சம(?) உரிமைக்குப் போராடும் பெண்கள் – 4 [நிறைவுப் பகுதி]

சம(?) உரிமைக்குப் போராடும் பெண்கள் பகுதி 1 | பகுதி 2 | பகுதி 3

(தொடர்ச்சி…)

chittoor-rani-padminiபெண்ணை வீட்டில் அடக்கி வைத்திருந்தது என்பது அந்நியர் படையெடுப்பு மற்றும் பல்வேறு காரணங்களால் ஏற்பட்ட நிர்பந்தங்கள் காரணமாக ஏற்பட்ட ஒன்று என்பதை எவரும் அறியாமல் இருக்கமாட்டோம். திடீரென்றுதான் பெண்களை அடக்க ஆரம்பித்தனர். வடநாட்டில் பெண்கள் உடன்கட்டை ஏறியதற்கும் இதுவே முக்கியக் காரணம். சித்தோட் (ராஜஸ்தான் சித்தூர் என்பார்கள்) ராணி பதுமனியின் கதை அறியாதோர் இருக்க மாட்டோம். அப்படி ஒரு நிலைமை நம் தமிழ்நாட்டுப் பெண்களுக்கும் வரவேண்டாம் என்பதாலேயே பெண்களை வீட்டை விட்டு வெளியே அனுப்பாத ஒரு சகாப்தம் துரதிர்ஷ்டவசமாய் ஏற்பட்டது. அதைச் சரியானபடி புரிந்துகொள்ளாமலேயே பெண்ணடிமை என்று ஒரு பெயர் ஏற்பட்டுவிட்டது. பெண்ணை ஆண் வன்முறையால் அடக்கியாளும் நிலையும் ஏற்பட்டுவிட்டது. இனி வரும் சமூகமாவது இதைச் சரியான கோணத்தில் புரிந்துகொள்ளும் என நம்புகிறேன். இப்படி ஏன் திடீரென ஆயிற்று என்பதற்கான ஒரு சான்றை– பிப்ரவரி 27-ஆம் தேதி, ஹிந்து சப்ளிமெண்ட்ரியில் வந்த ஒரு செய்தியைப் பகிர்ந்து கொள்கிறேன்.
 

subbunagammalசென்னையில் நூறு, நூற்றைம்பது வருடங்கள்முன் வாழ்ந்த சுப்புநாகம்மாள் என்னும் பிரபலமான வக்கீல் வெங்கட்ரமண பந்துலு குடும்பத்துப் பெண்ணின் உண்மைக் கதையை எத்தனை பேர் படித்திருப்பீர்கள்? அதைப் படித்திருந்தால் பெண்கள் ஏன் அடக்கப்பட்டார்கள் என்பதற்கான காரணம் புரியும். சுப்புநாகம் என்னும் அந்தப் பெண் எல்லாப் பெண்களையும் போலவே வீட்டில் தமிழும் வடமொழியும் படித்துவிட்டுத் திருமணம் செய்துகொடுக்கப்பட்டார். செல்வாக்குள்ள குடும்பம். அந்த நாள்களில் சென்னையில் இவர்கள் குடும்பம் ரொம்பவே பிரபலம் என்று சொல்கிறார்கள். அப்படிப்பட்ட குடும்பத்தில் பிறந்த 12 வயதுப் பெண், கணவனுக்கு மனைவி ஆங்கிலம் படிக்க வேண்டும் என்ற ஆசை என்பதால் ஆங்கிலம் படித்தாள். அதற்கென ஒரு கன்யாஸ்த்ரீ வரவழைக்கப் பட்டார். நாளாவட்டத்தில் பெண் அந்த கன்யாஸ்திரீயின் மதத்தைச் சார்ந்து அவரோடு நாட்டை விட்டே வெளிநாட்டுக்குப் போய்விட்டார். பெற்றோர் பல இடங்களிலும் தேடியும் பெண் கிடைக்காமல் ஊரில் இருந்தால் அவமானம் என்று ஊரை விட்டே போய்விட்டதாயும், பின்னர் அந்தப் பெண் திரும்பி வந்து தேடியதாகவும் குறிப்பிட்டிருந்தது. ஆனால் அந்தப் பெண் பின்னர் என்ன ஆனார் என்பதே தெரியவில்லை என்று குறிப்பிடப் பட்டிருந்தாய்ப் படித்த நினைவு.

பெண்கள் பலரும் வீட்டிலேயே தமிழும் சம்ஸ்கிருதமும் சொல்லிக் கொடுத்து வளர்க்கப்பட்டனர். மேலும் தமிழ் படிக்க சங்கீத ஞானமும் தேவை என்பதை எத்தனை பேர் அறிந்திருக்கிறோம்? தேவாரம், திருவாசகம், பிரபந்தங்கள் போன்றவை அனைத்தும் ராகங்களோடேயே கற்பிக்கப்பட்டிருக்கின்றன. அதே போல் வடமொழி ஸ்லோகங்களும், அதற்கான ராகங்களோடுதான் கற்பிக்கப்பட்டிருக்கின்றன. அதோடு உயர்வு, தாழ்வு என்பது வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒன்று. எப்படியும் ஏற்றத் தாழ்வை நிறுத்த முடியாது. எல்லாரும் பணக்காரர்களாகவோ அறிவாளிகளாகவோ ஆக முடியாது. அதே போல் அனைவருமே ஏழைகளாகவும் முட்டாள்களாகவும் இருக்க முடியாது. ஏனென்றால் ஏற்றத்தாழ்வு இல்லாமல் வாழ்க்கைக்கு அர்த்தமே இல்லை. எல்லாரும் பல்லக்குகளில் ஏறிவிட்டால் பல்லக்குகளும் அதிகம் வேண்டும். சுமக்கவும் ஆள்கள் வேண்டும். யார் சுமப்பார்கள்? ஆண்களா?? அவர்கள்தான் ஏற்கெனவே யானை மேலே ஏறி இருப்பதால்தானே நாம் அதிகமான உரிமைகள் கேட்டுக்கொண்டிருக்கிறோம், இல்லையா? 33% இட ஒதுக்கீடு பெண்களுக்குத் தரப்போகிறார்களாம். நாட்டில் அதைக் கொண்டாடுகிறார்கள் எல்லாரும். ஆனால் என்றைக்கோ 50% கொடுத்திருக்கிறானே ஒருவன். அவளில்லாமல் நானில்லை, நானில்லாமல் அவளில்லை என்றும் சொல்லியிருக்கிறானே!

ஆணாகிப் பெண்ணாகி நின்றானவன்,
அவளொன்று தானொன்று சொல்லாதவன்
தான் பாதி உமைபாதி என்றானவன்
சரிபாதி பெண்மைக்குத் தந்தானவன்
நேற்றானவன், இன்றானவன்,
இனி நாளையும் என்றாகப் போகின்றவன்.

அந்த உரிமையைச் சரியாகப் பயன்படுத்தும் பெண்கள் தான் இன்றைய தேவை. கேட்டு வாங்குவதல்ல உரிமைகள். மேலும் அடிமைகள் இருந்தால் அல்லவோ உரிமைகள் என்று கேட்டு வாங்கவேண்டும்? நம் கடமைகளை மறக்காமல் நல்லபடி நிறைவேற்றினாலே போதுமே.

sweet-singlesஇப்போது சமீபத்திய பரபரப்புச் செய்தி ஒன்று– இன்னும் முன்னேற்றமாக 21-ஆம் நூற்றாண்டுப் பெண்கள் தனித்து வாழவேண்டும் என ‘ஒன் இந்தியா’ என்னும் தளத்தின் ஒரு செய்திக் குறிப்பு சொல்கிறது. அதற்காக அவர்கள் குறிப்பிடும் வசதிகள்(?!) பின்வருமாறு:

 

1. இரவு நேரம்கழித்து வீட்டுக்கு வரலாம்.

ஆண்களைப் போல் பெண்களும் பொறுப்பில்லாமல் சுற்றுவது என்பது அவர்களுக்கு ஆபத்தைத்தான் ஏற்படுத்தும். பெண்களுக்கு என்று பொருளாதாரச் சுதந்திரம் என்று எப்போது ஆரம்பித்ததோ அப்போதே பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் பொறுப்பின்மைக்குப் போய்விட்டார்கள் என்று சொல்லலாம். தேவைக்கு என தவிர்க்க முடியாமல் வேலைக்குச் செல்வது வேறு. ஆனால் அதிகம் வசதி, இன்னும் வசதி, இன்னும் பணம் என்று வேலைக்குச் செல்வது வேறு. குடும்பத்தில் யார் எஜமானன், யார் அடிமை? இருவரின் பொறுப்பும் சமமானதே.
 

crying-while-watching-tv-serials2. திரைப்படம் பார்க்கும்போது அழலாம்.

இது ஒரு பெரிய விஷயமாய் எனக்குத் தெரியவில்லை. எத்தனையோ ஆண்களுமே உருக்கமான படங்களைப் பார்க்கும்போது அழுகின்றனர்.

 

 

3. தொலைக்காட்சிப் பெட்டியில் விருப்பமான தொடர்களைப் பார்த்துக்கொள்ள முடியும்.

watching-tv

வாழ்க்கையின் உன்னத லட்சியமே தொலைக்காட்சியின் தொடர்களைப் பார்க்கத்தானென்று ஏற்பட்டாற்போல் உள்ளதே! பெரும்பாலான வீடுகளில் பெண்கள் சண்டை போட்டு அவர்கள் விருப்பத்துக்கான தொடர்களைத்தான் போடுகிறார்கள். இன்னும் சொல்லப் போனால் உணவு நேரத்தையே அதற்குத் தகுந்தாற்போல் மாற்றி அமைத்துக்கொள்கிறார்கள். விடுமுறை, பண்டிகை தினங்களில் இப்போதெல்லாம் உறவினரோடு கலந்து கொண்டாடுவது போய், தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளைப் பார்ப்பதிலும், அதில் வரும் போட்டிகளில் கலந்து கொண்டு ஜெயிப்பதிலும் நேரம் போவது தெரியவில்லை. இது புரியாமல் யார் வீட்டுக்காவது நாம் போனால் வாங்க என்று கூப்பிடக் கூட ஆள் இருக்காது. இதில் ஆண், பெண் பேதமே இல்லை. ஒற்றுமையோ ஒற்றுமை இதில்! 😛

 

4. மற்றவர்களுக்காக நேரத்தைச் செலவிட வேண்டாம்.

ஆஹா, எத்தனை அற்புதமான கண்டுபிடிப்பு!!! நாம் இந்த உலகில் மற்றவரைச் சாராமல் வாழ முடியுமா? பிறந்ததுமே பெற்றோர். வளர்ந்து படித்து ஒரு வேலைக்குச் செல்வதுவரை அவர்கள் உதவி தேவை. அதன்பின்? எல்லாவற்றையும் தூக்கிப் போட்டுவிட்டு, அப்பாடா, நிம்மதி என்று நம்பாட்டைப் பார்த்துக்கொண்டு போகலாம் இல்லையா? இதை விட மட்டமான யோசனை வேறு இருக்க முடியுமா? பொறுப்பின்மையின் உச்சக்கட்டமே இதுதான். சம்பாதிப்பது வேண்டுமானால் நமக்காக என்று சொல்லலாம். ஆனால் வேலை செய்யும் இடத்திலோ தங்குமிடத்திலோ சாப்பிடுமிடத்திலோ மற்றவரைச் சாராமல் இருக்க முடியுமா? முயலுங்கள் பெண்களே! உங்கள் சமர்த்து அது! நீங்கள் குடியிருக்கும் அறைக்குள்ளோ வீட்டுக்குள்ளோ பாம்போ அல்லது விஷ ஜந்துக்களோ வந்துவிட்டால்கூட நாமே விரட்டிக்கொள்ளவேண்டும். தண்ணீர்க்குழாயில் தண்ணீர் வரவில்லை என்றாலோ அல்லது எரிவாயு விநியோகத்துக்கோ, குளிர்சாதனப் பெட்டியையோ, தொலைக்காட்சிப் பெட்டியையோ சரி பண்ணவோ எவரையுமே அழைக்காமல் நாமே செய்து கொள்ள முடியுமா? இப்படிப் பலர் நமக்காக கூப்பிட்ட குரலுக்கு வந்து நேரத்தைச் செலவிடுகிறார்கள். பணத்துக்குத்தான்; இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் நம் அற்புதக் கொள்கை அவர்களுக்கு அரசல் புரசலாகத் தெரிந்தால்கூட நமக்குப் பணத்துக்குக் கூட உதவிக்கு வருவார்களா, சந்தேகமே! “அந்தம்மாதான் அவ்வளவு பேசுதே! அது வேலையை அதுவே பார்த்துக்கட்டும்,” என்று சொல்பவர்கள்தான் அதிகமாக இருப்பார்கள்.

 

5. காலையில் எப்பொழுதுவேண்டுமானாலும் எழுந்துகொள்ளலாம்; எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.

ஒருபக்கம், “ஆங்கிலேயர் எல்லாத்தையும் குறிப்பிட்ட நேரத்தில் முடிப்பாங்க, நமக்கு பங்க்சுவாலிட்டின்னா என்னனே தெரியாது. கொஞ்சம் கூடப் பொறுப்பே கிடையாது,” என்று சொல்லுவோம். இன்னொரு பக்கம் நம் நேரத்தை நாமே வீணடித்துக்கொள்வோம். காலையில் நேரம் கழித்து எழுந்துகொள்வது ஒரு பெரிய சுதந்திரம் என்ற கண்டுபிடிப்புக்கு ஒரு சபாஷ்!

 

6. நண்பர்களோடு நிறைய நேரம் செலவு செய்யலாம்.

friends-chattingவாழ்க்கையின் அர்த்தமே நண்பர்களோடு செலவு செய்வது தானா? அதைவிடவும் உயர்ந்த கொள்கைகளோ, நோக்கங்களோ, சமுதாய முன்னேற்றமோ இருக்கக் கூடாதா? நட்பு வேண்டும்தான். ஆனால் எல்லாமும் ஓர் எல்லைக்கு உட்பட்டே இருக்கவேண்டும். ஆனால் பெரும்பாலும் இப்போதை இளைய சமுதாயம் நட்புக்கே முன்னுரிமை கொடுப்பதையும், அதை மறுக்கமுடியாமல் அவர்கள் பெற்றோரும் நட்புக்கே முன்னுரிமை கொடுப்பதையும் பெருவாரியாகக் காண முடிகிறது. சொந்தங்கள் என்றால் குற்றம், குறை சொல்வார்கள்; ஒத்துப் போவதில்லை என்பது இதற்கு அவர்கள் சொல்லும் முக்கியக் காரணம். நட்பில் மட்டும் ஒத்துப் போகிறதா? அபிப்பிராய பேதங்களே இல்லாமல் இருக்கிறதா? நிச்சயமாய் உண்டு. எவ்வளவு நெருங்கிய நட்பானாலும், ஒரு சிறு பேதமாவது இருக்கத்தான் செய்யும். நட்பு விஷயத்தில் பொறுத்துக்கொள்ளும் நாம் சொந்தங்களைக் காப்பாற்றுவதற்காக சொந்தங்களின் குறைகளையும் பொறுத்துக்கொள்ளக் கூடாதா? “குற்றம் பார்க்கில் சுற்றமில்லை” என்பது தானே ஆன்றோர் வாக்கு? தினமணி தினசரியில், “அருகி வரும் உறவுகள்” என்ற தலைப்பில், மாமா, மாமி, அத்தை, சித்தி, சித்தப்பா போன்ற உறவுமுறைகள் அழிந்து வருவதைக் குறிப்பிட்டிருந்தனர். ஆனால் நாமோ எந்த உறவும் வேண்டாம் என்று ஒதுங்கினால் கொஞ்சநஞ்சம் இருக்கும் சகோதர பாசமும் எங்கே வரும்? ஏற்கெனவே பலருக்கும் இன்று ஒரே குழந்தைதான். குழந்தைகளுக்கு விட்டுக் கொடுத்துப் போவதோ, அனுசரித்தல் என்றால் என்ன என்றோ தெரிவதில்லை. அப்பா, அம்மாவும் பணத்தால் தன் குழந்தைக்கு அனைத்தையும் வாங்கிவிடலாம் என்ற நினைப்பிலேயே மிதக்கின்றனர்.

 

7. பணியில் பதவி உயர்வு பெற்று வெளி ஊர்களுக்கோ, வெளிநாட்டுக்கோ செல்லும்போது பிரிவு இருக்காது.

குடும்பம் என்ற அமைப்பையே குலைக்கும் ஒரு சுதந்திரம் இது. குடும்பம் என்ற அமைப்பு இன்றைக்கும் ஓரளவாவது இருக்கிறதென்றால் அதற்குக் காரணம் இன்னமும் பாரம்பரியத்தையும், கலாசாரத்தையும் கட்டிக் காக்கும் பெண்களே. அத்தகைய பெண்கள் இன்றைய நாள்களில் அருகி வருகின்றனர் என்பதும் மறுக்க முடியாத ஓர் உண்மை. தேவைக்காக பெண் வேலைக்குச் செல்வது போய் இன்றைக்குப் பண ஆசை எல்லையில்லாமல் போய் நிற்கிறது.
 

மேற்சொன்ன அனைத்துமே சுயநலமாய்ச் சிந்திக்க வைப்பவை என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்காது. மேலும் அது சொல்வது குடும்பம் என்னும் அமைப்பில் இன்னும் ஆண்களுக்கே அதிகாரம் இருப்பதாயும் அவர்கள் கட்டுப்பாடுகளும், தளைகளும் விதிப்பதாயும் சொல்கின்றனர். இது எந்த அளவுக்கு நியாயம்?? தன் சொந்தப் பெற்றோரைத் தன்னுடன் வைத்துக்கொள்ள முடியாத மகன்கள் எத்தனை பேர்? அதற்கான காரணம் மனைவிக்குப் பிடிக்காததனாலேயே. தன் சொந்த அண்ணா, அக்கா, தம்பி, தங்கைகளுடன் பேச மனைவியின் அனுமதியைப் பெற்றுக்கொள்ளவேண்டும் நிலையில் இருப்பவர் பலர். அதையே பெண்ணின் உறவினர் என்றால் அந்தப் பெண்ணுக்கு உரிமை மறுக்கப் படுகிறது என்று சொல்வார்கள்.

ஆணுக்குத் திருமணத்தின் மூலம் புதியதொரு வேலைக்காரி கிடைத்தாள் மனைவி என்ற பெயரில் என்பதே இவர்கள் சொல்லுவது. மேலும் இவர்கள் சொல்லுவது கணவன், மனைவி வீட்டிற்குச் சென்று அங்கே மனைவியின் பெற்றோர்களுக்குத் துணிதுவைத்துப் போட்டு, சமையல் செய்து கொடுத்து அவங்களுக்கு அடங்கி இருக்கவேண்டும் என்றும் சொல்கிறார்கள். இதையெல்லாம் சொல்வது படிக்காதவர்கள் யாரும் இல்லை. நன்கு படித்து வெளிநாட்டில் வேலை பார்ப்பவர்கள்தான் இப்படிச் சொல்கிறார்கள். இன்னும் நயமாக, பெண் தன் வேர்களைத் துண்டித்துக்கொண்டு புகுந்த வீட்டுக்கு வருவதாய்ச் சொல்கின்றனர்.

ஒரு செடியை அதன் வேரோடு பிடுங்கினால்தான் இன்னொரு இடத்தில் நடமுடியும். வேரில்லாமல் ஏதேனும் ஒரு செடியை நட்டுப் பாருங்களேன். நிச்சயம் பிழைக்காது என்பதறிவோம் இல்லையா? அப்படியே பெண்களும். நிச்சயமாய்ப் பெண் தன் வேர்களோடுதான் புகுந்த வீட்டுக்கு வருகிறாளே ஒழிய வேர்களைத் துண்டித்துக்கொண்டல்ல. இந்த வேர் குடும்பத்தில் நிலைத்து நின்று ஆலம் விழுதுகளைப் போல் படரவேண்டும் என்றே அனைவரும் விரும்புவார்கள். துண்டித்துக்கொள்ள அல்ல. ஒரு பெண்ணுக்கும், ஓர் ஆணுக்கும் திருமணம் என்பதன் மூலம் சில சடங்குகள், சம்பிரதாயங்கள் ஏற்பட்டிருப்பது எதற்கு என்று அறிவோமா?

பெண்ணுக்குப் பையன் வீட்டோடு நெருங்கவும், பையனுக்குப் பெண் வீட்டோடு நெருங்கவும்தான். அதற்காகவே சில சடங்குகளைப் பையனின் சகோதரி செய்யவேண்டும் எனவும், சில சடங்குகளைப் பெண்ணின் சகோதரன் செய்யவேண்டும் எனவும் வைத்திருக்கிறார்கள். இன்னும் சொல்லப் போனால் இந்துக்களில் சிலரின் திருமண சம்பிரதாயத்தில் பெண்ணையும், பையனையும் திருமண மேடைக்கு அழைத்துச் செல்வது பையனின் உடன் பிறந்த சகோதரியும், அவள் கணவருமாகவே இருப்பார்கள். இப்படி நம் சம்பிரதாயம் ஒவ்வொன்றிலும் உறவினரையும் சம்பந்தம் செய்து கொண்டு ஆரம்பிப்பதில் பெண்ணின் உறவின் முறை வேர்களும் சரி, பையனின் உறவின் முறை வேர்களும் சரி பலப்படவே செய்யும்; செய்தன. சம்பந்தம் செய்வது என்பது அப்படி ஒன்றும் சுலபம் இல்லை. அதன் அர்த்தமோ, தாத்பரியமோ புரியாமல் வெறும் இரண்டு நபர்கள் ஒருவருக்கொருவர் சேர்ந்து வாழச் செய்யப்படும் ஒரு திட்டம் /ஒப்பந்தம் என்ற கோணத்தில் பார்த்தால் இப்படித்தான், அசட்டுத் தனமாய்ச் சொல்லுவார்கள். கூட்டுக் குடும்பம் என்ன அவ்வளவு உயர்ந்த ஒன்றா என்பதும் அவர்கள் கேள்வி.

இதிலிருந்து நம் பாரம்பரியமும், கலாசாரமும் எவ்வளவுக்கு எவ்வளவு செல்லரித்துக்கொண்டு வருகிறது என்று புரிகிறது அல்லவா? இதற்குக் காரணம் பெரும்பாலான புராணங்கள், நம் இதிஹாசங்கள் ஆகியவற்றின் மூலக் கருத்துகள் தவறான கோணத்தில் பார்க்கப்படுவதும் ஒரு காரணம் என்று சொல்லலாமோ? சரியாகப் புரிந்துகொள்ளப்படாமல் மேம்போக்காவே ஒவ்வொரு கடவுளுக்கும் இரு மனைவிகள் என்ற கோணத்தில் நம் வாழ்க்கையைக் கடவுள் மேல் கட்டாயமாய்த் திணித்துக்கொண்டிருக்கிறோம். நம்மை மாதிரி வாழ்க்கை வாழ்வதோ, குழந்தைகள் பெற்றுக்கொள்வதோ கடவுளருக்கு இல்லை. நாம் நம்முடைய பக்தியை நமது வசதிக்காக அவ்விதமாய் வெளிக்காட்டிக்கொள்கிறோமே தவிர, நம்மைப் போல் கடவுளும், குடும்பம், குழந்தை, குட்டி பெற்றுக்கொண்டு மனித வாழ்க்கை வாழ்கிறார் என எண்ணிக்கொள்ளக் கூடாது. நமது குடும்ப வாழ்க்கையில் அவரவருக்கு என விதிக்கப்பட்ட கடமைகளை ஒழுங்காய்ச் செய்தாலே போதுமானது. இல்லறம் என்பதே அறத்தோடு சேர்ந்து நடத்துவதற்குத்தான். மேலும் மனைவியைத்தான் இல்லாள் என்றும் சொல்கிறோம். கணவனை இல்லான் என்று சொல்வதில்லை. இல்லான் என்றால் அர்த்தமே மாறிவிடுகிறது அன்றோ?

wivesகுடும்பத்தில் யார் பெரியவர், யார் சிறியவர் என்ற போட்டிக்கே இடமில்லை. ஆண், பெண் இருபாலாருக்கும் அது சமமே. வீட்டு நிர்வாகம் செய்துகொண்டு, வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருக்கும் பெண்கள் மட்டம் என்றும் அர்த்தம் இல்லை. வீட்டில் முழுநாளும் இருந்து நிர்வாகம் பண்ணும்போதுதான் அதன் சிரமங்கள் புரியும். ஒரு சில வேலைக்குச் செல்லும் பெண்கள் வீட்டில் இருக்கும் பெண்களை அலட்சியமாய்ப் பேசுவதாலேயே வீட்டில் இருக்கும் பெண்கள் தங்களைத் தாங்களே மட்டமாயும் நினைத்துக்கொள்கின்றனர். மேலும் வீட்டில் சமையலறையே கதி என்று இருக்கமுடியுமா என்றும் சில பெண்கள் ஆதங்கப் படுகின்றனர். சமையல் என்பதும் எவ்வளவு முக்கியமான ஒன்று. அதுவும் ஒரு கலை என்பதைப் பலரும் புரிந்து கொள்ளவில்லை. பெண்கள் பத்திரிகைகள் என்றாலே என்ன வரும்? சமையல் கற்றுக்கொடுப்பதும் குழந்தை வளர்ப்பும் தானே என அலட்சியமாய் இன்றைய நவநாகரிகமணிகள் சொல்கின்றனர். குழந்தை வளர்ப்பு முக்கியம் இல்லையா? சமையல்தான் முக்கியம் இல்லையா? அத்தகைய நவநாகரிகமணிகள் சாப்பாடே சாப்பிடுவதில்லையா??

பாகற்காய் அல்வா கற்றுக்கொடுக்க ஒரு பத்திரிகையா என்பதும் அவர்கள் கேள்வி. அந்தப் பாகற்காய் அல்வா செய்யவும், சுவைக்கவும் பலரும் தயாராய்த் தானே இருக்கிறோம், மேற்கண்ட நவநாகரீகமணிகள் உள்பட. அவர்கள் மட்டும் சாப்பாடே சாப்பிடுவதில்லையா? என்னதான் கடையில் வாங்கி டப்பியில் அடைக்கப்பட்ட உணவைச் சூடு செய்து சாப்பிட்டாலும், அந்த உணவையும் யாரோ ஒருவர் எங்கேயோ, எப்பொழுதோ சமைத்துத்தானே அடைத்துக் கொடுத்திருப்பார்கள்? அதுவே நன்றாக இல்லையென்றால், ருசி இல்லை, உப்புக் கம்மி, காரம் தூக்கல் என்றெல்லாம் சொல்லாமலா இருக்கிறோம்.

kid-foodஎல்லாவற்றையும் சரியாகச் சேர்த்து, நன்றாகச் சமைக்க நமக்குத் தெரியவில்லை. வாங்கிச் சாப்பிடுகிறோம். வாங்கிச் சாப்பிடும்போதே குற்றம், குறை சொல்லிக்கொண்டும் இருக்கிறோம். அப்படியானால் சமையல் என்பது கஷ்டம் என்பதும் புரிந்துதானே இருக்கிறது? எல்லாமும் ஒரு கலைதான். இந்தச் சமையலையே மிகவும் சுலபமாய்ச் செய்யும்படி நாம் மனதளவில் நம்மைத் தயார் செய்து கொள்ளுவதோடு, சமையலுக்கான திட்டம், வழிமுறைகள் போன்றவற்றையும் முன்கூட்டியே தயாரித்து வைத்துக்கொண்டால் அரை மணி நேரத்தில் அசத்தலாய்ச் சமைத்துவிட முடியாதா? நம் நோயற்ற உடலுக்கு, நம் குழந்தைகள் ஆரோக்கியமாய் வளர சாப்பாடுதானே முக்கியம். குடும்பத்தை கவனித்து ஆரோக்யமாக வளர்ப்பதும் முக்கியம் இல்லையா? இன்றைய குழந்தைகள் நாளைய குடிமக்கள் ஆகின்றனரே. ஓர் ஆரோக்கியமான சமுதாயத்தை எதிர்காலத்திற்குத் தருவது நம்போன்ற பெண்களின் கையில் தானே இருக்கிறது? நம் குடும்பத்தில் இருந்துதானே சமூகம் உருவாகிறது?

முற்றும்.

18 Replies to “சம(?) உரிமைக்குப் போராடும் பெண்கள் – 4 [நிறைவுப் பகுதி]”

  1. //
    பெண்ணுக்குப் பையன் வீட்டோடு நெருங்கவும், பையனுக்குப் பெண் வீட்டோடு நெருங்கவும்தான். அதற்காகவே சில சடங்குகளைப் பையனின் சகோதரி செய்யவேண்டும் எனவும்…
    //

    அற்புதமாக எழுதி இருக்கிறீர்கள். தங்களின் பரிவு கலந்த எழுத்து மனதை கரைக்கிறது. இந்த தொடர் அதற்குள் முடிந்து விட்டதே என்று வருத்தமாக இருக்கிறது.

  2. ‘பெண்கள் முகத்தைத் திரையிட்டு மறைத்தல் தில்லித் துருக்கர் செய்த வழக்கமடி ‘
    என்று பாரதியார் பாடியுள்ளார்.

  3. ஆரம்ப வரியிலேயே அசத்தலான உண்மையுடன் ஆரம்பித்து இருக்கிறீர்கள். இந்த உண்மை பலருக்கு தெரியாமலே இருந்தது.
    நன்றி மேடம் அருமையான படைப்பு.

  4. அருமை! ஆண்களும் தெரிந்து கொள்ள வேண்டும்பல விஷயங்கள். நன்றிகள் பல!

  5. இக்கட்டுரைத்தொடர் ஒருவழியாக முடிவுக்கு வந்தது மிகவும் நிம்மதியாக இருந்தது.

  6. Pingback: Indli.com
  7. இந்தப் பதிவு எதோ ஒரு அவசரத்தில் எழுதியது போல் மேலோட்டமா இருந்தா மாதிரித் தோன்றியது.

    சுப்பு நாகம்மா பற்றியத் தகவல் ஆச்சர்யமாகவும் அதிர்ச்சி தரக் கூடியதாகவும் இருந்தது.

  8. நன்றிகீர்த்தி. இன்று குழந்தைகளுக்குச் சகிப்புத் தன்மை என்பதே இல்லை என்பதை எழுத்தாளர் எஸ்ரா (?) அவர்கள் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார். எப்போதும் தொலைக்காட்சிகளில் வன்முறையைப் போதிக்கும் தொடர்களையே பார்த்துக்கொண்டு இருப்பதால் அவர்கள் இயல்பாகவே வன்முறையில் விருப்பம் கொண்டிருக்கிறார்கள். மேலும் அவர்களுக்கு விளையாட இடமும் இல்லை, நேரமும் இல்லை, தோழர்களுக்கும் இதே பிரச்னை என்பதால் விளையாடும் தோழர்களும் இல்லை. பல வீடுகளிலும் கண்கூடாய்ப் பார்க்க முடிகிறது. 🙁

  9. நன்றி ஸ்ரீதரன்,

    நன்றி பாபு, உண்மையில் ஆரம்ப வரிகள் சிலவற்றை நீக்கிவிட்டதால் ஆரம்பம் இப்படித் தற்செயலாய் அமைந்தது என்பதே உண்மை! 😀

    நன்றி எஸென்கேஎம்,

    பாராட்டுக்கு நன்றி குமுதன்,

    சத்யராஜ், உண்மையில் இன்னொரு தொடர் பதிவும் போட்டிருக்கணும், கொஞ்சம் பெரிசா இருக்குனு அவற்றை நீக்கிவிட்டுப் போட்டேன். இதையே தெளிவான முடிவு சொல்லி முடிக்கவில்லையே?? அதனால் திடீர்னு வந்தாலும் வருவேன்! தயாராய் இருங்க! :)))

    நன்றி இண்டி.காம். பின்னூட்டங்கள் உங்களுடையது முழுமையாகக் கிடைத்தால் நன்றாய் இருந்திருக்குமோ??

    விருட்சம், அவசரமாய் ஆரம்பிக்கலை, மேலே திரு பாபுவுக்குச் சொன்னாப்போல் சில வரிகளை நீக்கியதால் உங்களுக்கு அப்படித் தோன்றுகிறது. மற்றபடி பல முறை எழுதித் திரும்பத் திரும்பச் சரிபார்த்துவிட்டே அனுப்பினேன். நன்றிங்க. சுப்புநாகம்மா பற்றிப் புத்தகமே வந்திருக்குனு என் கணவர் சொன்னார். கேட்டுப் பார்க்கணும்.

  10. வணக்கம் அம்மா அதுக்குள்ளே முடிச்சுடீன்களே …எத்தனை தடவை சொன்னாலும் ..திமிரும் -அதிமேதாவித்தனமும் (கலந்து ) ,,முட்டாள்தனமும் உள்ள பெண்களோ ஆண்களோ புரிந்துகொள்ள மாட்டார்கள் ,..எனக்கு நீங்கள் சொன்ன கருத்துகளில் நேரடியான அனுபவங்கள் உள்ளன ..என்னமோ படித்து பெரிய பெரிய மேல்நாட்டு கம்பனிகளில் ஆங்கிலத்தில் உளறி கொண்டும் நிறைய பணம் சம்பாதிப்பதாலும் தங்கள் என்னமோ வானத்திலிருந்து குதித்த மாதிரி மண்டைகணத்தோடு அலையும் பெண் பிசாசு கூட்டதிர்க்கு எத்தனை சொன்னாலும் புரியாது ..இது எல்லாம் பரவாஇல்லை நல்ல குடும்பங்களில் கூட பணத்திற்கும் ,வெளிநாட்டு மோகத்திலும் ..போலித்தனமான புகழுக்கும் ஆசை பட்டு தங்கள் பெண்களை சின்ன வயதிலிருந்தே வித்தியாசம் இல்லாமல் ஆணுக்கு “”சமாக” வளர்த்து ஒரு பரம்பரையையே அழிக்கும் பெற்றோர்களை பார்த்து இருக்கிறேன்..பெரிய கல்விகூடங்களில் படிப்பு ஆராய்ச்சி என்று வெளிநாட்டிற்கு அனுப்பிவிட்டு எவனோடோ ஓடிப்போனவளையும் /(போனவனையும் சேர்த்து கொள்கிறேன் பெண்ணியவாதிகள் இல்லையென்றால் போர்க்கொடி தூக்குவார்கள் சமஉரிமை போய்விட்டது என்று ) ..விவாகரத்து என்று அலையும் பெண்களையும் உருவாக்கியது முட்டாள் பெற்றோர்கள்தான் ..சின்ன வயதிலிருந்தே அன்பையும் ,தியாகத்தையும் ,மற்றவர்களை அன்பாக கவனிக்கும் தன்மையும் ,சொல்லி கொடுத்து வளர்ப்பில் இயல்பாக கொண்டு வருவது பெற்ற்றோகளின் கடமை ..தானே தனியாக வளரும் பிள்ளைகள் வெறும் பணத்தினால் எல்லாவற்றையும் பெற்றுவிடமுடியும் என்ற முட்டாள்தனதிலும் ,மண்டைகனத்திலும் ஒழுக்ககேட்டையும் சர்வசாதரணமாக எடுத்துகொள்ளும் விதத்திற்கு போய்விட்டார்கள் ..கடவுள் நம்பிக்கை சின்ன வயதிலிருந்தே ரத்தத்தில் இருக்கவேண்டும்..பெற்றோர்கள் அப்பிடி வாழ வேண்டும் முன்னுஉதாரணமாக ..பெண்கள் குடும்பத்தின் மையம் ..சுதந்திரம் உரிமை ,சாதனை,தன முத்திரை படைக்க போனால் உருப்படாத சமுகம் உருவாகும் ..தரமோ ரக்ஷதி ரக்ஷிதாக அதை பெண்கள் குடும்பங்கள் மூலமாகத்தான் செய்ய முடியும் ..

  11. படிப்பதனால் அறிவு கெட்டோர் ஆயிரம் உண்டு என்று ஒரு பழைய திரைப்பட பாடலை நண்பர் ஒருவர் அடிக்கடி முணுமுணுப்பார். காரணம் கேட்டால் சும்மா ஒன்ணும் பாடல்லை. என்னுடைய தங்கை அவளுடைய கணவரை விட ஒரு
    போஸ்ட் கிராஜுவேட் டிகிரி கூட வாங்கிவிட்டாள். அதன் காரணமாகவே இப்பொழுது அவர்களுக்குள் அடிக்கடி சண்டை வருகிறது. சண்டைக்கு காரணம் மாப்பிள்ளையல்ல. என் தங்கைதான் தனது மனோ பாவம் காரணமாக (அதிகம் படித்துவிட்டதாக) சண்டைக்கு அஸ்திவாரமிடுகிறாள். எனவேதான் நான் இந்தப்பாட்டை பாடித்தொலைக்கிறேன் என்றார்.பஞ்சாயத்து பண்ணியே அம்மாவும் அப்பாவும் வெறுத்துப் போயிருக்கிறார்கள் . படிப்பு பண்பினையும் அன்பினையும் கற்றுக் கொடுக்கவில்லை. அகங்காரமும் ஆணவமும்தான் வளர்ந்து வருகின்றன என்று மிகவும் சோகமாய் சொல்லி முடித்தார். பெண்கல்வி என்று சமுதாயம் முன்னேறினாலும் அன்பும் பண்பும் இல்லாத
    வாழ்க்கை சமூகச் சீர்கேடுகளுக்கே வழிவகுக்கும். பெண்ணியவாதிகள் வியாதிகளின் ஊற்றுக்கண் ஆகிவிடக்கூடாது என்பதே சமூக அக்கறை உள்ளவர்களின் கவலை.

  12. Being a woman I disown this author as a woman. What she wants is unknown! She has mentioned that to stay at village a girl who wish to come to city. Had she too much worried about city life, then let her go back to her own village and live. She is an epitome of disgrace to womanhood. It is so categorical that she wants the womanhood to stay back at home and be a child bearing machines. I think this author is an ugly betty type whose stomach burns on successfull IT women. I guess she did some tamil Lit.,

  13. I think this author is an ugly betty type whose stomach burns on successfull IT women. I guess she did some tamil Lit.,//

    Oh, Thank You Mrs/Miss Girija, Wonderful comments. I did literature in Hindi, after ten years of married life and two children. My husband is supporting me in all respects. So you are agreed village life is not an easy one. The suburban area , we are living now is almost like a village. So NP. Do not worry!

  14. @girija

    may i know how you found she is not a woman and in no place she has asked the women to stay at home. What she says is even if you come out try to adher to indian culture not the western culture.

    try to use common knowledge and dont attack any one personaly

  15. // Being a woman I disown this author as a woman. //

    // She is an epitome of disgrace to womanhood. //

    Looks like we have a new rule here… Anybody who writes as a woman should get a certificate first from Girija.

    If someone has a different opinion, that person has to be a bigot. So don’t bother being polite to him/her — this is typical feminazism.

  16. Oh it is OK Karthik, just forget it. அவங்களுக்குத் தமிழ் படிச்சவங்கன்னா ரொம்பவே பிற்போக்குவாதினு நினைப்பு வேறே. பாவம், விட்டுடுவோம்! :)))))))))

  17. Somebody said that there isno full stop in India.Despite Ms.Githa saying “finish” comments continue.The intolerence of IT (only an assumption) to her ideas eulogising the most important need for balancing the lifestyle of educated working women they are indulging in various fallacies mentioned inlogic.The German author Hein had saidAs Nature abhors vacuum,so does spiritualdeficiency invite the seduction of the Evil one”To quote an American example Hillary Clinton despite all the moral imperfections of her husband clung together to the virtues of the family life so that her daughter could face the world and life with equanimityUNfortunately our educated empowered employed women have been distracted by the dubious dichotomy in the imported western attitude to patriarchy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *