இரு பெண்களின் கதை

பொதுவாக கூகிள் நியூஸில் நான் ‘ஹிந்து’ என அடித்துத் தேடுவது வழக்கம். அண்மையில் ஒரு வாரமாக ஹிந்து என அடித்தால் வருவது ‘ஜூலியா ராபர்ட்ஸ்’ என்கிற பெயர்தான். ஜூலியா ராபர்ட்ஸ் ஹிந்துவாக மாறியிருக்கிறாராம். டைம்ஸ் ஆஃப் இந்தியா இந்த விஷயம் குறித்து இப்படி எழுதியது:

இப்போது வெளிப்படையாகச் சொல்லலாம். ஆஸ்கார் பரிசு வென்ற ஹாலிவுட் நடிகை ஜூலியா ராபர்ட்ஸ் ஹிந்துவாக மாறிவிட்டார். ஹிந்து என உறுதி செய்து கொண்ட அவர் லாஸ் ஏஞ்சல்ஸ் (ஹிந்து) கோவிலுக்கு அவருடைய காமிராமேன் கணவருடனும் குழந்தைகளுடனும் சென்று “பாடித் துதித்துக் கொண்டாடுவதை ஒரு வழக்கமாகக்” கொண்டிருக்கிறார்.

இச்செய்திக்கு ஆதாரம் ஹாலிவுட் நடிகை ஒரு பேட்டியில், “நான் நிச்சயமாக மத நம்பிக்கை உள்ள ஹிந்துவாகத்தான் வாழ்கிறேன்!” எனச் சொன்னதுதானாம். அவர் இந்தியா வந்திருந்த போது பட்டோ டி மாளிகையில் தங்கினாராம். அவருக்கும் அவரது குழந்தைகளுக்கும் இந்திய சிக்கன் கறி பிடித்ததாம்.

julia-roberts-with-swami-dharmdev-at-hari-mandir-ashram-in-pataudi

இதோ கீழே இருப்பவை கூகிள் செய்திகளில் “ஹிந்துக்கள்” என்பதற்கு எனக்குக் கிடைத்த தேடல் முடிவுகளில் முதல் ஐந்து:

உலகெங்கும் ஹிந்துக்களுக்கு, ஹிந்து இணையத் தளங்களுக்கு ஒரே உற்சாகம்; சந்தோஷம். புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகை ஒரு பேட்டியில் போகிறபோக்கில் தன்னை “நிச்சயமாக நான் ஒரு practicing Hindu” என்று சொல்லிவிட்டார். அதுவும் இந்தியாவில் பட்டோ டியின் மாளிகையில் தங்கிய போது, அவருக்கு சிக்கன் கறி பிடித்துப் போனபிறகு ஹிந்துவாக மாறவில்லை. வார்த்தைகள் கவனம் அமைச்சரே, “நான் நிச்சயமாக ஒரு practicing Hindu” இப்படியும் பொருள் கொள்ளலாம் அப்படியும் பொருள் கொள்ளலாம். ஆனால் அகில உலக அளவில் ஹிந்துக்களுக்கு புளகாங்கிதம் தாங்கவில்லை.

னால் ஹிந்துக்கள் எனும் செய்திகள் தேடலின் இரண்டாவது பக்கத்தில் மற்றொரு பெண் குறித்து ஒரு செய்தி இருக்கிறது. இந்த பெண்ணும் வெளிநாட்டுப் பெண்தான்; மலேசியப் பெண். இந்துவாக வாழப் போராடும் பெண். தனது ஹிந்து கணவனுடன் வாழும் உரிமைக்காக, தனது குழந்தைகளை ஹிந்துவாக வளர்க்கும் உரிமைக்காகப் போராடும் பெண்; ஓர் அரசையே எதிர்த்துப் போராடும் பெண்.

kedah-pkr-youth-deputy-chief-gooi-hsiao-leung-left-talking

ஆகஸ்ட் நான்காம் தேதி மலேசிய நீதிமன்றம் அவர் முஸ்லீம் என்று வலுக்கட்டாயமாக ஓர் அடையாளத்தை அவர் மீது திணித்தது. மதச்சார்பற்ற நீதிமன்றம் அவரது வழக்கை எடுத்துஐக் கொள்ள முடியாது என்றும் முஸ்லீம் நீதிமன்றம்தான் அதை எடுத்துக் கொள்ள வேண்டுமென்றும் கூறியது. ஏழு வயதில் அரசு அநாதை விடுதியில் வறுமையின் விளைவாக சேர்க்கப்பட்ட பங்காரம்மா அங்கே ஏழு வயதில் முஸ்லீம் என ஓர் இஸ்லாமியப் பெயருடன் பதிவு செய்யப்பட்டார். 16 வயதில் இந்த வளர்ப்பு இல்லச் சிறைக்கூடத்திலிருந்து வெளியே வந்த அவர் தனது 18-ஆவது வயதில் ஹிந்து முறைப்படி சொக்கலிங்கம் என்பவரைக் கைப்பிடித்தார். அதன் பின்னர் ஆரம்பித்த இஸ்லாமிய அரசின் அரக்கத்தனத்துக்கு எதிராகப் போராடி வருகிறார் தனியொரு பெண்ணாக.

இந்தியச் செய்தி நிறுவனம் ஒன்றும் கனாடியச் செய்தி நிறுவனம் ஒன்றும் இந்தச் செய்தியை ஆகஸ்ட் நான்காம் தேதி அளித்திருக்கிறார்கள். இரண்டுக்கும் உள்ள வேறுபாடுகள் சில முக்கியமானவை.

ஐஏஎன்எஸ் (IANS) செய்தி நிறுவனம் இந்த செய்தியை ரிப்போர்ட் செய்கிறது. இஸ்லாமிய ஆதரவாக நீதிமன்றம் சொன்ன வாதங்களை முன்வைக்கிறது. பங்காரம்மா தரப்பு எதுவுமே சொல்லப்படவில்லை. இந்தச் செய்தியே சிஃபி இணையத்தளத்திலும் வெளியாகியுள்ளது. குழந்தைகளின் மதத்தை பெற்றோர்கள்தான் தீர்மானிக்க வேண்டும். பெற்றோர்கள் பங்காரம்மாவை ராமகிருஷ்ண சேவை இல்லத்தில் சேர்த்தார்கள் என்பது தங்கள் குழந்தை ஹிந்துவாக வளர வேண்டுமென விரும்பினார்கள் என்பதற்கான நிச்சயமான ஆதாரமாக எடுத்துக் கொள்ளப்படாது… இத்யாதி. பங்காரம்மாவின் பெயர் கூட முதலில் ஸிதி பங்காரம்மா ஹசானா என ஆரம்பித்து பிறகு ஸிதி ஹசானா என கூறப்படுகிறது செய்தியின் பின்பாதியில்.

அதேசமயம் கனாடியப் பத்திரிகைக்கான அசோசியேட் பிரஸ் செய்தி நிறுவனம், ஸிதி ஹசானா என்பது பங்காரம்மா மீது இஸ்லாமிய அரசு இயந்திரத்தால் சுமத்தப்பட்ட பெயர் எனச் சொல்கிறது. அது மட்டுமல்ல பங்காரம்மா தரப்பு நியாயத்தையும் வேதனையையும் விரிவாக விளக்குகிறது.

பங்காரம்மா, கோர்ட் தீர்ப்பினால் தான் மிகவும் அதிருப்தி அடைந்திருப்பதாகக் கூறினார். இதனை மேல்கோர்ட்டுக்குக் (Apeeals Court) கொண்டு செல்வதாகக் கூறினார். “நான் ஏன் இஸ்லாமை ஏற்க நிர்ப்பந்திக்கப் பட வேண்டும்?” என்று கேட்ட பங்காரம்மா கூறுகிறார், “நான் இந்தியனாக ஒரு ஹிந்துவாகப் பிறந்தேன். இறக்கும்வரை ஹிந்துவாகவே வாழ்வேன். என் மீது அவர்களுக்கு எந்த உரிமையும் கிடையாது.”

கனாடியச் செய்தி, இதன் விளைவாக பங்காரம்மா சிறைத்தண்டனையும் பல வித அபராதங்களையும் சந்திக்க வேண்டியிருக்கும் என்பதையும் அதையும் மீறி அவர் போராடுகிறார் என்பதையும் கூறுகிறது. ஹிந்துக்கள் மத-இனரீதியிலான பாரபட்சத்தை எதிர்த்துப் போராடி வரும் வரலாற்றையும் சுட்டுகிறது. இது எதுவுமே இந்தியச் செய்தியில் இல்லை.

ஆனால் இதே இந்திய ஊடகங்களுக்கு ஜூலியா ராபர்ட்ஸின் “ஹிந்துவாக வாழ்கிறேன்” கமெண்ட் புளகாங்கிதமடைய வைத்துவிட்டது.

என்ன ஓர் இரட்டைத்தனம்!

ஜூலியா ராபர்ட்ஸ்களின் பேட்டிகளில் போகிறபோக்கில் அவர்கள் காட்டும் ஒரு வரி அங்கீகாரங்களால் அல்ல; ஊடக ஒளிவட்டங்கள் விழாத பல இலட்சம் பங்காரம்மாக்கள் அறத்துக்காகப் படும் வேதனைகளாலும் கண்ணீர் வெள்ளங்களாலும் தான் ஹிந்து தர்மம் வாழ்ந்து கொண்டிருக்கிறது. ஹிந்து தர்மம் வளரும் நாடுகளின் தர்மம். காலனிய ஆதிக்கத்தால் சுரண்டப்பட்டு சிதறடிக்கப்பட்ட தேச மக்களின் அறம் ஹிந்து சமயம். இதன் வருங்காலம் இந்த உண்மையை வெளிப்படையாகவோ உள்ளுணர்வாகவோ உணர்பவர்களாலேயே நிர்ணயிக்கப்படும். படித்த ஹிந்துக்கள், ஹிந்து உணர்வாளர்கள், அத்தகைய ஹிந்துக்களாக நாம் இருக்கிறோமா என்பதை அறிந்திட காலம் உருவாக்கிய ஒரு முரண் சோதனைதான் ஜூலியா ராபர்ட்ஸின் பேட்டியும் பங்காரம்மாவின் போராட்டமும்.

அந்தச் சோதனையில் ஹிந்து சமுதாயம்- குறிப்பாக படித்த ஹிந்து சமுதாயம்- தேறவில்லை என்பதுதான் வருத்தமான யதார்த்தம்.

-o-

ஜூலியா ராபர்ட்ஸ் குறித்த மேலும் சில செய்திச் சுட்டிகள்:

14 Replies to “இரு பெண்களின் கதை”

  1. // காலனிய ஆதிக்கத்தால் சுரண்டப்பட்டு சிதறடிக்கப்பட்ட தேச மக்களின் அறம் ஹிந்து சமயம். இதன் வருங்காலம் இந்த உண்மையை வெளிப்படையாகவோ உள்ளுணர்வாகவோ உணர்பவர்களாலேயே நிர்ணயிக்கப்படும். படித்த ஹிந்துக்கள், ஹிந்து உணர்வாளர்கள், அத்தகைய ஹிந்துக்களாக நாம் இருக்கிறோமா என்பதை அறிந்திட காலம் உருவாக்கிய ஒரு முரண் சோதனைதான் ஜூலியா ராபர்ட்ஸின் பேட்டியும் பங்காரம்மாவின் போராட்டமும்.//

    சத்தியமான வார்த்தைகள்! சரியான நேரத்தில் சாட்டையால் அடிப்பது மாதிரி சொல்லிவிட்டீர்கள்.

    உண்மையில் இன்றைக்கு இந்துக்கள் எதிர்கொள்ளும் பிரசினைகள் அனைத்தும் அடிப்படையில் வாழ்வாதார, சமுதாய, மனித உரிமைப் பிரசினைகளே.. இந்துக்களின் அடையாளங்கள் தாக்கப் படுவது நோயின் அறிகுறி, symptom. நோய் இன்னும் ஆழமானது.. ஆனால் பல நேரங்களில் அரசியல் இந்துத்துவர்கள் அடையாளப் பிரசினைகளையே பெரிதாகக் கையில் எடுக்கின்றனர். அதனை மக்கள் தளத்தில் முன்னெடுத்துச் செல்வது ஒரு உணர்ச்சிமயமான சூழலில் (உதாரணமாக, ராமஜன்மபூமி போராட்டம் நடந்த சமயம்) மட்டுமே சாத்தியம்..

    பங்காரம்மாவுக்கு நடப்பது போன்ற கொடுமைக்ள் பல்வேறு ரூபங்களில் இந்துக்களுக்கு நடந்து வருகின்றன.. ஏழை இந்துக்கள் கல்வி உதவித் தொகையில் வஞ்சிக்கப் படுவதும் இது போன்றதொரு பிரசினையே.. ஈரோடு மாரியம்மன் கோயில் நில ஆக்கிரமிப்பு என்பது ”மண்ணுக்கான போராட்டம்” என்று அதன் தலைவரே கூறியிருக்கிறார். இத்தகைய மக்கள் பிரசினைகள் இந்துத்துவ போராட்டங்களாக மலர வேண்டும்..

    சத்தியமான சனாதன தர்மம் என்றும் அழியாது; வாழும் என்பது ஒரு தத்துவ ரீதியான கோட்பாடும் பேருண்மையுன் ஆகும். ஆனால் நடைமுறையில் இந்தத் தத்துவ உண்மையினாலேயே தர்மம் அழியாமல் நின்றுவிடாது.

    தர்மத்தைக் காக்க நாம் போராட வேண்டும்; உழைக்க வேண்டும்; தியாகம் செய்ய வேண்டும். அப்படித் தான் வரலாற்றில் தர்மம் காக்கப் பட்டது – ஏதோ மாயமந்திரத்தால் அல்ல. . சிவாஜி முதல் ஸ்ரீரஙகத்து மறவர்கள் வரை, அது போன்று ஆயிரமாயிரம் எளிய மக்களும் ரத்தம் சிந்தித் தான் தர்மத்தைக் காத்தனர்.

    ஜீலியா ராபர்ஸ் பேட்டி கண்டு கெக்கலிப்பது மட்டும் போதாது. பங்காரம்மாவின் போராட்டத்திற்கும் உலகம் முழுவதிலும் உள்ள இந்துக்களிடமிருந்து ஆதரவுக் குரல் எழவேண்டும்.

  2. மலேசியா, தமிழ்நாட்டிலுள்ள இஸ்லாமிய இயக்கங்களைப் பயன்படுத்தி அதற்கு ஆதரவான, மலேசிய இந்துக்களுக்கு எதிரான ஒரு பிரசாரத்தை மேற்கொண்டுள்ளது. அதற்காகக் கோடிக் கணக்கில் செலவும் செய்கிறது. தமிழக ஊடகக்காரர்களைத் தம் கையில் போட்டுக்கொள்ள மலேசியா பெரும் தொகையை ஒதுக்கியுள்ளது. அத்துடன் நில்லாமல், மலேசியாவிலுள்ள சில துரோகி இந்துக்களையும் தமிழ்நாட்டிற்கு அனுப்பி லாபி செய்கிறது. இந்த துரோகிகளைச் செருப்பால் அடித்து விரட்டும் அளவுக்கு தமிழகத்தில் இந்து இயக்கங்கள் வலிமையாக இல்லை.

    பாரதிய ஜனதாக் கட்சி மலேசிய இந்துக்களின் பிரச்சினையை அகில பாரத அளவில் முன்னெடுத்துச் சென்றிருக்கலாம். ஆனால், செய்ய மனமில்லை. இல. கணேசன் போன்ற தமிழக பா.ஜ. பிரமுகர்களோ, கருணாநிதியிடம் கெஞ்சிக் கூத்தாட தனக்கு ஒரு வாய்ப்புக் கிடைக்குமா என்ற ஏக்கத்துடனேயே பொழுதைக் கழித்துக் கொண்டிருக்கின்றனர்.

    வாழ்வுரிமையை, மனித உரிமையை இழந்து நிற்கும் தமிழக இந்துவின் நிலையை ஒப்பிட்டால், பங்காரம்மாவின் நிலை எவ்வளவோ மேல் என்றே தோன்றுகிறது.

    – பா. ரெங்கதுரை

  3. There are a couple of points I want to make.One is a negative issue and the other one is a postive one. I agree totally with Shri Nilakandanji that Hindus and the print/electronic media should have taken up the issue of Bangaramma. What happened to Arunthathi Roy, the SELECTIVE champion of the down trodden? What happened to all the human rights activisits? They run with their tail between their legs if the issue involves Islam.The fact is,no one will dare to say anything against Islamic atrocities.
    The other point, is regarding Julia Roberts. In my humble opinion, these two should not be compared. As a proud Hindu, I was more than happy for a woman from a devout Christian family becoming a Hindu. It is a bonus if that person happens to be a Hollywood celebrity. Hopefully this will trigger some interest in the ordinary Americans in finding about our religion and our dharmic ways.Hopefully, more will convert and I cannot see any negative side to this.More postive publicity to our religion, the better. Of course we all tend to gloat over on this ” Celebrity conversion” as it rarely happens. Why deny us this simple pleasure?!!! Should we not celebrate if, say, Sonia Gandhi, decide to become a Hindu? ( In my dreams only, I know!!)

  4. பங்காரம்மாவின் நிலைமையை பார்தால் மிகவும் வேதனையாக இருக்கிறது. இப்படி உணர்வோடும் உயிரோடும் ரத்தத்தில் கலந்து பரம்பரையாக வந்த இந்து என்ற அடையாளத்தை இழந்தால் எப்படிபட்ட குற்ற உணர்விற்க்கு ஆளாக நேரும் என்பதற்க்கு இவர் ஒர் முன் உதாரணம். ஆனால் இங்கே பலர் எடுத்தேன் கவிழ்தேன் என்று சிறிதும் யோசிக்காமல் பணத்திற்காகவும் பொருளுக்காகவும் எப்படி மதம் மாறுகிறார்கள் என்பது ஆச்சிரியமாகவே இருக்கிறது. எனவே இவர்கள் மனத்தளவில் இந்துவாகவும் வெளியில் கிருஸ்துவனாகவும் இருக்கிறார்கள். இவர்களுக்கு நல்ல அறிவுரைகளை சொல்லி தாய் மதம் திருப்புவது மிகவும் எளிது. கூடவே அதற்க்கான பணமும் பொருளும் தாராளமாமக இருந்தால் இது நிச்சியம் சாத்தியமே !!!

  5. bjp will lose the trust of hindus ery quickly if itdoes not chande and become pro-active.

  6. sonia is a christian from italy
    she will never convert to Hinduism
    her daughter is married only to a christian.
    Her agenda is clear.
    that is why she has only christians in her closest circle- PC George,ambika Soni,Margaret alva,kancha Iliah,John Dayal,( previously AP ex CM samuel Rajasekara Reddy, Ajit Jogi)
    It is better she does not become a hindu because that is more dangerous for the Nation
    Because under that pretext she can do more mischief.

  7. I agree with Rama,on Julia Roberts.Even if it is an advertisement stunt ,it definitely will kindle some interest and enable most of westerners understand some of the problems faced by the indian diaspora.At the same time the diaspora should actively engage their own governments wherever they have some say to intervene and setright these as human rights issue.It is this hammering on the hR issue that brought down USSR and gradually controlling ChinaWe should also take up with the Ministry which dealing withNRI welfare am
    nd through the Malasian consulate

  8. ஹிந்துக்களிடம் மத ரீதியிலான விழிப்புணர்வு போதுமான அளவு இல்லை. பெரும்பாலான படித்த ஹிந்துக்கள்கூட இது விஷயத்தில் பாராமுகமாய் உள்ளனர். இந்தியாவில் பேசப்படும் மதச்சார்பின்மை, எவ்வாறு ஹிந்து மதத்திற்கு எதிரானதாக உள்ளது என்பதில் நமக்கு சரியான புரிதல் இல்லை. அதனால்தான் மதச்சார்பின்மை குறித்து ஹிந்துக்களே அதிகம் பேசுகிறார்கள். ஆனாலும் நேற்றைய நாளைவிட இன்று எவ்வளவோ மேல். நாளை குறித்தும் நம்பிக்கை இருக்கிறது. அந்த நம்பிக்கையை தரக்கூடியவர்களில் ஒருவரே பங்காரம்மா.

    – மோகன்தாஸ்

  9. அமெரிக்க நடிகை ஒருவர் ஹிந்துவாக மாறியதை ஒரு விசயமாகவே கட்டுரை ஆசிரியர் எடுத்துக்கொள்ளவில்லை .மலேசியப் பெண்மணியின் போராட்டம் வெற்றிபெற்று அவர் சேமமாக வாழ இறைவனை வேண்டுகிறேன்.அதே நேரம் இந்து மதத்துக்குப் புது வரவாக வந்துள்ள மேலை நாட்டுப்பென்மணியை வருக என வரவேற்பதுடன் மேலும் அனைவருமே வந்து உண்மையை உணர்ந்து நல்வாழ்வுவாழ ஹிந்துமதம் நல்வழி காட்டும் என்பதை உலக மக்கள் அனைவர்க்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.அன்பன்,ஈஸ்வரன்,பூலாம்பட்டி,பழனி.

  10. hi everyone, i went through a article in conversion of Hindus in to Christians. and i really pity looking at the comments. you all just think the us and other foreign people just give aid and convert hindus.
    i think this in the other way.
    the bishop and pope not only rapture the family and help them financially for convertion,
    say , if 50% of people have been converted , and the aid was financed by america, ultimately the bishop is a slave to americans ( to their money.)
    normally our Indians don’t have brain , they debt their lives for 10 kg rice and a color TV. if the bishop has the capacity to brainwash people and convert them , its obvious that they can make people to dance on their tune . if the control of 50% population is on bishops hand and the bishop is a slave for americans,
    we can imagine what happens next, Americans indirectly will take over powers in india through these bishops,
    it may even be a hit in politics, industrial era and so on
    say if the bishop says to vote a certain community, the converted idiots will honor his words, we are facing the future calamity by bishops.
    we fought for freedom from British and pledging the same to Americans in a different way.
    think deeply about the future and join hands for a positive result which will help India in future and Indians at present

  11. உலஹில் தோன்றிய முதல் மார்க்கம் இஸ்லாம். இது மதம் அல்ல மார்க்கம்.
    நீங்கள் பொய்யை எடனைமுரைகுரினாலும் மனிதன் உருவாக்கியவயெல்lam.
    கடஊல் ஹிடையாது.இஸ்லாம் மட்டும்தான் மனிதனைப்பற்றி அல்லாஹ்குருஹின்ற்ரன்.மற்றவையல்லாம் கடஊளை பற்றி மனிதன் கூறுகிறான்.உதாரணம் நெறையுள்ளன quraanaipadiungal தேறியும்.

  12. //இஸ்லாம் மட்டும்தான் மனிதனைப்பற்றி அல்லாஹ் குருஹின்ற்ரன்.மற்றவையல்லாம் கடஊளை பற்றி மனிதன் கூறுகிறான்.உதாரணம் நெறையுள்ளன quraanaipadiungal தேறியும்.-முகமது//

    குரானையும் ஹதீஸ்களையும் நான் முழுவதுமாகப் படித்துள்ளேன். இன்றைய உலகின் நாகரிக நடைமுறைக்கு முரணான பல கட்டளைகள் அவற்றில் உள்ளன என்பதுதான் பிரச்சினை.

    பழைய ஏற்பாட்டிலும் புதிய ஏற்பாட்டிலும் உள்ள இன்றைய நாகரிகத்திற்கு ஒவ்வாத கட்டளைகளை இன்றைய சர்ச்சுகள் வலியுறுத்துவதில்லை. ஆனால் முகமதியரைப் பொருத்தவரை பிடிவாதமாக குரான், ஹதீஸ் கட்டளைகள் அனைத்தையும் ஒன்றுவிடாமல் பின்பற்ற வேண்டும் என்ற பிடிவாதம் உள்ளது. இதன் காரணமாகவே இன்று உலக அரங்கில் முகமதிய நாடுகள் தனிமைப்பட்டு நிற்கின்றன. உலகத்தோடு ஒட்ட ஒழுகல் மிகவும் அவசியம் என்பதை முகமதியர் உண்ர்வது நலம்.
    -மலர்மன்னன்

  13. வாழ்வுரிமையை, மனித உரிமையை இழந்து நிற்கும் தமிழக இந்துவின் நிலையை ஒப்பிட்டால், பங்காரம்மாவின் நிலை எவ்வளவோ மேல் என்றே தோன்றுகிறது.

    – பா. ரெங்கதுரை ஒரு இந்து பெண்ணிக் போராட்டம் என்னை மெய்சிலிர்க்க வைத்தது. இந்திய அரசு இதில் தலையிட்டு ஆவன செய்ய வேண்டும். ஒரு இசுலாமியனக்கு மதம் மாற உாிமையில்லை என்கிற வாதம் மிகவும் காட்டுமிராண்டித்தனமானது.சிந்தனை வளா்ச்சிக்கு தடை. 1500 ஆண்டுகளக்கு முந்தைய ஒரு காட்டரவிகளின் கலாச்சாரத்தை யாரும் பின்பற்ற வேண்டும் என்பது முட்டாள்தனம். திரு ரெங்கதுரை அவர்களுக்கு பாராட்டுக்கள்.வித்யாபாரதி தொண்டுகள் நல்ல முறையில் நடைபெற்று வருகின்றதா ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *