Monthly Archives: October 2010

சமூகம், நிகழ்வுகள், வரலாறு, வீடியோ

கள்ளக் காதல்

October 7, 2010
-
கள்ளக் காதல்

ஒரு அளவில் இருக்க வேண்டிய காமத்தை, கடைச்சரக்காக்கி வீடு தோறும் பரப்பப் பட்டு வருவது சமூக மனநிலையை பாதிக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். சாதாரணமான காமெடிக் காட்சிகளில் கூட ஒருத்தனுடைய சம்சாரம் இன்னொருத்தனுடன் ஓடிப் போவது பற்றிய காமெடி ஒரு நூறு திரைப் படங்களிலாவது வந்திருக்கும். இதைப் பார்க்கிற சிறார்கள் மனதில் எந்த வகையான உறவு சரி எது தவறு என்ற புரிதலில் பிழை ஏற்பட நிறைய வாய்ப்பு இருக்கிறது.

மேலும் »

சமூகம், மகளிர்

சம(?) உரிமைக்குப் போராடும் பெண்கள் – 4 [நிறைவுப் பகுதி]

சம(?) உரிமைக்குப் போராடும் பெண்கள் – 4 [நிறைவுப் பகுதி]

ஏற்கெனவே பலருக்கும் இன்று ஒரே குழந்தைதான். குழந்தைகளுக்கு விட்டுக் கொடுத்துப் போவதோ, அனுசரித்தல் என்றால் என்ன என்றோ தெரிவதில்லை. அப்பா, அம்மாவும் பணத்தால் தன் குழந்தைக்கு அனைத்தையும் வாங்கிவிடலாம் என்ற நினைப்பிலேயே மிதக்கின்றனர்... தன் சொந்தப் பெற்றோரைத் தன்னுடன் வைத்துக்கொள்ள முடியாத மகன்கள் எத்தனை பேர்? அதையே பெண்ணின் உறவினர் என்றால் அந்தப் பெண்ணுக்கு உரிமை மறுக்கப் படுகிறது என்று சொல்வார்கள்... ஓர் ஆரோக்கியமான சமுதாயத்தை எதிர்காலத்திற்குத் தருவது நம்போன்ற பெண்களின் கையில் தானே இருக்கிறது?

மேலும் »

சமூகம், நிகழ்வுகள்

தஞ்சை பெரிய கோயில் 1000ஆவது ஆண்டு நிறைவு விழா – ஓர் ஆய்வு

தஞ்சை பெரிய கோயில் 1000ஆவது ஆண்டு நிறைவு விழா – ஓர் ஆய்வு

விழாக்கோலம் பூண்ட தஞ்சை. கிராமக் கலை நிகழ்ச்சிகள், நடன கலை விழா நிகழ்ச்சிகள், வரலாற்றுக் கண்காட்சிகள், ஆய்வரங்கங்கள் என்று அரிய நிகழ்ச்சிகள். இந்நிகழ்ச்சிகளுக்கு மகுடம் சூட்டுவது போல ஆயிரத்துக்கும் மேற்பட்ட பரத நடனக் கலைஞர்கள், பத்மா சுப்ரமணியம் உட்பட நடனமாடிய மயிர்க்கூச்செரியும் நடன நிகழ்ச்சி! இவ்வாறு பல நல்ல நிகழ்வுகளுடன் தஞ்சை பெரிய கோயிலின் ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழா சிறப்பாகவே நடந்தேறியது. முதல்வரைப் பற்றி புகழுரைகளுக்கும் பஞ்சமில்லை. முதல்வரைப் பற்றி வழக்கமான புகழுரைகள், குளறுபடிகள் இவற்றுக்கும் குறைவில்லை.

மேலும் »

அரசியல், சமூகம்

அயோத்தித் தீர்ப்பும் அபத்த ஊடகங்களும் – 2

அயோத்தித் தீர்ப்பும் அபத்த ஊடகங்களும் – 2

பஞ்சாயத்துத் தீர்ப்பு என்பது- அக்குழுவில் உள்ள ஐந்து சான்றோர் பெருமக்களும் இயைந்து வழங்குவது; நடுநிலைமை, தெய்வ நம்பிக்கை, மனிதாபிமானம் ஆகியவற்றின் சேர்க்கை அது; வழக்கில் தொடர்புடைய இருதரப்பினரின் வலிமை, பாதிப்பு, தாங்கும் திறன் ஆகியவற்றை உத்தேசித்து அதிகாரமும் கருணையும் கலந்து வழங்குவது; குடும்ப நலம், கிராம நலம், நாட்டு நலம் அனைத்தையும் கருத்தில் கொண்டு தர்மத்தின் அடிப்படையில் வாய்மொழியாக வழங்கப்பட்டது; பாரம்பரிய நீதிநூல்களும், இதிகாசக் கதைகளும் மிகச் சாதாரணமான பழமொழிகளும் கொண்டு எளிதாக பிரச்சினைகளைத் தீர்த்தது... ஸ்ரீராமனின் பிறப்பை நிர்ணயிக்கும் தகுதியும் ஞானமும் எவருக்கும் கிடையாது. அயோத்தியில் தற்போதுள்ள ராம்லாலாவை இடம் மாற்றும் துணிவும் யாருக்கும் கிடையாது......

மேலும் »

அறிவியல், இந்து மத விளக்கங்கள், கேள்வி-பதில், தத்துவம்

விதி: “நீயா நானா”-வில் கூறப்பட்ட சில கருத்துகள்

விதி: “நீயா நானா”-வில் கூறப்பட்ட சில கருத்துகள்

மரணம் மட்டுமே மனிதத்தின் ஒரே நிச்சயமான விஷயம். இது மனிதனை வாழவே விடாமல் நிலைகுலையச் செய்யும்... விதி ஒரு மரப்பாச்சி பொம்மையாக- குறுகிய ஓர் உளவியல் ஆறுதலுக்காக- வைத்திருக்கலாமே தவிர அதனை வாழ்க்கை முழுவதும் வைத்துக் கொண்டிருப்பது சரியல்ல. மனிதனின் அடிப்படட உணர்ச்சியான ஞானத்தேடலில் அவன் விதி எனும் மரப்பாச்சி பொம்மையைத் தூக்கி எறிந்துவிட்டு முன்னேற வேண்டும்...

மேலும் »

சினிமா

சன் டிவி – எந்திரன் – தொடரும் குமட்டல்

சன் டிவி – எந்திரன் – தொடரும் குமட்டல்

ஜெயலலிதாவைக் கேள்வி கேட்ட ரஜினி, ஒட்டுமொத்த திரையுலகத்தையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துகொண்டிருக்கும் ஒரு குடும்பத்தைப் பற்றி ஏன் இன்னும் எதுவும் கேட்காமல் இருக்கிறார்? தன் வணிகம் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவா?... இதே ரசிகர்கள் பாலாபிஷேகம், பீராபிஷேகம் எல்லாம் செய்திருக்கிறார்கள். இன்று சன் டிவி அதற்குத் தரும் அங்கீகாரம் அதன் எல்லையை மிகவும் விரிவாக்கி, தமிழர்களே இப்படியெல்லாம் நடந்துகொள்ளும் முண்டங்கள்தான் என்னும் பிம்பத்தை ஏற்படுத்தி வருகிறது....

மேலும் »

அனுபவம்

பிறப்பும் சிறப்பும் இறப்பும் – 2

October 2, 2010
-
பிறப்பும் சிறப்பும் இறப்பும் – 2

இந்திய பண்பாட்டில் திளைத்த நமது முன்னோர்கள் பிறவிகள் பற்றி எவ்வளவு முக்கியமான விஷயங்களை நமக்கு அரிய பொக்கிஷங்களாகத் தந்து விட்டுச் சென்றிருக்கின்றனர் என்ற பெருமிதம் வந்தது. வினை விதைத்தவன் வினை அறுப்பான், தினை விதைத்தவன் தினை அறுப்பான் என்றும், செய்யும் தொழிலே தெய்வம், தெய்வம் நின்று கொல்லும் என்றெல்லாம் சொன்னார்களே, நாம் அவை அனைத்தையும் சரியாக உணர்ந்திருக்கிறோமோ என்ற சந்தேகமும் வந்தன.

மேலும் »

சினிமா

சிலநூறுகோடியில் அம்புலிமாமா ( எந்திரன்)

சிலநூறுகோடியில் அம்புலிமாமா ( எந்திரன்)

படம் முழுக்க ரிச் ஆகத் தெரிய மெனக்கெட்டது வீண்போகவில்லை. எல்லா இடத்திலும் பிரம்மாண்டம். பிரம்மாண்டம் மட்டுமே.சாதாரனமான இடம் இப்படத்தில் வருவது பெருங்குடி குப்பைமேடு மட்டுமே. படம் முழுக்க அல்ட்ரா மாடர்னாகவே இருக்கிறது.

மேலும் »

அரசியல், நிகழ்வுகள்

அயோத்தித் தீர்ப்பும் அபத்த ஊடகங்களும் – 1

அயோத்தித் தீர்ப்பும் அபத்த ஊடகங்களும் – 1

1948- லிருந்து ராமபக்தர்கள் காத்திருக்கும் தீர்ப்பு வெளியாகாமல் இழுத்தடிக்கப்பட்டு, நீதி ஒளித்து வைக்கப்படாமல் இருந்திருந்தால், டிச. 6 -ல் அந்தச் சம்பவமே நடந்திருக்காது என்று எந்த பத்திரிகையும் சுட்டிக்காட்டவில்லை. ஆனால், அன்று நடந்த கரசேவை தான், தற்போது அயோத்தி வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்புக்கு அடிநாதமாக இருக்கிறது என்பதை அனைவரும் அறிவர். இப்போது அதனைச் சுட்டிக்காட்ட எந்த ஊடகங்களும் தயாரில்லை. 1992- ல் நடந்த கரசேவை ஏன் தவிர்க்க முடியாமல் போனது என்பது இப்போது தெளிவாகவே புரிகிறது.

மேலும் »

அரசியல், சமூகம், நிகழ்வுகள், பொது

அயோத்தித் தீர்ப்பும் அகன்ற கறையும்

அயோத்தித் தீர்ப்பும் அகன்ற கறையும்

தீர்ப்பு தெளிவாக இருந்தது - அது ராமர் கோவில்தான். அந்த இடம் ராமருக்குத்தான் சொந்தம். அந்த இடமே தெய்வத் தன்மை உடையதாகவும் வழிபாட்டுக்குரியதாகவும் ஹிந்துக்களுக்கு இருந்திருக்கிறது... இல்லாத மசூதிக்கு பொல்லாத ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இஸ்லாமிய சகோதரர்களுக்கு ஏதோ பெரிய அநியாயம் செய்யப்பட்டு விட்டதாக போதிக்கப் பட்டது. இந்த 18 வருட பொய் பிரச்சாரத்தைத் தான் அக்குவேறு ஆணி வேறாக இந்த தீர்ப்பு உடைத்து எறிந்திருக்கிறது. ஹிந்துக்கள் ஈடுபட்டது நியாயமான ஒரு போராட்டத்தில் தான் என்பதையும் தெளிவு படுத்தியிருக்கிறது...

மேலும் »