ரஜினி மகள் திருமண வைபவம்: சில எண்ணங்கள்

“பார்த்தாயா… கடைசியில் ரஜினி நமது இந்து முறைப்படி தான் தனது மகளுக்கு திருமணம் செய்து வைத்திருக்கிறார்!’

எனக்கு தெரிந்த நண்பர்கள் பலருக்கு இதே பேச்சுத்தான். திருமணம் வைதீக முறைப்படி நடந்தது என்பதை சன் டிவி செய்திகளில் கேட்டபோது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. பொதுவாக நடிகர் நடிகைகள் வீட்டு விசேஷங்கள் அவ்வளவு முக்கியமானது அல்ல என்றாலும், ரஜினியின் மகளின் திருமணம் இந்து முறைப்படி நடந்ததும், அதுவும் தமிழ் நாட்டில் இவ்வாறு ஒரு நிகழ்ச்சி – பிரபலமான ஒருவர் வீட்டில் நடப்பது என்பது முக்கியத்துவம் பெறத்தக்கது என்றே தோன்றுகிறது.

rajinikanth_daughter_wedding

வெளிப்படையாக பொது இமேஜைப் பற்றி கவலைப் படாமல் தனது நம்பிக்கை, ஆன்மிகம் இவற்றை வெளிப்படுத்தியதில் இரண்டாவது நபர் ரஜினி. முதல் நபர் சிவாஜி கணேசன். ஒருவகையில் ரஜினி தனது நடிப்புத் தொழிலின் துவக்கத்திலிருந்தே தனது ஆன்மீக நம்பிக்கைகளை மறைத்ததில்லை. ரஜினியால் எத்தனையோ இளைஞர்கள் ஆன்மீகத்தில் ஈடுபட்டு நன்மை அடைந்திருக்கிறார்கள். அது மட்டும் அல்லாமல் இந்து தருமத்தின் அடிப்படைத் தத்துவங்களில் ஒன்றான தானம் என்பதை வெளியே பிரபலப் படுத்திக் கொள்ளாமல் பலருக்கு செய்து வரும் ரஜினி, இதனால் மற்ற நடிகர்களுக்கும் ஒரு உதாரணமாக இருக்கிறார். அவரது அரசியல் நிலை எதுவாயினும் இந்த இரு காரணங்களுக்காக அவரை நிச்சயம் பாராட்ட வேண்டும்.

இந்த திருமணத்தில் தலையில் தலைப்பாகையுடன் ரஜினியும், அவர் அண்ணனும், நெற்றியில் திலகத்துடன் லதா ரஜினிகாந்த், ஊஞ்சல், மாலை மாற்றல், தகப்பனார்(ரஜினி) மடியில் பெண்ணை அமரவைத்து மாங்கல்ய தாரணம் என்று இந்து திருமண நிகழ்ச்சிகள் அனைத்தும் செவ்வையாக நடந்துள்ளது. பகுத்தறிவுக் கோமாளித்தனங்கள் சிறிதும் ஒட்டாத நிறைவான திருமணம். பெரிதாக பேசப்படும் திராவிட இயக்க பாரம்பரியம் நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் என்று வலுவிழந்து போனதை இந்த திருமணத்தில் காண முடிகிறது. வழக்கமாக நடப்பது போல், கருணாநிதி கையால் தாலி எடுத்துக் கொடுப்பது, எதிர்கட்சியின் மீது பெய்யப் படும் வசைகளே மந்திரங்களாக வைத்து பெண்ணின் கழுத்தில் மாங்கல்யம் கட்டப் படுவது போன்ற அவலம் எதுவும் நடக்காமல், தன் மனதுக்கு பிடித்தபடி, தன் குடும்பத்தினர் விரும்புகிற படி இந்த திருமணத்தை நடத்தியிருக்கிற ரஜினியின் நேர்மை மெச்சத் தகுந்தது.

தமிழ் நாட்டில் நாத்தீகம் பேசுவதும், கடவுள் நம்பிக்கை இல்லாதது போல திரிவதும் ஒரு அரசியல் கட்டாயம். கருணாநிதி குடும்பத்திலிருந்து, தி.மு.க போன்ற திராவிட கட்சிகள் பலவற்றிலும், கமலகாசன் போன்ற நடிகர்கள், பொதுவாழ்க்கையில் இருப்பவர்கள் இந்த அரசியல் கட்டாயத்துக்கு அடங்கியே பகுத்தறிவு வேஷம் போடுகிறார்கள். இது ஒரு நீர்க்குமிழி. பல பத்தாண்டுகளாக கம்யூனிஸ்டுகளும் கிறிஸ்தவர்களும் நமது பாடத்திட்டங்களில் செய்த குளறுபடிகளால் மனிதத்தன்மைக்கும், மதச்சார்பற்ற தன்மைக்கும், பகுத்தறிவுக்கும் ஏற்பட்ட தர்ம சங்கடமே இவ்வாறு ஒரு கட்டாயத்தை உருவாக்கி இருக்கிறது.

மதச்சார்பற்ற தன்மை என்பது இந்துக்களுக்கு மட்டுமே போதிக்கப் படுகிறது. மத சார்புள்ளவன் மூட நம்பிக்கையாளன் – பகுத்தறிவுக்கு எதிரானவன். மதச்சார்பு உள்ளவனாலேயே வன்முறைகள் நிகழ்கின்றன. வன்முறையற்ற சமுதாயம் வேண்டும் என்றால் மத நம்பிக்கையை விடவேண்டும். அது தான் மனிதத்தன்மை – என்று திரும்பத் திரும்ப நமது குழந்தைகளுக்கு போதிக்கப் படுகிறது – இதை செய்வது யாரென்றால் கிறிஸ்தவர்களும், கம்யூனிஸ்டுகளும். இவர்கள் செய்வது சுயலாபம் கருதியும், உலகெங்கும் நிராகரிக்கப் பட்டுவிட்ட கம்யூனிஸ்ட் கொள்கைக்காகவும் தான். இந்த எளிய முரண்பாடு மறைக்கப் பட்டு படிக்கிற வயதிலேயே மூளைச் சலவைக்கு நமது குழந்தைகள் ஆளாகி விடுகிறார்கள்.

மேலும் பாமரர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தும் விதத்தில் திராவிடக் கட்சியினர் ஸ்டன்ட்கள் (பிள்ளையாரை செருப்பால் அடிப்பது, ராமர் படத்துக்கு செருப்பு மாலை போடுவது) செய்து அவர்களை புத்தி மயங்கச் செய்கிறார்கள். நாகரீகம் பார்க்கிற யாரும் இவர்களை இவர்கள் விதத்திலேயே எதிர்கொள்ளாமல் இருப்பதாலேயே “பகுத்தறிவு”வியாதிகளின் கேள்விக்கு யாரும் பதில் சொல்லமுடியாது என்று இறுமாந்து இருக்கிறார்கள்.

பகுத்தறிவு பேசுகிற நபர் ஒருவர் இன்னொருவரிடம் சொன்னாராம், “ஏம்பா பெருமாள் கோவிலில் மடப்பள்ளி இருக்கிறதே… அதில் சமைக்கிற உணவை சாப்பிட்டு உங்க பெருமாள் கக்கூஸ் போவாரா?” அதற்கு அந்த இன்னொருவர் செவிட்டில் அறைவது போல பதில் சொன்னாராம் “அதிலென்ன சந்தேகம்… கட்டாயமாக. அதனால் தானே நீயெல்லாம் உலகத்தில் வந்து பிறந்திருக்கிறாய்!” என்று. இந்து ஆன்மீக அன்பர்கள் தீயவர்களும் அல்ல; நாத்தீகம் என்ற பெயரில் இந்து வெறுப்பு கருத்துக்களை மட்டுமே பேசுகிறவர்கள் நல்லவர்களும் அல்ல என்பது மக்களுக்கு உரைக்கிற காலம் வெகு தொலைவில் இல்லை.

வழக்கமாக யார் யார் எப்படி மலம் கழிக்கிறார்கள் என்பது வரை கூர்ந்து கவனித்து கட்டுரை எழுதுகிற விடுதலை பத்திரிகை, இந்த திருமண நிகழ்ச்சியைப் பற்றி வாயைத் திறக்க வில்லை. பகுமானமாக வீரமணி ரஜினி குடும்பத்துடன் எடுத்துக் கொண்ட போட்டோ மட்டும் இன்று வெளியிட்டிருக்கிறது. கல்யாணத்திற்கு வந்து வாழ்த்திவிட்டு போன மு.கவும் வீரமணியும் பகுத்தறிவைப் பற்றி மூச்சுக் கூட விடவில்லை. கழக பிராண்ட் பகுத்தறிவு தோற்றுப் போன விஷயம் எப்போதோ எல்லாருக்கும் புரிந்து விட்டது. மதச்சார்பற்ற தன்மைக்கும் இந்த திராவிடக் கட்சிகள் முன்வைக்கும் பகுத்தறிவுக்கும் இடையில் உள்ள தொடர்பு என்ன என்பது தெளிவாகும் போது, இந்த நாத்தீகம் – பகுத்தறிவு பேசவேண்டும் என்கிற அரசியல் கட்டாய நீர்க்குமிழி உடைந்து விடும்.

49 Replies to “ரஜினி மகள் திருமண வைபவம்: சில எண்ணங்கள்”

  1. திரு. மது அவர்களுக்கு,
    நீங்கள் எழுதியதுபோல் தமிழ்நாட்டில் வேதமுறைப்படி திருமணம் செய்து
    வைப்பதற்கு தைரியம் வேண்டும்.

    ஆனால் அரசியல் கட்டாயத்திற்காக கமலஹாசன் நாத்திக வேஷம்
    போடுகிறார் என்று எழுதியுள்ளீர்கள். பல வருடங்களாக திரு.கமலஹாசனின்
    பேட்டிகளை படித்து வருகிறேன். அவர் உண்மையான நாத்திகராகத்தான்
    எனக்கு தென்படுகிறார். தமிழ்நாட்டில் பெரும்பாலானோர் பொய்
    நாத்திகர்கள் என்று நான் கூற வேண்டியதில்லை.

    சில மாதங்களுக்கு முன்னர்கூட ஒரு நிகழ்ச்சியில் தன் மகள் ஷ்ருதி ஹாசன்
    ஆத்திகர் என்றும், அடிக்கடி கோவிலுக்கு செல்கிறார் என்றும், அதை
    தான் தடுப்பதில்லை என்றும் கூறினார். தமிழ்நாட்டில் உள்ள பொய்
    நாத்திகர்கள் அவர்களின் குடும்பத்தினர் கோவிலுக்கு செல்வதை
    மறைத்துத்தான் பேசுவார்கள்.

    திரு.கமலஹாசன் நாத்திகராக இருக்க அவருக்கு முழு உரிமை உண்டு.
    அவரின் கொள்கைகளை (குறிப்பாக திருமணத்தைப்பற்றின அவரின்
    விளக்கங்களை) நம்மால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை என்றாலும்
    அவர் தமிழ்நாட்டிலுள்ள “இந்து நாத்திகர்களின்” கூட்டத்தில் இல்லை
    என்றே நம்புகிறேன்.

  2. //வெளிப்படையாக பொது இமேஜைப் பற்றி கவலைப் படாமல் தனது நம்பிக்கை, ஆன்மிகம் இவற்றை வெளிப்படுத்தியதில் இரண்டாவது நபர் ரஜினி// திருமாவளவன் போன்ற கிறிஸ்தவர்கள் ரஜினி ஒரு இந்து மதத்தின் மிகப்பெரிய ஐக்கானாக இருக்கிறாரே என்ற காரணத்தாலேயே அவரை அவமதிக்கும் போக்கில் வீரியமாக செயல்பட்டார்கள். கிறிஸ்தவ மிஷனரிகள் சினிமா வி ஐ பி களில் எப்படியாவ்து கிறிஸ்தவர்களை முன்னனியில் நிறுத்திட வேண்டும் என்றும் ஒரு கிறிஸ்தவரையாவது அசைக்கமுடியாத தமிழ் சினிமா ஐக்கான் ஆக்க வேண்டும் என்று களமிறங்கியிருப்பது பலருக்குத் தெரிவதில்லை. நடிகர் ஜோசப் விஜயில் தொடங்கி பலருக்கு இவர்கள் மறைமுகமாக மதரீதியான ஆதரவு தருவது வெளிச்சத்திற்கு இன்னும் வரவில்லை. எப்படி ஹிந்தி சினிமாவில் கான் களின் ஆட்சியை தாதாக்கள் மதத்தீவிரவாதத்தால் உருவாக்கினரோ அதே செயலை தமிழக சினிமாத்துறையில் செய்யக்களமிறங்கி இருப்பது போகப்போகத் தெரியும்! ரஜினி போன்ற முகமூடியில்லாத உண்மையான ஆன்மீக மனிதர்கள் இருப்பது தமிழகத்திற்கு நல்லதே! வாழ்க இந்து தர்மம்! வளர்க அம்மக்கள்!

  3. //நீங்கள் எழுதியதுபோல் தமிழ்நாட்டில் வேதமுறைப்படி திருமணம் செய்து
    வைப்பதற்கு தைரியம் வேண்டும்// மது அவர்களே அப்படி ஒன்றும் தைரியத்திற்கு தமிழகத்தில் குறைவு வரவில்லை. நூற்றுக்கு தொன்னூற்றி ஒன்பது திருமணங்கள் அவரவர் இந்து சம்பிரதாயப்படியே நடக்கின்றன. சிலர் தான் இந்த திராவிட கோமாளிகளின் கூத்தை நம்பி தமது தாய் தந்தையரின் விருப்பத்தை கூட அவமதித்து அரசியல் திருமணம் புரிகின்றனர். அவர்களும் திருந்த வேண்டும் என்பதே நமது எண்ணம். திருந்துவார்கள்!

  4. நாத்திகர் என்பவர் எந்த மதத்தின் மீதும் மதிப்பு வைக்கக் கூடாது
    அல்லது ஒரு மதத்தை மட்டும் இகழ்ந்து மற்றவற்றை கண்டு கொள்ளாமல் விடக் கூடாது
    ஆனால் கமல் ஹசன் ஹிந்து சமயத்தை மட்டுமே அவமதிக்கிறார்.
    மற்ற மதங்களை ஒரு பயம் கலந்த மரியாதையுடன் பார்க்கிறார்

    உதாரணம்: தசாவதாரம் படத்தில் ஹிந்து விரோதம் இழையோடுகிறது.ஆனால் சில இடங்களில் ( மசூதியை காண்பிக்கும் போது) இஸ்லாமை தூக்கிப் பிடிப்பது போல் உள்ளது.என்னதான் இருந்தாலும் ஹிந்துக்கள் பத்வா விட மாட்டார்களே!

  5. ரஜனி, இளையராஜா, விஜயகாந்த் மிகுந்த இறை பக்தி கொண்டவர்கள். இவர்கள் போன்றோர்கள் ஹிந்து மததிற்கு சேவை செய்ய முன்வரவேண்டும். மத மாற்றத்திற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும். ஹிந்து சமயத்தின் மீது பெரும் பற்று கொண்ட திரை துறையினர் பலர் இருக்கிறார்கள். இவர்கள் இந்து மதத்திற்காக உழைக்க வேண்டும்.

    குறிப்பாக தலித்து மதமாற்றத்தை இவர்கள் நினைத்தால் கண்டிப்பாக தடுக்க முடியும்.

    செய்வார்களா ?

  6. நீயா நானா கோபிநாத் ஒரு தமிழ் ஹிந்துவாக ஹிந்து முறைப்படித் தாலி கட்டித் திருமணம் செய்து கொள்வதை இங்கே காணலாம். இதில் மொத்தம் 15 புகைப்படங்கள் உள்ளன. சிலவற்றில் குங்கும நெற்றியும், ஒன்றில் விபூதியும் குங்குமமும் நெற்றியிலும் காணலாம். ஒன்றில் அந்தணர் மந்திரம் சொல்ல வலக்கரத்தை இடக்கரத்தின் மேல் வைத்து சங்கல்பம் செய்வதையும் காணலாம். மணமகள் S துர்கா. நாள்: 5 ஏப்ரல் 2010

    https://gallery.techsatish.net/v/TVActors/NeeyaNaanaGopinathWedding/Neeya+Naana+Gopinath+Wedding010.jpg.html

  7. Kamal Hassan is never sincere in whatever he say. He only wants to show his intelligence to hindus and hinduism. And loves making fun of them.But most of his movies he loves to potray himself as a Iyer or brahmin. Actor who acts both in real and reel life.

    I remember reading one of Aravindan Neelakandan’s articles last time about Kamal Hassan.
    You can read here too..

    ஆபாச பொய்யன் கமல்ஹாசன்

    https://arvindneela.blogspot.com/2008/05/blog-post.html#links

    And one more here.

    Kamal Hassan- Apologetic when Jihadi Feelings Hurt; Arrogant when it’s Hindu Sentiments!

    https://www.haindavakeralam.com/HKPage.aspx?PageID=6475&SKIN=B

  8. ஹிந்து சமயச் சடங்குகளைப் பின்பற்றுவது பாராட்டத் தக்கது என்றாலும் அது மட்டுமே போதாது.
    இன்று பெரும்பாலான ஹிந்துக்கள் கோயில்,பஜனை,பூஜை,யக்னம்,ஹோமம்,ஜபம்,தீர்த்த யாத்திரை,ஆடம்பரக் கல்யாணம் இவைகளை செய்கின்றனர்.அதற்காக பெரும் பொருள் செலவு செய்கின்றனர்.அனால் ஹிந்து சேவை இயக்கங்களுக்கு எந்த உதவியும் செய்வதில்லை.
    ஒரு ஏழை ஹிந்துவை ஒரு ஆயிரம் ரூபாய் கொண்டு மதம் மாற்றுகின்றனர். ஒரு பணக்கார ஹிந்து ஒரு ஆயிரம் ரூபாய் செலவழித்தால் அதைத் தடுக்க முடியும்.

    தங்கள் தர்மத்துக்கு ஒரு ஆபத்து என்றல் அதை எதிர்த்து குரல் கொடுக்க தயங்குகிறார்கள்
    ஹிந்து எதிரிகளின் தோளில் கை போட்டுக் கொண்டு குலவுகின்றனர்.
    வெறுமனே சடங்குகளைச் செய்து கொண்டு ஹிந்து சமுதாயத்துக்கு ஒன்றும் செய்யாமல் இருந்தால் எந்தப் பலனும் இல்லை
    ஹிந்து சமுதாயம் இருந்தால் மட்டுமே இந்த சடங்குகளையும் செய்ய முடியும்
    சுவாமி விவேகானந்தர் கூறியது போல் நம்மைச் சுற்றியுள்ள கோடிக்கணக்கான வறிய ஹிந்துக்களை கரை ஏற்ற வேண்டும்
    அப்போது தான் இந்த நாடு ஹிந்து நாடாக இருக்கும் .
    அப்போது தான் நாம் சுதந்திர சிந்தனைகளுடன் வாழ முடியும். ஏனென்றால் ஹிந்து சமயம் என்பது சுதந்திர சிந்தனைகளின் கருவூலம்.

    ஒரு காலத்தில் காண்டஹரிலும்,லாகூரிலும், ஸ்ரீநகரிலும் ஹிந்துக்கள் தங்கள் சடங்குகளைச் செய்து வாழ்ந்து வந்தனர்
    அனால் இன்று அதெல்லாம் இஸ்லாமிய மயமாக்கப் பட்ட பின் அங்கே யாராவது ஒரு பஜனையோ,வைதீக முறை திருமணமோ, வீதியில் நாம சங் கீர்த்தன செய்ய முடியுமா? ஆகவே ரஜினி போன்றவர்கள் ஹிந்து சமுதாயத்திற்கு் எதாவது செய்ய வேண்டும்.அதற்கு யாராவது ஊறு விளைவித்தால் தைரியமாக எதிர்க்க வேண்டும்.அதற்காக பாடுபடும் இயக்கங்களுக்கு உதவ வேண்டும்.

  9. I differ with balaji’s views on kamal.

    Kamal, like any other atheist in tamilnadu criticises only hinduism.

    If you have keenly seen his films & his actrivities & intervidew over the eyars, you will realise this. He had also written an article in the “ananda vikatan” on a religious place of worship for muslims in a very reverent manner.

    He has taken pot shots on kanchi Sankarachariar & even took an anti hindu stand on the babri masjid issue but was & is silent on the terrorist activities indulged by muslims.

    Also, he starts even his home productions at an auspicious time. No one disputes this as it is his personal matter but for a person who rides roughshod over hindu sentiments, why does he dare not start his film pooja during rahukalam?

  10. ரஜினியின் மகள் திருமணம் நம் கலாசார முறைப்படி நிகழ்ந்தது அவருடைய ஆழ்ந்த ஆன்மீக நம்பிக்கையை பிரதிபலிக்கிறது. தனியாக இமயம் செல்வதும், பாபாவின் வழி நடப்பதும், ராகவேந்திரர் படத்தை 100vadhu படமாக்கியதும், தமிழ் நடிகர்களின் நடுவே மிகுந்த வித்தியாசமான ஒரு பிம்பத்தை ரஜினிக்கு வழங்கியுள்ளது. தன் வளர்ச்சிக்கு அடித்தளமாக இருந்த சிலருக்கு நன்றிக்கடனாக அவ்வப்போது உதவிகரமாக இருப்பதிலும், அவருடைய நல்ல மனம் வெளிப்பட்டு ஒளிர்கிறது.

  11. Why did Rajini let the anti-hindu movement’s head,MK, to preside over his daughter’s wedding, which was after all, a Hindu VEDIC cermony?
    The other question being, why did MK attend a Hindu vedic wedding?

  12. கோபிநாத் இந்த நேர்மையற்ற கூட்டத்தை சேர்ந்தவர் தான். சொல்வது ஒன்று செய்வது இன்னொன்று. குடும்பத்தினர் உணர்வுகளை மதித்தேன் என்று வெண்டைக்காய் விளக்கம் சொல்வார்.
    ஆனால் டிவி பார்ப்பவர்கள் உணர்வுகளை மதிக்க த்தேவையில்லை போலும் . இந்த குப்பை சேனல்களை பார்க்க மாட்டோம் என்று மக்கள் முடிவு செய்தால் ,அப்போது டி ஆர் பீ க்காக ராகம் மாற்றி பாடுவார்கள்.

    கமலஹாசனோ ” நானும் ரௌடி தான் .என்னையும் விளையாட்டுக்கு சேத்துக்குங்க ” ரகம். அவர் பகுத்தறிவு ராகம் பாடினாலும் பார்பனர் என்று அவரை திட்டுபவர்கள் அதிகம். நேர்மையாக இருப்பது இவர்களால் முடியாத காரியம். இப்படிப்பட்ட நேர்மையற்ற “படைப்பாளிகள் “பின்னால் ஒரு சமூகம்.
    இவர்களுக்கு நடுவில் ரஜினிகாந்த் ஒரு அபூர்வ மனிதர் தான்.
    ஆனால் இன்றோ டிவி, சினிமா துறை என்று எல்லாமே ஒரு அதிகார மையத்தின் கீழ் இப்போது . எங்கு போய் நிற்குமோ?
    சரவணன்

  13. முதல் வரியின் கோணம் சரியானதாக தோன்ற வில்லை,
    கன்னிகாதானமா, எந்த முறை என்று தெரியவில்லை.

    இது முக்கியமாக மண மகன் இல்ல சம்பிரதாய கட்டாயத்தினால் செய்யபட்டிருக்கலாம் (எப்பொழுதும் மண மகன் இல்ல சம்பிரதாயமே திருமணத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது)

    ரஜினி அதை செயல் படுத்தி இருக்கலாம். அவ்வளவுதான் !

    அதிகம் விபரம் அறிந்தவர்கள் தெளிவுபடுத்தலாம்

    சஹ்ரிதயன்

  14. //ந.உமாசங்கர்
    “நீயா நானா கோபிநாத் ஒரு தமிழ் ஹிந்துவாக ஹிந்து முறைப்படித் தாலி கட்டித் திருமணம் செய்து கொள்வதை இங்கே காணலாம்”

    The same fellow was anchoring a show in Star Vijay in which this tradition was ridiculed.

    கமல ஹாசன், சைமன் கோபிநாத் போன்று கபட தாரிகள் இந்தியாவில் பலர் உண்டு

  15. ரஜினி எப்டி நடத்தினாலும் பரவால்ல. கமல் எல்லாம் … வேண்டாம் விட்ருங்க விவாதத்துக்கு எடுத்துக்கற அளவுக்கு ??? நோ .. ஆனா பகுத்தறிவு கழகங்கள் மிஷி…. நரிகளை விட குறுக்கு புத்தியும், அழுக்கு மூளையும் கொண்டவை. கொஞ்ச கொஞ்சமா நம் அழகிய கலாசாரத்தை பற்றி கேவலமான கமெண்ட், அசிங்கமமும் வக்கிரமும் கலந்த கலந்தாய்வும், மேடை ஊளைகளும் போட்டு பாமர தூய உள்ளம்,பக்தி கொண்ட மக்களை தீய வழியில் தள்ளி வேடிக்கை பார்பார்கள்,அவர்களின் pocketaium தான்.

  16. ரஜினி அவர்கள் தன் இளைய மகளுக்கும் இந்து முறைப்படி திருமணம் நடத்தியது பாராட்டத்தக்கது…..

    பகுத்தறிவு பேசும் மணிவண்ணன் அவர்களின் மகளின் திருமணத்தின் போது, ரஜினி அவர்களின் கரங்களால் மங்கல மஞ்சள் நாண் (தாலி) எடுத்து கொடுக்கப்பட, இந்து முறைப்படியே திருமணம் நடைபெற்றது…..

  17. க.மல ஹாசன் நாத்திகராய் தன்னை அடையாளம் காட்டிக்கொள்வது அவருடைய சௌகரியம்; அதனால் ஹிந்து சமுதாயத்துக்கு பெரிய இழப்பு ஒன்றும் இல்லை. ஆனால் பாபர் நினைவுச்சின்னம் அகற்ற பட்டபோது உணர்ச்சி வசப்பட்டு நரசிம்ம ராவிடம் பொது நிகழ்ச்சி ஒன்றில் உளறிக்கொட்டியது, ருத்திராட்சம் அணிந்தவர்களை கயவர்களாக காட்டுவது, ஹிந்து கடவுள் சிலையை ரயில் கக்கூசில் பந்தாடிவிட்டு அதற்கு ஒரு வியாக்கியானம் தருவது, மடிசார் கட்டிய அந்தணர் வகுப்பு மகளிரை ஆபாசமாக சித்தரிப்பது இதெல்லாம் அவருக்கு இயல்பாக வரக்கூடிய விஷயங்கள். இந்த துணிவும், கிண்டலும் மற்ற மதத்தினரை பற்றிய விஷயங்களில் தப்பி தவறி கூட வந்துவிடாமல் பார்த்துக்கொள்வதுதான் உலக நாயகனின் சிறப்பு! நல்ல நடிகர்தான், ஆனால் என்ன, எப்போதுமே காமிரா ஓடிக்கொண்டு இருப்பதாக நினைத்துக்கொண்டு தொடர்ந்து நடித்துக்கொண்டு இருப்பார்- அதுதான் பிரச்சினை!

  18. //சில மாதங்களுக்கு முன்னர்கூட ஒரு நிகழ்ச்சியில் தன் மகள் ஷ்ருதி ஹாசன்
    ஆத்திகர் என்றும், அடிக்கடி கோவிலுக்கு செல்கிறார் என்றும், அதை
    தான் தடுப்பதில்லை என்றும் கூறினார்//

    அவரு,தன்னை மாதிரி தன் பெண்ணும் சொந்த வாழ்கையில் தறுதலையாக போய் விட கூடாது என்ற ஒரு எண்ணத்தில் சொல்லி இருக்கலாம். ஏங்க என் நடிகரை திட்டுறீங்க!

  19. Pingback: Indli.com
  20. திராவிடக் கட்சிகள் பேசும் பகுத்தறிவெல்லாம் அவர்களே பயன்படுத்தாத ஒன்று. எனவேதான் அதை அவர்கள் பிறருக்கு சொல்லிக் கொடுத்துக்கொண்டிருக்கின்றனர். ரஜினி என்ற தனிமனிதன் யாருக்காகவும் தனது கொள்கைகளை விட்டுக்கொடாதவர். வாழ்க மணமக்கள்.

  21. போலி நடிகர்கள் இடையே ரஜினி ஒரு நல்ல மனிதர். நல்ல துணிவுள்ள ஹிந்து .அவரை போல நாமும் செல்வத்தில் ,அந்தஸ்தில் ,மேலே மேலே வளர்வோம் . ஹிந்து துரோகிகள் ,நம் காலடியில் .வீழ்வார் இது உறுதி ……

  22. திரு கமல் ஹாசன் அவர்கள் மற்றும் நாங்கள் நாகரீகமானவர்கள் என மற்றவரை மட்டம் தட்ட நினைக்கும் நடிகர்கள் ,அரசியல்வாதிகள் மற்றவர்கள் எல்லாம் நாத்திகத்தை பின்பற்றுவதில் யாருக்கும் கவலையில்லை ஏனெனில் வைதிக சமயம் நாத்திகத்தையும் ஒரு கோட்பாடாக கொண்டு அவர்களை மதித்து அவைக்கு தக்க மறுப்பு கூறுகிறது.
    ஆனால் அவர்கள் ஏனோ நம்பிக்கை கொண்டோர் மனம் புண்படும் படி கூறுவது நாகரீகமோ? ஆனால் இதிலும் கடவுள் நம்பிக்கை கொண்டோரும் தமக்கு பிடிக்காத கடவுளை ஆதாரம் இன்றி குறை கூறுவதும் அவர்களிலும் கேவலமாக உள்ளது. தசாவதாரம் வசனம் எழுதியோர் ஒரு ஆத்திகர் தானே அதில் சைவர்களை எவ்வளோ புண்படுத்தி இருப்பார் இந்த வரலாற்றிக்கு ஏதேனும் ஆதாரம் உண்டோ?
    கல்வெட்டு வரலாற்றின் படி அந்த சோழன் சிவபக்தனாய் இருப்பினும் அவன் திருமால் கோவில்களை கட்டியவனே. சிவபக்தரான, நாயன்மாரான கோசெங்கோட் சோழரும் திருமால் கோவில் கட்டியதை ஆழ்வாரும் பாரட்டினரே?

  23. ரஜனிக்கும் கமலுக்கும் உள்ள இரு பெரும் வித்தியாசங்கள்: ரஜனி கர்நாடகத்தில் வளர்ந்தவர். அவர் பார்பனர் அல்ல. கமல் தமிழ் நாட்டில் அதுவும் கழகங்கள் தலைஎடுத்துக்கொண்டிருந்த காலத்தில் பிறந்து வளர்ந்தவர். அவர் பார்பனர் என்பதால் மிகவும் defensive ஆக இருக்கிறார்.வாழ்க்கையிலும் வேடம் போட்டால்தான் பிழைப்பு நடக்கும் என்று நினைப்பவராக இருக்கிறார்.

  24. 1991-93 ம் வருடங்களில் நான் ஒரு மத்திய அரசு நிறுவனத்தில் தணிக்கையாளராக பணியில் இருந்தேன் . அப்பொழுது” தானா பானா”
    என்றொரு கலாசார நிகழ்ச்சி டெல்லி தொலைகாட்சி நிலையத்தின் தயாரிப்பாக தேசிய ஒளிபரப்பாக வெளி வந்தது. அதில் ஒரு பகுதியாக தமிழ் திரையுலகத்தின் இரு பெரும் நடிகர்களின் ஒரு நாள் நடப்புகளை படம் பிடித்தனர். நான் பணி செய்த நிறுவனத்தில் தொலைக்காட்சி தயாரிப்புக்கான களமும் இருந்தது. அதிலிருந்து இரண்டு தொழில்நுட்ப பணியாளர்களை நிறுவனத்தலைவரின் அனுமதி பெற்று அனுப்பிவைத்தோம் . படப்பிடிப்பு அனுபவங்களை கேட்டபொழுது. இரு நடிகர்களுக்கும் உள்ள உண்மைத்தன்மை தெரியவந்தது . ஒரு நடிகர் படபிடிப்பு குழுவினரை விடியற்காலை தனது வீட்டிற்கு வரச்சொல்லிவிட்டு படப்பிடிப்பு ஆரம்பிக்கும்வரை கண்டுகொள்ளவேயில்லை . இன்னொரு நடிகரிடத்தில் கிடைத்த அனுபவம் எதிர்பாராதது .படப்பிடிப்பு நடந்த இடம் சென்னையிலிருந்து நூறு கி.மீ தொலைவில். திரும்பும் வரை அந்த நடிகர் குழுவினரின் தேவைகளை அடிக்கடி விசாரித்து கொண்டேயிருந்தார் .அதன் பின்னர் நடந்தது எனது நண்பர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது . படப்பிடிப்பு கருவிகளுடன் வான் புறப்பட்டது. ஒரு பெரிய ரெகார்டர் மட்டும் இவர்கள் வைத்திருந்தனர். ஏனெனில், அது கொஞ்சம் விலைஉயர்ந்த கருவி. மிகவும் ஜாக்கிரதையாக கொண்டு செல்லவேண்டும் . நடிகர் நண்பர்களை அழைத்து தனது காரில் அமரச்சொல்லி சென்னை வரை அந்தக் கருவியை தனது மடியிலேயே கவனமாய்க் கொண்டு வந்தார். நேரம் இரவு12 மணி . இனிமேல் வீட்டுக்கு போவது வேண்டாம் .என்று சொல்லி நண்பர்களுடன் இரவு உணவருந்தி மறு நாள் காலையில் காபி கொடுத்து வழியனுப்பிவைத்தார். இந்த அனுபவத்தை சொன்ன நண்பர் முத்தாய் ப்பாய் சொன்னது “நல்ல கலைஞன் என்பது வேறு நல்ல மனிதர் என்பது வேறு”

  25. மக்கள் இன்னமும் க மல ஹாசனை ஹிந்து என்றே நம்புகின்றனர்.

    அவரது பெயர் ஆரம்ப காலத்தில் kamala hasan (கமலஹாசன்) என்றிருந்தது. முதல் விவாகரத்துக்குப் பின்னர் தனது பெயரை அவர் kamal haasan (கமால் ஹா(ஹே)சன் என்கிற இஸ்லாமியப் பெயர்) என்று மாற்றிவிட்டார். எனவே அவர் இஸ்லாமியராக மதம் மாறிவிட்டார் என்றே கருத இடமிருக்கிறது. அவரது பின்னால் நடவடிக்கைகள் இதை உறுதிப்படுத்துகின்றன. இது திரைப் படங்களில் title வரும்போது கவனத்துடன் பார்த்தால் தெரியும்.

    விக்கிபீடியா சொல்லும் ஒரு கதை இங்கே. 2002 இல் டொராண்டோ விமான நிலையத்தில் நிறுத்தியதைப் போல அவரை அங்கங்கே யாரும் தடுக்காதபடி இருக்கவே “தனது தந்தையின் நண்பர் நினைவாக” என்ற இந்தப் புனைவை அவர் செய்திருக்கிறார் என்று நம்ப இடமிருக்கிறது.

    https://en.wikipedia.org/wiki/Kamal_Haasan#cite_ref-yaakob_36-௦

    Kamal Haasan, has also been mistaken for a Muslim due to the Islamic nature of his surname, and was famously stopped for his name at Toronto Airport in 2002.[36] The name had originated from a friend of his father, Yaakob Hassan, a Muslim freedom fighter who spent time in prison with Kamal Haasan’s father whilst imprisoned by the British. Yaakob Hassan had protected Srinivasan from other prisoners who hated them. Later, he paid tribute to his friend by incorporating part of his name into his sons’ names.[37]

  26. இந்த கட்டுரை என்னை ஆச்சரியபடுதுகிறது . தமிழ்நாட்டில் ஹிந்து முறை படி திருமணம் செய்வதுற்கு அவ்வளவு தைரியம் வேண்டுமா ?
    அரசியல் கட்டயங்களுகாக நடக்கும் சில பகுத்தறிவு திருமணங்களை தவிர மற்ற எல்லாமே (திமுகவினர் உட்பட ) ஹிந்து முறை திருமணங்கள் தான். மற்றபடி முகவும் வீரமணியும் கலந்துகொண்டது ரஜினியின் பெருமையை உணர்த்துகிறது

  27. Talking of rajini, when there were 13 bomb blasts during the coimbatore riots when mu.ka was CM, he remarked that hindus were the culprits. When he was criticised for this, he apologised.

  28. //
    Talking of rajini, when there were 13 bomb blasts during the coimbatore riots when mu.ka was CM, he remarked that hindus were the culprits. When he was criticised for this, he apologised.
    //

    I think he didn’t remarked Hindus blantly. But he did mentioned its not them (muslims)
    And yes he was criticized for it.
    But i think it was one of his off days he mentioned something like this.
    But luckily he didn’t open his mouth anything to it after that. 🙂

  29. #
    சபரிநாத்
    8 September 2010 at 10:37 am

    இந்த கட்டுரை என்னை ஆச்சரியபடுதுகிறது . தமிழ்நாட்டில் ஹிந்து முறை படி திருமணம் செய்வதுற்கு அவ்வளவு தைரியம் வேண்டுமா ?
    அரசியல் கட்டயங்களுகாக நடக்கும் சில பகுத்தறிவு திருமணங்களை தவிர மற்ற எல்லாமே (திமுகவினர் உட்பட ) ஹிந்து முறை திருமணங்கள் தான். மற்றபடி முகவும் வீரமணியும் கலந்துகொண்டது ரஜினியின் பெருமையை உணர்த்துகிறது

    நான் மேலே கூறியவற்றுடன் ஒத்துப்போகிறேன்.
    நன்றி
    வாடாமல்லி

  30. நிஜ வாழ்க்கையில் எப்படியோ. சினிமாவில் ரஜினி முன் வைக்கும் ஆன்மிகம் கொஞ்சம் அபத்தம் என்பது என் கருத்து. உண்மையில் கமல் முன் வைக்கும் ஆன்மிகத்தில் ஆழமான கருத்து இருக்கிறது. வெளிப்பார்வைக்கு மத உணர்வுகளைப் புண்படுத்துவது மாதிரி தோன்றினாலும் இந்துமதத்தின் அடிப்படைக் கருத்துகளை படம் நுழுவதும் அழகாகச் சொல்லுகிறார். அவரது ஒரு படத்துக்கும் இன்னொரு படத்துக்கும் ஒரு தொடர்பு இருக்கும். உதாரணம் தசாவதாரத்தில் இஸ்லாமியக் குடும்பத்தை உயர்வாகக் காட்டியது அடுத்தப் படத்தில் இஸ்லாமியத் தீவிர வாதத்தை கையில் எடுக்க முடிவு செய்திருந்ததால் என்று கருத இடமுள்ளது.
    https://wp.me/p12Xc3-aU (பகுத்தறிவு கமலின் படங்களில் இழையோடும் உள்ளார்ந்த ஆன்மிகம் )

  31. பெரும்பாலான இந்துத் திருமணங்கள் வைதீக முறைப்படியே நடக்கின்றன, என்னும்போது ரஜினி வீட்டுத் திருமணம் பேசப்படுவது வியப்பாய் உள்ளது..

    நீயா நானா கோபிநாத் தாலி தேவையா இல்லையா என்று ஒரு நிகழ்ச்சியை நடத்திப் பல பெண்களையும் பேச வைத்து ஒரு மூதாட்டியை அவையினர் நடுவே தாலியைக் கழட்டவும் வைத்தவர். அவர் இப்படித் திருமணம் செய்து கொண்டார் என்னும் செய்தியும் வியப்பை அளிக்கிறது.

    நாத்திகம் என்பது தொன்மையான காலத்தில் இருந்தே இருந்து வரும்போது இவங்க பேசும் இறை மறுப்பு என்பது நாத்திகம் என்ற பெயரில் அழைக்கப் படுவது காலம் செய்த கோலமே!

  32. அன்பர்கள் அனைவருக்கும் எனது பணிவான வணக்கங்கள்,

    இக்கட்டுரை மூலம் ஒன்று மிக தெளிவாக தெரிகிறது. ஆயிரம் பொய்யர்களும், புரட்டுக் கதை அளப்பார்களும் கூட இந்து ஆன்மிகத்தின் மீது திடமான நம்பிக்கை கொண்ட ஒருவரின் முனனால் புளுதியாகிப் போவார்கள் என்பதுதான் அது. ஆவேசம் காட்டாமல், அமைதியுடன் தெய்வத்தை மட்டும் துணையாக எண்ணிக் கொண்டு, உங்கள் ஒவ்வொருவரின் நல் எண்ணத்தை செயலில் காட்டுங்கள். பகுத்தறிவு பேசி பாமரனை ஏமாற்றித் திரியும் பல பரதேசிக் கூட்டங்கள் துண்டைக் காணோம், துணியைக் காணோம் என்று மறைந்தொளிவார்கள். ஒருவரால் ஊரை மாற்ற முடியும் போது, உங்கள் ஒவ்வொருவரால் இந்த உலகத்தையே மாற்ற முடியும்தானே????

    தெய்வத்தின் முன் அகங்காரம் கொண்டவன் புளுதிக்குச் சமானம்.

    சர்வம் சிவக்ரிஷ்ணமயம்.

  33. தங்களுடைய கட்டுரை,இப்பகுதியின் வாசகர் குறிப்பிட்டுள்ளபடி,ரஜனி வீட்டு திருமணம் பற்றி எழுதியுள்ளது வியப்பாய் உள்ளது. தன்னுடைய ரசிகர்களின் சந்திப்பின்போது “கடமையை செய் பலனை எதிர்பார்” என்று எழுதியவர்.தான் நடிக்கும் படத்தில் கீதை புத்தகத்துக்குள் “பலான” புத்தகத்தை மறைத்து வைத்து படமாக்கபட்டதை வேடிக்கை பார்த்தவர்.அக்காட்சியில் இவர் கூட நடித்தவர் ஒரு ‘குருசாமி’.கோடி ரூபாய் கொடுத்தாலும் ஒரு கிறிஸ்தவ நடிகரோ,முஸ்லிம் நடிகரோ தங்கள் மத நூல்களை( பைபிள்,குரான் தவிர) இழிவு படுத்தும் காட்சியில் நடிக்கமாட்டார்கள் .

  34. ரஜினி மகள், மருமகன் இருவரும் ஆயுள் ஆரோக்கியம், சகல சவுபாக்கியங்களும் பெற்று இனிய பிரியாமல் நீடூழி வாழ வாழ்த்துகிறேன்.

    ரஜினி ஆன்மீகத்தில் ஓரளவு ஈடுபாடு காட்டுகிறார் என கருதலாம்.

    ஆனால் அவர் படங்களிலோ புலன் உணரச்சியை தூண்டும் ஆடை குறைப்புக் காட்சிகளுக்கு குறைவு இல்லை.

    மேலும் ரஜினி ஓரளவுக்கு நல்லெண்ணம் உடையவராக இருந்தாலும் பணம் சம்பாரிக்க வேண்டும் என்பதை முக்கியக் குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் எல்லா மனிதர்களையும் போலவே திகழ்கிறார். அதை மாற்றி முழு ஆன்மீக வாதியாக வாழ்ந்தால் அன்றி ரஜினியால் ஆன்மீகத்திற்கோ, இந்து மதத்திற்கோ பெரிய நன்மை எதுவும் ஏற்பட வாய்ப்பு இல்லை.

    இப்ப ரஜினியின் மகள் திருமணத்தை அக்கினி வளர்த்து வேத முறைப்படி செய்து விட்டதால் இந்து மதம் புத்துயிர் பெற்று விட்டதா? ரஜினி ரசிகர்களில் எத்தனை பேர் ராகவேந்திரரை வழி படுகிறார்கள்?

    கமலஹாசன் பட பூஜை போடும் போது தீபாராதனை காட்டினால், ஒத்திக் கொள்ளாமல் இருந்து தன பகுத்த்தரிவை நிரூபிப்பார். ஆனால் அவ்வப் போது , மீண்டும் கோகிலா, அவ்வை சண்முகி, பம்மல் சமபந்தம் போல பிராமணக் குடும்ப சமபந்தப் பட்ட காட்சிகளை படத்தில் வைத்து வெற்றிப் படம் ஆக்குவார். தீடீரென்று நான் கடவுள் இல்லை என்று எப்போது சொன்னேன் என்பார். எப்படி இருந்தாலும் சிவனை அல்லது சைவர்களை வமபிக்கிழுக்கும் வகையிலே மத வெறிக் காட்சிகள் கமல் படத்தில் அடிக்கடி இடம் பெறுகின்றன. பம்மல் சம்பந்தம் படத்தில் சிவன் வேடம் போட்டுக் கொண்டு பப்பில் கம்மை (Buuble gum) வூதி உடைப்பார். அன்பே சிவம் படத்தில் வில்லனாக வரும் நாசர், சிவனே போற்றி கொண்டே கொண்டே வன்முறைக் செயலகளுக்கு திட்டம் போடுவது போல காட்சியமைப்பு இருக்கும். தசாவதாரம் படத்தையும் பலரும் பார்த்து உள்ளனர். இவ்வாறாக ஒரு குறிப்பிட்ட பிரிவினரை சீண்டும் படியாக மத வெறிக் காட்சிகள் பல உள்ளன.

    எல்லோரும் கக்கும் மத வெறி விடத்தை வாங்கி தொணடையில் வைக்க வேண்டிய நிலையிலே இந்து மதம் உள்ளது. இப்போது ரஜினி இல்லத் திருமணம் வேதமுறைப் படி நடந்ததை என்னவோ விவேகானந்தர் சிகாகோவில் பேசிய ரேஞ்சுக்கு எழுதுவது கலக்கல் காமெடியாக உள்ளது.

    ரஜினியும் ஒரு படத்தில் சிவன் போல வேடம் போட்டு பல காமெடி செயல்களை செய்வார். அவர் எந்த தெய்வத்தை வணங்க ரிஷிகேசம் போகிறார் என்று தெரியவில்லை. ரிசிகேசில் இருக்கும் வரை ஒருவரை கடவுளாக கருதி வணங்கி விட்டு, பிறகு இங்கே வந்தவுடன் அந்த வேடத்த்ல் காமெடி செய்வது என்ன ஆன்மீகமோ தெரியவில்லை.

    இந்து மதத்தின் நன்மைக்கு உணமையான ஆன்மீக வாதிகளை உருவாக்குவதே, கண்டு எடுப்பதே சரியான வழி. அரசியல்வாதிகள் சினிமா கவர்ச்சியை ஓட்டாக மாற்ற முயற்சி செய்வது போல ஆன்மீகத்தில் செய்ய முடியுமா என்பது சந்தேகமே.

  35. ரஜினி மகளின் திருமணம், பிராமண முறைப்படி நடந்தது.. அதை ஏன் இந்து முறைப்படி என்று சொல்கிறீர்கள்.. இந்து முறைகள் என்று எங்காவது இருக்கிறதா?

    இந்தியாவில், ஒவ்வொரு ஜாதிக்கும் ஒவ்வொரு திருமண முறை இருக்கிறது.. அதைபற்றியெல்லாம் நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பவில்லை.. இந்து என்ற ஒரு வார்த்தை போதும்.. நம் எல்லா சடங்குகளையும் ஒதுக்கி தள்ள..

    கிறித்துவர்களை போல இந்து இன வெறியர்களாக தயவு செய்து மாறாதீர்கள்.. இது நமக்கு நன்மை செய்யாது.. நம்மை பற்றி ஆழ்ந்த புரிதல் இல்லாமல், வெறும் இந்து இந்து என்று கூப்பாடு போட்டால் எந்த வித பிரயோஜனமும் இல்லை..

    ரஜினியின் மனைவி ஒரு பிராமணர்.. மாப்பிள்ளை ஒரு பிராமணர்.. அதனால், அவர்கள் பிராமண் முறைப்படி திருமணம் செய்கிறார்கள்.. அதுபோல, மற்றவர்கள் அவர்களின் சமுதாய சடங்குகளை செய்கிறார்கள்.. வைசியர்களுக்கு வேறு மாதிரி சடங்குகள்.. சத்திரியர்களுக்கு வேறு மாதிரி சடங்குகள்.. வெள்ளாளர்களுக்கு வேறு மாதிரி சடங்குகள்..

    ஆகையால், இந்து கட்டுரை ஆசிரியருக்கும், விவாதத்தில் பங்கேற்கும் மற்றவர்களுக்கும் ஒரு வேண்டுகோள்.. உங்கள் திருமண முறை என்ன என்று சற்று திரும்பி பாருங்கள்..

    எப்படி கிருத்துவம், இரோப்பிய பகானிசத்தை அழித்ததோ, அது போல, இன்றூ இந்து என்ற அடையாளத்தை வைத்து, பல சமூகங்களின் அடையாளத்தை அழிக்கிறீர்கள்..

    ரெண்டாவது, இந்து இயக்கங்கள் இதுவரை கூப்பாடு போடும் ஒரு அமைப்பாகவே இருக்கிறது… மார்க்சியத்தையும், மிஷனரிகளையும் எதிர் கொள்ள எந்த ஒரு விவேகமான முயற்சிகளையும் செய்யவில்லை.. வெறும் கூப்பாடுதான்.. மதம் மாத்தறாங்க.. மதம் மாத்தறாங்க.. என்று எல்லாரிடமும் அழுது புலம்பரதால் வெறுப்பு தான் மிஞ்சும்.. இவங்களுக்கு வேற வேலையே இல்லைன்னு மக்கள் ஏற்கனவே ஒதுக்கிட்டாங்க.. அவங்க மதம் மாத்தறத தடுக்கிறதுக்கு என்ன வழிகள், அதை செயல் படுத்த வேண்டிய முறைகள், பொருள் ஆதாரங்கள் என் எந்த ஒரு திட்டமிடலும் இல்லை..

    நம்முடைய செயலற்ற தனமை தான் நம் அழிவுக்கு முதற்காரணமாக இருக்கிறது…

    எதிரி நம்மை அழிக்கத்தான் செய்வான்.. அது அவனுடைய குணம்.. ஆனா. நாம் என்ன செய்கிறோம் என்பது தான் முக்கியம்..

    என்னுடைய கருத்துப்படி, இந்த தமிழிந்து வலைப்பதிவு, ஒரு தரமான, உருப்படியான ஒர் செயல்.. ஆனா, இது மட்டும் போதுமா?

  36. திருசிக்காரரே, உங்கள் கருத்து மிக சரியானது. இன்றைக்கு சினிமா கூத்து தான் தேவபடுது ஆன்மிகமானாலும் சரி அரசியல் ஆனாலும் சரி.

  37. வயிற்றுப் பிழைப்புக்கு எவ்வளவு கீழேயும் போய்க்கொண்டிருப்பவர்களால் மதத்தையும் கலாசாரத்தையும் உண்மையாகக் காப்பாற்ற முடியாது. ரஜினி காந்த வைதீக முறைப்படி திருமணம் நடத்த சம்மதிக்கவில்லையென்றால், கமால் ஹாசன் மாதிரியான கண்டவன் தான், மற்றொரு மாப்பிள்ளையாகக் கிடைத்திருப்பான். கமால் ஹாசன் விடுதலைப் புலிகளுக்கு பயந்தும் அவர்கள் இயக்கத்திற்கு வரி கட்டுவதற்கும் பயந்துதான், வீரமணி தயவுடன், திராவிடர் கழகத்தில் உறுப்பினராக மறைந்தார். .

  38. Indeed, the way Mr. Rajani, the Superstar conducted his daughter Selvi Soundarya’s wedding with Selan Aswin, deserves all the praises. His wellknown and acclaimed calmness with no egoism, humility and simplicity were to be seen and appreciated in the wedding pictures and videos which are the most popular now. His spiritual interests, application of dharmik principles in own life and presenting himself as an Asthik even in Nasthik assemblies are all admirable qualities one should imbibe. Mr. Madhu has brought out facts in this article. Well said and congrats.

  39. Mr. Anonymous: Do you assume that Brahmins are non-Hindus? It is such talks and comments that divide Hinduism and become fuel for the other side. Can we not be united and appreciate certain good things that happen against great odds? When the entire State of Tamil Nadu along with its Temples is under the clutches of elements and forces, the so-called followers of Atheism, that have scant respect for Religious Hindu philosophy, but at the same time expressing blatant approval, support and encouragement to other Religions who also worship God in their Forms, Hindus should welcome, appreciate and encourage persons like Mr. Rajnikant. . In this context, I appreciate Mr. R. Sridharan’s views. Hindus have no unity and do not contribute in any manner to support Hindus or Hinduism. Let us all, Hindus shun divisions spitting hatred among ourselves but let us get united and offer helping hand to all Hindu communities through thought, word, deed.

  40. கமலின் தசாவாதாரத்தில் சைவர்கள் எல்லாம் வைணவர்களை கல்லால் எரிந்து கொள்வது போலவும் கொடுரம்மாக சுற்றி நின்றது போலவும் காட்டியிருப்பார் .. இதில் திரு ஞான சம்பந்தர் போன்ற ஒரு சைவ பிள்ளை கல் எறிவது போல காட்டி இருப்பது கவனிக்கத்தக்கது … மேலும் இதில் மன்னனைப் பார்த்து பிற தோஷம் சூழும் என்று கூறுவது போல ” பிரதோஷம் ” என்பதே தோஷம் என்றும் அழகாக கூறி இருப்பார் ..இதை விடுங்கள் வசூல் ராஜாவில் ஒரு வசனம் …. அன்பே சிவம் என்று சொல்ல பிடிக்காமல் சொல்பவனைப் பார்த்து அன்பே வெங்கடாச்சலம் இல்லையா என்று நகைச்சுவையாக கூறுவது போல கூறி இருப்ப்பார் .. மேலும் சாமிநாதன் என்று அந்த ஐயர் மாணவரை கோபி என்றே அழைப்பார்.. என்ன ஒரு வில்லத்தனம் ??? அது விடுங்கள் .. “அன்பே சிவம்” என்று இவர் எப்படி படம் எடுக்கிறார் என்று யோசித்தால் அதில் சிவனை வணங்குபவர்தான் எல்லா வித தவறுகளையும் துணிந்து செய்யும் வில்லன் .. அட இவர் நாத்திக வாதி ஏதோ இன்றுதான் இப்படி மாறினார் என்று இல்லை .. பழைய சத்யா படத்தில் ஒரு சீன்…. பிள்ளையார் கோயில் விபூதியை வைக்கும் தங்கையிடம் கூறுவார் … நீ ஆஞ்சநேயர் கோயிலுக்கு போய்ப் பார் எனக்கு வேலை கிடைக்கும் என்று ….இதை எல்லாம் விடுங்கள் y g மகேந்திரன், ரமேஷ் அரவிந்த் , மாதவன் , சுஜாதா , மதன், எஸ் வீ சேகர் , கிரேசி மோகன் என்று இவர் ஒட்டி உறவாடி தூக்கி வைப்பதெல்லாம் அவாளை மட்டும்தான் .. இவரல்லவோ ஜாதி மதம் பாரா நாத்திக வாதி என்ன கொடுமை சார் இது ?? ( நான் நாத்திக வாதியும் இல்லை.. அவர் எதிரியும் இலை.. நிச்சயமாக .. அவர்மிகப் பெரிய ரசிகன்தான் நான் ) இது எல்லாவற்றையும் விடுங்கள் . ஜாதியை வாழ வைக்க நேரடியாக பிராமணர்களால் எந்த ஒன்றையும் செய்ய முடியாது செய்தால் இந்த பகுத்தறிவு பகலவன்கள் அவர்கள் நையப் புடைத்து விடுவர் எனத்தெரியும் .. இதனால் ஜாதி வெறியை தூக்கிப் பிடிக்கும் தேவர் இனத்தை என்றென்றும் உணர்வு குறையாமல் வைப்பதற்காக போற்றிப் பாடடி பெண்ணே என்றும் பாடி முதல் முறையாக ஜாதிப் பாடல் ஒன்றை உருவாக்கி வளர்த்தார் .. தொடர்ந்து விருமாண்டி என்றொருப் படம் வேறு …அந்த மீடிங்கில் கலந்து கொண்டு தேவர்களை நீங்கள்தான் அரசாண்ட இனம் என்று பாராட்டு வேறு .. சத்தியமாக சகுனிக் கூட இவரிடம் பாடம் படிக்க வேண்டும் .

  41. Hinduism doesn’t have a single point of authority as other religions have. We don’t have a rule book to follow hard and fast. Ours is a set up that functions without any written rules, but based on precedences, advises and suggestions by elders taking issues into proper consideration based on the values set by our forefathers. We don’t keep a count of people in our religion, since our forefathers believed that it is not numbers of members but the quality of members that really counted. My suggestion to people would be to read the report of Lord Macaulay (available in the net for free), about the status of Hindu people when he initially came to India and his suggestion to break the set up to get Christianity in. Bloody cruel and cunning thoughts of an ‘English Gentleman’.

    There are research papers, books and articles nullifying the claim of Aryan invasion, but our sons of the soil politicians refuse to even look at them for their vote bank politics. The lamentation of Mr.Anonymous that nothing constructive in favor of Hinduism and destructive in fervor of the aggressors is done by Hindu leadership is based on facts. Hoopla will not help unless you have the strength matching the hype. Powerful respects only the powerful. This is evident from the retraction of Koran burning by a pastor.

    The prime necessity is for the leaders to sit and get a unitary face for the Hindu people, of course without compromising the traditions of different cults and communities. Then only we’ll be able to put up a spirited fight against the aggressors of our culture.

  42. அடபாவிகளா , இப்படி இந்த போலி ஆசாமிகளை பற்றி ஆராய்ந்து எழுதுகிறீர்களே …என்ன அக்கிரமம்.

  43. மற்றவர்களை நீங்கள் என்ன செய்தீர்கள் என்று கேட்பதற்கு முன் நாம் ஒவ்வொருவரும் நாம் ஹிந்துக்களுக்காக அல்லது ஹிந்து சமயத்துக்காக என்ன செய்தோம் என்ற கேட்டுக் கொள்ள வேண்டும்.

  44. Kamal and Rajini are two different personalities and both are true to themselves.

    Rajini accepted Hinduism and going in that route. Kamal is true to himself. He is not the one who follows the atheism for any political moties. Both are in my opinion two different personalities, but very nice humans.

    They dont act outside. My IMHO only.

    Harish h

  45. கடவுள் நம்பிக்கை என்பது அவரவர் வளரும் சூழ்நிலையைப் பொருத்தது .சிலருக்கு நல்ல வாழ்கை பிறவியிலேயே அமைகிறது . அவர்கள் மனதை செம்மைப்படுத்தி ஆழ்ந்த சிந்தனையில் தனது பிறப்பின் காரண ரகஸ்யங்களை அறிய முற்படுகிறார்கள் . நமது பிரபஞ்ச சக்தியின் மூல காரணங்கள் நமது அறிவுக்கு எட்டாதபோது அந்த சக்திக்கு பல பெயரிட்டு அழைக்கிறோம் , மற்றும் வணங்குகிறோம் . நாம் செய்யும் ஒவ்வொரு காரியத்தையும் அச்சக்தியை சாட்சியாக வைத்து செய்கிறோம் . அவைதான் சடங்குகள். நடிகர் ரஜனி அவர்கள் என்றும் ஹிந்து மதத்தையும், சடங்குகளையும் மதித்து செய்துவருபவர். குரு ராகவேந்திரரின் பக்தர் . அவர் தன் மகளின் திருமணத்தை வேத தர்மத்தின் படி செய்துகொடுத்தது ஆச்சர்யமில்லை. தவிர மணமகன் பிராமண குலத்தை சேர்ந்தவர். இன்று பலர் பணத்திற்காகவும் பெயருக்காகவும் வெளி வேஷம் போடுகிறார்கள். ரஜனி காந்த் அவ்வாறு இல்லாமல் தனது உண்மையான கடவுள் நம்பிக்கையை எக்காரணத்தையும் கொண்டு மறைக்க முயல்வதில்லை. அதுவே அவரது பலம்.

  46. I am surprised to find so much appreciation for rajini conducting his daughter’s marriage in traditional hindu custom.

    What is so great about it? He is a self professing religious hindu, his wife happens to be a brahmin & there are scores of other actors too who have done the same?

    What is so special? Just bcos he is rajinikanth?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *