மையொற்றி மகானுபாவர்களின் மயக்கப் புலம்பல்

ayodhya_verdictஎழுதியவர்கள்: ப்ரவாஹன் & ஜி. சாமிநாதன்

அண்மையில் வெளிவந்த ராம ஜன்மபூமி (பிறந்த இடம்) வழக்குத் தொடர்பான உயர் நீதிமன்றத் தீர்ப்பில், அயோத்தியில் ராம ஜன்மபூமி என்று இந்துக்களால் கருதி வழிபடப்படும் இடமே அது என்பதை நீதிபதிகள் ஏற்றுக்கொண்டு தீர்ப்பு வழங்கியுள்ளனர். இதைக் குறிப்பிட்டு விமர்சித்துள்ள தமிழக முதல்வர் மு. கருணாநிதி, லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு கிருத யுகத்தில் ராமர் பிறந்த இடத்தையே கண்டுபிடிக்க முடிகிறது; ஆனால், 1,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ராஜராஜ சோழன் எப்படி இறந்தான் என்பதையோ, அவன் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தையோகூட கண்டுபிடிக்க முடியாத நிலை உள்ளது என்று புலம்பியிருக்கிறார்.

இந்தப் புலம்பல் ஒரு பாமரனிடமிருந்து வந்திருந்தால் அதைப் புரிந்துகொள்ளலாம். ஆனால், இந்திய அரசையே ஆட்டிப் படைக்ககூடிய அளவுக்கு அதிகாரத்துடன் கோலோச்சும் ஒருவர், “என் சோகக் கதையைக் கேளு உடன்பிறப்பே” என்று இப்படிப் புலம்புவதுதான் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.

முதலாவதாக, கிருத யுகத்தில் ராமர் இந்த இடத்தில்தான் பிறந்தார் என்று நீதிமன்றம் தீர்ப்பில் குறிப்பிடவில்லை. ராமர் பிறந்த இடமென்று இந்திய நாட்டில் இந்த ஓர் இடத்தைத்தான் நீண்ட காலமாக நம்பி வருகின்றனர். இது யாரோ ஒருவரால் திணிக்கப்பட்ட நம்பிக்கையோ, அரசியல் காரணங்களுக்காகத் தூண்டிவிடப்பட்ட உணர்வோ அன்று என்ற வரலாற்று உண்மையை உயர் நீதிமன்றம் அங்கீகரித்திருக்கிறதே தவிர, கி.மு. 17,33,856ஆம் ஆண்டில் சித்திரை மாதம் நவமி திதியில் புனர்பூச நட்சத்திரத்தன்று கடக லக்னதில் ராமர் அயோத்தியில் இந்த இடத்தில்தான் பிறந்தார் என்று நீதிமன்றம் குறிப்பிட்டுவிடவில்லை.

அடுத்ததாக, ராமர் பிறந்த இடத்தையேகூட தீர்மானித்துவிட முடிகிறது என்றும், இது ஆரியர்கள் விதைத்த மூட நம்பிக்கை என்றும் வேறு திருவாய் மலர்ந்தருளியிருக்கிறார் திருக்குவளையார். அவர், “உடன் பிறப்பே” என்று விளித்தெழுதுகின்ற மடல்களையெல்லாம் கோடிகளில் புரளும் அவரது சிஷ்ய கேடிகள் வேண்டுமென்றால் சிலாகித்துக் கொண்டிருக்கலாம். ஆனால், தமிழக வரலாற்றிலும், இந்திய வரலாற்றிலும் ஓரளவு அறிவுபடைத்த எவரும் இவருடைய உபதேசத்தில் உள்ள அபத்தத்தை எளிதில் புரிந்துகொள்வர். ஆரிய, திராவிட என்ற சொற்கள் மொழியியல் சார்ந்த சொற்களாகும். இன அடிப்படையில் இந்தியாவில் எந்த ஒரு சாதியையோ, சமூகக் குழுவையோ ஆரியர் என்றும் திராவிடர் என்றும் பிரித்து அடையாளம் காட்டிவிட முடியாது.

‘மனோகரா’ கால கட்டத்திலே “கணவாய் வழியாக வந்த கூட்டம்” என்று இவர் எழுதிய கனல் தெறிக்கும் வசனங்கள், அரைகுறைத் தமிழறிவு கொண்ட தம்பியர் கூட்டத்திடையே பலத்த கைத்தட்டலைப் பெற்றுத் தந்திருக்கலாம். ஆனால், இன்றோ அவரும், அவருடைய திராவிட சிஷ்ய கேடிகளும் முதுமை எய்தி விட்டவர்கள். ஆரிய, திராவிட மொழிக் குடும்பங்கள் மட்டுமின்றி முன்னிலை ஆஸ்திரலாய்டு எனப்படும் முண்டா மொழி குடும்பமும், மான்க்மேர் மொழிக் குடும்பமும் கூடத்தான் இந்தியாவிலும், தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் உள்ளன. இந்த மொழிக் குடும்பங்களைச் சார்ந்த பல்வேறு மொழிகளைப் பேசுவோர் அனைவரையும் அந்தந்த மொழி சார்ந்த இனப் பிரிவினராக நம்மால் அடையாளம் காண இயலாது.

‘கரிய செம்மல்’ என்று கம்பனால் வர்ணிக்கப்படுகின்ற ராமன் நிறத்தாலும், உடல் தோற்றத்தாலும் இந்தோ – ஐரோப்பிய உடலமைப்புக் கொண்டவனாக விவரிக்கப்படவில்லை. ‘ஆஜானுபாகு’ – அதாவது, முழங்காலை எட்டுகின்ற நீண்ட கைகள் உடையவன் ராமன். அண்மைக் கால வரலாற்றில் அத்தகைய நீண்ட கைகளைக் கொண்டிருந்தவர் பெருந்தலைவர் காமராஜ் அவர்கள் ஆவார். இத்தகைய காமராஜரைத்தான் கருமுண்டம், கள்ளத் தராசு என்றெல்லாம் திராவிட சிஷ்ய கோடிகள் திட்டித் தீர்த்துக் கொண்டிருந்தார்கள்.

Courtesy: Kumudam
Courtesy: Kumudam

காமராஜருடைய உடலமைப்பைப் போன்று நீண்ட கைகளும், நிறமும் கொண்ட ராமன் திராவிட சிஷ்ய கோடிகள் கண்ணோட்டத்தில் ஆரியன். சாமகானப் பிரியனும், புலஸ்திய ரிஷி கோத்திரத்துப் பிராமணனுமான ராவணன் இவர்கள் கண்ணோட்டத்தில் திராவிடன். ராஜஸ்தானிலுள்ள ஜெய்பூரில் வாழ்கிற ஸ்ரீமாலி பிராமணர்கள் ராவணனைத் தங்கள் குல முன்னோனாகக் கருதி இன்றும் வழிபட்டு வருகின்றனர். அவ்வூரில் ராவணனுக்குக் கோயிலே உள்ளது. திராவிட சிஷ்ய கோடிகள் மேலும் அறிந்துகொள்ள, “சத்திரிய இராமனும் பிராம்மண இராவணனும்” என்ற கட்டுரையைப் படிக்கவும்.

கருணாநிதியின் மேற்கண்ட புலம்பலின் அடுத்த அம்சத்தைப் பார்ப்போம். ராமன் பிறந்த இடம் நீதிமன்றத்தால் உறுதிப்படுத்தப்பட்டுவிட்டது என்று புலம்பிய கருணாநிதி, அதே குரலில் ராஜராஜன் இறந்த இடம், அடக்கம் செய்யப்பட்ட இடம் ஆகியவற்றை இன்றுவரை கண்டுபிடிக்க இயலவில்லை என்று புலம்புகிறார். ராஜராஜ சோழன் அடக்கம் செய்யப்பட்ட இடம் கும்பகோணத்திற்கு அருகிலுள்ள உடையாளூர் என்ற ஊரில் உள்ளது என்று அந்த இடத்தையும் அடையாளம் கண்டு, மறைந்த வரலாற்று அறிஞர் குடந்தை சேதுராமன் அவர்கள் 15 ஆண்டுகளுக்கு முன்பே கட்டுரைகள் எழுதியுள்ளார். தஞ்சையிலுள்ள தமிழகத் தொல்லியல் கழகத்தால் வெளியிடப்படும் ஆவணம் (இதழ் 4, சனவரி 1994) இதழில் அவருடைய கட்டுரை வெளிவந்துள்ளது.

இக்கட்டுரை வெளிவந்த பிறகு, 1996இலிருந்து 2001 வரை கருணாநிதிதான் முதலமைச்சராக இருந்துள்ளார். மீண்டும் 2006 முதல் இன்றுவரை முதலமைச்சராக இருக்கிறார். சென்ற முறை ஆட்சியில் இருந்தபோது மத்தியில் ஆட்சி செய்த பாரதிய ஜனதாவையும், இப்போது மத்தியில் ஆட்சி செய்யும் காங்கிரஸையும் ஆதரித்துத் தான் நினைத்ததை எல்லாம் சாதித்துக் கொண்டுதான் வருகிறார். அப்படி இருக்கையில், ஏதோ ஆரியச் சூழ்ச்சிதான் இவருடைய எண்ணங்களையெல்லாம் நிறைவேற விடாமல் தடுத்துக்கொண்டிருப்பதாவும், “யார் ராஜராஜன், அவன் எங்கே செத்தால் எங்களுக்கு என்ன?” என்று டெல்லி அரசு அலட்சியப்படுத்திவிட்டது போலவும் பேசுவது அற்பத்தனமான அரசியலே தவிர, இதில் அணுவளவும் உண்மை இல்லை.

400 கோடி ரூபாய்கள் செலவழித்துச் செம்மொழி மாநாடு நடத்த முடிகிறது. உலகத் தமிழாய்வுக் கழகத்தின் தலைவர், ஜப்பானியத் தமிழ் அறிஞர் கராஷிமாவின் நியாயமான வேண்டுகோளையும் புறந்தள்ளி, உலகத் தமிழ் மாநாடு என்ற பெயரை மாற்றி, உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு என்று பெயர் சூட்டி, இந்தியக் குடியரசுத் தலைவியார் அவர்களை அழைத்துவந்து, கூத்துகளையும் கேளிக்கைகளையும் அரங்கேற்றி அரிய சாதனையைச் சாதித்துவிட்டது போன்ற மகிழ்ச்சியில் திளைக்கின்ற தமிழக முதல்வர், ராஜராஜன் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தை (பள்ளிப்படையை) மட்டும் கண்டறிவதற்கு என்ன நடவடிக்கை இதுவரை எடுத்துள்ளார்? எதுவுமே இல்லை என்பதுதான் உண்மை.

rajaraj_chola_and_karuvurar_thanjai_paintingகுஜராத் மாநிலம் அகமதாபாத் சாராபாய் அருங்காட்சியகத்தில் உள்ள சோழ மன்னன் சிலையாகட்டும், அண்மையில் மயிலாடுதுறை அருகிலுள்ள கழுக்காணிமுட்டத்தில் கண்டறியப்பட்ட 85 ஏடுகள் கொண்ட சோழர் செப்பேட்டுத் தொகுதியாகட்டும், இதைப்பற்றி கருணாநிதிக்கு ஒன்றும் தெரியாது என்பது வரலாற்று ஆய்வாளர்களுக்குத் தெரிந்த உண்மையாகும். இது ஒன்றும் தேவ ரகசியமல்ல். சிதம்பர ரகசியம்தான். (மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்துடன் தொடர்புபடுத்தி எவரும் புரிந்துகொள்ள வேண்டாம்.)

தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் முன்னாள் இயக்குனர் இரா. நாகசாமி, கழுக்காணிமுட்டம் செப்பேட்டின் சமஸ்கிருதப் பகுதியையும், தமிழ்ப் பகுதியையும் படித்து எழுதிக் கொடுத்த வாசகங்களை அப்படியே பிரதி எடுத்து, அதைத் தமது பெயரில் வெளியிட்டுக் கொள்வது என்பது விசித்திரம்தான். கல்வெட்டுகளை வெள்ளைத் தாளில் ‘டேபர்’ என்ற மையொற்றி கொண்டு பிரதியெடுப்பது கல்வெட்டு ஆய்வாளர்களின் வழக்கம். ஒரு கல்வெட்டு ஆய்வாளர் எழுதியதை அப்படியே பிரதியெடுத்து இருக்கிறாரென்றால், அது மையொற்றிப் (டேபர்) பிரதிதானோ என்ற ஐயம் ஏற்படுகிறது.

உடையாளூரில் தனியாருக்குச் சொந்தமாக உள்ள குறிப்பிட்ட இடத்தை உரிய நஷ்ட ஈடு கொடுத்து கையகப்படுத்துவது அல்லது அது ராஜராஜ சோழனின் பள்ளிப்படை இருந்த இடம்தான் என்று தொல்லியல் அகழ்வாய்வுகளின் மூலம் உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில் மட்டுமே அதைக் கையகப்படுத்துவது, எதிர்பார்த்த அளவுக்குக் சான்றுகள் ஏதும் கிட்டாவிட்டால் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்படும் கால கட்டத்திற்கான நஷ்ட ஈட்டுத் தொகையைத் தனியாருக்கு வழங்குவது – இப்படி ஏதோ ஒரு வகையில் குறிப்பிட்ட இடத்தில், உரிய நிபுணர்களைக் கொண்டு தொல்லியல் ஆய்வு மேற்கொள்வதை யார் தடுத்தார்கள்?

வரலாற்று உண்மைகளைக் கண்டறிவதில் இவருக்கோ, இவருடைய அரசுக்கோ எந்த வித முனைப்பும் இல்லை என்பதே உண்மை. ஏனென்றால், உண்மைகள் என்றைக்குமே பிரச்சாரம் செய்வதற்கு உதவியாக இரா. வரலாற்றை மர்மமாகவே வைத்திருந்தால்தான் லெமூரியா என்றும், குமரிக் கண்டம் என்றும், ஆதித் தமிழரின் தாயகம் என்றும் இன்னும் பல ஆண்டுகளுக்குக் கதை சொல்லிக்கொண்டிருக்கலாம். கடல் வற்றும்படி வேல்விட்ட திருவிளையாடல் போல, கடல் கொண்ட குமரிக் கண்டம் போன்ற கதைகளை வைத்தே பல திருவிளையாடல்களையும், கூத்துகளையும், காட்சிகளையும் அரங்கேற்றிக் கொண்டிருக்கலாம். கடலில் கரைத்த பெருங்காயம் போல மக்களுக்குரிய நிதியையும் கரைத்துக்கொண்டிருக்கலாம்.

இதில் இன்னொரு முரண்பாடான விஷயமும் இருக்கிறது. சோழர்கள் தங்களைச் சூரிய குலச் சத்திரியர்கள் என்று சொல்லிகொண்டார்கள். ராஜராஜ சோழனுக்கு 37 பட்டப் பெயர்கள் இருந்தன. அவற்றில் ரவிகுல மாணிக்கம், சத்திரிய சிகாமணி என்பவையும் அடங்கும். இப்படிப்பட்ட சூரிய குல சத்திரியர்களை மொழி அடிப்படையில் தமிழர்கள் என்று நாம் ஏற்றுக் கொண்டாலும்கூட, அவர்கள் ராமனோடு தங்களுக்கிருந்த பூர்விகத் தொடர்பைப் பறைசாற்றிக் கொண்டார்கள் என்பதையும் நாம் மறந்துவிட முடியாது.

சில சோழ அரசர்கள் இலங்கையின்மீது படையெடுத்து வெற்றி கண்டபோது தங்களை “த்விதிய (இரண்டாவது) ராமன்” என்றே அழைத்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மணமேல்குடியிலிருந்துதான் இலங்கைக்குப் படையெடுத்துச் சென்றார்கள். “இதிகாச காலத்து ராமன் கடலை அடைத்து அணை (சேது) கட்டி அதன்மீது நடந்துசென்று இலங்கையை வென்றான். நாங்களோ கடலை அடைத்து அணை கட்டாமலேயே இலங்கையை வென்றோம்” என்றும் பெருமிதத்துடன் குறிப்பிட்டுக் கொண்டார்கள். புதுக்கோட்டை மாவட்டத்தின் அக்குறிப்பிட்ட பகுதிக்கு “கடல் அடையாது இலங்கை கொண்ட சோழ வளநாடு” என்றே பெயர் சூட்டப்பட்டது.

முதல் ராஜேந்திர சோழனின் கங்கைப் படையெடுப்பு சரித்திரப் பிரசித்தி பெற்றதாகும். அவனுடைய கங்கை வெற்றிக்குப்பிறகு, தன்னுடைய பிள்ளைகளுக்கு சோழ பாண்டியன், சோழ கேரளன், சோழ லங்கேஸ்வரன் என்றெல்லாம் பட்டம் கொடுத்து முறையே அந்தந்த நாடுகளை ஆள்வதற்கு நியமிக்கிறான். இத்தகைய பட்டம் பெற்றவர்களில் சோழ அயோத்தி ராஜன், சோழ கன்னக்குச்சி அரசன் (கன்யாகுஜ்யம் அல்லது கன்னோசி அரசன்) என்று பட்டம் பெற்றவர்களும் உண்டு. முதல் ராஜாதிராஜனின் “திங்களேர் தரு” என்று தொடங்கும் மெய்க்கீர்த்தியில் இவ்விவரங்கள் உள்ளன.

ராஜேந்திர சோழன் ஆட்சிக் காலத்தில்தான் கஜினி முகம்மது குஜராத்தில் உள்ள சோமநாதபுரத்தின்மீது தாக்குதல் தொடுத்தான். அதன் எதிர்விளைவாக இந்திய நாட்டளவில் சத்திரியர்களிடையே சில மண உறவுகளும் ஏற்பட்டன. கி.பி. 1,111ஆம் ஆண்டில் காஹடவால அரசன் கோவிந்த சந்திரன் என்பவன் உத்திரப் பிரதேசத்தின் அயோத்திப் பகுதியிலிருந்து கங்கை கொண்ட சோழபுரத்திற்கு வந்துள்ளான். “அகுந்தோத் குந்த வைகுந்த” எனத் தொடங்கும் அம்மன்னனின் மெய்க்கீர்த்திப் பகுதி கங்கை கொண்ட சோழபுரம் பகுதியில் கல்வெட்டாகப் பொறிக்கப்பட்டுள்ளது.
madurantakam_ramaஇதே கால கட்டத்தில்தான் ஆடுதுறைக்கு அருகில் சூரியனார் கோயில் பல நிவந்தங்களைப் பெற்று, விரிவுபடுத்தப்பட்டது. முதல் குலோத்தங்கனின் மகனான மூன்றாம் பராந்தக சோழனால் மதுராந்தகத்தில் திரு அயோத்திப் பெருமாள் கோயில் கட்டப்பட்டது. இக்கோயிலே இன்று ஏரிகாத்த ராமர் கோயில் என்று அழைக்கப்படுகிறது.

தமிழ்க் கல்வெட்டியலின் தந்தை என்று கே.வி. சுப்பிரமணிய ஐயர் அவர்களைக் குறிப்பிடுவதுண்டு. சங்க காலத்தைச் சேர்ந்த பிராமிக் கல்வெட்டுகள் மலைப் பாறைகளிலும் குகைகளிலும் பொறிக்கப்பட்டுள்ளன. அவற்றுள் சில 120 ஆண்டுகளுக்கு முன்னரே தொல்லியல் ஆய்வாளர்களால் கண்டறியப்பட்டுவிட்டன. ஆனால், ஏதோ பிராகிருதம் அல்லது பாலி மொழியில் அல்லது பாலியும் பிராகிருதமும் தமிழும் கலந்த ஒரு மணிப்பிரவாள நடையில் இவை எழுதப்பட்டிருக்கலாம் என அறிஞர்கள் ஊகத்தில் தடுமாறிக் கொண்டிருந்தபோது இவை தமிழ் மொழியில் எழுதப்பட்ட கல்வெட்டுகள்தாம் என்று தெளிவாக அறிவித்ததோடு, அவற்றுள் சில கல்வெட்டுகளை வாசித்துப் பொருள் விளக்கமும் கூறியவர் கே.வி. சுப்பிரமணிய ஐயர்.

கருணாநிதியின் கண்ணோட்டத்தில் அவரெல்லாம் தமிழ் வரலாற்றை மறைக்கச் சதி செய்த ஆரியர்தான் போலும். ஆனால், அத்தகையோர் எழுதியதை அப்படியே பிரதி எடுத்துத் தாமும் சரியாகப் பொருள் விளங்கிக் கொள்ளாமல், அடுத்தவர்களும் மயங்குகின்ற வகையில் தன் குடும்ப சரித்திரத்தைச் சாடையாகக் குறிப்பிடுவதுபோல எழுதுவதென்பது தமிழ் ஆய்வின் வளர்ச்சிக்கு வித்திடுகின்ற நடவடிக்கையாக அமையவே அமையாது.
இருள் கவிந்த பின்னர் பட்டு வேட்டியும், பட்டுச் சொக்காயும், அத்தரும் ஜவ்வாதும் மணக்க, அரகஜா பொட்டும், மல்லிகைச் செண்டும் பூண்டு, படலைத் தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்து கூத்துக் காண்பதெல்லாம் அந்தப்புரத்துக்குப் போகிறவர்கள் செய்கின்ற நடவடிக்கைகள் ஆகுமே தவிர, அற்புதக் கலைப் படைப்பு ஒன்றின் ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழாவைக் கொண்டாடுகின்ற ஆய்வு மனப்பான்மையும், ரசனை உணர்வும் மிக்க ஒருவரின் செயல்பாடு ஆகாது.

வரலாற்றைப் பற்றி எழுதும் போதாகட்டும், வரலாற்றுச் சாதனைகளைப் போற்றி நடத்தப்படும் கூட்டங்களில் பங்கேற்றுப் பேசும் போதாகட்டும், இதுபோல விடலைத்தனமான பேச்சுகளுக்கும், விஷமத்தனமான பொய்யுரைகளுக்கும் இடமளிப்பது என்பது மையொற்றி மகானுபாவர்களின் மயக்கப் புலம்பல்களாகத்தான் அமையும்.

சோழர்கள் வரலாற்றில் மனுநீதிச் சோழனின் வரலாறு எண்ணி எண்ணிப் பெருமைப்படத்தக்க ஒன்றாகும். தேர்க்காலில் தன் மகனையே இட்டுக் கொன்று பசுவிற்கு நீதி வழங்கிய மன்னன் அவன். அவனும் திருவாரூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டவன்தான். ஆரூர்ச் சோழனின் வழித் தோன்றல்கள் என்று தம்மைப் பற்றிப் பறைசாற்றிக்கொண்டு, மனுநீதி நாள் என்ற பெயரில் நீதி வழங்குவதாகக் காண்பித்துக்கொண்டு, மலர்க் கிரீடம் சூட்டிக்கொண்டு, ஜனநாயகமும் பேசிக்கொண்டு, பரம்பரை ஆட்சியையும் நிலை நிறுத்திக் கொண்டிருக்கின்ற இத்தகையவர்களின் நடவடிக்கையை எண்ணும்போது, அரசியல் கவிஞர் ஒருவர் குறிப்பிட்டதுதான் நினைவுக்கு வருகிறது:

திருவாரூருக்கு
நீதியால் வந்தது சரித்திரம்
நிதியால் வந்தது தரித்திரம்.

(கட்டுரை ஆசிரியர்கள், தென்னிந்தியச் சமூக வரலாற்று ஆய்வு நிறுவன ஆய்வாளர்கள்)

27 Replies to “மையொற்றி மகானுபாவர்களின் மயக்கப் புலம்பல்”

  1. அருமையான கட்டுரை. கருணாநிதியின் உடன்பிறப்பு கட்டுரைகள் குறித்து எனக்கு ஒரு சந்தேகம் உண்டு. கலைஞர் டிவியில் அவரைப் பார்க்கும்போது இவரா ஆட்சி ஆளுவது என்று தோன்றும். இந்த வயதில் அவர் தெளிவாக சிந்திப்பார் என்றே தோன்றவில்லை. யாரோ கோஸ்ட் ரைட்டர் தான் இதையெல்லாம் கவனிக்கிறார் என்று தோன்றுகிறது.

  2. பொய்யே வாழ்க்கையாய்,சூதே உயிர் மூச்சாய், பேராசையே வாழும் வழியாய்,பணமும் ,பதவியுமே குறிக்கோளாய் வாழும் இவர்கள் நம் சமுதாயதுக்கே ஒரு களங்கம்.
    ‘நாடா கொல்லா ,காடா கொல்லா ,அவையா கொல்லா , மிசையா கொல்லா
    நாடென்ப நாடா வளத்தன நாடு ‘
    என்று அவ்வை கூறியது போல் ஒரு நாடு நல்ல நாடு என்பது அங்கு வாழும் மாந்தரை வைத்து அறியப்படும்.

    தானும் ,தன குடும்பமும் வாழ வேண்டும் என்பதற்காக தான் கெட்டதும் அல்லாமல் நல்ல சிந்தனை உள்ள மக்களையும் கெடுத்து நாட்டை குட்டிச் சுவர் ஆகுகின்றனர்.

  3. கற்றறிந்த அறிஞர்களும் ஆய்வாளர்களும் தங்கள் உழைப்பினால் வரலாற்று உண்மைகளைக் கண்டு பிடித்தார்கள். இமயமலை போன்ற உயர்ந்தவர்கள் மத்தியில் லில்லிபுட்டியன் போன்ற சிலர் தங்களை பெரிய அறிஞர்களாகக் கருதிக் கொண்டு பெரிய பெரிய விஷயங்களில் தங்கள் மேதா விலாசங்களை வெளிப்படுத்தி வருகிறார்கள். லெமூரிய கண்டமேன்றொரு கண்டம் இருந்தது அது கடலில் மூழ்கிவிட்டது அது இருந்த இடம்தான் கன்னியாகுமரி என்று ஆராய்ந்து கண்டுபிடித்து சொல்ல முடிந்தவர்களுக்கு மாமன்னன் ராஜராஜன் சமாதி அமைந்த இடம் தெரியாமலா போய்விட்டது. எந்த விஷயத்தைக் கிளப்பினால் அது மத எதிர்ப்புக்கு ஆதரவு கிடைக்குமோ தனது பகுத்தறிவுக்கு ஆதரவு கிடைக்குமோ அதனை எடுத்துக் கொள்ளும் சாமர்த்தியத்தை பாராட்டியே ஆகவேண்டும். இது போன்ற பேச்சுக்களுக்கு பதில் சொல்லுவதை அறிஞர்கள் தவிர்த்துவிடுவதே மேல்.

  4. Pingback: Indli.com
  5. Brilliant presentation backed up by facts and research. I thank you for the fact that I have been enlightened on the aspects mentioned in your article.
    Now I regularly visit your webpage.
    Thank you once again.
    Utham

  6. அருமையான கட்டுரை .
    திரு எஸ். ராமசந்திரன் கட்டுரையின் சுட்டிக்கும் நன்றி.
    ராஜராஜனை பொருத்தவரை, கூடிய சீக்கிரமே ஒரு “கல்லறை ”
    [ பள்ளிப்படை என்ற சொல்லை விட இது சிலருக்கு பிடிக்கும். ] கண்டுபிடிக்கப்படலாம். அதில் அவனுக்கு பின் ஆயிரம் வருடங்கள் கழித்தூ அவனை விட ஆயிரம் மடங்கு சிறந்த சோழ மன்னரின் “மெய்கீர்த்தி” கண்டுபிடிக்கப்படலாம். நாம் இங்கு விவாதிக்க , வழக்கம் போல் விருது விழாக்கள் கன ஜோராக நடக்கலாம். தமிழ் நாட்டில் எது தான் நடக்காது?

  7. நண்பர்களே! ஆதாரப் பூர்வமாகப் பல விஷயங்களைச் சொல்லுவது சமூகத்துக்கு மிக நல்லது. என் அன்பு. இது பரவட்டும்.

  8. மேற்படி கட்டுரைலிருந்து சோழர் காலத்தில் தமிழும் ,சம்ஸ்க்ருதமும் சமமாக பாவிக்கப்பட்டது தெரிகிறது .ஆனால் இந்த பகுத்தறிவு பருப்புகள் சமஸ்கிருதம் என்பது தமிழை அழிக்க வந்த பிடாரிஎன்று கூக்குரல் இடுகிறார்கள் .எத்தனை உயர்வான ,பயனுள்ள கருத்தாக இருந்தாலும் ,அது சமஸ்க்ருதத்தில் இருந்தால் இவர்களின் பகுத்தறிவு ஒதுக்கித்தள்ளி விடும் ,அதே சமயம் இனிமையான தமிழில் இருக்கும் பாசுரங்களையும் ,ஆன்மிக இலக்கியங்களையும் ,இலக்கியவாதிகளையும் இந்த செந்தமிழ் வெண்ணைகள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் ,தமிழை வளர்த்தது சமயமே ;சமயத்தை வளர்த்ததும் தமிழே .தமிழ் குழி தோண்டிகளுக்கு கம்பனும் ,மணிவாசகரும் இலக்கிய வாதிகலாகத்தெரிய மாட்டார்கள்.

  9. ராவணனை குல தெய்வமாக கொண்ட ராஜஸ்தான் பிராமணர்களின் வரலாறு எங்காவது கிடைக்குமா? அவர்கள் ஏன் ராவணனை குலதெய்வமாக கொள்ள வேண்டும்? ஒரு வேளை அவர்கள் ராமாயண காலத்து பிராமணர்களின் வம்சாவளியினராக இருக்குமோ?

  10. மிக அருமையான கட்டுரை.

    ராம ஜன்மபூமி எங்கே என்பது குறித்து வந்த தீர்ப்புக்கும் ராஜராஜனின் கல்லறைக்கும் என்ன சம்பந்தம் என்பது புரியவே இல்லை.

    ராஜராஜன்தான் தமிழர்களின் ஒரே அரசனா என்றால் இல்லை. ஒருவேளை ராஜராஜன் கடல் கடந்து பல நாடுகளை என்ற தமிழ் மன்னன் என்பதாலா? அப்படியே ஆனாலும், அவனது பிறந்த இடமோ வாழ்ந்த இடமோ முக்கியமா, அல்லது செத்த இடமோ அவனது கல்லறையோ முக்கியமா?

    ராஜேந்திர சோழனின் மாளிகை இருந்த இடம் அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டு கிட்டத்தட்ட 18 ஆண்டுகள் ஆகின்றன. கங்கை கொண்ட சோழபுரகே கோயிலுக்கு மேற்கே சுமார் 2 கி.மி. தொலைவில் உள்ள மாளிகைமேடு என்ற கிராமத்தில் 1992 -93 இல் நடந்த அகழ்வாராய்ச்சியில் இது கண்டுபிடிக்கப்பட்டு இத்தனை வருடங்களாகியும், இந்த இடத்தில் மேற்கொண்டு எந்த அகழ்வாராய்ச்சியும் நடைபெறவில்லை. ஒருவேளை ராஜேந்திரா சோழனின் கல்லறை கண்டுபிடிக்கப்பட்டால் அதைத்தான் பராமரிப்பார்களோ?

  11. இருள் கவிந்த பின்னர் பட்டு வேட்டியும், பட்டுச் சொக்காயும், அத்தரும் ஜவ்வாதும் மணக்க, அரகஜா பொட்டும், மல்லிகைச் செண்டும் பூண்டு, படலைத் தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்து கூத்துக் காண்பதெல்லாம் அந்தப்புரத்துக்குப் போகிறவர்கள் செய்கின்ற நடவடிக்கைகள் ஆகுமே தவிர, அற்புதக் கலைப் படைப்பு ஒன்றின் ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழாவைக் கொண்டாடுகின்ற ஆய்வு மனப்பான்மையும், ரசனை உணர்வும் மிக்க ஒருவரின் செயல்பாடு ஆக என்ன அற்புதமான வரிகள் ……………….
    சூப்பர் அப்பு ………………………………..

  12. இருள் கவிந்த பின்னர் பட்டு வேட்டியும், பட்டுச் சொக்காயும், அத்தரும் ஜவ்வாதும் மணக்க, அரகஜா பொட்டும், மல்லிகைச் செண்டும் பூண்டு, படலைத் தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்து கூத்துக் காண்பதெல்லாம் அந்தப்புரத்துக்குப் போகிறவர்கள் செய்கின்ற நடவடிக்கைகள் ஆகுமே தவிர, அற்புதக் கலைப் படைப்பு ஒன்றின் ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழாவைக் கொண்டாடுகின்ற ஆய்வு மனப்பான்மையும், ரசனை உணர்வும் மிக்க ஒருவரின் செயல்பாடு ஆகாது. என்ன அற்புதமான வரிகள் ……………….
    சூப்பர் அப்பு ………………………………..

  13. நான் கேட்கிறேன் … நாத்திகவாதி உனக்கு ஏன் மஞ்சள் துண்டு ???? ராஜராஜண் ஒரு அரசன் !!! ராமன் ஒரு கடவுள் , இந்த உண்மை கூட மஞ்சள் துண்டு க்கு புரியவில்லை !!!

  14. முன்பெல்லாம் பொழுது போக அம்புலிமாமாவோ cartoon networகோ நகைச்சுவை channelgaளோ இருந்தன. இப்போதோ ‘தானைத் தலைவரின்’ பேச்சுக்கள், எழுத்துக்கள் relaxation கொடுக்கின்றன.

  15. ராமர் விஷ்ணுவின் அவதாரம் என்று மக்களுக்குத் தெரியும். ஆனால், ராஜராஜன் இந்து மதத்தில் தோன்றி, கருனாநிதியைப்போல் அல்லாமல், இந்து மதத்தைப் போற்றி வளர்த்தான். இந்து மதத்தை இகழ்ந்த கருணாநிதிக்கு, ராஜராஜனைப் பற்றி நினைக்கக் கூட அருகதை கிடையாது.

  16. கருத்தாழமும் சொல்லாற்றலுமுடைய மிக அருமையான கட்டுறை. உடன்பிறப்புகளுக்கு மட்டுமல்ல, அனைத்து தமிழக மக்களும் தங்கள் முதல்வரைப் பற்றி தெரிந்துகொள்ளவேண்டிய, புரிந்துகொள்ளவேண்டிய உண்மைகளைத் தெள்ளத் தெளிவாக்கியிருக்கிறார் ஆசிரியர். எந்த ஒரு தலைப்பில் பேசினாலும், அதில் பிராமணக் காழ்ப்பும் அவர்களைக் கிண்டல் செய்து வசை பாடாமல் பேச முடியாது. வீட்டில் பிற மொழிபேசுபவர்களை தமிழர்களாக் அங்கீகரிக்கும் அவருக்கு, தமிழ் மட்டுமே தாய்மொழியாக கொண்டுள்ள பிராமணர்களை தமிழர்களாக ஏற்றுக்கொள்ள தயக்கம். ஆனால் அவர்கள் ஆதரவு மட்டும் வேண்டும், தமிழையே மூச்சாகக் கொண்டிருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கும் அவருக்கு, தேவாரம், திருவாசகம், ஆண்டாள் அருளிய திருப்பாவை, மாணிக்கவாசகரின் திருவெம்பாவை, முதலிய அரும் பெரும் பொக்கிஷ தமிழ் பாசுரங்கள் வேம்பாகக் கசக்கும். தமிழ்த் தாத்தா, பாரதியார் முதலிய பிராமண தமிழ் அறிஞர்கள், கவிஞர்கள், அவர்கள் பிராமணர்கள் என்ற ஒரே காரணத்தால் அதிகம் பாராட்டப் படுவதில்லை. பிராமணர்களைக் கேலி செய்யும் பல தமிழ்ப் படங்களுக்கு இவரின் அங்கீகாரமும் ஆதரவுமும் உண்டு. மற்ற வகுப்பு மக்களை இம்மாதிரி கேலி செய்தால் பொறுத்துக்கொள்வாரா?

  17. ராஜராஜனைப்பற்றித் தோண்டிப்பார்த்தால், சிவபக்திதான் தெரியும். சிவபெருமானோ விஷ்ணுவோ கிடையாது என்று கூறிவிட்டபின், கருணாநிதி என்னத்தைத தோண்டி ராஜராஜனைப் பற்றி ஆராய்ச்சி செய்யச்சொல்கிறார். உள்ளது என்றால் தேடலாம், இல்லை என்று சொல்லிவிட்டு, தேடவில்லை என்று சொன்னால், அதைப் போன்ற அபத்தம் கிடையாது. பாவம், அவர் செய்த பாவம், இந்து மத விஷயத்தில், எப்படிப்போனாலும், கருணாநிதி மாட்டிக்கொள்கிறார். கோயில் சிற்பங்களைப்பார்த்த கருணாநிதியின் மகள் கனிமொழி இன்னும் பாவம், மக்கள் சிற்பங்களைப் பார்க்கும் நிலையிலிருந்து மேலே சென்று, தெய்வங்களைப்பார்க்கும் உன்னத நிலையில் இருக்கும் போழ்து, தந்தையின் கொடுமதியால், இன்னும் கற்களையே பார்க்கும் நிலையில் இருக்கின்றார். அதுவும் ராஜராஜனின் ஆயிரமாம் ஆண்டிலும் கூட.

  18. வேண்டாத விஷயங்களில் அதுவும் பெரும்பாலான மக்களின் நம்பிக்கையில் மூக்கை நுழைத்து உலகிலேயே தனக்குத் தான் எல்லாம் தெரியும் என்ற வகையில் பேசி, ஏசி, வசை பாடி ஏமாற்றிக் கொண்டு ஏதோ தமிழைக் கண்டுபிடித்தவர்களே இவர்கள் தான் என்பது போல் நடித்துக் கொண்டிருக்கும் இவர்களுக்கு தங்கள் குடும்ப தொலைக்காட்சிகளிலேயே தமிழ் உச்சரிப்பைச் சரிவர திருத்தம் செய்ய இயலவில்லை. தொலைக்காட்சிகளைப் பார்க்கும் அனைத்து மக்களும் செம்மொழிக் காவலரின் குடும்ப தொலைக்காட்சியில் சொல்லப்படும் உச்சரிப்புகள் தான் சரியான உச்சரிப்பு என்று எடுத்துக் கொண்டு தமிழைக் கொலை செய்கிறார்கள் என்பது உண்மையான கொடுமை. வல்லினத்துக்கும் இடையினத்துக்கும், ‘ல’ கரத்திற்கும், ‘ள’ கரத்திற்கும் உள்ள வித்தியாசம் தெரியாமல் உளரிக்கொட்டி வார்த்தைகளின் அர்த்தத்தையே மாற்றி விடுகிறார்கள். அயல் நாட்டுத் தமிழர்களின் தமிழ் உச்சரிப்பு அபாரமாய் இருக்கிறது. ஆனால் தமிழகத்தில்? யாராவது ஏதாவது செய்வார்களா?

  19. மற்றவர்களுக்கெல்லாம் தமிழ்ப் பெயர்ப் பலகை வைக்க வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டம் செய்யும் இவர்கள் அரசு நடத்தும் சாராயக் கடைகளுக்கு தமிழிலும்’ டாஸ்மாக் கடை’ என்று எழுதுவது என்?
    ‘தமிழ் நாடு அரசு சாராயக் கடை ‘ என்று எழுதுவதுதானே?

  20. ayya, palangala chola mannargalai aduthu tharkala chola mannanai ariveergala ?
    poombuharil ulla “போலி” madi koodam eluppappattathu ‘karunanithi cholanin pathavthu aandu’ enru பொறிக்கப்பட்டுள்ளது இதைமறுத்து போராட்டமே நடத்தலாம் .

  21. திருவாரூருக்கு
    நீதியால் வந்தது சரித்திரம்
    நிதியால் வந்தது தரித்திரம்.

    Arumaiyilum arumai

  22. ஜெயமோகன் தன் இணையத்தில் கொடுத்த சுட்டியில் இருந்து இக்கட்டுரையைப் படிக்க நேர்ந்தது.

    ப்ரவாஹன் எழுத்துக்கள் எனக்குப் பரிச்சயம்தான்.

    கருணானிதியின் சொற்களின் அடிப்படை வரலாறு ஆண்டுக்கணக்கே. Historical chronology.

    இராமர் வாழ்ந்த யுகம் எனச் சொல்லப்படுவது 75 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பென்ப. அப்படித்தான் புராணங்கள் சொல்கின்றன என்ப. நீங்கள்தான் அஃதை உறுதிப்படுத்த வேண்டும். நான் புராணீக அறிஞனன்று. கேள்வி ஞானமே.

    சோழ‌ர்க‌ள் கால‌ம் வ‌ர‌லாற்று நோக்கில் “இக்காலம்”. (Modern age). ஆதிகாலமன்று. ராச‌ராச‌ன் சோழ‌ர்க‌ளின் பிற்கால‌த்த‌வ‌ன்.

    க‌ருனானிதியின் க‌ருத்தை ப‌க‌டியாக‌ எடுக்காம‌ல் பார்த்தால், அவ‌ர் சொல்வ‌தை ஏற்க‌லாம். எப்படி?

    இராம‌ர் கால‌ம் இதுதான் என‌ எப்ப‌டிச் சொல்ல‌ முடியும் ? முத‌லில் அவ‌ரின் கால‌த்தில் ம‌னித‌ன் பூமியில் தோன்ற‌வில்லை என்று விஞ்ஞானிக‌ள் சொல்வர்; இல்லையா? ஆக‌, இராம‌ரைப்ப‌ற்றிய‌வை புராண‌த்தில் சொல்லப்ப‌ட்ட‌வை ம‌ட்டும‌ன்றி, கால‌க்க‌ண‌க்கில் க‌ற்ப‌னைக்கும் எட்டாத‌வை.

    இராச‌ராச‌ன் கால‌ம் க‌ற்ப‌னை அன்று. ப்ர‌வாஹ‌ன் சொன்ன‌துபோல‌ ப‌ல‌ தொல்லிய‌ல் ஆராய்வுக‌ள் அவ‌னைப் ப‌ற்றியும் அவ‌ன் கால‌த்தைப் ப‌ற்றியும் தெளிவாக‌ச் சொல்லி விடுகின்ற‌ன‌.

    இராம‌ரை தொல்லிய‌ல் ஆராய்வு நிரூபிக்காது. முடியாது. இராம‌ர் என்ப‌து ந‌ம்பிக்கை ம‌ட்டுமே. இராச‌ராச‌ன் என்ப‌து வ‌ர‌லாறு. நிரூபிக்க‌ப்ப‌ட்ட‌ வ‌ர‌லாறு.

    க‌ருனானிதியின் சொல்வ‌து என்ன‌வென்றால் ந‌ம்பிக்கையையும் வ‌ர‌லாற்றையும் இணைக்க‌ முடியா‌தென்ப‌தே. இதைப்புரிந்தால் ப்ர‌வாஹ‌ன் நீண்ட‌ க‌ட்டுரை எழுத‌ வேண்டிய‌திருக்காது.

    Dont link this with ayodhya verdict. Take it out of that. Ramar and the epics r said to have happened in ages beyond human comprehension and imagination. Time is our construct. Not God given. God did not create time. Man s said to have appeared on earth – not light years ago, but some thousands of years ago only.

    Ramar’s age is thretha age. It s said to be about 75 lakh years when homosapiens had not appreared on earth. Life forms might b. Based on science. It s not we but scientists who we shd rely on.

    Rajarajan was a later Chola. He came after Pallavas. Rajarajan’s time s well recorded and such records unearthed by archeologists. Historians hav accepted such records.

    So, we cant talk abt Ramar as a historical figure at all. All that s about Ramar falls under the realm of pure belief. All that s about Rajarajan falls under the realm of Reason and recorded history.

    So, karnanithi s reasonable in his criticism of people who talk abt Ramar as if He s a historical figure and with certainty, when we shd talk only abt Rajarajan as such figure.

    It s a waste of time to compare the two figures. The essay s a waste of time and energy.

    Suppose we take the essay as a good read in terms of historical research or rehashing historical researches to prove the point, the feedback comments talk little abt the point here.
    All the comments r personal attack on karnanithi and his family members. It s as if the commenters r waiting for such an opportunity to pounce upon karunanithi to tear him to peaces. They care liitle abt what s said in the essay. Any essay s good plank to plunge into the waters they needed.

    The essayist himself devotes one long para to such attack.

    Scholarship is scholarship. Mixing it with personal prejudices and animosity against individuals, whoever they r, mars its spirit.

  23. ஜோ அமலன்

    //
    இராமர் வாழ்ந்த யுகம் எனச் சொல்லப்படுவது 75 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பென்ப. அப்படித்தான் புராணங்கள் சொல்கின்றன என்ப. நீங்கள்தான் அஃதை உறுதிப்படுத்த வேண்டும். நான் புராணீக அறிஞனன்று. கேள்வி ஞானமே.
    //

    இந்த யுகங்களின் கணக்கு எப்படி வருகிறது என்று சமஸ்க்ரிதம் படித்தால் தான் புரிந்து கொள்ள முடியும். பல ரிஷிகளும் பல பல யுக கணக்கினை தந்துள்ளனர் contectual ஆகா – இதில் எதுவும் தவறில்லை.

    நீங்கள் நினைப்பது போல ராமர் வாழ்ந்தது 75 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு அல்ல. இந்த கல்பத்தின் மனு தோன்றியே 14,000 ஆண்டுகளுக்கு மேல் இருக்க முடியாது – அவர் தோன்றியது ice age கிற்கு அப்புறம் தான் இருக்க முடியம். அவர் தோற்றியது மனாலியில் (மனு ஆலயம்). (note – மனு என்பதிலிருந்து தான் மனுஷ்யன், மனிதன் man என்பது போன்ற வார்த்தைகள் உருவாகின).

    ராமர் வாழ்ந்த காலம் பற்றிய பல ஆராய்ச்சி முடிவுகள் உள்ளன – சுமார் ஒன்பதாயிரம் – ஏழாயிரம் ஆண்டுகளுக்கு முன்னாள் அவரது காலம் இருந்திருக்கக் கூடும் என்பது வானியல் ஆராய்ச்சி மூலம் நிரூபணம் செய்துள்ளனர்.

    உதாரணத்திற்கு ஒரு சின்ன விளக்கம் – ப்ரிஹதாரன்யக உபநிஷத்தில் மைத்ரேயி பிராமணத்தில் வரும் ஒரு ஸ்லோகம் பிரமாணங்களை அடுக்குகிறது – அதில் புராணங்கள் மற்றும் இதிஹாசம் என்று இதிஹாசத்தை ஏக வசனத்தில் குறிக்கிறது. ப்ரிஹதாரன்யக உபநிஷத்தை இயற்றியவர் யாக்யவல்கர். இவர் கிருஷ்னறது தந்தையின் காலத்தில் வாழ்ந்தவர் – இதற்கும் சான்று உள்ளது.

    மகாபாரதப்போர் 3067 BCE இல் நடந்திருக்க கூடும் என்று வானியல் ஆராய்ச்சி மூலமும், அகழ்வாராய்ச்சி மூலமும் நிரூபணம். இதி ஹாசம் என்று ப்ரிஹதாரன்யக உபநிஷத்தில் என்று ஒருமையில் வருவதால் யாக்யவல்கர் காலத்திற்கு முன்பே ராமாயணம் இயற்றப்பட்டிருக்க வேண்டும். கரிஷ்ணறது காலம் 3067 BCE இல் என்றால். யாக்யவல்கர் ஒரு ஐம்பது ஆண்டுகள் முன்பாகவே வாழ்ந்திருக்க வேண்டும். ராமாயணம் இதிஹாசம் என்ற அந்தஸ்தை அடைய நிச்சயம் ஒரு 100-200 ஆண்டுகள் பிடித்திருக்கும். இதை வைத்து கொண்டும் மற்றும் ரிஷிகள், ராஜாக்கள் பரம்பரையை வைத்துக் கொண்டும் ராமர் கிருஷ்ணருக்கு ஒரு 1500 – 2000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாள் வாழ்ந்ததாக நிறுவுகின்றனர் அறிஞர்கள்.

    இந்த 2 லட்சம் ஆண்டுகள் என்ற கணக்கெல்லாம் புராணங்களில் வரும் ஆண்டு கணக்கு என்ன என்று சரியாக புரிந்து கொள்ளாத தாலேயே வருகிறது. ரிஷிகள் பொதுவாக ஒரு நக்ஷத்திரத்தை முன்வைத்து யுகங்களை கணக்கிடுவர் – இந்த கணக்கு எந்த நட்சத்திரம் என்பதை பொறுத்து வெறும் பத்தே ஆண்டுகள் முதல் – 1 லட்சம் ஆண்டுகள் வரை வேறுபடுகின்றன.

  24. The controversy over Rajaraja’s place of rememberance is unnecessary since Cholas were Deep Saivaites following Kalamukha sect and on death they were always cremated. There is difference between Pallipadai consecration of temples. Pallipadai refers to the Jain temple built on the place where somebody was buried. However temples may be consecrated where the Asthi kalsam would have been buried which cannot be considered as Samadhi. Before saint Basava most of the Saivaites belonged to Somasivas Mahavrathins and Maheswaras who performed Vedic sacrifices.(Saint Tirugnanasambandar, Sri Appaiya Dikshita and Forefathers of Sadasiva Brahmendral). Hence though it may be consecrated in honour of Rajaraja it should not be considered as Samadhi which will be a great injustice to him.

  25. தேஜஸ்வினி அவர்கள் தெரிவித்த கருத்தே சரியானது. மாமன்னன் இராஜ இராஜன் சமாதி எதுவும் கிடையாது. அஸ்தி கலசம் புதைக்கப்பட்ட இடத்தில் பெரிய ஒரு சிவலிங்கத்தை நிறுவி, பிரம்மாண்டமான கோயில் எழுப்புவது சாலச்சிறந்தது. இதில் நாத்திகர்கள் கூட பங்கேற்கலாம். ஏனெனில் நாத்திக நண்பர்கள் என்னதான் தொண்டை கிழிய கத்தினாலும், ஆபிரகாமிய மதத்தினர் நாத்திகர்களுக்கு , உலகில் இடம் அளிக்க மாட்டார்கள். நாத்திகத்தையும், அதைவிட சிறந்த சார்வாகத்தையும் , தன்னுள்ளே அடக்கியது இந்து தர்மம். எனவே, இராஜராஜனுக்கு நினைவு ஆலயம் எழுப்ப இந்துக்களில் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களுடன், கடவுள் நம்பிக்கை அற்ற நாத்திகர்களும் பங்கேற்கலாம். கலைஞர் இதில் ஏதாவது உருப்படியாக செய்வாரா என்பது அவருக்கே வெளிச்சம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *