முகப்பு » புத்தக விமர்சனம், பொது

சாதிகள்: ஒரு புதிய கண்ணோட்டம் – தமிழ்ஹிந்து புத்தக வெளியீடு

அச்சிட அச்சிட

மிழ்ஹிந்து தளத்தில்  தொடராக வந்து வாசகர்களின் வரவேற்பைப் பெற்ற சாதிகள்: ஒரு புதிய கண்ணோட்டம் புத்தக வடிவில் வெளிவந்திருக்கிறது.

saathigal_book_front_coverசாதிகள், சாதியம் இவற்றின் வரலாற்றுப் பின்னணி என்ன?
சாதியம் குறித்து இந்து தருமம் கூறுவதென்ன?
சாதி இந்தியாவில் மட்டும் தான் இருக்கிறதா?
சாதியத்தை எதிர்க்க இந்து தருமம் அளிக்கும் கருத்தியல் என்ன?

இத்தகைய கேள்விகளுக்கு இந்தச் சிறு  நூல் சுருக்கமாக, எளிமையாக விடையளிக்கிறது.

ஆக்கியோர்: அரவிந்தன் நீலகண்டன், ஜடாயு, பனித்துளி
வெளியீடு:  தமிழ்ஹிந்து, 441, கவிமணி நகர், நாகர்கோவில் – 629002.
ISBN: 978-81-910509-1-2
பக்கங்கள்:  48
விலை:  ரூ. 35

2011 ஜனவரி 4 முதல் 17ம் தேதி வரை நடைபெறும் சென்னை புத்தகக் கண்காட்சியில் விஜயபாரதம் அரங்கில் (ஸ்டால் எண் 76 & 77) இந்தப் புத்தகம் கிடைக்கும். தமிழ்ஹிந்துவின் முதல் வெளியீடான பண்பாட்டைப் பேசுதல் புத்தகத்தையும் இதே ஸ்டாலில் வாங்கலாம்.

இணையம் மூலமாக ஆன்லைனில் இங்கே வாங்கலாம் (ஜனவரி 20க்குப் பிறகு).

சென்னையில் புத்தகம் கிடைக்குமிடம்:

விவேகானந்த கேந்திரம், 5 – சிங்காராசாரி தெரு,  திருவல்லிக்கேணி, சென்னை – 600 005. (தொலைபேசி: 91763-68789)

சேவை உணர்வினையும், சமுதாய நீதியுணர்வையும், சமுதாய நல்லிணக்கத்தையும் உருவாக்கிட இந்த நூல் பயன்பட வேண்டுமென எல்லாம் வல்ல பரம்பொருளை இறைஞ்சுகிறோம்.

வாசகர்கள் இந்த நூலினை வாங்கியும், நண்பர்களுக்குப் பரிந்துரைத்தும் ஆதரிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். 

தொடர்புடைய பதிவுகள்

குறிச்சொற்கள்: , , , , , , , ,

 

5 மறுமொழிகள் சாதிகள்: ஒரு புதிய கண்ணோட்டம் – தமிழ்ஹிந்து புத்தக வெளியீடு

  1. Indli.com on January 4, 2011 at 12:41 pm

    சாதிகள்: ஒரு புதிய கண்ணோட்டம் – புதிய புத்தகம் (தமிழ்ஹிந்து வெளியீடு)…

    சாதிகள், சாதியம் இவற்றின் வரலாற்றுப் பின்னணி என்ன? சாதியம் குறித்து இந்து தருமம் கூறுவதென்ன? …

  2. karthik on January 4, 2011 at 12:43 pm

    வாழ்த்துக்கள்

  3. T.Mayoorakiri Sharma on January 4, 2011 at 4:19 pm

    காலத்தினால் செய்த உதவி இது…

    காலத்தின் தேவi அறிந்து உண்மையயை வெளிப்படுத்தும் அரிய கட்டுரைகளைத் தொகுத்து நூலாக்கம் செய்திருப்பதை வரவேற்கிறோம்… வாழ்த்துக்கள்…

  4. sahridhayan on January 5, 2011 at 5:33 pm

    இந்து தர்மத்தின் சிற்பியாக இருந்து இந்த தலைமுறையை விழிப்புணர்வாகக வாழ்த்துக்கள் !

    சஹ்ரிதயன்

  5. subbu on January 9, 2011 at 7:06 pm

    வாங்கிவிட்டேன்

மறுமொழி இடுக:

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.

*

உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:

தமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.

மறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.