அருணாசலத்தில் ‘ம’கரத்தின் மகத்துவம்

September 18, 2010
By

baranideepamஎனக்கு அவ்வப்போது கவிதை எழுதும் பழக்கம் இருந்தது. ஒருமுறை அருணாசலத்தை கிரிவலம் வரும்போது எனக்கு அதுவே ஓர் அருட்பிரசாதமாக அமைந்தது என்பதை நினைக்க நினைக்க கூடுதல் மகிழ்வு உண்டாகும்.

அப்போது புனையப்பட்டது தான், “அருணாசல அக்ஷர நாமாவளி” எனும் ஒரு தொகுப்பு. காலப்போக்கில், அதைப் படிக்கப் படிக்க, அதில் ஏதோ ஒரு மறைபொருள் உள்ளதோ என்று எனக்குத் தோன்றும். அப்படி அண்மையில் ஒருநாள் நாமாவளியைச் சொல்லிக்கொண்டு இருக்கும்போது எனக்குத் தோன்றிய சில எண்ணங்களை இங்கு உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

தமிழ் மொழியில் அட்சர வரிசையில் எழுதப்பட்டது அந்த நாமாவளி. உயிர் எழுத்துக்களாகிய அகரத்தில் ஆரம்பித்து, ‘‘கரம், ‘‘கரம் என்று அந்தப் பாக்களின் அடிகள் படிப்படியாகச் செல்லும். அது தவிர இரண்டாம் அடியாக “அருணாசலமே சிவனின் நாமம்” என்ற தொகையும் வரும். ஒருநாள் அதைச் சொல்லிக் கொண்டிருக்கும் போது, திடீரென்று மனதில் ஒரு கேள்வி எழுந்தது. எல்லா அடிகளுமே பொருத்தமாக இருந்தாலும், எந்த ‘கரத்தில்’ அருணாசலத்தின் கரத்தை நாம் சற்று வலுவாகப் பிடித்துள்ளோம் என்பதே மனத்தில் எழுந்த கேள்வி. அதற்குப் பதில் கிடைக்க வெகு நேரம் ஆகவில்லை. அதன் இறுதியில் வரும்

பவ நோயைத் தீர்க்கும் மருத்துவர் அன்றோ
மருத்துவர் மற்றும் மருந்தாய் இருப்பாய்

என்ற அடிகளின் உள்ளர்த்தங்களை நான் பலமுறை வாழ்க்கையில் அனுபவித்து உணர்ந்தவன். அதனாலோ அல்லது ஒருவேளை நாமாவளியைச் சொல்லும்போது ‘ம’ வரிசையைக் கடந்து வந்ததாலோ என்று ஞாபகம் இல்லை; என் எண்ணங்கள் ‘ம’கரத்தில் வரும் அடிகளைச் சுற்றி வந்தது. முதலில் அந்த அடிகளைக் குறிப்பிடுகிறேன்; அப்புறம் அதன் மகத்துவம் என்று எனக்குத் தோன்றுவதையும் சொல்லுகிறேன்.

லையாம் மருந்தாய் நிலையாய் இருந்தாய்
மாலையும் காலையும் நின்னை நினைப்போர்க்கு
மின்னலாம் எண்ணங்கள் மின்னாது மறைய
மீளாது என்னை நீ மீட்டுச் செல்வாயோ
முன் வினை என் வினை என்று பாராதே
மூச்சற நிற்கும் முன் வினையெல்லாம் அறுப்பாய்
மெய்யிது மெய்யன்று மெய்யாலும் காட்டுவாய்
மேலென்றும் கீழென்றும் காண முடியா
மையத்தில் நீ உள்ள உண்மையைக் காட்டு
மொட்டாக நான் உள்ளேன் மலராகத்தான் செய்வாய்
மோதாமல் தள்ளாமல் மலரச் செய்வாயோ
மௌனத்தில் நீ என்னை மறவாதிருப்பாய்
 

பொதுவாக, பெரியவர்கள் நமக்குச் சொல்வது என்ன? இறைவனை மலையாய் நம்பு. எப்போதும் அவன் நினைவாகவே இரு. நமக்கும் இறைவனுக்கும் ஓர் இடையூறாக வருவது நமது எண்ணங்களே. எண்ணச் சுழலில் அகப்பட்டால் அதிலிருந்து மீண்டு வருவது அவன் கையில்தான் இருக்கிறது. நமது முற்பிறப்பின் எண்ணங்களும் செயல்களுமே நமது தற்போதைய நிலைக்குக் காரணங்கள். இப்பிறவியில் அதையெல்லாம் அறுத்து, மேலும் சுழலில் மாட்டிக் கொள்ளாது இருக்கும்படியாக நமது செயல்கள் அமையவேண்டும். இந்த உடல் நான் இல்லை என்ற உண்மையை அறிய வேண்டும். இங்கு அங்கு எனாது எங்கும் நிறைந்த பொருளே நமது மையத்திலும் உள்ளது என்பதை உணர வேண்டும். அதை எல்லாம் அறிவுபூர்வமாகத் தெரிந்து கொண்டாலும், அது நமது அனுபவமாக மாறும் முதிர்ந்த பருவம் நமக்கு அருளப்பட வேண்டும். அதை உணர்த்துவதற்கு மென்மையான வழியில் நாம் கொண்டுசெல்லப் படவேண்டும். அனைத்திலும் கருவாக அவன் உள்ளான் என்பதைக் காட்டவே, ஒரு மலையாகவும் நம் பிறவிப்பிணி மருந்தாகவும் நம் கண்ணெதிரே அவன் உருவெடுத்துள்ளான் என்பதை நாம் உணரவேண்டும்.

இந்தக் கருத்தெல்லாம் மேலே சொல்லப்பட்டுள்ள அடிகளில் இருக்கிறதா என்று பாருங்கள். தேவையானால் அடிகளின் வரிசையைச் சற்றே மாற்றி 2,1, 4,3, 6,5… என்று கீழே வருமாறு படித்துப் பாருங்கள். அதிலும் கடைசி அடிக்குப் பின் முதல் அடியைத் திரும்பவும் போட்டு வாசியுங்கள்.

மாலையும் காலையும் நின்னை நினைப்போர்க்கு
மலையாம் மருந்தாய் நிலையாய் இருந்தாய்

மீளாது என்னை நீ மீட்டுச் செல்வாயோ
மின்னலாம் எண்ணங்கள் மின்னாது மறைய

மூச்சற நிற்கும் முன் வினையெல்லாம் அறுப்பாய்
முன் வினை என் வினை என்று பாராதே

மெய்யிது மெய்யன்று மெய்யாலும் காட்டுவாய்

மேலென்றும் கீழென்றும் காண முடியா
மையத்தில் நீ உள்ள உண்மையைக் காட்டு

மோதாமல் தள்ளாமல் மலரச் செய்வாயோ
மொட்டாக நான் உள்ளேன் மலராகத்தான் செய்வாய்

மௌனத்தில் நீ என்னை மறவாதிருப்பாய்
மலையாம் மருந்தாய் நிலையாய் இருந்தாய்

 
இப்போது நீங்களும் நான் நினைத்தது போல் உணர்கிறீர்களா? அனைத்துக் கருத்துக்களையும் அடக்கிய இந்த அடிகளும் உங்களுக்கும் பொருத்தமானவைதானே? ஒருவனுக்கு வேறு என்ன பேறு வேண்டும்?
 
aathirai-jyothiஇப்படி நான் நினைத்துக் கொண்டிருக்கும் போது இன்னுமொரு பொருத்தமான எண்ணமும் தோன்றியது. அருணாசலம் என்றாலே சிவனும் சக்தியும் ஒடுங்கிய கார்த்திகை தீப ஒளிதான் நினைவுக்கு உடனே வரும். அதே போன்ற தீபம் சபரி மலையில் மகர தீபம் எனப்படுகிறது. தீபம் என்றால் எல்லாம் ஒன்றுதான். அதனாலோ எதனாலோ நமது நாமாவளியிலும் நாம் அருணாசலத்தை ‘மகர’ வரிசையில் சற்றே வலுவாகப் பிடித்திருக்கிறோமோ?

Tags: , , , , , , , , , , , , , ,

 

5 மறுமொழிகள் அருணாசலத்தில் ‘ம’கரத்தின் மகத்துவம்

 1. chandrasekar on September 18, 2010 at 7:44 am

  திரு S ராமன்,
  உங்கள் அருணாச்சல அட்சர நாமாவளி மிகவும் பக்தி மயமாகவும், அருணாச்சலத்தை பூரணமாக உணரவைக்கிறது. மிக்க நன்றி.
  can you please share this website or any url link availabile to read the entire naamavali.
  Apprecaited your help. Thanks

 2. virutcham on September 18, 2010 at 2:24 pm

  சில சுலோகங்கள் படிக்க கஷ்டமா இருக்கும். சிலவை புரியாது. இது படிக்கும் போதே ஒரு இனம் புரியா உணர்வைக் கொடுக்கிறது.

  இது பாடல் வடிவில் கேசட்டில் கிடைக்கிறதா?

 3. S Raman on September 18, 2010 at 4:25 pm

  Mr. Chandrasekar:
  Are you talking about the link to get the full text of Naamaavali? If so, it is already there at the start of the second paragraph of this article itself (around the bold-lettered title). It takes you to an article, at the end of which is the Naamavali. Hope you got it.

  Mr. Virutcham:

  நாமாவளி பாடல் வடிவில் எந்த ஒரு மீடியாவிலும் தற்சமயம் இல்லை. அது தேவை என்றால், அதற்கு அத்துறையில் உள்ளவர்கள் முயற்சி செய்தால், என்னால் ஆன ஒத்துழைப்பைக் கொடுக்கிறேன்.

  Raman

 4. Indli.com on September 18, 2010 at 9:46 pm

  தமிழ்ஹிந்து » அருணாசலத்தில் ‘ம’கரத்தின் மகத்துவம்…

  காலப்போக்கில், அதைப் படிக்கப் படிக்க, அதில் ஏதோ ஒரு மறைபொருள் உள்ளதோ என்று எனக்குத் தோன்றும்…

 5. Rajesh on September 21, 2010 at 8:34 pm

  You are cent percent correct.

மறுமொழி இடுக:

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.

உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:

தமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.

மறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

*