அயோத்தித் தீர்ப்பும் அபத்த ஊடகங்களும் – 3

தொடர்ச்சி…

ay1யோத்தித் தீர்ப்பு வெளியாவதற்கு முன்னர், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஹிந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் அமைதிக்கூட்டம் தனித்தனியே நடந்தது. மாவட்ட ஆட்சியர் உமாநாத் நடத்திய இக்கூட்டத்தில், முஸ்லிம்கள் ஆரம்பத்திலேயே எதிர்ப்பு தெரிவித்தனர்:

”அதெப்படி ராமஜென்ம பூமி-பாபர் மசூதி வழக்கில் தீர்ப்பு வெளியாகிறது என்று சொல்லலாம்? அங்கு இருந்தது பாபர் மசூதி. எனவே பாபர் மசூதி தொடர்பான வழக்கு என்று தான் சொல்ல வேண்டும். மாவட்ட ஆட்சியர் ஒருசார்பாகச் செயல்படக் கூடாது” என்று சிலர் குரல் எழுப்பினர்.

”எடுத்ததெற்கெல்லாம் குற்றம் கண்டுபிடிக்கக் கூடாது; நீதிமன்றத்திலேயே அந்த வழக்கின் பெயர் ராமஜென்ம பூமி- பாபர் மசூதி நில உரிமை வழக்கு என்பது தான். தேவையின்றி பிரச்னை செய்தால் நானும் கடுமையைக் காட்ட வேண்டிவரும்” என்று எச்சரித்தார் ஆட்சியர் உமாநாத்.

-இந்தச் சம்பவம் இங்கு எதற்கு என்ற கேள்வி எழலாம்.

இந்தச் சம்பவம், செய்தியில் பதிவாகவில்லை. ஆட்சியரால் எச்சரிக்கப்பட்டவர்கள் முஸ்லிம்கள். அதை செய்தியாக்கி, அவர்களது கோபத்திற்கு ஆளாக வேண்டாமே என்ற பத்திரிகையாளர்களின் புத்திசாலித்தனம் தான் இதற்குக் காரணம்.

ஆனால், 1992-லேயே இல்லாமலாகிவிட்ட கட்டட இடிப்பு தொடர்பான வழக்கு அல்ல என்ற போதும், ‘பழைய நிகழ்வை நினைவுபடுத்தாதீர்’ என்று மத்திய அரசு ஊடகங்களுக்கு வேண்டுகோள் விடுத்த பிறகும், அந்த சர்ச்சைக்குரிய கட்டடத்தையே 24 X 7 செய்தி தொலைக்காட்சியில் காட்டிக் கொண்டிருந்தார்கள்.

நடந்தது அயோத்தி நிலம் குறித்த வழக்கு; கட்டட இடிப்பு தொடர்பான வழக்கு அல்ல என்றபோதும், அதையே ஞாபகப்படுத்திக் கொண்டிருந்தன, ஆங்கில செய்தி சேனல்கள். பெரும்பாலான ஆங்கில செய்தி சேனல்கள் முன்முடிவுகளுடன் தான் இந்த வழக்கின் செய்தியை ஒளிபரப்பின. செய்தியை செய்தியாகத் (NEWSnNEWS) தர வேண்டும் என்ற எல்லையை மறந்து, கண்ணோட்டங்களாகவே (VIEWS) அவை செய்திகளை ஒளிபரப்பின.

media_panchayatiசி.என்.என்-ஐ.பி.என், என்.டி.டி.வி- 24X 7, டைம்ஸ் நவ் ஆகியவை கங்கணம் கட்டிக்கொண்டு, அயோத்தித் தீர்ப்பை அக்குவேறு ஆணி வேறாக அலசின. அவை நடத்திய அறிவுஜீவிகளின் பிரசாரத்தால் தான், அலஹாபாத் நீதிமன்றத் தீர்ப்புக்கு ‘கட்டப் பஞ்சாயத்து தீர்ப்பு’ என்ற அடைமொழி கிடைத்தது. நாளிதழ்களும் கர்மசிரத்தையாக அந்தப் பிரசாரத்தைப் பின்தொடர்கின்றன.

தீர்ப்பு வெளியானவுடனேயே என்.டி.டி.வி தனது வேலையைத் துவக்கிவிட்டது. பிரபல வழக்கறிஞர் ராஜீவ் தவானின் பேட்டி பலமுறை ஒளிபரப்பப்பட்டது. அவர்தான் ‘கட்டப் பஞ்சாயத்து’ பிரசாரத்தைத் துவக்கிவைத்தார்.

நீதிமன்றத் தீர்ப்புகளை விமர்சிக்கக் கூடாது என்று சொல்லும் அதே வழக்கறிஞர் தான், அதிமேதாவியாக பேட்டி கொடுத்தார். ஒருவேளை அவர் எதிர்பார்த்த தீர்ப்பு கிடைக்காமல் போயிருக்கலாம்; ‘மத நம்பிக்கை சட்டத்தை தோற்கடித்துவிட்டது’ என்று புலம்பிக்கொண்டே இருந்தார்.

சி.என்.என்.ஐ.பி.என் சும்மா இருக்குமா? அவர்கள் பங்கிற்கு அவர்களுக்குத் தெரிந்த வல்லுனர்களை மேடை ஏற்றினார்கள். இதன் பொறுப்பாளர் ராஜ்தீப் சர்தேசாய், ”அயோத்தி விவகாரத்திற்கு நிகழ்கால வாழ்வில் இடமில்லை; இந்தியா அயோத்தியைத் தாண்டிச் சென்றுவிட்டது” என்று சொல்லிக்கொண்டே இருந்தார். அப்புறம் எதற்காக அலஹாபாத் வழக்கை செய்தியாக்க இந்தத் துடிப்பு துடித்தாரோ தெரியவில்லை.

ayodhyaverdictdefered295newwwwதீர்ப்பு வெளியான சில நிமிடங்களில் வழக்கில் தொடர்புடைய வழக்கறிஞர்களிடம் பதில் பெற தொலைகாட்சி நிருபர்களும் படப்பிடிப்பாளர்களும் நடத்திய தள்ளுமுள்ளுவைப் பார்த்தபோதே தெரிந்தது, ஊடகத்தில் அயோத்தியின் முக்கியத்துவம். ஆனால் யாரையோ திருப்திப்படுத்த, ”அயோத்தியை தேசம் மறந்துவிட்டது” என்று அங்கலாய்த்துக்கொண்டே இருந்தார் ராஜ்தீப். அவரை அந்த கர்த்தர் தான் ரட்சிக்க வேண்டும்.

இதே செய்தியைத் தான் ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழிலும் கட்டுரையாக வடித்து மகிழ்ந்தார் ராஜ்தீப். அதைப் பிரசுரித்து ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழும் மதச்சார்பின்மையைக் காத்தது.

நமது ஊரில் ஒரு மகானுபாவர் இருக்கிறார். அவரே கேள்வி கேட்பார்; அவரே பதிலும் கொடுப்பார். தஞ்சை பெரிய கோயிலைக் கட்டிய ராஜராஜனை மறந்தவர்கள் திரேதா யுகத்து ராமனை இழுத்துக்கொண்டு திரிகிறார்கள் என்பார். அதே பாணியில் பிரபல ஊடக அறிஞர் கரன் தாபர் (இவர் கிறுக்குத் தனமாக கேள்வி கேட்பார்; எதிரில் இருப்பவர் கிறுக்கன் ஆகாமல் திரும்ப வேண்டும்.) நடத்திய நேர்முகம் சி.என்.பி.சி.யில் வெளியானது. அவருக்கு தோதான ஜோடியாக அமைந்தவர், இடியே தலையில் விழுந்தாலும் எங்கே என்று கேட்பவர். வேறு யார்? காங்கிரஸ் அமைச்சரான கபில் சிபல் தான்.

அயோத்தி வழக்கில் தீர்ப்புக்கு எதிராகக் கண்டிப்பாக உச்சநீதிமன்றம் சரியான தீர்ப்பு வழங்கும் என்று சொன்னார் சிபல். இதுவரை யாரும் உச்சநீதிமன்றத்திற்கு மேல்முறையீடு செய்யச் சென்றதாகத் தகவல் இல்லை. ஆனாலும் மனிதர் அசராமல் சொன்னதையே திரும்பத் திரும்ப, திரும்பத் திரும்ப, திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தார்.

கரன் தாபரும் லேசுப்பட்டவர் இல்லை. அவரது கேள்வி இதோ…

”சர்ச்சைக்குரிய அகழாய்வு அறிக்கையின் அடிப்படையிலேயே மூன்று நீதிபதிகளும் ராமர் கோயில் இருந்தது என்கிறார்கள். இது பற்றி என்ன சொல்கிறீர்கள்?” சிபலின் பதில்: ” உச்சநீதிமன்றம் விசாரிக்கும் போது எல்லாம் சரியாகும்”

royston_dumbமற்றொரு கேள்வி: ” நம்பிக்கை, சர்ச்சைக்குரிய அகழாய்வு அறிக்கை ஆகியவற்றின் அடிப்படையிலான தீர்ப்பு என்பதால், அலஹாபாத் உயர்நீதிமன்றத் தீர்ப்பை உச்சநீதிமன்றம் மறுதலிக்குமா?” சிபல் பதில்: ‘’இது சிக்கலான கேள்வி. ஆனால் உச்ச நீதிமன்றத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். தீர்ப்பு மாறானதாக அமையலாம்…”

”அனுபவ உரிமை என்பதாலேயே ஒருவருக்கு குறிப்பிட்ட இடம் சொந்தமாக முடியுமா?” – இது கரன் தாபர். ”நல்ல கேள்வி; அரச மரத்தின் கீழ் சாது அமர்ந்திருக்கிறார். அவர் முன் ஆயிரக் கணக்கானோர் பஜனை பாடுகின்றனர். சாது அமர்ந்து அனுபவித்ததால் அரச மரம் அவருடையதாகி விடுமா? அந்த பக்தர்களுக்கும் அது உரிமை ஆகுமா?” -இது சிபலின் பதில்.

”ஒருவர் நீண்ட காலமாக வழிபடுவதாலேயே அந்த இடத்திற்கு சொந்தம் கொண்டாட முடியாது. அப்படித்தானே? – கேள்வி கேட்கிறார். கரன் தாபர். இப்படித் தான் அந்த நேர்முகம் முழுவதும் கேள்விகள்; அதற்கேற்ற பதில்கள். கவுண்டமணி- செந்தில் நகைச்சுவையைத் தோற்கடிக்கிறது இவர்களது வில்லத்தனம்.

தீர்ப்பு வெளியான மறுநாள், பெரும்பாலான ஆங்கில நாளிழ்கள் ‘கட்டப் பஞ்சாயத்து’ தீர்ப்பு என்று வர்ணித்தன. பத்து நாட்களாக பீதியில் ஆழ்ந்திருந்த நாடு நிம்மதியாக இருக்கிறதே, எப்படி என்று யோசிக்கவில்லை.

டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகை, ”மசூதிக்குள் ராமர் சிலையை வைத்த 1949, மசூதியை இடித்த 1992 ஆகிய சம்பவங்களை மறந்துவிட்டு அலஹாபாத் நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது” என்று எழுதியது; தற்போதைய வழக்கின் அடிப்படை என்ன என்பது தெரியாமல், புலம்பியது.

அயோத்தி வழக்கில் பல நூறு ஆண்டுகாலப் போராட்டம் தான் 60 ஆண்டுகளுக்கு முந்தைய வழக்காக மாற்றம் பெற்றது. இந்த அடிப்படை உண்மையை மறந்துவிட்டு, சமீபகால நிகழ்வுகளை ஏன் கண்டுகொள்ளவில்லை என்ற கேள்வியை ஊடகங்கள் எழுப்புகின்றன. இதற்குக் காரணம் இவ்வழக்கு குறித்த அறியாமை அல்ல. நாளிதழ் படிப்பவர்களை எப்படியும் குழப்பலாம் என்ற ஆணவம் தான் ஆங்கில நாளிதழ்களிடம் ஓங்கியிருக்கிறது. ஆயினும், முந்தைய காலம் போலின்றி, ஹிந்து உணர்வுடன் வாசகர்கள் போராடுவதை, வாசகர் கடிதங்கள், இணையதளப் பின்னூட்டங்களில் காண முடிந்தது.

தமிழ் நாளிதழ்களைப் பொருத்த வரை, தினமலர், தினத்தந்தி நாளிதழ்கள் செய்தியை மட்டும் வெளியிட்டு நாணயம் காத்தன. தினகரன் நாளிதழிடம் அதனை யாரும் எதிர்பார்க்கவில்லை. வார இதழ்களைப் பொருத்த வரை, ஜூனியர் விகடன், குமுதம் ரிப்போர்டர், நக்கீரன், இன்ன பிற பத்திரிகைகளிடம் நம்மால் நியாயமான செய்தியை எதிர்பார்க்க இயலாது. ஈரைப் பேனாக்கி, பேனைப் பெருமாளாக்கும் கலை கைவந்தவர்களிடம், ராமர் கோயிலுக்கு ஆதரவான செய்தியை எதிர்பார்க்க முடியாது. நிமிர்ந்த ‘நன்னடை’ தினமணியே தடுமாறும்போது, பத்திரிகைத் ‘தொழில்’ நடத்துபவர்களைப் பற்றி இங்கு எழுதி என்ன ஆகப்போகிறது?

1363முன்னொரு காலத்தில் அதீத தேச பக்தியுடன் ஹிந்து உணர்வுள்ள பெரியவரால் ஆரம்பிக்கப்பட்ட ‘தி ஹிந்து’ நாளிதழை விட்டுவிட்டு இக்கட்டுரையை எழுத முடியுமா?

அலஹாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ பெஞ்சில் வழக்கு விசாரிக்கப்படுவதற்கு முன்னரே தி ஹிந்து தனது பங்கிற்கு ‘விசாரித்து’ முடித்திருந்தது. நீதிமன்ற உத்தரவுப்படி நடந்த அயோத்தி அகழாய்வு தொடர்பான சரித்திர நிபுணர்களின் கட்டுரைகள் தொடர்ந்து அதில் வெளிவந்தன.

அகழாய்வில், தற்போதைய கோயில் இருக்கும் இடத்திற்குக் கீழ் எந்தக் கோயிலும் இருக்கவில்லை; அப்படியே இருந்தாலும் ஹிந்து கோயில் கட்டுமானம் என்பதற்கு ஆதாரம் இல்லை; புத்த விகாரமாகவும் அது இருக்கலாம். அதை இடித்து கட்டப்பட்ட கோயில் பாபரின் படைத் தளபதியால் இடிக்கப் பட்டிருக்கலாம்; பாபர் மசூதி இருந்த இடத்தில் எந்த கட்டுமானமும் அகழாய்வில் கண்டுபிடிக்கப்படவில்லை…” இப்படியாகத் தொடர்ந்து சரித்திரப் புரட்டர்களின் கட்டுரைகள் வெளிவந்தன. ஒருவகையில், நீதிபதிகளை நிர்பந்திக்கும் திட்டத்துடன் தான் அவை வெளியிடப்பட்டதாகத் தோன்றுகிறது.

imagescaoaaoanசரித்திர நிபுணர்கள் இர்பான் ஹபீப், ரொமிலா தாபர், டி.என்.ஜா உள்ளிட்ட அலிகார் பல்கலைக்கழக, டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக பேராசிரியர்களின் கட்டுக்கதைகள் தொடர்ந்து பிரசுரிக்கப்பட்டன. இந்த சரித்திர வல்லுனர்களின் கவலை தோய்ந்த அறிக்கை மும்பை டைம்ஸ் ஆப் இந்தியாவிலும் தி ஹிந்துவிலும் தீர்ப்பிற்கு மறுநாள் வெளியானது குறிப்பிடத் தக்கது. இவர்கள் எந்தக் காலத்தில் ஹிந்துக்களுக்கு ஆதரவாக இருந்திருக்கிறார்கள்? உண்மையை என்று ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்? நமது துரதிருஷ்டம், நாட்டின் அறிவுலகம், இவர்களை பெரும் மேதை என்று நம்பிக் கொண்டிருப்பது தான்.

தொல்லியல் அறிஞர் நாகசாமி போன்றோர் அயோத்தி அகழாய்வில் கிடைத்த சான்றாதாரங்களை விளக்கி ஆய்வுக் கட்டுரைகளை எழுதி உள்ளனர். அந்த அகழாய்வில் கிடைத்த ஆதாரங்கள் அனைத்தும் நீதிபதிகள் சர்மா, அகர்வால் அளித்த தீர்ப்புகளின் பிற்சேர்க்கையில் குறிக்கப்பட்டுள்ளன. முஸ்லிம் மதத்தைச் சார்ந்த நீதிபதியான கான் மட்டும் புத்திசாலித்தனமாக அந்த பிற்சேர்க்கையைத் தவிர்த்துவிட்டார். ஆயினும், மனசாட்சியுடன் தீர்ப்பு அளித்தார். 8,500 பக்கங்கள் கொண்ட அந்த தீர்ப்புக்களின் முழு அம்சங்களையும் இதுவரையிலும் எந்த அறிவுஜீவியும் படித்ததாகத் தெரியவில்லை. ஆனால், கூப்பாடு போட அவர்கள் தயங்கவும் இல்லை.

jcon1374lதற்போதும் அயோத்தி தீர்ப்பு குறித்த விவாதம் பத்திரிகைகளில் தொடர்கிறது. எந்த ஒரு விஷயத்தைப் பற்றியும் அலச பத்திரிகைகளுக்கும் ஊடகங்களுக்கும் உரிமை உள்ளது உண்மையே. ஆனால் அது ஒருசார்பாக இருக்க கூடாது. ‘செக்யூலரிசமேனியா’ வியாதியால் பாதிக்கப்பட்டுள்ள நமது ஊடகத்துறை, வழக்கம் போல ஒருசார்பாகவே கருத்துத் திணிப்பு பிரசாரத்தை நடத்துகிறது. இது புரியாமல் நாமும் அந்த நாளிதழ்களை காசு கொடுத்து வாங்கி அவற்றை நடத்துகிறோம்.

கடந்த அக். 2-ம் தேதி தி ஹிந்து-வில் ரொமிலா தாபரின் கட்டுரை வெளியாகியுள்ளது-அதே ‘கேள்வியும் நானே’ பாணியுடன். ”சரித்திரம் மீதான மரியாதையை செல்லாக் காசாக்கிவிட்டு, மத நம்பிக்கையின் அடிப்படையில் அதனை அலஹாபாத் தீர்ப்பு மாற்றுகிறது” என்கிறார் ரொமிலா. தற்போதைய அரசியலுக்காக முந்தைய சரித்திரத்தை மாற்ற முடியாதாம்! இதையும் ரொமிலா தான் திருவாய் மலர்ந்து அருளி இருக்கிறார்.

பாபரின் படைத்தளபதியால் இடிக்கப்பட்ட ராமர் கோயிலை மீண்டும் அமைப்பது இவருக்கு தவறு என்று தோன்றுகிறது; ஆனால், 1992 -ல் இடிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய கட்டடம் மட்டும் அங்கு எப்பாடுபட்டாவது கட்டப்பட வேண்டும். 1992 நிகழ்வும் சரித்திரம் தானே! அதை மட்டும் மாற்ற எண்ணலாமா?

ramதி ஹிந்து (THE HINDU) அஹிந்து (A-HINDU) ஆகி மாமாங்கமாகிவிட்டது. அதனிடம் நடுநிலையை எதிர்பார்ப்பதோ, நாட்டுநலனை உத்தேசித்த செய்திகளை எதிர்பார்ப்பதோ, நமது பிழை. ‘’அலஹாபாத் நீதிமன்றத் தீர்ப்பு இன்னும் பல ஜன்மஸ்தான் விவகாரங்கள் எழ வாய்ப்பளித்துவிட்டது’’ என்றும் ஹிந்துக்களுக்கு நினைவுபடுத்தி இருக்கிறார் ரொமிலா. அதற்காக மட்டும் அவருக்கு நன்றி!

மற்றபடி, எத்தனை முறை ஒரே செக்யூலரிச பொய்யைச் சொன்னாலும் அதனால் இனி எந்தப் பயனும் விளையப் போவதில்லை. ஆயினும் இதனை நமது அபத்த ஊடகங்கள் கண்ணை மூடிக்கொண்டு பரப்புவது ஏன்?

தொடரும்….

27 Replies to “அயோத்தித் தீர்ப்பும் அபத்த ஊடகங்களும் – 3”

  1. புனிதமாகவும், எதார்த்தத்தைப் பிரதிபலிப்பதாகவும் திகழ்ந்த பத்திரிகைத் துறையில் சிலரும், சமீப ஆண்டுகளில் தோன்றிய புற்றீசல் தொலைக்காட்சிகள் சிலவும் இந்தியாவில் வேசித்தனத்தில் இறங்கியிருப்பது, பல நிகழ்வுகளில் அவர்களது அணுகுமுறை மூலம் தெரியவருகிறது. அதிலும் குறிப்பாக இந்துக்கள் குறித்து எழுதும் அத்தனை அயல்நாட்டு மூலதன ஊடகங்களும் சொல்லிவைத்தார்போல, இழித்தவாயர்களான இந்துக்களை முட்டாள்களாக ஆக்கும் முயற்சியைக் கையாண்டு வருகிறது. வெளிநாட்டு மூலதனத்தில் செயல்படும் பல ஆங்கில தொலைகாட்சி நிறுவனங்களும், பத்திரிகைகளும் இந்துக்களை ஒழித்தே தீருவது என்ற உறுதியோடு செயல்படுவது தெரிகிறது. இந்த ருத்திராட்சப் பூனைகள் மூத்திரம் பெய்தா காட்டுத்தீயை அணைக்கப்போகிறது. இந்த ஜால்ராக் கூட்டங்கள் ஒரு நாள் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று இந்த நாட்டை விட்டு ஓடத்தான் போகின்றன. மக்கள் பார்க்கத்தான் போகின்றனர்.

  2. Pingback: Indli.com
  3. அச்சு ஊடகங்கள், மின்னணு ஊடகங்கள் ஆகிய இரண்டிலும் இன்று பணியாற்றும் அதிகப் பிரசங்கிகளான சிறுசுகள், பெரிசுகள்( 45-55 வயது) ஆகிய இரு பிரிவினருக்குமே நமது கலாசாரம், ஞான மரபு, உண்மையான வரலாறு ஆகியவற்றில் எவ்வித அடிப்படை அறிவும் இல்லாமற் போனதும் இந்தச் சீரழிவுக்கு ஒரு முக்கியக் காரணம். 1947 ஆகஸ்ட் 15-க்குப் பிறகு சூட்டோடு சூடாக நமது கல்வித் திட்டத்தில் சுதந்திர நாட்டு மக்களுக்கு ஏற்ற மாற்றங்களைச் செய்திருக்க வேண்டும். ஆனால் காலனிய கல்வித் திட்டமே தொடர்ந்தது. சுதந்திர ஹிந்துஸ்தானத்தின் முதல் கல்வி அமைச்சர் ஈரானிலிருந்து வந்து குடியேறிய குடும்பத்தைச் சேர்ந்த, பாரசீக, அரபு மொழி அறிஞர் அபுல் கலாம் ஆசாத்தானேயன்றி ஹிந்துஸ்தானத்தின் மொழிக் குடும்பங்களில் பயிற்சியோ ஹிந்து தத்துவ சாஸ்திர அறிவோ, கலாசார ஈடுபாடோ உள்ளவர் அல்லர்! அத்தகைய தகுதி வாய்ந்த கே. எம். முன்ஷிக்கு உரிய வாய்ப்புக் கிட்டவில்லை. அவரது ஆலோசனைகளுக்கு உரிய மதிப்பும் அளிக்கப்படவில்லை. முகமதிய- ஹிந்து கலாசாரக் கலப்பிலும் காந்தாரக் கலை அம்சங்களிலும் மோகங்கொண்ட பிரதமர் நேருவின் பார்வையில் முன்ஷி ஒரு ஹிந்து மத அபிமானியாகவும் பிற்போக்காளராகவும் தோற்றமளித்தார்! காலப் போக்கில் முன்ஷி ராஜாஜியின் சுதந்திரக் கட்சியிலும் சேர்ந்துவிடவே நேருவுக்கு அவர் மேலும் இளப்பமாகிவிட்டார்! முன்ஷி அதிகாரச் சார்பற்ற பாரதிய வித்யா பவன் மூலம் தமது பங்களிப்பை அளிப்பதோடு திருப்தியடைய வேண்டிய
    தாயிற்று (முன்ஷி எழுதிய ஜெய் சோம்நாத்தை வாசிக்குமாறு தமிழ் ஹிந்து வாசகர்களுக்குப் பரிந்துரைக்கிறேன்).

