குமட்டவைக்கும் காங்கிரஸ் முகஸ்துதிகள்

சென்ற வார தினசரிகளில் ஒரு விளம்பரம் பார்த்தேன். அதில் திருச்சிக்கு வருகைதரும் காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தியை வரவேற்று நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் அந்த விளம்பரத்தைக் கொடுத்திருந்தார். அவர் விளம்பரம் கொடுத்ததில் ஒன்றும் தவறு இல்லை. ஆனால் அவர் திராவிடக் கட்சிகளின் பாணியில் கொடுத்திருந்த வாசகம்தான் பலரை முகம் சுளிக்க வைத்தது.

அப்படி அவர் அதில் என்ன வாசங்களை எழுதியிருந்தார்? அதை ஆங்கிலத்தில் அப்படியே கொடுத்திருக்கிறேன்…

Respectful Warm Welcome to the Rockfort City of Trichy today to Our Living BHARATMATA who spurned High Office in the footsteps of the Mahatma Longest Serving President of AICC Inspirer of Social Scheme for Aam Aadmi and Selfless Leader of India in the New Millenium. Let us Strengthen to build a Strong Self Reliant Secular and Shining India.

இந்த விளம்பரம் பார்த்ததும் நம் மனதில் பல கேள்விகள் எழுகின்றன. இது திராவிடக் கட்சியினரைப் பார்த்து காப்பி அடித்ததனால் ஏற்பட்ட கோளாறா? அல்லது நேரு, வல்லபாய் படேல், ராஜன் பாபு, காமராஜ் ஆகியோரால் வளர்க்கப்பட்ட காங்கிரஸை ஒரு திராவிடக் கட்சியாக மாற்றியதன் பலனா? தெரியவில்லை.

bharath-mathaஇதில் முரண்பாடான, உண்மைக்குப் புறம்பான பல கருத்துகள் விரவிக்கிடப்பதை சாதாரணமானவர்களும் உணரமுடிகிறது. முதலில் ‘வாழும் பாரதமாதா’ எனும் சொல்லடைவினைப் பார்ப்போம். பாரதமாதா எனும் குறியீடு சுதந்திரப் போராட்ட காலத்தில் உருவாக்கப்பட்ட சொல். நாட்டு சுதந்திரத்தின்பால் அதிக அக்கறை எடுக்காத, படிப்பறியாத, அறியாமையில் மூழ்கிக்கிடக்கும் இந்திய மக்களுக்கு எப்படி நாட்டின் சுதந்திர உணர்வை ஊட்ட முடியும் என்று சிந்தித்தபோது கிடைத்த ஒரு மந்திரச்சொல்தான் அது. வங்கத்தில் எழுதப்பட்ட ஒரு நாவலில் வந்த ‘வந்தேமாதரம்’ எனும் விழிப்புணர்வூட்டும் சொல்லை வைத்து பாரதத் திருநாட்டை ஓர் அன்னையாக உருவகப்படுத்தினால் என்ன என்று தேசபக்தர்களுக்கு ஒரு எண்ணம் தோன்றியது. படிப்பறிவோ, நாட்டறிவோ, நாம் அடிமைப்பட்டிருக்கிறோம் என்ற எண்ணமோ இல்லாமலிருந்த பாமரர்க்கு இறை பக்தி– அதிலும் கிராம தேவதைகளான மாரியம்மா, காளியம்மா, திரெளபதியம்மா போன்ற கிராமப்புற தெய்வங்களிடம் அளவுக்கதிகமான பக்தி– இருந்ததைப் பயன்படுத்திக் கொள்ள மேலுமொரு தெய்வத்தை தேசபக்தர்கள் சிருஷ்டி செய்தார்கள். அந்த புதிய தெய்வம் தான் “பாரத மாதா”. இந்தத் தெய்வத்தை வணங்கப் பயன்பட்ட மந்திரச்சொல்தான், “வந்தே மாதரம்”. இந்தப் புதிய பாரதமாதா தெய்வத்தின் உருவம், இந்திய வரைபடம் போலவே சர்வாலங்கார பூஷிதையாக ஒரு பெண் தெய்வத்தின் உருவத்தை உருவாக்கி, அந்த அன்னையின் உடல் முழுவதும் ஏராளமான பொன், வைர நகைகளை அணிவித்து, அவள் முகம் சோகத்தால் வாட, கையிலும் கால்களிலும் விலங்கு பூட்டப்பட்டிருக்க, “பாருங்கள் பாரத அன்னையை! எவ்வளவு பெருமைகளும், செல்வங்களும் மிக்க அந்த அன்னையை கையில் விலங்கிட்டு அடிமைப்படுத்தி வைத்திருக்கிறான் வெள்ளைக்காரன்!!…” என்ற முறையில் செய்த பிரசாரம் நல்ல பலனைத் தந்தது. அறியாமை இருளில் துவண்டு கிடந்த இந்திய மக்களுக்குச் சுதந்திர தாகம் உண்டாக்க இந்த பாரதமாதா உதவி செய்தது. நாடெங்கும் வந்தேமாதரம் தீயில் எண்ணை ஊற்றியது போல பற்றிக்கொண்டு எரியத் தொடங்கியது. அத்தகைய புனிதமான உருவந்தான் தேசபக்தர்கள் உருவாக்கிய பாரத அன்னை.

sonia-bharath-mathaஅந்த பாரதமாதாவாக முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியும் கூட வர்ணிக்கப்பட்டார். அதிலும் காங்கிரஸ் தலைவராக இருந்த பரூவா என்பவர் இந்திராதான் இந்தியா, இந்தியாதான் இந்திரா என்ற வகையில் முகஸ்துதி செய்தார். ஆனால் இன்று அவை எல்லாவற்றையும் தோற்கடிக்கக்கூடிய வகையில் ஒரு விளம்பரம் வந்திருக்கிறது.

சரி! இப்போது “வாழும் பாரதமாதா” எனும் சொல்லுக்குப் பொருள் பார்க்கலாம். சோனியா காந்தி வாழும் பாரதமாதா என்றால், வாழாத அல்லது மாண்டுபோன பாரதமாதா என்று ஒருவர் உண்டா? அப்படியென்றால், அன்று மக்கள் கொண்டாடிய பாரதமாதா இறந்து போய்விட்டாளா. இன்று இருக்கும் சோனியாதான் வாழும் பாரதமாதாவா? புரியவில்லை. வேறு யாருக்காவது புரிந்தால் சற்று விளக்குங்கள்.

sonia-the-bossஅடுத்ததாக பதவியை வேண்டாமென்று தூக்கி எறிந்துவிட்டு மகாத்மா காந்தியின் அடிச்சுவட்டில் இருப்பவர் என்கிற துதி வேறு. ராஷ்ட்டிரபதி மாளிகைக்குள் நுழையும் வரையில் தனக்கு இத்தனை உறுப்பினர் ஆதரவு இருக்கிறது என்று மக்களுக்கு வெற்றிச்சின்னம் கைகளால் காட்டிவிட்டுச் சென்ற சோனியா திரும்பி வரும்போது வாடிய கத்தரிக்காய் போல முகத்தைச் சுறுக்கிக்கொண்டு எனக்குப் பதவி வேண்டாம் என்று அறிவித்ததின் பின்னணி என்ன, உண்மை என்ன என்பதை மக்களுக்குத் தெரிவிக்க வேண்டாமா. இதில் மகாத்மா காந்திக்கு ஒப்புவமை வேறு. மகாத்மா சுதந்திரம் நெருங்கி வருவதை உணர்ந்தபோது சொன்ன கருத்து, “சுதந்திரம் வருவது நிச்சயமாகிவிட்ட இந்த நிலையில், எனது கவலையெல்லாம் நம் மக்கள் இந்த சுதந்திரத்தை எப்படிப் பேணி காக்கப் போகிறார்கள்,” என்பதுதான். அந்த நிலையில் 1947 ஆகஸ்ட் 15-இல் இந்தியா சுதந்திரம் அடைந்த நேரத்தில் டெல்லியில் யார் யாருக்கு என்ன பதவிகள் என்று கூறுபோட்டுக் கொண்டிருந்த போது இவர் மேற்கு வங்கத்தில் நவ்காளியில் நடைபெற்ற இரத்தக் களறியில் சமாதானம் பேசிக்கொண்டு, உண்ணாவிரதம் இருந்துகொண்டு, நாட்டு மக்களோடு மக்களாக இருந்தார் என்பதை சரித்திரம் படித்த எவரும் மறந்துவிட முடியாது. இந்த இரண்டும் ஒன்றா? தெரியவில்லை. தெரிந்தவர்கள் சிறிது விளக்குங்கள்.

sonia_gandhi_caricatureஅடுத்ததாக, “காங்கிரஸ் தலைவர் பதவியில் நீண்ட காலம் இருந்தவர்” என்கிற புகழாரம். அதுசரிதான். காங்கிரஸ் சரித்திரம் 1885-இல் தொடங்கப்பட்ட காலம் முதலாக இரண்டாம் உலகப் போர் காலத்தில் சில ஆண்டுகள் தவிர மற்ற எல்லா ஆண்டுகளிலும் கூடி புதிய தலைவரை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி மாநாட்டில் பதவி ஏற்கச் செய்தனர். ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் மாதம் காங்கிரஸ் மாநாடு கண்டிப்பாக நாடு முழுவதிலிருந்து வரும் பிரதிநிதிகள் ஒன்றுகூடி வருமாண்டில் தாங்கள் செய்யப்போகும் வேலைகளுக்கு பட்டியலிட்டு ஒரு தீர்மானம் கொண்டு வருவார்கள். அதற்கு ஓரிரு மாதங்கள் முன்பாக காங்கிரஸ் காரியக் கமிட்டி கூடி அந்த மாநாட்டின் தலைவர் யார், வருமாண்டில் செய்யவேண்டிய பணிகள் இவை குறித்து முடிவுசெய்து, அந்தத் தீர்மானத்தை டிசம்பரில் நடக்கும் மாநாட்டில் முன்மொழிந்து தீர்மானத்தை நிறைவேற்றுவார்கள். அப்படிச் செய்யும்போது ஒவ்வோராண்டும், தவிர்க்கமுடியாமல் போகும் ஆண்டுகள் தவிர, புதிய தலைவர்களே வருவது வழக்கம். காரியக் கமிட்டியில் தேர்ந்தெடுக்கப்படும் தலைவர், மாநாட்டுக்குத் தலைமை வகிப்பதோடு, மறு ஆண்டு முழுவதும் கட்சியின் தலைவராக இருப்பார். தலைவர்கள் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியில் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இன்று? சொல்லுங்கள்? ஹிட்லரும், முசோலினியும், ஸ்டாலினும், குருஷேவும், மாவோவும் பல்லாண்டுகள் தங்கள் நாட்டின் தலைமையில் இருந்திருக்கிறார்கள். இவர்களும் அந்த நாள் காங்கிரஸ் கமிட்டித் தலைவர்களும் ஒன்றா? இப்படியே போனால், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பாரம்பரிய முறைப்படி காரியக் கமிட்டி, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி இவை கூடாமல் வாழ்நாள் முழுக்கக்கூட தலைவராக யாரால் வேண்டுமானாலும் இருக்க முடியும். நமக்குப் புரியவில்லை.

kamaraj-childrenஅடுத்து, சுயநலமில்லாத பெருந்தலைவர், ஏழை எளிய மக்களின் பங்காளர், இப்படியெல்லாம் புகழாரம். காமராஜரைச் சொன்னார்கள், ‘ஏழைப் பங்காளர்’ என்று; கல்விக்கண் திறந்தவர் என்று; பகலுணவு கொடுத்த கிராமங்கள் தோறும் பள்ளிக்கூடங்களைத் தொடங்கியவர் என்று. மக்கள் ஏற்றுக் கொண்டனர். ஏன்? அதுதான் உண்மை. அந்த ஏழைப்பங்காளர் கொடுத்த சலுகைகள், திட்டங்கள் இவற்றால் சாதாரண மக்கள் பயனடைந்தார்கள். அவர் காலத்தில் படிக்கத் தொடங்கியவர்களின் குடும்பத்தில் அவர்கள்தான் முதன்முதலில் பள்ளிக்கூடம் சென்றவர்களாக இருப்பார்கள். அப்படிப் பயனடைந்தவர்கள் அடித்தட்டில் உழன்று கிடந்த காலம் மாறி பல உயர்ந்த பதவிகளில் அமர்ந்தார்கள். அப்படி அவர்கள் உச்சத்துக்குச் சென்ற போது நன்றி மறவாமல் அந்த உத்தமத் தலைவன்- காலா காந்தி என அழைக்கப்பட்ட- காமராஜை வாழ்த்தினார்கள். அவர் இறந்தபோது, தன் சொந்தத் தந்தையை இழந்தது போல் உணர்ச்சிவசப்பட்டு மயங்கியவர்களையும் பார்த்திருக்கிறோம். யார் இப்போது ஆம் ஆத்மிக்கு உதவுபவர்கள், யார் சுயநலம் இல்லாதவர்கள்? தனக்கென்று ஒரு குடும்பம் இல்லாத காமராஜா? வேறு யாராவதா? தன் தாய் தன் வீட்டுக்கு விருதுநகர் நகராட்சி கொண்டு வந்து இணைத்த குடிநீர் குழாயை யாரைக் கேட்டு வைத்தீர்கள் என்று உடனடியாக கழற்றச் சொன்னவர் காமராஜ். அன்னைக்கு ஓர் ஐம்பது ரூபாய் அதிகமாக மாதாமாதம் கொடுக்கக்கூடாதா என்று கேட்ட நண்பர்களிடம், அப்படிக் கொடுத்தால் அவர் அதையும் செலவு செய்துவிடுவார். தற்போது கொடுக்கும் மாதம் நூறு ரூபாயே போதும் என்று சொன்ன காமராஜ சுயநலம் இல்லாதவரா, வேறு யாராவதா? தெரியவில்லை.

congressபுத்தாயிரமாண்டின் விலை மதிப்பில்லாத சுயநலமற்ற தலைவராம். முகஸ்துதி அதிகமானால் நகைச்சுவையாக மாறிவிடும். திராவிடக் கட்சிகள்தான் தங்கள் தலைவர்களை என்னவெல்லாமோ சொல்லி முகஸ்துதி செய்கிறார்கள் என்றால், தேசிய கட்சியான காங்கிரஸுமா அந்தப் பாதையில் பயணிக்க வேண்டும். ‘என் இதயமே’, ‘ என் மூச்சுக்காற்றே’, “என் சுவாசமே’, ‘என் முகவரியே’ இப்படியெல்லாம் படிக்கும்போது உங்களுக்கு என்ன தோன்றுகிறது. ஒருவன் கடுமையாக வாழ்நாள் முழுவதும் உழைத்தும் வாய்க்கும் கைக்குமாக வாழ்க்கை முடிந்து விடுகிறது. ஆனால் அதே நேரம் அவனுக்குத் தெரிந்த ஒருவன், ஒன்றுமே இல்லாமல் அடுத்த வேளை சோற்றுக்கு வழியில்லாமல் இருந்தவன் இன்று கார், பங்களா, கணக்கில்லாத வங்கி இருப்புத் தொகை, அந்நிய நாட்டு வங்கிகளில் முதலீடு, பல துணைவிகள் என்று வாழ்வதைப் பார்த்து, உழைக்கும் நல்ல உத்தமனும் அப்படி வாழ நினைத்தால் அது சரியான வழிதானா? மகாத்மாவின் பெயரையும், நேரு, படேல், ராஜாஜி, காமராஜ் ஆகியோரின் பெயரையும் சொல்லும் அருகதை இவர்களுக்கு இருக்குமா என்று நினைத்துப் பார்க்க வேண்டும்.

bharath-matha1

இவர்கள் கட்சி நடத்தவோ, பிழைப்பு நடத்தவோ என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும். நமக்குக் கவலை இல்லை. ஆனால் தெய்வத்துக்கு நிகராக மக்களால் போற்றப்பட்ட, இந்த நாட்டுக்காக அனைத்தையும் தியாகம் செய்த மாபெரும் பெரியோர்களின் பெயரோடு தங்களையும் இணைத்துக் கொண்டு அவர்களுடைய இமேஜுக்குக் களங்கம் ஏற்படுத்தி விடாதீர்கள் என்று இவர்களைக் கும்பிட்டுக் கேட்டுக் கொள்வதுதான் நாம் செய்யமுடியும். தங்கள் வளர்ச்சிக்காக, தங்கள் ஆதாயத்துக்காக இவர்கள் செய்யும் இதுபோன்ற விளம்பரங்கள் பெரியோர்களை இழிவு செய்வதாக அமைந்துவிட வேண்டாம். உணர்ச்சிவசப்படாமல் இவர்கள் சிந்தித்துப் பார்ப்பது நல்லது. காங்கிரஸுக்கு இந்தப் பாரம்பரியம் கிடையாது என்பதை உணர்ந்தால் போதும்.

ஒரு தேசியவாதி என்ற முறையில் என் வேண்டுகோள் இதுதான்.

11 Replies to “குமட்டவைக்கும் காங்கிரஸ் முகஸ்துதிகள்”

  1. காங்கிரஸ் என்பது தனி மனித ஆதாயத்துக்காக யார் வேண்டுமானாலும் நுழையக் கூடிய ஒரு கூடாரம்
    அதற்கென்று எந்த உயரிய கொள்கையும் இல்லை
    அது நேரு குடும்பத்தின் கம்பனி .
    முதலாளியை ஸ்தோத்திரம் செய்தால் ‘ஏதாவது’ கிடைக்கும்.

  2. Sonia is one of the most powerful woman in the world, today. She is in such a position that she has the utmost power with absolutely no responsibiltiy or accountablity. Any thing good done by the govt., then the credit goes to her, saying that only because of guidance and leaderfship, it was achived. If anything goes wrong, she is not in the picture as she does not have any responsibile or accountable post. There are scape goats like the dummy PM who takes the blame.

    But we should realize that, Power without responsibility is very dangerous and not sure when we Indians will wake up to this.

  3. Before 1947, the British used to keep a person called Resident Officer in each of the 562 princely states to keep a check on their activities. Similarly they created INC to keep the Indians away from nationalist forces. Its policy was always to eulogize white skins and their rule. There is no wonder that the same tendency continues till today.

  4. உலகத்திலேயே ஒரு நாட்டின் விடுதலைக்காகப் பாடுபடுவதாகக் கூறிக்கொண்ட எந்தக் கட்சியும் பாரதத்துக்கு காங்கிரஸ் செய்த அநீதிகள், அக்கிரமங்கள் போல் செய்ததே இல்லை.
    இது மிகவும் துரதிஷ்ட வசமானது.
    காங்கிரஸ் மட்டும் இல்லாதிருந்தால் பாரதம் சற்று தாமதமாக விடுதலை அடைந்திருக்கலாம்
    ஆனால் இவ்வளவு இழப்புகளையும்,இழிவுகளையும் சந்தித்திருக்காது.
    காங்கிரசை ஆரம்பித்த வெள்ளையர்கள் எவ்வளவு தந்திரசாலிகள் என்பது புரிகிறது.

  5. Most of the Congressmen neither have self-respect nor do they have a bit of self-esteem. They, including their very senior leaders, have no qualm in calling an immature and inexperienced person called Rahul Gandhi as their undisputed leader. For the Nation’s sake, the Congress party should be immediately disbanded or the Indian people should throw this party of criminals into the seven seas.. The frauds committed by the Congress party along with its self serving and short sighted policies in their more than 50 years of misrule (Take any issue viz. Kashmir, fake secularism, casteist politics, systematic undermining of constitutional institutions……..have taken this Great Nation to precarious and perilous situations.
    As for the Congressmen of Tamil Nadu State, they are being ungrateful and doing inexonerable disservice to the memory of late but great leaders like Bhaktavatsalam, K Kamaraj, Kakkan et al. Probably their long but shameless friendship with the chauvinistic, narrow minded and parochial regional parties has contaminated their mindset too. பன்றியுடன் சேர்ந்த கன்றும் மலம் தின்னும் என்பதைப்போல! All the dirty habits of cut-out culture, sychophancy, corruption, promotion of worthless dynasties, groupism, rowdism, and what not have become inherent lifestyle of many Congressmen. Sooner the Nation get rid of this dirty Congress from every state, the better.
    Jai Hind! Vande Mataram!

  6. Pingback: Indli.com
  7. அந்தோனியோ சோனியா மைனோ என்கிற சோனியா காந்தி ராஜீவ் காந்தியை திருமணம் செய்தது 1968 -ம் ஆண்டு. கணவர் கரம் பற்றி இத்தாலியிலிருந்து இந்தியா வந்தவர் உடனடியாக இந்தியக் குடியுரிமை பெற முயன்றிருக்க வேண்டும். ஐந்து ஆண்டுகள் கழித்து (1973) விண்ணப்பித்திருந்தால் அப்போதே இந்தியக் குடிமகளாக ஆகி இருக்கலாம். அவரது மாமியார் தான் பிரதமர். அவர் நினைத்திருந்தால், இந்தியா வந்தபோதே இந்தியக் குடிமகளாகி இருக்கலாம். ஆனால் ஆகவில்லை. ஏன்?

    16 ஆண்டுகள் கழித்து 1984 -ல் தான் அவர் இந்தியக் குடியுரிமை பெற்றார். ஏன்? ஏனெனில் அவரது கணவர் பிரதமராக வேண்டி இருந்தது. அதாவது சோனியா என்றும் தனக்காக (சுயநலம் அற்றவர் அல்லவா?) செயல்பட்டதில்லை! கேப்பையில் நெய் வடிகிறது என்றால், கேட்க ஆள் இருக்க வேண்டும். நம் நாட்டிலோ அதற்கு ஒரு கட்சியே இருக்கிறது, காந்தி பெயரைச் சொல்லிக்கொண்டு!

    அத்தகைய தேசபக்தையைத் தான் பாரத மாதாவாக உருவகித்து மகிழ்கிறார்கள் சுரணையற்ற காங்கிரஸ்காரர்கள். பதவிப்பித்தர்கள் வசம் சிக்கிக்கொண்டு அல்லலுறும் பாரதமாதாவை எண்ணித்தான், ‘நெஞ்சு பொறுக்குதில்லையே, இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்” என்று பாரதி பாடினாரோ?

  8. sonia is not the most powerful woman in the world.
    It is a cunning propaganda spread by the christian media which we Hindus repeat parrotlike.
    she is a cunning,scheming manipulator who plays on the gullibility of the Hindus and the utterly corrupt congress and other parties like the DMK,BSP,RJD,Trinamool,NCP,etc to govern Bharat through the backdoor.
    I bet she cannot get even hundred votes if she talks logic and sense.
    All she does is shouting in broken Hindi form the foolish scripts written by congi chamchas.
    She has never spelt out her visions and plans for Bharat.
    In fact does not have any and she does not care.
    She has never addressed a press conference.

  9. இம்மாதிரியாய் உருவகப்படுத்தப்படுவதர்க்குத் தனக்கு அருகதை இல்லை என்பதை அதே சோனியா காந்திதான் அக்கட்சியின் அடிமைகளுக்குத் தெரியப்படுத்தவேண்டும். ஆனால், காங்கிரஸ் கட்சியில் சோனியா காந்தியின் அடிமைகள் மாதிரி நடிப்பவர்கள், சமுதாயத்தில், பணமுதளைகளாக இருப்பதே, காங்கிரஸ் கட்சியின் பண உதவிகளால் தான். காமன் வெல்த் போட்டி என்று கூறிக்கொண்டு, ச்விச்ஸ் வங்கிகளிலிருந்து தேர்தலுக்குப் பணம் போட்டு எடுப்பதற்காகவே, பெரும் பணம் கொள்ளையடிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *