லஷ்கர்-ஏ-தொய்பாவும் காங்கிரசின் குள்ளநரித்தனமும்

சில மாதங்களுக்கு முன் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர்களில் ஒருவரும், அடுத்த பிரதமர் பதவிக்கு போட்டியிடுபவரக கருதப்படும் திருவாளர் ராகுல் காந்தி போபாலில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் தடை செய்யப்பட்ட அமைப்பான சிமியும் ஒன்று என திருவாய் மலர்ந்தார். அதே போல் 2009ம் ஆண்டு ஜீலை மாதம் இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் திமோத்தி ரோமருக்கு பிரதமர் மன்மோகன் சிங் அளித்த விருந்தில் கலந்து கொண்ட ராகுல் காந்தி லஷ்கர்-இ-தொய்பாவினால் இந்தியாவிற்கு ஏற்படக்கூடிய ஆபத்தை விட ஹிந்துத்துவாவை வலியுறுத்தும் மதவாத சங்கப்பரிவார அமைப்புகளாலதான் மிகப் பெரிய ஆபத்து என அவரிடம் கூறியதாக விக்கிலீக்ஸ் இணையதளம் தகவலை வெளியிட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சி தனது முதல் எதிரியாக கருதுவது ஆர்.எஸ்எஸ். அமைப்பை என்பது வெட்ட வெளிச்சமாகும். திருவாளர் ராகுல் காந்திக்கு இந்த நாட்டின் வரலாறும் தெரியவில்லை, ஹிந்துத்வா என்றால் என்ன என்பதும் தெரியவில்லை. லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் பூர்வீகம் என்ன என்பது முழுவதும் தெரிந்தால் ராகுல் காந்தியின் சின்னப் பிள்ளைத்தனமும், காங்கிரஸ் கட்சியின் குள்ளநரித் தனமும் தெளிவாக தெரியும். ஆகவே லஷ்கர்-இ-தொய்பாவின் உண்மை நிலையை நன்கு தெரிந்து கொள்ள வேண்டும்.

20081128 INDIA Lashkarஇன்று நாடு முழுவதும் நடக்கும் தீவிரவாத தாக்குதலுக்கு காரணகர்த்தாவாக குற்றம் சுமத்தப்படும் மிக முக்கியமான தீவிரவாத இயக்கம் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ யால் உருவாக்கப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா. இந்த புதிய அமைப்பு 2000க்கு பின் தான் வெளி உலகிற்கு தெரிய வந்தது. 20.3.2000ல் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் இந்தியாவிற்கு வருகை தந்த போது காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள சிட்டிசிங்புரா எனும் பகுதியில் விடியற் காலை பொழுதில் இந்திய ராணுவ உடையனிந்த பலர் கையில் துப்பாகியுடன் 15நிமிட இடைவெளியில் ஆண்கள், பெண்கள் குழந்தைகள் உட்பட பலர் கொல்லப்பட்டார்கள். நடந்த இந்த சம்பவத்திற்கு பல்வேறு இயக்கங்களை சம்பந்தப்படுத்தி பொய்யான செய்திகளை பரப்பினார்கள். இந்தியாவிற்கு வருகை புரிந்த அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் இந்த படுகொலைக்குக் காரணம் இந்து மத வெறியர்கள், இதில் எனக்கு எவ்வித சந்தேகமேயில்லை என அறிவித்தார். மனித உரிமை காவலர்களாக தன்னை அடையாளம் காட்டிக் கொள்ளுபவர்கள் கூட காவல் துறைக்கு எதிராக ஆர்பாட்டங்கள் ஊர்வலங்களை நடத்தி சீக்கியர்களை சீவித்தள்ளும் இந்து வெறியர்கள் ஒழிக என கோஷமிட்டார்கள்.

2000ம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்திய எல்லைப் பாதுகாப்பு படையினர் சுகைல் மல்லிக் என்பவனை கைது செய்யும் வரை இந்து மத வெறியர்கள் தான் இந்த கொலையை செய்தார்கள் என திட்டமிட்ட ரீதியில் காங்கிரஸ் கட்சியும், இந்து விரோதிகளும் முழு பிரச்சாரம் மற்றும் ஆர்பாட்டங்களை நடத்தினார்கள். ஆகவே லஷ்கர்-இ-தொய்பாவின் அறிமுகமே பல சிறார்களை கொன்று குவித்த பின்தான் வெளி உலகிற்கு தெரியவந்தது. இம்மாதிரியான கொலை வெறி தாக்குதல்களை இந்து அமைப்புகள் எப்போதாவது செய்திருப்பார்களா என்பதை திருவாளர் ராகுல் காந்தி நினைத்துப் பார்க்க வேண்டும்.கைது செய்யப்பட்ட சுகைல் மாலிக்கை, நியூ யார்கள் டைம்ஸ் நிருபர் ஒருவர் அவனை சிறையில் சந்தித்து, சிட்டிசிங்புரா சம்பவத்திற்கும் உங்களுக்கும் என்ன தொடர்பு என கேட்டதற்கு சிட்டிசிங்புரா சம்பவத்தை நடத்தியது லஷ்கர்-இ-தொய்பா என பெருமிதத்துடன் கூறினான். பாகிஸ்தான் பகுதியில் பயிற்சி பெற்று 200 டாலர் நோட்டுகளைத் திணித்து போய்வா என என்னை அனுப்பிய அமைப்பும் லஷ்கர்-இ-தொய்பா என்றான். அங்கே அவனுக்கு போதித்த பாடம் “இந்தியா நம்முடைய எதிரி நாடு. இந்தியர்கள் நம் எதிரிகள். ஆகவே அவர்களை அழித்துக் கொண்டிருக்கிறோம். இந்தியர்களை கொல்லாவிட்டால் அவர்கள் நமது முஸ்லீம் இனத்தையே வேரோடு அழித்துவிடுவார்கள்”

இத்தகைய போதனை ஏற்றி பயங்கரவாத காரியங்களை செய்ய அனுப்பிய இயக்கம் லஷ்கர்-இ-தொய்பா என்பதை தெரிவித்த பின்தான் பாரத தேசத்தில் நாசகார செயல்கள் நடத்துவதற்கு பாகிஸ்தானால் உருவாக்கப்பட்ட இயக்கம் லஷ்கர் இ தொய்பா என்பது வெளி உலகிற்கு தெரிய வந்தது.

பாகிஸ்தானில் உள்ள பல்வேறு மத அடிப்படைவாத அமைப்புகளுள் ஒன்று மர்கஸ் உத்தாவா வால் இர்ஷாத் (Markaz-ud-Dawa-wal-Irshad) எனும் அமைப்பு. இந்த அமைப்பு பாகிஸ்தானில் மதப்பள்ளிக்கூடங்கள் நடத்துவது, மறைவாகத் தீவிரவாதத் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிப்பது, போராட்ட ஆர்வமுள்ள இளைஞர்களைத் திரட்டி அவர்களுக்கு ஆப்கானிஸ்தானில் பயிற்சி அளிப்பது போன்ற காரியங்களை மட்டுமே செய்து கொண்டிருந்ததது. இந்த அமைப்பின் தலைவர் அபீப் முகம்மது சயீத் எனும் பேராசிரியர் இந்த அமைப்பிலிருந்து ஒரு ராணுவப் பிரிவை ஏற்படுத்த முயற்சி மேற்கொண்டார். இதற்காக சிலருக்கு பஷ்டுனிஸ்தான் என்கிற குனார் எனும் பிராந்தியத்தில் பயிற்சி கொடுக்கப்பட்டது ஆப்கான்- சோவியத் யுத்த காலத்திலும், அமெரிக்க- ஆப்கன் யுத்த காலத்திலும் ஆப்கானின் போராளிகளின் விலாசம் பஷ்டுனிஸ்தானாக தான் இருக்கும்.

lashkar-e-taiba-photo-bbc-newsமார்கஸ் உத் தாவா வால் இர்ஷத் என்கிற அமைப்பு தங்களுக்கென்று ஒரு ராணுவ பிரிவை ஏற்படுத்திக் கொள்ள அதிகம் ஆர்வம் கொண்டிருந்தது. இதற்காக அபீப் முகம்மது சயீது என்பவர் பல தடைவ ஆப்கானிஸ்தானுக்கு சென்று வந்தார் என்பது மட்டுமில்லாமல், அங்குள்ள போராளி இயக்கங்களின் தலைவர்களை சந்தித்து தனது திட்டங்களைப் பற்றி விரிவாக விவாதித்தார். இதன் காரணமாக பாகிஸ்தானிலிருந்து பன்னிரண்டு இளைஞர்கள் பயிற்சிக்காக ஆப்கானுக்கு அனுப்பி வைக்கப்ட்டார்கள். ஆப்கானில் அல்காயிதாவும் மற்றும் ஆப்கன் முஜாகிதீன்களும் அவர்களுக்கு பயங்கரவாத தாக்குதல் பயிற்சி அளித்தார்கள். அப்படி பயிற்சி பெற்றவர்கள்தான் 1993ம் ஆண்டு முதன் முதலில் இந்திய எல்லைக்குள் ஊடுருவிய 12 பேர்கள் தங்களை லஷ்கர்-இ-தொய்பா என்கிற அமைப்பைச் சார்ந்தவர்கள் என அறிவித்துக் கொண்டார்கள். இந்திய சுதந்திரம் அடைந்து பாகிஸ்தான் பிரிவினை ஏற்பட்ட போது பாகிஸ்தானுக்கு இடம் பெயர்ந்த காஷ்மீர் குடும்பத்தை சார்ந்த மௌலானா அப்துல் வாகித் என்ற காஷ்மீரிடம் லஷ்கர்-இ-தொய்பாவை தாரை வார்த்து கொடுத்தார் மார்க்ஸ் உத் தாவா வால் இர்ஷாத் அமைப்பின் தலைவர் .

1947லிருந்து இன்று வரை பாகிஸ்தானிலிருந்து பாரத தேசத்தில் தீவிரவாதம் வளர்க்க விரும்பும் அனைத்து பயங்கரவாத இயக்கங்களுக்கும் அடைக்கலம் கொடுப்பது மட்டுமில்லாமல், அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்கும் பகுதியாக பாகிஸ்தான் வசம் இருக்கும் காஷ்மீரில் உள்ள சில பகுதிகள்.; 1948ல் நடந்த யுத்தத்தில் காஷ்மீரின் வட மேற்குப் பகுதிகளாக இருந்த கொட்லி எனும் பகுதி சுபைதா எனும் மற்றொரு பகுதி , டர்க்குடி முஸப்பராபாத், கில்கிட் எனும் பகுதிகளும் பாகிஸ்தான் வசம் சென்று இன்று பாரத தேசத்தின் தீவிரவாத பயிற்சி கேந்திரங்களாக மாறியுள்ளன. லஷ்கர்-இ-தொய்பாவின் முதன்மையான நோக்கம் இந்தியாவின் பிடியிலிருந்து காஷ்மீரை மீட்க வேண்டும் , பிறகு அதை பாகிஸ்தானுடன் இணைக்க வேண்டும் எனும் கொள்கையை அடிப்படையாக கொண்டு துவக்கப்பட்டது. இஸ்லாத்தின் செல்வாக்கை அதிகப்படுத்த ரஷ்யா சீனா உட்பட சில கம்யூனிச நாடுகளையும் இணைக்க வேண்டும் என்பதும் இவர்களின் மற்ற குறிக்கோள். உலகை ஆளும் தகுதி இஸ்லாத்திற்கு மட்டுமே உள்ளது, இஸ்லாத்திற்கும் முஸ்லீம்களுக்கும் எதிரான அடக்குமுறை எங்கெல்லாம் தலையெடுக்கிறதோ அங்கெல்லாம் லஷ்கர் இயக்கம் ஆயுதத்துடன் பயங்கரவாத தாக்குதல்களை தொடுக்கும் என கூறுகின்றனர்.

Lashkar Poster Against India

Lashkar Poster Against India

2002ம் ஆண்டு மத்தியில் லஷ்கர்-இ-தொய்பாவைசை சேர்ந்த பெரும்பாலான தீவிரவாதிகள் ஆப்கனிஸ்தானுக்கு பயிற்சிக்காக அனுப்பட்டார்கள். அவர்களில் சிலரை மட்டும் தேர்ந்தெடுத்து தோராபோரா மலைப்பகுதியில் வசித்து வந்த ஒசாமா பின்லேடனுடன் தொடர்பு ஏற்படுத்தி அவர் மூலமாக பயிற்சி பெற்று திரும்பியவர்கள். எந்த ஒரு தீவிரவாத அமைப்பிற்கும் ஆப்கனிஸ்தானின் தொடர்பில்லாமல் செயல்பட முடியாது என்பது உலகறிந்த உண்மையாகும். லஷ்கர்-இ-தொய்பாவின் தொடக்க கால உறுப்பினரும் லஷ்கரின் கமாண்டர் இன் சீப்பான ஜகி உல் ரகுமானிடம் லஷ்கரின் உறுப்பினர்களை தீவிர போராளிகளாக உருவாக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. காஷ்மீரின் எல்லையில் வைத்தே அவர்களுக்கு தினசரி பயிற்சி கொடுக்கப்பட்டது. ஜகியை தவிர இஸ்லாமாபாத்தைச் சோந்த அப்துல்லா , பூஞ்ச் பகுதியைச் சேர்ந்த காஜி முகம்மது அசம், தோடா பகுதியைச் சார்ந்த முஸம்மில் பட், பாரமுல்லாவைச் சேர்ந்த முகம்மது உமர், பாக்கிஸ்தான் பகுதியிலிருந்து சவுத்திரி அப்துல்லா, காலீத், இவர்களைப் போல் இன்னும் பலரும் லஷ்கர் போராளிகளுக்கு போர்பயிற்சி அளித்தவர்கள்.

ஒரு மாநில அரசு தனது மாவட்டங்களில் அரசின் திட்டங்களை சரியாக நடைபெற மாவட்ட ஆட்சியாளர்களை நியமிப்பதும் , அவர்களின் கீழ் பல அதிகாரிகளை அமர்த்துவதும் எப்படியோ, அதே போல் லஷ்கர்-இ-தொய்பாவும் காஷ்மீர் மாநிலத்தில் உள்ள எல்லா மாவட்டங்களிலும், ஒவ்வொரு பிரதிநிதியை நியமித்து, அவர்கள் மூலமாக அந்த மாவட்டத்தில் நடக்கும் நடப்புகளை, தினசரி மேலிடத்துக் தெரிவிக்க வேண்டும் என பணித்தார்கள். இந்த காரியங்களை செய்வதற்கு இரண்டு தரப்பினர் லஷ்கர் அமைப்பிற்கு உதவி செய்தார்கள். ஒன்று காஷ்மீரத்து முஸ்லீம்கள் இரண்டாவது லஷ்கர் ஆதரவாளர்கள் மற்றும் பாகிஸ்தான் ஆதரவாளர்கள் இவர்களுக்கு ஐ.எஸ்.ஐ.யின் காஷ்மீர் பிரிவு அதிகாரிகள் உறுதுணையாக இருந்தார்கள்.. இவ்வாறு நியமிக்கப்பட்டவர்கள் காஷ்மீர் அரசாங்கம் மற்றும் மத்திய அரசாங்கம் என்ன செய்கிறது என்பதில் தொடங்கி ஏனைய காஷ்மீர் தீவிரவாத இயக்கங்களின் செயல்பாடுகள் வரை தங்களுக்கு கிடைக்கின்ற தகவல்களை சேகரித்து அவைகளை லஷ்கர்-இ-தொய்பாவின் தலைமையகத்திற்கு அனுப்பி வைப்பது முக்கிய பணியாகும்.

ஆகவே இந்த பணிகளை செய்யும் லஷ்கர் அனுதாபிகளிடம் லஷ்கர் இ தொய்பாவினர் மிகத் தொளிவாக அறிவித்தார்கள் அதாவது இந்துக்களும் யூதர்களும் இஸ்லாத்தின் எதிரிகள் இந்தியாவும் இஸ்ரேலும் பாகிஸ்தானின் எதிரிகள் என்பதை மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்பதை அடிக்கடி அவர்களுக்கு நினைவுபடுத்தினார்கள். லஷ்கர் அமைபில் உள்ளவர்களின் குடும்பத்திற்கு பணம் அனுப்பும் பணியையும் இந்த அமைப்பினால் மேற்கொள்ளப்பட்டது. ஆகவே அமைப்பிற்கு பணம் பெறுவதற்கும் இவர்களுக்கு பாகிஸ்தான் மட்டுமே துவக்க காலத்தில் எல்லா வழிகளிலும் உதவினார்கள். பின்னால் லஷ்கர் அமைப்பினரால் பாகிஸ்தானில் உள்ள அனைத்து மசூதிகளிலும் பூட்டு போட்ட சிறிய, பெரிய பெட்டிகள் வாசலில் வைக்கப்பட்டன. தொழுகை முடிந்து வீட்டிற்கு திரும்பும் போது வெளியில் வைக்கப்பட்டுள்ள பெட்டியில் பணத்தை போடுவார்கள். எதற்காக இந்த பெட்டி வைக்கப்பட்டுள்ளது என்பதை தெரியாதவர்களுக்கு லஷ்கர் ஆட்கள் ரகசியமாக அவர்களுக்கு தெரியப்படுத்தி அடுத்த முறை மசூதிக்கு வரும் போது தங்களது கடமையை செய்யும்படி நினைவுப்படுத்துவர்கள்.  தங்களது பயங்கரவாத பணிகளுக்கு பணம் திரட்டும் வழி முறைகளில் இதுவும் ஒன்றாகும்.

lashkar_terroristsஅடுத்தது எல்லாவிதமான பொருள்கள் விற்கும் அங்காடியில் இதே போல் பெட்டி வைத்திருப்பார்கள் , அந்த அங்காடியின் அளவு எவ்வளவு பெரிதாக இருந்தாலும் சரி அல்லது மிகச் சிறிய அளவு அங்காடியாக இருந்தாலும் அந்த அங்காடியின் முன் பெட்டி வைத்திருப்பார்கள். வுhரத்திற்கு ஒரு நாள் அல்லது வாரத்திற்கு மூன்று நாள் தொடர்ந்து அந்த பெட்டியில் உள்ள பணத்தை எடுத்து செல்வார்கள். இம்மாதிரியான செயல்பாடுகள் பாகிஸ்தானில் வெளிப்படையாக நடக்கும். ஆனால் காஷ்மீர் போன்ற பகுதிகளில் மறைமுகமாக இந்த செயல்கள் நடைபெறும். இதுபோன்ற வழிகளில் லஷ்கர் பயங்கரவாதிகளுக்கு பணம் கிடைக்கிறது.  பாகிஸ்தான் மற்றும் காஷ்மீரில் உள்ள இஸ்லாமியத் தொழில் அதிபர்களிடமும் துபாய் சவுதி அரோபிய மற்றும் அமெரிக்கா இங்கிலாந்து போன்ற நாடுகளிலும் மத்திய கிழக்கு தேசங்களிலும் உள்ள இஸ்லாமிய பெரும் பணக்காரர்களிடம் பெரும் தொகை பெற்று வந்தார்கள். பெரும் நன்கொடை பெறுவதற்காக பாரத தேசத்தில் நடந்த வகுப்பு கலவர சம்பவங்களை வீடியோவாக எடுத்து அதன் மூலமும் நிதி வசூலித்தார்கள்.

Delhi Bomb Blast, Sep 2008

Delhi Bomb Blast, Sep 2008

லஷ்கர்-இ-தொய்பா தனது முதல் பயங்கரவாத செயல்களை செய்ய தேர்ந்தெடுத்த பகுதியில் மட்டுமே தாக்குதல் நடத்த திட்டமிட்டார்கள்.; 1996ம் ஆண்டு ஜனவரி மாதம் 5ந் தேதி காஷ்மீர் மாநிலத்தில் உள்ள தோடா மாவட்டத்தில் பர்ஷல்லா என்கிற கிராமத்தில் பதினாறு இந்துக்களை கொன்று தங்களது முதல் தாக்குதல்களை துவக்கினார்கள். 1999ம் ஆண்டு நடந்த கார்கில் யுத்தம் நடக்கும் சமயம் மே மாதம் 18ந் தேதி லஷ்கரின் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிரடி படைப் பிரிவை சார்ந்த பலர் இந்திய எல்லைக்குள் ஊடுருவினார்கள். இவ்வாறு ஊடுருவியவர்கள் தோடா மாவட்டத்தி;ல் உள்ள லயாட்டாவுக்குள் விடியற் காலைப் பொழுதில் இருபது நிமிடங்களில் தங்களது பயங்கரவாத செயல்களால் பதினைந்து பேர்களை சுட்டுத் தள்ளினார்கள். இந்த சம்பவத்திற்கு பிறகு பதாமிபாக என்கிற இடத்தில் அமைந்த இராணுவத் தலைமையகத்தை தாக்கியது. 22.12.2000ந் தேதி டெல்லி செங்கோட்டையில் உள்ளே பணிபுரிகின்ற இராணுவ பயிற்சி முகாமை இரவில் தாக்கியது. இது போல் பல சம்பவங்களை நடத்திக் காட்டியது லஷ்கர் அமைப்பாகும். 19.11.2000ந் தேதி பாராமுல்லாவில் மூன்று தீவிரவாதிகளை கைது செய்த போது அவர்களின் வாக்குமூலத்தின் படி லஷ்கர்-இ-தொய்பா தனது பெயரை ஜமாத் உத் தாவா என பெயர் மாற்றம் செய்தது தெரிந்தது. தொடாந்து வாரம் இரண்டு முறையாவது காஷ்மீரின் எல்லைப் பகுதியில் லஷ்கர் பயங்கரவாதிகளுக்கும் இந்திய ராணுவத்தினருக்கும் துப்பாகி சண்டை நடைபெறும்.

லஷ்கர்-இ-தொய்பாவினர் இந்தியாவில் தாக்குதல் நடத்துவதற்கு அனைத்துவிதமான உதவிகளை செய்தவர்கள் சிமி இயக்கத்தினர். பயங்கரவாத இயக்கமான சிமியும், லஷ்கர்-இ-தொய்பாவும் இணைந்து பாரத திரு நாட்டில் நடத்திய கொடூரமான தாக்குதல் சம்பவங்கள் ஏராளம்.

 • 1996ம் ஆண்டிலிருந்தே லஷ்கர்-இ-தொய்பாவினர் காஷ்மீர் மாநிலத்தில் தங்களது தாக்குதல்களை தொடந்திருந்தார்கள்.
 • 22.12.2000 டெல்லி செங்கோட்டையில் நடத்திய தாக்குதலில் 10க்கு மேற்பட்டவர்கள் பலியானார்கள் இந்த தாக்குதல் சம்பவத்தின் மூலம் லஷ்கர்-இ-தொய்பாவின் முதன் முதலில் காஷ்மீர் மாநிலத்திற்கு வெளியே தங்களது தாக்குதல் சம்பவத்தை நடத்தினார்கள்.
 • இந்த சம்பவத்தை தொடர்ந்து 13.12.2001ந் தேதி பாராளுமன்ற கட்டிடத்தை தாக்குதல் நடத்தி பாதுகாப்பு படையினர் 13 பேர்கள் கொல்;லப்பட்டார்கள்.
 • 28.12.2005ந் தேதி பெங்களுரில் உள்ள இந்திய விஞ்ஞான பயிற்சி மையத்தில் நடத்திய துப்பாக்கி சூட்டில் இரண்டு விஞ்ஞானிகள் கொல்லப்பட்டார்கள்.
 • 29.10.2005ந் தேதி புது டெல்லியில் தொடர் குண்டு வெடிப்பில் 62 பேர்கள் கொல்லப்பட்ட சம்பவம்
 • 7.3.2006ந் தேதி வாரணாசியில் நடந்த குண்டு வெடிப்பில் 21 பேர்கள் கொல்லப்பட்டது, 60க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்த சம்பவம்
 • தொடாந்து 11.7.2006ந் தேதி மும்பையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் 200க்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர் ஏராளமானோர் படு காயமடைந்தார்கள்.
 • 2008ம் ஆண்டு நவம்பர் மாதம் 26ந் தேதி அதே மும்பையில் பல இடங்களில நடத்திய தாக்குதல்களில் 175க்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டார்கள் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தார்கள்.

இப்படிப் பட்ட இயக்கங்களை  ஆர்.எஸ்.எஸ்.  போன்ற  தன்னார்வ, சேவை அமைப்புடன் ஒப்பிடுவது என்பதே  நினைத்துப் பார்க்க முடியாது. அப்படியிருக்கும்போது ஆர்.எஸ்.எஸ். இவற்றைவிட  ஆபத்தானது என கூறுவது காங்கிரஸ் கட்சியின் குள்ளநரித் தனம் என்பதை விட வேறு வார்த்தைகள் கிடையாது.

Tags: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

 

5 மறுமொழிகள் லஷ்கர்-ஏ-தொய்பாவும் காங்கிரசின் குள்ளநரித்தனமும்

 1. கண்ணன் on January 19, 2011 at 8:49 pm

  என்ன சொல்வது என்று தெரியவில்லை.
  இந்த காங்கிரஸ் கட்சிக்கு பல லட்சம் தமிழர்கள் ஆதரவளிக்கிறார்கள். அதில் இளங்கோவன் போன்ற உருப்படியான தலைவர்கள் கூட இருக்கிறார்கள். இவர்கள் எல்லோரும் தேசத்துரோகிகள் அல்ல. ஆனால் தலைமை இப்படி இருக்கும்போது என்ன செய்யமுடியும்? அவர்கள் இந்த காங்கிரஸ்சுக்கும் காந்திக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை என்று உணர்ந்து வெளியேற வேண்டும். இது இத்தாலி மாபியாவின் இந்தியக்கிளை என்று உணர வேண்டும்.

 2. SunnyGreen on January 20, 2011 at 10:31 am

  Hindus are cowards — Gandhi’s words — no point they are quite happy with the Alcohol — and their can be easily taken by politicians — muslims they can not be cheaply bought — they do not even care about their own mother — all they want is muslims should be ruled by others — as long as Hindus do not accept RSS — We will be deemed and Like paskisthan — India will be muslim country — people has to show some interest in Malaysian politics and need to what is going on around them — otherwise their next generations will be ruled/raped by muslim rulers like thippu sulthan — then it would be too late

 3. அருண்பிரபு on January 20, 2011 at 2:02 pm

  சுவாமி அஸீமானந்த் வழக்கில் பல உச்சகட்ட அவமானங்களை அரசுத்தரப்பு சந்திக்கப் போகிறது. சத்தமில்லாமல் வழக்கைத் திரும்பப் பெற முனைவார்கள் சாத்வி ப்ரக்ஞா வழக்கில் செய்தது போல. LeT, JeM ஆகியவற்றோடு சம்பந்தப்பட்ட சிமிக்காரர்களை விடுவித்தாலாவது உ.பி.யில் காலூன்ற முடியுமா என்று காங்கிரசு எதிர்பார்க்கிறது. சோனியாவுக்கென்ன பாரதம் கெட்டால் அர்ஜெண்டினா உருகுவே என்று குயுட்ரோச்சி போன பாதையில் பயணிப்பார். நாம் தான் பாதிக்கப்படுவோம்.

 4. kumudan on January 21, 2011 at 10:56 am

  சபரிமலை விபத்தின்போது குமரகோமில் இளவரசர் இளைப்பாறி கொண்டிருந்தார். ஏன் சென்று பார்க்கவில்லை என்று கேட்டதிற்கு ஹெலிகாப்ட்டர் அந்த இடத்திற்கு செல்வது கடினம் என்ற சால்ஜாப்பு வேறு. மப்பு தெளிந்தவுடன் இதற்கு ஆர்எஸ்எஸ் தான் காரணம் என்று சொல்லுவார்

 5. man on January 21, 2011 at 2:50 pm

  சபரிமலை அய்யப்ப பக்தகள் நெரிசலில் சிக்கி பலி – மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்.
  மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை ஒருங்கிணைபாளர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் வெளியிடும் இரங்கல் அறிக்கை.
  கேரளா மாநிலம், இடுக்கி மாவட்டம், பொன்னம்பல மேட்டில் நேற்று நடந்த அய்யப்ப மகரஜோதி தரிசனத்திற்க்காக திரண்டிருந்த அய்யப்ப பக்தர்கள் சுமார் 102 பேர் நெரிசலில் சிக்கி உயிரிழந்த செய்தி அறிந்து மிகுந்த வேதனை அடைந்தோம். இவ்விபத்தில் தமிழக பக்தர்களும் பலர் பலியாகியுள்ள செய்தி எங்கள் வேதனையை அதிகபடுத்தியுள்ளது.
  உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்களையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம். நெரிசல் விபத்துப் பற்றிய செய்தி அறிந்தவுடன் தமுமுகவின் தேனி மாவட்ட ஆம்புலன்ஸ்களுடன் அங்கு சென்று நிவாரணப் பணிகளை தேனி மாவட்ட தமுமுக மற்றும் மமகவினர் செய்துவருகிறனர்
  மேலும் நெரிசலில் சிக்கி உயிருக்கு போராடி கொண்டிருக்கும் மக்களுக்கு உரிய முறையில் மருத்துவ சிகிச்சை வழங்கவும், இதுபோன்ற விபத்துகள் வருங்காலங்களில் நடைபெறாமல் இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கேரள அரசு எடுக்க வேண்டுமெனவும் மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்துகிறது.

  (edited and published)

மறுமொழி இடுக:

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.

உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:

தமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.

மறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

*