மன்மதன் அம்பு திரைப்படத்தில் திரை நடிகர் கமலஹாசன் எழுதிய பாடல் வரிகள் மிக ஆபாசமாக இருந்தன; இந்து மத உணர்வுகளைப் புண்படுத்தும் விதத்தில் இருந்தன. எனவே, பல்வேறு இந்து அமைப்புகளும் இந்தப் பாடலுக்குக் கண்டனம் தெரிவித்தன. இதைத் தொடர்ந்து, அந்தப் பாடலை நீக்குவதாக கமலஹாசன் அறிவித்தார்.
இவை நாம் அனைவரும் அறிந்த செய்திகள்.
ஆனால்….
அடுத்தடுத்து நடைபெற்ற சம்பவங்களைக் கோவையாக வைத்துப் பார்க்கும்போது, இந்தச் செய்திகளுக்குள்ளே சில புரிபடாத இழைகள் இருப்பது தெரியவரும்.
இப்போது ஒவ்வொரு சம்பவமாக வரிசைக்கிரமத்தில் பார்க்கலாம்:
- கருணாநிதி பேரன், மன்மத அம்பு என்ற திரைப்படத்தைத் தயாரிக்கிறார். அதில் கமலஹாசன் ஓர் ஆபாசப் பாடலை எழுதுகிறார்.
- படத்தில் அந்தப் பாடலை, தானே பாடியும் நடிக்கிறார்.
- பாடல் வெளியீட்டு விழாவின் போது, தானே அதை மிகவும் ஆசையாகப் பாடிக் காட்டுகிறார். நிகழ்ச்சியில் இருந்த பெண்கள் யாரும் முகம் சுளிக்கவில்லை. மாறாக, அதை மிகவும் ரசிக்கிறார்கள்.
- ஊடகங்களில் இந்த வெளியீட்டு விழா காட்சிகள் திரும்பத் திரும்ப வெளியாகின்றன. பாடல் வரிகள் அச்சு ஊடகங்களில் அப்படியே வெளியாகின்றன.
- இந்தப் பாடலின் வரிகள் ஹிந்த மத நம்பிக்கைகளைக் கொச்சைப்படுத்தும் விதத்தில் இருக்கின்றன. இதனால் ஏராளமான பக்தர்கள் கொதித்துப் போகின்றனர்.
- ஆனால், இந்த பக்தர்களின் உணர்வுகள் எந்த ஊடகத்திலும் வெளியாகவில்லை.
- சில இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவிக்கின்றன. மற்றபடி ஊடகங்களில் இந்தப் பாடல் பற்றி வேறு செய்தி எதுவும் வெளியாகவில்லை. (கமல் ஆரோக்கியமான உடல் உறவு பற்றிச் சொல்லிக் கொடுத்திருப்பதாக ஒரு பத்திரிகை செய்தி வெளியிட்டது.)
- சென்சார் போர்டு ஓகே சொல்லிவிட்டது. இவர்களது எதிர்ப்புக்கெல்லாம் நான் அஞ்ச மாட்டேன். நான் பகுத்தறிவுவாதி என்று கமல் கொக்கரிக்கிறார்.
- அதாவது, இந்தப் பாடல் பற்றிய செய்திகளை வைத்துப் பார்க்கும்போது, ஓரிரு இந்து அமைப்புகள் வெளியிட்டுள்ள கண்டனத்தைத் தவிர, வேறு எதிர்ப்பு ஏதும் இல்லை. கமல் தனது முடிவில் இருந்து பின்வாங்குவதாக இல்லை.
- இந்நிலையில் 20.12.2010 அன்று கமலஹாசனின் அலுவலகம் முன்பு இந்து முன்னணியினர் முற்றுகைப் போராட்டம் அறிவிக்கின்றனர். அறிவிப்பின்படி சுமார் 150 பேர் அன்னாரது அலுவலக வாசலில் கூடுகின்றனர்.
- போராட்டம் துவங்க இருந்த நிலையில், கமலஹாசன் தரப்பில் இருந்து பேச்சுவார்த்தைக்கு அழைப்பு வருகிறது.
- பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, பேற்படி பாடலைப் படத்தில் இருந்து நீக்குவதாக அறிவிப்பு வருகிறது. இந்த அறிக்கையிலும் கமலின் கொக்கரிப்பு குறையவில்லை. ஆனால் தயாரிப்பாளர்கள் கோடிக்கணக்கில் பணம் போட்டுப் படத்தைத் தயாரிப்பதால், அவர்களுக்கு எந்தப் பாதிப்பும் வந்துவிடக் கூடாது என்பதால் பாடலை நீக்குவதாக அறிவிக்கிறார். பகுத்தறிவு கோஷம் மீண்டும் ஒலிக்கிறது.
இவை செய்திகள்.
இன்றைய தேதியில் ஓரளவு பழைய செய்திகள் என்று கூடச் சொல்லலாம்.
ஆனால் இந்தச் செய்திகளைக் கொஞ்சம் கூர்ந்து பார்க்கலாம்.
- தமிழ்நாட்டில் இந்து உணர்வுகளைக் கேவலப்படுத்துவதற்குப் பெயர் பகுத்தறிவு என்பது எழுதப்படாத விதி. இந்துக்கள் அனைவரும் இதை ஏற்றுப் பழகி விட்டனர். பொதுவாகவே, இத்தகைய இந்து விரோதப் போக்குக்கு ஆதரவுக் குரல் மட்டுமே வெளியில் ஒலிக்கும். மனம் புழுங்கும் அப்பாவி இந்துக்களின் குரல் வெளியே கேட்காது.
இந்த அவலத்தை ஆரம்பித்து வைத்து, பகுத்தறிவு, தமிழ் வியாபாரத்தை மட்டுமே மூலதனமாகக் கொண்டு இன்றுவரை தமிழகத்தைச் சுரண்டிவருவது தி.மு.க.- தமிழகத்தில் இன்றைய நிலையில் அ.தி.மு.க., மற்றும் ஓரிரு அரசியல் கட்சிகள் தவிர வேறு எந்த அமைப்புமே இந்தக் கட்சியை முறைத்துக் கொள்வதில்லை. காரணம், தி.மு.கவின் வன்முறை வெறியாட்டங்கள்.
- எனவே எதிர்ப்பு ஏதுமின்றி அக்கட்சியினர் தாங்கள் நினைப்பதையெல்லாம் நிறைவேற்றி வருகின்றனர். அதுவும் கருணாநிதி குடும்பத்தைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். அவர்கள் அராஜகத்தின் எல்லையிலேயே நிற்பவர்கள்.
- கமலஹாசனை எடுத்துக் கொள்வோம்: முன்னணி நடிகர், மிகவும் பிரபலமானவர். இந்து நம்பிக்கைகளைக் கொச்சைப் படுத்துவதிலும் முன்னணியில் நிற்பவர்.
- இன்றைய திரைப்படச் சூழலைப் பார்த்தாலும், அதுவும் கமலுக்குச் சாதகமாகத்தான் இருக்கிறது. காரணம், கமல், ரஜினி போன்ற நடிகர்கள் எந்தத் தயாரிப்பாளரையும் நம்பி இருக்கவில்லை. மாறாக, தயாரிப்பாளர்களுக்குத்தான் இவர்களது தயவு தேவை.
இத்தகைய சூழ்நிலையில், எந்தவித எதிர்ப்புமே வெளியாகாத நிலையில், ஏதோ இந்து முன்னணியின் அறிவிப்புக்கும் போராட்டத்துக்கும் கமல் அண்டு கோ பயந்து விட்டதா?
சரி, இந்தப் போராட்டம் என்ன அவ்வளவு வலிமையானதா?
இந்த 150 பேரைக் கைது செய்து கூட்டத்தை ஒன்றுமில்லாமல் செய்யும் அளவு கூட அரசியல் தெரியாதவரா ஸ்டாலினுக்குப் பிள்ளையாகப் பிறந்திருக்கிறார்?
இந்தப் படப் பாடல் நீக்கப்படும் வரை இந்து முன்னணி போராட்டம் நடத்திக் கொண்டு இருக்குமா? பாவம், அந்த அமைப்புக்கு வேறு வேலையே கிடையாதா?
பிறகு ஏன் கமல் பாடலை வாபஸ் பெற்றார்?
எங்கேயோ இடிக்கிறது அல்லவா?
இந்து முன்னணியின் போராட்டத்தில் அப்படி என்னதான் இருந்தது? அதுவும் போராட்டம் துவங்குவதற்கு முன்னரே பேச்சுவார்த்தைக்குக் கூப்பிடும் அளவு கமலஹாசன் பயப்பட வேண்டி வந்தது ஏன்?
காரணம் கண்டுபிடித்துப் பார்க்கலாமே என்று நினைத்தேன்.
இந்தப் போராட்டத்துக்குத் தலைமை தாங்கியவர் நண்பர் இளங்கோ. அவரைத் தொடர்பு கொண்டேன். என்ன நடந்தது என்று அவரிடம் கேட்டேன். அவர் குறிப்பிட்ட விஷயங்கள் என்னை வியப்பின் எல்லைக்கே இட்டுச் சென்றன. காரணம், அவர் கமலஹாசன், உதயநிதி ஸ்டாலின் இருவரது அடிப்படையையே ஆட்டி வைத்திருக்கிறார் என்பது புரிய வந்தது. அதுவும் மிகவும் அநாயாசமாக.
“எப்படி?”
என்னிடம் அவர் சிரித்துக் கொண்டே சொன்னார்: “The strength of a chain is determined by its weakest link. நாங்கள் கமல் அண்ட் கோவின் மிகவும் பலவீனமான பகுதி எது என்பதைப் புரிந்து கொண்டோம். எங்களுடன் மோதினால் என்ன ஆகும் என்பதை அவர்களுக்குப் புரிய வைத்தோம். அவ்வளவுதான். பூம் பூம் மாடு மாதிரி சமர்த்தாகத் தலையை ஆட்ட ஆரம்பித்து விட்டார்கள்.”
அது என்ன பலவீனமான பகுதி?
அதைத் திரு.இளங்கோ ஒரே வார்த்தையில் கூறினார்: ‘பிஸினஸ்.’
ஆம், வியாபாரம். ‘எங்களுடன் மோதினால் படம் ஓடாது என்பதைப் புரியவைத்தோம்’ என்று குறிப்பிட்டார்.
அது எப்படி? வியப்புடன் வினவினேன்.
“ரொம்ப சிம்பிள், அண்ணா” என்ற அவர், போராட்டத்துக்கு முன்னும் போராட்டத்தின்போதும் நடைபெற்ற சம்பவங்களை விவரித்தார்.
அதை அவரது வார்த்தைகளிலேயே [தமிழ்ஹிந்து-விற்காக பிரத்யேகமாக நான் எடுத்த பேட்டி] கேட்கலாம்….
எனக்கு அம்புலி மாமா கதைதான் ஞாபகம் வருகிறது.
ஓர் ஊரில் ஓர் அரக்கன் இருப்பான். அவனை அழிக்க எத்தனையோ பேர் எவ்வளவோ முயற்சி செய்வார்கள். ஆனால் அவனோ பலசாலி. அவன் கையை வெட்டினால், கை மீண்டும் முளைத்து விடும், காலை வெட்டினாலும் அப்படித்தான். கழுத்தை வெட்டினாலும் அப்படித்தான். உடம்பையே இரண்டு கூறாகப் போட்டாலும் அவை இரண்டும் ஒன்று சேர்ந்து விடும். அவனை யாராலும் அழிக்க முடியாது. அவன்தான் ஊரில் உள்ள அத்தனை பேரையும் அழித்துக் கொண்டு இருப்பான்.
கடைசியாக ஹீரோ வருவான். அவன் ஊரின் எல்லையில் இருக்கும் ஒரு துறவியிடம் போய் ஆலோசனை கேட்பான். அரக்கனின் உயிர் அவன் உடலில் இல்லை என்று துறவி கூறுவார். ஏழு கடல், ஏழு மலை தாண்டி ஆலமரத்தில் வசிக்கும் கிளியின் உடலில் அவன் உயிர் இருப்பதாக அவர் கூறுவார். போகும் வழியில் என்னென்ன இடையூறுகள் வரும் என்பதையும் அவர் எடுத்துரைப்பார். அதன்படி நடந்து கொண்டு அங்கே ஹீரோ கிளியின் கழுத்தை நெறிப்பான். இங்கே அரக்கன் செத்து விழுவான்.
ஆம், அரக்கனின் கையை வெட்டினால் அவனுக்குப் பாதிப்பு இல்லை. கிளியைக் கொன்றால்தான் சாவு.
அரக்கனின் காலை வெட்டினால் அவனுக்குப் பாதிப்பு இல்லை. கிளியைக் கொன்றால்தான் சாவு.
அரக்கனின் கழுத்தை வெட்டினால் அவனுக்குப் பாதிப்பு இல்லை. கிளியைக் கொன்றால்தான் சாவு.
அரக்கனின் உடலைக் கூறு போட்டால் அவனுக்குப் பாதிப்பு இல்லை. கிளியைக் கொன்றால்தான் சாவு.
அது போலத்தான் இந்த இந்து விரோத சக்திகளும்.
இவர்களது உயிர்ஸ்தானம் இருப்பது இவர்களது வியாபாரத்தில். அங்கே கைவைத்தால்….
கொஞ்சம் யோசித்துப் பார்க்கிறேன்.
சன் டீவியும் கலைஞர் டீவியும் விளம்பரம் இல்லாமல் இயங்கினால் எப்படி இருக்கும்?
ஒரே ஒரு வாரம் தியேட்டருக்குக் கூட்டம் வராவிட்டால் கமல் அண்டு கோ-வின் சரக்கு எப்படி போணியாகும்?
மிக அருமையான ஒரு பாடத்தை நண்பர் இளங்கோவின் தலைமையில் செயல்பட்ட நண்பர்கள் குழு நமக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறது.
இந்த விஷயத்தில் மட்டுமல்ல, ஏற்கெனவே விஜய் டீவி விஷயத்திலும், சன் டீவி வஷயத்திலும் கூட இதே ஃபார்முலாவைப் பயன்படுத்தி இந்து முன்னணியினர் வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்பது ரொம்பவே அபாரம்.
ஆம், அரக்கர்களுடன் மோதுவது வெட்டி வேலை, கிளியைக் கொல்வதுதான் ஒரே வழி.

நீலகிரியில் மதமாற்ற வைரஸ் – குமுறும் படுகர் சமுதாயம்
இந்து வாக்கு வங்கி – ஒரு வேண்டுகோள்
இந்து எதிரிகளான எமகிங்கரர்கள்
ஆறுமுக நாவலர் / ஈழத்துச் சிதம்பர புராணம்
ஈரோட்டுப் பாதையில் திண்டுக்கல் இந்துக்கள்
வேப்பிலைக் கொடியும் வேளாங்கண்ணி மாதாவும்
தண்ணீர் தேசக் கண்ணீரும் ஒரு ஹிந்துத்துவ எதிர்வினையும்
ஈரோட்டில் ஒன்றுபட்ட இந்து மக்கள் சக்தி: ஒரு விரிவான அலசல்
ஒரு நதியின் நசிவு
தமிழக அரசு சின்னம் மாற்றம்?: சில எண்ணங்கள்
என்று தணியும் இந்து சுதந்திர தாகம்?
இந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம்-05
தேர்தல் களம்: வீரத்துறவியுடன் ஒரு பேட்டி
இந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் – 04
ஆலயச் சிற்பங்களைச் சிதைக்கும் அறநிலையத்துறை![தோள்சீலைக் கலகம்: தெரிந்த பொய்கள் தெரியாத உண்மைகள் [நூல் அறிமுகம்]](http://www.tamilhindu.com/wp-content/uploads/tholseelai-kalagam-cover.jpg)
தோள்சீலைக் கலகம்: தெரிந்த பொய்கள் தெரியாத உண்மைகள் [நூல் அறிமுகம்]
தரமிழந்த கல்வி நிலையிலிருந்து தலை நிமிருமா தமிழகம்?
தலித்துகளும் தமிழ் இலக்கியமும் – 2
இந்து என்று சொல்லடா !! தலை நிமிர்ந்து செல்லடா !!!![புன்னகை மன்னர் [மந்த்ராலயப் பயணம்]](http://www.tamilhindu.com/wp-content/uploads/mantralayam-entrance.jpg)
புன்னகை மன்னர் [மந்த்ராலயப் பயணம்]
சாதி எனப்படுவது யாதெனின்…
ரஜினி மகள் திருமண வைபவம்: சில எண்ணங்கள்
தலபுராணம் என்னும் கருவூலம் – 6
சம(?) உரிமைக்குப் போராடும் பெண்கள் – 2
சம(?) உரிமைக்குப் போராடும் பெண்கள்






Sir,
I AM WORKING AT OFFICE AND WATCH THE TAMILHINDU.COM AT OFFICE COMPUTER IT IS NO SPEKER CONNECT. THE VIDIO IS OK BUT AUDIO ????????????? PLS , WRIGHT THE VIDIO’S AUDIO WORDS IN TAMIL AT TAMIL HINDU.
AND
மிக அருமையான ஒரு பாடத்தை நண்பர் இளங்கோவின் தலைமையில் செயல்பட்ட நண்பர்கள் குழு நமக்குச் சொல்ல்லிக் கொடுத்திருக்கிறது. THATS GOOD.
by
R. NATARAJAN.
கட்டுரை ஆசிரியருக்கும் இளங்கோ அவர்களுக்கும் பாராட்டுக்கள். கமலஹாசன் தான் நேர்மையான ஒரு நபர் இல்லை என்பதை நிரூபித்திருக்கிறார். ஆம் அமெரிக்காவிலும், பிற நாடுகளிலும் இந்தப் பாடலுடனேயேதான் படம் வெளி வந்திருப்பதாகத் தெரிகிறது. மேலும் படத்தில் இந்து இயக்கங்களை விமர்சித்து சில வசனங்களையும் வைத்திருப்பதாக விமர்சனங்கள் சொல்லுகின்றன. இந்தப் படம் மட்டுமின்றி குடும்ப மாஃபியா தயாரிக்கும் எந்த படங்களையும், எந்தப் பொருட்களையும் எந்தவொரு தன்மானம், பொறுப்புணர்வு, தேச அக்கறை உள்ள எந்தவொரு இந்தியனும் ஆதரிக்கக் கூடாது மாட்டான். தயவு செய்து இந்த சினிமாவைக் காசு கொடுத்துப் பார்க்காதீர்கள். இவர்கள் கேபிள்களையும், சினிமாக்களையும் விமானங்களையும் புறக்கணியுங்கள். கமலஹாசன் நாஸ்திகராக இருப்பதில் யாருக்கும் பிரச்சினை இல்லை அவரது போலித்தனமான நிலைபாடுகளும் இந்து மதத்தின் மீதான காழ்ப்புணர்வும் ஒரு நல்ல கலைஞனுக்குரியது அல்ல. நல்ல நடிகர் தன் செயல்களாக் தன் தரத்தைத் தாழ்த்திக் கொள்வது வருத்தம் அளிக்கிறது. காலம் அவரது வெறுப்புணர்வுகளை மாற்றும் என்று நம்புவோமாக
ச.திருமலை
சொந்த படம் எடுத்தா பணிய மாட்டானாம ஏன் சண்டியர் விருமாண்டி ஆகலியா கயவன் கமலின் அகம்பாவம்,ஹிந்து விரோத போக்கு இத்துடன் முடியும் என்று நம்புவோம்.
ஹிந்து முன் எவனும் பணிவான் என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம் .
இளங்கோ அவர்களுக்கும் இந்து முன்னணி அமைப்புக்கும் ,தொண்டர்கள்ளுக்கும் மனமார்ந்த பாராட்டுகளும் நன்றிகளும் ,சமர்ப்பிகின்றேன் மேலும் அவர்களின் சமுதாய பணி சிறக்க வாழ்த்துகிறேன்.
ஜெய் பவானி
வந்தே மாதரம்
பிரத்யூஷ்
இந்து முன்னணியினரின் போராட்டத்திற்கும் முயற்சிகளுக்கும் வெற்றி கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஒரு வகையில் ஸ்பெக்ட்ரம் ஊழலால் தி.மு,க. வாங்கியுள்ள அடியும் கூட, கமலின் குட்டிக்கரணத்திற்கு காரணமாக இருக்கலாம் என்று தோன்றுகிறது. ஏற்கனவே தமிழகத்தில் கிளம்பியுள்ள தி.மு.க. அதிருப்தி அலையை மேலும் அதிகப்படுத்திவிடக் கூடாது என்று மு.க. அறிவுறுத்தியிருக்க வாய்ப்பிருக்கிறது.
அடுத்ததாக, திரையரங்கம் என்பது கமலின் சொத்து அல்ல. மன்மதன் அம்பு படம் திரையிடப்படும் இரண்டு திரையரங்குகளில் நாற்காலிகள் கிழிக்கப்பட்டாலே திரைப்பட விநியோகஸ்தர்கள் மண்டியிட்டு விடுவர். இந்து முன்னணியினரின் அடுத்தகட்டப் போராட்டம் அந்தத் திசையில் தான் இருக்கும் என்பது கலை (அஞ்)ஞானி அறியாததல்ல.
ஆக, நியாயமான கோரிக்கைகளுக்கோ, வேண்டுகோளுக்கோ இதுபோன்ற கழிசடைகள் செவி சாய்க்க மாட்டார்கள் என்பதும், மிரட்டல் மட்டுமே இவர்களுக்கு புரியும் என்பதும் தெளிவாகியுள்ளது. கமல் இப்படி குட்டிக்கரணம் அடித்தும், படம் ஊற்றிக்கொண்டு விட்டது. அது தான் இறைவன் கொடுத்த பரிசு.
எது எப்படியோ, ஹிந்து நம்பிக்கைகளை கேவலப்படுத்தும் புலனாய்வுப் பத்திரிகைகள், நடுநிலையின்றி செய்தி வெளியிடும் நாளிதழ்களுக்கு எதிராக எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கும், கமலின் குட்டிக்கரணம் நல்ல உதாரணமாகி இருக்கிறது. ‘இங்க அடிச்சா அங்க வலிக்கும்’ என்ற திரை வசனம் (ரமணா- யூகி சேது நடித்த காட்சி) நிரூபணமாகி இருக்கிறது.
இந்து முன்னணிக்கு நன்றி.
Hearty Congratulations to my friend Elango and Hindu Munnani. This kind of action is needed every time the media and film fraternity cross the limits and hurt Hindu sentiments. I am unable to agree with the author’s contention that Vijay TV and SUN TV have stopped hurting Hindus. No, both Nijam and Nadanthathu Enna are continuing as before. We need to protest again and again and 100 people are not enough. We must mobilise at least 300 people, like how we did at Mylapore in front of Kapalishwarar Temple against the Christian bigot Deivanayagam.
Thanks and Congrats again.
Congradulations and best wishes to sri Elango whose team work has masterminded in forcing black shirt Hindu hater.He studied in Hindu high school triplicane with me where he did not even complete his SSLC examination, he was a drop out and never wrote final examination.
he studied at home only english from a christian teacher and hence his mind is bogged with anti-hindu thoughts.His movies never run like rajinis movies becouse rajini believe in god and never give disrespect to hindus or any other religions. Kamal was the creation of karunanidhi
who belives in god by wearing yellow shawl to please jupiter graha and visit yellow metal temple ‘sripuram’ near vellur but pretends to be the hater of hindus.Actually karunanidhi helps indirectly hindus by waking up their sleeping mind and hence he often gives anti RAM slogans to weaken congress since he knows hindus in north are more agressive than south indians.
To hide his fooling all people ( particularly minorities) , he keeps some socalled athiests like
Kamalhasan who is fooling people and pleasing minorities by often giving anti hindu talks and anti hindu activities on behalf of M K who otherwise is praying lord krishna in front of his home and all his family members are seen in many temples of chennni. so Kamahasan is the mask of M K who do not want to show his face with thiruman and vibhuti. All hindus must not see his movie and make him fall from the film industry and make his films flap.
Appreciate the efforts of Sri Elango and must devise a game to thward anti hindu activities in tamilnadu in future. dear mr.Elango, please do the same thing with L I C whose advertisement
shows a person ”mukilan” standing behind a church ( st thome church) telling ” where can i go except this, best bet is for the investment of lifetime here. THIS IS THE LIC ADVERTISEMENT. so please take up seriously and give them a strong protest. This is secularist nation where cross coins and churches are not to be promoted in advertisment.
ஒரு சினிமா நடிகன் ஆத்திகனாகவோ அல்லது நாத்திகனாகவோ இருந்து விட்டுப் போகட்டும். நமக்குக் கவலை இல்லை. சினிமா என்பது ஒரு பொழுதுபோக்கு சாதனம். அதில் இந்த நடிகர்கள் தங்கள் மன வக்கிரங்களைக் கொண்டு வந்து திணிப்பதை ஏற்றுக் கொள்ளமுடியாது. ஒன்று மட்டும் தெளிவாகிறது. கமல ஹாசன் போன்றோர் கூட பாட்டு எழுதுகிறார்கள் என்றால் அது எத்தனை சுலபமான வேலை என்று தெரிகிறது. ஒழுங்காக பேச, தமிழில் பேச முடியாத ஒருவன் கவிதை எழுதினால் எப்படி இருக்கும்? தமிழறிஞர் கி.வா.ஜ. சொல்வார் எழுதுவதெல்லாம் கவிதை ஆகிவிடாது. “முருகன் ஆற்றோடு போனான், வள்ளியும் கூடவே போனாள்” என்று எழுதிவிட்டு, ஆகா எப்படி என் கவிதை என்பானாம் ஒரு அறிவிலி. வாயில் வந்ததை எழுதிவிட்டு, அதற்குப் பகுத்தறிவு முலாம் பூசும் தனக்குத் தானே சொட்டு கொடுத்துக்கொள்ளும் இவர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். மக்கள் அறிவாளிகள். சினிமாத் துறையில் வேண்டுமானால் இவர்கள் பகட்டு ஈடுபடலாம். மக்கள் மத்தியில் இல்லை. சொரணை உள்ள இந்துக்கள் இனிமேல் இந்த கமலஹாசன் போன்றவர்கள் படங்களைப் பார்ப்பதில்லை என்ற உறுதியை எடுத்துக் கொள்ளுங்கள். நான் பார்ப்பதில்லை.
நன்றி ,ஹிந்து முன்னணி மற்றும் தமிழ் ஹிந்து .காம்.
ஆண்டவன் இவர்களிடம் தன் பூரண கருணையைப் பொழிவானாக.
Maniratnam’s “Ravan” had to beat the dust. That was another film by another pervert. Lets hope this “manmatha ambu” to be a busvanam, a grand failure. This extraordinary kamahasan had made many films in the recent past which were grand failures at the box office. Let this be another of the kind.
என்ன சார், இப்படி அட்டூழியம் பண்றானுங்க, என்று 2 G ஸ்பெக்ட்ரம் விபச்சாரத்தைக் குறிப்பிட்டு கூறியவர், கிரிகெட் ஸ்கோர பார்க்கணும் என்று கூறி பிரம்மாண்டமான தொலைக்காட்சிப் பெட்டியை ஆன் செய்தபோது, அதிர்ந்து போனேன், “SCV ” என்ற ப்ராண்டைப்பார்த்து. இப்படிப்பட்ட எக்கச்சக்க பேர்கள், முன்பு, தசாவதாரம் என்கிற திரைப் பிதற்றலை, வைணவத்தொண்டு தொண்டு என்று பறை அடித்தார்கள். முன்னோருநாளில், புத்தகக் கண்காட்சியில், ராமசாமி நாயக்கர் என்ற இந்து சமயத் துரோகியை, 64 வது நாயன்மார், சொல்லடி நாயனார் என்று, நாயன்மார்கள் வரிசையில் வைத்ததுபோல், மேற்கூறிய கபட மனிதர்கள், எவன் எவனையோ, ஆழ்வார்கள் என்றும் , நாயன்மார்கள் என்றும், கூற முற்படுவது, அறிவீனம் அன்றோ?
இந்த செய்தியை காணொளியுடன் சேர்த்து என் வலைப்பூவில் சொல்ல விரும்புகிறேன். அனுமதி கோரி யாரை அணுக வேண்டும்?
Its true that the song is not removed at overseas but only in tamil nadu. Anyway the movie has flopped, so relax!!!
Congratulations to the Hindu Munnani and Sri. Elango for the victory against Kamalhassan and the scrapping of the controversial song in the film Manmadan Ambu. This protest had put kamalhassan in the right place. He calls himself an atheist, but only denies and degrades Hindu Gods like the Dravidian idiots; They cannot talk ill of the Gods of other religion, as they will not be alive the next day. They donot have the guts to talk anything about the inhuman way the Ladies are treated in the Islamic society; or the superstitions in other religions. Moreover , a person with no morality left in him ( with grown up daughters , he is having a live-in relationship with actress Gouthami), kamalahassan has no moral right to talk of Hindu society or its Gods. The only unfortunate part was only a few hundred people joined the protest; as if it was not their duty. Only when the protest are spontaneous and in bigger numbers , like what the people of other religion do, will such negative things against Hinduism stop once and for all.
To All,
People are behind the freebies which makes them nod their head for whatever Karunanidhi says. Karunanidhi discourages only Hindu festivals and our brothers and sisters whom represent other communities are untouched. Literally this means that the so called aetheist’s are deriving mileage out of us. We need to make people think using their brains.
Hatsoff to the representatives to ring the bell at the time to all these new time film producers whom have come into limelight. God only knows wherefrom they get these huge sume of money from….
மதத்தை அவரவர் வீட்டு படுக்கையறைக்குள் வைத்துக்கொள்ளுங்கள் என்று ஊருக்கு உபதேசித்த கமல் மத துவேஷத்தை மட்டும் வீதியில் வைப்பதேன். இந்தாளுக்கு மதத்தையும் சரி படுக்கையறையையும் சரி வீதியில் வைத்தே பழக்கப்பட்டாகி விட்டது. சகோதரர் இளங்கோவன் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்களும் நன்றிகளும் தெரிவித்துக்கொள்கிறோம். இம்முயற்சியில் பங்கு கொண்ட அனைவருக்கும் இறைவன் நீண்ட ஆரோக்கியமான வாழ்வை அளிப்பானாக. இனி கொஞ்சம் கொஞ்சமாக எல்லா இந்துக்களும் இதுபோல களத்தில் இறங்க ஒரு நம்பிக்கை பிறந்திருக்கிறது. களத்தில் இன்று நீங்கள்..இனி உங்களோடு நாங்கள்.. ஒன்று படுவோம்.
சொந்த வாழ்க்கையில் ஒரு ஒழுக்கம் இல்லாதவனுக்கேல்லாம் பகுத்தறிவு பற்றி பேச உரிமை இல்லை. இவனால் எத்தனைப் பெண்கள் கண்ணீர் சிந்தி பிரிந்து போனார்கள். திருமணம் செய்யாமல் தன இஷ்டப்படி மற்ற பெண்களுடன் வாழ்வதுதான் பகுத்தறிவு என்றால், இவர்களெல்லாம் காட்டில் காட்டுமிராண்டிகளாக வாழ வேண்டியவர்கள். தனிமனித ஒழுக்கம் இல்லாதவனை மக்கள் நரகலுக்குச் சமமாக ஒதுக்க வேண்டும்.
தமில் ஹிந்துவிற்கு ஒரு வேண்டுகோள் . இப்பொழுது தமிழ் இணைய உலகில் , ஹிந்துக்களை ஆதரித்து எழுதுபவர்களை கண்டபடி விமர்சனம் செய்யும் வேலை நடக்கிறது . அதை குறித்து தாங்கள் ஒரு கட்டுரை எழுதவும், மேலும் இதை எப்படி எதிர்ப்பது ?
I appreciate and admire the courageous efforts of Mr. Elango, Hindu Munnani and the 150 supporters. It is a good strategy to approach the advertisers and stop ads to discourage serials made against Hindu Sentiments. It is a innovative idea and needs to be appreciated.
Having said that the powerful group is not going to take it lying down. They will make counter straategy with their power and probably threaten the advertisers and take the ads even for such programs. Therefore Hindu Munnani must must develope other innovative ideas to readily adopt if the present strategy does not work.
It is also important that the Hindus should come out and protest. Just crying or sobbing that we are hurt by such scenes or songs or dialogues or stories will not suffice. At least they should all boycot the relevant serials and cinemas and that alone can work. Only Hindus can strengthen the bold and courageous Hindu Munnani workers and unles Hindus unite there is no fool proof method to stop these pictures and serials and propoganda.
I shall be too willing to take part in any protests in Mumbai where I live. I request the website to share my email address to Hindu Munnani should they need it.
Srinivasan Lakshminarayanan
well done .
Sir,
I AM WORKING AT OFFICE AND WATCH THE TAMILHINDU.COM AT OFFICE COMPUTER IT IS NO SPEKER CONNECT. THE VIDIO IS OK BUT AUDIO ????????????? PLS , WRIGHT THE VIDIO’S AUDIO WORDS IN TAMIL AT TAMIL HINDU.
pls me tooo….
நண்பர் ராம் கூறியதை வரிக்கு வரி வார்த்தைக்கு வார்த்தை வழிமொழிகிறேன்.
அன்புடன்
சுப்பு
இதெல்லாம் நடிகர்களுடைய வழக்கமப்பா.. சும்மா நாம ஏன் இதப்பத்தி பேசி வீணாப் போகணும்… நம்மட சமயத்தில உள்ள விஷயங்களில மூக்க நுழைச்சு தங்களப் பிரபலம் செய்யிற கமல் போன்றவர்களுக்கு கிடைத்த எதிர்ப்பு போதுமானதாக எனக்குத் தெரியவில்லை. இதனால் அவர்களது பிரபலம் தான் கூடியிருக்கிறது…
Thanks and hats off to Shri Elango and company to mark a full stop to these ridiculous person/s.
தயவுசெய்து http://www.charuonline.com வலைப்பூவைப் படித்துப் பார்த்து இன்புறுக
[...] தளத்தில் ஒரு காணொளியுடன் கூடிய பதிவு வந்தது. அதில் இந்து முன்னணியினர் [...]
தொழில் ரீதியாக நடிகர் கமல் பின்வாங்கியிருப்பதில்கூட அவருடைய அறிக்கை திமிர்த்தனத்தைத்தான் (ஒரு விதத்தில், அறியாமையை,) காட்டியிருக்கிறது.
பொதுவாக ஹிந்துக்களிடையே விழிப்புணர்வு மேலும் அதிகரிக்க ஒவ்வொருவரும் உழைக்க வேண்டும்.
இப்போது வாழ்வைப் பணயம் வைத்து இந்தப் பணியில் ஈடுபட்டிருப்போருக்கு நன்மைகள் பெருகட்டும்.
I recently saw this movie in Gulf. The said songs and poetry was not removed and it was fully available without any cut. I think this was not done in oveseas copies. Apart from these controversies, this move is a drab one and is not worth wasting some 2 hours seeing this.
இது சரியான, பின்பற்றப்பட வேண்டிய அணுகுமுறை. தவறிழைப்பவனை நேரடியாக எதிர்கொண்டு அவனுக்கு முக்கியத்துவமும் பிராபல்யமும் அளிக்காமல் அவன் யாரை நம்பியிருக்கிறானோ அவர்களை அணுகி அவர்கள் பாதிக்க்பப்டுவார்கள் என்று எச்சரிப்பதும், எச்சரிப்பதோடு நின்றுவிடாமல் செயலிலும் இறங்குவதும் தவறிழைப்பாவர்கள் பக்க பல்ம் இழந்து நிராதரவாக விடப்பட்டு, இறுதியில் தங்கள் போக்கை மாற்றிக் கொள்வார்கள்.
-மலர்மன்னன்
இந்த வெற்றி தொடர வாழ்த்துக்கள்–இந்த வெற்றியின் ரகசியத்தை வெளியிட்டதும் ஒரு ராஜதந்திரம்தான்
எஸ்.ஆர்.சேகர்
சபாஷ்! பணம் கொடுத்தால் கழுதையுடன் படுக்க தயாராகும் கூத்தாடிகள் போக்கிரி அரசியல்வாதிகளுக்கு சவுக்கடி!
தொடருங்கள் பணியை!