பேசிகிட்டு இருக்கோம்; முழிச்சுக்க மாட்டோம்ரானுவளே ?
மரியாதைக்குரிய வேதம் கோபால் ஐயா அவர்களின் விளக்கங்களை படித்த பிறகும் உணர்வு வராதவர்கள்,திருந்தாதவர்கள்,செகிலாரிசம் பேசுபவர்கள் நிச்சயம் மக்கள் அல்ல மாக்கள் .
வேதம் கோபால் அவர்களுடைய கருத்து முழுக்க முழுக்க உண்மை. இந்தியாவில் இந்துக்களை ஒட்டுமொத்தமாக ஒழித்துவிட்டு கிறிஸ்து சாம்ராஜ்யத்தை ஸ்தாபிக்க போப் இந்தியா வந்தபோதே உறுதி செய்யப்பட்டு விட்டது. இதனை நிறைவேற்றப்போவது யார் என்பதும் நிச்சயமாகிவிட்டது. இருநூறு ஆண்டுகள் அந்நிய ஆட்சியை ஒழிக்க நம் தலைவர்கள் செய்த தியாகம் அனைத்தும் ஒரு நொடியில் வீணாகிப் போனது. ஒரு அந்நிய நாட்டுப் பெண்மணி சுதந்திரத்துக்குப் போராடிய ஒரு கட்சியின் தலைவி என்பது அவமானம் என்பது ஒரு காங்கிரஸ் காரனுக்கும் உறைக்கவில்லை. நூற்றி ஆறு கோடி மக்களில் ஒருவன் கூட காங்கிரசுக்குத் தலைமை வகிக்கத் தகுதி இல்லாதவரா? லாலா லஜபதி ராயும், வீர சாவர்க்கரும், ஷாகீத் பகத் சிங், சுகதேவ், ராஜகுரு, வாஞ்சிநாதன் போன்ற தியாகிகள் சிந்திய ரத்தம் வீண் தானா? மக்கள் என்று விழித்துக் கொள்வார்கள்?
சகோதரர் பாரத புத்திரன் சொல்வது அங்கொன்றும் இங்கொன்றும் நடப்பது உண்மையே
அனால் எப்போதும் பரபரப்பான செய்திகள்தான் அதிக முக்கியத்துவம் பெறும்.
அதனால் அவை தான் எதோ அதிகம் நடப்பது போல் தோன்றும்
அனால் அது உண்மையல்ல.
உலகம் பூராவும்- பாகிஸ்தான்,பங்களாதேஷ்,மலேசியா,ஸ்ரீலங்கா,இப்போது பர்மா என்று ஹிந்துக்கள் வாங்கிக் கொண்டிருக்கும் ‘தப்பைகள்’- ஏன் சொந்த நாட்டிலேயே கால் தூசிபோல் அரசியல் வாதிகள்,ஊடகங்கள்,போலீஸ்,நீதித் துறை என்று நடத்தப் பட்டுக் கொண்டிருக்கும் கேவலம் -இதனால் கொஞ்சம் சொரணை வந்து கொண்டிருக்கிறது .
எப்போதுமே பெரும்பாலானவர்கள் செக்கு மாடுகள் மாதிரிதான் இருப்பார்கள்
ஒன்றிரண்டு லட்சியவாதிகளால்தான் மாற்றம் வரும்.
இந்த ஜாதி சங்கங்களே ஹிந்து எதிரிகள் தூண்டி விட்டு நடத்தப் படுகின்றனவோ என்று சந்தேஹமாக உள்ளது.
ஹிந்துக்கள் ஒற்றுமையாக ஆகி விடக் கூடாது என்று நடத்தப் படும் சதியோ என்று ஐயமாக உள்ளது
அதே போல்தான் உதிரிக் கட்சிகள் உதயமாவதும் – விஜயகாந்த்,ராஜ்தாக்கேரே ,சிரஞ்சீவி கட்சிகளால் ஹிந்து எதிரிகளான காங்கிரஸ் மற்றும் திமுகவுக்கு ஆதாயம் கிடைத்தது.
சர்ச்சும் கொஞ்சம் விளையாடும்
பெட்டி கைமாறும்
எனவே ஹிந்துக்கள் இந்த சக்திகளை புறக்கணிக்க வேண்டும்.
வாழ்வா சாவா என்ற நிலையில் உள்ள அவர்கள் முஸ்லிம்கள் கிறிஸ்தவர்கள் போல் வாக்கு வங்கி உருவாக வேண்டும்
அன்புடையீர்
கோத்தியேயின் தமிழாக்கம் படித்தேன், சிந்தனையை தூண்டும் எழுத்துக்கள்! இதன் ஆங்கில மூலம் லிங்க் தர இயலுமா? நன்றி
ஏழாவது ‘எம்’ ஆக மோதிலால் புத்ரர்களாகிய காங்கிரஸ் காரர்களை சேர்த்துக் கொள்ளலாம்.
இப்படி ஒரு அமைப்பும், கட்டுப்பாடுகளும் இந்து மதத்திற்குத் தேவையில்லை. யோசித்துப் பாருங்கள், இப்படி ஒரு அமைப்பு இல்லாமலேயே இத்தனை ஆயிரம் ஆண்டுகள் இப்புவிதனில் சனாதனதர்மம் நிலைத்திருக்க முடியும் என்றால், இனியும் அது தேவையில்லை. இந்து மதத்தைப் பரப்ப தர்ம நெறிகளை மக்களிடம் கொண்டு செல்லுங்கள், அன்பு நெறியைப் பரப்புங்கள், இனம், சாதிகள் கடந்து அன்பே உருவான இந்து நெறியைப் பரப்புங்கள் – சனாதனதர்மம் தானாக வாழும்!
அன்பு என்பது இருக்கும் வரை – இந்து தர்மும் வாழும்! நேற்று வந்த நடைமுறைகளைப் பின்பற்றி இந்துமதம் வாழத் தேவையில்லை.
தமிழ் ஹிந்து! காவி ஆடுகளின் காட்டுக்கத்தல்கள்!
http://allinall2010.blogspot.com/2010/08/blog-post_13.html
பெண்கள் உரிமை பற்றிப் பேச இவர்களுக்கு அருகதை இல்லை
ஈரானில் இப்போது ஒரு நடுத்தர வயது உள்ள பெண்மணிக்கு பாலியல் குற்றத்திற்காக கல்லால் அடித்துக் கொல்ல தீர்ப்பு ஆகியுள்ளது.
சில வருடங்கள் முன்பு உத்தர் பிரதேசத்தில் மாமனாரால் கெடுக்கப் பட்ட முஸ்லிம் பெண்மணி பிறகு தனது கணவனை தன பிள்ளையாக கருத வேண்டும் என்று ஜமாஅத் தீர்ப்பு அளித்தது
இது எவ்வளவு உயர்ந்த பெண் உரிமை!
வேறு நாட்டில் உள்ள ஆளும் குடும்பத்து ஆண்மகனை வஞ்சகமாக வலையில் விழ வைத்து பின் அந்த நாட்டில் புகுந்து அதை தங்களுக்கு அடிமை ஆக்கும் அளவுக்கு நய வஞ்சகப் பெண்மணிகள் ஹிந்துக்களில் இல்லை.
கம்யுனிஸ்டுகளுக்கு பாரதீய ஜனதா மதவாதக் கட்சி
ஆனால் முஸ்லிம் லீகும் ,கேரளா காங்கிரசும் மதச் சார்பற்ற கட்சிகள் !
நல்ல ஜோக்!
கேரளாவில் , இஸ்லாமை இகழ்ந்ததாக ஒரு கிறிஸ்தவ பேராசிரியரின் கையை ஒரு முஸ்லிம் வெட்டியதற்கு இவர்களிடமிருந்து ஒரு சத்தமும் காணோம்
பாவம் அவர்கள் என்ன செய்வார்கள்
ரெண்டு பக்கமும் பொட்டி வருகிறது
பங்காரு அடிகளார் மீது வரித்துறை ரெய்டு கூட சிலுவைழலின் சிலுவை்யின் சதியில் ஒரு பகுதியாக இருக்கலாம்.
//தமிழ் ஹிந்து! காவி ஆடுகளின் காட்டுக்கத்தல்கள்!
http://allinall2010.blogspot.com/2010/08/blog-post_13.html //
இப்படியும் சில கருப்பு ஆடுகளா? மற்ற வலைதளத்தை பற்றி இங்கே தரக்குறைவாக ஒருபோதும் ஒருவரும் எழுதியதாக எனக்கு தெரியவில்லை.
பார்ப்பனர்கள் எத்தனை ஆயிரம் பேர் தமிழ்நாட்டில் உள்ளனர், அவர்களில் ப்ரோகிதம் செய்பவர்கள் எத்தனை? எனக்கு தெரிந்து பிரைவேட் கம்பெனியிலும்,us போன்ற வெளிநாட்டிலும் தான் அதிகம் இருப்பதாக தெரிகிறது.
இந்து மதத்தை காப்பது அவர்களுக்கு கூடுதலாக எந்த ஒரு பிரயோஜனமும் இல்லை.ஏன் என்றல் அவர்களின் இன்றைய தொழில் கோயில்களை மட்டும் நம்பி இல்லை. எல்லோரும் பண்ட் ஷர்ட் போட்டு மத சம்பளத்திற்கு வேலை பார்பதையே கௌரவமாக நினைக்கிறார்கள். குடுமியும் கடுக்கனும் அணிந்து மேலாடையின்றியும் எத்தனை நாள்தான் அவர்களாலும் இருக்கமுடியும். இப்போது மதத்தினால்,வழிபாட்டால், கோயில்களில் கிடைக்கும் வருமானம்,கோயில் நிலங்களில் கிடைக்கும் வருமானம் அனைத்தையும் சுரண்டி கொள்ளை அடிப்பது திராவிட வெறி பிடித்த கருப்பு ஆடுகளே.
ஆனால் பழி மட்டும் பார்ப்பனர்களுக்கு தான்.அவர்கள் அழிந்து விட்டால் தான் யார்மேல் பழி போடுவது என்று யோசித்து அடுத்து வேறு ஒரு இனத்தையும் அவர்கள் இந்தியாவுக்கு உடுருவிய கதையையும் புதிதாக உருவாக்க வேண்டும்.
பாகிஸ்தான் சண்டை கூட பார்பன சதியால் தான் என்று கொஞ்சம் கூட வெட்கப்படாமல் சொல்லி விடுவார்கள். மேலும் எதற்கு எல்லாம் பார்பனர்கள் காரணம் என்று ஒரு பட்டியலே நகைச்சுவையாக நண்பர் ஒருவர் தயாரித்திருக்கிறார்.
http://nanavuhal.wordpress.com/2010/05/19/few/
அந்த இனத்தை அழிப்பதும் கடைசியில் அவர்களிடமும் வோட்டுக்கு என்கி நிற்பதும் திராவிட (என்று சொல்லிகொள்ளும்) கட்சிகளின் சதி.
இத்தகைய திராவிட சதியே உடனே அழிக்கப்பட வேண்டியது.
சுயமரியாதை பேசும் திராவிட மாயை பிடித்தவர்களுக்கு,பார்ப்பன வீட்டில் பிறந்தவனும் மனிதன் தான் அவனுக்கும் நம்மை போல் உணர்கள் தன்மானம் எல்லாம் உண்டு அவனும் எல்லா உரிமைகளுடனும் பிறந்தவன்தான்.என்ற எண்ணம் கொஞ்சம் கூட இருக்காதா ?
பிறப்பின் அடிப்படையில் இனி ஒரு தாழ்த்தப்பட்ட சமூகமாக ஏன் பார்ப்பன சமுகத்தை உண்டாக்க பார்கிறார்களோ.
(பி. கு ) நான் ஒரு பார்ப்பன சமூகத்தவன் அல்ல. மூன்று வேலையும் மாமிசம் உண்ணும்,கழகங்களால் திராவிடன் என்று பிரிக்கப்பட்ட சமுகத்தில் பிறந்தவன்.ஆனால் என் நினைப்பில் ஒரு இந்து குடும்பத்தில் பிறந்த யாரையும் இழிக்காமல், யார் இழிப்பதையும் அனுமதிக்காமல் சுய மரியாதையுடன்,உண்மையான பகுத்தறிவுடன் வாழ்ந்து இறையை உணர நினைக்கும் சராசரி மனிதன்.
பணக்காரர்களை (பார்பனர் அல்லாத)பார்த்து பூணுல் போட்டவர்கள்
ஐயா என்று அழைத்து எழுந்து நிற்பதை பலமுறை கிராமங்களில் பார்த்திருக்கிறேன். கோவையிலும் பார்த்திருக்கிறேன். இங்கு ஆதிக்க சாதியாக தெரிவது திராவிடர் என்று அழைக்கப் படும் பணக்காரர்களே.
//மார்க்ஸிஸ்ட் ஆதரவாளர்கள் இந்து மதம் தவிர மற்ற மதங்களை கேள்வி கேட்பதில்லை என்ற குற்றசாட்டு வைக்கிறார்கள்! இந்துத்வம் அளவு சாதிபிரிவினை மாற்று மதங்களிலா இருக்கு! எந்த சர்ச்சிலாவது காசு கொடுத்தால் முன்னாடி உட்கார் என்று சொல்கிறார்களா, எந்த மசூதியிலாவது காசு கொடுத்தால் சிறப்பு வழிபாடு செய்கிரார்களா//
இதுவும் அங்கே பதியப்பட்டுள்ளது. காசு வாங்கிகொண்டு உள்ளே வரிசையை அமைப்பது முழுக்க திராவிட அரசாங்கத்தின் அதிகாரிகளே. அரசாங்கம் கோவிலை விட்டு வெளியேறிவிட்டால் கோவில் இந்த முறைகளை முதலில் களைந்து விடும். சிறப்பு வழிபாடு கட்டணமும் உண்டியல் வருமானமும்,கோயில் எல்லா வருமானமும் திராவிட அரசாங்கத்திற்குதான் போகிறது என்ற அறிவு கூட இல்லாதவர்கள் பகுத்தறிவு பற்றி பேசுவதா?
சாதியை ஒழிக்க விடாமல் நீருற்றி வளர்ப்பது கழகங்களும்,கம்முநிச்ட்டுகளும்,காங்கிரஸ்களும் , மத வியாபாரிகளும் (கிருதுருவ கெட்ட செய்தி பாதிரிகள்) ,அந்த அந்த சாதியின் தலைவர்களும் தான். அவர்களுக்கு அதில்தான் பிழைப்பே ஓடும். சராசரி இந்துவுக்கு அது தேவையில்லாத ஒன்றாகவே கருதப் படுகிறது அவனவன் பிழைப்பை பார்க்கவே நேரம் இல்லாத நிலை இப்போது இந்துக்களுக்கு . அப்படி வெறி பீடித்து நடப்பவர் ஒரு சிலர் இருந்தாலும் அவர்கள் தங்கள் சொந்த எண்ணங்களாலேயே அவ்வாறு நடக்கின்றனர். அதற்கும் இந்து மதத்திற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது. அவர்களும் திருத்தப்பட வேண்டியவர்கள் என்றே இந்த சமுகம் விரும்புகிறது.சாதி ஒழிப்பு என்பது எனக்கு தெரிந்து ராமானுஜர் காலம் முதல் இருக்கிறது என்றே தோனுகிறது. சாதி வளர்ப்பு என்னவோ பெரியார் (பேரில் மட்டும்) காலத்திற்கு பிறகுதான் முழு வீச்சில் நடை பெறுகிறது (அரசியல் மற்றும் மத மாற்ற லாபத்திற்காக).
தவறு செய்தவன் ஆண்டவனே என்றாலும் குற்றம் குற்றமே என்று வாதிடும் நக்கீரர் பிறந்த சமுகம் இது. தவறு செய்தவர் யாவர் ஆயினும் அவர் தண்டிக்கப்பட வேண்டியவரே. சங்கராச்சாரியார் தவறு செய்திருந்தால் அவர் தண்டிக்க பட வேண்டியவரே அனால் அவர் கைதான முறை அவருக்கு ஏற்பட்ட harassment பற்றி எழுதப்பட்ட கட்டுரைக்கு இவர்கள் முதுகிற்கு பின்னால் செய்யும் பொய் பரப்புரை நிறைந்த கட்டுரை.
நித்யானந்த தவறு செய்திருந்தால் அவரும் தண்டனை அனுபவிக்க பட வேண்டியவரே அவர் கர்நாடக மாநிலத்திலே ஆசிரமம் வைத்திருந்ததால் வழக்கு அங்கே நடக்கிறது.இதுவும் பார்பன சாதியம், நித்தியானந்தர் பார்பனர் அல்ல என்பதை கூட மறந்து விட்டார்கள்.
அவரை கைது செய்ய வட இந்திய சென்றது கூட கர்நாடக காவல்துறை.அவர் மேலான வழக்குக்கும் எந்த இந்து அமைப்பிற்கும் தொடர்பு என்று சொல்லமுடியுமா?
பலான செக்ஸ் புதிர்கள் பற்றி எத்தனையோ வெப் சைட் இருப்பது அவர்கள் கண்ணில் பட வில்லை போல வுள்ளது.
நித்தியானந்தாவும்,சங்கரச்சரியரும் மட்டும் இந்து மடத்தின் தலைவர்கள் அல்ல, அவர்கள் செய்யும் தவறுகள் ஒன்றும் இந்து மதத்தின் பேரை சொல்லி மதத்தை வளர்பதற்காகசெய்தவை ஒன்றும் அல்ல.சிலுவைப் போர் ஒன்றும் அல்ல .இது தனி மனித தவறு அவர்கள் செயல்கள் எல்லாவற்றையும் இந்துக்கள் ஆதரித்து கொண்டிருக்கவும் இல்லை (இதுவும் இவர்களுக்கு விளங்கவில்லை).
இவர்கள் தலைவர்கள் செய்த பகுத்தறிவு தவறுகளுக்கு இவர்கள் ஆமாம் சாமி போடுவது போல நாமும் போடுகிறோம் என்று கதை கட்டுகிறார்கள்.
மீண்டும் ஒருமுறை சொல்கிறேன் நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்பது எம் முப்பாட்டனாரின் வழி,அதிலே சிறிதும் எமக்கு மாற்றம் இல்லை.
எல்லா வரியும் copy paste செய்யவில்லை ஆனால் அங்குள்ள முழு கட்டுரைக்கு என்னால் முடிந்த அளவு மறுமொழிகள் இவை.
//சோனியா கிறிஸ்தவர் என்பதன் மூலம் சொல்ல வருவதென்ன? அடுத்து பா.ஜ.க வர வேண்டும்! நாட்டில் உள்ள மாற்று மதத்தவர் வழிபாட்டு தளங்கள் இடித்து தள்ளப்பட வேண்டும்! குஜராத் சம்பவம் போல் இந்தியா எங்கும் நடக்க வேண்டும்!,//
இதை விட்டுவிட்டேன் கடந்த காலத்தில் ஐந்து ஆண்டுக்கும் மேல் நடந்த பா ஜா கா ஆட்சியில் எத்தனை வழிபாட்டுத்தலங்கள் இடித்து தள்ளப்பட்டன. என்பது எனக்கு தெரியவில்லை பாவம் தெரிந்தவர் யாராவது இருந்தால் இந்த நண்பர்களுக்கு தெரியப்படுதுங்களேன்.
மற்ற மத நண்பர்கள் நடத்தும் இணைய தளங்கள் எல்லாம் செய்யும் அட்டுழியங்களை பற்றி இவர்களுக்கு கவலை இல்லை.
தமிழ் இந்து தளம் இந்துக்களுக்கு எதிராக நடக்கும் அக்கிரமங்களை நியாமான முறையில் விளக்கி ஒற்றுமை ஏற்படுத்துவது,விழிப்புணர்வு ஏற்படுத்துவது இனி சிலருக்கு தொழிலில் (அரசியல் மற்றும் மதமாற்ற)
பாதிப்பு ஏற்படுத்தும் என்ற பயத்திலும் வைத்தெர்ச்சளிலும் வாந்தி எடுத்திருகிறார்கள்.
இப்போது காஷ்மீரில் அங்குள்ள அறுபதாயிரம் சீக்கியர்களை ஒன்று முஸ்லிம்களாக மாற வேண்டும் அல்லது காஷ்மீர் பள்ளத்தாக்கை விட்டு வெளியேற வேண்டும் என்று அங்குள்ள முஸ்லிம் வெறியர்கள் கூக்குரலிடுகிறார்கள் .
இது இந்த கருப்பு ஆடுகளுக்குத் தெரியாதா?
இதை கண்டிக்காதது என்?
இதற்கு முன் நான்கு லட்சம் ஹிந்துக்கள் அங்கிருந்து துரத்தப் பட்டனர்
அப்போது இந்த ஆடுகள் வாயில் என்ன கொழுக்கட்டையா வைத்திருந்தனர்?
அவ்வளவு ஏன்,நாடு பிரிவினை ஆகும்போது இப்போது உள்ள பாகிஸ்தானில் பனிரெண்டு சதம் ஹிந்துக்கள் இருந்தனர்.
இப்போது கொலை,மத மாற்றம்,அவர்களின் பெண்கள் கட்டாயமாக முஸ்லிம்களுக்கு மணம் செய்விக்கப்படு்தல் இவற்றால் ஒரு சதமாகக் குறைந்துள்ளது
அந்த ஹிந்துக்கள் பெரும்பான்மையினர் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரே.
அவர்களுக்காக இவர்கள் என்ன செய்தனர்?
இவ்வளவு ஏன் சிறிலங்காவில் இருந்த ஹிந்துக்கள் பிற்படுத்தப் பட்டோர் என்ற வகுப்பில் உள்ளவர்களே.
அவர்கள் சித்திரவதை அனுபவிக்கும் போது இங்குள்ள திராவிடத் தலைவர்களும் அவர்களின் அடி வருடிகளும் நன்றாக பதவி சுகம் அனுபவித்துக் கொண்டு ,சும்மா வசனம் பேசிக்கொண்டு தானே இருந்தார்கள்?
இப்போதும் அவர்கள் சொல்லொணாத துயரம் தானே அனுபவிக்கிறார்கள்?
அவர்களுக்கு என்ன செய்தார்கள்?
மலேசியத் தமிழர்கள் என்ன பார்ப்பனர்களா?
அவர்களின் தலைவர்கள் இங்கு வந்து ஆதரவுக்கு கெஞ்சினார்களே. ஆனால் ஏறெடுத்தும் பார்க்கவில்லை நய வஞ்சக தமிழ் தலைவர்கள்
ஆக இவர்கள் யார் பொட்டி கொடுக்கிறார்களோ, எதைச் செய்தால் பதவி சுகம் கிடைக்குமோ அல்லது நீடிக்குமோ அதைதான் செய்வார்கள்.
அவர்களுக்கு யார் செத்தாலும் ,இருந்தாலும் கவலை இல்லை.
இதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்
காஷ்மீரில் தீவிரவாதம் ஆரம்பித்த நாள் முதல் நூற்றுக்கணக்கான கோயில்கள் தரை மட்டமாக்கப் பட்டுள்ளன.
இஸ்லாமிய ஆதிக்கத்தில் முப்பதாயிரம் கோயில்கள் இடிக்கப்பட்டு அந்த சிதிலங்கள் மீது பல இடங்களில் மசூதிகள் கட்டப் பட்டன
கோவாவில் கிறிஸ்தவ போர்த்துகீசிய ஆட்சியில் நூற்றுக்கணக்கான கோயில்கள் இடிக்கப் பட்டன
பிரெஞ்சு கிறிஸ்தவ ஆட்சியில் பாண்டிச்சேரியில் வேதபுரீஸ்வரர் ஆலயம் இடிக்கப்பட்டு சர்ச் கட்டப் பட்டது.( இதைப்பற்றி ஒரு நேரடி வர்ணனை கவர்னர் டூப்லேயின் துபாஷ் ஆனந்தரங்கம் பிள்ளை அவர்களின் நாட்குறிப்பில் உள்ளது)
ஆங்கிலேய ஆட்சியில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலயம் இடிக்கப் பட்டது
இன்னும் பல உள்ளன
சொல்லப் போனால் வெட்கம்
( இன்றும் நம் நாட்டில் பல இடங்களில் கட்டுமானப் பணி செய்யத் தோண்டும் போது கடவுளின் மூர்த்திகள் கிடைப்பது எதனால்?
படை எடுத்து வரும் முஸ்லிம்கள் மூலவரை சிதைத்து பங்கப் படுத்தக் கூடாது என்று அவசர அவசரமாக் அப்பாவி ஹிந்துக்கள் புதைத்து விட்டு ஓடியதால்தான்)
எங்கு நடந்தது இந்த மாதிரி அக்கிரமம் ?
எத்தனை காலம் இந்துக்கள் அராஜகத்தின் விளிம்பில் வாழ்ந்தனர் ?
ஆனால் இந்துக்கள் இடித்தது ஒன்றே ஒன்று அதுவும் அவர்களின் முந்தை தெய்வமான புருஷோத்தமன் இராமனின் ஆலயத்தை இடித்து அதன் மீது கட்டிய கட்டிடமே .
அரசியல்வாதிகள் எல்லாருமே ஒன்று என நினைக்கும் போது மாற்றுக்கட்சிக்கு ஒட்டுப்போடுவதால் மட்டும் இந்த நிலையை மாற்றமுடியாது என்பது தெள்ளத்தெளிவாகிறது.
இருப்பினும் இப்போதைக்கு நமக்கு அதைவிட்டால் வேறு வழி இல்லை!
நம் நாட்டுக்கு சுதந்திரம் வாங்குவதற்காக முன்னோர்கள் செய்த தியாகங்கள் அளவுக்கு இல்லாவிட்டாலும் கூட ஓரளவுக்காவது நாம் தியாகங்கள் செய்யத்தான் வேண்டும்: உதாரணத்துக்கு ஒன்று கூற முடியும் இங்கே.
பல கிருத்தவப்பள்ளிகளில் இந்துக்கடவுள்கள் பற்றி தவறாக குழந்தைகளுக்கு போதிக்கப்படுவதால் உடனடியாக பெற்றோர்கள் இந்துக்குழந்தைகளை போட்டி போட்டுக்கொண்டு அங்கே சேர்க்கும் மனப்பான்மை மாறவேண்டும்.
//சோனியா கிறிஸ்தவர் என்பதன் மூலம் சொல்ல வருவதென்ன? அடுத்து பா.ஜ.க வர வேண்டும்! நாட்டில் உள்ள மாற்று மதத்தவர் வழிபாட்டு தளங்கள் இடித்து தள்ளப்பட வேண்டும்! குஜராத் சம்பவம் போல் இந்தியா எங்கும் நடக்க வேண்டும்!,//
இல்லை.. இப்பொது போல, சொனியாவின் ஆட்சி வேண்டும்.. ஒரிஸ்ஸாவின் கந்தமாலில் கிறிஸ்துவர்கள் சுவாமி லக்ஷ்மானந்தாவை சுட்டு கொன்றது போல, மற்ற இடத்திலும் சர்ச்சுகள் செய்ய வேண்டும்.. ஈரோட்டில் நடந்தது போல, தலித் அமைப்புகளை தூண்டிவிட்டு இந்துக்களை தாக்கவேண்டும்..
இதுதான் உங்களுக்கு தேவை போல..
திருடனுக்குதான் திருட்டுத்தனம் தெரியும்.. அது போல, பா.ஜ.க வந்தா, நீங்க என்ன பண்ணிக்கிட்டிருக்கீங்களோ அதையே அவங்களும் பண்ணுவாங்கன்னு ஒரு பயம்.. அதான், குய்யோ முய்யோன்னு அலறீங்க.. ஆனா, அந்த பா.ஜா.கா வுக்கு, அதுக்கெல்லாம் தைரியம் இல்லைன்னு உங்களுக்கு தெரியாதுன்னி நினக்கிறேன்.. ராஜ தந்திரம் தெரியாம, ” நான் நல்லவன்.. நான் நல்லவன்ன்னு” காட்டறதுலயே பாதி நாள் அவங்களுக்கு போயிடுது..
உங்கள மாதிரி ஆளுங்களுக்கு, அது வசதியா இருக்குது..
can you pls give the original link of english article?
இன்று பாரதத்தில் அங்கிங்கெனாதபடி எங்கும்,எதிலும் சர்ச் ஊடுருவியுள்ளது.
சோனியா மற்றும் காங்கிரஸ் மூலமாக அவர்கள் இந்த நாட்டை இன்று ஆண்டு கொண்டிருக்கின்றனர் என்பது சத்யம்.
இது எவ்வளவு தூரத்துக்குப் போய் விட்டது என்றால் இரண்டு நாட்களுக்கு முன் செய்தித் தாளில் படித்த செய்தி’ சர்ச் ஆப் இங்கிலாந்து ஒரிசாவில் வேதாந்தா என்ற கம்பனி அங்கு பழங்குடியினர் வசிக்கும் பகுதி்களில் கனிம வளங்களை தோண்டுவதை எதிர்க்கிறது.’ என்பதாகும்.
இதில் ராகுல் காந்தி தலையிட்டு அந்த மாநிலத்துக்குச் சென்று பழங்குடியினரிடம் இந்த விஷயம் சம்மந்தமாக் பேசியதும் சந்தேகத்தை வர வழைக்கிறது.
ஒரு கிறிஸ்தவ சர்ச்சுக்கு- அதுவும் வேற்று நாட்டு அமைப்புக்கு நம் நாட்டின் உள் விவகாரத்தில் தலையிட என்ன உரிமை?
அதுவும் பொருளாதாரம் சம்மந்தமான விஷயத்தில்?
இப்போது வந்துள்ள செய்தி: காஷ்மீரில் இருந்த ஒரே ஜெயின் கோவில் முஸ்லிம் தீவிரவாதிகளால் தீயிட்டுக் கொளுத்தப் பட்டு அழிக்கப் பட்டது.
கடவுளரின் மூர்த்திகளுடன் பூசாரி குஜராத் சென்றார்.
எவ்வளவுதான் நடக்கும் இந்த அட்டூழியம்
எவ்வளவு காலம்தான் இதையெல்லாம் சிலர் ஆதரித்துக் கொண்டிருப்பர்?
கண்ணிருந்தும் குருடரோ அவர்?
அல்லது கைக்காசு கொடுத்தால் பெற்ற அன்னையையும் விற்பரோ?
.
‘ஹிந்து மதத்தில்தான் சாதிகள் உள்ளது அதனால்தான் மர்சிக்ஸ்டுகள் கண்டிக்கிறார்கள்’
இதை விட ஒரு பிதற்றல் வேறு கிடையாது
இன்று ( செப்டம்பர் இரண்டு)- பாகிஸ்தானில் ஷியா முஸ்லிம்களின் ஊர்வலத்தில் சுன்னி முஸ்லிம்கள் குண்டு வைத்ததனால் பதினெட்டு பேர் மரணம்.
இதே போல் ஈரான்,ஈராக் போன்ற நாடுகளிலும் அடிக்கடி நடக்கிறது
ஷியா,சுன்னி, அகமதியா ,போஹ்ரா, கோஜா, தாவூதி , மொஹாஜிர்,இன்னும் நூற்றுக்கணக்கில் முஸ்லிம் பிரிவுகள் உள்ளன.
ஹிந்துக்கள் இவர்களைப் போல் ஒருவர் மீது ஒருவர் குண்டு வீசுவதில்லை
அயர்லாந்தில் காலம் காலமாக கதொலிக்கர்களுக்கும், பராடச்ட்டேன்டுகளுக்கும் நடத்து கொடிருக்கும் கொடிய போர் எல்லோரும் அறிந்ததே
ஆகவே நம்ம ஊர் கம்யூனிஸ்டுகளை கொஞ்ச காலம் அங்கெல்லாம் முகாம் போட சொல்லுங்கள் !
கிறிஸ்தவத்திலும் நூற்றுக்கணக்கான பிரிவுகள் உள்ளன.
கதோலிக்,ப்ராடச்டேன்ட், செவன்த் டே அட்வெண்டிஸ்ட், பாப்டிஸ்ட், எஹோவாஸ் விட்னெஸ், சிரியன் ஆர்தொடாக்ஸ், அர்மேனியன், பெண்டகொஸ்ட் , கிரீக் ஆர்தொடாக்ஸ் ,ஆங்கிலிக்கன்,லூதரன்,காப்டிக்,மார்மான்,க்வேகர்ஸ்,மெதடிஸ்ட் , ப்ரஸ்ப்ய்டீரியன் இவை போல்.
இன்னும் கேட்டால் ஒரு கிறிஸ்டியன் இன்னொரு க்ரிச்டியனை முதல் முதல் பார்க்கும் பொது ‘நீ எந்த சர்ச்சை சேர்ந்தவன்?’ என்று கேட்பான்.
ஆகவே சும்மா ஜாதி ,ஜாதி என்று பேசி ஹிந்துக்களை ஏமாற்ற நினைக்க வேண்டாம் .