    போதாக்குறைக்கு, மத நல்லிணக்கம் காக்கப்பட வேண்டும் என்பதற்காகவும், சிறுபான்மையினர் மீது பெரும்பான்மையினருக்கு வெறுப்பு ஏற்பட்டு விடலாகாது என்பதாலும் உண்மைக் கலப்பில்லாத போலி வரலாறு பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுவிட்டது. இதன் காரணமாகவே ஹிந்துஸ் தானத்துக் குழந்தைகளுக்குத் தங்கள் தாயகத்தின் சுயம் எதுவுமே தெரியாமல் போயிற்று. ஸ்ரீ ராமஜன்ம பூமியின் ஜீவாதாரப் புனிதம்கூடப் புரிபடாமல் அதுவும் ஏதோ நிலத்தகராறுபோல அவர்களுக்குத் தென்படுகிறது. நமது தேசத்தின் அடிப்படை மேன்மைகள், நாம் நமது நேர்மையினாலேயே எதிர்கொள்ள நேர்ந்த இழப்புகள் ஆகியவற்றில் எவ்விதப் பயிற்சியுமின்றிக் கல்வி கற்றுப் பெரியவர்களாகியுள்ள தலைமுறைகளே இன்று எல்லாத் துறைகளிலும் இடம் பெற்று, படிப்படியாக முக்கிய பதவிகளையும் வகிக்கத் தொடங்கியுள்ளன. இப்படிப்பட்ட தலைமுறைகள்தான் சமுதாயத்தில் ஒருமித்த கருத்தோட்டத்தை உருவாக்கும் பொறுப்பிலும் தேச நலனுக்கான முடிவுகளை எடுத்து நிறைவேற்றும் அதிகாரத்திலும் உள்ளன! சுருங்க சொன்னால் ஹிந்து சமூகம் இன்று தனக்குத்தானே அதிவேகமாகக் குழி வெட்டிக் கொண்டிருக் கிறது!
    காதுள்ளவர்கள் கேட்டுக்கொள்வார்களாக, கண்ணுள்ளவர்கள் கண்டுகொள்வார்களாக. எவ்வளவு சீக்கிரம் விழித்துக்கொள்கிறோமோ அவ்வளவுக்கு நல்லது.
    மலர்மன்னன்

  4. இந்த பதிவில் சில முக்கியமான விஷயங்களை எடுத்து வைத்திருக்கிறீர்கள். அதே நேரத்தில் சொதப்பியும் இருக்கிறீர்கள். பொதுவாக தமிழ் ஹிந்து தளத்தில் எனக்கு இருக்கும் பிரச்சினையே இதுதான். போலி மத சார்பின்மைக்கு எதிராக குரல் கொடுக்கும் வெகு சில தளங்களில் இதுவும் ஒன்று. அதே நேரத்தில் அணுகுமுறையில் முரண்பாடுகள் நிறைய. ஹிந்துக்களுக்கு ஒரு நியாயம், முஸ்லிம்களுக்கு ஒரு நியாயம் என்றுதான் போகிறீர்கள்.

    நல்ல பகுதிகள்:
    // அதெப்படி ராமஜென்ம பூமி-பாபர் மசூதி வழக்கில் தீர்ப்பு வெளியாகிறது என்று சொல்லலாம்?… // இதை எல்லாம் எடுத்து சொல்ல இந்த தளத்தை விட்டால் ஆளே இல்லை என்றுதான் சொல்லவேண்டும். அகழ்வாராய்ச்சி முடிவுகள் வெளிவந்த பின்னும், அங்கே கோவில் இருந்தது என்று நிறுவப்பட்ட பின்னும், அதை பாபர் மசூதி என்றுதான் சொல்ல வேண்டும் என்று அடம் பிடிப்பவர்களை என்னவென்று சொல்வது?

    // அயோத்தி வழக்கில் தீர்ப்புக்கு எதிராகக் கண்டிப்பாக உச்சநீதிமன்றம் சரியான தீர்ப்பு வழங்கும் என்று சொன்னார் சிபல். // ஒரு அமைச்சர் இப்படி சொல்வது மகா கேவலம். உச்ச நீதி மன்றம் என்ன தீர்ப்பு சொல்லும் என்று ஒரு அமைச்சர் சொல்வது அந்த நீதிபதிகளின் மீது அழுத்தம் கொடுப்பதாகும். இந்த மோசமான முன்னுதாரனத்தைப் பற்றி கூட யாரும் குரல் எழுப்பவில்லையா?

    // ”சர்ச்சைக்குரிய அகழாய்வு அறிக்கையின் அடிப்படையிலேயே மூன்று நீதிபதிகளும் ராமர் கோயில் இருந்தது என்கிறார்கள். இது பற்றி என்ன சொல்கிறீர்கள்?” சிபலின் பதில்: ” உச்சநீதிமன்றம் விசாரிக்கும் போது எல்லாம் சரியாகும்” // என்ன சர்ச்சை? அதுதான் தெளிவாக சொல்லி ஆகிவிட்டதே? இது சர்ச்சைக்குரிய முடிவு, சர்ச்சைக்குரிய முடிவு என்று சொல்லி சொல்லியே ஒரு சர்ச்சையை உண்டாக்கப் பார்க்கிறார்கள் இந்த கோயபல்ஸ்கள்!

    முரண்பாடுகள்:
    // நீதிமன்றத் தீர்ப்புகளை விமர்சிக்கக் கூடாது என்று சொல்லும் அதே வழக்கறிஞர் தான், அதிமேதாவியாக பேட்டி கொடுத்தார். ஒருவேளை அவர் எதிர்பார்த்த தீர்ப்பு கிடைக்காமல் போயிருக்கலாம்; ‘மத நம்பிக்கை சட்டத்தை தோற்கடித்துவிட்டது’ என்று புலம்பிக்கொண்டே இருந்தார். // நீதிமன்றத்தில் தீர்ப்பு வந்தாயிற்று, அதை ஏற்றுக்கொள்வதுதான் சரியான அணுகுமுறை என்று எழுதுகிறீர்கள். மிகவும் சரி. ஆனால் இதே தளத்தில் தீர்ப்பு வருவதற்கு ஓரிரு நாள் முன்பு கூட “ஹிந்துக்களுக்கு” ஆதரவாக தீர்ப்பு வராவிட்டால் அந்த தீர்ப்பை நிராகரிப்போம் என்று நிறைய பேர் பொங்கினார்கள். இந்த அணுகுமுறையை ஒரு சாராருக்கு மட்டும் எடுத்துச் சொன்னால் எப்படி? இன்று கூட “கும்மட்டம் இடிப்பு” வழக்கில் வரும் தீர்ப்பை ஏற்றுக் கொள்வோம் என்ற மனநிலைதான் இந்த தளத்தின் பெரும்பாலான வாசகர்களிடம் இல்லை!

    // பாபரின் படைத்தளபதியால் இடிக்கப்பட்ட ராமர் கோயிலை மீண்டும் அமைப்பது இவருக்கு தவறு என்று தோன்றுகிறது; ஆனால், 1992 -ல் இடிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய கட்டடம் மட்டும் அங்கு எப்பாடுபட்டாவது கட்டப்பட வேண்டும். 1992 நிகழ்வும் சரித்திரம் தானே! அதை மட்டும் மாற்ற எண்ணலாமா? // பாபர் காலத்து விழுமியங்கள் வேறு, இன்றைய விழுமியங்கள் வேறு என்று சொல்ல வேண்டிய அவசியம் இருப்பது துரதிருஷ்டம். சித்தூர் ராணி பத்மினி கணவன் இறந்த பிறகு தற்கொலை செய்துகொள்ளவில்லையா, ரூப் கன்வார் விஷயத்தில் மட்டும் ஏன் குதிக்கிறீர்கள் என்று கேட்பீர்களா?

    // 1992-லேயே இல்லாமலாகிவிட்ட கட்டட இடிப்பு… // என்று எழுதி இருப்பதைப் பார்த்து புன்னகைத்தேன். இல்லாத கட்டிடத்தை இழுக்கக்கூடாது என்றால் 1528-இலோ, அதற்கு முன்போ, இடிந்து போன/இடிக்கப்பட்ட “கட்டிடத்தைப்” பற்றி எப்படி வரிந்து கட்டிக்கொண்டு எழுதுகிறீர்கள்? அதை மீண்டும் கட்ட வேண்டும் என்று “பல நூறு ஆண்டுகளாக” என்ன போராட்டம்? முடிந்த வரையில் இந்த மாதிரி inconsistency-களைத் தவிர்க்கலாம்.

    பழுத்த அனுபவசாலியான மலர்மன்னன் // உண்மைக் கலப்பில்லாத போலி வரலாறு பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுவிட்டது // என்று எழுதி இருக்கிறார். எதை குறிப்பிடுகிறார் என்று கொஞ்சம் விளக்க முடியுமா?

  5. After going through the arguements and counter arguments in all the media I am reminded of the lamentation of the POET (ROMAN) Martial about a case. and his frustration: “Mine is not a lurid criminal case,Or anything of that sort.I claim my neighbour stole three goats.That is all you needprove in the court.So Why all theselearned anecdotes? Get on to those three goats” He lamented on the habits of wrangling on p rocedure and the defence shifting the argument by introducing experts tog ive evidence against the claims of the plaintiff by raising issues of the origin of the goats etc.The title has been decided and people want to distract the people and enrage the communities by indulging in these arguments.Let us bury this and get on with the task of educating the masses about more important hings.

  6. //பழுத்த அனுபவசாலியான மலர்மன்னன் ” உண்மைக் கலப்பில்லாத போலி வரலாறு பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுவிட்டது” என்று எழுதி இருக்கிறார். எதை குறிப்பிடுகிறார் என்று கொஞ்சம் விளக்க முடியுமா?- ஸ்ரீ ஆர்.வி//
    என் அன்புள்ள நண்பரே,

    இத்ற்கு தனிக் கட்டுரைதான் எழுத வேண்டும். இப்போதுதான் வாஜித் அலி ஷா பற்றி ஒரு கட்டுரை எழுதி முடித்தேன். அது நம் வரலாற்றுப் பாடப் புத்தகத்தில் இடம் பெற வேண்டிய சங்கதி. உங்கள் பாட புத்தகத்தில் படித்ததுண்டா? அதை விடுங்கள், வேறு சில சொல்கிறேன்.

    ஹிந்துஸ்தானம் துண்டாடப்பட்ட கோர சம்பவம் ஏதோ சுமுகமான பாகப் பிரிவினை போலவே நமது வரலாற்றுப் பாடத்தில் விவரிக்கப்படுகிறது.
    1857-முதல் சுதந்திரப் போர் பற்றிய பாடத்தில் பகதூர் ஷாவை ஒரு வீரர்த் தியாகியைப்போல் கூசாமல் சித்திரித்திருப்பது, ஹிந்துஸ்தானத்தை விட்டு வெளியேற பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் முடிவு செய்தமைக்கான முழுக் காரணங்களையும், குறிப்பாக மும்பை கடற்படைத் தளத்தில் நம் கடற் படையினர் தெரிவித்த எதிர்ப்பு போன்ற சம்பவங்களைப் பதிவு செய்யாமல் அரசியல் கட்சியாகிவிட்ட காங்கிரசுக்கே விடுதலையின் முழுப் பெருமையையும் அளித்தது, விடுதலைப் போரில் சாவர்கரின் பங்களிப்பை மறைத்தது மட்டுமின்றி இரண்டாம் உலகப் போரின் போது மிகுந்த முன் யோசனையுடன் ஹிந்துக்களைப் பெருமளவில் ராணுவத்தில் சேருமாறு பிரசாரம் செய்து ஹிந்துக்கள் அதிக அளவில் ராணுவத்தில் சேர அவர் காரணமாக இருந்ததை மறைத்தது, வந்தேமாதரம் விவகாரம் (வந்தேமாதரம்: எதிர்ப்பிலே வளர்ந்த இதய கீதம் என்ற தலைப்பில் தனியாகவே ஒரு புத்தகம் எழுதி வருகிறேன்!) என எவ்வளவோ சொல்லிக்கொண்டே போகலாம். தேசப் பிரிவினையின்போது நமது ராணுவத்திலிருந்த முகமதியர் அநேகமாக அனைவருமே பாகிஸ்தான் ராணுவத்தை உருவாக்கச் சென்றுவிட்டனர். நமது ராணுவத்தில் ஹிந்துக்கள் கணிசமாக இல்லாமற் போயிருந்தால் அன்று நிலைமை என்னவாகி யிருக்கும் எனபதைச் சொல்லத் தேவையில்லை! இத்ற்காகவே சாவர்கர் பற்றி ஒரு தனிப் பாடம் போட்டிருக்க வேண்டாமா? கல்வி கற்கும் பருவத்திலேயே குழந்தைகள் தேச பக்தியுடனும் கடமையுணர்வுடனும் வளர்வதற்கு இவையெல்லாம் கற்பிக்கப்படுவது மிகவும் அவசியம் அல்லவா? இன்று நம் ராணுவத்தில் பல பிரிவுகளிலும் ஆட்களுக்குப் பஞ்சம் ஏற்பட்டு வருகிறது. பள்ளிகளில் பாரதத்தின் உண்மையான வரலாறு கற்பிக்கப்படுமானால் சுய ஆதாயங்களை எடைபோடாமல் தேசத்திற்காகத் தன்னை அர்ப்பணிக்கும் வேகமுள்ள தலைமுறைகள் தோன்றும்.
    -மலர்மன்னன்

  7. Dear RV,

    “உண்மைக் கலப்பில்லாத போலி வரலாறு பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுவிட்டது” . I am trying to write whatever come to my mind from Eminent Historians. Modern India Class 12th book published by NCERT. You can read about the role Syed Ahmed Khan in the Aligarh Movement. How every paragraph talks about it is due to “Unnamed” Hindu historians that Muslims are alienated and resulted in Pakistan. Not a single word on Volumes and Volumes written by Muslim Historians. How they shaped the muslim thoughts etc..

    D. N Jha in Ancient India following descriptions are there:

    Lord Indra is rowdy and immoral. Krishna has questionable personal record.

    Can the same historians use the same terms towards Christians and Islam ?

    Bhakthi movement is nothing but extension of feudal system.. Krishna could be the greek God Herakles .. Shri ( Goddess Lakshmi ) may be non aryan fertility Goddess. Indian arts copied from Persian art movement..

    I can document thousand such frivolous distortion of history. Please, if all the above can be historically arrived at ( I am not talking about Scientifc ) atleast we have a ethical Historian . All the above statements are just statements. For example, Krishna could be the Greek God because Greek Ambassador wrote about worship of Herakles in Mathura.. Amazing insight..

    Lot more can be written.. Since I know you read a lot ( from your blog ) I recommend you can start with Eminent Historians by Arun Shourie.

    Regards
    S Baskar

  8. அன்புள்ள ஆர்.வி.
    தங்கள் விமர்சனத்திற்கு நன்றி.

    உங்கள் ‘முரண்பாடுகள்’ தொடர்பான எனது விளக்கங்கள் இதோ…

    //நீதிமன்றத்தில் தீர்ப்பு வந்தாயிற்று, அதை ஏற்றுக்கொள்வதுதான் சரியான அணுகுமுறை என்று எழுதுகிறீர்கள். மிகவும் சரி. ஆனால் இதே தளத்தில் தீர்ப்பு வருவதற்கு ஓரிரு நாள் முன்பு கூட “ஹிந்துக்களுக்கு” ஆதரவாக தீர்ப்பு வராவிட்டால் அந்த தீர்ப்பை நிராகரிப்போம் என்று நிறைய பேர் பொங்கினார்கள். இந்த அணுகுமுறையை ஒரு சாராருக்கு மட்டும் எடுத்துச் சொன்னால் எப்படி? இன்று கூட “கும்மட்டம் இடிப்பு” வழக்கில் வரும் தீர்ப்பை ஏற்றுக் கொள்வோம் என்ற மனநிலைதான் இந்த தளத்தின் பெரும்பாலான வாசகர்களிடம் இல்லை!//

    அன்றும் இன்றும் என்றும் அயோத்தி வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு கூற இயலாது என்றே தன்மானமுள்ள ஒவ்வொரு ஹிந்துவும் கூறுவார். ஏனெனில். இது மத நம்பிக்கை தொடர்பான விஷயம். கடவுள் ராமன் பிறந்த இடத்தை இப்போதைய எத்தகைய ஞானிகளாலும் கேள்வி கேட்க முடியாது. எனவே தான், தமிழ் ஹிந்து வாசகர்கள் பொங்கினார்கள். அதே சமயம், நீதிமன்றத் தீர்ப்பை இப்போது பெரும்பாலோர் ஆதரிக்கக் காரணம், ஹிந்துக்களின் நம்பிக்கைக்கு நீதிபதிகள் மதிப்பளித்திருப்பதே. எனவே தான் மூன்றில் ஒரு பங்கு இடத்தை நீதிமன்றம் தாரை வார்ப்பதாக அறிவித்தும் ஹிந்துக்கள் நிதானம் காக்கிறார்கள்.

    இடிக்கப்பட்டது பாபர் மசூதி அல்ல என்பதே ஹிந்துக்களின் நிலை. அடிமைச் சின்னம் அகற்றப்பட்டது தொடர்பான வழக்கில் வரும் தீர்ப்பை விடுதலைப் போராட்டம் தொடர்பான வழக்காகவே காண வேண்டும். அதில் யாரேனும் தண்டிக்கப்பட்டால், தண்டிக்கப்படுபவர்கள் குற்றவாளிகள் அல்ல; உண்மையில் அவர்கள் தன்மானம் காத்த வீரர்கள் என்ற வருங்கால வரலாறு பதிவு செய்யும்.

    //பாபர் காலத்து விழுமியங்கள் வேறு, இன்றைய விழுமியங்கள் வேறு என்று சொல்ல வேண்டிய அவசியம் இருப்பது துரதிருஷ்டம். சித்தூர் ராணி பத்மினி கணவன் இறந்த பிறகு தற்கொலை செய்துகொள்ளவில்லையா, ரூப் கன்வார் விஷயத்தில் மட்டும் ஏன் குதிக்கிறீர்கள் என்று கேட்பீர்களா?//

    சரித்திரத்தின் போக்கை யாராலும் மாற்ற முடியாது. இனி முஸ்லிம்களும், ஆட்சியாளர்களும் நினைத்தாலும் அயோத்தியில் ‘குறிப்பிட்ட அந்த இடத்தில்’ மீண்டும் மசூதி கட்ட முடியாது. இதை முஸ்லிம்களும் உணர்ந்தே உள்ளனர். நிதர்சனத்தை உணர்ந்தே அலஹாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. பாபர் காலத்தில் எந்த விழுமியமுமே இல்லை என்பது தான் இடிப்புக்கு காரணம். அவமானத்தைப் போக்க 1992-ல் நிகழ்ந்த கரசேவையை அத்துடன் ஒப்பிட முடியாது; கூடாது.

    தற்போதைய போலி மதச்சார்பற்றவர்கள் நடத்தும் நாடகங்களுக்கு அவர்கள் பாணியிலேயே பதில் சொல்ல வேண்டி இருப்பதால் தான் இந்த ஒப்பீடே எழுந்தது. நாம் இப்போது எழுதிக்கொண்டிருக்கும் தருணம் கூட- மறுநிமிடம் சரித்திரம் தான். சரித்திர உணர்வு என்பது நமது வீழ்ச்சிகளிலிருந்து பாடம் கற்பது; நமது சாதனைகளிலிருந்து பெருமிதம் கொள்வது. உடன்கட்டை ஏறுவதும் கரசேவையும் இரு துருவங்கள். இரண்டையும் ஒப்பிட முடியாது; கூடாது.
    // 1992-லேயே இல்லாமலாகிவிட்ட கட்டட இடிப்பு… என்று எழுதி இருப்பதைப் பார்த்து புன்னகைத்தேன். இல்லாத கட்டிடத்தை இழுக்கக் கூடாது என்றால் 1528-இலோ, அதற்கு முன்போ, இடிந்து போன/இடிக்கப்பட்ட “கட்டிடத்தைப்” பற்றி எப்படி வரிந்து கட்டிக்கொண்டு எழுதுகிறீர்கள்? அதை மீண்டும் கட்ட வேண்டும் என்று “பல நூறு ஆண்டுகளாக” என்ன போராட்டம்? முடிந்த வரையில் இந்த மாதிரி inconsistency-களைத் தவிர்க்கலாம்.//

    நண்பர் ஆர்.வி, தமிழ் ஹிந்துவை தொடர்ந்து வாசித்து வந்திருந்தால் அவருக்கு இது inconsistency ஆகத் தோன்றி இராது. நமது தன்மானச் சின்னமான கோயில் இடிக்கப்பட்டதும் (1528) அவமானச் சின்னம் இடிக்கப்பட்டதும் (1992) ஒன்றல்ல.

    பாபரின் தளபதி தங்கள் ஆதிக்கச் சின்னமாக ராமர் கோயிலை இடித்தார். அங்கு தங்கள் மேலாதிக்கத்தை நிறுவ, பாபர் மசூதி என்ற பெயரில் ‘இஸ்லாமிய கோட்பாடுகளுக்கு முரணாக’ ஒரு கட்டடத்தை எழுப்பினார் மீர்பாகி. அதை நீக்க வேண்டும் என்று அன்று முதல் ஹிந்துக்கள் போராடி வந்துள்ளனர். பல்லாயிரம் பேர் அப்போராட்டத்தில் பலியாகி உள்ளனர். இறுதியாக நடந்துவரும் போராட்டக் காலத்தில் நாம் இருக்கிறோம்.

    நம் கண் முன்னால் அவமானச் சின்னம் அகற்றப்பட்டது. அதுவும் எதிர்பாராத கரசேவகர் கொந்தளிப்பால் நடந்தது. (உ.பி. முதல்வர் கல்யாண் சிங் அரசை மத்திய அரசு டிஸ்மிஸ் செய்துவிட்டது என்ற தகவல் பரவியதால் ஏற்பட்ட கொந்தளிப்பான சூழலில் தான் அந்தக் கட்டடம் இடிக்கப்பட்டது). அந்த வழிமுறையை நாம் ஏற்கவில்லை. ஆயினும் எது நடந்தாக வேண்டுமோ அது நடந்துவிட்டது. எப்படி இருந்தாலும் ஒருசமயம் அந்தக் கட்டடம் இடிக்கப்பட்டாக வேண்டியது தானே. இதில் எந்த முரண்பாடும் இல்லை. அந்த கரசேவை தான், தற்போதைய தீர்ப்புக்கு அடிநாதம் என்றால் மிகையில்லை.

    கரசேவையில் சர்ச்சைக்குரிய கட்டடம் (கும்மட்டம்) இடிக்கப்பட்டது தொடர்பான வழக்கு அல்ல, தற்போது அலஹாபாத் நீதிமன்றத்தில் நடந்தது. அது தனியே நடக்கிறது. அது பற்றி எழுத வேண்டுமானால், தனியே ஒரு தொடர் எழுத வேண்டியிருக்கும். அதுவல்ல பிரச்னை. நாட்டில் அமைதி நிலவ வேண்டும் என்று உபதேசம் செய்துகொண்டே, இடிக்கப்பட்ட கட்டடத்தை பிரதானமாகக் காட்டி (இதில் தான் inconsistency உள்ளது) முஸ்லிம்களை உசுப்பிவிடும் கீழ்த்தரமான தந்திரம் நமது ஊடகங்களுக்கு எதற்கு என்பதே எனது கட்டுரையின் பிரதானக் கேள்வி. நன்கு ஊன்றி கவனித்தால் அது புரியும்.

    மற்றபடி, இந்த விளக்கங்களை அளிக்க ஏதுவாக விமர்சனம் செய்த ஆர்.வி.க்கு நன்றி. கட்டுரையின் இறுதிப்பகுதியையும் படித்துவிட்டு அவர் தனது கருத்துக்களைத் தெரிவிக்க வேண்டும். இது எனது வேண்டுகோள்.
    – சேக்கிழான்.

  9. //குறிப்பாக மும்பை கடற்படைத் தளத்தில் நம் கடற் படையினர் தெரிவித்த எதிர்ப்பு போன்ற சம்பவங்களைப் பதிவு செய்யாமல் அரசியல் கட்சியாகிவிட்ட காங்கிரசுக்கே விடுதலையின் முழுப் பெருமையையும் அளித்தது, விடுதலைப் போரில் சாவர்கரின் பங்களிப்பை மறைத்தது மட்டுமின்றி இரண்டாம் உலகப் போரின் போது மிகுந்த முன் யோசனையுடன் ஹிந்துக்களைப் பெருமளவில் ராணுவத்தில் சேருமாறு பிரசாரம் செய்து ஹிந்துக்கள் அதிக அளவில் ராணுவத்தில் சேர அவர் காரணமாக இருந்ததை மறைத்தது//

    இந்திய தேசிய காங்கிரஸ் 1885 முதல் இன்று வரை ஒரு போதும் சுதந்திரத்துக்காக போராடியதே இல்லை. இதில் திலகர் மற்றும் அரவிந்தர் மட்டும்தான் exceptions. சுபாஷ் சந்திர போசை இவர்கள் ஒரு நாளும் மதித்ததில்லை. அப்படி இருக்க சாவர்கரையா மதிப்பார்கள்.

  10. Dear RV,

    Please read Arun Shourie’s “eminent historians”.

    You will know how these marxist historians have concealed the real history of India.

  11. சேக்கிழான், // எனவே தான், தமிழ் ஹிந்து வாசகர்கள் பொங்கினார்கள். அதே சமயம், நீதிமன்றத் தீர்ப்பை இப்போது பெரும்பாலோர் ஆதரிக்கக் காரணம், ஹிந்துக்களின் நம்பிக்கைக்கு நீதிபதிகள் மதிப்பளித்திருப்பதே. // ஒரு தகராறு, இரண்டு தரப்பு. அவர்களுக்குள் தீர்த்துக்கொள்ள முடியவில்லை, கோர்ட்டுக்கு போகிறார்கள். தனக்கு சாதகமாக தீர்ப்பு வந்தால் ஏற்றுக் கொள்வேன், இல்லை என்றால் மறுப்பேன் என்று ஒரு தரப்பு சொல்லுமானால் கோர்ட்டுக்கும் கேசுக்கும் arbitration-க்கும் பொருளே இல்லையே? எனக்கு பாதகமாக தீர்ப்பு வந்தால் நான் ஏற்கமாட்டேன், ஆனால் உனக்கு பாதகமாக தீர்ப்பு வந்தால் நீ ஏற்க வேண்டும் என்று சொல்லப்படும் அறிவுரையில் உள்ள அடிப்படை முரண்பாடு உங்களுக்கு புரியவில்லையா? எப்படி என் தரப்பு சரி என்று நீங்கள் நினைக்கிறீர்களோ, அதே போல தன் தரப்பு சரி என்று வக்ஃப் போர்டும் நினைக்கலாம் இல்லையா? இதே லாஜிக்கை மறு தரப்பும் பயன்படுத்தி எனக்கு சாதகமாக தீர்ப்பு இல்லை, நான் ஏற்றுக்கொள்ள முடியாது என்று சொன்னால்? மன்னிக்கவும், எனக்கு வேண்டியதை நான் செய்வேன், process எனக்கு முக்கியமில்லை, நான் ஏற்றுக்கொண்டிருக்கும் மார்க்கம்தான் சரி, நான் சொல்வதுதான் சட்டம், நீதி, நியாயம், அதன்படிதான் அடுத்த தரப்பு செய்ய வேண்டும் என்பதுதான் இந்த “கட்டடத்தை” இடித்த பாபரின் “விழுமியம்”. அதை நான் நிராகரிக்கிறேன். பாபரின் செயலை வன்மையாக எதிர்க்கும் நீங்கள் அப்படி எதிர்ப்பதற்காக அவரது வால்யூ சிஸ்டத்தையே பயன்படுத்தினால் எப்படி? தவறான வால்யூ சிஸ்டத்தால் தவறான செயல்கள் நடந்தன. அந்த தவறை சரி செய்கிறேன், ஆனால் அந்த வால்யூ சிஸ்டம்தான் எனக்கு வேண்டும் என்றால்!

  12. RV அவர்களே இப்போது அந்த கும்மட்டம் இருந்திருந்தால் தீர்ப்பு என்னவாக இருந்திருக்கும் என்று எண்ணுகிறீர்கள்?

  13. //தவறான வால்யூ சிஸ்டத்தால் தவறான செயல்கள் நடந்தன. அந்த தவறை சரி செய்கிறேன், ஆனால் அந்த வால்யூ சிஸ்டம்தான் எனக்கு வேண்டும் என்றால்!//
    பாடற மாட்டை பாடி கறக்கணும் ஆடற மாட்டை ஆடி கறக்கணும்

  14. அன்புள்ள ஆர்.வி.

    தவறான நபர்களை ஒப்பிடக் கூடாது. ஆக்கிரமிப்பாளன் பாபருடன் அவதார புருஷன் ராமனை ஒப்பிடவே கூடாது. நாடு விடுதலை பெற்றவுடன் யூனியன் ஜாக் கொடி அகற்றப்பட்டு நமது தேசியக் கொடி ஏற்றப்பட்டது போல, சுதந்திரம் பெற்றவுடன் சோமநாதர் ஆலயம் பட்டேலால் புனரமைக்கப்பட்டதுபோல, அயோத்தி ராமர் கோயிலும் கட்டப்பட்டிருக்க வேண்டும். ஆனால், உங்களைப் போலவே நமது புதிய இந்திய ஆட்சியாளர்களும் இருந்த காரணத்தால் தான், ராமர் கோயில்- விவகாரமானது.

    திரேதா யுகத்து ராமனுக்கு தற்போதைய நீதிபதிகளால் கண்டிப்பாக பிறப்புச் சான்றிதழ் வழங்க முடியாது. இதில் எந்த சட்டத்திற்கும் வேலை இல்லை. இதைச் சொல்வது நீதிமன்றத்தை அவமதிப்பதாகாது. இஸ்லாமியர்களுக்கு வழங்கப்படும் சட்டத்தை மீறிய சலுகைகளைச் சுட்டிக் காட்டுவது (ஷாபானு வழக்கு) அதே போன்ற சட்டமீறல்களை ஹிந்துக்களுக்கும் வழங்குமாறு கோருவதல்ல; நமது மக்களுக்கு நாம் எப்படி பாரபட்சமாக நடத்தப்படுகிறோம் என்பதை சுட்டிக் காட்டவே.

    வழக்கிற்கு சம்பந்தமில்லாத வக்பு வாரியத்தையும் ராமர் பக்தர்களையும் நீங்கள் ஒப்பிட்டதில் இருந்தே நீங்கள் ‘தெளிவான குழப்ப’த்துடன் இருப்பது தெரிகிறது. குழப்பத்தைத் தெளிவிக்க முடியும். ‘தெளிவான குழப்பத்தை’த் தெளிவிப்பது சற்று சிரமம் தான்.

    இஸ்லாமியர்களின் நம்பிக்கைக்காக ஷாபானு வழக்கிற்கு விரோதமாக புதிய சட்டம் நிறைவேற்றிய புத்திசாலிகள், உச்சநீதிமன்றத்திலும் ராமர் கோயிலுக்கு ஆதரவான தீர்ப்பு வந்தால் என்ன செய்வார்கள்? அப்போதும் ‘வால்யூ சிஸ்டம்’ பேசிக்கொண்டு நாம் இருக்க வேண்டும் என்பது உங்கள் எதிர்பார்ப்பாக இருக்கலாம். மன்னிக்கவும், நான் அப்படி நினைக்கவில்லை. ஹிந்துக்களுக்கு நீதியையும், நடுநிலையையும் போதிக்க வேண்டாம் என்பது எனது பணிவான வேண்டுகோள்.

    நாட்டுப் பிரிவினை வழங்கிய ஆழமான காயங்களை மீறியும், உங்களைப் போன்றவர்களால் எப்படி இவ்வாறு விதண்டாவாதம் செய்ய முடிகிறது என்று புரியவில்லை. பரவாயில்லை, நீங்கள் மதச்சர்பற்றவராகவே, நீதிமானாகவே இருங்கள். கண்ணன் காட்டிய வழியில் ஹிந்துக்கள் ராமர் கோயிலைக் கட்டிக் காட்டுவார்கள்.
    -சேக்கிழான்.

  15. நாடு முழுமைக்கும் பொது சிவில் சட்டம் கொண்டு வர வேண்டும் என்று அரசியல் நிர்ணயச் சட்டம் கூறியுள்ளதே, அதை என் அமுல் படுத்தவில்லை?
    முச்லீம்களுக் காகத்தானே?
    அரசியல் சட்டம் சிபாரிசு செய்தும் நாடு முழுமைக்கும் பசுவதை தடைச் சட்டம் ஏன் அமல் படுத்தவில்லை ? முச்லீம்கலை தாஜா செய்யத்தானே? காஷ்மீருக்கு தனி அந்தஸ்து,காஷ்மீர் பெண்கள் மற்ற மாநில ஆண்களை மணந்தால் அவர்களுக்கு சொத்துரிமை கிடையாது, காஷ்மீரில் மற்ற மாநிலத்தைச் சேர்ந்தவர்கள நிலம் வாங்க முடியாது,அங்கு ஷரியா சட்டம், நாடாளு மன்றம் அந்த மாநிலத்துக்கு சட்டம் இயற்ற முடியாது. இந்த ‘சம நீதி’ (செமநீதி) எல்லாம் பற்றி ஆர்ர் வீ பேசுவாரா?

  16. //ஒரு தகராறு, இரண்டு தரப்பு. அவர்களுக்குள் தீர்த்துக்கொள்ள முடியவில்லை, கோர்ட்டுக்கு போகிறார்கள் – ஆர்.வி..//

    ஸ்ரீ ராம ஜன்ம பூமி வழக்கை பங்காளிகளுக்கிடையிலான ஒரு சொத்து தகராறு என்கிற கண்ணோட்டத்துடன் பார்ப்பதால்தான் இவ்வாறு எண்ணத்
    தோன்றுகிறது. இதை அபகரிக்கப்பட்ட உடைமையை உரிமையாளர் மீட்டெடுப்பதற்கான வழக்கு என்ற கண்ணோட்டத்தில் பார்ப்பதே சரியான பார்வையாக இருக்கும்.

    தேசிய அவமானச் சின்னமாக, பர்ர்க்கிறபொதெல்லாம் சொரணையுள்ள ஹிந்துக்களுக்கு தலைக் குனிவாக இருந்து வந்த பாப்ரி மண்டபம் தரை மட்டமாக்கப்பட்டதால்தான் அங்கு அகழ்வாராய்ச்சியை மேற்கொண்டு ஆலயத்தின் இடிபாடுகளைக் கண்டறிய முடிந்தது. பாப்ரி கட்டிடம் இடிபடாமல் நீடித்திருந்தால் நீதிமன்றத்தால் அடிமனை உரிமை சம்பந்தமாக ஒரு தெளிவான தீர்ப்பை அளித்திருக்க இய்லாது. பாப்ரி கட்டிடம் இடிபடாத நிலை இருந்ததால்தான் விடுதலைக்குப் பிறகும் அறுபது ஆண்டுகள் ஜன்மஸ்தான் தொடர்பாகப் பலவாறான வழக்குகள் நீடித்தன. பாப்ரி கட்டிடம் தரை மட்டமான பிறகு அரசியல் காரணங்களால் வலிந்து கால தாமதம் செய்யப்பட்டபோதிலும் ஒருவாறாகத் தீர்ப்பு வழங்குவது சாத்தியமாயிற்று.

    இந்த வழக்கு பாப்ரி கட்டிடம் இடிக்கப்பட்டது சரியா தவறா என்பது அல்ல. அடிமனை யாருக்குச் சொந்தம் என்பதுதான் வழக்கின் சாரம். வக்பு போர்டுக்கு அடிமனை சொந்தமில்லை என்பது தீர்ப்பில் தெளிவாகவே உள்ளது. வக்புக்கு அடிமனையில் எவ்வித பாத்தியதையும் இல்லாத போதிலும் மூன்றில் ஒரு பங்கை அதற்கு தாரை வார்த்துக் கொடுக்க நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை. ஆனால் இரு சமூகங்களுக்கிடையே சுமுகமான உறவு நிலவ வேண்டும் என்பதற்காக உயர் நீதிமன்றம் கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைக்க முன்வந்துள்ளது போலும். உச்ச நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படுமானால் அங்கு உயர் நீதி மன்றத் தீர்ப்பின் மீதான விவாதம்தான் நடைபெறுமே யல்லாமல் உயர் நீதி மன்றம் கண்டுணர்ந்த உண்மைகளின் மீதல்ல. ஆகவே அடிமனை மீது எவ்வித பாத்தியதையும் இல்லாத வக்பு வாரியத்திற்கு மூன்றிலொரு பாகம் கொடுக்க முகாந்திரம் இல்லை என்றே தீர்ப்பாகும் என எதிர் பார்க்கலாம்.

    எனவே பாப்ரி கட்டிடம் இடிக்கப்பட்டது சரியா தவறா என்கிற வழக்கு நடைபெற்றுத் தீர்ப்பு வருகிற்போது ஸ்ரீ ஆர்.வி. மேற்படி தமது ’விழுமியங்கள்’ பற்றிய கேள்விகளை எழுப்புவதே பொருத்தமாக இருக்கும். அந்தச் சமயத்தில் நம்மாலும் அவருக்குச் சரியான சமாதானம் அளிக்க முடியும். ’உண்மைக் கலப்பில்லாத போலி வரலாறு பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுவிட்டது” என்ற எனது தகவலுக்கு என்னிடம் விளக்கம் கேட்டு என்னைவிடச் சிறப்பாக ஸ்ரீ பாஸ்கர், முத்துக்குமார், குமுதன் ஆகியோர் அளித்துள்ள விளக்கங்களால் அமைதியடைந்துள்ள ஸ்ரீ ஆர்.வி., அதேபோல் அவரது ’விழுமியங்கள்’ பற்றிப் பின்னர் நாம் அளிக்கவிருக்கும் விளக்கங்களால் சாந்தியடைவார் என எதிர்பார்ப்போம்.

    முதலில் ஓர் அடாவடிச் செயலை, அத்து மீறலை, அநாகரிகச் செயலை, ’விழுமியம்’ என்ற நல்லொழுக்கம் சார்ந்த செயல்பாட்டின்கீழ் கொண்டு வருவதே தவறான பார்வை அல்லவா? காலம் எதுவானால் என்ன, முறைகேடு முறைகேடே அல்லவா? எனக்குச் சொந்தமான் இடத்தை நான் பலவீனனாக இருந்தபோது ஒரு துஷ்டன் ஆக்ரமித்துக்கொண்டு அங்கிருந்த எனது கட்டிடத்தை இடித்துவிட்டுத் தன்க்கென்று ஒரு கட்டிடம் கட்டிக் கொள்கிறான். காட்டு தர்பார் முடிவு பெற்றபின் நியாயம்கேட்டுப் பழிகிடக்கிறேன். எனது பொறுமையை பலவீனம் எனக் கருதி அலட்சியம் செய்ததால் பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு என்று உணர்த்துவதற்காக நானே ஆக்ரமிப்பாளனின் கட்டிடத்தை அகற்றி எனது கட்டிடத்தை மீண்டும் கட்டிக்கொள்ள முடிவு செய்துள்ளேன். இதற்குத் தடையாக ஆக்ரமிப்பாளனின் வாரிசாகத் தங்களைக் கருதிக் கொள்வோர், நான் அவர்களுடைய கட்டிடத்தை இடித்துவிட்டதாக வம்பு செய்கின்றனர். அவர்களுக்கு செல்வாக்கு இருப்பதால் குற்றவாளிக் கூண்டில் நான் நிறுத்தப் பட்டுள்ளேன். நீதி தேவதையிடம் என் த்ரப்பு நியாயத்தை எடுத்துக் கூறுகிறேன். இடையில் விழுமியங்கள் எங்கே வந்தன, அதுவும் ஆக்ரமிப்பாளனுக்குச் சாதகமாக?
    -மலர்மன்னன்

  17. சேக்கிழான்,

    // தவறான நபர்களை ஒப்பிடக் கூடாது. ஆக்கிரமிப்பாளன் பாபருடன் அவதார புருஷன் ராமனை ஒப்பிடவே கூடாது. // என்ன இது இப்படி குளறுபடியாக புரிந்துகொண்டிருக்கிறீர்கள்? ராமனின் வால்யூ சிஸ்டம் பற்றி பேச்சு எழவே இல்லையே? பாபரின் வால்யூ சிஸ்டத்தால் விளைந்த தவறுகளை நீக்க நீங்கள் – கவனிக்கவும், நீங்கள் – அதே வால்யூ சிஸ்டத்தை பயன்படுத்துகிறீர்களோ என்றல்லவா கேட்டிருந்தேன்? ஆக்கிரமிப்பாளன் பாபரின் ஆக்கிரமிப்பை களைய கும்பட்டத்தை ஆக்கிரமிப்பதற்கு நீங்கள் ஆதரவு தருகிறமாதிரி தெரிகிறது, மேலும் நீதிமன்றம் “ஹிந்துக்களுக்கு” எதிராக தீர்ப்பளித்தால் அதை ஏற்க மாட்டேன், அப்போது ஆக்கிரமிப்பு சரியே என்று சொல்கிற மாதிரி இருக்கிறது. இந்த முரண்பாட்டை நீங்கள்தான் விளக்க வேண்டும் என்றல்லவா கேட்டிருந்தேன்? இதில் ராமன் எங்கே வந்தான்? ராமன்-பாபர் ஒப்பீடு எங்கிருந்து வந்தது?

    நேரம் இருக்கும்போது மேலும் எழுதுகிறேன்.

  18. அன்புள்ள ஆர்.வி.

    யாருடைய நிராகரிப்புக்காகவும், ஆதரவுக்காகவும் ஹிந்துத்துவம் காத்திருக்கவில்லை. இணையதளப் பின்னூட்டங்கள் அதிகம் பெறவோ, அதிக கவனிப்பைப் பெறவோ, ஹிந்துத்துவத்தை புதுவகையாக பிரசிங்கிக்க வேண்டிய அவசியமும் எனக்கு இல்லை. நீங்கள் நிராகரிப்பதால் ஹிந்துத்துவத்திற்கு இழப்பு ஏதும் இல்லை.

    -சேக்கிழான்.

  19. என் அன்பார்ந்த ஸ்ரீ ஆர்.வி.,
    ஹிந்துத்துவத்தை ஏன் நிராகரிக்கிறேன் என்று ஒரு ஹிந்துவான நீங்கள் எழுதியிருப்பதாக அறிவிக்கக் கேட்டு மிகுந்த மன வேதனை அடைகிறேன். நீங்கள் எதனை ஹிந்துத்துவம் என்று கருதி அதனை நிராகரிப்பதாகக் கூறுகிறீர்கள் என்பதை அறியேன். நீங்களாகச் சில அடாத செயல்களை ஹிந்துத்துவம் என்பதாக முடிவு செய்து உங்களுடைய நேரிய, நாகரிக மனப்போக்கின் காரணமாக ஹிந்துத்துவத்தை நிராகரிப்பதாகக் கூறுவதாகவே கருதுகிறேன். ஒரேயொரு ஹிந்து ஹிந்துத்துவத்தை நிராகரிப்பதாகக் கூறினாலும் அதனைப் பேரிழப்பாகவே கருதுகிறேன். ஏனெனில் ஹிந்துத்துவத்தைப் புரிந்துகொண்டு அதன் பிறகும் ஒருவர் அத்னை நிராகரிப்பதாக்க் கூறுவாரேயானால் அவர் ஹிந்து சமயத்தை விட்டு விலகி ஹிந்துஸ்தானத்திற்கு வெளியிலிருந்து வந்த சமயங்களுள் ஒன்றுடன் ஒன்றிப் போனவராகவே இருக்கக்கூடும். ஹிந்துஸ்தானத்தில் ஹிந்துக்கள் மிகப் பெரும்பான்மையினராக இருந்த போதிலும் இன்றுவரை அவர்களுடைய நலனுக்கு பாதகமான செயல்கள் தங்கு த்டையின்றி இங்கு நடை பெறமுடிகிறது என்றால் அதற்குக் காரணம் என்ன? இங்கு ஹிந்து அமைப்புகள் மீது வெடி குண்டு வீசிப் பெருமளவில் உயிர்ச் சேதமும் பொருள் சேதமும் விளைவிக்கச் சிறுபான்மையினருக்குச் சாத்தியமாகிறது. (சென்னையில் ஆர்.எஸ்.எஸ். காரியாலயம் மீதும் ஹிந்து முன்னணி அலுவலகம் மீதும் நிகழ்த்தப் பட்ட வெடி குண்டு தாக்குதல்கள் நினைவில்லையா? ஹிந்து அமைப்பைச் சேர்ந்த பலர் சிறுபான்மையினரால் படுகொலை செய்யப்படுவதும் ஞாபகம் இல்லையா?). இதன் பிறகும் இங்கு சிறுபான்மையினர் நிம்மதியாக வாழ முடியாமலா போயிற்று? வேறு எந்த தேசத்திலாவது பெரும்பான்மையினர் மீது சிறுபான்மையினர் கொடூரத் தாக்குதல் நடத்திவிட்டு வீதியில் நிம்மதியாக நடமாட முடியும் என நினைக்கிறீர்களா? அண்டையில் உள்ள பாகிஸ்தான் அல்லது பங்களா தேஷில் ஒரு ஹிந்து ஒரு முகமதிய அமைப்பின் மீதோ முகமதிய அமைப்பைச் சேர்ந்த்வர்கள் மீதோ தாக்குதல் நடத்த வேண்டும் என்று நினைத்தாவது பார்க்க முடியுமா? ஹிந்துக்களுக்கு அவர்களின் தர்மக் கோட்பாட்டை எடுத்துச் சொல்லி இன்னதுதான் ஹிந்துத்துவம், ஆகவே உங்கள் உரிமைகள் உங்களுடைய தாய் நாட்டிலேயே பறிபோக இடமளிக்காதீர்கள் என்று மன்றாடுவதையா நிராகரிப்பது? இன்று ஹிந்துஸ்தானத்தில் வாக்கு வங்கி அரசியல் காரணமாக இரண்டாந்தரக் குடிமக்களாக மாறிவரும் ஹிந்துக்களுக்கு உங்களைப் போன்ற அறிவாளிகளின் ஆதரவு மிகவும் அவசியம் என்பதை நீங்கள் உணரவில்லையா? நீங்கள் வேண்டுமென்றே எதிர்மறையான மறுமொழிகளை இட்டு அதன் மூலம் இன்னும் வலுவான கருத்துகளைச் சொல்ல வேண்டிய நிர்பந்தத்தை எங்களுக்கு அளித்து அதன் பயனாக வாசகர்கள் மேலும் விளக்கமும், தெளிவும் பெற வாய்ப்பளித்து வருகிறீர்கள் என்பதே உங்களைப் பற்றி எனது அன்பும் மரியாதையும் மிக்க கணிப்பாகும். உங்களுடைய இந்த உதவிக்கு நன்றி தெரிவிக்க வேண்டியவனாக நான் இருக்கையில் ஹிந்துத்துவத்தை நிராகரிப்பதாக நீங்கள் எழுதியுள்ளீர்கள் என்றால், ஹிந்துத்துவம் குறித்து நாங்கள் மேலும் விரிவாக விளக்க வேண்டும் என்பதற்காகவே அவ்வாறு நீங்கள் எழுதியிருப்பதாகப் புரிந்து கொள்கிறேன்.
    -மலர்மன்னன்

  20. சேக்கிழான்,

    // திரேதா யுகத்து ராமனுக்கு தற்போதைய நீதிபதிகளால் கண்டிப்பாக பிறப்புச் சான்றிதழ் வழங்க முடியாது. // ஒரு நீதிபதி ராமான் இங்குதான் பிறந்தான் என்று பிறப்பு சான்றிதழ் வழங்கியதாகத் தெரிகிறது. என்னால் தீர்ப்புகலை முழுதாக படிக்க முடியவில்லை. அதனால் இது தவறான ஊடகச் செய்தியாக இருக்க வாய்ப்பு இருக்கத்தான் செய்கிறது. இது பற்றி உங்களுக்கு ஏதாவது தெரியுமா?

    // இஸ்லாமியர்களுக்கு வழங்கப்படும் சட்டத்தை மீறிய சலுகைகளைச் சுட்டிக் காட்டுவது (ஷாபானு வழக்கு) அதே போன்ற சட்டமீறல்களை ஹிந்துக்களுக்கும் வழங்குமாறு கோருவதல்ல; // அப்பாடா, கடைசியாக ஒரு புள்ளியிலாவது இசைகிறோம்!

    // வழக்கிற்கு சம்பந்தமில்லாத வக்பு வாரியத்தையும்… // என்ன விளையாடுகிறீர்களா? வக்ஃப் வாரியம் கேசில் வாதி. வாதிக்கே சம்பந்தம் இல்லை என்றால் என்னாவது? முடிந்தால் இங்கேயே மலர்மன்னன் வஃப் பற்றி எழுதி இருப்பதை படித்துப் பாருங்கள்.

    // நாட்டுப் பிரிவினை வழங்கிய ஆழமான காயங்களை மீறியும்… // பிரிவினையின் காயங்கள் இந்தியாவுக்கு மட்டும்தானா? பாகிஸ்தானுக்கு இல்லையா? எத்தனை முஸ்லிம்கள் அப்போது இறந்தார்கள்? இந்த காயங்களுக்கு பாகிஸ்தான் எப்படி மருந்து போடவேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

    // இணையதளப் பின்னூட்டங்கள் அதிகம் பெறவோ, அதிக கவனிப்பைப் பெறவோ, ஹிந்துத்துவத்தை புதுவகையாக பிரசிங்கிக்க வேண்டிய அவசியமும் எனக்கு இல்லை. // சேக்கிழான், உங்கள் கருத்து தெரிவிக்கும் விதம் அனாவசிய motivation-களை கற்பித்து கீழே இறங்குகிறது. தவிர்த்துவிடலாமே?

    சிறீதரன், // நாடு முழுமைக்கும் பொது சிவில் சட்டம் … இந்த ‘சம நீதி’ (செமநீதி) எல்லாம் பற்றி ஆர்ர் வீ பேசுவாரா? // அதைத்தானே அய்யா பேசச் சொல்லுகிறேன்? போலி மத சார்பின்மையை முழு மூச்சாக எதிர்க்க வேண்டும் என்றுதானே சொல்கிறேன்! ஆனால் போலி மதசார்பின்மையை எதிர்ப்பது என்றால் ஹிந்து மத சார்பு நிலை எடுப்பது இல்லை என்பதையும் உணருங்கள்.

    மலர்மன்னன், // அபகரிக்கப்பட்ட உடைமையை உரிமையாளர் மீட்டெடுப்பதற்கான வழக்கு… // இப்படி நீங்கள் நிச்சயமாக நினைக்கிறீர்கள். எல்லாரும் அப்படி நினைத்தால் கோர்ட் கேஸ் எதுவும் இருக்காது. உங்கள் கருத்துக்கு மாற்று கருத்து இருப்பதால்தானே கேஸ் நடக்கிறது? வக் ஃ ப் உறுப்பினர்கள் முஸ்லிம்களின் சொத்தை மீட்டெடுக்க வழக்கு என்று எண்ண சாத்தியமே இல்லையா? இப்படி மாற்று கருத்து இருந்தால், இரண்டு தரப்பு, அவர்களுக்குள் தீர்த்துக் கொள்ள முடியவில்லை, நாட்டில் தகராறுகளை தீர்க்க இருக்கும் ஒரு அமைப்பிடம் போகிறார்கள் என்பதுதானே சரியாக இருக்கும்? காவேரி தண்ணீர் தங்களுக்கு மிஞ்சித்தான் தமிழ்நாட்டுக்கு என்று கர்நாடகம் நினைக்கிறது, காலம் காலமாக வந்த உரிமை இருக்கிறது என்று தமிழகம் நினைக்கிறது, மாற்று கருத்து, தகராறு, கோர்ட், கேஸ் என்றுதானே போக வேண்டி இருக்கிறது? தமிழகம் கர்நாடக மீதோ இல்லை கர்நாடகா தமிழகம் மீதோ படையெடுத்துப் போய் கிருஷ்ணராஜசாகர் அணையை உடைக்கலாமா? (இது உதாரணம், கர்நாடகா செய்யும் அயோக்கியத்தனத்தைப் பற்றி மறுமொழி எழுதாதீர்கள். :-))

    எனக்கு நாளை சுப்ரீம் கோர்ட்டுக்கு கேஸ் போனால் என்ன தீர்ப்பு வரும் என்பதை விட, இன்றைக்கு என்ன தீர்ப்பு வந்திருக்கிறது என்பதை விட, தீர்ப்பை எல்லோரும் ஏற்று நடக்க வேண்டும் என்பதே முக்கியமாகத் தெரிகிறது. அப்படி ஏற்க மறுத்தால் பிரச்சினைகளை தீர்க்க இருக்கும் ஒரு அமைப்பு – ஒரே அமைப்பு – குலைந்துவிடும். இங்கே பலரும் இதை உணர மறுக்கிறீர்கள்.

    // காலம் எதுவானால் என்ன, முறைகேடு முறைகேடே அல்லவா? // சில காலம் தாண்டிய விழுமியங்கள் உண்டென்றாலும் பல விழுமியங்கள் மாறுவதை மலர்மன்னன் போன்ற பெரியவருக்கு, அறிஞருக்கு நான் சொல்ல வேண்டியதில்லை. உதாரணமாக, சீதையின் அக்னிப்ரவேசமும், வனவாசமும் அந்த கால விழுமியங்களுக்கு சரியாக இருக்கலாம். இன்று?

    // ஹிந்துத்துவத்தை ஏன் நிராகரிக்கிறேன்… // ungaL அன்பு, என்னை பெரிதும் உவகை கொள்ள வைக்கிறது. உங்கள் போன்ற பெரியவர்களின் ஆசிகளை எப்போதும் நாடுகிறேன். முடிந்தால் என் பதிவைப் படித்துப் பாருங்களேன்! என் புரிதல் தவறாக இருந்தால் நிச்சயமாக விளக்குவீர்கள் என்று நம்புகிறேன்.

  21. {மலர்மன்னன், // அபகரிக்கப்பட்ட உடைமையை உரிமையாளர் மீட்டெடுப்பதற்கான வழக்கு… // இப்படி நீங்கள் நிச்சயமாக நினைக்கிறீர்கள். எல்லாரும் அப்படி நினைத்தால் கோர்ட் கேஸ் எதுவும் இருக்காது. உங்கள் கருத்துக்கு மாற்று கருத்து இருப்பதால்தானே கேஸ் நடக்கிறது? – ஸ்ரீ ஆர்.வி.)
    அன்புள்ள ஸ்ரீ ஆர்.வி.,
    உங்கள் பெயரை நீங்கள் வாசிப்பதற்குமுன் உங்களை அறியாமலேயே ஸ்ரீ எனும் மந்திரத்தைக் கண்களால் வாசித்து, மனசால் உச்சரித்து ஸகல ஸெளபாக்கியங்களும் பெற வேண்டும் என்பத்ற்காகத்தானே விடாமல் ஸ்ரீ என்ற சொல்லை உங்கள் பெயருக்குமுன் எழுதி வருகிறேன்! வெறும் வயதை மட்டுமே தகுதியாகக் கொண்டு ஆசி வழங்கும் துணிச்சல் எனக்கு வரவில்லை!
    ஹிந்துக்கள் பெரும்பான்மையினராக உள்ள ஹிந்துஸ்தானத்தில் சரித்திரம் மிகத் தெளிவாக ஆக்ரமிப்பாளர்கள் யார் என்பதைப் பதிவு செய்துள்ள போதிலும் ஆக்ரமிப்பாளர்கள் அடாவடியாக உரிமை கொண்டாடுவதால் தானே நீதிமன்றம், வழக்கு என்றெல்லாம் வந்தன? நான் பலவீனனாக இருக்கையில் எனது உடைமையைப் பறித்துக்கொண்டவன் இன்று நான் அதை மீட்க முற்படுகையில் வல்லடி வழக்காடுகிறான் என்பது தெளிவாகவே உள்ளதே? அவன் தரப்பு அடாவடியானது என்பதால்தானே தீர்ப்பு ஹிந்துக்களுக்குச் சாதகமாக வந்துள்ளது? மூன்றில் ஒரு பகுதி அளிக்கப்பட்டிருப்பது தானமாகத்தானே, உரிமைக்க்காக அல்லவே? இன்னும் இதில் என்ன பிரச்சினை உள்ளது? நீங்கள் என்னதான் எதிர்பார்க்கிறீர்கள்? உங்கள் மனதில் என்னவிதமான பதிலை என்னிடம் எதிர்பார்க்கிறீர்கள் என்று சொல்லுங்களேன்! அந்த பதில் எனக்கும் உடன்பாடானதாக இருந்தால் அதையே சொல்லிவிட்டுப்போகிறேன்! எதற்காக் இந்த முடி பிளக்கும் வேலை? நீங்களே சற்று யோசித்தால் இதெல்லாம் வெறும் வாதம் என்று உணரமாட்டீர்களா?: வெறும் பொழுது போக்கிற்காக விவாதம் செய்யும் வழக்கம் எனக்கு இல்லை. அதற்கான அவகாசமோ விரல்களில் சக்தியோ இல்லை. பேச்சு எழுத்து இரண்டையுமே நான் பொழுதுபோக்கிற்காக வைத்துக்கொள்வதில்லை.

    அயோத்தி ஸ்ரீ ராம ஜன்ம பூமி விவகாரத்தில் மாற்றுக் கருத்து இருப்பது வஃக்பு வாரியத்திற்கும் அன்சாரிக்கும்தான். ஹிந்துக்களுக்கு அயோத்தியின் மீதுள்ள புனிதம் அறியாத/அது பற்றி அக்கறையில்லாதவர்கள் வழக்காட வில்லை. ஆகவே மாற்றுக் கருத்துள்ள்வர்கள் ரியல் எஸ்டேட் மதிப்பைத் தவிர சமய நம்பிக்கையின் அடிப்படையிலான முக்கியத்துவம் ஏதுமின்றி அடிமனைக்கு சொந்தம் கொண்டாட வழக்காடினார்கள், அவ்வளவுதானே?. இது குறித்து நன்கு யோசித்தால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாக மாற்றிக் கொள்வீர்கள் என நம்புகிறேன். மாற்றுக் கருத்து இருக்கக்கூடியவர்களை விடவும் இதில் ஏன் இவ்வளவு அக்கறை காட்டுகிறீர்கள்?
    -மலர்மன்னன்

  22. //எனக்கு நாளை சுப்ரீம் கோர்ட்டுக்கு கேஸ் போனால் என்ன தீர்ப்பு வரும் என்பதை விட, இன்றைக்கு என்ன தீர்ப்பு வந்திருக்கிறது என்பதை விட, தீர்ப்பை எல்லோரும் ஏற்று நடக்க வேண்டும் என்பதே முக்கியமாகத் தெரிகிறது- ஸ்ரீ ஆர்.வி.//

    உயர் நீதி ம்ன்றத் தீர்ப்பை ஏற்கப்போவதிலை என்று நம்மில் யார் சொல்லி விட்டார்கள் என்று இவ்வளவு வாதம் செய்கிறீர்கள்? உயர்நீதி மன்றத் தீர்ப்பை ஏற்று, சட்டப்படி உள்ள உரிமையைப் பயன்படுதி அதன் தீர்ப்பை ஆட்சேபித்து நீதி மன்ற்த்திற்குச் செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது என்று சிலர் அபிப்ராயப்படுகிறார்கள், அவ்வளவுதானே? நீங்களாகவே ஏன் வேண்டாத கற்பனைகளையெல்லாம் வளர்த்துக்கொண்டு, மன அமைதி யிழந்து….
    ”பிரச்சினைகளைத் தீர்க்க இருக்கும் ஒரு அமைப்பு – ஒரே அமைப்பு – குலைந்துவிடும். இங்கே பலரும் இதை உணர மறுக்கிறீர்கள்” என்று சங்கடப் படுகிறீர்கள்?

    ந்மது உயர் நீதிமன்ற, உச்ச நீதி மன்ற நீதிபதிகளின் லட்சணம் என்ன என்பது எனக்குச் சுய அனுபவத்தின் வாயிலாகவே நன்கு தெரியும். நேற்றுவரை உண்மை எதுவாயிருப்பினும் தொழில்முறைக்காகப் பலவாறான வாதி-பிரதிவாதிகளுக்காக வாதாடியவர்கள்தான் உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமனம் பெறுகிறார்கள். அத்தகைய நியமனமும் பேசத் தகுந்ததாக இல்லை. எனினும் நீதிமன்றம் என்ற அமைப்பிற்கு மரியாதை கொடுத்தாக வேண்டும் என்பதை அனைவரும் அறிந்தே இருக்கிறோம். அதைக் குலைக்க நம்மில் எவரும் விரும்ப மாட்டார்கள். நமது நடைமுறைச் சட்ட திட்டங்களை மதித்து நடப்பதே நமது பாரம்பரியம். நமது நலனுக்கு முரணான சட்டங்கள் இருப்பின் அவற்றை உடைத்தெறியும் முயற்சியிலும் நியாயமாகவே ஈடுபடுவோம். பாப்ரி மண்டபம் இடிக்கப்பட்ட அன்று அது ஒன்று மட்டுமே இடிக்கப்பட்டது-வேறு எந்த முகமதிய மண்டபமோ வழிபாட்டுத் தலமோ இடிக்கப்படவில்லை(பாப்ரி அவமானச் சின்னத்தை இடிக்கும் பணியில் இறங்கியவர்கள் பல்லாயிரம்பேர் என்பதை மறக்க வேண்டாம். அவர்கள் வெறியர்களாக இருப்பின் மந்தை இயல்பின் பிரகாரம் அப்போதிருந்த வேகத்திற்கும் வாய்ப்பிற்கும் மேலும் பல மசூதிகளை இடித்திருக்க முடியும். ஆனால் அப்படி ஏதும் நிகழவில்லை) . மேலும் பொறுத்திருந்து பார்த்துப் பயனில்லை என்பது உறுதியான பிறகே பாப்ரி மண்டபம்கூட இடிக்கப்பட்டது. மட்டுமல்ல, அது நமக்குச் சொந்தமான அடிமனையில் இருந்தது என்பதால்தான் உரிமையுடன் தகர்த்து எறியப்பட்டது..
    நீதிமன்றத் தீர்ப்புகளை ஆட்சேபிக்கச் சட்டத்திலேயே இடமுள்ளது. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யவும் முடிகிறது. இதன் பொருள் என்ன? இறுதித் தீர்ப்பு என்பது உண்மையில் இறைச் சக்தியிடமே உள்ளது என்பதை மெய்யாகவே உணர்ந்துள்ளேன்.
    -மலர்மன்னன்

  23. //சீதையின் அக்னிப்ரவேசமும், வனவாசமும் அந்த கால விழுமியங்களுக்கு சரியாக இருக்கலாம். இன்று?-ஸ்ரீ ஆர்.வி.//
    சீதையின் அக்னிப் பரவேசத்தை லிட்ரலாக எடுத்துக்கொண்டு விட்டீர்கள்! போகட்டும்! பொதுவான அக்னிப் ப்ரவேசத்தைப் பார்ப்போம்.

    இன்றும் இவை தொடரவே செய்கின்றன, ஸ்ரீ ஆர்.வி. சட்டப்படித் தவறாக இருப்பினும் சமூகத்தின் கண்ணோட்டம் மாறவில்லை, இன்றளவும்! பெளதிக ரீதியில் வேண்டுமானால் அக்னிப் பிரவேசம் நடக்காமல் இருக்கலாம். ஆனால் அதைவிடக் கொடுமையான மனவேதனைச் சோதனைக்கு நம் சகோதரிக்ள் உள்ளாக்கப்படுகிறார்கள்தான். அக்னிப் ப்ரவேசமாவது சிறிது நேர உடல் வலி. மனதிற்குத் தரப்படுவதோ நிரந்தர வலி. வனவாசம் என்பது கிட்டத்த்ட்ட ஆயுள் தண்டனை மாதிரிதானே! அவ்வளவு ஏன், கருணாநிதி பதிநான்கு வருடம் பதவியின்றிக் கிடந்ததையே வனவாசம் என்று நொந்துகொள்ளவில்லையா?

    வேறொரு இடத்தில் சித்தூர் ராணி பத்மினி அக்னிப் பரவேசம் செய்ததையும் ரூப் கன்வர் உடன்கட்டை ஏறியதையும் ஒப்பிட்டு அன்றைய விழுமியங்கள் இன்றைய விழுமியங்கள் என்று சுட்டிக் காட்டியிருந்தீர்கள். உங்களுக்கு ஏன் இப்படிப் பொருத்தமில்லாமல் யோசிக்கத் தோன்றுகிற்து என்று எனக்கு விளங்கவில்லை. பத்மினி தனது மானத்தைக் காத்துக் கொள்ள தீக்குளித்தாள்- உடன்கட்டை ஏறவில்லை! அந்நியன் வெற்றிபெற்றுவிட்டால் ரஜபுத்திரப் பெண்கள் அனைவரும் பெரிய குழிவெட்டி அதில் தீ வளர்த்து அக்னிப் பிரவேசம் செயவது வழக்கம்! ரூப் கன்வர் மயக்க நிலையில் உடன்கட்டை ஏற்றப்பட்டாள்! அவள் பிரக்ஞையுடன் விருப்பப்பட்டே உடன் கட்டை ஏறியிருப்பினும் அது தற்கொலை முயற்சி என்று கருதப்படுமேயன்றி மானம் காக்கும் பொருட்டாக மேற்கொள்ளப்பட்ட முடிவு என்பதாக அல்ல!

    //முடிந்தால் என் பதிவைப் படித்துப் பாருங்களேன்! என் புரிதல் தவறாக இருந்தால் நிச்சயமாக விளக்குவீர்கள் என்று நம்புகிறேன்.-ஸ்ரீ ஆர்.வி.//

    அவகாசம் கிடைக்கும்போது நிச்சயமாகப் படிக்கிறேன். அதற்குமுன் ஹிந்துத்துவம் எனபது பற்றி நீஙகள் என்னென்ன படித்திருக்கிறீர்கள், கேட்டிருக்கிறீர்கள் என்று சொல்ல முடியுமா?
    -மலர்மன்னன்

  24. ஸ்ரீ ஐராவதம் மஹாதேவன் தினமணி ஆசிரியராக இருந்த காலகட்டத்தில் தான் ராஜஸ்தானத்தில் ரூப் கன்வர் உடன்கட்டை (ஸதி) நிகழ்ந்தது. அச்சமயம் தினமணியில் நான் தொடர்ந்து எழுதி வந்தேன். ரூப் கன்வர் விஷயத்தில் உண்மையில் என்ன நடந்தது என்பதை நான் ஆராய்ந்து விரிவாக எழுதித் தரவேண்டும் என மஹாதேவன் விரும்பினார். அதற்கு இணங்க அதனைத் தீவிரமாக ஆராய்ந்ததில் ரூப் கன்வர் சுய நினைவு முற்றிலும் அற்றுப் போகும் அளவுக்குப் பாலில் அபின் கலந்து கொடுத்து போதை ஏற்றப்பட்டு, அந்த நிலையிலேயே உடன் கட்டை ஏற்றப்பட்டது தெரிய வந்தது ( இந்த போதை பானத்தை ’பாங்’ என்பார்கள்). ராஜஸ்தானில் இப்படித்தான் கணவனை இழக்கும் பெண்டிரை பாகப் பிரிவினையைத் தவிர்க்க உடன்கட்டை ஏற்றுவதும் உடன்கட்டை ஏற்றிய இடத்தில் நன்கொடை வசூலித்து ’ஸதி மாதா’ கோயில் கட்டி, தொடர்ந்து வ்ருமானத்திற்குப் புதிய வழி காண்பதும் சிலருக்கு வழக்கமாகி விட்டிருப்பதும் அறிந்தேன். இதுபற்றிப் பின்னர் தினமணியில் விரிவாக எழுதினேன். இதனை இப்போது எதற்காக எழுதுகிறேன் என்றால் ஸ்ரீ ஆர். வி. ரூப் கன்வர் சம்பவத்தைக் குறிப்பிட்டதால் மட்டுமல்ல, கண்மூடித்தனமாக எல்லாவற்றையும் ஆதரிக்கின்ற போக்கு எனக்கு இல்லை; முறைகேடு என் வீட்டிலேயே நடக்குமானால் அதனை அம்பலப் படுத்திக் கண்டிக்க நான் தவறுவதில்லை என்பதைக் குறிப்பிடவே.
    -மலர்மன்னன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *