யோக விளக்கம்: “ஸ்வாத்யாயம்” – 1

பதஞ்சலி யோக சூத்திரத்தில் முதல் படிநிலைகளான யம-நியமங்களில் கூறப்படும் “ஸ்வாத்யாயம்” என்ற அம்சம் பற்றிய விளக்கமே இந்தக் கட்டுரை.

ஜெயா டி.வி தொலைக்காட்சியில் யோக வகுப்புகள் நடத்தும் பிரபல யோகப் பயிற்சியாளர் யோகேஷ்வர் கார்த்திக் அவர்கள் எழுதிய “கிரியா யோகம்” என்ற நூலிலிருந்து (பக்கங்கள்: 31 – 44).
அனுப்பியவர்: எஸ்.ராமன்

“ஸ்வாத்யாய ப்ரவ்சனாப்யாம் ந: ப்ரமதிதவ்யம்”

என்பது வேத வாக்யம். இதற்கு “உன்னுடைய குல வேதத்தை அத்யயனம் செய்வதையும் நித்ய கர்மாக்களைச் செய்வதையும் உள்ளடக்கிய ஸ்வாத்யாயத்தையும், நாம் உணர்ந்து அறிந்த உண்மைகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளப் பயன்படும் பிரவசனத்தையும் வழுவாது மேற்கொள்ள வேண்டும்” என்று பொருள்.

satsang1வைதிக முறையிலான வாழ்க்கையை அனுஷ்டிக்கும் அந்தணர்கள் ஒவ்வொருவருக்கும் தம் “குல வேதம்” என்று ஒன்று உண்டு. வழிவழியாக, ஒவ்வொரு அந்தணர் குடும்பத்திலும், வேதத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதியை அத்யயனம் செய்து வருவர். அதற்கு ஸ்வாத்யாயம் செய்தல் என்று பொருள்.

இதிலிருந்து ‘ஸ்வாத்யாயம்’ என்னும் கருத்தை, பதஞ்சலி வேதத்தை அடிப்படையாகக் கொண்டே கூறியிருக்கிறார் என்று தெளிவாகிறது. யோகாப்யாசம் என்பது ‘இந்து மதம்’ என்று அழைக்கப்படும் சனாதன தர்மத்தின் ஒரு அங்கம் என்பது தெளிவாகிறது.

ருக், யஜூஸ், சாம, அதர்வண என்று நான்கு பிரிவுகளாக முறைப்படுத்தப்பட்ட, ‘ஸ்ருதி’ என்று அழைக்கப்படும் வேதத்தை மூல ஆதார நூலாக, பிரமாணமாகக் கொண்டதே ‘இந்து மதம்’ என அழைக்கப்படும் ஸனாதன தர்மம். இந்து மதத்தில் ஆறு விதமான தத்துவ முறைகள் இருக்கின்றன. அவை, ‘நியாயம், வைஷேசிகம், சாங்க்யம், பூர்வ மீமாம்சம், யோகம், உத்தர மீமாம்சம் எனப்படும் வேதாந்தம் என்பன. இவை “ஷட் தர்சனங்கள்” என அழைக்கப்படுகின்றன. இவற்றில் ஒன்றாக யோகம் இருப்பதைப் பார்க்க முடிகிறது.

இக்கருத்துக்களின் மூலம் “ஸ்வாத்யாயம்” என்னும் பயிற்சியின் அடிப்படைகளை நாம் தெரிந்து கொண்டுள்ளோம். இந்த அடிப்படை அறிவு, யோகத்தின் ஆரம்பத்திலேயே ஒவ்வொரு அப்யாசிக்கும் இருக்க வேண்டியது அவசியம். “யோகப் பயிற்சி அனைத்து மதங்களுக்கும் அப்பாற்பட்டது, இறை உணர்வுக்கும் யோகத்திற்கும் சம்பந்தம் இல்லை…..” என்றெல்லாம் கூறுவது தற்காலத்தில் fashion-ஆக ஆகிவிட்டது. இதனால் யோகத்தின் அஸ்திவாரமே ஆட்டம் கண்டு விடுமோ என்ற அச்சம் வருகிறது. இதற்கு ஒரே தீர்வு, “யோகத்தின் அஸ்திவாரம் நான்மறைகளை அடிப்படையாகக் கொண்ட சனாதன தர்மத்தில் இருக்கிறது” என்பதை தெளிவாகக் கருத்தில் வைப்பதில்தான் இருக்கிறது.

இந்த அடிப்படை அறிவு, ஸ்வாத்யாயம் என்னும் யோக அங்கத்தைச் சரியாகக் கடைப்பிடிக்க மிகவும் முக்கியம். இவ்வாறு ஸ்வாத்யாயம் செய்வதால், ‘யோகம்’, ‘ஆன்மிகம்’ என்னும் பெயர்களால் சந்தையில் கிடைக்கும் தவறான முறைகளிலிருந்து நம் அறிவை காத்துக் கொள்ளலாம். தற்கால நிலைமைக்கு இது அவசியமும் கூட.

மேற்கூறிய முறையில் ஸ்வாத்யாயம் செய்வதென்பது வேத காலத்திற்கு ஏற்றதாக இருப்பினும், பொதுவான விளக்கமாகாது. அந்தணர்களில் கூட பெரும்பாலானோர் இந்நாளில் வேதம் படிப்பதில்லை. நித்ய கர்மாக்கள் சரிவரச் செய்வதில்லை. எனவே, உலக மயமாக்கப் பட்டுள்ள இன்றைய இயந்திர வாழ்வில் ‘ஸ்வாத்யாயம்’ செய்வது எவ்வாறு என்பதை இனி பார்ப்போம்.

பதஞ்சலி யோக சூத்திரத்தின் உரைகளில் கூறப்படும் விளக்கத்தை முன் வைத்து பின் என் கருத்தையும் சேர்த்து ‘ஸ்வாத்யாயம்’ என்பதை விளக்குகிறேன்.

“ப்ரணவாதி பவித்ராணாம் ஜபோ மோக்ஷ சாஸ்த்ர அத்யயனம் வா”

என்பது யோக சூத்ர பாஷ்யத்தின் வரிகள். இதற்கு ஓம்காரம் போன்ற பவித்ரமான மந்திரங்கள் ஜபிப்பதும், வீடுபேற்றை பற்றி விளக்கும் நூல்களைப் படிப்பதும், பகவத் கீதை – உபநிஷத்துகள் போன்ற மோக்ஷ நூல்களை தினமும் அத்யயனம் செய்வதும் ஸ்வாத்யாயம் ஆகும் என்று விரிவாகப் பொருள் கூறலாம்

இங்கே இரண்டு விஷயங்கள் கூறப்பட்டிருப்பதை நாம் காண முடிகிறது.

முதலாவது, ஓம்காரம் முதலான பவித்ரமான மந்திரங்களை ஜபிப்பது என்று கூறப்படும் பழக்கம்.

இவ்விடம் சில பரவலான கருத்துக்களை கவனமாக அலசிப் பார்க்க வேண்டியது அவசியமாகிறது.

யோகம் என்பது சனாதன தருமத்தின் ஒரு இணை பிரியா அங்கம் என்பதையும், வேதத்தை பிரமாணமாகக் கருதும் ஒரு ஆத்திக வாழ்க்கை முறையைக் கடைபிடிப்பது யோகத்திற்கு இன்றியமையாதது என்பதையும் பார்த்தோம். இதன் அடிப்படையில், பவித்ரமான மந்திரங்கள் என்பதற்கு ஸ்ருதியையும், அதன் அடிப்படையில் இயற்றப்பட்ட ஆகம நிகமங்கள் ஆகிய ஸ்மிருதியையும் அவற்றில் மந்திரம் என்று கூறப்படும் மந்திரங்களையும் மட்டுமே பொருளாகக் கொள்ள வேண்டும். தேவாரம், திருவாசகம், விநாயகர் அகவல், திருவருட்பா, திருப்புகழ், திவ்ய பிரபந்தம் போன்ற இறையடியார்களால் இயற்றப்பட்ட பதிகங்களையும் இதன் கீழ் எடுத்துக் கொள்ளலாம். ஜைன மதத்தின் மந்திரங்கள் பலவற்றையும் ஒப்புக் கொள்ளலாம். பௌத்த மதத்தில் ஓம் என்னும் சப்தத்துடன் சேர்ந்த மந்திரங்களை ஒப்புக் கொள்ளலாம். இவை தவிர தாந்த்ரீக மந்திரங்களையும் பவித்ரமான மந்திரங்கள் என்று எடுத்துக் கொள்ளலாம். ஏனெனில் இவை ஆகமங்களையும், நிகமங்களையும் அடிப்படையாகக் கொண்டவை.

தற்காலத்தில், தனி நபர்களை கடவுளாகப் பாவித்து சாமான்ய மனிதர்களால் இயற்றப்படும் சொற்றொடர்களை மந்திரங்கள் என்று கொள்வது சாத்திர ரீதியில் பார்க்கையில் தவறு. சனாதன தர்ம குரு பாரம்பர்யங்களில் வேத வாக்கியமும், ஞானமும் மட்டுமே பிரதானமானவை. எந்த ஒரு தனி நபரும் அதற்குக் கீழ்தான். சத்குரு, சித்தர், அவதாரம் ….. என்று யாராக இருந்தாலும் சரி, அவர்களுக்கு முதன்மை நிலை கிடையாது.

ஸதாசி’வ ஸமாரம்பாம், ச’ங்கராசார்ய மத்யமாம் |
அஸ்மதாசார்ய பர்யந்தாம், வந்தே குரு பரம்பராம் ||

என்பது ஆதி சங்கரர் வழி வந்த குரு பரம்பரையில் எந்த குரு உபதேசத்திற்கு முன்பும் கூறப்படும் குரு வணக்கம். சதாசிவனான இறைவனில் துவங்கி, சங்கராசார்யரான ஆதி சங்கரரை நடுவில் கொண்டு, என் குருவை இறுதியில் கொண்ட குரு பரம்பரையை நான் வணங்குகிறேன் என்பதே இதன் பொருள். இந்த உதாரணம் மூலம் பாரம்பரியமும், ஞானமும் தான் முதலில் முக்கியம். அதன் கீழ்தான் எந்த ஒரு தனி நபரும் கருதப்படுவார் என்பதை புரிந்து கொள்ளலாம்.

japamஎனவே மந்திர ஜபம் என்று வரும்போது சிந்தித்து செயல் பட வேண்டும். வழக்கில் இருக்கும் பிரபலமான குருமார்களை, அவதாரங்களைக் குறிக்கும் சொற்றொடர்களை ஜெபம் செய்து கொண்டிருந்தால் நேரம்தான் வீண். இதுபோல் யாருக்காவது பக்தர்களாக நீங்கள் மாட்டிக் கொண்டிருந்தால், முதலில் அம்மாயையிலிருந்து விடுபட வேண்டும். சில காலம் குழப்பமாக, கஷ்டமாகத்தான் இருக்கும். பரவாயில்லை. சாத்திரத்தின் அடிப்படையில் நிகழும் வேதாந்த வகுப்புகள், சத்சங்கங்கள் ஆகியவற்றுக்குச் செல்லச் செல்ல மனமும் உணர்ச்சிகளும் விரைவில் சீராகிவிடும். கவலை வேண்டாம்.

(குறிப்பு: இது போன்ற குருமார்களின் இயக்கங்கள் பல்வகையிலும் சமுதாயத் தொண்டு புரிகின்றன. அவற்றில் தாராளமாகப் பங்கு கொள்ளலாம், தொண்டு என்ற அளவில்! மந்திர ஜெபத்தை மட்டும் மாற்றி விடுங்கள், போதும்).

இங்கே நான் கூறுவது, தனி நபரை மீட்பர் என்று கூறும் எந்த ஒரு வழிக்கும் பொருந்தும். சனாதன தர்மத்தைப் போற்றும் ரமணர், ராமகிருஷ்ண பரமஹம்சர், சாயிபாபா, அமிர்தானந்தமயி போன்ற பெரும் மகான்களாகக் கருதப்படுபவர்களின் பெயர்களையே சாஸ்திர ரீதியாக மந்திர ஜெபம் என்று ஏற்றுக் கொள்ள முடியாதபோது, கிறிஸ்தவர்களின் எந்த ஒரு வழிபாட்டிற்கும் யோகத்தில் இடம் இல்லை என்பதில் எவ்வித ஐயப்பாடும் இல்லை.

contra-jesus-love-hell”நான் பாவி, என்னை மீட்பதற்காக இயேசு சிலுவையில் மரித்தார். அவர் ஒருவரால் மட்டுமே என்னை மீட்க முடியும். இதை நம்பாவிட்டால் முடிவில்லாத நரகம் கிடைக்கும். இதை நம்பினால், பாவங்கள் நீக்கப்பட்டு முடிவில்லா சுவர்கத்தில் இன்புற்றிருக்கலாம்” என்று ஒவ்வொரு கிறிஸ்தவரும் நம்ப வேண்டும்.

இல்லை எனில் ஒருவர் கிறிஸ்தவராக இருக்க முடியாது. இந்த நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டு பின்னப்பட்டதுதான் கிறித்தவ மதம்.

இவ்வாறு மண்டைக்குள் ஒரு பிதற்றலை வைத்துக்கொண்டு, “நாம் சச்சிதானந்த ஸ்வரூபம், பாவம், புண்யம் எதுவும் ஆன்மாவிற்குக் கிடையாது. பிறப்பிறப்பு ஏதும் உண்மையில் நமக்கில்லை. இறைவனும் நாமும் ஒன்றே. இதை மனத் தூய்மை அடைந்து உணர்ந்தால் போதும். அடைவதற்கோ, இழப்பதற்கோ ஒன்றும் இல்லை” என்னும் ஞானத்தை அடிப்படையாகக் கொண்ட சனாதன் தர்மத்தின் அங்கமான யோகத்தை எவ்வாறு வாழ்வில் கடைபிடிப்பது?

savesஓம் என்னும் பிரணவத்தின் பொருள் இறைவன். அவ்விறைவனைப் பற்றி வேதத்தின் மூலமே நாம் தெரிந்து கொள்ளவேண்டும் என்கிறது பதஞ்சலியின் யோக சூத்திரம். வேதம் கூறுவதோ இங்கிருப்பதெல்லாம் இறை மட்டுமே. படைத்தவனும் படைப்பும் வெவ்வேறல்ல. எல்லாமாய் இருக்கும் இறைவனும் ஓம்காரமும் ஒன்று என்பது பேருண்மை. ஒவ்வொருமுறை ஓம் என்று ஜெபம் செய்யும்போது, இறைவனைப்பற்றி வேதம் கூறும் இவ்வுண்மையை மனதில் உணர்ந்து கூற வேண்டும். இப்படியிருக்க, இறைவன், இறைதூதன், படைப்பு, சாத்தான், சுவர்க்கம், நரகம், நான் பாவி, என்னை என்றோ வாழ்ந்த யாரோ ஒருவர் மட்டும்தான் மீட்க முடியும் என்றெல்லாம் குருட்டு நம்பிக்கைகளைக் கொண்டுள்ள ஒருவருக்கு அவற்றிலிருந்து அறிவை விடுவிக்காதவரை, ஸ்வாத்யாயம் எவ்வாறு சாத்தியம்?

முகம்மதியர்களுக்கும் இதே பிரச்சினைதான். அடிப்படை தத்துவமே சரியில்லாதபோது மற்ற விஷயங்கள் எப்படி இருந்தால் என்ன? எல்லா மதங்களும் ஒரே விஷயத்தைத்தான் கூறுகின்றன என்பதை நியாயப்படுத்த எல்லா மத நூல்களையும் நோண்டி மண்டையைப் பிய்த்துக் கொண்டு, கிறித்தவ மதங்களையும், முகம்மதியக் கொள்கைகளையும் நிலை நிறுத்தும் வேலையைச் செய்வதை விட, அவற்றை அப்படியே விட்டுவிட்டு, எல்லாம் ஒன்றையே சொல்வதால் யோகத்தை முழுமையாக ஏற்றுக்கொண்டு சனாதன தர்மத்தையே பின்பற்றலாமே என்று எண்ணுவது பயன் தரும்.

guruமனதைத் தூய்மைப்படுத்தி, துக்கத்திலிருந்து விடுதலை அடைந்து, பேரின்பமான உங்கள் ஸ்வரூபத்தை நீங்கள் உணர விரும்பினால், யோகத்தை முழு மூச்சுடன் வாழ்க்கை முறையாக மாற்றுவது அவசியம். நீங்கள் கிறித்தவராகவோ, முஸ்லீமாகவோ இருந்தால், முதலில் அந்த மூட நம்பிக்கைகளில் இருந்து முழுவதும் விடுபட வேண்டும். வேண்டுமானால் பகுத்தறிவுவாதியாக இருந்து விஞ்ஞான ரீதியில் யோகத்தை அணுகலாம். அவ்வாறு இருந்தால் கூட பெருமளவு மனத்தூய்மை சாத்தியம். ஆனால் அணுவளவும் அறிவின் தூய்மை என்பது ஒரு உண்மையான கிறித்தவருக்குச் சாத்தியம் இல்லை. இதே பதில்தான் ஒரு முகம்மதியருக்கும்.

பல குருமார்கள் சமுதாய, அரசியல் காரணங்களுக்காக இவ்வுண்மையை சொல்லத் தயங்குவார்கள். ஏன், நானே கூட எந்த ஒரு பொது மேடையிலும் சரி, தொலைக்காட்சி போன்ற சாதனங்கள் மூலமாகவும் சரி இவ்வாறு நேரிடையாகக் கூற மாட்டேன். இது அப்யாசத்தில் விருப்பம் உள்ளவர் படிக்கும் பாடநூல் என்பதால் இங்கு மட்டும் தெள்ளத் தெளிவாகக் கூறவேண்டியுள்ளது. நான் கூறுவதை ஏற்க இயலாவிட்டால் இந்நூலை ஓரமாக வைத்துவிடுங்கள், படிக்கவேண்டும் என்ற எந்த கட்டாயமும் இல்லை. உங்கள் நம்பிக்கைகளிலேயே நிம்மதியாகத் தொடர்ந்து இருக்கலாம். ஏதோ உடல் நலன், வேலை பளுவால் வரும் மன அழுத்தம் மற்றும் உடல் சோர்வை போக்க என்னும் அளவில் சில ஆசனங்கள், மூச்சுப் பயிற்சிகள் செய்து திருப்தி பட்டுக் கொள்ளலாம்.

எனவே எது சரியான மந்திரம் ஆகாது என்று தெரிந்து கொண்ட கையோடு, சரியான மந்திரங்களைப் பற்றிய சில சூக்ஷ்மமான விவரங்களையும் தெரிந்து கொள்வோம்.

(தொடரும்)

10 Replies to “யோக விளக்கம்: “ஸ்வாத்யாயம்” – 1”

  1. திரு. எஸ். ராமன் அவர்களுக்கு நன்றி,

    திரு. யோகேஷ்வர் கார்த்திக் அவர்களின் நூலிலிருந்து மேலும் முக்கிய
    பாகங்களை அவர் அனுமதி அளித்தால் இங்கு வெளியிடவும்.
    மேலும் அவரின் “கிரியா யோகம்” என்னும் புத்தகம் எங்கு கிடைக்கும்
    என்பதையும் தெரியபடுத்துங்கள்.

    இன்றைய நிலையில் மிக முக்கியமாக இந்துக்கள் தெரிந்து கொள்ள
    வேண்டிய அடிப்படையை தைரியமாக முன்வைத்துள்ளார். இன்னும்
    உலகில் உண்மையை வெளிப்படுத்த மனிதர்கள் உள்ளார்கள் என்பதை
    கண்டு மகிழ்ச்சி.

    அவர் கிறிஸ்தவ, இஸ்லாம் மத நம்பிக்கைகள் ஒருவருக்கு உள்ளவரை
    யோகத்தில் ஈடுபட முடியாது என்று கூறியிருப்பது ஆயிரம் பொன் பெறும்.
    ஆனால் இங்கு நாம் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம்- யோகாவை
    பிற மதத்தவர்களுக்கு எடுத்து சென்று, அவர்களிடம் உண்மையை
    கூறாமல் (பொய் கூறி) பணம் சம்பாதித்து கொண்டிருப்பது நம்
    ஆட்கள்தான்.

    இந்த கட்டுரையில் எனக்கு மிகவும் பிடித்தது, அவரின் தைரியமான
    பழமை விளக்கங்கள். நம் முன்னோர்கள் கூறியதை அஷரம் பிசகாமல்
    கூறிவிட்டு, இன்றுள்ள நிலையில் இப்படி மாற்றி புரிந்து கொள்ள
    வேண்டும் என்று அவர் கூறும் இந்த முறை பிறராலும் கிரகிக்க
    பட வேண்டும். படிப்பவர்களுக்கு முதலில் நம் நூல்களின் அடிப்படைகள்
    புரிந்த பிறகு கொஞ்சம் எளிமையான விளக்கத்தை தருவது காலத்தின்
    தேவைதான்.

    ஆதி சங்கரர் போன்ற மகான்கள் கூறாததை கூறியதாக சொல்வது, கூறியதை கூறவில்லை என்று பொய் சொல்வது, திரித்து கூறுவது, கைதட்டலுக்காக அவைதிக விளக்கங்களை கூறுவது, வெள்ளைகாரனிடம் டொனேஷன் வாங்க தத்துவங்களை பிதற்றி கூறுவது போன்ற பல
    தீஞ்செயல்கள் இன்று உலகில் நடந்து கொண்டிருக்கின்றன. தன்னுடைய
    கருத்தாக ஒருவர் ஒரு தத்துவத்தை முன்வைப்பதற்கும் மற்றவர்களின்
    கருத்தை திரித்து கூறுவதற்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள
    வித்தியாசம் உள்ளது.

    இப்படிப்பட்ட உலகிலும் தைரியமாக முன்னோர்களின் பாரம்பரியத்தை
    முன்னிலைபடுத்தி எழுதியதற்கு பாராட்டுகள்.

    மேலும் பல கட்டுரைகளை எதிர்பார்க்கிறேன்.

  2. நான் கேட்டவரை “கிரியா யோகம்” பிரதிகள் சென்னையில் “Giri Traders” கடையில் கிடைத்துக் கொண்டிருந்தன. வேறு இடத்தில் இருப்பவர்கள் கீழ்கண்ட செல் போனில் தொடர்பு கொண்டு அறியவும்: 9943277955, 9486498452. நல்லவற்றைச் சொல்வதற்கு நால்வர் இருப்பதற்கு நாம் கொடுத்து வைத்தவர்கள்தான்.

  3. இந்தக் கட்டுரை மிகவும் பயனுள்ளது என்பதில் எந்த ஐயமும் இல்லை எனினும் சில விஷயங்களைச் சுட்டிக்காட்டியாகவேண்டும்.

    முதலாவது, சனாதன தர்மத்தைப்பொருத்தவரை, கர்மயோகம் (கடமைகளைப் பொதுநன்மைக்கெனவே ஆற்ற்தலும் அவற்றின் பலன்களில் பற்றற்ற மனப்பான்மையும்), ஞானயோகம் (தத்துவங்களைத் தர்கரீதியாக அலசுகையும், தத்துவங்களை நன்கு சிந்தனையிலாழ்ந்து தெளிகையும்), பக்தியோகம் (உலகக்காரணியை அன்புடன் துதிக்கையும் அதனையே புகலிடமாகக் கொள்கையும்) என மூன்று யோகங்களைக் கேட்டிருக்கிறோம். இவைகளைப் பற்றி நன்கு புரிதுகொள்ளவே நமக்குச் சிரமமாக உள்ளது. இவ்வாறிருக்கையில் கிரியாயோகம் என்னும் ஒரு பெயரை சாஸ்த்ரங்கள் அழைக்காத ஒரு பெயரைக்கூறி குழம்புதல் அவசியமா?

    இரண்டாவது, சனாதன தர்மம் ஒரு குருவைப் பற்றினாலின்றி ஆன்மிகம் கிட்டுவது துர்லபம் என்பதை வலியுறுத்தி குருவை கடவுளுக்கு இணையாகப் போற்றுகிறது. இதனைப் பின்பற்றியே மதுரகவியாழ்வார் ( குரு நம்மாழ்வார்) , பத்மபாதர் (குரு ஆதி சங்கரர்) ஆகிய பெரியோர்கள் தமது குருநாம ஜபத்தாலும் குருபக்தியாலும் ஏற்றம் பெற்றனர். எனவே “பெரும் மகான்களாகக் கருதப்படுபவர்களின் பெயர்களையே சாஸ்திர ரீதியாக மந்திர ஜெபம் என்று ஏற்றுக் கொள்ள முடியாதபோது” எனக்கூறுவது சரியன்று. சாஸ்திரம் இதனை ஏற்றுக்கொள்வதால். எனவே கட்டுரை ஆசிரியரின் இக்கருத்து மறுபரிசீலைக்கு உரியது.

    மூன்றாவதாக, சனாதன தர்மம் ஒரு மதமன்று. இதனை மதமென்று கூறியவர்கள் நாமல்ல, வெளிநாட்டினரே. எனவே சனாதன தர்மம் சார்ந்த யோகமும் மதத்திற்கு அப்பார்ப்பட்டதாகவே இருக்கவியலும் என்பது கண்கூடு. எனவே யோகத்தில் நம்பிக்கை உள்ள எவருமே யோகத்தைப் பின்பற்றலாம். .

  4. திரு ராமன் அவர்களே

    ஸ்வாத்யாயம் என்பது ஒரு வினைச் சொல்லாகவே இருக்கிறது. தங்களது கட்டுரையில் அது ஒரு பெயர்ச் சொல் போல தெரிகிறது. (உ ம வேதங்களின் பகுதிகள் ) . ஸ்வ + அத்யாயம் = ஸ்வாத்யாயம் அதாவது சுய கல்வி (ஆராய்ச்சி).

    கீதையிலும் பகவான் ஸ்வாத்யாயம் வாக்கால் செய்யும் தவம் ஆகும் என்று கூறுகிறார். (17-15)

    சாத்திரங்கள் மட்டுமே ஸ்வாத்தியாயத்திற்கு ஏற்றவை என்பது என் கருத்து. தேவாரம் , பிரபந்தம், புராணங்கள் போன்றவை தோத்திரங்கள். இவை கடவுள் ரூபம் மற்றும் நாமம் இவற்றை அடிப்படையாகக் கொண்டவை. வேதம் சத்தியம் மற்றும் ரிதம் ஆகியவற்றை அடபியாடையாகக் கொண்டது. ஆகையால் தான் வேதத்தில் சைவ வைணவ பேதம் இல்லை.

    திருமந்திரம் ஒரு சாத்திரம். ஆனால் இது கூட வேத , ஆகம மற்றும் யோக சாத்திரங்களைத் தமிழில் விளக்கித் தான் கூறுகிறது.

    பச்சை சாத்திரங்கள் வேத, உபநிஷத, மற்றும் தரிசன நூல்களாகவே படுகிறது. ஆகமங்கள் வேதக் கருத்துகளையும் , வேதாந்தக் கருத்துகளையும் , புராணக் கருத்துகளையும் ஏற்று தொகுத்து உரைப்பதால் இதில் அத்தியாயம் (ஆராய்ச்சி ) குறைவே .

    எங்கு சென்றாலும் ரங்கனைச் சேவி என்பது போல எப்படிச் சுற்றி வந்தாலும் வேத, வேதாந்தங்களே சாத்திரங்கள் என்று ஆகிறது. அப்போது ஸ்வாத்தியாயம் அவைகளுக்கே தானே பொருந்தும் ?

    அன்பர்களின் சிந்தனைக்கு மேற்கூறிய வாக்கியங்கள்.

    நெடியோன் குமரன்

  5. திரு.நெடியோன் குமரனுக்கு,
    நீங்கள் கூறியதைத்தான் கட்டுரையாளர் கூறியிருக்கிறார்.

    ஸ்வாத்யாயம் என்பதற்கு யோக சூதர பாஷ்யத்தின்படி 2 செயல்களை
    குறிப்பிட்டுள்ளார்.
    “ப்ரணவாதி பவித்ராணாம் ஜபோ மோக்ஷ சாஸ்த்ர அத்யயனம் வா”
    ஒன்று, மந்திரங்களை ஜபித்தல்,
    இரண்டு, மோஷ சாஸ்த்ரங்களை கற்றறிதல்.

    இதில் மந்திரங்களை பற்றி ப்ரணவாதி என்று குறிப்பிடப்பட்டுள்ளதால்
    “பிரணவம் முதலிய” என்ற அர்த்தம் வருகிறது. இதில்தான் தேவாரம்
    முதலிய தோத்திரங்களை ஜபிக்கலாம் என்கிறார் ஆசிரியர்.

    இரண்டாவதாக கூறப்படும் மோஷ சாஸ்த்ர அறிவை அடைய கீதை,
    உபநிஷத் முதலியவற்றை அறிய வேண்டும் என்று மட்டுமே கூறியுள்ளார்.
    இதில் தேவாரம் முதலிய தோத்திரங்களை சேர்க்க வில்லை.

    ஆகவே நீங்கள் கூறும் அடிப்படையில்தான் ஸ்வாத்யாயம் செய்யப்பட
    வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

  6. நேற்று பி.பி.சி தமிழ் ஓசையில் (28/08/2010), யோகாவிற்கு சில அமேரிக்க
    நிறுவனங்கள் காப்புரிமை பெற முயற்சிப்பதைப் பற்றிய செய்தியை
    ஒலிபரப்பினார்கள்.

    நல்ல வேளையாக இந்திய அரசு இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சான்றுகளை,
    அகில உலக காப்புரிமை வழங்கும் சங்கத்திற்கு அனுப்பியுள்ளது.

    ஒரு நிறுவனம் யோகாவிற்கும்கூட காப்புரிமை கேட்குமா? இதற்கு
    காரணம் மிகவும் சுலபமானது. அமேரிக்காவில் மட்டும் வருடத்திற்கு
    600 கோடி டாலர்களுக்கான சந்தையாக யோகா மாறி விட்டிருக்கிறது.

    இவர்கள் சில ஆசனங்களின் முறைகளை மாற்றி காப்புரிமை
    கோருகிறார்கள். இந்திய அரசு தற்காலத்தில் இதற்கு எதிர்ப்பும்
    தெரிவித்துள்ளது. ஆனால் இது மட்டும் போதாது. யோகாவிற்கு எந்த
    காப்புரிமையையும் கொடுத்தாலும் இந்தியா அதை ஏற்று கொள்ளாது,
    யோகா (விருப்பம் உள்ள) அனைவருக்கும் பொதுவானது, இந்தியாவில்
    எவரும் காப்புரிமைக்கு ராயல்டி கொடுக்க மாட்டார்கள் என்று அழுத்தம்
    திருத்தமாக இப்பொழுதே கூறிவிட வேண்டும்.

