கருணாநிதியும் பொய் மூட்டைகளும்

லஞ்சம், ஊழலுக்கு நான் நெருப்பு என தலைப்பிட்டு  2010ம் ஆண்டு நவம்பர் மாதம் 30ந் தேதி முதல்வர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கை அனைத்து ஊடகங்களிலும் டிசம்பர் மாதம் 1ந் தேதி மிகப் பெரிய விளம்பரத்துடன் வெளியாகியுள்ளது.  இது ஆண்டின் இறுதியில் மாநில முதல்வர் அடித்த மிகப் பெரிய காமெடி அறிக்கையாகும்.  அவர் வெளியிட்ட அறிக்கையில் தனது சொத்து பத்துக்களை விலாவாரியாக பட்டியிலிட்டு தான் தவறே செய்யாதவன், தனது உறவுக்காக கூட நான் தவறு செய்யவில்லை என ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.  தமிழக முதல்வர் கொடுத்த ஒப்புதல் வாக்குமூலம் பல வழிகளில் விமர்சனத்திற்கு உட்பட்டுள்ளது.

karuna_commedy

உண்மையிலேயே தமிழக முதல்வர் ஊழலுக்கு நெருப்பானவரா என்பதை தெளிவுப் படுத்திக் கொள்ள வேண்டும்.  திமுக ஆட்சிக் காலத்தில் அந்தக் கட்சியைச் சேர்ந்தவர்கள் குறுகிய காலக் கட்டத்தில் பொருளாதார ரீதியாக மிகப் பெரிய முன்னேற்றம் அடைந்தது பலரையும் வியப்புக்குள்ளாக்கியது.  ஒரு கட்சியின் மாநில பொருளாளரே தலைமையின் மீது மோசடிக் குற்றச்சாட்டு சுமத்தியது திமுகவில் மட்டுமே நடந்தது.  6.11.1972ல் கட்சியிலிருந்து வெளியேறிய எம்.ஜி.ஆர் கருணாநிதியின் மீதும் மற்றும் சில அமைச்சர்கள் மீதும் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தி அன்றைய குடியரசுத் தலைவர் வி.வி.கிரியிடம் மனு கொடுத்தார்கள்.  இந்த மனுவின் மீதுதான் 2.2.1976ந் தேதி முன்னாள் நீதிபதி சர்க்காரியா தலைமையில் ஒரு விசாரணை கமிஷன் நியமிக்கப்பட்டது.

karunanidhi_c1சர்க்காரியா கமிஷனால் வன்மையாக கண்டிக்கப்பட்டவர் தமிழக முதல்வர், கமிஷனில் விசாரணைக்குட்பட்ட விஷயங்களில் முக்கியமானது “ முதல் மந்திரியின் அதிகார துஷ்பிரயோகம் காரணமாக அவருடைய குடும்பத்தினர் வீடுகளையும் சொத்துக்களையும் வாங்கி வந்தார்கள்”  என்பதாகும்.  இந்த குற்றச்சாட்டிற்கு முகாந்திரம் இருப்பதாக கமிஷன் கருத்து தெரிவித்தது.  “வீராணம் திட்டத்தைத் திருவாளர்கள் சத்திய நாராயணா பிரதர்சுக்கு ஒப்படைக்க எடுத்த முடிவு ஒரு பெரிய நிர்வாகத் தவறு என்பதைச் சந்தேகமில்லாமல் கூறலாம்” என சர்க்காரிய தெரிவித்தார்.  தனது பதவிக் காலத்தில் தவறு செய்யாதவர் என்றும் ஊழலுக்கு தான் நெருப்பு என்பதும் மக்களை ஏமாற்றுகிற செயல்தான்.  மேலும் இவர் மீது போட்ட வழக்குகளை இந்திரா காந்தி தள்ளுபடி செய்த போது, கமிஷனில் பணியாற்றிய சிபிஐ. ஆதிகாரி திரு லட்சுமி நாராயணன் 2001ம் ஆண்டு மே மாதம் 29ந் தேதி பத்திரிக்கை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் “ கருணாநிதி மீது தொடரப்பட்ட இரண்டு வழக்குகளை வாபஸ் பெற்ற இந்திரா காந்தி அரசின் செயல் நியாயமற்றது “ என்று கூறியதும் இவரின் நெருப்புக்கு சான்றாகும்.

அனைத்து ஊடகங்களிலும் தமிழக முதல்வர் விடுத்த செய்தியில் “ என்னுடைய 87 வயதில் பல பொறுப்புகளில் இருந்தாலும் சென்னையில் உள்ள இந்த ஒரு வீட்டைத் தவிர வேறு பெரிய வீடுகளையோ, தோட்டங்களையோ, எஸ்டேட்களையோ விலைக்கு வாங்கியதும் இல்லை, அரசு நிலங்களை ஆக்கிரமித்துக் கொண்டதும் இல்லை. குறைந்த விலைக்குப் பெற்றுக் கொண்டதும் இல்லை.”  என தெரிவித்துள்ளார்.  ஆனால் 2009ம் ஆண்டு நடைபெற்ற சட்ட மன்றத் தேர்தலில் தமிழக முதல்வர் தேர்தல் ஆணையத்தில் அளிக்கப்பட்ட ஆவணங்களில் காணப்படும் சொத்துக்கள் எவ்வாறு வந்தது என்பதை தெரிவிக்க மறந்துவிட்டார்.  தமிழக முதல்வர் தனது பெயரில் சொத்துக்களை மட்டுமே தெரிவித்துவிட்டு, தனது மனைவி, துணைவி, மகன்கள் பெயரில் உள்ள சொத்துகளை தெரிவிக்கவில்லை என்பதும் மிகப் பெரிய நெருடலாகும்.

அஞ்சுகம் பதிப்பகத்தில் ரூ5000க்கு 50 சதவீத பங்குகள் உள்ள நிறுவனத்திற்கு உரிமை பட்ட நிலம் மற்றும் கட்டிடம் உள்ளது.  இந்த நிறுவனத்தின் சொத்தில் இவருக்கு எவ்வித பங்கும் கிடையாதா? இந்த சொத்து இருக்கின்ற இடம் கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் உள்ளது, இன்று இதன் மதிப்பு பல கோடிகளை தாண்டும் என்பது பலருக்கும் தெரிந்த செய்தியாகும்.  இந்த நிறுவனத்தில் உள்ள மீதி பங்குகள் 50 சதவீதமும் தனது மனைவி மு.க.தயாளு அம்மாள் பேரில் உள்ளது என்பதையும் பார்த்தால் , தமிழக முதல்வருக்கு அஞ்சுகம் பதிப்பத்தின் சொத்து முழுமையும் அவருடையது இந்த சொத்தை ஏன் அறிக்கையில் தெரிவிக்கவில்லை.  இதைப் போலவே தமிழ்க்கனி பதிப்பகம் எனும் பெயரில் உள்ள சொத்துக்கள் ராசாத்தி அம்மாளுக்கு உரிமைப்பட்டதையும் மறைத்துவிட்டார்.

தனது பெயரில் வங்கியில் உள்ள வைப்புத் தொகையை மட்டும் கணக்கு காட்டி விட்டு தயாளு அம்மாள் பெயரில் இந்தியன் வங்கி கோடம்பாக்கத்தில் ரூ12,50,00,000(பணிரெண்டு கோடியே ஐம்பது லட்சம்) வைப்பு தொகை இருப்பதும்,  திருமதி ராசாத்தி அம்மாள் பெயரில் இந்தியன் வங்கி இராசா அண்ணாமலைபுரம் கிளையில் உள்ள ரூ5,00,00,000 (ஐந்து கோடி) இருப்பதையும் தெரிவிக்கவில்லை.  கோபாலபுரத்தில் உள்ள வீட்டின் தன்மையை மட்டும் அந்தக் காலத்தில் ரூ45,000க்கு வாங்கினேன் என கூறிய முதல்வர், ரூ3.02 கோடி மதிப்புள்ள திருமதி இராசாத்தி அம்மாளுக்கு சொந்தமான மயிலாப்பூர் சி.ஐ.டி. காலனி வீடு பற்றி எதுவும் குறிப்பிடவில்லை.

brothersதமிழக முதல்வர் தனது மகனும் மாநில துணை முதல்வருமான திரு.மு.க.ஸ்டாலின் சொத்துக்களை பற்றி மூச்சுக் கூட விடவில்லை.  மு.க.ஸ்டாலின் கணக்குப்படி தனது மனைவியின் பெயரில் சொத்தை விற்றதில் வரவேண்டிய தொகை ரூ14,50,000 என குறிப்பிட்டுள்ளது.  இவர் எந்த சொத்தை விற்றார் என்பது இமாலய ரகசியமாகும்.  வசதியுடன் வாழுகின்றவர் கள் எவரும் தங்களுடைய சொத்துக்களை விற்கமாட்டார்கள் என்பது நியதியாகும்.  திரு ஸ்டாலின் தற்போது வசிக்கும் சீதாபதி நகர் வேளச்சேரி உள்ள வீடு வாங்குவதற்கு எங்கிருந்து பணம் வந்தது என்பதை தெரிவிப்பார்களா அல்லது தேர்தல் ஆணையத்திடம் கொடுப்பட்ட மனுவில் தனது மகன் மீது உள்ள சொத்துக்களை ஏன் காட்டவில்லை என்பதையும் கவனிக்க வேண்டும்.

மதுரையில் ஆட்சிப் புரியும் தனது மகன் மு.க.அழகிரியின் சொத்துக்கள் எவ்வளவு அவைகள் எவ்வாறு வந்தன என்பதற்கு பட்டி மன்றம் வைக்க தமிழக முதல்வர் தயரா என்பது மில்லியன் டாலர் கேள்வியாகும்.  முதலில் மு.க.அழகரி மற்றும் மனைவி மகன் மீது வங்கியில் உள்ள வைப்புத்தொகையை பார்த்தால் மிகவும் மலைத்துவிடுவீர்கள்.  இந்தியன் வங்கி டிவிஎஸ் நகரில் முக.அழகரி தனது பெயரில் உள்ள வைப்பு தொகை ரூ1,75,00,000 இந்த தொகையுடன் மேலும் ரூ50 லட்சம் இணைத்துள்ளார்.  தனது மனைவியின் பெயரில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் ரூ10 லட்சமும், இந்தியன் வங்கி டி.வி.எஸ் நகர் கிளையில் ரூ43,43,095 உள்ளது, தனது மகன் பெயரில் இந்தியன் வங்கி டி.வி.எஸ் நகர் கிளையில் வைப்பு நிதியாக உள்ளது ரூ1,19,01,330 ஆகும்.  ஆகவே இவர்கள் மூவர் பெயரிலும் உள்ள வைப்புத் தொகை எவ்வாறு வந்தது என்பதை தமிழக முதல்வர் தெரிவித்திருந்தால் ஊழலுக்கு நெருப்பானவர் என்பதை புரிந்து கொள்ளலாம்.

dmk-cartoon_tமதுரையில் ஆட்சி புரிபவர் வாங்கியுள்ள நிலங்கள் இன்னும் அதிகஅளவில் உள்ளது என்பதையும் மறந்துவிடக் கூடாது.  உறவினருக்கு சொத்து சேர்க்க உதவில்லை என்று கூறும் தமிழக முதல்வர் சன் டிவி நெட்ஓர்க் என நிறுவனம் எவ்வாறு துவக்கப்பட்டு வளர்ந்தது.  முரசொலி மாறன் தொடாந்த எல்லா கால கட்டத்திலும் 1967 தொடங்கி தொடாந்து மாநிலங்களவை, மக்களவை உறுப்பினராகவும் மத்தியில் அமைச்சராகவும்  பதவி வகித்த காரணத்தால் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து இந்த நிறுவனம் வளர்ந்தது என்றால் அது மிகையாகாது.  அதாவது வி.பி.சிங் ஆட்சியில் மத்திய நகர்புற மேம்பாட்டுத் துறை மந்திரியாக இருந்த போது தொழில் அதிபர்கள் பலருக்கு பற்பல காரியங்களை நிறைவேற்றித் தந்து நெருக்கமாக உறவு கொண்டதின் காரணமாக, புருனே சுல்தான் ரஷிய சேட்டிலைட் காரிஜான்டரின் டிரான்ஸ்பாண்டர் ஒன்றை பரிசாகத் தந்திருந்தார், மேற்படி பரிசை பயன்படுத்துவது தெரியாமல் இருந்த டாட்டியாவிடம், தனது நெருக்கத்தின் காரணமாக முரசொலி மாறன் பெற்று சன் டிவி தொடங்கப்பட்டது.  2000ஆவது ஆண்டில் திமுக ஆட்சியிலிருக்கும் போது சுமங்கலி கேபிள் விஷன் துவக்கப்பட்டது.  ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி ஏற்கனவே இருந்து ஹாத்வே என்கின்ற வட இந்திய நிறுவனம் 60 சதவீதம் தன்வசம் வைத்திருந்ததை தட்டி பறித்த கதையும் உண்டு.

தற்போது இந்த நிறுவனத்தில் தமிழக முதல்வரின் பங்கு 20 சதவீதமாகும்.  ஆனால் சன் டிவியில் எனது பங்குக்காக ரூ100 கோடி கொடுக்கப்பட்டது என்று கூறிய தமிழக முதல்வர் சன் டிவியில் தனது பங்குக்காக கொடுக்கப்பட்ட முதலீடு எவ்வளவு என்பதை குறிப்பிடவில்லை.  தற்போது அதாவது இவருக்கு சன் டிவி பங்குகளை கொடுத்த போது நிறுவனத்தில் மொத்த மதிப்பு சுமார் ரூ16,000 கோடியாக இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  ஆகவே 20 சதவீத பங்குக்கு கிடைத்த தொகை ரூ 100 கோடி மட்டும்தான என்பதை தமிழக முதல்வர் விளக்கமளிக்க வேண்டும்.

18 Replies to “கருணாநிதியும் பொய் மூட்டைகளும்”

  1. Pingback: Indli.com
  2. தகவல்பூர்வமான கட்டுரை. பொய் மூட்டைகளை நம்புவதற்கு ஆட்கள் இருந்து ஓட்டுப் போடும் வரை இவர்கள் கொள்ளையடிப்பது தொடரும். இதைப் படிக்கும் ஒவ்வொருவரும் தத்தம் மனசாட்சியைக் கேட்டுக் கொள்ள வேண்டிய சில கேள்விகள் உள்ளன.

    நீங்கள் உண்மையிலேயே இந்த கொள்ளைக்காரக் குடும்பத்தின் ஊழல்களையும், ஆதிக்கங்களையும் எதிர்க்கிறீர்களா?

    ஆம் என்றால் உங்கள் வீடுகளில் சன் டி வி அல்லது இந்தக் குடும்பத்தாரின் ஏதாவது ஒரு கேபிள் அல்லது டிஷ் சேவைக்கு பணம் செலுத்துகிறீர்களா?

    இந்தக் குடும்பம் எடுக்கும் சினிமாக்களைக் காசு கொடுத்துப் பார்க்கிறீர்களா?

    இந்தக் குடும்பம் தயாரிக்கும் பொருட்களை வாங்குகிறீர்களா?

    இந்தக் குடும்பம் வெளியிடும் பத்திரிகைகளைப் படிக்கிறீர்களா? காசு கொடுத்து வாங்குகிறீர்களா? டி வி நிகழ்ச்சிகளைப் பார்த்து ரசிக்கிறீர்களா?

    இந்தக் கேள்வியில் ஒரு கேள்விக்காவது நீங்கள் “ஆம்” என்று பதில் அளித்திருந்தால் இந்த குடும்ப மாஃபியாவின் கொள்ளைகளில் நீங்களும் பங்குதாரர் ஆகி விடுகிறீர்கள். அந்தப் பாவம் உங்களையும் சேரும். மேலும் மேலும் பாவம் செய்து இவர்களைப் பணக்காரர் ஆக்கும் முன்னால் ஒரு நொடி சிந்தியுங்கள் இந்தக் குடும்பத்தின் வியாபாரங்களை ஆதரிக்காதீர்கள் அருவருப்பான பொருள் போல வெறுத்து ஒதுக்குங்கள். இல்லாவிட்டால் இந்தப் பாவத்தின் பலன்களை உங்கள் வாரிசுகள் அனுபவிக்க நேர்ந்து விடும். உண்மையான ஆத்திரமும், தார்மீக ஆவேசமும் உங்களுக்குக் கிஞ்சித்தும் இருக்குமாயின் இனியும் இந்த நாசகாரக் கும்பல்களை ஆதரிக்காதீர்கள். இவர்கள் வளர்வது உங்கள் பணத்தில் உங்கள் ஓட்டுக்களில் என்பதை முதலில் உணர்ந்து கொள்ளுங்கள். எந்திரன் தொடங்கி மதராசா பட்டினம், ரத்த சரித்திரம், மன்மதன் சொம்பு போன்ற எந்த சினிமாவையும் காசு கொடுத்துப் பார்க்காதீர்கள் கொள்ளைக்காரர்களுடன் கூட்டணி வைக்காதீர்கள். புறக்கணியுங்கள் இந்தக் கொடுங்கோலர்களை.

    ச.திருமலை

  3. உடன் பிறப்பே! தமிழிற்காக தமிழினத்திற்காக என்னையே அர்பணித்தேன், அதற்காக என்னகு கிடைத்த விருதுகளைப் பார்த்தாயா? இது போன்ற அறிக்கையை நீ நம்புவாயா? மாட்டாய் என நான் நன்கு அறிவேன் .

  4. கலைஞர் குடும்பம் அதிக சொத்து சேர்த்துவிட்டதாக எல்லோரும் சொல்கிறார்கள். அது எந்த அளவுக்கு உண்மை என்பதை தனியே விவாதிப்போம்.

    நாம் கேட்கவிரும்பும் கேள்வியெல்லாம் , சுமார் பத்து வருடத்துக்கு ஒரு முறை மத்திய அரசு நாட்டிலுள்ள கருப்பு பணத்தை வெளிக்கொனர்வதர்காக ஒரு வீ டி ஐ எஸ் ( வாலண்டரி டிஸ்க்ளோசர் ஸ்கீம் ) என்று அறிவித்து, கணக்கில் வராத வருமானத்தில் ஒரு இருபது அல்லது முப்பது சதவீதத்தை அரசாங்கத்துக்கு வரியாக வசூலித்துக்கொண்டு மிச்சத்தொகையை வெள்ளை பணமாக்க வழி வகுத்தால் அரசுக்கும் நிதி கிடைக்கும் , அந்த பணத்தை வைத்து பல சமூக நலத்திட்டங்களை அமுல்படுத்தலாம்.

    1997 க்கு பிறகு மத்திய அரசு சுமார் 2007 ம் ஆண்டிலேயே இதை செய்ய தவறிவிட்டது. இப்போதாவது உடனடியாக இதனை செய்ய வேண்டும்.

    மேலும் சில மீடியாக்களில் வரும் தகவல்களின்படி வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்களின் கணக்கில் வராத கருப்பு பணம் சுமார் எழுபது லட்சம் கோடி ரூபாய்கள் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

    பதவியில் இருக்கும் பெரிய தலைவர்கள் மேலும் பத்தினி வேடம் போடாமல், உடனடியாக இத்திட்டத்தை செயல்படுத்தினால் , இந்த நாடு உருப்படும். அதைவிட்டு விட்டு,வெளி நாடுகளில் கருப்பு பணம் வைத்திருக்கும் பெரிய அரசியல் தலைகள், தொழிலதிபர்கள், அரசு அதிகாரிகள் ஆகியோர் மீது நீதிமன்றங்களில் வழக்கு போடுவதால் அரசுக்கு மேலும் வீண் செலவு தான் மிஞ்சும். எந்த அரசியல் வாதிக்கும் அல்லது தொழில் அதிபருக்கும் அல்லது பெருந்தலைகளுக்கும் எந்த நீதி மன்றத்திலும் தண்டனை வாங்கிதருவதால் ஒரு பயனும் விளையாது. மேலும் கேசு முடிவதற்குள் பலரும் மண்டையை போட்டு விடுவார்கள். கேசும் மண்டையை போட்டுவிடும்.

    இணைய தளம் பலவற்றிலும் வரும் தகவல்களின்படி, வெளிநாடுகளில் கருப்பு பணம் வைத்திருக்கும் நாடுகள் பட்டியலில் ஒரு காலத்தில் கம்யூனிஸ்ட் ரஷ்யாவும் ,பின்னர் கம்யூனிஸ்ட் சீனாவும் முதலிடத்தில் இருந்ததாகவும் தற்போது அந்த இடத்தை இந்தியர்கள் பிடித்து விட்டதாகவும் , நமது நாட்டவர்கள் புதிய வரலாறு படைத்திருப்பதாகவும் , இதனால் தோற்றுப்போன சீன அரசு இந்திய திருநாட்டுக்கு மேலும் சில பல தொல்லைகளை அளிக்க திட்டமிட்டு வருவதாகவும் பேசப்படுகிறது.

    எனவே லஞ்ச லாவண்யவாதிகளை ஒழிக்க முற்படாமல் அவர்களிடம் வரிவசூலிக்கும் வேலையையாவது ஒழுங்காக செய்யுங்கள். நாடாவது சிறிது பலன் பெறட்டும். வீண் கோர்ட்டு செலவு வேண்டாம்.

    அரசியல்வாதிகள் நம் நாட்டுக்கு எவ்வளவோ துரோகங்களும், கொடுமைகளும் செய்திருக்கிறீர்கள். அதனை ஈடு கட்டும் விதத்தில் இதையாவது செய்யுங்கள். சிறிதாவது புண்ணியமாகப்போகட்டும். எந்த இந்தியராக இருந்தாலும் வெளிநாடு மற்றும் உள்நாட்டில் உள்ள கருப்பு பணத்தை வெள்ளையாக்க உடன் அனுமதித்து,தண்டமான முறையில் இதுவரையில் மக்கள் வரிப்பணத்தை வீணாக்கி ,நடந்து வந்த நீதிமன்றங்களில் உள்ள எல்லா வழக்குகளையும் வாபஸ் வாங்குங்கள். அரசுக்கு வரி வசூலிப்பதில் கவனம் செலுத்துக.

    பொது மக்கள் முட்டாள்கள் அல்ல. கருணாநிதி போன்றவர்கள் பதவியிலிருக்கும் காலத்தில் முந்திய ஆட்சியாளர்கள் மீது வழக்கு போடுவதும், முந்திய ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள் கட்சி மாறி இவர்களின் கட்சியில் சேர்ந்தவுடன் , கோர்ட்டில் உள்ள வழக்குகள் நிரூபிக்க முடியாமல் நீர்த்துப்போவதும் எல்லோரும் அறிந்த உண்மை. எனவே இந்த அரசுகள் தொடுக்கும் ஊழல் வழக்கிலோ, கிரிமினல் வழக்குகளிலோ அரசியல்வாதிகளுக்கு எதிராக சாட்சி சொல்ல எவரும் வரமாட்டார்கள். இதுதான் இன்றைய உண்மை நிலை. இன்று எதிர்க்கட்சியாய் இருப்பவன் அடுத்த தேர்தலில் ஆளுங்கட்சியாக வர வாய்ப்பு உள்ளது என்று எல்லோருக்கும் தெரியும். எனவே தான் நீதி தேடும் சிலர் பொறுமை இழந்து தாங்களே அடிதடி, கொலை என்று கோபத்தில் இறங்கிவிடுகிறார்கள். கருப்பு பணத்தை வெள்ளையாக்கி நாட்டுக்கு சிறிது உதவி செய்யுங்களேன்.

  5. மறைக்கப்பட்ட தகவல்களை அம்பலப்படுத்திய ஈரோடு சரவணனுக்கு நன்றி.

    உண்மையில், கருணாநிதியின் சொத்து மதிப்பு இதை விட பல ஆயிரம் மடங்கு அதிகமாகவே இருக்கும். அவர் பெயரில் இல்லாமல் பினாமி பெயரில் உள்ள சொத்துக்களை சேர்த்தால், தமிழகத்திற்கு தனி பட்ஜெட்டே போட முடியும்.

    என்ன செய்வது? தமிழ் பத்திரிகையுலக பிரம்மாக்கள் பெரும்பாலோர் கருணாநிதியின் கைக்கூலிகளாக மாறிவிட்டனரே? இவை எதுவும் தமிழ் பத்திரிகைகளில் வெளிவராது. தமிழக மக்கள் தான் புரிந்துகொண்டு செயல்பட வேண்டும்.

  6. இக்கட்டுரைக்கு இதுவரை இரண்டே இரண்டு மறுமொழிகள் வந்துள்ளதைப்பார்த்தால், சன்டிவி, இலவசத்தொலைக்காட்சிபெட்டி இரண்டையும் அனுபவிப்பவர்களின் உள்மனது, துரோகம் செய்யத் துணியவில்லை போலும். அராஜகத்திற்கு உச்சக்கட்டமாக இருந்த கருணாநிதியை, அரசியலைவிட்டே துரத்திய எம் ஜி ஆரை, பதினோராவது அவதாரமாக, நவராத்திரி கொலுவில், வைக்கும் அளவிற்கு, மனம் உகந்தது என்றால், எத்துனை கொடியவனாக இந்தக் கருணாநிதி இருக்கவேண்டும். கருணாநிதியின் குடும்பத்தில் ஞாயம், தர்மத்தை எண்ணிப்பார்க்க ஒருவர் கூட இல்லாதது அது ஒரு கௌரவர் கூட்டம் என்று தெரிவிக்கின்றது. ஆனால் வெளியில், தருமபுத்திரர் தலைமைப்பட்ட, பாண்டவர்களுக்குத்தான் பஞ்சம். எனவே, கிருஷ்ணபரமாத்மாவே காத்துக்கிடக்கும் நிலை.

  7. கூட்டுகொள்ளை அடித்துவிட்டு தி.மு.க. வை மட்டும் குற்றவாளிகூண்டில் நிறுத்த காங்கிரஸ் திட்டம்தீட்டுகிறது. கபில்சிபில்லுடன் டாடா அம்பானி மிடல் சந்திப்பு எதற்கு? கிருஸ்துவ சோனியாவின் சதியை மானம்முள்ள தமிழன் ஒவ்வொருவனும் உணரவேண்டும். இலங்கை தமிழரின் இனபடுகொலைகளுக்கு காரணமான சோனியாவை தமிழர்கள் நாடுகடத்தவேண்டும். இதற்குபிறகும் கிருஸ்துவர்களுக்கு அடிமையாக இருந்தால் கழகத்திற்க்கு தமிழன் என்று சொல்லிக்கொள்ள அருகதைகிடையாது. தனது வாழ்நாள் முடியும் தருவாயிலாவது மனம் திருந்தவேண்டும் என இறைவனை வேண்டுகிறேன்

  8. தி.மு.க. ஆரபித்தநாட்களில் டாடா பிர்லா கோயங்கா போன்ற தொழில் அதிபர்களை மேடைதோரும் திட்டி வந்தார்கள். மவுண்டுரோடு பார்பனர்கள் ஆக்கிரமிப்பு ஆகிவிட்டது என்று கூக்குரல்லிட்டார்கள். ஆனால் இன்று அவர்களுக்கு கீழ்படிந்து மக்கள் நலம் என்று சொல்லி பொது சொத்தை தன் குடும்ப சொத்தாக மாற்றி கொண்டிருக்கிறார்கள்

  9. தமிழ் பத்திரிகைகளில் வராத பல சொத்து கணக்குகளை வெளியிட்டு உள்ளீர்கள்.
    இந்த சதிகார, ஊழல் கும்பல்களிடமிருந்து நாட்டை எப்படி காப்பாற்றுவது? இதற்க்கு என்ன தான் வழி?

  10. கருணாநிதி குடும்பத்தின் சொத்து விவரம்; (இது பல வலைப்பதிவுகளில் பலரால் தரப்பட்ட தகவல். சுப்பிரமணியன் சுவாமி அவர்கள் மேலும் தகவல்கள் தரலாம்.)

    1.கருணாநிதியின் கோபாலபுரம் வீடு
    2.முரசொலி மாறனின் வீடு-கோபாலபுரம்
    3.கிருஷ்ணன் கோவில் அருகில்-உறவினர்களின் வீடு
    4.முரசொலி செல்வம்,செல்வி வீடு- கோபாலபுரம் ( கருணாநிதியால் கொடுக்ப்பட்டது)
    5.மு.க.முத்து வீடு-கோபாலபுரம்
    6.ஸ்வர்ணம் வீடு- கோபாலபுரம்
    7.அமிர்தம் வீடு- கோபாலபுரம்
    8.எழிலரசி வீடு ( முரசொலி செல்வத்தின் மகள்) -கோபாலபுரம்
    9.ஆலிவர் சாலையில் ராஜாத்தி அம்மாள் வீடு
    10.மு.க.ஸ்டாலின் வீடு- வேளச்சேரி
    11.உதயாநிதி பொழுது போக்கு வீடு- ஸ்னோபவுலிங்- நுங்கம்பாக்கம்
    12.உதயநிதி தீம்பார்க்- (மாமல்லபுரம் அருகில்)
    13.பில்லியர்ட்ஸ் மையம் ( வேளச்சேரி)
    14.கலாநிதி மாறன் வீடு (அடையாறு போட்கிளப் ரோடு)
    15.தயாநிதி மாறன் வீடு
    16.டிஸ்கோ- குவாலிட்டி இன் அருணா,அமைந்தகரை
    17.கொட்டி வாக்கத்தில் மாறனின் பண்ணை வீடு
    18.டிஸ்கோ- எத்திராஜ் காலேஜ் எதிரில்
    19.டெலிபோன் எக்சேஞ்ச் கட்டிடம் -நீலாங்கரை
    20.எம்.எஸ் இன்டஸ்ட்ரீஸ்- ராமச்சந்திரா மருத்துவக்கல்லூரி போரூர் அருகில்
    21.முரசொலி கட்டிடம்- அண்ணாசாலை
    22.சுமங்கலி கேபிள் கட்டிடம்- கோடம்பாக்கம் மேம்பாலம்
    23.ராஜா அண்ணாமலை புரம் எம். ஆர்.சி நகரில் சன் தொலைக்காட்சிக்காக32கிரவுண்ட் நிலம்
    25.சன்டிவியின் புதிய அப்-லிங்க் ஸ்டேசன்( கோடம்பாக்கம்)- மாதவன் நாயர் காலணி
    26.இந்தியா சிமெண்ட்ஸ் பங்கு,சிமிண்ட் விலையை உயர்த்துவதற்காக
    27.கோரமண்டல் சிமிண்ட் ஏற்படுத்தப்பட்டது
    28.கூன் ஹுண்டாய்- அம்பத்தூர்- அண்ணாநகர்-அண்ணாசாலை
    29.அந்தமான் தீவின் நிலங்கள்
    30.அஸ்ஸாம் மாநிலத்தில் டீ,காபி தோட்டங்கள்
    31.அம்பானியின் உரத்தொழிற்சாலையில் பங்கு
    32.மேற்குவங்காளத்தில் தோல் தொழிற்சாலை
    33.ஸ்டெர்லிங் சிவசங்கரனுடன் கூட்டு தொழில்
    34.ஆந்திரா பார்டர் சிமெண்ட் ஏற்படுத்தப்பட்டது
    35.பெண்டோபர் நிறுவனத்துடன் கூட்டு
    36.கேரளாவில் மாமன்,மாப்பிள்ளை நிறுவனத்துடன் காப்பி,மற்றும் ரப்பர் தோட்டங்கள்
    37.செல்வம் வீடு
    38.முக.ஸ்டாலின் சொத்துக்கள்
    39.கருணாநிதி சொத்துக்கள்- திருவாரூர்,காட்டூர்,திருகுவளை.
    40.முக.அழகிரி- மதுரை,திண்டுக்கல்,கொடைக்கானல்,மேலூர் சொத்துக்கள்,மதுரை நகரின் வீடியே பார்லர்கள்,கடைகள்,ஸ்கேன் சென்டர்கள் உள்ளிட்ட பண்ணை வீடுகள்
    41.செல்வம் வீடு-பெங்களுர்
    42.உதயா டிவி இணைப்பு- பெங்களூர்
    43.பூங்சி டிரஸ்ஸஸ்- பீட்டர்ஸ் சாலை
    44.முக.தமிழரசன்- ரெயின்போ பிரிண்டர்ஸ்,இந்திரா கார்டன்- சென்னை பீட்டர்ஸ் சாலை.
    45.முக.தமிழரசன்- அந்தியூரில் உள்ள சொத்துக்கள்
    46.தலைப்பாக்கடடு பிரியாணி சென்டர்- தி.நகர்,ஜி.என்.செட்டி சாலை,சென்னை.
    47.கோவையில் உள்ள டிபார்ட்மெண்டல் ஸ்டோர்
    48.மல்லிகா மாறனின் உறவினர்களின் பெயரில் கும்பகோணம்,மயிலாடுதுறை,திருவாரூர் மற்றும் சென்னையில் சொத்துக்கள்.
    49 .additional properties after semmuzi coimbatore farm house
    50. broke bond land in coimbatore (given to rental for RMKV silks)
    51. Kalanidhi Maran becomes Chairman of Spice Jet Airlines with major stake-holder

    அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்
    பிற்பயக்கும் நற்பா லவை.

    திரு மு.கருணாநிதி உரை

    பிறர் அழத் திரட்டிய செல்வம் அழ அழப் போய்விடும். நல்வழியில் வந்த செல்வமென்றால் அதனை இழந்தாலும் மீண்டும் வந்து பயன் தரும்.

  11. Biased news… Some people are telling that SUN TV should not be seen by us.
    It’s already prooven that JJ also commited lot of corruption. Then why that same intelligent people did’t ask us not to see Jaya TV…? Biased news…

  12. hello , let me clear this ….this is Hinu site or DMK’s Propaganda site………..

    pls let me know clearly……..

  13. இப்படிப்பட்ட இமாலய புளுகு பொய் மூட்டைகளை இன்னமும் நம்பிக்கொண்டு இவர்களைத் தவிர ஆளத் தெரிந்தவர்கள், தகுதியுள்ளவர்கள் எவரும் இல்லை என்று நம்பிக்கொண்டு, அவர்கள் மக்கள் வரிப்பணத்திலிருந்து கொடுக்கும் ஒரு சில இலவசங்களுக்காக தங்களையே அடிமைகளாக்கிக் கொண்டிருக்கும் ஏமாளி மக்கள் இருக்கிறவரையில் அவர்களின் புரட்டு மாளிகைகளில் உல்லாசமோ உல்லாசம். தமிழ்நாட்டில் அறிவு ஜீவிகளுக்குப் பஞ்சமில்லை. பின் ஏன் செயல் படாமல் தயங்குகிறார்கள்? அதிகார பூர்வமாக, சட்ட அங்கீகரிப்புடன் ‘ லஞ்ச ஒழிப்பு மக்கள் கழகம்” ஒன்று ஆரம்பிக்கலாமா என்பதைக் கூட சிந்திக்கலாம், இந்த பெயரைக் கேட்டவுடன் லஞ்சம் வாங்குபவர்கள் நடுங்கும்படி இருக்கவேண்டும் அந்த அமைப்பு. முடியுமா?

  14. நன்றி! சொல்லப் போனால் இந்தியாவில் இந்த அளவுக்கு ஊழல் இருப்பதற்கு கருணாநிதியின் பங்கு மிகப் பெரியது! எமெர்ஜென்சி காலத்தில் தாங்கள் கைது செய்யப் பட்டது, தியாகம் போல விவரித்துக் கொண்டு மக்களை முட்டாள் ஆக்கிக்கொண்டு உள்ளனர்!
    அதுவும் இப்போது ஊழலின் வடிவம் பேருருவம் பெற்று மக்களை மட்டுமல்லாது இயற்கையையும் விழுங்கும் அளவுக்கு சென்று விட்டது!
    மக்கள் விளித்த்க் கொண்டால் தான் நல்லது!

  15. 1.

    நன்றி! சொல்லப் போனால் இந்தியாவில் இந்த அளவுக்கு ஊழல் இருப்பதற்கு கருணாநிதியின் பங்கு மிகப் பெரியது! எமெர்ஜென்சி காலத்தில் தாங்கள் கைது செய்யப் பட்டது, தியாகம் போல விவரித்துக் கொண்டு மக்களை முட்டாள் ஆக்கிக்கொண்டு உள்ளனர்!
    அதுவும் இப்போது ஊழலின் வடிவம் பேருருவம் பெற்று மக்களை மட்டுமல்லாது இயற்கையையும் விழுங்கும் அளவுக்கு சென்று விட்டது!
    மக்கள் விழித்துக் கொண்டால் தான் நல்லது!

  16. கலைஞர் டிவி எனது இல்லை என்று சொன்ன மகானுபாவன் தானே இவர்?
    இப்போது அந்த டிவியின் கதை சந்தி சிரிக்கிறதே ? தயாலுவும் கனிமொழியும் கூட தனக்கு சம்பந்தம் இல்லை என்று சொலக்கூடியவர் தான் இந்த பொய்யன்..

  17. கனிமொழி தனது மகள் இல்லை என்று எழுபதாம் ஆண்டுகளில் நீதிமன்ற வழக்கிலேயே சொல்லியுள்ளார் பெரியவர். எனவே இதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை. திமுகவுக்கு பொய் பித்தலாட்டம், கேப்மாரித்தனம், எல்லாம் உடன் பிறந்தவை.

  18. உண்மை யான தகவல் கொடுத்தமை கு நன்றிகள். தமிழனையும் தமிழ்நடையும் காக்க உண்மையான தலைவர்கள் வரவேண்டும். அப்படி வரும் தலைவர்களும் இந்த கொள்ளை குட்டத்தில் சேர்ந்து விடல். இவளவு தகவல் கிடைத்தும் நம்மால் ஏன் ஒன்றும் செய்ய முடியல. இலங்கை தமிழ் மக்களை காக்க போராடம் நடத்தும் தமிழ்நாடு தமிழ் மக்களே எபோது நம்மை இந்த கொள்ளை கும்பலிடம் இருந்து காபர்ட போறோம். சிந்தியுங்கள் சரியானவர்களுக்கு vote செய்யுங்கள். வரும் நாடாளு மன்ற தேர்தலில் நமது உரிமை யை காக்கும் நல்லவர் களுக்கு வகோளிபோம் என்று உறுதிமொழி ய்டுபோம். வாழ்க தமிழ் மொழி, வளாக தமிழ்நாடு, சிந்திப்போம் செயல் படுவோம். நம் நாட்டை காபர்டுயோம்.
    என்றும் உங்கள் நண்பன் தமிழ் கிறுக்கன், மதுரை காரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *