”காவி” தீவிரவாதமா அல்லது ப.சிதம்பரத்தின் நிறக்குருட்டு பாதிப்பா?

September 2, 2010
By

ரம்பரை காரணமாகவோ, கண்ணிலோ நரம்புகளிலோ கோளாறு ஏற்பட்டதன் காரணமாகவோ, மனிதர்களுக்கு நிறக்குருடு பாதிப்பு ஏற்படுகிறது. இந்த பாதிப்பு உள்ளவர்களால், சில நிறங்களை பகுத்தறிய முடிவதில்லை. அதாவது நீல நிறம் சிலருக்கு நீல நிறமாகத் தோன்றாமல் போகலாம். சிலருக்கு பச்சை நிறம் கூட காவி நிறமாகவே தெரியும்.

மருத்துவ என்சைக்ளோபீடியாவிலிருந்து.

p_chidambaramடந்த வாரம் (ஆக. 25 ) புதுதில்லியில் நடந்த, மாநில காவல்துறை தலைவர்கள் (டி.ஜி.பி) மாநாட்டில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், ”நாட்டில் காவி பயங்கரவாதம் (saffron terrorism) புதிய சவாலாக உருவெடுத்துள்ளது. பல்வேறு பகுதிகளில் நடந்த குண்டுவெடிப்புகளுக்கு காவி பயங்கரவாதம் காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது” என்று திருவாய் மலர்ந்தருளினார்.

நாட்டின் சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற வேண்டிய- உள்நாட்டுப் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பில் உள்ள காவல்துறை தலைவர்கள் மாநாட்டில் சிதம்பரம் இவ்வாறு பேசி இருப்பது பலத்த கண்டனங்களை உருவாக்கி உள்ளது. தனது பேச்சுக்கு அவர் வேறு எந்த ஆதாரமும் காட்டவில்லை. போகிற போக்கில் காவி பயங்கரவாதம் பற்றி குறிப்பிட்டு, தனது மேதாவித் தனத்தையும் இத்தாலி அம்மையாரிடம் தனது விசுவாசத்தையும் காட்டியிருக்கிறார், ப.சி.

இது காவல்துறையை தவறாக வழிநடத்தவே என்பது வெளிப்படை. மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சி, பல முனைகளிலும் (விலைவாசி உயர்வு, வெளிநாட்டுக் கொள்கையில் தோல்வி, எல்லைப் பாதுகாப்பு மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்பில் அலட்சியம், அண்டை நாடுகளுடன் நட்புறவில் பாதிப்பு, கட்டுங்கடங்காத ஊழல், இன்னும் பல) பரிதாபகரமான தோல்வியைச் சந்தித்துவரும் நிலையில், மக்களின் கவனத்தை திசைதிருப்ப ப.சி. வீசிய கல்லாகவே இந்த புகார், தோற்றம் அளிக்கிறது.

எதிர்பார்த்தது போலவே, நாடு முழுவதும் ப.சி.பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதன் மூலமாக, ஊடகங்களின் கவனத்தைப் பெற்று, மத்திய அரசில் தவிர்க்க முடியாத சக்தியாக தன்னை ப.சி. இனம் காட்டிக் கொண்டுள்ளார். ம.பி. முன்னாள் முதல்வர் திக்விஜய் சிங், தமிழகத்தின் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் போன்றோர் இதே விளையாட்டை இதற்கு முன் பலமுறை ஆடியிருக்கிறார்கள். சென்னை ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தை இஸ்லாமிய வெறியர்கள் குண்டுவைத்து தகர்த்தபோது (08 .08 .1993 ) சற்றும் கூச்சமில்லாமல், ‘இந்த குண்டை ஆர்.எஸ்.எஸ்.காரர்களே வைத்திருக்கக் கூடும்’ என்று வக்கணை பேசியவர் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம். 2008 – ல் நாட்டில் ஹிந்து பயங்கரவாதம் பரவுவதாக அங்கலாய்த்தவர் திக்விஜய் சிங். அவர் வழிவந்த ப.சி.யும் அதே பாதையில் பயணிக்கிறார்.

ப.சி. யாரையும் தனது உரையில் குறிப்பிடவில்லை என்றாலும், ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட இந்து அமைப்புகளை குறிவைத்தே அவர் பேசி இருக்கிறார். இதற்கு ஆர்.எஸ்.எஸ். மூத்த தலைவர் சுரேஷ்ராவ் ஜோஷி கண்டனம் தெரிவத்தார். ”உள்துறை அமைச்சரின் பேச்சு, ஒட்டுமொத்த இந்து சமுதாயத்தையும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தும் வன்மமான முயற்சி” என்று அவர் கண்டித்தார்.

rss_rally_with_saffron_flagஆர்.எஸ்.எஸ். செய்தித் தொடர்பாளரான ராம் மாதவ், ”துணிவிருந்தால், காவி பயங்கரவாதம் என்றால் என்ன என்று ப.சி. தெளிவாக விளக்க வேண்டும். போகிற போக்கில் அவதூறுகளை அள்ளித் தெளிக்கக் கூடாது” என்று காட்டமாக விமர்சித்தார் .

பிரதான எதிர்க்கட்சியான பா.ஜ.க.வும். ப.சி.யின் பிதற்றலை கடுமையாக விமர்சித்தது. அக்கட்சி, பொது நிகழ்வுகளிலும் நாடாளுமன்றத்திலும், ப.சி.யின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகிறது. ”காவி நிறம் நமது நாட்டின் பாரம்பரிய சின்னம். அதை எப்படி ப.சி. மாசுபடுத்தலாம்? அவர் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும். அல்லது அவரை அமைச்சர் பதவியில் இருந்து பிரதமர் மன்மோகன் சிங் நீக்க வேண்டும்” என்று கோரினார் பா.ஜ.க. மாநிலங்களவை உறுப்பினரும் பத்திரிகையாளருமான பல்பீர் புஞ்ச்.

ப.சி.யின் பேச்சு நாட்டில் சர்ச்சையை ஏற்படுத்திவிட்டதை உணர்ந்த காங்கிரஸ் கட்சி தற்காப்பு ஆட்டத்திற்கு தயாரானது. அக்கட்சியின் தலைவர்களுள் ஒருவரான ஜனார்த்தன் த்விவேதி, ”பயங்கரவாதத்திற்கு எந்த நிறமும் கிடையாது. அதன் உண்மையான நிறம் கருப்பு மட்டுமே. எந்த வடிவில் இருந்தாலும் பயங்கரவாதம் அழிக்கப்பட வேண்டும்” என்றதுடன், ” பாரதத்தின் பாரம்பரியத்திலும், சுதந்திரப் போராட்டக் காலத்திலும் காவி நிறத்திற்கு நிரந்தர இடமுண்டு. யாரும் வார்த்தைகளை பிரயோகிக்கும்போது மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும்” என்று ப.சி.க்கு அறிவுரை வழங்கினார்.

சிதம்பரத்திற்கு மூன்று கேள்விகள்:

• நாகலாந்தில் கிறிஸ்தவ பாதிரியார்களின் ஆதரவுடன் நடத்தப்படும் பிரிவினைவாதப் பிரசாரத்தையும், அங்கு நடக்கும் வன்முறைகளையும், வெள்ளைநிற (அது தான் கிறிஸ்தவர்களின் நிறமாம்!) பயங்கரவாதம் என்று கூறுவீர்களா?
• நாட்டின் பல மாநிலங்களில் தலைவிரித்தாடும் நக்சல் பாதிப்பு பகுதிகளில் சிவப்பு (அது தான் உங்கள் பாணியில் மாவோயிஸ்ட்களின் நிறம்) பயங்கரவாதத்திற்கு கிறிஸ்தவ அமைப்புகள் உதவுவதையும் சிவப்பு- வெள்ளை பயங்கரவாதம் என்று கூறுவீர்களா?
• காஷ்மீரில் கல்லெறிந்தே பாதுகாப்புப் படையினர் பல்லாயிரம் பேரை படுகாயப்படுத்திய பாக். ஆதரவு கும்பல்களை பச்சை பயங்கரவாதிகள் என்று கூறும் துணிவு உங்களுக்கு உண்டா?

IND18107Bபா.ஜ.க.வின் உ.பி. மாநிலத் தலைவாரன் கல்ராஜ் மிஸ்ரா, ”காவி பயங்கரவாதம் என்ற பெயரில் மக்களை பிரித்தாளும் சூழ்ச்சியில் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளது” என்று கண்டித்தார். பா.ஜ.க.வின் அகில பாரதத் தலைவரான நிதின் கட்கரியோ, ” ஓட்டுவங்கிக்காக காங்கிரஸ் எந்த எல்லைக்கும் செல்லும் என்பதை ப.சி.பேச்சு நிரூபித்துள்ளது. சிறுபான்மையினரை குஷிப்படுத்த வேண்டும்; தாஜா செய்ய வேண்டும் என்பதே அக்கட்சியின் ஒரே நோக்கம். அதன் தொடர்ச்சியே இது” என்று குற்றம் சாட்டினார்.

இவ்விவகாரம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிரொலித்தது. பா.ஜ.க, சிவசேனை கட்சியினர், அமைச்சர் ப.சி. பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ”ப.சி.யின் பேச்சு, நாடாளுமன்ற அவையில் உள்ள பல உறுப்பினர்களை ஜாடையாக தாக்குகிறது. இந்தப் பேச்சால் அவையின் பெரும்பாலான உறுப்பினர்கள் மனம் புண்பட்டுள்ளது” என்று மாநிலங்களவையில் அருண் ஜேட்லி பேசினார். வழக்கம்போல, மார்க்சிஸ்ட் கட்சியினரும் லாலு கட்சியினரும் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ் கட்சியை ஆதரித்தனர்.

நிலைமை சிக்கலாவதை உணர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங்கும், அவர் பங்குக்கு, ‘பயங்கரவாதத்திற்கு எந்த நிறமும் கிடையாது” என்று மழுப்பினார். அதே சமயம் ”நாட்டில் சில இடங்களில் நடந்த குண்டுவெடிப்புகளில் ஆர்.எஸ்.எஸ்.ஸுக்கு தொடர்பு இருப்பதை மறுக்க முடியாது” என்று வழக்கமான பிலாக்கணத்தைப் பாடினார்.

தங்களது இந்தப் பேச்சுக்கு பின்னணியில், மகாராஷ்டிராவின் மாலேகான் (செப். 2006), சம்ஜாதா எக்ஸ்ப்ரஸ் ரயில் (பிப். 2007), ஆந்திராவின் ஐதராபாத் மசூதி (மே 2007), ராஜஸ்தானின் ஆஜ்மீர் தர்கா (அக். 2007 ), குஜராத்தின் மொடாசா (செப். 2008), ஆகிய இடங்களில் நடந்த குண்டுவெடிப்புகளை காங்கிரஸ் கட்சியினர் காரணமாகக் காட்டுகின்றனர். உண்மை என்ன? இதற்கு, சில முன் நிகழ்வுகளுக்கு நாம் செல்ல வேண்டும்.

மாலேகான் குண்டுவெடிப்பும், மற்ற நிகழ்வுகளும்:

மகாராஷ்டிரா மாநிலத்தின் நாசிக் அருகிலுள்ள சிறு நகரம் மாலேகான். இங்கு, 2006 , செப். 8 -ம் தேதி பல இடங்களில் குண்டு வெடித்தது. இதில் 38 பேர் கொல்லப்பட்டனர். 200-க்கு மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த பயங்கரம் தொடர்பாக ‘சிமி’ என்ற முஸ்லிம் பயங்கரவாத அமைப்புக்கு தொடர்பிருப்பது ஆரம்பத்தில் தெரிய வந்தது.

ஆனால், சில நாட்களில் விசாரணையின் திசை மாற்றப்பட்டு, அபிநவ பாரத சங்கம் (வீர் சாவர்க்கர் விடுதலைப் போராட்டக் காலத்தில் நடத்திய அமைப்புக்கும் இதே பெயர் தான்) இவ்வழக்கில் சேர்க்கப்பட்டது. இது தொடர்பாக பெண்துறவி பிரக்யா சிங் தாகுர், முன்னாள் ராணுவ அதிகாரி லெப்.கர்னல் பிரசாத் புரோகித் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர்.

pragya_thakur_arrestஇவ்வழக்கே, ஹிந்து பயங்கரவாதம் குறித்த கட்டுக்கக்தைகள் பரவக் காரணமானது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் கடும் சித்ரவதைக்கு ஆட்படுத்தப்பட்டு, ஒப்புதல் வாக்குமூலம் அளிக்க நிர்பந்திக்கப்பட்டனர். உண்மையான குண்டுவெடிப்பு குற்றவாளிகளைத் தவிர்த்த காவல்துறை, பெண் துறவியையும் முன்னாள் ராணுவ அதிகாரிகளையும் வழக்கில் குற்றம் சாட்டியது. இது ஏற்கனவே நாட்டில் மத துவேஷத்தைப் பரப்பிவரும் இஸ்லாமிய வெறியர்களுக்கு வசதியாகப் போய்விட்டது. அவர்களுக்கு நமது ‘மதசார்பற்ற’ ஊடகங்களும் பேருதவி செய்தன.

இவ்வழக்கில் இன்னும் விசாரணை முடிந்து குற்றப்பத்திரிகை முழுமையாக தாக்கல் செய்யப்படவில்லை. இவர்கள் இப்போதைக்கு குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்கள் மட்டுமே. இவர்கள் இதனை மறுத்து வருகின்றனர். இவர்கள் மீதான குற்றத்தை நிரூபிக்க ஆதாரம் இல்லாமல் மகாராஷ்டிரா காவல்துறை திணறி வருகிறது. இதுவரை மாலேகான் குண்டுவெடிப்பு தொடர்பான வழக்கில் உறுதியான எந்த ஆதாரமும் அபிநவ பாரத சங்கம் மீது காட்டப்படவில்லை. ஆனால், இந்த வழக்கைக் காட்டியே நாட்டில் ஹிந்து தீவிரவாதம் பரவி வருவதாக குற்றம் சுமத்தப்படுகிறது.

விஷயம் இத்துடன் நிற்கவில்லை. இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் செல்லும் சம்ஜவுதா ரயிலில் 2007 பிப்ரவரியில் நடந்த குண்டுவெடிப்பிலும் அபிநவ பாரத சங்கத்திற்கு தொடர்பிருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த சம்பவத்தில் கொடூரமான ஆர்.டி.எக்ஸ் வெடிமருந்து பயன்படுத்தப்பட்டது. இதில் 68 பேர் பலியாகினர்; 200 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சதியில் லஸ்கர்-எ-தொய்பா அமைப்பும் அல்-குவைதா அமைப்பும் தொடர்பு கொண்டிருப்பதாக அமெரிக்க உள்துறை அமைச்சகம் தகவல் அளித்தது. அண்மையில் அமெரிக்காவில் சிக்கிய டேவிட் ஹெட்லியும் தனது வாக்குமூலத்தில் இது தொடர்பான தகவல்களைக் கூறியுள்ளதாக தகவல். ஆனால், உண்மைக் குற்றவாளிகளைத் தவிர்த்து, இவ்வழக்கிலும் பெண்துறவி பிரக்யா சிங் தாகுர் சேர்க்கப்பட்டார்.

இதே போல, 2007 மே மாதம் ஐதராபாத் மசூதி அருகே நடந்த குண்டுவெடிப்பு (இதிலும் துவக்கத்தில் இஸ்லாமிய அமைப்பினர் கைது செய்யப்பட்டு, பிறகு பல்வேறு நிர்பந்தங்களால் விடுவிக்கப்பட்டனர்), 2007 அக்டோபரில் ஆஜ்மீர் தர்கா அருகில் நடந்த குண்டுவெடிப்பு, 2008 செப்டம்பரில் குஜராத்தின் மொடாசாவில் நடந்த குண்டுவெடிப்புகளிலும் அபிநவ பாரத சங்கம் குற்றம் சாட்டப்பட்டது.

இந்த அமைப்புடன் ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு தொடர்பு இல்லை. என்றபோதும், குண்டுவெடிப்பு குற்றவாளிகளைத் தப்பவிட்டுvவிட்டு, அப்பாவி ஹிந்துக்களையும் முன்னாள் ராணுவ அதிகாரிகளையும் கைது செய்துள்ளதை ஆர்.எஸ்.எஸ். கண்டித்து வருகிறது. எனவே தான், அபிநவ பாரத சங்கத்துடன் ஆர்.எஸ்.எஸ். இணைத்துப் பேசப்படுகிறது.

சிறைக்குள் உள்ளவர்கள் எப்படி அடுத்தடுத்த குண்டுவெடிப்புகளில் ஈடுபடுவார்கள் என்ற சாதாரண ஞானமும் கூட இல்லாமல், காங்கிரஸ் காரர்களால் வழிநடத்தப்படும் காவல்துறையினர், பிரக்யா சிங் தாகுர் உள்ளிட்டோர் மீது வழக்குகளை தொடர்ந்து தொடுத்து வருகின்றனர். அதே சமயம் உண்மைக் குற்றவாளிகள் எந்த அச்சமும் இன்றி வெளியில் சுதந்திரமாக உலா வருகின்றனர். அவர்கள் காங்கிரஸ் கட்சிக் கூட்டங்களில் முழங்கவும் துவங்கிவிட்டனர். என்.டி.டி.வி. போன்ற சில ஊடகங்கள், தங்கள் வழக்கமான ஹிந்து விரோத பிரசாரத்திற்கு கிடைத்த அவலாக இந்த விவகாரத்தை ஊதிப் பெரிதாக்கின. ‘ காவி பயங்கரவாதம் ‘ என்ற வார்த்தையே என்.டி.டி.வி.யால் உற்பத்தி செய்யப்பட்டது தான்.

உண்மையில், அபிநவ பாரத் சங்கம் மீதான குண்டுவெடிப்பு வழக்குகள் புனையப்பட்டவையாகவே (fabricated ) காணப்படுகின்றன. கர்நாடகத்தின் பெங்களூரு நகரில் நடந்த குண்டுவெடிப்புகளில் கேரளத்தின் மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் அப்துல் நாசர் மதானிக்கு தொடர்பிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அவரை கைது செய்ய முயற்சி நடந்தபோது கேரளத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. குற்றம் சாட்டப்பட்டதாலேயே மதானி குற்றவாளி ஆகிவிட மாட்டார் என்று முஸ்லிம் அமைப்புகள் கருத்து தெரிவித்தன.

Islamic terroristஇன்று, தமிழகத்திலும் கூட, மதானி கைதுக்கு கண்டனம் தெரிவித்து முஸ்லிம் அமைப்புகள் ஆர்பாட்டம் நடத்தி வருகின்றன. இதே முஸ்லிம் அமைப்புகளும் காங்கிரஸ் கட்சியும் தான், எந்த குற்றமும் நிரூபிக்கப்படாத அபிநவ பாரத சங்கத்தைக் காரணம் காட்டி, நாட்டில் காவி பயங்கரவாதம் பரவி வருவதாக பிரசாரம் செய்கின்றன.

தமிழகத்தில் பல இடங்களில் குண்டு வைத்தவர்கள், மகா யோக்கியர்கள் போல, ‘காணீர்… ஹிந்து பயங்கரவாதத்தின் கோர முகத்தை’ என்று இதே தமிழகத்தின் பல பகுதிகளில் சுவரொட்டி ஒட்டிக் கொண்டுள்ளனர். அவர்களுக்குத் தான், ப.சி.யின் பேச்சு உதவியுள்ளது. குண்டு வைத்தவர்கள் உபதேசம் செய்வதும், பாதிக்கப்பட்டவர்கள் மீதே குற்றம் சாட்டப்படுவதும், உலகில் வேறு எங்கும் காணாத புதுமை. அது நம் நாட்டில் தான் நிகழ முடியும். ஹிந்துக்கள் ப.சி. கூறுவதுபோல குண்டு வைப்பவர்களாக இருந்திருந்தால், யாரும் இவ்வாறு ஹிந்துக்களுக்கு ‘பட்டம்’ சூட்டிக் கொண்டிருக்க மாட்டார்கள்.

அந்தக் காலத்திலிருந்து (அதாவது நேரு காலத்திலிருந்து) இன்றுவரை காங்கிரஸ் தன போக்கை மாற்றிக் கொள்ளவில்லை. இக்கட்சியின் சுயநல நடத்தையால் தான் நாடு துண்டானது. தற்போதும், நாட்டின் பல பகுதிகளில் பிரிவினை வாதம் தலைதூக்கியிருக்கிறது. காங்கிரஸ் திருந்தப் போவதில்லை என்பதையே ப.சி.யின் பேச்சு நிரூபித்திருக்கிறது.

நாட்டின் மீது நேசம் கொண்டவர்கள், இத்தகைய கிறுக்குத்தனமான பிதற்றல்களைக் கண்டும்காணாமல் இருந்துவிடக் கூடாது. நம்மால் இயன்ற முறைகளில், இத்தகைய பிதற்றல்களுக்கு சரியான பதிலடி கொடுக்க வேண்டும். அப்போது தான் நிறக்குருடு நோயால் பாதிக்கப்பட்ட அரசியவாதிகளிடமிருந்து நமது நாட்டை நம்மால் காக்க முடியும்.

நிறத்தை மாற்றுவதும் லாபம் தான்!

இந்தச் செய்திக்கும் கட்டுரைக்கும் எந்த நேரடியான தொடர்பும் இல்லை. அரசுடமையாக்கப்பட்ட ஒரு தேசிய வங்கி அது. அதன் லோகோ அண்மையில் மாற்றப்பட்டது. எனவே, உலகம் முழுவதும் அந்த வங்கியின் பெயர்ப்பலகைகள் மாற்றப்பட வேண்டியதாயிற்று. அதற்கான பணி ஒப்பந்தம் முக்கிய மத்திய அமைச்சர் ஒருவரின் இளவலுக்கு வழங்கப்பட்டது. அந்த ஒப்பந்தத்தின் மதிப்பு எவ்வளவு தெரியுமா? கொஞ்சம் தான்… ரூ. 800 கோடி மட்டுமே! வங்கியின் பெயர்ப்பலகையின் நிறத்தை மாற்றுவதற்குத் தான் இந்த செலவு! ஒப்பந்தத்தைப் பெற்றவர் யார் என்று கேட்காதீர்கள். அது ……. ரகசியம்!

Tags: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

 

59 மறுமொழிகள் ”காவி” தீவிரவாதமா அல்லது ப.சிதம்பரத்தின் நிறக்குருட்டு பாதிப்பா?

 1. C.N.Muthukumaraswamy on September 2, 2010 at 12:30 pm

  கதர் கிழிஞ்சா தைக்க முடியாது; காங்க்ரஸ்காரன் கெட்டா திருத்த முடியாது என்பது என் கல்லூரி நாட்களில் கேட்ட அரசியல் அனுபவமொழி. காங்கிரஸ்காரர்களில் சிதம்பரம் , சி.எஸ் போல ஒரு நல்லமனிதர் என்று நினைத்திருந்தேன். அதைப் பொய்யாக்கிவிட்டார். தானுமொரு சந்தர்பவாத காங்கிரஸ்காரர்தான் என்பதைக் ‘காவிய’யைப் ப்ற்றிய தன் பொன்மொழியால் மெய்ப்பித்துவிட்டார். அந்நிய ஆதிக்கத்துக்கு எதிராகப் பட்டொளி வீசிப் பற்ந்த கொடிகளில் முதன்மையானது காவிக்கொடி என்ற வரலாற்றை நம் அரசியல்வாதிகள் வசதியாக மறந்து விட்டார்கள்.காவிநிறம் தியாகத்தின் நிறம். உண்மைத் துறவின் நிறம். துறவி ஒருவர் ப.சி.யின் பேச்சால் இந்த நிறத்துக்கு ஏற்பட்டுள்ள அவமானத்தைக் களையக் கிளர்ந்தெழுந்துள்ளது பாராட்டுக்குரியது.

 2. Indli.com on September 2, 2010 at 1:36 pm

  தமிழ்ஹிந்து » ”காவி” தீவிரவாதமா அல்லது ப.சிதம்பரத்தின் நிறக்குருட்டு பாதிப்பா?…

  ப.சி.யின் பேச்சு நாட்டில் சர்ச்சையை ஏற்படுத்திவிட்டதை உணர்ந்த காங்கிரஸ் கட்சி தற்காப்பு ஆட்…

 3. jagan on September 2, 2010 at 1:58 pm

  தமிழ்ஹிந்து இணையதளத்தில் தீவிரவாத பிரச்சாரங்களை தொடர்ந்து செய்துவரும் காவி இந்துத்தீவிரவாதிகளை ப.சிதம்பரத்தின் உண்மைப்பேச்சு நடுங்க வைத்துள்ளது.
  பயத்தின் அடையாளமாக தான் இந்துதீவிரவாதிகள் கொய்யோ கொலையோ என நடுங்குகிறார்கள்.
  மத்திய அரசு இந்துதீவிரவாதிகளை ஒழித்து அழித்து சின்னாபின்னப்படுத்தி இந்துத்தீவிரவாதிகளிடமிருந்து அப்பாவி மக்களை காக்கவேண்டும்.

 4. சோமசுந்தரம் on September 2, 2010 at 2:06 pm

  அவர் கண்ணாடி அணிந்து உள்ளத்தால் அது நிற குருட்டு இல்லை. அது அவரின் மனக்குருட்டு.
  இது போன்ற துஸ்பிரயோகங்களை அவர் அவ்வப்போது செய்வதுண்டு. அவர் பங்கேற்ற இஸ்லாமிய மாநாட்டில் தான் ‘வந்தேமாதர’ பாடலை பாட எதிர்ப்பு வந்தது.
  காரைக்குடியை சுற்றி பல ஆலயங்கள் அவரின் சமுகத்தால் கட்டப்பட்டு உள்ளது. அவர் தமிழ் நாட்டை சேர்ந்தவர் என கூறுவதில் அவர் சிறுமை கொள்ளவேண்டும். சுயநல அரசியல் வாதிகளின் பட்டியலில் அவருக்கு முதல் இடம் கொடுக்கலாம்.

 5. Ram on September 2, 2010 at 2:07 pm

  RSS மற்றும் ப.ஜ.க-வை குறி வைத்தே சிதம்பரம் இதை பேசினார். அவருடைய கட்சியில் பல பேர் Maoist தீவிர வாதிகளுக்கு ஆதரவு தருகின்றனர். மாவ்யஸ்ட்-களின் போராட்டம் ஞாயம் ஆனது என்கின்றனர். அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்கின்றனர். இந்தியாவை பிரிக்க வேண்டும் அன்று துடிக்கும் காஷ்மீர் பிரிவினையாளர்களுடன் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்கிறார் இந்த சிதம்பரம்.
  அனால் ஹிந்துக்களில் சிலர் ஏன் தீவிரவாதிகள் (??- Even if we accept that his utterances as true) ஆயினர் என்பதை அறிய யாருடனாவது பேச்சு வார்த்தை நடத்தினாரா. ஏன் தன் சொந்த நாட்டில் ஒரு ஹிந்து தீவிர வாதியாக வேண்டும். அவர்கள் தரப்பில் ஏதேனும் ஞாயம் உள்ளதா என்பதை ஏன் உள்-துறை அமைச்சர் ஆராயவில்லை. ஒரு அமைச்சராக உள்ளவர் பிரச்னையை தீர்த்து வைக்க முயல வேண்டும். அவர் பேசியது முழுக்க முழுக்க அரசியல் தான். நாட்டின் மீது ஒரு துளி அக்கறையும் அதில் இல்லை.

 6. தஞ்சை வெ.கோபாலன் on September 2, 2010 at 2:35 pm

  மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் அவர்களுக்குத் தான் அதி மேதாவி என்ற எண்ணம் இன்று அல்ல, பல ஆண்டுகளுக்கு முன்பே ஏற்பட்ட ஒன்று. பொறுப்புள்ள அமைச்சர் என்ன செய்ய வேண்டும்? இவர் காவி பயங்கர வாதம் என்கிறார் அல்லவா அது பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்., விஸ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தளம் போன்ற இயக்கங்களை மனதில் வைத்துக் கொண்டு சொல்லுகிறார். சரி, இதற்கு வலதுசாரி இந்து இயக்கங்களினால் செய்ததாகக் கூறப்பட்ட சில நிகழ்வுகளைச் சுட்டிக் காட்டுகிறார். அந்த வழக்குகளில் இந்து இயக்கங்கள் தான் காரணங்கள் என்பதை நிரூபித்து விட்டார்களா? அப்படி நிரூபித்திருந்தால் அந்த இந்து இயக்கங்கள் ஏன் தடை செய்யப்படவில்லை. அதுபற்றிய விரிவான வெள்ளை அறிக்கையை சிதம்பரம் ஏன் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை? இதையெல்லாம் கேட்பவர்கள் கை தட்ட வேண்டும் என்கிற கேவலமான ஆசையாலும், தான் அதி மேதாவி என்கிற ஆணவத்தாலும் சொல்லப்படுகின்ற கருத்து. இவர் கடந்து வந்த பாதையைச் சற்றுத் திரும்பிப் பார்க்க வேண்டும். இவருடைய சிவகங்கை தேர்தல் முடிவு நேர்மையானதா என்பதையும் மனச்சாட்சியை ஆய்ந்து சொல்ல வேண்டும். இவர் மெத்தப் படித்திருந்தாலும், இவருக்கு ஒரு திருக்குறளைச் சொல்ல வேண்டியிருக்கிறது. அது:–

  யாகாவாராயினும் நாகாக்க, காவாக்கால்
  சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.

 7. Arokya on September 2, 2010 at 3:45 pm

  எஜமான விசுவாசத்தைக் காட்ட தரம் கெட்ட முறையில் பேசி வயிறு வளர்ப்பதைக் காட்டிலும், பிச்சை எடுத்து உண்பது பல மடங்கு மேல்.
  அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல அதிக அறிவுள்ளவர்களும் கூட சில நேரங்கில் மூளை மழுங்கி பிதற்றுவது உண்டு.

  அன்புடன்,
  ஆரோக்யசாமி

 8. Karthikeyan on September 2, 2010 at 3:56 pm

  ஒருவனது அரசியல் சுய நலத்திற்காக, நாட்டையே துண்டாட நினைக்கும் கீழ்த் தரமான பேச்சுக்களையும், அவன் பேசுவான் என்பதற்கு அடையாளத்தைத் தேடி இனி அலைய வேண்டியது இல்லை.

 9. பா. ரெங்கதுரை on September 2, 2010 at 4:03 pm

  Merchant of Death என்ற பெயருக்கு முற்றிலும் தகுதியானவர் ப. சிதம்பரம் தான். முன்பு நிதியமைச்சராக இருந்தபோது பாரதத்தின் பொருளாதாரத்தை முற்றிலும் சீரழித்து இந்துக்களை ஓட்டாண்டிகளாக்கி அன்னிய கிறிஸ்தவ முதலாளிகள் கொழுக்க வழிசெய்தார். இப்போது உள்துறை அமைச்சர் என்ற போர்வையில் இஸ்லாமிய, கிறிஸ்தவ, இடதுசாரி பயங்கரவாதங்களுக்கு நெய் வார்த்து வளர்த்துவிடுகிறார். இவர் போன்ற நபர்களைப் பதவியில் நீடிக்கவிடுவது அகில பாரத அளவில் இந்துக்களின் வாழ்வுரிமையையே கேள்விக்குறி ஆக்கிவிடும்.

  (edited and published)

 10. babu on September 2, 2010 at 4:06 pm

  அவர் வெற்றி பெற்றதே தில்லுமுல்லு செய்து,அவர் பதவிக்கு வந்த வழியே சரியில்லை. சொந்த ஊரிலேயே தோற்றுப்போனவர். அவருடைய சொந்த தொகுதியிலேயே தண்ணீர் இன்றி மக்கள் ஊற்று தோண்டி ஊரும் வரை காத்திருந்து பின்னர் நீர் சேகரித்து செல்கின்றனர்.
  இவ்வளவு சிறப்பு மிக்க ஒரு மந்திரி. தி மு க உடனான உறவினை உறுதிபடுத்துவதற்காக மட்டுமே தமிழ் நாட்டுக்கு வரும் மட்டமான மந்திரி. இதுவரை ஏற்பட்ட கலவரங்கள் எதற்கும் சரியான முடிவு காணமல் சொதப்பி வரும் சொதம்பரம்.

 11. Kannan on September 2, 2010 at 4:08 pm

  //சிலருக்கு பச்சை நிறம் கூட காவி நிறமாகவே தெரியும்// – உண்மை, வாய்ப்பிருக்கிறது. சிலருக்கு எந்த நிறத்தைப் பார்த்தாலும் பயத்தில் காவி நிறமாக மட்டுமே தெரியும்.

  அதுபோன்ற நிறமாலை கண் குறையுள்ளவர்கள், நிறத்தைப் பற்றிய தங்கள் கருத்துக்களைக் கூறும் பொது மிகவும் எச்சரிக்கையாக ஒன்றுக்குப் பத்து முறை கண் மருத்துவரிடம் பரிசோதித்துவிட்டு பின் கூறுவது நன்று..

 12. Athiravi on September 2, 2010 at 4:22 pm

  எதை வைத்து ப சி யோகியன், மேதாவி என்று சொல்கிறீர்கள். அவரும் அவரது மகன் மற்றும் மனைவி பல குளறுபடி களை செய்து இருக்கிறார்கள். பல contract களை பெற்று இருக்கிறார்கள். கனரா பேங்க் லோகோ மாற்றம் contract , சமீபத்திய பசியின் தேர்தல் வெற்றி, fairgrowth deal இனால் மந்திரி பதவி இழந்தது, அரசாங்கத்துக்கு எதிராக ஆஜர் ஆகியது, anubav plantation நடேசனுக்காக ஆஜர் ஆனது, இன்ன பல.

  வெளுப்பாக இருந்தால், மெதுவாக பேசினால் உண்மை பேசுகிறார்கள் என்பது பலரது நம்பிக்கை. அது உண்மை அல்ல என்பதற்கு சிதம்பரம் உதாரணம்.

 13. Egambaram on September 2, 2010 at 5:29 pm

  தேசியக் கொடியிலுள்ள, தியாகம் என்பதைக் குறிக்கும் வண்ணத்தைப் பழிப்பது, தேசியக் கொடியையும், தியாகத்தையும் அவமானப் படுத்துவதாக ஆகாதா???……..விபரம் அறிந்தவர்கள் கூறவும். தேசியக் கொடியைஅவமானப் படுத்துவது தண்டனைக்கு உரியது எனும்போது அதிலுள்ள தியாகத்தை அவமதிப்பது தவறில்லையா?? சட்ட நுணுக்கம் அறிந்த, அறிவு ஜீவிகள் (அறிவு ஜீவிகள் போல் நாடகமாடுபவர்கள் அல்ல) கூறவும்.

  ஏகாம்பரம்

 14. பா. ரெங்கதுரை on September 2, 2010 at 5:54 pm

 15. Bhaarathapriyan on September 2, 2010 at 6:19 pm

  ப.சி.செயலில் அல்லாமல் அறிக்கை விடுவதில் மிகத் தேர்ந்தவர் என்று பொதுவாக கூறப்படுவது உண்டு. இப்போது அதிலும்கூட தோல்வியைத் தழுவி உள்ளார். நிதி அமைச்சராக தோல்வி, உள்துறை அமைச்சராக தோல்வி, சொந்த கட்சியை வழி நடத்துவதில் தோல்வி, ஏன் கடந்த நாடாளுமன்ற தேர்தலில்கூட தோல்வியை தழுவி, மாவட்ட ஆட்ச்சியர் தயவில் வெற்றி பெற்றார் என்றுகூட ஒரு பேச்சு தமிழ்கூறும் நல்லுலகில் உண்டு. அப்படிப்பட்ட தோல்வியையே வாழ்க்கையாக கொண்ட ஒரு மனிதரின் உளறல்கள் என்பது நாடு நிலையாளர்களுக்கு தெரியும்.

 16. g ranganaathan on September 2, 2010 at 6:29 pm

  சாதாரண குடிமகனுக்கு எள்ளளவும் நன்மை செய்யாத ஒரு நிதி மந்திரி என்று பட்டியலிட்டால் அதன் முதல் வரிசையில் திரு பானா சீனாவுக்கு முதலிடம் உண்டு. உள்துறை மந்திரியாய் அவர் தோல்வி யடைந்தவர்தான்.ஆனாலும் இந்த நாட்டின் விதி இவர் போன்ற “அறிஞர்களை ” மந்திரியாக்குகிறது. கடவுள்நம்மைக் காப்பாற்றட்டும்

 17. A.T.Thiruvengadam on September 2, 2010 at 7:48 pm

  It is really a sorry state of affirs that chidambaram has forgottten the past and indulges in cheap tactics to curry favour with the party echelons to survive ,As Home Minister his perfformance is dismal and he should remember the fate of Frankenstein and Dr,Jekyll who creared the monsters who ultimately destroyed them.By wishy washy votebank politics they are sowing the seeds of separatist politics and the Moists who are clandestinely supported by congress to gain political power in non-congress government states will ultimately prove their nemesis.

 18. R.Sridharan on September 2, 2010 at 7:51 pm

  ஒரே ஒரு ஆள் கட்சியை பல வருடங்கள் நடத்தி ஒன்றும் போனி ஆகாமல் பிறகு அந்த வியாபாரத்தை வெளி நாட்டு ஏகபோக முதலாளியின் கம்பெனிக்கு தாரை வார்த்து ‘எதோ கொடுத்ததை’ வாங்கிக் கொண்டு தான் கற்ற ஆங்கிலத்தை கொண்டு ஒரு விஷயத்தை நேரடியாகப் பேசாமல் திமுக காரர்களிடம் கற்ற கலையால் வார்த்தை ஜாலம் செய்யும் இவர் செட்டி நாட்டில் பிறந்தார் என்று சொல்லவே அருவருப்பாக உள்ளது.
  செட்டி நாட்டு மக்கள் ஹிந்து சமயத்தை கண்ணெனப் போற்றுபவர்கள். அவர்களுக்கு நடுவே இப்படி ஒருவரா? தங்கள் சொத்தையெல்லாம் பொது நலனுக்குக் வாரி வழங்கிய அழகப்பா செட்டியார் அவர்கள்,தமிழுக்கும் தமிழ் இசைக்கும் கொட்டிக் கொடுத்த ராஜா அண்ணாமலை செட்டியார் அவர்கள் இன்னும் பலர் தோன்றிய மண்ணில் கேவலம் பதவிக்காகவும்,பணத்துக்காகவும் ,தாய் போன்ற நம் சமயத்தை,பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் சாரதியாக இருந்த தேர் மேல் பட்டொளி வீசிப் பரந்த காவியை இகழும் இவரைஎன்னென்பது?

 19. R.Sridharan on September 2, 2010 at 7:56 pm

  முன்பு ஒரு முஸ்லிம்களின் கூட்டத்தில் வந்தே மாதரம் பாடா விட்டால் பரவாயில்லை என்று சொன்ன மகானுபாவர் இவர்

 20. C.N.Muthukumaraswamy on September 3, 2010 at 7:41 am

  ப.சி யைச் ‘சின்னப்பையன்’ என்று முக ஒருமுறை குறிப்ப்ட்டது என் நினைவுக்கு வருகின்றது.

 21. தஞ்சை வெ.கோபாலன் on September 3, 2010 at 10:00 am

  வெறும் சின்னப்பையன் அல்ல “சிவகங்கை சின்னப்பையன்” என்றார் பெரியவர். இதெல்லாம் அவருக்கு நினைவு இருக்காது. அடிக்கடி கோபாலபுரம் போய் பெரியவருக்கு நமஸ்கரித்துவிட்டுத் தன பதவியை காபந்து பண்ணுவதில் கில்லாடி இவர். சுப்பிரமணியசாமி ஒருமுறை சொன்னார் ‘அவருக்கு பொருளாதாரம் தெரியும் என்று யார் சொன்னார்கள்?” என்று. இப்போது தெரிகிறது பொருளாதாரம் மட்டுமல்ல, அரசியல் வரலாறும் புரியாத பெரிய மனிதர் என்று. ஊமைக்கு உளறுவாயன் மேல் என்பார்கள். வாய் மூடி மவுனியாக இருப்பதைக் காட்டிலும் இப்படி எதாவது உளறிக்கொட்டித் தன் பெயர் பிரதானமாக பத்திரிகைகளில் வருவதை இவர் விரும்புகிறார் போலும்.

 22. K.Jeya Singh on September 3, 2010 at 10:43 am

  இந்த நாட்டினை உயிரினும் மேலாய் மதித்த, கர்ம வீரர் காமராஜர் வாழ்ந்த காலத்தில், நாங்களும் வாழ்ந்தோம் என்று பெரியவர்கள் பெருமிதம் கொண்டிருக்கின்றார்கள். பொறுப்பான பதவியில் இருந்துகொண்டு, இந்த நாட்டை பிளவு படுத்தும் வகையில் பொறுப்பற்ற முறையில் பேசிக்கொண்டு திரிபவர்கள் வாழும் காலத்ஷில் நாங்களும் வாழ வேண்டியது எங்கள் துர்பாக்கியம் என்று இளைஞர்கள் நொந்து நூலாகிப் போயிருக்கிறார்கள்.

  விரக்தியுடன்,
  ஜெயசிங்

 23. விஸ்வாமித்ரா on September 3, 2010 at 10:51 am

  ப சிதம்பரம் ஒரு ஊழல்வாதி. அயோக்யன். ஃபேர் க்ரோத் ஊழலில் அவருக்கும் அவர் மனைவிக்கும் பங்கு இருந்தது. இப்பொழுது கலப்படம் மருந்துகள் விற்றவர்களும் இவரது உறவினர்களே அவர்களுக்காக நளினி ஆஜராகிறார். மகன் கட்டப் பஞ்சாயத்து செய்து அப்பாவிகளின் நிலங்களைப் பறிக்கும் ஒரு ரவுடி. படித்தவன் சூது செய்தால் ஐயோ என்றார் பாரதி சிதம்பரம் மட்டும் அல்ல அவரது ஒட்டு மொத்தக் குடும்பமுமே ஐயோ என்று போகும். இது நான் சொல்வது அல்ல இஸ்லாமிய பயங்கரவாதிகளால் கொல்லப் பட்ட ஆயிரக்கணக்கான அப்பாவி இந்துக்களின் ஆன்மா விடும் சாபம். நாசமாகப் போவார்கள்

 24. Marutha Muthu on September 3, 2010 at 10:58 am

  படுமேதாவி மாதிரி நடிக்கிறவன், பத்து பைசாக்குக் கூட தேற மாட்டான்னு கிராமத்துல சொல்றாங்களே! – அப்படின்னா என்னாங்கோ?

 25. ஜடாயு on September 3, 2010 at 11:26 am

  சாட்டையடியாக எழுதியிருக்கிறார் சேக்கிழான், அருமை.

  ப.சி பாராளுமன்றத்தில் காவி தீவிரவாதம் பற்றி கதைத்துக் கொண்டிருக்கும் இதே வாரத்தில் தான், பீகாரில் மாவோயிஸ்டு பயங்கரவாதிகள் நான்கு காவலர்களைப் பிணைக்கைதிகளாகப் பிடித்து வைத்து அரசை மிரட்டிக் கொண்டிருக்கின்றனர். நேற்று ஒரு சப் இன்ஸ்பெக்டரை கொடூரமாகக் கொலை செய்தும் விட்டனர். அரசு செய்வதறியாது தவித்துக் கொண்டிருக்கிறது.

  உண்மை ப.சியின் முகத்தில் காறி உமிழ்ந்து விட்டது!

  பட்ஜெட்டின் போது சடங்குக்காக திருக்குறளை மேற்கோள் காட்டும் ப.சிக்கு

  “தன்னெஞ்சறிவது பொய்யற்க பொய்த்தபின் தன்னெஞ்சே தன்னைச் சுடும்”

  என்ற குறள் மட்டும் மதசார்பின்மை-மேனியா நோயின் காரணமாக மறந்து விட்டது போலிருக்கிறது..

 26. ப்ரத்யூஷ் on September 3, 2010 at 12:26 pm

  அந்நிய மம்மியின் ,தீயசக்த்தியின் தத்து புத்திரன் சிவகங்கை சின்னபையன் ,மக்கள் தன்னை நிராகரித்தும் மந்திரி ஆகிவிட்டோம் என்ற இறுமாப்பில் உளறிகொண்டு திரிகிறார் .
  தான் என்ன செய்தாலும் எவனும் கேட்பதற்கு இல்லை என்ற நினைப்பு தான் காரணம் .நாம் செயும் பாவகாரியங்கள் நம்மோடு முடிவதில்லை , அடுத்த சந்ததினையிரையும் துன்பத்தில் ஆழ்த்தும் என்பதை
  பாவி சிதம்பரம் உணர்தல் நலம்.
  தெய்வம் நின்று கொல்லும்,
  பாவிகளை புறகணிப்போம்,காவியை போற்றுவோம்
  வந்தே மாதரம்
  ப்ரத்யூஷ் ராமகிருஷ்ணன்

 27. Murali on September 3, 2010 at 1:25 pm

  KC of chettinadu and its triangle vecha CBANK 😉

 28. smitha on September 3, 2010 at 2:12 pm

  We have a sikh PM remote controlled by a christian lady.

  Hindus have been gardually getting marginalised ever since sonia took over.

  PC is simply his master’s voice.

  Also, he won the sivaganga election via the back door.

  So, this statement is not wholly unexpected.

  It is unfortunate that no party, save the BJP have condemned this remark.

 29. shanmugavel on September 4, 2010 at 6:10 pm

  துறவிக்கு வேந்தனும் துரும்பு – என்பது பாரத பண்பாடு.

  காவி உடுத்தியவர்கள் துறவிகள். ஆக, மரியாதையும், சுப்ரீம் பவரும் உடுதியவருக்கு அல்ல. காவி உடைக்குதான்.

  பாரத நாட்டில் பிறந்து, நாட்டை வழி நடத்தும் முக்கிய பொறுப்பில் உள்ள ப.சி. இப்படி பேசி உள்ளதை பார்த்தால், இவர் பாரத நாட்டின் சாதாரண குடிமகன் என்று சொல்ல கூட அருகதை அட்றவர் என்பது புரிகிறது.

  இவரெல்லாம் நாட்டை நிர்வாகம் செய்து, என்னத்தை கிழிக்க போகிறாரோ…? இத்தாலி சோனிக்குதன் வெளிச்சம்.

  நண்பர்களே! உங்களுக்கு தெரிந்த, உங்கள் ஊரில் உள்ள துறவியர்களிடம் சொல்லி, ப.சி. க்கு எதிராக கண்டன தீர்மானம் நிறைவேற்றி அதை பத்திரிகைகளில் பிரசுரம் செய்யுங்கள்.

 30. senthil kumar on September 4, 2010 at 6:23 pm

  I recall the incident when I did election work for Mr. H. Raja in my native Sivagangai constituency. There was a remote village near Maravamangalam adjacent to Historic Kalayarkoil, we went for canvassing, a lady angrily asked me “where is [Chidambaram]? (enge andha [Chidambaram]? thannikki rendu mailu poyi eduthuttu varom, ovvoru muraiyum vandhu vote vangittu poyi mandhiri agiran, ippo edhukkuda vandheenga?) every time he comes here for vote and see our plight we go for three kilo meter to bring water, why have you come here?” these are questions we faced!! he was the finance minister and was busy in giving interview to pink color papers!!

  how he won after 4pm on the counting date, every one knows!!

  The bank logo changing loot was known to all the financing circle. The bank has the HQ in karnataka …

  this chidambaram is un comparable in arragancy. But history has seen the plight of these kind of persons.

  atleast now chidambaram concentrate on sivaganga or otherwise he will loose the election next time with the great margin even EVM or PMO or chavla cannot help him!!

  [Edited and published]

 31. reality on September 4, 2010 at 10:44 pm

  “பரம்பரை காரணமாகவோ”…… ஆம் , சிதம்பரத்தின் பரம்பரை இந்தியாவை விற்றுச் செல்லும் பரம்பரை. எனவே அவர் அப்படித்தான் , தன குடும்பத்துடன் , இருந்த்கொண்டிருக்கிறார். சோனியா போன்ற, 40 முறை கூட, தலைவர் என்ற பெயரில், கஜனி முஹம்மத் ஆகா முடிபவர்களின், அடிவருடிதான் இந்தச சிதம்பரம்.

 32. Varatharaajan. R on September 5, 2010 at 7:25 am

  அன்புள்ள ஜகன் அவர்களே,”தமிழ்ஹிந்து இணையதளத்தில் தீவிரவாத பிரச்சாரங்களை தொடர்ந்து செய்துவரும் காவி இந்துத்தீவிரவாதிகளை ப.சிதம்பரத்தின் உண்மைப்பேச்சு நடுங்க வைத்துள்ளது.
  பயத்தின் அடையாளமாக தான் இந்துதீவிரவாதிகள் கொய்யோ கொலையோ என நடுங்குகிறார்கள்.
  மத்திய அரசு இந்துதீவிரவாதிகளை ஒழித்து அழித்து சின்னாபின்னப்படுத்தி இந்துத்தீவிரவாதிகளிடமிருந்து அப்பாவி மக்களை காக்கவேண்டும்.” உண்மையிலேயே சிதம்பரத்தின் கருத்தில் தங்களுக்கு உடன்பாடு இருக்குமானால், உள்துறை அமைச்சர் தமது அதிகாரத்தை பயன்படுத்தி இந்த நிமிடம் வரை எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன் என்று யோசித்தீர்களா? காவி தீவிரவாதிகள் என்று சிதம்பரத்தின் ஆதரவு போலீஸ் சுமார் இரண்டரை ஆண்டுகளாக குற்றம்சாட்டிவரும் குழுவிலுள்ளவர்கள் மீது இதுவரை முதல் தகவல் அறிக்கையோ குற்ற ப்பத்திரிக்கையோ தாக்கல் செய்யாதது ஏன்? உண்மையான குற்றவாளிகளை தப்பிக்கவிட்டுவிடுவதற்கு இதுபோன்ற குற்றச்சாட்டுகள் பயன்படுமே தவிர, சாமான்னிய மக்களை காப்பாற்ற முடியாது. அப்சல் குருவையும் அப்துல் கசபையும் காப்பாற்ற நினைக்கும் உள்துறை அமைச்சரிடம் நாம் நியாயத்தை எதிர்பார்க்க முடியாது. ஏற்கனவே நொந்துகொண்டிருக்கும் ஹிந்து சமுதாயத்தை, தீவிரவாத முத்திரை குத்துவதன் மூலம், எந்த சாதனையும் நிகழ்ந்துவிடப்போவதில்லை.

 33. R.Sridharan on September 5, 2010 at 7:45 pm

  பொழுது விடிந்து பொழுது போனால் மாவோயிஸ்டுகள் அப்பாவி மக்களையும், காவல் துறையினரையும் கொன்று குவிக்கின்றனர்.
  அவர்களின் மீது கடும் நடவவடிக்கை எடுக்க ராணுவம்,மற்றும் ஆகாயத்திலிருந்து கண்காணிப்பு முதலிய யோசனைகளை uசிதம்பரத்தின் உள்துறை சிபாரிசு செய்கிறது.
  ஆனால் சோனியாவும் , எ கே அந்தோனியும் அதை எதிர்த்து மாவோயிஸ்டுகளுக்கு வக்காலத்து வாங்குகிறார்கள்
  இது ஏனென்றால் மாவோயிஸ்டுகள் சர்ச்சின் ஆதரவாளர்கள்.வனவாசிகளை மதம் மாற்ற அவர்கள் சர்ச்சுக்கு உதவுகிறார்கள்.

  காஷ்மீரில் சுதந்திர தினம் அன்று நம் தேசியக் கொடி எரிக்கப் படுகிறது
  அங்கு கொடி ஏற்றச் சென்ற பீ ஜெ பீ இளைஞர் அணி கைது செய்யப் படுகிறது.
  அங்குள்ள அறுபதாயிரம் சீக்கியர்களை முஸ்லிமாக மாறுங்கள் மறு அல்லது வெளியேறுங்கள் என்று முஸ்லிம் மத தீவிர வாதிகள் கொக்கரிக்கிறார்கள்.
  ஏற்கெனவே நன்கு லட்சம் ஹிந்துக்களை அவர்கள் அங்கிருந்து விரட்டியடித்து சொந்த நாட்டில் அகதிகளாக ஆகி உள்ளனர்

  இதற்கெல்லாம் நடவடிக்கை எடுக்க துப்பில்லாமல் வெளி நாட்டுக் காரரின் காலில் விழுந்து திரும்ப திரும்ப அவர்களையே தலைவராக த்ர்ந்தேடுக்கின்றனர்.

  இவர்கள் தங்களை காத்துக் கொள்ள போராடும் ஹிந்துக்களை மேலும் மேலும் நசுக்கி தங்களும் தங்கள் குடும்பமும் வாழ வேண்டும் என்று நினைப்பது கேவலம்.
  ஒரு பில்லியன் ஹிந்துக்களையும் நசுக்கி விடுவார்களா
  முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் பெரும்பான்மையாக ஆனால் இவர்கள் அரசியலில் இருக்க முடியுமா?
  இதையெல்லாம் யோசிக்க வேண்டாமா?

 34. R.Sridharan on September 6, 2010 at 7:33 am

  கொஞ்சம் கொஞ்சமாக காங்கிரஸ் மற்றும் அது போன்ற ஹிந்து விரோதக் கட்சிகளின் சுய ரூபத்தை அறிந்து கொண்டிருக்கும் ஹிந்துக்களைப் பார்த்துதான் ப சி க்கும், அவரது எஜமானர்களுக்கும், ஜாலரக்களுக்கும் பயம் வந்துகொண்டிருக்கிறது.

 35. anonymous on September 6, 2010 at 2:36 pm

  சிதம்பரம் இப்பொது பண்ணியிருப்பது, பச்சை அயோக்கியத்தனமான், ஒரு கேவலமான அரசியல்.. நோக்கம், இஸ்லாமிய பயங்கரவாதம் என்று மற்றவர்கள் யாரும் சொல்லக்கூடாது என்பதுதான்..

  அதாவது, ஒரு ஊரில் ஒரு கொலைகாரன் இருக்கிறான்.. அவனுக்கு, தன்னை யாரும் கொலைகாரன் என்று சொல்லிவிடக்கூடாதே என்று நினைக்கிறான்.. அதற்கு இரண்டு வழிமுறை.. ஒன்று, தன்னுடைய தவறை உணர்ந்து திருந்தி மற்றவர்கள் போற்றும்படி நடப்பது.. இரண்டாவது, இருக்கின்ற எல்லாரையும் கொலைகார லிஸ்டில் சேர்த்துவிட்டால், அப்புறம் தன்னை மட்டும் யாரும் கொலைகாரன் என்று சொல்லமுடியாதுதானே..

  சிதம்பரம் செய்திருப்பது, இரண்டாவது வகை.. காவி பயங்கரவாதம் என்ற ஒரு பழிய போடு.. உடனே இந்து இயக்கங்கள் இலலை என்று வாதாடும்…. பயங்கரவாதத்துக்கு நிறம் இல்லை என்று அவர்களே கூப்பாடு போடுவார்கள்..
  அதுதான் நடந்திருக்கிறது..

  சிதம்பரம் சாதாரண ஆள் இல்லை.. பழம் தின்னு கொட்டை போட்டவராச்சே.. அரசியல் சாக்கடையில, நல்ல பழமா கெட்ட பழமான்னு பார்க்க முடியாது..

  அது சரி.. மாலேகான் குண்டுவெடிப்புல, சிமி அலுவலகத்திலதானே குண்டு வெச்சாங்க.. சிமி ஒரு பயங்கரவாத அமைப்புன்னு எல்லாருக்கும் தெரியும்.. ஒருவேளை நம்ம மேலயே யார்ரா குண்டு வெச்சாங்கங்கற சந்தேகம் அவங்களுக்க்கு வந்திருக்கும் போல..

 36. ram on September 6, 2010 at 10:26 pm

  //செட்டி நாட்டு மக்கள் ஹிந்து சமயத்தை கண்ணெனப் போற்றுபவர்கள்// உண்மை. இன்னும் சொல்லப்போனால் , ‘ஜாதிகள் தான் இது மதத்தின் பலவீனம்’ என்ற கருத்து பொய்யாகி இந்து தர்மத்தை ஜாதிகள் தான் காப்பாற்றப்போகின்றன என்றால் மிகையாகாது.

 37. R.Sridharan on September 6, 2010 at 10:38 pm

  இஸ்லாமிய பயங்கரவாதிகள் மீது காங்கிரஸ் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை .அப்சலை தூக்கில் போடவில்லை,கசபுக்கு வக்கீல் வைத்து ,பிரியாணி கொடுத்து,நாலாயிரம் பக்கம் உருதுவில் குற்றப் பத்திரிகை கொடுத்து அரச மரியாதை தருகிறது. இதையெல்லாம் மறைக்க சும்மா ஒரு உடான்ஸ் உட்டு வைக்கலாமே- அதுதான் ‘ஹிந்து, காவி பயங்கரவாதம்’- உடனே அப்பாவி ஹிந்து என்ன செய்வான் ? ஐயா நாங்கள் பயங்கர வாதிகள் அல்ல என்று ரொம்ப கஷ்டப்பட்டு எப்படியாவது நிரூபிக்க பாடுபடுவான்.
  இதை பார்த்து சிதம்பரமும், அவர்களின் எஜமானர்களும் விழுந்து விழுந்து சிரிப்பார்கள்!

  ‘அட போய்யா ஊரை ஏமாற்றாதே. இது ஹிந்து நாடு .இங்கு ஹிந்து எதற்காக குண்டு வைக்க வேண்டும்? ஹிந்துவுக்கு மற்றவர்கள் போல் பாகிஸ்தானிலா எஜமானர்கள் உள்ளனர்? இல்லை அவர்கள் எப்போதாவது யாரையாவது குண்டு வைத்து கொல்வோம் என்று மிரட்டினார்களா? முதலில் இஸ்லாமிய பயங்கர வாதத்தை , மாவோயிஸ்டு பயங்கர வாதத்தை ஒழித்துவிட்டு பேசு ‘ என்று கேட்கும் சிந்தனை இல்லை.
  இதே ஜிஹாதி பயங்கரவாதம் என்றோ,சிலுவை பயங்கர வாதம் என்றோ இவர்கள் சொல்லிவிட்டு வெளியே நடமாட முடியுமா?

 38. thooyavan on September 7, 2010 at 12:29 am

  அரசியல் காரணங்களுக்காக என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்ற அவலமான நிலை. மதிப்பிற்குரிய சிதம்பரனார் இந்த நிலைக்கு இறங்க வேண்டாம் என்று இறைஞ்சுகிறேன்
  .

 39. R.Sridharan on September 7, 2010 at 8:45 am

  தீயின் நிறம் காவி.
  தியாகத்தின் நிறம் காவி
  தீயின் நாக்குகள் எப்போது மேல் நோக்கியே செல்கின்றன
  அது போல் நம் சிந்தனைகளும் ,நோக்கங்களும் மேநோக்கியே இருக்க வேண்டும் என்பதற்காகவே நம் முன்னோர் அக்னி தேவனின் நாக்கின் நிறமான காவியைத் துறவுக்கு அடையாளமாக் வைத்தனர்.மேலும் தீயானது தன்னுள்ளே போடப்படும் எந்த மாசையும் எரித்து சாம்பராக்கி விடும்- ஆண்டாள் சொல்வது போல் ‘தீயினில் தூசாகும் ‘
  அது போல் காவியை நெருங்கும் எந்தக் களங்கமும் சாம்பலாகி விடும்.

  ஆயிரமாயிரம் மன்னர்கள் நம் நாட்டில் இருந்தனர்.
  அவர்களின் சின்னங்களும் ,இலச்சினைகளும் வேறு வேறாக இருந்தாலும் அவர்களின் பதாகைகள் எல்லாம் காவி நிறமே

  இப்பேர்ப்பட்ட காவியை இகழ்வது பெற்ற அன்னையை எட்டி உதைப்பது போலாம்.

 40. Kumudan on September 7, 2010 at 9:58 am

  I have strong suspicion that Italian Moodevi is behind this statement. அவள் இன்றி ஓர் அணுவும் அசையாது.

  Here is the statement of Subramaniam swamy on this Mahatma Raul Vinci:
  1. While abroad recently I was informed by my reliable sources that of the Rs.40000 crores spent to date on Commonwealth Games preparations, about Rs.15000 crores have gone as bribes under cover of payments to consultants and contractors. The recipient of the largest share of the bribe delivered in London is Rahul Gandhi, a Congress MP and son of Sonia Gandhi. In London Mr.Gandhi is known under an alias as Raul Vinci. The Indian High Commission employee in London who has denied his letter of recommendation now, acts as a valet for Mr.Gandhi whenever he visits London, which is at least once a month. Mr.Gandhi is accompanied by his undeclared wife, Colombian girl Veronique.

  2. The plan of UPA to protect Mr.Gandhi from expose and prosecution in this CWG scam is to blame it all on Suresh Kalmadi and Shiela Dikshit. The Prime Minister must show boldness now because corruption at the public person level has attained Himalayan heights bringing disgrace to the nation and the economy performing below our potential.

  3. I demand therefore constituting an open Commission of Inquiry under a sitting Supreme Court judge with CBI as it’s investigating arm. The public and whistle blowers should be invited to depose before Commission.

  I tried to modify the Guru parampara sloka to suit our current context.

  Mohandas Gandhi Samarambham Indra Gandhi Madhyamam
  Asmat Raul Vinci paryantam nindate Duratma paramparam

 41. R.Sridharan on September 7, 2010 at 10:49 pm

  சிதம்பரம் போன்றவர்கள் இஸ்லாமிய தீவிரவாதிகள் குண்டு வைத்தால் கூட அதை சொல்ல முடியாது. அதனால் இருக்கவே இருக்கிறான் இளிச்சவாயன் ஹிந்து.அவன் பொரிவிளங்காய் உருண்டை வைத்திருந்தால் கூட குண்டு வைத்திருந்தான் என்று பொய் கேஸ் போட்டு, குப்பன் சுப்பன் எல்லாம் பக்கத்தில் இருந்து பார்த்தது போல் ஜோடித்து வழக்கு போடலாம்.
  அடுத்த நிமிடமே சொல்லி வைத்தாற் போல் பர்க்கா தத்,ராஜ்தீப் சர்தேசாய், பிரணாய் ராய்,இன்னும் பலர் கோட்டு சூட்டு போட்டுக் கொண்டு பவுடர் அப்பிக் கொண்டு கேமரா முன் வந்து விடுவர்.
  BreakingNews என்று எல்லா பங்காளி சானல்களும் அலறும்.தலைக்கு நூறு ரூபாய் கொடுத்து ஆட்களை கூப்பிட்டு வந்து கலந்துரையாடல் நடத்துவார்கள்.நடுநடுவே டீஸ்டா செடல்வாட் ,மணிசங்கர் ஐயர் ,பிருந்தா கரட் எல்லாரும் வந்து ஹிந்து பயங்கரவாதத்தால் அமைதியாக வாழும் முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.ஆகவே ஹிந்துக்களையே தடை செய்ய வேண்டும் என்று கத்துவார்கள்.
  ஒப்புக்குச் சப்பாணியாக பேசவே தெரியாத ஒரு ஹிந்து ஆதரவு ஆளை வைத்திருப்பார்கள்.அவர் அடிக்கடி ஒண்ணாம் க்ளாஸ் பையன் டீச்சரிடம் ஒரு விரலைக் காட்டுவது போல் காட்டி கெஞ்சிக் கொண்டிருப்பார். போனால் போகிறதென்று அவரை எப்போதாவது அனுமதிப்பார்கள்.ஆனால் அது என்னவோ தெரியாது அவர் பேசும் போது தான் சானலின் நிருபர் ‘லைனில்’ வருவார். ஆகவே இவர் கருத்து சொல்லவே விட மாட்டார்கள்.

  குற்றம் சாட்டப் பட்டவர் கண்ணுக்கெதிரிலேயே இருப்பார்.

  ஆனால் ‘அவர் தலை மறைவு. அவரை பிடிக்க ஆறு தனிப்படை அமைப்பு.போலீஸ், சீ பீ ஐ ,ராணுவம் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்’ என்று செய்தி போடுவர்.

  அவரை ரொம்ப கஷ்டப் பட்டு கைது செய்தது போல் செய்து, அதுவும் ஒரு விடுமுறை நாள், அல்லது நடு இரவில் கைது செய்து ‘ நீதிபதியை தூக்கத்திலிருந்து எழுப்பி குற்றவாளி ஆஜர் செய்யப் பட்டார்’ இது போன்ற செய்திகள் போடுவார்கள்.

  ஈ பீ கோவில் கிட்டத்தட்ட இருபது ,முப்பது பிரிவுகளில் அவர் மீது வழக்கு போடப்படும்.இன்னும் எதாவது பிரிவுகளை சேர்க்க முடியுமா என்று தனிக் குழு ஆய்வு செய்யும் .

  இப்படிப்பட்ட காடுமி ராண்டித்தனங்கள் தான் இன்று நடக்கின்றன.

 42. babu on September 8, 2010 at 11:00 am

  //அட போய்யா ஊரை ஏமாற்றாதே. இது ஹிந்து நாடு .இங்கு ஹிந்து எதற்காக குண்டு வைக்க வேண்டும்? ஹிந்துவுக்கு மற்றவர்கள் போல் பாகிஸ்தானிலா எஜமானர்கள் உள்ளனர்? இல்லை அவர்கள் எப்போதாவது யாரையாவது குண்டு வைத்து கொல்வோம் என்று மிரட்டினார்களா?//
  Dear Mr sridarji,
  excellent,superb
  great salutes to you

 43. R.Sridharan on September 8, 2010 at 9:43 pm

  வணக்கம் .நன்றி சகோதரரே

 44. சேக்கிழான் on September 9, 2010 at 2:19 am

  காவி தான் நம்ம நாட்டின் கலரு!
  – மீண்டும்…சேக்கிழான் –

  (திரைப்படப் பாடல் மெட்டினில், ப.சி.க்குப் புரியும் வண்ணம் ஒரு பாடல்)

  காவி தான் நம்ம நாட்டின் கலரு – வேறு
  எந்தக் கலருக்கும் இல்லை காவியோட பவரு!

  (காவிதான்)

  வாழ்க்கையை அர்ப்பணித்த துறவுநிறம் காவிதான்!
  வானப்பிரஸ்தர்களும் விரும்பும் நிறம் காவிதான்!
  ஆலய உச்சியிலே…. அசையும் கொடி காவிதான்!
  ஆசையை வெறுத்த புத்தர் ஆடைநிறம் காவிதான்!
  தர்மம் காத்த சீக்கியரின்…
  கால்சா கலரும் காவிதான்! கலக்கும் காவிதான்!

  (காவிதான்)

  பாரதப் போரினிலே பறந்த கொடியும் காவிதான்!
  பாவலர் பெருமக்கள் உடுத்த துணியும் காவிதான்!
  அஸ்வமேதக் குதிரையோடு…. சென்ற கொடியும் காவிதான்!
  அன்னியரை வெற்றி கண்ட சிவா கொடியும் காவிதான்!
  சேர, சோழ, பாண்டியரின்…
  கொடியும் கூட காவிதான்! சிறந்த காவிதான்!

  (காவிதான்)

  அன்னச்சாலையிலே அசைந்தகொடி காவிதான்!
  அர்ப்பண மனப்பான்மையின் அழகுநிறம் காவிதான்!
  விஜயநகரம் கண்ட…..வீரர் கொடியும் காவிதான்!
  விடுதலைப் போரினிலே வீரம் தந்த காவிதான்!
  தேசியக் கொடியினுக்கே…
  சிறப்பு சேர்க்கும் காவிதான்! ஜொலிக்கும் காவிதான்!

  (காவிதான்)

  உடலில் ஓடுகிற குருதிநிறம் காவிதான்!
  உத்தமசீலர்களின் பிரியநிறம் காவிதான்!
  அக்கினி ஜுவாலை போல… அசையும் நிறம் காவிதான்!
  அசுத்தம் நீக்குகிற அருங்குணமும் அதுக்குத்தான்!
  பாரத நாட்டினுக்கே…
  பாரம்பரியம் காவிதான்! பளபளக்கும் காவிதான்!

  (காவிதான்).

 45. C.N.Muthukumaraswamy on September 9, 2010 at 9:12 am

  சேக்கிழாரின் இந்தப் பாடலை இந்து அணியினரின் கூட்டங்களில் கட்டாயம் ஒலிக்கச் செய்யவேண்டும். இந்தப் பாடலின் ஒலி போலி செக்குலர் வதிகளின் செவிப்பறையைச் சென்று தக்குதல் வேண்டும்.

 46. IRUNGOVEL on September 9, 2010 at 11:13 am

  This living being (Sorry I hesitate to call P.C. as a human being can do anything for power/minister post. For the power anything will do.

  Hello P.C.!

  For all the problems is north eastern states, including Kashmir, Punjab, Assam your party and the lady Mrs Indira Ferose Gandhae alone responsible.

  The root cause of the maoist and naxals activities, are your party and Mrs Indira alone.

 47. Gopalan on September 13, 2010 at 4:52 pm

  All Tamilnadu people know how PC “won “the last election by manipulation after he was declared “lost” . So his position as Home Minister is totally untenable.He can be a home secretary for he household of Soni mam.It is better he keeps his dirty mouth shut.

 48. ArunPrabu on September 29, 2010 at 5:19 pm

  சிவகங்கை தொகுதியில் 1984 முதல் இரண்டரை லட்சம் வாக்கு வித்தியாசம் என்ற கௌரவத்தில் வென்று வந்த சினா தானா இரண்டாயிரம் வாக்கு வித்தியாசம் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டு கடைசியில் கபடமாக வெற்றி பெற வேண்டிய இழிநிலைக்கு ஆளானவர் தான். சொந்த ஊரில் செல்லாக்காசான இவர் இத்தாலிக்கு அடிவருடினாலொழிய அரசியலில் பிழைக்க முடியாது. இத்தாலிக்கு அடிவருடுவதன் அடிப்படை இந்துக்களை இழிவுபடுத்துவது. அதைத் தான் அவர் செய்கிறார். காங்கிரசு அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!!

 49. EROTTAAN on October 14, 2010 at 10:59 pm

  எல்லோருக்கும் வயசாக ஆக அறிவு வளரும் ,ஆனால் இவருக்கு மட்டும் குறையிது.தனக்குக்கு பிறகு தன் அரைவேக்காட்டு மகனை பதவியில் அமர்த்த அன்னையின் பாதார விந்தங்களை நாவினால் குளிரவைக்கப் பார்க்கிறார் .அதன் வெளிப்பாடு தான் இது .புரிந்து கொள்ளுங்கள் சகோதரர்களே !

 50. B. பாஸ்கர். on October 15, 2010 at 12:50 pm

  வணக்கம்

  ////அரசியல் காரணங்களுக்காக என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்ற அவலமான நிலை. மதிப்பிற்குரிய சிதம்பரனார் இந்த நிலைக்கு இறங்க வேண்டாம் என்று இறைஞ்சுகிறேன்////

  கட்டளை இடவேண்டும் சகோதரா, இவர்கள் அதாவது நம்மை ஆள்பவர்கள் என்று நாம் கூறிக்கொள்வோறேல்லாம் நம்மிடம் ஓட்டுப் பிச்சை பெற்றவர்கள். மன்னிக்கவும் ஓட்டாக கூலி பெற்ற நமது சேவகர்கள். இறைஞ்சி நிற்பதால்தான் அவர்களை நம்மிடம் நிமிர்ந்து நிற்கிறார்கள். வேண்டாம் இந்த தாழ்வு.

 51. Kumudan on November 30, 2010 at 12:32 pm

  Dr Swamy exposes ‘Seedy’ Home Minister
  http://www.haindavakeralam.com/HKPage.aspx?PageID=12708&SKIN=B

 52. Malarmannan on November 30, 2010 at 2:19 pm

  தொடக்க காலத்தில் தன்னைத் தீவிர மார்க்சியவாதிபோல் காட்டிக்கொண்டவர் ப.சி. பல ஆண்டுகளுக்குமுன் நானும் அவரும் ஒரே மேடையில் பேச நேரிட்டது. நான் பேசிய பிறகு பேசிய ப.சி., நான் மக்கள் தொகையில் மூன்று சதமே உள்ளவர்களுக்கு ஆதரவாகப் பேசியதாகவும் அவர் மீதியுள்ள 97 சத மக்களுக்காகப் பேசுவதாகவும் கூறினார். அதாவது நான் மார்க்சியத்தைக் கண்டித்துப் பேசியதால் என்னை முதலாளி வர்க்கத்தின் சார்பில் பேசுகிறவன் என்றும், தான் ஏழை எளியோர் சார்பில் பேசுவது போலவும் சித்திரித்தார். என்னைத் தனிப்பட்ட முறையில் அவர் விமர்சித்ததால் அதற்கு பதில் அளிக்க வாய்ப்பு வேண்டும் என வலியுறுத்தி மீண்டும் பேசினேன்.
  97 சதம் மக்கள் சார்பில் பேசுவதாகக் கூறும் ப.சி., கூட்டம் முடிந்ததும் தன் காரில் ஏறி நீச்சல் குளம் உள்ளிட்ட சொகுசு வசதிகள் மிக்க தனது மாளிகைக்குச் செல்வார். அறுசுவை இரவு உணவு உண்பார், குளிர் சாதன வசதியுள்ள படுக்கையறையின் மெத்தையில் படுத்து உறங்குவார். மூன்று சத மக்கள் சார்பில் பேசிய நானோ காலாற நடந்து அருகாமையில் உள்ள் பஸ் நிறுத்தம் சென்று, பஸ் வரும்வரை கால் கடுக்க நின்று பின் முண்டி யடித்து பஸ் ஏறி அதிலும் இடம் கிடைக்காவிட்டால் நின்றுகொண்டே பயணம் செய்து வீட்டிற்கு நடந்துபோய் எது மிச்சம் இருக்கிறதோ அதை உண்டு பாயில் படுத்து உறங்குவேன் என்று சொன்னதும் அவை பலத்த கைதட்டல் ஒலியால் நிரம்பியது.
  ப.சி.க்குப் எப்படியேனும் பதவி பெற வேண்டும் என்பதைத் தவிர வேறு கொள்கை ஏதும் கிடையாது. இதில் தான் ஏதோ பெரிய அறிவிஜீவி என்கிற நினைப்பு வேறு!
  இந்திரா இருந்தபோதே டிக்கட் கிடைக்கவில்ல என்பதற்காகக் கட்சியிலிருந்து விலகியவர்தான் ப.சி.

  எந்த ஹிந்துவும் தனது சமயத்தின் பெயரால் எவ்வித பயங்கரவாதச் செயலிலும் இறங்கவில்லை. ஆனால் ஆளுங் கட்சி வாக்கு வங்கி பறிபோய்விடுமே என்பதற்காக முகமதிய பயங்கரவாதத்திற்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்காமல் மெத்தனமாக இருப்பதால் ஹிந்து இளைஞர்கள் பலரும் பொறுமை இழந்து வருகின்றனர். எனது சுற்றுப்பயணங்களின்போது பேசியது போதும் என்ன செய்யலாம் என்று சொல்லுங்கள் என்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
  -மலர் மன்னன்

 53. Kumudan on November 30, 2010 at 5:27 pm

  Sriman Malarmannan,

  I request you to share your experience and wisdom more often in this forum. Most of the time they come only as comments but I feel it’d be more useful by way of contributing articles. This is my humble opinion.

 54. கந்தர்வன் on November 30, 2010 at 7:08 pm

  // நான் பேசிய பிறகு பேசிய ப.சி., நான் மக்கள் தொகையில் மூன்று சதமே உள்ளவர்களுக்கு ஆதரவாகப் பேசியதாகவும் அவர் மீதியுள்ள 97 சத மக்களுக்காகப் பேசுவதாகவும் கூறினார். //

  அப்படியா, அப்படியானால் ப.சி. லாஜிக் படியே 17 சதவிகித மக்களுக்கு மாத்திரம் ஆதரவாகப் பேசும் கட்சிக்கு ஓட்டுப் போடாமல் 83 சதவிகித மக்களுக்கு ஆதரவாகப் பேசும் கட்சிக்கு மக்களை ஒட்டு போட அவர் ஊக்குவிக்க வேண்டும்.

 55. கந்தர்வன் on November 30, 2010 at 7:12 pm

  Shri Kumudan,

  Shri Malarmannan does write articles on this web site. Checkout the authors’ list.

 56. Malarmannan on November 30, 2010 at 10:39 pm

  I request you to share your experience and wisdom more often in this forum. Most of the time they come only as comments but I feel it’d be more useful by way of contributing articles. This is my humble opinion- Sri Kumudan

  உங்கள் ஆர்வத்திற்கும் அன்பிற்கும் நன்றி, ஸ்ரீ குமுதன். இதே கருத்தைப் பலரும் என்னிடம் தெரிவித்து வருகின்றனர். மறுமொழிகளாகத் தெரிவிக்கப்படுவதால் கருத்துகளும் தகவல்களும் சிதறிப் போவதாகவும் இதனால் அவற்றைப் பதிவு செய்துகொள்ள இயலவில்லை என்றும் கூறுகின்றனர். வெளியாகும் கட்டுரைகளையொட்டி மறுமொழிகளை எழுதுவதால் அவற்றைத் திரட்டினால் கருத்துகள் ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாமல் துணுக்குகளாக இருக்கும். பரவாயில்லை, மலர்மன்னன் மறுமொழிகள் என்று தொகுத்துத் தர வேண்டுகிறார்கள். இது என்னால் எப்படி சாத்தியமாகும்? வேறு யாராவதுதான் அதைச் செய்ய வேண்டும்.
  உங்கள் விருப்பப்படியே தனிக் கட்டுரைகளாக எழுதப் பார்க்கிறேன்.
  -மலர்மன்னன்

 57. Kumudan on December 1, 2010 at 9:22 am

  Sriman Gandarvan,

  I know Sriman Malarmannan has contributed some articles. My point was that considering his knowledge related to politics and religion (and may be in other topics too), he can write articles for many years without any topic being repeated. It might even beat the TV serials (obviously only in number of episodes and not the contents).

  //உங்கள் விருப்பப்படியே தனிக் கட்டுரைகளாக எழுதப் பார்க்கிறேன்.//
  ஸ்ரீமான் மலர்மன்னனுக்கு மிக்க நன்றி. ஆர்வத்துடன் எதிர்பார்க்கிறேன்.

 58. அருண்பிரபு on December 1, 2010 at 2:30 pm

  சிரிச்சு, சிரிச்சு வந்தார் சீனாத்தானா டோய்
  சிரிக்கி, சிரிக்கி மஹ தானாப்போனாடோய்
  விடியுமட்டும் விடியுமட்டும் தேனாப்போனாடோய்
  விடிஞ்சபின்னே விடிஞ்சபின்னே காணாப்போனாடோய்!

  வாழ்க்கை வாழ்வதற்கே ஜெமினி எடுத்த படம் அதை தமக்கு மட்டும் காட்டிக் கொள்கிறாராம் சீனாத்தானா என்றழைக்கப்படும் சிதம்பரம்.
  கீறாத புண்களுக்குப் புனுகு தடவும் களிப்பில் நாட்டு நலன் பலியாகிறது எனும் சுப்பிரமணியன் சுவாமியின் கடிதம் கவலை தருகிறது.

  http://www.haindavakeralam.com/HKPage.aspx?PageID=12708&SKIN=B

  லன்ச்சுக்கொரு மஞ்சுளாவும்
  டின்னருக்கு வெண்ணிலாவும்
  இருந்தா இளமைக்கு யோகம்(!)
  அதனால் நாட்டுக்கென்ன லாபம்?

 59. ariyan on May 10, 2014 at 12:15 pm

  மக்கள் செல்வாக்கு கொஞ்சமும் இல்லாத , இந்த சிவகங்கை அரண்மனை வாசி- பேசுவதற்கு முக்கியத்துவம் தரவேண்டாம் . இந்து சனாதன தர்மத்தின் நிறம் -காவி தான் ! ஏன் காவியை கண்டால் இந்த பயம் ! மோடி வருவதற்கு , முன்னரே இந்த நடுக்கம் !

மறுமொழி இடுக:

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.

உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:

தமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.

மறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

*