    அமேரிக்காவின் ஒரு யோகா சங்கத்தின் தலைவர் கீழ்வருமாறு
    விளக்குகிறார்.
    (1)யோகாவிற்கு காப்புரிமை கொடுப்பதை பற்றின கவலைகள்
    இந்தியாவிற்கு இருப்பதை போன்றே எங்களுக்கும் உள்ளது. மனித
    குலத்திற்கு முழுவதும் உயர்ந்த மனநிலையில் அளிக்கப்பட்ட இந்த
    முறைக்கு காப்புரிமை கொடுப்பது தவறு (என்றாலும்)

    (2)யோகாவை இப்படித்தான் செய்ய வேண்டும் என்று வரையறை
    செய்வதும் இதே போன்ற கட்டுபாடுகளை விதித்து விடும் என்பதால்
    நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

    எப்படி இருக்கிறது இது?
    பணம் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு இயங்கும் இந்த
    கேடுகெட்ட வர்த்தக நிறுவனங்கள் யோகாவை மாற்றி உபயோகம்
    செய்வதற்கு தகுதி உடையவர்களா?

    காலத்திற்கு ஏற்றார்போல் யோகாவை மாற்றுகிறேன். ஆனால் அதுவும்
    எல்லோருக்கும் பொதுவானது என்று எவரேனும் கூறினால் அதை
    நாம் எதிர்க்க வேண்டியதில்லை. என்னைப் போன்றவர்கள் அவர்களை
    உதாசீனம் செய்து விடுவோம்.

    இது காப்புரிமை பிரச்சினை மட்டும் அல்ல. யோகா வர்த்தகமும் அல்ல.
    இதை வர்த்தகமாக மாற்றியவர்கள் இங்கிருந்து மேற்குலகத்திற்கு எடுத்துச்சென்ற நம்மவர்கள்தான். அவர்கள் வெட்கப்பட வேண்டும். எல்லோருக்கும் முன்பாக மன்னிப்பு கேட்க வேண்டும்.

  7. ஸ்வாத்யாயம் பற்றிய கட்டுரையா அல்லது மதஎதிர்ப்பு கட்டுரையா?

    மற்ற குப்பைகள் இல்லாமல் ஸநாதன தர்மத்தை விரிவாக விளக்கும் கட்டுரைகளை வெளியிடுதல் படிப்பவருக்கு மிகுந்த பயனளிக்கும.

    நன்றி

  8. Pingback: Indli.com
  9. யோகேஷ்வர் கார்த்திக் அவர்களின் ஸ்வாத்யாயம் கட்டுரையின் இருபகுதிகளையும் படித்தேன் மிகத்தெளிவாக தமது கருத்துக்களை அவர் வழங்கியிருக்கிறார். அவரது யோகம் தொடர்பான ஜெயா டிவி நிகழ்ச்சி மிக்க நன்றாக உள்ளது. அவரது கட்டுரைகளை நமது தமிழ் ஹிந்துவில் தொடர்ந்து வெளியிட வேண்டுகிறேன்.
    முதல் பகுதி ஹிந்துக்கள் அல்லாதோருக்கு யோகம் பயன்படாது என்பதை தெளிவு படுத்துகிறது. இதில் அடியேனுக்கு உடன் பாடு இல்லை. யோகம் ஹிந்து பாரம்பரியத்தில் வந்த தரிசனம் என்றாலும் அது ஒரு அறிவியல். அனைவருக்கும் உரியது. யோகத்தை நமக்குள் மட்டும் வைத்திருந்தால் இன்று அதன் பெருமை நமக்கே தெரிந்திருக்காது. இன்று யோகத்தால் தான் ஹிந்துப்பன்பாட்டின் பெருமை உலகிற்கு தெரிகிறது. யோகம் அனைவருக்கும் வழங்கப்படுவதன் மூலம் உலகில் ஹிந்து பண்பாட்டின் தலயாய கொள்கையான ‘ஏகம் சத் விப்ராபஹூதா வதந்தி’ பரவும். செமிடிக் கருத்தான ஒரே கடவுள் ஒரே வழி என்ற கொள்கையின் உக்கிரம் வக்கிரம் குறையும். யோகம் செய்வதால் நிச்சயம் அத்தகு குருட்டு நம்பிக்கை மாறும் ஏனெனில் யோகம் குருட்டு நம்பிக்கையல்ல தனிமனிதரின் தொடர்ந்த ஈடுபாட்டுடன் கூடிய சாதனை வழியாகவும் ஆன்மீக அனுபூதிதியை இலக்காகவும் கொண்டுள்ளது.sh

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *