இலங்கை: அழியும் கோயில்களை மீட்க யாரிடம் போவோம்?

போன வாரம் இலங்கை நண்பர் ஒருவரிடமிருந்து இப்படி ஒரு மின் அஞ்சல் வந்தது.

srilanka-destroyed-hindu-templeமறவன்புலவு சைவ சமயிகளின் கிராமம். 12.12.1999 அன்று மறவன்புலவில் பல நூற்றாண்டுகளாக வாழ்ந்து வரும் மக்களைத் திடீரென் வெளியேற்றிய சிங்களப் படையினர், அக்கிராமம் முழுவதையும் அழித்தனர். வீடுகள், கோயில்கள், பள்ளி யாவும் இடிந்தன, கூரைகள் இழந்தன, கதவுகள் நிலைகள் கழன்றன, களவாடியோரின் கைகளுள் சிக்கின. கால்நடைகள் சிதறின, அடுப்புகள் எரிந்தபடி, துணிகள் கொடிகளில் காய்ந்தபடி, இருந்ததை இருந்தவாறே விட்டு அச்சத்தில் ஓடினர் மக்கள்.

ஓராயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் நெல் விதைத்தனர் ஆவணியில். தையில் அறுவடை. கதிர் விரித்த நெற்பயிர்களை அப்படியே விட்டகன்றனர் மக்கள். அறுவடைக்குக் காத்திருக்க முடியவில்லை.

2009 ஆவணியில் மீண்டும் மக்களைத் தத்தம் வீடுகளுக்குச் செல்ல அனுமதித்தனர்.10 ஆண்டு கால வனவாசம்.

வெறும் நிலத்துக்கு மீண்ட மக்களை நீண்டுயர்ந்த புல் புதர்கள், முள்ளுடன் வளர்ந்த காரைச் செடிகள், ஈச்சம் புதர்கள் என இயற்கை தந்த புதர்க்காடுகள் வரவேற்றன. இடிந்த வீடுகள் கட்டியம் கூறின. பாம்பு, கொடுக்கன், பூரான், அரணை, ஓணான், பெருச்சாளி, நரி என ஊர்வனவும் காடை, புறா, காட்டுக்கோழி, அழுக்கணவன், நாரை எனப் பறவைகளும் வரவேற்றன. பற்றைகள், புதர்கள், முட்செடிகள், பாம்புப் புற்றுகளைத் தாண்டி மக்கள் தம் வாழ்விடங்களைத் தேடி அடைந்தனர்.

srilanka-maravanpulavu-mariamman-temple-appealகடந்த சில மாதங்களில் ஓரளவு சுதாகரித்த மக்கள், ஆவணியில் விதைத்து, தையில் அறுவடையைக் கண்டபொழுது பூரித்தனர்.

கோயில்கள் திறந்தன. இடிபாடுகளுக்கிடையில் கருவறை, களவுபோன கோயிற் சாமான்கள். ஆனாலும் தளரவில்லை.

மறவன்புலவில் உள்ள பின்தங்கிய மக்களின் கோவில்களுள் ஒன்று அருள்மிகு செல்வ முத்து மாரியம்மன் கோயில். அந்தக் கோயிலை 10.9.2010 அன்று பாலஸ்தாபனம் செய்து திருப்பணி தொடங்கியுள்ளனர். இந்தக் கோயில் புனரமைப்புக்கு இலங்கை ரூபாய் 20 இலட்சம் வரை (இந்திய ரூபாய் 8 இலட்சம் வரை) நிதி தேவை.

யாழ்ப்பாணத்தில் இடிந்த இசுலாமியப் பள்ளிவாசல்களை அரபு நாட்டு அரசுகள் துணை கொண்டு கட்டுகிறார்கள்.

கிறித்தவ தேவாலயங்களை கிறித்தவ நாடுகள் வாரி வழங்கிக் கட்டுவிக்கின்றன. அவற்றின் மூலம் கிறிஸ்தவ அமைப்புகள் இலங்கை அரசையும் வற்புறுத்தி தங்கள் சர்ச்களைக் கட்டிக் கொள்கின்றனர். (பார்க்க: Bishop’s House appeals to Vatican to urge Colombo to renovate Vanni churches)

புத்த கோயில்களைப் புதிது புதிதாகச் சிங்களப்படையினரே தமது செலவில் கட்டி வருகின்றனர்.

எமது கோயில்கள் கட்ட யாரிடம் போவோம்? நீங்களே சொல்லுங்கள்.

திருப்பணிக்கு நிதி தருவீர்களா? கோயிலாகவே கட்டி அங்கிருந்து அனுப்புவீர்களா? எதுவாயினும் சரி.

********

மறவன்புலவு என்ற இந்த கிராமத்தின் பெயரைக் கேட்டதும், மறவன்புலவு சச்சிதானந்தன் அவர்கள் நினைவு வந்தது. திருப்பூர் அருகில் குள்ளம்பாளையம் கிராமத்தில் மதமாற்ற முறியடிப்பு நிகழ்வு பற்றி அவர் செய்தி அனுப்பியிருந்தது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம்.

சமீபத்தில் இலங்கையில் அல்லலுறும் தமிழ் மக்களுக்கு உதவும் ஒரு காந்தீய அமைப்பு பற்றி அவர் எழுதியிருந்த நெஞ்சை நெகிழ்வித்த நிகழ்வுகள் என்ற பதிவையும் படிக்க நேர்ந்தது. அதில் ஓரிடத்தில் இவ்வாறு வருத்தத்துடன் குறிப்பிட்டிருந்தார் –

32 ஆண்டுக் காலமும் திருமிகு மு. க. சீவகதாசர் அறவழிக் குழுவின் செயலாளர். அவருக்கு இப்பொழுது 64 வயது. காந்தியச் சிந்தனை அன்றி வேறறியார். அனைவரையும் அரவணைப்பதையே தன் வாழ்வாக்குபவர். காலத்துக்குக் காலம் ஏற்படும் அழிவுகளால் அல்லலுறுவோர் அறவழிக் குழுவின் பயனாளிகள்.

1983 இனக் கலவரமாயிலென், 2003 ஆழிப் பேரலையாயிலென், துன்புற்றோர் துயர் போக்க அறவழிக் குழு அங்கிருக்கும். நான் தங்கியுள்ள அறவழி அலுவலகம் அந்த நீண்ட துயர் துடைக்கும் பயணத்தின் விளைவு.

ஆண்டுக்குத் தோராயமாக 2 கோடி ரூபாய்க்கு நிதித் திட்டம். யாவும் நன்கொடைகள், அதுவும் ஐரோப்பிய, வட அமெரிக்க, ஆத்திரேலிய நலம்பேண் நிறுவனங்கள் வழங்கும் நன்கொடைகள். இந்தியக் காந்தீய நிறுவனங்களுடன் அறவழிக் குழுவினர்க்குத் தொடர்பிருப்பினும் நிதி உதவி ஏதும் தமிழகத்திலிருந்தோ, இந்தியாவிலிருந்தோ பெறமுடியவில்லை.

srilanka-deminer-clears-by-templeதுயருற்று வாடும் நம் இலங்கைத் தமிழ் சகோதரர்களின் இன்னல் தீர்க்கும் சேவை அமைப்புகளுக்கு உதவுவது நம் கடமை. அதையும் மறந்து விடக் கூடாது.

இந்த ஒரு கிராமம் மட்டுமல்ல. இலங்கையில் நூற்றுக் கணக்கான தமிழ் கிராமங்களிலும் இன்றைக்கு இது தான் நிலைமை. தமிழர்கள் வாழ்க்கையுடன் சேர்ந்து நொறுங்கிப் போய்விட்டன அவர்களது கோயில்களும். இந்தப் பேரழிவில் இருந்து மீண்டு ஒரு புது வாழ்க்கையைத் தொடங்க முற்படும்போது, பாழான கோயில்களையும் புனரமைக்க அவர்கள் உதவி வேண்டி நிற்கின்றனர். வேறு ஒரு இலங்கைத் தமிழ் சகோதரர் ஆதங்கத்துடன் எழுதுகிறார் –

தமிழ்நாட்டுச் சைவப் பெருமக்கள் இணைந்து இலங்கையில் உள்ள கோயில்களைக் கட்டுவதற்காக நிதியம் ஒன்றை அமைத்து அதிலிலருந்து தகுதிபார்த்து நிதி உடனுக்குடன் வழங்கவேண்டாமா? இது பற்றிப் பார்ப்பவர்களிடம் எல்லாம் பலமுறை கூறியுள்ளேன். நீங்கள் அனைவரும் கலந்து ஆலோசித்துப் பெருநிதி திரட்டுக. ஈழத்து இந்துப் பண்பாட்டைக் காப்பது இப்போது உங்கள் கையில் தான் உள்ளது.

தமிழகத்தின் அனைத்து இந்து இயக்கங்களும், குறிப்பாக சைவ சமய அமைப்புகளும் இக்கோரிக்கைக்கு உடனடியாகச் செவிசாய்க்க வேண்டும்.

செல்வமுத்து மாரியம்மன் கோயில் திருப்பணி நன்கொடைகளை அனுப்ப:

காசோலையோ, டிராஃப்டோ Arulmiku Selvamuththumaariamman Temple Management, Maranpulavu என்ற பெயரில் எடுத்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்புக:

Arulmiku Selvamuththumaariamman Temple Management, Maravanpulavu Center, Maravanpulavu, Chavakachcheri, Sri Lanka.

அறவழிக் குழுவிற்கு நன்கொடைகளை அனுப்ப:

NVDAG Bank account 167-00-1763-4 என்ற பெயரில் காசோலையோ, டிராஃப்டோ எடுத்து People’s Bank, Chavakachcheri, Sri Lanka என்ற முகவரிக்கு அனுப்புக. மறக்காமல் தங்கள் நன்கொடைகள் தொடர்பான விவரங்களை அறவழிக் குழுச் செயலாளர் திருமிகு மு. க. சீவகதாசருக்கு jeevagathas@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தெரிவியுங்கள்.

Tags: , , , , , , , , , , , , , , , , , , , ,

 

17 மறுமொழிகள் இலங்கை: அழியும் கோயில்களை மீட்க யாரிடம் போவோம்?

 1. ஜெயக்குமார் on September 21, 2010 at 6:50 pm

  அவசியம் செய்ய வேண்டிய உதவி.. இன்றைக்கு நாம் கைவிட்டுவிட்டு பின்னர் இலங்கையில் இந்துமதம் அழிகிறது எனச் சொல்லிப் பிரயோஜனமில்லை.

 2. பிரபாகரன் on September 22, 2010 at 6:51 am

  சிங்கள(புத்த) பூமியாகிறது இலங்கை…..

  மலைநாட்டிலுள்ள சைவக் கோயில்களில் பல அவதூறான நடவடிக்கைகள்

  21 September, 2010

  கண்டி மாவட்டத்திலுள்ள சைவக் கோயில்களை இடித்து அழிப்பது அதிகரித்து வருகின்றது. கடந்த ஜனவரி முதல் கிட்டத்தட்ட 20 கோயில்கள் இவ்வாறாக அபகரிக்கப்பட்டும் இடிக்கப்பட்டும் உள்ளதாக மத்திய மாகாண சைவ சமூகம் தெரிவித்துள்ளது. இந்தக் கோயில்களிலுள்ள விக்கிரகங்கள், சிலைகள், நகைகள் ஆகியவற்றை இனந்தெரியாத நபர்கள் கோயில்களை உடைத்து அபகரித்துச் செல்கின்றனர். இவ்வாறான முறைப்பாடுகள் பல கண்டி,கலஹா, கம்பொல மற்றும் புசெல்லாவ பகுதிகளிலுள்ள போலீஸ் நிலையங்களில் கொடுக்கப்பட்டுள்ளன.

  புசெல்லாவவில் மட்டும் 8 சைவக் கோயில்களில் இவ்வாறான சம்பவங்கள் நடந்துள்ளன. கலஹாவில் இரு சைவக் கோயில்களில் திருட்டுப் போயுள்ளது. கலகா மேற்பிரிவிலுள்ள இரு அம்மன் கோயில்கள் இடிக்கப்பட்டு அங்கிருந்த சாமி விக்கிரகங்களும், கோயில் உடைமைகளும் திருட்டுப் போயுள்ளன.
  இவ்விடயம் குறித்து முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் எனக் கோரியுள்ள சைவ சமய சமூகம், குற்றவாளிகளைக் கைது செய்யவேண்டும் என்று போலீசாரிடமும் வலியுறுத்தியுள்ளனர்.

 3. R.Sridharan on September 22, 2010 at 9:20 am

  சீனா திபெத்தை கைப்பற்றிய பொது தலாய் லாமா அவரது ஆதரவாளர்களுடன் பாரதத்துக்கு ஓடி வந்தார்.
  நம் நாடும் அவர்களுக்கு புகலிடம் கொடுத்தது.
  அதனால் நமக்கு சீனாவுடன் தீராத பகையைப் ஏற்பட்டது .
  இப்போது தலை லாமா தலையிட்டு சிறிலங்காவில் ஹிந்துக்களுக்கு நடக்கும் கொடுமையை தடுக்க வேண்டும்
  கோயில்களை இடிப்பதை உடனே நிறுத்த வேண்டும்.
  அதற்காக ஹிந்து இயக்கங்கள் மற்றும் பாரதீய ஜனதா போன்ற கட்சிகள் அவரைக் கேட்டுக் கொள்ள வேண்டும்

 4. R.Sridharan on September 22, 2010 at 9:26 am

  நான்எனது எளிய காணிக்கையை அளிக்கத் தயார் .வீ ஹெச் பீ போன்ற இயக்கங்கள் மொத்தமாக நிதி திரட்டி அனுப்பலாமே. நிதி அளிப்பவர்களுக்கு எளிதாக இருக்கும் .

 5. R.Sridharan on September 22, 2010 at 9:34 am

  ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து… என்பது போல் எங்கெல்லாம் ஹிந்துக்கள் சிறுபான்மையாக இருக்கிறார்களோ அங்கெல்லாம் கடைசியில் இதுதான் நடக்கும்.தேவை இல்லாமல் வீராவேச வசனம் பேசிய நம் தமிழ்நாட்டு அரசியல் வாதிகள் இப்போது எங்கே?
  அவர்களால் ஆன கைங்கர்யம் இதுதான்
  அவர்கள் சகவாசம் வைத்துக்கொள்ளும் ஹிந்துக்கள் கதி இதுதான்.
  நம் விழித்துக் கொள்ள வில்லை என்றால் நமக்கும் எதிர்காலத்தில் இதே கதிதான்.

  மறு சீரமைப்புக்காக பல கோடிகளை நம் அரசு ராஜபக்செவிடமே கொடுக்கிறது.இதை விட ஒரு முட்டாள் தனம் இருக்க முடியுமா?
  அவர் என்ன ரொம்ப கரிசனமாக ஹிந்துக்களுக்காக அதை செலவிடுவாரா ?

 6. களிமிகு கணபதி on September 22, 2010 at 1:15 pm

  முக்கியமான வேண்டுகோள் இந்த கட்டுரை.

  புத்தர்கள் மட்டுமல்லாது இந்துக்களின் எதிரிகள் அனைவரும் கோயில்களை அழிப்பதற்கு ஒரு சமூக-உளவியல் காரணம் உள்ளது.

  இந்துக்களின் வளமையின், செழிப்பின் அடையாளமாக இருப்பவை கோயில்களே. அத்தோடு ஒரு இந்து சிறப்பாக வாழமுடியும் எனும் உத்வேகத்தையும் அவை பல தலைமுறைகளுக்கும் அளிக்கின்றன. ஸ்ரீலங்காவில் உள்ள கோயில்கள் ஒரு தமிழ் இந்து வளமையாக வாழமுடியும் என்ற நம்பிக்கையின் அடையாளம்.

  இங்கனம், இந்துக்களுக்கு நம்பிக்கை ஊற்றாக, வளமையின் அடையாளமாக இருக்கும் கோயில்களை அழிப்பதன் மூலம், இந்துக்களின் மனோபலத்தை முற்றிலும் அழித்துவிட முடியும்.

  மனோபலம் அழிந்துவிட்டால், தமிழ் இந்துக்களை எளிதில் அழித்துவிட முடியும்.

  அதனால்தான், இந்துக்களின் எதிரிகள் தமிழர்களின் கோயிலையும், மொழியையும் அழிக்க அத்தனை முயற்சிகளையும் செய்கிறார்கள்.

 7. களிமிகு கணபதி on September 22, 2010 at 1:30 pm

  @ R.Sridharan

  ஸ்ரீதரன் அவர்களே,

  இலங்கை பௌத்தர்களுக்கு, தலாய்லாமா அறிவுரை சொல்ல வேண்டும் எனச் சொல்லி உள்ளீர்கள்.

  அருமையான யோசனை. ஆனால் நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன.

  தலாய்லாமா பின்பற்றும் வஜ்ராயன பௌத்தம் இந்துத்தன்மை நிறைந்தது. இந்துமதங்களில் ஒன்று.

  ஆனால், ஸ்ரீலங்காவில் தெரவாடா பௌத்தம் என்று சொல்லிக்கொள்ளுகிற, ஆனால், முழுக்க முழுக்க மஹாபோதி ஸொஸைட்டியால் கட்டுப்படுத்தப்படுகிற பௌத்தம் ஆபிரகாமியத் தன்மை நிறைந்தது.

  ஏனெனில், இந்த மஹாபோதி ஸொஸைட்டியை ஆரம்பித்தவர் ஒரு closet christian. அனகாரிக தர்மாபாலாவாகத் தனது பெயரை மாற்றிக் கொள்வதற்கு முன் அவரது பெயர் David Hewivitarne.

  பௌத்த மதம் இந்து மதங்களில் ஒன்றாக இருந்ததை மாற்றுவதற்காக கிறுத்துவர்களால் உருவாக்கப்பட்டவர் அவர். அவரது அரசியல்/வாழ்க்கையே இந்துக்களிடம் இருந்து பௌத்தத்தைப் பிரிப்பதில்தான் ஆரம்பித்தது.

  இருப்பினும், அவர் பௌத்தம் குறித்து ஆழ்ந்து கற்றவர். நல்ல ஞானியும்கூட. விவேகானந்தரோடு சிகாகோவில் சொற்பொழிவாற்றியவர். விவேகானந்தர் அவரை நண்பராக மதித்தார். ஆனால், ஸ்ரீலங்காவில் சிகாகோ மாநாட்டில் விவேகானந்தரை யாரும் மதிக்கவில்லை, எல்லாரும் தர்மபாலரைத்தான் கொண்டாடினார்கள் என்று இலங்கை பௌத்தர்கள் அரசியல் பொய்களைச் சொல்லி வருகிறார்கள்.

  இந்த தர்மபாலர் உருவாக்கிய பௌத்தம்தான் இப்போது இலங்கையில் உள்ளது. அந்தக் கிறுத்துவ-பௌத்தர்கள்தான் தமிழர்களைப் படுகொலை செய்கிறார்கள்.

  இவர்கள் தலாய்லாமா போன்ற இந்துத்தன்மை நிறைந்த ஆன்றோர்களை மதிப்பதில்லை. அவர் சொல்லுவதையும் கேட்க மாட்டார்கள்.

 8. Indli.com on September 22, 2010 at 3:58 pm

  தமிழ்ஹிந்து » இலங்கை: அழியும் கோயில்களை மீட்க யாரிடம் போவோம்?…

  கோயில்கள் திறந்தன. இடிபாடுகளுக்கிடையில் கருவறை, களவுபோன கோயிற் சாமான்கள். ஆனாலும் தளரவில்லை,…

 9. R.Sridharan on September 22, 2010 at 8:16 pm

  தலை சுற்றுகிறது
  இருந்தாலும் தலாய் லாமா மூலம் முயன்று பார்ப்பதில் தவறில்லை.
  ஆக மொத்தம் ஹிந்துக்கள் எல்லா இடத்திலும் வஞ்சிக்கப் படுகிறார்கள்
  நம் அரசு புத்த கயாவில் ஸ்ரீலங்கா ,ஜப்பான் நாடுகளுக்கு பல உரிமைகளைக் கொடுத்துள்ளதாகக் கேள்வி

 10. R.Sridharan on September 22, 2010 at 8:27 pm

  உண்மை.
  ஹிந்துக்கள் வலமாக வாழ்வது கண்டு வயிற்ரேரிச்சலில் தன இப்படிச் செய்கிறார்கள்
  இது இப்போது இல்லை
  ஆயிரத்து தொள்ளயிறது என்பது மூன்றில் இலங்கையிலிருந்து தப்பி வந்த இரு தமிழ் இளைஞர்கள் கூறியது நினைவுக்கு வருகிறது
  ‘ஹிந்துக்கள் மிகமும் அறிவாளிகள்.சுறுசுருப்பனவர்கள்
  ஆகவே நன்கு படித்து நல்ல வேலையில் இருப்பார்கள்
  பலர் ஜப்பான்,ஜெர்மனி என்று வெளி நாடுகளில் வேலை செய்வார்கள்
  சிங்களவர்கள் நன்கு புலால் அருந்தி,குடித்து விட்டு கும்மாளம் போடுவார்கள்
  ஆனால் ஹிந்துக்களைப் பார்த்து பொறாமைப் படுவார்கள்
  ஹிந்துக்கள் கலாச்சாரத்திலும் மிக உயர்ந்து விளங்கினார்கள்
  நம்ம ஊர் சைவர்கள் வெட்கப் படும் படி சைவ மறைகளை நன்கு கற்று தினமும் ஓதுவார்கள்.
  சிறு பிள்ளைகளும் அதில் தேர்ந்து விளங்குவார்கள்’

  இப்படிப்பட்ட ஒரு உயர்ந்த சமூகம் இப்படிச் சீரழிக்கப் பட்டது மிகவும் கொடுமையாகும்
  ஊழலும்,அயோக்யத்தனமும் நிறைந்த, கலாச்சாரம் என்றால் என்னவென்றே தெரியாத நம் நாட்டு அரசியல்வாதிகள் அவர்களின் தலை எழுத்தை நிர்ணயித்தது காலத்தின் கோலம்.

 11. Mayoorakiri Sharma on September 25, 2010 at 1:06 pm

  என்னைப் பொறுத்த வரையில் இலங்கையில் உள்ள ஆலயங்களைப் புதுப்பிப்பதும் அவற்றிகு நிதி வழங்குவதும் நல்ல விஷயம். ஆனால் அவற்றை விட மேலான விஷயம் இருக்கிறது. அது என்ன என்றால் தமிழகத்திலுள்ள ஆன்றோர்களும் ஆன்மீகத் தலைவர்களும் நேரடியாக இலங்கைக்கு வர வேண்டும். போரினால் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க வேண்டும். அவர்களோடு மனம் விட்டுப் பேச வேண்டும். ஹிந்து மத குருமார்களும் எங்கள் மீது அனுதாபம் காட்டுகிறார்கள். இவர்களும் எங்களுக்கு உதவுவார்கள் என்ற எண்ணப்பாங்கை அந்த மக்களிடையே ஏற்பட வழி செய்ய வேண்டும்.

  நான் அறிந்த வகையில் பல்வேறு கிறிஸ்தவ போதகர்கள் முகாம்களுக்குள் செல்கிறார்கள் உதவியும் செய்கிறார்கள் .பைபிளும் கொடுக்கிறார்கள். ஆனால் ஹிந்துக்களுக்கு …காலையில் வீபூதி பூசுகிற உள்ளங்களுக்கு வீபூதி கொடுக்க போவதற்கு ஆட்களில்லை….

  நிதி கொடுப்பது முக்கியம்…அதிலும் முக்கியம் அவர்களின் பிரச்சினைகளை கேட்பது… மஹாசந்நிதானம் ஒருவர் சென்று அவர்களோடு ஒரு நாள் முழுதும் எந்த வித கூச்சமுமின்றி இருப்பாராகில் அதுவே மிகப்பிரதானம். அதுவே மிக அவசரம்…

  எங்கே என் சகோதர சகோதரிகளே செய்வீர்களா…? இலங்கை நிலைமைகளைப் புரிந்து கொள்ள உதவியாக எனது கிராம இணையத்தளமான க்கும் சென்று பார்க்கலாம்.. ஆனால் நீங்கள் மறவன்புலவை இதனுடன் ஒப்பிட்டு விடாதீர்கள். அது யுத்தத்தின் பிடியிலிருந்து இன்னமும் முழுமையாக மீட்சி பெறாத இடம்…அங்கு பல பிரச்சினைகள் இருக்கின்றன. என்னால் இது வரை அங்கு செல்ல இயலவில்லை…

 12. Mayoorakiri Sharma on September 25, 2010 at 1:06 pm

  என்னைப் பொறுத்த வரையில் இலங்கையில் உள்ள ஆலயங்களைப் புதுப்பிப்பதும் அவற்றிகு நிதி வழங்குவதும் நல்ல விஷயம். ஆனால் அவற்றை விட மேலான விஷயம் இருக்கிறது. அது என்ன என்றால் தமிழகத்திலுள்ள ஆன்றோர்களும் ஆன்மீகத் தலைவர்களும் நேரடியாக இலங்கைக்கு வர வேண்டும். போரினால் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க வேண்டும். அவர்களோடு மனம் விட்டுப் பேச வேண்டும். ஹிந்து மத குருமார்களும் எங்கள் மீது அனுதாபம் காட்டுகிறார்கள். இவர்களும் எங்களுக்கு உதவுவார்கள் என்ற எண்ணப்பாங்கை அந்த மக்களிடையே ஏற்பட வழி செய்ய வேண்டும்.

  நான் அறிந்த வகையில் பல்வேறு கிறிஸ்தவ போதகர்கள் முகாம்களுக்குள் செல்கிறார்கள் உதவியும் செய்கிறார்கள் .பைபிளும் கொடுக்கிறார்கள். ஆனால் ஹிந்துக்களுக்கு …காலையில் வீபூதி பூசுகிற உள்ளங்களுக்கு வீபூதி கொடுக்க போவதற்கு ஆட்களில்லை….

  நிதி கொடுப்பது முக்கியம்…அதிலும் முக்கியம் அவர்களின் பிரச்சினைகளை கேட்பது… மஹாசந்நிதானம் ஒருவர் சென்று அவர்களோடு ஒரு நாள் முழுதும் எந்த வித கூச்சமுமின்றி இருப்பாராகில் அதுவே மிகப்பிரதானம். அதுவே மிக அவசரம்…

  எங்கே என் சகோதர சகோதரிகளே செய்வீர்களா…? இலங்கை நிலைமைகளைப் புரிந்து கொள்ள உதவியாக எனது கிராம இணையத்தளமான http://www.neervely.com க்கும் சென்று பார்க்கலாம்.. ஆனால் நீங்கள் மறவன்புலவை இதனுடன் ஒப்பிட்டு விடாதீர்கள். அது யுத்தத்தின் பிடியிலிருந்து இன்னமும் முழுமையாக மீட்சி பெறாத இடம்…அங்கு பல பிரச்சினைகள் இருக்கின்றன. என்னால் இது வரை அங்கு செல்ல இயலவில்லை…

 13. senthu on September 25, 2010 at 1:13 pm

  It’s a Big problem… Please see all hindus..

 14. ஜடாயு on September 25, 2010 at 4:01 pm

  அன்புள்ள சர்மா அவர்களுக்கு,

  நீங்கள் எழுதியதைப் படித்ததும் கண்ணீர் வருகிறது. நெஞ்சம் உருகுகிறது. தமிழ்நாட்டு இந்துக்களின் இயலாமை மற்றும் முயற்சியின்மையை எண்ணிக் கோபம் ஏற்படுகிறது. நிலைமையின் தீவிரம் எங்களுக்கு இன்னும் உறைக்கவில்லை..

  இலங்கை ஊர்களில் சென்று தமிழக சைவ சமய அடியார்கள் திருமுறை வேள்விகள் நடத்துவது பற்றி முன்பு தமிழ்ஹிந்துவில் கூட ஒரு கட்டுரை வந்தது. சமீபத்தில் அந்தக் குழுவினரைத் தொடர்பு கொண்டு நான் கேட்டபோது அந்த திட்டத்தை செயல்படுத்த ஆரம்பிக்கவில்லை, முனைப்பு தேய்ந்து வருகிறது என்று அறிந்தேன்..

  நீங்கள் சொல்வது சத்தியமான வார்த்தை. தமிழக சமய அடியார்களின், இந்து அமைப்புகளின் கவனத்தை இதில் திருப்ப என்ன் தான் செய்வது? ”வன்செவியோ நின்செவிதான்?” என்றே கேட்கத் தோன்றுகீறது..

 15. B. பாஸ்கர் on September 25, 2010 at 6:13 pm

  வணக்கம்,

  ////நீங்கள் எழுதியதைப் படித்ததும் கண்ணீர் வருகிறது. நெஞ்சம் உருகுகிறது. தமிழ்நாட்டு இந்துக்களின் இயலாமை மற்றும் முயற்சியின்மையை எண்ணிக் கோபம் ஏற்படுகிறது. நிலைமையின் தீவிரம் எங்களுக்கு இன்னும் உறைக்கவில்லை/////

  கண்ணீர் என்ன ரத்தமே வருகிறது, கிறிஸ்துவர்கள் வருகிறார்கள் பைபிள் தருகிறார்கள், இவைகளெல்லாம் ஆறுதல் தரும் விஷயங்கள்.
  ஆனால் அவர்களுக்கு அங்கே தடை இருக்காது, ஆனால் நமது சகோதரர்கட்கோ அல்லது சனாதன தர்ம ஆன்றோர் சான்றோர்கட்கோ இங்கேயே ஆரம்பத்தடை விழுமே? பெற்ற மகள் தொலைதூரத்தில் வாழ்க்கைப் பட்ட இடத்தில் கண்ணீர் வடித்தல் அறிந்து கண்ணில் ரத்தம் வடிக்கும் தாயினை போன்று இருக்கிறது நமது நிலைமை. மகளின் அப்பனோ( அரசு) போதையில் கிடக்கிறான்.

 16. T.Mayoorakiri Sharma on September 26, 2010 at 12:19 pm

  ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் ஸ்வாமிகள் பாதிக்கப்பட்ட உள்ளங்களுக்கு எந்த ஒரு பேதமுமின்றி நிறைய உதவிகள் செய்திருக்கிறார்கள். கொழும்பு ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் தலைவர் ஸ்வாமி ஸர்வரூபானந்தஜீ மஹராஜ் பல தடவை முகாம்களுக்குச் சென்று அவர்களுடன் உரையாடி பல்வேறு அடிப்படைத் தேவைகளை உதவியிருக்கிறார். (புகைப்படம் கூட அதற்கு எடுக்க அவர் பல இடங்களில் அனுமதிக்க வில்லை. பாதிக்கப்பட்டவர்களை புகை;ப்படம் எடுகப்பது அவர்களைப் புண்படுத்தலாம் என்பது அவர் கருத்து.)

  இது போலவே நல்லையாதீனம் ஞானசம்பந்த பரமாச்சார்ய ஸ்வாமிகளும் இவ்வாறான பணிகளில் ஈடுபட்டிருக்கிறார். இலங்கையிலுள்ள பல ஹிந்து அமைப்புகள் இப்பணிகளில் ஈடுபட்டிருக்கின்றன.

  ஜடாயு மற்றும் பாஸ்கர் ஆகியோரின் உணர்வுகள் எமக்கு மனோதைரியத்தை தருகின்றன.

  நான் சொல்வது இன்னும் எம் சகோதரர்கள் இப்பணிகளில் ஈடுபட முன்வர வேண்டும் என்பதையாகும். ஆகவே ஹிந்துக்கள் உதவவில்லை என்று கருதக்கூடாது.

 17. அருண்முல்லை on October 17, 2010 at 6:22 am

  நாங்கள் தமிழ் சைவர்கள், ஆகையால் புறக்கணிக்கப்படுகிறோம்.அந்நியப்படை வெற்றிபெற்றால் முடிவு
  எப்படி இருக்கும், என்பதைக் கடந்தகால வரலாறறிந்தவர்கள் அறிவர்.
  இந்தியாவை இஸ்லாமியர் கொள்ளையடித்ததுபோல்தான் இதுவும்.
  அன்று கோவிலை இடித்து மசூதி கட்டியதை மறந்துவிடமுடியுமா?
  மஞ்சள் துண்டு நாத்திகர் அறியாததா?

மறுமொழி இடுக:

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.

உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:

தமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.

மறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

*