ஆஸ்திரேலியாவிலிலிருந்து வந்த அஸ்தி

September 24, 2010
By

நாங்கள் நிர்வகிக்குக் கல்லறை தோட்டத்தின் பெட்டகத்தில் 60 ஆண்டுகளுக்கு மேலாக பூரன் சிங் என்ற இந்தியரின் அஸ்தியை பாதுகாத்துவருகிறோம். அவரது அஸ்தி கங்கை நதியில் தனது உறவினர்களால் கரைக்கப்பட சொல்லியிருப்பது எங்களது கம்பெனி குறிப்புகளில் இருக்கிறது. எனது தந்தை, தன்னால் அவரது உறவினர்களை கண்டுபிடிக்க முடியவில்லை; நீயாவது முயற்சி செய்து கண்டுபிடி. முடியாவிட்டால் இந்தியாபோய் அதை செய்துவிடு என்று தன் இறுதிநாளில் என்னிடம் சொல்லியிருக்கிறார். உங்கள் நிகழ்ச்சியின் மூலம் அவரது உறவினர்களை கண்டுபிடிக்க முடிந்தால் உதவியாக இருக்கும்”

manpreethsinghஆஸ்திரிலேயாவில் SSB என்ற FM வானொலி பேட்டியில் இதைச்சொன்னவர் திருமதி ஆலிஸ் கெய்ட் வுட் (Alice Guyett-wood)) SSB வானொலி ஆஸ்திரேலியா மட்டுமில்லாமல் உலகெங்கும் வாழும் சிக்கியர்களின் அபிமான சானல். இதை நிர்வகித்து நடத்துபவர் திருமதி மன்பீரித் சிங் (Manpreet K Singh). பஞ்சாபி பெண்னான இவர் இந்தியாவில் ஜெர்னலிசம் படித்தபின் இந்தியன் எக்ஸ்பிரஸிலும் தூர்தர்ஷனிலும் பணியாற்றியவர். இவரது பேட்டி நிகழ்ச்சிகள் பிரபலமானவை.

ஆஸ்திரிலேயாவில் இறுதிச்சடங்குகள், கல்றைகளை நிர்வகிப்பது போன்றவைகளை செய்வது தனியார் நிறுவனங்கள் அல்லது டிரஸ்ட்டுகள். மெல்போரினிலிருந்து 3 மணி நேர பயண தொலைவிலிருக்கும் நகரம் வார்னம்பூல் (Warrnambool). அங்குள்ள கல்லறை தோட்ட நிர்வகாகத்தை குடுமப தொழிலாக கொண்ட கெயிட் வுட் குடும்பத்தின் இன்றைய வாரிசான ஆலிஸ் அளித்த பேட்டியினால் இன்று பிரபலமாகி விட்ட பெயர் பூரன் சிங்.

alis-couple1899ல் 30 வயதில்,ஆஸ்திரேலியாவிற்கு வேலை தேடி வந்து குதிரைவண்டியில் சிறு பொருட்களை கிராமங்களுக்கு எடுத்துச் சென்று விற்றுக் கொண்டிருந்தவர் பூரன்சிங். 77 வயது வாழ்ந்து 1947ல் வார்னம்பூல் நகரின் ஆஸ்பத்திரியில் மரணமடைந்திருக்கிறார். தன் உடல் எரிக்கப்பட வேண்டும்; சாம்பல் கங்கையில் கரைக்கப் படவேண்டும் என்பதை தனது இறுதி ஆசையாக சொல்லியிருக்கிறார். அதன்படி, மெல்போர்ன் நகரில் தான் அப்போது எரியூட்டும் வசதியிருந்ததால் உடலை அங்கு ரயிலில் அனுப்பி சாம்பலைபெற்று அதை இங்கு பாதுகாத்து வருகிறார்கள் இந்த நிறுவனத்தினர். தந்தி அனுப்பியும் இந்தியாவிலிருந்து இதுவரை யாரும் வந்து கேட்காதாலால் கல்லறை தோட்ட காப்பகத்திலியே தங்கி விட்டது அவரின் அஸ்தி.

len-kennaபேட்டி ஒலிபரப்பான மறு நாள் 1870 களில் இந்தியாவிலிருந்து வந்து சிறிய அளவில் வியாபாரம் செய்துவந்த இந்திய சீக்கியர்களைப்பற்றி ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கும் லென் கென்னாவும் கிறிஸ்டல் ஜோர்டனும் (Len Kenna and Crystal Jordan), பூரன்சிங் பற்றிய விபரங்களும்,அவர் தனது அண்னன் மகன்களுக்கு தனது சேமிப்பான £2376.04, பவுண்ட்களை பங்கிட்டு கொடுப்பது பற்றி எழுதிய உயிலின் நகலும் தங்களிடமிருக்கிறது; அதில் இந்தியாவில் அவர் கிராமத்தின் பெயர் பஞ்சாபிலிருக்கும் பில்கா என்பதையும் வாரிசுகளின் பெயர்கள் இருப்பதையும் தெரிவித்தார்.

அடுத்த நாள் SSB வானொலியின் மன்பீரித் சிங், கிரிகெட்வீரர் கபில்தேவிடம் இந்தியாவில் நடைபெறப் போகும் காமென்வெல்த் போட்டிகள் பற்றி ஆஸ்திர்ரேலியாவிலிருந்து டெலிபோனில் தனது நிகழ்ச்சிக்காக பேட்டி நடத்துகிறார். பேட்டியின் போது இது பற்றி தெரிவித்து கபில் உதவு முடியுமா என கேட்கிறார். ஆஸ்திரேலியாவில் நமது மாணவர்கள் அடிக்கடி தாக்கபடுகிறார்கள் என்ற செய்திகளையே கேட்டுக்கொண்டிருக்கும் நேரத்தில் மனதைத்தொடும் இந்த செய்தியை தெரிவித்த உங்கள் நிலையத்துக்கும், இத்தனை நாட்கள் அதை பாதுகாத்த ஆஸ்திரேலிய குடும்பத்திற்கும் நன்றி; நானே நேரில் வந்து அஸ்தியைப் பெற்று குடும்பத்தினரிடம் சேர்ப்பிக்கிறேன் என்று கபில் சொன்னதும், பேட்டி கண்ட அவருக்கும் கேட்ட நேயர்களுக்கும் பெரிய ஆச்சரியம்!

death-announcementகபிலின் பயணத்தை ஸ்பான்ஸர் செய்ய ஆஸ்திரேலிய நிறுவனங்கள் முன்வந்தன. “இது விளம்பரமில்லை. ஒரு பஞ்சாபியின் இறுதி ஆசையை நிறைவேற்றும் மன திருப்திகாக செய்யும் செயல். என் சொந்த பணத்திலிருந்தே செய்ய விரும்புகிறேன்” என்று சொன்னது கபில்தேவ் தந்த அடுத்த ஆச்சரியம்!

858834

ஆலி கெய்ட் வுட் நிறுவனம் அஸ்தியை மட்டுமிலை, பூரன் சிங் மரண அறிவிப்பு வெளியான நாளிதழ், எரியூட்டப் பட்டதற்காக பணம் செலுத்திய ரசீது எல்லாவற்றையும் பாதுகாத்திருக்கிரார்கள். 1980ல் கல்லறை தோட்டம் புதிபிக்கப்பட்டபோது அங்குள்ள கல்லறைகளில் உறங்குபவர்களின் பெயர் பட்டையங்களுடன் ஒரு சுவர் எழுப்பியிருக்கிறார்கள். அங்கு கல்லறை இல்லாவிட்டாலும் பூரன்சிங்கின் பெயர் பட்டயமும் அந்த சுவரில் இருக்கிறது.

கபிலின் பேட்டி ஒலிபரப்பான மறுநாள் லண்டனிலிருந்து ஹார்மெல் உப்பால் என்பவர் “பூரன்சிங் எங்களது பெரிய தாத்தா. அவர் ஆஸ்திரிலியாவிற்கு போய் அனுப்பிய பணத்தில்தான் கிராமத்தில் இருக்கும் எங்கள் “ஆஸ்த்திரேலியாவாலா வீடு’ கட்டியதாக என் தாத்தா, பெரியப்பா எல்லோரும் சொல்லி கேட்டிருக்கிறேன். நான் வந்து அஸ்தியை வாங்கிக்கொள்கிறேன்” என்று போன் செய்கிறார். திருமதி மன்பீரித் சிங்குக்கு வந்த போனை அப்படியே SSB வானொலியில் ஒலிபரப்புகிறார்கள். தொடர்ந்து செய்திகள் வந்த வேகத்தில் ஆஸ்திரிலியா வாழ் சீக்கியர்கள் ஆச்சரியமும், சந்தாஷமும் அடைகிறார்கள் . கடந்த வாரம் (25 july) ஒரு விழாவையே எற்பாடு செய்தது SSB நிறுவனம். மெல்போர்ன் நகரிலிருந்து விசேஷ பஸ்களில் நூற்றுகணக்கில் வந்து பங்கேற்ற அந்த விழாவில் கபில்தேவும், உறவினரும் அஸ்த்தியை பெற்றுகொள்கிறார்கள். அடுத்த வாரம் ஹரித்துவாரில் கங்கையில் கரைக்க திட்டமிட்டிருக்கிரார்கள்.

receipt

மறைந்தவர்களின் அஸ்தி கங்கையில் கரைக்கபட்டால் அவர் மோட்சம் அடைவார் என்பதும் அந்த காரியத்தை செய்தவர்கள் புண்னியம் செய்தவர்கள் என்பது இந்துகளின் நம்பிக்கை. முன்பின் அறியாத ஒரு தனிமனிதனின் மத உனர்வுகளை மதித்து 63 ஆண்டுகள் அவரது அஸ்தியை பாதுகாத்த ஆஸ்திரேலியர் திருமதி ஆலிஸ்கெய்ட் குடுமபத்தினர் தான் உண்மையிலேயே புண்னியம் செய்தவர்கள்.

name-board

Tags: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

 

8 மறுமொழிகள் ஆஸ்திரேலியாவிலிலிருந்து வந்த அஸ்தி

 1. chandrasekar on September 24, 2010 at 5:36 pm

  amazing and touching.
  I will pray for this soul rest in peace and liberated.

 2. R.Sridharan on September 24, 2010 at 6:55 pm

  Kudos to the sincere and kind-hearted Australians and Noble kapil Dev.

 3. snkm on September 24, 2010 at 7:39 pm

  ஒரு முழுமையான ஹிந்துக்களுக்கு வேண்டிய உணர்வு, ஹிந்து மதம் என்பது மதம் இல்லை , நம் கலாச்சாரம் மட்டுமல்ல. உலகம் முழுக்க கடைபிடிக்கப் பட்ட நியதி தான்! அருமை! 1947 இல் இறந்தவரின் அஸ்தியை பாதுகாத்த ஆஸ்த்ரிலேரியர்கள் எங்கே,
  இங்கே இருப்பவர்களுக்கு கிடைக்காமல் போனாலும் பரவாயில்லை, வீணாக்குவோம் ஏழைகளுக்குக் கூட கொடுக்க மாட்டோம் என்ற சொல்லும் இந்தியர்கள் எங்கே!

  எழுமின்! விழிமின்! குறி சாரும் வரை நில்லாது செல்மின்!

  இனியும் உறங்காமல் விழித்தெழுவோம்! ஒன்று படுவோம்! உலகை அன்பால் வென்று எடுப்போம்!
  நன்றி!

 4. R.Sridharan on September 25, 2010 at 4:32 am

  அந்த ஆஸ்திரேலியர்கள் காட்டிய உணர்வுதான் ஹிந்துத்வம்

 5. Rajana on September 25, 2010 at 9:51 am

  இந்த கட்டுரையை படித்தவுடன் ஒரு கணம் மனம் நெஹிழ்ந்து கனத்தது. அவர்களின் மனித நேயயமும் பொறுப்பு உணர்ச்சியும், கபிலின் பெருந்தன்மையும் அறிந்து நாம் எங்கே என்று சிந்திக்கவைத்தது .

 6. Indli.com on September 25, 2010 at 10:12 am

  தமிழ்ஹிந்து » ஆஸ்திரேலியாவிலிலிருந்து வந்த அஸ்தி…

  மறைந்தவர்களின் அஸ்தி கங்கையில் கரைக்கபட்டால் அவர் மோட்சம் அடைவார் என்பதும் அந்த காரியத்தை …

 7. virutcham on September 25, 2010 at 3:04 pm

  அடுத்தவர் உணர்வுகளை மதித்தல் என்பது பற்றி நிறைய கேள்விப் பட்டு இருக்கிறோம். இந்த அளவுக்கா?
  அந்த ஆஸ்திரேலிய தம்பதி, கபில், மற்றும் சம்பந்தப் பட்ட அனைவரையும் பாராட்ட வேண்டும்

 8. VAIDYARAMAN on September 29, 2010 at 2:49 pm

  ஒரு சீக்கியரின் ஹஸ்தி இதுவரை கரைக்க வில்லை என்று ஆச்ரயமாக இருக்கிறது .கபில் இதனை நடத்த முன்வந்தது மிக்க சந்தோஷம்.
  வைத்யராமன் சிட்னி ஆஸ்திரேலியா .

மறுமொழி இடுக:

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.

உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:

தமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.

மறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

*