Breaking India புத்தக வெளியீட்டு விழா

|| ஓம் ||

||அழைப்பிதழ் ||

Breaking India: Western Interventions in Dravidian and Dalit Faultlines

நூல் ஆசிரியர்கள்: ராஜீவ் மல்ஹோத்ரா, அரவிந்தன் நீலகண்டன்

இடம்: ஓபுல் ரெட்டி ஹால், வாணி மகால், தி.நகர், சென்னை.
நாள்: 3 பிப்ரவரி 2011, வியாழக் கிழமை மாலை 6 மணி.

பூஜ்ய சுவாமி தயானந்த சரஸ்வதி அவர்கள் புத்தகத்தை வெளியிடுகிறார்கள்.

நூலாசிரியர்கள் புத்தகம் பற்றி அறிமுகம் செய்து பேசுகிறார்கள்.

சிறப்புரையாற்றுவோர்:

 • திரு. டாக்டர் சி.ஐ ஐசக் – வரலாற்று ஆய்வாளர், எம்.டி. பல்கலைக் கழகம், திருவனந்த புரம்.
 • திரு. பி.என். பெஞ்சமின் – பெங்களூர் மத உரையாடல் அமைப்பு (BIRD) ஒருங்கிணைப்பாளர்.
 • திரு. எஸ்.ராமச்சந்திரன் – வரலாற்று அறிஞர் & கல்வெட்டாய்வாளர், தென்னிந்திய சமூக வரலாற்று மையம் (SISHRI).
 • திரு. டாக்டர் டி.என்.ராமச்சந்திரன் – இயக்குனர், அகில உலக சைவ சித்தாந்த ஆய்வு மையம்.
 • திரு. ஸ்ரீவைஷ்ணவ ஸ்ரீ ஏ.கிருஷ்ணமாச்சாரி – வைணவ அறிஞர்.

நிகழ்ச்சி பற்றி மேலும் விவரங்களுக்கு  தொடர்பு கொள்க:  ப்ராணேஷ் பிரசன்னா (97911 58568)

அனைவரும் வருக!

breaking_india_book_coverநூல் பற்றிய அறிமுகம்:

இந்தியாவின் ஒருமைப்பாடும் இறையாண்மையும்  உலகளாவிய மூன்று பெரும் பகாசுர சக்திகளால் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளன  – 1) பாகிஸ்தானை மையமாகக் கொண்டு இயங்கும் இஸ்லாமிய பயங்கரவாதம் 2) சீனாவை மையமாகக் கொண்டு இயங்கும் மாவோயிஸ்டுகள் மற்றும் இதர மார்க்சிய அமைப்புகள் 3) மேற்கத்திய நாடுகளால் மனித உரிமை என்ற பெயரில் ஊட்டி வளர்க்கப் படும்  திராவிட, தலித் பிரிவினைவாதம்.  இவற்றில் மூன்றாவதைப் பற்றி விரிவான ஆய்வுகளையும், அலசல்களையும் உள்ளடக்கியது இந்த நூல்.

அமெரிக்க, ஐரோப்பிய கிறிஸ்தவ நிறுவனங்களின் பணபலத்துடன்  இந்தியாவுக்குள் திராவிட, தலித் பிரிவினைவாதத்தை வளர்க்கக் களமிறக்கப் படும் மனித உரிமை அமைப்புகள், கல்வியாளர்கள், சிந்தனை வட்டங்கள், மத அமைப்புகள் ஆகியவை நிழலுருவில் செயல்படும்  விதம் குறித்து  விரிவான ஆய்வுகளை இந்த நூல் அளிக்கிறது. ஆரிய திராவிட இனவாதம் உருவான வரலாறு,  புனித தாமஸ் பற்றிய கட்டுக் கதையை மையமாக வைத்து உருவாக்கப் படும் “திராவிட கிறிஸ்தவம்”,   தென்னிந்திய வரலாற்றை உள்நோக்கங்களுடன்  திரிக்கும் முயற்சிகள் ஆகியவை பற்றியும் இந்த நூல் விரிவாகப் பேசுகிறது.

நூலாசிரியர்கள்  இது பற்றி கடந்த ஐந்து ஆண்டு காலமாக தீவிர ஆய்வுகள் மேற்கொண்டனர். அந்த ஆய்வுகளின் தொகுப்பாக இந்த நூல் வெளிவருகிறது.

நூல் பற்றிய இணையதளம் இங்கே.

Breaking India: Western Interventions in Dravidian and Dalit Faultlines
Publisher: Amaryllis.
Pages: 640.
Price: Rs. 695

விரைவில் இந்த நூல் தமிழிலும் வெளிவரவிருக்கிறது!

பி.கு:

தில்லியிலும் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.

9-பிப்ரவரி, 2011. மாலை 5 மணி.
Vivekananda International Foundation, 3 San Martin Marg, Chanyakyapuri, New Delhi.

சிறப்பு விருந்தினராக பிரபல வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி கலந்து கொள்கிறார்.

Tags: , , , , , , , , , , , , , , , , , , ,

 

18 மறுமொழிகள் Breaking India புத்தக வெளியீட்டு விழா

 1. Rama on February 1, 2011 at 5:39 am

  I live in Sydney. Can someone direct me to the right source to order this book?
  Thanks
  Rama

 2. snkm on February 1, 2011 at 5:03 pm

  வாழ்த்துக்கள்.

 3. vedamgopal on February 1, 2011 at 6:06 pm

  Good work but the cost of the book seems to be too high ,the price is more than the number of
  pages. Hope at-least tamil translation comes with cheap edition.

 4. R Balaji on February 1, 2011 at 7:46 pm

  இப்புத்தகம் மிக முக்கியமானதொரு பார்வையை அளிக்கும் என்பதில்
  ஐயமில்லை.

  ஆனால் இதன் விலை (695 ரூபாய்) மிகவும் அதிகமாக படுகிறது.
  புத்தகத்தை அச்சிட, Publicize, Distribute செய்ய மற்றும் அவ்விரு
  ஆசிரியர்களின் உழைப்புக்கு தரப்படும் பணம் என்று எல்லாவற்றையும்
  கணக்கில் கொண்டாலும் இந்த விலை மிகவும் அதிகமாகவே படுகிறது.

  சாதாரணமாக ஆங்கில புத்தகங்களின் விலை (கலை, சுயசரிதை)
  போன்றவற்றின் விலை இப்படி இருந்தாலும் இந்த புத்தகத்தின்
  நோக்கத்தை அடிப்படையாக கொண்டு விலையை நிர்ணயத்திருக்கலாம்.

  தமிழில் வரும் புத்தகமாவது பலர் வாங்கக்கூடிய விலையில் இருக்கும்
  என்று நம்புவோம்.

 5. sahridhayan on February 2, 2011 at 12:19 pm

  மிக முக்கியமான நிகழ்வு ! விலை பற்றி பிறகு யோசிப்போம் !

  தற்பொழுதுள்ள சூழ்ச்சியான நிகழ்வுக்களுக்கு இரையான இந்தியர்களுக்கு, முழு பார்வையை, மறு விழிப்பை இது வழங்கும் என தெரிகிறது !

  தமிழில் வரும் பொழுது இரு (அல்லது பல .) விதமாக (எளிமையான, விரிவான) புத்தகங்கள் வந்தால் நல்லபடி கொண்டு சேர்க்கமுடியும் !

  மாணவர்கள் இலக்காக இருக்கவேண்டும் !

  நன்றி

  சஹ்ரிதயன்

 6. v.ganessan on February 3, 2011 at 8:32 am

  respected aravindan ji all the best. you are an icon for the future generation. eager to meet you one day.
  with regards
  v.ganessan

 7. Malarmannan on February 3, 2011 at 9:53 am

  மிகவும் அவசியமான, பரவலாகச் சென்றடைய வேண்டிய புத்தகம். நூலகப் பதிப்புடன் சேர்த்து மலிவு விலைப் பதிப்பையும் கொண்டு வந்திருந்தால் அதிகம் பேர் உடனே வாங்கிப் பயன் பெற முடிந்திருக்கும். குறிப்பாக வெளிநாடுகளுக்குப் போக வேண்டிய நூல் ஆதலால் விலை நியாயமானதுதான். கிறிஸ்தவ மிஷனரிகள் இங்கு செய்யும் சூது வாதுகளை அறியாமல் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் உள்ள மக்களில் பலர் இந்த மிஷனரிகள் மீது அனுதாபம் கொண்டும், ஹிந்துஸ்தானத்து மக்களுக்கு உதவுவதாக நினைத்துக்கொண்டும், அப்பாவித்தனமாக மிஷனரிகளுக்கு நன்கொடை அளித்து வருகின்றனர். அவர்களுக்கு விழிப்பூட்ட இப்புத்தகம் உதவும். எனக்கே இப்புத்தகத்தை உடனே வாங்கி வாசிக்க ஆர்வம் உண்டாகிறது. ஆனால் வாங்கும் சக்தியில்லை! புத்தகம் உருவானதில் உரிய பங்களிப்புச் செய்த ஸ்ரீ அரவிந்தன் நீலகண்டனுக்கு என் வாழ்த்துகள்.
  -மலர்மன்னன்

 8. Malarmannan on February 3, 2011 at 10:03 am

  புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்றுப் பேசவிருக்கும் டாக்டர் ஐஸக், பெங்களூரு பி.என். பெஞ்சமின் இருவரையும் நான் அறிவேன். இருவரும் மிஷனரிகளின் மத மாற்ற முயற்சிகளை அறவே வெறுப்பவர்கள். பெஞ்சமின் மத மாற்றத்தைக் கைவிடக் கோரி கிறிஸ்தவர்களிடமே கையொப்ப இயக்கம் நடத்தியவர். ஆண்டு தோறும் அவரது அமைப்பின் விழாவுக்கு அழைப்பார். ஆனால் ஒரு தடவைகூட என்னால் போக முடிந்ததில்லை.

  ஐஸக், பெஞ்சமின் இருவரும் நமது ஆதரவைப் பெற வேண்டியவர்கள். இதேபோல் தில்லியில் அஷ்ரஃப் என்கிற கோவையைச் சேர்ந்த முகமதியர் உள்ளார். திருமந்திரத்தை ஓதி, மனதளவில் சைவராக வாழ்பவர். இவரும் நமது ஆதரவுக்குரியவர். இப்படிப் பலர் கிறிஸ்தவ முகமதிய சமயங்களில் உள்ளனர். நமது பண்பாடு, தத்துவ மரபு, ஆன்மிக விழிப்புணர்வு ஆகியவற்றை நன்கு உணர்ந்தவர்கள் இவர்கள்.
  -மலர்மன்னன்

 9. க்ருஷ்ணகுமார் on February 4, 2011 at 2:44 pm

  ஹிந்துக்களுக்கும் அன்யர்களுக்கும் தெளிவு தரும் வகையில் நூல் அமைந்திருக்கும் என எதிர்பார்க்கிறேன். இதற்காக பரிச்ரமப்பட்ட ஸ்ரீ அரவிந்தன் நீலகண்டன் மற்றும் ஸ்ரீ ராஜீவ் மல்ஹோத்ரா அவர்களுக்கு வாழ்த்துக்கள். வர்த்ததாம் வர்த்ததாம் என இவர்கள் சேவை தொடர இறைவனை ப்ரார்த்திக்கிறேன்.

  முன்னிறுத்தப்பட வேண்டிய க்றைஸ்தவ இஸ்லாமிய ஸஹோதரர்களைப் பற்றிய தகவல் தெரிவித்த ஸ்ரீ மலர் மன்னன் அவர்களுக்கு நன்றி. மத மேலாதிக்கம் மேலோங்க அன்ய மதங்களை அழித்தொழிக்க விழையும் ஆப்ரஹாமிய மதங்களின் சூழ்ச்சிகளுக்கு மத்தியில் ஹிந்துக்கள் பாலும் ஹிந்துஸ்தானத்தின் பாலும் அக்கறை காண்பிக்கும் க்றைஸ்தவ இஸ்லாமிய ஸஹோதரர்களுக்கு கடவுள் செழிப்பான வாழ்வளிக்க இறைஞ்சுகிறேன். ஸ்ரீமான், இது போன்ற நல்லுள்ளங்களைப் பற்றிய ஒரு தொகுப்பை தாங்கள் பதிவு செய்ய வேண்டும் என விக்ஞாபித்துக்கொள்கிறேன். அஃது இத்தளத்தின் அறிய பதிவாக அமையும்.

 10. R.Sridharan on February 4, 2011 at 8:46 pm

  No price is too much to know ,understand and realise the dangers posed by the anti-Hindu forces,awaken and then act against them, crush them and finally reclaim our Motherland for Hindu Dharma.
  But kindly give us the address ( Chennai) from where we can get the copy.

 11. அருண்பிரபு on February 5, 2011 at 3:03 am

  USல் ஒரு விஷயம் நடக்கிறது. அந்நாடு, அதன் தலைவர்கள்(President, Senators), முக்கிய அமைப்புகள் (Senate, White House), அரசமைப்புச் சட்டம் ஆகியன குறித்து மலிவு விலையில் புத்தகம் வெளியிடுவார்கள். Low priced edition, student edition என்று வெளிவரும். தகவல்கள் தவிர மற்றவற்றின் தரம் (paper, cover) சற்று மட்டாக இருந்தாலும் பயந்தரும் நூல்கள். நாமும் அதுபோல low priced edition இவ்விஷயத்தில் முயன்று பார்க்கலாம்.

 12. நமது நிருபர் on February 5, 2011 at 10:28 am

  புத்தக வெளியீட்டு விழாவின் போது 400 ரூபாய்க்கு விற்கப் பட்டது. அங்கு வந்திருந்தவர்கள் இந்த விலைக்கு வாங்கியிருந்திருக்கலாம்.

  ஆங்கிலப் புத்தகத்தை இணையதளம் மூலமும் பிரபல கடைகள் மூலமும் விற்க ஏற்பாடு நடந்து வருகிறது. மேல் விவரங்கள் http://breakingindia.com/ தளத்தில் வரும். தமிழ்ஹிந்துவிலும் அறிவிக்கிறோம்.

  தமிழ்ப் புத்தகம் தயாராகி விட்டது! ஆசிரியரான அரவிந்தன் நீலகண்டனே தமிழ் மொழியாக்கத்தையும் செய்திருக்கிறார் என்பதால் மூலநூலின் முழுமையான, சரியான வடிவமாகவே அதுவும் இருக்கும்.

  தமிழ்ப் புத்தகத்தை கிழக்கு பதிப்பகம் வெளியிடுகிறது! அதன் விலை ரூ. 300 ஆக இருக்கும் என்று புத்தக வெளியீட்டு விழாவில் சொல்லப் பட்டது.

 13. Malarmannan on February 5, 2011 at 10:43 am

  கொற்கை என்ற பெயரில் ஆயிரம் பக்கங்களுக்கும் கூடுதலாக உள்ள நாவல் ஒன்றை ஜோ.டி.குரூஸ் என்பவர் எழுதியுள்ளார். ரூ. 800/- விலையில் காலச்சுவடு வெளியிட்டிருக்கிறது. பங்குத் தந்தைகள் எவ்வாறெல்லம் வெளி நாடுகளிலிருந்து ஏழை மக்களுக்காக அனுப்பப்படும் பொருட்களையும் நன்கொடைகளையும் பங்கிட்டுக் கொள்கிறார்கள், கட்டுமான வேலைகளிலும், பங்கீடுகளிலும் எப்படித் தரகு பெறுகிறார்கள், கன்னியாஸ்த்ரீகளையும் மற்ற பெண்களையும் எங்கனம் பாலியல் வற்புறுத்தல்களுக்கு இலக்காக்கிறார்கள் எனபதைத் தமது நாவலில் பிட்டுப் பிட்டு வைத்திருக்கிறார். குரூஸ்.
  -மலர்மன்னன்

 14. அம்ருதபுத்திரன் on February 22, 2011 at 10:40 pm

  திரு அரவிந்தன் அவர்களே,
  தயவு செய்து நீங்கள் தில்லியில் வெளியிட்ட புத்தகத்தின் தமிழாக்கத்தை தமிழ் ஹிந்து இணையதளத்தில் வெளியிடவும்.
  BREAKING India: Western Interventions in Dravidian and Dalit Faultlines, a book jointly authored by Shri Rajiv Malhotra, chief of the Princeton based Infinity Foundation and a Distinguished Fellow at Vivekananda International Foundation, New Delhi and Shri Aravindan Neelakandan, intellectual activist, columnist and popular science writer from Tamil Nadu, was launched in New Delhi on February 9. A galaxy of speakers participated in the discussion on the book.

 15. C.N.Muthukumaaswamy on February 23, 2011 at 8:04 am

  நான் ஆங்கிலப் புத்தகம் வாங்கி வாசித்தேன். அரவிந்தன் நீலகண்டன் அவர்களின் தமிழ் வெளியீடும் கிடைத்தால் பெரிதும் பயனுடையதாக இருக்கும் என நம்புகின்றேன்.
  கோ.ந.முத்துக்குமாரசுவாமி

 16. Bharath on June 16, 2011 at 1:35 pm

  You can get this book in http://breakingindia.com/buy

 17. bala on March 29, 2014 at 2:31 pm

  In my opinion, the conents of the book need to reach the masses. We are already late. So low priced editions and abridged versions should be planned. When published in large number, the price would come down. Also, the patriots should contribute and subsidize the price like being done for scriptures-Bagavatgita etc.. Abridged version and / or Abstract may be circulated as presentations/ebooks for awarness about the book. Otherwise, it would be too late and suddenly India will become like kashmir. Learned people should understand that the process of destruction is not linear with time. It appers insignificant as the stress accumulates and finally explodes all of a sudden. It took few decades for kashmir to reach from 64% to 99.45%.

மறுமொழி இடுக:

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.

உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:

தமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.

மறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

*