அயோத்தி ராமஜென்ம பூமி என்று அழைக்கப்படும் இடத்தில் மத்திய தொல்லியல் துறை அகழாய்வு மேற்கொண்டு, தன் அறிக்கையை நீதிமன்றத்துக்குச் சமர்ப்பித்துள்ளது. இவ்வறிக்கை ராமஜென்ம பூமியைப் பற்றி மட்டுமல்ல, இந்திய வரலாற்றுக்கே சிறந்த செய்திகளை அளித்துள்ளது.
இங்கு பூமியை அகழ்வதற்கு முன்பாக நவீன ரேடர் கருவிகளைக் கொண்டு பூமிக்கடியில் ஏதாவது கட்டடங்கள் புதைந்து கிடக்கின்றனவா என்று ஆய்ந்து பார்த்துள்ளனர். இந்த ஆய்வில் சில தூண்களின் பகுதிகளும், கட்டடப் பகுதிகளும் கண்டுபிடிக்கப்பட்டன. ரேடார் கருவியினால் காணப்பட்டவை உண்மையானவை தானா என்றும் மேலும் ஏதாவது உள்ளதா எனவும் பார்க்கத்தான் அகழாய்வு இங்கு மேற்கொள்ளப்பட்டது. அதன் அறிக்கைதான் இப்பொழுது சமர்ப்பிக்கப் பட்டுள்ளது. இவ்வறிக்கையின் சுருக்கம் வருமாறு.
மூவாயிரம் ஆண்டுகள்
பாபர் மசூதிப் பகுதியில் மிகவும் ஆழமான பகுதியில் எவ்வளவு காலம் மக்கள் வாழ்ந்து இருக்கின்றனர் என அறிய இயற்கையான பகுதி உள்ள வரையில் ஆழ்ந்து பார்த்துள்ளனர். அதன்படி இங்கு 3,000 ஆண்டுகளாக மனிதன் தொடர்ந்து வாழ்ந்துள்ளான் எனக் குறிக்கும் தடயங்கள் கிடைத்துள்ளன.
‘கார்பன் 12’ எனப்படும் விஞ்ஞான முறையில், கிடைத்த பொருட்களின் காலம் கணக்கிடப் பட்டுள்ளது. அக்கால மனிதன் பயன்படுத்திய பானை ஓடுகள், சுடுமண் பாவைகள், மணிகள் முதலியன கிடைத்துள்ளன. சுடுமண் பாவைகளில் தாய் முலை தழுவிய சேய்களின் உருவங்கள் உள்ளன.
இவற்றில் முக்கியமாக குறிப்பிடத்தகுந்தது ஒரு மோதிரமாகும். இதில் அசோகன் காலத்து பிராம்மி எழுத்து பொறிக்கப் பட்டுள்ளது. இங்கு கிடைத்த பொருட்களைக் கொண்டு மக்கள் சுமார் மூவாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்திருக்கின்றனர் என்னும் உண்மை கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
இதையடுத்து சுங்கர் என்னும் அரச வமிசத்தவர்கள் ஆண்ட காலத் தடயங்கள் கிடைத்துள்ளன. அக்காலத்தில் வழங்கிய சுடுமண் பாவைகள், விலங்குகளின் உருவங்கள், பானை ஓடுகள் முதலியன கிடைத்துள்ளன. சுமார் இருநூறு ஆண்டுகள் சுங்கர் காலச் சான்றுகள் கிடைக்கின்றன.
சுங்கர் காலத்துக்குப்பின் இங்கு குஷானர் காலப் பொருள்கள் கிடைத்துள்ளன. 300 ஆண்டுகள் இப்பண்பாடு நிலவிய சான்றுகள் இங்கு உள்ளன. அதாவது கிறிஸ்தவ சகாப்தம் தொடங்கி, முதல் மூன்று நூற்றாண்டுகள் இங்கு இந்தப் பண்பாடு நிலவியது. இதை மூன்றாவது காலகட்டம் என்று கூறலாம்.
இதில் பெரிய செங்கற்களைக் கொண்டு கட்டப்பட்ட சுவரின் அடிப்பகுதி ஒன்றும் கிடைத்துள்ளது. ஏழு அடுக்குகள் வரை இச்சுவரின் செங்கல் வரிசை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது ஒரு பெரிய கட்டடப் பகுதியாகும்.
குப்தர் காலம்
இதையடுத்து குப்தர் காலச் சின்னங்கள் இங்கு தொடர்ந்து கிடைக்கின்றன. இவை சுமார் 300 ஆண்டுகள் அதாவது கி.பி. 5 ஆம் நூற்றாண்டு வரை வழங்கிய பொருட்கள் ஆகும். இங்கு கிடைத்தவற்றில் சந்திரகுப்த அரசன் வெளியிட்ட செப்புக்காசு ஒன்று உள்ளது. இதில் ‘ஸ்ரீ சந்திர’ என்ற எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
குப்தர்களுக்குப் பின் ஆண்ட ராஜபுத்திரர்கள் காலம் வரை அடுத்த கட்டம் எனலாம். சுமார் 400 ஆண்டுகள் வரை நிலவிய, அதாவது கி.பி. 600 முதல் கி.பி. 1000 வரையில் மக்கள் வாழ்ந்த பகுதிகளும் கிடைத்துள்ளன.
இக்காலத்தைச் சார்ந்த வட்ட வடிவமான ஒரு கட்டடம் இங்கு கிடைத்துள்ளது. இது ஒரு கோயிலின் வடிவமாகவே காணப்படுகிறது என்பதில் சந்தேகம் இல்லை. செங்கற்களால் கட்டப்பட்ட சுவரில் வடபுறத்தில் அபிஷேக நீர் வழிந்தோட கோயில்களில் அமைக்கப் படும் பிரனாளம் என்னும் பகுதியும் தெளிவாக அடையாளம் காணப் பட்டுள்ளது.
இது ஒரு மாபெரும் கட்டடமாக மண்டபம் போல் காணப்படுகிறது. இரு அங்கணமாக எழுப்பப்பட்டுள்ளது. முன்பிருந்த கட்டடத்தின் மேலேயே இந்தக் கட்டடமும் எழுப்பப்பட்டுள்ளது. இக்கட்டடம் வெகு காலம் பயன்பாட்டில் இருந்துள்ளது. இது 150 அடி நீளமும் 100 அடி அகலமுமாக கட்டப்பட்டுள்ளது.
இப்பெரும் கட்டடத்தின் மேல் தான் பிற்காலத்தில் பாபர் மசூதி எழுப்பப் பட்டிருக்கிறது. பாபர் மசூதியின் நேர் கீழே தான் தெற்கு வடக்காகவும், கிழக்கு மேற்காகவும் இப்பெரும் கட்டடச் சுவர்கள் காணப்படுகின்றன. இம்மண்டபப் பகுதியில் சீராக அமைக்கப்பட்ட ஐம்பது தூண்களின் அடிப்பகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இவை செங்கல் தூண்களைப் பாவி திமிசு அடித்தும் அதன் மேல் மணற்கற்களை அடுக்கியும் அமைக்கப்பட்டுள்ளன. இத்தூண்கள் எந்த அமைப்பில் இக்கட்டடம் இருந்தது என்பதை தெளிவாகக் காட்டுகின்றன. இக்கட்டடச் சுவர்களின் பகுதிகள் 150 அடி நீளத்திற்கு இன்னமும் எஞ்சியுள்ளன.
இக்கட்டடத்தின் நேர்மையத்தின் மேல்தான் பாபர் மசூதியை எழுப்பியுள்ளனர். இதன் கிழக்கில் செங்கல் பாவிய தரையில் வட்ட வடிவில் குடையப்பட்டுள்ளது. இங்கு ஏதோ முக்கியமான பொருள் பொருத்தி வைத்திருந்தனர் என ஊகிக்கமுடிகிறது. இங்கு பல மண் விளக்குகளும் கிடைத்துள்ளன. இவ்விளக்குகள் இக்கட்டடம் புழக்கத்தில் இருந்த காலத்தில் ஏற்றி வைக்கப்பட்டுள்ளன. இதன் மேல்தான் பாபர் மசூதியைக் கட்டியுள்ளார்.
பாபர் மசூதி கட்டிய காலத்தில் இருந்து செலிடான் என்ற வகை பீங்கான் பானை ஓடுகளும், மேல் புறத்தே பீங்கான் போன்ற வழவழப்பான மண்பாண்டங்களும் கிடைத்துள்ளன. இந்த நிலையில் மனித உடல்களைப் புதைத்ததால் எஞ்சியிருக்கும் மனித எலும்புகளும் கிடைக்கின்றன.
பாபர் மசூதி கட்டியபிறகு இங்கு ஜனநடமாட்டம் குறைந்து போன தடயங்கள் உள்ளன. இந்த அகழாய்வில் பல நிலைகளிலும் கிடைத்த கரித்துண்டுகளைக் கொண்டு கார்பன் 14 என்னும் விஞ்ஞான முறையில் காலத்தைக் கணித்துள்ளனர். மூவாயிரம் ஆண்டுகளுக்கும் முன்பிருந்து, அதாவது கிறிஸ்தவ சகாப்தத்திற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கும் முன்பிருந்தே அயோத்தியில் மக்கள் பரவலாக வாழ்ந்துள்ளனர் என்பது இதனால் நிரூபணமாகிறது.
பிற்கால கரித்துண்டுகள் அங்கு தொடர்ந்து வரலாற்றுக் காலங்களில் மக்கள் வாழ்ந்துள்ளனர் என்பதை திட்டவட்டமாகக் காட்டியுள்ளன. தொடக்க காலத்தைச் சேர்ந்த கட்டடங்கள் எதற்காக பயன்பட்டன எனக்கூற இயலாது.
பத்தாம் நூற்றாண்டில்
ஆனால் பத்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்டு தொடர்ந்து பாபர் மசூதி கட்டப்படும் வரை புழக்கத்தில் இருந்த பகுதி பொதுமக்களின் பரவலான பயன்பாட்டுக்கான கட்டிடம் என்பது தெளிவாகிறது. வட இந்திய கோயில்களின் அமைப்புடைய பகுதியும் இதில் அடங்கும். இப்பெரும் கட்டடப் பகுதியில் காணப்படும் ஐம்பதுக்கும் மேற்பட்ட தூண்களின் அடிப்பகுதிகளும், வாயில் நிலைகளும், சிற்பங்களும், அதில் காணப்படும் அபிஷேக நீர் வழியும் பிரனாளமும், மண்விளக்குகளும் கோயில் வழிபாட்டை நினைவு கூர்கின்றன. இவை பாபர் மசூதியின் நேர் கீழே காணப்படுகின்றன. இக்கட்டத்தின் மேல் தான் பாபர் மசூதி கட்டப்பட்டுள்ளது என்பதும் வெளிப்படை. இதுதான் மத்திய தொல்லியல் துறை அளித்துள்ள அறிக்கையாகும்.
இந்த அகழாய்வு முற்றிலும் உயர்நீதிமன்ற அதிகாரியின் நேர்முகப் பார்வையில் நடைபெற்ற ஒன்றாகும். மேலும் இருதரப்பு பிரதிநிதிகளும் அகழாய்வின்போது உடன் இருந்துள்ளனர். இங்கு கிடைத்த பொருள்களைப் பற்றியோ, அன்றி பாபர் மசூதியின் கீழே கட்டடம் இருந்துள்ளது என்பதைப் பற்றியோ இனி ஐயம் எதுவும் இருக்க முடியாது.
டாக்டர் ஆர்.நாகசாமி (1930-) இந்தியாவின் தலைசிறந்த அகழ்வாராய்ச்சி நிபுணர்களில் ஒருவர். தமிழகத் தொல்லியல் துறையின் முன்னாள் இயக்குனர். தஞ்சை, கங்கைகொண்ட சோழபுரம், கரூர், கொற்கை போன்ற இடங்களில் விரிவான அகழ்வாராய்ச்சிகள் நடத்தியவர். தமிழகத்தின் முக்கியமான அருங்காட்சியகங்களை உருவாக்கி, வடிவமைத்தவர். பிரபல லண்டன் நடராஜர் சிலை வழக்கில் இந்திய அரசு சார்பாக வாதாடி பத்தூர் நடராஜர் திருவுருவத்தை மீட்டு வந்தவர். வரலாறு, கல்வெட்டு ஆராய்ச்சி, கலை, இலக்கியம், சமயம், கோயில் ஆகமங்கள் ஆகிய பல துறைகளிலும் புலமை கொண்டவர். இவற்றின் அணுகுமுறைகளை இணைத்து ஆய்வுகள் செய்தவர்.
நன்றி : விஜயபாரதம் (10-9-2010) இதழ்

அயோத்தித் தீர்ப்பும் அகன்ற கறையும்
அயோத்தி இயக்கம்: ஒரு வரலாற்றுத் திருப்புமுனை
அகமதாபாதில் ஒரு நாள்
தஞ்சைப் பெரிய கோயில்: ஆயிரம் ஆண்டு அற்புதம்
ஸ்ரீ பத்மநாபனின் பொற்களஞ்சியம் யாருக்கு சொந்தம்?
மையொற்றி மகானுபாவர்களின் மயக்கப் புலம்பல்
இலங்கை இந்துப் பண்பாட்டு வரலாறு: ஓர் அறிமுகம்
ஆலயச் சிற்பங்களைச் சிதைக்கும் அறநிலையத்துறை
இந்து எதிரிகளான எமகிங்கரர்கள்
போரின் பிடியிலிருந்து மீளப்புதுப்பிக்கப்பெறும் வட இலங்கையின் இருபெரும் ஆலயங்கள்
அயோத்தித் தீர்ப்பும் அபத்த ஊடகங்களும் – 2
ஈரோட்டில் ஒன்றுபட்ட இந்து மக்கள் சக்தி: ஒரு விரிவான அலசல்
தமிழர்களின் கடல் கடந்த சோகம்: ஓர் ஆராய்ச்சி
மறவர் மண்ணில் மதமாற்றம் செய்த பாதிரியார்
இந்துக் கோயிலை சொந்தம் கொண்டாடும் அன்னியமத சக்திகள்: இரு நிகழ்வுகள்
கடிதமாக முடிந்து போன ஒரு கடைசிக் கதறல்-04
கடிதமாக முடிந்து போன ஒரு கடைசிக் கதறல்-03
கடிதமாக முடிந்து போன ஒரு கடைசிக் கதறல்-02
கடிதமாக முடிந்து போன ஒரு கடைசிக் கதறல்-01
ஸ்ரீரங்கம்: காலவெளியில் ஒரு பயணம் -2
ஸ்ரீரங்கம்: காலவெளியில் ஒரு பயணம் -1
இந்து வாக்கு வங்கி – ஒரு வேண்டுகோள்![தோள்சீலைக் கலகம்: தெரிந்த பொய்கள் தெரியாத உண்மைகள் [நூல் அறிமுகம்]](http://www.tamilhindu.com/wp-content/uploads/tholseelai-kalagam-cover.jpg)
தோள்சீலைக் கலகம்: தெரிந்த பொய்கள் தெரியாத உண்மைகள் [நூல் அறிமுகம்]
சான்றோர் சமுதாய வரலாறு: ஒரு நூல் அறிமுகம்
தமிழ்நாட்டுப் பாடநூல்களில் “வரலாறு காணாத” தப்புக்கள்






விரிவான – அருமையான – பாமரரும் புரிந்து கொள்ளும் வகையில் இந்தக் கருத்துப் பெட்டகத்தைத் தந்து இருக்கிறார் ஆசிரியர். மிக்க நன்றி.
இவ்வளவு தூரம் ஆதாரம் இருக்கும் போது, நீதி மன்றங்கள் மாற்றி தீர்ப்பு சொல்ல முடியாது. மக்களின் மனதில் ஸ்ரீ ராம ஜன்ம பூமி குறித்து விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியது பா.ஜ.க. காலப்போக்கில் அப்போதிருந்த தலைவர்கள் ஒவ்வொருவராக ரிடையர் ஆகிவிட்டார்களோ என்னவோ.. இப்போது பா.ஜ.க. ஒரு சடங்காகத்தான் இப்பிரச்சனையை கையாளுவதாகத் தோன்றுகிறது. நீதிமன்ற தீர்ப்பு வந்த பின் எப்படி போகும் என்று பார்க்க வேண்டும்.
பாபரின் முகலாயப் படைத் தளபதி மீர் பாகி என்பான் தலைமையில் தான் ராமனின் ஆலயம் இடிக்கப் பட்டது
‘சீதா கி ரசொயி ‘-அதாவது சீதையின் சமையல் அறை என்று காலம் காலமாக வழங்கப்பட்ட இடமும் அதற்குள் அடக்கம்.
நமக்கு சமீபத்திய நிகழ்வான மசூதி என்று சொல்லப் பட்ட கட்டடம் இடிக்கப் பட்டது மட்டுமே தெரியும்
ஆனால் ராமனின் ஆலயம் இடிக்கப் பட்டதிலிருந்து தொடர்ந்து ஹிந்துக்கள் அதை மீட்டெடுக்கப் போராடியுள்ளனர் என்பது தெரியாது.
பல்வேறு கால கட்டங்களில் நடந்த அந்தப் போராட்டங்களில் ஆயிரக் கணக்கான ஹிந்துக்கள் கொல்லப் பட்டுள்ளனர்.
பாபர் கட்டிடம் இஸ்லாமிய ஆக்கிரமிப்பைப் பறைசாற்றக் கட்டப்பட்ட்து. அங்கு எப்பொழுதுமே தொழுகை நடந்ததுகிடையாது. 1950லிருந்து 1992 வரை 42 ஆண்டுகள் பொறுமை காத்த ஹிந்துக்கள் அரசியல்வாதிகளாலும் நீதிமன்றங்களாலும் தங்களுக்கு நீதி கிடைக்காது என்று அறிந்து கொண்டு, தங்கள் பல்லாயிரம் ஆண்டுகால வரலாற்றின் புகழை மீட்க இடையில் வந்த அடிமைச்சின்னத்தை அழித்தனர். அம்மீட்பு நிகழ்ச்சியில் ஒரு உயிர் இழப்பு கூட இல்லை என்பது குறிப்பிடத் தக்கது.
பாபர் கட்டிடத்தைக் கட்டிய பாபரே அது ராமர் கோவிலை அழித்துக் கட்டப்பட்டது தான் என்று குறித்திருக்கிறார். ஔரங்கசீப்பின் பேத்தியும் அதை ஆவணப்படுத்தியிருக்கிறார்.
பரபங்கி மாவட்ட காஸட்டியரில் (H.R. Neville in the Barabanki District Gazetteer, Lucknow, 1905, pp 168-169) ஹெச்.ஆர்.நெவில் என்னும் ஆங்கிலேயர் ”ஜன்மஸ்தான் கோவில் பாபரால் அழிக்கப்பட்டு அங்கு மசூதி கட்டப்பட்டது” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் ஃபைசாபாத் மாவட்ட காஸட்டியரில் (Fyzabad District Gazetteer, Lucknow, 1905, pp 172-177) 1528-ஆம் ஆண்டு பாபர் அயோத்தியா வந்து ஒரு வாரம் தங்கியிருந்து கோவிலை அழித்து மசூதியைக் கட்டினார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது அகழ்வாராய்ச்சி ஆவணங்கள் ராமர் கோவில் இருந்த்தற்கான ஆதாரங்களைப் பரிபூரணமாக நிரூபித்து விட்டன.
இதற்குப் பிறகும் நீதிமன்றம் ஹிந்துக்கள் பக்கம் நியாயமாகத் தீர்ப்பு சொல்லாமல் போலி மதச்சார்பின்மை பேசி இழுத்து அடித்தால், அது கோழைத்தனம் மட்டுமல்ல அயோக்கியத்தனமும் கூட.
பகிர்வுக்கு நன்றி. போராட்டத்தின் பின் உள்ள நியாயம் புரிய இது உதவும்.
ஆனாலும் ஏற்கனவே புதைக்கப் பட்ட, இடிக்கப்பட்ட இடத்துக்கு இது வரை நாம் கொடுத்த விலை மிக அதிகம். இந்த வரலாறோ அதன் பின்னணியோ அதன் முக்கியத்துமோ தெரியாத புதிய தலைமுறையை மறுபடியும் இதே காரணுதுக்க்காக இழக்க முடியுமா?
நீதி மன்ற தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அதை இரு தரப்பும் உணர்ச்சிபூர்வமாக அணுகி மேற்கொண்டு எந்த நஷ்டமும் ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும் . இரு தரப்பும் ஒருவருக்கு ஒருவர் இணக்கமாக போய் ஒரு நல்ல முடிவுக்கு வருவதே சிறந்தது.
ஆசிரியர் குழுவிற்கு,
கட்டுரையின் தலைப்பை வாசித்தவுடன், நான் ஒரு முடிவிற்கு வந்து
விட்டேன். சேது சமுத்திர திட்டத்தைப்பற்றின வழக்கில் மத்திய தொல்துறை
உச்ச நீதிமன்றத்தில் வழக்கிற்கு அவசியமே இல்லாமல் “இராமர் ஒரு
காவியப்பாத்திரம், இராமர் உயிருடன் வாழ்ந்ததாக ஆதாரமே இல்லை”
என்றெல்லாம் கூறியது எனக்கு நினைவுக்கு வந்தது.
இந்த கட்டுரையிலும், இந்த அரசாங்கத்திற்கு ஆமாம் சாமி போடும்
வல்லுனர்கள் (!!!), அயோத்தியாவில் சர்ச்சைக்குரிய பகுதியில் கோயில்
மட்டுமல்ல, எந்த கட்டமைப்பும் இருக்க வில்லை என்று அறிவித்திருக்கும்.
அதை சுடச்சுட தமிழ் ஹிந்து வெளியிடுகிறது என்றே நான் அனுமானித்தேன்.
ஆனால், அதிசயம், இன்னும் சிலர் உண்மையை தைரியமாக கூற
இந்தியாவில் இருப்பது ஆச்சரியமானது.
எல்லா தரப்புக்கும் பொது நபர்கள் இந்த குழுவில் இருந்ததால் இந்த
மட்டிற்கு நம் தலை (தன்மானம்) தப்பியது.
ஆனால், இது தற்காலிகமானது. உச்ச நீதிமன்றத்தில் ஹிந்துக்களுக்கு
சாதகமாக தீர்ப்பு வரும் என்று எனக்கு நம்பிக்கையில்லை. அவர்களும்
காங்கிரஸ் அரசியல்வாதிகளால் (மறைமுகமாக) நியமிக்க படுவதாலும்,
மதச்சார்பற்ற நிலையை நிலைப்படுத்தவும், தீர்ப்பு எதையும் கொடுக்காமல்
Escape ஆகி விடுவார்கள் என்று நம்புகிறேன்.
தப்பிததவறி ஹிந்துக்களுக்கு சாதகமான தீர்ப்பு வந்து விட்டால் அது
இராமபிரானின் அருளால்தான் இருக்கும்.
தற்பொழுதுதான் ஒரு முக்கிய செய்தி வந்துள்ளது. அயோத்தியா
விவகாரத்திற்கான தீர்ப்பு செப்டம்பர் 24ம் தேதி வழங்கப்படும் என்று
லக்னோ உயர்நீதி மன்றம் அறிவித்துள்ளது.
(1)3 உயர்நீதிமன்ற நீதிபதிகளின் பெஞ்ச் இந்த தீர்ப்பை வழங்க இருக்கிறது.
நீதிபதிகளின் பெயர்களை கவனித்தேன். ஒருவர் இஸ்லாமிய பெயரை
கொண்டவராகவும், இருவர் இந்து பெயர்களை கொண்டவர்களாகவும்
உள்ளனர்.
(2)இதற்கு நடுவே இவ்வழக்கில் ஆஜராகிய வக்கீல் இந்த தீர்ப்பு தள்ளிப்
போடப்பட வேண்டும் என்று கோருகிறார். நாட்டில் சமய சண்டைகள்
ஏற்பட்டு விடும் என்று அதற்கு சப்பைக்கட்டும் கட்டுகிறார்.
இவர்கள் பேசுவதை பார்த்தாலே தெரிகிறது. நியாயம் ஹிந்துக்களின்
பக்கம் இருக்கிறது. அதை தடுக்க முயல ஒரு எட்டப்பனின் கூட்டம்
முயல்கிறது.
செப்டம்பர் 24ல் தீர்ப்பு வருமா என்பது சந்தேகமே!
மேலும் பிறகு உச்சநீதிமன்றத்திலும் அப்பீல் செய்யப்படும். ஆகவே
இவ்வழக்கு கூடிய விரைவில் முடிய வாய்ப்பில்லை.
http://timesofindia.indiatimes.com/india/Babri-Masjid-demolition-HC-refuses-to-defer-verdict/articleshow/6570859.cms
Babri Masjid demolition: HC refuses to defer verdict
PTI, Sep 17, 2010, 03.32pm IST
Babri Masjid demolition
Ayodhya waits for the verdict on the Bbari Masjid demolition case
NEW DELHI: The Allahabad High Court has rejected plea for deferring the judgement in the Ramjanambhoomi-Babrimasjid title suit. A three-judge special bench of the court rejected the application of one Ramesh Chandra Tripathi, a defendant, for reaching an amicable settlement through reconciliation and deferment of the judgement slated for September 24.
Meanwhile, with the date of the Ram Janmabhoomi- Babri Masjid judgement drawing near, religious leaders and scholars of both the communities have appealed for peace and communal harmony.
Leading Muslim religious leaders, including Shia cleric Maulana Kalbe Jawwad, naib imam of Idgah and member of the All India Muslim Personal Law Board, Maulana Khalid Rasheed Firangimahli besides Islamic seminary Darul Uloom Deoband have asked Muslims to respect the verdict of the court and maintain communal harmony .
“Peace is of prime importance and we have made the Muslims aware of it at every level in discourses and appeals that communal harmony should be maintained, so as to check vested interests from taking advantage of the situation,” Firangimahli told PTI.
Kalbe Jawwad asked community members to be weary of political leaders who would try to take advantage of the situation to serve their ulterior motives.
Darul Uloom Deoband had yesterday appealed to the people to respect the verdict of the court and maintain peace and communal harmony in the country .
The main pujari of the Ram Janmbhoomi temple in Ayodhya, Acharya Satyendra Das Mahraj and Mahant of Janki Ghat in Ayodhya, Janmey Sharan have also asked the community to remain calm and accept the verdict of the court.
Satyendra Das, appointed main pujari by the court, had also taken part in the roza iftar function recently to strengthen communal amity.
“In case the verdict is against the aspirations of any individual or party in the case, he is free to approach the Supreme Court,”, Firangimahli said, adding there should not be any reaction to it in society or on streets.
ஆசிரியர் குழுவிற்கு,
CNN-Larry King Liveல் – US Supreme Court Judge-Stephen Breyer
என்பவரின் பேட்டியை கண்டேன்.கடினமான வழக்குகளில் நீதிபதிகளின் தீர்ப்பைப்பற்றி அவர் கீழ்வருமாறு விளக்கினார்.
ஜனநாயகத்தையும், சுதந்திரத்தையும் கட்டிக்காக்க சில நேரங்களில்
மக்களிடம் பிரபலமாகாத (Non-Popular) தீர்ப்புகளை தர வேண்டியிருக்கும்.
இதை அதிபர் (இந்தியாவில் பிரதமர்) முடிவெடுப்பது நடக்காது. ஏனெனில்
தன் ஆட்சிக்கு பாதிப்படையாமல்தான் அவர் முடிவு எடுப்பார்.
சட்டமியற்றும் சபைகள் (நாடாளுமன்றம்) போன்றவை எடுக்காது.
ஏனெனில் மக்களின் ஆதரவை பெறாத சட்டங்களையோ, திருத்தங்களையோ எடுக்க அவர்களால் முடியாது.
இது போன்ற இக்கட்டான நேரங்களில் நீதிமன்றம்தான் கடின தீர்ப்புகளை
தர வேண்டியிருக்கும். நீதிபதிகளுக்கு பணபலமோ, ஆயுத பலமோ அல்லது
அதிகார பலமோ இருக்காது. ஆனால் மக்களின் விருப்பு வெறுப்புகளை
கருத்தில் கொள்ளாமல் அரசியல் சட்டத்தின் மாட்சிமையை நிலைநிறுத்த
நீதிபதிகளால் மட்டுமே முடியும்.
அயோத்தியா வழக்கில், அகழ்வாராய்ச்சியின் சான்றுகள் முகத்தில்
அறைவது போன்று கொடுக்க பட்டுள்ளன.
சர்ச்சைக்குரிய பகுதியில் மசூதி கட்டப்படுவதற்கு முன்னால் கோயில்
இருந்தது என்று தைரியமாக நீதிமன்ற பெஞ்ச் தீர்ப்பளிக்க வேண்டும்.
இந்து-முஸ்லீம் சண்டைகள் வரும் என்று ஜோசியம் கூறும் எட்டப்பன்களின்
ஹேஷ்யங்களுக்கு செவி சாய்க்காமல் லக்னோ உயர்நீதிமன்ற பெஞ்ச்
தீர்ப்பளிக்க வேண்டும்.
60 வருடமாக ஏன் பல நூற்றாண்டுகளாக அக்கிரமங்களை சகித்து
வந்துள்ளோம். இன்னும் ஒரு வாரத்தில் விடிவு வருமா?
தமிழ்ஹிந்து » அயோத்தி அகழ்வாராய்ச்சி முடிவுகள்: டாக்டர் ஆர்.நாகசாமி…
பத்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்டு தொடர்ந்து பாபர் மசூதி கட்டப்படும் வரை புழக்கத்தில் இருந்த…
திரு R. பாலாஜி அவர்களின் மறுமொழியில் உள்ள அனுமானம்:
நீதிமன்றங்கள் மட்டுமே ஜனரஞ்சகமில்லாத ஆனால் நியாய, தர்ம, ஜனநாயக நெறிகளைக் காக்கவல்ல தீர்ப்புகளைத் தரமுடியும் என்பது சரியே.
சமீபத்தில் பாகிஸ்தானில் உச்சநீதிமன்றத்தில் நடந்த நிகழ்வுகள், வழக்கறிஞர்களின் போராட்டம், தலைமை நீதிபதி மாற்றம், பதவி நீக்கம், மறுபதவிஏற்கத் தீர்ப்பு இவைஎல்லாம் இவ்வகைத்தே.
பாரதத்திலும் கூட இந்திராகாந்தியின் தேர்தல் வழக்கில் இதே அலஹாபாத் உயர்நீதிமன்றம்தான் இந்திரா தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என்ற சரித்திரத்தைப் புரட்டிப் போட்ட தீர்ப்பைத் தந்தது. இவ் வழக்கில் வாதி ராஜநாரயணன் தரப்பில் சாட்சி சொன்ன சத்யப்ரகாஷ் மாளவியாவின் கட்டுரையை இங்கே படியுங்கள். நீதிபதி சின்ஹா எந்த அளவுக்கு நேர்மையைக் கடைப்பிடித்தார், உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு தருவதாகச் சொன்னதை ஏற்காமல் மிகக் கடினமான தீர்ப்பை வழங்கினார் என்பதை மாளவியா விளக்குகிறார்.
http://www.dailypioneer.com/265384/Judgement-that-shook-Indira.html
இதனால்தான் நாட்டில் முதன் முறையாக அவசர நிலைப் பிரகடனம், அடக்குமுறை உள்ளிட்ட நிகழ்வுகள் அரங்கேறின.
மிகவும் வியக்கத்தக்க வகையில் முன்னாள் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியனரும், எல்லாராலும் பெரிதும் மதிக்கப்படுபவருமான உச்சநீதிமன்ற நீதிபதி கிருஷ்ண ஐயர் பன்னிரெண்டே நாட்களில் அலஹாபாத் தீர்ப்பை நிறுத்திவைத்துத் தீர்ப்புத் தந்ததுடன், ஐந்தே மாதத்தில் தீர்ப்பை மாற்றி இந்திரா தேர்தலைச் செல்லும் என்றும் அறிவித்தார். எப்பேர்ப் பட்ட நியாயவான் ஆகிய கிருஷ்ண ஐயர் கூட அவசர நிலையின் கடுமையில் இப்படித் தீர்ப்பு எழுதிவிட்டாரே என்றே அனைவரும் வியந்தனர்.
ஆக, ஒரு கடுமையான அரசும் அரசுத்தலைமையும் “தீர்ப்பைப் பாதிக்கும் விதம் நடக்க முடியும்” என்பதும், “தீர்ப்பைப் பாதிக்கும் விதம் நடக்க முடியாது” என்பதும் இந்த ஒரே வழக்கில் நிகழ்ந்த வரலாறு!
ஆனால் தீர்ப்பின் தாக்கம் எப்படி இருக்கும் என்பதை மத்திய அரசு உணர்ந்தே உள்ளதாகத் தெரிகிறது. இந்த வழக்கில் தீர்ப்பின் தாக்கம் நமது தேசத்தையும் தாண்டிச் செல்லக் கூடும் என்பது கண்கூடு. அப்படியிருக்க, உயர் நீதிமன்றமும் உச்ச நீதிமன்றமும் கூட தீர்ப்பின் போக்கை முன் கூட்டியே மத்திய மாநில அரசுகளுக்குத் தெரிவித்து விடுவார்கள் என்பதும் நிச்சயம். நாட்டின் அமைதி, நிர்வாகக் காரணங்கள் இவற்றில் அடங்கும். இவற்றைக் கருத்தில் கொண்டு பார்க்கையில் நமது உள்துறை அமைச்சரின் சமீபத்திய காவிக் கருத்துக்கும், இதே வழக்கில் ஏழாவது வாதியின் பேச்சுவார்த்தை மனுவுக்கும் தொடர்பு இருப்பதுபோலத் தோன்றுகிறது. உள்துறை அமைச்சரின் பேச்சே இந்தத் தீர்ப்புக்கான முன்னோடி அல்லது தீர்ப்புடன் தொடர்புடையது போலவுமே தோன்றுகிறது.
மத்திய அரசு மானில அரசுகளுக்கு ஏற்கனவே வாய்மொழியாகத் தயார் நிலையில் இருக்கும்படியாக அறிவுறுத்தியுள்ளதையும் இங்கே நோக்கவேண்டும்.
திரு. ந. உமாசங்கர் அவர்களே!
நானும் எமர்ஜென்ஸி காலத்திய நீதிபதிகளின் பல்டியை நினைவு படுத்தி
கொண்டேன்.
சுதந்திர இந்தியாவில் நீதிமன்றங்களின் பங்கு அப்படி ஒன்றும் பெருமை
படுவதாக இல்லை. ஜனரஞ்சகமில்லாத முடிவுகளை பெரும்பாலான
நேரங்களில் நீதிமன்றங்கள் எடுத்ததில்லை.
உதாரணமாக இடஒதுக்கீட்டை நோக்கலாம்.
(1)டாக்டர் அம்பேத்கர் தலைமையில் உருவாக்கப்பட்ட அரசியல் அமைப்பு
சட்டத்தில் வெறும் 10 வருடங்களுக்கே இடஒதுக்கீடு கொடுக்கப்பட
வேண்டும் என்ற ஷரத்து இருக்கிறது. பல வழக்குகளில் இந்த ஷரத்தின்
இன்றைய தேவையைப்பற்றி நீதிமன்றங்கள் மௌனம்தான் சாதித்துள்ளன.
(2)இடஒதுக்கீட்டின் அளவு 50 சதவிகிதத்திற்கு மேல் இருக்கக்கூடாது
என்ற உச்சநீதிமன்றத்தின் பழைய வழக்கின் தீர்ப்பு இருந்தாலும்
தமிழகத்தில் 69 சதவிகித இடஒதுக்கீட்டைப்பற்றி நீதிமன்றங்கள்
“நமக்கேன் வம்பு” என்றே விட்டேத்தியாக இருந்துள்ளன.
(3)உயர்கல்வி நிலையங்களில் இடஒதுக்கீடு அளிக்கப்பட்டபோது
நீதிமன்றங்கள் பொருளாதார நிலையில் மேம்பட்ட மாணவர்களுக்கு
இடஒதுக்கீடு வழங்கக்கூடாது என்ற நிலையை எடுத்தது.
பொருளாதார நிலையை அளக்க வருட வருமானம் என்ற அளவுகோலை
ஏற்கச்செய்தது. கடைசியில் இது ஒரு நகைச்சுவையாக மாறினது
நமக்கு தெரியும். வருட வருமானம் 4,00,000 ரூபாய்க்கு கீழே உள்ள
குடும்பங்களிலிருந்து வரும் மாணவர்கள் இடஒதுக்கீட்டை பெறலாம்
என்று மத்திய அரசு கூறிய வாதத்தை ஏனென்று கேட்காமல்
ஒப்புக்கொண்டது நகைச்சுவையின் உச்சம். (இந்த அளவுகோல் தமிழ்நாடு
அரசிடமிருந்து புகுத்தப்பட்டது என்பது ஊரறிந்த விஷயம்).
கிட்டத்தட்ட 35000 ரூபாய் மாத வருமானம் உள்ள குடும்பங்களுக்கு
இடஒதுக்கீடு வழங்க வகை செய்த இந்த தீர்ப்பு இந்திய நீதித்துறை
வரலாற்றில் ஒரு களங்கமாகவே இருக்கும்.
இப்படிப்பட்ட வரலாறு கொண்ட இந்திய நீதித்துறை அயோத்தியா
வழக்கில் தீர்ப்பை வழங்க இருக்கிறது. ஏதோ ஒரிருவர் உண்மையான
நீதிபதிகளாக இன்றும் இருப்பர். செப்டம்பர் 24ம் தேதி தெரிந்துவிடும்.
hinduis need unity this is urgent
We need to really watch out for the jerks like Burkha Dutt, Prannoy Roy, Rajdeep Sardesais who will flare up communal sentiments and acts like proxies for islamic fundamentalists on this day. Sep 24th is the duck waiting to lay golden egg for them. To increase the TRP ratings these notorious white collar criminals may go to any extent.
“தி ஹிந்து” என்ற பெயருடன் ஹிந்துக்களின் தன்மானத்தைத தரணி எங்கும், தயாநிதி மாறனின் உறவுடன் விற்றுத் திரியும் மஞ்சள் பத்திரிகை ஒன்றே போதும்,”பாபர் மசூதியின் கீழே கட்டடம் இருந்திருக்க முடியாது” என்று கொக்கரிப்பதற்கு.
நீதி மன்றத் தீர்ப்பு 24 september அன்றோ வேறு என்றோ வரும்போது. எப்படி இருந்தாலும், “தி ஹிந்து” பத்திரிகையை வாங்குவதில்லை என்று ஹிந்துக்கள் அனைவரும் முடிவெடுத்தலே , ஹிந்து மதத்திற்கு நாம் செய்யும் தொண்டாகும்.
டாக்டர் நாகசாமி ஒரு வரலாற்று நிபுணர். அவர் அங்கே கோவில் இருந்திருக்க வேண்டும், அதன் மேல்தான் மசூதி கட்டப்பட்டிருக்கிறது என்று சொன்னால் அப்படித்தான் இருக்க வேண்டும். அவரது integrity சந்தேகத்துக்கு அப்பாற்பட்டது.
இந்த முடிவுகளில் உண்மையான முக்கியத்துவம் முஸ்லிம் அமைப்புகள் மேல் இப்போது ஒரு தார்மீக ரீதியில் அழுத்தம் ஏற்படும் என்பதே என்று எனக்கு தோன்றுகிறது. பல முஸ்லிம் அமைப்புகளும் இந்த மசூதி ஒரு கோவிலின் மேல் கட்டப்பட்டது என்று ஒத்துக்கொள்ள தயாராக இல்லை. அப்படி கட்டப்படவில்லை என்பதை ஒரு தர்ம, நியாய ரீதியான அடிப்படையாக அவர்கள் பயன்படுத்தினர். இனி மேல் அது முடியாது என்பதுதான் இந்த ஆராய்ச்சியின் முக்கியத்துவம் என்றே நான் கருதுகிறேன்.
ஆனால் இந்த முடிவின் சட்ட ரீதியான significance என்ன? நான் வக்கீல் இல்லைதான், ஆனால் இந்த உண்மைக்கு சட்ட ரீதியாக எந்தவிதமான significance-உம் இல்லை என்றுதான் எனக்கு தோன்றுகிறது.
ஐநூறு ஆண்டுகளுக்கு முன் ஒரு அரசு, ஒரு ராஜா அந்த அரசின் சட்ட, நியாய, தர்மப்படி ஒரு கோவிலை இடித்து அங்கே ஒரு மசூதியைக் கட்டினான். அதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன என்று “ஹிந்துத்துவவாதிகள்” பல ஆண்டுகளாக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இப்போது அகழ்வாராய்ச்சியும் அவர்கள் தரப்பை மேலும் வலுவாக்குகிறது. அது அந்த அரசு eminent domain என்ற கோட்பாட்டை அதன் சட்ட நியாயங்களுக்கு உட்பட்டு கடைப்பிடித்ததால் உருவான ஒரு நிலை. அதற்கு பல நூறு ஆண்டுகளுக்கு பின்னால் இந்தியாவை விட்டு வெளியே போன கோஹினூர் வைரத்தை இனி மேல் ஆங்கிலேய அரசியிடமிருந்து திருப்பி வாங்கமுடியுமா? Statute of Limitations என்று ஒன்று இல்லையா? அந்த “அநீதியை” இன்றைய அரசு சரி செய்ய வேண்டும் என்று வாதிட்டால் சொத்து என்று ஒரு கோட்பாடு உருவாவதற்கு முன்னால் எல்லாம் எல்லாருக்கும் சொந்தம்; இப்போது இருக்கும் சொத்துரிமை அநீதி என்று எல்லாரும் அவர்கள் அவர்கள் பாங்க் கணக்கில் உள்ள பணத்தை அரசிடம் கொடுத்துவிடுவீர்களா? (நான் நிச்சயமாக மாட்டேன்.)
தமிழ் ஹிந்து தளத்தில் சட்ட ரீதியாக இதைப் பற்றி யாராவது நிபுணர்கள் (சுப்ரமணிய சாமி மாதிரி யாரையாவது பிடிக்க முடியுமா?) எழுதினால் என் போன்ற layman-களுக்கு உதவியாக இருக்கும்.
For the record, கோவில் மேல் மசூதி கட்டப்பட்டிருந்தாலும் கட்டப்படாவிட்டாலும் மசூதி இடிக்கப்பட்டது நியாய, தர்ம, சட்ட ரீதியாக பெரும் அநீதி, குற்றம் என்பது என் உறுதியான கருத்து.
பாபர் ஒரு இஸ்லாமிய படையெடுப்பாளன்.அவனுக்கு தர்மம் என்ற வார்த்தையே தெரியாது.
சட்டம் ,தர்மப்படி கோயிலை இடிப்பார்களா?
இது ஹாஸ்யத்தின் உச்ச கட்டம்!
ஒரு பெரும்பான்மையான மக்களின் நம்பிக்கையை விட பெரிய உயர்ந்த சட்டம் எதுவும் கிடையாது
இது எல்லா நாட்டினருக்கும் பொருந்தும்
அயோத்தி என்றாலே குழந்தைக்குக் கூட ஞாபகம் வருவது ராமன்
அதுவும் ஹிந்துக்கள் கலாச்சாரம் இல்லாத காட்டுமிராண்டிகள் இல்லை
லட்சக் கணக்கான மகான்கள் ,யோகிகள்,ரிஷிகள், முனிபுங்கவர்கள்,சித்தர்கள்,சாதுக்கள் பெரியோர்கள் இவர்கள் ராமன், ராமாயணம் , அயோத்தி கோசல நாடு ,சரயு நதி இவற்றைப் பற்றி எழுதி,பேசி,பாடி,கொண்டாடி நாட்டையும் மக்களையும் நல் வழிப் படுத்த தம் வாழ்வை அர்ப்பணித்துள்ளனர்.
ஒன்றா ,இரண்டா கணக்கில் அடங்காத புராணங்கள்,கதைகள், பாடல்கள் இவை எல்லா பாரத மொழிகளிலும் ராமன் மற்றும் ராமாயணம் பற்றி உள்ளன.
நாட்டுப் புறப் பாடல்களும், செவி வழிச் செய்திகளும் ஆயிரம் ஆயிரம்
காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரை பிறக்கும் லட்சக் கணக்கான குழந்தைகள் அன்று தொட்டு இன்று வரை ராமனின் பெயர் தாங்குகின்றனர்
அவன் பதாம் பட்ட இடங்கள் இன்றும் அவன் பெயரை சொல்கின்றன. மக்களால் பேசப் படுகின்றன
நாம் மெக்காவிலோ, பெத்லஹெமிலோ ராமனின் ஆலயம் கேட்கவில்லை
எல்லா விஷயத்திலும் சட்டப் படியே நடக்க முடியாது
அதிலும் நம் நாட்டில் சட்டம் என்பது வேண்டாத ஹிந்துக்களை தண்டிக்கவே
ஷா பனோ வழக்கில் விவாக ரத்து ஆன முஸ்லிம் பெண்களுக்கு ஜீவனாம்சம் கொடுக்க வேண்டும் என்ற தீர்ப்பை முஸ்லிம் அடிப்படைவாதிகள் எதிர்த்த போது ராஜீவ் அரசு சட்டத்தையே மாற்றியது .
காஷ்மீர் நம் நாட்டின் ஒரு மாநிலமாக இருந்தாலும் அதற்கு தனி அந்தஸ்து கொடுக்கப் பட்டுள்ளது
அங்கு வேறு மாநிலத்தை சேர்ந்தவர்கள் சொத்து வாங்க முடியாது.நிரந்தரமாக் தங்க முடியாது
முஸ்லிம்கள் கிறிஸ்தவர்கள் ஒரு கல்வி நிலையம் ஆரம்பிக்க வேண்டுமென்றால் சிவப்புக் கம்பளம் விரிக்கப் படுகிறது
ஆனால் ஹிந்துக்களுக்கோ ஏராளமான தடைகள்
ஹிந்துக்களின் கோயில்கள் அரசு, ஹிந்து விரோத மற்றும் அரசியல் கட்சிகளின் பிடியில் உள்ளன
அவற்றின் சொத்துக்கள கொள்ளை அடிக்கப் படுகின்றன
ஆனால் மற்றவர்கள் தங்கள் சொத்துக்கள் மற்றும் மசூதி,சர்ச்களை அவர்களே நிர்வகிக் கின்றனர் .
இன்னும் ஆயிரம் சொல்லலாம்
இதற்கெல்லாம் சட்டம் என்ன செய்தது ?
திரு RV அவர்களே
1 ) இப்போது மட்டுமல்ல, 1940 வரையிலும் கூட இந்த இடத்திலிருந்த மசூதி ‘ஜன்மஸ்தான மசூதி’ என்றே வழங்கப்பட்டு வந்திருக்கிறது என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன. (Sayyid Shahabuddin Abdur Rahman, Babri Masjid, 3rd print, Azamgarh: Darul Musannifin Shibli Academy, 1987, pp. 29-30.) http://en.wikipedia.org/wiki/Ayodhya_debate#cite_ref-Sayyid_Shahabuddin_Abdur_Rahman_1987.2C_pp._29-30_0-௦0
எனவே இந்த அகழ்வாராய்ச்சியின் முடிவுகள் நீதிமன்ற வழக்கில் ஒரு முக்கிய ஆதாரமே ஆகும். இது ஆதாரமாகாது என்றால் இந்த அகழ்வாராய்ச்சியை ஏன் அரசு அனுமத்திருக்க வேண்டும்? இது போக, இந்த இடத்தில் ஒரு கோவில் இருந்தது என்பது அகழ்வாராய்ச்சியின் மூலம் நிரூபிக்கப்பட்டு விட்டால், தொல்பொருள் பாதுகாப்புச் சட்டம் பிரயோகப்படுத்தப் பட வேண்டும், இந்த இடத்தில் தொடர்ந்து ஆராய்ச்சிகள் நடத்தி முழு அளவிலான உண்மைகள் வெளிவரவேண்டும் என்பதுதானே முறையான அடுத்த நடவடிக்கை? (immediate next logical step, aimed at the logical conclusion)
2) சரி, அப்படி தொல்பொருள் பாதுகாப்பு சட்டம் அமல் படுத்தப்பட்டால் அதன் தொடர் நடவடிக்கைகள் நிகழவேண்டும் என்பதுதானே அடுத்த நடவடிக்கை? அதற்கும் பின்னர், தற்போது அங்கே வழிபாடு நடைபெறுவதால் அவ்வழிபாடு பாதுகாக்கப் படவேண்டும் என்பதுதானே அடுத்த நடவடிக்கை?
3 ) On the question of limitation: தொடர்ந்து வழக்குகளும், கேட்பும் மறு கேட்பும் (claims and counter claims) இருந்து வரும்போது எந்த நாளில் limitation துவங்குகிறது? துவக்கமே இல்லாதபோது ஏது limitation? பனிரெண்டு ஆண்டுகள் தொடர்ந்து claim இல்லாவிட்டால்தானே லிமிடேஷன் வர முடியும்? இங்கேதான் தொடர் நிகழ்வுகள் உள்ளனவே? மாற்று அரசனின் காலம் முடிந்த பின்னர்தான் இதற்கு லிமிடேஷன் துவங்க வேண்டும் என்றால் அதற்கு என்ன பதில் இருக்க முடியும்? இந்த அயோத்திப் பிரச்சினை ஒரு முடிவில்லாமல் பிரிட்டிஷ் ஆட்சி காலத்திலும் மட்டுமன்றி இன்று வரை தொடர்ந்திருக்கும்போது எங்கே வரும் லிமிடேஷன்? The Limitation Acts were passed in 1903 and 1963.
4 ) இது போக சுற்றி உள்ள நிலத்தை எல்லாம் ராம பக்தர்கள் வாங்கி விட்டபோது அவர்களின் சொத்துரிமைக்கு உண்டா limitation?
5 ) ராம பக்தர்களின் சொத்துக்களை கையகப்படுத்த அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்த நீதிமன்றத் தீர்ப்பின் மீது இந்த அகழ்வாராய்ச்சிகளின் தாக்கம் என்ன? இந்த அகழ்வாராய்ச்சி முடிவைக் கவனத்தில் கொள்ளாமல் எடுக்கப் படும் கையகப் படுத்தும் அரசின் நடவடிக்கை எப்படிச் செல்லும்? I draw your attention to the purpose as stated in the acquisition proceedings. If the purpose were to be disturbed or negated by the recent archeological findings, the acqusition should be declared as illegal and the ownership restored to the rightful owners prior to the acquisiton. They have all along stated that their intention is to build a Ram Mandir in their own lands and that cannot be prevented once the archelogical findings establish the presense of Janmasthan Mandir. The Government might enforce the protection of Monuments laws and prevent any construction within 300 metres of the monument. That perhaps will go to the next stage in the fight for Ram Mandir. What happened in Vellore Jalagandeswarar Temple in the 1983-84 will happen on a large scale so as to continue the worship of Lord Rama in the Janmasthan.
6) Even in the British days the Mosque was referred to as Janmasthan Mosque, but the independent India refers to it as Babri Mosque. What an irony?
திரு RV அவர்களே
///For the record, கோவில் மேல் மசூதி கட்டப்பட்டிருந்தாலும் கட்டப்படாவிட்டாலும் மசூதி இடிக்கப்பட்டது நியாய, தர்ம, சட்ட ரீதியாக பெரும் அநீதி, குற்றம் என்பது என் உறுதியான கருத்து.///
ஒரு கருத்தைக் கொள்வதும் அதில் உறுதியாக இருப்பதும் உங்கள் தனி உரிமை.
நியாய தர்மப் படி, இந்த இடத்தில் கோவில் இருப்பது அகல்வாராய்ச்சியினால் உறுதிப் பட்ட பின்னர், அந்த இடம் ஜன்மஸ்தான் என்பதை 1940 வரை அங்கே வழிபட்ட இஸ்லாமியர் உள்பட அனைவரும் ஒப்புக்கொண்ட பட்சத்தில், இந்த இடத்தில் ராம ஜன்மச்தானக் கோவில் திரும்பவும் கட்டுவதில் எந்தத் தவறும் இல்லை என்பதே உண்மை. நியாயமும் தர்மமும் இதைத்தான் சொல்லும். வேறு வழியில்லை. விட்டுக் கொடு என்பது வேறு. செய்வது தவறு என்பது வேறு. செய்வது தவறில்லை என்பதே நியாய, தர்மம். இதில் கோடிக்கணக்கான இந்தியர்கள் (மாற்று மதத்தினர் உள்பட) உறுதியாகவே இருக்கிறார்கள் என்பதும் உண்மை.
சட்டப்படியான விளக்கத்தை நான் ஏற்கனவே கூறிவிட்டேன்.
இடித்தது குற்றம்தான் என்றாலும், கும்பலான நடவடிக்கைகள் என்றுமே சட்டத்தின் அடிப்படையில் மட்டும் அமைவதில்லை. உணர்வுகளின் அடிப்படையிலேயே அமைகின்றன. அதிலும் கூட சொத்துரிமையை நிலை நாட்ட உரிமையாளர்கள் எடுக்கும் நடவடிக்கைகள் எல்லா நேரங்களிலும் அமைதியான நடவடிக்கைகளாக அமைவதில்லை, அத்துமீறல்கள் உண்டுதான். அவற்றை நீதிமன்றம் நிச்சயமாக நடவடிக்கை மூலம் நேர் செய்யும்.
எனது மேற்கூறிய கருத்துக்களை ஒட்டிய கருத்துக்கள் அடங்கிய இந்த yahoo கட்டுரையைப் பாருங்கள்:
http://in.news.yahoo.com/48/20100921/1241/top-pick-wisely-among-ayodhya-s-choices.html
Whatever the judicial pronouncement on the issue of “adverse possession”, if the archaeological and historical evidence are found to be weighed in favour of the Hindu claimants, it would make it extremely difficult to consider shifting the makeshift Ram temple from the “garbha griha” of the erstwhile Babri Masjid.
ஒரு சமுதாயம் அல்லது நாடு பல காலம் அடிமைப்பட்டபின் அதிலிருந்து மீண்டு வரும்போது முன்பு ஆண்டவர்களின் அடிமைச் சின்னங்களை அப்புறப் படுத்துவது என்பது இயற்கையே
இந்தியாவில் மட்டுமே முதல் கவர்னர் ஜெனரலாக மவுன்பட்டேன் நியமிக்கப் பட்டதிலிருந்து,ஆங்கிலேயர்கள் வைத்த சிலைகள்,தெருப்பெயர்கள்,ஊர்ப்பெயர்கள், அவர்களது நினைவுச் சின்னங்கள் இவற்றை அப்படியே வைத்திருக்கிறோம்.
சிலோன், சிறிலங்காவாக மாறியது,பர்மா, மியன்மாராக மாறியது, ரொடீசியா ,ஜிம்பாப்வே ஆக மாறியது .ஆனால் இவ்வளவு புராதனப் பாரம்பரியம் உள்ள இந்திய தன் பெயரைக் கூட ‘பாரதம்’ என்றுமாற்ற வக்கில்லாமல் உள்ளது.
அதே போல் மதுரா ,காசி கோயில்கள் இடித்து கட்டப் பட்ட மசூதிகள் , அப்சல் கானின் கல்லறை,அவுரங்கசீப்பு பேரில் சாலைகள்,ஜின்னாவின் வீடு இன்னும் எத்தனையோ அப்படியே விட்டு வைத்துள்ளோம்.
இது ஹிந்துக்களின் பெருந்தன்மையைக் காட்டுகிறது
ஆனால் இது வெறும் ஒரு வழிப் பாதையாக உள்ளது.
மற்றவர்கள் இதை மதிப்பதில்லை .
மாறாக ஹிந்துக்கள் மேலும் கொடுமையும் இழிவும் படுத்தப் படுகிறார்கள்.
///ஆனால் இவ்வளவு புராதனப் பாரம்பரியம் உள்ள இந்திய தன் பெயரைக் கூட ‘பாரதம்’ என்றுமாற்ற வக்கில்லாமல் உள்ளது. ///
நமது அரசியலமைப்புச் சட்டம் முதல் பிரிவே இப்படிச் சொல்கிறது.
1. Name and territory of the union
(1) India, that is Bharat, shall be a Union of States.
இந்தியா, அதாவது பாரதம் ஒரு மாநிலங்களின் கூட்டமைப்பாக இருக்கும்.
இந்த தேசத்தை நாம்தான் பாரதம் என்று சொல்லிப் பழகவேண்டும். இதனால்தான் நான் பாரதம் பாரதம் என்றே எழுதி வருகிறேன். எனது ‘உலக சகோதரத்துவ தினமாக’ கட்டுரையில் மட்டும் இந்தியா என்ற சொல்லைக் குறிக்கக் காரணம் அது உலகளாவிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவேண்டும் என்றால் அடிப்படைவாதியால் இது எழுதப்பட்டது என்ற எண்ணம் வராமல் பார்த்துக் கொள்ளவேண்டும் என்பதால்தான்.
நாம் அனைவரும் ‘பாரதம்’ என்றே கூற ஆரம்பித்தால் காலப்போக்கில் இப்பெயர் நிலைக்கும். அப்படிக் கூறாதது நமது பிழையே. பாரதம், பாரதீயர் என்றே வழங்க ஆரம்பிக்கவேண்டும். இது நமது பாரம்பரியம் என்ற உணர்வை எழுச்சி பெறச்செய்யவேண்டும்.
1940 வரை ஜன்மஸ்தான் மசூதி என்றே அழைக்கப் பட்ட இடத்தை, பாப்ரி மசூதி என்று அழைக்கத் துவங்கி எந்த அளவுக்குக் கொண்டுவந்துவிட்டார்கள் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.
சப்தர்ஜங் முகமத் முக்கீம் என்பவர் பெர்சியாவில் 1722 ல் பிறந்து பாரதத்டுக்குப் புலம் பெயர்ந்தவர். முகலாய மன்னர் முகமத் ஷாவின் ஆளுகையில் ஔத் பிரதேசத்தின் மன்னரானவர். காஷ்மீரத்தின் கவர்னர் ஆகவும் பதவி வகித்தவர். 1755 இல் மறைந்த இவருக்கு தில்லியில் இருக்கும் கல்லறை பல நூறு ஏக்கரில் பிரம்மாண்டமாக இருக்கிறது.
நசீருத்தீன் முகமத் ஹுமாயூன் பாபரின் மகன். 1508 இல் பிறந்து 1556 இல் இறந்தவர். தற்போதைய ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான், வடஇந்தியா உள்ளடக்கிய தேசத்தின் மன்னர். தில்லியில் இருக்கும் ஹுமாயூனின் கல்லறை பிரம்மாண்டமானது. ஆயிரம் ஏக்கர் இருக்கும்.
ஹுமாயூனின் கல்லறை உலக பாரம்பரியச் சின்ன்னமாகப் (ஐ. நா. ஆதரவுடன்) பாதுகாக்கப்படுப் பராமரிக்கப் படுகிறது.
ஆனால், நமது பாரதத்தின் பாரம்பரியத்துக்கு இந்த மரியாதை இல்லை. ராம ஜன்ம பூமியை இது ஜன்ம பூமி என்று நிரூபிக்கமுடியாமல் திணறுகிறோம். சுதந்திர பாரதத்துக்கு வெட்கக் கேடு.
பாரதத்தின் பாரம்பரியம் அன்னியரின் கல்லறைகள் என்று என்னும் அளவுயக்கு, தூத்துக்குடி ஆஷ் துரையின் கல்லறை முதல், தரங்கம்பாடியின் டேனிஷ் மனிதர்களின் கல்லறை, பாண்டிச்சேரிப் பிரஞ்சுக்காரர்களின் கல்லறை, புலிக்காட்டுப் போர்ச்சுகீசியர்கள் கல்லறை, கோவாவின் போர்ச்சுகீசியர்களின் கல்லறை (சேவியர் கல்லறை உள்பட) என நீண்ட பட்டியலின் சிகரம்தான் ஹுமாயூன் கல்லறை. நமது தேசம் காலனீயக் கல்லறைகளின் தேசம் என்ற நிலை என்றுதான் மாறுமோ?
உமாசங்கர்,
// இப்போது மட்டுமல்ல, 1940 வரையிலும் கூட… // அங்கே கோவில் இருந்தது என்பதில் நாம் இருவரும் வேறுபடவில்லையே?
// இந்த இடத்தில் ஒரு கோவில் இருந்தது என்பது அகழ்வாராய்ச்சியின் மூலம் நிரூபிக்கப்பட்டு விட்டால், தொல்பொருள் பாதுகாப்புச் சட்டம் பிரயோகப்படுத்தப் பட வேண்டும், இந்த இடத்தில் தொடர்ந்து ஆராய்ச்சிகள் நடத்தி முழு அளவிலான உண்மைகள் வெளிவரவேண்டும் என்பதுதானே முறையான அடுத்த நடவடிக்கை? (immediate next logical step, aimed at the logical conclusion) சரி, அப்படி தொல்பொருள் பாதுகாப்பு சட்டம் அமல் படுத்தப்பட்டால் அதன் தொடர் நடவடிக்கைகள் நிகழவேண்டும் என்பதுதானே அடுத்த நடவடிக்கை? அதற்கும் பின்னர், தற்போது அங்கே வழிபாடு நடைபெறுவதால் அவ்வழிபாடு பாதுகாக்கப் படவேண்டும் என்பதுதானே அடுத்த நடவடிக்கை? //
தொல்பொருள் பாதுகாப்பு சட்டம் பற்றி விவரமாக பேசும் அளவுக்கு நான் வல்லுனன் இல்லை. ஆனால் தொல்பொருள் பாதுகாப்பு சட்டம் அமல்படுத்தப்பட்டால் அங்கே ஏன் வழிபாடு பாதுகாக்கப்பட வேண்டும்? மிஞ்சி மிஞ்சிப் போனால் 60 வருஷமாகத்தான் அங்கே வழிபாடு நடக்கிறது? (1947-இல் சட்டத்தை மீறி அங்கே விக்ரகம் வைத்ததாக நினைவு) பாபர் மசூதி கட்டும் முன் வழிபாடு என்று சொல்வீர்களானால் சிந்து சமவெளி நாகரீகத் தளங்கள் (பேர் மறந்து விட்டது, லோதாலா?) கூட தொல்பொருள் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன, அங்கே இடிபட்டுக் கிடக்கும் வழிபாட்டு தளங்களில் எல்லாம் வழிபாடு நடத்த வேண்டும் என்று ஏதாவது விதி இருக்கிறதா என்ன? தொல்பொருள் துறையைப் பொறுத்தவரை ஆள் வராமல் இருந்தால்தான் ஒரு பழங்கால சின்னத்தை காப்பாற்ற முடியும். உதாரணமாக டாக்டர் நாகசாமியின் மனம் கவர்ந்த தஞ்சைப் பெரிய கோவில் ஓவியங்களை ஏன் எல்லாரும் பார்க்கும்படி வைக்கவில்லை?
// தொடர்ந்து வழக்குகளும், கேட்பும் மறு கேட்பும் (claims and counter claims) இருந்து வரும்போது எந்த நாளில் limitation துவங்குகிறது? //
பாபர் இறந்து ஒரு அறுநூறு வருஷம் இருக்குமா? அவர் கட்டிய மசூதியை இடிக்க வேண்டும் என்று மொகலாய அரசில் கேஸ் போட முடியாது. 1800களில் கேஸ் போட்டுவிட்டாயிற்று என்று வைத்துக்கொண்டாலும் முன்னூறு வருஷம் முன்னால் நடந்த “அநீதிக்கு” statue of limitation பொருந்தும் என்றே நினைக்கிறேன்.
// சுற்றி உள்ள நிலத்தை எல்லாம் ராம பக்தர்கள் வாங்கி விட்டபோது அவர்களின் சொத்துரிமைக்கு உண்டா limitation? ராம பக்தர்களின் சொத்துக்களை கையகப்படுத்த அரசு எடுத்த நடவடிக்கைகள்… //
சுற்றி உள்ள நிலம் ஒரு பிரச்சினையா என்று எனக்கு தெரியாது. சட்டப்படி வாங்கி இருந்தால், அரசு eminent domain கோட்பாட்டை செலுத்தாத வரையில் அவர்களுக்கு என்ன பிரச்சினையும் இருக்கக் கூடாது என்றே என் குறைந்த சட்ட அறிவுக்கு படுகிறது. ஆனால் அரசுக்கு eminent domain கோட்பாட்டை அமல்படுத்த எல்லா உரிமையும் உண்டு.
// இடித்தது குற்றம்தான் என்றாலும், கும்பலான நடவடிக்கைகள் என்றுமே சட்டத்தின் அடிப்படையில் மட்டும் அமைவதில்லை. உணர்வுகளின் அடிப்படையிலேயே அமைகின்றன. அதிலும் கூட சொத்துரிமையை நிலை நாட்ட உரிமையாளர்கள் எடுக்கும் நடவடிக்கைகள் எல்லா நேரங்களிலும் அமைதியான நடவடிக்கைகளாக அமைவதில்லை, அத்துமீறல்கள் உண்டுதான். அவற்றை நீதிமன்றம் நிச்சயமாக நடவடிக்கை மூலம் நேர் செய்யும். //
உணர்வுகளின் அடிப்படையில் இடித்தது சரி என்று சொன்னால், அந்த கோட்பாட்டை வைத்து எதை வேண்டுமானாலும் நியாயப்படுத்தலாம். உங்களைப் போன்று சீர்தூக்கி ஆராயக் கூடிய ஒருவரே இந்த கோட்பாட்டை முன் வைப்பது வருத்தத்தை தருகிறது. 1984 டெல்லி கலவரமும் உணர்வுகளின் அடிப்படையில் நடந்ததுதான். 1993 பம்பாய் குண்டு வெடிப்பும் அப்படித்தான். கோத்ரா அப்படித்தான். அஹமதாபாதும் அப்படித்தான்.
ஸ்ரீதரன்,
Jokes apart, உங்கள் பதில் இதயபூர்வமாக, உணர்ச்சிகளின் அடிப்படையில் எழுதப்பட்டிருக்கிறது. லாஜிக் கொஞ்சம் மிஸ்ஸிங். // ஒரு பெரும்பான்மையான மக்களின் நம்பிக்கையை விட பெரிய உயர்ந்த சட்டம் எதுவும் கிடையாது // என்றால் கோர்ட் கீர்ட் எல்லாவற்றையும் மூடிவிட்டு எல்லா பிரச்சினைக்கும் referendum வைக்கலாம். உங்கள் வாதத்தை நீட்டித்தால் பாகிஸ்தானில், பங்களாதேஷில், மலேஷியாவில், ஹிந்துக்களுக்கு எதிராக நடக்கும் ஒவ்வொரு கொடுமையும் நியாயப்படுத்தலாம். அப்புறம் பெரும்பான்மையான மக்களின் நம்பிக்கை என்று எழுதுகிறீர்கள். பாரதீய ஜனதாவுக்கு ஓட்டுப் போடும் ஒவ்வொருவரும் மசூதி இடிக்கப்பட வேண்டும் என்று நினைக்கிறார்கள் என்று வைத்துக் கொண்டால் கூட பாரதீய ஜனதா இன்னும் இந்தியாவில் 51% சதவிகிதம் வாக்குகள் பெறவில்லை என்பதை நினைவுபடுத்துகிறேன்.
// பாபர் ஒரு இஸ்லாமிய படையெடுப்பாளன்.அவனுக்கு தர்மம் என்ற வார்த்தையே தெரியாது. // சரி ஹலால் என்ற வார்த்தை தெரிந்திருக்கும் இல்லையா?
// ஒரு சமுதாயம் அல்லது நாடு பல காலம் அடிமைப்பட்டபின் அதிலிருந்து மீண்டு வரும்போது முன்பு ஆண்டவர்களின் அடிமைச் சின்னங்களை அப்புறப் படுத்துவது என்பது இயற்கையே… // ஆனால் நீங்கள் சொல்லும் மாற்றங்கள் அரசு மக்களின் உணர்வுகளை கணக்கில் எடுத்துக்கொண்டு சட்டபூர்வமாக செய்தவை. என் பக்கத்து வீட்டுக்காரனின் முப்பாட்டன் செய்த “அநீதிக்கு” பழி வாங்க நான் இன்று சட்டத்தை கையில் எடுத்துக் கொள்ளலாம் என்றால் ungaL முப்பாட்டனும் என் முப்பாட்டனும் அவரவர் மனைவியை, பெண் குழந்தைகளை, சகோதரிகளை இன்றைய விழுமியங்களின்படி அடக்கி ஆண்டிருப்பார்கள். அதனால் தினமும் ஒரு பெண் உங்களை வந்து அடிப்பாள், நீங்கள் வாங்கிக்கொள்ள வேண்டும் என்று ஒரு விதி போடமுடியுமா என்ன?
அரசியல் நிர்ணயச் சட்டத்தில் India that is Bharat
என்று இருந்தாலும் நமது அரசு அலுவலகங்களில், மற்றும் கோப்புகளில்,ஆவணங்களில் ஆங்கிலத்தில் எழுதும்போது
Government of India
தானே எழுதப்படுகிறது.
அதேபோல்
அகமதாபாத் -கர்ணாவதி
ஹைதராபாத்- பாக்யநகர்
அல்லாஹாபாத்- பிரயாகை
டில்லி- இந்த்ரபிரஸ்தம்
ஆர் வி
நீங்கள் சொல்வதில் அர்த்தம் இல்லை. முற்போக்கு பேச்சு பேசுகிறீர்கள். உங்கள் வாதப் படியே அந்தக் காலத்தின் வழக்கப் படி அந்தக் காலத்தில் தலித்துக்களை தீண்டத்தகாதவர்களாக வைத்திருந்தார்கள். ஆகவே இப்பொழுது அவர்களுக்கு உரிமை கொடு இட ஒதுக்கீடு கொடு என்று கேட்ப்பதும் உங்கள் லாஜிக் படி முறையற்றதுதானே. அவர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்கக் கூடாது என்று சொல்வீர்களா? ஒரு தவறு அதுவும் இமாலயத் தவறு நடந்து விட்டால் அதைத் திருத்துவதுதானே அரசாங்கத்தின் கடமை. மேலும் நீங்கள் சொல்வது போல அந்த இடத்தின் மீதான இந்துக்கள் உரிமை கோருவது காலவதியாகி விடவில்லை இடித்த நாளில் இருந்தே தொடர்ந்து கேட்டு வருகிறார்கள் அதற்கு ஏராளமான ஆவணங்கள் ஆதாரங்கள் உள்ளன. ஆகவே அநியாயமாக இடிக்கப் பட்ட ஒரு கோவிலுக்காக அன்றில் இருந்து இன்று வரை இடைவெளியே இல்லாமல் உரிமை கோரி வருகிறார்கள் ஆகவே காலவதி என்ற பேச்சுக்கே இடமில்லை. அந்தக் காலத்தில் நடந்த தவறுக்காக ஏன் ஜப்பான் சீனாவிடம் மன்னிப்புக் கோருகிறது? ஏன் போப் யூதர்களிடம் மன்னிப்புக் கோருகிறார்? இன்றும் கூட ஹோலோகாஸ்ட் குற்றவாளிகள் என்று யாரும் கண்டு பிடிக்கப் பட்டால் அவனுக்குத் தண்டனை உறுதிதான். ஆகவே ஒரு சில தவறுகளுக்குக் கால நியதி என்று எதுவும் கிடையாது அதில் இந்த ராமர் கோவிலும் உண்டு. நாகசாமி அவர்கள் மட்டும் அல்ல என் எஸ் ராஜாரம் அவர்களும் கூட இன்று முழுமையான ஒரு கட்டுரை எழுதியுள்ளார். தமிழ் இந்துவில் விரைவில் மொழி பெயர்ப்பு வரும் அதையும் படியுங்கள். இல்லை என் எஸ் ராஜாராமை விட, நாகசாமியை விட நீங்கள் எடுக்கும் நிலைப்பாடு சரியானது என்று நீங்கள் கருதினால் அது தவறான நிலைப்பாடு என்று மட்டும் சொல்லிக் கொள்கிறேன். சோமநாதபுரத்திலும், மதுராவிலும் காசியிலும் கூட இந்துக் கோவில்கள் இடித்துத்தான் மசூதிகள் கட்டப் பட்டிருந்தன ஏன் வல்லபாய் படேல் அது காலாவதியான ஒன்று என்று விட்டு விட்டுப் போகாமல் புனர் நிர்மாணம் செய்து மீண்டும் கோவில்களை எழுப்பினார்? ஒரு சில தவறுகள் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் கூட சரி செய்யப் படத்தான் வேண்டும். இட ஒதுக்கீடுக்கு ஒரு சட்டம் இந்துக் கோவில்களுக்கு வேறு சட்டம் என்பது இரட்டை வேடமாகும். இட ஒதுக்கீட்டுக்கு இல்லாத காலவதியை இந்துக் கோவிலுக்கு மட்டும் அழைக்கிறீர்கள். அது இரட்டை வேடம். அதைத்தான் நீங்கள் எடுத்திருக்கிறீர்கள்.
உங்கள் வாதப்படியே ஷா பானு வழக்கில் ஏன் தற்கால சட்டத்தை அஹமதாபாத் கோர்ட் தீர்ப்பை அரசு ஏற்றுக் கொள்ளவில்லை ஏன் ராஜீவ் காந்தி சட்டத்தையே மாற்றினார். ஆக முஸ்லீம்களுக்கு ஒரு சட்டம் இந்துக்களுக்கு ஒரு சட்டமா? முதலில் அது ஒரு மசூதியே கிடையாது அது வெறும் கும்முட்டம் மட்டுமே அதில் வழிபாடும் நடத்தப் பட்டது கிடையாது. பாபர் அந்தக் காலத்தில் அங்கிருந்த இந்துக் கோவிலை இடித்தது சரியென்றால் அந்தத் தவறைச் சரி செய்ய இன்று இடித்ததும் சரியே. முதலில் அங்கு என்ன இருந்ததோ அதுவே திரும்ப வருவதுவே முறை. சட்டம் என்றால் எல்லோருக்கும் எல்லா காலங்களிலும் பொதுவாக இருக்க வேண்டும், முஸ்லீம்களுக்காக ஷா பானு வழக்கில் அரசியல் சட்டமே திருத்தப் படுகிறது ஆனால் இந்துக்களின் இடிபட்ட கோவிலை மீட்க வேண்டும் என்றால் உங்களுக்கு சட்டம் எல்லாம் வந்து விடுகிறது. முதலில் அந்தக் கும்முட்டத்தை மசூதி என்று சொல்வதே பெரிய அயோக்யத்தனம். அது ஒரு காட்டுமிராண்டி மன்னனின் காட்டுமிராண்டித் தளபதியால் இடிக்கப் பட்ட கோவில் இருந்த இடம். அந்த அவமானச் சின்னம் இடிக்கப் பட்டது சட்டப் படி, தர்மப் படி, நீதியின் படி, முற்றிலும் நியாயமான ஒரு செயலே. கும்முட்டம் இடிக்கப் பட்டது இந்துக்களின் உணர்வுபூர்வமான ஒரு செயல் அதில் எவ்விதத் தவறும் கிடையாது. இந்தியாவில் ஆயிரக்கணக்கான கோவில்கள் இது போல இடித்து அதன் மேல் மசூதிகள் கட்டப் பட்டுள்ளன. அவற்றையும் இடித்து அந்தக் கோவில்கள் அனைத்தும் புனர் நிர்மாணம் செய்யப் பட வேண்டும். சட்டம் என்பது ஒரு வழிப் பாதையாக இருக்குமானால் அந்தச் சட்டம் நாசமாகப் போகக் கடவது.
அன்புடன்
விஸ்வாமித்ரா
[edited and published]
//அதே போல் மதுரா ,காசி கோயில்கள் இடித்து கட்டப் பட்ட மசூதிகள் , அப்சல் கானின் கல்லறை,அவுரங்கசீப்பு பேரில் சாலைகள்,ஜின்னாவின் வீடு இன்னும் எத்தனையோ அப்படியே விட்டு வைத்துள்ளோம்.
இது ஹிந்துக்களின் பெருந்தன்மையைக் காட்டுகிறது
ஆனால் இது வெறும் ஒரு வழிப் பாதையாக உள்ளது.
மற்றவர்கள் இதை மதிப்பதில்லை .//
பெருந்தன்மை என்று நாம் தான் நினைத்து கொண்டிருக்கிறோம். அவர்கள் இதனை இளிச்சவாய்தனமாகத்தான் பார்க்கிறார்கள். அதனால் தான் மேலும் மேலும் நம் மேல் தாக்குதல் நடத்துகிறார்கள்.
[...] சுட்டிகள்: தமிழ் ஹிந்து தளத்தில் டாக்டர் நாகசாம… 37.523851 -122.047324 [...]