முகப்பு » தரவிறக்கம், பண்டிகைகள், பொது, வழிகாட்டிகள்

ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தியும், நாம் மறக்கக் கூடாத பலிதானமும்


அனைவருக்கும் இனிய ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள்!

இந்த நன்னாளை முன்னிட்டு தமிழ்ஹிந்து வழங்கும் தமிழர் தெய்வம் கண்ணன் என்ற பவர்பாயிண்ட் பிரசண்டேஷனை இங்கே தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இரண்டு வருடங்கள் முன்பு (2008-ம் வருடம்), இந்துக்களின் இதே புனித நன்னாளில் தான் சுவாமி லக்ஷ்மணானந்த சரஸ்வதி அவர்களும், அவரது ஆசிரமத்தின் சீடர்களும் மாவோயிஸ்டு வெறியர்களின் துப்பாக்கிக் குண்டுகளுக்கு பலியானார்கள்.

ஒரிஸாவில் வனவாசிகளின் முன்னேற்றம், கல்வி சேவை, அவர்களின் பண்பாட்டு பாதுகாப்பு ஆகிய துறைகளில் அயராது உழைத்து, மதமாற்ற சக்திகளுக்கு சிம்ம சொப்பனமாகி விளங்கி, மதவெறி-மாவோயிஸ்டு கூட்டுச் சதியால் தனது எண்பதாவது வயதில் கொல்லப் பட்டார் துறவி சுவாமி லக்ஷ்மணானந்த சரஸ்வதி.

வனவாசிகளின் மேம்பாட்டுக்காகவும் ஆன்ம உரிமைக்காகவும் தன்னையே பலிதானமாக தந்த அந்த வீரரின் தியாகத்தையும் இந்தப் புனித நன்னாளில் நினைவு கூர்வோம்.

சுவாமி லக்ஷ்மணானந்த சரஸ்வதி: கண்ணீர் அஞ்சலி

பழந்தமிழரும் பாடி வணங்கிய கண்ணனின் லீலைகளையும், இந்த பலிதானத்தையும் நினைவு கூறும் கீழ்க்கண்ட மூன்று வாழ்த்து அட்டைகளை தமிழ்ஹிந்து.காம் வாசகர்களுக்கு வழங்குகிறது.

இவற்றை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் இந்த நன்னாளில் அனுப்புங்கள்.

(படங்களின் மீது க்ளிக் செய்து அவற்றின் முழு, பெரிய அளவு வடிவங்களை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்).

krishna-janmashtami-swami-lakshmananda-rememberance-2010-1

krishna-janmashtami-swami-lakshmananda-rememberance-2010-2

krishna-janmashtami-swami-lakshmananda-rememberance-2010-3

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , ,

 

24 மறுமொழிகள் ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தியும், நாம் மறக்கக் கூடாத பலிதானமும்

 1. senthoor.. on September 1, 2010 at 4:50 pm

  கிருஷ்ண ஜெயந்தி நாளில் பிராணதானம் செய்த ஸ்வாமிகளின் திருவடிக்கமலங்களுக்கு மனமார்ந்த வணக்கங்கள்….
  ஸ்ரீ பரமபத நாதன் துணை

 2. saekkizhaan on September 2, 2010 at 3:42 am

  வன இருள் நீக்கிய ஆதவன்:
  ஒரு கவிதாஞ்சலி
  ——————————————-

  ராமனின் நிழலாய் வாழ்ந்த
  நாயகன் பெயரில் பாதி; இந்து
  நாமத்தின் உயர்வு சொன்ன
  நாவலன் பெயரில் மீதி; கந்த
  மால்வனம் சார்ந்த மக்கள்
  வாழ்வினை மேம்படுத்த; முந்து
  சூலெனத் துணிந்து நின்று
  சோதியாய் ஆனாய் போற்றி!

  கானக ஏழை மக்கள்
  கல்வியைப் பெறுவதற்கும்; இந்து
  தானவர் என்று கூறி
  தருநிழல் ஆவதற்கும்; சொந்த
  சோதரர் திசை மாறாமல்
  சுயமாக உயர்வதற்கும்; நந்த
  பாலனின் ஜன்மநாளில்
  படையலாய் ஆனாய் போற்றி!

  நாளெலாம் உழைத்துழைத்தும்
  நாடியைக் கருதிடாமல்; நைந்த
  தோளினில் காவியேந்தி
  தூய்மையாம் அன்பு காட்டி; உந்து
  சேவையால் ஒருங்கிணைத்து
  செருநரை எதிர்த்துநின்று; ஈந்த
  ஆவியால் காத்து விட்டாய்; இந்து
  ஆதவா போற்றி! போற்றி!

  ***

 3. IRUNGOVEL on September 2, 2010 at 11:31 am

  My humble Pranams to Shri Lakshmanananda Saraswathi Swamiji. Let us Pray Lord Krishna to keep swamiji’s soul rest in peace.

 4. R.Sridharan on September 2, 2010 at 8:09 pm

  அந்த எண்பத்து நாலு வயது மகானின் தளர்ந்த உடலை புல்லெட்டுகளால் சல்லடையாகத் துளைத்த அந்த சதி- அதை முறியடிக்க இந்த ஜென்மாஷ்டமி நாளில் உறுதி பூணுவோம்.

 5. gomathy on September 5, 2010 at 12:03 am

  //பழந்தமிழரும் பாடி வணங்கிய கண்ணனின் லீலைகளையும்//

  சைவத்தில் பெண்ணின் வயிற்றில் இறைவன் பிறப்பதில்லை. பெண்ணின் வயிற்றில் பிறந்தால் அவன் இறைவன் இல்லை. பழந்தமிழர்கள் நிலத்தை பிரித்து அதற்குத முல்லை தலைவனை திருமால் என வைத்தார்களே ஒழிய, கண்ணனைப் பாடி வணங்கியது பிற்காலத்தில்தான்

 6. babu on September 5, 2010 at 3:19 pm

  அகப்பயணம் ( திரு அரவிந்தன் நீலகண்டன் ) மற்றும் ஜடாயு
  (திரு ஜடாயு) ஆகியோர்களின் கட்டுரையை படிக்கவும் . தமிழ்நாட்டில் கிருஷ்ண வழிபாட்டை எந்த காலத்தில் இருந்து உள்ளது என்று விரிவாக கூறியுள்ளார்கள்.

 7. கந்தர்வன் on September 5, 2010 at 5:32 pm

  திருமதி கோமதி அவர்களே,

  //
  சைவத்தில் பெண்ணின் வயிற்றில் இறைவன் பிறப்பதில்லை. பெண்ணின் வயிற்றில் பிறந்தால் அவன் இறைவன் இல்லை.
  //

  சைவ சித்தாந்தம் அப்படிக் கூறுவதற்கும் சங்கத் தமிழர்களின் சமய நெறிக்கும் என்ன தொடர்பு? சங்கப் புலவர்கள் அனைவரும் சைவ சித்தாந்திகள் என்று உங்களுக்கு யார் கூறினார்?

  பரிபாடலில் திருமாலைப் பற்றிய பாடல்களில் திருமாலைப் பரம்பொருளாக அறிவித்துள்ளனர் பழந்தமிழர். ஒரு பாடலில் “பிறவாப் பிறப்பில்லை, பிறப்பித்தோர் இல்லையே” என்று வருகிறது. அதாவது, திருமாலின் பிறப்பு கர்ம வசப்பட்டவர்கள் பிறத்தலைப் போல அன்று என்று அப்பாடல் அறிவிக்கிறது.

  // பழந்தமிழர்கள் நிலத்தை பிரித்து அதற்குத முல்லை தலைவனை திருமால் என வைத்தார்களே ஒழிய, கண்ணனைப் பாடி வணங்கியது பிற்காலத்தில்தான் //

  இது தவறு என்பது சங்க இலக்கியங்களை ஆராய்ந்தாலேயே தெரியும்.

  (1)
  பரிபாடலில் பல இடங்களில் திருமாலைப் பரம்பொருளாகச் சங்கப் புலவர்கள் அறிவித்துள்ளனர். நற்றிணை கடவுள் வாழ்த்துப் பாடலில் திருமால் “அனைத்து உலகங்களையும் சரீரமாகக் கொண்ட வேத முதல்வன்” என்று பாரதம் பாடிய பெருந்தேவனாரால் கூறப்படுகிறார். பரிபாடல் முதல் பாடலில்:

  ‘இன்னோர் அனையை; இனையையால்‘ என,
  அன்னோர் யாம் இவண் காணாமையின்,
  பொன் அணி நேமி வலம் கொண்டு ஏந்திய 55

  மன்னுயிர் முதல்வனை ஆதலின்,
  நின்னோர் அனையை, நின் புகழோடும் பொலிந்தே!
  நின் ஒக்கும் புகழ் நிழலவை;
  பொன் ஒக்கும் உடையவை;
  புள்ளின் கொடியவை; புரி வளையினவை; 60

  எள்ளுநர்க் கடந்து அட்ட இகல் நேமியவை;
  மண்ணுறு மணி பாய் உருவினவை;
  எண் இறந்த புகழவை; எழில் மார்பினவை,

  [நினக்கு உவமையாவாரை யாங்கள் காண்கின்றிலேம். நீ மன்னுயிர்க்கெல்லாம் தலைவன்ஆதலின், அங்ஙனம் தலைமைபூண்போர் பிறரின்மையின் அத்தகைய புகழோடே பொலிந்து நீ நின்னையே ஒத்திருக்கின்றனை . மேலும், நின்னையே ஒக்கும் புகழினையும் உடையை; பொன்னாடையை உடையை; கருடக் கொடியுடையை; சங்கமும் சக்கரமும் உடையை; நீலமணி போன்ற நிறமுடையை; அளவற்ற புகழினையும் உடையை; அழகுமிக்க மார்பினையுடையை. ]

  என்றும், பரிபாடல் மூன்றாம் பாடலில்

  நின்னைப் புரை நினைப்பின் நீ அலது உணர்தியோ,
  முன்னை மரபின் முதுமொழி முதல்வ!

  [நினது பெருமை நீயே உணர்வதல்லது பிறரால் உணரப்படுவதோ? அநாதியாய் வருகின்ற மரபினையுடைய வேதத்திற்கு முதல்வனே!]

  என்றும் உள்ளதைக் காணவும்.

  (2)
  திருமால் முல்லைநிலத்திற்கு மட்டுமே தெய்வம் என்கிறீர்கள். தொல்காப்பியர் அப்படிக் கூறவில்லை; “மாயோன் மேய காடுறை உலகமும்” என்பதற்கு எப்படிப் பொருள் கூற இயலும் என்றால், “திருமால் கிருஷ்ணாவதாரத்தின் போது பிருந்தாவனமாகிய காட்டில் பல லீலைகள் செய்து வருவதால் முல்லை நிலத்திற்குத் திருமாலை சொல்கிறார்கள்” என்று கொள்ள வேண்டும். இதனால் முல்லை நிலத்துக்கு மட்டுமே திருமால் தெய்வம் என்று பொருள் அன்று, ஏனெனில் திருமால் கோயில்கள் திருவரங்கம், காஞ்சி முதலிய நெய்தல் நிலப் பகுதிகளிலும், குறிஞ்சி நிலமாகிய வேங்கடம், திருவிதாங்கோடு, திருமாலிருங்குன்றம் முதலிய பகுதிகளிலும் உண்டு என்று சங்க இலக்கியமே அறிவிக்கிறது. மேலும், பரிபாடலிலேயே மூன்றாம் பாடலில்,

  நின் சேவடி தொழாரும் உளரோ? அவற்றுள்
  கீழ் ஏழ் உலகமும் உற்ற அடியினை;

  என்று வருகிறது. ஆகையால் திருமால் “முல்லை நிலத்திற்கு மாத்திரம் தெய்வம்” என்று கூறலாகாது.

 8. R.Sridharan on September 5, 2010 at 8:18 pm

  திருமால் எடுப்பது அவதாரம்
  அது பிறப்பல்ல.
  நமக்கெல்லாம் பிரசவம்
  ஆனால் ஆண்டவனுக்கு பிரவேசம்
  அவன் ஒரு தாயையும் நிர்ணயித்து நேராக அவளது கருப்பையில் பிரவேசம் செய்கிறான்.
  அதுதான் சிறப்பு.
  இதில் சைவம் ,வைணவம் என்றில்லை

 9. babu on September 6, 2010 at 5:03 pm

  http://www.tamilhindu.net/-f7/—t211.htm
  ராமர் வாழ்ந்தாரா? சங்க இலக்கிய பதிவுகள் இங்கே .

 10. senthilkumar on September 7, 2010 at 8:05 pm

  சங்க தமிழர்கள் அனைவரும் கண்ணனை பரம்பொருளாக கொண்டதாக எங்குள்ளது? முல்லை நிலத்துக்கு கூட திருமால் தான் தலைவன் அன்றி அவரது அம்சமான கண்ணனை தலைவன் என்று இயம்பவில்லை.(நாரணனின் அவதாரத்தில் மற்றவர் குறைவு காணின் அக்குறையை அதன் அம்சத்தின் மேலேற்றல் வழக்கப்படி அம்சம் வேறு முலம் வேறு என்பதே கொள்கை )
  தான் வணங்கும் தெய்வத்தை உயர்த்தி கூறுவது இயற்கையே. அதனால் நாரணனுக்கு பிறப்பில்லை அது அவரின் பிரவேசம் எனில் கருப்பண்ணன், இருளன்,என அனைவரும் தம்முடைய தெய்வத்தின் பிறப்பை அவ்வாறே கூறுவர். எனவே காய்தல் உவத்தல் அன்றி முக்தி நோக்கி அவாவுவாரே அதனை ஆராய்வார்,
  மாயவனின் பெருமையை கூறும் அதே பரிபாடலில் முருகனின் பல்வேறு சிறப்பும், முக்கண்ணனின் பல்வேறு சிறப்பும் அந்தணர்கள் ஆதிரை விழவு எடுத்ததும், பாண்டியன் திருப்பரங் குன்றத்தை வலம் வந்ததும் பாடப்பட்டு உள்ளது.
  பரிபாடலின் பாயிர பாடலும் கண்ணுதற் கடவுளும் அண்ணலங் குறுமுனி என சிவபக்தராகிய அகத்திய மாமுனிவரையும் முனைவேல் முருகபெருமான் முருகனையும் புகழ்ந்தே கூறுகிறது..
  எனவே அக்காலத்தில் அவரவர் வழிபடும் இறைவனை உயர்த்தினரே அன்றி அடுத்தவரை காரணமின்றி தாழ்த்துவதில்லை . வேதமும் பிறவாதவனையே பரம் பொருள் என்று கூறுகிறது. அதனை நேரே மறுக்க வழி இன்றியே பிறப்பித்தார் இல்லை என கூறுவது என நினைக்கின்றேன்.
  பிறப்பித்தார் இல்லை என்பது தனக்கு மேல் ஒரு தலைவன் இல்லாதவன் என்பதே. ஆனால் ராமயணத்தின் மாய சீதை படலமும் , பாரதத்தின் மாயா வாசுதேவ படலமும் நோக்கும் போது அங்கு அவதார விஷ்ணு மூர்த்திகள் மனம் கலங்குவதும், துன்ப கடலில் தவிப்பதும் அவ்வாறு எண்ண இடமின்றி இருக்கின்றது.
  மாயவனின் முதல் அவதாரமான பரசு ராம அவதாரத்தை பின்னதான தசரத ராம அவதாரம் கர்வ பங்கம் செய்வதாக உள்ளதும் (என்னதான் என தொடங்கும் உந்திபற எனும் பாசுர இரண்டாம் பாட்டில் அதனை “என் வில்வலி கண்டு போவென்று எதிர்வந்தான்” என ஆழ்வாரும் அதனை ஒப்பினரே ), கிருஷ்ணனுக்கும் பலராமனுக்கும் மனஸ்தாபம் ஏற்ப்பட்டதும் இதிகாசத்தில் உள்ளதே? இவையெல்லாம் அவர்கள் ஸ்வதந்திரம் இலாதவர் என காட்டுவது ஆக உள்ளது.

 11. senthilkumar on September 7, 2010 at 8:12 pm

  நண்பர் ஸ்ரீதர் அவர்களுக்கு,
  வைஷ்ணவத்தில் தான் பரம்பொருளுக்கு பிறப்பு கூறுவது. சைவத்தில் சிவபெருமான் பிறந்ததாக எங்கும் கூறுவது இல்லை. இதனை புறசமய பெரியோர்களும் ( பிறவா யாக்கை பெரியோன் கோயிலும் – இளங்கோ அடிகள்) கூறி உள்ளனர். வைதிகதிலும் பிரமத்திற்கு பிறப்பும் இறப்பும் இல்லை என்பதே கொள்கை.

 12. கந்தர்வன் on September 8, 2010 at 6:11 am

  திரு செந்தில்குமார்,

  // சங்க தமிழர்கள் அனைவரும் கண்ணனை பரம்பொருளாக கொண்டதாக எங்குள்ளது? //

  நான் அப்படிக் கூறவில்லை. கண்ணனைப் பரம்பொருளாகக் கொண்டவர்கள் உண்டு என்று கூறத் தான் எழுதினேன்.

  // பரிபாடலின் பாயிர பாடலும் கண்ணுதற் கடவுளும் அண்ணலங் குறுமுனி என சிவபக்தராகிய அகத்திய மாமுனிவரையும் முனைவேல் முருகபெருமான் முருகனையும் புகழ்ந்தே கூறுகிறது..//

  பரிபாடல் சிறப்புப் பாயிரம் மிக மிகப் பிற்காலத்தில் எழுந்தது. அதில், “பரிமே லழக னுரிமையி னுணர்ந்தே” என்று வருவதிலிருந்து இப்பாயிரம் சங்க புலவரால் இயற்றப்படவில்லை என்றும், பரிமேலழகர் காலத்திற்கும் பிறகு வந்த பாயிரம் என்றும் தெரிகிறது.

  // காரணமின்றி தாழ்த்துவதில்லை . வேதமும் பிறவாதவனையே பரம் பொருள் என்று கூறுகிறது. அதனை நேரே மறுக்க வழி இன்றியே பிறப்பித்தார் இல்லை என கூறுவது என நினைக்கின்றேன். //

  அன்பரே, “பிறவாப் பிறப்பில்லை, பிறப்பித்தோர் இல்லையே” என்பது “அஜாயமானோ பஹுதா விஜாயதே” என்னும் புருஷ சூக்த வாக்கியத்தை ஒட்டியது. ஆகையால், “நேரே மறுக்க வழி இன்றி” என்பதெல்லாம் உண்மை அன்று. அப்படிப் பார்த்தால்,

  (௧) சதபத பிராம்மணம், (௨) சதருத்ரீய பிராம்மணம், (௩) சைலாசி பிராம்மணம், (௪) பாகவத புராணம், (௫) விஷ்ணு புராணம், (௬) சிவபுராணம், முதலிய நூல்களில் முக்கட்பிரான் பிரம்மாவினுடைய பிள்ளை என்றும், சதபத பிராம்மணத்தில் “உஷஸ்” என்னும் தேவதையின் கர்ப்பத்தில் ஒரு வருடம் வசித்து பிரம்மாவுக்கு மகனாக சிவன் பிறந்தார் என்றும் வருகிறது. நீங்கள் சொல்லும் நியாயப்படி, சிவனையும் பரம்பொருளாக ஏற்க முடியாது.

  ஏன், பரிபாடலில் ஐந்தாம் பாடலில் முருகப்பிரான் பிறப்பு பற்றிக் கூறப்பட்டிருக்கிறது:

  “அக் கருவை முனிவர்கள் எழுவரும் பெற்று வேள்வித் தீயிலிட்டனர்; பின்னர் அதனைக் கார்த்திகை மகளிர் அறுவரும் உண்டு கருக்கொண்டு சரவணப் பொய்கையின்கண் தாமரைப்பூவாகிய பாயலில் நின்னை ஈன்றனர். ” – சோமசுந்தரனார் உரை.

  உங்கள் நியாயப்படிப் பார்த்தால், முருகனையும் பரம்பொருளாக ஏற்க முடியாது.

  // பிறப்பித்தார் இல்லை என்பது தனக்கு மேல் ஒரு தலைவன் இல்லாதவன் என்பதே. ஆனால் ராமயணத்தின் மாய சீதை படலமும் , பாரதத்தின் மாயா வாசுதேவ படலமும் நோக்கும் போது அங்கு அவதார விஷ்ணு மூர்த்திகள் மனம் கலங்குவதும், துன்ப கடலில் தவிப்பதும் அவ்வாறு எண்ண இடமின்றி இருக்கின்றது. //

  இறைவன் அவதாரத்தில் கலங்கியது எல்லாம் நாடகம் என்று அத்வைத, தவித்த, விசிஷ்டாத்வைத ஆச்சாரியார்கள் அனைவரும் விளக்கியுள்ளனர். மேலும், இராமாயணத்தில் பிரமன் முதலிய தேவர்களெல்லாம் வந்து “இராமா, நீ நடித்தது போதும். இராவணனைக் கொன்றுவிட்டாய். ஜகத்காரணமாகிய பரம்பொருளாகிய விஷ்ணு தான் நீ. இனி எங்களுடன் திரும்பி வா” என்று திரும்பிவர அழைக்கிறார்.

  // மாயவனின் முதல் அவதாரமான பரசு ராம அவதாரத்தை பின்னதான தசரத ராம அவதாரம் கர்வ பங்கம் செய்வதாக உள்ளதும் //

  பரசுராம அவதாரம் பூர்ண அவதாரம் அன்று. அது ஒரு சக்த்யாவதாரம். சக்த்யாவதாரம் என்றால், ஒரு ஜீவனுக்கு இறைவன் தன்னுடைய பலத்தை அளித்தால் என்று பொருள். இராமாவதார காலத்தில் பரசுராமருக்கு இறைவன் அளித்த பலம் நீங்கிவிட்டது என்று கொள்ள வேண்டும்.

  // கிருஷ்ணனுக்கும் பலராமனுக்கும் மனஸ்தாபம் ஏற்ப்பட்டதும் இதிகாசத்தில் உள்ளதே? இவையெல்லாம் அவர்கள் ஸ்வதந்திரம் இலாதவர் என காட்டுவது ஆக உள்ளது. //

  கிருஷ்ணனுக்கும் பலராமனுக்கும் ஏற்பட்டது மனஸ்தாபம் அன்று என்று இதிகாசத்தை சரியாக வாசித்தால் தெரிய வரும். எப்படி இருந்தாலும், இதை வைத்து “அவர்கள் ஸ்வதந்திரம் இல்லாதவர்” என்று கூற இயலாது.

  // வைதிகதிலும் பிரமத்திற்கு பிறப்பும் இறப்பும் இல்லை என்பதே கொள்கை. //

  அப்படியானால், ஆதி சங்கரர், ராமானுஜர், மத்வர் ஆகியோர் வைதிகர் அல்லர் என்று கூறுகிறீர்கள். உங்கள் இஷ்டம்.

 13. கந்தர்வன் on September 8, 2010 at 6:19 am

  // வைதிகதிலும் பிரமத்திற்கு பிறப்பும் இறப்பும் இல்லை என்பதே கொள்கை. //

  பிரம்மத்திற்கு (நம்மைப் போன்ற) பிறப்பு இறப்பு இல்லை தான். ஆனால், அனைத்து (அத்வைத, விசிஷ்டாத்வைத, தவித்த) வேதாந்த ஆச்சாரியார்களும் அவனுடைய அவதாரப் பிறப்பு அப்ராக்ருதம் என்றே வழங்கியுள்ளனர்.

 14. babu on September 8, 2010 at 1:51 pm

  சிவனின் பிறப்பாகவே அதி சங்கரர் அறியப்படுகிறார். நான் சிவமே என்று அவரே தெரிவித்ததாக எங்கோ இந்த தளத்தில்தான் படித்திருக்கிறேன். சிவனின் அம்சமாக தான் அனுமன் அறியபடுகிறார். பிறவா யாக்கை பெரியோனுக்கு பிறவி எடுக்க உரிமை இல்லையா? அனுமதி இல்லையா?.அல்லது அவன் நம்மை காக்கும் பொருட்டு பிறவி எடுத்துவிட்டால் அவனை ஏற்றுக்கொள்ள கூடாதா?

  கண்ணன் குறைந்தபட்சம் ஏழாம் நுற்றாண்டில் ஆண்டாளால் பாடப்பட்டிருக்கிறான் அதற்குமுன் இருந்த ஆழ்வார்கள் கூட கண்ணனை வணங்கி உள்ளார்கள்,அதற்கும் முன் இடைகாடர் நாராயண கோன் என்று பாடி இருக்கிறார். திருக்குறளிலேயே லக்குமியை திருவள்ளுவர் குறிபிட்டுள்ளார். சிவ பார்வதி திருமணத்திற்கு பெருமாள் முன்னின்று நடத்துவதாக தான் ஐதீகம் அப்படித்தான் மீனாட்சி திருக்கல்யாணம் நடப்பதாக மரபும் உள்ளது.
  ரெங்கநாதரிடம் இருந்து சமயபுர அம்மனுக்கு சீர் செல்வது இன்னும் வழக்கில் உள்ளது என்று குமுதம் பக்தி ஸ்பெசல் படித்திருக்கிறேன்.

  நாம் (பெரும்பான்மை இந்துக்கள்)தீபாவளி கொண்டாடி தொடர்ந்து கந்த சஷ்டியும் கொண்டாடுவது இல்லையா? தொடர்ந்து மார்கழியில் ஆதிரை தரிசனமும்,சொர்க்க வாசல் தரிசனமும் செய்வதில்லையா?
  படை தலைவர்களுள் நான் குமாரக்கடவுள் கண்ணன் கண்ணன் கீதையில் கூறவில்லையா?
  சங்கர நாராயணர் வழிபாடு எதற்கு?
  நந்தி விண்ணகரம் என்று நந்தி பெருமாளை வழிபட்ட தளம் ஒன்று குடந்தை அருகே உண்டு.
  சிவலிங்கத்திற்கு தீப ஆராதனை செய்யும் சிவாச்சாரியார் அடிபீடம் பிரம்மா, நடுப் பகுதி சிவன்,மேல்பகுதி விஷ்ணு என்று சொல்லி தீபம் காட்டுவதை பார்த்திருக்கிறேன்.
  இன்னும் புராணங்களில் சிவன் வரத்தை கொடுத்துவிடுவதும் அதனால் அரக்கர்கள் கோட்டம் அடிப்பதும் பின்னர் விஷ்ணு அவர்களை அவதாரம் எடுத்து கொள்வதும் காட்டப்பட்டுள்ளனவே.
  தென்னிந்தியாவில் தான் ஹரிஹர (ஐயப்ப) வழிபாடு சிறப்பு. ஐயப்ப சரிதம் தொடங்கிய காலத்திலேயே பெருமாள் வழிபாடும் இங்கே இருந்தே இருக்கவேண்டும் அல்லவா? (மலையாள மொழி தோன்றும் முன்னரே இந்த ஐயப்ப வழிபாடு இருந்திருக்க வேண்டும் அல்லவா?).

  வள்ளி,தெய்வயானையே திருமாலின் மகள்களாகத்தான் கந்தபுராணம் கூறுகிறது.
  சிவன் கோவில்கள் சிலவற்றில் பெருமாள் இருக்கிறார்,பெருமாள் கோவில் சிலவற்றில் விநாயகர் இருக்கிறார்.(சிலைகள்)

  மாயன் பிரமனு ருத்திரன் மகேசனோ
  டாயுஞ்சிவ மூர்த்தி யைந்து.
  ஞானக்குறள்-வீட்டு நெறிப்பால், ஆசிரியர் -அவ்வையார்.

  எதற்கு நமக்குள் பிரிவினை மற்றும் வாக்குவாதங்கள்.இருக்கும் மற்ற மதங்களினால் உண்டாகும் பிரச்னையே தீர்க்கமுடியவில்லை.
  இன்னும் எதற்கு நமக்குள் பிளவு.நமக்குள் இன்றைய அவசியத் தேவை ஒற்றுமை.
  அறியும் சிவனும் ஒன்னு இதை அறியாதவர் வாயில் மண்ணு.
  அறியாமல் சண்டையிடுபவருக்கு தலையிலும் தலையிலும் மண்ணு.
  அரியையும் சிவனையும் பிரித்து அரசியல் செய்வது பகுத்தறி(நரி) வாதிகளின் சதி வேலை. நமக்கு எதற்கு?
  ஊர் ரெண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் நாம் ரெண்டுபட்டால் நம்மை ஏளனம் செய்பவர்க்கும்,நம்மை அழிக்க நினைப்போர்க்கும் கொண்டாட்டம்.

  ஒன்றுபடுவோம் உயர்வடைவோம்.

  சிவார்ப்பணம், கிருஷ்ணார்ப்பணம்.

 15. ந. உமாசங்கர் on September 8, 2010 at 3:14 pm

  திரு கந்தர்வன் அவர்களே,

  ///கந்தர்வன்
  6 September 2010 at 1:34 pm
  ///ஆக்கபூர்வமான முயற்சியில் நான் இறங்குவதற்கு நீங்கள் செய்துக்கொண்டிருக்கும் அபவாதம் எனக்கு விக்னமாக உள்ளது என்று தெரிவித்துக் கொள்கிறேன். ///

  தங்கள் ஆக்கபூர்வமான முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள்.

 16. கந்தர்வன் on September 8, 2010 at 6:52 pm

  திரு உமாசங்கர் அவர்களே,

  // தங்கள் ஆக்கபூர்வமான முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள். //

  ஒருவர் கண்ணனைப் பற்றிய கட்டுரைக்கு அடியில், அதுவும் கிருஷ்ண ஜெயந்தி அன்று வெளிவரும் கட்டுரைக்கு அடியில், “கண்ணன் பிறப்பதனால் தாழ்ந்தவன், பரம்பொருள் அல்ல” என்று பேசுகிறார். இதற்குத் தர்க்க ரீதியான, ஆதரப் பூர்வமான எதிர்ப்பு தந்தேன்.

  இதைப் பா