இந்துத் தீவிரவாதமா, சுயநலமிகளின் சந்தர்ப்பவாதமா?

bharatha-matha-durga

பாரத பூமி பழம்பெரும் பூமி; நீரதன் புதல்வர் இந் நினைவகற்றாதீர்!” என்றும் “பாரத நாடு பார்க்கெலாம் திலகம்; நீரதன் புதல்வர் இந் நினைவகற்றாதீர்!” என்றும் சொல்லிச் சென்றான் பாரதி. “இனிய நீர்ப் பெருக்கும், இன்கனி வளமும், தனிநறு மலயத் தண்காற் சிறப்பும், பைந்நிறப் பழனம் பரவிய வடிவும், இனியபுன் முறுவலாய், இலங்குநல் அணியினை தரித்தெமைக் காப்பாய்” என்று நம் கவிஞர்கள் வணங்குகின்ற பாங்கும் பெற்றது இப்புண்ணிய பூமி.
 
இந்தப் பூவுலகம் தோன்றிய காலம் எது? நமது சூரிய மண்டலத்தில் இலங்கும் பல கிரகங்களில் நமது பூமண்டலத்தில் சிறப்புற அமைந்த பகுதி பாரத வர்ஷம். பனிபூத்த இமயமும், முப்புறம் கடலும் இயற்கை வளங்கள் அனைத்தும் படைத்த பூமி. இங்குதான் ஆதிமுதல் நாகரிகம் தோன்றியது. இங்குதான் முதன்முதலில் வாழ்க்கை முறை என்பது புதிதாக வடிவமைக்கப்பட்டது. பொதுவான வாழ்க்கை முறையைத் தோற்றுவித்தவர் யார் எப்போது என்பதெல்லாம் தெரியாத மிகப் பழமைவாய்ந்த வாழ்க்கை நம் பாரதியர் வாழ்க்கை. இங்கு மதமென்று எதுவும் இல்லை. இங்கிருந்த வாழ்க்கை முறைதான் ஒரு தர்மம் எனப்பட்டது. அதனை சநாதன தர்மம் என்பர். பின்னர் மேற்கிலிருந்து படைகொண்டு இந்தப் புண்ணிய பூமியின் வளத்தைக் கொள்ளை அடிக்க உட்புகுந்த எண்ணற்ற அந்நியர்கள் இங்கு அவர்களை வரவொட்டாமல் தடுத்த மாபெரும் சிந்து நதியை எண்ணி இங்குள்ள நாட்டையும் மக்களையும் சிந்து நதி மக்கள் என்றனர். சிந்து எனும் பெயர் இந்தியா எனவாயிற்று. இங்கு நிலவியிருந்த வாழ்க்கை முறை இந்து எனப்படலாயிற்று. அதனைத்தான் இன்று இந்து மதம் என்கின்றனர்.

இந்து மதம் எந்த ஒரு தனிமனிதனாலும் தொடங்கப்பட்டதல்ல; இதன் வயது என்னவென்று தெரியாத ஆதிமுதல் வாழ்க்கை நெறி அல்லது மதம். மற்ற மதங்களைத் தோற்றுவித்தவர்கள் யாரென்று தெரியும்; தோன்றிய ஆண்டும் தெரியும். காலம் எது எனத் தெரியாத பழமை வாய்ந்தது இந்து வாழ்க்கை முறை. இதை எங்கும் யாரும் பரப்பவில்லை. மக்கள் தாங்களாகவே ஏற்றுக் கொண்டு செயல்படுத்திய மதம் இந்து மதம். ‘ஹிந்து’ எனும் சொல்லுக்கு அன்பு எனும் பொருளையும் சொல்லுகிறார்கள். இங்கு அன்பும், அமைதியும், வளமும், செல்வமும் அளவற்று குவிந்து கிடந்ததால் அந்நியர்கள் கவரப்பட்டு இங்கே கொள்ளையிட வந்து சேர்ந்தார்கள்.

வந்தவர்கள் செயற்கையாக உண்டாக்கிய மதத்தைப் பரப்பினார்கள். நம்மவர்களுக்கு மதம் என்ற கட்டுப்பாடான அமைப்பு கிடையாது. அதற்கு தலைமை என்று எவரும் இருக்கவில்லை. மேலும் வாழ்க்கை என்பது தினசரி நடைமுறை வாழ்க்கையாகத்தான் இருந்ததே தவிர, மதம் என்ற ஒரு புதிய அமைப்புக்காக நேரத்தை ஒதுக்குவது கிடையாது. இங்கு தனியாக ஓரிடம் சென்றுதான் இறைவனை வழிபாடு செய்ய வேண்டுமென்ற கட்டாயம் இருந்ததில்லை. ஆனாலும் பிற்காலத்தில் மன்னர்கள், மக்கள் ஒன்றுகூடி வழிபாடு செய்ய, எல்லாம் வல்ல பரம்பொருளை வணங்கிட, ஆலயங்களைக் கட்டுவித்தார்கள். உலகமே கண்டு வியக்கும் வானளாவிய ஆலயங்கள், பொறியியற்கலையில் வல்ல பல சாதனையாளர்களைக் கொண்டு இங்கு அமைத்துக் கொடுத்தார்கள். அவர்கள் அமைத்த ஆலயங்கள் இன்றும் தலை நிமிர்ந்து நிற்பதை உலகமே அறியும்.
 
இந்தப் பாரத புண்ணிய பூமியில் மன்னர்கள் ஆண்டார்கள். அவர்களுக்குள் பூசல்கள் இருந்தன. ஒருவருக்கொருவர் மோதிக் கொண்டனர். ஒருவர் நாட்டை மற்றவர் பற்றிக் கொண்டனர். போரில் பலர் மடிந்தனர். எனினும் மதம் என்ற கொள்கைக்காக போர் எதுவும் இங்கே நடந்ததில்லை. மற்ற பல நாடுகளில் மதங்களில் மதப்பூசல், மதப்போர்கள் நடந்தன. ஆனாலும் அமைதி வழியில் இருந்தது பாரத பூமி.

மேற்கிலிருந்து பலர் பாரத புண்ணிய பூமியில் காலடி எடுத்து வைத்தனர். கொள்ளை அடித்துவிட்டு பொன் பொருளோடு மறுபடி தங்கள் நாடுகளுக்குத் திரும்பினர். சிலர் இங்கேயே தங்கினர். அவர்கள் கடைப்பிடித்த முரட்டு, காட்டுமிராண்டித்தனமான போர் முறைகளால் பாரதியர்கள் அவர்களுக்கு அடிமைப்பட்டுப் போயினர். பல நூற்றாண்டுகள் அந்நிய ஆதிக்கம் இங்கு நிலைநிறுத்தப்பட்டது. தனி நபர் எவராலும் இயற்றப்படாத வேத நூல்கள் பழிக்கப்பட்டன. இங்கே அவர்கள் நம் ஆலயங்களை அழித்தனர்; அருமறைகளை ஒழித்தனர்; பாலரை விருத்தரை பசுக்களை அழித்தனர்; மாதற் கற்பழித்தனர்; மறையவர் வேள்விக்கு ஏதமே விளைத்தனர்; சாத்திரத் தொகுதிகள் தாழ்த்தி வைத்தனர்; கோத்திர மங்கையர் குலம் கெடுத்தனர். இப்படி இவர் நமக்கிழைத்த துன்பங்கள் சொல்லத் தகையதோ? சூரராம் பாரதர் தொழும்பராய் மாறினர். வீரியம் அழிந்து மேன்மையும் ஒழிந்து நம் ஆரியர் (ஆரியர் என்பது மேன்மக்கள் என்று பொருள்; திராவிட பாரம்பரியத்தார் சொற்படி இனப்பாகுபாட்டைக் குறிப்பதல்ல.) புலையராம் மாற்றார்க்கு அடிமைகள் ஆயினர்.
 
இந்த நிலையில்தான் பாரத நாட்டை மாற்றி மாற்றி மிலேச்சர்கள் கொள்ளை அடித்தனர். நாடெலாம் பிறர்வசம் ஆகியும், வீடு சென்று ஒளிந்த பேடிகளும், மதம் மாறி மாற்றான் கரங்களில் சலுகைகள் பெற்று வயிறு வளர்த்தவனும் இங்கு பெருகினர். இந்த நிலையில்தான் நாட்டுச் சுதந்திர வேள்வி சுடர்விட்டு எழுந்தது. மகாத்மாவின் தலைமையில் அகிம்சை வழிப் போர் தொடங்கியது. போலித்தனமான ‘செக்கூலரிசம்’ பேசாமல் மகாத்மா தன்னை ஒரு சனாதன இந்து என்று கூறிக் கொண்டார். “ராம் ராம்” என்று பாரதத் திருநாட்டின் மூலமந்திரத்தை சதா உச்சரித்தார். இந்த புண்ணிய பூமியின் உண்மையான புத்திரனாக வலம் வந்தார்.

பல நூற்றாண்டு அந்நிய ஏகாதிபத்தியமும் அதற்கு முன்பு முகலாயர் படையெடுப்பும் ஆட்சிகளும்– பாரதப் புண்ணிய நாட்டில் பற்பல மதத்தார் நிரம்பலாயினர். இந்த மண்ணுக்குரிய பெளத்தமும் ஜைனமும் கூட வளர்ச்சியடையாத நிலையில் அந்நிய மதங்கள் கட்டுக்கோப்போடு, ஆட்சியாளர் துணையோடு ஏகபோகமாக வளர்ந்தது. இந்த தர்மத்தை வளர்க்க எந்தவொரு சாதனமும் இல்லாத நிலையில் தனிமனித வாழ்க்கை ஒழுங்கோடு மக்கள் தங்கள் பாதையில் சென்று கொண்டிருந்தனர். அவர்களைக் கட்டாயப் படுத்தி, ஆசை காட்டி, சலுகைகளைக் கொடுத்துத் தங்கள் மதங்களுக்கு மாற்றத் தொடங்கினர். இதற்கு பலியானவர்களில் அதிகம் பேர் இங்கு நம்மவர்களாலேயே தாழ்த்தி வைக்கப்பட்டிருந்தவர்கள். இங்கு அறியாமையின் காரணமாக நடந்த சமுதாய அடக்குமுறையினால் சிலர் தாழ்த்தப்பட்டிருந்த நிலை அந்நியர்களுக்கு சாதகமாகப் போய்விட்டது. மதமாற்றம் சகட்டு மேனிக்கு நடந்தது. நம்மவர்கள் வாய்மூடி மெளனிகளாக இருந்தனர். எவராவது வாயைத் திறந்து கேட்டுவிட்டால் அவனை மதமாதி, மத வெறியன் என்று பட்டம்கட்ட அந்நிய சக்திகள் தயாராக இருந்தன. நம்மவர்களும் பலர் அறியாமையின் காரணமாக அவர்கள் கூற்றுக்கு ‘ஆமாம் சாமி’ போட்டனர். அவர்களில் முக்கியமானவர்கள் ஆட்சி அதிகாரம் சலுகை என்று இவற்றில் குளிர்காய்ந்து கொண்டிருந்த அடிமை வர்க்கத்தார் என்பதைக் கவனிக்க வேண்டும்.

rahul_gandhi

நமக்கு எந்த மதத்தார் மீதும் காழ்ப்பு இல்லை. ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சர் சொன்னபடி ஓர் ஆற்றில் பல துறைகள் இருந்த போதும் இறுதியில் அந்த ஆறு போய்ச் சேருமிடம் கடல். அது போல் எவர் எந்த மதம் சார்ந்திருந்தாலும் அவர்கள் இறுதியில் அடைவது பரம்பொருளின் பாதாரவிந்தம் என்பதில் நமக்கு அசைக்கமுடியாத நம்பிக்கை இருக்கிறது. ஆனால், ஆளும் வர்க்கத்தின் அடிமைகள், அந்நிய ஆதரவு சக்திகள் மட்டும் நம்மைப் பார்த்து ‘மத வெறியர்கள்’ என்று பட்டம் கட்டி இழிவு செய்து வந்தார்கள், வருகிறார்கள்.

சுதந்திர இந்தியாவில் நடந்த மதக் கலவரங்களைப் பற்றி அறியாதவர்கள் இருக்க முடியாது. இதில் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் யார் என்பதை உண்மையில் நம்பிக்கையுடைய ஒவ்வொரு இந்தியனும் புரிந்து கொள்வான். தீவிரவாதிகள் என்பவர் யார்? தீவிரவாதம் எங்கு யாரால் தூண்டப்படுகிறது என்பது சின்னஞ்சிறு குழந்தைகளைக் கேட்டால்கூட சொல்லும். அந்த நிலையில் ஒரு பொதுவான, கட்டுப்பாடான அமைப்பு எதுவும் நம்மைப் பாதுகாக்க இல்லை என்கின்றபோது இந்த பூமியின் ஆதி மக்களை ஒன்று திரட்டி, நமது பண்பாட்டை, நமது உரிமைகளைப் பாதுகாக்க ஓர் அமைப்பை ஏற்படுத்தி அதனை வளர்த்தால் உடனே நம்மைப் பார்த்து இந்த அந்நிய சக்திகள் ஆகா, ஓகோ என்று அலறுகின்றன. இந்துக்கள் ஒன்றுபட வேண்டுமென்று சொன்னால் இவர்களுக்கு உடம்பெல்லாம் எரிச்சல் எடுக்கிறது. மெஜாரிட்டி, மைனாரிட்டி என்று அரசியல் நடத்தி ஓட்டுப் பிச்சை எடுத்து இந்த நாட்டு மக்களை ஓட்டாண்டிகளாக ஆக்கிவரும் ஆளுகின்ற வர்க்கத்தாரைக் கொஞ்சம் பாருங்கள். அவர்கள் யார் என்பதைச் சற்று கவனியுங்கள்.

rahul-gandhi-cartoon-by-manjulஒரு பார்சிக்குப் பேரன், ஒரு கத்தோலிக்க மாதுக்குப் புதல்வன், இந்தியர்களைப் பார்த்து இந்திய தேசபக்தர்களைப் பார்த்து ‘இந்து தீவிரவாதிகள்’ என்று சொன்னால் வியப்பாக இல்லையா? ஊழல், லஞ்சம், பட்டப்பகலில் பல லட்சம் கோடி தேட்டைப் போட்டுக் கொண்ட ஒரு கூட்டம் தங்கள் கேடுகெட்ட செயலை மறைக்க திடீரென்று ‘இந்துத் தீவிரவாதம்’ என்று ஒரே நேரத்தில் கூச்சல் போடுவதிலிருந்து இவர்கள் மேற்சொன்ன திருட்டுக்களிலிருந்து தப்பித்து ஓட முயல்வது தெரியவில்லையா? இன்று இந்துத் தீவிரவாதம் பற்றிப் பேசும் மத்திய பிரதேச மக்களால் தூக்கிக் கடாசப்பட்ட திக்விஜய்சிங் மற்றும் கத்தோலிக்க மாதின் மகன் ராகுல் கண்டி (பெரோஸ் கண்டி என்பதுதான் சரி, காந்தி என்பது ஆதாயத்துக்காக இவர்கள் சேர்த்துக் கொண்ட சொல்) ஆகியோர். இவர்களிடம் வயிறு வளர்ப்பதற்காக ஒண்டிக்கொண்டிருக்கிற கூட்டத்தார் சிலரும் இந்த கோஷத்தை வெட்கம் மானமில்லாமல் திரும்பச் சொல்லிக் கொண்டிருப்பது எரிச்சலைத்தான் கிளப்புகிறது.
 
இந்த நாட்டில் இதுவரை நடந்த தீவிரவாதச் செயல்களனைத்தையும் பட்டியலிடுவோம். பாதிக்கப்பட்டோர் யார் என்பதை கணக்கிடுவோம். அதில் சம்பந்தப்பட்டவர்கள் யார் யார் என்பதைத் துல்லியமாகக் கணக்கிடுவோம். எத்தனை நிகழ்வுகளில் ‘இந்துக்கள்’ என்று இந்த அந்நிய சக்திகளால் வர்ணிக்கப்படுபவர்கள் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்பதைச் சொல்ல வேண்டும். எவருடைய வழிபாட்டுத் தலங்கள் அழிக்கப்பட்டிருக்கின்றன என்பதை கணக்கிடுவோம். மாண்டவர்கள் எந்த மதத்தார் என்பதையும் கணக்கிடுவோம். பட்டப்பகலில் இந்த நாட்டின் நாடாளுமன்றத்தைத் தாக்கியவனுக்குக் கொடுத்த தண்டனையை நிறைவேற்றக் கையாலாகாதவர்கள் ஒன்றுகூடி தாங்கள் செய்த அட்டூழியங்களை மறைக்க நாகரிகமற்ற சொற்களால் இந்த மண்ணின் மைந்தர்களைத் தூற்றித் திரிவதை இன்னும் எத்தனை நாட்கள் இந்த நாட்டு மக்கள் அனுமதிக்கப் போகிறார்கள். ஒரு லட்சத்து எழுபதாயிரம் கோடி ரூபாய் அலைக்கற்றை ஊழலைச் செய்துவிட்டுத் தப்பித்துக் கொள்வதற்காக இன்று புதிதாகத் திட்டமிட்டு ‘இந்துத் தீவிரவாதம்’ என்று குற்றம்சாட்டுமளவுக்கு இப்போது சமீபத்தில் ஏதாவது நடந்ததா? அப்படி எதுவுமில்லாத நேரத்தில் தங்கள் குற்றங்களை மறைப்பதற்காக இப்படி ஒரு குற்றச்சாட்டை, தங்கள் கட்சி மாநாட்டில் சொல்லி மார்தட்டிக் கொள்வதை என்னவென்று சொல்வது? ஊழல்வாதிகள் சட்டத்தின் முன்னால் நிறுத்தப்பட்டு தண்டனை பெறும் வரையில் ஓயமாட்டோம் என்று உறுதி மேற்கொள்வோம். அதுவரை இவர்கள் இதுபோன்ற நாடகங்கள் பலவற்றை அரங்கேற்றுவார்கள். அவற்றை மக்கள் புறந்தள்ள வேண்டும்.

rahul_sonia_gandhi_kalki-cartoon

இது ஜனநாயக நாடு. நம் கையில் இருப்பது ஜனநாயகம் எனும் ஆயுதம். அதனைக் கொண்டு இந்த அநாகரிகக் கூட்டம் இனி தேர்தலில் வெற்றி பெற முடியாமல் ஒரேயடியாகத் தோற்கடிப்போம். இவர்களில் யார் யார் எந்த நாட்டுக்குப் போய்ச் சேர வேண்டுமோ அந்த நாட்டுக்கு ‘டாட்டா’ காட்டி அனுப்பி வைப்போம். அதுவரை ஓயமாட்டோம் என்று ஒவ்வொரு பாரதியனும் உறுதி எடுத்துக் கொள்வோம். ஒவ்வொரு இந்துவும், ‘நூறு பேரையாவது காங்கிரசுக்கு எதிராக வாக்களிக்கச் செய்ய உழைத்திடுவோம்!’ என்று சபதமேற்போம்.

வந்தேமாதரம்! ஜெய்ஹிந்த்!!.

Tags: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

 

8 மறுமொழிகள் இந்துத் தீவிரவாதமா, சுயநலமிகளின் சந்தர்ப்பவாதமா?

 1. reality on December 28, 2010 at 8:01 pm

  முஸ்லீமுக்கு எதிரி யூதனும் கிறிஸ்தவனும்; அதனாலதான், முச்லீம்லாம் பாரதத்தின் மேல் படையெடுத்து, அடிமைப்படுத்தி, ஆட்சி செய்கிறார்கள் என்று அறிந்துகொண்டு, கிறிஸ்தவங்கள் மோப்ப நாய்கள் போல், முஸ்லீம் வாசனையைத் தொடர்ந்து வந்து, முஸ்லீம்களுடன் சண்டைபோடுவதற்காக, பாரத்நாட்டினரைப்பகடைக் காய்களாகவும், கேடயங்களாகவும் உபயோகப்படுத்தி, ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டதுடன், பாரத நாட்டையும், கட்டுரையில் சொன்னது போல், நாசப்படுத்தினார்கள். ஜவ்வாது, அத்தர் பூசும் முஸ்லிமும், கோட்டு சூட்டு போடும் கிறிஸ்தவனும், எவ்வளவு கொடுமையானவர்களாக இருப்பார்களேயானால், அவர்கள் அநியாயங்களை மறைக்க, அத்தரும் பன்னீரும்,கோட்டு சூட்டும், தேவைப்படுகின்றன. ஆனால் அவர்கள் தான் இன்றும், விலங்கு உரிமை,மனித உரிமை என வேஷம் போட்டுத் திரியும் சமுதாய துரோகிகள். எனவேதான், அவர்கள் பின்னே சென்று, கொன்றுயிருண்ணும் வல்லமைக்கு நோபெல் பரிசுகள் கூட வழங்கப்படுகின்றன , அமைதியின் பெயரில். அவர்கள் சண்டைக்கு இந்துக்கள் ஏன் பலியாக வேண்டும் என்ற கேள்வியைக் கேட்பவர்களோ, பதில் சொல்பவர்களோ, கிடையாது.

 2. ram on December 29, 2010 at 6:52 am

  இதோ ராகுலுக்கு சில கேள்விகள்…இங்கே

  http://hayyram.blogspot.com/2010/12/blog-post_2669.html

 3. s.radhakrishnan on December 29, 2010 at 7:25 pm

  ராம், சரியான பதிலடி !

  இந்தப் புள்ளி விபரங்கள், புள்ளி விபரங்களாகவே பலருக்குத் தெரிவதுதான் காலத்தின் கோலமோ?

  ‘உலகின் மக்கள் தொகையில் பெரும்பாலான பகுதி ஏன் இந்தியாவிலேயே படைக்கப்படுகிறது?’ என்று சிந்தித்தால், ‘அறிவு கெட்ட, அறிவு என்பதே இல்லாத, பயங்கர வாதத்துக்கு பலியாக ஆள் வேண்டுமே என்பதற்காகத்தான்’ என்று பதில் தரலாம் போலிருக்கிறது.

  அரசியலையும் சமயத்தையும் ஹிந்துக்கள் மட்டும் பிரித்துப் பார்த்துக்கொண்டிருக்கும் நிலை மாறினால் ஓரளவு முன்னேற்றம் ஏற்படலாம்.

  என்ற போதும், ஒவ்வொரு தனி மனிதரும் சரியான “சமயத்தைச்” சக மனிதர்களுக்குச் சேர்க்க முயல்வதைத் தன் வாழ்க்கைக் கடனாகக் கொள்ள வேண்டும்.

 4. ss on January 1, 2011 at 9:14 am

  இந்த விஷயத்தை konjam vittutu யோசிங்க …

  நன்றாக சிந்தித்து பாருங்கள், இன்று நம் சொந்த மண்ணில் இருக்கும் மாற்று மதத்தினர் யார் என்று!! ஒரு காலத்தில் நம் மூதாதையரின் சொந்த உடன்பிறப்பாகவோ, தாய் தந்தை வழி சொந்தமாகவோ இருந்தவர்களே. ஆனால் அந்நிய பாலைவன மதங்களின் அசிங்கம் பிடித்த வேலையினால் நம் சொந்த மக்களோடு பிணக்கும்,சண்டையும், போராட்டமும் செய்து புரிய வைக்கவும்,பிரச்சினை தீர்க்கவும் வேண்டியதாய் போய் விட்டதே. இந்த ஆபிரகாமிய மதங்களால் நம் புனிதத்துவம்,தாய் மண்ணின் வளமை,பண்பாடு,கலை (பல நுட்பமிகு கலைகள் இன்னிக்கு உயிரோட இல்லை சிந்திச்சு பாருங்க),சகோதரத்துவம்,சக மனித நேசம் எல்லாத்தையும் பலி குடுத்துட்டு நிக்குரோமே???? கேடுத்துருசே இந்த அந்நிய பாலைவன பன்னாடைகளின் உருப்படி இலாத நயவஞ்சக கூட்டம்.

 5. kuppan on January 3, 2011 at 6:15 am

  Nice article,
  By the way original name of rahul gandhi is raul vinci
  in this name only he travel across the world.
  Ref Sub swamy speech on this

 6. snkm on January 5, 2011 at 10:13 am

  நன்றி! நிச்சயம் காங்கிரசுக்கு எதிராக வாக்கு அளிக்க வேண்டும்!
  காந்திக்கும் தங்களுக்கும் சம்பந்தம் இல்லாததினாலேயே காந்தியின் பெயரை சேர்த்துக்கொள்ள முடியும் என்றுமே பெரோஸ் கண்டியை மணம் புரிந்து கொண்டாரோ , என்று கூட நினைக்கத் தோன்றுகிறது! இவர்கள் இந்தியாவுக்கும் அதன் மக்களுக்கும் நன்மை செய்ய இந்தியாவில் இருக்க வில்லை! தங்களாலும் இந்தியாவை சுரண்ட முடியும் என்றே இங்கு இருக்கிறார்கள்! நன்றி!

 7. Neeraja on February 24, 2012 at 1:20 pm

  இதை படிக்க படிக்க என்னால் எதுவும் பேச முடியவில்லை. இதற்கு முக்கிய காரணம் நம் மக்களே. அன்றிலிருந்து இன்றுவரை நம்மிடம் ஒற்றுமை இல்லைபாரத்நாட்டினரைப்பகடைக் காய்களாக உபயோகப்படுத்தி, ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டதுடன் எதாவது ஆசை காட்டி மனதை மாற்றி அவர்களை தன்பக்கம் அழைப்பதே கிருஸ்தவர்கள் எண்ணம் அதை இன்றுவரை செய்து கொண்டு இருக்கிறார்கள் இதனை மனதில் கொண்டு நாம்தான் அவர்களை இங்கிருந்து துரத்தி அடிக்க வேண்டும் நன்றி

 8. kumaran on March 8, 2012 at 10:58 pm

  onrae kulam oruvanae thevan.Tamil -linguistic, hindu-religious. fanaticism on any platform is subject to be ignored. i feel pity for you.Love humanity wherein divinity dwells

மறுமொழி இடுக:

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.

உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:

தமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.

மறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

*