கான மயிலாட… : திமுக கோவை பொதுக்கூட்டம்

“புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்டது போல’ என்ற ஓர் உவமை உண்டு. தி.மு.க தலைவர் கருணாநிதி கோவையில் நடத்திய (ஆக.2) பொதுக்கூட்டத்தைப் பார்த்தபோது மேற்கண்ட உவமைதான் நினைவில் வந்தது.

kovai-admk-rallyசெம்மொழி மாநாட்டுக்கு பதிலடியாக, ஜூலை13 அன்று, கோவையில் அ.தி.மு.க தலைவி ஜெயலலிதா நடத்திய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் தி.மு.க வை நன்றாகக் கலங்கடித்துவிட்டது தெரிகிறது. அதற்கு பதிலடியாக, அ.தி.மு.க. பொதுக்கூட்டம் நடத்திய அதே வ.உ.சி திடலில் தி.மு.கவும் பொதுக்கூட்டத்தை நடத்தி இருக்கிறது.

கோவையில் “டைடல் பார்க்’ தகவல் தொழில் நுட்பப் பூங்காவைத் திறந்து வைக்க முதல்வர் கருணாநிதி வந்ததைப் பயன்படுத்திக் கொண்டு, அவசர அவசரமாக பொதுக்கூட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஜெயலலிதாவின் கோவை பொதுக்கூட்டப் பேச்சுக்கு பதிலளிக்கவே இந்த பொதுக்கூட்டம் என்று கிளைகள் வாரியாக தீவிர பிரசாரம் செய்யப்பட்டது.

பொதுக்கூட்டம் நிகழ்ந்த நாளில், அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் பெரும்பாலானவை பொதுக்கூட்டத்துக்குத் தொண்டர்களை அழைத்துவர திருப்பிவிடப்பட்டன. இதனால் பயணிகள் அடைந்த தொல்லைக்கு அளவில்லை. கோவை மாவட்டம் மட்டுமல்லாது மதுரை, தேனி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, உதகை, திண்டுக்கல், திருப்பூர் மாவட்டங்களிலிருந்தும் அμசுப் பேருந்துகள் வாயிலாகத் தொண்டர்கள் அழைத்து வரப்பட்டனர்.

அரசு இயந்திரத்தை துஷ்பிரயோகப்படுத்துவது தி.மு.க வுக்குப் புதிதல்ல. மக்களும் வழக்கம் போல தங்களைத் தாங்களே நொந்தபடி அமைதி காத்தனர். இத்தனை ஏற்பாடுகள் செய்திருந்தும், கோவை வ.உ.சி. பூங்காத் திடல் மட்டுமே நிரம்பியது. முன்பு, ஜெயலலிதா நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது திடல் மட்டுமின்றி பக்கவாட்டுச் சாலைகளும் நிரம்பி வழிந்தன; அன்று கோவை மாநகரம் ஸ்தம்பித்துவிட்டது. அத்தகைய மக்கள் கூட்டத்தை தி.மு.க நிகழ்வில் காண முடியவில்லை. அ.தி.மு.க போல வடக்கு நோக்கி மேடை அமைத்தும், தி.மு.கவுக்கு “வாஸ்து’ வேலைசெய்யவில்லை. இந்த அதிர்ச்சி, தி.மு.க பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர்களின் வசைபாடலில் எதிரொலித்தது.

சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் பேசிய தி.மு.க தலைவர், நோக்கத்துக்கு மாறாக ஜெயலலிதாவையே வசைபாடினார். இதன்மூலம், தி.மு.கவின் மாற்று சக்தி, அ.தி.மு.க மட்டுமே என்பதை அவர் காட்டிவிட்டார். அவரது பேச்சில் வழக்கமாகக் காணப்படும் “தெளிவு’ குறைந்து, பிதற்றல் அதிகமாகக் காணப்பட்டது.

தி.மு.க கொடி தான் சொத்து:

எனக்கென்று சொத்தாக இருப்பது தி.மு.க கொடி மட்டுமே என்று கருணாநிதி பேசினார். இதை அப்படியே நம்பி கைதட்டினார்கள் கழக உடன்பிறப்புகள். தனது சொத்துக்களை வாரிசுகளுக்கு பிரித்துக் கொடுத்தது போக, கோபாலபுரத்து வீட்டையும் மறைவுக்குப் பின் தானமாக எழுதி வைத்துவிட்டேன் என்று உருக்கமாகப் பேசினார் கருணாநிதி.

அவரே, தமிழகத்தை வளர்க்க வேண்டுமானால் அழகிரியையும் ஸ்டாலினையும் பலிகொடுக்கத் தயாராக இருப்பதாக முழங்கியதுதான் உச்சகட்ட நகைச்சுவை; மனுநீதிச் சோழன் பிறந்த திருவாரூரில் பிறந்தவராம்! மதுரை தினகரன் பத்திரிகை அலுவலகத்தில் வெந்து பலியான சகோதரர்கள் கதை கருணாநிதிக்கு மறந்துவிட்டது போலும்!

செம்மொழி மாநாட்டில் கட்சிக்கொடி கட்டக் கூடாது என்ற உத்தரவால் தொண்டர்கள் பட்ட மனப்புண்ணுக்கு மருந்தாக, இனிவரும் காலங்களில் எந்த அளவுக்கு வேண்டுமானாலும் தி.மு.க கொடிகளை நடுங்கள் என்று முழங்கினார் தலைவர். ஏற்கனவே உடன்பிறப்புகளின் சாலையோர ஆக்கிரமிப்பு விளம்பரங்களைத் தாள முடியவில்லை. தி.மு.கவுக்குப் போட்டியாக அ.தி.மு.கவும் களமிறங்கினால், தமிழகத்தின் கதி அதோகதிதான்!

“கலைஞர்’ புராணம்

பொதுக்கூட்டத்தில் பேசிய பலர், கருணாநிதியை ஜெயலலிதா “கருணாநிதி’ என்றே அழைப்பதாக ஆதங்கப்பட்டனர். பத்திரிகைகள் கூட (விலை போனவை தான்) கலைஞர் என்று எழுதி மகிழ்கையில், ஜெயலலிதா நிமிடத்துக்கு 60 முறை கருணாநிதி என்று சொன்னால் பகுத்தறிவு வாதிகளுக்கு கோபம் வரத்தானே செய்யும்?

kovai-dmk-rally-stageஇதையும் கருணாநிதி விடவில்லை. இது குறித்த கருணாநிதியின் பேச்சு மரியாதைக் குறைவாக, மட்டரகமாக இருந்தது. ஜெயலலிதாவை ஒருமையில் விளித்த அவர், “”நீ, நான் என்று பேசிக் கொள்வதாக கருதிக் கொள்ளாதே. ஏனென்றால் உன் வயது என்ன? என் வயது என்ன? சிறு வயதிலிருந்தே உன்னைத் தெரியும் என்ற காμணத்தால், அந்த மரியாதையுடன் நீ, நான் என்று பேசுவதாக எண்ணிக்கொள். உன் வயதுக்கு 87 வயதான ஒரு முதியவரைப் பார்த்து நான் அதிகம் படிக்காதவனாக இருக்கலாம், உன்னைப் போல் அறிவாளியாக இல்லாமல் இருக்கலாம் அந்த வயதுக்காவது மரியாதை கொடுக் வேண்டாமா? நான் மரியாதையைத் தேடி அலைகிறேன் என்று யாராவது தயவுசெய்து எண்ணிக் கொள்ளாதீர்கள்” என்று புலம்பினார் ‘கலைஞர்’.

கருணாநிதியைக் கலைஞர் என்று அழைத்துவிட்டால், சர்க்காரியா கமிஷன் அறிக்கையும் ஸ்பெக்ட்ரம் ஊழலும் நள்ளிரவு கைதும் வாக்காளர்களுக்கு மறந்து போகுமா என்ன? இருந்தாலும் “பெரியவரின்’ வருத்தம் அறிந்து “அம்மா’வாவது மரியாதை கொடுக்கலாம்.

“மைனாரிட்டி’ பெருமிதம்!

அ.தி.மு.க தலைவி ஜெயலலிதா, தி.மு.க அரசை மைனாரிட்டி அரசு என்று தொடர்ந்து விமரிச்சித்து வருவது தி.மு.கவினருக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது. உண்மை கசக்கத்தானே செய்யும்? இதற்கும் கோவை பொதுக்கூட்டத்தில் பதில் அளித்தார், செம்மொழி மாநாட்டுத் திலகம் கருணாநிதி.

“மைனாரிட்டி அரசு என்று சொல்வதால் நான் கவலைப்படப் போவதில்லை. சிறுபான்மை சமூகத்தை மைனாரிட்டி என்பார்கள். அதைப் போல தி.மு.க சிறுபான்மையினருக்காக என்றும் பாடுபடக் கூடியது’ என்றார் அவர்.”உலகிலேயே இந்தோனேஷியாவுக்கு அடுத்தபடியாக அதிக முஸ்லிம்கள் வாழும் நாடு இந்தியா. இங்கு 15 கோடி முஸ்லிம்கள் உள்ளனர். முஸ்லிம்கள் அதிகம் வாழும் மாநிலங்களில் 6 சதவீதம் மட்டுமே அரசு பணிகளில் உள்ளனர். இத்தகைய நிலையிலிருக்கும் சிறுபான்மையினருக்கு ஆதரவாக இருப்பது பெருமைதான்” என்று முழங்கினார், கருணாநிதி. வழக்கம்போல “மெஜாரிட்டி’ உடன்பிறப்புகள் கரவொலி எழுப்பி மகிழ்ந்தார்கள்.

மைனாரிட்டி அரசை மெஜாரிட்டி அரசாக்க தொண்டர்கள் பாடுபட வேண்டும் என்று கூறவும் கருணாநிதி மறக்கவில்லை. வார்த்தை ஜாலங்களால் தமிழகத்தை தொடர்ந்து ஆளலாம் என்ற இவரது தந்திரம் “மெஜாரிட்டி’ மக்களுக்கு எப்போது புரியபோகிறது?

சாமிகள் மயம்:

kovai-dmk-rallyதி.மு.கவுக்குத் தாவிய ஈரோடு முத்துசாமி, கரூர் சின்னசாமி, தாவத் தயாராக உள்ள திருப்பூர் எம்.எல்.ஏ. கோவிந்தசாமி, ம.தி.மு.கவுக்குத் தாவி பின் தாய்க்கழகத்துக்குத் தாவிய மு.கண்ணப்பன், கோவை மாநகரம் அ.தி.மு.கவுக்குத் தாவக் காரணமான மு.ராமநாதன் போன்றவர்களின் முழக்கங்கள் தொண்டர்களுக்கு உற்சாகமூட்டின. கட்சி தாவும் பிரபலங்கள் முந்தைய தாய்க்கட்சிகளை விமர்சிப்பது புதிதல்ல. தி.மு.கவைப் பிளந்த கோபாலசாமி அளித்த அனுபவத்தை “முதியவர்’ மறந்திருக்க மாட்டார். ஆயினும், தனது பங்குக்கு சாமிகளை மேடையேற்றி அழகு பார்த்தார்.

“வருங்கால முதல்வர்’ அய்யாசாமி (மு.க.ஸ்டாலினின் இயற்பெயராமே) மட்டுமே பொதுக்கூட்டத்தின் நோக்கமான சாதனை விளக்கத்தை நினைவில் கொண்டு பேசினார். தமிழக அரசின் சாதனைகளைக் கண்டு பிற மாநில முதல்வர்கள் வியப்படைந்து வருவதாக, தனக்குத் தானே சான்றிதழ் அளித்துக் கொண்டார். தி.மு.க அரசின் இலவச கவர்ச்சித் திட்டங்களை அவர் அடுக்கினார். ஒருவருக்கு மீன் கொடுப்பதைவிட மீன்வலை கொடுப்பதே முக்கியம் என்ற அμசியல் தத்துவத்தை அவருக்கு யாரேனும் எடுத்துச் சொன்னால் நல்லது.

மொத்தத்தில், கோவையில் நிகழ்ந்த தி.மு.க., பொதுக்கூட்டம், அரசின் சாதனைகளை விளக்குவதாகக் கூறிக் கொண்டு, ஜெயலலிதாவை வசைபாடி மகிழ்ந்தது. அ.தி.மு.க நடத்திய ஆர்ப்பாட்டத்துக்குப் போட்டியாக பொதுக்கூட்டம் நடத்திய தி.மு.க., “கான மயிலாட கண்டிருந்த வான்கோழி தானும் ஆடியது போல’ தன் பலவீனத்தை தானே வெளிப்படுத்திவிட்டது.

28 Replies to “கான மயிலாட… : திமுக கோவை பொதுக்கூட்டம்”

  1. “கான மயிலாட” கட்டுரை முன்பே படித்தது போல நினைவு. கட்டுரை மிக அருமை. உண்மையை உடைத்துக் காட்டுகிறது. ஜெயலலிதாவின் கோவை பொதுக்கூட்டம் எந்த அளவுக்கு கருணாநிதிக்கு வயிற்றில் புளியைக் கறைத்திருக்கிறது என்பது தெரிகிறது. பாரதியின் குயில் பாட்டில், குயிலி குரங்கையும், காளை மாட்டையும் பார்த்து நையாண்டியாகக் குறிப்பிடும் சில குறிப்புகள் நினைவுக்கு வருகின்றன. குரங்கைப் பார்த்து, அடடா ‘பட்டு மயிர் மூடப்படாத தமதுடலை எட்டுடையால் மூடி எதிர் உமக்கு வந்தாலும், மீசையும் தாடியும் விந்தை செய்து வானரர்தம் ஆசை முகத்தினைப்போல் மனிதர் ஆக்க முயன்றாலும் ….. மனிதர்கள் வானரர் போல் ஆவாரோ” என்று சொல்வது போலவும், காளையை போல “ஈனப் பறவை முதுகின்மிசை ஏறிவிட்டால், வாலைக் குழைத்து வளைத்தடிக்கும் நேர்மையும்” என்று முகஸ்துதி செய்தும் பேசியவர்களைக் கொண்ட அந்த கூட்டம் ஒரு கேலிக்கூத்து. மீண்டும் இவற்றை நினைவு படுத்திய உங்கள் கட்டுரை மிகவும் சிறப்பு. போலிகளின் முகத்திரை கிழியும் நாள் நெருங்கிவிட்டது. இருள் விலகும், ஒழி பிறக்கும், நம்பிக்கையோடு இருப்போம்.

  2. //தொண்டர்கள் பட்ட மனப்புண்ணுக்கு மருந்தாக, இனிவரும் காலங்களில் எந்த அளவுக்கு வேண்டுமானாலும் தி.மு.க கொடிகளை நடுங்கள் //
    மன்னிக்கவும்… தொண்டர்கள் கொடி கட்டிய காலம் எல்லாம் மலை ஏறி ரொம்ப வருஷம் ஆச்சு !! இப்ப எல்லாமே காண்ட்ராக்ட் மட்டும்தான் ..காண்ட்ராக்டர் ஒரே வண்டியில் எல்லா கொடியும் கொண்டு வந்து ராமசாமி தெருவில் ஒரு கட்சி கொடியும் குப்புசாமி தெருவில் இன்னொரு கட்சிக் கொடியும் கட்டி விட்டு போகும் காலம் இது …
    //பத்திரிகைகள் கூட (விலை போனவை தான்) கலைஞர் என்று எழுதி மகிழ்கையில்//
    எதிர்த்து எழுதினால் உனக்கு அரசு விளம்பரங்கள் ” கட்” என்று ஆளும் கட்சி மிரட்டினால், பத்திரிகைகள் என்ன செய்யும்? (தற்போது இணைய ஊடகம் மட்டுமே தப்பித்திருக்கிறது!!)
    //தமிழக அரசின் சாதனைகளைக் கண்டு பிற மாநில முதல்வர்கள் வியப்படைந்து வருவதாக, தனக்குத் தானே சான்றிதழ் அளித்துக் கொண்டார்//
    சமீபத்தில் உலவும் குறுஞ்செய்தி :
    தமிழகம் நம்.1= ஏமாற்றுவதில்::: ஏனென்றால் ,
    தள்ளாத வயதில் ஒரு முதல்வர் வயது 87 பிறகு 58 வயசில் ஒரு இளைஞரணிச் செயலாளர் மற்றும் து.மு.,.மேலும் மு.க அழகிரிக்கு =ஆங்கிலம் தெரியாது, ஹிந்தி தெரியாது ஆயின மத்திய மந்திரி.. கனிமொழி= அரசியல் அனுபவம் இல்லை ஆனால் எம்.பி..,இங்கே அரிசி ஒரு ரூபாய் தக்காளி நாற்பது ரூபாய்., தலைமை செயலகம் கட்ட ஆறு மாதம் , ஒரு பாலம் கட்ட ஆறு வருஷம்., பிள்ளைகளுக்கு கல்விக் கடன் வழங்க பணமில்லை, ஆனால் செம்மொழி மாநாடு நடத்த சில நூறு கோடிகள்- இது நம்பர் ஒன் லக்ஷணம்!!
    என்று போகிறது ..

  3. இன்றய தமிழகம் ? (சுட்ட செய்தி)

    ஒரு நாளைக்கு 18 மணி நேரம் உழைக்கும் என்னிடம்
    ஒருவர் கேட்டார் – எதற்க்காக இத்தனை கஷ்டபடுகிறாய் ?
    நான்கேட்டேன் கஷ்டபடாமல் எப்படி வாழ்கை நடத்தமுடியும் என்று ?

    அவர் சிரித்தபடி சொன்னார் என்னை பார் !
    1 ரூபாய்கு அரிசி வாங்கி உண்டுவிட்டு உறங்கிவிடுவேன் !
    போரடித்தால் வண்ணகாட்சியில் திரைபடம் பார்த்திடுவேன் !!
    உழைக்காமல் நோய் வந்தால் மருத்துவரிடம் ஓடிவிடுவேன்
    உயர் சிகிச்சை பெற்றிடுவேன் ராஜமரியாதையுடன் !!!

    உழைக்காமல் எப்படியப்பா இத்தனைமுடியும் ?
    முதலாமவர் சிரித்தபடி கேட்டார் – நான் யார் தெரியுமா ?

    தமிழ் நாட்டு குடிமகன் !!!!!!!!!

    என்நாட்டில் உணவுக்கு அரிசி 1 ரூபாய் !
    சமைபதற்கு காஸ்சும் /அடுப்பும் இலவசம் !!
    பொழுதுபோக்கிற்கு வண்ணதொலைகாட்சி மின்சாரத்துடன் இலவசம் !!!
    குடும்பத்துடன் உயிர் காக்கும் உயர் சிகிச்சையும் இலவசம் !!!
    எதற்காக உழைக்கவேண்டும் ?

    நான் கேட்டேன் – உன் எதிர்கால சந்ததியின் நிலை என்ன ?

    பலமாக சிரித்தபடி உரைத்தார் !
    மனைவி பிள்ளைபெற்றால் ரூபாய் 5000 இலவச சிகிச்சையுடன் !!
    குழந்தைக்கு சத்துணவு இலவசம் பாலர் பள்ளியில் !!!
    படிப்பு சீருடையுடன் மதியஉணவு இலவசம் முட்டையுடன் !!!!
    பாடபுத்தகம் இலவசம் பள்ளிசெல்ல பஸ் பாசும் இலவசம் !!!!!
    தேவை என்றால் சைகிளும் இலவசம் !!!!!!

    பள்ளி படிப்பில் பரிஷ்சை எழுதினாலே பள்ளிபடிப்பு முடியும்வரை
    தேர்ச்சி கட்டாயம் உண்டு என்ற சலுகை இலவசம் !!
    கல்லுரியிலும் வேலைவாய்பிலும் பதவி உயர்விலும் இடஒதுக்கீடு இலவசம்

    தேர்தலில் ஓட்டிற்கு தலா ரூ 5000 இலவசம் !!!!

    பெண் பருவம்மடைந்தால் திருமண உதவிதொகை ரூ 25000 இலவசம் !!!!!
    1 பவுன் தாலியுடன் திருமண செலவு இலவசம் !!!
    தேவையென்றால் மாப்பிள்ளையுடன் பேப்பரில் விளம்பரம் இலவசம் !!
    மகள் பிள்ளைபெற்றால் மீண்டும் அதேகதை தொடரும்

    நான் எதற்கு உழைக்கவேண்டும் ?

    வியந்து போனேன் நான் !

    என்உயிர் தமிழகமே எவ்வளவு காலம் இந்த நிலைதொடரும் ?

    இலவசம் என்பதற்கு இரண்டு அர்தம் உண்டு

    ஒன்று கையூட்டு மற்றொன்று பிச்சை !!!

    இதில் நீ என்தவகை ? எதை எடுத்துக்கொள்வது
    உழைக்காமல் உண்டு சோம்பேரியாகிறாய் – இலவசம் நின்றால் உன்நிலை!
    உழைபவர் சேமிப்பை களவாடத்தலைபடுவாய்
    இதே நிலை தொடர்ந்தால் – இலவசம் வளர்ந்தால்

    அமைதி பூங்காவாம் தமிழகம் கள்வர் பூமியாய் மாறும் நிலை ?
    இன்னும் வெகு தொலைவில் இல்லை
    தமிழா விழித்தெழு – உழைத்திடு
    இலவசத்தை வெறுத்திடு – அழித்திடு
    தமிழகத்தை தரணியில் உயர்திடு

    நாளய தமிழகம் நம்கையில் !!
    உடன்பிறப்பே சிந்திப்பாயா !!
    மனம் வெதும்பும் ஒரு தமிழனின் மனசாட்சி !!

  4. Pingback: Indli.com
  5. ஒரு வரி தவறி இருந்தாலும் அதிமுக சார்பு பிரசார கட்டுரை ஆகி இருக்கும். கருப்பு – வெள்ளை என்று பார்க்கப் பழகி விட்ட வாசகர்களுக்கு, நடுநிலையாக செய்தி வழங்குவது மிக கடினம். அந்த வகையில் கட்டுரை எழுதியவரை எத்தனை பாராட்டினாலும் தகும். நல்ல கட்டுரை.

    பெரியார் சொல்வார், வைணவ சொற்பொழிவுக்கு போனால் சைவர்களை திட்டுகிறார்கள். சைவர்கள் சொற்பொழிவுக்கு போனால் வைணவர்களை திட்டுகிறார்கள் – இதிலிருந்து இவர்கள் இரண்டு பேரில் லட்சணம் தெரிந்தது என்று.

    அது இவர்களுக்கும் பொருந்தும். திமுக, அதிமுக இரண்டுமே தீய சக்திகள். ஒன்றுக்கொன்று சளைத்தது அல்ல. ஒரு ஐந்து வருடம் போனால் இவனுக்கு அவன் தேவலை என்று தோன்றுவது நமது ஞாபக மறதி. இரண்டுமே மோசம். இதற்கெல்லாம் மாற்றாக காங்கிரசோ பி.ஜே.பியோ மாநிலத்தை ஆளுவது எவ்வளவோ நல்லது.

  6. ‘தமிழ் ஹிந்து’ தளத்தில் இந்த அரசியல் கட்டுரை (உண்மையை ஒட்டியும் படிப்பதற்கு சுவையாக இருந்தாலும்) தேவைதானா?

  7. நல்ல கட்டுரை.

    // ‘தமிழ் ஹிந்து’ தளத்தில் இந்த அரசியல் கட்டுரை (உண்மையை ஒட்டியும் படிப்பதற்கு சுவையாக இருந்தாலும்) தேவைதானா?

    கண்டிப்பாக தேவை தான்.. பாஜக போராட்டம் பற்றி முன்பு கட்டுரை வந்தது. இப்போ திமுக பொதுக்கூட்டம் பற்றி.. இதில் என்ன முரண்பாடு இருக்கிறது?

    தமிழ் ஹிந்துக்கள் ஒரு சமுதாயமாக சந்திக்கும் எல்லா பிரசினைகளிலும் அரசியலின் பங்கு இருக்கிறதே.. பிறகு அரசியல் பேசக்கூடாது என்று சொன்னால் எப்படி?

  8. ஆயிரத்து தொளாயிரத்து அறுபத்து ஏழில் முதன் முதலில் தமிழகத்தில் காங்கிரஸ் தோற்று திமுக வெற்றி பெற்ற போது முதல்வர் பக்தவத்சலம் கூறியது ஞாபகம் வருகிறது” தமிழ்நாட்டில் விஷக் கிருமி பரவி விட்டது”
    அதிமுகவையும் சேர்த்துக்கொண்டால் – ” விஷக் கிருமிகள் பரவி விட்டன” .

  9. முன்பு ஒருமுறை இதேபோல கருணாநிதி கூட்டிய சேது சமுத்திர விளக்க கூட்டத்தில் நடந்தது.
    “பிறரை பழிப்பவன் தானும் பழிக்க படுவான்.” இப்பொது நொந்து என்ன பலன்?

  10. Mu.ka need not say that his party works for the welfare of the minorities.

    His party does only that.

    On the DMK & ADMK, Kamaraj rightly said “Ore kuttaiyil oorina mattaigal”.

    Only difference – AIADMK does not go out of its way to appease the minorities.

    By the way, stalin’s original name is ayyadurai (not ayyasamy). Mu.ka explained then that he had named his son after EVR (ayya) & Anna (durai).

  11. Good article.

    But I agree with Giri. I think we should avoid covering political events (including BJP ones) or taking a political stance. It should not really matter who is in power, as long we further the Hindu cause.
    RSS had this vision and that vision was blurred when BJP came to power.
    Tomorrow, anybody could be the ruler of Tamil Nadu -> Stalin, Azhagiri, Kanimozhi, Jayalalitha or even Ramadoss / Vijayakanth. So it is better to be apolitical / close to all these folks to get things done favourably to us.

  12. ஆனால் திமுகவுக்கு மாற்று அதிமுக இல்லை
    காமராஜ் கூறியது போல் இரண்டும்’ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்’
    இது குடும்பக் கட்சி என்றால் அது தோழிக் கட்சி

    ஜெயலலிதா முதன் முதலில் ஆட்சிக்கு வந்த போது நல்ல ஆட்சியைக் கொடுப்பார் என்று எதிர்பார்த்தோம்
    கொஞ்ச காலம் அப்டியும் இருந்தது.

    ஆனால் அவர் அவரைச் சுற்றி இருந்த கும்பலின் கைப் பாவையாக ஆன பிறகு எல்லாம் தலை கீழாக மாறி விட்டது

    வளர்ப்பு மகனின் ஆடம்பரக் கல்யாணம், மகா மகம் அமர்க்களம் -நெரிசல்-மக்கள் சாவு
    பலரை மிரட்டி பலவந்தமாக சொத்து வாங்குவது,கண்ணகி சிலையை இரவோடு இரவாக உடைத்து அப்புறப் படுத்துவது, குயின் மேரிஸ் கல்லூரியை இடிக்கும் விஷயத்தில் ஒரு கொந்தளிப்பு, அரசு ஊழியர்கள் இரண்டு லட்சம் பேர் சஸ்பெண்டு , இரவோடு இரவாக அவர்கள் வீடுகளை காலி செய்ய சொல்லி அவர்களை வெளியே தள்ளிய பயங்கரம், பத்திரிகையாளர்கள் ஊர்வலத்தில் ரத்தக் களறி

    ஜெயலலிதாவின் பலவீனம் அவரது அகந்தை மற்றும் நிதானம் அற்ற போக்கு
    ஏதோ தனிப்பட்ட மனிதர்களைத் தாக்குவது போல் பிரதமர்,கவர்னர் இவர்களை பேசுவது -அவர்களை மதிக்காமல் இருப்பது- உதாரணம் சென்னா ரெட்டி தன்னிடம் தவறாக நடந்தார் என்று சொன்னது, பிரதமர் வாஜ்பாய் சென்னை வந்த போது ஒரு முதல்வர் என்ற முறையில் சென்னையில் இல்லாமல் வேண்டுமென்றே ஊட்டிக்குச் சென்றது ,அத்வானியை – செலெக்டிவ் அம்னீசியா உள்ளவர் என்று சொன்னது.

    மேலும் அவர் நம்பத் தகுந்தவர் அல்ல
    வாஜ்பாய்க்கு அழ வைத்து ஆதரவு அளித்தது .பின்பு ஒரு நல்ல அரசை பதிமூன்று மாதங்களில் வக்கிரமாகக் கவிழ்த்து நாட்டின் மீது தேர்தலை திணித்து மக்கள் வரிப்பணத்தை விரயம் ஆகியது.
    சோனியாவை வெளிநாட்டுக்காரர் என்று சொல்லி விட்டு பிறகு பிரதம மந்திரி ஆகும் ஆசையில் சுப்ரமணிய சுவாமியுடன் டெல்லி சென்று அவருடன் ‘தேநீர் விருந்தில் கலந்து கொண்டது’
    இரண்டாயிரத்து நான்காம் ஆண்டு நாடாளு மன்ற தேர்தலில் பீ ஜெ பீ யுடன் பேச்சு வரத்தை நடந்த போது நல்ல முறையில் பேசி விட்டு பிறகு அந்தக் கட்சிக்கு நல்ல வாய்ப்பு இருக்கும் தென் சென்னை முதலிய தொகுதிகளை ஒதுக்காமல் டெபாசிட் போகும் வட சென்னை ,சிதம்பரம் என்று ஒதுக்கியது – ஏதோ தன் கட்சி வெற்றி பெற வேண்டும் என்பதை விட பீ ஜே பீ தோற்க வேண்டும் என்பது போல் இருந்தது-மேலும் அந்தக் கட்சியின் உள் விவகாரத்தில் தலை இட்டு திருநாவுக்கரசருக்கு டிக்கெட் கொடுக்கக் கூடாது என்று நிர்பந்தப் படுத்தியது இதெல்லாம் ஒரு பெருந்தன்மை உள்ள செயல் அல்ல .

    அரசே சாராயம் விற்கும் அவலத்தை அமுல் படுத்தியது அவர்தான் .
    இன்னும் பல ஞாபகத்துக்கு வரவில்லை .

    அனால் அவரிடம் உள்ள ஒரே பலம் -கருணாநிதிக்கு ஏற்ற ஆள் .
    அது இல்லை என்றால் இது என்று மக்கள் நினைத்து சூன்யம் வைத்துக் கொண்டது போதும் .

  13. ஜெயலலிதாவிடம் அதிகாரத்தைக் கொடுத்தால் அதை அசுரத்தனமாக தவறான முறையில் கையாள்வார் என்பதற்கு சங்கராசார்யார் கைது விவகாரம் சான்று- இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகள் பாரம்பரியம் உள்ள ஒரு ஸ்தாபனத்தை இழிவு படுத்தி அதை நம் சந்ததிக்கு வரலாறில் விட்டுப் போகிறோம் என்ற அடிப்படை தெளிவு கூட இல்லாமல், அரசு இயந்திரம்,காவல் துறை இவற்றின் மிருக பலத்தை ஒரு சாதாரண சந்யாசியிடம் காண்பித்தது . இது எப்படி என்றால் கொசுவைக் கொல்ல ரோடு ரோல்லேரை உபயோகிப்பது போல.

    எதோ சங்கரச்சர்யர் ஒரு பயங்கரவாதி போலவும் அவர் இரவோடு இரவாக ஆகாய விமானத்தில் தப்பிச் சென்று விடுவது போலவும் தீபாவளி அன்று நள்ளிரவில் கைது செய்து ஒரு சாதாரணக் கைதியைப் போல் கிரிமினல்களுடன் பாழும் சிறையில் அடைத்தது அக்கிரமம்.

    மேலும் அரசே இதில் தனிப்பட்ட முறையில் தலை இட்டு சட்ட சபையில் ‘அவர் மீது குற்றம் இருக்க முகாந்திரம் உள்ளது’ என்று முதல்வர் கூறியது,
    இறந்து போன சங்கர ராமனின் மனைவியை அழைத்து ஐந்து லட்ச ரூபாய்கள் கொடுத்தது,காவல் துறை மூலம் ஊடககங்களுக்கு இல்லாத பொல்லாத தகவல்கள் கொடுத்தது,ஒரு வழுக்கு ,இன்னொரு வழக்கு என்று பல வழக்குகள் போட்டது, இதை பற்றி உண்மையை விளக்கிய பத்திரிகையாளர்கள் குருமூர்த்தி,சோ போன்றவர்களை காவல் துறையை வைத்து மிரட்டியது இதையெல்லாம் பார்த்தால் அவரிடம் அதிகாரம் இருந்தால் வரம்பு மீறி செயல் பட்டு தனக்கோ தனது வட்டத்தில் இருப்பவருக்கோ வேண்டாதவரை கொடுமைப் படுத்துவார் என்று தெரிகிறது

    இதே போல்தான் ஹிந்து ஆசிரியர் ராம் மீது வழக்கு போட்டு அவரை பெங்களுரு வரை தமிழக காவல் துரத்தியது சினிமா காட்சி போல இருந்தது

    ஒரு நாட்டை ஆள்பவர் -ஜனக மகாராஜா போல இருக்க வேண்டும் என்று இப்போது நாம் எதிர் பார்க்கவில்லை- ஆனால் நிதானம்,அதிகாரத்தை நேர்மையான முறையில் உபயோகிப்பது,தானும் நேர்மையாக இருந்து தன்னைச் சேர்ந்தவர்களும் நேர்மையாக இருக்கும்படி பார்த்துக் கொள்வது முதலிய குணங்கள் உள்ளவராக இருக்க வேண்டும்.அறிவு முதிர்ச்சியுடன் செயல்பட வேண்டும்.
    தலை தம்பட்டமாக ஆடக் கூடாது.

  14. தி மு க மீண்டும் தமிழகத்தில் ஆட்சியில் அமரக்கூடாது.ஜெயலலிதா வெல்வதை விட கலைஞர் தோற்பது மிக அவசியம்.நாட்டை நிச்சயம் பிச்சைகார நாடாக்கி விடுவார்.இந்துக்களின் முதல் எதிரி இந்த பகுத்தறிவு பகலவன்.அவர் அளவுக்கு நம்மை பிற மதத்தவர்கள் கூட கேவலமாக பேசியிருக்க முடியாது. இன்னும் அவருக்கு ஒட்டு போட்டு வெற்றி பெற வைப்பது என்னவோ அவர் வாயால் திருடர்கள் பட்டம் வாங்கிய இந்துக்களே.

    பகிரங்கமாக இந்துக்களின் எதிரியாக செயல்படும்,இந்து தெய்வங்களை இழிவாகப் பேசும் ஒரு அரசியல் வாதிக்கு, இன்னும் வெட்கமில்லாமல் ஓட்டளித்து தலைவர் என்று கொண்டாடுபவர்களுக்கு கொஞ்சம் கூட தாம் தவறு செய்வது உறுத்தாதா?.
    minority க்காகதான் தன ஆட்சி (மஜாரிட்டிக்கு இந்த அரசு சாதகம் இல்லை ) என்று அவர் வெளிப்படையாக கூறிய பின்னும்அதை கைதட்டி ரசித்த உடன்பிறப்புகளை(நம் ) என்ன சொல்வது.

    யார் எப்படி போனால் என்ன நமக்கு ஓட்டுக்கு காசு வாங்கினால் போதும்,இலவசங்கள் கிடைத்தால் போதும் என்று நினைக்கும் வாக்காளர்களும்,கட்சி நம் மதத்தை அழிக்க நினைத்தால் என்ன,நம் மதம் இழிக்கபட்டால் என்ன, அழிந்தால்தான் என்ன நாம் வெற்றி அடையும் கட்சியில் இருந்து காசு சேர்க்கவும் நினைக்கும் அரசியல்வாதிகளும் நம் மதத்திலே இருக்கும் வரை நம்முடைய சரிவுகளை சரிசெய்வது கடினம்.
    இருக்கும் ஜாதிகளை ஒழிக்கும் எண்ணம் கொஞ்சமும் இல்லாமல் மேலும் மேலும் வளர்த்து கொண்டு அதுவும் போதாது என்று மேலும் ஜாதி முறையை புது வழியிலே MLA ஜாதி,MP ஜாதி, அரசு அலுவலர்கள் ஜாதி, அமைச்சர்கள் ஜாதி, கட்சி தலைவர் ஜாதி என்று கூடுதலாக உண்டாக்க முனைகின்றன இந்த திராவிட கட்சிகள்.
    திராவிட கட்சிகள் அனைத்தும் உடனே நம் நாட்டிலே அழிக்கப்பட வேண்டிய நச்சுக் கிருமிகள். ஆனாலும் முதலில் அழிக்க வேண்டியது கலைஞரின் குடும்ப ஆட்சி.இந்து ஒழிப்பு ஆட்சி.
    தமிழ் வருடப் பிறப்பை எப்போது கொண்டாட வேண்டும்,பஞ்சாங்கம் எப்போது படிக்க வேண்டும் என்று முடிவு செய்ய வேண்டியது தமிழ் வருடப்பிறப்பை ஆன்மிகத்துடன் இணைத்து கொண்டாடி மகிழும் தமிழ் குடிகளான நாம்.அதனை மாற்றி சட்டம் போட்டு தடுத்து பஞ்சாங்கம் படித்தவர்களை கைது செய்து அவுரங்கசிப் ஆட்சி முறையை நமக்கு விளக்கி காட்டியவர் மஞ்சள் துண்டு .நம் வழிபாட்டை தடுக்க அவர் யார்? ஜனவரி பிறப்பன்று சர்ச் வழிபாட்டை தடுக்க முடியுமா? அவர்கள் போல் நமக்கு சமய உரிமையை தர இந்திய சட்டம் மறுக்கிறதா?
    தமிழ் நாட்டில் நடக்கும் அணைத்து மத மாற்றத்திற்கும் இந்த புல்லுறுவியின் ஆதரவு உண்டு.
    ஆகவே நண்பர்களே தயவு செய்து தி மு க விற்கு ஒட்டளிக்காதிர்கள்,
    இது நம் சமுக நலன் குறித்த உடனடி தேவை,என் சார்பில் ஒரு வேண்டுகோள் மட்டுமே.
    ஜெயலிதாவும் பிடிக்கவில்லை என்றால் 49 ஒ போடுங்கள்.

  15. karunanidhi,kanimozhi,stalin,azhagiri,Ramadoss or even jayalalitha will never do anything for the Hindu Dharma.
    All they are interested is power and pelf at any cost.they do not have lofty vision for the state or the nation.
    They know that they can divide the Hindus and get their votes and try to get the mass votes of muslims and christians.

    so they keep on pampering the so-called minorities-giving them reservation at the cost of the Hindus,encouraging christian conversions,soft pedalling islamic extremism, and at the same time trashing Hinduism- Like saying Rama was a drunkard and asking whether he was an engineer. Erecting periyar statue in front of the Srirangam temple just to insult the Hindus,commenting very obscenely about ‘perumal’or Vishnu while watching the movie Perumal,allowing land mafia to grab temple lands, tax raid on Bangaru Adigalar, harassing hindu sadhus like kalki Bhagwan and others etc ,destroying the Hindus of Srilanka and Malaysia etc etc

    As for jayalalitha her action in arresting and slapping a false case against Kanchi Shankaracharya showed that she cares two hoots for Hindu Dharma.

    merely going to temple is not considered as supporting Hindu Dharma.That is born out of cheap desire for personal ambitions.One must have a higher vision- connecting Hindu Dharma with our Nation and realising that only as long as Hinduism survives can our Nation survive etc.
    As for the others well- how can they be different?
    So the only option is for us to support the BJP which is the only party which does not shy away from voicing its support to Hindu causes.

  16. ஏன் வாக்கை வீண் செய்ய வேண்டும்
    இப்போது பீ ஜே பீ க்கு வோட்டு போடலாமே!
    எல்லோருக்கும் சொல்லுவோம்.
    கர்நாடகா போல் இங்கும் மற்றம் வரட்டும்

  17. திமுக ,அதிமுக இரண்டுமே வேண்டாம்
    கரு, ஜெயா போடும் ஓயாத சண்டையும் எதோ அவர்கள் இரண்டு பேர்தான் முக்யமானவர்கள் என்பது போல் ஒரு மாயையை ஏற்படுத்தி மக்களை ஏமாற்றி விட்டனர்
    ஊடகங்களும் இவர்கள் இருவருக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து மக்கள் எதோ சேவல் சண்டை ,கீரி- பாம்பு சண்டை பார்ப்பது போல் இத்தனை காலம் செய்து வந்தனர்.
    ரெண்டு பெரும் ஓயாமல் மோதுவதால் மக்களும் மனோ ரீதியாக இரண்டு கட்சியாக பிரியும்படி செய்து வெற்று கோஷம் ,சண்டை இவற்றில் மதி மயங்கி இவர்களைப் பற்றியே பேசி தங்கள் நேரத்தையும், வாழ்வையும் வீணடிக்கின்றனர்.
    இந்த கூச்சலில் இவர்கள் மக்களுக்கு என்ன செய்யப் போகிறார்கள் என்று சொல்லாமலே ஏமாற்றுகின்றனர் .
    மக்களும் கேட்க மறந்து விடுகின்றனர்

  18. கொஞ்ச நாள் முன்பு கூட கருணாநிதி ‘நான் சிறுபான்மையினருக்காகதான் உள்ளேன்’ என்று கூறியது
    ஹிந்துக்களின் எரியும் புண்ணில் வேலை சொருகிய மாதிரி.
    முஸ்லிம் ,கிறிஸ்தவ மாணவர்களுக்கு மட்டும் உதவித்தொகை அறிவித்தது ஹிந்துக்களை மேலும் வஞ்சிப்பதாகும்
    முஸ்லிம், கிறிஸ்தவர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுப்பது அரசியல் நிர்ணய சட்டப் படி தவறு
    ஆனால் பின் கதவு வழியாக அவர்களை ஹிந்து பின் தங்கிய வகுப்பினரோடு சேர்த்து அதை கொடுப்பது அநியாயம் .
    அதனால் பின் தங்கிய வகுப்பினரின் சதவிகிதம் குறைகிறது
    இது அவர்களை ஏமாற்றுவது ஆகும்.
    ஆகவே இருவரையும் ஹிந்துக்கள் புறக்கணிக்க வேண்டும்

  19. மக்களை முட்டாளாக ஏற்கனவே மாற்றி விட்டார்கள்!ஹிந்தியை தன் மக்கள் மட்டும் படிக்கும் படியாகவும் பொது மக்களை இந்திய அளவில் வேலை வாய்ப்புகளை இழக்கும் படியாகவும் செய்தார்கள்! இப்போது பிச்சைக் காரர்களாகவும் மாற்றி அதையே, மக்களையே பெருமையாக சொல்ல வைக்கிறார்கள். மக்களுக்கு தங்களின் வரிப் பணம் தான் இவ்வாறு இலவசங்களாக வருகிறது என்பதோ, இதனால் பல நல்ல திட்டங்கள் செயல் படாமல் உள்ளது என்பதோ மக்களால் புரிந்து கொள்ளப் படவே இல்லை! வருந்தத்தக்க நிலைமை இது!

  20. பிஜேபியின் போராட்டம் ஏழை’ ஹிந்து ‘ மாணவர்களுக்கும் உதவித்தொகை கொடுக்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்த நடத்தப்பட்டது. அதனால் ஹிந்துக்கள் தொடர்புடையது. ஆனால் இந்தக் கட்டுரை முழுவதும் அரசியல் சார்ந்தது. அதனால்தான் என் மேற்ச்சொன்ன கருத்தை வெளியிட்டேன்.

  21. ஜெயலலிதா முதலில் மத மாற்றத் தடைச் சட்டத்தைப் போட்டு விட்டு ,பிறகு அதைத் திரும்பப் பெற்றார்.இதற்குக் காரணம் சர்ச்சின் வற்புறுத்தல் என்று செய்தி வந்தது.
    அதற்காகவும், மேலும் சங்கராச்சாரியாரை இழிவு படுத்தியதற்காகவும் அவருக்கு அமெரிக்காவில் உள்ள ஒரு சர்ச் குழு தங்கத் தாமரை கொடுத்ததாக சொல்லப்பட்டது..

    ஆகவே அவரும் இந்துக்களுக்காக எதுவும் செய்யவில்லை ,செய்யமாட்டார் .
    இந்துக்கள் திமுக,அதிமுக இரண்டையும் ஆதரிக்கக் கூடாது.

  22. ‘கானமயிலாட’- தமிழ் ஹிந்து அதிமுகவை மயிலுடன் ஒப்பிட்டிருக்க வேண்டாம்.
    கள்ளம் அறியாப் பறவைகள் எதுவானாலும் இந்த திமுக,அதிமுக தலைவர்களுடன் ( அப்பாவித் தொண்டர்களை விட்டு விடுவோம்) ஒப்பிடுவது அவைகளுக்குக் கேவலம்.

  23. திரு R. ஸ்ரீதரன் அவர்களின் கருத்துக்களுடன் உடன்படுகிறேன். நமது மதத்துக்கு யாரும் செய்யாத இழிவைச் செய்தவர் ஜெயலலிதா. கருணாநிதி எந்த அளவுக்கு இழிவு செய்தாரோ செய்கிறாரோ அதையெல்லாம் தூக்கிச் சாப்பிடும் அளவுக்குச் செய்தவர் ஜெயலலிதா. இவரில்லை, இவருக்குப் பின் பிறந்து வருபவரும் செய்யமுடியாது என்கிற அளவுக்கு இழிவு செய்தவர் ஜெயலலிதா.

    கருணாநிதி வேண்டுமானால் வான்கோழி ஆகலாம்.
    ஜெயலலிதா ஒன்றும் கான மயில் இல்லை.
    கருணாநிதி வேண்டுமானால் பூனை ஆகலாம்.
    ஜெயலலிதா ஒன்றும் புலி அல்ல.
    ஒருவேளை பசுத்தோல் போர்த்திய புலி என்றால் ஒப்பலாம்.
    அவரது புன்சிரிப்பின் பின்னால் கபடம் உள்ளது.
    தலைப்பில் உள்ள ஒப்பீடு தவறான பொருளைத் தருகிறது.

  24. வாக்கு வங்கி வசதிக்காக ஹிந்துக்களுக்கு துரோகம் இழைப்பதில் கருணாநிதி, ஜெயலலிதா ஆகிய இரு பதவிப் பித்தர்களும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான்.. ஓட்டுப் பொறுக்கிகளின் போட்டா போட்டி அரசியல் பற்றி பாராட்டுகள் தொனிக்கும் கட்டுரைகள் இங்கு தேவைதானா? அரசியல் என்றால் தி.மு.க வுக்கு மாற்று அ.தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு மாற்று தி.மு.க. என்பதுதான் தமிழ் நாட்டின் தலைவிதி என்று ஆகிவிட்டது குறித்து தமிழ்ஹிந்துவுக்கு வருத்தம் ஏதும் இல்லையா?
    ஆர். சத்தியபாமா

    (edited and published).

  25. இந்து விரோதமன்றி இந்த திராவிடக் கட்சிகளின் மற்றொரு முக்கியமான குறை என்னவென்றால் அளவில்லாத ஊழல்கள் ஆகும்.
    எதோ ஊழல் செய்வதுதான் நேர்மை என்பது போன்ற ஒரு சிந்தனையை,வாழ்க்கை முறையை இவர்கள் பல காலமாகச் செய்து காட்டி, மக்களின் நல்ல மனத்தைக் கெடுத்து விட்டனர்.
    அதனாலேயே இன்று தமிழ்ச் சமுதாயம் மனத்தளவில் பெரும் பாதிப்பை அடைந்துள்ளது.
    ஒரு சமுதாயமே கெட்டு அந்த சமுதாயத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் மற்றவர் மேல் நம்பிக்கை போவதும் , அந்த ஒட்டு மொத்த சமுதாயத்தை வேற்று மக்கள் கேவலமாக நினைப்பதும் நல்லது அல்ல.

    ஒரு சமுதாயம் அவர்களது தலைவர்களின் நடத்தையால் இனம் காணப் படும்.
    உதாரணமாக ஸ்ரீ லங்கா இந்துக்கள் விஷயத்தில் தமிழக திராவிடக் கட்சிகளின் நடத்தை கேலிக் கூத்தாக இருந்தது .அதனால் அவர்களை யாரும் மதிக்க வேண்டாம் என்று ஸ்ரீலங்கா தலைவர்கள் நினைத்தனர் . அதனால் தான் அவர்கள் ‘தமிழ் நாட்டு அரசியல்வாதிகள் கோமாளிகள்’ என்று துணிந்து கூறினர்.
    இது ஒட்டு மொத்த தமிழ் நாட்டு மக்களுக்கும் குத்தப்பட்ட முத்திரை ஆகும்.
    இந்த சமுதாயத்துக்கு நேர்ந்த அவமானமாகும்.

    பண்பாடு பண்பாடு என்று பேசும் இவர்கள் ஒரு அணு அளவு கூட பண்பாடு இல்லாமல் எந்த அக்கிரமத்தையும் துணிந்து செய்து விட்டு பின்பு மேடை ஏறி நல்லவர்கள் போல் பேசுவது மிகவும் அருவருக்கத் தக்கது.

    இதற்கு முன் கூட ஊழல் இருந்தது.ஆனால் அங்கொன்றும் இங்கொன்றுமாக ,இ்லை மறை காய் மறையாக ,பெரும்பாலும் மேல் மட்டத்தில் இருந்தது.பொது மக்களின் அன்றாட வாழக்கையை அது பாதிக்கவில்லை
    அனால் இவர்கள் தலை எடுத்த பிறகு எங்கும் ஊழல் எதிலும் ஊழல்.
    அரசு அலுவலகங்களில் பணம் இல்லாமல் வேலை நடக்காது என்ற நிலை இவர்களால் வந்த வினை.
    ஒரு சிறிய வேலை ஆக வேண்டும் என்றால் கூட அழ வைத்து விடும் பண்பாடு இவர்களால் வந்தது.

    இது சாதாரண மக்களையும் தொற்றிக் கொண்டு விட்டது. நேர்மையாக இருந்தால் வாழவே முடியாது என்று நினைப்பது மட்டும் அல்ல ,அதை வெளிப்படையாகவே இன்று படித்தவர் முதல் பாமரர் வரை எல்லோரும் கூறுவதை பார்த்தால் சமுதாயம் எந்த அளவுக்கு இவர்களால் கெடுக்கப் பட்டுள்ளது என்று விளங்குகிறது.

    மக்கள் நல்லவர்களாக இருக்கக் கூடாது.அப்போதுதான் தாங்கள் செய்யும் அக்கிரமங்களை அவர்கள் கண்டு கொள்ள மாட்டார்கள், ஏன் அது அக்கிரமம் என்ற அறிவு கூட அவர்களுக்கு இருக்காது என்று இவர்கள் நினைக்கின்றனர்..
    நினைக்கிறார்கள்.
    அதனால்தான் நல்ல பண்புகளை மனதில் விதைக்கும் நமது முன்னோர்களின் வாழ்க்கை ,நீதி நூல்கள் இவைகள் பள்ளிகளில் போதிக்கப் படாமல் பார்த்துக் கொள்கின்றனர்.
    இது ஒரு சமுதாயத்தையே அழிக்கும் செயலாகும்.

  26. இந்த திராவிடக் கட்சிளுடன் போட்டி போட்டுக் கொண்டு காங்கிரஸ் கட்சியும் சளைக்காமல் பாதாளத்துக்குப் போய் விட்டது.. என்று இவர்களுடன் சேர்ந்ததோ அன்றே இவர்களுடைய ‘கலாசாரத்தை’ கற்றுக் கொள்ள ஆரம்பித்து விட்டது.
    நேர்மையும்,நாணயமும் மிக்க காமராஜர் ,கக்கன், நேர்மையோடு அறிவுத் திறமும் உடைய சீ.சுப்பிரமணியம் போன்றோரால் காங்கிரஸ் பெருமை அடைந்தது
    பேருந்திலும்,சைக்கிளிலும் அலுவலகம் சென்ற நேர்மையாளர் கக்கன்.
    அவர் ஏழையாக இருந்த நேர்மையாளர்
    சக்கரை மன்றாடியார் பணக்காரராக இருந்த நேர்மையாளர்
    ஆனால் இன்று காங்கிரசின் நிலை?

  27. Media people should not be biased… Even JJ did and will do the same… Then why this writer cried? Or else, has he ever pointed out JJ’s mistake? or will he point out her mistake?

    Shame to read this website…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *