ராகுல் பேச்சு அறிவின்மையா, அகம்பாவமா, அரசியல் முதிர்ச்சியின்மையா?

தற்போது 40 வயதாகும் ராகுல் காந்தி கடந்த 6 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியில் ஒரு தலைவராக வலம் வருகிறார். இந்த குறிப்பிட்ட 6 ஆண்டுகளுக்கு முன்னால் அவர் என்ன செய்து கொண்டிருந்தார்? அவருடைய கல்வி பற்றியும், அவர் பெற்ற பட்டங்கள் பற்றியும் நாட்டு மக்களுக்குச் சொல்லப்பட்டதா? திடீரென்று அரசியல்களத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு நாளைய பிரதமர் என்று காங்கிரஸ் கட்சியினரும் ஊடகங்களும் துக்கி நிறுத்துபவரைப் பற்றிய முக்கிய விவரங்கள் நாட்டு மக்களுக்குத் தெரிய வேண்டாமா? போன்ற கேள்விகள் எழுகின்றன.
2009-ஆம் ஆண்டு அமேதி தொகுதியில் அவர் வேட்பாளராகப் போட்டியிட்டபோது தேர்தல் கமிஷனுக்கு கொடுத்த வாக்குமூலத்தில் 1989-ல் பள்ளி இறுதியும், 1994-ல் B.A. (Rollins College, Florida) முடித்ததாகவும், 1995-ல் M.Phil (Development Economics – Trinity College, Cambridge University) முடித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அவர் “ராவ்ல் வின்ஸி” (Raul Vinci) என்கிற பெயரில் கேம்பிரிட்ஜ் பல்கலை டிரினிடி கல்லூரியில் படித்ததாகவும், அங்கே Development Economics என்கிற பாடத்திற்கு M.Phil. கொடுப்பதில்லை என்றும் Development Studies என்கிற பாடத்திட்டத்திற்குத்தான் சான்றிதழ் வழங்குவதாகவும், அதிலும் அவர் 4 பாடங்களில் ஒரு பாடத்தில் (National Economic Planning and Policy) பெஃயில் ஆகிவிட்டதாகவும் கேம்பிரிட்ஜ் பல்கலை சான்றிதழ் அளித்துள்ளதையும் ஒரு ஆங்கில நாளிதழ் (The New Indian Express – 07 April 2009) வெளியிட்டிருந்தது.

இந்தச் சான்றிதழில் ராகுல் 2004-05ஆம் ஆண்டில் படித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ராகுல் தேர்தல் ஆணையத்தில் கொடுத்துள்ள வாக்குமூலத்தில் 1995ல் பட்டம் பெற்றதாகச் சொல்லியுள்ளார். தான் படித்த பாட்த்திட்டமும், படித்த ஆண்டும் கூட அவருக்குத் தெரியாதது வியப்பை அளிப்பதோடு மட்டுமல்லாமல் அவருடைய நம்பகத்தன்மையும் சந்தேகத்திற்கு உள்ளாகிறது.

ஆனால் சில வருடங்களுக்கு முன்னால் ராகுல் ஹார்வார்டு பல்கலையில் படித்தார்; புது தில்லி செயிண்ட். ஸ்டீஃபன் கல்லூரியில் விளையாட்டு வீரர்களுக்கான இட ஒதுக்கீட்டில் படித்தார்; என்றெல்லாம் பல பத்திரிகைகள் பலவாறாக செய்திகள் வெளியிட்டு வந்தன.

இருப்பினும், கடைசியில், கேம்பிரிட்ஜ் பல்கலையின் துணை வேந்தர் பேராசிரியை அலிஸன் ரிச்சர்ட் 1994-95ல் ராகுல் படித்ததாகவும் அவருக்கு “Development Studies” பாடத்தில் “M.Phil” பட்டம் வழங்கப் பட்டதாகவும் ராகுலுக்கே கடிதம் எழுதியதாக மற்றொரு நாளிதழ் (Indian Express – 29 April 2009) செய்தி வெளியிட்டது.

ஆனால் கடந்த 6 வருடங்களில் இவர் ஒரு முறைகூட பொருளாதாரம் மற்றும் வளர்ச்சிப் பாடங்கள் படித்தவரைப் போன்று அறிவுசான்ற பேச்சுக்கள் பேசியதில்லை என்பது குறிப்பிடத் தக்கது. மேலும் 1995-ல் பட்டம் வாங்கியவர் 2004 வரை என்ன செய்து கொண்டிருந்தார் என்பதும் தெளிவாக பொதுவில் வரவில்லை. இங்கிலாந்தில் ஒரு கம்பெனியில் (Michael Porter’s Management Consultancy Firm, Monitor Group) வேலைபார்த்து வந்ததாகவும் பின்னர் 2002-ல் இந்தியா வந்து மும்பையில் ஒரு சிறிய தொழில்நுட்ப கம்பெனி (Engineering and Technology Outsourcing Firm) நடத்தியதாகவும் சொல்லப்படுகிறது

rahul_veronicaஇடையே, 2001 செப்டம்பர் 21 அன்று பாஸ்டன் விமான நிலையத்தில் ஒரு பெட்டி நிறைய டாலர்-கரென்ஸிகளுடனும் தன்னுடைய கொலம்பியா நாட்டுத் தோழி வெரோனிகாவுடனும் அமெரிக்க அதிகாரிகளால் பிடிக்கப்பட்டு, பின்னர் அமெரிக்காவில் இருந்த அப்போதைய இந்திய தூதர் (பா.ஜ.க. அரசின் ஆணைப்படி) தலையீட்டால் காப்பாற்றப்பட்டார் என்றும் செய்திகள் வெளியாயின. இன்னும் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.

மேலும் சுவிட்ஸர்லாந்து பத்திரிகை (Schweizer Illustrierte) 11 நவம்பர் 1991 இதழில், அந்நாட்டு வங்கியில் அவருடைய அன்னை சோனியா பெயரில் இருக்கும் கணக்கில் உள்ள 2 பில்லியன் டாலர்கள் பணத்திற்கு ராகுல் தான் பயனாளி என்று செய்தி வெளியிட்டிருந்த்து.

தன்னால் அரியணை ஏற முடியாவிட்டாலும், எப்படியாவது தன் மகனை ஏற வைத்து விடுவது என்ற முடிவுடன் காய்களை நகர்த்திக் கொண்டிருக்கும் சோனியா, ராகுல் காந்தியை தேர்தல் பிரச்சார சமயங்களில் களத்தில் பணியாற்ற வைக்கிறார். அவரும் 2004 முதல் 2009 வரை பல மாநில சட்டசபைத் தேர்தல்களில் பணியாற்றி தோல்வியை மட்டுமே சந்தித்து வந்துள்ளார். உத்தரப் பிரதேசம், குஜராத், ஹிமாசலப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், சட்டிசஸ்கார், கர்நாடகம் போன்ற மாநிலங்களில் காங்கிரஸின் தோல்வி அவருடைய அணுகுமுறை மக்களிடையே எடுபடவில்லை என்பதை உறுதி செய்கின்றன.

வனவாசி கிராமங்களுக்குச் சென்று அவர்களுடன் கயிற்றுக் கட்டிலில் அமர்ந்து உரையாடுவது, தலித் கிராமங்களுக்குச் சென்று அங்கு யாராவது ஒரு ஏழை வீட்டில் உணவு சாப்பிடுவது, கூலித் தொழிலாளர்களுடன் சேர்ந்து வேலை செய்வது என்று எப்போதாவது ஒரு முறை அரசியல் ஸ்டண்ட் காட்சிகளை நடத்தியும், தேர்தல் கால சமயங்களில் பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் சில நிமிடங்கள் உரையாடுவது போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்றும், கண்காட்சி அரசியலை நாடகங்களாக அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார்.

இவற்றுக்கு இந்திய ஊடகங்களும் பெரிதும் முக்கியத்துவம் கொடுத்து நாட்டு மக்களிடையே ராகுல் காந்தியை பற்றிய ஒரு மாயையான தோற்றத்தை உருவாக்குகின்றன. தற்போது அவர் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளாராக இருப்பதோடு மட்டுமல்லாமல் “நாளைய பிரதமர்” என்று பேசப்படுகிறார். இவர் எது செய்தாலும், என்ன பேசினாலும் அவை முக்கியச் செய்திகளாக ஊடகங்களில் வெளிப்படுகின்றன.

இவருடைய பேச்சுகளையும் செயல்களையும் கூர்ந்து நோக்கினால், அவை சொல்லிக் கொடுக்கப்பட்டவை என்பது புலனாகும். இதில் வருந்தத் தக்க விஷயம் என்னவென்றால், இவர் பிரனாப் முகர்ஜீ போன்ற சிறந்த தலைவர்களிடம் பாடம் படிக்காமல், திக் விஜய் சிங் போன்ற தீவிரவாத போலி மதச்சார்பின்மைத் தலைவர்களிடம் அரசியல் கற்றுக் கொள்வது தான். அதன் விளைவு, ராகுல் ஒரு மனமுதிர்ச்சியற்ற அரசியல்வாதியாக அரசியல் களத்தில் காட்சி தருகிறார். ஆகவேதான், இவருடைய பேச்சுகளும் செயல்களும் கடும் விமரிசனத்திற்கு உள்ளாகின்றன.
இவருடைய சமீபத்திய பேச்சு இது தான்: “ஆர்.எஸ்.எஸ் (RSS – ராஷ்டரீய ஸ்வயம்சேவகர்கள் சங்கம்) மற்றும் சி.மி (SIMI – இந்திய இஸ்லாமிய மாணவர்கள் இயக்கம்) ஆகிய இரண்டு இயக்கங்களும் ‘அடிப்படைவாத’ மற்றும் ‘மதவெறிபிடித்த’ இயக்கங்கள்” என்று பா.ஜ.க ஆட்சி நடக்கும் மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஒரு காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை அணி நிகழ்ச்சியில் பத்திரிகையாளர் கூட்டத்தில் பேசியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியில் இளைஞர்கள் வந்து சேர வேண்டும் என்று கூற விரும்பிய ராகுல், “இளைஞர்கள் மத அடிப்படைவாதிகளாக இருக்கக் கூடாது. அவர்கள் மதச்சார்பு அற்றவர்களாக இருக்க வேண்டும்” என்று பேசியிருந்தால் பிரச்சனை ஏற்பட்டிருக்காது. ஆனால் நாட்டில் பல பயங்கரவாதச் செயல்கள் புரிந்திருக்கும் சி.மி இயக்கத்தையும், தன்னலமற்ற சேவைகள் பல புரிந்து வரும் சமூகநல இயக்கமான ஆர்.எஸ்.எஸ்ஸையும் சமமாகப் பாவித்து அவர் பேசியது கடும் கண்டனத்துக்கு உள்ளானது. மேலும் ஒரு பத்திரிகை நிருபர் “உங்கள் பேச்சு சச்சரவை ஏற்படுத்தும்” என்று சொன்னபோதுகூட, ராகுல் “என் பேச்சில் நான் எந்தவிதமான சச்சரவையும் காணவில்லை” என்றும் கூறியிருக்கிறார்.

ராகுலுடைய பேச்சுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது ஆர்.எஸ்.எஸ். ஆர்.எஸ்.எஸ் தலைவர்களுள் ஒருவரான ராம் மாதவ், “அர்த்தமில்லாத அபத்தமான பேச்சுக்களைப் பேசுவதற்கு முன்னால் ராகுல் தன்னுடைய வரலாற்று அறிவைப் பெருக்கிக் கொள்ளவேண்டும். தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கங்களுக்கும் ஆர்.எஸ்.எஸுக்கும் இடையே உள்ள வித்தியாசங்களை ராகுல் தெரிந்துகொள்ள வேண்டும். கடந்த 60 வருடங்களாக அடிப்படைவாத இயக்கமாக விளங்கி வந்துள்ள காங்கிரஸ் கட்சியின் வரலாற்றைப் படிக்க வேண்டும். அவர் அரசியலில் இன்னும் நெடுந்தூரம் பயணம் செய்ய வேண்டியுள்ளது. இந்தியாவின் சரித்திரத்தைப் பற்றிய அறிவு அவருக்கு வேண்டும்” என்று பதில் கூறியுள்ளார்.

பா.ஜ.கட்சியும் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளது. “ராகுல் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளார். அதனால்தான் ஒரு தேசியவாத இயக்கத்திற்கும் ஒரு தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் இருக்கிறார். அவர் எதைப் பேசுவதற்கும் முன்னர் இந்திய வரலாற்றை அறிந்துகொள்ள வேண்டும்” என்று கூறியுள்ளது.

ராகுல் காந்தி ஒரு சாதாரண காங்கிரஸ் தலைவரில்லை. கட்சியைக் காலடியில் வைத்திருக்கும் நேரு குடும்பத்தின் வாரிசு. காங்கிரஸ் இளவரசர் என்று அவருடைய கட்சியினரால் துதிபாடப் படுபவர். இவருடைய பேச்சு ஊடகங்களால் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. பலராலும் கவனிக்கப்படுகிறது. ஆகவே இவருடைய கருத்து ஒத்துக்கொள்ளக்கூடியதா, இவருடைய பேச்சு சிறுபிள்ளைத்தனமாதா என்ற முடிவிற்கு வரும் முன்னர் ஆர்.எஸ்.எஸ் பற்றியும் சி.மி. பற்றியும் வாசகர்கள் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். மேலும் ராகுல் முன்பு பேசிய சிலவற்றையும் அறிந்துகொண்டு அவருடைய தற்போதைய பேச்சு எந்த வகையைச் சார்ந்த்து என்று வாசகர்களே முடிவு செய்வது நலம்.

ஆர்.எஸ்.எஸ் (ராஷ்ட்ரிய ஸ்வயம்ஸேவக் ஸங்கம்):

• ஆர்.எஸ்.எஸ். 1925-ஆம் ஆண்டு டாக்டர்.கேஷவ் பலிராம் ஹெட்கேவார் என்பவரால் நாக்பூரில் தொடங்கப்பட்ட தேசிய கலாசார சமூக சேவை இயக்கம். தன்னுடைய 85வது ஆண்டில் மாபெரும் தேசிய சேவை இயக்கமாக பீடுநடை போட்டு வருகிறது.

• ராஷ்ட்ரிய சேவிகா சமிதி, விஸ்வ ஹிந்து பரிஷத், சேவா பாரதி, வனவாசி கல்யாண் ஆசிரமம் போன்ற தன்னுடைய பல கிளை அமைப்புகளின் மூலம் பலவிதமான சேவைகளை எந்த விதமான விளம்பரமும் இன்றி செய்து வருகின்றது ஆர்.எஸ்.எஸ்.

• நாடு முழுவதும் லட்சக்கணக்கான ஸ்வயம்சேவகர்கள் அடங்கிய 50,000க்கும் மேற்பட்ட இடங்களில் ‘ஷாகாக்கள்’ (கிளை முகாம்கள்) நடத்தி நன்னடத்தையும், ஒழுக்கமும், தேசபக்தியும், சேவை மனப்பான்மையும் மிக்க மனிதர்களை உருவாக்குகிறது. ஜாதி ஒழிப்பை வெறும் பேச்சோடு நிறுத்திக்கொள்ளாமல், பூரணமாக நிறைவேற்றி வருகிறது. இயக்கத்தில் உள்ள அனைவரும் தங்களுடைய ஜாதிப் பெயரை சொல்லிக்கொள்வதோ, உபயகப்படுத்துவதோ கிடையாது.

• சுதந்திரப் போராட்டத்தில் பங்கு கொண்ட்து மட்டுமல்லாமல், நாடு பிரிவினையானபோது பாகிஸ்தான் எல்லையில் ஏற்பட்ட கலவரத்தில் மக்களுக்குப் பெரும் பாதுகாவலானக இருந்து சேவை செய்த்து ஆர்.எஸ்.எஸ்.

• 1962-ல் இந்திய-சீன போரின்போது சிறந்த சேவை செய்த்தற்காக பிரதமர் நேருவிடம் பாராட்டு பெற்றது. பின்னர் 1963-ல் பிரதமர் நேரு ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைக் குடியரசு தின அணிவகுப்பில் கலந்துகொள்ளச் சொல்லி அழைப்பு விடுத்தார். இந்திய ராணுவத்திற்கு அடுத்தபடியாக சீருடை அணிந்து அற்புதமாகப் பீடுநடை போட்டு தன் தேசபக்தியை பறைசாற்றிய இயக்கம் ஆர்.எஸ்.எஸ். 1965திலும் 1971றிலும் பாகிஸ்தானுடனான போரில்கூட பல சேவைகளைச் செய்து பாராட்டு பெற்றது.

• நாட்டின் எந்த மூலையில், எந்தவிதமான இயற்கைச் சீற்றங்கள் (வெள்ளம், புயல், பூகம்பம், சுனாமி, பயங்கரவாதம், குண்டு வெடிப்புகள், விமான/ரயில் விபத்துக்கள் போன்றவை) ஏற்பட்டு மரணங்களும், அவலங்களும், பெருந்துன்பமும் ஏற்பட்டாலும், அங்கே உடனடியாகச் சென்று பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் ஜாதி மத பேதமின்றி வேண்டிய அனைத்து உதவிகளையும் செய்து காப்பாற்றும் மாபெரும் இயக்கம். சில முக்கிய உதாரணங்களாக 1971 ஒடிஸா புயல், 1977 ஆந்திரா புயல், 2004 சுனாமி, 2001 குஜராத் பூகம்ப்ம், 2009 பீகார் வெள்ளம், 2010 ஒடிஸா புயல் ஆகியவற்றை சொல்ல்லாம்.

• எந்த மூலையில் எந்த விபத்து ஏற்பட்டாலும் அவ்விடத்தின் மருத்துவ மனைகளில் முதலில் ஆஜராவது ஸ்வயம்சேவகர்கள்தான். மருத்துவமனைக்குத் தேவைபட்ட அளவு ரத்த தானம் செய்பவர்கள் அவர்கள்தான். சொல்லப்போனால் இன்று நாட்டில் ஆயிரக்கணக்கான மக்களுக்கு, அவர் எந்த ஜாதி மதத்தவர்களாக இருந்தாலும், ஆர்.எஸ்.எஸ் ரத்தம் ஓடுகிறது என்றால் அது மிகையாகாது.

• சமீபத்தில் ஈழம்-4ம் போரில் கடுமையாகப் பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழ் மக்களுக்கு ஜாதி மத பேதமின்றி மாபெரும் சேவை செய்து வருகிறது ஆர்.எஸ்.எஸ். பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழ் மக்களாலும் இலங்கை அரசாலும் ஏகமனதாகப் பாராட்டப் பட்டுள்ளது.

• நாடெங்கிலும் உள்ள மலைவாழ் மக்களுக்கும் வனவாசிகளுக்கும் கல்வி போதிப்பதில் முதலில் இருக்கும் இயக்கம் ஆர்.எஸ்.எஸ் தான். அதோடு மட்டுமல்லாமல் மத்திய அரசின் நலத் திட்டங்களை மலைவாழ் மக்களிடம் விரைவாகவும் சிறப்பாகவும் எடுத்துச் செல்வது ஆர்.எஸ்.எஸ். இயக்கம் தான். ”வனவாசிகளுக்குச் சிறந்த சேவை செய்யும் குறிப்பிட்ட 14 தன்னார்வ தொண்டு அமைப்புகளில் மூன்றில் ஒரு பங்கு அமைப்புகள் சிறந்த முறையில் சேவை செய்கின்றன. அவை அனைத்தும் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தைச் சார்ந்தவை தான்” என்று 2006-ஆம் ஆண்டு மன்மோகன் சிங்கின் காங்கிரஸ் அரசே (பழங்குடியினர் நலவாழ்வு அமைச்சகம்) குறிப்பிட்டுள்ளது.

• 1934-ல் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் வர்தா முகாமுக்க்ச் சென்ற காந்திஜி, “இங்கு உள்ள சேவகர்களின் ஒழுக்கமும், கட்டுப்பாடும், இங்கே ஜாதி வேற்றுமையும் தீண்டாமையும் இல்லாததும் எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது” என்று கூறி, பின்னர், தனியாக சில ஸ்வயம்சேவகர்களிடம் விசாரணை செய்து அவர்கள் அனைவரும் ஒற்றுமையாக ஒருவருக்கு அடுத்தவர் ஜாதி தெரியாமல் ஒரே இடத்தில் ஒன்றாக உண்டு உறங்கி வாழ்கின்றனர் என்று உறுதி செய்து கொண்டார்.

• 1936-ல் பூனா முகாமுக்க்குச் சென்ற டாக்டர் அம்பேத்கர், “நான் இப்போது தான் முதல் முறை ஆர்.எஸ்.எஸ் முகாமிற்கு வருகிறேன். நீங்கள் அனைவரும் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற ஜாதி வித்தியாசம் ஏதுமின்றி ஒன்றாக இயங்குவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார். முகாமில் தீண்டாமை இருக்கிறதா என்று அவர் ஆர்.எஸ்.எஸ் தலைவரிடம் கேட்ட போது, “இங்கு தீண்டத் தகாதவர்களும் இல்லை, தீண்டத் தக்கவர்களும் இல்லை. அனைவரும் ஹிந்துக்கள்” என்று பதிலுறைத்தார் டாக்டர் ஹெட்கேவார்.

• 1975-ல் இந்திரா காந்தி அராஜகமாக நெருக்கடி நிலைப் பிரகடனம் செய்த போது, அதை எதிர்த்து ஆயிரக்கணக்கான ஸ்வயம்சேவகர்கள் சிறை சென்றனர். பின்னர் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினர் ரகசியமாக இயங்கி நாட்டின் எதிர் கட்சியினர் அனைவருக்கும் பாலமாக விளங்கி மாபெரும் சேவை செய்து நாட்டில் மீண்டும் ஜனநாயகத்தை நிலநாட்டினர்.

• அது வரைக்கும் ஆர்.எஸ்.எஸ் என்றாலே முகம் சுளித்துக் கொண்டிருந்த திரு.ஜெயப்பிரகாஷ் நாராயணன் அவர்கள் 1977-ல் புது தில்லியில் நடந்து கொண்டிருந்த ஆர்.எஸ்.எஸ். முகாமிற்குச் சென்று இரண்டு மணி நேரங்களுக்கும் மேலாக அவர்களை கவனித்து அவர்களுடன் உரையாடிவிட்டு, பின்னர், “இது ஒரு புரட்சிகரமான இயக்கம். வேறு எந்த இயக்கமும் இதற்கு இணையாகாது. இங்கு ஒழுக்கமும் படிப்பும் நிறைந்த இளைஞர்கள் ஏராளமானவர்கள் இருக்கின்றனர். ஜாதி வேற்றுமையை ஒழித்து, ஏழை மக்களின் கண்ணீரைத் துடைத்து, சமூகத்தை மாற்றியமைப்பது இந்த ஒரே இயக்கத்தினால்தான் முடியும்” என்றார்.

• 1984-ல் இந்திரா காந்தியின் கொலைக்குப் பிறகு காங்கிரஸ் கட்சியினர் நாடெங்கும் உள்ள சீக்கியர்களைக் கொன்று குவித்தபோது, பல சீக்கிய குடும்பங்களைக் காப்பாற்றி, அச்சமூகத்தினருக்குக்ப் பாதுகாப்பு அளித்தது ஆர்.எஸ்.எஸ்.

• கேரளாவின் அலுவா என்னும் பகுதியில் புனித ஜோஸஃப் சர்ச்சைச் சேர்ந்த ஃபாதர் வின்ஸெண்ட் குண்டுகுலம் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைப் பற்றி ஒரு பி.ஹெச்.டி படிப்புக்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டு டாக்டர் பட்டம் பெற்றார். அவர் தன்னுடைய “ஆர்.எஸ்.எஸ். – எந்து? எங்கோட்டு?” (ஆர்.எஸ்.எஸ். – என்ன? எங்கே செல்கிறது?) என்னும் ஆராய்ச்சிப் புத்தகத்தில், “ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தவரின் ஒழுக்கமும், ஈடுபாடும், எளிமையான வாழ்க்கை முறையும், இயற்கைச் சீற்றங்கள் மற்றும் பேராபத்துக்களின் போது அவர்கள் செய்யும் சேவைகளும் மிகவும் பாராட்ட்த் தக்கன. ஆர்.எஸ்.எஸ். ஒரு மதவாத இயக்கம் அன்று. மத்த்தின் பேரில் மக்கள் அனைவரையும் ஜாதி வித்தியாசமின்றி ஒருங்கிணைத்து சேவை செய்ய ஊக்கமளிக்கும் இயக்கம்தான்” என்று தெளிவாகக் கூறுகிறார்.

• ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை காங்கிரஸ் மூன்று முறை தடை செய்ய முயன்றது. காந்திஜியை சுட்டுக் கொன்ற கோட்சே ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தைச் சேர்ந்தவர் என்று சொல்லி நேரு அரசங்கம் 1948-ல் இயக்கத்தைத் தடை செய்தது. ஆனால் உச்சநீதிமன்றம் காந்திஜி கொலைக்கும் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று தீர்ப்பு சொல்லி தடையை நீக்கியது. இந்திரா காந்தி அரசும் நெருக்கடிநிலை காலத்தில் ஆர்.எஸ்.எஸ்ஸைத் தடை செய்தது. நெருக்கடிநிலை தகர்க்கப்பட்டபோது ஆர்.எஸ்.எஸ் மீதிருந்த தடை நீங்கியது. மீண்டும் மூன்றாவது தடவையாக பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது காங்கிரஸ் அரசு இயக்கத்தைத் தடை செய்ய முயன்று தோற்றுப்போனது.

சிமி (இந்திய இஸ்லாமிய மாணவர் இயக்கம்) SIMI (Students Islamic Movement of India)

• உத்தரப் பிரதேசம் அலிகார் மாவட்டத்தில் முகம்மது அஹமதுல்லா சித்திக்கி என்பவரால் 1977-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இது ஆரம்பத்தில் ’ஜமாத்-இ-இஸ்லாமி ஹிந்த்’ என்கிற அமைப்பின் மாணவர் அணியாக இருந்தது. பின்னர் அதிலிருந்து பிரிந்து தனித்து தீவிரவாத இயக்காமாக மாறி இயங்க ஆரம்பித்தது. அதை ஆரம்பித்த சித்திக்கி அவர்களே வெறுத்து வேதனையுற்றார்.

• 80களிலும் 90களிலும் தீவிரவாத இயக்கமாக உருவெடுத்த இவ்வியக்கம் நாடு முழுவதும் முஸ்லிம் இளைஞர்களை உறுப்பினராகச் சேர்த்தது. இஸ்லாத்தின் மூலம் இந்தியாவிற்கு ‘விடுதலை’ என்பதே இதன் நோக்கம்.

• ஆங்காங்கே மதக் கலவரங்களை ஏற்படுத்தி பிரிவினை வாதத்தில் ஈடுபட்டு வந்தது இவ்வியக்கம். பல இடங்களில் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தது. குண்டு வெடிப்புகளும் நிகழ்த்தியது.

• செப்டம்பர் 11, 2001-ல் அமெரிக்காவில் உலக வர்த்தக மைய இரட்டை கோபுரக் கட்டிடங்கள் ’அல் கைதா’ இயக்கத்தினரால் தகர்க்கப்பட்டபோது அமெரிக்கா பயங்கரவாதத்திற்கு எதிரான போரை அறிவித்தது. அப்போது அமெரிக்க அரசு அல் கைதா இயக்கத்துடன் தொடர்புடைய பல இயக்கங்களைத் தடை செய்தபோது சிமியையும் தடை செய்த்து.

• பா.ஜ.க தலைமையிலான இந்திய அரசும் 27 செப்டம்பர் 2001 அன்று சிமி இயக்கத்தைத் தடை செய்தது. அது தொடர்பாக அந்த தீவிரவாத இயக்கத்தைத் தடை செய்யக்கூடாது என்று பாராளுமன்றத்தில் காங்கிரஸ் தலைவி சோனியா இரண்டு முறை (மார்ச்சு, ஜூலை 2002) பேசினார்.

• இரண்டாண்டுகளுக்குப் பின்னர் செப்டம்பர் 2003-ல் மீண்டும் தடையை நீட்டித்தது இந்திய அரசு. அப்போது காங்கிரஸ் தலைவர் சல்மான் குர்ஷித், கட்சித் தலைமையின் அறிவுறுத்தலின்படி சிமி இயக்கத்திற்கு ஆதரவாக உயர்நீதிமன்றத்தில் ஆஜராகி வாதிட்டார்.

• இதனிடையே சிமி ஈடுபட்டு நடத்திய பல மதக்கலவரங்கள், தீவிரவாத தாக்குதல்கள் ஆகியவற்றின் மீது தடா போன்ற சட்டங்களின்படி நடவடிக்கை எடுத்தது இந்திய அரசு.

• ஆனால் 2004-ல் பொறுப்பேற்ற காங்கிரஸ் தலைமையிலான அரசு செப்டம்பர் 2005-ல் சிமியின் மீதிருந்த தடையை வேண்டுமென்றே நீட்டிக்காமல் விட்டது. பின்னர் எதிர் கட்சிகளின் அழுத்தம் காரணமாக காங்கிரஸ் அரசு 27 ஜூலை 2006-ல் சிமியை மீண்டும் தடை செய்தது.

• பின்னர் ஃபிப்ரவரி 2008-ல் மன்மோகன் அரசு தடையை நீட்டித்தபோது, சிமி இயக்கம் தில்லி உயர்நீதிமன்றத்தை அணுகியது. அப்போது தில்லி உயர்நீதிமன்றம் கீதா மிட்டல் என்ற நீதிபதி தலைமையில் அமைத்த தீர்ப்பாய மையம் காங்கிரஸ் அரசு கொடுத்த ஆதாரங்கள் போதவில்லை என்று கூறி 5 ஆகஸ்டு 2008-ல் சிமி மீதான தடையை நீக்கியது.

• ஆயினும் மத்திய அரசு உச்சநீதிமன்றத்தை அணுகியது. தடை செய்யப்பட்ட சிமி ‘இந்திய முஜாஹிதீன்’ என்ற புதிய பெயரில் தில்லி, மும்பை, ஜெய்பூர், பெங்களூரு, ஹைதராபத், மலேகான், அகமதாபாத், என்று பல நகரங்களில் பல பயங்கரவாத்த் தாக்குதல்களை நடத்தியதையும், கிட்டத்தட்ட 1900 சிமி உறுப்பினர்கள் பல வழக்குகளில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு நாடு முழுவதும் சிறைகளில் அடைக்கப் பட்டுள்ளதையும் கூறி ஆதாரங்களையும் சமர்ப்பித்தது. உச்சநீதிமன்றமும் சிமி மீதான தடையை மீண்டும் நீட்டித்தது.

• இதனிடையே, சிமி இயக்கம் பல மாநிலங்களில் பல பெயர்களில் புதிய அவதாரம் எடுத்தது. உதாரணத்திற்கு, கேரளாவில் என்.டி.எஃப் (NDF); தமிழகத்தில் எம்.என்.பி (MNP); கர்நாடகத்தில் கே.எஃப்.டி (KFD) போன்றவை. இவை எல்லாம் சேர்ந்துதான் ஃபிப்ரவரி 2007-ல் பாப்புலர் ஃப்ரெண்ட் ஆஃப் இந்தியா (பி.எஃப்.ஐ – PFI)) என்ற அமைப்பைத் தோற்றுவித்தன.

ராகுல் வாய்மொழி:

• 1992-ல் எங்கள் குடும்பத்தவர் யாரேனும் பிரதமராக இருந்திருந்தால் பாபர்மசூதி இடிக்கப்படாமல் காத்திருப்போம். என் தந்தை ராஜிவ் காந்தி என் அன்னை சோனியாவிடம் “பாபர்மசூதியை இடிப்பவர்கள் என் பிணத்தின் மீதுதான் அதைச் செய்ய முடியும்” என்று கூறியிருந்தார்.
• 1996-ல் மாயாவதியுடன் நாங்கள் வைத்த கூட்டணியில் எங்கள் கட்சி விலை போய்விட்டது. அதன் பலனை இன்றுவரை அனுபவித்து வருகிறோம்.
• பகுஜன் சமாஜ் கட்சியும் சமாஜ்வாதி கட்சியும் ஒரே தலைவரை நம்பியிருப்பதுதான் உத்தரப் பிரதேச மாநிலத்தின் தற்போதைய முன்னேற்றமில்லா நிலைக்குக் காரணம்.
• ரஜினிகாந்த் காங்கிரஸ் கட்சியில் சேருவதை வரவேற்கிறேன். காங்கிரஸ் கதவுகள் எப்போதும் திறந்திருக்கும். காங்கிரஸ் கட்சியில் சேருவதற்கு ஒரே ஒரு நிபந்தனைதான். அவருக்கு குற்றப் பின்னணி இருக்கக்கூடாது. ரஜினிகாந்த் ஒரு குற்றவாளி இல்லை என்று நினைக்கிறேன்.
• தேசிய அளவில் நதிகளை இணைப்பது பேராபத்தில் முடியும். சுற்றுப்புறச் சூழல்களுடன் விளையாடுவது சரியில்லை.
• எங்கள் குடும்பம் ஒன்றை முடிவு செய்துவிட்டால் அதிலிருந்து பின் வாங்குவதில்லை. அது இந்தியாவின் சுதந்திரமாக இருந்தாலும் சரி, பகிஸ்தானைப் பிரித்து பங்களாதேஷை தோற்றுவிப்பதாக இருந்தாலும் சரி, அல்லது இந்தியாவை 21-ஆம் நூற்றண்டுக்கு இட்டுச்செல்வதாக இருந்தாலும் சரி.
• போஃபர்ஸ் ஊழல் முடிந்துபோன சமாசாரம். அதனால் எங்கள் கட்சிக்கு எந்தவிதமான தர்ம சங்கடமும் இல்லை. சி.பி.ஐ போன்ற அமைப்புகளைத் தவறாக உபயோகப்படுத்திக் கொள்வதென்பது ஒரு ஒழுங்குமுறை சமாசாரம். ஆட்சியில் இருக்கும் அனைத்து கட்சிகளும் அரசாங்க அமைப்புகளுக்கு அழுத்தம் தரலாம்.

அரசியலில் ஒரு கட்சியினர் எதிர்கட்சியினரை விமரிசனம் செய்வது தவறில்லை. அம்முறையில் ராகுல் காந்தி எதிர்கட்சியான பாரதிய ஜனதாவையும், அதன் ஆதரவு அமைப்புகளையும் விமரிசனம் செய்யலாம். ஆனால் பேசுவதற்குமுன் அவற்றின் விளைவுகளை யோசிக்கவேண்டும். அதுதான் அறிவாளிக்கு அழகு.

ராகுலின் மேற்கண்ட பேச்சுகளைப் பார்க்கும்போது சிறுபிள்ளைத்தனமும், முட்டாள்தனமும் தெரிகின்றன. இதற்குக் காரணம் அவர் அரசியல் பாடங்களை ஈடுபாட்டுடன் கற்காமல் மற்றவர் சொல்லிக்கொடுத்தபடி நடப்பதும், எழுதிக்கொடுக்கும்படி பேசுவதும்தான். முட்டாள்தனம் என்பது அகம்பாவத்தின் விளைவாக இருப்பதுண்டு. அகம்பாவத்திற்கு அறிவின்மையே காரணம். Ignorance leads to arrogance, which results in idiocy.

நடுவயது தாண்டிவிட்ட ராகுல் இன்னும் அரசியல் முதிர்ச்சியற்று இருப்பது அவருக்கும் அவருடைய கட்சிக்கும் நல்லதல்ல. இந்நிலையில் அவர் கட்சியைத் தேர்ந்தெடுப்பது நாட்டு மக்களுக்கு நல்லதல்ல.

33 Replies to “ராகுல் பேச்சு அறிவின்மையா, அகம்பாவமா, அரசியல் முதிர்ச்சியின்மையா?”

  1. இப்படியெல்லாம் அவரைப் பேச வைப்பது ராகுல் காந்தி இல்லை. அவருக்குள் உள்ள ‘ரால் வின்சி’.

  2. இதெல்லாவற்றுக்கும் காரணம் ‘மறைமுக சிலுவைப் போர்’
    அதன் படை அரசியல்வாதிகள்,ஊடகங்கள்,போலி அறிவு ஜீவிகள்,மிஷனரிகள் இந்த நான்கு பிரிவுகளைக் கொண்டது.
    அதன் ‘சுப்ரீம் கமாண்டர்’ ‘அன்டோனியா மைனோ’

  3. தான் கேட்டதெல்லாம் கிடைக்கும் என்று வளர்ந்த, நினைக்கின்ற ஒரு spoilt பணக்கார இளைஞன் இப்படித்தான் நடப்பான்.

  4. Leadership is a quality that comes by birth.. Rahul Gandhi’s shallowness is very evident in every speech of his.. If he had the real leadership quality, he would have been at the height of success, given his current powerful position. But what to do…

    Every word of his is becoming an expression of his stupidity, and the media is in an embarrasing position NOT to reveal it.. so better to build an image remotely..

    Compare Rahul Gandhi with Varun Gandhi..

  5. கட்டுரை அருமை. மிக அருமை.

    கட்டுரை ஆசிரியருக்குப் பாராட்டுக்கள். வாழ்க நீர் எம்மான்.

    தென்னமரிக்க இத்தாலிய நாடுகளில் மாஃபியா குழுக்கள்தான் நாட்டை நடத்துகின்றன. ஆனால், எந்த மாஃபியா குடும்பத்தினரும் அரசு பொறுப்புகளில் இருக்க மாட்டார்கள்.

    பொறுப்பை ஏற்றுக்கொள்ளாத அதிகார சக்திகளாக இருப்பதுதான் மாஃபியாக்களின் செயல்முறை.

    எனவே, ராவுல் வின்ஸி பிரதமராக என்றுமே அறிவிக்கப்பட மாட்டார். சோனியா குடும்பத்தைச் சேர்ந்த யாரும் அரசு பொறுப்புகளுக்கு வரமாட்டார்கள். நீங்கள் வேண்டுமானாலும் பாருங்கள்.

    இந்தியாவில் பலகீனமாகிவரும் பொருளாதாரத்திற்குக் காரணமாக மன்மோகன் சிங் காட்டப்படுவார். ஆனால், அன்னை சோனியாவின் திட்டங்களால் ஏழைகள் மகிழ்ச்சியுடன் இருப்பதாகச் செய்திகள் வரும்.

    தமிழ்நாட்டிலும் மாஃபியா ராஜ்ஜியம்தான். மத்தியிலும் மாஃபியா ராஜ்ஜியம்தான்.

    இந்த மோசமான சூழ்நிலையில் இருந்து வெளியே வரமுடியாதபடி மன்மோகன் சிங்கிற்கு என்ன மாதிரி பிரச்சினைகளோ? பாவம் அவர்.

  6. காங்கிரஸ் தனக்குப் பிரச்சினை தோன்றும் எல்லா பொழுதும் ஆர் எஸ் எஸ் ஐ பிராண்டும். இது இந்திரா காலம் தொட்டு நடக்கிறது. கல்மாடிவெல்த் கேம்ஸ், ராசாவின் கற்றை மோசடி இவற்றிலிருந்து தற்காத்துக்கொள்ள இந்த புரட்டு. 79 ல் நாராயன் கமிஷனையே ஆர் எஸ் எஸ் ற்கு எதிராக பேசவைத்தது. தற்போது சிபிஐ. பதிலிருக்காதிர்கள். மோசடி பற்றியே பேசுங்கள்.

  7. எதை சொன்னால் நமது ஊடகங்கள் பெரிதுபடுத்துமோ அதைச் சொன்னால்தான் பல லட்சம் கோடி ஊழல் மோசடிகளை மறைக்க முடியும் என்பதுவே ராகுலின் ஆர்.எஸ்.எஸ். மீதான அபத்த பிரசாரத்திற்கு அடிப்படை. இதனை தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் தலையங்கம் (03.11.2010) தோலுரித்துள்ளது.அதன் சுட்டி: https://expressbuzz.com/opinion/editorials/an-attempt-to-deflect-attention/220419.html

    இனிமேலும், தன்மீதான அபவாதக் கட்டுக்கதைகளைக் கண்டுகொள்ளாமல் ஆர்.எஸ்.எஸ் இருக்கக் கூடாது.

    ராகுலின் அவதூறு பிரசாரத்திற்கு அறிவின்மையோ, அகம்பாவாமோ, அரசியல் முதிர்ச்சியின்மையோ காரணமல்ல. திட்டமிட்ட கணக்கீட்டுடன் கூடிய, சதிகளையே வாடிக்கையாகக் கொண்ட பழம் பெருச்சாளிகள் (உம்: திக்விஜய் சிங்) வழிநடத்தலில் உருவான அரசியல் தந்திரம் அது. தேசபக்தர்கள் இந்த முட்டாள்தனமான பேச்சால் காங்கிரஸ் ஆதாயம் அடைவதைத் தடுக்க தக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

    -சேக்கிழான்

  8. Pingback: Indli.com
  9. இது போன்ற விளக்கங்கள், விபரங்கள் எந்த ஊடகம் வாயிலாக வெளிவருவதே இல்லை. இவர்களால் காட்டபடுவதெல்லாம், சொல்லப்படுவதேல்லாம் வெற்று கோஷங்களும் , பொய்யான உறுதி மொழிகளுமே. சகல ஊடகங்களும் இதில் அடங்கிபோக , ஏழை எளியவர்களுக்கும் மற்றும் பின்தங்கிய நிலையில் உள்ள அனைத்து மக்களுக்கும் உண்மை நிலை தெரியாமல் போய்,இறுதியில் இவர்கள் நினைத்தமாதிரியே சாதகமாய் போய்விடுகிறது.

    உங்களின் படைப்புகளை மேலும் பல நிலைகளில் கொண்டு செல்ல வேண்டும்.
    இப்போது மிக தேவையான ஒரு கட்டுரை. பகிர்ந்தமைக்கு நன்றிகள்.

  10. இந்த கட்டுரையினை பிற பதிவர்களும் எடுத்து தமது பக்கங்களில் வெளியிட அனுமதியுங்கள். இவைகள் மேலும் பலரையும் சென்று அடைய வேண்டும்.

  11. ராவுல் அன்னை மாபியா நாட்டில் இருந்து வந்தவர் அதலால் .தன் துணையையும் வேறு ஒரு மாபியா குலத்தில் தேர்ந்து எடுத்திருப்பார் அதில் நமக்கு ஆட்சேபனை இல்லை ஆனால் ஸ்வயம் சேவகர்களை பற்றி பேசுவதற்கு ஒரு யோகிதை கண்டிப்பாக வேண்டும் அது இந்த ரோம புத்திரனுக்கு நிச்சியம் இல்லை .
    அவரின் பேச்சு புத்தி பேதலித்தவரின் ஒரு கூற்று என்றமட்டில் ஒதுக்கிவிட கூடியதே .

    ஜெய் பவானி
    வந்தே மாதரம்
    பிரத்யூஷ் ராமகிருஷ்ணன்

  12. ராவுல் வின்சி உண்மையிலேயே அரசியலில் நேர்மை, நாணயம், தூய்மை திகழ வேண்டும் என்று நினைத்தால் இன்று நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கும் காமன்வெல்த் விளையாட்டு ஊழல் , ஸ்பெக்ட்ரம் ஊழல், மகாராஷ்டிரா வீட்டு வசதி ஊழல் இவற்றைப் பற்றி ஒரு வார்த்தை கூறாமல் ஒன்றும் தெரியாத பூனை மாதிரி இருப்பது ஏன்?
    கிடப்பதெல்லாம் கிடக்கட்டும், கிழவனைத் தூக்கி மணையில் வை என்பது போல் தான்தான் அரியணைக்கு உண்மையான சொந்தக்காரர் என்று காட்டுவது போல், தனது அன்னை பூரித்து நிற்க காங்கிரஸ் தலைவர்கள் ( அடிமைகள்) கூட்டத்தில் வந்து முகம் காண்பித்து ,கையசைத்துச் செல்கிறார்.
    காங்கிரசின் அசிங்கமான ஆட்சியிலிருந்து மக்களை திசை திருப்பும் விதமாக போலித் தனமாக யாரோ சொன்னதை வைத்து ஆர்ர் எஸ் எஸ் பற்றி பிதற்றுகிறார்..

  13. ஆர் எஸ் எஸ் ஐ வெளியில் இருந்து பார்ப்பதற்குதான் அது என்னவோ ஏதோ,அதனுள்ளே வந்து பார்த்தால் தெரியும் அதன் அருமையும் பெருமையும் .எங்கள் ஊரில் ஷாஹா ஆரம்பித்தபோது முதலில் எதிர்த்தார்கள் பின் அங்கு நடக்கும் நல்ல செயல்களைப் பார்த்த பெற்றோர் பலர் தங்கள் பையன்களை அனுப்பிவைத்ததோடு தாங்களும் உடனிருந்து மகிழ்ந்து சென்றனர்.ஷாகாவில் பயின்றவர்கள் இன்று நல்ல நிலையில் உள்ளனர் என்பதை நன்றியோடும் பெருமையோடும் சொல்லிக்கொள்கிறேன்.நாட்டுக்கும் வீட்டுக்கும் இன்றைய உடனடித் தேவை R S S .தயவு செய்து R S S உள்ளே வந்து பாருங்கள் தலைவர்களே அப்புறம் உங்கள் கருத்துக்களை எங்கும் சென்று சொல்லுங்கள் R S S ஐப் பற்றி .ஈஸ்வரன்,பழனி.

  14. முதலில் ராகுல் ஒரு ‘காந்தி’ யே அல்ல. அவர் ஒரு கான் அவ்வளவே தான். அவரது தாத்தா ஃபிரோஸ் ஒரு கான் தான்,காந்தி அல்ல..’சும்மானாச்சிக்கும்’ காந்தி என்று கூறிக்கொள்கிறார்கள் என்று எத்தனை பேருக்கு தெரியும் ?

    ராகுலை ராவுல் வின்சி (Raol Vinci) என்றே குறிப்பிடவேண்டும், ஸோனியாவை அண்டோனியோ மைனோ என்பது போல…

    ஆர்..எஸ். எஸ் க்கும் சிமி க்கும் ஏணி வைத்தால்கூட எட்டாது

  15. ஆர் எஸ் எஸ் தன்னிடமுள்ள காங்கிரஸ் அனுதாபிகளைத் தூக்கி ஏறிய வேண்டும். காந்தி அடைமொழியையும் காங்கிரஸ் கட்சியையும் ஏப்பம் விட்டுத் தன குடும்பச் சொத்தாக மாற்ற நேரு ஆடிய நாடகம் தான் 1948 இல், காந்தி சுடப்படகூடிய சூழலை ஏற்படுத்தி, ஆர் எஸ் எஸ் ஐத் தடை செய்ய முற்பட்டது. காந்தியை மறையச் செய்துவிட்டால் ஏப்பம் விட்டதை எவரும் மறக்கச் செய்யலாம், இந்துக் கொள்கைகளைக் கொண்ட ஆர் எஸ் எஸ் ஐத், தடை செய்து விட்டால், தேசாபிமாநியாகக் காட்டிக்கொண்டு, குடும்பத்தைக் காலம் காலமாக ஆளவிடலாம். புதிய இந்தியாவின் சிற்பி நேருவின், கட்டுமானக்கொள்கை இதுதான். அதனால்தான், அவருக்கு, இதற்கெலாம், உறுதுணையாக இருந்த கம்யூநிஸ்டுக்கள் என்கின்ற காலிப்பசங்களின் சகவாசம். தன திட்டங்கள் நிறைவேறியவுடன், ஆர் எஸ் எஸ் ஐத் தன் கைப்பாவையாக மாற்றிக்கொள்ள, 1962 இல், சீனப் போரைக் காரணமாகக்கொண்டார். சீனர்களால் போரில் காயப்படுத்தப்பட்ட மற்றும் கொல்லப்பட்ட இந்தியர்களைத், தான் கவனிக்காமல், சீனாவுக்குப் பயந்து, ஆர் எஸ் எஸ் ஐ உபயோகப்படுத்திக்கொண்டு, காங்கிரஸ்சில் இருக்கும் ஆர் எஸ் எஸ், அனுதாபிகளுக்காக, ஆர் எஸ் எஸ் ஐ, அணி வகுப்பில்
    அனுமதித்தார். இவை எல்லாம், எதற்காகக் கூறப்பட்டதென்றால், விறை ஒன்று போட்டால் சுரை ஒன்று முளைக்காது; நேருவின் வழித்தோன்றலான, ரவுல் வின்சி என்கின்ற மற்றுமொறு காந்தி, நேருவைப்போலத்தான், கபட நாடகம் ஆடுபவராகத்தான் இருப்பார். எனவே, ஆர் எஸ் எஸ்,
    தன்னுள்ளுள்ள, காங்கிரஸ்காரர்களை, அனுதாபிகளைத் தூக்கி எறியவேண்டும்.

  16. ராஹுலுக்கு இருப்பது அறிவின்மையா ,அகம்பாவமா, அரசியல் முதிர்ச்சியின்மையா?
    இது தமிழ் ஹிந்துவின் தீபாவளிப் பட்டி மன்றத் தலைப்பா?

    எல்லாமும்தான்!
    படிப்பில் ‘கோட்டை விட்டது’ – அறிவின்மை
    ஆர்ர் எஸ் எஸ் ம் , சிமியும் ஒரே மாதிரிதான் என்று சொன்னது- அகம்பாவம்
    நாடாளுமன்றத்தில் அபத்தமாக உரை ஆற்றியது -அரசியல் முதிர்ச்சியின்மை

  17. குண்டுவெடிப்புகளுக்காக காங்கிரஸ் மந்திரிக்கு 20 வருடம் ஜெயில் கொடுத்திருக்கிறார்கள்.
    கோர்ட்டில் வழக்கு தொடுத்து நிரூபித்து கொடுத்திருக்கிறார்கள்
    இதற்காக காங்கிரஸை பயங்க்ரவாத அமைப்பு என்று தடை செய்யவேண்டும்.

    93 Surat blasts:Ex-Congress Muslim minister gets 20 years jail

    https://deshgujarat.com/2008/10/04/93-surat-blastsex-cong-minister-of-gujarat-gets-20-years-jail/

    Surat, DeshGujarat, 4 October, 2008

    Former Congress Fisheries Minister of Gujarat Mohammad Surti and ten others were found guilty in 1993 Surat twin blast case by TADA court on Saturday. While Mohammad Surti along with four other convicts including former Congress corporator Iqbal Vadiwala received 20 year prison sentence, another six received 10 year prison sentence. In Varachha blast case 12 were sentenced while one rickshaw-driver Asif sheikh was given benefit of doubt and was acquitted. In Railway station blast case 7 were sentenced while 4 were acquitted. Total 21 persons were found guilty out of which five are absconding.

    The special Terrorist and Disruptive Activities (Prevention) Act (TADA) designated court judge R.B.Dholaria in his judgment ordered convicts to pay Rs 2 lakh to relatives of girl child who was killed in the blast while Rs 25,000 to all 11 people who were injured.

    Twin grenade blasts were executed on Varachha road’s Mini Diamond market in January 1993 and Surat railway station in April 1993 by group of Muslims. The group had lobbed a Russian grenade at Gujarat Express stationed at Surat railway station platform no.1, injuring 38. Blast on Surat’s Varachha in January 1993 killed one girl child was and ijured several others.

  18. காங்கிரஸ் தனது எதிரிகளை அழிக்க முதலில் திட்டமிட்டு கோயபல்ஸ் பிரசாரம் செய்யும்
    ஒன்றைக் கவனியுங்கள். முதலில் ராகுல் ஆர்ர் எஸ் எஸ்சும் சிமியும் ஒரே போல் என்று சொல்கிறார். சொல்லி வைத்தார் போல் ஹிந்து விரோத டி வீ சானல்கள் உடனே கோஷம் போட ஆரம்பிக்கின்றன.

    கொஞ்ச நாட்களில் கணக்காக ராஜஸ்தான் காவல் துறை ஆர்ர் எஸ் எஸ் ஐச் சேர்ந்த இந்த்ரேஷ் குமார் அவர்களுக்கு ஆஜ்மீர் தர்கா குண்டு வெடிப்பில் தொடர்பு இருப்பதாகக் கூறுகிறது.
    எல்லாம் திட்டமிட்டு செய்யப் படுகிறது.
    ஹிந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் மோதலை உருவாக்கும் வெள்ளை சர்ச்சின் தந்திரமே இது.

  19. அரசியலில் அனுபவ முதிர்ச்சி உடையவர்கள் மட்டுமே ஈடுபட்டு வந்த காலம் போக இப்போது வாரிசு அரசியல் வந்ததும், நேற்று பிறந்த சிசு கூட தலைவனாகக் கருதிக் கொண்டு அதிகப்பிரசங்கம் செய்வது வழக்கமாக ஆகிவிட்டது. அது போலத்தான் ராகுலின் பேச்சு. அதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது, என்றாலும், பேசியவர் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் என்பது முக்கியம். அந்த கட்சிக்கு ஒரு தார்மிகப் பொறுப்பு உண்டு. இப்படி அரை வேக்காட்டுத் தனமாக அறியாமையில் தான் ஏதோ பெரிய விஷயத்தைப் பேசிவிட்டதாக நினைத்துக் கொண்டிருக்கும் அந்த இளைஞனுக்கு அறிவுரை கூற வேண்டும். அங்கு இப்போது இருப்பவர் எல்லாம் ஜால்ராக்கள். அதனால் அவர்களிடமிருந்து அறிவு பூர்வமான பதிலை எதிர்பார்க்கக் கூடாது. தாமரை மலரின் பெருமை எல்லோருக்கும் தெரிந்து இருக்கும் என்று நினைக்க வேண்டாம். அவைகள் அப்படித்தான்!

  20. நாட்டை குட்டிசுவராக அடித்தது போதாது போல் இருக்கிறது இந்த பேச்சு. இவர்கள் திருந்தவே மாட்டார்கள். ஆர்.எஸ்.எஸ். தான் செய்துகொண்டிருக்கம் நல்லவைகளை செய்தியாக மக்களளுக்கு சென்று சேரும்படி செய்ய வேண்டும்.

    ம. மணிவண்ணன்
    புதுவை

  21. கட்டுரையின் தலைப்பில் கேட்கப் பட்டுள்ள மூன்று (அ, அ, அ.மு )தகுதிகளுக்கு மட்டுமல்லாமல், இதுபோன்ற இன்னும் ஏராளமான தகுதிகளுக்கும் பொருத்தமான ஒருவரை, ஒரே ஒரு தகுதிக்கு மட்டும் பொருத்தமானவர் போல் கேட்க முயற்சித்திருப்பது, குறுகிய எண்ணத்தையே காட்டுகிறது.

    பாண்டிய ராஜன்

  22. சிவப்பா இருக்கறவன் பொய் பேசமாட்டான் ……

  23. Of late shri.Indresh Kumar has been active in forging goodwill between the muslims and the hindus through the rashtriya Muslim Manch,

    Congress which has been reaping a rich harvest of votes by dividing the muslims and the Hindus and threatening the Muslims using the Hindu bogey is rattled by this.
    also the church whose agenda is to weaken Bharat by internal strife between Hindus does not want the muslims and the Hindus coming together.

  24. //சிவப்பா இருக்கறவன் பொய் பேசமாட்டான்//

    அட்ராசக்க அட்ராசக்க அட்ராசக்க்க்க்க. இந்த அரிய தத்துவத்த கல்லுல செதுக்கி வெச்சுகிட்டு 10 ஜன்பத் வாசல்ல ஒக்காந்துக்க ராசா! அங்க ஒக்கார விடலைன்னாலும் நீ விடாத. சத்தியமூர்த்தி பவன் வாசல்லயாச்சும் ஒக்காந்துக்க! வருங்கால சந்ததி இதப் படிச்சு தெளிவாயி உருப்பட்டு ஓஹோன்னு ஆயிரும்!!

    //ராகுல் பேச்சு அறிவின்மையா, அகம்பாவமா, அரசியல் முதிர்ச்சியின்மையா?//

    ஏன்யா! அந்த ஆளு என்ன ஆல் இன் ஆல் ராகுல் காந்தி, அனுபவசாலின்னு போர்டாய்யா மாட்டிருக்காரு? இல்ல ஆல் இன் ஆல் ராகுல் காந்தி, அடக்கமுள்ளவர்னு போர்டு மாட்டிருக்காரா? அதுவும் இல்ல ஆல் இன் ஆல் ராகுல் காந்தி, அரசியல் முதிர்ச்சி உள்ளவர்னுதான் போர்டு மாட்டிருக்காரா? இல்லைல்ல. அப்புறம் ஏன்யா அந்தாளுக்கு அறிவில்லையா, அடக்கமில்லையா, அரசியல் முதிர்ச்சி இல்லையான்னு ஆராய்ச்சி???

    நல்லா பண்றாய்ங்க்யடா ரிஜர்ச்சு!!

  25. ராவுல் வின்சி (எ) ராகுல் காந்தி 2.5 லட்சம் ரூபாய் முதல் போட்டு ஒரு கம்பெனி ஆரம்பித்தாராம் (Back-ops Engineering). அந்தக் கம்பெனிக்கு வங்கிக் கணக்கில் 3 லட்ச ரூபாய் இருந்ததாம். இது தேர்தலில் நிற்க தாக்கல் செய்த மனுவில் ராவுல் வின்சி (எ) ராகுல் காந்தி அளித்த தகவல்.
    https://www.back-ops.com/
    அந்தக் கம்பெனிக்கு அதன்பிறகு மும்பை விமான நிலையம் கட்டும் பணி, சர்வதேச கப்பல் கம்பெனி மெர்ஸ்க் நிறுவும் சரக்கு புழக்க தளம், இந்திய ரிசர்வ் வங்கியின் பயிற்சி நிலையங்கள், மும்பையில் சில பல வணிக வளாகங்கள், Wockhardt மருத்துவமனையின் இரு கட்டிடங்கள் இன்னபிற பணி ஒப்பந்தங்கள் கிட்டியுள்ளன. மதிப்பு கோடானு கோடிகள். எப்படி Back Opsக்கு மட்டும் இப்படி வியாபாரம் பெருகுகிறது? தேசத்தின் backல் ஆப்பு வைப்பதால் தானோ???

    மேலதிக விவரங்களுக்கு:
    https://deccanherald.com/deccanherald/may292004/i8.asp
    https://mid-day.com/news/city/2004/may/84207.htm
    https://mid-day.com/news/city/2004/may/84304.htm
    https://www.haindavakeralam.com/ListPage.aspx?SKIN=B

    யாராவது 2.5 லட்ச ரூபாய் இருந்தால் கடனாகக் கொடுங்கள், நானும் ஒரு கம்பெனி ஆரம்பித்து இப்படி முன்னேறப் பார்க்கிறேன். எவ்வளவு ஆனாலும் பரவாயில்லை, வட்டியோட 2.5 லட்சத்த திருப்பிக் கொடுத்து விடுவேன். ஆ ஓடியா, ஓடியா, ஓடியா…. செம யாவாரம்……….. செம துட்டு …………….

    கொட்டோ கொட்டுன்னு………………………… சீ மழையா அது. கனவுல கூட அம்புட்டு துட்ட முழுசா பாக்க முடியலப்பா. இவிங்யளுக்கு எங்கிட்ருந்து தான் வருதோ!!!!!

    இதற்கு நடுவே Emaar – MGF கம்பெனியை ராவுல் வின்சி (எ) ராகுல் காந்தியின் உதவியாளரோட மச்சான் குப்தா என்ற ஒருவர் நடத்துகிறார். அந்தக் கம்பெனி காமன்வெல்த் போட்டி ஊழலில் 2000 கோடி சுட்டது. அப்பேர்ப்பட்ட ராவுல் வின்சி (எ) ராகுல் காந்தி அறிவுகெட்டவரா, ஆக்கங்கெட்டவரான்னு ஒரு ஆராய்ச்சி. அவர் பொழைக்கத் தெரிஞ்ச புள்ள…….. அம்புட்டுத்தேன்!!!

  26. //https://www.back-ops.com/// சைட் லோடே ஆகா மாட்டேங்குதே.. லாபத்தை எல்லாம் சுருட்டினப்புறம் கடையை இழுத்து மூடிட்டாங்களா?

  27. இந்தப் பத்திரிக்கைகளின் தொல்லை நிஜமாகவே தாங்கமுடியவில்லை.
    ராகுல் காந்தி ஒரு மன்மதக் குஞ்சு. பாட்னா பல்கலைக் கழக மாணவிகள் அவரது சிரிப்பில் கிறங்கி ‘ஆங்! அப்படிப் சிரிக்காதீங்க! எனக்கு வெக்கமா இருக்கு’ என்று மயங்கிச் சரிந்து விட்டனர் என்ற ரீதியில் எழுதியுள்ளனர். “ஏய்! ராகுல் ரொம்ப அழகுடி!!” என்று ஒரு மாணவி ஜொள்ளுவிட்டாராம். இன்னொரு மாணவி இரவெல்லாம் ராகுலைப் பற்றி கூகிளில் தேடித்தேடிப் படித்துவிட்டு, மறுநாள் நடக்கப் போகும் சந்திப்பை எண்ணியபடி படுக்கையில் தூக்கம் வாராமல் உருண்டு புரண்டு கொண்டிருந்தாராம்.

    Rahul’s ‘deadly smile’ floors fair brigade at Patna College என்று தலைப்பு வேறு.

    https://timesofindia.indiatimes.com/city/patna/Rahuls-deadly-smile-floors-fair-brigade-at-Patna-College/articleshow/5529578.cms#ixzz16DxMJe7p

    நான் கோவையில் browsing center AMC எடுத்திருந்த போது ஒரு பையன் தினமும் கல்லூரி முடிந்து வருவான். “அப்படிப்பட்ட” கதைகளை நெட்டில் தேடித்தேடிப் படிப்பான். எங்கிருந்தாவது ஒரு வைரஸ் வந்து கணினியில் உட்கார்ந்து கொள்ளும். இது போன்ற தளங்களை ஏன் படிக்கிறாய் என்று கேட்டால், “அதொண்ணுமில்லீங்ணா! இதப் படிச்சாங்க…. இங்கிலீசும் கத்துக்கிட்ட மாதிரி ஆச்சுங்க….. அதே சமயத்துல கிக்குமும் ஆச்சுங்க” என்பான்.

    ஒருவேளை அந்த முறையில் ஆங்கிலம் கற்றுக் கொண்டவர்களை ரிப்போர்டர்களாக வேலைக்கு வைத்துக் கொண்டார்களோ?
    இப்பேர்ப்பட்ட பெருமைமிக்க ராகுல் இருந்தும் பீகாரில் காங்கிரசு வரலாறு காணாத தோல்வியடைந்தது.

  28. I want to point out that the following:
    – Its quite clearly established that Raul Vinci is as incapable as his father to be a PM in this country.
    – He has achieved this status by opening his mouth only a few times in the past 4-5yrs..A rare achievement for someone with so much in his favor. So anyone with a minimum common sense will dare not accept him for the top-most post in the country
    – Yet the common Indian voter is known for his suicidal tendency of voting the same morons back (or is it the case of EVMs & Naveen chawla winning it for them, we will never know!!)

    Given the above, a truly patriotic organization like RSS must do the following in the interest of Hindus & India:
    – Rally ALL Hindus into one block.
    – The caste dialogue has been hijacked by 3rd rate vote mongering politicians who have vested interest in dividing Hindu soceity & culture. Vehemently oppose this and show to them that we Hindus are not divided lot.
    – Whenever any self-styled pseudo-secular politician makes an anti-Hindu statement for minority appeasement, attack them where it hurts them most. All of them have Business interests direct or (Benami) attack there and they will fall in line.
    – RSS badly needs to work on its marketing & PR…the main-stream media only reports RSS pro-hindu statements to make media sound-bytes. We must have a media, channel esp..that will show that we are not offensive extremists, but courageous defenders. Without this perception management, its impossible for RSS to reach out to the majority of Hindus who will only be silent witnesses and will never share the vision of RSS
    – There is no use of ignroing the regional sensitivities of Hindus…Hinduism in Gujarat is not the same as it is in Karnataka or TN. RSS has to become sensitive to these variations, if it ever wants to realize its true potential…

  29. இது போன்ற விளக்கங்கள், விபரங்கள் எந்த ஊடகம் வாயிலாக வெளிவருவதே இல்லை. இவர்களால் காட்டபடுவதெல்லாம், சொல்லப்படுவதேல்லாம் வெற்று கோஷங்களும் , பொய்யான உறுதி மொழிகளுமே. சகல ஊடகங்களும் இதில் அடங்கிபோக , ஏழை எளியவர்களுக்கும் மற்றும் பின்தங்கிய நிலையில் உள்ள அனைத்து மக்களுக்கும் உண்மை நிலை தெரியாமல் போய்,இறுதியில் இவர்கள் நினைத்தமாதிரியே சாதகமாய் போய்விடுகிறது.

    உங்களின் படைப்புகளை மேலும் பல நிலைகளில் கொண்டு செல்ல வேண்டும்.
    இப்போது மிக தேவையான ஒரு கட்டுரை. பகிர்ந்தமைக்கு நன்றிகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *