முகப்பு » சமூகம், சினிமா, மகளிர்

ஆபாசமும் மரபும் தமிழர் கடமையும்

அச்சிட அச்சிட

ன்றைய தேதியில் ஒருவன் தமிழ்நாட்டில் தன்னை வீரனாக, பகுத்தறிவாளனாகக் காட்டிக்கொள்ள மிக எளிதான ஒரு வழி இருக்கிறது. இந்து தருமத்தை பழிப்பது; இந்து நம்பிக்கைகளை, சடங்குகளைக் கிண்டல் செய்வது என்பதுதான் அது. இதில் புதிதாக இணைந்திருப்பவர் ஒரு திரைப்பட நடிகர். உலக திரைப்படங்களை உல்டா செய்து தமிழில் எடுப்பதால் தன்னை உலக நாயகனாக நினைப்பவர்.

இந்து சமுதாயத்தில் சில குறிப்பிட்ட சமூகங்களைச் சேர்ந்த பெண்கள் கணவன் நலனுக்காக அல்லது நல்ல கணவன் அமைய செய்யும் ஒரு பாரம்பரியமிக்க நோன்பைப் பற்றி, மிக மலினமான காம வார்த்தைகளால் நிரப்பி ஒரு பாடலை எழுதியிருக்கிறார் இந்த நடிகர்.

இந்து இயக்கங்கள் கொதித்தெழுந்து இதனை விமர்சிக்கும். ஆனால் இதில் ஆபத்து கிடையாது; விளம்பரம்தான் உண்டு. கலை சுதந்திரத்துக்காக எதற்கும் தயாராகும் தியாகி என்று தன்னை காட்டிக் கொள்ளவும் இதில் வழி உண்டு. எந்த ஆபத்தும் இல்லாமலே தியாகி பட்டம் வேண்டுமா? தாக்குங்கள் இந்து நம்பிக்கைகளை. ஆபாசத்தை கலையாக சந்தையில் விற்க வேண்டுமா? போடுங்கள் பகுத்தறிவு முகமூடியை. மனசாட்சியை விற்ற இந்த ஆபாசக் கூத்தடிப்பில் உலகநாயகனே தான் நம்மவர்.

andalஆனால் இங்கு கேள்வி அதுவல்ல. இது ஆபாசம் என தெரிகிறது. ஆனால் இந்த ஆபாசத்தை வரலட்சுமி நோன்புடன் இணைக்கும் போது என்னவித சால்ஜாப்பு சொல்லப் படுகிறது என்பதுதான் பார்க்கப்பட வேண்டும். ‘ஆண்டாள் பாடியதில் இல்லாததையா நான் சொல்லிவிட்டேன்?’ ‘கோவில் சிற்பங்களில் ஆபாசம் இல்லையா?’ எனவே இந்த ஆபாசத்தை எதிர்ப்பவர்கள் உண்மையில் இந்து மதத்தை புரிந்து கொண்டவர்கள் இல்லை. அவர்கள் வெறுமனே மதவெறியர்கள். இந்து தலிபான்கள்!

ஒரு சராசரி தமிழன் இந்த வாதத்தில் உள்ள மோசடி 2ஜி ஸ்பெக்ட்ரம் மோசடிக்கு சற்றும் குறையாத மோசடி என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆண்டாள் பாசுரங்களில் இருப்பதாக கூறப்படும் காமத்தையும், தமிழ் சினிமா பாடல் ஆபாசத்தையும் நாம் ஏன் ஒன்றாகக் கருத முடியாது?

இதைப் புரிந்துகொள்வதற்கு முன், ஆபாச எழுத்து என்பது வேறு; காமத்தையும் ஆன்மிகத்தையும் இணைக்கும் கவித்துவ-ஆன்ம முயற்சி என்பது வேறு என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். முன்னது வாலிப வயதின் எழுச்சிக்கோ அல்லது வாலிப-வயோதிகத்தின் இயலாமைக்கோ ஒரு வடிகால். பின்னது காமம் எனும் அடிப்படை மானுட உணர்ச்சியின் வீச்சையும் ஆழத்தையும் ஆதாரத்தன்மையையும் அறிந்து கொண்டு, அதனை பிரபஞ்சமெங்கும் கவியும் ஓர் உன்னத உணர்வாக உயர்த்துவது.

காதலிகளின் காதலனாக இறைவனைக் கூறும் முதல் உலக இலக்கியமாக ரிக் வேதத்தை சொல்ல முடியும்.

“காதல் மிகுந்த மனைவி அவளது கணவனைத் தொடுவது போல இறைவனது இதயத்தை என் பாடல் தொடட்டும்” (ரிக்: 10.91.13)

“மணமகன் மணமகளிடம் சுகம் பெறுவது போல எனது பாடலால் இறைவன் சுகம் அடையட்டும்.” (ரிக் 3.62.8)

மனைவி கணவனது மேனியைத் தீண்டுவது போல அல்லது முத்தமிடுவது போல, தமது மந்திரங்கள் இறைவனைத் தீண்டுவதாக ரிக் வேத கவிதைகள் தம்மைத் தாமே வர்ணிக்கின்றன (ரிக். 3.41.5) வேத மந்திர ரிஷிகள் ஆதி கவிஞர்கள். மனதாலும் இதயத்தாலும் பரம்பொருளுக்காக ஏங்குகின்றனர். வேத மந்திரங்களே இறைவனின் காதலிகளாகக் காட்டப்படுகின்றன. வேத இலக்கியம் தரும் ஒரு முக்கியமான சித்திரம் இது: காதலிகளின் தீண்டுதலாக வேதக் கவிதைகளும், மந்திரங்களும் பிரார்த்தனைகளும் சித்தரிக்கப்படுகின்றன (ரிக் 1.62.11; 1.82.5-6; 1.186.7; 1.32.3; 4.32.16; 1.9.4; 3.39.1)

இவையெல்லாம் ஞானத்தேடலின், இறை அனுபவத்தேடலின் கவித்துவ வெளிப்பாடுகள். இம்மரபின் நீட்சியே ஆண்டாளின் பாசுரங்கள். இம்மரபு மானுடப் பண்பாடெங்கும் உள்ளது. யூத ஞானப்பாடல்களில் நாம் இதை காணலாம்; அவ்லோனின் தெரசா (St. Teresa of Avlon) எனும் கிறிஸ்தவ மறைஞானியின் பாடல்களில் காணலாம். பாஸ்ரா பட்டணத்து சூஃபி ஞானி ரபியாவின் பாடல்களில் காணலாம். ஆனால் அந்த பண்பாடுகளில் இந்த மறைஞான மரபு ஒதுக்கப்பட்டது அல்லது ஒடுக்கப்பட்டது, எனவே வளராமல் அழிந்து விட்டது. இந்து பண்பாட்டில்தான் அது தழைத்து வளர்ந்தது.

இன்றைக்கு உலக இலக்கிய மரபிலும் சரி, மதங்கள் கடந்த ஆன்மிக மரபுகளிலும் சரி, ஆண்டாளுக்கும், ரபியாவுக்கும், அவ்லோனின் தெரசாவுக்குமான இடம் முக்கியமானது. ஆனால் நாயகி-நாயக ஆன்மிக உணர்வு நிறுவன மதத்தால் ஒடுக்கப்பட்ட அந்த பண்பாடுகளில் கூட, இன்று ரபியாவோ அவ்லோனின் தெரசாவோ ஆபாச சினிமா பாடல்களுக்கு சால்ஜாப்பாக பயன்படுத்தப் படுவதில்லை.

அடுத்ததாக கோவில் சிற்பங்களை எடுத்துக்கொள்வோம்.

khajuraho_sculptures_20070528கோவில் தூண்களிலும் சுற்றுச் சுவர்களிலும் இருக்கும் சில சிற்பங்களைத் தனியாக எடுத்துக் கொண்டால், மேலோட்டமான பார்வையில் அவை ஆபாசம் என கருதத் தக்கவையாக இருக்கும். ஆனால் கோவில் சிற்பங்களின் முழுமையான ஒட்டுமொத்த உருவாக்கத்தில் இந்த சிற்பங்கள் ஒருவித வழுவமைதி பெற்றுவிடுவதை நாம் காணலாம். காமம், ஏன் பிறழ்நிலை காமமாக இன்றைய ஒழுக்க விதிகளால் நாம் கருதும் காமமும் கூட, இந்தச் சிற்பங்களில் தங்கு தடையின்றி காட்டப்படுகின்றன. ஆனால் அவற்றுடன் கூடவே யோகியரும், முனிவர்களும், உழவர்களும், குறவர்களும், அவதாரங்களும், கர்ப்பிணி பெண்டிரும், நாக தேவதைகளும், யட்சணிகளும், கந்தர்வர்களும், அரசரும், வீரகாதைகளும் காட்டப்படுகின்றன. ஒரு கலங்கிய மனதிலிருந்து எழும் வக்கிர விகாரமாக காமத்தைக் காட்டும் சிலைகள் தமிழரின் கோவில்களில் அமைந்திடவில்லை. மாறாக, காமத்தை முழுதாக அறிந்து அதனை அச்சமின்றி வாழ்வின் ஒரு பாகமாக எதிர்நோக்கும் வாழ்க்கைப் பார்வை தான் அங்கு தெரிகிறது.

நம் திரைப்படங்களில் இத்தகைய ஒரு வாழ்க்கைப் பார்வை இல்லை என்பதுடன், பெண்களை வெறும் பாலியல் மலினப் பொருளாக, அஃறிணையாக காட்டும் காட்சிகளே நிரம்பி வழிகின்றன என்பதுதான் உண்மை. மேற்படி நடிகரே நடித்த பல திரைப்படங்களில் பெண்கள் மிகவும் கீழாக சித்தரிக்கப் பட்டுள்ளார்கள். பெண்களைக் கேலி செய்யும் பாடல்கள், இரட்டை அர்த்த பாடல்களில் நடிக்க மாட்டேன் என்றெல்லாம் அந்த நடிகர் புரட்சி செய்யவில்லை. நடித்திருக்கிறார். தென் மாவட்டங்களில் ஆதிக்க சாதிய வெறியை தூண்டிவிட்ட பாடலை இவர் நடித்த படமே தாங்கி வந்தது.

முழுக்க முழுக்க வர்த்தக நோக்கங்களுக்காக காமத்தை மலின வியாபாரம் செய்து வயிறு கழுவ இந்தியாவில் எவருக்கும் உரிமை உண்டு. அந்த உரிமையை நாம் எவருக்கும் மறுக்க முடியாது. அப்படிப் பிழைக்கும் நிலையில் வாழும் ஏழை ஜன்மங்களுக்காக நாம் நிச்சயமாக பரிதாபமும் பட வேண்டும். ஆனால், கோடிகளில் புரளும் நடிகன் ஒருவன் – ஆண்டாளையும், கோவில் சிற்பங்களையும், நம் வருங்கால சந்ததிகளுக்கும் ஏன் மானுடம் முழுமைக்கும் இந்த மண்ணின் மரபு அளித்த அருட்கொடைகளையும் தன்னுடைய வர்த்தக மலின கூத்தடிப்புக்கு நாணமின்றி, கேடயமாக, மோசடித்தனமாக பயன்படுத்தும் போது, நாம் என்ன செய்ய வேண்டும்?

ஹிந்து அமைப்புகள் இந்த ஆபாச தாக்குதலையும் ஒரு வாய்ப்பாக மாற்ற வேண்டும். இதன் மூலம் ஹிந்து ஞானத்தை, ஹிந்து கலைகளின் உன்னதத்தை பொது மக்களுக்குக் கொண்டுசெல்ல வேண்டும். ஆபாச வியாபாரிகள் கலையின் பெயரால் நம் பண்பாட்டின் மீது செய்யும் தாக்குதலை வெளிப்படுத்த வேண்டும்.

இப்படத்தை நாம் நிராகரிக்கலாம். இப்படம் காண்பிக்கப்படும் திரையரங்குகளில் உண்மையைக் கூறும் துண்டு பிரசுரங்களை விநியோகிக்கலாம். தன் தனி வாழ்க்கையிலும் சரி, தொழில்முறை வாழ்க்கையிலும் சரி, எப்படி வாழக்கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் ஒருவர், தன்னைப் பண்பாட்டின் அடுத்தக்கட்ட பெருநாயகனாக காட்டிக்கொள்ளும் அவல மோசடியை வெளிக்காட்டலாம். பொது விவாதங்கள், தொலைகாட்சி விவாதங்களுக்கு அழைத்து, சவால் விடுத்து, இவர்களின் பொய்களை தோலுரிக்கலாம்.

என்ன செய்யக் கூடாது? உணர்ச்சிகரமான நிலையில் மோசமான எதிர்வினைகளை செய்வதன் மூலம், இந்த ஆபாச வியாபாரிகள் நினைக்கும் விளம்பரத்தை அளித்துவிடும் தவறை மட்டும் செய்யவே கூடாது. 

தொடர்புடைய பதிவுகள்

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

 

98 மறுமொழிகள் ஆபாசமும் மரபும் தமிழர் கடமையும்

  1. smitha on December 9, 2010 at 3:42 pm

    This is not at all surprising.

    Kamal is renowned for his vulgar comments on hinduism.

    Also he is a true EVR follower. He has a live-in relationship, decries only hinduism, placates whoever is in power, autocratic, pure non vegetarian etc.,

    When he recited this “poem” on stage during the audio release function, the audience clapped & cheered without even understanding what he said.

  2. Sarang on December 9, 2010 at 4:19 pm

    கோவிலில் காமத்தை வெளிப்படுத்தும் சிற்பங்கள் இருப்பதற்கு காரணம் உண்டு – இது போன்ற சிற்பங்கள் வெளி பிரகாரங்களில் மட்டும் தான் இருக்கும் – இவை இயல்பான உலக வாழ்வை குறிக்கும் விஷயமாக அமைகின்றன – இந்த்ரிய ஜெயத்தின் மூலம் நாம் வாழ்வின் ஆழ் அனுபவத்தை அடைய இந்த வெளி விஷயங்களை விட்டு, எங்கிருந்து பிறந்தோமோ அந்த கர்பக்ருஹம் நோக்கி செல்ல வேண்டும்

  3. கந்தர்வன் on December 9, 2010 at 5:04 pm

    இனியாவது கமல் படங்களுக்குப் போக மாட்டோம் என்று நம்மவர்கள் உறுதி பூண வேண்டும்.

    அல்லது ஒருவேளை, “கமல் ஒரு திறமைபடைத்த நடிகன். அவனுக்குத் தெரியாத நடனக் கலையே இல்லை. அவன் கூறும் கருத்துடன் உடன்பாடில்லை என்றாலும் அவன் நடிப்புத் திறமையைப் பாராட்டலாமே” என்று சப்பைக்கட்டு கட்டி விட்டு, பத்து வினாடி பலான சீன் பார்க்க நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு சினிமா அரங்கத்திற்கு வெட்கமில்லாமல் போவார்களோ?

  4. அருண்பிரபு on December 9, 2010 at 7:54 pm

    இடுப்புக்குக் கீழே இருப்பவை எல்லாம் முகம் சுளிக்கும் மூடத்தனமல்ல, வாழ்வின் பகுதி என்று எடுத்துசொல்வது இன்றியமையாதது. சபரி மலைக்குச் சென்ற போது உடன் வந்த ஒருவர் பாதையின் ஓரமாக மலத்தைப் பார்த்துவிட்டு “சரணமய்யப்பா! இந்தக் கேவலத்தைப் பார்த்துடேனே… சீஈஈ என்றார்.” எங்களுடன் இருந்த வயதான குருசாமி ஒருவர் “அது உன்ன மாதிரி ஒரு மனுஷன்கிட்டருந்து வந்தது தான் சாமி. உனக்குள்ளயும் இருக்கு. வெளியிலே வந்ததும் சீ தூன்னு சொல்றியே சாமி. நீ வக்கணையா தின்னதோட எச்சம் அது. அது கூடதுன்னா நீ சாப்பாட்டில ரொம்ப கண்ட்ரோலா இருக்கணும். காரணத்தை விடமாட்டேன், காரியமும் கூடாதுன்னா வாழ்க்கை ஓடாது சாமி.” என்றார். அந்த குருசாமி தான் எனக்குச் சொன்னார் காமம் தவறில்லை. அது கட்டுப்பாட்டுக்குள்ளே இருப்பது நலம். எல்லை மீறினால் கட்டுக்குள் கொண்டுவர விரதம் போன்றவை உதவும்.

    அராபியப் படையெடுப்பு பார்க்கும் பெண்ணெல்லாம் வலியோனுக்குச் சொந்தம் என்ற வரம்பு மீறலைக் கொணர்ந்தது. ஐரோப்பிய படையெடுப்பு காமம் அசிங்கம் என்று போதித்தது. ஆனால் கள்ளத்தனமாய் மறைத்து அனுபவிக்கப்படும் வரம்பு கடந்த காமம் ஐரோபியரிடமே இன்னும் அதிகமாய் இருக்கிறது.

    காமம் என்பது குற்றம், வெறுக்கத்தக்கது என்பது ஐரோப்பியர் கொள்கை. அது வாழ்வின் ஒரு பகுதி என்பது நம் பாரம்பரியம். அது சற்றே மிகுதியாக இருப்போர் ஆற்றிக் கொள்ளவே ஊருக்கொரு பகுதியில் விலைமகளிர் இருந்தனர். அவர்களுக்கும் வரம்பு மீறி குடும்ப வாழ்வைக் கெடுக்கும் செயல்கள் தவறு என்று வலியுறுத்தினர் நம் முன்னோர். சமுதாயத்தின் ஒரு பகுதியாக அவர்களையும் பார்த்த பக்குவம் நம்மில் இருந்தது. இதை எதிர்த்து நேரத்தை வீணாக்குவதை விட இதை ஒரு வாய்ப்பாக்கி ஹிந்து தர்மம் போதித்த அடிப்படைகளை மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும்.

  5. Pugazhenthi on December 9, 2010 at 8:56 pm

    வயதிற்கும் அறிவு முதிர்ச்சிக்கும் கொஞ்சம் கூட தொடர்பில்லை என்பதற்கு சிறந்த எடுத்துகாட்டு கமல் மற்றும் மு.க.

  6. virutcham on December 9, 2010 at 9:07 pm

    கமலின் பேச்சுக்கு கிடைக்கும் அதிகமான முக்கியத்துவம் தான் அவரது வெற்றி. இது அவரது அறிவு ஜீவி பிம்பத்துக்கு கிடைக்கும் சுலபமான விளம்பரம். அவரது பேச்சு ஏற்புடையதாய் இல்லை என்றால் அதை தவிர்த்து விட்டாலே போதும். அதற்கு எதிர் விமர்சனம் வருவதால் ஊடகங்கள் அதை பயன்படுத்திக் கொள்கின்றன. உதாரணமாக விஜையில் வந்த தீபாவளி நிகழ்ச்சி. அவரது நாத்திகப் பேச்சை திரும்பத் திரும்ப விளம்பரப் படுத்திக் கொண்டே இருந்தார்கள். அன்றைய நாள் தீபாவளி என்பதும் அது இந்துக்களின் மிகப் பெரிய பண்டிகை என்பதும் விஜய் தொ.கா. க்கு தெரியாதா என்ன. அதற்கு முந்தைய வாரங்களில் தனி தீபாவளி நிகழ்சிகள் நடத்தியவர்கள் அவர்கள். வியாபாரிகள் விற்பதைத் தான் வியாபாரம் செய்வார்கள். அதனால் எதை வாங்க வேண்டும் என்று நாம் தான் முடிவு செய்ய வேண்டும். நமக்குத் தேவையில்லாத பொருளை தெரிந்தே வாங்கி விட்டு திட்டி என்ன பயன் ?
    பொதுவாக ஆன்மிகப் படங்கள் என்ற பெயரில் காட்டப் படும் அபத்தங்களை விட கமல் படங்கள் ஆன்மிகத்தை இது வரை அழகாகவே காட்டி வந்தன.
    வியாபாரமாகிப் போய் கொண்டிருக்கும் ஆன்மிகத் தலங்களை நேராக்க நமது நேரத்தை செலவிடலாம். இவர் போன்ற ஆட்களை சும்மா விட்டாலே போதும்.

  7. virutcham on December 9, 2010 at 9:08 pm

    வாணியும் சரிகாவும் செய்த வரலஷ்மி நோன்பு
    http://www.virutcham.com/2010/12/கமலஹாசனும்-வரலக்ஷ்மி-நோன/

  8. பிரதாப் on December 9, 2010 at 9:15 pm

    கமல் போன்றவர்களை பற்றி நாம் விமர்சிக்க தேவையில்லை. அழுக்குகளைபற்றியும், மனவியாதிகளைபற்றியும் மருத்துவர்கள் ஆராயட்டும். கமல் போன்ற வீணாக போனவர்களுக்காக இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி வேண்டுமானால் செலுத்தலாம். அவரை பெற்ற தாய், தந்தையரை நினைத்து வருந்துகிறோம்.

  9. பாலாஜி on December 9, 2010 at 10:12 pm

    அரவிந்தன் சார், தினமலர் வலைதளத்தில் இந்த காமக்கொடூரனின் காம வாந்தியை ஒருவர் விமர்சித்து எழுதியதை படித்து கலங்கினேன். அதையும் விட, இந்த கீழ்தனமானவுக்காக சிலர் பரிந்துபேசியதைக் கண்டு மனம் கொதித்தேன். ஆனால் என்ன செய்ய முடியும்? நான் என்ன கோடீஸ்வரனா? என்னை எதிர்த்துப் பேசுபவர்களின் நாக்கை துண்டிக்கும் அடியாட்களை உடைய அண்டர்கிரவுண்டு தாதாவா? பதவி பலமுள்ள அரசியல் வாதியா? எதுவுமே இல்லை, இந்து மதத்திற்கு எவ்விதத்திலும் உதவாத உதவாக்கரை மகன், அவ்வளவே! என்னால் கமல் போன்ற மிருகங்களுடன் போட்டி போடமுடியாது. அவனின் மானம்கெட்ட ரசிகர்களுடன் வாதம் செய்து வெல்லமுடியாது. என்ன தான் செய்ய முடியும்! ஒன்றுமில்லை!

    உங்களை என் சகோதரனாக நினைத்துச் சொல்கிறேன்:- இதுபோன்ற கட்டுரைகளை எழுதுவதை எந்நாளும் நிறுத்தாதீர்கள். தொடரட்டும் உங்கள் பணி…

    வாழ்க பாரதம்!!

  10. reality on December 9, 2010 at 11:19 pm

    இந்து சமய பழக்க வழக்கங்கள் எதையும் கீழ்மைபபடுத்தும் செயல் பெற்ற தாயை பாலியல் பலாத்காரம் செய்யும் செயலாகும். அதை செவ்வனே செய்பவர்கள் தமிழ் நாட்டில் மலிந்து கிடக்கிறார்கள். அதனால் தான், தமிழ் நாட்டில் இவ்வளவு மகான்களும், நாயன்மார்களும், ஆழ்வார்களும், ஆச்சார்யர்களும் தோன்ற வேண்டி இருக்கின்றது, இவ்வளவு திவ்ய தேசங்களும், பாடல் பெற்ற ஸ்தலங்களும் இருக்கின்றன. வக்கிர புத்தி படைத்த மனிதனுக்கு, வக்கிரமான வாழ்க்கையே அமைந்தும் வேட்கை தீரவில்லை.

  11. senthil on December 9, 2010 at 11:27 pm

    தன்னை யோக்கியன் என்று காட்டிக்கொள்ளும் ஒரு அயோக்கியப்பயல், இந்த கமல்.. இந்த கமல் என்ற கேன்சர நாம் இவ்ளோ நாளா கண்டுக்காம விட்டது தான் தப்பு.. இந்து அமைப்புகளின் இயலாததனத்தால்தான் கமல் மாதிரி ஆள்களின் துணிச்சலை காட்டுது.

    நாய்க்காதல் மட்டுமே தெரிந்த கமலுக்கு மனிதக் காதல்னா என்னன்னு தெரியாது.. அவனுக்கு தெரிந்ததெல்லாம் வேண்டியவரையில் உபயோகப்படுத்திவிட்டு பொண்டாட்டியானாலும் தூக்கி எறிய தயங்காத அயோக்கியத்தனத்த முற்போக்கு எண்ணம்ன்னு பிரச்சாரம் பண்ணுவது.. கன்னி மேரிய பத்தி ஆபாசமா ஏண்டா எழுதலன்னு முதல்ல அவன கேட்கனும்.. அல்லது, கன்னிமேரிக்கிட்ட இப்படி வேண்டி ஒரு பாட்டு எழுதிட்டு அவன் சினிமாவ ரிலீஸ் பண்ணுவானான்னு கேட்கனும்?

    கடைசியா காமத்துக்கும் ஆபாசத்துக்கும் என்ன வித்தியாசம்னு எனக்கு தெரிந்த வரையில் சொல்றேன்..

    கமல் என்னும் நடிகர், தன் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு, இப்போது கௌதமி என்னும் நடிகையோடு மன்மத லீலையில் ஈடுபடுகிறார்…. இது நாகரீகமாக சொல்லப்பட்ட ஒரு விமர்சனம்.. அல்லது செய்தி..
    இதையே, கொஞ்சம் விலாவாரியாக கேவலமாகவும் சொல்ல முடியும்.. ( நாகரிகம் கருதி நான் அவ்வாறு செய்யவில்லை.. ).. அப்படி சொன்னார் அதுக்கு பேர் ஆபாசம் மட்டுமல்ல.. அது ஒரு போர்னோ புத்தகமா மாறிடும்..

    கோவில் சிலைகள், ஆண்டாள் பாடியது என்று சப்பை கட்டு கட்டுகிறார்களே.. அவர் என்ன, இவனுகள மாதிரி சினிமா எடுத்து ஊருக்கேல்லாம் போட்டு காட்டவா பாடினார்? இல்ல எல்லாரையும் கூட்டி வைத்து இப்படி பாடினாரா?

    சரி.. அப்படியே அவர் ஆபாசமா பாடியிருந்தாலும் அத காரணம் காட்டி கமல் என்ன வேணும்னாலும் பண்ணுவானா? பத்து பேர் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்றால், அவர்களின் மனது புண்படுகிறது என்ற காமன் சென்ஸ் கூட இந்த நாய்க்கு இல்லை.. இல்ல இவன் என்ன செஞ்சாலும் மக்கள் சகிச்சிகிட்டு போகனும்னு முடிவு செஞ்சுட்டானா?

  12. GowriShanker. S on December 9, 2010 at 11:44 pm

    அன்புள்ள அரவிந்தன் – கமக்கசட்டு வரிகள் மற்றும் பகுத்தறிவு கோமாளித்தனத்தை சாடுவதோடு மட்டும் நில்லாமல்… நமது பரம்பரியதினை விளக்கி கூறும் உங்கள் எழுத்துக்கு பாராட்டுகள்…

    வாழ்க உங்கள் பணி…

  13. சேக்கிழான் on December 10, 2010 at 12:11 am

    அவன் நம்மவன்.. ..அவன் நம்மவன்…

    அகங்காரத்தை நடிப்பில் மறைக்கும் காமுகன்
    அவலமே வாழ்க்கையாகக் கொண்டவன்.
    அவனை நம்பிவந்த பெண்கள் அபலைகள்.
    இனியும் நம்பும் ரசிகர்களும் கோமாளிகள்.
    அவன் நம்மவன்.. ..அவன் நம்மவன்…
    பகுத்தறிவுத் தாத்தாவின் பேரனின் கணவன்.
    முற்போக்குத் திலகத்தின் பேரனின் கணவன்…

    மனம் முழுவதும் காமம் வழிபவனிடம்
    மலரினும் மெல்லிய குறள் எடுபடுமோ?
    அழகிய மலரிலும் காம்பே பிடிக்கும்
    உன்மத்தனுக்கு விருது கிடைக்குமோ?
    மனமே வக்கரித்துப்போன வயசாளியிடம்
    வக்கனை மட்டுமே கவியாய் விடைக்குமோ?
    என்ன இருந்தாலும் அவன் நம்மவன்..

    ‘தான்திருடி’ மற்றோரை இகழ்தலும் இயல்பே.
    இல்லறம் கெட்டவர் கழிசடையாவதும் இயல்பே.
    நாய் வாலை நிமிர்த்துதல் இலமே.
    ஆயினும் அவன் நம்மவன்.
    அவன் வாலை அறிதலும் இலமே.
    அவன் வாலை அரிதலும் இலமே.

    - ‘ரதி அன்பு’ படப்பாடல்.

  14. karan on December 10, 2010 at 1:05 am

    கமலுக்கு ஒரே ஒரு கேள்விதான் . வரலட்சுமியிடம் ரங்கராஜன் எப்படின்னு கேட்ட கேள்வியை ராஜலட்சுமியிடம் ஸ்ரீனிவாசன் எப்படின்னு கேட்ப்பீர்களா.

  15. karan on December 10, 2010 at 1:10 am

    அந்த பாட்டுக்கு இதைவிட better ஆன பதிலடியை தமிழ் இந்துவிடமிருந்து எதிர்பார்த்தேன். ரொம்ப சாஃப்டான கட்டுரை. நமது எதிர்ப்பு முழுமையாக சென்றடைய கொஞ்சம் மசாலா கலந்தால் தப்பில்லை என்பது என் அபிப்ராயம்.

  16. Sankar Raman on December 10, 2010 at 2:07 am

    திரு ஆநீ அவர்களே
    உங்களின் விமர்சன சவுக்கடி இவர்களை போன்ற ஜீவாத்மாவை தன்னிலை உணரச்செய்து பரமாத்மாவிடம் சேர்க்கட்டும்

  17. thiruchchikkaaran on December 10, 2010 at 3:48 am

    “உலக நாயகன்” என்று சொல்லப் படுபவரைப் பற்றி நான் அதிகம் சொல்லிக் கொள்ள விரும்பவில்லை. அவர் தென்னிந்தியாவில் மிகப் பிரபலமான நடிகர், அவருடைய படங்களில் நெருக்கமான காட்சிகள் இடம் பெறுவதை மக்கள் அறிவார்கள். அவரிடம் நாம் ஆன்மீக கோட்பாட்டை எதிர்பார்க்கவில்லை. யார் மக்கள் மனதிலே புலன் இச்சையை தூண்டும் கருத்தை பரப்பினாலும், அதற்க்கு மருந்து அமைதியான ஆன்மீகத்தை மக்கள மனதில் புகுத்துவதே.

    இந்தக் கட்டுரையில் கூறப் பட்டுள்ள பல கருத்துக்கள் எனக்கு திகைப்பை அளிப்பதாக உள்ளது.

    //இதைப் புரிந்துகொள்வதற்கு முன், ஆபாச எழுத்து என்பது வேறு; காமத்தையும் ஆன்மிகத்தையும் இணைக்கும் கவித்துவ-ஆன்ம முயற்சி என்பது வேறு என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். முன்னது வாலிப வயதின் எழுச்சிக்கோ அல்லது வாலிப-வயோதிகத்தின் இயலாமைக்கோ ஒரு வடிகால். பின்னது காமம் எனும் அடிப்படை மானுட உணர்ச்சியின் வீச்சையும் ஆழத்தையும் ஆதாரத்தன்மையையும் அறிந்து கொண்டு, அதனை பிரபஞ்சமெங்கும் கவியும் ஓர் உன்னத உணர்வாக உயர்த்துவது.//

    “காமத்தையும் ஆன்மீகத்தையும் இணைப்பது” – இந்தக் கோட்பாடு யாருடைய கோட்பாடு? இந்து மதத்தின் கோட்பாடா? உபநிடதத்திலோ, கீதையிலோ இப்படி காமத்தையும் ஆன்மீகத்தையும் இணைப்பது பற்றி இருக்கிறதா? (நமக்கு தெரிந்த வரையில் இல்லை). காமத்தின் முடிவுதான் ஆன்மீகத்தின் ஆரம்பம் , எந்த அளவுக்கு காமம் குறைக்கிறதோ அந்த அளவுக்கு ஆன்மீக உயர்வு கிட்டுகிறது என கருதலாம்.

    ரிக் வேதத்தில் சொல்லப் பட்டு இருப்பது ஒரு உவமையாகவே உள்ளது. அது காமத்தையும் ஆன்மீகத்தையும் இணைப்பது அல்ல.

    //அடுத்ததாக கோவில் சிற்பங்களை எடுத்துக்கொள்வோம்.

    கோவில் தூண்களிலும் சுற்றுச் சுவர்களிலும் இருக்கும் சில சிற்பங்களைத் தனியாக எடுத்துக் கொண்டால், மேலோட்டமான பார்வையில் அவை ஆபாசம் என கருதத் தக்கவையாக இருக்கும். ஆனால் கோவில் சிற்பங்களின் முழுமையான ஒட்டுமொத்த உருவாக்கத்தில் இந்த சிற்பங்கள் ஒருவித வழுவமைதி பெற்றுவிடுவதை நாம் காணலாம். காமம், ஏன் பிறழ்நிலை காமமாக இன்றைய ஒழுக்க விதிகளால் நாம் கருதும் காமமும் கூட, இந்தச் சிற்பங்களில் தங்கு தடையின்றி காட்டப்படுகின்றன.//

    தமிழ் நாட்டில் , தென் இந்தியாவில் எந்த எந்த கோவில்களில் காம சிறபங்கள் அதாவது புணர்ச்சி சிறபங்கள் உள்ளன என்று பட்டியல் தர முடியுமா? நானும் சிறு வயது முதல் பல கோவில்களுக்கு சென்று இருக்கிறேன். சமீபத்தில் கூட மயிலை கபாலீஸ்வரர் கோவிலுக்கு சென்று சுற்றி சுற்றி பார்த்தேன், புணர்ச்சி சிற்பம் எங்கும் இல்லை. சிறுவனாக இருந்த போது அரியலூர் பெருமாள் கோவிலுக்கு பலமுறை சென்று இருக்கிறேன், ஒரு புணர்ச்சி சிற்பமும் இல்லை.
    ஒரிசாவுக்கு தெற்க்கே எங்கேயும் புணர்ச்சி சிற்பங்கள் இல்லை. (ஒரு வேலை எனக்கு பார்வைக் கோளாறா?) ! கொனாரக் கோவிலில் அப்படியான சிறபங்கள உள்ளன. கஜூராஹோவில் உள்ளன. அவை எல்லாம் வீழ்ச்சி அடைந்த புத்த மதத்தில் இருந்து உருவானவை. இதைப் பற்றி சுவாமி விவேகானந்தர் தெளிவாக விளக்கி உள்ளார். இவற்றில் இருந்து எல்லாம் இந்திய சமுதாயத்தை மீட்டு பரிசுத்தமான இந்து மதத்தை நிலை நிறுத்தும் பணி இன்று வரை தொடர்கிறது என்கிறார் அவர்.

    எனவே இந்து மதம் பற்றி குழப்பமான தகவல்களை தரும்படியாக இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்று கோரிக் கொள்ளுகிறேன்.

    இந்துக்கள் வழிபடும் கோவிலகளில்- இந்துக்களே இந்து மதத்திற்காக கட்டிய கோவில்களில் – புணர்ச்சி சிறபங்கள் இருந்தால் அதை போட்டோ ஆதாரத்துடன் தெளிவு படுத்துங்கள். குறிப்பாக தென் இந்திய கோவில்களில் இருக்கிறதா என்பதை சொன்னால் போய் உண்மையை உறுதி செய்து கொள்ள எளிதாக இருக்கும். கோனார்க், கஜூராஹோவை வைத்துக் கொண்டு எழுத வேண்டாம் . அவை இந்து மதத்திற்காக கட்டப்பட்ட கோவில்கள் இல்லை. அவை புத்த மத வீழ்ச்சி காலத்தில் கட்டப்பட்ட புத்த மதக் கோவில்கள். அவற்றை கட்டிய பவுத்தர்கள் தங்கள் தாய் மதத்திற்கு திரும்பியவுட அதே கோவில்களை அப்படியே வைத்து இந்து தெய்வங்களை வழிபட ஆரமித்து விட்டனர் எனபதே வரலாற்று உண்மை.

    தயவு செய்து இந்த “காம ஆன்மீக இணைப்பு” சப்ஜெக்டை விடவும்- அல்லது அது இந்து மதக் கோட்பாடா என்பதை தெளிவு படுத்தவும. அதே போல இந்து கோவில்களில் புணர்ச்சி சிறபங்கள் இருப்பது போல எழுதினால் – அதற்க்கு ஆதாரம் கொடுங்கள்.

    “உலக நாயகன்” ஒரு பக்கம் இடித்தால், இங்கே இன்னொரு பக்கம் இடிப்பது போல உள்ளது. ஆனாலும் இந்து மதம் இமய மலை போல அசையாமல் உள்ளது.

    உண்மையான ஆன்மீகத்தை புரிந்து கொள்ளுவோம். மனிதனின் ஆசைகளும், இன்பங்களும் மயக்கத்தால், அறியாமையால் உருவானவை. வெவ்வேறு நேரங்களில் வெவ்வேறு மயக்கங்கள். ஆண் பெண் உறவு இன்ப ஆசை எப்போதும் இருப்பது இல்லை. பத்து வயதுக்கு முன் அந்த ஆசை வருவது இல்லை. எண்பது வயதில் நோய் வாய்ப் பட்டால், அந்த நோயில் இருந்து விடுபட்டால் போதும், சோறு தண்ணி கூட வேண்டாம் என்கிறான்.

    மயக்கத்தில் இருந்து விடுதலை (மோஹ முத்கரம்) அடைவதே ஆன்மீகம். அதை ஒரே நாளில் அடைய முடியாது அது வரையில் மோஹ வலையில் சிக்கினாலும், அதை முறையாக அடுத்தவருக்கு பாதிப்பில்லாமல், சமூகத்திற்கு பாதிப்பிலாமல் குடும்ப வாழ்க்கை வாழ்வதே இல்லறம்.படிப்படியாக மோஹத்தில் இருந்து விடுதலை பெறுவதே ஆன்மீகம். மோஹத்தையும் ஆன்மீகத்தையும் இணைக்க முடியாது. சிகரெட் பிடிக்காமல் இருப்பதே உடல் நலம். உடல் நலத்தையும் , சிகரெட் பிடிப்பதையும் இணைக்க முடியாது. உடல் கேடு அடைவதையும் சிகரெட் பிடிப்பதையும் வேண்டுமானால் இணைக்கலாம்.

    கடைசியாக ஒன்று இந்து மதமே பகுத்தறிவு மதம்தான். இந்து மதத்தின் பெரும்பாலான முனிவர்கள் பகுத்தறிவு சிந்தனையாளர்கள் தான். ஆனால் தமிழ் நாட்டில் பகுத்தறிவு என்பது தவறாகப் புரிதல் செய்யப் பட்டு விட்டது. அதற்காக அந்த பகுத்தறிவு என்கிற வார்த்தையை நாம் புறக்கணிக்க வேண்டியதில்லை. உண்மையான பகுத்தறிவாளர், சிரிப்பு பகுத்தறிவாளர்களைப் பார்த்து விலக முடியாது, வேண்டுமானால் சிரித்து விட்டு போகலாம்.

  18. s.radhakrishnan on December 10, 2010 at 6:11 am

    ஆன்மீகத் தலங்கள் ‘கொள்ளைக் கூடங்களா’கப் போய்விட்டதும் ஆன்மீகப் படங்கள் ‘அபத்தங்களா’னதும் உண்மையே! ஆனால், அவ்வகைக் கொள்ளைகளையும் அபத்தங்களையும் தடுக்கவா கமலஹாசன் படம் எடுக்கிறார்?

    ஒரு தவறைக் காட்டி இன்னொரு தவறை ஞாயப்படுத்த வேண்டாமே! கடந்த பல ஆண்டுகள் அவரது ‘கலைத் திறனை?’ மெச்சிய ஒரு ரசிகனாக இருந்து, கமல ஹாசன் ‘கமல்’ ஹாசனான பகுத்தறிவைக்கண்டும் ஹிந்து சமயத்தை இத்துணை அபத்தமாகப் புரிந்து வைத்திருக்கிற அவரது மெகா மேதாவித்தனத்தை உணர்ந்தும் ‘அவரது ரசிகன்’ என்னும் பேரழுக்கை/பேரிழுக்கை விட்டு நான் ஒதுங்கியவனாகிப் பல்லாண்டுகள் ஆகின்றன.

    நண்பர்கள் சிலர் சொல்லியுள்ளதுபோல, ‘சரியான சமயத்’தை நமது மக்களிடம் கொண்டு செல்ல இவர் (கமல்) போன்றவர் தரும் வாய்ப்புக்களை நாம் முறையாகப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். சரியான சமயம் தெரியாததால் தான் இவர்களால் இப்படிப்பட்ட விபரீதங்களில் இறங்க முடிகிறது.

    எக்காரணம்கொண்டும் இவருக்கு விளம்பரம் தேடித் தரும் எந்தச் செயலையும் நாம் செய்துவிடக் கூடாது.

  19. G SRIDHARAN on December 10, 2010 at 7:31 am

    i fully concure with the feelings of mr.Balaji. yesterday i have also read the comments supporting the dirty Actor’s poem and felt restless throughout the day. It is better to ignore those nasty fellows. I feel very sorry for late Mr. Srinivasan and Mrs Rajalakshmi

  20. Indli.com on December 10, 2010 at 8:04 am

    ஆபாசமும் மரபும் தமிழர் கடமையும்…

    நல்ல கணவன் அமைய செய்யும் ஒரு பாரம்பரியமிக்க நோன்பைப் பற்றி, மிக மலினமான காம வார்த்தைகளால் நி…

  21. பாலாஜி on December 10, 2010 at 8:35 am

    ஸ்ரீதரன் அவர்களே, கவலை படவேண்டாம்!

    காமனின் அம்பை வைத்து இந்து மதத்தை கேலி செய்பவர்க்கு, ராமனின் அம்பு எப்படி என்று கூடிய சீக்கிரம் தெரியவரும்…

  22. அருண்பிரபு on December 10, 2010 at 11:45 am

    //தயவு செய்து இந்த “காம ஆன்மீக இணைப்பு” சப்ஜெக்டை விடவும்- அல்லது அது இந்து மதக் கோட்பாடா என்பதை தெளிவு படுத்தவும. //

    காமத்தின் மூலமாக ஆன்மீகம் நம் பாரம்பரியத்தின் பகுதி, பெண்ணை நிர்வாணமாகப் பார்த்தாலும் மனம் காமத்தில் மயங்காதிருக்க ஒரு பயிற்சி செய்யப்படும். அது வாமாசாரம் என்ற வழியில் வந்தது. மேலதிக விவராங்களுக்கு பாரதியின் சாக்தம் தொடரின் முதல்பாகத்தைப் படிக்கவும். (http://www.tamilhindu.com/2010/10/bharathi-shaktham-1/)

  23. தமிழ்நேசன் on December 10, 2010 at 12:08 pm

    கமலகாசன் மாதிரி கூத்தாடிப்பய சொல்றதுக்கெல்லாம் வெயிட்டுக் குடுத்துக் குடுத்தே இந்துக்க பொழப்பு பெருங்கூத்தாப் போச்சுய்யா. மருதநாயகம் படத்துக்கு மெழுகுவத்தி ஏத்தி வெக்க பிரிட்டிஷ் மகாராணி வர்றப்ப இந்தப் பயபுள்ள என்ன பேசுச்சுன்னு மறந்து போச்சாய்யா? மருத நாயகம் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்துக்கு விசுவாசி. அவனப்பத்தி எடுக்குற படத்துக்கு நீங்க பெரிய மனசு பண்ணிக் காசு குடுங்கன்னு கேட்டபய தானே கமலகாசன்? துபாயிலருந்து காசு கேட்டா வரும்னு யாரோ சொல்லவும் மருதநாயகம் இசுலாமிய வீரன்னு பேசுன பயபுள்ள தானே இந்தக் கூத்தாடி? அமெரிக்காவுலருந்து ஹாலிவுட் காசு வரும்னு கெளப்பி விட்டதும் அசோக் அமிர்தராசுக்குப் பின்னாடியே இந்தப்பய கொஞ்சநாளு நாக்க தொங்கப்போட்டுக்கிட்டு அலஞ்ச கூத்து மறந்துருச்சாய்யா ஒங்களுக்கு?

    காசு குடுக்குற எசமானர போற்றிப் புகழ்ந்து ஆடிப்பாடுறது தானேய்யா கூத்தாடி மக்களுக்கு பொழப்பே? இப்ப ஆரு காசு குடுத்தாகளோ கிருஷ்ணர தாக்கி பாடுது பயபுள்ள. எறிஞ்சவன் யாருன்னு பாத்து அவஞ்சட்டயப் புடிங்கப்பா! கல்லப் போட்டு திட்டுனா அதுக்கென்ன புரியவா போகுது!!

  24. Narasimhan on December 10, 2010 at 12:35 pm

    தமிழ் நாட்டில் , தென் இந்தியாவில் எந்த எந்த கோவில்களில் காம சிறபங்கள் அதாவது புணர்ச்சி சிறபங்கள் உள்ளன என்று பட்டியல் தர முடியுமா?//

    Plenty..

    How far Kumbakonam is from Trichy by the way?
    http://www.travelpod.com/travel-blog-entries/benabroad/se-asia2007/1198730880/tpod.html#pbrowser/benabroad/se-asia2007/1198730880/filename=picture_003.jpg

  25. ramanathan on December 10, 2010 at 12:40 pm

    KAMAL IS THE KAMAN AS HE DIVERSED TWO WIFES ALREADY AND HAVING AFFAIRS WITH GAUTHAMI BY KEEPING HER AT HOME INCLUDING HER DAUGHTER. HE HAS NO SENSE AND HE IS MOST JEALOUS AND ENVEY WITH RAJINI WHICH WE WERE ABLE TO WITNESS IN VALLS 1000TH MOVIE FUNCTION HELD TWO MONTHS BEFORE IN CHENNAI.
    KAMAL WAS SITTING FOR LONG TIME BUT RAJINI CAME VERY LATE AS HE ATTENDED SOME FUNCTION BUT ONLY RAJINI WAS ASKED TO RENDER HIS SPEECH FIRST IGNORING KAMAL. EVERYONE CLAPPED RAJINIS SPEECH EXCEPT KAMAL WHOSE FACE WAS DARK. SO KAMAL NOW AND THEN TRY TO SHOW CINE LOVERS THAT HE IS ALIVE AND IN THE RACE. KAMAL WILL MEET HIS DOWN FALL SOONST ONCE HIS KARUNANIDHI IS OUT OF POWER. THIS DIRTY MOVIE OF DIRTY FELLOW MUST BE IGNORED BY ALL HINDUS TO TEACH A LESSON TO THIS ANTI HINDU FELLOW.

  26. kumudan on December 10, 2010 at 2:20 pm

    //தமிழ் நாட்டில் , தென் இந்தியாவில் எந்த எந்த கோவில்களில் காம சிறபங்கள் அதாவது புணர்ச்சி சிறபங்கள் உள்ளன என்று பட்டியல் தர முடியுமா? //

    I think krishnapuram temple in tirunelveli district has similar sculptures.

  27. ss on December 10, 2010 at 2:54 pm

    அ.நீ. சார் …. ஏன் பொழுது போகலயா ??? நல்ல கட்டுரைகள் தானே எழுதிகிட்டு இருந்தீங்க. இந்த சினிமா கன்றாவிய ஏங்க இங்க கொண்டு வரீங்க? இதுனால என்ன யூஸ்? சூரியனை பார்த்து நாய் கொலைக்கலாம்…. சூரியன் அதற்காக தொயந்துவிடுமா? அது போலவே இந்த பரமக்குடிகார ஆளு, மஞ்சா துண்டு இவனுங்க எல்லாம் நம் சனாதன தர்மமான இந்து மதத்தை பற்றி இவனுங்க சொல்றது எல்லாம் கேட்டுகிட்டு ……. இதை போன்ற தரம் கெட்ட சினிமாக்களை பார்க்கவே வேண்டாமே …. பரபரப்புக்கு அலையும் பண்ணா…. கள் !!!!

  28. Gopalan on December 10, 2010 at 2:55 pm

    Kamalahasan has become Kamahasan long ,long back. His escapades with almost all his film heroines is well known. He can write only what he knows. So leave him alone. Like many others I am also really sorry for his mother and father. Lucky that they are no more alive. Otherwise they would have committed the sin of suicide. I am only sorry for his daughters.

  29. dhinakar on December 10, 2010 at 3:26 pm

    Hindu Atheist will mock Hindi gods | Christian Atheist will say no Christian God! so on…. But a real Atheist on my research: Will not talk about god of any religion nor will mock the customs of those religions. Atheism has reference in Sri Math Bagavatham and upanishads. Many mock just because they are half baked and fully don’t understand the meaning of Atheism. For a Christian – a Hindu or a Muslim or a Sikh is a Atheist as they don’t follow their belief and against those beliefs! Adi Sankara Charya was a Atheist! Surprised!! Yes, he was ! he was against beliefs and started a new simplified system called Advitha principle. Vir Savarkar is a Atheist but he stood for Hindus and founded RSS! He proudly called himself as a ‘ HINDU ATHEIST’ : To be honest I too was one! Later changed my mind on seeing the real position.

    Dhinakar

  30. கந்தர்வன் on December 10, 2010 at 5:09 pm

    dhinakar,

    //Adi Sankara Charya was a Atheist//

    Kindly educate yourself a little about Advaita Vedanta and Adi Sankaracharya before writing nonsense.

மறுமொழி இடுக:

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.

*

உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:

தமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.

மறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.