சிலநூறுகோடியில் அம்புலிமாமா ( எந்திரன்)

rajinikanth-and-aishwarya-rai-in-endhiran-3சன் பிக்சர்ஸ், கலாநிதிமாறன் வழங்கும் என ஆரம்பிக்கும் படம் அப்படியே முடிகிறது. வழக்கமாக A Film by Shaankar என்பதெல்லாம் போய் கலாநிதி மாறனின் படைப்பாகிவிட்டது.

சினிமாத்துறையில் கலாநிதி மாறன் மற்றும் கருணாநிதியின் குடும்பத்தவர்கள் நுழைந்தது முதல் இன்றுவரை அவர்களைத் தவிர வேறு யாரும் சினிமாவை தயாரிக்கவோ அல்லது வெளியிடவோ முடியாத நிலை. அப்படியே தயாரித்தாலும் தயாரித்தவர்கள் பெயரில் வெளியிட முடியாத நிலை இருக்கிறது. எந்திரனின் வெற்றி அவர்களை மேலும் பலமுள்ளதாக்கி தமிழ் சினிமா ஒரு குடும்பத்தின் சொந்தத் தொழிலாகி விடும். கருணாநிதியின் நேற்றுப் பிறந்த பேரன் வரை எல்லோரும் தமிழ் சினிமாத் தாயாரிப்பாளர்கள் என்ற நிலைக்கு வந்திருக்கிறது.

ஜேம்ஸ் கேமரூன் போல இயக்குனர் சங்கர் இந்தப் படத்தைப் பற்றி 10 வருடங்கள் கனாக்கண்டதாக ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார், இப்படி காப்பியடித்து படம் செய்வதற்காகவா 10 ஆண்டுகள் காத்திருந்தீர்கள் எனக்கேட்கத் தோன்றுகிறது.

மேலும் 150 கோடியில் படம் எடுப்பதெல்லாம் இன்றைக்கு தமிழில் சாத்தியமாகியிருக்கிறது என்று பெருமையாய் சொல்லிக்கொண்டாலும், அந்தப்பணம் எப்படி வந்திருக்கும் என்பதெல்லாம் ஊரறிந்த ரகசியம்.

கிட்டத்தட்ட படபூஜையிலிருந்து இன்றைய ரிலீஸ் வரைக்கும் ரோபோ என்ற எந்திரன் குறித்து தினமும் செய்திகள் வருவதும், அல்லது வருவதுபோல பார்த்துக்கொண்டும், தற்போது காட்சிக்கு, காட்சி மக்கள் ஆரவாரம் என சன் டி.வியில் மிகைப் படுத்திச் சொல்வதும் இப்போதுவரை நடந்துகொண்டுதான் இருக்கிறது.

மனிதனைப் போன்றே ஒரு இயந்திர மனிதனை உருவாக்குகிறார் வசீகரன் எனப்படும் ரஜினி, பொறாமையின் காரணமாக இதைப்போன்ற ரோபோக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் குழுவின் தலைவரும், ரஜினியின் குருவுமானவர் அதை நிராகரித்துவிட இயந்திர மனிதனுக்கு உணர்வையும் அளிக்கிறார் ரஜினி. ஆனால் அது ரஜினியின் வாழ்க்கையிலேயே விளையாட ( ரஜினியின் காதலியையே காதலிக்க) அதை அழித்து விடுகிறார் ரஜினி. அதை வில்லன் கைப்பற்றி அதற்கு வன்முறைக்குணங்களை ஞாபகத்திரையில் ஏற்றி அதை தீவிரவாதிகளுக்கு விற்க முயல்கிறார். ஆனால் உணர்வுகள் கொண்ட அந்த ரோபோ, அதைப்போன்றே சிலநூறு ரோபோக்களை உருவாக்கிக் கொண்டு , அதை தனது உருவாக்கிய வில்லனையே அழித்துவிட்டு சானா என்ற ஐஸ்வர்யாவை திருமணம் செய்ய அலைகிறது. அந்த ரோபோவையும், அது உருவாக்கிய சிலநூறு ரோபோக்களையும் எப்படி ரஜினி மீண்டும் அழித்து ஐஸ்வர்யாவைக் கைப்பிடிக்கிறார் என்பதே ரோபோ.

ஹாலிவுட் திரைப்படத்திற்கு இணையான திரைப்படம் எனச் சொல்கிறார்கள். நிச்சயம் ஹாலிவுட் அளவு உழைத்துவிட்டு, வழக்கமாக தமிழ் டைரக்டர்கள் செய்யும் காப்பியைத்தான் இதிலும் செய்திருக்கிறார்கள். இவ்வளவு உழைத்த இந்தக் குழு கொஞ்சம் யோசித்திருந்தால் காப்பியேதும் அடிக்காமலேயே ரஜினிக்கு ஆவதுபோல் கதை செய்திருக்க முடியும். பிரம்மாண்டத்திற்கு மெனக்கெட்ட இந்தக் குழு கொஞ்சமாவது கதைக்காகவும் சிந்தித்திருக்கலாம். ஆனால், பிரம்மாண்டத்தைக் காட்டியே மிரட்டும் சங்கர் இந்தப் படத்திலும் அதே ஃபார்முலாவை செய்திருக்கிறார். படம் வெற்றியா, தோல்வியா என்பதைப் பற்றியெல்லாம் கவலை இல்லை. ஆனால் இவ்வளவு திறமையான குழு இருந்தும் இன்னும் ஆங்கிலத் திரைப்படங்களைக் காப்பியடித்து சீன்கள் சேர்க்க வேண்டுமா என்பதுதான் ரஜினி மற்றும் சங்கர் திரைஇப்படங்களின் ரசிகர்களின் ஆதங்கமாய் இருக்க முடியும்.

படம் ஆரம்பத்திலிருந்து இறுதிவரை ரஜினி மிக அழகாகத் தெரிகிறார். பழைய ரஜினியே மீண்டு வந்ததைப் போல. படத்தில் அவரது ட்ரேட்மார்க் எண்ட்ரி இல்லாதது ஒரு குறையே. வசீகரன் ரஜினியை விட ரோபோ ரஜினிதான் படத்தில் கலக்குகிறார். இயந்திர ரோபோ குழுவில் வசீகரன் ரஜினி அவர்களைப்போலவே உள்நுழைந்ததைக் கண்டுபிடிக்கும் சிட்டி ரோபோ செய்யும் வில்லத்தனமான செயல்கள் கலக்கல் காமெடி. மிக நன்றாய்ச் செய்திருக்கிறார் ரஜினி. வில்லன் ரஜினியிடம் பழைய ரஜினி எட்டிப் பார்க்கிறார்.

endhiran-movie-latest-unseen-photo-gallery-stills-03வில்லன் என யாருமே இல்லாதிருப்பதும், இருக்கும் வில்லனும் சொத்தையாக வில்லன் என நினைக்கும்போதே செத்துப்போவதும் முழுக்க முழுக்க ரஜினியை மட்டும் முன் நிறுத்தவே. ரகுவரன் இல்லாத குறையை உணர முடிகிறது படம் பார்க்கும்போது.

பாடல்காட்சிகள் படமாக்கப்பட்டுள்ள விதம் அருமை. ரஜினியின் உடைகளும், ஸ்டைலும் கலக்கல்.கிளிமாஞ்சாரோ பாடலும், காதல் அணுக்கள், ரோபோடா பாடலும் குறிப்பிட்டுச் சொல்லும்படி அருமை. நடனத்திற்கு மிகவும் மெனக்கெட்டிருப்பது தெரிகிறது. ரஜினி வழக்கமாக ஆடும் எக்ஸெர்சைஸ் எல்லாம் இல்லமால் நிஜமாகவே கலக்கலாக டான்ஸ் ஆடுகிறார்.

ஐஸ்வர்யாவுக்கு வயதாகி விட்டது கண்கூடாக தெரிகிறது. ராவணன் படத்தில் இருந்த அளவுகூட இப்படத்தில் இல்லை. மேலும் வயதான ஒரு தோற்றம். கொச்சின் ஹனீஃபா, கலாபவன் மணி, கருணாஸ், பாஸ்கர் என்ற டீம் இருந்தும் எல்லோர்ரையும் அதிக பட்சமாய் வீணடித்திருக்கிறார்கள்.

காமெடியில் ஒருவருக்கும் ஸ்கோப் என்பதே இல்லை. ரோபோ ரஜினி (சிட்டி) தான் கலக்குகிறார். காமெடியையும் அவரே செய்துவிடுகிறார். முதல் பகுதியில் தொய்ந்து செல்லும் படம், இரண்டாம் பகுதியில் தீப்பற்றிக்கொள்கிறது.

எல்லாவற்றையும் போட்டு உடைப்பதற்காக 150 கோடி செலவு செய்திருக்கிறர்கள். படம் ஆரம்பம் முதல் இறுதிவரை உடைத்துக் கொண்டே இருக்கிறார்கள். டீ.வியில் ஆரம்பிக்கிறது இவர்களின் உடைப்பு அட்டகாசம்.. அப்படியே நீண்டு கிட்டத்தட்ட கண்ணில் படும் எல்லாவற்றையும் உடைத்துவிட்டு பிரம்மாண்டம் எனச் சொல்லி விடுகிறார்கள்.

இந்த நல்ல கதையை இதைவிட எளிமையாய், காப்பியடித்தல் ஏதுமின்றி செய்திருந்தால் ரஜினிக்கும், ஷங்கருக்கும், தமிழ்த் திரையுலகுக்கும் ஒரு மைல்கல் படமாக இருந்திருக்கும். இவர்கள் செலவு செய்த சிலநூறுகோடிகளுக்கும் அர்த்தம் இருந்திருக்கும்.

இசையைப் பற்றி குறிப்பிட்டுச் சொல்லியே ஆக வேண்டும். மிக நன்றாய் செய்திருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான். பின்னனி இசையும் அருமை.தெளிவான ஒளிப்பதிவு,

படம் முழுக்க ரிச் ஆகத் தெரிய மெனக்கெட்டது வீண்போகவில்லை. எல்லா இடத்திலும் பிரம்மாண்டம். பிரம்மாண்டம் மட்டுமே.சாதாரனமான இடம் இப்படத்தில் வருவது பெருங்குடி குப்பைமேடு மட்டுமே. படம் முழுக்க அல்ட்ரா மாடர்னாகவே இருக்கிறது.

படத்தில் மாரியம்மன் கோவில் மைக்செட் தேர்வுக்கு படிப்பவர்களுக்கு தொந்தரவு தருவதாக காண்பிக்கிறார்கள். அப்படியே ஐந்துவேளை காதுக்கு அருகில் அலறும் பாங்கு ஓதுவதையும், ஞாயிற்றுக்கிழமைகளில் சர்ச்சுகளில் இருந்து வெளியாகும் அல்லேலூயாக்களையும் கான்பித்து மதச்சார்பின்மையை நிரூபித்திருக்கலாம். ஆனால் வழக்கம்போல இந்துக் கோவில் பண்டிகையை மட்டும் சமூகத்திற்கு தொந்தரவு என காட்டி தங்களது போலி மத்ச்சார்பின்மையை நிரூபித்திருக்கின்றனர்.

படத்தின் மிகப்பெரிய பலம்

குழந்தைகளுக்கு இப்படம் மிகவும் பிடித்திருக்கிறது. ரயிலில் நடக்கும் சண்டைகள், வில்லன் ரோபோக்கள் செய்யும் கிராஃபிக்ஸ் காட்சிகள், அது பேசும் கம்ப்யூட்டர் குரல் எல்லாவற்ற்றையும் குழந்தைகள் மிகவும் ரசிக்கின்றன், கூடவே நாமும்.

அதே சமயம், கலைஞர் குடும்பமும், மாறன் குடும்பம் மட்டுமே தமிழ் சினிமா, என்ற நிலையை நோக்கி தமிழ் சினிமா செல்வது அதன் வளர்ச்சிக்கு நல்லதல்ல.

Tags: , , , , , ,

 

61 மறுமொழிகள் சிலநூறுகோடியில் அம்புலிமாமா ( எந்திரன்)

 1. அமாவாசை ஆதிரை on October 2, 2010 at 8:19 am

  போலி பிரம்மாண்டங்களால் ஏமாற்றப்படும் தமிழா என்று உன் ரசனை தரமானதாகும்? அன்றைக்குத்தான் இந்த ஆபாச கும்பல்கள் ஓடும். சூப்பர் ஸ்டார்களும் உலகநாயகன்களும், கலைஞர்களும் புரட்சி தலைவிகளும் தமிழ்நாட்டை நாசமாக்கியது போதும் விழித்தெழு தமிழா உன் பாரம்பரியம் திருவள்ளுவரும் திருஞானசம்பந்தரும் வாஞ்சிநாதனும் உருவாக்கிய பாரம்பரியம். நடிகைகளின் இடுப்பும் அரசியல்வாதிகளின் நாக்கும் உன்னை சுரண்ட விடாதே. தமிழ்நாடு ஒரு குஜராத்தாக மாற ஆபாச தமிழ் திரை உலகை புறக்கணிப்போம்.

 2. haranprasanna on October 2, 2010 at 8:46 am

  நல்ல காமெடியான விமர்சனம்.

  விமர்சகருக்கு கலாநிதி மாறன் மேல் கோபம், ஹிந்துத்துவப் பார்வை வந்தாகவேண்டிய கட்டாயம் புரிகிறது. இதனால் கொஞ்சம் சிரிப்பை அடக்கிக் கொள்ள வேண்டியிருக்கிறது. கலாநிதி மாறனை விமர்சிப்பதும், படத்தை விமர்சிப்பதும் ஒன்றல்ல என்னும் பாலபாடம் கூட ‘விமர்சகர்’ அவர்களுக்குத் தெரியாதது ஆச்சரியமளிக்கவில்லை, தெரிந்ததுதான்!

  காப்பி காப்பி என்பவர்கள் எந்தப் படத்திலிருந்து காப்பி என்று சொல்லவேண்டும். இது போல பல ஆங்கிலப் படம் பார்த்தாகிவிட்டது என்றெல்லாம் பொதுவாகச் சொல்வது வேறு, காப்பி என்பது வேறு. ‘விமர்சகர்’ பட்டியலிடவேண்டும்.

  மாரியம்மன் கோவில் விழாவைக் காண்பித்தவர்கள் என்று சொல்வது காமெடியின் உச்சகட்டம். இது இல்லாமல் வந்தால் எப்படி வெற்றிச்செல்வன் தமிழ்ஹிந்துவில் எழுதமுடியும்? எலலாருக்கும் ஒரே டெம்பிளேட் சரி வராது, இந்த டெம்பிளேட் கமலுக்கு உண்டானது என்பதை ‘விமர்சகர்’ மறந்துவிட்டார்.

  இதுவரை படித்ததிலேயே விலா நோகச் சிரிக்க வைத்த விமர்சனம் இதுவே. இன்னும் நிறைய யோசித்தால், எந்த காட்சியிலெல்லாம் ஹிந்துக் கடவுள்களுக்கு எதிரான காட்சி வருகிறது என யோசித்து மெருகேற்றியிருக்கலாம். அவசரபப்ட்டுவிட்டார் காமெடி விமர்சகர்.

  தமிழ்ஹிந்துவின் விதூஷகராக இந்த ‘விமர்சகர்’ நியமிக்கப்படலாம். சமூகம் யோசிக்கவேண்டும்.

 3. kargil jay on October 2, 2010 at 8:53 am

  //எந்திரனின் வெற்றி அவர்களை மேலும் பலமுள்ளதாக்கி தமிழ் சினிமா ஒரு குடும்பத்தின் சொந்தத் தொழிலாகி விடும்//

  படம் பெருந்தோல்வி அடைந்தாலும், வெற்றி பெற்றதாக அறிவித்து, லாபமாக காட்டி 1000 கோடி கறுப்புப் பணத்தை வெள்ளையாகிவிடுவர். நஷ்டமானாலும் அவர்களுக்கு லாபமே..

 4. ச.திருமலை on October 2, 2010 at 10:29 am

  வெற்றிச் செல்வன்

  முதலில் இந்தப் படத்திற்கு அது எவ்வளவு பிரமாதமானதாக இருந்தாலும் சரி பிருமாண்டமாக இருந்தாலும் சரி ஏன் அதில் ராமரும் கிருஷ்ணரும் நடித்திருந்தாலுமே சரி தமிழ் ஹிந்து இவ்வளவு நாளும் பேசி வரும் கொள்கைகளுக்கும், எடுத்து வரும் தார்மீக நிலைப்பாடுகளுக்கும் முற்றிலும் எதிரான ஒரு இந்து விரோத, மகக்ள் விரோத, சமூக விரோத மாஃபியா கும்பல் எடுத்திருக்கும் இந்த சினிமாவுக்கு தமிழ் சினிமாவில் விமர்சனம் தேவைதானா? தயவு செய்து நேர்மை நியாயம் இந்து உணர்வு தேசிய உணர்வு இவற்றில் எதிலாவது ஒன்றிலாவது நம்பிக்கை இருக்குமானால் இந்த சினிமாவைப் புறக்கணியுங்கள். நிச்சயம் நாம் புறக்கணித்து இந்தப் படம் நஷ்டமடையாதுதான் இருந்தாலும் நம் மனசாட்சிக்கு விரோதமாக ஒரு அபாயகரமான பாம்புக்கு தெரிந்தே பால் வார்க்கலாமா? நாளைக்கே தாவூத் இப்ராஹிம் இதை விட பெரிய இதை விட நல்ல ஒரு படத்தை இதே ரஜினிகாந்தை வைத்து எடுத்தாலும் அதையும் வெட்க்கம் மானம் அறவுணர்வு இல்லாமல் போய் பார்ப்பீர்களா இங்கு விமர்சனம் எழுதுவீர்களா? தமிழ் இந்துவின் ஒவ்வொரு வாசகரும் இந்த சினிமாவைப் புறக்கணிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். ஒரு பக்கம் கருணாநிதி செய்யும் அராஜகங்களை எதிர்த்துக் கொண்டே மறுபக்கம் அவர் குடும்பத்தினர் எடுக்கும் சினிமாவைப் பற்றியும் எழுதுவது இரட்டை வேடமல்லவா? சிந்தியுங்கள். ரஜினிகாந்த் படம் என்பதற்காக கொள்ளிக் கட்டையால் தலையில் சொறிந்து கொள்வீர்களா? ஷங்கர் படம் என்பதற்காக மலத்தை எடுத்து மார்பில் தடவிக் கொள்வீர்களா? இங்கு நான் சினிமாவைப் பற்றி பேசவில்லை அது தரும் லாபம் ஏற்கனவே இந்து விரோத கும்பலை மேலும் பணக்காரர்களாக்கி நம்மை அழிக்கவே உதவும் என்பது கூடவா புரியவில்லை. தமிழ் ஹிந்துவுக்கு தேவையில்லாத விமர்சனம் மாறாக இந்தப் படத்தைப் புறக்கணிக்கச் சொல்லி கட்டுரை எழுதியிருக்கலாம்

  வருத்தத்துடன்
  ச.திருமலை

 5. Indli.com on October 2, 2010 at 11:45 am

  தமிழ்ஹிந்து » சிலநூறுகோடியில் அம்புலிமாமா ( எந்திரன்)…

  படம் முழுக்க ரிச் ஆகத் தெரிய மெனக்கெட்டது வீண்போகவில்லை. எல்லா இடத்திலும் பிரம்மாண்டம். பிரம…

 6. ram on October 2, 2010 at 11:57 am

  //அதே சமயம், கலைஞர் குடும்பமும், மாறன் குடும்பம் மட்டுமே தமிழ் சினிமா, என்ற நிலையை நோக்கி தமிழ் சினிமா செல்வது அதன் வளர்ச்சிக்கு நல்லதல்ல// நண்பர்களே, படத்தை விமர்சிப்பது வேறு கலைஞர் குடும்பத்தை விமர்சிப்பது வேறு. இரண்டையும் ஒன்றாக்கி ஏன் குழம்புகிறீர்கள். எந்திரனைப் பொறுத்தவரை இந்தியாவில் உள்ள அனைத்து சினிமாக்காரர்களும் அசந்து போகிற படைப்பு.

  //காப்பி காப்பி என்பவர்கள் எந்தப் படத்திலிருந்து காப்பி என்று சொல்லவேண்டும். இது போல பல ஆங்கிலப் படம் பார்த்தாகிவிட்டது என்றெல்லாம் பொதுவாகச் சொல்வது வேறு, காப்பி என்பது வேறு. ‘விமர்சகர்’ பட்டியலிடவேண்டும்// என்பது ஞாயமான கேள்வி. சங்கர் என்ற தனிமனிதரின் ஆளுமையின் வெற்றியாகவே இதைப் பார்க்க வேண்டும். தவிற மாறன் குடும்பத்தினரின் ‘பியூஸ்’ ஆட்சி அதிகாரத்தில் தான் இருக்கிறது. அதை பிடுங்க வேண்டியது தான் நமது கடமையே ஒழிய அவர்களது தொழில் வளர்ச்சியை அல்ல. எவ்வளவோ அரசியல் வாதிகளிடம் பணமிருந்தும் அவர்களுக்கு என்னிலடங்கா பிள்ளைகளிருந்தும் அவர்கள் இதுபோல தேர்ந்த தொழிலதிபர்கள் ஆகவில்லையே! எனவே மாறன் தொழில் முனைவும் அதில் வெற்றி பெறுவதும் அவரது தனிப்பட்ட ஆளுமை. திமுக துணையில்லாமல் முடியாது எனினும், அதிகாரத்தினால் அவர்கள் சாதித்தது அதிகம் என்றாலும் தேர்ந்த தொழிலதிபராக விளங்க தனித்திறமை இருக்கத்தான் வேண்டும். எனவே பல்முக கண்ணோட்டத்தில் யோசிக்க வேண்டிய விஷயத்தை தட்டையாக யோசித்து எந்திரன் மீது துப்பக்கூடாது. இன்னொரு விஷயம்.. ரஜினி படம் வெளிவரும் போதெல்லாம், கிறிஸ்தவ திருமாவளவன், ராமதாசும் மற்றும் திரயரங்கு உரியமையாளர்கள், விநியோகஸ்தர்கள் என்று யாராவது ஏதாவது பிரச்சனைகளை உருவாக்கிக்கொண்டே இருப்பது வாடிக்கையாகியிருந்தது. இப்போது கருணாநிதி குடும்பப் படம் என்பதால் இந்த சின்ன புத்திக்காரர்கள் யாரும் வாயே திறக்காமல் அடங்கிக் கிடக்கிறார்கள். என்ன தான் மொத்த குடும்பமும் சினிமாவை ஆக்கிரமித்தாலும் அக்கிரமம் நடக்காதவரை எல்லாம் சரிதான். அப்படியே அங்கே அடாவடி தொடர்ந்தால், எதிர்ப்பும் போராட்டமும் மீண்டும் சமநிலையும் சினிமாக்காரர்களுக்குள்ளே தாமே உண்டாகும் . ஏனெனில் எந்தச் சமூகமும் தன்னைத்தானே சமன் செய்யும் தன்மை தன்னுள்ளே கொண்டது.

  “சமூகம் தன்னைத் தானே சமன் செய்து கொள்ளும்.”

 7. அமாவாசை ஆதிரை on October 2, 2010 at 12:32 pm

  //காப்பி காப்பி என்பவர்கள் எந்தப் படத்திலிருந்து காப்பி என்று சொல்லவேண்டும்//

  டெர்மினேட்டர் சேஸிலிருந்து மாஸ்க் பட பாணியில் துப்பாக்கிகள் எடுப்பது வரை பலவற்றை சொல்லலாம். ஒரிஜினல் கிரியேட்டிவிட்டு கொண்ட கிராபிக்ஸ் காட்சிகள் இதில் இல்லை என்றே சொல்லிவிடலாம். அப்படி இருக்க வேண்டுமானால் ஒரிஜினலான கதை வேண்டும். ஜுராஸீக் பார்க் கிராபிக்ஸின் முக்கியத்துவம் அதன் பிரம்மாண்டம் மட்டுமல்ல அதன் கதையுடன் இணைந்த ஒரு தன்மையில். அது இங்கே இல்லை.

  //இந்த டெம்பிளேட் கமலுக்கு உண்டானது என்பதை ‘விமர்சகர்’ மறந்துவிட்டார்//
  இங்கு விமர்சகர் கேள்விக்குள்ளாக்கியிருப்பது இந்தடெம்ப்ளேட் ரஜினிக்கு பொருந்தவில்லை என்பதை அல்ல. மாறாக இந்த டெம்ப்ளேட்டின் பின்னால் உள்ள மனோபாவத்தை. இதை சுட்டிக்காட்டுவதில் தவறொன்றுமில்லை. இதே ரஜினி நடித்த கழுகு படத்திலும் ஹிந்து சன்னியாசிகள் போதையூட்டி பாலியல் லீலைகளில் ஈடுபடுவதாக காட்டியதும் நினைவுக்கு வருகிறது. இது கோலிவுட்டின் ஒரு வக்கிரம் . ஒரு விமர்சகர் இதை சுட்டுவது உச்சகட்ட தமாஷ் என்பதுதான் விதூஷகத்தனம் கொஞ்சம் ’விஷ’மத்தனமும் கூட .

 8. R.Sridharan on October 2, 2010 at 12:42 pm

  தமிழ் தமிழ் என்று கூப்பாடு போடும் கருணாநிதி குடும்பத்தார் இம்மாதிரி ஹாலிவுட் ஸ்டைல் படம் எடுப்பதால் தமிழ் வளருமா/ இது தமிழ் பண்படா? மாபியா கலாசாரம் இங்கு வருவது எதிர் கால சந்ததிக்கு நல்லது அல்ல.

 9. R.Sridharan on October 2, 2010 at 12:50 pm

  அறுபது வருடமாக தமிழர்களை சினிமா பைத்தியத்தால் குட்டிச் சுவர் ஆக்கியது போதாதா?
  ஒரு சிலர் கொழிக்க,ஏராளமான மக்கள் கொட்டிக் கொடுக்கின்றனர்.
  மக்கள் இதை உணர வேண்டும்.

 10. Kreshna on October 2, 2010 at 2:00 pm

  Not a good review from Tamil Hindu.
  And i am shocked to see this site reviewing this particular movie.
  Because all along i was thinking you would review movies that involves Hinduism or hindu tamil culture. Its getting good review even from the North India. Only Rajini and Shankar can pull it off. It is a different movie.

  Read this read reviews.

  http://www.reviewgang.com/movies/110-Robot-Reviews

 11. Subramaniyan on October 2, 2010 at 2:20 pm

  ஹ பி அவர்களே
  நீங்கள் பெரிய அறிவு ஜீவி தான். நாங்கள் சாமான்யர்கள்.
  எல்லாரும் ஆஹா ஓஓஹோ என்று புகழ்ந்து தள்ள இந்த விமர்சாகர் சில விஷயங்கள் சொல்கிறார். உங்களுக்கு கேட்க கஷ்டமாக உள்ளது புரிந்து கொள்ள முடிகிறது.
  மாரியம்மன் கோயில் கோஷ்டி விவகாரம் சன் குழுமத்தை குஷிப்படுத்த வே .சிவாஜியில் கோயிலில் பெண் தேடுவார் ரஜினி. இப்போது சங்கர், ரஜினி எல்லாம் குடும்ப கொத்தடிமைகள் அல்லவா?
  ரோபோ ரஜினியை பார்த்து அம்மன் பக்தகூட்டம் சாமியாடுவது டிபிகல் வெள்ளைக்கார பட “நகைச்சுவை” . [ foolish natives type .]
  சங்கர் பெரிய இயக்குனர் தான். சில subtle விஷயங்கள் உள்ளன.
  அவர் இன்று சுதந்திரமான இயக்குனர் இல்லை. [ எவருமே இங்கு இல்லை என்பது வேறு விசாயம்]
  கதாநாயகிகள் பெயர் evolutiuon பாருங்கள்.
  வேதவல்லி, ரங்கநாயகி, துர்கா , தமிழ்செல்வி ….சனா.
  ஒரு குடும்பம் மேலும் மிருக பலம் பெற மீண்டும் மீண்டும் பாரீர் இந்தப்படம்.

 12. Rajarajacholan on October 2, 2010 at 3:02 pm

  இந்த விமர்சனத்தைக் காணும்பொழுது சிரிப்புதான் வருகிறது. படம் காப்பியடிக்கப்பட்டது என்று மொட்டையாகச் சொல்வதிலிருந்தே தெரிகிறது இந்த விமர்சனம் வெறும் எதிர்ப்பையும் குறையையும் முன்னிருத்துவதற்காகவென்று.. என்றாலும் பாராட்டாமல் இருக்கமுடியாமல் எழுதியிருக்கிறீர்கள்.

  டெர்மினேட்டர் மாஸ்க் தவிர வேறெந்த படத்தையாவது குறிக்கமுடியுமா? உங்கள் ஹாலிவுட் அறிவு அவ்வளவு சிறியதா?

  காப்பி என்பது வேறு, இன்ஸ்பரேஷன் என்பது வேறு. பேஸ்ட் ஆன் என்ற வரிகளை நீங்கள் ஹாலிவுட் காரர்களிடம் வாங்குவதற்கு எத்தனை செலவாகும் என்று தெரியுமா? Mrs. Doubtfire படத்திலிருந்து முழுமையாக உருவப்பட்டதுதான் அவ்வை சண்முகி. Based on film by Mrs. Doubtfire என்ற கிரடிடுக்கு பல அவ்வை சண்முகிகள் உருவாகும். அதற்காக காப்பியடித்தல் சரியா என்றும் கேட்கலாம்தான்…. ஹாலிவுட் படங்களுக்குள்ளேயே இன்ஸ்பரேஷன் இருக்கின்றன. முதலில் அவைகளை உங்களால் பட்டியலிடமுடிந்தால் நீங்கள் எந்திரனின் காப்பி குறித்து பேசலாம். இவ்வளவு பேசும் நீங்கள், ராமாயணக் கதையை ஹாலிவுட்டில் எடுத்தார்களே, (The Marine) அப்பொழுது அது காப்பியடிக்கப்பட்ட கதை என்று உங்களால் சொல்லமுடிந்ததா? அல்லது ஏலியன் படங்களாகட்டும், ஃபாண்டஸி ஹீரோ படங்களாகட்டும் எல்லாமே ஒரேமாதிரியான கதை கொண்டவைதான்… சூப்பர்மேன் கதைக்கும் ஸ்பைடர்மேன் கதைக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. அவற்றை குறிப்பிடுவீர்களா?
  முதலில் தமிழ்படத்தை தமிழ்படத்தோடு ஒப்பிடுங்கள்… ஹாலிவுட் ரேஞ்சுக்கு வைத்துக் கொண்டாட இது ஒண்ணும் ஹாலிவுட் படமில்லை.
  ஹாலிவுட்டின் சாதாரண படத்திற்கு பட்ஜெட் எவ்வளவு என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? எந்திரன் மாதிரியான படத்துக்கு அவர்கள் எத்தனை செலவு செய்வார்கள் தெரியுமா? போட்ட பணத்தை எடுக்கவேண்டுமென்றுதான் எவ்வளவு பெரிய கோடீஸ்வருனும் நினைப்பார்கள்…
  பைசெண்டனியல் மேன் என்ற படத்திலிருந்து ரோபோ வடிவம் பெறப்பட்டிருக்கிறது. மற்றபடி காட்சியமைப்பு முழுக்க ஹாலிவுட் படங்களில் வராதவைதான்.

  இன்னும் நிறைய பேசலாம். இந்த பதிவைப் போட்டு உங்கள் தளத்திற்கு ஹிட்ஸ்/வருகை பெற்றுக் கொண்டதிலிருந்து தெரிகிறது நீங்கள் எவ்வளவு பெரிய தந்திரக்காரர் என்பது!!! அல்லது அப்படி நினைப்பவர் பதிவிடாமலேயே இருந்திருக்கலாமே!!

 13. kargil jay on October 2, 2010 at 6:42 pm

  வெற்றிச்செல்வன் எழுதியது நல்ல விமர்சனமே. அவர் ஒன்றும் படத்தைத் துதிபாடி எழுதவில்லை. இது மட்டச் சரக்கு வாங்காதீர்கள் என்று சொல்வதை விளம்பரமாக சொல்ல முடியாது. விமர்சனமாகத்தான் சொல்ல முடியும்.

  //காப்பி காப்பி என்பவர்கள் எந்தப் படத்திலிருந்து காப்பி //
  இது காப்பி தான் .
  எத்தனை படங்களைச் சொல்வது? கல்கியில் ஒரு கதை படித்தேன். சுமார் பத்துப் பதினைந்து வருடங்களுக்கு முன்பு. ஒரு நாட்டின் அதிபர் (கிட்டத்தட்ட சதாம் உசேன் போல), தன் செல்கள் மூலம் க்ளோனிங் செய்து தன்னைப் போன்றே அச்சாக ஒரு இளைஞனை உருவாக்குவார். தன்னை யாரவது அழித்தால் அவன் மூலம் வாழலாம் என்று. மூளைப் படிமங்களை பிரதி எடுத்து க்ளோனின் மூளைக்கு மாற்றியவுடன் அவனை அரண்மனைக்கு கூட்டிச் சென்று ‘இது என் மனைவி..உன் தாய்’ என்று அறிமுகம் செய்வார். அவன் சொல்வான் ‘தெரியும், இவள் என் மனைவி’!!. இந்தப் படம் அதிலிருந்து காப்பி..

  http://www.rottentomatoes.com/m/i_robot/pictures/11.php#highlighted_picture — i robot படத்திலிருந்து காப்பி.. இந்தப் படத்திலும் ‘மனித மனமுள்ள’ அன்புணர்ச்சி கொண்ட ரோபோ ஹீரோவுக்கு உதவி செய்து தறி கெட்டலைந்த ஆயிரக் கணக்கான ரோபோக்களை கட்டுப் பாட்டுக்குள் கொண்டுவரும்.

  மேலும் வேண்டுமென்றால் சொல்லுங்கள். காப்பி லிஸ்ட் கொடுக்கிறேன்.

 14. Rajarajacholan on October 2, 2010 at 7:05 pm

  kargil jay

  மனித உணர்வுள்ள ரோபோட் என்ற ஒற்றைச் சொல்லை வைத்துக் கொண்டு காப்பி என்று சொல்லாதீர்கள்.
  ரோபோட் என்ற பெயரிலேயே மற்றும் ஒரேமாதிரியான கதையிலேயே பல ஆங்கிலப் படங்கள் வந்திருக்கின்றன.
  வைட் ரிலீஸ் செய்பவர்கள் இதைக் கூடவா யோசிக்க மாட்டார்கள்?
  வெளிநாட்டில் ஒரிஜினல்தான் நிலைப்பெறும் என்பது நம்மைவிடவும் ஷங்கருக்கு நன்றாகத் தெரியும்…..
  அதற்காக நான் முழுக்கவும் சுத்தமானது என்று சொல்லவில்லை. அப்பட்டமான காப்பி என்று சொல்வதைத்தான் மறுக்கிறேன்.

 15. haranprasanna on October 2, 2010 at 7:48 pm

  காப்பி என்று சொல்வது உங்களுக்குச் சந்தோஷம் தருகிறது. சொல்லிக்கொள்ளுங்கள்.

  பல ஹாலிவுட் படங்களை இது போன்று பார்த்திருக்கிறோம். தமிழில் இது போல வந்திருப்பது முதல்முறை. படத்தை எடுத்தவர் அத்வானியின் வளர்ப்புப் பெண்ணாக இருந்திருந்தால் வெற்றிச்செல்வன் குதித்தோடிப் பாராட்டியிருப்பார். கலாநிதி மாறனானதால் ஏச வேண்டிய நிர்ப்பந்தம் அவருக்கு.

  படத்தில் ஒரு காட்சியில் வசீகரன் தன் காதலுக்கு முருகன் படத்தை காதல் பரிசாக அளித்ததாக வருகிறது. கண்ணைமூடிக்கொண்டு கலாநிதி மாறனைப் பற்றியே நினைத்துக்கொண்டிருந்த ‘விதூஷக விமர்சகர்’ இதைப் பற்றி என்ன நினைக்கிறார்? காதலுக்கு கடவுள் படத்தைத் தந்து பக்தி ஆன்மிகத்தையும், அதன் வழி ஹிந்துத்துவ அரசியலையும் முன்வைக்கும் இந்தக் காட்சிக்காக, ’தமிழ்ஹிந்து அனைவருக்கும் இந்தப் படத்துக்கு டிக்கெட் வாங்கித் தரவேண்டும்’ என்று ஏன் பரிந்துரைக்கக்கூடாது விமர்சகர்? ஹிந்து மதத்தில் இருந்துகொண்டு, முருகன் படத்தைத் தரும் ஒரு சயிண்டிஸ்ட் பற்றி ஏன் பெருமை பேசக்கூடாது? சயிண்டிஸ்ட் பக்தியோடு இருப்பது பெருமையல்லவா?!! மேலும், அவர் பக்தியோடு இருந்தும், மேல்தட்டு வர்க்க பக்தியானது, சேரியில் இருக்கும் கூழ் ஊற்றும் மக்களின் வழிபாட்டு முறையைக் கிண்டல் செய்கிறது, அது தலித்துக்கு எதிரானது என்று ஏன் ஹிந்துமதத்துக்குள்ளேயிருந்து இந்த விமர்சகர் யோசிக்ககூடாது? நிறைய யோசியுங்கள் விமர்சகரே.

  அமாவாசை ஆதிரை படம் பார்க்காமல் எழுதுபவராக இருக்கவேண்டும் என யூகிக்கிறேன். பாடல் கேட்டே விமர்சனம் எழுதும் பரம்பரையில் வந்தவராக இருக்கவேண்டும் என நினைக்கிறேன். இன்னும் நிறைய எழுதுவார். எழுதட்டும்.

  இந்தப் படம் வேறு, கலாநிதி மாறன் கும்பல் முன்வைக்கும் அபாயகரமான வணிகம் வேறு. இரண்டையும் குழப்பிக்கொண்டதால் கழுதைப் புலியாகக் கூட இல்லாமல் கழுதையாகவே பிறந்திருக்கிறது இந்த விமர்சனம்.

  திருமலை சொல்கிறார், இந்தப் படத்தைப் புறக்கணிக்கவேண்டும் என. திமுக இன்றுதான் ரவுடித்தனம் செய்கிறதா? இதோடு கூட்டணி வைத்த பாஜகவைப் புறக்கணிக்க திருமலை சொல்வாரா? வேறு வழியின்றி பாஜகவை ஏற்க நினைப்பாரா? அதேபோல் ரஜினியை, கலாநிதி மாறன் கும்பல் எதிர்த்தாலும், ஏற்கும் ரசிக மனோபாவம் மட்டும் தவறா? ரசிக மனோபாவம் பொதுப் பார்வையில் எல்லா விதத்திலும் தவறு என்பதை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் அதற்காக அதை ஒதுக்கிவைத்துவிட்டு, அரசியல் காரணமாக இந்தப் படத்தைப் புறக்கணிக்கச் சொல்வது சரியானதல்ல. சன் பிக்சர்ஸின் படத்தை நான் புறக்கணிக்கமாட்டேன். நல்ல படம் வந்தால் அதைப் பார்க்கத்தான் செய்வேன். இதற்காக கலாநிதி குமப்லின் அரசியலை ஏற்கிறேன் என்று அவராக நினைத்துக்கொள்வதும் சரியல்ல.

  எந்திரனை இன்னும் நாலைந்து முறை பார்த்துவிட்டு வருகிறேன்!

 16. கங்கா on October 2, 2010 at 8:33 pm

  //இது இல்லாமல் வந்தால் எப்படி வெற்றிச்செல்வன் தமிழ்ஹிந்துவில் எழுதமுடியும்? //

  //இதுவரை படித்ததிலேயே விலா நோகச் சிரிக்க வைத்த விமர்சனம் இதுவே. இன்னும் நிறைய யோசித்தால், எந்த காட்சியிலெல்லாம் ஹிந்துக் கடவுள்களுக்கு எதிரான காட்சி வருகிறது என யோசித்து மெருகேற்றியிருக்கலாம். //

  * ஒரு திரைப்படத்தில் இப்படி ஒரு காட்சி வரும். இஸ்லாமியரை வெட்டுவது போலக் காட்டுவார்கள். அடுத்த காட்சியிலேயே ஒரு ஹிந்துவை வெட்டுவது போல் காட்டினால் அதுதான் செக்யூலரிசம்.
  * அதே சினிமாவிலோ வேறொரு சினிமாவிலோ, ஹிந்து கடவுள்களைத் தொடர்ந்து நிந்திப்பார்கள். இஸ்லாமிய, கிறிஸ்துவ கடவுளர்களை நிந்திப்பது போல காட்சி வைக்கமாட்டார்கள். இது பாதி செக்யூலரிசம். அதே சினிமாவில், இஸ்லாமிய கிறிஸ்துவ கடவுளர்களைப் பாராட்டி காட்சி வைப்பார்கள். இது முக்கால் செக்யூலரிசம். அதே படத்தில், இஸ்லாமிய கிறிஸ்துவ கடவுளர்களை நிந்திப்பது போலக் காட்சி அமைத்து, அதை ஹீரோ எதிர்த்து வீராவேச வசனம் பேசி, திட்டியவரைத் திருத்துவது போலவும் காட்சி அமைப்பார்கள். இதுதான் முழு செக்யூலரிசம். ………

  என்று தமிழ் ஹிந்துவில் எழுதியவர் தான் இதையும் எழுதியியிருக்கிறார். செக்யூலரிசம் பற்றி எழுதுவதற்கு முன்னால் இவர்கூட கொஞ்சம் யோசித்திருக்கலாம். பயணக்களைப்பு தீர்ந்தபின்பு பின்னூட்டமிட்டிருக்கலாம்…

 17. haranprasanna on October 2, 2010 at 8:43 pm

  கங்கா, இதை நான் எழுதியிருக்கிறேன், இப்படி நீங்கள் கேட்பீர்கள் எனத் தெரியாமல்கூட நான் எழுதமாட்டேன். நான் என்ன விதூஷக விமர்சகரா? சாதாரண விமர்சகர் கூட இல்லை.

  அதற்காகவே,

  //எலலாருக்கும் ஒரே டெம்பிளேட் சரி வராது,//

  இதை எழுதினேன்.

  இன்னும் விளக்கம் வேண்டுமானால் சொல்லுங்கள், விளக்குகிறேன்!

 18. ராம்கி on October 2, 2010 at 11:22 pm

  //சன் பிக்சர்ஸ், கலாநிதிமாறன் வழங்கும் என ஆரம்பிக்கும் படம் அப்படியே முடிகிறது. வழக்கமாக A Film by Shaankar என்பதெல்லாம் போய் கலாநிதி மாறனின் படைப்பாகிவிட்டது//

  பேத்தல் முதல் வரியிலேயே ஆரம்பித்துவிட்டது. காவியைத்தான் உங்களால் கழட்ட முடியவில்லை… கண்ணாடியுமா? இன்னொரு தபா பாருங்க.

  //எந்திரனின் வெற்றி அவர்களை மேலும் பலமுள்ளதாக்கி தமிழ் சினிமா ஒரு குடும்பத்தின் சொந்தத் தொழிலாகி விடும்.//

  இன்னார் தயாரித்தது என்பதற்காக ஒதுக்கிடுவீர்களாக்கும்… அப்போ சன்டிவியை பார்க்காமல் இருககவேண்டியதுதானே… சரி காலை எழுந்தவுடன் பல்தேய்க்கும் பிரஷ், பேஸ்ட், குண்டி கழுவுற பக்கெட், சோப்பு எல்லாத்தையும் ஒரு லிஸ்ட் எடுங்க.. எதெல்லாம் இந்துத்துவ ஆதரவு கோஷ்டி, எதிர்ப்புக்கோஷ்டின்னு ஒரு லிஸ்ட் போடுங்க… அதையெல்லாம் ஒதுக்கி வைங்க. குண்டி கழுவாம கூட போய்விடக்கூடும்.. அதனாலென்ன கொளுகை முக்கியம்.

  //ம் 150 கோடியில் படம் எடுப்பதெல்லாம் இன்றைக்கு தமிழில் சாத்தியமாகியிருக்கிறது என்று பெருமையாய் சொல்லிக்கொண்டாலும், அந்தப்பணம் எப்படி வந்திருக்கும் என்பதெல்லாம் //

  ஏன் கருப்புப்பணம்னு சொல்றீங்களா? நேரிடையாவே சொல்லவேண்டியதுதானே… சன் பிக்சர்ஸ் ஆண்டு அறிக்கை 3 மாசத்துக்கு ஒரு தடவை வரும்.. அதில செக் பண்ணலாம். பைதபை, கருப்புப்பணம் பத்தி சிவாஜி பேசும்பேதெல்லாம் எட்ட நின்னு வேடிக்கை பார்த்தீங்களோ??!

  இந்துத்துவாவுக்காக, கருணாநிதி எதிர்ப்புக்காக… ரஜினி வேண்டமென்றால்… எனக்கு இந்து என்கிற மதமே வேண்டாம்.. போங்கய்யா நீங்களும் உங்க பேத்தலும்….

 19. ச.திருமலை on October 3, 2010 at 10:12 am

  முதலில் ஹ பி

  ஆம் கருணாநிதி கூட அந்த ஸ்ரீராமனே சேர்ந்தாலும் அந்த ராமர் கூட எனக்கு எதிரிதான். பா ஜ க என்ன யாராக இருந்தாலும் இதே நிலைதான். பா ஜ க கருணாநிதி கூட வைத்திருந்த கூட்டை என்றும் நான் ஆதரித்தவன் இல்லை. இனிமேலும் கூட்டணி வைத்தால் பா ஜ க வை நான் கடுமையாக எதிர்க்கவே செய்வேனேயன்றி வேறு வழியில்லாமல் ஆதரிக்க மாட்டேன்.

  கேவலம் ஒரு சினிமாவுக்காக, ஒரு கட்சிக்காக என் நிலைப்பாட்டை லட்சியத்தை மாற்றிக் கொள்ளும் கேவலமான ஆள் நான் அல்ல. நாளைக்கே தாவூத் இப்ராஹிம் ஒரு படம் எடுத்து அதிலும் மானம் கெட்டுப் போய் ரஜினிகாந்த் நடித்து (தாவூத் படம் எடுத்தாலும் தாரளமாக நடிக்கக் கூடிய ஆள் தான் ரஜினி) அதுக்கும் 500 ரூபாய் டிக்கெட் எடுத்து பார்த்தாலும் பார்ப்பீர்கள், மறுநாளே அவன் அந்தக் காசை வைத்து ஆயிரம் பேரைக் குண்டு வைத்துக் கொன்றாலும் உங்களுக்கு சினிமா தான் ரஜினிதான் முக்கியம். சொல்லவே கேவலமாக இல்லை. இது ஹாலிவுட் அல்ல தமிழ் நாடு. இங்கு அரசியல் வேறு சினிமா வேறு அல்ல. இன்று சினிமாவுக்கு கொடுக்கும் ஒவ்வொரு பைசாவும் நாளைக்கு தி மு க ஆட்சி அமைக்கப் போடும் அச்சாரம். அதை ஆதரிப்பதன் மூலம் கருணாநிதி மீண்டும் நாளைக்கு ஆட்சிக்கு வரும் உதவியைச் செய்கிறீர்கள். உங்கள் கரங்களில் மதுரையில் இறந்த அந்த அப்பாவிகளின் ரத்தம் படிந்திருக்கிறது பிரசன்னா. அதை நீங்கள் இனி எதைச் செய்தும் கழுவ முடியாது. அரசியல் வேறு சினிமா வேறு அல்ல. ஆம் நான் குடும்ப மாஃபியாவின் எந்த சர்வீஸ்களையும் பொருட்களையும் பயன் படுத்துவதில்லை. சன் டி வி , எந்திரன் போன்ற ஆபசங்களை அறவே ஒதுக்குபவன் நான் என்பதைப் பெருமையுடன் சொல்லிக் கொள்கிறேன்

  ரஜினி ராம்கி

  ரொம்ப சந்தோஷம். உங்களுக்கு மதம் கடவுள் அப்பா அம்மா எல்லோரையும் விட ரஜினி முக்கியம் என்பதை நான் நன்கு அறிவேன். ஆனால் ரஜினிக்கும் மேலே அடிப்படை அறவுணர்வு என்று ஒன்று உள்ளது உங்களின் மனசாட்சி இருக்கும் இடத்தில் இன்று ரஜினி இருக்கிறார் என்றாவது மீண்டும் உங்கள் மனம் அங்கு மீண்டு வரும் பொழுது அப்பொழுது நான் சொல்ல வந்தது புரியும் அது வரை எதுவும் எங்கும் ஏறாதுதான். தயவு செய்து இனிமேல் நீங்களும் ஹ பி, இட்லி வடை போன்றோரும் எதைப் பற்றி வேண்டுமானாலும் கருத்துத் தெரிவியுங்கள் அரசியலை அதிலும் கருணாநிதி பற்றி மட்டும் வேண்டாம், அதற்கான அருகதையை நீங்கள் அனைவரும் இழந்து விட்டீர்கள். ரஜினி இந்தப் படத்தில் நடித்ததன் மூலம் ஒரு அராஜக ரவுடிக் குடும்பத்திற்கு ஒரு மாபெரும் மாஃபியாவுக்கு காசு சேர்த்துக் கொடுத்தன் மூலம் செய்வத்தை இனி எத்தனை ராகவேந்திரர்கள் எடுத்தாலும் ரஜினியால் கழுவ முடியாது. ரஜினி மட்டும் அல்ல இந்தப் படத்தை காசு கொடுத்துப் பார்க்கும் எவரும் மனம் அறிந்தே பாவம் செய்கிறார்கள். நாளைக்கு இதை நீங்கள் உணரும் காலம் வரும் பொழுது காலம் கடந்திருக்கும். சிவாஜி சினிமா வந்த பொழுதும் நான் பார்க்கவில்லை என்னால் அந்தக் கண்றாவியை ஐந்து நிமிடம் கூட சகிக்க முடியவில்லை. ஆனாலும் உங்களை யாரும் பார்க்க வேண்டாம் என்று நான் சொன்னதில்லை. ஆனால் இன்று குடும்பத்தினரின் வளர்ச்சிக்கு ஆதரவு அளிக்கும் இந்த சினிமாவைப் புறக்கணியுங்கள் என்று சொல்கிறேன் இரண்டிற்கும் வித்தியாசம் உண்டு.

  வருத்தத்துடன்
  ச.திருமலை

 20. kargil jay on October 3, 2010 at 10:13 am

  ராம்கி,
  // ரஜினி வேண்டமென்றால்… எனக்கு இந்து என்கிற மதமே வேண்டாம்.. போங்கய்யா நீங்களும் உங்க பேத்தலும்….//

  கோவை தொடர் வெடிகுண்டு வெடிப்பின்போது பைத்தியம் போன்று ‘குண்டு வைத்தவர்கள் முஸ்லிம்கள் இல்லை’ என்று திரும்பத் திரும்ப சொல்லிய ரஜினியை, ஒரு ஹிந்துப் பத்திரிக்கை தாக்கி எழுதிவிட்டதோ என்ற சந்தேகத்துக்காக உங்களுக்கு ஹிந்துமதமே வேண்டாம் என்றால், நீங்களும் அர்த்தமில்லாத மூடர்தான்.

 21. haranprasanna on October 3, 2010 at 10:49 am

  திருமலை,

  நீங்க்ள் உங்களை யார் என்று நினைத்துக்கொண்டு பேசுகிறீர்கள் எனத் தெரியவில்லை. எந்திரன் படம் பார்ப்பதால் என் கையில் மதுரையில் இறந்தவர்களின் ரத்தம் படியுமென்றால், நான் நானகைந்து முறை பார்க்கிறேன், என் கையில் நிறைய படியட்டும். எனென்றால் ஹிந்துத்துவம் முன்வைத்த அரசியலால் வடித்த ரத்தங்கள் இந்தியாவெங்கும் ஓடிக்கொண்டிருக்கின்றன. உங்களைப் போன்ற அராஜகமான ஹிந்துத்துவவாதிகள் அந்த ரத்தத்தில் குளித்து குளிர் காய்ந்துகொண்டு மதுரை ரத்தத்தைப் பேசுவதைப் பற்றிப் பேசுவது அபத்தம்.

 22. ராம்கி on October 3, 2010 at 11:11 am

  //சிவாஜி சினிமா வந்த பொழுதும் நான் பார்க்கவில்லை என்னால் அந்தக் கண்றாவியை ஐந்து நிமிடம் கூட சகிக்க முடியவில்லை. //

  சிவாஜி ஏன் பார்க்க சகிக்கவில்லை என்பதை நீங்கள் விளக்கும்போதுதான் உங்களது உண்மையான முகம் வெளியே தெரியவரும். அதுவரை இந்துத்துவா ஆதரவு, கருணாநிதி எதிர்ப்பு முகமூடியை பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள்.

  //கோவை தொடர் வெடிகுண்டு வெடிப்பின்போது பைத்தியம் போன்று ‘குண்டு வைத்தவர்கள் முஸ்லிம்கள் இல்லை’ என்று திரும்பத் திரும்ப சொல்லிய ரஜினியை, ஒரு ஹிந்துப் பத்திரிக்கை தாக்கி எழுதிவிட்டதோ என்ற சந்தேகத்துக்காக உங்களுக்கு ஹிந்துமதமே வேண்டாம் என்றால், நீங்களும் அர்த்தமில்லாத மூடர்தான்//

  மூடனோ அல்லது உங்களைப் போல் புத்திசாலியோ… என்னைப் பற்றி என்ன வேண்டுமானாலும் சொல்லுங்கள்.. கவலையில்ல… ரஜினி மட்டுமே எனக்கு முக்கியம்.

  முதலில் ஸ்டேட்மெண்ட் தப்பு. அவர் முஸ்லீம்கள் என்று சொல்லவேயில்லை. முஸ்லீம் தீவிரவாதிகள் என்றுதான் சொன்னார். இரண்டுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது என்பதை காவி, கடப்பாறைகள் கூட ஒப்புக்கொள்ளுவார்கள்.

  கோவை குண்டுவெடிப்பு விஷயத்தில் ரஜினி சொன்ன வார்த்தைகளுக்கான பின்ணணி முக்கியம். இருதரப்பும் மோதிக்கொண்டு அமைதிக்கு பங்கம் வந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் சொன்னார். அதில் அரசியல் பின்னணி எதுவுமில்லை. அரசியல் இல்லாத அத்வானி, வாஜ்பாய், மோடி வகையறாக்களில் ஸ்டேட்மெண்டுகளை விரல் விட்டு எண்ணிவிடலாம். யாரையும் தூண்டிவிடும்படி நான் இடிப்புக்கு முதல் நாள் பேசவேயில்லை என்று வாஜ்பாய் சொல்வதைவிட அப்பட்டமான சல்ஜாப்பை கூட இன்றுவரை ரஜினி செய்ததில்லை.

  ரஜினி, ஹிந்துவாக இருப்பதில் பெருமைப்படுங்கள்… உருப்பாடியான ஹிந்து மீடியாவில் யாருமில்லை என்கிற உண்மையை ஒரேயடியாக புதைத்துவிடவேண்டாம்.

 23. ச.திருமலை on October 3, 2010 at 11:26 am

  நாலைந்து முறை என்ன நாற்பதாயிரம் முறை கூடப் போய் பாருங்கள் உங்கள் காசு உங்கள் நேரம். மற்றபடி என்னால் பல்லாயிரம் பேர்கள் கொல்லப் பட்டு என் கைகளில் இரத்தம் வழிவதாக வேறு சொல்லியிருக்கிறீர்கள் சந்தோஷம். இங்கு படிப்பவர்களுக்கு குறைந்த பட்ச மூளை இருக்கிறது எல்லோரும் ஒரு மசாலா படத்துக்கு மூளையை அடகு வைத்து விட்டு வரவில்லை. மேலும் உங்களைப் போல முதல் நாள் படத்துக்கு இலவச விளம்பரம் கொடுத்து விட்டு மறுநாள் வாந்தி எடுத்துக் கொண்டு திரியவில்லை. ஆரம்பம் முதலே நான் ஒரே நிலைதான் எடுத்துள்ளேன். ஒரு இந்துத்துவவாதியாக இருப்பதினால் என் கைகளில் ரத்தம் வழிவதாக நினைத்தால் அப்படியே இருந்து விட்டுப் போகிறேன். ஒரு மசலா சினிமாவின் பின்னால் போய் ஒரு மாஃபியா கும்பலுக்கு காசு சேர்த்துக் கொடுப்பதை விட இது மேலான வேலையாகவே இருக்கும்.

  அன்புடன்
  ச,திருமலை

 24. அமாவாசை ஆதிரை on October 3, 2010 at 11:28 am

  போபால் விஷவாயு கசிவுக்கு காரணமான யூனியன் கார்பைட் பொருட்களை வாங்க மறுப்பது எவ்வளவு சரியோ எவ்வளவு தவறோ அதே அளவு சரியானது அல்லது தவறானது எந்திரன் படம் பார்க்க மறுப்பது.

  ஒருவர் ஹிந்துத்துவாவுக்காக ரஜினி வேண்டாமென்றால் ஹிந்து மதமே வேண்டாம் என்கிறார். இது ஒரு மனநோய் மனநிலை மட்டுமே. இதனை பரப்புகிற சாக்கடை கிருமியாகவே நான் ரஜினியை பார்க்கிறேன்.

  (edited and published)

 25. ச.திருமலை on October 3, 2010 at 11:29 am

  கார்கில்

  ரஜினி ரசிகர் என்று சொல்வதுடன் நிறுத்திக் கொள்ளுங்கள். அர்த்தமில்லாத மூடத்தனம் எல்லாம் அதற்குள்ளேயே அடங்கி விடுகிறது. கூறுதன கூறல் வேண்டாம் :))

  அன்புடன்
  ச.திருமலை

 26. ஜடாயு on October 3, 2010 at 12:09 pm

  சுருக்கமான, crisp ஆன விமர்சனம்.

  // குழந்தைகளுக்கு இப்படம் மிகவும் பிடித்திருக்கிறது. ரயிலில் நடக்கும் சண்டைகள், வில்லன் ரோபோக்கள் செய்யும் கிராஃபிக்ஸ் காட்சிகள், அது பேசும் கம்ப்யூட்டர் குரல் எல்லாவற்ற்றையும் குழந்தைகள் மிகவும் ரசிக்கின்றன்//

  ஓ இதை வெச்சுத் தான் அம்புலிமாமா என்று சொல்கிறீர்களோ?

  அம்புலிமாமா ஒரு அற்புதமான பத்திரிகை. என் சிறுவயதில் நான் விரும்பிப் படித்த ஒரு குழந்தைகள் இதழ். இந்து தர்மத்தின் நன்னெறிகளையும், நமது பண்பாட்டுப் பதிவுகளையும் அருமையாக ஒவ்வொரு குழந்தைக்கும் எடுத்துச் சென்ற இதழ். அதில் வரும் படங்கள் இன்றும் கண்முன் நிற்கின்றன. விக்ரமன் வேதாளம் கதை ஒன்றே போதுமே..

  இவ்வளவு சிறப்புக்கள் கொண்ட அம்புலிமாமாவை கலையுணர்வை சீரழிக்கும் இந்த வெட்டி வீண்பகட்டு ஜம்பத்துடன் தயவு செய்து ஒப்பிடவேண்டாம்.

 27. ஜடாயு on October 3, 2010 at 12:45 pm

  // அதில் அரசியல் பின்னணி எதுவுமில்லை. அரசியல் இல்லாத அத்வானி, வாஜ்பாய், மோடி வகையறாக்களில் ஸ்டேட்மெண்டுகளை விரல் விட்டு எண்ணிவிடலாம். //

  என்ன கொடுமை இது ராம்கி? இவர்கள் எல்லாரும் முழுநேர அரசியல்வாதிகள். அவங்க என்ன பேசினாலும் அதில் அரசியல் அம்சம் இருக்கவே செய்யும், அது தானே இயல்பு!

  ஆனால் ரஜினி?? ஒரு வணிகக் கலைஞனாக இருந்து கொண்டு, அரசியலைப் பற்றீ எந்த தெளிவான நிலைப்பாடும் இல்லாமல், பொறுப்புணர்வு இல்லாமல் பேசிய அவரது அபத்தமான ஸ்டண்ட் அந்த கமெண்ட்.. .

  // ரஜினி, ஹிந்துவாக இருப்பதில் பெருமைப்படுங்கள்… //

  ஒரு ரசிகன் இந்த அளவுக்கா குருட்டுத் தனமாப் போவான்? வெட்கமாக இல்லையா இப்படிச் சொல்வதற்கு?

  ஹிந்து மகா சாகரத்தில் ஒரு சிறு புழுவாக இருப்பதற்கு ரஜினி தான் பெருமைப் படவேண்டும்!

 28. ராம்கி on October 3, 2010 at 12:48 pm

  /ஒருவர் ஹிந்துத்துவாவுக்காக ரஜினி வேண்டாமென்றால் ஹிந்து மதமே வேண்டாம் என்கிறார். இது ஒரு மனநோய் மனநிலை மட்டுமே. இதனை பரப்புகிற சாக்கடை கிருமியாகவே நான் ரஜினியை பார்க்கிறேன். எப்போது ஒருவன் சினிமா நடிகனுக்காக தன் பண்பாட்டை துறக்கும் நிலைக்கு வந்துவிட்டானோ அவன் நாளைக்கு அந்த நடிகன் சொன்னால் தன் தாயையே விற்கமாட்டான் என்பது என்ன நிச்சயம்? அபப்டிப்பட்டவனை மனிதனாக மதித்து அவனது கமெண்டை வெளியிட்டது தமிழ்ஹிந்து தளத்தின் குற்றம்//

  வாங்க.. நேரடியாகவே பேசலாம்…என்னைப்போன்ற ரஜினி ரசிகர்கள் கிருமி அல்ல, சாக்கடைதான். எல்லா சகதிகளையும் உள்வாங்கிக்கொண்டு தேங்கிக்கிடக்கிறோம். மதவெறி பிடித்த மனிதர்கள் எங்கள் மீது மூத்தா போனால் கூட பரவாயில்லை என்று…

  பண்பாடா? அப்டீன்னா? அதையெல்லாம் அடையாளம் காட்டியதே ரஜினிதான். பண்பாட்டுக்கும் அம்மாவுக்கும் என்ன சம்பந்தம்? உலகத்துல பொறந்த எல்லாருக்கும் அம்மா உண்டு. பண்பாடு, கலாசாரமெல்லாம் யாராவது கற்றுக்கொடுத்தால்தான் உண்டு. அம்மாவை விற்றுவிட்டால் அப்பா அடிக்கவரமாட்டாரா? என்னங்கடா எழவு லாஜிக்? ஒழுங்கா திட்டக்கூட தெரியலையே!

 29. ச.திருமலை on October 3, 2010 at 12:58 pm

  ராம்கி

  நான் சிவாஜி மட்டும் அல்ல சந்திரமுகி, குசேலன் போன்ற எந்த விதமான ரஜினி படங்களையுமே பார்க்கவில்லை. பார்க்க விரும்பவும் இல்லை. அதற்கு எந்தவிதமான அரசியல் காரணங்களும் கிடையாது. என் ரசனை மட்டுமே முக்கிய காரணம். அவை போன்ற படங்களை நான் மலினமான மக்களின் உணர்வுகளையும் ரசனையுணர்வுகளையும் மழுங்க அடிக்கும் சினிமாக்களாகவே காண்கிறேன். அதற்காக நீங்கள் பார்த்தால் உங்களுக்குப் பிடித்திருந்தால் அது உங்கள் ரசனை, ஆனால் அவற்றையெல்லாம் நான் யாரும் போய் பார்க்க வேண்டாம் என்று என்றும் சொன்னவனில்லை. நான் பார்க்கவில்லை எனக்குப் பிடிக்காது எனது ரசனை வேறு அவ்வளவுதான். அவரவர் ரசனைகள் அவரவருக்கு. ஆனால் இந்த எந்திரனை நான் பார்க்கக் கூடாது பகிஷ்கரிக்க வேண்டும் என்று சொல்வதற்கு உரிய காரணங்கள் உள்ளன. ஒரு குடும்பமே இன்று தமிழகத்தை அராஜகமான விதத்தில் ஆண்டு வருகிறது. நாளைக்கு ஒரு ஓட்டுக்கு ஐந்தாயிரம் ரூபாய் கொடுத்து ஜனநாயகத்தையே விலைக்கு வாங்கப் போகிறது. நம் சுதந்திரமே பறிபோகப் போகிறது. அப்படியாகப் பட்ட ஒரு மோசமான சூழலில் அவர்களுக்கு நாம் கஷ்டப் பட்டு உழைத்த காசைக் கொடுத்து அவர்களை மேலும் சக்தி வாய்ந்தவர்களாக மாற்றுகிறோம் என்ற எளிய உண்மை கூடவா உங்கள் ரஜினி பக்தி மறைத்து விட்டது. நீங்கள் ரஜினிகாந்தைக் கடவுளாகக் கூட வணங்குங்கள் அது உங்கள் விருப்பம். ஆனால் அதற்காக தமிழ் நாட்டையே பலிகடாவாக்காதீர்கள். இந்தப் படத்திற்காக கொடுக்கும் ஒவ்வொரு காசும் நமக்கு நாமே பிணக்குழி தோண்டுவதற்குச் சமமானமானது என்பதை உணருங்கள். நமக்கு நாமே கொள்ளி வைத்துக் கொள்வதும் எந்திரன் படத்தைக் காசு கொடுத்துப் பார்ப்பதும் ஒன்றுதான். இனி உங்களுக்கோ ஹரன் பிரசன்னாவுக்கோ குடும்ப அரசியலையோ, ஊழல்களையோ பேசும் அருகதை இல்லாமலாகி விடுகிறது. இனிமேல் நீங்கள் எல்லாம் அதைப் பற்றிப் பேசினால் நான் வழித்துக் கொண்டு சிரிப்பேன் அல்லது வாந்தி எடுப்பேன். இதில் இந்துத்துவா எங்கு வந்தது. கருணாநிதியை எதிர்க்கும் ஜெயலலிதாவும், விஜயகாந்தும், இளங்கோவனும் இந்துத்துவவாதிகளா? சுரேஷ்கண்ணன் என்ன விதமான இந்துத்துவவாதி அவர் ஒரு சூடோ செக்குலார் வாதி அல்லவா? தமிழ் நாட்டில் ஒரு குடும்பத்தின் பேயாட்சி நிலவுகிறது அதை ஒழிக்க உதவச் சொன்னால் அவர்கள் எடுக்கும் சினிமாவுக்கு காசு கொடுத்து அந்தப் பேய்களை வளர்க்கிறீர்கள். நன்றாக இருங்கள். நாளைக்கு கருணாநிதியை மட்டும் விமர்சனம் செய்து விடாதீர்கள். காசு கொடுத்து ஓட்டு வாங்கினார்கள், ஊழல் செய்தார்கள் என்று மட்டும் தயவு செய்து எழுதாதீர்கள் பேசாதீர்கள் அதற்கு நிதியுதவி அளிப்பதே நீங்கள்தான். அந்தக் கறை உங்கள் கைகள் முழுக்க படிந்துள்ளது. உங்கள் மனசாட்சியிடம் கேளுங்கள். அது சரியென்று சொன்னால் இந்தப் படத்தைத் தாராளமாக ஆதரியுங்கள் ஆயிரம் தடவை ஆயிரம் ரூபாய் கொடுத்துப் பாருங்கள். நான் கடைசியாக பார்த்த ரஜினிகாந்த் படம் தில்லு முல்லு. அதற்கப்புறம் நான் அவர் படத்தை பார்க்காததன் காரணம் இந்துத்துவா என்று நீங்கள் நினைத்தால் நான் சிரிக்கவே முடியும்.

  அன்புடன்
  ச.திருமலை

 30. அமாவாசை ஆதிரை on October 3, 2010 at 1:07 pm

  ஆமாம் ராம்கி திட்ட தெரியவில்லை. ரஜினி ரசிகர்களை திட்ட புதிதாகத்தான் வார்த்தைகளை உருவாக்க வேண்டும். […] [ரஜினி சொன்னால்] தயங்காமல் செய்யக்கூடிய லும்பன் கும்பல்தான் ரஜினி ரசிகர்கள். அதாவது எல்லா ரஜினி ரசிகர்களும் அல்ல. ரஜினி ரசிகர்களில் கிறிஸ்தவ முஸ்லீம் ரசிகர்கள் இப்படி கேனத்தனமாக நடக்க மாட்டார்கள். ரஜினியின் கிறிஸ்தவ முஸ்லீம் ரசிகர்கள் நல்லவர்கள். மானம் உள்ளவர்கள். அவர்கள் ரஜினி தங்கள் மதங்களுக்கு எதிராக கேனத்தனமாக பேசினான் என்றால் “போடா மொள்ள மாறி” என்று உண்மையை சொல்லிவிட்டு போய்விடுவார்கள். ஆனால் ஹிந்துவாக பிறந்து தொலைத்துவிட்ட ரஜினி ரசிக லும்பன்களோ ரஜினி தங்கள் மதத்தை விமர்சித்தாலும் [கண்டுகொள்ள மாட்டார்கள்]. [….]

  [Edited and published]

 31. B.பாஸ்கர். on October 3, 2010 at 1:23 pm

  வணக்கம்
  ////ரஜினி வேண்டமென்றால்… எனக்கு இந்து என்கிற மதமே வேண்டாம்.. போங்கய்யா நீங்களும் உங்க பேத்தலும்…./////

  ///ரஜினி, ஹிந்துவாக இருப்பதில் பெருமைப்படுங்கள்… ///

  சகோதரா இப்படியே போனால் உன் நிலைமை கவலைக்கிடமாகிவிடும். மிரட்ட வில்லை உம்மை நினைத்து வருத்தப் படுகிறேன்.

  கோபுரங்களில் எத்தனையோ பொம்மைகள் உள்ளன அதற்காக அந்த பொம்மைகளில் உங்களுக்கு பிடித்த பொம்மை கோபுரத்தை தாங்குவதாக நீங்கள் எண்ணுவதாக தெரிகிறது. அதிலும் பெருமையாக அந்த பொம்மை இல்லை என்றால் கோபுரமே விழுந்து விடும். என்று அந்த பொம்மையை பெருமைக்கு உரியதாகி விடுகிரீரோ ?

  சனாதனப் பிரபஞ்சத்தில் ஒரு அணுத்துகள் ரஜினி.

  ரஜினியின் பெருமையை எவ்வளவோ பேசலாம், ஆனால் அதே அளவுக்கு அவரது சிறுமையும் உள்ளது, நான் இதுவரையில் இந்த கட்டுரைக்கு பின்னூட்டம் தரும் எண்ணமே இல்லாதிருந்தேன்.

  ஒன்று மட்டும் நினைவிருக்கட்டும், ஊர் ரெண்டு பட்டால் கூத்தாடி(களுக்கு) கொண்டாட்டமே. இதை நிரூபித்து விடாதீர்கள்.

 32. ராம்கி on October 3, 2010 at 1:25 pm

  //ஹிந்து மகா சாகரத்தில் ஒரு சிறு புழுவாக இருப்பதற்கு ரஜினி தான் பெருமைப் படவேண்டும்//

  அடக்கடவுளே… நாத்திகமும் ஆத்திகமும் கலந்துகட்டியடித்து வியாபாரம் பண்ணிணால்தான் உங்களையெல்லாம் சமாளிக்க முடியும்…

  பண்பாடு, கலாச்சாரமென்றெல்லாம் கூவுகிறார்களே… உங்கள் விமர்சனமெல்லாம் அப்படியா இருககிறது. அதைப்பற்றியெல்லாம் எதுவுமே தெரியாத என்னைப்போன்ற சாக்கடை கிருமிகளிடம் இருக்கும் குறைந்தபட்ச நாகரீகம் கூடவா இல்லை?

  இந்துத்துவா என்ன சொல்கிறது? எல்லாமே கடவுள்! ரஜினி கடவுளாக இருக்க முடியாதா… அந்த கட்அவுட் கடவுளாக இருக்க முடியாதா.. ஏன் சரக்கடித்துவிடும் ஆடும் ரசிகன் கூட கடவுளாக இருகக முடியாதா? கடவுளுக்கு புனித பிம்பம் கொடுத்து தள்ளி வைக்கச் சொன்னது இந்துமதமா? குளிக்காமல் சாமி கூம்பிடக்கூடாதா? செருப்போடு சாமி கும்பிடக்கூடாதா…

  எந்த விகல்பமும் இல்லாமல், எந்த அரசியலும் இல்லாமல், பணத்திற்காக அல்லாமல், யாரும் நம்மை கவனிக்க வேண்டும் என்பதற்காக இல்லாமல் நிஜமான உற்சாகத்தோடு, கவலைகளை தள்ளிவிட்டு மூன்றுவருஷகளுக்குள் ஒருநாளாவது வந்து நிற்கிறானே அப்பாவி ரசிகன்…அவனது சந்தோஷத்தில்தான் ஆண்டவன் இருக்கிறான்.

 33. அமாவாசை ஆதிரை on October 3, 2010 at 1:26 pm

  //ஹிந்து மகா சாகரத்தில் ஒரு சிறு புழுவாக இருப்பதற்கு ரஜினி தான் பெருமைப் படவேண்டும்//
  அந்த புழு இருப்பத்ற்கு நாமெல்லாம் வெட்கப்படவேண்டும்

 34. sarang on October 3, 2010 at 1:40 pm

  ராம்கி

  நீங்கள் உண்மையாகவே ரஜினி ரசிகரா இல்லை ரஜினி மேல் செம்ம கொவாஆக இருக்கும் கமல் ரசிகரா?

  //
  பண்பாடா? அப்டீன்னா? அதையெல்லாம் அடையாளம் காட்டியதே ரஜினிதான்.
  //

  எது
  மூச்சு விடாம மூணு சிகரட்டு குடிக்கிறது
  தண்ணி அடிச்சிட்டு கும்மாளம் போடறது
  மானராகிற வயசில மாமான்னு சின்ன பொண்ணு கூப்பிட்டாத தப்ப புரிஞ்சிகிட்டு எஜமான் மாமாவானது
  ஐஸ்வர்யாவுடன் நடித்தே தீர வேண்டும் என்று அலைந்தது
  மருமகன் நடித்த அதே நடிகையுடன் அடுத்த படத்தில் ஜோடி சேர்ந்தது
  ஏற்ற மேடையிலெல்லாம் எதாவது பைத்யகாரதனமா பேசாம இறங்காதது

  நாலாவது gear ல போற வண்டிய காலுல கயித்த கட்டி நிறுத்தறது
  ஏரோ பிளேன மரத்துல கட்டி நிறுத்தறது

  பாலக்ரிஷ்ணாவாவது இந்த கடைசி இரண்டு விஷயத்தை மட்டுமே செய்தார்

 35. ram on October 3, 2010 at 2:52 pm

  திருமலை சார்! //விலைக்கு வாங்கப் போகிறது. நம் சுதந்திரமே பறிபோகப் போகிறது. அப்படியாகப் பட்ட ஒரு மோசமான சூழலில் அவர்களுக்கு நாம் கஷ்டப் பட்டு உழைத்த காசைக் கொடுத்து அவர்களை மேலும் சக்தி வாய்ந்தவர்களாக மாற்றுகிறோம் என்ற எளிய உண்மை கூடவா உங்கள் ரஜினி பக்தி மறைத்து விட்டது// இது உங்களுக்கே அதிகமாகத் தெரியவில்லையா? என்னவோ ரஜினி படத்தில் சப்பாதித்து தான் மாறன் குடும்பத்தினர் அரசியலே நடத்தப் போவதுமாதிரி பேசுகிறீர்கள். எந்திரன் எடுப்பதற்கு முன்னரே ஜெட் ஏர்வேஸை விலைக்கு வாங்கும் பணக்காரர்களுக்கு அந்தப் பணம் எங்கிருந்து வந்தது? ரஜியா கொடுத்தார். எந்திரன் தயாரிக்க வில்லையென்றால் மட்டும் நீங்கள் கட்டும் வரிப்பணத்திலிருந்து எடுத்துக்கொள்ள அவர்களுக்குத் தெரியாதா என்ன? வரி கட்டுவதால் தானே அந்தப் பணத்தை சுருட்டி கருனாநிதி பணக்காரர் ஆகி ஓட்டுக்கு காசு கொடுக்கிறார் என்பதற்காக நீங்கள் வரி கட்டாமல் இருந்து விட முடியுமா என்ன? எனக்குத் தெரிந்து தமிழ் ஹிந்து இந்து தர்மத்தின் மேன்மையைச் சொல்லுவதை விட்டு தடம் மாறி தேவையற்ற சர்ச்சைப் பதிவுகளைக் கொடுக்கிறதோ என்று தோன்றுகிறது. ஆசிரியர்கள் நிதானமாக யோசிப்பீராக!

 36. babu on October 3, 2010 at 3:30 pm

  //எனக்குத் தெரிந்து தமிழ் ஹிந்து இந்து தர்மத்தின் மேன்மையைச் சொல்லுவதை விட்டு தடம் மாறி தேவையற்ற சர்ச்சைப் பதிவுகளைக் கொடுக்கிறதோ என்று தோன்றுகிறது. ஆசிரியர்கள் நிதானமாக யோசிப்பீராக!//
  திரு ராம்,
  மிகவும் சரியாக சொன்னீர்கள்.

  தமிழ் இந்து தளம் இந்த கருத்தினை பரிசீலிக்க வேண்டுமாய் கேட்டு கொள்கிறேன்.எத்தனையோ விவாதிக்க வேண்டிய அவசியமான நம் விஷயங்கள் உள்ளன. நாம் அதிலேயே கவனம் செலுத்தலாமே.

  இந்த பதிவிற்கான இந்த கருத்து பெட்டியை இத்துடன் மூடினால் கூட மிகவும் நன்றாக இருக்கும்.

  தாங்க முடியலை.

 37. B.பாஸ்கர். on October 3, 2010 at 4:09 pm

  வணக்கம்,
  ////இந்த பதிவிற்கான இந்த கருத்து பெட்டியை இத்துடன் மூடினால் கூட மிகவும் நன்றாக இருக்கும்.

  தாங்க முடியலை.////

  மித சிறந்த யோசனை, நன்றி சோதரா. நானும் ஆமோதிக்கிறேன்.

 38. sarang on October 3, 2010 at 4:43 pm

  //எந்த விகல்பமும் இல்லாமல், எந்த அரசியலும் இல்லாமல், பணத்திற்காக அல்லாமல், யாரும் நம்மை கவனிக்க வேண்டும் என்பதற்காக இல்லாமல் நிஜமான உற்சாகத்தோடு, கவலைகளை தள்ளிவிட்டு மூன்றுவருஷகளுக்குள் ஒருநாளாவது வந்து நிற்கிறானே அப்பாவி ரசிகன்…அவனது சந்தோஷத்தில்தான் ஆண்டவன் இருக்கிறான்.
  //

  ஜிஹாதி கூட தினமும் இப்படி தான் வந்து நிற்கிறான்

  ஹிட்லர் சொன்னதும் இப்படி தான் பலரும் பல யுதார்களை கொன்றார்கள்

  -ஒரு கெழவன் பொண்ணுங்க பினாடி சுத்தி பாட்டு பாடுவானம் அதை பார்த்து சில கிறுக்கர்கள் சந்தோஷப் படுவார்களாம் – இதற்க்கு பெயர் சந்தோசம் இல்லை கருமாந்தரம்

  திரிசாவுக்கு கூட இந்த மாதிரி கிறுக்குத்தன கட் அவுட் வெச்சு பால் உத்தரதல்லாம் கேள்வி – அவுகளும் உங்களுக்கு சாமியோ – ரஜினியோட டூயட் பாடினாதான் ஒத்துக்குவீங்கன்னு நெனைக்கிறேன்

  – எந்திரன் பார்க்கும் ரசிகனின் சிரிப்பில் இறைவனை காண்போம் – அட்டகாசமா இருக்கு உங்கள் பேச்சு

  நீங்கள் கட்டாயமாக உங்களின் செயல்களுக்காக ஒரு நாள் வெட்கப்பட போகிறீர்கள்

 39. Anjanasudhan on October 3, 2010 at 5:26 pm

  [….]

  I am shocked. The Editors must not have posted this comment.

  […] அமாவாசை ஆதிரையின் பின்னூட்டத்தை நீக்கிவிடுமாறு ஆசிரியர் குழுவை வேண்டிக்கொள்கிறேன்.

  [Edited and published]

 40. ஆசிரியர் குழு on October 3, 2010 at 7:41 pm

  தரக் குறைவான கமெண்டுகள் நீக்கப்பட்டன.

  கருத்துச் சுதந்திரத்தைத் தளம் வரவேற்கிறது. ஆனால், நாகரீகமற்ற, தனிப்பட்ட தாக்குதல்கள் உரையாடலுக்கான சூழலைக் கெடுக்கின்றன. இதைக் கருத்துத் தெரிவிப்பவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டுகிறோம்.

 41. B.பாஸ்கர். on October 3, 2010 at 9:43 pm

  வணக்கம்,

  அப்புறம் ஒரு விஷயம் நான் இங்கே கூத்தாடிகளுக்கு என்று எழுதியது ரஜினிக்கு அல்ல. அவர் உண்மையில் வெறும் தொழில் முறை கூத்தாடி மட்டுமே,

 42. kargil jay on October 3, 2010 at 11:05 pm

  ராம்கி
  ரஜினி என்பவர் நல்லவர்தான். கமல்ஹாசன் மாதிரி மோசமான குணமும், செறிந்த திறமை இருந்தும் அற்ப புத்தியும், தலைக் கணமும் அகந்தையும் கொண்டவரும் இல்லை.

  ஆனால் அவர் விமரிசனத்துக்கு அப்பாற்பட்டவர் இல்லை. தமிழருக்கு அவர் நல்லது செய்தது அவர் தரத்துக்கு, உயர்வுக்கு மிகக் குறைவே. அவர் ரசிகர்களை பலமுறை ஏமாற்றிவிட்டார்.

  உளறலில் அவர் கமலஹாசனிடம் தோற்றிடுவார் என்றாலும், நன்றாகவே உளறினார். அவர் ரசிகராக இருக்கும் நீங்களும் நன்றாக உளறுகிறீர்கள். எதற்கும் அவர் கோவை குண்டு வெடிப்பைப் பற்றி என்ன சொன்னார் என்று நீங்களே இங்கு எழுதுங்களேன். (அல்லது உளறுங்களேன் ).

 43. ச.திருமலை on October 3, 2010 at 11:47 pm

  ராம்

  எனக்கு சார் எல்லாம் போட்டு வயதைக் கூட்டாதீர்கள் மேலும் நான் தமிழ் சினிமா ஹீரோவும் கிடையாது , ஏன் தமிழ் படங்களைப் பார்ப்பது கூடக் கிடையாது :))

  மாறன்ஸ்ஸுக்கு இந்த எந்திரன் மூலமாக மட்டுமே வருமானம் வருவது கிடையாது உண்மைதான். அவர்கள் ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனத்தை வாங்கியுள்ளார்கள். சன் டி வி, சுமங்கலி கேபிள், தினகரன், குங்குமம், முத்தாரம், வண்ணத்திரை என்று ஒரு 40 பத்திரிகைகள் கைகளில் வைத்திருக்கிறார்கள் இவை போக ஒவ்வொரு ஊரிலும் தியேட்டர்கள் ரியல் எஸ்டேட்டுக்கள் இவை போக கருணாநிதியின் குடும்பம் ஸ்பெக்ட்ரம் ஊழல், இன்ஷூரன்ஸ் ஊழல், கட்டுமான ஊழல், ராமர் சேதுவில் மண் அள்ளும் ஊழல் என்று ஒட்டு மொத்த தமிழ் நாட்டையுமே கொள்ளையடித்து வருகிறார்கள். அதில் இந்த எந்திரன் ஒரு சிறு துளி அவ்வளவே.

  ஆனால் கருணாநிதி குடும்பத்தின் ஆக்கிரமிப்பை அராஜகங்களை கொலை கொள்ளைகளை எதிர்க்கும் ஒரு சாதாரண தமிழ் நாட்டு குடிமகனால் செய்யக் கூடியது என்ன?

  1. வரும் தேர்தலில் தி மு க கொடுக்கப் போகும் லஞ்சப் பணத்தை வாங்காமல் அந்தக் கட்சியை எதிர்த்து ஓட்டுப் போடலாம்

  2. கட்டுரைகள் எழுதி விழிப்புணர்வை வளர்க்கலாம்

  3. பிரச்சாரங்கள் செய்யலாம்

  4. தி மு கவின் நிதி ஆதாரங்களில் பல வற்றை நம்மால் தடுக்க முடியாது இருந்தாலும் நம்மால் முடிந்த சில விஷயங்களில் நம் எதிர்ப்பைக் காட்டலாம். உதாரணமாக குடும்பப் பத்திரிகைகளை வாங்காமல் பகிஷ்கரிக்கலாம். குடும்ப விமானத்தில் பறக்காமல் தவிர்க்கலாம். சுமங்கிலி கேபிளின் சந்தாவை நிறுத்தலாம். சன் டி வியை பார்க்காமல் தவிர்க்கலாம். குடும்பம் தயாரிக்கும் எந்த பொருளையும் சேவையையும் புறக்கணிக்கலாம். நம்மால் அவர்கள் செய்யும் ஸ்பெக்ட்ரம் ஊழலை ஏதும் செய்ய முடியாது. நம் வரிப்பணத்தை அவர்கள் கொள்ளையடிப்பதை தடுக்க முடியாது. குறைந்த பட்சம் நாமே விரும்பிப் போய் அந்தக் கொலைகாரக் கும்பல்களுக்கு நிதி அளிப்பதை நிறுத்தலாம் அல்லவா? அதில் ஒன்றுதான் இந்த எந்திரன் சினிமாவைப் பகிஷ்கரிப்பதும்

  5. கேவலம் ஒரு சினிமாவைப் புறக்கணியுங்கள் என்று நான் சொன்னதைக் கூட உங்களால் ஏற்க முடியவில்லை சப்பை காரணம் சொல்லி அதை ஏற்க மறுக்கிறீர்கள். உங்களைப் போன்றவர்களினால் தான் நாடு இன்னமும் இத்தாலிக்காரியிடம் அடிமைப் பட்டுக் கிடக்கின்றது. உங்களைப் போலவே அன்று காந்தியிடம் கேட்டார்கள் உப்பு சத்தியாகிரகம் செய்வதால் வெள்ளைக்காரன் வெளியேறி விடுவானா என்ன கிறுக்குத்தனமாக உள்ளது என்று? சிறு துளி பெரு வெள்ளம் ஐயா. தமிழ் நாட்டில் உணர்வுள்ள ஒவ்வொருவரும் சன் டி வி ஐயும் சுமங்கிலி கேபிளையும் புறக்கணித்தால் அவர்களால் எப்படி இந்த அராஜகங்களைச் செய்ய முடியும்? எந்திரன் அவர்கள் சொத்து மதிப்பில் ஒரு சிறு துளியாகவே இருக்கலாம் இருந்தாலும் நம்மால் முடிந்த அளவுக்கு அவர்கள் சொத்தினைப் பெருக்க நாம் விரும்பி எதையும் செய்யவில்லை என்ற ஒரு சிறு திருப்தியாவது இருக்கும் அல்லவா? இதைச் சொல்ல உனக்கு என்ன அருகதை இருக்கு என்று கேட்க்கலாம். நான் மேற்சொன்ன அனைத்தையும் முழுதாகக் கடைப் பிடிப்பவன். மேலும் நான் சொல்வது ஒன்று செய்வது வேறு கிடையாது

  தி மு க என்பது இந்துக்களுக்கு மட்டும் எதிரியான ஒரு அமைப்பு அல்ல. ஒட்டு மொத்த மக்களுக்குமே சமூகத்துக்குமே பெரும் தீங்கு விளைவிக்கும் ஒரு விஷ விருட்சம். அதற்கு வருமானம் பல வழிகளில் வருகின்றன. ஊழல்கள் மூலமாக., அச்சுறுத்தல் மூலமாக அவர்கள் கொள்ளை அடித்து அடித்த கொள்ளையில் ஒரு பங்கை தேர்தலில் மறு முதலீடு செய்து அதை வைத்து மீண்டும் வெற்றி பெற்று மீண்டும் கொள்ளை அடித்து ஒரு விஷ சுழற்சியாக நடந்து கொண்டிருக்கிறது. இதில் ஒரு அங்கமே இப்படி சினிமா எடுத்து மக்களை முட்டாள்களாக்கி மக்களின் பணத்தை அவர்கள் பர்ஸில் இருந்து அவர்களை விட்டே விருப்பத்துடன் கொடுக்குமாறு செய்து கொள்ளையடிப்பது.

  ராம். நீங்கள் பாம்புக்கு விரும்பியே பால் வார்க்கிறீர்கள். விஷச் செடிகளை உங்கள் பணத்தில் நட்டு வைக்கிறீர்கள். காற்றில் விஷத்தை உங்கள் பணத்தில் பரப்புகிறீர்கள். அது ஒரு பைசாவாக இருந்தாலும் 500 ரூபாயக இருந்தாலும் உங்கள் மனம் அறிந்தே ஒரு பாவத்தைச் செய்கிறீர்கள். உங்கள் எதிர்காலம் உங்களை மன்னிக்காது. இதற்காக நீங்கள் வருந்தும் ஒரு காலம் வரும். ஆனால் அப்பொழுது காலம் கடந்திருக்கும். உங்கள் குழந்தைகளுக்கும் எதிர்கால சந்ததியினருக்கும் ஒரு மோசமான முன்னுதாரணத்தை விட்டுச் செல்கிறீர்கள். உங்களைப் போன்றவர்கள் கேவலம் ஒரு சினிமாவுக்காக நாளைக்கே ஒரு தாவூத் இப்ராஹிம் சினிமா எடுத்தால் அதிலும் ரஜினி நடித்தால் அந்தக் காசு மூலமாக இந்துக்கள் பூண்டோடு கொல்லப் பட்டாலும் அதற்கும் இப்படித்தான் காசு கொடுத்து ஆதரவு தெரிவிப்பீர்கள். உண்மையில் மாறன் மாஃபியாக்களை விட, தாவூத் இப்ராஹிம்களை விட, மதானிகளை விட இந்த நாட்டைப் பிடித்த சாபக் கேடு உங்களைப் போன்ற சமூக அக்கறையில்லாத மக்களே. இந்தியாவின் ஒட்டு மொத்த எதிரிகள் உங்களைப் போன்ற சத்தியப் பிரக்ஞை இல்லாத மனிதர்களே. நீங்கள் செய்யும் பாவங்களை அறியாமலேயே செய்கிறீர்கள் என்னைப் போல யாராவது எடுத்துச் சொன்னாலும் கூட உதாசீனம் செய்து விட்டு மீண்டும் செய்கிறீர்கள். நச்சுச் செடிகளுக்கு தண்ணீர் விட்டு வளர்க்கிறீர்கள் அவை உங்களையே அழித்தாலும் அது தெரியாமல் இருக்கிறீர்கள். எத்தனை தமிழ் ஹிந்து தளங்கள் வந்தாலும் உங்களையெல்லாம் திருத்தவே முடியாது. உங்களைப் போன்றவர்களுடன் சேர்ந்து உணர்வுள்ள எங்களையும் விஷ சாகரத்தில் மூழ்க அடிக்கிறீர்கள். இந்தப் படத்தை நீங்கள் பார்ப்பதால் மட்டுமே குடும்ப அரசியல் வாழ்வது இல்லை உண்மைதான் ஆனால் அவர்கள் ஆதிக்கம் நிலைக்க நீங்களும் ஒரு சிறு அளவிலேயானாலும் உதவி செய்கிறீர்கள் என்பதை மட்டும் நினைவில் வையுங்கள். கருணாநிதி குடும்பம் செய்யும் பாவங்களுக்கு நீங்கள் ஒரு 500 ரூபாய் அளவிலேயாயினும் தெரிந்தே காரணகர்த்தா என்பதை நினைவில் வையுங்கள். அதற்கு மேல் ரஜினியிடம் புத்தியை அடகு வைத்தது போக மன சாட்சி, மூளை என்று ஏதாவது மிச்சம் மீதி இருந்தால் அதைக் கொண்டு யோசியுங்கள். என்னால் செய்யக் கூடியது வேறு ஒன்றும் இல்லை

  அன்புடன்
  ச.திருமலை

 44. திருச்சிக்காரன் on October 4, 2010 at 7:40 am

  நான் எந்திரன் படம் போர்க்கப் போவது இல்லை. அந்த நேரத்தில் வீட்டில் ஒட்டடை அடிப்பேன்.

  எனக்கு ரஜினி மீதோ , யார் மீதோ எந்த வெறுப்பும் கிடையாது.
  என்னவோ, இந்தப் படங்களினால் கிடைக்கும் மகிழ்ச்சி சில மணிகள் மட்டுமே என்பதால், இது போல விடயங்களில் கவனம் செலுத்தி நேரத்தை செலவிட்டால்,

  கடைசியில் என் மன வலிமையை உயர்த்தி என்னைக் காத்துக் கொள்ளும் வாய்ப்பு உள்ளதா என்பதை அறியும் ஆராய்ச்சி தடை பட்டு விடுமோ என எண்ணுகிறேன்.

  அதற்காக உங்களை எல்லாம எந்திரன் படம் பார்க்க வேண்டாம் என நான் சொல்லவில்லை.

  உங்களுக்கு விருப்பம் இருந்தால் முன் பதிவு செய்து விட்டு, போக்குவரத்து நெரிசலை சமாளித்து தியேட்டருக்கு சென்று படம் பாருங்கள். ஆனால் பாப் காரன் , குளிர் பானம் உட்பட எல்லாவற்றையும் தியேட்டரில் தான் வாங்க வேண்டும்.

  அல்லது பேசாமல் அந்த நேரத்தில் வீட்டில் இருந்து சற்று உடல் பயிற்சி செய்தோ, ஓய்வு எடுத்தோ, குடுமபத்தினருடன் பேசியோ, அவர்களுடன் விளையாடியோ கழிக்கலாம்.

  எதுவாக இருந்தாலும் உங்கள் விருப்பம்.

 45. ram on October 4, 2010 at 8:26 am

  திருமலை சார்! //கேவலம் ஒரு சினிமாவைப் புறக்கணியுங்கள் என்று நான் சொன்னதைக் கூட உங்களால் ஏற்க முடியவில்லை சப்பை காரணம் சொல்லி அதை ஏற்க மறுக்கிறீர்கள்// நீங்கள் ரொம்ப கோவமா இருக்கீங்க போல இருக்கு. ஒரு டீ சப்டுறீங்களா?

  இந்த விஷயத்துக்கு போய் எதுக்குங்க காந்தி உப்பு சத்தியா கிரகம் எல்லாம் இழுக்றீங்க. அந்த அளவுக்கு கருணாநிதி குடும்பத்துக்கு எதிரா ஒரு சுதந்திர போராட்டம் போல நடக்கனும்ன்னா கீழ் கண்ட கேள்விக்கு பதில் சொல்லவில்லையே!

  //வரி கட்டுவதால் தானே அந்தப் பணத்தை சுருட்டி கருனாநிதி பணக்காரர் ஆகி ஓட்டுக்கு காசு கொடுக்கிறார் என்பதற்காக நீங்கள் வரி கட்டாமல் இருந்து விட முடியுமா என்ன? // வரி கட்டாம இருங்க. உங்கள தூக்கி உள்ள வெக்க மாட்டாங்க..? சார், ரஜினி மீது எனக்கு பைத்தியம் கிடையாது. அதே நேரத்தில் தமிழ் ஹிந்து தளம் இந்து தர்மம், இந்து மக்கள் என்கிற பரந்த விஷயத்துல இருந்து சுருங்கி கருணாநிதி குடும்பம் என்கிற சிறிய வட்டத்திற்குள் முடங்குவது நல்லதல்ல. இதை விட சாதிக்க வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளன. அதைப் புரிந்து கொள்ளுங்கள்.

  //ஒரு பைசாவாக இருந்தாலும் 500 ரூபாயக இருந்தாலும் உங்கள் மனம் அறிந்தே ஒரு பாவத்தைச் செய்கிறீர்கள்.// இந்த க்ளோபளைசேஷன் காலத்தில் இப்படி தட்டையாக யோசிக்க முடியாது. அமெரிக்காவில் வேலை பார்க்கும் இந்திய சாஃப்ட்வேர் இன்ஜினியர்கள் அந்த நாட்டின் தொழில் நுட்பத்தை வளர்த்து நம் நாட்டை அதே தொழில் நுடப்த்திற்கு அடிமையாக்கி கப்பம் கட்டச் செய்வதும் நடக்கத்தான் செய்கிறது. இதனால் யாரும் அயல் நாடுகளில் வேலை பார்க்காதீர்கள் என்று இங்கே கூட்டி வந்து வீட்டில் உட்காரச்செய்து விட முடியுமா? இவர்களை அரசியல் அதிகாரத்தில் தோற்கடிக்க நம்மக்களுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். அதை விட்டு விட்டு பல பேருடைய கூட்டு முயற்சியான பல பேருடைய திறமைகளின் வெளிப்பாடான ஒரு கலையை அசிங்கப்படுத்த நினைப்பது சரியல்ல. தாவூத் இப்ராஹிம் ரஜினியை வைத்து படம் எடுத்தால் அந்த படத்தை பார்ப்பீர்களா என்கிறீர்கள்? தமிழகத்தில் அந்த நிலை வரவில்லை தான். ஆனால் பாலிவுட்டில் அது தானே நிலைமை. கான் களின் ஆட்சியில் பாலிவுட் இருப்பது உங்களுக்குத் தெரியாதா? அவைகளில் தாவூத் பணங்களில் எடுக்கப்பட்ட படங்கள் அடங்கும் என்பதும் உங்களுக்குத் தெரியாதா? இவர்களின் அரசியல் அதிகாரத்தை நேரடியாகப் பிடுங்குவதை விட வேறு வழி கிடையாது. எனவே மக்களிடம் அது பற்றிய விழிப்புணர்ச்சியை உண்டாக்குங்கள். அதை விட்டு விட்டு சினிமா விமர்சனங்கள் எழுதி நேரத்தை வீனாக்காதீர்கள்.

 46. ச.திருமலை on October 4, 2010 at 10:45 am

  ராம்

  வரி கொடாமல் இருந்தால் உள்ளே போடுவார்கள். அதனால் ஒரு சாதரணன் வரி கொடுக்காமல் இருக்க முடியாது மேலும் சம்பளத்தில் பிடித்துக் கொண்டுதான் விடுகிறார்கள். ஆகவே வரி கொடாமை ஒரு சாமான்யனால் சாத்தியமில்லை. ஆகவே நான் அதைப் பரிந்துரைக்கவில்லை. ஆனால் ஒரு சினிமாவைப் புறக்கணிப்பது சாதாரண பாமரனால் ஆகக் கூடிய மிக எளிய காரியம். அதைப் போல ஓட்டுப் போடுவதும் எளிய காரியம். வீட்டில் சன் டி வியைக் கட் செய்வது அதை விட எளிய காரியம். இதைத்தான் செய்யச் சொல்லி நான் கேட்க்கிறேன். அது எவ்வளவு பெரிய கலையாக இருக்கட்டுமே உலகத்திலேயே ஆகச் சிறந்த சினிமாவாகக் கூட இருக்கட்டுமே அதை எடுத்து லாபம் பார்ப்பவன் பெரும் கொலைகாரனாக கொள்ளைக்காரனாக நாளைக்கு அந்த லாபத்தில் உங்களையே கொல்லக் கூடியவனாக இருந்தால் எனக்கு சினிமாதான் முக்கியம் என்று அவனுக்கு ஆதரவு அளிப்பீர்களா? அதைத்தான் நீங்கள் செய்கிறீர்கள். பலருடைய கூட்டு முயற்சியில்தான் அனைத்து இஸ்லாமிய பயங்கரவாதங்களும் நிகழ்கின்றன அதைப் பாராட்டி அதற்குக் கை தட்டுவீர்களா காசு போடுவீர்களா? அதைத்தான் இந்த சினிமா விஷயத்தில் நீங்கள் செய்கிறீர்கள். நான் பாலிவுட் படங்களைப் பார்ப்பதில்லை. இப்பொழுதெல்லாம் எந்த இந்திய சினிமாக்களையும் தியேட்டரில் பார்ப்பது இல்லை. வெகு அபூர்வமாக ஒரு சில சினிமாகக்ளைத் தியேட்டரில் பார்க்கிறேன்.

  தமிழ் ஹிந்து தளம் இதைச் சொல்லவில்லை. ஒரு வாசகனாக நான் தனியாளாகச் சொல்கிறேன். தமிழ் ஹிந்து தளம் பாய்காட் செய்யும் படி எதையும் சொல்லவில்லை எழுதவில்லை. கருணாநிதியுடன் முடியும் விஷயங்கள் என்கிறீர்கள் கருணாநிதிதானே 90% பிரச்சினைகளுக்கு அக்கிரமங்களுக்கு மூல காரணம் அவரை ஒதுக்கி விட்டு தமிழ் ஹிந்து தமிழ் நாட்டில் உள்ள இந்துக்களின் பிரச்சினைகளை எப்படி பேச முடியும்? உங்களுக்கு ரஜினிகாந்த படம் பிடிக்கும் என்றால் தாராளமாக செய்யுங்கள் அதனால் ஒரு சமூகக் கேடு விளையும் என்றால் செய்யாதீர்கள் திருட்டு சி டி அல்லது டொரண்ட்ஸ்ஸில் இறக்கிப் பாருங்கள். அயோக்யர்கள் எடுக்கும் சினிமாக்களை அதே வழியில் பார்த்தால் தப்பில்லை. டொரண்ட்ஸில் கிடைக்கிறது. நாளைக்கு தாவூத் ரஜினி படம் எடுத்தாலும் இதே கூட்டு முயற்சி, கலைப்படைப்பு புண்ணாக்கு மண்ணாங்கட்டியைத்தான் எடுத்து விடுவீர்கள். உங்களுக்கு நாட்டு நலனை விட சொந்த சினிமா ரசனையே முட்டிக் கொண்டு நிற்கிறது. அந்த காலத்தில் தேச நலனுக்காக உயிரையே கொடுத்தார்கள் இன்று ஒரு சினிமாவைக் கூடப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. இந்த சினிமாவை எடுத்தவன் சமூக விரோதி அல்ல. பார்ப்பவன் தான் சமூக விரோதி. இந்த சினிமா தரும் லாபத்தினால் இந்த மாஃபியாக் கும்பல் நாளைக்கு நிகழ்த்தப் போகும் அசிங்கங்களையும் அராஜகங்களையும் ஒப்பிடும் பொழுது இந்தக் கலையை நான் அசிங்கப் படுத்தினால் ஏதும் குறைந்து விடாது. அது உன்னதமான உலகத்திலேயே சிறந்த கலைப்படைப்பாகக் கூட இருக்கட்டுமே அதன் லாபம் மனித குல அழிவிற்குத்தான் பயன் படும் என்றால் அதை ஆதரிப்பவன் நல்ல கலைஞனாக ரசிகனாக இருக்கலாம் ஆனால் நிச்சயம் மனிதனாக இருக்கவே முடியாது. இது தனி ஒருவனின் தார்மீக கோபம். என்றைக்குமே இதைப் போன்ற குரல் தனித்தே ஒலிக்கும். நாளைக்கு வரலாறு எழுதப் படும் பொழுது இந்த சினிமாவை ஆதரித்தன் மூலம் அதன் மூலம் இவர்களுக்கு நீங்கள் சொத்து சேர்த்ததன் மூலம் தமிழ் நாட்டின் ஜனநாயகம் எப்படி அழிக்கப் பட்டது என்று ஆவணப் படுத்தப் படும் அப்பொழுது நீங்கள் அனைவரும் குற்றவாளிக் கூண்டில் நிற்பீர்கள். சிகரெட் குடித்தால் கேன்சர் வரும் என்று சொல்லத்தான் முடியும். பாதுகாப்பில்லாத உடல் உறவினால் வியாதி வரும் என்று சொல்லத்தான் முடியும். மீறி அதைத்தான் நான் விரும்புகிறேன் அப்படித்தான் நான் செய்வேன் என்பவர்களிடம் நான் என்ன சொல்ல இருக்கிறது. தாராளமாகப் போய் பாருங்கள். ஹரன் பிரசன்னா போல தினம் தினம் போய் தியேட்டரிலேயே போய் குடி இருங்கள். யாருக்கு நஷ்டம்?

  அன்புடன்
  ச.திருமலை

 47. ram on October 4, 2010 at 12:41 pm

  //நாளைக்கு தாவூத் ரஜினி படம் எடுத்தாலும் இதே கூட்டு முயற்சி, கலைப்படைப்பு புண்ணாக்கு மண்ணாங்கட்டியைத்தான் எடுத்து விடுவீர்கள்/// ஐயா சினிமாக்காரர்கள் மாபியாவிற்கு விலைபோகாமலிருக்க வேண்டுமெனில் தமிழகத்தில் உள்ள இந்து அமைப்புக்கள் சக்திவாய்ந்தவைகளாக இருக்க வேண்டும். இந்து அமைப்புக்களில் சினிமாக்காரர்களை சேர்த்து அவர்களை இந்து அபிமானிகளாக இருக்கும் படி செய்ய வேண்டும். அதைச்செய்ய உங்களால் முடியுமா? பெரும்பாலான திரையுலகம் இந்து அபிமானிகளாக இந்து அமைப்புகள் மீது மரியாதை கொண்டு அதன் கருத்தோடு இயங்குபவர்களாக இருந்தால் அவர்களே இந்த மனிதர்களுடன் கூட்டு சேர்ந்து படம் செய்ய மாட்டேன் என்று கூற வருவார்கள். ஆனால் அந்த இடத்தில் இந்து அமைப்புகள் எல்லாம் கோட்டை விட்டு விட்டு சாமானியனை நீ சினிமா பார்ப்பதால் தான் எல்லாம் லொட்டை ஆகி விட்டது என்றால் அது முட்டாள்தனம். பி ஜெ பி, ஆர் எஸ் எஸ், இந்து முன்னனி, இந்து மக்கள் கட்சி என்று எத்தனை வலிமை வாய்ந்த இயக்கங்கள் இருக்கின்றன. அவற்றில் வெளிப்படையாக சேர்ந்து நானொரு இந்து அபிமானி என்று காட்டிக்கொள்ளும் அளவு சினிமாக்காரர்களை உங்களால் இனைக்க முடியுமா? அவர்களும் இந்துக்கள் தானே.. அப்படி இணைப்பதன் மூலம் இந்து விரோத சக்தியான கருனாநிதி குடும்பத்தினரை அனைவரும் புறக்கனிக்க வைக்க முடியுமே! அதையெல்லாம் செய்யாமல் சக்தி வாய்ந்த மனிதர்களை ஒருங்கினைக்க கூட முடியாமல் சும்மா ஜாலிக்கு படம் பாக்கறவன திட்டி என்ன பிரயோஜனம்.

  ஐயா திருமலை! அரபு நாட்டு ஷேக்குகள் எல்லாம் நீங்கள் வாங்கும் பெட்ரோல் மூலம் தானே கோட்டிஸ்வரன் ஆகிறார்கள். அந்த பணத்தை வைத்து தானே உலகம் முழுவதும் இஸ்லாத்தை பரப்ப எண்ணி தீவிரவாதத்திற்கு உதவுகிறார்கள். நீங்களோ உங்கள் குடும்பத்தினரோ, பெட்ரோல் வாங்காமல் நடந்தோ, மாட்டு வண்டியிலோ போய் வாழ்கை நடத்துங்களேன் பார்க்கலாம்!

 48. ram on October 4, 2010 at 12:45 pm

  இது திருமலைக்காக! //எவ்வளவோ அரசியல் வாதிகளிடம் பணமிருந்தும் அவர்களுக்கு என்னிலடங்கா பிள்ளைகளிருந்தும் அவர்கள் இதுபோல தேர்ந்த தொழிலதிபர்கள் ஆகவில்லையே! எனவே மாறன் தொழில் முனைவும் அதில் வெற்றி பெறுவதும் அவரது தனிப்பட்ட ஆளுமை. திமுக துணையில்லாமல் முடியாது எனினும், அதிகாரத்தினால் அவர்கள் சாதித்தது அதிகம் என்றாலும் தேர்ந்த தொழிலதிபராக விளங்க தனித்திறமை இருக்கத்தான் வேண்டும். எனவே பல்முக கண்ணோட்டத்தில் யோசிக்க வேண்டிய விஷயத்தை தட்டையாக யோசித்து எந்திரன் மீது துப்பக்கூடாது. இன்னொரு விஷயம்.. ரஜினி படம் வெளிவரும் போதெல்லாம், கிறிஸ்தவ திருமாவளவன், ராமதாசும் மற்றும் திரயரங்கு உரியமையாளர்கள், விநியோகஸ்தர்கள் என்று யாராவது ஏதாவது பிரச்சனைகளை உருவாக்கிக்கொண்டே இருப்பது வாடிக்கையாகியிருந்தது. இப்போது கருணாநிதி குடும்பப் படம் என்பதால் இந்த சின்ன புத்திக்காரர்கள் யாரும் வாயே திறக்காமல் அடங்கிக் கிடக்கிறார்கள். என்ன தான் மொத்த குடும்பமும் சினிமாவை ஆக்கிரமித்தாலும் அக்கிரமம் நடக்காதவரை எல்லாம் சரிதான். அப்படியே அங்கே அடாவடி தொடர்ந்தால், எதிர்ப்பும் போராட்டமும் மீண்டும் சமநிலையும் சினிமாக்காரர்களுக்குள்ளே தாமே உண்டாகும் . ஏனெனில் எந்தச் சமூகமும் தன்னைத்தானே சமன் செய்யும் தன்மை தன்னுள்ளே கொண்டது.

  “சமூகம் தன்னைத் தானே சமன் செய்து கொள்ளும்.”//

 49. R.Sridharan on October 4, 2010 at 6:09 pm

  ஹிந்துக்கள் மிக ஆபத்தான நிலையில் இருக்கிறார்கள்
  ஆகவே அவர்கள் ஒற்றுமையாக இருப்பது மிக அவசியம்
  அதை விட முக்கியமானது வேறில்லை

 50. R.Sridharan on October 4, 2010 at 6:12 pm

  நாம் கவலைப் படுவதெல்லாம் ரஜினி இவர்கள் கையில் மாட்டிக் கொண்டு விட்டாரே என்று தான்.
  இஸ்லாம்,கமுநிசம், ‘இந்த கும்பல்’ இவர்களிடம் சிக்கியவர்கள் வெளியே வருவது கடினமாயிற்றே

 51. ஈ. ரா on October 4, 2010 at 6:29 pm

  நீங்கள் எந்த காரணத்திற்க்காக இங்கே திரை விமர்சனம் எழுதி இருக்கிறீர்கள் என்று தெரியவில்லை…

  //இவ்வளவு திறமையான குழு இருந்தும் இன்னும் ஆங்கிலத் திரைப்படங்களைக் காப்பியடித்து சீன்கள் சேர்க்க வேண்டுமா என்பதுதான் ரஜினி மற்றும் சங்கர் திரைஇப்படங்களின் ரசிகர்களின் ஆதங்கமாய் இருக்க முடியும்.//

  உங்களிடம் வந்து அந்த ரசிகர்கள் புலம்பினார்களா?

  சன் குழுமம் இதற்கு முன் வெளியிட்ட எல்லா திரைப்படங்களையும் இப்படித்தான் விமர்சித்து இருக்கிறீர்களா?

  சரி, விமர்சனம்தான் எழுதியவரின் புனைவு என்றாலும் பின்னூட்டங்களில் சம்பந்தமில்லாமல் தனி நபரை அதுவும் ரஜினியை சகட்டுமேனிக்கு திட்ட அனுமதிப்பது சரியா?

  இந்த தளம் ரஜினியை எதிர்க்க உபயோகப்படுத்தப்படுகிறதா?

  இந்து மதத்திற்காக சிறு துரும்பையும் கிள்ளிப் போடாத பல திரைத் துறை பிரபலங்களுக்கு மத்தியில், உண்மையாக இருப்பவரையும் குரு பக்தியை காலம் காலமாக பரப்புபவராக விளங்குபவரையும் இப்படி மோசமான பின்னூட்டங்களால் விமர்சிப்பது இத்தளத்திர்க்கு பொருத்தமானதாக இல்லை…

  அதற்கு வேறு களங்கள் உள்ளன… இங்கே பயன்படுத்தாதீர்கள்..

  அன்புடன்

  ஈ. ரா

 52. reality on October 5, 2010 at 7:07 pm

  ஹாலிவுட் படங்கள் எல்லாம் மேலை நாட்டு உத்திகளை, மேலைநாட்டு கூத்தாடிகளைக்கொண்டு , அறிவுபூர்வமென்றும், கீழை நாட்டு உத்திகளை முட்டாள் தனமானதென்றும் சித்தரிப்பவை. எனவே ஹாலிவுட் படத்தை காப்பியடித்ததாக இருக்கும், இப்படம், கீழைநாட்டு
  கூத்தாடிகளைக்கொண்டே, முட்டாள் தனமான காரியத்தைச் செய்திருக்கிறார்கள் போலும்.

 53. haranprasanna on October 6, 2010 at 8:14 am

  ஒரு கமெண்ட்டில் சிறிய சீண்டலாக இருக்கட்டும் என நினைத்து எழுதிய ‘விதூஷகர்’ என்னும் வார்த்தை கொஞ்சம் ஓவர்டோஸாகிவிட்டது. தவறுதான். வருந்துகிறேன்.

 54. Moorthy on October 6, 2010 at 12:24 pm

  வெற்றி
  இவிங்க இஸ்லாம் தேசமான மலேசியாவில சி டி ரிலீஸ் செய்தபோதே நெனச்சேன்.அதுவுமில்லாமல் அஞ்சு பேர் ஒரு பலகையில கை வைப்பாங்களாம் உடனே சி டி வெளியே வருமாம். ஏதோ மஹாபாரதத்த கிண்டல் பண்ற மாதிரி இருந்துச்சி(வெளிய யார் கிட்டேயும் சொல்லாதீங்க இதெல்லாம் நானா யோசிச்சேன்)
  இந்த காப்பி அடிக்கிறதுனா ஒரே மாதிரி நெறய ரஜினி வரது தான, கரெக்ட்.நிறைய தான் காப்பி அடிச்சிருக்காங்க,
  படத்த ஆழ்ந்து பார்த்து விமர்சனம் பண்றதுனா இதுதானா அப்ப சரி…..
  மத்தபடி தன்னோட ஸ்டார் இமேஜ் எல்லாம் விட்டுட்டு ஒரு இயக்குனரோட கனவு படத்துக்காக முழுசா ஈடுபாட்டோட அர்ப்பனிச்சிருக்கிற ரஜினிய, கடுமையா உழைத்திருக்கிற டெக்னிக்கல் டீம், ஷங்கரோட இணையா தெரிகிற சுஜாதாவோட வசனம் இது போன்ற தேவையில்லாத விஷயம் எல்லாம் நமக்கு எதுக்கு விடுங்க…..
  அப்படி எல்லாம் தமிழ் பட உலகம் மொத்தம் கருணாநிதி குடும்பத்துகிட்ட போயிடல இன்னமும் கருணாநிதி கதை வசனம் எழுதும் படத்த மட்டும் வேற யாரோ தான் தயாரிச்சி ரிலீஸ் பண்றாங்க…

  இந்த கச்சடா படத்துக்கெல்லாம் விமர்சனம் வேண்டாம்
  இனி மேல நீங்க இந்த தாலி காத்த காளியம்மன், குட்டிப்பிசாசு(பிசாசு இந்து மதம் தான…சாத்தான் தான் அவிங்க மதம் ),ராஜகாளியம்மன் போன்ற படத்துக்கெல்லாம் விமர்சனம் பண்ணுங்க.. பழய படம்னு பாக்காதீங்க…எல்லாமே அக்மார்க் இந்து மதத்த பெருமை படுத்தும் படம்
  அன்புடன்
  மூர்த்தி
  லா ரோஸ்.

 55. R.Sridharan on October 6, 2010 at 8:24 pm

  அவர்கள் கொடுக்கப் போகும் லஞ்சப் பணத்தை வாங்கிக் கொண்டும் அவர்களுக்கு ஓட்டுப் போடாமல் இருக்கலாம்
  அல்லது அவர்கள் சேர்த்து வைத்திருக்கும் ‘தகுதிக்கு’ ஏற்றார் போல் ஒரு லட்சம் ரெண்டு லட்சம் கொடுத்தால்தான் போடுவோம் என்று சொல்லலாம் .

 56. மு.செந்தமிழன் on October 6, 2010 at 8:49 pm

  கதையை எழுதியவர் சுஜாதா.அவருக்கு ஒரு மரியாதையுடன் அஞ்சலி இல்லை.
  யாரும் அவரை நினைவு கூரவும் இல்லை.தமிழ் நாட்டில் கம்ப்யூட்டரைத் தெரியப்
  படுத்தியவர் சுஜாதா.படத்தை தயாரித்தவர், நடித்தவர்,இயக்கியவர் இவர் தம்
  தகுதி இதுவே .

 57. R.Sridharan on October 7, 2010 at 9:09 pm

  இப்போதே திரையில் மாறன் பெயர் முன்னிறுத்தப் படுவதாகக் கேள்வி
  ரஜினி பின்னுக்குத் தள்ளப் படுவார்
  இது அவருக்குத் தேவையா?
  தமிழில் ஒரு செய்யுள் உண்டு
  அது கூறுவது- கொம்புள்ள பிராணிகளிடமிருந்து ஐந்து முழமும்,குதிரையிடமிருந்து பத்து முழமும் ,யானைடமிருந்து ஆயிரம் முழமும் தள்ளி இருத்தல்நலம்.
  ஆனால் தீயவர் பார்வை படும் தூரத்தில் கூட இருக்கக் கூடாது
  பாவம் ,ரஜினி.

 58. Keerthi on October 11, 2010 at 9:46 am

  ஆனந்த விகடன் இந்த படத்துக்கு 45 மார்க் கொடுத்திருக்கிறது.. நான் இன்னும் பார்க்கவில்லை என்றாலும் நன்றாக இருக்கிறது படம் என்றே பார்த்த எல்லோரும் சொல்கின்றனர்.

  படம் வெளியான அன்று ரசிகர்களின் அலை மோதும் கொட்டத்தை காண்பித்தார்கள். ஒரு இடத்தில் கூட்டம் கட்டுக் கடங்காமல் போக போலிஸ் தடி அடி நடத்துவதையும் (பெருமையாக) சன்டீவி காட்டியது.

  பாவம் அந்த ரசிகர்கள். தடி அடி பட்டு பின் படம் பார்க்க உள்ளே உட்கார நேர்ந்தால் அவர்கள் மனது எவ்வளவு கஷ்டப் படும்!

 59. V Saravanan on October 11, 2010 at 3:15 pm

  ஒரு விஷயம் தெளிவு. தமிழர்கள் பலருக்கு தனி மனித அபிமானம் அளவு மீறி வெறியாக மாறி விட்டது.
  பக்தி வளர்ந்த பூமி இன்று இப்படி.
  ரஜினி காந்த் என் தாய் தந்தைக்கும் மேலே என்று சொல்பவரும் , அபிமான எழுத்தாளர் சம்பந்தப்பட்டிருப்பதால் கலாசாரத்தை கெடுக்கும் [சிந்து சமவெளி ] குமட்டல் படத்தை கலை என்று புகழ்பவரும் ஒரே வியாதியால் பீடிக்கப்பட்டிருக்கிறார்கள். infection அளவு தான் வேறு.
  ” எப்பொருள் யார் யார் வாய் …” என்றவரை சிலை வைத்துப்பார்த்து விட்டோம். சொன்னதை மறந்து விட்டோம்.
  வேதனையுடன்
  சரவணன்.

 60. smitha on October 12, 2010 at 2:20 pm

  It is a sad state of affairs that tamilians treat filmstars like God, more so a person like rajini who has been opportunistic to the core.

  He did not utter a word when his fans were beaten up by PMK & VCK party cadres.

  He did not bother to invite even his fans associations’ leaders to his daughter’s wedding.

  He meets the press only ahead of his films’ release.

  He has made millions here but not spent a pie for the benefit of the poor.

  He potrays himself as a pious hindu but has all the bad habits in the world & makes fun of hinduism in his films.

  In spite of all this, his fans worship him & the press hail his every word.

  God save tamilnadu

 61. kumaran on November 4, 2010 at 9:42 pm

  நமது தமிழர்களுக்கு தலைவர்கள் என்றால் மிகவும் பிடிக்கும், தங்களுக்கு பிடித்தமான தலைவர்களுக்கு ஏதாவது குற்றங்குறைகள் நடந்துவிட்டால் தலையை மொட்டை அடித்து கொள்வார்கள். நெருப்பு மிதிப்பார்கள், பெட்ரோலை ஊற்றி தங்களையும் எரித்து கொள்வார்கள். மற்றவர்களையும் எரித்து பார்ப்பார்கள். சோறு போட்ட அப்பனை அடித்து போட்டு மனங்கவர்ந்த தலைவர்களின் சினிமா படத்திற்கு காத்து கிடக்கும் எத்தனையோ தமிழர்களை நாம் அன்றாடம் பார்க்கின்றோம், இது தமிழனுக்கு இன்று நேற்று ஏற்பட்ட வியாதியல்ல, சங்ககாலத்திற்கு முன்பே பற்றி கொண்ட தீராத வியாதியாகும், பக்கத்து நாட்டு அரசன் பையனுக்கு பெண் தரவில்லை என்று போருக்கு கிளம்பி. தோற்றுபோவான் மன்னன், மன்னன் தோற்றுவிட்டானே என்று எங்கோ மூலையில் இருக்கும் இளைஞன் தன் உயிரை மாய்த்து கொள்வான், இது நேற்றயை தினதந்தி செய்தியல்ல, சங்ககால வரலாற்று பதிவாகும்,

  பல் போகும் காலம் வரையில் மற்றவனுக்கு பல்லக்கு தூக்கியே பழக்கப்பட்ட தமிழனை. தலைவன் என்பவன் கடவுளுக்கு சமமானவன் என்று தூக்கி வைத்து கொண்டாடும் தமிழனை. தலைவனின் நலத்திற்காக தன் பெண்டாட்டி. பிள்ளையை கூட பலி கொடுக்க தயங்காத தமிழனை பார்த்த கணியன் பூங்குன்றனார் நெஞ்சு பதபதைக்க பார்த்து தலைவன் என்பவன் தனியான ஒரு இனமல்ல உன்னை போலவும். என்னை போலவும் சாதாரண மனிதன் தான். நீயும். நானும் அம்மாவின் வயிற்றில் பத்துமாதம் இருந்தது போலவே தான் அவனும் இருந்தான், தலைவன் என்பதற்காக பதினைந்து மாதம் கருவறை வாசம் அவனுக்கு கிடையாது, விதி என்ற நதியில் உருண்டு ஓடும் பல கட்டைகளில் ஒரு கட்டை தான் அவன், அவனுக்கென்று தனியாக மரியாதை தருவதோ. அவனுக்காக மற்றவர்களை அவமரியாதை செய்வதோ சரியான முறையல்ல, எல்லோரையும் சமமாக பார்க்க பழகி கொள்

மறுமொழி இடுக:

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.

உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:

தமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.

மறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

*