அடுத்த தேர்தல் கூட்டணிகள் குறித்து சில ஹேஷ்யங்கள்

Jeyalalitha வருகின்ற சட்டமன்றத் தேர்தலில், தமிழகம் ஒரு பெரிய கூத்தைக் காணப் போகிறது. எந்த கட்சி யாருடன் சேரப் போகிறது என்பதை யாரும் கணிக்க முடியாத அளவில் நிலைமை இருக்கின்றது.

காங்கிரசின் தற்போதைய கூட்டணி திராவிட முன்னேற்ற கழகத்துடன் தொடர்ந்தால், தமிழக அரசின் தவறுகளுக்கு, காங்கிரசும் பொறுப்பு ஏற்க வேண்டும். எனவே, திமுக கூட்டணியை விட்டு விலகுவதை வெளிப்படையாகவே சில காங்கிரஸ் தலைவர்கள் பேசி வருகின்ற்னர். மேலும், காங்கிரஸ் தமிழகத்தில் காலூன்ற நினைக்கும் இவ்வேளையில், பிளாக் மெயில் அரசியல் செய்ய தயார் நிலையில் உள்ளது. திமுகவோ, தங்கள் கொள்ளையில் பங்கு தரத் தயாரில்லை.

இந்நிலையில், காங்கிரஸ், அண்ணா திராவிட முன்னேற்ற கழக கூட்டணி என்றால், ஜெயலலிதாவின் பழைய காட்டமான வசைகள், மீண்டும் நினைவிற்கு வருகின்றது. அரசியலில் வசைகள் சாதாரணம் என்றால், ஜெயலலிதாவுடன் கூட்டணி உண்டு. இந்திரா, ராஜிவ் தாக்குதல்களை மறந்த காங்கிரசுக்கு, வசைகளை மறப்பது ஒரு பொருட்டல்ல. ஜெயலலிதாவுடன், மதிமுக, கம்யுனிஸ்ட், காங்கிரசுடன் சேர்ந்து விடும். கூட்டணியும் பலம் பெரும்.

Ramadoss தமிழகத்தில் பாமக, தற்போது தனித்து விடப்பட்டுள்ளது. திமுகவின் ராஜ்ய சபா ஏமாற்றல் பா.ம.க வை மிகவும் பாதித்துள்ளது. ராமதாசும் அவர் சகாக்களும் சகட்டு மேனிக்கு பேசியுள்ளனர். எனவே, பாமக – திமுக உறவு என்பது இனி எடுபடாது. தனித்து நின்றால் பாமக எடுபடாது. எனவே, ஜெயலலிதா இதனை புரிந்து கொண்டு, பாமக வையும் சேர்த்து மெகா கூட்டணிக்கு முயற்சிக்கலாம்.

2001 ல் ஏற்பட்டது போல், ஒரு கூட்டணிக்கு வாய்ப்பு உள்ள்து. அப்படி ஒரு கூட்டணி அமையும் பட்சத்தில், தேமுதிக வின் நிலை படு மோசமாக இருக்கும். தேமுதிக + திமுக ஒன்று சேராது. காரணம், தேமுதிக எம்.ஜி.ஆர் வாக்குகளை நம்பி உள்ள்து. எம்.ஜி.ஆர் வாக்குகள் திமுக விற்கு போகாது. எனவே, தேமுதிக இதர ஜாதிக்கட்சிகளை நம்பியும் விலை போகாத சில சினிமாக் கட்சிகளை நம்பியும் தான் அரசியல் பண்ணவேண்டும்.

எது எப்படியோ, வாக்குகள் பிரிவது என்பது நிச்சயம். இதில் பலன் என்பது, பெரிய கட்சிகளின் கூட்டணிக்குத்தான். அப்படிப் பார்த்தால், அதிமுக, திமுக, காங்கிரஸ், தேமுதிக, கம்யுனிஸ்ட், பாமக, பாஜக என்கின்ற வரிசையில், முதல் மூன்றில் எந்த இரண்டு கட்சிகள் சேர்ந்து கூட்டணி அமைக்கிறதோ, அவைகளுக்குத்தான் வெற்றி நிச்ச்யமாக உண்டு. ஒரு வேளை, ஜெயலலிதா மனம் மாறி, எம்.ஜி.ஆர் நினைவு வந்து, எம்.ஜி.ஆரை முன்னிறுத்தி தேர்தலில் ஈடுபட்டால், அதிமுக பலம் வாய்ந்த கட்சியாக மாறலாம். எல்லாம் அத்தைக்கு மீசை முளைக்கும் கதை.

karunanidhi1

திமுக விற்கும், அதிமுகவிற்கும் வாழ்வா, சாவா என்கின்ற நிலை. இதில் வெற்றி என்பது, புத்திசாலிக்கு மட்டும் அல்ல, பொறுமைசாலிக்கும் தான் கிடைக்கும். இவைகள் தவிர, தேர்தலில், நடக்கும் தில்லு முல்லுகளும் பெரும் பங்கு வகிக்கும். பணம் பெற்றுக் கொண்டு திமுக விற்கு மாறும் இதர கட்சியின்ர், மக்கள், தேர்தலின் தன்மைகளை மாற்றும். காங்கிரஸ், ஒரு வேளை, திமுகவுடன் கூட்டணி அமைக்க வில்லை என்றால், தில்லு முல்லுகள், மத்திய அரசின் பலத்தோடு எதிர் கொள்ளப்படும். இதன் மூலம், திமுக வின் வெற்றியைக் குறைக்க முடியும். இதற்கு, காங்கிரஸ் பேசும் விலை என்ன என்பதையும் கவனிக்க வேண்டும்.

ஒரு வேளை, காங்கிரஸ் அதிமுக ஆட்சியில் பங்கு கேட்கலாம். இதற்கு அதிமுக நிச்சயம் தலை ஆட்டும். காரணம், அதிமுக எப்படியும் இம்முறை, ஆட்சியைப் பிடிப்பதற்கு துணிந்து விட்ட்து. மேலும், சமீபத்திய கோவை, திருச்சி கூட்டங்கள், மாவட்டம் தோறும் நடத்தும் ஆர்ப்பாட்ட்ங்கள். மக்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பு, மக்களிடம் மனதில் நிலைத்து நிற்கும்.

அதிமுகவிலிந்து, திமுக விற்கு தாவிய சமீபத்திய தலைவர்கள், திமுகவில் சரிவர மதிக்கப்படுவதில்லை என்கிற தகவல்கள், உதாரணம், அனிதா மற்றும் எஸ் வி. மேலும், மு.க. வின் குடும்ப உறுப்பினர்களின் தலையீடுகள், பழைய நபர்களிடம், நன் மதிப்பைத் தரவில்லை. அதிமுக வில், சசிகலா குடும்பம் போல், இங்கு, மு.க. வின் குடும்பம். எனவே, வரும் தமிழக சட்டமன்றத் தேர்தல், கூட்டணி அமைப்பதிலும், பின் தேர்தலிலும் ஒரு பெரிய மாற்ற்த்தை அளிக்கப் போகிறது என்பது நிச்சயம்.

24 Replies to “அடுத்த தேர்தல் கூட்டணிகள் குறித்து சில ஹேஷ்யங்கள்”

  1. வரும் தேர்தலில் ஏற்படவிருக்கும் கூட்டணி பற்றிய ஹேஷ்யம் அவ்வளவு அழுத்தமாக இல்லையோ என்பது என் கருத்து. வெளியில் மக்கள் டீக்கடை வாசலிலும், பெட்டிக்கடைகளிலும், பூங்காக்களிலும் பேசும் அதே விஷயங்களைத் தவிர ஆதார பூர்வமான ஹேஷ்யம் வெளியாகவில்லை. பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கூட்டணிக்கு அச்சாரமாக ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு என்று சொல்லி கருணாநிதியைச் சந்தித்திருக்கிறார். இவரது அடுத்த சந்திப்பு கூட்டணி குறித்துதான் இருக்கும். அப்போது சொல்வார், கருணாநிதியால் மட்டுமே தமிழ்நாட்டைக் காப்பாற்ற முடியும் என்று. ஜெயலலிதாவின் மிகப் பெரிய பலவீனம் அவரது முந்தைய ஆட்சியின் நடைமுறைகள் தான். இப்போதும் அது பெருமளவில் மாறிவிடவில்லை, என்றபோதும் பொதுவாக மக்கள் எண்ணம் தி.மு.க.வுக்கு மாற்று அ.தி.மு.க.வுக்கு தான் என்பதுதான். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.காலத்தில் இருந்த காங்கிரஸ் இப்போது இல்லை. இப்போது இருப்பது கருணாநிதி காங்கிரஸ். தங்க பாலு, பீட்டர் அல்பான்ஸ் போன்றவர்கள் கருணாநிதியை வைத்துத் தன் கட்சியை நடத்துகிறார்கள். காமராஜையும், கக்கனையும், பக்தவத்சலத்தையும் முன்னிறுத்தி கட்சி நடத்திய போது தலைவர் மூப்பனாருக்கு இருந்த மரியாதை இன்று இருப்பவர்களுக்கு இல்லை. நல்ல வேளை இளங்கோவன் சற்று காங்கிரஸ் பாரம்பரியத்துக்குத் துணை போகிறார். ஆகவே, முன்போல் காங்கிரஸ் அ.தி.மு.க. உடன்பாடு எட்டினால் கூட விளைவு எப்படி இருக்கும் என்பதைச் சொல்ல முடியாது. காங்கிரஸ்காரர்கள் பெருமை அடித்துக் கொள்வது போல அவர்கள் வளர்ச்சி எதையும் அடைந்து விடவில்லை. கருணாநிதி தயவால் வீங்கி இருப்பதை இவர்கள் வளர்ச்சி என்று தப்புக் கணக்குப் போடுகிறார்கள். காலம் காலமாக காங்கிரசுக்கு வாக்களித்த பழைய தலைமுறை மறைந்து விட்டது. இப்போது இருக்கும் தலைமுறைக்கு காங்கிரஸ் என்றால் தி.மு.க.வின் கிளைக் கட்சி என்பதுதான் தெரியும். காந்தியையும் காமராஜையும் நினைத்து வாக்கு அளிக்கும் தேச பக்தர்கள் கூட இப்போது தங்க பாலுவின் அணுகுமுறையால் சோர்ந்து போயிருக்கிறார்கள். பா.ம.க. யார் பக்கம் போனாலும் முடிவில் எந்த பாதிப்பும் இருக்காது. நடிகர் விஜயகாந்த் புத்திசாலித்தனமாக முடிவு எடுத்து அ.தி.மு.க. கூட்டணியில் சேர்ந்து அடாவடியாக சீட் கேட்டோ அல்லது ஆட்சியில் பங்கோ கேட்காமல் போட்டியிட்டால் நிச்சயம் அந்த கூட்டணி வெற்றி பெரும். மக்கள் தி.மு.க. மீதும், காங்கிரஸ் மீதும் அந்த அளவுக்கு ஆத்திரமும் வெறுப்பும் அடைந்திருக்கிறார்கள். நான் சொல்வது ஹேஷ்யம் அல்ல. மக்களின் நாடித் துடிப்பு.

  2. எனது முந்தைய கருத்தோடு மேலும் சொல்ல விரும்புவது என்னவென்றால், கடந்த பல ஆண்டுகளாக வை.கோ. உறுதியாக, நிலையாக ஜெயலலிதா பக்கம் நின்று கொண்டிருக்கிறார். அவரை ஒரு எல்லை தெய்வம் என்றுகூட அ.தி.மு.க. வினர் ஏற்றுக் கொள்ளலாம். அவரது பங்களிப்பும் இரு கம்யூனிஸ்ட் கட்சியினரின் உழைப்பும் நிச்சயம் பலன் தரும். தா.பாண்டியனின் நேர்மை, நாணயம் இவை மக்கள் மத்தியில் மரியாதையை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த மரியாதை நிச்சயம் வாக்குகளாக மாறும். மார்க்சீய கம்யூனிஸ்டுகளுக்கு தொழிலாளர் இயக்கங்களின் ஆதரவு இருக்கிறது. கட்டுப்பாடான அந்த இயக்கங்கள் அப்படியே வாக்களிப்பார்கள். ஆகவே ஒரு புறம் தி.மு.க. காங்கிரஸ், திருமாவளவன் கட்சி மற்றும் சில உதிரி கட்சிகள் மறுபுறம் அ.தி.மு.க., விஜயகாந்த், ம.தி.மு.க., கம்யூனிஸ்ட் கட்சிகள், புதிய தமிழகம் மற்றும் பல சின்ன கட்சிகள் இருந்தால் அ.தி.மு.க. அணியினரின் வெற்றி நிச்சயம். இவை எல்லாவற்றுக்கும் மேலாக மதுரை நடைமுறை வருமானால் பணமும், உடல் பலமும் தாண்டவமாடும். அந்த நிலையை எப்படி எதிர் கொள்ளப்போகிறார்கள். தேர்தல் கமிஷன் என்ன நடவடிக்கை எடுக்கும், மத்திய அரசு ஏதாவது தலையிடுமா என்பதையெல்லாம் பொறுத்துத்தான் முடிவுகள் அமையும். .

  3. Pingback: Indli.com
  4. எனக்குத் தெரிந்து இப்பொழுது இருக்கும் கூட்டணியில் பெரிய மாற்றம் ஏற்ப்பட வாய்ப்பு இல்லை. விஜயகாந்த் தனியாகத்தான் நிற்பார். மக்கள் மீண்டும் இலவசங்களுக்காக திமுகவிற்கு ஓட்டளிப்பார்கள்

  5. திமுக மீண்டும் ஆட்சி அமைப்பது உறுதி.ஜெயலலிதாவின் அகங்காரம் அவரை தலை தூக்க விடாது.மேலும் தற்போதய ஆட்சியின் மீது மக்களுக்கு பெரிய அளவில் அதிருப்தி இல்லை என்பது உண்மை.

  6. Let us remember that the DMK is corrupt,anti-Hindu,family oriented DMK, jayalalitha is arrogant,paranoid, and is controlled by her ‘friend ‘ and Vijaykanth is lacks vision and is lacklusture,ramadoss is self-centred and greedy, communists are anti-Hindu and anti-National.
    So let us shed our inhibitions and reservations boldly root for the BJP.
    It is the only party which has always stood up for the Hindus.
    Nothing else matters now but the survival of the Hindus
    The church-china-saudi-paki media blacks out the BJP .
    Let us also not do that and be ungrateful.

  7. ஆண்டாண்டு காலமாக ஜெ வுக்கு அகங்காரம் என்ற அடைமொழி அள்க்க்ப்ப்டுகிற்து. யாருக்கு இல்லை அகங்காரம்?. பெண் கோபப்படக்கூடதா?. இது Male chauvinism world. முக குடும்பம், இந்திரா குடும்பம், லல்லு குடும்பம், ராமதாஸ் குடும்பம், விஜயகாந்த் குடும்பம், ஜெ. மட்டும் ஏன் தோழியுடன் இருக்க்க் கூடாது? இந்திரா வின் கோபம், முக வின் கோபமற்ற், புனைசுருட்டு வேலைகள், மிக நல்ல்தா?. தனி ஒரு பெண், சுமார் 31% வாக்குகளை, தன் வசம் வைத்துள்ள்து, பலருக்கு, பிடிக்க்வில்லை.

  8. ஒரு வகையில் பார்த்தால் திமுக இரண்டாக உடைந்தது தமிழ் நாட்டுக்கு பெரிய இழப்பு.
    மனோ ரீதியாக ‘அது இல்லை என்றால் இது’ என்று மக்கள் நினைக்கத் தூண்டப் படுகின்றனர்

    ஊடகங்களும் இவர்களது மோதலைக் காட்டியே எதோ இவர்கள் இரண்டு பேர்தான் களத்தில் உள்ளது போல் சித்தரிக்கின்றனர்
    நாம் இந்த சிந்தனையிலிருந்து வெளியே வர வேண்டும்.
    காமராஜ் சொனது போல்’ இரண்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்’
    பிராங்க்ளின் டி ரூஸ்வெல்ட் அமெர்க்க ஜனாதிபதி தேர்தலில் ‘A NEW DEAL’
    என்ற ஒரு கோஷத்தைக் கொடுத்தது போல் இப்போது நாம் கொடுக்க வேண்டும்
    தேசியம்,தெய்வீகம் இவற்றைப் போற்றும் பாரதீய ஜனதாவை ஆதரிக்க வேண்டும்.

  9. ஒரு சுவையான பழங்கதை சொல்லவா?
    1971-ல் நடந்த தேர்த்லின்போது காமராஜர் ராஜாஜியுடன் இணைந்து தி.மு.க. இந்திரா கங்கிரஸ் கம்யூனிஸ்ட் கட்சி கூட்டணியைச் சந்தித்தார். வாக்குப் பதிவு நடைபெற்றானபின் முடிவுக்காகக் காத்திருக்கையில், தமிழக சட்டமன்றத்தைப் பொருத்தவரை காமராஜர் தலைமையில் இயங்கிய ஸ்தாபன காங்கிரஸ் அமோக வெற்றிபெறும் என்கிற தோற்றம் உருவாகியிருந்தது. தனிப்பட்ட முறையில் அரசியல் பேச ஒருசில நிருபர்ளை மட்டுமே காமராஜர் அவரது வீட்டில் அனுமதிப்பது வழக்கம். எக்ஸ்பிரஸ் ஆர். ராமசந்திர ஐயர், ஹிந்து கிருஷ்ணஸ்வாமி, நான் ஆகியோரே இச்சிறு வட்டத்தில் இடம்பெறுவோம் (எனக்கு அனுமதி கிட்டக் காரணம் என் தந்தையார் காமராஜர், சி. சுப்பிரமணியம் ஆகியோருக்கு நன்கு அறிமுகமானவராக இருந்ததேயன்றி எனது தனிப்பட்ட முக்கியத்துவம் ஏதும் அல்ல). தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்று காமராஜர் எங்களிடம் கேட்டார். ராமசந்திர ஐயரும் கிருஷ்னஸ்வாமியும் ஸ்தாபன காங்கிரசுக்கு நல்ல வாய்ப்பு இருப்பதாகக் கூறினார்கள். என்னிடம் கேட்ட்டபொழுது நான் சுரத்தில்லாமல் பதில் சொன்னேன். நீ அண்ணாத் துரையோட சுத்தின ஆளுதானே, வேற எப்படிப் பேசுவே என்று எரிச்சலுடன் கூறினார், காமராஜர் (எனக்குத் தனிப்பட்டமுறையில் அண்ணாவுடன் அதிக நெருக்கம் இருந்ததால் காமராஜர் எப்போதுமே என்னிடம் அதைச் சுட்டிக்காட்டுவது வழக்கம். அண்ணாவின் மறைவிற்குப் பிறகும் அவர் இப்பழக்கத்தை விடவில்லை!). தேர்தல் முடிவுகள் தி.மு.க. -இந்திரா காங்கிரஸ் கூட்டுக்கு அமோக வெற்றியாக அமைந்தன. அதன் பிறகு காமராஜரை நாங்கள் சந்தித்தபொழுது, ஒரு ராட்சசனை அழிக்க அதிலிருந்தே இன்னொரு ராட்சசன் வந்தாத்தான் முடியும்போலிருக்கேப்பா என்றார். அப்படியே 1972-ல் தி.மு.க. பிளவுபட்டு அதில் இருந்து அண்ணா
    தி மு.க. தோன்றியது. ஆனால் விளைவு ஆளும் கட்சி, எதிர்க் கட்சி ஆகிய இரண்டுமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளாகிப் போனது! தி.மு.க. இரண்டு பட்டதை தேசிய சக்திகள் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளாமல் மாற்றி மாற்றி அவற்றின் பின்னால் போனதால்தான் இன்றுவரை இதே நிலைமை தொடர்கிறது. காமராஜர் மட்டும் 1975–ல் காலமாகாமல் மேலும் சில ஆண்டுகள் வாழ்ந்திருப்பின் இன்றுள்ள நிலைமைக்கு அன்றே ஒரு முடிவு ஏற்பட்டிருக்கும். ஏனெனில் தேசிய கட்சிகள் திராவிடக் கட்சிகளுடன் எவ்வித உறவும் வைத்துக்கொள்ளக் கூடாது என்பதில் காமராஜர் மிகவும் தெளிவாகவே இருந்தார்.
    -மலர்மன்னன்

  10. கொடுக்கப்பட்டுள்ள பின்னூட்டங்களின் அடிப்படையில் இரண்டு விஷயங்கள் சொல்ல விரும்புகிறேன். ஒன்று, அகங்காரம். மதுரையில் ‘தினகரன்’ அலுவலகம் தாக்கப்பட்டு இருவர் கொல்லப்பட்ட நிகழ்ச்சி பற்றி நிருபர்கள் கருணாநிதியிடம் கேட்டபோது, ஒரு நிருபரிடம் அவர் ‘என்னடா தெரியும் உனக்கு, நீதான் கொலை செஞ்சேன்னு சொல்றேன். வரியாடா ஒண்டிக்கு ஒண்டி’ என்று கேட்ட முறை எந்த வகையில் சேர்ந்தது. மணப்பாக்கம் முகுந்தனின் கருத்து முழுவதும் சரி. யாருக்கு இல்லை ஆணவம், அகங்காரம். எல்லோரும் காந்தி அல்ல. ஒ.பி.ராமசாமி ரெட்டியார் சென்னை மாகான பிரீமியராக இருந்தார், அவரைச் சொல்லுங்கள் அகந்தை இல்லாதவர் என்று, ஒப்புக்கொள்ளலாம். சரி அடுத்த விஷயம். திரு மலர்மன்னன் சொன்ன கருத்து. இவர் அண்ணாதுரையுடன் இருந்தவர், பின்னர் தேசியத்தின் பால் வந்தவர். தஞ்சாவூர் அண்ணா பேரவையில் வக்கீல் வீ.சு.இராமலிங்கம் அழைத்து இங்கு வந்து பேசியவர். அவர் கூற்றுப்படி, தி.மு.க. பிளவு படாமல் இருந்திருந்தால் (1 ) காங்கிரஸ் கட்சி தன சுயத் தன்மையை இழந்து திராவிடக் கட்சியோடு இணையாமல் இருந்திருந்தால் (2 ) இன்று தேசிய சக்திகளுக்கு மரியாதை இருந்திருக்கும். இன்று உள்ள காங்கிரசார் என்று சொல்லிக் கொள்பவர்கள், கருணாநிதிக்குத் துதிபாடி பிழைப்பு நடத்தினால் போதும் என்று இருக்கின்ற நிலையில் வேறு மாற்றுக்கு யாரை நாடி போக முடியும். இனியும் துல்லியமாக எடை போடுவதை விட்டு, மக்களுக்குச் சாதகமான விளைவுகளை யாரால் கொண்டு வர முடியும் என்ற தோராயமான கணக்கைப் போடுவதே சிறப்பு.

  11. //இவர் (மலர்மன்னன்) அண்ணாதுரையுடன் இருந்தவர், பின்னர் தேசியத்தின் பால் வந்தவர். தஞ்சாவூர் அண்ணா பேரவையில் வக்கீல் வீ.சு.இராமலிங்கம் அழைத்து இங்கு வந்து பேசியவர். -ஸ்ரீ தஞ்சை வெ, கோபாலன்//

    நான் அண்ணா அவர்களுடன் நெருங்கிப் பழகியவனேயன்றி எப்போதுமே தேசிய உணர்வுடன் இருந்தவன்தான்! அதேபோல் காமராஜருடன் நெருங்கிப் பழகிய போதிலும் நான் எப்போதுமே காங்கிரஸ் ஆதரவாளனாகவும் இருந்ததில்லை! தொடக்கத்திலிருந்தே காமராஜர்போல் உறுதிப்பாட்டுடன் திராவிடக் கட்சிகளோடு உறவாடாமல் காங்கிரஸ் இருந்திருக்குமானால் இன்றைய தமிழக காங்கிரசார் இந்த அளவுக்குக் கடைந்தெடுத்த ஊழல் பேர்வழிகளாக உருமாறி தி.மு.க.வுக்குத் துணை போய்க் கொண்டிருக்க மாட்டார்கள் என்பதே நான் கருதுவது. இந்த விஷயத்தில் பா.ஜ.க. வுடனும் எனக்கு மிகுந்த மனக் கசப்பு உண்டு. காங்கிரசானாலும் பா.ஜ.க. வானாலும் வட மாநிலத் தலைவர்கள் தமிழ் நாட்டின் நிலைமை குறித்து ஆராய்வது மில்லை, கவலைப்படுவதுமில்லை! தமிழ் நாட்டிலிருந்து மக்களவைக்குச் சில இருக்கைகள் கிடைத்தால் போதும், அதற்காக திரவிடக் கட்சி எதனுடன் வேண்டுமானாலும் உறவுகொள்ளலாம் என்றுதான் நினைக்கிறார்கள்! இங்கு பா.ஜ.க. தனித்து நிற்க வேண்டிய நிலைமை வரும்போதும் சரியாகத் திட்டமிட்டுத் தேர்தல் களத்தில் இறங்குவதுமில்லை!

    தஞ்சையில் அண்ணா பேரவைக் கூட்டத்தில் நான் பேசியதை நீங்கள் முழுவதும் கேட்டீர்களா? தேசிய ஒருமைப்பாட்டில் அண்ணாவுக்குப் பின்னர் ஈடுபாடு ஏற்பட்டது குறித்தும் அண்ணா இன்றிருந்தால் முகமதிய பயங்கர வாதத்தைத் துணிந்து எதிர்த்திருப்பார் என்றும் பாப்ரி கட்டிட இடிப்பைக் குறிப்பிட்டு அதன் நியாயத்தை வலியுறுத்தியும் தக்க ஆதார்ங்களுடன் நான் பேசியது உங்களுக்கு நினைவுள்ளளதா?
    சரி, இன்றைய நிலவரத்தில் என்ன செய்யலாம் என்று கேட்டால் என்னிடம் விடை இல்லை. ஜெயலலிதாவை வைத்துத்தான் தி.மு.க.வை வீழ்த்த முடியும் என்கிற ரிசைண்ட் நிலைமைக்கு வருவதைவிட வாக்காளர்களைச் சந்தித்து ஹிந்து நலனைக் காப்பதில் உறுதிப்பாட்டுடன் இருப்பீர்களா என்று கேட்டு வாக்குக் கேட்கவரும் வேட்பாளர்களிடம் கையொப்பம் பெறுமாறு வலியுறுத்தலாம். 1991-ல் தமிழக வாக்காளர்கள் ஜெய லலிதாவை முழுக்க முழுக்க நம்பி அவருக்கு மகத்தான ஆத்ரவை அளித்தார்கள். அவர் மட்டும் இதனை உணர்ந்து பொறுப்ப்புணர்வுடன் நடந்துகொண்டிருந்தால் அன்றே கருணாநிதி காணாமல் போயிருப்பார். அவரது பிள்ளைகளும் அன்று இந்த அளவுக்கு வளராமல் இருந்ததால் வலிமை அடைந்திருக்க மாட்டார்கள். சொல்லப் போனால் கருணாநிதி ஜயலலிதாவுக்குத்தான் நன்றிக் கடன் பட்டிருக்கிறார், தனக்கு அவர் மறுவாழ்வு அளித்தமைக்காக! ஜெயலலிதா சசிகலா உறவை முற்றிலுமாகத் தலைமுழுகி, வேண்டாதவர்களை அடியாட்கள் வைத்து அடிப்பதும் பினாமி பெய்ர்களில் சொத்து சேர்ப்பதுமாக உள்ள போக்கைக் கைவிட்டும், மக்களும் கட்சிக்காரர்களும் எளிதாகக் கண்டு மனம் விட்டுப் பேசக் கூடியவராகவும் வாக்குகளுக்காக முக்காடு வேடம் தரிக்காதவராகவும் தலைக் கனம் இன்றியும் இருந்துவிட்டால் அவரை நம்பலாம்! ஆனால் இதெல்லாம் நடக்கிற காரியமா?
    -மலர்மன்னன்

  12. அன்று தி.மு.க. பிளவுபட்டதை தேசிய சக்திகள் முழு மூச்சுடன் பயன்படுத்திக் கொண்டிருந்தால் தமிழகத்தில் தேசிய உணர்வு பெருக ஒரு சாதகமான சூழல் உருவாகியிருக்கும் என்பதுதான் நான் சொல்ல வந்தது. எம்.ஜி.ஆர். மக்களின் பேராதரவுக்குரிய தலைவராக அக்கால கட்ட்த்தில் உருவெடுத்தபோது அது கண்டு மலைத்து நிற்காமல் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்கிற தத்துவத்தை (!) இடைவிடாது மும்முரமாகப் பிரசாரம் செய்வதில் காமராஜர் தமது உடல் நிலையையும் பொருட் படுத்தாது முனைந்திருக்கலாம். அப்படிச் செய்திருந்தால் ஸ்தாபன காங்கிரஸ் தமிழ் நாட்டில் பிரதான எதிர்க் கட்சியாகவாவது அக்கால கட்டத்தில் உருவாகியிருக்கும் (காங்கிரசுக்குத் தமிழ்நாட்டில் ஏற்கனவே 20-25 சதமான நிச்சய வாக்குகள் உண்டல்லவா?) . காமராஜரின் திடீர் மறைவிற்குப்பின் மூப்பனாரும் அவரது சகாக்களும் இந்திரா காங்கிரசில் ஐக்கியமாகிவிடாமல் பிடிவாதமாகத் தொடர்ந்து ஸ்தாபன காங்கிரசை நடத்தி வந்திருந்தால் நிலைமை இவ்வளவு மோசமாகியிருக்காது. தி.மு.க. முற்றிலும் கருணாநிதியின் கைப்பாவையாகிவிட்டதாலும் அவரது கவனம் முழுவதும் சுய நலத்திலேயே இருந்ததாலும் எம்.ஜி.ஆருக்கு இருந்த செல்வாக்கு அபரிமிதமாகக் காணப்பட்டதாலும் அவர் மூலமாகவே தி.மு.க. வுக்கு ஒரு முடிவு ஏற்பட்டுவிடும் அதன்பின் எம்.ஜி.ஆர். கட்சியா ஸ்தாபன காங்கிரஸா என்கிற கேள்விதான் மிஞ்சும் அது தமிழ் நாட்டுக்கு நல்லது எனக் கருதினேன். இதனை நான் காமராஜரிடம் கூறியும் அவர் தமது கட்சியினரை இரு கட்சிகளுக்கும் எதிராக முடுக்கிவிடவில்லை. அவரது கட்சியினரும் தி.மு.க.- அ.தி.மு.க. லாவணிக் கச்சேரியை வேடிக்கை பார்த்து மகிழ்வதில் பொழுதைக் கழித்து வந்தனர். ஆகவே நான் எம்.ஜி.ஆருடன் அதிக அளவில் நெருக்கமாக இருக்கலானேன் (அடிப்படையில் எம்.ஜி.ஆர். பார்ப்பன துவேஷமற்ற, திராவிடத் தாக்கமற்ற, தேசிய உணர்வுள்ளவ ராகவும் ஹிந்து விரோதியாக இல்லாதவராகவும் இருந்ததே அதற்கு முக்கிய காரணம். இதன் பயனாக ஹிந்து சமுதாயத்திற்கு என்னால் ஓரளவு சாதகமும் கிடைக்கச் செய்வது சாத்தியமாயிற்று.)..
    நடந்துபோனதைப்பற்றியெல்லாம் இப்போது பேசி என்ன பயன் என்று தோன்றலாம். அது சரியே என்றாலும் இவ்வாறான போஸ்ட்மார்ட்டம்கள் எதிர்காலச் செயல் திட்டங்களை வகுப்பதற்கு உதவுவனவாகவும் இருக்கக் கூடும்.
    தமிழ் நாட்டில் உள்ள ஹிந்து அமைப்புகள் அனைத்தும் தமக்குள் இருக்கும் சச்சரவுகள், மாறுபாடுகள் எல்லாவற்றையும் அறவே மறந்து ஒரே சக்தியாக ஒன்று திரண்டு தொகுதி வாரியாக இடைவிடாது மக்களைச் சந்தித்து அவர்களுக்கு ஒரு ஜனநாயக அமைப்பில் த்மது பொது நலனைக் காத்துக்கொள்ள என்னென்ன செயய வேண்டும், எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்கிற விழிப்புணர்வை ஊட்டினால் நிலைமை சரியாகிவிடும். அத்தகைய சந்தர்ப்பங்களில் கடந்த கால சம்பவங்களையெல்லாம் அவர்களுக்கு எடுத்துச் சொல்லவும் வேண்டியிருக்கும்.
    -மலர்மன்னன்

  13. அகங்காரம் மட்டுமில்லை.
    தோழி கும்பலின் ஊழல், தன்னை எதிர்ப்பவர்களை மிக அசிங்கமாக தாக்குவது- சுப்ர மணிய சுவாமிக்கு எதிராக கோர்ட்டில் ஆபாச அட்டகாசம், அப்போதைய தலைமை தேர்தல் ஆணையர் சேஷனை விமான நிலையத்திலிருந்து வெளியே வர விடாமல் தடுத்தது,
    ஆடிட்டரை போயஸ் தோட்டத்துக்கு அழைத்து அடித்தது ,கிட்டதட்ட இரண்டு லட்சம் அரசு ஊழியர்களை பணிநீக்கம் செய்தது, அவர்களை குண்டு கட்டாக அரசுக் குடியிருப்பிலிருந்து தூக்கி அடித்தது,முக்கியப் புள்ளிகளை மிரட்டி சொத்தை வாங்கியது,இரவோடு இரவாக கண்ணகி சிலையை அப்புறப் படுத்தியது, குயின் மேரி கல்லூரியை இடிக்க செய்த அமர்க்களம்,பத்திரிகையாளர்களை கடுமையாகத் தாக்கியது( ஹிந்து ராமை தமிழக காவல் துறை பெங்களூர் சாலைகளில் துரத்தியது சூப்பர்! )
    எல்லாவற்றிற்கும் மேலாக காஞ்சி சங்கராச்சாரியார் மீது வழக்கு ஜோடித்து ,ஊடகங்கள்,டி வீ இவற்றுக்கெல்லாம் பொய்யான தகவல்களையும் அவதூறுகளையும் சப்ளை செய்தது , அவருக்கு ஆதரவு அழித்தவர்களை ( சோ,குருமூர்த்தி ) காவல் துறையை வைத்து மிரட்டியது, அரசாங்கமே அதில் அளவுக்கு மீறிய ஆர்வம் காட்டியது, அரசே சாராயம் விற்கும் அவலத்தை அறிமுகப் படுத்தியது,தர்மபுரி கல்லூரி மாணவிகள் எரிப்பு வழக்கில் தனது கட்சியினர் சம்மந்தப் பட்டதால் அதை ஏனோ தானோ என்று நடத்தியது – போதும் போதும்.

    இந்த இரண்டு சனியன்களும் எப்போது ஒழிவது ?
    எப்போது தமிழ் நாட்டுக்கு விடிவு காலம்?

  14. மாற்று என்று மார்தட்டும் கட்சிகள் கூட தொகுதிப் பங்கீடு செய்து கொண்டு, அந்தக் கூட்டு கொள்கை அடிப்படையில் அல்ல என்று பெருமை பொங்கப் பேசும் சீர்மிகு அரசியற் பொற்காலத்தில் வாழ்கிறோம். ஜெயலலிதாவும் தவறுகளுக்கு அப்பாற்பட்டவரல்ல. ஆனால் சாதக பாதகங்களைச் சீர்தூக்கிப் பார்க்கின்ற போது அவர் சற்றே ஆறுதலான ஆட்சி தருபவர் என்பது வழக்கு.

    அவர் சங்கராச்சாரியார் மீது தொடுத்த வழக்குக்கு மூலகர்த்தா யாரென்று சுப்பிரமணிய சாமி சூசகமாகத் தெரிவித்துள்ளார். அது உண்மையென்று நம்ப சாத்தியக்கூறுகள் அதிகம். பத்திரிக்கையாளர் மீது எல்லோருமே தாக்குதல் தொக்கிறார்கள். ஜெ. சற்றே மிதமிஞ்சிச் செயல்பட்டார் என்றால், பத்திரிக்கைகள் மிகைப்படுத்தின என்பதும் உன்மை. சோ சொன்னது போல ஜெ முறைத்தால் கருணாநிதியிடம் போய் முறையிடுவது என்பது நியாயமில்லை.

    தன் கட்சியினர் சம்பந்தப்பட்ட வழக்கில் ஏனோதானோ என்றிருப்பது எல்லோருமே தானே. தா.கிருட்டிணன் கொலை, ஆலடி அருணா கொலை, லீலாவதி கொலை, 2G ஸ்பெக்ட்ரம் ஊழல் இவற்றில் திமுக, காமன்வெல்த் ஊழல், மாவோயிஸ்ட் தீவிரவாதம், காஷ்மீர் பிரிவினைவாதம், இசுலாமிய ஏகபோகம், கிறிஸ்தவ ஏகாதிபத்தியம் ஆகியவற்றில் காங்கிரசு, இதெல்லாம் தன்னலத்திற்காக அரசியல்வாதிகள் மெத்தனம் கடைப்பிடிப்பதன் உதாரணம்.

    பொதுவாகப் பலரிடம் (மதுரை, தேனி, விழுப்புரம் , திருச்சி, கோவை, பொள்ளாச்சி, திருசெல்வேலி, திருச்செந்தூர்) [population, sample எல்லாம் கணக்கு வைத்துக் கொள்ளவில்லை] பேசியதிலிருந்து என் துணிபு ஜெ ஆட்சியை மக்கள் பெரிய பிரச்சினையாகப் பார்க்கவில்லை. அதே நேரம் அவரை எம்.ஜி.ஆர் அளவுக்கு நம்பவும் இல்லை. மறவமங்கலத்தில் (சிவகங்கை அருகில் உள்ளது) ஒரு 55 வயது பெரியவர் (மாரிச்சாமி, Ex-Serviceman) சொன்ன வார்த்தைகளில் ” வாத்தியார் மாதிரி இந்தம்மா கிடையாதுப்பா. அதுக்காக மஞ்சத்துண்டார் மாதிரி மோசமும் இல்லை. எரியிற கொள்ளி தான் ரெண்டும். எலயில செத்த குளிர் காஞ்சிக்கிரலாம். வேறென்னத்த.”

  15. ஸ்ரீதர் அவர்களுக்கு, அரசியலில் வேண்டாதவர்களை அடிப்பது என்பது புதிதல்ல். நகர்வாலா கொலை, தா கி கொலை, உதயகுமார், பூலாவரி சுகுமாரன் கொலை(முக ஆட்சியில்), லீலவதி கொலை, ஜயலலிதா மீது லாரியால் மோதியது, அதிமுக அலுவலகத்தை மூடியது. எம்ஜியார், ஜயலலிதா மீது சட்ட்சபையில் தாக்குதல், பல மூத்த தலைவர்களையும் மீறி, குடும்ப உறுப்பினர்களுக்கு மந்திரிப்பதவிகள், கட்சியில் பதவிகள் என்று ஆண்வத்தின் உச்சகட்ட்ததில் இருக்கும் கருணானிதி உங்கள் கண்களுக்கு தெரியவில்லையா?. நவசக்தி, அலை ஓசை, மக்கள் குரல், தினமலர், குமுதம், துக்ளக், முக வினால் தாக்கப்பட்டது மற்ந்து விட்டதா?. சங்கரர், தண்டத்தை விட்டு விட்டு, இரவோடு இரவாக காணாமல் போனது உங்களுக்கு மறந்து விட்டதா?.கோடானு கோடி இந்துக்கள் அன்று அவமானப்பட்டு தலை குனிந்தது யாரால்? நெருக்கடி நிலையின் போது இருந்த அரசு ஊழியர்களின் நிலை, தற்போது உள்ள்தா?. அரசு ஊழியர்கள் சரியாகத்தான் ஊழியம் செய்கிறார்களா? ராஜாஜி ஹால் இடிக்கப்படலாம், குயின் மேரி கல்லூரி கூடாதா?. அங்கு அரசு சட்டமன்றம் தான் வருவதாக இருந்தது. தருமபுரி பஸ் எரிப்பு வழக்கில் அதிமுக அரசு, னகர்வாலா, தினகரன், தா கி வழக்குகள் போல் மூடி விடவில்லை. அதிமுக அனைத்து வழக்குகளையும் நீதிமன்றத்தில் சந்திக்கிற்து என்பது தான் உண்மை. இந்துக்களின் எதிரி ராம் எங்கு போனாலும், துரத்தி பிடித்து தக்க பாடம் புகட்டுவதில் தவறில்லை. தனக்கு வேண்டிய இலாகாக்களை பெறுவதில், மத்திய அரசை மிரட்டும் முக வை விடவும், அருண் நேரு, அமிதாப், போன்ற, ந்ண்பர்கள், உறவினர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் காங்கிரஸும், திமுக வும் ஆண்வத்தின், அகங்காரத்தின் உச்சனிலை என்பதை ம்ற்க்க முடியாது. இத்தாலி வணிகம், விடுதலைப் புலி ஆதரவு போன்ற தேச விரோத சக்திகளுக்கு, அதிமுக நிச்சயமாக பெட்டெர்.

  16. கருணாநிதி,திமுகவைப் பற்றி தெரிந்ததே.
    தமிழ் நாட்டைக் குட்டிச் சுவர் அடித்தது அவர்கள் தான் என்பது குழந்தைக்குக் கூடத் தெரியும்
    அதனால்தானே நாம் ஒரு மாற்றத்தைப் பற்றிப் பேசுகிறோம்?
    ஆனால் அதற்கு மாற்று அதிமுக இல்லை என்பது தான் நான் சொல்வது.

  17. அரசு ஊழியர்கள் ஊழல் செய்தால் அப்படிச் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் அதுதான் ஒரு சாதாரணமான செய்கை
    அவர்கள் அநியாயமாக வேலை நிறுத்தம் செய்தால் தொழிற்சங்க தலைவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது நியாயமான செயல்
    ஆனால் கையில் அதிகாரம் இருக்கிறது என்பதால் என்ன செய்கிறோம் என்பதே புரியாமல் நடப்பது அநியாயமான செயல்
    அவ்வாறு ஒருவர் செய்தால் அது அவரது எண்ணப் போக்கை வெளிப்படுத்துகிறது.
    அதை வைத்துத்தான் மக்கள் அவரை எடை போடுவர்.
    அதிகாரம் என்பது ‘Double-edged sword’

  18. தனிப்பட்ட ஒரு மனிதர் ஆணவம் மிக்கவராக இருந்தால் அதானல் அதிக பட்சமாக அவரது குடும்பம் அல்லது அவரோடு தொடர்புள்ளவர்கள் பாதிக்கப் படலாம்
    ஆனால் ஆட்சியாளர் ஆணவமும் அதிகார மமதையும் கொண்டிருந்தால் அது மக்களுக்கு,சமுதாயத்துக்கு, நாட்டுக்கு ஆபத்து
    அவர் பொது வாழ்வில் இருப்பதால் தானே நாம் அதைப் பற்றி விவாதிக்கிறோம்?

    நம் நாட்டில் தனி மனித ஒழுக்கம் வலியுறுத்தப் படுகிறது
    ஒருவன் ஒரு பாலியல் குற்றத்தில் ஈடுபட்டால் எல்லோரும் அவனைக் கடுமையாக விமர்சிக்கிறார்கள்
    ஆனால் அமெரிக்காவில் அதை யாரும் அவ்வளவாகக் கண்டு கொள்ள மாட்டார்கள்
    ஆனால் அதே மனிதன் தேர்தலில் நின்றால் அவனை,அவனது தனிப்பட்ட வாழ்க்கையை அக்கு வேறு ஆணி வேறாக பிய்த்துப் போட்டு அலசுவார்கள்.
    அவன் எவ்வளவு செல்வாக்குள்ள குடும்பத்தை செர்ந்தவனானாலும்,எவ்வளவு பணம் படைத்தவனானாலும் அவனை ஒதுக்கி விடுவார்கள்.
    உதாரணம்: எட்வர்ட் கென்னெடி,ராபர்ட் கென்னெடி
    அதாவது அவர்கள் சொல்வது இதுதான்- நீ உன் வாழ்க்கையை எப்படி வேண்டுமானாலும் ( மற்றவர்களுக்குத் தொல்லை இல்லாமல்)வாழு.ஆனால் மக்களை ஆள வேண்டுமானால் உனக்குச் சில அடிப்படை குணங்கள் இருக்க வேண்டும்’

    ஆனால் இங்கு தலை கீழ். தனி மனித ஒழுக்கம் வலியுறுத்தப்பட்டு அதைப் பற்றி ஏராளமாகப் பேசப் படுகிறது.
    ஆனால் பொது வாழ்வில் இருப்பவர்களின் ஒழுக்கத்தை ( அல்லது ஒழுக்கக் கேட்டை) குணாதிசயங்களை நாம் கண்டு கொள்வதில்லை.

    இது ஒரு முரண்பாடான நிலை.

  19. ஜெயலலிதா நம்பிக்கைக்குரியவர் அல்ல என்பதோடு சிலர் எண்ணுவதுபோல் துணிவு மிக்கவரும் அல்ல. எவ்வித முகாந்திரமும் இன்றி பா.ஜ.க.வின் காலைவாரி மக்களவைத் தேர்தலைத் திணித்தவர் அவர்.
    மத மாற்றத்தடைச் சட்டத்தைக் கொண்டு வந்துவிட்டு கிறிஸ்தவர் எதிர்ப்பைக் கண்டு அஞ்சி அதனைக் கைவிட்டவர். ஒரிஸ்ஸா, மத்தியப் பிரதேசம், ஹிமாசலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மத மாற்றத் தடைச் சட்டம் நடைமுறையில் உள்ளது. ஒரிஸ்ஸாவில் ஒருவர் தகுந்த சாட்சியத்துடன்தான் மதம் மாற முடியும் என்பதோடு ஒவ்வொரு தனிநபர் மத மாற்றமும் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு எழுத்து மூலமாக அறிவிக்கப்பட வேண்டும் என்றும் சட்டத்தில் விதி உள்ளது, விதி மீறல்கள் உள்ளன என்றாலும்!

    ஜெயலலிதா இச்சட்டம் அமுலில் உள்ள மாநிலங்களில் நிலைமை என்ன என்பதைக்கூட ஆலோசியாமல் தமது மத மாற்றத் தடைச் சட்டத்தை ரத்து செய்துவிட்டார்.

    வாக்குகள் பெற்றுப் பதவியைக் கைப்பற்ற எதற்கு வேண்டுமானாலும் தயாராக இருப்பவர் ஜெயலலிதா. வரப்போகும் தேர்தலில் அவர் த.மு.மு.க. என்கிற முகமதிய வன்முறைக் கூட்டத்திற்குச் சில தொகுதிகளை வழங்கக் கூடும்.

    ஜெயலலிதா பதவிக்கு வந்தால் அவரும் சசிகலா குடும்பத்தாரும் அதிகார துஷ்பிரயோகம் செய்வார்கள். கருணாநிதி வந்தாலோ அவர் குடும்பத்தார் மட்டுமின்றி கட்சிக்காரர் சகலரும் அத்துமீறி நடந்துகொள்வார்கள். இதுதான் இரண்டுக்கும் உள்ள வித்தியாசம்.
    -மலர்மன்னன்

  20. இந்தமுறை கருணாநிதி வெற்றி பெற என்னவும் செய்வார் ,இம்முறை தி மு க தோல்வியடைந்தால் பின்னர் அது காணமல் போய்விடும் .ஆகவே கடைசிவரையும் அவர் காங்கிரசை கைவிட மாட்டார் ,இதற்காக அவர் கொடுக்கும் விலை காங்கிரசுக்கு அதிக தொகுதிகள் என்பதுதான் ,அதுவும் போனமுறை கொடுக்கப்பட்டதை விட அதிகமாக இருக்கும் அவ்வளவுதான் .அடுத்தது தே மு தே க ,இம்முறை விஜயகாந்த் கூட்டணி அமைத்தால் அவர் தனது முதல்வர் கனவை கைவிடவேண்டியது தான் ,அவரின் பலமே அவர் தனித்து நிற்பது தான் ,ஆனால் விஜயகாந்த் ஜெயலலிதாவுடன் சேர்ந்தால் கட்டாயம் ஜெயலலிதா வெற்றி பெறுவார் ,என்னதான் கருணாநிதி மக்களுக்கு இலவசம் வழங்கினாலும் ,வோட்டுக்கு எவ்வளவு காசு கொடுத்தாலும் அவரால் வெற்றி பெற முடியாது ,இது கருணாநிதிக்கு நன்றாகவே தெரியும் ,ஆகவே எப்படியாவது விஜயகாந்தை தனித்து நிற்பதையே விரும்புவார் ,விஜயகாந்த் கூட்டணி சேரவேண்டும் என்போர் சொல்லும் ஒரு காரணம் அவரிடம் பணம் இல்லை என்பது தான் .இது வரை கருணாநிதி செய்த ஊழலில் ஒரு 5 வீதத்தை அதாவது ஒரு 500 அல்லது 1000 கோடி விஜயகாந்துக்கு கொடுக்கப்பட்டால் கட்டாயம் அவர் தனித்து நிற்பார்.இதைவிட போகிற போக்கில் ராமதாசும் கருணாநிதி பக்கமே சாய்வார்,ஆக dmk ,காங்,திருமாவளவன் +பணம் ஒருபக்கம் ,விஜயகாந்த் தனியாக மற்றப்பக்கம் என்று நிற்க வைகோ ,தா பாண்டியன் .கிருஸ்ணசாமி ,T R ராஜேந்தர் என ஜெயலலிதா மறுபக்கம் நிற்பார்,இங்கே ஜெயலலிதா எப்படியும் வைகோவுக்கு அதிக சீட் கொடுக்க சாத்தியம் உள்ளது அவரும் எங்கே எல்லாம் காங்கிரஸ் நிற்கிறது என்று பார்த்து சீட் வாங்குவார் ,இந்த நிலையில் கருணாநிதி தனது வேலையை காண்பிப்பார் ,அதாவது இப்போது உள்ளே இருக்கும் சீமான் வெளியே வருவார் , சீமான் அவரின் முக்கிய குறியான காங்கிரசை தாக்குவார் ,ஒருபக்கம் வைகோ மற்றும் ஆ தி மு க .மற்றப்பக்கம் சீமான் .இதைவிட தி மு க வின் உள்ளே இருந்து கழுத்தறுக்கும் வேலை (கடந்த பாராளுமன்ற தேர்தலில் தங்கபாலு ,மணிசங்கர் ஐயர் ,இளங்கோவன் போன்றோருக்கு செய்த வேலை )என்று எல்லப்பக்கதாலும் காங்கிரஸ் அடி வாங்கும் .தேர்தலில் கருணாநிதி வெற்றி பெறுவார் , தொடர்ந்து காங்கிரஸ் கூட்டணி தான் இருக்கும் ,ஆனால் பின்னர் மெதுவாக காங்கிரசை உதைப்பார்,நேரம் பார்த்து ராமதாஸ் தனது முகத்தைக் காண்பிப்பார் ,அந்த நேரம் கருணாநிதி வைகோ பற்றி தம்பி தம்பி என்று விழித்து கவிதை எழுத பலஆண்டுகளாக ஆட்சியை ருசி பார்க்காத வைகோவும் பெரியண்ணா என்று சொல்லிக்கொண்டு கருணாவுடன் ஒன்று சேர்வார் .காலா காலத்தில் ஸ்டாலின் தமிழ்நாடு முதல்வர் ஆவார் .இது தான் நடக்கும்

  21. திரு அப்துல் கலாம் கணவு காணச் சொன்னார், அதற்க்காக, இப்படியா?
    ம வ முகுந்தன்.
    சென்னை.

  22. //யாருக்கு இல்லை ஆணவம், அகங்காரம். எல்லோரும் காந்தி அல்ல.//

    நீங்கள் சொல்லும் காந்தி Barrister Mohandas Karamchand Gandhi என்ற நம்பிக்கையில் தரும் பதில் இது. (ஊருக்குள்ள ஒரு படை பட்டாளமே இருக்குப்பா காந்தின்னு பேர் வெச்சுகிட்டு!)

    1939 காங்கிரஸ் மாநாட்டில் தேர்தலில் நேதாஜியின் attack on all fronts கொள்கையால் ராஜாஜி நேதாஜியை எதிர்த்தார். காமராஜர் காந்தியை வழக்கம் போல ஆதரித்தார். முத்துராமலிங்கத்தேவர் மட்டுமே நேதாஜிக்கு ஆதரவாக பெரும்பான்மையான தென்னிந்திய காங்கிரசாரை வாக்களிக்க வைத்தார். நேதாஜி பெருவெற்றி பெற்றார். தான் ஆதரித்த பட்டாபி சீத்தாராமயா தோற்றதால் கவலை கொண்ட ‘மகாத்மா’ காந்தி அவரது உள்வட்ட குழாம் மூலம் உள்ளடி வேலைகள் செய்து நேதாஜியை வெளியேற்றினார். ஆனால் அவர் ராஜினாமா செய்ததாகச் சொல்லப்பட்டது.

    அகில இந்தியாவிலிருந்தும் சர்தார் படேல் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட போதும், உள்குத்து வேலைகள், உண்ணாவிரத மிரட்டல்கள் மூலம் சர்தார் படேலையே தன் அடிவருடி நேருவின் பெயரை முன்மொழிய வைத்தவர் காந்தி ‘மகான்’.

    இவை எடுத்துக்காட்டுகள் தான். இன்னும் இருக்கிறது சரித்திரத்தில். அப்படிப்பட்ட காந்தியாருக்கு ஆணவமில்லை அகங்காரமில்லை என்று வாடிய பூச்சரத்தையே இன்னும் எத்தனை நாட்கள் எத்தனை பேர் செவிகளில் சுற்றுவீர்கள்? Overall, M.K.Gandhi is unfit for leadership, let the analysis of his good or bad leadership rest in peace, please!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *